உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by சக்தி18 Yesterday at 9:07 pm

» பெரியாரும் ரஜினியும்
by சக்தி18 Yesterday at 9:01 pm

» டெபிட் காட் -சாப்பிட்டது 4,181 ரூபாய்க்கு,இழந்தது 4,10,036 ரூபாய்
by சக்தி18 Yesterday at 8:58 pm

» மங்கையர் திலகங்கள் தொடர்ச்சி--
by சக்தி18 Yesterday at 8:50 pm

» ஆறாத் துயரம் மாறாதோ ?
by M.Jagadeesan Yesterday at 8:40 pm

» மங்கையர் திலகம் --நகைச்சுவைக்காக
by T.N.Balasubramanian Yesterday at 8:03 pm

» கங்கை கொண்ட சோழன் - பாலகுமாரன்
by Guest Yesterday at 1:08 pm

» வேலன்:-காமிக்ஸ் புத்தகங்களை படிக்க-comic book reader
by velang Yesterday at 8:37 am

» புத்தகம் தேவை : இறையன்பு IAS
by Guest Mon Jan 20, 2020 11:27 pm

» ஈகரையை படிக்க மட்டும் செய்பவர்கள் இங்கே செல்லலாம் -RSS
by T.N.Balasubramanian Mon Jan 20, 2020 8:13 pm

» இளவரசர் பட்டத்தை துறந்தார் ஹாரி
by T.N.Balasubramanian Mon Jan 20, 2020 6:40 pm

» கடந்த 5 ஆண்டுகளில் 2200 மத்திய ஆயுதப்படை வீரர்கள் தற்கொலை
by பழ.முத்துராமலிங்கம் Mon Jan 20, 2020 11:19 am

» வாழ்த்தலாம் வாருங்கள் உறவுகளே, க்ரிஷ்ணாம்மா அவர்களின் பிறந்த தினம்.
by பழ.முத்துராமலிங்கம் Mon Jan 20, 2020 11:09 am

» பிறந்தநாள் பரிசு!
by பழ.முத்துராமலிங்கம் Mon Jan 20, 2020 11:02 am

» நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்.
by பழ.முத்துராமலிங்கம் Mon Jan 20, 2020 10:56 am

» ட்ரீட்மென்டுக்கு டி.வி.சீரியல்ல வர்ற டாக்டர்கிட்டதான் போகணுமாம்..!!
by பழ.முத்துராமலிங்கம் Mon Jan 20, 2020 10:51 am

» பேலஸ் தியேட்டரில் இரண்டு இருக்கைகள் காலி!
by பழ.முத்துராமலிங்கம் Mon Jan 20, 2020 10:50 am

» பெண் குழந்தைகளுக்கு மரியாதை!
by பழ.முத்துராமலிங்கம் Mon Jan 20, 2020 10:49 am

» வேலன்:-யூடியூப் வீடியோக்களை MP3 பைல்களாக பதிவிறக்கம் செய்திட-4K Youtube to MP3
by velang Mon Jan 20, 2020 7:20 am

» ஊரார் குறைகளை அடுக்கும் முன்…(கவிதை)
by ayyasamy ram Mon Jan 20, 2020 5:23 am

» ஜன., 23 நேதாஜி பிறந்த தினம்
by ayyasamy ram Mon Jan 20, 2020 5:18 am

» வினோபாஜி ஆன்மிக சிந்தனைகள்
by ayyasamy ram Mon Jan 20, 2020 4:45 am

» ஷீரடியில் முழு 'பந்த்' : கோவில் மட்டும் இயங்கியது
by ayyasamy ram Mon Jan 20, 2020 4:38 am

» மைசூரு: மேயர் பதவியை பிடித்த முஸ்லிம் பெண்
by ayyasamy ram Mon Jan 20, 2020 4:35 am

» மத ஒற்றுமைக்கு உதாரணமாக மசூதியில் ஹிந்து திருமணம்
by ayyasamy ram Mon Jan 20, 2020 4:30 am

» களத்தில் மட்டும் தான் வீரன்: கருணை காட்டிய காளை
by T.N.Balasubramanian Sun Jan 19, 2020 7:48 pm

» இவை யாவும் உங்களுடன் பகிரும் இன்பம் கொடு.---- [b]மீள் பதிவு [/b]
by T.N.Balasubramanian Sun Jan 19, 2020 7:05 pm

» கணிதப் புதிர்- தொண்ணூறிலிருந்து எழுபத்தைந்து...
by T.N.Balasubramanian Sun Jan 19, 2020 6:43 pm

» அவரை பிரிந்ததால் போதைக்கு அடிமையானேன் - விஷ்ணு விஷால்
by T.N.Balasubramanian Sun Jan 19, 2020 6:39 pm

» சென்னையில் புதுப்பொண்ணு……………..அன்று
by சக்தி18 Sun Jan 19, 2020 2:47 pm

» இதப்படிங்க முதல்ல...(சினிமா செய்திகள்- வாரமலர்)
by சக்தி18 Sun Jan 19, 2020 12:58 pm

» அச்சம் என்பது மடமையடா!
by சக்தி18 Sun Jan 19, 2020 12:47 pm

» சினிமா- பழைய பாடல்கள்- காணொளிகள்
by சக்தி18 Sun Jan 19, 2020 12:34 pm

» கணினி/இணைய உலகில் ஒரு சில துளி டிப்ஸ்
by சக்தி18 Sun Jan 19, 2020 12:31 pm

» அருமையான வாழைப்பூ புளிக்குழம்பு
by ayyasamy ram Sun Jan 19, 2020 10:38 am

» தூங்குவதும் தனி ‘டயட்’ தான்
by ayyasamy ram Sun Jan 19, 2020 10:36 am

» வேலன்:-வீடியோவில் உள்ள சப் டைடிலை நீக்கிட-MKV Tool Nix
by velang Sun Jan 19, 2020 7:45 am

» வேலன்:-இரண்டு தேதிகளுக்கு இடைப்பட்ட நாட்களை கணக்கிட-Calculator Days
by velang Sun Jan 19, 2020 7:43 am

» இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி: பெங்களூருவில் இன்று நடக்கிறது
by ayyasamy ram Sun Jan 19, 2020 7:26 am

» செல்ஃபி மோகத்தால் இளம் பெண்ணுக்கு முகத்தில் 40 தையல்
by ayyasamy ram Sun Jan 19, 2020 7:22 am

» யானை சிலை கோயில்
by ayyasamy ram Sun Jan 19, 2020 7:13 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Sun Jan 19, 2020 6:59 am

» சீனாவை மிரட்டும் 'கொரனோ' வைரஸ்: கோவை விமான நிலையத்தில், 'அலர்ட்'
by ayyasamy ram Sun Jan 19, 2020 6:54 am

» கார் விபத்தில் காயமடைந்த நடிகை ஷபானா ஆஸ்மி குணமடைய மோடி பிரார்த்தனை
by ayyasamy ram Sun Jan 19, 2020 6:53 am

» வசூல்ராஜா பட பாணியில் தேர்வெழுத வந்த இளைஞர்
by ayyasamy ram Sat Jan 18, 2020 10:41 pm

» ஈகரையில் இந்து என்ற தலைப்பில் வந்த..........
by T.N.Balasubramanian Sat Jan 18, 2020 10:18 pm

» இரட்டை வேடத்தில் யோகிபாபு
by ayyasamy ram Sat Jan 18, 2020 7:42 pm

» நயன்தாராவுக்கு அண்ணன்
by ayyasamy ram Sat Jan 18, 2020 7:40 pm

» விண்ணைத்தொடும் கட்டடங்கள்
by ayyasamy ram Sat Jan 18, 2020 7:34 pm

» ஆஹா கோதுமை ரெசிப்பிகள்
by ஜாஹீதாபானு Sat Jan 18, 2020 5:16 pm

Admins Online

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

best திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Sat Dec 30, 2017 8:16 pm

First topic message reminder :

திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1

அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு


தெளிவுரை

எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.

அசை

1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு

1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்

அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை

1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு

எதுகை-அர- பவன், முல-முற்றே
மோனை- முதல-முதற்றே
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13353
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3309

Back to top Go down


best Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Sat Sep 15, 2018 10:28 am

[You must be registered and logged in to see this link.] wrote:அருமையான கருத்து.

ரமணியன்
[You must be registered and logged in to see this link.]
நன்றி ஐயா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13353
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3309

Back to top Go down

best Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Sat Sep 15, 2018 10:35 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-3-மக்கட்பேறு-65

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

மக்கண்மெய் தீண்ட லுடற்கின்ப மற்றவர்
சொற்கேட்ட லின்பஞ் செவிக்கு


தெளிவுரை

தம் குழந்தைகள் தமது உடம்பினைத் தொடுவதும் உ தைப்பதும் தம் உடம்புக்கு
இன்பம்., அவர் தம் ம ழழைச் சொல்லைக் கேட்பது செவிக்கும் இன்பம்.

குறள்--------------அசை-----------சீர்-வாய்ப்பாடு-------------தளை

மக்/கண்/மெய்----- தீண்/ட--------- லுடற்/கின்/ப------- மற்/றவர்
நேர்/நேர்/நேர்--------நேர்/நேர்--------நிரை/நேர்/நேர்----நேர்/நிரை
தேமாங்காய்--------தேமா-------------புளிமாங்காய்-----கூவிளம்
வெண்சீர்------------ இயற்சீர் --------- வெண்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை------ வெண்டளை-----வெண்டளை---- வெண்டளை

சொற்/கேட்/ட--- லின்/பஞ்--- செவிக்/கு
நேர்/நேர்/நேர்-------நேர்/நேர்------நிரை/பு
தேமாங்காய்-------தேமா-----------பிறப்பு
வெண்சீர்------------ இயற்சீர்
வெண்டளை------ வெண்டளை

ஈற்றுச்சீர்>>>செவிக்கு>>>நிரைபு>>>பிறப்பு

1. குற்றொற்று- குற்றொற்று- குற்றொற்று
2. நெற்றொற்று—குறில்
3. குறிலினையொற்று—குற்றொற்று—குறில்
4. குற்றொற்று—குறிலினையொற்று
5. குற்றொற்று—நெற்றொற்று-- குறில்
6. குற்றொற்று— குற்றொற்று
7. குறிலினையொற்று- குறில்

எதுகை-ற்றவர்- சொற்கேட்ட
மோனை- க்கண்மெய்- ற்றவர்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13353
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3309

Back to top Go down

best Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Sat Sep 15, 2018 10:43 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-3-மக்கட்பேறு-66

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

குழலினிதி யாழினி தென்பதம் மக்கண்
மழலைச்சொற் கேளா தவர்


தெளிவுரை

தம் மக்களின் மழழைச் பேச்சைக் கேட்டு இன்புறும் வாய்ப்பு இல்லாதோரே
குழலோசையும் யாழோசையும் இனிய என்பர்.


குறள்--------------அசை-----------சீர்-வாய்ப்பாடு-------------தளை

குழ/லினி/தி----------யா/ழினி----- தென்/பதம்---- மக்/கண்
நிரை/நிரை/நேர்----நேர்/நிரை-----நேர்/நிரை------ நேர்/நேர்
கருவிளங்காய்----கூவிளம்-------கூவிளம்--------தேமா
வெண்சீர்------------ இயற்சீர் ------- இயற்சீர் -------- இயற்சீர்
வெண்டளை------ வெண்டளை-- வெண்டளை-- வெண்டளை


மழ/லைச்/சொற்---- கே/ளா----- தவர்
நிரை/நேர்/நேர்---------நேர்/நேர்------நிரை
புளிமாங்காய்---------தேமா---------மலர்
வெண்சீர்-------------- இயற்சீர்
வெண்டளை--------- வெண்டளை


ஈற்றுச்சீர்>>>தவர்>>>நிரை>>>மலர்

1. குறிலினை-- குறிலினை-- குறில்
2. நெடில்--- குறிலினை
3. குற்றொற்று-- குறிலினையொற்று
4. குற்றொற்று—குற்றொற்று
5. குறிலினை—குற்றொற்று—குற்றொற்று
6. நெடில்—நெடில்
7. குறிலினையொற்று

எதுகை- குலினிதி -யாழினி - மலைச்சொற்
மோனை- க்கண்- ழலைச்சொற்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13353
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3309

Back to top Go down

best Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Tue Sep 18, 2018 3:51 pm


அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-3-மக்கட்பேறு-67

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

தந்தை மகற்காற்று நன்றி யவையத்து
முந்தி யிருப்பச் செயல்

தெளிவுரை

அறிஞர் கூட்டத்தில் பேரறிஞனாக விளங்கச் செய்தாலே
ஒரு தந்தை தன் மகனுக்கு ஆற்றும் சிறந்த கடமையாகும்.


குறள்--------------அசை--------------சீர்-வாய்ப்பாடு-------------தளை
தந்/தை-------- மகற்/காற்/று-------- நன்/றி--------- யவை/யத்/து
நேர்/நேர்----------நிரை/நேர்/நேர்-----நேர்/நேர்---------நிரை/நேர்/நேர்
தேமா--------------புளிமாங்காய்-------தேமா------------புளிமாங்காய்
இயற்சீர் --------- வெண்சீர் ----------- இயற்சீர் ---------வெண்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை

முந்/தி--------- யிருப்/பச்-------- செயல்
நேர்/நேர்-------நிரை/நேர் --------நிரை
தேமா-----------புளிமா------------மலர்
இயற்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை------ வெண்டளை


ஈற்றுச்சீர்>>>செயல்>>>நிரை>>>மலர்

1. குற்றொற்று-- குறில்
2. குறிலினையொற்று—நெற்றொற்று—குறில்
3. குற்றொற்று—குறில்
4. குறிலினை—குற்றொற்று-- குறில்
5. குற்றொற்று-- குறில்
6. குறிலினையொற்று—குற்றொற்று
7. குறிலினையொற்று

எதுகை-ந்தை- முந்தி
மோனை- வையத்து -யிருப்பச்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13353
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3309

Back to top Go down

best Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by T.N.Balasubramanian on Tue Sep 18, 2018 6:19 pm

ஈகரை பதிவர்களின் தந்தைமார்கள்
அந்த பெருமைக்குரியவர்கள் , பழமு அவர்களே  மகிழ்ச்சி மகிழ்ச்சி  

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 25881
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9350

Back to top Go down

best Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Fri Sep 21, 2018 5:11 pm

[You must be registered and logged in to see this link.] wrote:ஈகரை பதிவர்களின் தந்தைமார்கள்
அந்த பெருமைக்குரியவர்கள் , பழமு அவர்களே  மகிழ்ச்சி மகிழ்ச்சி  

ரமணியன்
[You must be registered and logged in to see this link.]
நன்றி ஐயா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13353
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3309

Back to top Go down

best Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Fri Sep 21, 2018 5:19 pm

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-3-மக்கட்பேறு-68

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

தம்மிற்றம் மக்க ளறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லா மினிது


தெளிவுரை

பெற்றோரை விடப் பிள்ளைகள் மிக்க அறிவுடையவர்களாய் இருப்பின்,
அஃது உலகத்திற்கெல்லாம் நன்மை விளைவிக்கும்


குறள்--------------அசை-----------சீர்-வாய்ப்பாடு-------------தளை

தம்/மிற்/றம்----- மக்/க----- ளறி/வுடை/மை----- மா/நிலத்/து
நேர்/நேர்/நேர்-------நேர்/நேர்---------நிரை/நிரை/நேர்----நேர்/நிரை/நேர்
தேமாங்காய்--------தேமா-----------கருவிளங்காய்------கூவிளங்காய்
வெண்சீர் ----------- இயற்சீர் --------வெண்சீர்-------- ----வெண்சீர்
வெண்டளை--------வெண்டளை---வெண்டளை------ வெண்டளை


மன்/னுயிர்க்---- கெல்/லா-- மினி/து
நேர்/நிரை----------நேர்/நேர்------நிரை/பு
கூவிளம்-----------தேமா---------பிறப்பு
இயற்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை------ வெண்டளை

ஈற்றுச்சீர்>>>மினிது>>>நிரைபு>>>பிறப்பு

1 . குற்றொற்று-- குற்றொற்று-- குற்றொற்று
2. குற்றொற்று—குறில்
3. குறிலினை-- குறிலினை-- குறில்
4. நெடில்—குறிலினையொற்று—குறில்
5. குற்றொற்று—குறிலினையொற்று
6. குற்றொற்று—நெடில்
7. குறிலினை—குறில்


எதுகை-ன்னுயிர்க்- மினிது
மோனை- க்க- மாநிலத்து- ன்னுயிர்க் -
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13353
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3309

Back to top Go down

best Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Fri Sep 21, 2018 5:29 pm

[You must be registered and logged in to see this link.] wrote:
[You must be registered and logged in to see this link.] wrote:அருமையான கருத்து.

ரமணியன்
[You must be registered and logged in to see this link.]
நன்றி ஐயா
[You must be registered and logged in to see this link.]
ஐயா இந்த தொடர் பதிவின் பெயரை திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் என்று மாற்ற வேண்டுகிறேன் ஐயா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13353
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3309

Back to top Go down

best Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Fri Sep 21, 2018 5:36 pm

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-3-மக்கட்பேறு-69

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

ஈன்ற  பொழுதிற்  பெரிதுவக்குந்   தன்மகனைச்
சான்றோ  னெனக்கேட்ட   தாய்


தெளிவுரை

தாய்க்கு இன்பம் பிள்ளைப்பேறு., அதைவிடப் பேரின்பம் அப்பிள்ளை
நல்ல பிள்ளை எனப் பிறரால் பாராட்டப்படுவது.


குறள்--------------அசை-----------சீர்-வாய்ப்பாடு-------------தளை

ஈன்/ற--------  பொழு/திற்-------  பெரி/துவக்/குந்-------   தன்/மக/னைச்
நேர்/நேர்--------நிரை/நேர்---------நிரை/நிரை/நேர்---------நேர்/நிரை/நேர்  
தேமா-----------புளிமாங்காய்---கருவிளங்காய்------------கூவிளங்காய்
இயற்சீர் ----------- வெண்சீர் ---------வெண்சீர்-------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை


சான்/றோ----  னெனக்/கேட்/ட-----   தாய்
நேர்/நேர்--------நிரை/நேர்/நேர்-------நேர்  
தேமா-----------புளிமாங்காய்------நாள்
இயற்சீர் ----------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>தாய்>>>நேர்>>>>நாள்

1. குற்றொற்று- குறில்
2. குறிலினை- குற்றொற்று
3. குறிலினை- குறிலினையொற்று- குற்றொற்று
4. குற்றொற்று- குறிலினை- குற்றொற்று
5. நெற்றொற்று- நெடில்
6. குறிலினையொற்று- நெற்றொற்று- குறில்
7. நெற்றொற்று

எதுகை-ன்ற- தன்மகனைச்- சான்றோ - னெக்கேட்ட  
மோனை- ன்மகனைச்- தாய்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13353
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3309

Back to top Go down

best Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by T.N.Balasubramanian on Fri Sep 21, 2018 8:09 pm

[You must be registered and logged in to see this link.] wrote:
[You must be registered and logged in to see this link.] wrote:
[You must be registered and logged in to see this link.] wrote:அருமையான கருத்து.

ரமணியன்
[You must be registered and logged in to see this link.]
நன்றி ஐயா
[You must be registered and logged in to see this link.]
ஐயா இந்த தொடர் பதிவின் பெயரை திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் என்று மாற்ற வேண்டுகிறேன் ஐயா
[You must be registered and logged in to see this link.]

உங்கள் விருப்பப்படி தலைப்பு மாற்றப்பட்டது.
@"பழமுத்துராமலிங்கம்"

ரமணியன்


Last edited by T.N.Balasubramanian on Fri Sep 21, 2018 8:15 pm; edited 1 time in total (Reason for editing : spacing)


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 25881
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9350

Back to top Go down

best Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Sat Sep 22, 2018 10:36 pm

[You must be registered and logged in to see this link.] wrote:
[You must be registered and logged in to see this link.] wrote:
[You must be registered and logged in to see this link.] wrote:
[You must be registered and logged in to see this link.] wrote:அருமையான கருத்து.

ரமணியன்
[You must be registered and logged in to see this link.]
நன்றி ஐயா
[You must be registered and logged in to see this link.]
ஐயா இந்த தொடர் பதிவின் பெயரை திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் என்று மாற்ற வேண்டுகிறேன் ஐயா
[You must be registered and logged in to see this link.]

உங்கள் விருப்பப்படி தலைப்பு மாற்றப்பட்டது.
@"பழமுத்துராமலிங்கம்"

ரமணியன்
[You must be registered and logged in to see this link.]
நன்றி ஐயா
இது யாப்பிலக்கணம் சம்மந்தப்பட்டது எனவே இதன் தலைப்பை மாற்ற நினைத்தேன் ஐயா.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13353
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3309

Back to top Go down

best Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Wed Sep 26, 2018 11:03 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-3-மக்கட்பேறு-70

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

மகன்றந்தைக் காற்று முதவி யிவன்றந்தை
யென்னோற்றான் கொல்லெனுஞ் சொல்

தெளிவுரை

இப்பிள்ளையைப் பெற இவன் தந்தை என்ன தவம் செய்தானோ என்று உலகம் வியக்குமாறு நடந்து கொள்வதே அப்பிள்ளை அவனுக்குச் செய்யும் சிறந்த கைமாறாகும்.

குறள்----------------------அசை------------------சீர்-வாய்ப்பாடு----------------------தளை

மகன்/றந்/தைக்------காற்/று------ முத/வி--------- யிவன்/றந்/தை
நிரை/நேர்/நேர்-------நேர்/நேர்------நிரை/நேர்---------நிரை/நேர்/நேர்
புளிமாங்காய்--------தேமா----------புளிமா------------புளிமாங்காய்
வெண்சீர் ----------- இயற்சீர் ------- இயற்சீர் -------- வெண்சீர்
வெண்டளை---------வெண்டளை---- வெண்டளை--- வெண்டளையென்/னோற்/றான்--- கொல்/லெனுஞ்--------- சொல்
நேர்/நேர்/நேர்----------நேர்/நிரை---------------நேர்
தேமாங்காய்------------கூவிளம்-------------நாள்
வெண்சீர் --------------- இயற்சீர்
வெண்டளை-------------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>சொல்>>>நேர்>>>நாள்

1. குறிலினையொற்று- குற்றொற்று- குற்றொற்று
2. நெற்றொற்று- குறில்-
3. குறிலினை- குறில்
4. குறிலினையொற்று- குற்றொற்று- குறில்
5. குற்றொற்று- நெற்றொற்று- நெற்றொற்று
6. குற்றொற்று- குறிலினையொற்று
7. குற்றொற்று

எதுகை- கொல்லெனுஞ் சொல்
மோனை- கொல்லெனுஞ் சொல்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13353
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3309

Back to top Go down

best Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Wed Sep 26, 2018 11:16 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-4-அன்புடைமை-71

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

அன்பிற்கு முண்டோ வடைக்குந்தா ழார்வலர்
புன்கணீர் பூசல் தரும்


தெளிவுரை

அன்பு என்ற பண்பினை அடைக்கத்தக்க கதவும் உண்டோ பிறர் துன்பம் கண்டு
அன்பரின் கண்கள் சிந்தும் கண்ணீர் அதனை வெளிப்படுத்திவிடும்.

குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

அன்/பிற்/கு------முண்/டோ----- வடைக்/குந்/தா---ழார்/வலர்
நேர்/நேர்/நேர்----நேர்/நேர்---------நிரை/நேர்/நேர்---நேர்/நிரை
தேமாங்காய்-----தேமா------------புளிமாங்காய்-----கூவிளம்
வெண்சீர் ------- இயற்சீர் --------- வெண்சீர் -------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை


புன்/க/ணீர் ---- பூ/சல்----- தரும்
நேர்/நேர்/நேர்---நேர்/நேர்-----நிரை
தேமாங்காய்----தேமா-------மலர்
வெண்சீர் ------ இயற்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>தரும்>>>நிரை>>>மலர்

1. குற்றொற்று- குற்றொற்று- குறில்
2. குற்றொற்று- நெடில்
3. குறிலினையொற்று- குற்றொற்று- நெடில்
4. நெற்றொற்று- குறிலினையொற்று
5. குற்றொற்று- குறில்- நெற்றொற்று
6. நெடில்- குற்றொற்று
7. குறிலினையொற்று

எதுகை-ன்பிற்கு- புன்கணீர்
மோனை-புன்கணீர் பூசல்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13353
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3309

Back to top Go down

best Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Thu Sep 27, 2018 10:39 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-4-அன்புடைமை-72

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

அன்பிலா  ரெல்லாந்   தமக்குரிய   ரன்புடையா
ரென்பு  முரியர்     பிறர்க்கு

தெளிவுரை
அன்பு இல்லாதோர் எல்லாப் பொருள்களையும் தமக்கே பயன்படுத்துவர்;
அன்பு உடையவரோ தம் உடம்பாலும் பிறருக்கு உதவுவர்.

குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

அன்/பிலா---------  ரெல்/லாந்-----   தமக்/குரி/ய--------   ரன்/புடை/யா
நேர்/நிரை----------நேர்/நேர்-----------நிரை/நிரை/நேர்-----நேர்/நிரை/நேர்
கூவிளம்------------தேமா-----------------கருவிளங்காய்-----------கூவிளங்காய்
இயற்சீர் ----------- இயற்சீர் -------------வெண்சீர் -------------==--வெண்சீர்
வெண்டளை------வெண்டளை------ வெண்டளை--------- வெண்டளை


ரென்/பு-----------  முரி/யர்------   பிறர்க்/கு
நேர்/நேர்----------நிரை/நேர்----நிரை/பு  
தேமா----------------புளிமா-------------பிறப்பு
இயற்சீர் ----------- இயற்சீர்
வெண்டளை------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>பிறர்க்கு>>>நிரைபு>>>பிறப்பு

1. குற்றொற்று- குறினெடில்
2. குற்றொற்று- நெற்றொற்று
3. குறிலினையொற்று- குறிலினை- குறில்
4. குற்றொற்று- குறிலினை- நெடில்
5. குற்றொற்று- குறில்
6. குறிலினை- குற்றொற்று
7. குறிலினையொற்று- குறில்

எதுகை-ன்பிலா- ரன்புடையா- ரென்பு
மோனை- ரெல்லாந்- ரென்பு
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13353
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3309

Back to top Go down

best Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Thu Sep 27, 2018 11:09 am

[b]அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-4-அன்புடைமை-73

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

அன்போ  டியைந்த   வழக்கென்ப    வாருயிர்க்
கென்போ   டியைந்த    தொடர்பு

தெளிவுரை

உயிரும் உடம்பும் கூடிய மனித வாழ்க்கையின் பயன் அன்பு காட்டி வாழ்வதே ஆகும்

குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

அன்/போ-----  டியைந்/த------   வழக்/கென்/ப-----    வா/ருயிர்க்
நேர்/நேர்---------நிரை/நேர்-------நிரை/நேர்/நேர்-------நேர்/நிரை  
தேமா------------புளிமா---------புளிமாங்காய்---------கூவிளம்
இயற்சீர் ----------- இயற்சீர் -------------வெண்சீர் --------------- இயற்சீர்
வெண்டளை------வெண்டளை------ வெண்டளை--------- வெண்டளை

கென்/போ----   டியைந்/த    தொடர்/பு
நேர்/நேர்---------நிரை/நேர்-----நிரை/பு
தேமா------------கூவிளம்-------பிறப்பு
இயற்சீர் ----------- இயற்சீர்
வெண்டளை------வெண்டளை

ஈற்றுச்சீர்>>>தொடர்பு>>>நிரைபு>>>பிறப்பு

1. குற்றொற்று-- நெடில்
2. குறிலினையொற்று—குறில்
3. குறிலினையொற்று-- குற்றொற்று-- குறில்
4. நெடில்—குறிலினையொற்று
5. குற்றொற்று-- நெடில்
6. குறிலினையொற்று – குறில்
7. குறிலினையொற்று – குறில்


எதுகை-ன்போ- கென்போ , டியைந்த- டியைந்த
மோனை- டியைந்த- டியைந்த , ழக்கென்ப    வாருயிர்க்

[b]
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13353
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3309

Back to top Go down

best Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை