ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 பழ.முத்துராமலிங்கம்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 பழ.முத்துராமலிங்கம்

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 பழ.முத்துராமலிங்கம்

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 shruthi

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 11
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 10
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 09
 தமிழ்நேசன்1981

அப்பா
 M.M.SENTHIL

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 ஜாஹீதாபானு

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 ஜாஹீதாபானு

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 ayyasamy ram

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 T.N.Balasubramanian

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 T.N.Balasubramanian

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

சிந்தனையாளர் முத்துக்கள்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

உயிர் காக்கும் ரத்தம் வீணாகலாமா?

View previous topic View next topic Go down

உயிர் காக்கும் ரத்தம் வீணாகலாமா?

Post by aeroboy2000 on Thu Dec 21, 2017 5:35 pm

உயிர் காக்கும் ரத்தம் வீணாகலாமா?

கு. கணேசன்
தமிழ் இந்து


ரத்தம் நம் உயிர் காக்கும் திரவம். விபத்துகளுக்கு மட்டுமல்ல, அறுவைச் சிகிச்சை, உறுப்பு மாற்று சிகிச்சை, பிரசவம், தீக்காயங்கள், கடுமையான ரத்தசோகை, தலசீமியா, புற்றுநோய் போன்ற பலதரப்பட்ட மருத்துவப் பிரச்சினைகளுக்கு உடனடியாகத் தேவைப்படுவது ரத்தம்தான்.

அகில இந்திய அளவில் தலசீமியா பிரச்சினை உள்ளவர்கள் ஒரு லட்சம் பேர் இருக்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் 10 ஆயிரம் பேர் புதிதாக இந்த நோயுடன் பிறக்கின்றனர். இவர்களுக்கு ரத்தமாற்று சிகிச்சை ஒன்றுதான் உயிர் பிழைக்க உதவும் ஒரே வழி. வாழ்வின் இறுதிநாள் வரைக்கும் இவர்களுக்கு ரத்தம் தேவைப்படுகிறது. மாதம் இருமுறை புதிய ரத்தம் செலுத்தப்பட வேண்டும். இவர்களுக்கு ரத்தம் கிடைப்பது பெரிய சவாலாக உள்ளது.

ரத்தப் பற்றாக்குறை

ஒரு ரத்த வங்கியிலிருந்து ரத்தத்தைத் தானமாகப் பெறுபவர்கள், பதிலுக்கு தங்கள் உறவினர்கள் மூலம் அந்த வங்கிக்கு ரத்ததானம் செய்ய வேண்டும். ஒருசில முறை அவசரத்துக்கு ரத்தம் தேவைப்படும்போது ரத்த வங்கிகள் கொடுத்துவிடுகின்றன. ஆனால், மாதம் இருமுறை வீதம் ரத்தம் நிரந்தரமாகத் தேவைப்படும் தலசீமியா நோயாளிகளுக்கு ‘பதில் ரத்தம்’ கொடுக்க உறவினர்கள் கிடைக்காதபோது, புதிய ரத்தம் கிடைக்காது. இதனால், இவர்களில் பாதிப் பேர் 25 வயதுக்குள் இறந்துவிடுகின்றனர். மீதிப் பேர் ஆண்டுதோறும் ஒரு லட்சம் ரூபாய்வரை செலவழித்து, வெளிச்சந்தையில் தகுதியற்றவர்களைப் பணம் கொடுத்து அழைத்துவந்து ‘பதில் ரத்தம்’ வழங்க வைக்கின்றனர். இது பல ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது. இதுபோன்ற நிலைமை ரத்தப் புற்றுநோயாளிகளுக்கும் ஏற்படுகிறது.

மத்திய சுகாதாரத் துறை மற்றும் குடும்ப நலத் துறை கொடுத்துள்ள புள்ளிவிவரப்படி நாட்டில் ஆண்டுதோறும் 1.2 கோடி யூனிட் ரத்தம் தேவைப்படுகிறது. (ஒரு யூனிட் என்பது 350 மி.லி. ரத்தம்). ஆனால், 90 லட்சம் யூனிட் ரத்தம் மட்டுமே ரத்ததான முகாம்கள் வழியாகவும் தன்னார்வம் கொண்டவர்கள் மூலமாகவும் கிடைக்கிறது. இன்னும் 30 லட்சம் யூனிட்டுகள் தேவைப்படுகிறது.

என்ன பிரச்சினை?

ரத்தச் சேமிப்பைப் பொறுத்தவரை நாம் இரண்டு விதப் பிரச்சினைகளை எதிர்கொள்கிறோம். நம் தேவைக்குத் தரமான ரத்தத்தைத் தரமானவர்களிடமிருந்து பெறுவது முதல் பிரச்னை. கூலிகள், வேலை இல்லாதவர்கள், போதை அடிமைகள், குடிகாரர்கள், வறுமையில் வாடுபவர்கள் போன்றோரிடம்தான் ரத்தம் பெறுவது நடைமுறையில் இருக்கிறது. இப்படிப் பணத்துக்காக ரத்ததானம் செய்வது தண்டனைக்குரிய குற்றம் என்று சட்டம் வந்த பிறகு இந்த வழியில் ரத்தம் கிடைப்பது குறைந்துவிட்டது.

2015-ல் எடுத்த கணக்குப்படி, இந்தியாவில் 1,024 அரசு ரத்த வங்கிகளும், 1,684 தனியார் ரத்த வங்கிகளும் உள்ளன. இந்திய மக்கள்தொகையின் அடிப்படையில் பார்த்தால் இந்த எண்ணிக்கை குறைவு. நாட்டில் 17 மாநிலங்களில் 81 மாவட்டங்களில் ஒரு ரத்த வங்கிகூட இல்லை. இருக்கும் ரத்த வங்கிகள்கூட தங்களுக்குத் தேவையான ரத்தத்தைப் பெரும்பாலும் கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் தன்னார்வத்துடன் தரும்போது மட்டுமே பெறமுடிகிறது. இதனால், விடுமுறைக் காலங்களிலும், தேர்வுக் காலங்களிலும் ரத்தம் கிடைப்பது குறைந்துவிடுகிறது. அதுமட்டுமல்ல, கிராமப்புறங்களில் ரத்த தானம் குறித்த விழிப்புணர்வு இல்லாததால், கிராமங்களை ஒட்டியுள்ள சிறுநகரங்களில் இயங்கும் ரத்த வங்கிகள் ரத்தம் கிடைக்காமல் வற்றிப்போகின்றன.

தரமான ரத்தம் கிடைப்பது ஒரு பிரச்சினை என்றால், சில மாநிலங்களில் தேவைக்கு அதிகமான ரத்தம் சேமிக்கப்பட்டும்கூட, அதைப் பயன்படுத்த முடியாமல் வீணாவது இரண்டாவது பிரச்சினை. கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் இந்தியாவில் 6 லட்சம் லிட்டர் ரத்தம் இவ்வாறு வீணாகியுள்ளது. உத்தர பிரதேசம், மகாராஷ்டிரம், கர்நாடகம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில்தான் அதிகபட்ச ரத்தம் வீணாகியுள்ளது. ஒருமுறை சேகரிக்கப்பட்ட ரத்தத்தை ஒரு மாதத்துக்கு மேல் பாதுகாக்க முடியாது என்பதுதான் ரத்தம் வீணாவதற்கு முக்கியக் காரணம்.

இந்தியாவின் பல பகுதிகளில் ரத்தத்தின் தேவை இருந்தும், தேவைக்கு அதிகமாக உள்ள ரத்த வங்கியிலிருந்து தேவையுள்ள ரத்த வங்கிக்கு எந்த ஓர் அவசரம் என்றாலும் அதை எடுத்துச் செல்வதில் சட்டச் சிக்கல்கள் உள்ளன. எனவேதான் இவ்வாறு ரத்தம் வீணாகும் அவலம் தொடர்கிறது.

ஒருங்கிணைப்பு அவசியம்!

நாட்டில் உள்ள அரசு மருத்துவமனை ரத்த வங்கிகள் மற்றும் தனியார் ரத்த வங்கிகளை ஒருங்கிணைத்து, அந்த வட்டாரத்தின் தேவைக்கேற்ப ரத்தச் சேமிப்பை முறைப்படுத்தி, ரத்தம் வீணாவதைத் தடுக்க வேண்டும். அதற்கான ஒருங்கிணைப்பு மையங்களை உடனடியாக ஏற்படுத்த இரு அரசுகளும் உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். மேலும், தேவைப்படும் மையத்துக்கு ரத்தம் கொண்டு செல்லவும் புதிய சட்ட விதிகள் நிர்ணயிக்கப்பட வேண்டும்.

வளர்ச்சி அடைந்த மேலை நாடுகளில் ரத்தம் வழங்குவது என்பது சமூகக் கடமையாகக் கருதப்படுகிறது. பிறந்தநாள், மணநாள், பெற்றோர் நினைவுநாள், பண்டிகை தினங்கள் போன்றவற்றை நாம் கோயிலுக்கும் உணவு விடுதிகளுக்கும் சென்று கொண்டாடுவதுபோல், அவர்கள் அந்தத் தினங்களில் ரத்ததானம் வழங்குவதைக் கடமையாகக் கருதுகிறார்கள். ஓர் இயற்கைச் சீற்றம் ஏற்பட்டாலோ, தீவிரவாத தாக்குதல் நடந்தாலோ உடனே பலரும் தாங்களாகவே முன்வந்து ரத்ததானம் செய்வதை வழக்கமாக வைத்துள்ளனர். இதுபோன்ற சமூக உணர்வு நம்மிடமும் உருவாக வேண்டும்.

என்ன செய்ய வேண்டும்?

தலசீமியா நோயாளிகள் போன்ற நிரந்தமாக ரத்தம் தேவைப்படுபவர்களுக்குத் தாராளமாக ரத்தம் கிடைப்பதற்கு வழிசெய்யும் மசோதாக்கள் தேவை. அவர்களுக்கு ஆகும் மருத்துவச் செலவுகளைச் சமாளிக்க காப்பீட்டு நிறுவனங்கள் மூலம் உதவலாம். இதன் மூலம் அவர்களின் உயிருக்கு உத்தரவாதம் தரலாம்.

18 வயது நிரம்பியவர்கள், 45 கிலோவுக்கு மேல் உடல் எடை கொண்டவர்கள், ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு 12.5 கிராம்/டெ.லி.க்குக் குறையாமல் உள்ளவர்கள், ரத்த அழுத்தம் இயல்பாக உள்ளவர்கள், கடந்த மூன்று ஆண்டுகளில் மஞ்சள் காமாலை, ஹெச்.ஐ.வி. பாதிப்பு இல்லாதவர்கள் ரத்த தானம் செய்யலாம். ஒருவர் ஒருமுறை தானம் செய்யும் ரத்தம் மூன்று உயிர்களைக் காப்பாற்றும்.

பொதுமக்கள் தன்னார்வத்துடன் ரத்தம் வழங்க முன்வருவதற்குப் பிரபலங்கள், திரை நட்சத்திரங்கள் மூலம் ரத்த தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது அவசியம். ரத்தக் கொடையாளர்களின் சமூகப் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் பணி வாய்ப்பு/பணி உயர்வில் முன்னுரிமை கொடுப்பது, அவர்களின் வாரிசுகளுக்குக் கல்வி/வேலை வாய்ப்பில் சலுகைகள் அளிப்பது போன்ற ஆக்கபூர்வமான திட்டங்களை அரசுகள் செயல்படுத்தினால் இன்னும் பலரை ஈர்க்கும். அப்போது ரத்தம் கிடைக்கவில்லை என்ற காரணத்துக்காக நாட்டில் உயிர்கள் இழப்பது தடுக்கப்படும்!

கு. கணேசன்,

பொதுநல மருத்துவர்,

தொடர்புக்கு: gganesan95@gmail.com
avatar
aeroboy2000
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 181
மதிப்பீடுகள் : 64

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum