ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இந்த வார இதழ்கள் சில ஏப்ரல் 2018
 Meeran

அறிமுகம்---- வாலி மோகன் தாஸ்
 Vaali Mohan Das

உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
 ராஜா

சச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து
 ராஜா

நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு
 ராஜா

மூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்
 ராஜா

குஜராத்தி பெயர் பலகை மஹாராஷ்டிராவில் அகற்றம்
 ராஜா

உப்புமா சாப்பிடுவது மோன நிலை...!!
 ayyasamy ram

திட்டி வாசல்
 ayyasamy ram

ஆணாக மாறி காதலியை திருமணம் செய்த இளம் பெண்; குட்டு உடைந்து சிக்கி கொண்டனர்
 ayyasamy ram

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 prevel

தினை மாவு பூரி!
 ayyasamy ram

இந்தியா பின்தங்க 5 மாநிலங்கள் காரணம்'
 ayyasamy ram

எச்1பி விசா: இந்தியர்களுக்கு புது நெருக்கடி
 ayyasamy ram

ஆசாராம் வழக்கில் நாளை தீர்ப்பு: 3 மாநிலங்களுக்கு பலத்த பாதுகாப்பு
 ayyasamy ram

அம்புலிமாமா புத்தகங்கள்
 prevel

எனக்குள் ஒரு கவிஞன் SK
 SK

இந்திரா அமிர்தம்---அறிமுகம்
 ரா.ரமேஷ்குமார்

கூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'
 SK

குல தெய்வம்
 SK

கிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியை கவுரவிக்க சிறப்பு தபால்தலை வெளியீடு
 T.N.Balasubramanian

காத்திருக்கிறேன் SK
 T.N.Balasubramanian

நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா? ஆதாரம் வெளியானதால் பரபரப்பு
 SK

கர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,
 T.N.Balasubramanian

சில்லுகள்...
 T.N.Balasubramanian

தலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்
 T.N.Balasubramanian

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது
 SK

மாறி விட்ட அர்த்தங்கள் - வாட்ஸ் அப் பகிர்வு
 ஜாஹீதாபானு

முகநூல் நகைச்சுவை படங்கள்
 SK

கடல் கொந்தளிப்பு இன்றும் தொடரும்
 SK

மழைத்துளி
 SK

பழைய தமிழ் திரைப்படங்கள்
 SK

கேரளா சாகித்ய அகாடமி
 SK

2019-ல்அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு
 SK

ரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்
 SK

கனடா : மக்கள் நெரிசலில் வேன் புகுந்ததில் 9 பேர் பலி
 SK

டூப் நடிகர் என்ன பிரச்சனை பண்றார்...?
 SK

வாலு மட்டும் அசைஞ்சா அது எருமை...! - வலையில் வசீகரித்தவை
 SK

கஞ்சன் லிஸ்டில் சேருபவர்கள்...!!
 SK

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 ரா.ரமேஷ்குமார்

கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
 SK

கேள்வி கேட்டா ரொம்ப மரியாதையா முழிப்பான்!''
 SK

வெயிலுக்கு ஏற்ற 'ஸ்குவாஷ்'
 SK

கோவில் கும்பாபிஷேகம் : சிங்கப்பூர் பிரதமர் பங்கேற்பு
 SK

படித்ததில் பிடித்தது --வாட்சப் வருகை
 T.N.Balasubramanian

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவுகளை பாதுகாப்பாக கையாள மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் என்ன? சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
 SK

நாளை சுனாமியா..? 11.5 அடி வரை உயரும் அலை...காலை 8.30  மணி முதல் மறு நாள் 11.30  மணிக்குள்...!
 T.N.Balasubramanian

அறுவை சிகிச்சை காயங்களை 60 நொடிகளில் மறைய வைக்கும் அற்புத பிசின் கண்டுபிடிப்பு!
 பழ.முத்துராமலிங்கம்

1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு! சாக்கடைக் கால்வாயான அவலம்
 பழ.முத்துராமலிங்கம்

தெரிஞ்சதும் தெரியாததும்
 SK

திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து
 SK

சினி துளிகள்!
 SK

தலைவர் உ.பா.பிரியர்னு எப்படி சொல்றே?
 SK

ஜாதகத்திலே கன்னி ராசிங்கிறதை மாத்தணும்...!!
 SK

தலைவர் தத்துவமா பேசறார்....!!
 ஜாஹீதாபானு

நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்
 SK

பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்
 SK

நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
 SK

கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

வளைகாப்புப் புகைப்படங்களைப் பகிர்ந்த கிருஷ்ணபிரியா... தினகரனுக்கு பதிலடியா?

View previous topic View next topic Go down

வளைகாப்புப் புகைப்படங்களைப் பகிர்ந்த கிருஷ்ணபிரியா... தினகரனுக்கு பதிலடியா?

Post by ayyasamy ram on Wed Dec 27, 2017 8:37 am


-

-

இளவரசியின் மகள் கிருஷ்ணப்ரியா தனது ஃபேஸ்புக் பக்கத்தில்
ஜெயலலிதா தனது வளைகாப்பு நிகழ்வில் ஜெயலலிதாவுடன்
இருக்கும் புகைப்படங்களை திடீரென வெளியிட்டு, அந்த நிகழ்வு
குறித்த சில சம்பவங்களையும் அதில் தெரிவித்துள்ளார்.

சில தினங்களுக்கு முன் ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை
பெறும் வீடியோவை தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல்
வெளியிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வீடியோ
வெளியானதற்கு தினகரன்தான் காரணம் என்று குற்றச்சாட்டு
எழுந்த நிலையில், “என்னைக் கேட்காமலே இந்த வீடியோவை
வெற்றிவேல் வெளியிட்டுள்ளார்” என்று தினகரன் மறுப்பு
தெரிவித்தார்.

இந்த வீடியோ வெளியானதற்கு சசிகலா குடும்பத்திலே கடும்
எதிர்ப்பு கிளம்பியது. குறிப்பாக, இளவரசியின் மகள்
கிருஷ்ணப்ரியா தனது கண்டனத்தை முகநூல் வழியாகத்
தெரிவித்தார். “டி.டி.வி. தினகரனின் உடன் இருக்கும்
வெற்றிவேலின் கீழ்த்தரனமான செயல்” என்று அந்தப் பதிவில்
சொல்லியிருந்தார். இந்த பதிவுக்கு, பதில் சொன்ன தினகரன்
“சீப் பப்ளிசிட்டிக்காகச் சொல்லப்படும் கருத்துகள்” என்று
சொல்லியிருந்தார்.

இதனால், கிருஷ்ணப்ரியாவுக்கும், தினகரனுக்கு இடையே
விரிசல் அதிகமானதாகக் கூறப்பட்டது. மேலும் கிருஷ்ணப்ரியா
அடுத்த ஆண்டு அரசியலுக்கு தான் வரப்போவதாக அறிவித்தார்.
தினகரன் தரப்புக்கு செக் வைக்கும் விதத்தில் கிருஷ்ணப்ரியா
அரசியலுக்குள் என்ட்ரியாகப் போவதாகக் கூறப்பட்டது.
-
-----------------
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 36055
மதிப்பீடுகள் : 11410

View user profile

Back to top Go down

Re: வளைகாப்புப் புகைப்படங்களைப் பகிர்ந்த கிருஷ்ணபிரியா... தினகரனுக்கு பதிலடியா?

Post by ayyasamy ram on Wed Dec 27, 2017 8:39 am



இந்த நிலையில்தான் இன்று தனது ஃபேஸ்புக் பக்கத்தில்
கிருஷ்ணப்ரியா தனது வளைகாப்புப் படங்களைப்
பகிர்ந்துள்ளார். 2005-ம் ஆண்டு போயஸ் கார்டனில்
நடைபெற்ற கிருஷ்ணப்ரியாவின் வளைகாப்பு நிகழ்வில்
ஜெயலலிதா கிருஷ்ணப்ரியாவுக்கு வளையல் போடுவது
போன்ற படங்களும் இடம்பெற்றுள்ளது.

இந்த முகநூல் பதிவில் “இப்புகைப்படங்கள், 2005-ம்
ஆண்டு, அம்மா அவர்கள் போயஸ் இல்லத்தில், எனது
வளைகாப்பு நடைபெற்றபோது எடுக்கப்பட்டவை.

சில நினைவுகள் நம் மரணம் வரை கூடவே பயணிக்கும்.
அவற்றுள் இதுவும் ஒன்று. எங்களது மூன்று அன்னைகளில்
ஒருவரை நாங்கள் இழந்துவிட்டோம் என்ற உண்மையை
இன்னமும் எங்களின் மனம் நம்ப மறுக்கிறது.

எனக்கு வளைப்பூட்டும்போது, அம்மா அவர்கள் பாடிய,
‘என்ன தவம் செய்தனை யசோதா’ என கிருஷ்ணனுக்காக
மீரா பாடிய பாடலை, எனக்காக நான் எதிர் பார்க்காத
நேரத்தில் பாடியது, இன்னமும் என் இதயத்தில் ஒலித்துக்
கொண்டிருக்கிறது” என்று பதிவிட்டுள்ளார்

ஆர்.கே. நகர் தேர்தலில் தினகரன் வெற்றி பெற்ற நிலையில்
நேற்று கிருஷ்ணப்ரியா, “சின்னம்மா மீது மக்களுக்கு
கொண்டுள்ள நம்பிக்கைக்குக் கிடைத்த வெற்றி” என்றே
ஃபேஸ்புக்கில் பகிர்ந்திருந்தார்.

இந்த நிலையில் தினகரனுக்கு செக் வைக்கும் விதத்தில்
ஜெயலலிதாவுக்கும் தனக்கும் நெருக்கமான உறவு இருந்தது
என்பதை வெளிஉலகுக்குக் காட்ட தொடங்கியுள்ளார்
கிருஷ்ணப்ரியா’ என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்
-
-----------------------

-- அ.சையது அபுதாஹிர் - விகடன்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 36055
மதிப்பீடுகள் : 11410

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum