ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
கோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்!
 ayyasamy ram

5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்
 ayyasamy ram

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 T.N.Balasubramanian

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 ajaydreams

அமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’
 ayyasamy ram

தயாரிப்பாளரான சுருதிஹாசன்
 ayyasamy ram

மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்
 ayyasamy ram

மின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து
 ayyasamy ram

அரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்
 ayyasamy ram

அதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை
 ayyasamy ram

நீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை
 ayyasamy ram

இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 பழ.முத்துராமலிங்கம்

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 பழ.முத்துராமலிங்கம்

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 பழ.முத்துராமலிங்கம்

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 பழ.முத்துராமலிங்கம்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்
 T.N.Balasubramanian

அப்பா
 பழ.முத்துராமலிங்கம்

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 பழ.முத்துராமலிங்கம்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 பழ.முத்துராமலிங்கம்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 பழ.முத்துராமலிங்கம்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 11
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 10
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 09
 தமிழ்நேசன்1981

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

”வெரிசான் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும்”- அடுத்தகட்ட போராட்டத்தில் ஐடி ஊழியர்கள் #VikatanExclusive

View previous topic View next topic Go down

”வெரிசான் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும்”- அடுத்தகட்ட போராட்டத்தில் ஐடி ஊழியர்கள் #VikatanExclusive

Post by பழ.முத்துராமலிங்கம் on Tue Dec 26, 2017 11:28 am

ஐடி ஊழியர்களை ஒட்டுமொத்தமாக ஒரே நாளில் வெளியேற்றிய வெரிசான் நிறுவனம் பொதுவெளியில் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும் என ஐடி ஊழியர்கள் சங்கத்தினர் தங்களது அடுத்தகட்ட நடவடிக்கையை முன்னெடுத்து வருகின்றனர்.
சென்னையில் ஒலிம்பியா டெக் பார்க் மற்றும் தரமணி ஆர்.எம்.எக்ஸ் வளாகங்களில் செயல்படும் வெரிஸான் நிறுவனம், கடந்த 12-ம் தேதி சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் ஆகிய கிளைகளிலிருந்து ஒரே நாளில் 993 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்தது. எந்தவித முன்னறிவிப்புமின்றி குண்டர்கள் துணையோடு ஆட்குறைப்பு நடவடிக்கையில் இறங்கியது. இப்படியோர் அதிரடியில் இறங்கும்போது, ஊழியர்களுக்கு ஏதாவது நேரலாம் என்பதற்காக ஆம்புலன்ஸ் வாகனங்களை வளாகத்தில் நிறுத்தியிருந்தது. வெரிஸானின் செயல்பாடுகளுக்கு எதிராகத் தொழிலாளர் நல ஆணையர் அலுவலகத்தில் மனுகொடுத்தன ஐ.டி ஊழியர் சங்கங்கள். இதையடுத்து, இன்று மாலை 4 மணிக்குத் தொழிலாளர் நல ஆணையர் அலுவலகத்தில் முதல்கட்ட பேச்சுவார்த்தைத் தொடங்கவிருக்கிறது. வெரிஸானைப் போலவே, மேலும் சில ஐ.டி நிறுவனங்களும் ஆட்குறைப்புத் திட்டத்தை சத்தமில்லாமல் அமல்படுத்தி வருகின்றன. நாளொன்றுக்கு இரண்டு பேர், மூன்று பேர் எனப் பணியிழந்து வருகின்றனர்.
இதுகுறித்து தொழிலாளர் நல ஆணையரிடம் ஐ.டி அண்ட் ஐ.டி.இ.எஸ் தொழிலாளர் சங்கத்தினர் புகார் அளித்து வெரிசான் நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால், வெரிசான் நிறுவனம் ’ஆள்குறைப்பு நடவடிக்கை என்ற ஒன்று நடக்கவே இல்லை’ என முற்றிலுமாக மறுத்துவிட்டது. இந்நிலையில் ஐ.டி அண்ட் ஐ.டி.இ.எஸ் தொழிலாளர் சங்கத்தினர் தங்களது அடுத்தகட்ட நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர். இதுகுறித்து ஐ.டி அண்ட் ஐ.டி.இ.எஸ் தொழிலாளர் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் அழகுநம்பி வெல்கினிடம் பேசினோம். ”வெரிசான் நிறுவனத்தின் முன்னறிவிப்பு இல்லாத ஆள்குறைப்பு நடவடிக்கையை எதிர்த்து தொழிலாளர் நல ஆணையத்தில் கடந்த இரண்டு நாள்களில் இரண்டு பிரிவுகளின் கீழ் மனு அளித்துள்ளோம். ஐ.டி சட்டம் 1947 25F என்ற பிரிவுக்கு எதிராக நடந்துகொண்டதாக வெரிசான் நிறுவனம் மீது புகார் அளித்துள்ளோம். 993 ஊழியர்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்துக்கும் மன உளைச்சலுக்கும் வெரிசான் பொது வெளியில் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். மேலும் பணி இழந்த பணியாளர்கள் அத்தனை பேரையும் மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும்” என்றார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
நன்றி
விகடன்
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8607
மதிப்பீடுகள் : 1979

View user profile

Back to top Go down

Re: ”வெரிசான் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும்”- அடுத்தகட்ட போராட்டத்தில் ஐடி ஊழியர்கள் #VikatanExclusive

Post by SK on Tue Dec 26, 2017 12:04 pm

பெரும் முதலாளிகள் எப்போதும் ஊழியர்களை ஒரு பொருட்டாகவே மதிக்கமாட்டார்கள்
avatar
SK
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6181
மதிப்பீடுகள் : 1110

View user profile

Back to top Go down

Re: ”வெரிசான் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும்”- அடுத்தகட்ட போராட்டத்தில் ஐடி ஊழியர்கள் #VikatanExclusive

Post by aeroboy2000 on Tue Dec 26, 2017 4:31 pm

இதே போல சம்பவம் அமெரிக்காவில் நடந்து இருந்தால்.....

வெரிசான் .... பாஸ்... கம்பிக்கு பின்னால் மண்டியிட்டு இருப்பார்...

குண்டர்களும் கூட்டமாக ... அவருக்கு பக்க பலமாக ... சிறையை நிறைத்து இருப்பர்...
இது இந்தியா ... இங்கு வேலியே பயிரை மேயும்..
அரசுகள் அவர்களுக்கு ஏவல் செய்யும்...

எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு
avatar
aeroboy2000
பண்பாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 181
மதிப்பீடுகள் : 64

View user profile

Back to top Go down

Re: ”வெரிசான் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும்”- அடுத்தகட்ட போராட்டத்தில் ஐடி ஊழியர்கள் #VikatanExclusive

Post by பழ.முத்துராமலிங்கம் on Tue Dec 26, 2017 8:20 pm

@SK wrote:பெரும் முதலாளிகள்  எப்போதும் ஊழியர்களை ஒரு பொருட்டாகவே மதிக்கமாட்டார்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1254813
நீங்கள் சொல்வது நூறு சதவீதம் உண்மை
நன்றி
நண்பா
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8607
மதிப்பீடுகள் : 1979

View user profile

Back to top Go down

Re: ”வெரிசான் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும்”- அடுத்தகட்ட போராட்டத்தில் ஐடி ஊழியர்கள் #VikatanExclusive

Post by பழ.முத்துராமலிங்கம் on Tue Dec 26, 2017 8:24 pm

@aeroboy2000 wrote:இதே போல சம்பவம் அமெரிக்காவில் நடந்து இருந்தால்.....

வெரிசான் .... பாஸ்... கம்பிக்கு பின்னால் மண்டியிட்டு இருப்பார்...

குண்டர்களும் கூட்டமாக ... அவருக்கு பக்க பலமாக ... சிறையை நிறைத்து இருப்பர்...
இது இந்தியா ... இங்கு வேலியே பயிரை மேயும்..
அரசுகள் அவர்களுக்கு ஏவல் செய்யும்...

எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு
மேற்கோள் செய்த பதிவு: 1254839
நம் அரசு மீது நமக்கு அதிருப்தி எந்த அளவு
உள்ளது. என்ன செய்வது?
நன்றி
நண்பா
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8607
மதிப்பீடுகள் : 1979

View user profile

Back to top Go down

Re: ”வெரிசான் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும்”- அடுத்தகட்ட போராட்டத்தில் ஐடி ஊழியர்கள் #VikatanExclusive

Post by T.N.Balasubramanian on Tue Dec 26, 2017 8:38 pm

@aeroboy2000 wrote:இதே போல சம்பவம் அமெரிக்காவில் நடந்து இருந்தால்.....

வெரிசான் .... பாஸ்... கம்பிக்கு பின்னால் மண்டியிட்டு இருப்பார்...

குண்டர்களும் கூட்டமாக ... அவருக்கு பக்க பலமாக ... சிறையை நிறைத்து இருப்பர்...
இது இந்தியா ... இங்கு வேலியே பயிரை மேயும்..
அரசுகள் அவர்களுக்கு ஏவல் செய்யும்...

எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு
மேற்கோள் செய்த பதிவு: 1254839அமெரிக்காவில் ஒர்க்கர்ஸ்களுக்கு யூனியன் உண்டு . மேல்மட்ட ஊழியர்களுக்கு கிடையாது .வெள்ளிக்கிழமை மாலை உங்கள் சேவைக்கு நன்றி என்று கூறி அவருக்கு வரவேண்டிய சம்பளம் ,
எவ்வளவு வருட செர்வீஸ் அதற்கேற்ற ஈட்டுத்தொகை முதலியவரை கணக்கிட்டு அந்த செக் தருவார்கள் .வாய் மூடி வாங்கிக்கொண்டு வருபவர்கள் பலரை நானறிவேன்.
அமெரிக்கா என்று இல்லை , இந்தியாவில் இருக்கின்ற அமெரிக்கன் எம்பசியிலும் இது மாதிரி நடந்தது உண்டு.
வேலைக்கு உத்தரவாதம் கிடையாது. ஈட்டு தொகைக்கு உத்தரவாதம் உண்டு.
சேவை தேவை இல்லை என்றால் ஒன்றும் பண்ணமுடியாது..

எனக்கு தெரிந்த மற்றுமோர் சம்பவம் .
ஒருவர் 32 வருட சேவை. வேலையிருந்து நீக்கப்பட்டார்.
கம்பெனியின் CEO வை பார்த்து 32 வருட சர்வீஸ் செய்துள்ளேன் உங்கள் கம்பெனியில்.
என்ன செய்தீர்கள் நீங்கள் எனக்கு என்று கேட்டார்.
அதற்கு CEO வின் பதில் : உங்களை 32 வருடம் வேலையில் வைத்துக்கொண்டு சம்பளம் கொடுத்துள்ளோம்

இது எப்பிடி இருக்கு ?

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22158
மதிப்பீடுகள் : 8272

View user profile

Back to top Go down

Re: ”வெரிசான் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும்”- அடுத்தகட்ட போராட்டத்தில் ஐடி ஊழியர்கள் #VikatanExclusive

Post by aeroboy2000 on Tue Dec 26, 2017 9:43 pm

அட இவர்கள் பரம்பரைத் திருடர்கள் போலத் தெரிகிறார்களே...

அமெரிக்காவிலும் வீட்டுக்கு அனுப்புகிறார்கள் ஆனால் இங்கு போல அடியாட்களை வைத்தா...
ஒருவரின் ஆன்லைன் விமர்சனம்

வெரிசானில் வேலை செய்தால் ஏற்படும் பிரச்சினைகள் :

Health Benefits are not worth the premium. Pay is not worth the work load. Hours are worse than the pay. No incentives for doing well. No Holiday Party. Overpriced onsite Café, Overpriced onsite GYM. Company makes employees pay for their services, only 35% accessories which are already way overpriced. Company is the Greediest company I have ever worked for. Look at your bill people every month this company will steal from you!:

வெரிசானின் சேவைகளை உபயோகிப்பதை நிறுத்துங்கள் ...
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
avatar
aeroboy2000
பண்பாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 181
மதிப்பீடுகள் : 64

View user profile

Back to top Go down

Re: ”வெரிசான் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும்”- அடுத்தகட்ட போராட்டத்தில் ஐடி ஊழியர்கள் #VikatanExclusive

Post by T.N.Balasubramanian on Tue Dec 26, 2017 10:01 pm

வெரிசானில் என்ன கேடரில் அவர் இருக்கிறார்.?

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22158
மதிப்பீடுகள் : 8272

View user profile

Back to top Go down

Re: ”வெரிசான் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும்”- அடுத்தகட்ட போராட்டத்தில் ஐடி ஊழியர்கள் #VikatanExclusive

Post by மூர்த்தி on Tue Dec 26, 2017 11:51 pm

Verizon நிறுவனம் (US) சென்ற ஆண்டு நீண்ட வேலை நிறுத்தத்தை (44 நாட்கள்) அடுத்து தொழிற்சங்கம் பல சலுகைகளைப் பெற்றது. அதே சமயம் வெரிசன் 3000 தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்தது. வேறு மானிலங்களில் அவர்கள் வேலை செய்யலாம் அல்லது விரும்பாதவர்கள் severance package பெற்று ஒதுங்கிக் கொண்டார்கள்.இப்படி வெரிசானில் ஒவ்வொரு ஆண்டும் நடப்பதுண்டு.

Verizon நிறுவனம் (US) Oath என்ற பெயரில் yahoo,AOL ஐ இணைத்து புதிய நிறுவனம் ஒன்றை அடுத்த ஆண்டு தொடங்க இருக்கிறது.

சாதாரணமாக, you are fired என அனுப்பி விடுவார்கள்.சட்ட நடவடிக்கை மிகவும் கடினம்.
avatar
மூர்த்தி
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1047
மதிப்பீடுகள் : 506

View user profile

Back to top Go down

Re: ”வெரிசான் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும்”- அடுத்தகட்ட போராட்டத்தில் ஐடி ஊழியர்கள் #VikatanExclusive

Post by பழ.முத்துராமலிங்கம் on Wed Dec 27, 2017 7:58 pm

@மூர்த்தி wrote:Verizon நிறுவனம் (US) சென்ற ஆண்டு நீண்ட வேலை நிறுத்தத்தை (44 நாட்கள்) அடுத்து தொழிற்சங்கம் பல சலுகைகளைப் பெற்றது. அதே சமயம் வெரிசன்  3000 தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்தது. வேறு மானிலங்களில் அவர்கள் வேலை செய்யலாம் அல்லது விரும்பாதவர்கள் severance package பெற்று ஒதுங்கிக் கொண்டார்கள்.இப்படி வெரிசானில் ஒவ்வொரு ஆண்டும் நடப்பதுண்டு.

Verizon நிறுவனம் (US) Oath என்ற பெயரில் yahoo,AOL ஐ இணைத்து புதிய நிறுவனம் ஒன்றை அடுத்த ஆண்டு தொடங்க இருக்கிறது.

சாதாரணமாக, you  are  fired  என அனுப்பி  விடுவார்கள்.சட்ட  நடவடிக்கை மிகவும் கடினம்.
மேற்கோள் செய்த பதிவு: 1254889
இந்த அளவிற்கு கடுமையாக விமர்சனம் செய்து
உள்ளீர்கள். இது உண்மை??
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8607
மதிப்பீடுகள் : 1979

View user profile

Back to top Go down

Re: ”வெரிசான் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும்”- அடுத்தகட்ட போராட்டத்தில் ஐடி ஊழியர்கள் #VikatanExclusive

Post by T.N.Balasubramanian on Wed Dec 27, 2017 8:23 pm

வெரிஸ்ன் மட்டும் இல்லை எல்லா கம்பெனியிலும் இதே பாலிசிதான்.
ஒர்க்கர்ஸ்களுக்கு மட்டும்யூனியன் உண்டு, ஒர்க்கர்ஸ் ஸ்ட்ரைக்கின் போது
ஒர்க்கர்ஸ் செய்யவேண்டிய வேலையை வெரிசான் ஆபீசர்கள் செய்தார்கள்.

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22158
மதிப்பீடுகள் : 8272

View user profile

Back to top Go down

Re: ”வெரிசான் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும்”- அடுத்தகட்ட போராட்டத்தில் ஐடி ஊழியர்கள் #VikatanExclusive

Post by மூர்த்தி on Wed Dec 27, 2017 11:08 pm

//இந்த அளவிற்கு கடுமையாக விமர்சனம் செய்து
உள்ளீர்கள். இது உண்மை??//

ஐயா இது விமர்சனம் அல்ல. செய்தி. சென்ற ஆண்டு வெரிசன் நிறுவன (US) ஊழியர்கள் 44 நாட்கள் வேலை நிறுத்தம் செய்தார்கள்.சில சலுகைகள்- ஊதிய உயர்வு,வேலை ஒப்பந்தம் நான்கு வருடங்களாக்கப்பட்டது,ஓய்வு ஊதிய உயர்வு, போன்ற - பெற்றதன் மூலம் வேலை நிறுத்தம் முடிவிற்கு வந்தது.
ஊழியர்கள் நீக்கத்திற்காக சிலருக்கு வேறு மானிலங்களில் வேலை தரப்பட்டது.மற்றவர்கள் severance package பெற்றுக் கொண்டார்கள்.

ரமணியன் ஐயா சொன்னது போல் வேலை நிறுத்தக் காலத்தில் ஆபிசர்களும் தற்காலிக வேலையாட்களும் அவசர வேலைகளை செய்தார்கள்.
avatar
மூர்த்தி
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1047
மதிப்பீடுகள் : 506

View user profile

Back to top Go down

Re: ”வெரிசான் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும்”- அடுத்தகட்ட போராட்டத்தில் ஐடி ஊழியர்கள் #VikatanExclusive

Post by பழ.முத்துராமலிங்கம் on Thu Dec 28, 2017 8:28 pm

மூர்த்தி அவர்களுக்கு நன்றி
வழக்கத்திற்கு.
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8607
மதிப்பீடுகள் : 1979

View user profile

Back to top Go down

Re: ”வெரிசான் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும்”- அடுத்தகட்ட போராட்டத்தில் ஐடி ஊழியர்கள் #VikatanExclusive

Post by aeroboy2000 on Fri Dec 29, 2017 8:16 am

எல்லாம் சரி ... இது மாதிரி பிரச்சினைகளுக்கு எல்லாம் மூல காரணம்

யாரும் கோபிக்க வேண்டாம்...

சம்பந்தம் இல்லாத தோழர்கள் தோழிகள் மன்னிக்கவும்

நம் ஆசியர்களின் (இந்தியர்களின்) அடிமை மனப் பாங்குதான்...

நீ சம்பளத்தை ஏத்து ... நான் வீட்டுக்கே போகாமல் அடிமை போல இங்கேயே பழியாக் கிடக்கிறேன் ...
இது ஒரு வாழ்க்கையா என்று சிந்திக்கும் திறன் அற்றவர்களாக மாறிப் போயினர் ...

ஒரு கம்பனி 20000 ரூபாய் அதிகம் கொடுத்தால் ஒரே ஜம்ப் ...
கடமை கண்ணியம் தார்மீகம் ... பொறுப்புணர்வு கம்பனி மீது பற்று பாசம் என்று எதுவும் கிடையாது...

அதை அறவே மறக்கச் செய்தது அமெரிக்க வியாபாரத் தந்திரங்கள் ...

இப்படி இன்று உள்ளது போல மென்பொருள், கணினி, ஐ.டி கம்பனிகள் கூட்டு வைத்து கொள்ளை அடிப்பார்கள், அடி மட்ட சம்பளம் தருவார்கள்...  இந்நிலை மாறும் என்று ஒருவர் அன்றே சொன்னார்... நான் தான் நம்ப முடியாமல் இருந்தேன்....

2001 க்குப் பிறகு
அமெரிக்க அதிபர் புஷ் செய்த பிரச்சினையால்

மிக வேகமாக சிறுசேரி, கேளம்பாக்கம், திருப்போரூர் வயல்கள் காங்க்ரீட் கட்டிடங்களாக மாறியது ... நானும் நடப்பதைக் கண்ட வாறு டீசல் ஜெனெரேட்டர் விற்றுக் கொண்டு இருந்தேன் ...

2004 சுனாமிக்குப் பிறகு ஏக்கர் விலை சென்ட் அளவு நிலத்திற்கு கிடைத்தது...

ஒரு புறம் ம்யூச்சுவல் ஃபண்ட் / பங்குச் சந்தை  ஏற்றம், மறு  புறம் நிலம் , கட்டிடம் விலை ஏற்றம்...

அறை எண்  305 ல் கடவுள் படத்தில் காண்பித்தது போல ... படு வேகமான வாழ்க்கை .... அதீத சம்பளம் .... அளவற்ற போனஸ் ...  வரம்பற்ற பணப் புழக்கம் ......

2005 , 2006 ல்  பி.ஈ மெக்கானிக்கல் படித்த ஒருவன் தொழிற்சாலையில் மாதம் 3000 ரூபாய் வாங்கும் போது அதே படிப்பைக் கொண்டவன் 15000 முதல் லட்சம் வரையில் வாங்கினான் ...

ஓ எம் ஆர் சாலை கட்டமைத்துக் கொண்டு இருந்தார்கள் சிறுசேரி வரையில்...  

கம்பனி மாறினால் ஆண்டுக்கு இரண்டு லட்சம் அதிகம் ....

தென் சென்னை யே பணக்காரர்கள் மட்டும் இடம் வாங்க முடியும் இல்லை ஐ.டி. யில் பணி புரிபவர்கள் மட்டும்தான் இடம் வாங்க முடியும் என்று ஆகியது...

இன்று என்னாகியது ...

பல பொறியியல் கல்லூரிகள் கணினி சம்பந்தப் பட்ட படிப்புப் பிரிவுகளையே எடுத்து விட்டது...

இன்னமும் வாழ்க்கை நம் கையை விட்டுப் போய் விடவில்லை....
மீண்டு எழ வாய்ப்புள்ளது ....
உங்கள் குழந்தைகளுக்கு உடலை வளைத்து வேலை செய்யப் பழக்குங்கள்...
நல்லது எல்லாவற்றையும் செய்ய விடுங்கள் ...

தேவை இல்லாமல் பணம் உள்ளது என்பதற்காக வாங்கிக் குவிக்காதீர்கள் ...
அப்புறம் அதை விற்க ஓ எல் எக்ஸ் பின்னே ஓடாதீர்கள் ...

வசதி அற்றவர்களுக்கு உதவுங்கள்...
செய்யும் பணியை விரும்பி மனம் மகிழ சந்தோஷமாகச் செய்யுங்கள் ...  

முடிந்தவரை சீனப் பொருட்களை, அமெரிக்கப் பொருட்களை தவிருங்கள் ...
இன்றைய கால கட்டத்தில் அது மிகவும் சிரமம்தான் ...

நல்ல சிந்தனைகளுடன் நாட்களைத் தொடங்குங்கள் ...
இரவு உறங்கும் முன் அன்று செய்த, செய்வித்த நல்ல செயல்களை சிந்தித்த படி உறங்குங்கள் ...

மனம் நல்வழிப்பட்டால் வாழ்க்கையும் நம் வசப்படும் ...

வாழ்க வளமுடன் ...வளர்க நலமுடன் ...

வாசித்தவர்களுக்கு
நெஞ்சார்ந்த நன்றிகளுடன்
நெடுஞ்சேரலாதன் கு. லோ
கிழக்கு தாம்பரம் – மாடம்பாக்கம்

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:
avatar
aeroboy2000
பண்பாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 181
மதிப்பீடுகள் : 64

View user profile

Back to top Go down

Re: ”வெரிசான் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும்”- அடுத்தகட்ட போராட்டத்தில் ஐடி ஊழியர்கள் #VikatanExclusive

Post by T.N.Balasubramanian on Fri Dec 29, 2017 9:39 am

நம் ஆசியர்களின் (இந்தியர்களின்) அடிமை மனப் பாங்குதான்...

லாபங்கள்,கஷ்டநஷ்டங்களை அறிந்தே சேர்ந்த பின் குத்துதே குடையுதே என்று சொல்லக்கூடாது என்பதை வலியுறுத்துகிறேன்.
வெள்ளித்திரையில் கதாநாயகியாக ஜொலிக்கவேண்டுமென்றால்  நடிக்கும் திறமை இருந்தால் மட்டும் போதுமா? சொல்லுவதற்கு இணங்க  யாவருடனும் ஒத்துப்போகும் குணம் இருக்கவேண்டும். மாட்டேன் என்று கொடி பிடிக்கமுடியுமா ?
எந்தன் மனதில் பட்டதை கூறுகிறேன். தவறாக யாரும் நினைக்கவேண்டாம்.

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22158
மதிப்பீடுகள் : 8272

View user profile

Back to top Go down

Re: ”வெரிசான் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும்”- அடுத்தகட்ட போராட்டத்தில் ஐடி ஊழியர்கள் #VikatanExclusive

Post by பழ.முத்துராமலிங்கம் on Fri Dec 29, 2017 12:33 pm

@T.N.Balasubramanian wrote:
நம் ஆசியர்களின் (இந்தியர்களின்) அடிமை மனப் பாங்குதான்...

லாபங்கள்,கஷ்டநஷ்டங்களை அறிந்தே சேர்ந்த பின் குத்துதே குடையுதே என்று சொல்லக்கூடாது என்பதை வலியுறுத்துகிறேன்.
வெள்ளித்திரையில் கதாநாயகியாக ஜொலிக்கவேண்டுமென்றால்  நடிக்கும் திறமை இருந்தால் மட்டும் போதுமா? சொல்லுவதற்கு இணங்க  யாவருடனும் ஒத்துப்போகும் குணம் இருக்கவேண்டும். மாட்டேன் என்று கொடி  பிடிக்கமுடியுமா ?
எந்தன் மனதில் பட்டதை கூறுகிறேன். தவறாக யாரும் நினைக்கவேண்டாம்.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1255210
இந்த வேலையில் சேர்ந்து விட்டால்
அவர்கள் சொல்லிய படி தான் ஆடவேண்டும்
நிதர்சனம்
நன்றி
ஐயா
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8607
மதிப்பீடுகள் : 1979

View user profile

Back to top Go down

Re: ”வெரிசான் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும்”- அடுத்தகட்ட போராட்டத்தில் ஐடி ஊழியர்கள் #VikatanExclusive

Post by T.N.Balasubramanian on Fri Dec 29, 2017 2:51 pm

நம்முடைய மீனவ சகோதரர்களை எடுத்துக் கொள்ளுங்கள்.கடலில் போவது ஆபத்தானதுதான். அதிக பணம் சம்பாதிக்க வெகுதூரம் மாலத்தீவு , செஷல்ஸ் வரை மின்படகில் செல்லுகிறார்கள்.புயல் காரணமாக ஏதாவது ஆகிவிட்டது என்றால் அரசாங்கம்தான் பொறுப்பு என்கிறார்கள்.லாபம் வந்தால் தனது என்றும் சேதம் ஆகின் அரசு பொறுப்பு என்றும் பொறுப்பை மற்றவர்கள் தலையில் கட்டுவது மனித இயல்பாகிவிட்டது..ஒரு உதாரணத்திற்கு கூறினேன்.எவ்வளவோ வழிமுறைகள் இருந்தாலும் அவைகளை பயன்படுத்துகிறீர்களா ...தெரியாது. எவ்வளவு பேர் கடலுக்கு செல்கிறார்கள் கணக்கில்லை.எவ்வளவு பேர் திரும்பிவருகிறார்கள் கணக்கில்லை.இன்னும் பல பல ஆச்சரியப்படத்தக்க விஷயங்கள் இதில் இருக்கின்றன, அரசின் மெத்தனத்தை ஆதாயம் பார்க்கிறார்கள் சிலர்.

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22158
மதிப்பீடுகள் : 8272

View user profile

Back to top Go down

Re: ”வெரிசான் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும்”- அடுத்தகட்ட போராட்டத்தில் ஐடி ஊழியர்கள் #VikatanExclusive

Post by பழ.முத்துராமலிங்கம் on Fri Dec 29, 2017 8:35 pm

சம்பாதிப்பது லாபம் வரும் வரை யாரும் வாய் திறந்து எதையும் பேசுவது இல்லை.
மீனவர்கள் அவர்கள் வேலை கடலில் தான்.
சில நேரங்களில் இந்த மாதிரி சூழ்நிலை
உருவாவது இயற்கை இதற்கு யாரையும் குறை
கூறுவதில் பயனில்லை.
ஆனால் இந்த உண்மையை பலரும் பேச
பயந்து எல்லோரும் கோரசாக அரசின்
மீது பாய்ந்து பிராண்டுவது இயற்கை
ஆகி விட்டது.
ஆனால் உண்மை எப்போதும் கசப்பாக உள்ளது
நன்றி 
ஐயா
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8607
மதிப்பீடுகள் : 1979

View user profile

Back to top Go down

Re: ”வெரிசான் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும்”- அடுத்தகட்ட போராட்டத்தில் ஐடி ஊழியர்கள் #VikatanExclusive

Post by Sponsored content

Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை

Back to top Go down

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum