ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
முத்தான பத்தாவது வருடத்தில் அடியெடுத்து வைக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வாழ்த்துகள்
 SK

10 நாட்களுக்குள் மூன்று இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி?- மகிழ்ச்சியில் ரசிகர்கள்
 ayyasamy ram

உலகளவில் மிகவும் பிரபலமான உணவு வகைகளின் சமையல் குறிப்புகள் ! ஹம்முஸ் !
 SK

கும்பகோணம் கோயிகள் 62.
 ayyasamy ram

வாழ்க்கையின் சாரம்
 ayyasamy ram

தில்குஷ் கேக்!
 T.N.Balasubramanian

தண்ணீர் பருகுவதால் உடலில் உள்ள பல பிரச்சினைகள் தீர்க்கிறது
 ayyasamy ram

தண்ணீர் பருகுவதால் உடலில் உள்ள பல பிரச்சினைகள் தீர்க்கிறது
 ayyasamy ram

விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸின் பிறந்த தினம் – செப்டம்பர் 19
 ayyasamy ram

உணவுகளின் போட்டோகள் ! :) - வெஜிடேபிள் ஊத்தப்பம் !
 krishnaamma

அதிக காலடிபடாத மலைவாசஸ்தலம்... நெல்லியம்பதிக்கு போயிருக்கீங்களா?
 krishnaamma

1330 திருக்குறளும் ஆடியோ வடிவில் உரையுடன் தரவிறக்க
 krishnaamma

புதிய தலைமை நடத்துனர்
 krishnaamma

பட்சண டிப்ஸ்..
 krishnaamma

ஹெர்பல் பூரி!
 krishnaamma

தாளிப்பு என்றால் என்ன? ஏன் ?
 krishnaamma

ஊறவைத்து தோலை உரி…! – வீட்டுக் குறிப்புகள்
 krishnaamma

பத்திரங்கள் பதிவு செய்ய சாட்சிகள் தேவையில்லை, ஆதார் எண் இருந்தால் போதும்!
 krishnaamma

சிந்திக்க!
 krishnaamma

39,000 பதிவுகளைக் கடந்துள்ள திரு அய்யாசாமி ராம் அவர்களுக்கு வாழ்த்துகள்
 krishnaamma

தற்போதைய செய்திகள் - தொடர் பதிவு
 ayyasamy ram

ஏளனச் சிரிப்பு – கவிதை
 T.N.Balasubramanian

செல்வாக்கு - ஒரு பக்க கதை
 ayyasamy ram

பொன்மொழிகள் - ஷீரடி பாபா
 ayyasamy ram

நாட்டின் முதல் பெண் ஐ.ஏ.எஸ்., அதிகாரி மரணம்
 ayyasamy ram

இந்திய - பாக்., எல்லையில் 'செல்பி டவர்'
 ayyasamy ram

தோழன் [Thozhan]
 drkavint

*ATM கார்டு மோசடிகளுக்கு முற்றுப் புள்ளி வைத்தது கனரா வங்கி*
 krishnaamma

பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்!
 krishnaamma

பெண்கள் ஆண் நண்பரை வாடகைக்கு எடுக்கும் புதிய செயலி அறிமுகம்
 krishnaamma

2018-ம் ஆண்டுக்கான குருப்பெயர்ச்சி எப்போது?
 சிவா

85015 பதிவுகள் கடந்த நம் தல சிவா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
 krishnaamma

உடையார் - தெளிவான மின்நூல் | Udaiyar Pdf
 பிரபாகரன் ஒற்றன்

வாழ்வியல் சிந்தனைகள் சில
 சிவனாசான்

ஊழலின் தந்தையே தி.மு.க-தான்
 சிவனாசான்

வாரத்துல ஒருநாள்தான் மனைவிக்கு பயப்படுவேன்”
 சிவனாசான்

கல்விமானுக்கு எழுந்த சந்தேகம்! -நீதிக்கதை
 SK

ஸ்பரிசம் - சிறுகதை
 ஜாஹீதாபானு

திருக்குறளின் இலக்கண நெறி அறிவோம்
 T.N.Balasubramanian

ஆரோவில்லில் மூங்கில் தினம்
 ayyasamy ram

மனதை பலப்படுத்தும் வரிகள் - M.S. உதயமூர்த்தி
 பழ.முத்துராமலிங்கம்

மருந்து சீட்டை டாக்டர்கள் கையால் எழுத கூடாது'
 பழ.முத்துராமலிங்கம்

தலைக்கு மேல் தனம் வந்தாலும் தலகாணியின் மேல் உட்காராதே. - பழமொழி விளக்கம்
 T.N.Balasubramanian

ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு விராட் கோலி, மீராபாய் சானு பெயர்கள் பரிந்துரை!
 ayyasamy ram

இன்றைய மாணவர்கள்
 ayyasamy ram

வாட்ஸ் அப் -ல் ரசித்தவை - பல்சுவை
 ayyasamy ram

இந்த வார சினிமா செய்திகள்
 ayyasamy ram

இந்த வார கருத்து சித்திரம்
 சிவனாசான்

பொன்மொழிகள் – வேதாத்ரி மகரிஷி
 சிவனாசான்

வானிலை அறிக்கை - தொடர் பதிவு
 சிவனாசான்

எச்.ராஜா விவகாரத்தில் தாமாக முன்வந்து வழக்கு ஏன்? - ஐகோர்ட் நீதிபதிகள் விளக்கம்
 சிவனாசான்

மாட்டு வண்டி ஊர்வலம்: புதுமண ஜோடி அசத்தல்
 சிவனாசான்

உவரி கடலில் தத்தளித்த சிறுவர்கள்! - சீருடையுடன் களமிறங்கிக் காப்பாற்றிய காவலர்
 ayyasamy ram

புரட்டாசியில் ஏன் அசைவ உணவுகளைத் தவிர்க்கிறோம்?காரணம் தெரியாதவர்களுக்கு மட்டும்!
 சிவனாசான்

தமிழக அரசு ஊழியர்களுக்வு - முதல்-அமைச்சர் பழனிசாமி அறிவிப்புகு 2 சதவீத அகவிலைப்படி உயர்
 சிவனாசான்

விஜயா, தேனா வங்கி& பாங்க் ஆப் பரோடா--இணைப்பு
 T.N.Balasubramanian

சில தமிழ் புத்தகங்கள்
 சிவா

கனவில் விலங்குகள் வந்தால் என்ன பலன்?
 SK

சிசிடிவி பொருத்துவதை வலியுறுத்தும் விழிப்புணர்வுக் குறும்படத்தில் நடித்துள்ள விக்ரம்
 ayyasamy ram

பிரபல குணசித்திர நடிகர் கேப்டன் ராஜு திடீர் மரணம்
 ayyasamy ram

நாவல்கள் | தொடர்கள்

Admins Online

சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க

Page 6 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Go down

best சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க

Post by heezulia on Tue Dec 19, 2017 12:54 am

First topic message reminder :

18 .12 .2017

இது ஒரு புதிய முயற்சி.

ஒரு படத்திலுள்ள வசனங்களை அப்படியே தர்றேன். என்ன படம், இந்த வசனங்கள்ல நடிச்சிருப்பவங்க யார் யார்னு உங்களுக்குத் தெரியும்னு எனக்குத் தெரியும். சொல்லுங்களேன். கண்டிப்பா கண்டு புடிச்சிருவீங்க. ஏன்னா ஈஸியானதாதானே குடுத்திருக்கேன்.

ஒரு அரண்மனை. அரசி சபைக்குள் நுழைகிறார்.


காவல்காரன் : நாட்டின் பேரரசி, செல்வபுரத்தின் பெண்ணரசி, மங்கையர் உலகுக்கு மாபெரும் தலைவியாய் விளங்க வந்த மங்கையர்க்கரசி, தக்க சமயத்தில் மக்களைக் காக்க வந்த மாதரசி, திருவின் கடாட்சத்தால், தெய்வத்தின் கருணையால் நம் நாட்டிற்குக் கிடைத்த பொன்னரசி, மாட்சிமை பொருந்திய செல்வபுரத்தின் மஹாராணி, ராஜமஹோன்னத, ராஜகோலாஹல, ராஜகம்பீர, ஸ்ரீ விஜயஜெய செல்வாம்பிகை நாச்சியார், வாழ்க.

அரசி வந்து, எல்லோரையும் அமரச் சொல்லி, அவரும் அமர்கிறார். சபையில் இருந்தவர்கள் அமர்கின்றனர்.

அரசி [சபையைப் பார்த்து] : ப்ரதம தளபதி பட்டமளிப்பு விழாவிற்கு விஜயம் செய்துள்ள ராஜ ப்ரமுகர்கள் அனைவரையும், அன்போடு வரவேற்கிறேன். என் அழைப்பிற்கிணங்கி, அனைவரும் வருகை தந்தமைக்கு, நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். தன்னைச் துச்சமென மதித்து என்னைக் காப்பாற்றிய வீரமல்லரின் வீரத்தைப் பற்றி, நான் விளக்கம் சொல்லத் தேவையில்லை. நடந்த சம்பவம் நாடறிந்தது. அப்படிப்பட்ட பலசாலியின், அரசியின் உயிரையே காத்த மாபெரும் வீரரே, இந்தச் செல்வபுரத்தின் ப்ரதம தளபதியாக நியமிக்க முடிவு கட்டி, உங்கள் முன் பதவிப் ப்ரமாணம் செய்து வைக்கிறேன்.

அரசி [தளபதியைப் பார்த்து]: வீரமல்லரே, நாட்டுக்கும், சட்டத்துக்கும் கட்டுப்பட்டு, பெற்ற தாய்போல் பிறந்த நாட்டைப் பாதுகாக்க வேண்டியது உங்கள் கடமை என்று கட்டளை இடுகிறேன். [தளபதியை நோக்கிக் கையை நீட்டி] இன்று முதல், உம்மை இந்த நாட்டிற்குப் ப்ரதம தளபதியாக நியமிக்கிறேன்.

அரசி ஒரு காவலாளியை நோக்க, அந்தக் காவலாளி வாள் இருந்த ஒரு தட்டை அரசியின் அருகில் கொண்டு வந்து நீட்டுகிறான். அரசி சிம்மாசனத்திலிருந்து இறங்கி வந்து, தட்டிலிருந்த அந்த வாளை எடுத்து, பிரதம தளபதியின் கையில் கொடுக்கிறார். தளபதியும் அந்த வாளைக் கையில் வாங்கிப் பணிவுடன் அரசியை வணங்குகிறார். அரசி சிம்மாசனத்தில் அமர்கிறார்.

ப்ரதம தளபதி [உறையிலிருந்து வாளை உருவி] : பேரரசியே, பிறந்த நாட்டின் ஒரு பிடி மண்ணைக் கூட மாற்றான் கொண்டு செல்ல முடியாத அளவுக்கு, நம் நாட்டைக் காப்பேன். எல்லைகளைக் காப்பேன். பகைவரால் தொல்லை ஏதேனும் வந்தால், அதை வேரோடு முறியடித்து விடுகிறேன். நமது செல்வபுரத்தை எனது உடலில் கடை.... சி சொட்டு ரத்தம் உள்ளவரை பாதுகாக்கிறேன் என்று உறுதி கூறி, இந்தப் ப்ரதம தளபதி பதவியை ஏற்றுக் கொள்கிறேன். இது என் தாய்மீதாணை. தாய்நாட்டின் மீதாணை.

என்று கூறி, வாளை உரையிலிருந்து உருவி மேலுயர்த்தி

"என் வீரத்தின் மீதாணை"

இவ்வாறு சொல்லி, வாளை முத்தமிட்டு விட்டு, உறையில் வைக்கிறார் ப்ரதம தளபதி.

தளபதி : பேரரசியே, ப்ரதம தளபதிக்குப் பக்கத் துணையாக இருந்து, படை நடத்தி, நாங்களும் நாட்டைப் பாதுகாப்போம் என்று உறுதி கூறுகிறோம்.

ப்ரதம தளபதியும், தளபதியும் தத்தம் இருக்கையில் அமர்கின்றனர்.

அரசி : வாழ்க வீரம். வளர்க உங்களது ஆற்றல். பெருகட்டும் படைபலம்.

அந்தச் சமயத்தில் ஒரு காவலாளி அரசிமுன் வந்து வணங்குகிறான்.

காவலாளி : அரசியே, தங்கள் உத்தரவுப்படி, புலவரை அழைத்து வந்திருக்கிறோம்.

அரசி : வரச்சொல் சபைக்கு.

காவலாளி : உத்தரவு.

ப்ரதம தளபதி [சிறிது யோசித்து விட்டு அரசியைப் பார்த்து] : யாரந்தப் புலவன்?

அரசி [அலட்சியமாக] : வருவார் பாரும்.

சபைக்கு அந்தப் புலவர் கர்வத்துடன் வீரனடை நடந்து வருகிறார். சபையிலுள்ளவர்கள் எல்லோரும் அவரையே பார்க்கின்றனர். புலவர் அரசி முன் வந்து.

புலவர் : வாழ்க நாடு. உயர்க அரசு, ஓங்குக புலமை.

அரசி [புன்னகையுடன்] : வருக புலவரே. வருக [என்று வரவேற்று] திடீரென்று நான் அழைத்தது, உமக்கு வியப்பைத் தந்ததோ?

புலவர் [இல்லையென்று தலையாட்டி] : வேண்டா வெறுப்பாக இருந்தது.

அரசி : ஏனப்படி?

புலவர் : காரணம் புரியவில்லை

அரசி : புரியச் சொல்கிறேன். உமது புலமையின் திறமையைப் பரிசோதிக்கவே உம்மை இங்கே அழைத்தேன்.
புலவர் [சிரித்து] : ஹா ஹா .... எனது புலமையை சோதிக்கும் அளவுக்குப் புலமையில் தேர்ச்சி பெற்ற பாவலன் இங்கு யாரோ?

புலவர் சுற்றுமுற்றும் பார்க்கிறார் கர்வமாக.

அரசி : சகலரும் இங்கு சகல கலைகளும் பயின்றவர்கள்.

புலவர் : [கிண்டலாக] ஆ... மகிழ்ச்சி. வினாக்களைக் கேட்டால் விடை சொல்லக் காத்திருக்கிறேன்.

அரசி : தளபதியாரே [ என்று ப்ரதம தளபதியைப் பார்க்கிறார்]

ப்ரதம தளபதி : [புலவரைப் பார்த்து] உமது ஊர்?

புலவர் : இதே ஊர்.

ப்ரதம தளபதி : பெயர்?

புலவர் : [நடந்துகொண்டே பதிலளிக்கிறார்] வித்யாபதி.

ப்ரதம தளபதி : தாய் தந்தையர்?

புலவர் : தாய் இல்லை, தந்தை உண்டு

ப்ரதம தளபதி : உற்றார் உறவினர்?

புலவர் : இல்லை

ப்ரதம தளபதி : சகோதரர்?

புலவர் : அனாதை

ப்ரதம தளபதி : உமக்குத் தொழில்?

புலவர் : எமக்குத் தொழில் கவிதை.

ப்ரதம தளபதி : அடுத்து?

புலவர் : ஆண்டவன் தொண்டு

ப்ரதம தளபதி : இதற்கு முன்?

புலவர் : பிறப்பால் ஊமை.

ப்ரதம தளபதி : பேச்சு வந்தது?

புலவர் : கலைவாணியின் அருளால்.

ப்ரதம தளபதி : [அலட்சியமாக] ஹே ஹே [அரசியைப் பார்த்து] நம்பத் தகாதது.

புலவர் : [அவரும் அலட்சியமாக] ஹே ஹே ... கோழை வீரனாகி, தளபதியாக வீற்றிக்கும்போது. ஊமை புலவனாகிப் பேசுவது நம்ப முடியவில்லையோ?

ப்ரதம தளபதி : ம்ம்ம்ம்ம்ம், அடக்கமாகப் பேசும்.

புலவர் : [கையை அமர்த்தி] அமைதியாகக் கேளும்.

அரசி : வித்தையிலே மெத்தப் படித்து, வினாக்களுக்கு அடுக்கடுக்காக விடை பகரும் புலவர் வித்யாபதி,

அரசி இதைக் கூறிக் கொண்டிருக்கும்போதே புலவர் அரசியின் அருகில் சென்று நிற்கிறார்.

புலவர் : அரசி

அரசி : ஆட்சிக்கிலக்கணம்?

புலவர் : ஆணவமற்ற அரசு.

அரசி : புலவனின் உரிமை?

புலவர் : சுதந்திரப் பறவை.

அரசி : இதயத்தை மகிழ்விப்பது?

புலவர் : குழந்தையின் மழலை

அரசி : வேதனை தருவது?

புலவர் : நண்பனின் பிரிவு.

அரசி : நட்புக்குயர்வு?

புலவர் : இடுக்கண் களைவது.

அரசி : எண்ணக்கூடாதது ?

புலவர் : செல்வத்தின் செருக்கு [அரசியைச் சுட்டிக்காட்டுகிறார்]

அரசி : பொருளில்லாதவர்க்கு?

புலவர் : இவ்வுலகமட்டும் இல்லை.

அரசி : அருளில்லாதவர்க்கு?

புலவர் : எவ்வுலகமுமில்லை.

அரசி : எங்கும் வேண்டுவது?

புலவர் : ஒழுக்கத்தின் உயர்வு.

அரசி : உயர்வுக்கு வழி?

புலவர் : உண்மையும், சத்தியமும்.

ப்ரதம தளபதி : அழியாது நிற்பது?

புலவர் : கவிஞனின் காவியம்

அரசி : அழிந்து விடுவது?

புலவர் : நிலையற்ற செல்வம்

ப்ரதம தளபதி : வீரருக்கு அழகு?

புலவர் : பேச்சைக் குறைப்பது.

ப்ரதம தளபதி : புலவனுக்கு முடிவு?

புலவர் : பொன்னேட்டில் இருப்பது.

அரசி : புவியாள்பவர் முடிவு?

புலவர் : முடிசார்ந்த மன்னரும் முடிவில் பிடி சாம்பலாவர்.

ப்ரதம தளபதி : சகிக்க முடியாதது?

புலவர் : பச்சைக் குழந்தையின் அழுகை
தளபதி : தாள முடியாதது?

புலவர் : பத்தினிப் பெண்ணின் சாபம்

தளபதி : கேட்கத் தகாதது ?

புலவர் : [தளபதியின் முகத்தின் நேரே கையை நீட்டி] தகுதியற்ற கேள்வியும், அர்த்தமற்ற பதிலும்.

ப்ரதம தளபதி : பார்க்க முடியாதது?

புலவர் : அடக்கமில்லாமை

அரசி : அதற்குதாரணம் ?

புலவர் : [அரசியைச் சுட்டிக்காட்டி] உங்களது ஆட்சி.

ப்ரதம தளபதி : [கோபமா எந்திரிச்சு] வித்யாபதி

பிரதம தளபதியும், தளபதியும் கோபமாக எழுகிறார்.

அரசி இருவரையும் உட்காருமாறு சைகை காட்டுகிறார். இருவரும் அமர்கின்றனர்.

அரசி : வித்யாபதி, உமது புலமையின் திறமையைப பாராட்டுகிறேன். இன்றுமுதல், உம்மை எமது ஆஸ்தான புலவனாக நியமிக்க முடிவு கட்டியிருக்கிறேன்.

புலவர் : நீங்கள் முடிவு கட்டியிருக்கலாம். ஆனால் முழு மனதுடன் நான் ஏற்றுக்கொள்ள வேண்டாமா?

அரசி : ஏற்றுக்கொள்ள என்ன தயக்கம்?


புலவர் :   ஆண்டவன் சன்னிதானத்திற்கே எங்களை அர்ப்பணித்துக்கொண்ட பரம்பரை நாங்கள். தெய்வத்தொண்டே திருத்தொண்டாக நினைத்து, இறைவனுக்கடியவனாக இருக்கும் நான், இந்த அரசுக்கு அடிமையாக மாட்டேன்.

ப்ரதம தளபதி : [கோபமா கத்துகிறார்] ஆணவம் படைத்த புலவன் நீ. எப்போது எமது அரசியின் கட்டளையை மதிக்கத் தவறினாயோ, அப்போதே உனக்கு இங்கு ஆஸ்தான புலவனாக அமரும் யோக்யதை இல்லையென்று முடிவு கட்டிவிட்டோம். போகட்டும். அழைத்த மரியாதைக்காக, நாங்கள் அனைவரும் கேட்க, அரசியைப் பாராட்டி ஒரேயொரு கவி பாடிவிட்டு போ.

புலவர் : நரஸ்துதி......... பாடுவதில்லை.

அரசி : எப்படி?

புலவர் : இறைவனைப் பாடும் வாயால், இடையே தோன்றி மறையும் இந்த மனித ஜென்மங்களைப் பாடுவதில்லை.

ப்ரதம தளபதி : பாடாமல் உன்னை விடப்போவதில்லை.

புலவர் : இந்த பலாத்காரத்தைக் கண்டு நான் பயப்படப்போவதில்லை.

தளபதி : உன்னைப் பணிய வைக்கிறோமா இல்லையா பார்.

புலவர் : உங்களுக்குச் சரியான பாடம் கற்பிக்கிறேனா இல்லையா பாருங்கள்.

Heezulia மீண்டும் சந்திப்போம்
avatar
heezulia
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 587
மதிப்பீடுகள் : 193

View user profile

Back to top Go down


best Re: சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க

Post by heezulia on Mon Mar 05, 2018 1:55 pm

@heezulia wrote:03.03.2018
இது என்ன படம்னு யாருக்கும் தெரியலியா? சரி clue  கொடுக்கிறேன். மகளாக நடிச்சது KR விஜயா.  இப்ப தெரியுதா யோசிங்க!
Heezulia   மீண்டும் சந்திப்போம்
மேற்கோள் செய்த பதிவு: 1261179

05.03.2018

படம் : நாடகமே உலகம் 1979 
வசனம் பேசினவங்க : KR விஜயா, MN ராஜம் & மேஜர் சுந்தரராஜன் 
திரைக்கதை & வசனம் : ஆரூர்தாஸ் 
பாட்டுக்கள் : கண்ணதாசன் & வாலி 
ம்யூசிக் : V குமார் 
டைரக் ஷன் : கிருஷ்ணன் பஞ்சு  Heezulia மீண்டும் சந்திப்போம்
avatar
heezulia
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 587
மதிப்பீடுகள் : 193

View user profile

Back to top Go down

best Re: சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க

Post by SK on Tue Mar 06, 2018 1:40 pm

சூப்பருங்க சூப்பருங்க
avatar
SK
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 7485
மதிப்பீடுகள் : 1360

View user profile

Back to top Go down

best Re: சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க

Post by heezulia on Mon Mar 19, 2018 9:32 pm

19.03.2018

பேசியவங்க : மீனா & ராஜு

ஒரு ஆஃபிஸ். Phone பெல் அடிக்குது. தன் ஸீட்ல இருந்து எந்திரிச்சு, phone  அடிக்கிற இடத்துக்கு வந்து ஃபோனை எடுக்கிறான் ராஜு.


ராஜு : ஹலோ.......

அடுத்த முனையில் ஒரு பெண்.

மீனா : மீனா பேசுறேன்.

ராஜு : மீனாவா? வணக்கங்க.

மீனா : உங்ககிட்ட முக்கியமான விஷயம் பேசணும். ஆஃபிஸ் முடிஞ்சதும் கொஞ்சம் வீட்டுக்கு வர்றீங்களா? ஸ்ரமம் ஒண்ணுல்லியே.

ராஜு : ஸ்ரமமா? எனக்கா? ஹ்ஹ, அப்டி ஒண்ணுல்லீங்க. நிச்சயமா வர்றேன். கண்டிப்பா வர்றேங்க. அதவிட எனக்கென்ன வேல, அ? சரி, நன்றி.

ராஜு வர்றேன்னு சொல்லிட்ட சந்தோஷத்தில, படுக்கையில சந்தோ...........ஷமா புரள்றா. ராஜு தன் ஸீட்ல உக்காந்து யோசிக்கிறான். “ம்ம், எதுக்காக இருக்கும்?”

ராஜு உக்காந்திருந்தது ரோலிங் சேர். சேர்ல ஆடிட்டே யோசனை.

“ஒரு வேள வேலுவ பத்தி இருக்குமா? ப்ச்”

எந்திருச்சு போறான்.

அடுத்த ஸீன்.

மீனா வீட்ல, அலங்காரம் செஞ்சு, ட்ரெஸ்ஸ மாத்திட்டு, வெக்கப்பட்டு சிரிக்கிறா. ட்ரெஸ்ஸிங் டேபிள்லே இருந்து எந்திரிச்சு, மறுபடியும் படுக்கையில் விழுந்து தலவாணியை பிடிச்சு, அங்கயும் ஒரு வெக்கம்.

மீனா வீட்டு முன்னால கார் வந்து நிக்கிது. ராஜு இறங்கி வீட்டுக்குள்ள வர்றான். ஒரு ரூமுகுள்ள வர்றான். அங்க மீனா வீணை வாசிச்சிட்டிருக்கா. அவன் ரசிச்சிட்டு நிக்கிறான். வீணையிசை முடிஞ்சுது. கை தட்டுறான்.


ராஜு : சபாஷ் சபாஷ்

மீனா : [மூஞ்சி நிறைய சிரிப்போட, பல்லெல்லாம் வாயாக] வாங்க, முந்தியே வந்திட்டீங்களா?

வீணையை எடுத்து வச்சுட்டு, எந்திரிச்சு வர்றா.

பின்னே என்ன, வீணையை தூக்கிட்டா வருவா?

ராஜு : அந்த அதிர்ஷ்ட்டம் எனக்கு கெடக்கல.

மீனா : அப்டீன்னா?

ராஜு : உங்க விரல் அந்த வீணைல ஏத்தின நாதத்த, என்னால முழுஸ்ஸா கேட்டு ரசிக்க முடியல. அ....., நான் வந்ததுல.......... உங்க வாசிப்பு தட பட்ருக்கும்ன்னு நெனக்கிறேன்.

மீனா : இல்ல இல்ல, உங்க வருகைய வீணாக்க கூடாதுன்னு, நாந்தான் வீணையை நிறுத்திட்டேன். நிக்கிறீங்களே, வாங்க வாங்க, வாங்க. உக்காருங்க.

ராஜு : தாங்க்ஸ்.

chairல உக்கார்றான். மீனா உள்ள போயி, தன் அலங்காரத்தை ஒரு தடவை சரி செஞ்சுட்டு, ஏற்கனவே ட்ரேல எடுத்து வச்சிருந்த பலகாரங்களை கொண்டு வர்றா. ராஜு முன்னால அந்த ட்ரேயை வைக்கும்போது, முந்தானை நழுவி விழுது. அவன் தலை குனியிறான். அவள் முந்தானையை சரி செஞ்சுட்டு, “சாப்புடுங்க” ன்னு சொல்றா.

ராஜு : இவ்வளயுமா?

மீனா : அப்பா ஊருக்கு போனதுக்கப்றம், இந்தப் பக்கமே ஒங்கள காணமே.


ராஜு : ஆஃபிஸ்ல வேல நெறைய இருந்துது. அதனால வரமுடியல. அ, அத பத்தி நீங்க கவலபட வேண்டாம்.

மீனா : எத பத்தி?

ராஜு : அ...,டிஸ்மிஸ் செய்யப்பட்ட வேலு விஷயமா பேசத்தானே வரசொன்னீங்க?

மீனா : இல்லியே, அதுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? அது கம்பெனி விஷயமில்ல. அதிர்கட்டும், அப்பா ஊர்க்கு போம்போது, ஏதாவது சொந்த விஷயமா சொன்னாங்களா?

ராஜு : ஓஹோ, ஆமா, அ... ஒங்க சம்பந்தமா அப்பா சொல்லிட்டு போய்ருக்காரு.

அவள் வெக்கப்பட்டு : ஓ, சொல்லிட்டாங்களா.....? பாத்தீங்களா, இந்த விஷயம் நம்ள தவ்ற வேற யாருக்கும் தெரியக்கூடாதுன்னு என்கிட்டே சொல்லிட்டு, உங்ககிட்ட சொல்லிர்காரு. ஆமா, அதுக்கு நீங்க என்ன சொன்னீங்க?

ராஜு : நான் என்ன சொல்றது? மொதலாளி உத்ரவ தட்ட முடியுமா? ஆகட்டும்னு சொன்னேன்.

மீனா : தேதிய பத்தி எதாவது அப்பா சொன்னாங்களா?

ராஜு : சொன்னாங்க, கல்கத்தாவிலேருந்து பொறப்பட்றதுக்கு முந்தி, தேதிய தெரிவிக்றேன்னு சொன்னாங்க.

மீனா : ஒங்க ட்ரெஸ்ஸ பத்தி, நீங்க கவலபடவே..... கூடாது. எல்லாம் நாந்தான் செலக்ட் பண்ணுவேன்.

ராஜு : [ஆச்சரியம் & அதிர்ச்சி] ட்ரெஸ்ஸா, செலக் ஷனா? என்ன சொல்றீங்க?

மீனா கொஞ்சலா : வெளையாட்டு போதும்.

ராஜு : உண்மயாத்தான் சொல்றேன். நீங்க பேஸ்றது எனக்கு வெளங்கல. தயவுசெய்து கொஞ்சம் தெளிவா சொல்லுங்க.

மீனா : சர்தாம்போங்க. நம்ம கல்யாண விஷயத்த பத்தி, அப்பா ஏதாவது ஒங்ககிட்ட சொன்னாங்களான்னுதான் கேட்டேன். நீங்ககூட ஆமான்னு சொன்னீங்களே.

அவன் எந்திரிக்கிறான்.

ராஜு : இல்லியே, ஒங்கள பத்திரமா பாத்துக்கும்படி மொதலாளி சொல்லிட்டு போனாரு. அதத்தான் சொன்னேன். நீங்கதான் தவறா புரிஞ்சிரிக்கீங்க.

மீனா : என்ன, தவறா? நான் உங்கள கல்யாணம் செய்துக்க நெனச்சுது தவறா?

ராஜு : மிகப்பெரிய தவறு. நான் ஏற்கனவே காதலிச்சவன், காதலிக்கப்பட்டவன். சந்தர்ப்ப சூழ்நிலைக்கேத்த மாதிரி, காதல மாத்திக்க முடியாது மீனா. மாத்திக்க முடியாது.

மீனா : அப்படி சொல்லாதீங்க. ஒங்கள வச்சு, நான் கட்டிருக்கிற காதல் கோட்டையை நீங்களே இடிச்சிறாதீங்க.

அவன் ரூமை விட்டு வெளிய வர்றான்.

மீனா : ராஜு

வெளிய வந்துட்டான். அவள், அவன் பின்னாலேயே ஓடி வர்றா.

மீனா : ராஜு, ராஜு. ராஜு.

ஓடி ஓடி வந்து ராஜுவுக்கு முன்னால வந்து நிக்கிறா.

மீனா : ராஜு, உங்களுக்காக நான் எதயும் செய்ய தயாரா இருக்கேன். நீங்கதான் எனக்கு பெருசு.

ராஜு : எனக்கு என் காதல் பெருசு. இத எதுக்காகவும், யாருக்காகவும் அத விட்டு கொடுக்க முடியாது.

அவன் மாடியிலிருந்து கீழ எறங்கி வரான். மீனா அழுதுட்டே நிக்கிறா. அப்புறமா அவன் பின்னாலேயே “ராஜு, ராஜு” ன்னு ஓடி வந்து, அவன் முன்னால வந்து நிக்கிறா.


மீனா : ராஜு, ஏன்நெலம தெரியாம என்னென்னமோ பேசுறீங்களே. நீங்க இல்லேன்னா எனக்கு வாழ்வே கெடயாது. நீங்க வெறுத்துட்டா, நான் சாஹ்றத தவிர வேற வழியே இல்ல ராஜு, வழியே இல்ல.

ராஜு [அமைதியாக] : மீனா, உங்க நெலமக்காக நான் ரோம்.......ப அனுதாபபட்றேன். மத்தவங்க விருப்பத்த தெரிஞ்சிக்காம தானே ஒரு முடிவுக்கு வர்றது, அதுக்காக போராட்றது, பிறர பலவந்தப்படுத்றது, பிறகு பலியாஹ்றது. ச்சு, ச்சு, ச்சு, ச்சு, இது எப்படி ஞாயமா இருக்கு முடியும்?

ராஜு இப்டி சொல்லிட்டு வீட்டுக்கு வெளியே போறான். மீனா “ராஜு, ராஜு" ன்னு சொல்லிட்டே அவளும் பின்னால போறா. ராஜு வாசல் வரைக்கும் போயி, திரும்பி அவளை பார்க்கிறான்.

ராஜு : மீனா, உங்கள வேண்டி கேட்டுக்கிறேன். தயவுசெய்..........து என்ன மறந்துர்ங்க.

மீனா சிலையாய் நிற்க, ராஜு போய்ட்டான்.

இப்ப சொல்லுங்க. மீனாவும், ராஜுவும் யாரு யாரு? எந்த படத்தில இந்த வசனங்கள்? பதில் வருமா, வராதா? 

Heezulia
avatar
heezulia
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 587
மதிப்பீடுகள் : 193

View user profile

Back to top Go down

best Re: சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க

Post by மூர்த்தி on Wed Mar 21, 2018 12:37 am

வழமை போல் சூப்பரோ சூப்பர். ஆனால் என்ன, படங்களே பார்க்க முடியவில்லை இதில் பழைய படங்கள் பற்றிக் கேட்டால்? துப்புக் கொடுக்கலாமே.

பதில் வரும் ஆனா வராது.
avatar
மூர்த்தி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1046
மதிப்பீடுகள் : 506

View user profile

Back to top Go down

best Re: சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க

Post by SK on Wed Mar 21, 2018 10:05 am

இந்த காட்சி சமீபத்தில் சன் லைப் சானலில் பார்த்த நியாபகம் அனால் நடிகர்கள் படம் நினைவில் இல்லை
avatar
SK
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 7485
மதிப்பீடுகள் : 1360

View user profile

Back to top Go down

best Re: சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க

Post by heezulia on Wed Mar 21, 2018 11:19 am

21.03.2018

என்ன மூர்த்தி இது. இப்டி தப்பு தப்பா............. எழுதாதீங்க. அது அப்டி இல்ல. 

வரும்..................... ஆனா வராது. இப்..................டி எழுதணும்.

வழமையான உங்க சூப்பரோ சூப்பருக்கு வழமையான என் நன்றியோ நன்றி.

துப்புதானே. MGR படம். 

நான் மட்டும் என்ன எல்லா................... படங்களையுமா பார்க்கிறேன். ஒரு 10% தான் பார்த்திருப்பேன். 
by SK on Wed Mar 21, 2018
இந்த காட்சி சமீபத்தில் சன் லைப் சானலில் பார்த்த நியாபகம் அனால் நடிகர்கள் படம் நினைவில் இல்ல
ஓஹோ அப்டியா. இதைத்தான் என் மத்த friends சொன்னாங்க. ஆனா காட்சியில்ல. படத்தையே போட்டிருக்காங்க. அதனால  பதில் சொல்லிட்டாங்க. 

Heezulia
avatar
heezulia
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 587
மதிப்பீடுகள் : 193

View user profile

Back to top Go down

best Re: சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க

Post by SK on Wed Mar 21, 2018 11:50 am

படம் :- தொழிலாளி
ராஜு :- MGR
மீனா:- K R விஜய
தயாரிப்பு :- தேவர் பிலிம்ஸ்
ரிலீஸ் தேதி :- 25 செப்டம்பர் 1964

நியாபகம் வந்துருச்சி ஆசையில் ஓடி வந்தேன்
avatar
SK
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 7485
மதிப்பீடுகள் : 1360

View user profile

Back to top Go down

best Re: சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க

Post by மூர்த்தி on Wed Mar 21, 2018 12:00 pm

நானும் கண்டு பிடிச்சிட்டேன். வேலு -நம்பியார்.ஆனா லேட்டா கண்டு பிடித்தேன். SK முந்திட்டார்.அடுத்த தடவை முயற்சி பண்ணலாம்.
avatar
மூர்த்தி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1046
மதிப்பீடுகள் : 506

View user profile

Back to top Go down

best Re: சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க

Post by heezulia on Wed Mar 21, 2018 12:23 pm

21.03.2018

செந்தில், மூர்த்தி ரெண்டு பேரும் கரீ.......................ட்டா சொல்லிட்டீங்க. 

மூர்த்தி லேட்டா சொன்னாலும், கரெக்கேட்டா சொல்லியிருக்கீங்கல்ல. அதுதானே  முக்கியம். 

ரெண்டு பேருக்குமே வா............ழ்............த்..............து............க்............க.............ள்..........

Heezulia
avatar
heezulia
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 587
மதிப்பீடுகள் : 193

View user profile

Back to top Go down

best Re: சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க

Post by SK on Thu Mar 22, 2018 4:57 pm

@heezulia wrote:21.03.2018

செந்தில், மூர்த்தி ரெண்டு பேரும் கரீ.......................ட்டா சொல்லிட்டீங்க. 

மூர்த்தி லேட்டா சொன்னாலும், கரெக்கேட்டா சொல்லியிருக்கீங்கல்ல. அதுதானே  முக்கியம். 

ரெண்டு பேருக்குமே வா............ழ்............த்..............து............க்............க.............ள்..........

Heezulia
மேற்கோள் செய்த பதிவு: 1263270

வா............ழ்............த்..............து............க்............க.............ள்

இப்படி ஆகா யார் கரணம்
avatar
SK
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 7485
மதிப்பீடுகள் : 1360

View user profile

Back to top Go down

best Re: சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க

Post by heezulia on Thu Mar 22, 2018 8:31 pm

22.03.2018 
@SK wrote: இப்படி ஆகா யார் கரணம்
மேற்கோள் செய்த பதிவு: 1263461

செந்தில், ஏன் இப்டி கரணம்லாம் அடிக்கிறீங்க?

Heezulia
avatar
heezulia
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 587
மதிப்பீடுகள் : 193

View user profile

Back to top Go down

best Re: சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க

Post by ரா.ரமேஷ்குமார் on Thu Mar 22, 2018 9:12 pm

தமிழ்ராக்கர்ஸ்-ல் இந்த படங்கள் எல்லாம் வந்தால் பார்த்து பதில் சொல்ல முயற்சிக்கிறேன்ங்க.. ரிலாக்ஸ்
தொடர்ந்து பதிவிடுங்கள் ... நன்றி
avatar
ரா.ரமேஷ்குமார்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4276
மதிப்பீடுகள் : 948

View user profile

Back to top Go down

best Re: சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க

Post by heezulia on Fri Mar 30, 2018 1:46 pm

30.03.2018

இதுல பேசியிருக்கிறவங்க : மேனேஜரம்மா, மேனேஜர், சுதா, சேகர், சேகரின் அம்மா.

ஒரு ஆபிஸ். ஒரு மேனேஜர்,  பக்கத்தில ஓர் க்ளார்க். ரெண்டு பேருமே பொம்பளைங்க. மேஜை மேல பேர் பலகை . ஆனா அதுல  மேனேஜரம்மா பேர் இல்ல. "பெண் என்பவள் மனித ஜாதியின் மிகச் சிறப்பான பாதி - மகாத்மா காந்தி" னு எழுதப்பட்டிருக்கு. 

ரூமை திறந்துட்டு ஒரு அம்மா தயங்கி தயங்கி உள்ள வர்றாங்க.  அந்தம்மாவ  பாத்து, மேனேஜரம்மா எந்திரிச்சு நிக்கிறாங்க. இவங்க நிக்கிறதை பார்த்து கிளார்க் திரும்பி பார்க்கிறா. சின்னூண்டு அதிர்ச்சி. அவளும் எந்திரிக்கிறா. உள்ளே வந்த அம்மா மேஜை பக்கத்தில வந்து நிக்கிறாங்க. மேனேஜரம்மா உக்காந்ததும், வந்த அம்மாவும் உக்கார்றாங்க. கிளார்க்கும் உக்கார்றா.  மேனேஜரம்மா, வந்த அம்மாவை பார்த்து, "எனக்கு லெட்டர்  எழுதுனது..............." 


மேனேஜரம்மா இப்டி கேக்கும்போது, கிளார்க், வந்த அம்மாவையே.............. கண்கொட்டாம பார்க்கிறா. வந்த அம்மா திக்கி தெணறி, தயங்கி, "நாந்தான்" ன்னு சொல்றா. இப்டி சொன்னதும், மேனேஜரம்மாவும், க்ளார்க்கும் திகைக்கிறாங்க. ஒருத்தரை ஒருத்தர் பாத்துக்குறாங்க.

மேனேஜரம்மா : லெட்டர்ல, உங்கள யாரோ கொடுமபடுத்றதா எழுதியிருந்தீங்களே, யாரு ஒங்கள கொடுமப்படுத்றாங்க?

அந்த அம்மா, க்ளார்க்க ஓரக்கண்ணால பாக்குறாங்க. அப்புறம் தலைய குனிஞ்சுட்டு, "மருமக." ன்னு மெதுவா சொல்றாங்க. கிளார்க் அந்தம்மாவ மொறக்கிறா.

மேனேஜரம்மா : சுதா, ஒனக்கு நான் பர்மிஷன் தர்றேன். ஓமாமியார கூட்டிகிட்டு வீட்டுக்கு போற. அவங்க கொறைகள என்னன்னு கேக்ற. ஒன்ன நீ மாத்திக்கிற, இல்ல, ஒன்ன நா மாத்தவேண்டியதிருக்கும்.

சுதா எந்திரிக்கிறா.

அடுத்த ஸீன்.

இங்க வேற ஒரு ஆஃபிஸ்.  ஒரு ஆம்பள மேனேஜர். அவருக்கு எதுத்தாப்ல  ஒரு பெரியவர். 

பெரியவர் : மனுஷன்னா பகல்ல முழிச்சுகிட்டு இருக்கணும். ராத்ரில தூங்கணும். நீங்க....... ராத்ரீல முழுச்சுட்டு இருக்கணும்ங்றதுக்காக, பகல்ல தூங்றீங்க. வீட்ல நடக்ற எதையுமே............. கண்டுக்றதுல்ல. 

மேனேஜர் கத்துறார் "What do you mean?"


பெரியவர் அக்கம் பக்கம் பாத்துட்டு, "இப்போ....... நீங்க கத்தினா, நானும் கத்துவேன். நாலு பேர் காதுல விழும். நான் இந்த ஆஃபிஸ்ல  வேல  செய்யல அதனால எனக்கு அசிங்கம் கெடயாது. ஆனா நீங்க இந்த  ஆஃபிஸ்ல  வேல செய்றீங்க. ஒங்ளுக்குத்தான் அசிங்கம். நம்ம பேர சொல்ல வாரிச கொடுக்றவ பொண்டாட்டி. ஆனா நமக்கே......... பேர் வக்றவங்க அப்பா அம்மா. ரெண்டு பேருக்கும் நமக்கு வித்யாசம் தெரிஞ்சிர்க்கணுமில்லியா?” 

மேனேஜர் நாற்காலீல முன்னுக்கு நகர்ந்து வர்றார். 

பெரியவர் : மாதா, பிதா, குரு, தெய்வம். இதுதான பழமொழி. இதுல பொண்டாட்டீயே  வர்லியே.

மேனேஜர் எதையோ எழுதிட்டு இருந்தவர், தெகச்சு அவரை பார்க்கிறார். 

பெரியவர் தொடர்றார். "கட்டிலுக்கு வந்தவளுக்கு கொடுக்குற மரியாதைல பாதியயாவது, தொட்டில ஆட்டினவங்களுக்கு கொடுக்கணும் இல்லியா சார்?"


மேனேஜருக்கு  மறுபடியும் அதிர்ச்சி.

பெரியவர் : நான் சொல்றத அப்படியே வீட்ல போய் ஒங்க பொண்டாட்டிகிட்ட  பேசுவீங்களா?

அடுத்த ஸீன்

மேனேஜர் வீடு. சூட்கேஸுடன் கோவமா, வேகமா வீட்டுக்குள்ள நுழைறார். பெட்ரூம். மனைவி சுதா. கட்டில்ல குப்புற படுத்திருக்கா. மேனேஜர், மேஜை மேல ஸூட்கேஸை வைக்கிறார். ட்ரெஸ்ஸிங் டேபிள் முன்னால உக்காந்து, ட்டைய கழட்றான்.

சுதா கோவமா : இதை பாருங்க, இப்ப உடனடியா எனக்கு  ரெண்டுல ஒண்ணு தெரிஞ்சாகணும்.

மேனேஜர் திரும்பி பாக்காமலேயே,"ஆஃபீஸ்ல இருந்து திரும்பி வந்திருக்கிற புருஷன் முன்னாடி, மொதல்ல பொம்பளயா எழுந்து உக்காரு.”

சுதா எந்திரிக்கல. அதிர்ச்சியாக அப்படியா குப்புற படுத்திருக்கா.


புருஷன் : பொண்டாட்டியா காஃபி கொண்டுவா. அப்புறமா புருஷனா நான் என்ன செய்யணும்னு சொல்லு, [இப்பதான் மனைவி சுதாவை திரும்பி பார்க்கிறான்] செய்றேன். தர்ம ஞாயங்கள அலசி பாக்றேன். 

சுதா மெதுவ்வ்வ்வா புருஷனை திரும்பி பார்க்கிறா. அவன் அம்மா காபி எடுத்துட்டு வேகவேகமா அவன்ட்ட வர்றா. 


அம்மா : காபி இந்தாப்பா. 

மகன் காபியை வாங்கி , மேஜை மேல வைக்கிறான்.


மகன் : நீங்க என்ன இந்த வீட்ல சமயகாரியா? 

அம்மாவை பார்த்து கோவபட்றான். 


மகன் : ஒன்ன உக்கார வச்சு சோறு போட்ற அளவுக்கு வயசிருக்கு, மரியாத இருக்கு, பதவியும் இருக்கு. போய் அந்த ஹால்ல உக்காரும்மா. 

அம்மா பயத்தோடும், திகைப்போடும் மகனை பார்த்தபடி நிக்கிறா.


மகன் : என்னம்மா அப்டி பாக்றே? ஓம்புருஷன் ராப்பகலா கண்ணு முழிச்சு, ஒழச்சு, சோறு போட்டு, படிக்க வச்சு ஒரு நல்ல நெலமக்கி கொண்டு வந்த ஒம்பையன்,  தன் சொந்...................த சம்பாத்யத்ல வாங்கன சோஃபாமா அது. கண்ட கண்ட கழுதைங்கல்லாம் உக்காந்து தேய்க்குது. 

இதை கேட்டதும் சுதா சட்டுன்னு கோவத்தில எழுந்து உக்கார்றா.


மகன் அம்மாட்ட : நீ கொஞ்சம் உக்காந்து தேச்சா தப்புல்ல. 

சுதா பெட்ரூம்ல இருந்து ஹாலுக்கு வர்றா. அம்மா அங்க சோஃபால உக்காந்திருக்கா. மகன் டிரஸ்ஸ மாத்திட்டு லுங்கியை கட்டிட்டு வர்றான்.


சுதா : என்ன ஆச்சு உங்க்ளுக்கு இன்னிக்கி? 

இப்ப புருஷன் அவன் குரல்ல பேசல. அவன் ஆஃபிஸ்க்கு ஒரு பெரியவர் வந்து, “நான் சொல்றத அப்படியே வீட்ல போய் ஒங்க பொண்டாட்டிகிட்ட  பேசுவீங்களா?” ன்னு கேட்டாரே, அவர் குரல் dubbing.


புருஷன் : அ..........................., இத்ன் நாளா................., பொடவ கட்டிட்ருந்தேன். இன்னைலிருந்து, லுங்கி கட்றதா  முடிவு பண்ணிர்க்கேன்.

சுதா : What do you mean? 

இப்டீ சொல்லிட்டு மாமியார் உக்காந்திருந்த சோஃபாவுக்கு முன்னால இருந்த, single சோஃபால உக்காந்து, கால் மேல கால் போட்டு உக்கார்றா. 


புருஷன் சொடக்கு போட்டு எழுந்திரிமா" ன்னு சொல்றான். அவ எந்திரிக்கல. "எழுந்திர்ரி" புருஷன் கத்துறான்.  அவ மொறச்சுகிட்டே மெதுவா எந்திரிக்கிறா.

புருஷன் : ரெண்டு காபி கொண்டு வர்றியா? என்ன முழிக்கிற? காபி போட தெரியாதா? இல்ல.... கேஸ [gas] திறக்க தெரியாதா? இல்ல நெருப்பு குச்சிய வச்சு நெருப்பு பத்த வக்க தெரியாதா? இல்ல இந்த வீட்ல சமயகட்டு எங்க இருக்குன்னு தெரியாதா? 

சுதா சட்டுன்னு திரும்பி கோவத்ல ஹாலை ஒரு சுத்த சுத்தி வர்றா. " This is too much. You are going beyond your limit."


புருஷன் : தமிழ்ல பேசுமா. நீ என்ன வெள்ளைக்காரனுக்கா பொறந்த?

சுதா அவன கோவமா முறைக்கிறா.


புருஷன் : எழுதிர்ற  ஓம்பத்திரிகைல மாசாமாசம்.  பெத்த அப்பன பையன் நடுரோ...........ட்க்கு தொரத்தி விட்டான். பத்...........து மாசம் சொமந்து பெத்த தாய்க்கு பையன் சோறு போட்ல. கூட பொறந்த தங்கச்சிய அண்ணன் கவனிக்கல. இந்த ஆம்ப்ளைங்களே இப்டித்தான். ஒன்ன மாத்ரி ஒரு பொண்டாட்டி வாச்சா, நாங்கல்லாம் என்னம்மா பண்றது? பெண் என்பவள் மனித ஜாதியின் மிகச் சிறந்த பாதி. மகாத்மா காந்தி சொன்னத, நீங்களும் ஒங்க பத்திரிகையில் மொதல் பக்கத்தில போட்டிருக்கீங்க. அவர் சொல்வார்மா. ஏன்னா அவர் பொண்டாட்டி கஸ்தூரிபாய். எம்பொண்டாட்டி நீயாச்சே. மாதர் சங்க மீட்டிங்க்ல பேசிர்ற, பெண்கள் அவமானப்படுத்தப்படுகிறார்கள், பெண்கள் நசுக்கப்படுகிறார்கள், பெண்கள் கொடுமைப்படுத்தப்படுகிறார்கள்.

[அம்மாவ பார்த்து, அவள் தோள்ல கைய வச்சு]
 


எங்கம்மா மட்டும் பொம்ப்ள இல்லியா? 

[இதோடு பெரியவரின் dubbing குரல் கட்டாகுது. 

புருஷன் பேசுறான்]. தோ பார். இனிமே நீ பத்திரிகைல போயி எழுதி கிழிச்சதெல்லாம் போதும்.  சம்பாதிச்சு கொண்டு வந்து கொட்டுனது போதும். நாளை காலைலருந்து, இந்த வீட்டு பொண்ணா, எனக்கு பொண்டாட்டியா, எங்க அம்மாக்கு மருமகளா இருக்குற.


சுதா அவன் பக்கத்தில அவனது தெனாவட்டா. "இதுக்கு நான் சம்மதிக்கலேன்னா?" 

புருஷன் : ஒவ்வீடு பாத்துகிட்டு நீ போ. 

சுதா : எது எவ்வீடு?

புருஷன் : ஒங்கம்மா வீடு.

சுதா அலட்சியமா சிரிக்கிறா. “ஹஹ்ஹஹ்ஹஹ்ஹஹ்ஹ. நான் ஏன் எங்கம்மா வீட்டுக்கு போணும்? இந்த வீட்டுக்கு அட்வான்ஸ் நான் குடுத்ருக்கேன். வாடக நான் குடுத்ட்டு வர்றேன். நீங்க போட்ட சாப்பாட்டுக்கு, எத்தனையோ.............. நாளு இந்த ஒடம்ப ஒங்ளுக்கு தானம் பண்ணியாச்சு.” 

அம்மா சோஃபால இருந்து எந்திரிக்கிறா.

புருஷன் அதிர்ச்சியாக அவளை பாக்குறான். அவள் பக்கத்தில வர்றான்.
"இதுதான் ஓம்முடிவா?"


சுதா : முடிவில்ல, ஆரம்பம். அடங்கி போயி, அடங்கி போய்தான், எங்ள நீங்க அடிமைகளாக்கிட்டீங்க. என்னால என் சொந்தக்கால்ல நிக்க முடியும். 

அம்மா அவங்க ரெண்டு பேர் பக்கத்ல  வந்துட்டா. ரெண்டு பேரையும் மாறி மாறி பாக்குறா. 


புருஷன் : ஹும், என்னிக்கி நமக்கு பந்தக்கால் போட்டாங்களோ, அன்னிக்கே ஒனக்கு சொந்தக்கால் போயாச்சு.

சுதா : புல்ஷிட் ச்சாலஞ்? [Thumbsup காட்றா] 

அம்மா தெகச்சு, மகன் கையை பிடிக்கிறா. "சேகர்"

சேகர் : நீ சும்மா இரும்மா. [அம்மா கையை எடுத்து விட்றான்] ச்சாலஞ்ரி. 

அவனும் Thumbsup காட்றான். 

என்ன படம், யார் யார் பேசியிருக்காங்க?

Heezulia  மீண்டும் சந்திப்போம்
avatar
heezulia
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 587
மதிப்பீடுகள் : 193

View user profile

Back to top Go down

best Re: சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க

Post by SK on Fri Mar 30, 2018 5:19 pm

பெரியவர் : மாதா, பிதா, குரு, தெய்வம். இதுதான பழமொழி. இதுல பொண்டாட்டீயே வர்லியே.

இந்த வசனத்தை வைத்து பார்க்கும்போது விசு படம் என்று நினைக்கின்றேன் பெரியவர் விசு
avatar
SK
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 7485
மதிப்பீடுகள் : 1360

View user profile

Back to top Go down

best Re: சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க

Post by heezulia on Fri Mar 30, 2018 5:27 pm

30.03.2018 


கரீட்டு செந்தில். 


இதுக்கே பாதி மார்க் கொடுத்துறலாம்.  

வாழ்த்து.  

'க்கள்' முழுஸ்ஸா சொன்னதுக்கப்புறம். யோசிங்க யோசிங்க. மத்தவங்க என்ன பண்றீங்க, படிக்கலியா? 


Heezulia
avatar
heezulia
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 587
மதிப்பீடுகள் : 193

View user profile

Back to top Go down

best Re: சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 6 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum