ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
கும்பகோணம் கோயிகள் 62.
 ayyasamy ram

உலகளவில் மிகவும் பிரபலமான உணவு வகைகளின் சமையல் குறிப்புகள் ! ஹம்முஸ் !
 krishnaamma

வாழ்க்கையின் சாரம்
 ayyasamy ram

முத்தான பத்தாவது வருடத்தில் அடியெடுத்து வைக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வாழ்த்துகள்
 heezulia

தில்குஷ் கேக்!
 T.N.Balasubramanian

தண்ணீர் பருகுவதால் உடலில் உள்ள பல பிரச்சினைகள் தீர்க்கிறது
 ayyasamy ram

தண்ணீர் பருகுவதால் உடலில் உள்ள பல பிரச்சினைகள் தீர்க்கிறது
 ayyasamy ram

விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸின் பிறந்த தினம் – செப்டம்பர் 19
 ayyasamy ram

உணவுகளின் போட்டோகள் ! :) - வெஜிடேபிள் ஊத்தப்பம் !
 krishnaamma

அதிக காலடிபடாத மலைவாசஸ்தலம்... நெல்லியம்பதிக்கு போயிருக்கீங்களா?
 krishnaamma

1330 திருக்குறளும் ஆடியோ வடிவில் உரையுடன் தரவிறக்க
 krishnaamma

புதிய தலைமை நடத்துனர்
 krishnaamma

பட்சண டிப்ஸ்..
 krishnaamma

ஹெர்பல் பூரி!
 krishnaamma

தாளிப்பு என்றால் என்ன? ஏன் ?
 krishnaamma

ஊறவைத்து தோலை உரி…! – வீட்டுக் குறிப்புகள்
 krishnaamma

பத்திரங்கள் பதிவு செய்ய சாட்சிகள் தேவையில்லை, ஆதார் எண் இருந்தால் போதும்!
 krishnaamma

சிந்திக்க!
 krishnaamma

39,000 பதிவுகளைக் கடந்துள்ள திரு அய்யாசாமி ராம் அவர்களுக்கு வாழ்த்துகள்
 krishnaamma

தற்போதைய செய்திகள் - தொடர் பதிவு
 ayyasamy ram

ஏளனச் சிரிப்பு – கவிதை
 T.N.Balasubramanian

செல்வாக்கு - ஒரு பக்க கதை
 ayyasamy ram

பொன்மொழிகள் - ஷீரடி பாபா
 ayyasamy ram

நாட்டின் முதல் பெண் ஐ.ஏ.எஸ்., அதிகாரி மரணம்
 ayyasamy ram

இந்திய - பாக்., எல்லையில் 'செல்பி டவர்'
 ayyasamy ram

தோழன் [Thozhan]
 drkavint

*ATM கார்டு மோசடிகளுக்கு முற்றுப் புள்ளி வைத்தது கனரா வங்கி*
 krishnaamma

பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்!
 krishnaamma

பெண்கள் ஆண் நண்பரை வாடகைக்கு எடுக்கும் புதிய செயலி அறிமுகம்
 krishnaamma

2018-ம் ஆண்டுக்கான குருப்பெயர்ச்சி எப்போது?
 சிவா

85015 பதிவுகள் கடந்த நம் தல சிவா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
 krishnaamma

உடையார் - தெளிவான மின்நூல் | Udaiyar Pdf
 பிரபாகரன் ஒற்றன்

வாழ்வியல் சிந்தனைகள் சில
 சிவனாசான்

ஊழலின் தந்தையே தி.மு.க-தான்
 சிவனாசான்

வாரத்துல ஒருநாள்தான் மனைவிக்கு பயப்படுவேன்”
 சிவனாசான்

கல்விமானுக்கு எழுந்த சந்தேகம்! -நீதிக்கதை
 SK

ஸ்பரிசம் - சிறுகதை
 ஜாஹீதாபானு

திருக்குறளின் இலக்கண நெறி அறிவோம்
 T.N.Balasubramanian

ஆரோவில்லில் மூங்கில் தினம்
 ayyasamy ram

மனதை பலப்படுத்தும் வரிகள் - M.S. உதயமூர்த்தி
 பழ.முத்துராமலிங்கம்

மருந்து சீட்டை டாக்டர்கள் கையால் எழுத கூடாது'
 பழ.முத்துராமலிங்கம்

தலைக்கு மேல் தனம் வந்தாலும் தலகாணியின் மேல் உட்காராதே. - பழமொழி விளக்கம்
 T.N.Balasubramanian

ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு விராட் கோலி, மீராபாய் சானு பெயர்கள் பரிந்துரை!
 ayyasamy ram

இன்றைய மாணவர்கள்
 ayyasamy ram

வாட்ஸ் அப் -ல் ரசித்தவை - பல்சுவை
 ayyasamy ram

இந்த வார சினிமா செய்திகள்
 ayyasamy ram

இந்த வார கருத்து சித்திரம்
 சிவனாசான்

பொன்மொழிகள் – வேதாத்ரி மகரிஷி
 சிவனாசான்

வானிலை அறிக்கை - தொடர் பதிவு
 சிவனாசான்

எச்.ராஜா விவகாரத்தில் தாமாக முன்வந்து வழக்கு ஏன்? - ஐகோர்ட் நீதிபதிகள் விளக்கம்
 சிவனாசான்

மாட்டு வண்டி ஊர்வலம்: புதுமண ஜோடி அசத்தல்
 சிவனாசான்

உவரி கடலில் தத்தளித்த சிறுவர்கள்! - சீருடையுடன் களமிறங்கிக் காப்பாற்றிய காவலர்
 ayyasamy ram

புரட்டாசியில் ஏன் அசைவ உணவுகளைத் தவிர்க்கிறோம்?காரணம் தெரியாதவர்களுக்கு மட்டும்!
 சிவனாசான்

தமிழக அரசு ஊழியர்களுக்வு - முதல்-அமைச்சர் பழனிசாமி அறிவிப்புகு 2 சதவீத அகவிலைப்படி உயர்
 சிவனாசான்

விஜயா, தேனா வங்கி& பாங்க் ஆப் பரோடா--இணைப்பு
 T.N.Balasubramanian

சில தமிழ் புத்தகங்கள்
 சிவா

கனவில் விலங்குகள் வந்தால் என்ன பலன்?
 SK

சிசிடிவி பொருத்துவதை வலியுறுத்தும் விழிப்புணர்வுக் குறும்படத்தில் நடித்துள்ள விக்ரம்
 ayyasamy ram

பிரபல குணசித்திர நடிகர் கேப்டன் ராஜு திடீர் மரணம்
 ayyasamy ram

ரெண்டாங் கல்யாணம் செய்தத சொல்லவே இல்லை…!!
 SK

நாவல்கள் | தொடர்கள்

Admins Online

சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க

Page 4 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Go down

best சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க

Post by heezulia on Tue Dec 19, 2017 12:54 am

First topic message reminder :

18 .12 .2017

இது ஒரு புதிய முயற்சி.

ஒரு படத்திலுள்ள வசனங்களை அப்படியே தர்றேன். என்ன படம், இந்த வசனங்கள்ல நடிச்சிருப்பவங்க யார் யார்னு உங்களுக்குத் தெரியும்னு எனக்குத் தெரியும். சொல்லுங்களேன். கண்டிப்பா கண்டு புடிச்சிருவீங்க. ஏன்னா ஈஸியானதாதானே குடுத்திருக்கேன்.

ஒரு அரண்மனை. அரசி சபைக்குள் நுழைகிறார்.


காவல்காரன் : நாட்டின் பேரரசி, செல்வபுரத்தின் பெண்ணரசி, மங்கையர் உலகுக்கு மாபெரும் தலைவியாய் விளங்க வந்த மங்கையர்க்கரசி, தக்க சமயத்தில் மக்களைக் காக்க வந்த மாதரசி, திருவின் கடாட்சத்தால், தெய்வத்தின் கருணையால் நம் நாட்டிற்குக் கிடைத்த பொன்னரசி, மாட்சிமை பொருந்திய செல்வபுரத்தின் மஹாராணி, ராஜமஹோன்னத, ராஜகோலாஹல, ராஜகம்பீர, ஸ்ரீ விஜயஜெய செல்வாம்பிகை நாச்சியார், வாழ்க.

அரசி வந்து, எல்லோரையும் அமரச் சொல்லி, அவரும் அமர்கிறார். சபையில் இருந்தவர்கள் அமர்கின்றனர்.

அரசி [சபையைப் பார்த்து] : ப்ரதம தளபதி பட்டமளிப்பு விழாவிற்கு விஜயம் செய்துள்ள ராஜ ப்ரமுகர்கள் அனைவரையும், அன்போடு வரவேற்கிறேன். என் அழைப்பிற்கிணங்கி, அனைவரும் வருகை தந்தமைக்கு, நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். தன்னைச் துச்சமென மதித்து என்னைக் காப்பாற்றிய வீரமல்லரின் வீரத்தைப் பற்றி, நான் விளக்கம் சொல்லத் தேவையில்லை. நடந்த சம்பவம் நாடறிந்தது. அப்படிப்பட்ட பலசாலியின், அரசியின் உயிரையே காத்த மாபெரும் வீரரே, இந்தச் செல்வபுரத்தின் ப்ரதம தளபதியாக நியமிக்க முடிவு கட்டி, உங்கள் முன் பதவிப் ப்ரமாணம் செய்து வைக்கிறேன்.

அரசி [தளபதியைப் பார்த்து]: வீரமல்லரே, நாட்டுக்கும், சட்டத்துக்கும் கட்டுப்பட்டு, பெற்ற தாய்போல் பிறந்த நாட்டைப் பாதுகாக்க வேண்டியது உங்கள் கடமை என்று கட்டளை இடுகிறேன். [தளபதியை நோக்கிக் கையை நீட்டி] இன்று முதல், உம்மை இந்த நாட்டிற்குப் ப்ரதம தளபதியாக நியமிக்கிறேன்.

அரசி ஒரு காவலாளியை நோக்க, அந்தக் காவலாளி வாள் இருந்த ஒரு தட்டை அரசியின் அருகில் கொண்டு வந்து நீட்டுகிறான். அரசி சிம்மாசனத்திலிருந்து இறங்கி வந்து, தட்டிலிருந்த அந்த வாளை எடுத்து, பிரதம தளபதியின் கையில் கொடுக்கிறார். தளபதியும் அந்த வாளைக் கையில் வாங்கிப் பணிவுடன் அரசியை வணங்குகிறார். அரசி சிம்மாசனத்தில் அமர்கிறார்.

ப்ரதம தளபதி [உறையிலிருந்து வாளை உருவி] : பேரரசியே, பிறந்த நாட்டின் ஒரு பிடி மண்ணைக் கூட மாற்றான் கொண்டு செல்ல முடியாத அளவுக்கு, நம் நாட்டைக் காப்பேன். எல்லைகளைக் காப்பேன். பகைவரால் தொல்லை ஏதேனும் வந்தால், அதை வேரோடு முறியடித்து விடுகிறேன். நமது செல்வபுரத்தை எனது உடலில் கடை.... சி சொட்டு ரத்தம் உள்ளவரை பாதுகாக்கிறேன் என்று உறுதி கூறி, இந்தப் ப்ரதம தளபதி பதவியை ஏற்றுக் கொள்கிறேன். இது என் தாய்மீதாணை. தாய்நாட்டின் மீதாணை.

என்று கூறி, வாளை உரையிலிருந்து உருவி மேலுயர்த்தி

"என் வீரத்தின் மீதாணை"

இவ்வாறு சொல்லி, வாளை முத்தமிட்டு விட்டு, உறையில் வைக்கிறார் ப்ரதம தளபதி.

தளபதி : பேரரசியே, ப்ரதம தளபதிக்குப் பக்கத் துணையாக இருந்து, படை நடத்தி, நாங்களும் நாட்டைப் பாதுகாப்போம் என்று உறுதி கூறுகிறோம்.

ப்ரதம தளபதியும், தளபதியும் தத்தம் இருக்கையில் அமர்கின்றனர்.

அரசி : வாழ்க வீரம். வளர்க உங்களது ஆற்றல். பெருகட்டும் படைபலம்.

அந்தச் சமயத்தில் ஒரு காவலாளி அரசிமுன் வந்து வணங்குகிறான்.

காவலாளி : அரசியே, தங்கள் உத்தரவுப்படி, புலவரை அழைத்து வந்திருக்கிறோம்.

அரசி : வரச்சொல் சபைக்கு.

காவலாளி : உத்தரவு.

ப்ரதம தளபதி [சிறிது யோசித்து விட்டு அரசியைப் பார்த்து] : யாரந்தப் புலவன்?

அரசி [அலட்சியமாக] : வருவார் பாரும்.

சபைக்கு அந்தப் புலவர் கர்வத்துடன் வீரனடை நடந்து வருகிறார். சபையிலுள்ளவர்கள் எல்லோரும் அவரையே பார்க்கின்றனர். புலவர் அரசி முன் வந்து.

புலவர் : வாழ்க நாடு. உயர்க அரசு, ஓங்குக புலமை.

அரசி [புன்னகையுடன்] : வருக புலவரே. வருக [என்று வரவேற்று] திடீரென்று நான் அழைத்தது, உமக்கு வியப்பைத் தந்ததோ?

புலவர் [இல்லையென்று தலையாட்டி] : வேண்டா வெறுப்பாக இருந்தது.

அரசி : ஏனப்படி?

புலவர் : காரணம் புரியவில்லை

அரசி : புரியச் சொல்கிறேன். உமது புலமையின் திறமையைப் பரிசோதிக்கவே உம்மை இங்கே அழைத்தேன்.
புலவர் [சிரித்து] : ஹா ஹா .... எனது புலமையை சோதிக்கும் அளவுக்குப் புலமையில் தேர்ச்சி பெற்ற பாவலன் இங்கு யாரோ?

புலவர் சுற்றுமுற்றும் பார்க்கிறார் கர்வமாக.

அரசி : சகலரும் இங்கு சகல கலைகளும் பயின்றவர்கள்.

புலவர் : [கிண்டலாக] ஆ... மகிழ்ச்சி. வினாக்களைக் கேட்டால் விடை சொல்லக் காத்திருக்கிறேன்.

அரசி : தளபதியாரே [ என்று ப்ரதம தளபதியைப் பார்க்கிறார்]

ப்ரதம தளபதி : [புலவரைப் பார்த்து] உமது ஊர்?

புலவர் : இதே ஊர்.

ப்ரதம தளபதி : பெயர்?

புலவர் : [நடந்துகொண்டே பதிலளிக்கிறார்] வித்யாபதி.

ப்ரதம தளபதி : தாய் தந்தையர்?

புலவர் : தாய் இல்லை, தந்தை உண்டு

ப்ரதம தளபதி : உற்றார் உறவினர்?

புலவர் : இல்லை

ப்ரதம தளபதி : சகோதரர்?

புலவர் : அனாதை

ப்ரதம தளபதி : உமக்குத் தொழில்?

புலவர் : எமக்குத் தொழில் கவிதை.

ப்ரதம தளபதி : அடுத்து?

புலவர் : ஆண்டவன் தொண்டு

ப்ரதம தளபதி : இதற்கு முன்?

புலவர் : பிறப்பால் ஊமை.

ப்ரதம தளபதி : பேச்சு வந்தது?

புலவர் : கலைவாணியின் அருளால்.

ப்ரதம தளபதி : [அலட்சியமாக] ஹே ஹே [அரசியைப் பார்த்து] நம்பத் தகாதது.

புலவர் : [அவரும் அலட்சியமாக] ஹே ஹே ... கோழை வீரனாகி, தளபதியாக வீற்றிக்கும்போது. ஊமை புலவனாகிப் பேசுவது நம்ப முடியவில்லையோ?

ப்ரதம தளபதி : ம்ம்ம்ம்ம்ம், அடக்கமாகப் பேசும்.

புலவர் : [கையை அமர்த்தி] அமைதியாகக் கேளும்.

அரசி : வித்தையிலே மெத்தப் படித்து, வினாக்களுக்கு அடுக்கடுக்காக விடை பகரும் புலவர் வித்யாபதி,

அரசி இதைக் கூறிக் கொண்டிருக்கும்போதே புலவர் அரசியின் அருகில் சென்று நிற்கிறார்.

புலவர் : அரசி

அரசி : ஆட்சிக்கிலக்கணம்?

புலவர் : ஆணவமற்ற அரசு.

அரசி : புலவனின் உரிமை?

புலவர் : சுதந்திரப் பறவை.

அரசி : இதயத்தை மகிழ்விப்பது?

புலவர் : குழந்தையின் மழலை

அரசி : வேதனை தருவது?

புலவர் : நண்பனின் பிரிவு.

அரசி : நட்புக்குயர்வு?

புலவர் : இடுக்கண் களைவது.

அரசி : எண்ணக்கூடாதது ?

புலவர் : செல்வத்தின் செருக்கு [அரசியைச் சுட்டிக்காட்டுகிறார்]

அரசி : பொருளில்லாதவர்க்கு?

புலவர் : இவ்வுலகமட்டும் இல்லை.

அரசி : அருளில்லாதவர்க்கு?

புலவர் : எவ்வுலகமுமில்லை.

அரசி : எங்கும் வேண்டுவது?

புலவர் : ஒழுக்கத்தின் உயர்வு.

அரசி : உயர்வுக்கு வழி?

புலவர் : உண்மையும், சத்தியமும்.

ப்ரதம தளபதி : அழியாது நிற்பது?

புலவர் : கவிஞனின் காவியம்

அரசி : அழிந்து விடுவது?

புலவர் : நிலையற்ற செல்வம்

ப்ரதம தளபதி : வீரருக்கு அழகு?

புலவர் : பேச்சைக் குறைப்பது.

ப்ரதம தளபதி : புலவனுக்கு முடிவு?

புலவர் : பொன்னேட்டில் இருப்பது.

அரசி : புவியாள்பவர் முடிவு?

புலவர் : முடிசார்ந்த மன்னரும் முடிவில் பிடி சாம்பலாவர்.

ப்ரதம தளபதி : சகிக்க முடியாதது?

புலவர் : பச்சைக் குழந்தையின் அழுகை
தளபதி : தாள முடியாதது?

புலவர் : பத்தினிப் பெண்ணின் சாபம்

தளபதி : கேட்கத் தகாதது ?

புலவர் : [தளபதியின் முகத்தின் நேரே கையை நீட்டி] தகுதியற்ற கேள்வியும், அர்த்தமற்ற பதிலும்.

ப்ரதம தளபதி : பார்க்க முடியாதது?

புலவர் : அடக்கமில்லாமை

அரசி : அதற்குதாரணம் ?

புலவர் : [அரசியைச் சுட்டிக்காட்டி] உங்களது ஆட்சி.

ப்ரதம தளபதி : [கோபமா எந்திரிச்சு] வித்யாபதி

பிரதம தளபதியும், தளபதியும் கோபமாக எழுகிறார்.

அரசி இருவரையும் உட்காருமாறு சைகை காட்டுகிறார். இருவரும் அமர்கின்றனர்.

அரசி : வித்யாபதி, உமது புலமையின் திறமையைப பாராட்டுகிறேன். இன்றுமுதல், உம்மை எமது ஆஸ்தான புலவனாக நியமிக்க முடிவு கட்டியிருக்கிறேன்.

புலவர் : நீங்கள் முடிவு கட்டியிருக்கலாம். ஆனால் முழு மனதுடன் நான் ஏற்றுக்கொள்ள வேண்டாமா?

அரசி : ஏற்றுக்கொள்ள என்ன தயக்கம்?


புலவர் :   ஆண்டவன் சன்னிதானத்திற்கே எங்களை அர்ப்பணித்துக்கொண்ட பரம்பரை நாங்கள். தெய்வத்தொண்டே திருத்தொண்டாக நினைத்து, இறைவனுக்கடியவனாக இருக்கும் நான், இந்த அரசுக்கு அடிமையாக மாட்டேன்.

ப்ரதம தளபதி : [கோபமா கத்துகிறார்] ஆணவம் படைத்த புலவன் நீ. எப்போது எமது அரசியின் கட்டளையை மதிக்கத் தவறினாயோ, அப்போதே உனக்கு இங்கு ஆஸ்தான புலவனாக அமரும் யோக்யதை இல்லையென்று முடிவு கட்டிவிட்டோம். போகட்டும். அழைத்த மரியாதைக்காக, நாங்கள் அனைவரும் கேட்க, அரசியைப் பாராட்டி ஒரேயொரு கவி பாடிவிட்டு போ.

புலவர் : நரஸ்துதி......... பாடுவதில்லை.

அரசி : எப்படி?

புலவர் : இறைவனைப் பாடும் வாயால், இடையே தோன்றி மறையும் இந்த மனித ஜென்மங்களைப் பாடுவதில்லை.

ப்ரதம தளபதி : பாடாமல் உன்னை விடப்போவதில்லை.

புலவர் : இந்த பலாத்காரத்தைக் கண்டு நான் பயப்படப்போவதில்லை.

தளபதி : உன்னைப் பணிய வைக்கிறோமா இல்லையா பார்.

புலவர் : உங்களுக்குச் சரியான பாடம் கற்பிக்கிறேனா இல்லையா பாருங்கள்.

Heezulia மீண்டும் சந்திப்போம்
avatar
heezulia
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 587
மதிப்பீடுகள் : 193

View user profile

Back to top Go down


best என்ன படம், யார் யார் நடிச்சது

Post by heezulia on Fri Feb 23, 2018 12:44 am

19.02.2018

சோஃபால ஒரு இளம்பெண் உக்காந்திருக்கா. அவள் கையில ஒரு பார்ஸல். அதை அவள்  திறக்கிறா. 


"பிரிக்காத,  பிரிக்காத, சொன்னா கேளு"

சொல்ல சொல்ல கேக்காம, அவர் அந்த பார்சலை பிரிச்சு, திறக்கிரா.  அதுக்குள்ள ஒரு சேலை.  


"அடே, ரொம்ப அழகா இருக்கே.எனக்குத்தானே?"

பக்கத்தில அவள் அண்ணன்  நிக்கிறான்.

"இது............ உன் வருங்கால அண்ணிக்கி."

அவள் முகம் வாடுது. சோஃபால இருந்து என்திரிக்கிறா. 

"அதனாலதான் பிரிக்காதேன்னு சொன்னீங்களா? இந்த மக்கு புள்ள புத்தில, அது எட்டல. இந்தாங்கண்ணா."


அண்ணன் பக்கத்தில வந்து அந்த சேலைய  நீட்றா.

"பாத்தியா பாத்தியா, அதுக்குள்ள வந்துருச்சா. வாடி"

அவளை சோஃபால உக்கார வச்சு, அவனும் பக்கத்தில உக்கார்றான். 


"நாளக்கி உனக்கு பிறந்த நாள்ல, அதனால, உங்க அண்ணன் வாங்கிட்டு வந்த பரிசு."

"போங்.......கண்ணா, இப்டிதான் விளையாட்றதா? கொஞ்ச நேரத்துக்குள்ள என்ன பயமுறுத்திட்டீங்களே." 


சந்தோ...........ஷமா சொல்றா.

"அதுக்கு காரணம், அல்லி பூத்த மாதிரி இருந்த ஓம்முகம், அண்ணீன்னு சொன்ன ஒடனே மாறிபோச்சே. ஏன் ராதா, நான் கல்யாணம் பண்ணிக்கிறது ஒனக்கு புடிக்கலியா?"


ராதா சோஃபாலே இருந்து எந்திரிக்கிறா.

"அண்ணா....... [தயங்கி] ஏம்மனசுல உள்ளத சொல்லட்டுமா?" 


"சொல்லுமா"

"அண்ணா, நீங்க கல்யாணம் பண்ணிகிறதில, எனக்கு துளிகூட இஷடமில்லேண்ணா."


"ஏம்மா அப்டி?"

"அண்ணீங்கற பேர்ல, இந்த வீட்டுக்குள்ள யாராவது அடி எடுத்து வச்சா, அவங்க என் அண்ணனோடு பங்கு போட்டுக்கிட்டு, அவர் இதயத்தில பதிஞ்சிருக்கிற என்ன எடுத்தெறிஞ்சிருவா. அப்புறம் இந்த நொண்டி பொண்ணுக்கு வேற யாருண்ணா நாதி இருக்காங்க?" 

ராதா  அழுறா. அண்ணன் சோஃபால இருந்து எந்திரிச்சு, ராதா பக்கத்தில வர்றான். 

"அண்ணா, கையெடுத்து கும்புட்றேன். நீங்க கல்யாணமே பண்ணிக்காதீங்கண்ணா, கல்யாணமே பண்ணிக்காதீங்க." 


அப்ப ஒரு வயசான அம்மா வர்றாங்க.

"ஏண்டி, உனக்கென்ன பைத்தியமா புடிச்சு போச்சு. எனக்கிருக்குது ஒரே ஒரு புள்ள, எவ்வுயிர் இருக்கும்போதே  அவன் கல்யாணத்த  பண்ணி பாக்கணும்னு நான் துடியா............. துடிச்சிட்ருக்கேன். நீ என்னடான்னா அவன்  காலமெல்லாம்  கல்யாணமே.... பண்ணிக்காம, நமக்காகவே ஒழச்சு போடணும்னு சொல்றியே. ஏண்டி, அவன் நல்லா இருக்கக்கூடாதுன்னு முடிவு பண்ணிட்டியா?"

"பாத்தீங்களாண்ணா, நீ நல்லாயிருக்கக்கூடாதுங்றதுக்காகவா  நான் இப்டி சொன்னேன். நான் சொன்னத புரிஞ்சிக்காம அம்மா என்ன திட்டுது பாருங்க." 

அண்ணன் தன் தங்கச்சிய அணச்சு, ஆறுதல் சொல்றான்.

"தங்கச்சிய திட்டாதம்மா. ராதா, நான் உன்ன புரிஞ்சுக்கிட்டேன். அழாதம்மா. உன் அன்பவிட உயர்ந்தது, சிறந்தது, இந்த உலகத்தில எனக்கு வேற எதுவுமே..... கெடையாதும்மா. நீ எந்த அளவுக்கு என்ன நம்பியிருக்கியோ, அந்த அளவுக்கு நான் உன்ன பத்.........ரமா பாதுகாப்பேன். ஓஅண்ணே 
ஓஇஷ்டப்படிதாம்மா  நடப்பான்."


"அண்ணா"

அடுத்த ஸீன்

தங்கச்சி கண்ணாடி முன்னால நின்னு அலங்காரம் பண்றா. கதவை தட்ற சத்தம் கேக்குது. 


"அண்ணன் வந்தாச்சி."

நொண்டி நொண்டி நடந்து, சந்தோ........ஷமா கதவை திறக்க போறா. கதவோரமா ஒழிஞ்சு நின்னுட்டு, கதவை திறக்கிறா. அண்ணன்னு நெனச்சு, "பூ....ம்" னு பயம் காட்றா. ஆனா, அங்க அண்ணன் இல்ல, ஒரு பொண்ணு. இவள் "பூம்"னு சொன்னதை கேட்டு, சிரிச்சுட்டே உள்ள நொழைறா. தங்கச்சியும் சிரிக்கிறா. வந்தவ கைல ஒரு பார்சல் இருக்கு.  அதுக்குள்ள  சேலை இருக்கும்போல. 


"அண்ணேன்னு நெனச்சுட்டேன்."

"ஏம்மா, டாக்டர் வீடு இதானே?"

"ஆமாங்க, அண்ணே இன்னும் வர்லயே."

"நான் உன்ன பாக்கத்தாமா வேந்தன்"

"என்னேயா?"

"ஆமா ராதா"

"நீங்க யாரு?"

வீட்டுக்குள்ள நொழைஞ்சுட்டே....

"நானா? நான் ரெங்கநாதனோட மக. மகாலக்ஷ்மி. நான் நேத்து உங்கண்ணன ஜௌளி கடேல பாத்தேன். ஒனக்கு பொறந்த நாள்னு சொன்னாரு. எனக்கு ஒண்ணா பாக்கணும்னு ஆசையா இருந்துது. அததாம்மா வந்தேன்."

வீட்டுக்குள்ளாற வந்து, ஒரு டீபாய்ல, கொண்டு வந்த பார்சலை வைக்கிறா. வாசலிலேயே நிக்கிற ராதாவை பார்த்து, 

"ஏம்மா அங்கேயே நின்னுட்டே. வா "

ராதா யோசிச்சிட்டே அங்கே நிக்கிறா.


"ஏம்மா தயங்குறே? வாம்மா. வந்து உக்காரு".


ராதாவுக்கு ஒரு கால் சரியில்லாததால், நொண்டி நொண்டி நடந்து வந்து, மகாலக்ஷ்மி  பக்கத்தில, விழுற நிலையில வர்றா. மகா  ராதாவ தாங்கி பிடிக்கிறா. 


"அயய்யோ, ஏம்மா, கால்ல அடிபட்ருச்சா? எங்கே, எங்க பாக்கலாம்."

குனிஞ்சி ராதாவின் சேலையை கணுக்கால் வரை உயர்த்தி பார்க்கிறா. அவள் கால் சரியா இல்ல. மகா அதை பார்த்து வருத்தப்பட்றா. 


"இவ்வளவு அழகான பொண்ணுக்கு",


"காலு நொண்டி" 

இப்படி சொல்லி ராதா அழுறா.

"ஆஹாங், இல்ல இல்ல, அப்படீல்லாம் சொல்லக்கூடாது. உக்கார் ராதா"

ராதாவை புடிச்சு உக்கார வைக்கிறா, மகா. அவ கொண்டு வந்திருந்த பார்சலை ராதாட்ட குடுத்து, 

"உன்னோட பொறந்த நாளக்கி, என்னுடைய அன்பளிப்பு"


பார்சலை ராதாட்ட கொடுக்கிறா.

"வேணாங்க, இதெல்லாம் எங்க அண்ணனுக்கு புடிக்காது."


பார்சலை வாங்க மறுக்கிறா ராதா.

"பயப்படாதம்மா. உங்க அண்ணன் ஒண்....ணும் சொல்லமாட்டாரு. வாங்கிக்க ராதா."

பார்சலை ராதாட்ட கொடுக்கிறா. இப்பவும் வாங்க தயங்குறா.

"ப்ளீ.....ஸ்" 


"உங்க முகத்த பாத்தா, மறுக்றதுக்கு மனசு வரமாட்டேங்குது."

"அப்ப வாங்கிக்க"


பார்சலை ராதா வாங்கிக்கிறா.

"ரொம்ப நன்றி." 

கண்ணீரை தொடச்சுக்கிறா.

"எங்க வீட்டுக்கு யாராவது விருந்தாளிங்க வந்தா, நான் உள்ள ஓடிர்வேன். அவங்களோட பேசவே உனக்கு பிடிக்காது. ஆனா, உங்க கிட்டே, மணிக்கணக்கா பேசிட்டு இருக்கணும்போல இருக்கு." 


ரெண்டு பேரும் சிரிச்சு பேசிட்டு இருக்காங்க. அப்போ அந்த வயசான அம்மா வர்றாங்க. 

"ராதா, யாரும்மா இது?" 


"இவங்கதான் மகாலக்ஷ்மி."

மகா அந்த அம்மாவை வணங்குறா. 


"ஓஹோ, மகாலட்சுமியா? ஒமுகத்துக்கு பேர் பொருத்...தமா இருக்குமா?"


மகா வெக்கப்ப்றா. அந்த அம்மா மகாவின் கழுத்தை பாக்குறா.

"இன்னும் கலியாணம் ஆகல போல இருக்கு."


"அம்மா, எம்பொறந்த நாளக்கி, இவங்க இத பரிசா கொடுத்திருக்காங்க".


"இதெல்லாம் எதுக்குமா?"


"பரவாயில்லங்க. நான் போய்ட்டு வர்றேங்க."


"இருங்களேன். அண்ண வந்த்ருவாறு. அவரையும் பாத்துட்டு போலாம்ல."
  

"இல்லங்க. எங்க அப்பா என்ன தேடுவார். நான் போய்ட்டு வர்றேன்"

"ராதா, பிரசாதத்த குடும்மா."

ராதா மகாவின் நெத்தியில திருநீர் வச்சு விட்றா. மகாவின்  நெத்தியை  தொட்டவுடன் ஏதோ ஒரு உணர்வு ராதாவுக்கு. மகா அந்தம்மாவின் காலை தொட்டு கும்பிட்றா. 
  

"மகராசியா இருமா".


"போய்ட்டு வர்றேன்."

மகா ராதாவின் கன்னத்தை தட்டிவிட்டு போறா. 

"அடிக்கடி வாங்க"

"வராமயா போபோறேன்?"

வெக்கப்பட்டுட்டே ராதா போறா. 

சொல்லுங்க சொல்லுங்க. இது எந்தப் படத்தில வருது. எதிர்நீச்சல் படத்துக்கு "படவா ராஸ்க்கல்" மாத்ரி இதுல ஒரு வார்த்தை இருக்கு. அதனால கண்டுபுடிக்கிறதுக்கு ஈஸின்னுதான் நினைக்கிறேன். பார்க்கலாம்.


Heezulia  மீண்டும் சந்திப்போம்  
avatar
heezulia
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 587
மதிப்பீடுகள் : 193

View user profile

Back to top Go down

best Re: சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க

Post by SK on Fri Feb 23, 2018 12:41 pm

இது ஒரு நல்ல படம்
ஒரு அன்னான் ஒரு அம்மா ஒரு தங்கச்சி அப்பறம்
பிறந்தநாள் பரிசு கொடுக்க வந்த ஒரு பெண்
இவங்க நடிச்சிருக்காங்க

பதிவோட ஓனர் வரதுக்குள்ள

ஓடிருடா செந்தில்

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
avatar
SK
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 7483
மதிப்பீடுகள் : 1360

View user profile

Back to top Go down

best Re: சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க

Post by heezulia on Sat Feb 24, 2018 12:23 am

24.02.2018

 


அட செந்தில் குமரா, எங்.....................க ஓட்றீங்க?  ஒலிம்பிக் பந்தயத்துக்கா போறீங்க? இதையும் சொல்லிட்டு ஓடுங்க. அந்தப் படத்தில அண்ணன், தங்கச்சி பத்தி சொன்னீங்க. நல்.......................ல பதில். அப்படியே.......... டைரக்டர், ம்யூசிக், தயாரிப்பாளர், ஒளிப்பதிவு, நடன இயக்குனர், அப்புறம் மத்த டெக்னீஷியன்கள், எந்த தியேட்டர்லலாம் இந்தப் படம் ஓடுச்சு, எத்தனை நாள் ஓடுச்சு, படத்த எத்தனை பேர் பாத்தாங்க, எந்தெந்த தியேட்டர்ல, எந்தெந்த ஊர்லல்லாம் ஓடுச்சு, படம் பாத்தவங்கள்ல, எத்தனை பேர் ஓசி டிக்கெட் ............., அப்பாடா, இத்தனை கேள்வி போதுமா? இவ்ளோ..............துக்கும் உங்களுக்கு பதில் நல்லாவே தெரிஞ்சும், நீங்க சொல்லல........................... அவ்ளோதான் சொல்லிப்புட்டேன். 

Heezulia  மீண்டும் சந்திப்போம்
avatar
heezulia
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 587
மதிப்பீடுகள் : 193

View user profile

Back to top Go down

best Re: சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க

Post by மூர்த்தி on Sat Feb 24, 2018 12:41 am

நானும் பார்த்தேன் சில வருடங்களுக்கு முன். ஆனா பெயர் மட்டும் நினைவுக்கு வரலை. சொல்லிடாதீங்க.அடிச்சுக் கேட்டாலும் சொல்லிடாதீங்க.உங்க தியரிப்படி.............
படத்தைப் பார்த்தோமா,பொழுதை போக்கினோமா . அவ்வளவுதான்.படம் பெயர் நடிகர்கள்......அதை எல்லாம் நினைவில் வைத்திருப்பதில்லை.
avatar
மூர்த்தி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1046
மதிப்பீடுகள் : 506

View user profile

Back to top Go down

best Re: சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க

Post by heezulia on Sat Feb 24, 2018 12:07 pm

24.02.2018
@மூர்த்தி wrote:சொல்லிடாதீங்க.அடிச்சுக் கேட்டாலும்  சொல்லிடாதீங்க.
மேற்கோள் செய்த பதிவு: ௧௨௬௦௪௧௭

இப்படி சொன்னதும், என்னவோ "நீங்க சொல்லிறாதீங்க, நானே.......... யோசிச்சு சொல்றேன்"னு  சொல்ல வாறீங்ளாக்கும்னு  நான் உங்கள பத்தி தப்...........பால  நெனச்சுட்டேன். விடை தெரியாதுன்னு செந்தில் ஒரு மாதிரி சொன்னா, நீங்க வேற மாதிரில்ல சொல்றீங்கல்ல. இது ஒரு தனீ .............. கலைதான். 

ஏன் இப்படி தமிழ் நம்பராக ஆட்டோமேட்டிக்கா மாறுது. நம்பர் மட்டுமில்ல, இங்கிலிஷ் வார்த்தை எழுதினாலும் கூட, தமிழ்ல்ல மாறிருது.
@மூர்த்தி wrote:உங்க தியரிப்படி............. படத்தைப் பார்த்தோமா,பொழுதை போக்கினோமா. அவ்வளவுதான்.படம் பெயர் நடிகர்கள்......அதை எல்லாம் நினைவில் வைத்திருப்பதில்லை.
மேற்கோள் செய்த பதிவு: 1260417 

என்ன கிண்டலா..........?  நினைவில் எதையும் வச்சுக்கவே....... வேணாம். நல்.........ல  படத்தை பார்த்தோம்னா, அந்த படம் தானாவே............ மனசில பதிஞ்சிரும். 

நடிப்பை பற்றி, வசனத்தை பற்றி, மியூசிக்கை பற்றி பேச விஷயம் நிறை...................ய இருக்குது. அதை கிண்டலடிச்சுட்டாங்க, இதை மாத்தி எடுத்துட்டாங்கன்னு பேசவேண்டாம்னுதான் சொன்னேன். 

குடும்பக் கதையில் கூடத்தான், நம்ம குடும்பத்தில நடக்காத சென்டிமென்டலான சில மாறுபட்ட ஸீனை எடுக்கிறாங்க. அதைப்பற்றி கூட்டம்போட்டு "என்ன இது, ஒரு குடும்பத்தில நடக்காதை இப்படி எடுத்துட்டாங்களே"ன்னு விமர்சனமா செஞ்சுட்டு இருக்கிறாங்க. யாராவது பேசுறாங்களா. இல்லியே. வீட்டிலயே "நம்ம குடும்பத்திலெல்லாம் இப்படியா நடக்குது. இருந்தாலும் பாட்டெல்லாம் நல்லா இருக்குதுல்ல, அந்த இடத்தில ஹீரோயின் பேசுற வசனம் இருக்கே.............. சூப்பர்ல" ன்னு  பேசுறோம். அதுதானே சரி. 

அதை விடுங்க. இன்னிக்கி சாயந்தரம் வரை பாக்குறேன். யாராவது விடை சொல்லலேன்னா, நானே பதில் சொல்லிர்றேன். சரியா? 

Heezulia   மீண்டும் சந்திப்போம்
avatar
heezulia
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 587
மதிப்பீடுகள் : 193

View user profile

Back to top Go down

best Re: சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க

Post by மூர்த்தி on Sat Feb 24, 2018 12:39 pm

கிண்டலடிக்கல. பாட்டு,வசனம் ,காட்சி நினைவில் இருந்ததால தான் பார்த்த ஞாபகம் இருக்கிறது என்று சொன்னேன்.காலையில் எழுந்ததும் நினைவுக்கு வரலாம்.தொடருங்கள். அதிக சஸ்பென்ஸ் வைக்காமல் சில குழுவும் கொடுக்கணும்.
avatar
மூர்த்தி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1046
மதிப்பீடுகள் : 506

View user profile

Back to top Go down

best Re: சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க

Post by heezulia on Sat Feb 24, 2018 10:54 pm

24.02.2018 

கிண்டலான்னு கிண்டலாத்தானே கேட்டேன் மூர்த்தி. கிண்டலடிக்கிறது தப்பு இல்லியே. நீங்க தாரா............லாமா கிண்டலடிக்கலாம். நான்  ஒண்...........ணும்   சொல்ல போறதில்ல.

நீங்க அந்தப் படத்தை பார்த்த ஞாபகம் இருக்குன்னு சொல்றீங்க. நான் குழு கொடுக்கவா, இல்ல க்ளூ கொடுக்கவா? 


க்ளூவே கொடுக்கிறேன். எஸ்.எஸ்.ஆர். & விஜயகுமாரி நடிச்ச படம். இப்ப 
கொஞ்............ஜம்  ஞாபகம் வருதான்னு பாருங்க. 

Heezulia
avatar
heezulia
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 587
மதிப்பீடுகள் : 193

View user profile

Back to top Go down

best Re: சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க

Post by மூர்த்தி on Sun Feb 25, 2018 12:12 am

தந்த  clue -துப்பு- போதும். காக்கும் கரங்கள் தானே.

avatar
மூர்த்தி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1046
மதிப்பீடுகள் : 506

View user profile

Back to top Go down

best Re: சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க

Post by மூர்த்தி on Sun Feb 25, 2018 12:19 am

ஏன் இப்படி தமிழ் நம்பராக ஆட்டோமேட்டிக்கா மாறுது. நம்பர் மட்டுமில்ல, இங்கிலிஷ் வார்த்தை எழுதினாலும் கூட, தமிழ்ல்ல மாறிருது.

இணையப் பக்கத்தில்  இணைக்கப்படும் Transliterate API ஐப் பொறுத்து இது அமையும்.
நீங்கள் முன்னர் ஒருமுறை கூறிய Google Input Tools வருவதற்கு முன் இணையப் பக்கங்களில்  google transliteration முறையை இணைத்தார்கள். அதில் எழுதப்படும் இலக்கங்கள் தமிழ் இலக்கங்களாக மாற்றப்படும். தற்போதய முறையில் இலக்கங்கள் மாறுவதில்லை. புதிய முறைக்கு மாற்றினால் அப்டேட் செய்தால் மட்டுமே சரியாகும். தற்போதய Google Input Tools  இலும்  Google translate இலும் வருவதில்லை.
avatar
மூர்த்தி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1046
மதிப்பீடுகள் : 506

View user profile

Back to top Go down

best Re: சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க

Post by heezulia on Sun Feb 25, 2018 1:34 pm

25.02.2018

கரீட்டு மூர்த்தி. காக்கும் கரங்கள் தான். நான் அனுப்பின ஸீன்ல யார் யார் பேசியிருக்காங்கன்னு பேரை அனுப்பலாம்னு நெனச்சேன். ஆனா அந்த ஸீனுக்கான வீடியோவையே அனுப்பிட்டீங்க. அதை பார்த்து தெரிஞ்சிக்கட்டும். 

ஆமா............... அந்த வீடியோவையும், நான் அனுப்புன வசனங்களையும் சரிபார்த்தீங்களா? சரீ.................யா எழுதியிருக்கேனா?

Heezulia
avatar
heezulia
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 587
மதிப்பீடுகள் : 193

View user profile

Back to top Go down

best Re: சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க

Post by heezulia on Sun Feb 25, 2018 2:52 pm

25.02.2018 

Google Input Tools தமிழ்ல, 4  & 8  தவிர வேற எந்த நம்பரும் மார்றது இல்ல. 4 & 8 வர்றதில்ல. ஆனா ஈகரைல, எந்த நம்பருமே  வர்றதில்ல. ஆன்லைன் google Input Tools தமிழ்ல நம்பர் மாறாது, Gmail தமிழ் மாதிரி. 

Heezulia 
avatar
heezulia
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 587
மதிப்பீடுகள் : 193

View user profile

Back to top Go down

best Re: சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க

Post by மூர்த்தி on Sun Feb 25, 2018 4:48 pm

மேலே உள்ள வசனமும் காணொளி வசனமும் பர்பெக்ட்.பாராட்டுகள்.

எங்களைக் கேள்வி கேட்டு பதிலைக் கேட்கும் உங்களுக்கு ஒரு கேள்வி.
நடிகர் கைக்வாட்டின் முதல் காதலியின் பெயர் என்ன?

க்ளூ-நீங்கள் சொன்ன மாதிரி எழுதினேனா?-வேண்டுமா?

க்ளூ தேவையில்லை. நீங்கள் தான் சினிமாவில் புலி ஆயிற்றே.


Last edited by மூர்த்தி on Sun Feb 25, 2018 4:53 pm; edited 1 time in total
avatar
மூர்த்தி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1046
மதிப்பீடுகள் : 506

View user profile

Back to top Go down

best Re: சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க

Post by மூர்த்தி on Sun Feb 25, 2018 4:51 pm

மென்பொருளுக்கு மேம்பாடு அப்டேட்  அட்மின் தான் செய்ய வேண்டும்.

கூகிள் input tool இல் 4 +8 எல்லாமே சரியாக வருகிறது.
avatar
மூர்த்தி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1046
மதிப்பீடுகள் : 506

View user profile

Back to top Go down

best Re: சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க

Post by heezulia on Sun Feb 25, 2018 7:08 pm

25.02.2018 
மொதல்..............ல உங்கள் பாராட்டுக்களுக்கு என். ஹை............யா, சோ..............க்கா எழுயிருக்கேன்ல.

அதாரு கைக்கவாட்னு நெனச்சேன். அப்புறமா தே............டி பாத்தா....., அது ரஜினி பேருன்னு தெரிஞ்சுது. இப்டீ அவருக்கு ஒரு பேரான்னு நெனச்சேன். சிவாஜிராவ் கைக்கவாடாமே. சிவாஜிராவ் தெரியும். கைக்கு  இப்பதான் எனக்கு தெரியும். 

அவரோட first லவ்வா? அதான் அவரே சொல்ல மாட்டேன்னுட்டார்ல. உங்ககிட்ட மட்டும் தனியா சொல்லிட்டாராக்கும். இல்ல வேற யாராவது சொல்லிட்டாங்களா? 
சரி............ உங்களுக்கு தெரிஞ்சா........... சொல்லிருங்க. 

நான் சினிமாவில் புலிதான். எப்டீ  தெரீமா? Google புலியாக, சிங்கமாக, முதலையாக இருக்கிற வரைக்கும். அதுதான் என் பலம்.

Heezulia


Last edited by heezulia on Sun Feb 25, 2018 7:27 pm; edited 1 time in total
avatar
heezulia
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 587
மதிப்பீடுகள் : 193

View user profile

Back to top Go down

best Re: சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க

Post by heezulia on Sun Feb 25, 2018 7:15 pm

25.02.2018 

Google Input Tools Tamilல 4  & 8 வருதா? இப்பகூட, இந்த ரெண்டு நம்பரையும் அடிக்குபோது தமிழ் எழுத்துதான் வந்துச்சு. அப்புறமா சரியான நம்பராக மாத்தினேன். 

Heezulia  
avatar
heezulia
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 587
மதிப்பீடுகள் : 193

View user profile

Back to top Go down

best Re: சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum