உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» தேர்தல் அதிர்ச்சிக்கு பின் மம்தா வெளியிட்டுள்ள கவிதை தொகுப்பு
by ayyasamy ram Today at 1:07 pm

» காவல் கோட்டம் MR வெங்கடேஷ் DOWNLOAD LINK
by ANK BASHA Today at 11:02 am

» பேசாத பேச்செல்லாம் பிரியா தம்பி---download link
by ANK BASHA Today at 10:56 am

» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 10:12 am

» உலக கோப்பை கிரிக்கெட் பயிற்சி ஆட்டம்: இந்தியா-நியூசிலாந்து இன்று மோதல்
by ayyasamy ram Today at 9:13 am

» சென்னை கடற்கரை - செங்கல்பட்டு - திருமால்பூர் இடையே விரைவு ரயில் சேவை மீண்டும் தொடக்கம்!
by ayyasamy ram Today at 9:08 am

» நாடாளுமன்ற தேர்தலில் வென்று மக்களவைக்கு செல்லும் 4 சுயேச்சை எம்.பி.க்கள்
by ayyasamy ram Today at 8:48 am

» மாநிலவாரியான முடிவுகள்
by ayyasamy ram Today at 8:32 am

» ஈரானிடம் எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்திவிட்டது: அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் தகவல்
by ayyasamy ram Today at 8:29 am

» இந்திய அளவில் 3-ஆவது பெரிய கட்சியாக மாறியுள்ள திமுக
by ayyasamy ram Today at 8:12 am

» வாக்கு சதவீதம் 2.19 ஆகக் குறைந்ததால் கட்சியின் அங்கீகாரம் ரத்தாகும் நிலை: சோகத்தில் தேமுதிக தொண்டர்கள்
by ayyasamy ram Today at 8:09 am

» மாநிலங்களவை இடங்கள்: அதிமுக - திமுகவுக்கு சரிபாதி வாய்ப்பு
by ayyasamy ram Today at 8:07 am

» புதிய எம்.எல்.ஏக்கள் பதவியேற்பு எப்போது?
by ayyasamy ram Today at 7:47 am

» சூரத் நகரில் திடீர் தீவிபத்து - 15 குழந்தைகள் பரிதாப பலி
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» புத்தக தேவைக்கு...
by vinotkannan Yesterday at 8:06 pm

» “ஆஞ்சநேயரை வணங்கும்போது கிடைக்கிற பலமே தனிதான்…!”- வானதி சீனிவாசன் உற்சாகம்
by T.N.Balasubramanian Yesterday at 7:34 pm

» பட்டாம்பூச்சியின் இருப்பிடத்துக்கே சென்றுவிடுவேன்!- வன உயிரிகளின் ஓவியன் லெனின் ஷேரிங்ஸ்
by ayyasamy ram Yesterday at 3:43 pm

» தாஜ்மஹாலில்
by ayyasamy ram Yesterday at 3:40 pm

» பாட்டொன்று கேட்டேன் பரவசமானேன் நானதைப் பாடவில்லை
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» துள்ளி ஆடும் முயல் !
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» விக்ரமின் 58-வது படம்: அதிகாரபூர்வ அறிவிப்பு!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» தனுஷ் நடித்த ஆங்கிலப் படம்: வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
by ayyasamy ram Yesterday at 3:25 pm

» மருத்துவரானாலும் நடலாம் மரக்கன்று!
by ayyasamy ram Yesterday at 3:24 pm

» சமோசா தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» நேர்மை – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» என்னைப்பார் யோகம் வரும் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:54 pm

» இரட்டையர் – கவிதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» பூண்டு ஈஸியா உரிக்க சில டிப்ஸ்!
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» வீட்டை சுத்தமாக பராமரிக்க சில எளிய வழிகள்!
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» பற்களில் கறையா? இதைச் செய்து பாருங்கள்
by ayyasamy ram Yesterday at 2:11 pm

» இரட்டையர் – கவிதை- செங்கை, மனோ
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» இரட்டையர் – கவிதை -கண்டம்பாக்கத்தான்
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» “பழைய ஸ்கூலை ரொம்பவே மிஸ் பண்றேன்!” – `சூப்பர் சிங்கர்’ ப்ரித்திகா
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» எஸ்கேப்லேட்டர்…! – நகைச்சுவை
by ayyasamy ram Yesterday at 2:03 pm

» எம்.பி-யாகும் நான்கு எழுத்தாளர்கள்!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:50 am

» பெண் எம்.பி.,க்களில் 28 பேர் மீண்டும் வெற்றி
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:46 am

» இந்திய நாடாளுமன்றம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:45 am

» சிங்கத்தை கோட்டையில் சாய்த்த வீராங்கனை!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:44 am

» சென்னை - செங்கல்பட்டு குளுகுளு பயணத்திற்கு ரெடியா?
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:41 am

» இடைத்தேர்தல் பரபரப்பு முடிவுக்கு வந்தது: தேவையான இடங்களில் வெற்றி பெற்றதால்அ.தி.மு.க. ஆட்சிக்கு ஆபத்து இல்லை
by ayyasamy ram Yesterday at 8:19 am

» பா.ஜனதா 302 தொகுதிகளில் வெற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி : மோடி மீண்டும் பிரதமர் ஆகிறார்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» தேனி லோக்சபா தொகுதியில் ஓபிஸ் மகன் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:10 am

» பா.ம.க.,வுக்கு எம்.பி., பதவி, 'டவுட்'
by ayyasamy ram Yesterday at 8:08 am

» அஞ்சல் அட்டைக் கவிதைகள் - குமுதம்
by ayyasamy ram Thu May 23, 2019 11:41 pm

» மோர் பளபளப்பு -வீட்டுக்குறிப்புகள் 10
by ayyasamy ram Thu May 23, 2019 11:38 pm

» ரௌடி பேபி மாடல் வளையலுங்க...!!
by ayyasamy ram Thu May 23, 2019 11:34 pm

» வாட்ஸ் அப் மினி கதைகள்
by ayyasamy ram Thu May 23, 2019 11:31 pm

» குழந்தை - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu May 23, 2019 10:51 pm

» திருடன் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu May 23, 2019 10:48 pm

» உனக்கு 22, எனக்கு 18!- வளர்ந்து நிற்கும் பா.ஜ.கவால் அதிர்ச்சியில் மம்தா
by சிவனாசான் Thu May 23, 2019 7:55 pm

Admins Online

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

best திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Sat Dec 30, 2017 8:16 pm

First topic message reminder :

திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1

அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு


தெளிவுரை

எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.

அசை

1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு

1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்

அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை

1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு

எதுகை-அர- பவன், முல-முற்றே
மோனை- முதல-முதற்றே
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 12404
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2808

View user profile

Back to top Go down


best Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Fri Apr 26, 2019 5:03 pm

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-11- பிறனில் விழையாமை -146

குறள் மூலம்-சிறப்புரையாக்கம்- பேராசிரியர்-நா. பாலுச்சாமி-மதுரை

பகைபாவம் அச்சம் பழியென நான்கும்
இகவாவாம் இல்லிறப்பான் கண்


தெளிவுரை
பிறர் மனைவியை விரும்புபவனிடம் பகை, பாவம், பயம், பழி
ஆகிய நான்கு குற்றங்களும் ஒருங்கே வந்து சேரும்.


குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

பகை/பா/வம்--------- அச்/சம்------- பழி/யென/--------- நான்/கும்
நிரை/நேர்/நேர்--------நேர்/நேர்-------நிரை/நிரை--------நேர்/நேர்
புளிமாங்காய்--------தேமா--------கருவிளம்-------தேமா
வெண்சீர் ----------- இயற்சீர் --------- இயற்சீர் -------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை


இக/வா/வாம்-------- இல்/லிறப்/பான்------- கண்
நிரை/நேர்/நேர்-------நேர்/நிரை/நேர்---------நேர்
புளிமாங்காய்--------கூவிளங்காய்---------நாள்
வெண்சீர் ---------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>கண்>>>நேர்>>>நாள்

1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.விளம் முன் நேர் 4.மா முன் நிரை
5.காய் முன் நேர் 6.காய் முன் நேர்

எதுகை-வாவாம் –பகைபாவம்
மோனை- கைபாவம்-ழியென, கவாவாம் -ல்லிறப்பான்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 12404
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2808

View user profile

Back to top Go down

best Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Fri Apr 26, 2019 5:09 pm

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-11- பிறனில் விழையாமை -147

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

அறனியலான் இல்வாழ்வான் என்பான் பிறனியலான்
பெண்மை நயவா தவன்


தெளிவுரை
பிறன் மனைவியை விரும்பாத ஒருவனே உண்மையில்
அறநெறியில் ஒழுகும் இல்லறத்தான் ஆவான்.


குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

அற/னிய/லான்-------- இல்/வாழ்/வான்------ என்/பான்----- பிற/னிய/லான்
நிரை/நிரை/நேர்--------நேர்/நேர்/நேர்------------நேர்/நேர்--------நிரை/நிரை/நேர்
கருவிளங்காய்---------தேமாங்காய்------------தேமா------------கருவிளங்காய்
வெண்சீர் ----------- வெண்சீர் --------- இயற்சீர் -------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை


பெண்/மை------ நய/வா------- தவன்
நேர்/நேர்----------நிரை/நேர்------நிரை
தேமா------------புளிமா---------மலர்
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>தவன்>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2.காய் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை

எதுகை- னியலான்- பினியலான்
மோனை- பிறனியலான்- பெண்மை

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 12404
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2808

View user profile

Back to top Go down

best Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Fri Apr 26, 2019 5:17 pm

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-11- பிறனில் விழையாமை -148

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்
கறனொன்றோ ஆன்ற ஒழுக்கு


தெளிவுரை
பிறன் மனைவியை மனத்தாலும் நினையாத ஆண்மையே
அறிவுடையோர்க்கு அறமும் ஒழுக்கமுமாகும்.


குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

பிறன்/மனை------நோக்/கா/த------- பே/ராண்/மை-------சான்/றோர்க்
நிரை/நிரை-------நேர்/நேர்/நேர்-----நேர்/நேர்/நேர்--------நேர்/நேர்
கருவிளம்-----------தேமாங்காய்-------தேமாங்காய்-----------தேமா
இயற்சீர் ----------- வெண்சீர் ----------- வெண்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை-------- வெண்டளை


கற/னொன்/றோ------ ஆன்/ற------ ஒழுக்/கு
நிரை/நேர்/நேர்----------நேர்/நேர்------நிரை/பு
புளிமாங்காய்-------------தேமா---------பிறப்பு
வெண்சீர் ---------------- இயற்சீர்
வெண்டளை-------------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>ஒழுக்கு>>>நிரைபு>>>பிறப்பு

1.விளம் முன் நேர் 2.காய் முன் நேர் 3.காய் முன் நேர் 4.மா முன் நிரை
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- பின்மனை- கனொன்றோ, சான்றோர்க்
மோனை- பிறன்மனை- பேராண்மை

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 12404
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2808

View user profile

Back to top Go down

best Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Sat Apr 27, 2019 10:34 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-11- பிறனில் விழையாமை -149

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

நலக்குரியர் யாரெனின் நாமநீர் வைப்பில்
பிறர்க்குரியாள் தோள்தோயா தார்


தெளிவுரை
ஒருவனுக்கு உரிய மனையாளை மனத்தாலும் விரும்பாத அறிவுடையோரே எல்லா நன்மைகளையும் அடையத்தக்க சிறப்புக்குரியர்.


குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

நலக்/குரி/யர்---------- யா/ரெனின்----- நா/ம/நீர்----------- வைப்/பில்
நிரை/நிரை/நேர்------நேர்/நிரை---------நேர்/நேர்/நேர்---நேர்/நேர்
கருவிளங்காய்---------கூவிளம்-------------தேமாங்காய்-----தேமா
வெண்சீர் --------------- இயற்சீர் ------------ வெண்சீர் -------- இயற்சீர்
வெண்டளை-----------வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை


பிறர்க்/குரி/யாள்------தோள்/தோ/யா-----தார்
நிரை/நிரை/நேர்-----நேர்/நேர்/நேர்-------நேர்
கருவிளங்காய்--------தேமாங்காய்-----------நாள்
வெண்சீர் -------------- வெண்சீர்
வெண்டளை-----------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>தார்>>>நேர்>>>நாள்

1.காய் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.காய் முன் நேர் 4.மா முன் நிரை
5.காய் முன் நேர் 6.காய் முன் நேர்

எதுகை- யாரெனின்- தார்
மோனை- லக்குரியர் - நாமநீர்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 12404
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2808

View user profile

Back to top Go down

best Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Sat Apr 27, 2019 10:43 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-11- பிறனில் விழையாமை -150

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

அறன்வரையான் அல்ல செயினும் பிறன்வரையான்
பெண்மை நயவாமை நன்று


தெளிவுரை
அறநெறி தவறிப் பாவச் செயல் பல செய்தாலும், பிறன் மனையாளை விரும்பாமை ஒன்றே ஒருவனை வாழ்விக்கும்.


குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

அறன்/வரை/யான்------ அல்/ல--------- செயி/னும்---------- பிறன்/வரை/யான்
நிரை/நிரை/நேர்----------நேர்/நேர்----------நிரை/நேர்----------நிரை/நிரை/நேர்
கருவிளங்காய்-----------தேமா-------------புளிமா---------------கருவிளங்காய்
வெண்சீர் ---------------- இயற்சீர் --------- இயற்சீர் -------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை


பெண்/மை-------நய/வா/மை ---------நன்/று
நேர்/நேர்-----------நிரை/நேர்/நேர்----நேர்/பு
தேமா-----------------புளிமாங்காய்--------காசு
இயற்சீர் ----------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>நன்று>>>நேர்பு>>>காசு

1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.காய் முன் நேர்

எதுகை-ன்வரையான்- பின்வரையான்
மோனை- றன்வரையான் -ல்ல , யவாமை –ன்று, பிறன்வரையான்- பெண்மை


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 12404
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2808

View user profile

Back to top Go down

best Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Fri May 10, 2019 10:54 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-12- பொறாமையுடைமை -151

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை


தெளிவுரை
பூமி தன்னை வெட்டிச் சிதைப்போரையும் தாங்கிக் கொள்கிறது;
அது போலத் தம்மை நிந்திப்போரையும் பொறுத்துக் கொள்வதே சிறந்த பண்பாகும்.


குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

அகழ்/வா/ரைத்-----தாங்/கும்-------- நிலம்/போ/லத்----தம்/மை
நிரை/நேர்/நேர்----நேர்/நேர்----------நிரை/நேர்/நேர்---நேர்/நேர்
புளிமாங்காய்-------தேமா----------------புளிமாங்காய்-------தேமா
வெண்சீர் ----------- இயற்சீர் ---------- வெண்சீர் ----------- இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை----வெண்டளை------ வெண்டளை


இகழ்/வார்ப்----- பொறுத்/தல்--- தலை
நிரை/நேர்--------நிரை/நேர்-------நிரை
புளிமா---------------புளிமா-------------மலர்
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>தலை>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.மா முன் நிரை
5.மா முன் நிரை 6.மா முன் நிரை

எதுகை- ழ்வாரைத்- இழ்வார்ப், நிம்போலத்- தலை
மோனை- -ம்மை- லை
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 12404
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2808

View user profile

Back to top Go down

best Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Fri May 10, 2019 11:03 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-12- பொறாமையுடைமை -152

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை
மறத்தல் அதனினும் நன்று


தெளிவுரை
தனக்குச் செய்யப்படும் தீங்கினை மகிழ்ச்சியுடன் பொறுத்துக் கொள்ள வேண்டும். அதனைவிட அச்செயலையே மறந்து விடல் வேண்டும்


குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

பொறுத்/தல்---- இறப்/பினை----- என்/றும்--------- அத/னை
நிரை/நேர்---------நிரை/நிரை-------நேர்/நேர்----------நிரை/நேர்
புளிமா---------------கருவிளம்-----------தேமா---------------புளிமா
இயற்சீர் ----------- இயற்சீர் ---------- இயற்சீர் -------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை-----வெண்டளை--- வெண்டளை


மறத்/தல்---------- அத/னினும்------- நன்று
நிரை/நேர்---------நிரை/நிரை-------நேர்/பு
புளிமா---------------கருவிளம்---------காசு
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை

ஈற்றுச்சீர்>>>நன்று>>>நேர்பு>>>காசு

1.மா முன் நிரை 2.விளம் முன் நேர் 3.மா முன் நிரை 4.மா முன் நிரை
5.மா முன் நிரை 6.விளம் முன் நேர்

எதுகை-ப்பினை- மத்தல் , அனை- அனினும் , என்றும்- நன்று
மோனை- தனை- தனினும்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 12404
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2808

View user profile

Back to top Go down

best Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Fri May 10, 2019 11:14 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-12- பொறாமையுடைமை -153

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

இன்மையுள் இன்மை விருந்தொரால் வன்மையுள்
வன்மை மடவார்ப் பொறை


தெளிவுரை
வந்த விருந்தினரை உபசரியாமை வறுமையிலும் வறுமையாகும்;அதுபோல அறிவில்லாதார் செய்யும் குற்றத்தைப் பொறுத்தல் வலிமையுள் வலிமையாகும்.


குறள்-------------------அசை--------------சீர்-வாய்ப்பாடு--------தளை

இன்/மையுள்----- இன்/மை-------- விருந்/தொரால்---- வன்/மையுள்
நேர்/நிரை----------நேர்/நேர்----------நிரை/நிரை------------நேர்/நிரை
கூவிளம்-------------தேமா---------------கருவிளம்----------------கூவிளம்
இயற்சீர் ----------- இயற்சீர் --------- இயற்சீர் ------------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை--- வெண்டளை------- வெண்டளை


வன்/மை---------- மட/வார்ப்------பொறை
நேர்/நேர்-----------நிரை/நேர்----நிரை
தேமா-----------------புளிமா----------மலர்
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>பொறை>>>நிரை>>>மலர்

1.விளம் முன் நேர் 2.மா முன் நிரை 3.விளம் முன் நேர் 4.விளம் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை

எதுகை-ன்மையுள் –இன்மை- வன்மையுள்- வன்மை
மோனை- ன்மையுள் –ன்மை ,ன்மையுள்- ன்மை
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 12404
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2808

View user profile

Back to top Go down

best Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை