உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» பிறந்த நாள் வாழ்த்துகள்.
by ayyasamy ram Today at 8:01 am

» காணொளிகள் - பழைய பாடல்கள் {தொடர் பதிவு}
by ayyasamy ram Today at 7:55 am

» உணா்ச்சிகளை கட்டுப்படுத்துவதில் நானும் சிறந்தவன்: தோனி
by ayyasamy ram Today at 7:22 am

» தஞ்சாவூா் பெரியகோயிலில் நவ. 5,6-இல் சதய விழா
by ayyasamy ram Today at 7:19 am

» கல்கி ஆசிரமங்களில் வருமான வரித் துறையினா் சோதனை
by ayyasamy ram Today at 7:17 am

» சிறிய விஷயங்களை ரசிக்க பழகுங்கள்…!
by ayyasamy ram Today at 7:06 am

» படித்த பெண்களைக் கட்டிய கணவன்களின் மனநிலை…!
by ayyasamy ram Today at 7:02 am

» வெடிக்க விட்டால் சிதறாது! – வீட்டுக் குறிப்புகள்
by ayyasamy ram Today at 6:38 am

» ப்ரோகோலி பூரி
by ayyasamy ram Today at 6:37 am

» ப்ரோகோலி பாயசம்
by ayyasamy ram Today at 6:37 am

» நீ ஆள் மாறாட்டம் பண்ணினதை எப்படி கண்டுபிடிச்சாங்க?
by ayyasamy ram Today at 6:25 am

» தலைப்பிரசவம்- நிமிடக் கதை
by ayyasamy ram Today at 6:23 am

» படத்திற்கு கவிதை
by ayyasamy ram Today at 6:22 am

» புதுக்கவிதைகள்
by ayyasamy ram Today at 6:21 am

» ப்ரோகோலி ஸ்ப்ரவுட் தால் கிச்சடி
by ayyasamy ram Today at 6:20 am

» ப்ரோகோலி – மக்ரோணி பாஸ்தா
by ayyasamy ram Today at 6:19 am

» எல்லோரும் ஏன் ஓடி வந்துவிட்டீர்கள்?
by ayyasamy ram Today at 6:15 am

» மழைக்கால நோய்களுக்கு கஷாயம்
by ayyasamy ram Today at 6:13 am

» என்னை விட பெரிய பணி
by ayyasamy ram Today at 6:09 am

» வெள்ளம் – முன்னெச்சரிக்கை..
by ayyasamy ram Today at 6:08 am

» வித்தியாசமான திருமண பத்திரிகை!
by ayyasamy ram Today at 6:07 am

» இங்க் பேனா – சுஜாதா
by ayyasamy ram Today at 6:06 am

» அயோத்தி வழக்கில் விசாரணை முடிந்தது; ஒரு மாதத்தில் தீர்ப்பு வெளியாகும்
by ayyasamy ram Today at 6:00 am

» பொது தகவல்களை வெளியிட அதிகாரிகள் வெட்கப்படுவது ஏன்? - ஐகோர்ட்டு கேள்வி
by ayyasamy ram Today at 5:58 am

» கார்ட்டூன் & கருத்து சித்திரம் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 5:53 am

» ஆட்டோவில் பயணித்த பிரிட்டன் அரச தம்பதி
by ayyasamy ram Today at 5:50 am

» கொசு புழுக்கள் உற்பத்தி:அரக்கோணம்,திருத்தணி ரயில் நிலையங்களுக்கு அபராதம்
by ayyasamy ram Today at 5:46 am

» பார்லி.குளிர் கால கூட்டத்தொடர் நவ.,18 ல் துவக்கம்?
by ayyasamy ram Today at 5:44 am

» புத்தக தேவைக்கு...
by Guest Yesterday at 11:23 pm

» ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
by prajai Yesterday at 11:10 pm

» அப்பாவி – ஒரு பக்க கதை
by T.N.Balasubramanian Yesterday at 8:23 pm

» டிகிரி யானை
by ஜாஹீதாபானு Yesterday at 6:32 pm

» ஆவாரைக் கூட்டு
by ஜாஹீதாபானு Yesterday at 6:31 pm

» சீரியல் - ஒரு பக்க கதை
by ஜாஹீதாபானு Yesterday at 6:30 pm

» கடைசியில் பூனை வாங்கின சாமியார் கதைதான்..!
by ஜாஹீதாபானு Yesterday at 6:28 pm

» ஒரு கதை
by ஜாஹீதாபானு Yesterday at 6:25 pm

» காலிஃப்ளவர் பஜ்ஜி
by ஜாஹீதாபானு Yesterday at 6:23 pm

» பொறுப்பு – ஒரு பக்க கதை
by ஜாஹீதாபானு Yesterday at 6:23 pm

» ஆறு வித்தியாசம்
by ஜாஹீதாபானு Yesterday at 6:21 pm

» அல்பம் – ஒரு பக்க கதை
by ஜாஹீதாபானு Yesterday at 6:19 pm

» மகளதிகாரம்.
by ஜாஹீதாபானு Yesterday at 6:18 pm

» படித்த பெண்களைக் கட்டிய கணவன்களின் மனநிலை...!
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஃபிஷ்னஸ்..!
by ayyasamy ram Yesterday at 4:47 pm

» சிந்தனை துளிகள்
by ayyasamy ram Yesterday at 4:29 pm

» அதிர்ஷ்டம் தரும் அபிஜித்... கோதூளி முகூர்த்தம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:16 am

» காத்திருக்கப் பழகினால்........ வாழப் பழகுவாய்.
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:10 am

» மாங்கல்யம் தந்துனானே – விளக்கம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:07 am

» மன நிம்மதி தரும் கோவில்!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:05 am

» எலக்ட்ரிக் 'ஏர் டாக்சி'
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:01 am

» சமந்தா, ஹன்சிகா, காஜல் உள்பட வெப் தொடருக்கு மாறும் நடிகைகள்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:59 am

Admins Online

சனிப்பெயர்ச்சி பலன்கள் 2017

சனிப்பெயர்ச்சி பலன்கள் 2017 Empty சனிப்பெயர்ச்சி பலன்கள் 2017

Post by krishnaamma on Wed Dec 20, 2017 7:29 pm

மேஷம் !


சாதுர்யமாகப் பேசி சாதிப்பவர்களே! 
 
உங்கள் ராசிக்கு, 19.12.17 முதல் 26.12.20 வரை 9-ல் அமர்ந்து பலன்களைத் தர இருக்கிறார் சனிபகவான். புதிய வியூகங்களால் எதிலும் சாதிப்பீர்கள். நீண்டகாலமாகத் தடைப்பட்டு வந்த வேலைகளை எளிதாக முடிப்பீர்கள். குடும்பத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். வராது என்று நினைத்த கடன் தொகை வந்து சேரும். சிலர் வீட்டை விரிவுபடுத்துவீர்கள். பகை வர்களும் நண்பர்கள் ஆவார்கள். நோய் பாதிப்புகள் விலகும். வழக்குகளில் சாதகமான தீர்ப்பு வரும். அடகில் இருந்த நகைகளை மீட்பீர்கள். எனினும், தந்தைக்கு சிறுசிறு ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்பட்டு நீங்கும். பிதுர்வழிச் சொத்துப் பிரச்னை தலைதூக்கும். அரசாங்க விஷயம் சாதகமாக முடியும். 

சனிபகவானின் பார்வைப் பலன்கள்
சனி பகவான் உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டைப் பார்ப்பதால், எதிலும் வெற்றி பெறுவீர்கள். சிலர் புதுப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். இளைய சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். சனிபகவான் 6-ம் வீட்டைப் பார்ப்பதால், பழைய கடன்களைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். சனிபகவான் லாப வீட்டைப் பார்ப்பதால், கடின வேலைகளையும் சாமர்த்தியமாக செய்து முடிப்பீர்கள். வரவும் உண்டு செலவும் உண்டு.உங்களில் சிலர் புதுத் தொழில் தொடங்குவீர்கள்.
வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பாக்கித் தொகைகள் வசூலாகும். மக்களின் ரசனைக்கேற்ப கொள்முதல் செய்வீர்கள். தேங்கிக் கிடந்த சரக்குகள் விற்றுத் தீரும். புகழ் பெற்ற நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துகொள்வீர்கள். கூட்டுத் தொழில் வளர்ச்சி அடையும். வங்கிக் கடனை அடைப்பீர்கள். கெமிக்கல், இரும்பு, போர்டிங், லாட்ஜிங், எண்ணெய் வகைகளால் லாபம் உண்டாகும்.
உத்தியோகத்தில், சக ஊழியர்களாலும், அதிகாரி களாலும் ஏற்பட்ட பிரச்னைகள் நீங்கும். எதிர்பார்த்து தடைப்பட்ட பதவி உயர்வு, சம்பள உயர்வு ஆகியன கிடைக்கும். சிலருக்கு வேலையின் காரணமாக வெளிநாடு செல்லும் வாய்ப்பு உண்டாகும்.
மாணவ மாணவிகளே! கடுமையாக உழைப்பீர்கள். விரும்பிய பாடப்பிரிவில் இடம் கிடைக்கும். கலைத் துறையினரே! பிற மொழி பேசுபவர்களால் புது வாய்ப்பு கள் வரும். அரசால் ஆதாயம் உண்டாகும்.
மொத்தத்தில் இந்த சனிப்பெயர்ச்சி, உங்களை சாதிக்க வைப்பதாக அமையும்.
சனிபகவானின் நட்சத்திர சஞ்சாரப் பலன்கள்:
19.12.17 முதல் 18.1.19 மற்றும் 12.8.19 முதல் 26.9.19 வரை கேதுவின் மூலம் நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால் திடீர் திருப்பம் ஏற்படும். பெரிய பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்பு கூடும். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். ஆனால், அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வீண் விவாதங்கள், செலவுகள், அலர்ஜி, மறைமுக எதிர்ப்புகள் வந்து செல்லும்.
உங்கள் ராசிக்கு 2 மற்றும் 7-ம் வீடுகளுக்கு அதிபதியான சுக்கிரனின் பூராடம் நட்சத்திரத்தில், 19.1.19 முதல் 11.8.19 மற்றும் 27.9.19 முதல் 24.2.20 மற்றும் 17.7.20 முதல் 20.11.20 வரை சனி செல்வதால், புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். இங்கிதமாகப் பேசி எல்லோரையும் கவருவீர்கள். தடைப்பட்ட திருமணம் கூடிவரும். வாழ்க்கைத்துணை வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். புது வேலை, நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சளித் தொந்தரவு, காய்ச்சல் ஏற்பட்டு நீங்கும்.
உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டுக்கு உரிய சூரியனின் உத்திராடம் நட்சத்திரம் முதல் பாதத்தில் 25.2.20 முதல் 16.7.20 மற்றும் 21.11.20 முதல் 26.12.20 வரை சனிபகவான் செல்வதால், பிள்ளைகளின் உயர்கல்வி, உத்தியோகம், திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் சற்று தாமதமாகும். பூர்வீகச் சொத்துப் பிரச்னைக்கு சுமுகத் தீர்வு காண்பது நல்லது. கார்த்திகை நட்சத் திரத்தில் பிறந்தவர்கள் முன்கோபத்தைத் தவிர்க்கவும்.
சனிபகவானின் வக்கிர சஞ்சாரம்:
சனிபகவான் 29.4.18 முதல் 11.9.18 வரை மற்றும் 12.8.19 முதல் 13.9.19 வரை மூலம் நட்சத்திரத்தில் வக்கிரமாகச் செல்வதால், எந்த வேலையையும் திட்டமிட்டுச் செய் யவும். மற்றவர்களுக்கு ஜாமீன் கொடுக்கவேண்டாம். வழக்கில் தீர்ப்பு தள்ளிப்போகும். நரம்புத் தளர்ச்சி, கணுக்கால் வலி ஏற்பட்டு நீங்கும்.
சனிபகவான் 10.5.19 முதல் 11.8.19 மற்றும் 27.7.19 முதல் 13.9.19 மற்றும் 17.7.20 முதல் 16.9.20 வரை பூராடம் நட்சத் திரத்தில் வக்கிரமாகச் செல்வதால், கணவன்-மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்லவும். வீட்டுக்கான பராமரிப்புச் செலவுகள் ஏற்படக்கூடும். வாழ்க்கைத்துணை வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடும். 2.5.20 முதல் 16.7.20 வரை உத்திராடம் நட்சத்திரத்தில் சனி வக்கிரமாகி செல்வதால் புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகளின் வருங்காலம் குறித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். பூர்வீக சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். அரசால் அனுகூலம் உண்டாகும்.
பரிகாரம்: ஸ்ரீபெரும்புதூரில் அருளும் பெருமாளையும் ராமாநுஜரையும் ஏகாதசி தினத்தில் வழிபட்டு வாருங்கள்; வாழ்வில் ஏற்றம் உண்டாகும்.


Last edited by krishnaamma on Wed Dec 20, 2017 7:31 pm; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58651
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 11892

Back to top Go down

சனிப்பெயர்ச்சி பலன்கள் 2017 Empty Re: சனிப்பெயர்ச்சி பலன்கள் 2017

Post by krishnaamma on Wed Dec 20, 2017 7:29 pm

ரிஷபம் ! 


முயற்சியைக் கை விடாதவர்களே!


இதுவரை 7-ம் இடத்தில் இருந்த சனிபகவான், 19.12.17 முதல் 26.12.20 வரை 8-ம் இடத்தில் சஞ்சரிக்க உள்ளார். எதிலும் முன்னெச்சரிக்கையுடன் செயல் படவேண்டிய காலம் இது. மற்றவர்களை நம்பி ஏமாறவேண்டாம். குடும்பத்தில் சிலர் பிரச்னையை உண்டாக்க முயல்வார்கள். கவனம் தேவை.
மகளின் திருமணத்துக்காக வெளியில் கடன் வாங்க நேரிடும். முக்கிய பத்திரங் களில் கையெழுத்து போடுமுன், சட்ட நிபுணரை ஆலோசித்து முடிவெடுக்கவும். பூர்வீகச் சொத்துப் பங்கைப் போராடித்தான் பெற வேண்டி இருக்கும். செலவுகள் அதிகரிக்கும். சொத்து வாங்குவது விற்பதில் வில்லங்கம் ஏற்பட்டு நீங்கும். திடீர்ப் பயணங்கள் அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் அலைச்சல் இருக்கும். சகோதரர்களுடன் மனவருத்தம் ஏற்படக்கூடும். உடல் நலனை அவ்வப்போது பரிசோதித்துக் கொள்வது நல்லது.

சனிபகவானின் பார்வைப் பலன்கள்:
சனி பகவான் உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டை பார்ப்பதால், சாதுர்யமாகப் பேசுவீர்கள். எதிர்பார்த்த பணம் வரும். சனிபகவான் உங்களின் 5-ம் வீட்டைப் பார்ப்பதால், தன்னைச் சுற்றி ஏதோ சதி நடப்பதாக சிலரை சந்தேகப்படுவீர்கள். சனிபகவான் 10-ம் வீட்டைப் பார்ப்பதால் வேற்றுமொழியினரால் ஆதாயம் உண்டு. உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும்.
வியாபாரம் சுமார்தான். போட்டிகள் அதிகரிக்கும். பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். இரும்பு, கடல் உணவு வகைகள், ரசாயன வகைகள், கட்டட உதிரி பாகங்கள் மூலம் லாபம் வரும். பெரிய முதலீடுகளைத் தவிர்ப்பது நல்லது.
அலுவலகத்தில் கடுமையாக உழைத்தும் எந்தப் பயனும் இல்லையே என்று ஆதங்கப் படுவீர்கள். புது அதிகாரியால் சில நெருக்கடிகளைச் சந்திக்க நேரிடும். எனினும் சம்பளம் உயரும். சக ஊழியர்களிடம் கவனமாகப் பழகுங்கள்.
மாணவ - மாணவிகளே! அன்றைய பாடத்தை அன்றன்றே படிப்பது நல்லது. கலைத் துறையினர்களே! வேற்றுமொழி பேசுபவரால் முன்னேற்றம் உண்டு. புதிய வாய்ப்புகள் தேடி வரும். விமர்சனங்களையும், வதந்திகளையும் தாண்டி வெற்றி பெறுவீர்கள்.
மொத்தத்தில் இந்த சனிப்பெயர்ச்சி, சிற்சில பிரச்னைகளில் சிக்கவைத்தாலும், கடின உழைப்பாலும் சமயோசித புத்தியாலும் உங்களைச் சாதிக்க வைக்கும்.
சனிபகவானின் நட்சத்திர சஞ்சாரப் பலன்கள்:
19.12.17 முதல் 18.1.19 மற்றும் 12.8.19 முதல் 26.9.19 வரை கேதுவின் மூலம் நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால் திடீர் பணவரவு உண்டு. திருமணம், கிரகப் பிரவேசம் என வீடு களைகட்டும். கிருத்திகை 2,3,4 மற்றும் மிருகசீரிடம் 1,2-ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு, இக்காலக்கட்டத்தில் புது வேலை கிடைக்கும். நவீன வாகனங்கள் வாங்குவீர்கள். அயல்நாடு சென்று வருவீர்கள். ரோகிணி நட்சத்திரத் தில் பிறந்தவர்களுக்கு அலைச்சல்கள் அதிகரிக்கும்.
சுக்கிரனின் பூராடம் நட்சத்திரத்தில் 19.1.19 முதல் 11.8.19 மற்றும் 27.9.19 முதல் 24.2.20 மற்றும் 17.7.20 முதல் 20.11.20 வரை சனி செல்வதால், புதிய திட்டங்கள் நிறைவேறும். குடும்பத்தில் அமைதி நிலவும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் உண்டு. எதிர்பார்த்த பணம் வரும். கிருத்திகை 2,3,4 மற்றும் ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு கூடுதல் நன்மைகள் நடக்கும். மிருகசீரிட நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சிறு விபத்து, முன்கோபம், வீண் டென்ஷன், மனஉளைச்சல் ஆகியன வந்து செல்லும்.
25.2.20 முதல் 16.7.20 மற்றும் 21.11.20 முதல் 26.12.20 வரை சனிபகவான் உங்களின் ராசிக்கு சுகாதிபதியாகிய சூரியனின் உத்திராடம் நட்சத்திரம் முதல் பாதத்தில் செல்வதால், வீடு, மனை சேரும். புகழ் பெற்ற புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். ரோகிணி மற்றும் மிருகசீரிடம் 1,2ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு மேலும் நற்பலன்கள் கிடைக்கும். கார்த்திகை 2,3,4-ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். உடல் நலத்தில் அதிக அக்கறைக் காட்ட வேண்டும்.
சனிபகவானின் வக்கிர சஞ்சாரப் பலன்கள்:
29.4.18 முதல் 11.9.18 மற்றும் 12.8.19 முதல் 13.9.19 வரை மூலம் நட்சத்திரத்தில் சனி வக்கிரமாவதால் தடைப்பட்ட வேலைகள் முடியும் கணவன் - மனைவிக்கு இடையில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். வழக்குகள் சாதகமாகும். கடன் பிரச்னை தீரும்.
சனிபகவான் 10.5.19 முதல் 11.8.19 மற்றும் 27.7.19 முதல் 13.9.19 மற்றும் 17.7.20 முதல் 16.9.20 வரை பூராடம் நட்சத் திரத்தில் வக்கரிப்பதால், இக்காலக் கட்டத்தில் சளித்தொந்தரவு, காய்ச்சல், பல் வலி, பார்வைக்கோளாறு வந்து நீங்கும். குடும்பத் தில் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. 2.5.20 முதல் 16.7.20 வரை உத்திராடம் நட்சத்திரத்தில் சனி வக்கிரமாகி செல்வதால் சகோதரர்கள் மற்றும் தாயாருடன் கருத்து மோதல்கள் வந்து போகும்.

பரிகாரம்:புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி எனும் ஊரில் அமைந்திருக்கும் ஸ்ரீஅறம்வளர்த்த நாயகி உடனுறை ஸ்ரீநாமபுரீஸ்வரரை, பிரதோஷ நாளில் சென்று இளநீர் சமர்ப்பித்து வழிபட்டு வாருங்கள்; உயர்வு உண்டு.


Last edited by krishnaamma on Wed Dec 20, 2017 7:30 pm; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58651
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 11892

Back to top Go down

சனிப்பெயர்ச்சி பலன்கள் 2017 Empty Re: சனிப்பெயர்ச்சி பலன்கள் 2017

Post by krishnaamma on Wed Dec 20, 2017 7:30 pm

மிதுனம் புன்னகை
மற்றவர்களை மகிழ்வித்து மகிழ்பவர்களே!
இதுவரை 6-ம் இடத்தில் இருந்து நன்மைகளைச் செய்த சனிபகவான், 19.12.17 முதல் 26.12.20 வரை 7-ம் இடத்தில் அமர்ந்து பலன் தர இருக்கிறார். கண்டகச் சனியாக இருப்பதால், எதிலும் கொஞ்சம் எச்சரிக்கை தேவை. குடும்பத்தில் வீண் விவாதங்கள் ஏற்படக்கூடும்.
விலை உயர்ந்த பொருள்கள், நகைகளைக் கவனமாகக் கையாளவும். வாழ்க்கைத் துணைக்கு உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும். சிலர், வேலையின் காரணமாகக் குடும்பத்தைப் பிரிய நேரிடும். கூடுமானவரை சொந்த வாகனத்தில் இரவுநேரப் பயணம் செய்வதைத் தவிர்க்கவும்.
சனிபகவானின் பார்வைப் பலன்கள்:
சனி பகவான் உங்கள் ராசியை பார்ப்பதால், அலர்ஜியால் தோலில் நமைச்சல்,கட்டி,முடி உதிர்வதற்கும் வாய்ப்புள்ளது. செரிமானக் கோளாறு வந்து நீங்கும். மறதியும், பித்தத்தால் தலைச்சுற்றலும் வந்து நீங்கும். சனிபகவான் 4-ம் வீட்டைப் பார்ப்பதால் வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். தாயாரின் உடல்நலம் பாதிக்கும். அவருடன் வீண் விவாதங்கள் வந்து செல்லும். சனிபகவான் உங்களின் 9-ம் வீட்டைப் பார்ப்பதால், கையிருப்புகள் கரையும். வெளியிலும் கடன் வாங்க நேரிடும்.
வியாபாரிகளே! கடன் வாங்கி வியாபாரத்தை விரிவுபடுத்தவேண்டாம். கூட்டுத் தொழிலைத் தவிர்க்கவும். பழைய பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கவும். கடன் தருவதைத் தவிர்க்கவும். சிலருக்குக் கடையை மாற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்படும். சிலருக்கு பங்கு தாரர்களுடன் மோதல்கள் வரக்கூடும். அரிசி, பருப்பு மண்டி, கமிஷன், கெமிக்கல் வகைகள் ஆதாயம் தரும்.
உத்தியோகஸ்தர்களே! விமர்சனத்தைத் தவிர்க்க வும். எதிர்பார்க்கும் சலுகைகள் தாமதமாகவே கிடைக்கும். எதிர்பாராத இடமாற்றம் உண்டாகும். பழைய அதிகாரிகள் உதவி செய்வார்கள். ஒப்பந்தப் பத்திரங்களில் கையெழுத்து போடவேண்டாம். மாணவ - மாணவிகளே! படிப்பில் அலட்சியம் கூடாது. விளையாட்டின்போது கவனமாக இருக்கவும். கலைத்துறையினர்களே! சிறிய வாய்ப்புகளையும் அலட்சியப்படுத்தாமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
மொத்தத்தில் இந்தச் சனிப்பெயர்ச்சி, அனுபவ அறிவால் உங்களை வெற்றிபெற வைக்கும்.

சனிபகவானின் நட்சத்திர சஞ்சாரப் பலன்கள்:
19.12.17 முதல் 18.1.19 மற்றும் 12.8.19 முதல் 26.9.19 வரை கேதுவின் மூலம் நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால், குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். கடன் பிரச்னைகளில் இருந்து விடுபட புது வழி கிடைக்கும். முன்கோபம் விலகும். குடும்ப வருமானம் அதிகரிக்கும். மிருகசீரிடம் 3,4-ம் பாதம் மற்றும் புனர்பூசம் 1,2,3-ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு மேலும் நற்பலன்கள் கிடைக்கும். ஆனால், திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர், நண்பர்களுடன் கருத்து மோதல்கள் ஏற்பட்டு நீங்கும்.
சுக்கிரனின் பூராடம் நட்சத்திரத்தில் 19.1.19 முதல் 11.8.19 மற்றும் 27.9.19 முதல் 24.2.20 மற்றும் 17.7.20 முதல் 20.11.20 வரை சனி செல்வதால், கணவன் - மனைவிக்குள் ஆரோக்கியமான விவாதங்கள் வந்து நீங்கும். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் நற்பலன்கள் கிடைக்கும். மிருகசீரிடம் 3,4 மற்றும் புனர்பூசம் 1,2,3-ம் பாதத்தில் பிறந்தவர்கள், எவரையும் விமர்சிக்கவேண்டாம்.
25.2.20 முதல் 16.7.20 மற்றும் 21.11.20 முதல் 26.12.20 வரை சனிபகவான் உங்களின் தைரிய ஸ்தானாதிபதியாகிய சூரியனின் உத்திராடம் நட்சத்திரம் முதல் பாதத்தில் செல்வதால், புதிய முயற்சிகள் வெற்றியடையும். இளைய சகோதரர்கள் பாசமழை பொழிவார்கள். உதவிகளும் கிடைக்கும். சொத்துச் சிக்கல் தீரும். அரசாங்க காரியங்களில் அனுகூலமான நிலை காணப்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். மிருகசீரிடம் 3,4 மற்றும் புனர்பூசம் 1,2,3-ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் நற்பலன்கள் உண்டாகும். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கைத்துணையின் ஆரோக்கியத்தில் அக்கறைக் காட்டுவது நல்லது.
சனிபகவானின் வக்கிர சஞ்சாரம்:
29.4.18 முதல் 11.9.18 மற்றும் 12.8.19 முதல் 13.9.19 வரை மூலம் நட்சத்திரத்தில் சனி வக்கிரமாவதால், செலவுகளைக் குறைத்து,சேமிக்கத் தொடங்குங்கள். சகோதர வகையில் மகிழ்ச்சி உண்டாகும். என்றாலும் அவர்களிடம் அதிக உரிமை எடுத்துக்கொள்ள வேண்டாம்.
சனிபகவான் 10.5.19 முதல் 11.8.19 மற்றும் 27.7.19 முதல் 13.9.19 மற்றும் 17.7.20 முதல் 16.9.20 வரை பூராடம் நட்சத்திரத்தில் வக்கரிப்பதால் தாயாரின் உடல் நிலை சீராகும். பிள்ளைகளின் எதிர்காலத்துக்காகக் கொஞ்சம் சேமிக்கத் தொடங்குவீர்கள். 2.5.20 முதல் 16.7.20 வரை உத்திராடம் நட்சத்திரத்தில் சனி வக்கிரமாகி செல்வதால், பிரிந்திருந்த தம்பதி ஒன்றூசேர்வீர்கள். மகளுக்கு வரன் பார்க்கும்போது கூடுதல் கவனம் செலுத்துங்கள்.

பரிகாரம்: கோவை மாவட்டம், இருளர்பதி எனும் ஊரில் அருளும் ஸ்ரீசுயம்பு பெருமாளை, சனிக்கிழமையில் சென்று தரிசித்து, துளசி மாலை அணிவித்து வழிபடுங்கள்; மகிழ்ச்சி நிலைக்கும்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58651
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 11892

Back to top Go down

சனிப்பெயர்ச்சி பலன்கள் 2017 Empty Re: சனிப்பெயர்ச்சி பலன்கள் 2017

Post by krishnaamma on Wed Dec 20, 2017 7:31 pm

கடகம் புன்னகை 

உலக நடப்புகளை உன்னிப்பாக கவனிப்பவர்களே!
சனிபகவான், 19.12.17 முதல் 26.12.20 வரை 6-ல் அமர்ந்து விபரீத ராஜ யோகத் தைத் தரவுள்ளார். தடுமாற்றம் நீங்கும். வாழ்க்கையை வளப்படுத்த நல்ல வாய்ப்பு கள் அமையும்.
பக்குவமான பேச்சால் காரியம் சாதிப்பீர்கள். குழந்தை பாக்கியம் இல்லா மல் இருந்தவர்களுக்கு, அழகும் அறிவும் நிறைந்த குழந்தை பிறக்கும். சகல காரியங்களிலும் வாழ்க்கைத் துணைவர் பக்கபலமாக இருப்பார். மகளின் கல்யாணத்தை ஊரே மெச்சும்படி நடத்துவீர்கள். உங்களை உதாசீனப் படுத்திய உறவினர்களும் நண்பர்களும் தேடி வந்து உறவாடுவார்கள். சிலருக்கு சொந்த வீடு அமையும். பிள்ளைகளின் வருங்காலத்துக்காக சேமிப்பீர்கள். மகனுக்கு, தெரிந்த இடத்திலேயே சம்பந்தம் அமையும். பழைய கடன்களைத் தந்து முடிப்பீர்கள்.

சனிபகவானின் பார்வைப் பலன்கள்
சனி பகவான் உங்களின் மூன்றாம் வீட்டைப் பார்ப்பதால், தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வெளிவட்டாரத்தில் கௌரவம் கூடும். சனிபகவான் 8-ம் வீட்டைப் பார்ப்பதால் யாருக்கும் ஜாமீன் கையெழுத்திடாதீர்கள். சனிபகவான் 12-ம் வீட்டைப் பார்ப்பதால் வராது என்று நினைத்திருந்த பணமும் கைக்கு வரும். உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். ஆலயங்களில் முதல் மரியாதை கிடைக்கும்.
வியாபாரிகளே! அதிரடி லாபம் கிடைக்கும். பாக்கித் தொகைகள் உடனடியாக வசூலாகும். புகழ் பெற்ற நிறுவனங்களுடன் புது ஒப்பந்தம் கையெழுத் தாகும். வியாபாரிகள் சங்கத்தில் பெரிய பொறுப்பு களுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். விளம்பர யுக்திகளைக் கையாண்டு விற்பனையைப் பெருக்கு வீர்கள். கூட்டுத் தொழில் வளர்ச்சி அடையும்.
இதுவரை நிலையான வேலை எதுவும் இல்லாமல் இருந்தவர்களுக்கு அதிக சம்பளத்துடன் நல்ல வேலை அமையும். வேலையில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். மேலதிகாரி களுடன் இருந்த மோதல்கள் விலகும். கணினித் துறையில் இருப்பவர்களுக்கு வெளிநாடு தொடர்புடைய நிறுவனத்தில் நல்ல சம்பளத்துடன் வேலை கிடைக்கும்.
மாணவ - மாணவிகளே! முதல் மதிப்பெண் பெறுவதற்காகக் கடுமையாக உழைத்துப் படிப்பீர்கள். ஆசிரியர்களும் உறுதுணையாக இருப்பார்கள். கலைத்துறையினர்களே! வேற்று மொழி வாய்ப்புகளால் புகழடைவீர்கள். வருமானம் உயரும்.
மொத்தத்தில் இந்தச் சனிப்பெயர்ச்சி முடங்கிக் கிடந்த உங்களை முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்வதாக அமையும்.
சனிபகவானின் நட்சத்திர சஞ்சாரப் பலன்கள்:
19.12.17 முதல் 18.1.19 மற்றும் 12.8.19 முதல் 26.9.19 வரை கேதுவின் மூலம் நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால், பணவரவு அதிகரிக்கும். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். மேலும் புனர்பூசம் 4-ம் பாதம், மற்றும் ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நற்பலன்கள் அதிகரிக்கும். பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முக்கிய வேலைகள் தடைபட்டு முடியும்.
உங்களின் சுக - லாபாதிபதியாகிய சுக்கிரனின் பூராடம் நட்சத்திரத் தில் 19.1.19 முதல் 11.8.19 மற்றும் 27.9.19 முதல் 24.2.20 மற்றும் 17.7.20 முதல் 20.11.20 வரை சனி செல்வதால், பாதியிலேயே நின்றுபோன வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். டென்ஷன் விலகும். வீடு மாறுவீர்கள். வாகனம் வாங்குவீர்கள். தாயாரின் உடல் நிலை சீராகும். தாய் வழி உறவினர் களால் ஆதாயம் கிடைக்கும். பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நற்பலன்கள் கிடைக்கும். ஆனால் புனர்பூசம் 4-ம் பாதம், ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சிறு விபத்துகள் ஏற்படலாம்.
25.2.20 முதல் 16.7.20 மற்றும் 21.11.20 முதல் 26.12.20 வரை சனிபகவான் உங்களின் தன ஸ்தானாதிபதியாகிய சூரியனின் உத்திராடம் நட்சத் திரம் முதல் பாதத்தில் செல்வதால், உங்களின் பேச்சில் கம்பீரம் பிறக்கும். வெளிவட்டாரத் தொடர்பு அதிகரிக் கும். உடல் ஆரோக்கியம் திருப்தி தரும். புனர்பூசம் 4-ம் பாதம், ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் நற்பலன்கள் அமையும். ஆனால், பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வீடு, வாகனப் பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும்.
சனிபகவானின் வக்கிர சஞ்சாரம்:
29.4.18 முதல் 11.9.18 மற்றும் 12.8.19 முதல் 13.9.19 வரை மூலம் நட்சத்திரத்தில் சனி வக்கிரமாவதால், உடல்நலக்குறைவு, ஏமாற்றங்கள், இழப்புகள் வந்து நீங்கும். ஆனால் இழுபறியான வேலைகள் உடனடியாக முடியும். சனிபகவான் 10.5.19 முதல் 11.8.19 மற்றும் 27.7.19 முதல் 13.9.19 மற்றும் 17.7.20 முதல் 16.9.20 வரை பூராடம் நட்சத்திரத்தில் வக்கிரமாவதால் வாகனத்தை ஓட்டும்போது நிதானம் தேவை. 2.5.20 முதல் 16.7.20 வரை உத்திராடம் நட்சத்திரத்தில் சனி வக்கிர மாகி செல்வதால், பணப்பற்றாக்குறையும், வீண்பழியும், அரசுக் காரியங்களில் இழுபறி நிலையும் உண்டாகும். பழைய பிரச்னைகளை நினைத்து வருந்துவீர்கள்.
பரிகாரம்: திருவாரூர் மாவட்டம், திருக்கொள்ளிக் காடு எனும் ஊரில் அருளும், பொங்கு சனீஸ்வரரைத் தரிசித்து வழிபட்டு வாருங்கள்; வாழ்க்கை வளமாகும்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58651
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 11892

Back to top Go down

சனிப்பெயர்ச்சி பலன்கள் 2017 Empty Re: சனிப்பெயர்ச்சி பலன்கள் 2017

Post by krishnaamma on Wed Dec 20, 2017 7:32 pm

சிம்மம் !
தன்னம்பிக்கையும் இரக்கமும் கொண்டவர்களே!
இதுவரை 4-ம் வீட்டில் இருந்த சனி பகவான், 19.12.17 முதல் 26.12.20 வரை 5-ம் இடத்தில் அமர்ந்து பலன்களைத் தரவிருக்கிறார். இனி நல்லதே நடக்கும். தாயின் ஆரோக்கியம் மேம்படும். பூர்வீகச் சொத்துப் பிரச்னை நல்லபடி முடிவுக்கு வரும். பாதியில் நிற்கும் வீடு கட்டும் பணி மீண்டும் தொடங்கும். பணவரவு அதிகரிக்கும்.
கணவன் - மனைவிக்குள் அந்நி யோன்யம் அதிகரிக்கும். நீண்டநாள்களாக குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிக்கு, குழந்தை பாக்கியம் கிடைக்கும். கருவுற்ற பெண்கள் தொலை தூரப் பயணங்களைத் தவிர்க்கவும். பிள்ளைகளின் உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுங்கள்.

சனிபகவானின் பார்வைப் பலன்கள்
சனிபகவான் உங்களின் இரண்டாம் வீட்டைப் பார்ப்பதால் சூழ்நிலை அறிந்து பேசுவது நல்லது. கண்ணை பரிசோதித்துக் கொள்வது நல்லது. யாருக்கும் எந்த உறுதிமொழியும் தர வேண்டாம். சனிபகவான் உங்களின் 7-ம் வீட்டைப் பார்ப்பதால், வாழ்க்கைத்துணைக்கு கை,கால் வலி, மரத்துப் போகுதல், மறதி வரக்கூடும். வீண் விவாதங்கள் வந்து போகும். சனிபகவான் உங்களின் லாப வீட்டைப் பார்ப்பதால் ஷேர் மூலம் பணம் வரும். நெடுநாட்களாக வராமலிருந்த பணமெல்லாம் இனி கைக்கு வரும். மூத்த சகோதரர்கள் இணக்கமாக இருப்பார்கள். புது வாகனம் வாங்குவீர்கள்.
வியாபாரிகளே! பற்று வரவு உயரும். கூட்டுத் தொழிலில் புதிய பங்குதாரர்கள் அறிமுகமாவார்கள். விளம்பர சாதனங்களைப் பயன்படுத்தி, விற்பனையை அதிகப்படுத்துவீர்கள். வி.ஐ.பி.-க்களும் வாடிக்கை யாளர்களாக அறிமுகம் ஆவார்கள். ஏற்றுமதி - இறக்குமதி, கடல்வாழ் உயிரினங்கள், ஏஜென்சி, புரோக்கரேஜ் மற்றும் கல்வி நிறுவனங்களால் லாபம் உண்டாகும். நீண்டநாள்களாக எதிர்பார்த்த புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.
உத்தியோகஸ்தர்களே! பணிச் சுமை குறையும். திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். கடின வேலைகளையும் எளிதாக முடித்துக் காட்டுவீர்கள். விரும்பிய இடத்துக்கே மாற்றம் கிடைக்கும். சம்பளம் அதிகரிக்கும். கணினித் துறையினருக்கு வெளி நாட்டில் இருந்து ஒப்பந்த அடிப்படையில் பணிகள் கிடைக்கும். மாணவ - மாணவிகளே! உயர்கல்வியில் வெற்றி பெறுவீர்கள். ஆசிரியர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கம் வெல்வீர்கள். கலைத் துறையி னருக்கு எதிர்பார்த்த நல்ல வாய்ப்புகள் அமையும்.
மொத்தத்தில் இந்தச் சனிப்பெயர்ச்சி, குழப்பங் களில் இருந்து உங்களை விடுவிப்பதுடன், வெளி வட்டாரத்தில் செல்வாக்கு ஏற்படுத்துவதாகவும் அமையும்.
சனிபகவானின் நட்சத்திர சஞ்சாரப் பலன்கள்:
19.12.17 முதல் 18.1.19 வரை மற்றும் 12.8.19 முதல் 26.9.19 வரை கேதுவின் மூலம் நட்சத்திரத்தில் சனி பகவான் செல்வதால், சொத்துச் சேர்க்கையுண்டு. சிலர் இருக்கும் வீட்டை விரிவுபடுத்தி கட்டுவீர்கள். விலையுயர்ந்த தங்க நகைகள் புதிதாக வாங்குவீர்கள். மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஆரோக்கியத்தில் அக்கறைக் காட்டுவது நல்லது. பூரம், உத்திரம் 1-ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு கூடுதல் நன்மைகள் உண்டாகும். உங்களின் தைரியஸ்தானாதிபதியும் யோகாதிபதியு மாகிய சுக்கிரனின் பூராடம் நட்சத்திரத் தில் 19.1.19 முதல் 11.8.19 வரை; 27.9.19 முதல் 24.2.20 வரை; 17.7.20 முதல் 20.11.20 வரை சனி செல்வதால், வீடு,வாகனம் வாங்குவீர்கள். பூர்வீகச் சொத்தை மாற்றியமைப்பீர்கள். மகம், உத்திரம் 1-ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் நற்பலன்கள் கிடைக்கும். ஆனால், பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர் கள் விட்டுக்கொடுத்து போவது நல்லது.
25.2.20 முதல் 16.7.20 மற்றும் 21.11.20 முதல் 26.12.20 வரை சனிபகவான் உங்களின் ராசிநாதனாகிய சூரியனின் உத்திராடம் நட்சத்திரம் முதல் பாதத்தில் செல்வதால், பிரபலங்களுக்கு நெருக்கமாவீர்கள். பழைய பிரச்னைக்குத் தீர்வு கிட்டும். கௌரவ பதவிகள் தேடி வரும். வருமானம் உயரும். ஆனால், மகம், உத்திரம் 1-ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளுடன் கருத்து மோதல்கள் வர வாய்ப்பிருக் கிறது. பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு கூடுதல் நற்பலன்கள் உண்டாகும்.
சனிபகவானின் வக்கிர சஞ்சாரம்:
29.4.18 முதல் 11.9.18 வரை மற்றும் 12.8.19 முதல் 13.9.19 வரை மூலம் நட்சத்திரத்தில் சனி வக்கிரமாவதால், மூத்த சகோதரர்களுடன் கருத்து மோதல்கள் உண்டாகும். கடன் பிரச்னை தொல்லை தரும். ஆரோக்கியம் மேம்படும். சனிபகவான் 10.5.19 முதல் 11.8.19 வரை; 27.7.19 முதல் 13.9.19 வரை; 17.7.20 முதல் 16.9.20 வரை பூராடம் நட்சத்திரத்தில் வக்கிரம் அடைவதால் வீண் செலவுகள், அலைச்சல், வேலைகளில் இழுபறி நிலை உண்டாகும். 2.5.20 முதல் 16.7.20 வரை உத்திராடம் நட்சத்திரத்தில் சனி வக்கிரமாகி செல்வ தால், இக்காலக்கட்டத்தில் செல்வாக்கு, புகழ் கூடும். பழைய கடனை பைசல் செய்வீர்கள்.
பரிகாரம்:திருவண்ணாமலை மாவட்டம் சோகத்தூர் எனும் ஊரில் அருள்பாலிக்கும் ஸ்ரீஅமிர்த வல்லி உடனுறை ஸ்ரீயோக நரசிம்மரை, ஏகாதசி திதி நடைபெறும் நாளில் சென்று நெய்தீபம் ஏற்றி வணங்கி வாருங்கள். சகலமும் நன்மையில் முடியும்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58651
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 11892

Back to top Go down

சனிப்பெயர்ச்சி பலன்கள் 2017 Empty Re: சனிப்பெயர்ச்சி பலன்கள் 2017

Post by krishnaamma on Wed Dec 20, 2017 7:32 pm

கன்னி !
சுயக்கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்பவர்களே!
உங்கள் ராசிக்கு, 19.12.17 முதல் 26.12.20 வரை அர்த்தாஷ்டமச் சனியாக அமர்ந்து பலன்களைத் தரவிருக்கிறார் சனி பகவான். அலைச்சல் இருந்தாலும் எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் உண்டாகும். தவிர்க்கமுடியாத செலவுகள் அதிகரிக்கும்.
மற்றவர்களை நம்பி முக்கியப் பொறுப்பு களை ஒப்படைக்கவேண்டாம். வீடு வாங்குவது விற்பது இழுபறியாகித்தான் முடியும். சொத்து வாங்கும்போது தாய்ப் பத்திரத்தை சரிபார்க்கவும். அதிக வட்டிக்குக் கடன் வாங்கவேண்டாம். இரவு நேரப் பயணங்களில் கவனமாக இருக்கவும். விலை உயர்ந்த பொருள்களை இரவல் தருவதையும் வாங்குவதையும் தவிர்க்கவும். குடும்பத்தில் தம்பதிக்கு இடையேயான பிரச்னைகளைப் பெரிதுபடுத்த வேண்டாம். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படக்கூடும். தாய்வழி சொத்துக்களில் சிக்கல்கள் வரக்கூடும். உரிய அனுமதி பெற்ற பிறகு வீடு கட்டும் பணியைத் தொடங்கவும். வழக்கில் தீர்ப்பு தாமதமாகும்.

சனிபகவானின் பார்வைப் பலன்கள்
சனிபகவான் உங்கள் ராசியைப் பார்ப்பதால், அவ்வப்போது சோர்வு வந்து நீங்கும். கோபம் அதிகரிக்கும். சனிபகவான் உங்களின் 6-ம் வீட்டைப் பார்ப்பதால், பணவரவு அதிகரிக்கும். பழைய பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள். மறைமுக எதிரிகளை இனங்கண்டறிந்து ஒதுக்குவீர்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். சனி பகவான் 10-ம் வீட்டைப் பார்ப்பதால் உத்தியோகத்தில் புது பொறுப்புகளும் தரப்படும்.
வியாபாரத்தில், போட்டிகள் அதிகரிக்கும். கடன் கொடுப்பதைத் தவிர்க்கவும். அயல்நாட்டுத் தொடர்புடைய நிறுவனங்கள் மூலம் லாபம் உண்டாகும். பங்குதாரர்களிடையே அவ்வப்போது கருத்து வேறு பாடுகள் ஏற்பட்டாலும், கடைசியில் உங்கள் வார்த்தைக்குக் கட்டுப்படுவார்கள். பணியாட்களிடம் முக்கிய பொறுப்புகளை ஒப்படைக்காதீர்கள். எலெக்ட் ரானிக்ஸ், கணினி, மூலிகை வகைகளால் ஆதாயம் அடைவீர்கள். உத்தியோகத்தில், சூழ்ச்சிகளைக் கடந்து முன்னேறுவீர்கள். மேலதிகாரிகளை எதிர்த்துப் பேச வேண்டாம். முக்கியக் கோப்புகளைக் கவனமாகக் கையாளவும். சிலருக்கு ஏமாற்றங்களும் மறைமுக அவமானங்களும் ஏற்பட்டு நீங்கும். கடின உழைப்பால் பதவி உயர்வு, சம்பள உயர்வு பெறுவீர்கள். கணினித் துறையினருக்கு கண்களில் பிரச்னை ஏற்பட்டு நீங்கும். புதிய சலுகைகள் கிடைக்கும். மாணவ-மாணவிகளே! கடைசி நேரத்தில் படிக்கும் பழக்கம் வேண்டாம். கலைத் துறையினருக்கு வேற்று மொழி பேசுபவர்களால் புதிய வாய்ப்பு கிடைக்கும்.
மொத்தத்தில் இந்த சனிப்பெயர்ச்சி, உங்களுக்கு வாழும் வகையைக் கற்பிப்பதாக அமையும்.
சனிபகவானின் நட்சத்திர சஞ்சாரப் பலன்கள்:
19.12.17 முதல் 18.1.19 மற்றும் 12.8.19 முதல் 26.9.19 வரை கேதுவின் மூலம் நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால், பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். சமூகத்தில் அந்தஸ்து உயரும். தங்க நகைகளின் சேர்க்கை உண்டாகும். உத்திரம் 2,3,4 மற்றும் சித்திரை 1,2-ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு கூடுதல் நன்மைகள் உண்டாகும். ஆனால், அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கைத் துணைவரை அனுசரித்து செல்லவும்.
உங்களின் தன - பாக்கியாதிபதியான சுக்கிரனின் பூராடம் நட்சத்திரத்தில் 19.1.19 முதல் 11.8.19 மற்றும் 27.9.19 முதல் 24.2.20 மற்றும் 17.7.20 முதல் 20.11.20 வரை சனி செல்வதால், இக்காலக்கட்டத்தில் பண வரவு அதிகரிக்கும். பெருந்தன்மையாகப் பேசி, காரியம் சாதிப்பீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். உத்திரம் 2,3,4-ம் பாதம் மற்றும் அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நற்பலன்கள் கிடைக்கும். சித்திரை 1,2-ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு முன்கோபம் அதிகரிக்கும். 25.2.20 முதல் 16.7.20 மற்றும் 21.11.20 முதல் 26.12.20 வரை சனிபகவான், உத்திராடம் நட்சத்திரம் முதல் பாதத்தில் செல்வதால், அரைகுறை யாக நின்ற வீட்டைக் கட்டி முடிப்பீர்கள். சொத்து பிரச்னை சுமுகமாகும். அஸ்தம், சித்திரை 1,2-ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு கூடுதல் நற்பலன்கள் உண்டாகும். உத்திரம் 2,3,4-ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களுடன் கருத்துமோதல்கள் உருவாகும்.
சனிபகவானின் வக்கிர சஞ்சாரம்:
29.4.18 முதல் 11.9.18 மற்றும் 12.8.19 முதல் 13.9.19 வரை மூலம் நட்சத்திரத்தில் சனி வக்கிரமாவதால், பிள்ளைகளின் வருங்காலம் குறித்து ஒரு வித பயம் உண்டாகும். தங்க நகைகளை கவனமாகக் கையாளுங்கள்.
சனிபகவான் 10.5.19 முதல் 11.8.19 மற்றும் 27.7.19 முதல் 13.9.19 மற்றும் 17.7.20 முதல் 16.9.20 வரை பூராடம் நட்சத்திரத்தில் வக்கிரம் அடைவதால், குடும்ப உறுப்பினர்களைக் ஆலோசிக்காமல் எந்த ஒரு முக்கிய முடிவும் எடுக்க வேண்டாம். 2.5.20 முதல் 16.7.20 வரை உத்திராடம் நட்சத்திரத்தில் சனி வக்கிர மாகி செல்வதால், வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. தாயாரின் உடல் நலத்தில் அக்கறைக் காட்டுங்கள்.
பரிகாரம்:திருவாதிரை நட்சத்திரம் நடைபெறும் நாளில், வேலூர் மாவட்டம் பெரியமணலி எனும் ஊரில் அருளும் ஸ்ரீநாகேஸ்வரர் கோயிலுக்குச் சென்று வில்வம் சாற்றி வழிபட்டு வாருங்கள்; முன்னேற்றம் உண்டாகும்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58651
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 11892

Back to top Go down

சனிப்பெயர்ச்சி பலன்கள் 2017 Empty Re: சனிப்பெயர்ச்சி பலன்கள் 2017

Post by krishnaamma on Wed Dec 20, 2017 7:58 pm

துலாம் ! 
நடுநிலைமை தவறாதவர்களே!
கடந்த ஏழரை ஆண்டுகளாக உங்களைப் பாடாய்ப்படுத்திய சனி பகவான், 19.12.17 முதல் 26.12.20 வரை தைரிய ஸ்தானம் என்னும் 3-ம் இடத்தில் அமர்ந்து பலன்களைத் தர இருக்கிறார். இனி, நீங்கள் தொட்டது துலங்கும். பிரிந்திருந்த கணவன் - மனைவி ஒன்று சேருவீர்கள். முதல் முயற்சியிலேயே வெற்றி பெறுவீர்கள்.
இழந்த செல்வம், செல்வாக்கு அனைத்தும் திரும்பப் பெறுவீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். குடும்பத்தில் நிம்மதியும் மகிழ்ச்சியும் நிலவும். மகளுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். சிலருக்கு சொந்த வீடு வாங்கும் யோகம் உண்டாகும். வழக்குகளில் வெற்றி உண்டாகும். கடன்களைப் பற்றிய கவலை நீங்கும். சுபநிகழ்ச்சிகளில் உங்களுக்கு முதல் மரியாதை கிடைக்கும். மற்றவர்கள் வியக்கும் வண்ணம் சாதனை புரிவீர்கள். வி.ஐ.பி.களின் அறிமுகமும், அதனால் ஆதாயமும் உண்டாகும்.

சனிபகவானின் பார்வைப் பலன்கள்
சனிபகவான் உங்களின் ஐந்தாம் வீட்டைப் பார்ப்பதால் பூர்வீகச் சொத்தை மாற்றியமைப்பீர்கள். பிள்ளைகளுக்காக அதிகம் செலவு செய்வீர்கள். சில சமயங்களில் பிள்ளைகள் பிடிவாதமாக நடந்துக் கொள்வார்கள். சனிபகவான் உங்களின் 9-ம் வீட்டைப் பார்ப்பதால், சமூகத்தில் அந்தஸ்து உயரும். தந்தையாருடன் ஆரோக்கியமான விவாதங்கள் வந்து செல்லும். சொத்து விவகாரங்களில் கவனம் தேவை. அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும்.
சனிபகவான் உங்களின் 12-ம் வீட்டைப் பார்ப்பதால் ஆழ்ந்த உறக்கம் இல்லாமல் போகும். மகான்கள், சித்தர்களின் தொடர்பு கிடைக்கும்.
வியாபாரிகளே! கடையை நவீனப்படுத்துவீர்கள். பொறுப்பில்லாத வேலையாள்களை மாற்றுவீர்கள். விளம்பர யுக்திகளைக் கையாண்டு, தேங்கிக் கிடக்கும் சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். திடீர் லாபம் அதிகரிக்கும். புது ஒப்பந்தங்கள் கையெழுத் தாகும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். சினிமா, பதிப்புத்துறை, ஹோட்டல், கிரானைட், டைல்ஸ், மர வகைகளால் ஆதாயம் அடைவீர்கள். பங்குதாரர்களிடம் வளைந்துகொடுத்துச் செல்வது நல்லது.
உத்தியோகஸ்தர்களே! பிரச்னை தந்த மேலதிகாரி மாற்றப்படுவார். பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கும். சம்பள பாக்கியும் கைக்கு வரும். சிலருக்கு புது வேலை அமையும். வழக்குகள் சாதகமாகும். எதிர்ப்புகள் நீங்கும்.
மாணவ - மாணவிகளே! தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெறுவீர்கள். கலை, விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெறுவீர்கள். சோம்பல், விரக்தி நீங்கும். கலைத்துறையினர்களே! கிசுகிசுத் தொந்தரவு கள், வதந்திகள் நீங்கும். உங்களின் படைப்புகளுக்கு அரசாங்க விருது கிடைக்கும். மறைந்து கிடந்த உங்கள் திறமைகள் வெளிப்படும்.
மொத்தத்தில் இந்த சனிப்பெயர்ச்சி, கடைக்கோடி மனிதரான உங்களைக் கோபுரத்துக்கு உயர்த்து வதாகவும் பிரபலங்களுக்கான அந்தஸ்தைப் பெற்றுத் தருவதா கவும் அமையும்.
சனிபகவானின் நட்சத்திர சஞ்சாரப் பலன்கள்:
19.12.17 முதல் 18.1.19 மற்றும் 12.8.19 முதல் 26.9.19 வரை கேதுவின் மூலம் நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால், இழுபறி வேலைகள் உடனே முடியும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். போட்டியில் வெற்றி பெறுவீர்கள். பழைய நண்பர்களைச் சந்திப்பீர்கள். பிரபலங்கள் உதவுவார்கள். திடீர்ப் பயணங்கள் அதிகரிக்கும். செலவுகள் அதிகரிக்கும். யாருக்கும் சாட்சி கையெழுத்து போட வேண்டாம். கோயில் விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள்.
உங்களின் ராசிநாதனாகிய சுக்கிரனின் பூராடம் நட்சத்திரத்தில் 19.1.19 முதல் 11.8.19 வரை, 27.9.19 முதல் 24.2.20 வரை, 17.7.20 முதல் 20.11.20 வரை சனி செல்வதால், எதிலும் வெற்றி, எதிர்பாராத பணவரவு உண்டு. ஒரு சொத்தை விற்று மற்றொரு சொத்தில் முதலீடு செய்வீர்கள். மகளுக்கு திருமணம் கூடி வரும். விலகியிருந்த மூத்த சகோதரர்கள் விரும்பி வந்து பேசுவார்கள்.
25.2.20 முதல் 16.7.20 வரை மற்றும் 21.11.20 முதல் 26.12.20 வரை சனிபகவான் சூரியனின் உத்திராடம் நட்சத்திரம் முதல் பாதத்தில் செல்வதால் யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம். அரசாங்க விவகாரங்களில் எச்சரிக்கையாக இருக்கவும்.
சனிபகவானின் வக்கிர சஞ்சாரம்:
29.4.18 முதல் 11.9.18 வரை மற்றும் 12.8.19 முதல் 13.9.19 வரை மூலம் நட்சத்திரத்தில் சனி வக்கிரமா வதால் பூமி சேர்க்கையுண்டாகும். மனைவிக்கு வேலை கிடைக்கும். சனிபகவான் 10.5.19 முதல் 11.8.19 வரை; 27.7.19 முதல் 13.9.19 மற்றும் 17.7.20 முதல் 16.9.20 வரை பூராடம் நட்சத்திரத்தில் வக்கரிப்பதால், வீண் விமர்சனங்களைத் தவிர்க்கவும். 2.5.20 முதல் 16.7.20 வரை உத்திராடம் நட்சத்திரத்தில் சனி வக்கிரமாகி செல்வதால், நல்லது நடக்கும்.
பரிகாரம்:பெரம்பலூர் மாவட்டம், வெங்கனூர் எனும் ஊரில் அருளும் ஸ்ரீவிருத்தாம்பிகை உடனுறை ஸ்ரீவிருத்தகிரீஸ்வரரை, பிரதோஷ நாளில் சென்று வணங்கி வாருங்கள்; தொட்டதெல்லாம் துலங்கும்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58651
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 11892

Back to top Go down

சனிப்பெயர்ச்சி பலன்கள் 2017 Empty Re: சனிப்பெயர்ச்சி பலன்கள் 2017

Post by krishnaamma on Wed Dec 20, 2017 8:00 pm

விருச்சிகம் ! 
மனசாட்சிக்கு மதிப்பளித்து நடப்பவர்களே!
இதுவரை ஜன்மச் சனியாக இருந்த சனிபகவான், 19.12.17 முதல் 26.12.20 வரை பாதச் சனியாக அமர்ந்து பலன் களைத் தர இருக்கிறார். பணப்புழக்கம் அதிகரிக்கும். யோசித்துச் செயல் படுவீர்கள். தெளிவாகச் சிந்திப்பீர்கள். பிரச்னைகளில் இருந்து விடுபடுவீர்கள்.
உங்களை அவமானப்படுத்தியவர் கள்கூட, வலிய வந்து மதித்துப் பேசுவார்கள். சுபநிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். வீண் பயம் விலகும். உறக்கமில்லாமல் தவித்தவர்களுக்கு அந்த நிலை மாறும். ஆனாலும், உணவுக் கட்டுப்பாடும், எளிய உடற்பயிற்சியும் அவசியம். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வாழ்க்கைத்துணைவர் உற்சாகம் அடைவார். கணவன்-மனைவிக்கு இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களுக்கு ஜாமீன் கொடுக்கவேண்டாம். பார்வைக்கோளாறு, பல்வலி வந்து நீங்கும். மற்றவர்களிடம் அதிக உரிமை எடுத்துக்கொண்டு பேசவேண்டாம். வழக்குகளில் அலட்சியம் வேண்டாம். அரசாங்க சம்பந்தப்பட்ட காரியங்கள் தடைப்பட்டு முடியும். சாலைகளில் செல்லும்போது கவனமாக இருக்கவும்.

சனிபகவானின் பார்வைப் பலன்கள்
சனிபகவான் உங்களின் 4-ம் வீட்டைப் பார்ப்பதால் வேலைச் சுமை அதிகரிக்கும். சில காரியங்களை போராடி முடிக்க வேண்டி வரும். திடீர் பயணங்கள் அதிகரிக்கும். சனிபகவான் உங்களின் 8-ம் வீட்டைப் பார்ப்பதால், உடல்நலத்தில் கவனம் தேவை. உங்களின் லாப வீட்டைப் பார்ப்பதால் திடீர் பணவரவு உண்டு. வீடு, மனை, வாகனம் வாங்கும் யோகம் உண்டு.
வியாபாரிகளே! விளம்பர யுக்திகளால் வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். கொடுக்கல் - வாங்கல் சுமுகமாக நடைபெறும். பழைய வாடிக்கை யாளர்கள் தேடி வருவார்கள். கடையை நவீன மயமாக்குவீர்கள். பெரிய நிறுவனங்களின் ஒப்பந்தங் கள் கையெழுத்தாகும். உணவகம், இரும்பு வகை களால் ஆதாயம் உண்டாகும். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்கள் பணிந்து வருவார்கள்.
மாணவ - மாணவிகளே! படிப்பில் ஆர்வம் பிறக்கும். தேர்வுகளில் மதிப்பெண் அதிகரிக்கும். நீங்கள் விரும்பிய நிறுவனத்திலேயே உயர்கல்வியைத் தொடரும் வாய்ப்பு ஏற்படும். கலைத்துறையினரே! வீண் வதந்திகளில் இருந்து விடுபடுவீர்கள். கலைநயம் மிகுந்த உங்கள் படைப்புகள் பட்டிதொட்டி எங்கும் பாராட்டிப் பேசப்படும்.
மொத்தத்தில் இந்த சனிப்பெயர்ச்சி, உங்களை வெளிச்சத்துக்குக் கொண்டு வருவதுடன், உயர்ந்த அந்தஸ்தைப் பெற்றுத் தருவதாகவும் அமையும்.
சனிபகவானின் நட்சத்திர சஞ்சாரப் பலன்கள்:
19.12.17 முதல் 18.1.19 மற்றும் 12.8.19 முதல் 26.9.19 வரை கேதுவின் மூலம் நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால், இக்காலக்கட்டங்களில் அனுஷ நட்சத்திரக்காரர்களுக்கு அலைச்சலும், செலவுகளும் வந்து போகும். விசாகம் 4-ம் பாதம், கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும். பயணங்களால் ஆதாயம் உண்டு. தடைப்பட்ட காரியங்கள் முடிவடையும்.
சுக்கிரனின் பூராடம் நட்சத்திரத்தில் 19.1.19 முதல் 11.8.19 மற்றும் 27.9.19 முதல் 24.2.20 மற்றும் 17.7.20 முதல் 20.11.20 வரை சனி செல்வதால், தள்ளிப் போன திருமணம் முடியும். கைமாற்று கடனை அடைப்பீர்கள்.வாகனம் மாற்றுவீர்கள். மனைவிவழி உறவினர்களுடன் மனஸ்தாபங்கள் வந்தாலும், முடிவில் சமாதானம் உண்டாகும். பழைய வீட்டைச் சீர் செய்வீர்கள். 25.2.20 முதல் 16.7.20 மற்றும் 21.11.20 முதல் 26.12.20 வரை சனிபகவான் சூரியனின் உத்திராடம் நட்சத்திரம் முதல் பாதத்தில் செல்வதால் எதிர்பாராத பணவரவு, செல்வாக்கு, நாடாளுபவர்களின் நட்பு யாவும் உண்டாகும். பழைய சொந்தங்கள் தேடி வரும்.
சனிபகவானின் வக்கிர சஞ்சாரம்:
29.4.18 முதல் 11.9.18 வரை, 12.8.19 முதல் 13.9.19 வரை மூலம் நட்சத்திரத்தில் சனி வக்கிரமாவதால், பால்ய நண்பர்க ளால் திடீர் திருப்பங்கள் உண்டு. சனிபகவான் 10.5.19 முதல் 11.8.19 வரை; 27.7.19 முதல் 13.9.19 மற்றும் 17.7.20 முதல் 16.9.20 வரை பூராடம் நட்சத்திரத்தில் வக்கிரம் ஆவதால் குடும்பத்தினருடன் புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். 2.5.20 முதல் 16.7.20 வரை உத்திராடம் நட்சத்திரத்தில் சனி வக்கிரமாகி செல்வதால், அதிகம் உழைக்க வேண்டி வரும். வழக்குகளில் இழுபறி நிலை வந்து போகும்.
பரிகாரம்:சீர்காழி-தரங்கம்பாடி பாதையில் உள்ளது திருக்கடையூர். இங்கு கோயில் கொண்டிருக் கும் அருள்மிகு அமிர்தகடேஸ்வரரை வழிபடுவதுடன், அருகிலேயே ஈசனின் அருள் பெற்று திகழும் யமதர்மனையும் வணங்கி வாருங்கள்; முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58651
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 11892

Back to top Go down

சனிப்பெயர்ச்சி பலன்கள் 2017 Empty Re: சனிப்பெயர்ச்சி பலன்கள் 2017

Post by krishnaamma on Wed Dec 20, 2017 8:02 pm

தனுசு !
எதிலும் தனித்து நிற்பவர்களே!
இதுவரை விரயஸ்தானத்தில் இருந்த சனிபகவான், 19.12.17 முதல் 26.12.20 வரை ஜன்ம ராசியில் இருந்து பலன்களைத் தர இருக்கிறார். ஜன்மச் சனியாயிற்றே என்று கலங்கவேண்டாம். இனி, நிம்மதி பிறக்கும். மதிப்பு மரியாதை கூடும்.
எதிர்பார்த்து ஏமாந்த பணம் கைக்கு வரும். அதிக வட்டிக்கு வாங்கி இருந்த கடனில் ஒரு பகுதியைத் தந்து முடிப்பீர்கள். ஜன்மச் சனி என்பதால், உடல் ஆரோக்கியத் தில் மட்டும் கவனம் தேவை. வாழ்க்கைத் துணை வழியில் செலவுகள் ஏற்படும். சிலர் உங்களைப் பணம் கேட்டுத் தொந்தரவு செய்வார்கள். திடீர்ப் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். சிலருக்கு வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். நீண்டநாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். வீடு கட்டும் பணிக்கு வங்கிக் கடனுதவி கிடைக்கும். சொந்த விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்ள வேண்டாம். சொத்து சம்பந்தப்பட்ட பிரச்னைகளில் அவசரம் வேண்டாம். வி.ஐ.பி-களின் நட்பால் சில காரியங்களைச் சாதிப்பீர்கள். மகளுக்கு, திருமணம் கூடிவரும். மகனின் மனப்போக்கு மாறும்.
சனிபகவானின் பார்வைப் பலன்கள்
சனிபகவான் உங்களின் 3-ம் வீட்டைப் பார்ப்பதால், கௌரவப் பதவி வரும். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். சவால்களில் வெற்றி பெறுவீர்கள். இளைய சகோதர வகையில் செலவுகள் இருக்கும். சனிபகவான் உங்களின் 7-ம் வீட்டைப் பார்ப்பதால் வாழ்க்கைத் துணைக்கு கால் வலி, கழுத்து வலி வந்து நீங்கும். சனிபகவான் உங்களின் 10-ம் வீட்டைப் பார்ப்பதால், உத்தியோகத்தில் மரியாதை கூடும். சிலர் சுயத் தொழில் தொடங்க வாய்ப்பு உண்டாகும்.
வியாபாரத்தில் அதிரடி மாற்றங்கள் செய்வீர்கள். சந்தை நிலவரங்களை அறிந்து முதலீடு செய்வது நல்லது. மற்றவர்களின் ஆலோசனைகளை நம்பி, பெரிய அளவில் முதலீடு செய்யவேண்டாம். லாபம் கணிசமாக உயரும். ஹோட்டல், கணினி உதிரி பாகங்கள், துணி வகைகளால் லாபம் அடைவீர்கள். பங்குதாரர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.
உத்தியோகத்தில், வேலைச்சுமை அதிகரிக்கும். புதிய அதிகாரியின் வரவால் உற்சாகம் அடைவீர்கள். தேவையில்லாமல் விடுமுறை எடுக்கவேண்டாம். தடைப்பட்ட சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்கும். முக்கிய ஆவணங்களைக் கவனமாகக் கையாளவும்.
மாணவ - மாணவிகளே! பாடங்களில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். கணிதம், மொழிப் பாடங் களுக்கு கூடுதல் நேரம் ஒதுக்குங்கள். அரசுத் தேர்வில் எதிர்பார்த்தபடியே நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும். கலைத் துறையினரே! வீண் வதந்திகள் குறித்து கவலைப்பட வேண்டாம். சம்பள விஷயத்தில் கறாராக நடந்துகொள்ளாதீர்கள்.
மொத்தத்தில் இந்த சனிப்பெயர்ச்சி, உங்களுக்கு தன்னம்பிக்கையைத் தருவதுடன் அனைத்துப் பிரச்னைகளிலிருந்தும் விடுபடுவதற்குத் துணை புரிவதாக அமையும்.
சனிபகவானின் நட்சத்திர சஞ்சாரப் பலன்கள்:
19.12.17 முதல் 18.1.19 வரை; 12.8.19 முதல் 26.9.19 வரை கேதுவின் மூலம் நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால், மூலம் நட்சத்திரக்காரர்களுக்கு கொஞ்சம் அலைச்சலும், ஏமாற்றங்களும் இருக்கும். ஆனால், எதிர்பார்த்த காரியங்கள் தடையின்றி முடியும். வி.ஐ.பி-கள் அறிமுகமாவார்கள். சொத்து வாங்க வங்கிக் கடன் கிடைக்கும். யோகா, தியானம் ஆகியவற்றில் ஈடுபாடு அதிகரிக்கும்.
சுக்கிரனின் பூராடம் நட்சத்திரத்தில் 19.1.19 முதல் 11.8.19; 27.9.19 முதல் 24.2.20 மற்றும் 17.7.20 முதல் 20.11.20 வரை சனி செல்வதால், இக்காலக்கட்டத்தில் புதியவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண் டாம். குடும்ப அந்தரங்க விஷயங்களை வெளியில் பகிர்ந்துகொள்ள வேண்டாம். புதிய திட்டங்கள் நிறைவேறும். சவாலான காரியங்களையும் எளிதாக முடித்துக் காட்டுவீர்கள். 25.2.20 முதல் 16.7.20 வரஒ மற்றும் 21.11.20 முதல் 26.12.20 வரை சனி உங்களின் ராசிக்கு பூர்வ புண்ணியாதிபதியான சூரியனின் உத்திராடம் நட்சத்திரம் முதல் பாதத்தில் செல்வதால், வேலை கிடைக்கும். அரசால் ஆதாயமடைவீர்கள். திடீர் பணவரவு உண்டு. வழக்கில் வெற்றி பெறுவீர்கள். தந்தைவழி சொத்துகள் வந்து சேரும்.
சனிபகவானின் வக்கிர சஞ்சாரம்:
29.4.18 முதல் 11.9.18 வரையிலும், 12.8.19 முதல் 13.9.19 வரையிலும், மூலம் நட்சத்திரத்தில் சனி வக்கிரமாவதால், பிள்ளை களுக்கு தடைப்பட்டுக் கொண்டிருந்த திருமணம் கூடி வரும். சனி பகவான் 10.5.19 முதல் 11.8.19; 27.7.19 முதல் 13.9.19 மற்றும் 17.7.20 முதல் 16.9.20 வரை பூராடம் நட்சத்திரத்தில் வக்கிரம் ஆவதால் அயல்நாட்டில் இருப்பவர்களால் ஆதாயம் உண்டு. நிர்வாகத் திறன் கூடும். 2.5.20 முதல் 16.7.20 வரை உத்திராடம் நட்சத்திரத்தில் சனி வக்கிரமாகச் செல்வதால், விலையுயர்ந்த பொருள்களை கவனமாகப் பார்த்துக்கொள்ளவும். யாரையும் நம்பி முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம்.

பரிகாரம்:தேனி மாவட்டம் கண்டமனூர் அருகில் உள்ள குச்சனூரில், சுயம்பு வடிவாக எழுந்தருளி இருக்கும் ஸ்ரீசனீஸ்வரரை வணங்கி வழிபட்டு வாருங்கள். சகல பிரச்னைகளும் நீங்கி வாழ்வில் சந்தோஷம் பொங்கிப் பெருகும்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58651
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 11892

Back to top Go down

சனிப்பெயர்ச்சி பலன்கள் 2017 Empty Re: சனிப்பெயர்ச்சி பலன்கள் 2017

Post by krishnaamma on Wed Dec 20, 2017 8:02 pm

மகரம் !
தோல்விகளால் சோர்வு அடையாதவர்களே!
இதுவரை உங்கள் ராசிக்கு லாப வீட்டில் அமர்ந்து நற்பலன்களைத் தந்த சனிபகவான், 19.12.17 முதல் 26.12.20 வரை ஏழரைச் சனியாக விரயஸ்தானத்தில் அமர்ந்து பலன்களைத் தர இருக்கிறார். ஏழரைச் சனியாக இருந்தாலும், நல்ல பலன்களையே தருவார்.
உங்கள் ராசிநாதன் சனி 12-ல் சென்று மறைவதால், தடைப்பட்ட காரியங் களை விரைந்து முடிப்பீர்கள். கம்பீரமாகப் பேசி மற்றவர்களைக் கவருவீர்கள். மாறுபட்ட அணுகுமுறையால் தீர்க்க முடியாத பிரச்னைகளுக்கும் தீர்வு காண்பீர்கள். கணவன் - மனைவிக்கு இடையில் இருந்த கருத்து வேறுபாடு நீங்கும். பிள்ளைகள் உங்கள் விருப்பப்படி நடந்துகொள்வார்கள். சுபச் செலவுகள் அதிகரிக்கும். ஆன்மிகவாதிகள், மகான்கள், சித்தர்களின் ஆசிகள் கிடைக்கும். நட்பு வட்டம் விரிவடையும். மறைமுக எதிரிகளை இனம் கண்டு ஒதுக்குவீர்கள். வழக்கு களில் சாதகமான திருப்பம் ஏற்படும். அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டாகும். தடைப்பட்ட குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். வாகனப் பழுது சரியாகும். மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகளை எடுக்கவேண்டாம். மற்றவர்களுடன் அளவோடு பழகவும். பிரச்னைகளை சுமுகமாகப் பேசித் தீர்த்துக்கொள்ளவும்.

சனிபகவானின் பார்வைப் பலன்கள்
சனிபகவான் உங்களின் 2-ம் வீட்டைப் பார்ப்பதால், பணப்புழக்கம் திருப்திகரமாக இருக்கும். ஆனாலும், சேமிக்க முடியாதபடி செலவுகளும் இருக்கும். அவ்வப்போது கைமாற்றாக கடனும் வாங்க வேண்டி வரும். பேச்சால் பிரச்னை வரக்கூடும். சனிபகவான் உங்களின் 6-ம் வீட்டைப் பார்ப்பதால், வழக்கு சாதகமாகும். நோய் விலகும். பழைய கடனில் ஒரு பகுதியைத் தந்து முடிக்க வழி பிறக்கும். சகோதரிக்கு திருமணம் முடியும். சனிபகவான் உங்களின் 9-ம் வீட்டைப் பார்ப்பதால், செல்வாக்கு உயரும். தந்தைக்கு நெஞ்சு வலி, கை, கால் அசதி வந்து நீங்கும்.
வியாபாரிகளே! போட்டிகளை மீறி ஓரளவு லாபம் சம்பாதிப்பீர்கள். புது சலுகைத் திட்டங்களை அறிவித்து, வாடிக்கையாளர்களைக் கவருவீர்கள். அனுபவசாலிகளை பணியில் சேர்ப்பீர்கள். மற்றவர்களை நம்பி பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். பழைய பாக்கிகளைக் கறாராகப் பேசி வசூலிக்கவும். மருந்து, கமிஷன், மர வகைகளால் ஆதாயம் உண்டாகும். கூட்டுத் தொழிலில் பங்குதாரர் களுடன் மோதல்கள் ஏற்பட்டு நீங்கும்.
உத்தியோகத்தில், சூழ்ச்சிகளை முறியடித்து வெற்றி பெறுவீர்கள். மூத்த அதிகாரிகளால் முன்னுக்கு வருவீர்கள். வேலைச்சுமை அதிகமாகத்தான் இருக்கும். வேறு சில நல்ல வாய்ப்புகளும் தேடி வரும். உத்தியோகம் சம்பந்தப்பட்ட வழக்குகளில் வெற்றி கிடைக்கும். கணினித் துறையில் உள்ளவர்களுக்குப் பதவி உயர்வு, சம்பள உயர்வு தடைப்பட்டாலும், போராடிப் பெறுவீர்கள். மாணவ - மாணவிகளே! படிப்பில் அதீத கவனம் தேவை. விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி உண்டு.கலைத் துறையினரே! உங்களது படைப்புகள் பட்டிதொட்டியெங்கும் பரவும். உங்களின் திறமையைப் பயன்படுத்தி முன்னேறுங்கள்.
மொத்தத்தில் இந்தச் சனிப்பெயர்ச்சி, பழைய பிரச்னைகளில் இருந்து உங்களை விடுபட வைப்பதாக அமையும்.
சனிபகவானின் நட்சத்திர சஞ்சாரப் பலன்கள்:
19.12.17 முதல் 18.1.19 மற்றும் 12.8.19 முதல் 26.9.19 வரை கேதுவின் மூலம் நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால், கொஞ்சம் அலைச்சலும் செலவுகளும் இருக்கும். பழைய நண்பர்களை பகைத்துக் கொள்ளா தீர்கள். ஊர்ப் பொது விவகாரங்களில் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது.
சுக்கிரனின் பூராடம் நட்சத்திரத்தில் 19.1.19 முதல் 11.8.19 வரையிலும், 27.9.19 முதல் 24.2.20 வரையிலும், 17.7.20 முதல் 20.11.20 வரையிலும் சனி செல்வதால், இக்காலக் கட்டத்தில் எதிர்பாராத பணவரவு, திடீர் யோகம் உண்டு. வசதியுள்ள வீட்டுக்கு மாறுவீர்கள். தடைப்பட்டிருந்த கல்யாணம் கூடிவரும். வீட்டைக் கட்டி முடிப்பீர்கள். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். 25.2.20 முதல் 16.7.20 வரையிலும் 21.11.20 முதல் 26.12.20 வரையிலும் சனிபகவான் சூரியனின் உத்திராடம் நட்சத்திரம் முதல் பாதத்தில் செல்வதால், வழக்கில் திருப்பம் உண்டாகும்.
சனிபகவானின் வக்கிர சஞ்சாரம்:
29.4.18 முதல் 11.9.18 வரையிலும், 12.8.19 முதல் 13.9.19 வரையிலும் மூலம் நட்சத்திரத்தில் சனி வக்கிரமாவதால் பிரபலங் களின் அறிமுகம் கிடைக்கும். அயல்நாடு சென்று வர விசா கிடைக்கும். சனிபகவான் 10.5.19 முதல் 11.8.19; 27.7.19 முதல் 13.9.19 மற்றும் 17.7.20 முதல் 16.9.20 வரை பூராடம் நட்சத்திரத்தில் வக்கிரம் ஆவதால், இக்காலக்கட்டத்தில் சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் தீர்ப்பு தள்ளிப் போகும். 2.5.20 முதல் 16.7.20 வரை உத்திராடம் நட்சத்திரத்தில் சனி வக்கிரமாகி செல்வதால், செலவுகள் அதிகரிக்கும். தாய்வழி உறவினர்களுடன் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது.
பரிகாரம்:விழுப்புரம் மாவட்டம், கோலியனூர் ஸ்ரீவாலீஸ்வரர் கோயிலில் அருளும்... வாலியால் தென்முகமாகப் பிரதிஷ்டை செய்யப்பட்ட சனீஸ்வர பகவானை வணங்கி வாருங்கள். வளம் பெருகும்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58651
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 11892

Back to top Go down

சனிப்பெயர்ச்சி பலன்கள் 2017 Empty Re: சனிப்பெயர்ச்சி பலன்கள் 2017

Post by krishnaamma on Wed Dec 20, 2017 8:03 pm

கும்பம் !
ஏற்றத்தாழ்வுகளைக் கண்டு அஞ்சாதவர்களே!
இதுவரை உங்கள் ராசிக்கு 10-ம் இடத்தில் இருந்த சனிபகவான், 19.12.17 முதல் 26.12.20 வரை லாபவீட்டில் அமர்ந்து பலன்களைத் தர இருக்கிறார். எதிலும் உங்கள் கை ஓங்கும். மனதில் தெளிவு பிறக்கும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் வரும். எதிலும் ஆர்வம் பிறக்கும். பண வரவுக்குக் குறைவிருக்காது.
நாடாள்பவர்கள், பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். கணவன் - மனைவி இருவரும் கலந்து பேசி, குடும்பச் செலவுகளைக் குறைக்கத் திட்டமிடுவீர்கள். சிலர் புது வீடு வாங்குவீர்கள். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். மகளின் திருமணத்தை ஊரே மெச்சும்படி நடத்திக் காட்டுவீர்கள். மகனுக்கு வெளிநாட்டில் உயர்கல்வி அமையும். சகோதரியின் திருமணம் கூடி வரும். பழைய நகைகளை மாற்றிப் புது டிசைனில் நகை வாங்குவீர்கள். பெரிய பதவிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். அரசாங்க அதிகாரிகளால் உதவிகள் கிடைக்கும்.

சனிபகவானின் பார்வைப் பலன்கள்
சனிபகவான் உங்கள் ராசியைப் பார்ப்பதால் டென்ஷன், கோபம், அலர்ஜி வந்து நீங்கும். தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். செரிமானக் கோளாறு, நரம்பு பிரச்சனைகள் வந்து நீங்கும். சனிபகவான் உங்களின் 5-ம் வீட்டைப் பார்ப்பதால், பிள்ளைகளின் போக்கில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். படிப்பு, உத்தியோகத் தின் பொருட்டு பிள்ளைகளைப் பிரிய வேண்டி வரும். பூர்வீகச் சொத்துப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். சனிபகவான் உங்களின் 8-ம் வீட்டைப் பார்ப்பதால், அயல்நாட்டுப் பயணம் சாதகமாக அமையும்.
வியாபாரிகளே! தேங்கிக் கிடந்த சரக்குகளை, சாமர்த்தியமாகப் பேசி விற்றுத் தீர்ப்பீர்கள். பணியாளர் களை அரவணைத்து வேலை வாங்குங்கள். வாடிக்கை யாளர்களின் தேவையறிந்து செயல்படுவதால் லாபம் அதிகரிக்கும். கடையை விசாலமான இடத்துக்கு மாற்றுவீர்கள். வெளிநாட்டுத் தொடர்புடைய நிறுவனங் களுடன் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். ரியல் எஸ்டேட், பதிப்பகம், சிமென்ட் வகைகளால் லாபம் அதிகரிக்கும். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்கள் உங்கள் கோரிக்கையை ஏற்பார்கள்.
உத்தியோகஸ்தர்களே! உங்களின் நிர்வாகத் திறமை கூடும். புது வாய்ப்புகள், பொறுப்புகள் தேடி வரும். மூத்த அதிகாரிகள் உங்களின் ஆலோசனைக்கு முக்கியத்துவம் அளிப்பார்கள். சம்பளம் உயரும். மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். மாணவ- மாணவிகளே! பாடங்களைக் கூர்ந்து கவனித்து உள்வாங்கிக் கொள்வீர்கள். தேர்வுகளில் மதிப்பெண்கள் அதிகரிக்கும். விளையாட்டுகளில் பதக்கம் வெல்வீர்கள். கலைத்துறையினறே! கிடைக்கும் வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொண்டு வெற்றி பெறுவீர்கள். சம்பள பாக்கி கைக்கு வந்து சேரும்.
மொத்தத்தில் இந்த சனிப்பெயர்ச்சி, தடுமாறிக் கொண்டிருந்த உங்களை, தன்மானத்துடன் தலை நிமிரச் செய்வதுடன், வசதி வாய்ப்புகளை அள்ளித் தருவதாகவும் அமையும்.
சனிபகவானின் நட்சத்திர சஞ்சாரப் பலன்கள்:
19.12.17 முதல் 18.1.19 வரை; 12.8.19 முதல் 26.9.19 வரை கேதுவின் மூலம் நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால், பழுதான வாகனத்தை மாற்றுவீர்கள். பணம் வரும். ஆனால் செலவினங்களும் துரத்தும். சொத்துத் தகராறு, பங்காளிப் பிரச்னையில் அவசரப்பட்டு நீதிமன்றம் செல்ல வேண்டாம். யாருக்கும் ஜாமீன் கையெழுத்துப் போட வேண்டாம்.
சுக்கிரனின் பூராடம் நட்சத்திரத்தில் 19.1.19 முதல் 11.8.19 வரை; 27.9.19 முதல் 24.2.20 வரை மற்றும் 17.7.20 முதல் 20.11.20 வரை சனி செல்வதால், அரைகுறையாக இருந்த வேலைகள் முடியும். எதிர்பார்த்து ஏமாந்த பணம் கைக்கு வரும். திடீர்ப் பயணங்களால் உற்சாகம் அடைவீர்கள். பெற்றோருடன் இருந்து வந்த மனஸ்தாபங்கள் நீங்கும். 25.2.20 முதல் 16.7.20 வரை மற்றும் 21.11.20 முதல் 26.12.20 வரை சனிபகவான் சூரியனின் உத்திராடம் நட்சத்திரம் முதல் பாதத்தில் செல்வதால், வாழ்க்கைத்துணை வழியில் மனஸ்தாபங்கள், மருத்துவச் செலவுகள் வந்து போகும்.
சனிபகவானின் வக்கிர சஞ்சாரம்:
29.4.18 முதல் 11.9.18 வரை மற்றும் 12.8.19 முதல் 13.9.19 வரை மூலம் நட்சத்திரத்தில் சனி வக்கிரம் ஆவதால், இக்காலக்கட்டத்தில் அரைகுறையாக நின்ற பல வேலைகளை முடித்துக் காட்டுவீர்கள். வாடகை வீட்டிலிருந்து சொந்த வீட்டுக்கு மாறுவீர்கள். சனிபகவான் 10.5.19 முதல் 11.8.19 வரை; 27.7.19 முதல் 13.9.19 வரை மற்றும் 17.7.20 முதல் 16.9.20 வரை பூராடம் நட்சத்திரத்தில் வக்கிரம் அடைவதால், உடல் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு சரியாகும். 2.5.20 முதல் 16.7.20 வரை உத்திராடம் நட்சத்திரத்தில் சனி வக்கிரமாகி செல்வதால், எதிலும் வெற்றி கிடைக்கும். முடங்கிக் கிடந்த வேலைகள் முழுமையடையும்.
பரிகாரம்:திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக் குறிச்சி எனும் ஊரில் அருள்பாலிக்கும் ஸ்ரீபூமாதேவி சமேத ஸ்ரீஆதிவராகப்பெருமாளை, ஏகாதசி திதி நடை பெறும் நாளில் சென்று வணங்குங்கள். நன்மைகள் அதிகரிக்கும்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58651
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 11892

Back to top Go down

சனிப்பெயர்ச்சி பலன்கள் 2017 Empty Re: சனிப்பெயர்ச்சி பலன்கள் 2017

Post by krishnaamma on Wed Dec 20, 2017 8:03 pm

மீனம் !
எப்போதும் நல்லவழியில் செல்பவர்களே!
இதுவரை உங்கள் ராசிக்கு 9-ம் இடத்தில் இருந்த சனிபகவான், 19.12.17 முதல் 26.12.20 வரை 10-ம் வீட்டில் அமர்ந்து பலன்களைத் தர இருக்கிறார். இதனால் நன்மைகளே நடக்கும். இருந்த இடம் தெரியாமல் இருந்த நீங்கள், இனி விஸ்வரூபம் எடுப்பீர்கள்.
கணவன் - மனைவிக்கு இடையில் இருந்த வீண் சந்தேகம், பிணக்குகள் நீங்கும். தந்தையின் ஆரோக்கியம் மேம்படும். அவருடன் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பிதுர்வழிச் சொத்தில் இருந்த சிக்கல்கள் முடிவுக்கு வரும். இழந்த பணத்தைத் திரும்பப் பெறுவீர்கள். வாழ்க்கைத்துணை வழியில் ஆதரவு பெருகும். வீட்டைக் கட்டி முடிக்க வங்கிக் கடனுதவி கிடைக்கும். சொந்த ஊரில் இழந்த செல்வாக்கைத் திரும்பப் பெறுவீர்கள். குழந்தை இல்லாமல் வருந்திய தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். சேமிக்கத் தொடங்குவீர்கள். பொது நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். அரசாங்கக் காரியங்கள் சாதகமாக முடியும்.வழக்கு களில் வெற்றி உண்டாகும்.

சனிபகவானின் பார்வைப் பலன்கள்
சனிபகவான் உங்களின் 4-ம் வீட்டைப் பார்ப்பதால், தாயாரின் உடல் நலம் பாதிக்கும். புது வாகனம் வாங்குவீர்கள். தாய்வழியில் சொத்துப் பிரச்னை தலை தூக்கும். யாருக்கும் பொறுப்பேற்று சாட்சிக் கையெழுத்திட வேண்டாம். புதியவர்களிடம் சொந்த விஷயங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டாம். சனிபகவான் உங்களின் 7-ம் வீட்டைப் பார்ப்பதால், வாழ்க்கைத்துணைக்கு ஆரோக்கிய பாதிப்புகள், அவருடன் வாக்குவாதங்கள் வந்து நீங்கும். வி.ஐ.பி.களின் அறிமுகம் கிடைக்கும். சனிபகவான் உங்களின் 12-ம் வீட்டைப் பார்ப்பதால், தூக்கமின்மை, சுப விரயங்கள் ஏற்படும்.
வியாபாரிகளே! முடங்கிக்கிடந்த நீங்கள் இனி சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். கடையை விரிவுபடுத் துவீர்கள். போட்டிகளை முறியடிப்பீர்கள். வியாபார நெளிவுசுளிவுகளைக் கற்றுக்கொள்வீர்கள். தள்ளிப் போன ஒப்பந்தங்கள் மீண்டும் கைக்கு வரும். வாடிக்கையாளர்களை அதிகப்படுத்த விளம்பர யுக்திகளைக் கையாளுவீர்கள். கண்ணாடி, ஆடை, பெட்ரோல், டீசல் வகைகளால் ஆதாயம் அடைவீர்கள். கூட்டுத்தொழிலில் விலகிச் சென்ற பங்குதாரர்கள் மறுபடியும் வருவார்கள்.
உத்தியோகஸ்தர்களே! 10-ம் இடத்தில் சனி பகவான் அமர்வதால், உயர்வு உண்டாகும். வேலைச் சுமை அதிகமாகத்தான் இருக்கும். முக்கியப் பொறுப்புகளில் அமர்த்தப்படுவீர்கள். சில பணிகளைப் போராடி முடிப்பீர்கள். மேலதிகாரி உதவுவார். முக்கிய கோப்புகளைக் கவனமாகக் கையாளவும். திடீர் இடமாற்றம் உண்டாகும். அதனால் நன்மையே ஏற்படும். புது சலுகைகளும் சம்பள உயர்வும் உண்டு.
மாணவ - மாணவிகளே! படிப்பில் அதிக ஆர்வம் பிறக்கும். நினைவாற்றல் அதிகரிக்கும். போட்டிகளில் வெற்றி பெறுவீர்கள். கலைத்துறையினரே! முன்னணிக் கலைஞர்களுடன் இணக்கமான சூழ்நிலை ஏற்படும். பொது நிகழ்ச்சிகளில் தலைமை வகிக்கும் அளவுக்குப் பிரபலமடைவீர்கள்.
மொத்தத்தில் இந்த சனிப்பெயர்ச்சி, குடத்திலிட்ட விளக்காகத் திகழ்ந்த உங்களை, கோபுர விளக்கு போன்று ஒளிரச் செய்வதாக அமையும்.
சனிபகவானின் நட்சத்திர சஞ்சாரப் பலன்கள்:
19.12.17 முதல் 18.1.19 வரையிலும், 12.8.19 முதல் 26.9.19 வரையிலும் கேதுவின் `மூலம்' நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால், உங்கள் ரசனைக்கேற்ற வீடு அமையும். புது முதலீடுகள் செய்வீர்கள். ஷேர் மூலம் பணம் வரும். வேலை கிடைக்கும். மகளுக்கு வரன் அமையும். உறவினர்களுடனான பிணக்குகள் நீங்கும். சுக்கிரனின் பூராடம் நட்சத்திரத்தில் 19.1.19 முதல் 11.8.19 வரையிலும், 27.9.19 முதல் 24.2.20 வரையிலும், 17.7.20 முதல் 20.11.20 வரையிலும் சனி செல்வதால், பெரிய பதவிக்குத் தேர்ந்தெடுக்கப் படுவீர்கள். சொத்துப் பிரச்னை தீரும். புகழ் பெற்றவர்கள் நண்பர்களாவார்கள்.
25.2.20 முதல் 16.7.20 வரையிலும், 21.11.20 முதல் 26.12.20 வரையிலும் சனிபகவான் சூரியனின் உத்திராடம் நட்சத்திரம் முதல் பாதத்தில் செல்வதால், செலவினங்கள் அதிகரிக்கும். மறைமுக எதிரிகளை இனம் கண்டறிவீர்கள்.
சனிபகவானின் வக்கிர சஞ்சாரம்:
29.4.18 முதல் 11.9.18 வரையிலும், 12.8.19 முதல் 13.9.19 வரையிலும் மூலம் நட்சத்திரத்தில் சனி வக்கிரமாவதால் பணவரவு திருப்திகரமாக இருக்கும். அதேநேரம் செலவுகளும் அதிகரிக்கும். சனிபகவான் 10.5.19 முதல் 11.8.19 வரையிலும், 27.7.19 முதல் 13.9.19 வரையிலும், 17.7.20 முதல் 16.9.20 வரையிலும் பூராடம் நட்சத்திரத்தில் வக்கிரம் ஆவதால், யாரையும் நம்பி பெரிய காரியங்களில் இறங்கி விடாதீர்கள். 2.5.20 முதல் 16.7.20 வரை உத்திராடம் நட்சத்திரத்தில் சனி வக்கிரமாகி செல்வதால், விலையுயர்ந்த ஆபரணங்கள், ஆடியோ, வீடியோ சாதனங்கள் வாங்குவீர்கள்.
பரிகாரம்:திருச்சி மாவட்டம் லால்குடி இடையாற்று மங்கலம் எனும் ஊரில் அருள்பாலிக்கும் ஸ்ரீலட்சுமி சமேத ஸ்ரீலட்சுமி நாராயணரை, சனிக்கிழமைகளில் சென்று வணங்கி வழிபட்டு வாருங்கள். காரியத் தடைகள் யாவும் நீங்கும்; நினைத்தது நிறைவேறும்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58651
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 11892

Back to top Go down

சனிப்பெயர்ச்சி பலன்கள் 2017 Empty Re: சனிப்பெயர்ச்சி பலன்கள் 2017

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை