உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» வாய்மையும் பொய்மையும் - கவிதை
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» புரட்சிப்பெண் நான்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» அறமற்ற அரசு – கவிதை
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:21 pm

» QATARம் கண்ட ராஜா-பிறந்த நாளில்  வாழ்த்துவோம், வாருங்கள் .
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» வேலன்:-பிடிஎப் பைல்களை இமெஜ் பைல்களாக மாற்ற -Weeny Free PDF to Image Converter
by velang Yesterday at 9:29 pm

» யுவன் சங்கர் ராஜா: தமிழ் சினிமாவில் தடம் பதித்து 23 ஆண்டுகள்
by ayyasamy ram Yesterday at 8:13 pm

» 100-ஆ! ஊஹூம்!
by T.N.Balasubramanian Yesterday at 7:48 pm

» கனகதாரா !! Short story by Krishnaamma
by T.N.Balasubramanian Yesterday at 7:41 pm

» தமிழகம் முழுவதும் பறவைகள் கணக்கெடுப்பு தொடக்கம்:
by T.N.Balasubramanian Yesterday at 7:34 pm

» ஜோதிடப்பிரியரா?எப்போது திருமணம் - தெரிந்து கொள்ள ஒரு சூத்திரம்!
by T.N.Balasubramanian Yesterday at 7:29 pm

» H-1B விசாவில் அமெரிக்கா சென்ற சிங்கத்தின் கதை.
by T.N.Balasubramanian Yesterday at 7:22 pm

» வார்த்தை ஜாலங்கள்
by T.N.Balasubramanian Yesterday at 7:02 pm

» ஒப்பனை – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஐந்தரிசி பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» சொல்லும் விதத்தில் வெல்லலாம்-வார்த்தை விளையாட்டு
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» அடிமையும் சிங்கமும் கதை (ஒரு நிமிடம்)
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தாலி கட்டற நேரத்திலே பொண்ணு ஓடிப்போயிட்டா...! ஆறு வித்தியசம் கண்டுபிடி
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பருவநிலை மாற்றத்தினால் தனுஷ்கோடி வந்திருக்கும் பிளமிங்கோ வெளிநாட்டு பறவைகள்:
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» சர்.சி.வி.ராமன் ஆராய்ச்சி வெளியான நாள் இன்று தேசிய அறிவியல் தினம்
by ayyasamy ram Yesterday at 5:16 pm

» ஹாலிவுட்டின் ‘நடிகையர் திலகம்’ இன்று(பிப்.27) எலிசபெத் டெய்லர் பிறந்தநாள்
by ayyasamy ram Yesterday at 5:15 pm

» எங்கள் நடுவர் ஒரு முட்டாள்…!
by சக்தி18 Yesterday at 4:24 pm

» ஆன்மீக தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:46 pm

» உலகின் தலைசிறந்த சொல்..!!
by ayyasamy ram Yesterday at 3:45 pm

» வீட்டுக் குறிப்புகள் -10
by ayyasamy ram Yesterday at 3:44 pm

» மொய் கவரை டேபிளுக்கு அடியிலே தர்றாங்களே...!!
by ayyasamy ram Yesterday at 3:42 pm

» பிடித்த கதை – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» ஸ்டார் வேல்யூ உள்ள திருவோடு..!
by ayyasamy ram Yesterday at 3:34 pm

» பாடு மனமே…!- ரசித்த கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 3:29 pm

» பூண்டி ஏரிக்கு முதல் முறையாக ஒரே தவணையில் 6 டி.எம்.சி. கிருஷ்ணா தண்ணீர் வந்தது
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» உரிமையாளர்கள் ஸ்டிரைக்- கேன் குடிதண்ணீர் சப்ளை பாதிப்பு
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» காலம் - ஒரு வரலாற்றுச் சுருக்கம் - ஸ்டீஃபன் ஹாக்கிங் புத்தகம் இருந்தால் பகிரவும்
by ஞானமுருகன் Yesterday at 2:21 pm

» கணக்கு வாத்தியாரும் செக்கு மாடும்! குட்டிக் கதை (படிக்கும் நேரம் 2 நி.12 .வினாடிகள்)
by SK Yesterday at 10:45 am

» நான் சிரித்தால் – சினிமா விமரிசனம்
by ayyasamy ram Yesterday at 8:28 am

» கைரேகை பார்க்கத் தெரிந்த நடிகை பி.பானுமதி
by ayyasamy ram Yesterday at 8:27 am

» பீர்பால் பெருமை
by ayyasamy ram Yesterday at 8:25 am

» தவிடு தூவி வழிபாடு
by ayyasamy ram Yesterday at 8:17 am

» பதவிக்கு வயது தடையல்ல…!
by ayyasamy ram Yesterday at 8:16 am

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 6:51 am

» 24 மணி நேரத்தில் 10 லட்சம் பாலோயர்: கலக்கும் ஜூனியர் ரொனால்டோ!
by ayyasamy ram Yesterday at 6:48 am

» அரையிறுதியில் இந்திய பெண்கள் அணி: உலக கோப்பையில் அசத்தல்
by ayyasamy ram Yesterday at 6:37 am

» மூன்று ஆண்டாக பூமியை சுற்றும் 'குட்டி நிலா'
by ayyasamy ram Yesterday at 6:35 am

» பாகிஸ்தான் செல்லும் சீன வாத்துப்படை
by ayyasamy ram Yesterday at 6:33 am

» கொரோனா பரவல்: ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்
by ayyasamy ram Yesterday at 6:30 am

» ஒரு நாடு, ஒரே ரேஷன்: மேற்கு வங்கம் இணைய மறுப்பு
by ayyasamy ram Yesterday at 6:29 am

» மெக்கா, மதீனா பயணம் ரத்து! முஸ்லிம்கள் கவலை
by ayyasamy ram Yesterday at 6:27 am

» என். கணேசன் புத்தகம் pdf
by prajai Thu Feb 27, 2020 11:17 pm

» `கடலூரில் லஞ்சம் வாங்கிய பெண் அதிகாரி!'- ஓய்வுக்கு 2 நாள்கள் இருந்த நிலையில் கைது
by T.N.Balasubramanian Thu Feb 27, 2020 8:32 pm

» திருமணங்களை ஏன் முகூர்த்த நாட்களில் செய்கிறார்கள்?
by T.N.Balasubramanian Thu Feb 27, 2020 8:31 pm

» கரகோரம் நெடுஞ்சாலை -காணொளி
by சக்தி18 Thu Feb 27, 2020 6:29 pm

Admins Online

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?

best திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?

Post by heezulia on Sun Dec 17, 2017 2:18 pm

First topic message reminder :

17.12.2017

கர்ணன் vs வேட்டைக்காரன்

ரஜனி / கமல், விஜய் / சூர்யா மாதிரி அப்போ சிவாஜி / MGR. இவங்க படங்கள் ரிலீஸ் ஆனா, அவங்கவங்க ரசிகர்கள் மோதிக்குவாங்களாம்.

பந்துலு எக் ............. கச்சக்கமான செலவுல கர்ணன் படத்தையும், திருமுகம் கொறஞ்.................ச பட்ஜெட்ல வேட்டைக்காரன் படத்தையும் எடுத்தாங்களாம். கர்ணன் படத்ல முன்னணி நட்சத்திர கூட்டம். பாதி படம் முடிஞ்சிருச்சாம். மீதி படத்தை எடுக்கவும் ஆரம்பிச்சாச்சாம். ஆனா வேட்டைக்காரன் படத்தை அப்பதான் எடுக்க ஆரம்பிச்சாங்களாம்.

பந்துலு கர்ணன் படத்தை பொங்கல் அன்னிக்கி ரிலீஸ் செய்ய சுறுசுறுப்பா வேல செஞ்சுட்டு இருந்தாராம். அப்போ ஒருத்தர் பந்துலுட்ட ஒரு விஷயத்தை சொல்லியிருக்கார். பந்துலு யோசிக்க ஆரம்பிச்சுட்டாராம். அந்த ஆள் சொன்ன விஷயம் என்ன............? கர்ணன் ரிலீஸ் ஆகிற அன்னிக்கே, திருமுகம் வேட்டைக்காரன் படத்தை ரிலீஸ் செய்ய போறதா.

ரெண்டு மெகா ஸ்டார் படங்கள் ஒண்ணா ரிலீஸ் ஆனா நல்லா இருக்காதே, வசூல் அடிபடுமேன்னு பந்துலு நினைச்சு, தமது குழுவினருடன் பேசினாராம். சிவாஜி காதிலும் போட்டு வச்சாங்க. அவரும் யோசனை செய்ய ஆரம்பிச்சுட்டாராம். வேட்டைக்காரன் படத் தயாரிப்பாளர் தேவரையும் கூப்ட்டு பேசியிருக்காங்க. ஆனா இவங்கல்லாம் என்னதான் பேசினாலும், MGR தான் ரிலீஸ் date சொல்லணுமாமே. ஒரு வாரம் கழிச்சு படத்தை ரிலீஸ் செய்யலாம்னு அவர்ட்ட எப்படி, யார் சொல்றது? அப்புறமா ஒருத்தர் ஒரு ஐடியா சொன்னாராம். MGR க்கு கர்ணன் படத்தை தனியா போட்டு காட்டிட்டு, அதுக்கப்புறமா ரிலீஸ் பத்தி பேசலாம்னு முடிவு செஞ்சாச்சாம். MGRட்ட போய் சொன்னாங்களாம். அவரும் படத்தை பார்க்க உம் சொல்லிட்டாராம்.

படத்தை பார்த்த MGRக்கு சிவாஜியின் நடிப்பு ரொம்ப புடிச்சு போச்சாம். "நடிப்புக்குன்னே பொறந்தவர்யா. மனுஷன் கர்ணனாவே வாழ்ந்திருக்கார்"ன்னு பாராட்டினாராம். பந்துலு உள்பட, எல்லா கலைஞர்களையும் மனசா................ர புகழ்ந்தாராம். படத்தின் வெற்றிக்கு வாழ்த்து சொல்லிட்டு போய்ட்டாராம். இப்படிப்பட்ட சமயத்தில் ரிலீஸை பத்தி பேச எல்லாரும் தயங்கினாங்களாம். வேட்டைக்காரன் படத்தை ஒரு வாரம் கழிச்சு ரிலீஸ் பண்றத பத்தி எப்படி பேசுறது?
மறுநாள். தேவரை கூப்ட்டுட்டு MGR ஐ பாக்க போனாங்களாம். விஷயத்தை சொல்லியிருக்காங்க. "படத்தை பார்த்தேன். ப்ரமாதமாய், ப்ரமாண்டமாய் இருக்கு. நண்பர் சிவாஜியும் நல்லாவே நடிச்சிருக்கார். சரி, ஒண்ணு செய்ங்க, ரெண்டு படத்தையும் ஒண்ணாவே ரிலீஸ் செஞ்சிருங்க. ரெண்டு பேர் ரசிகர்களும் பார்த்து ரசிச்ச மாதிரி இருக்கும்ல. ரெண்டு பேர் ரசிகர்களும் ரெண்டு படத்தையும் பார்க்கட்டுமே. எல்லாரும் சந்தோஷப்படுவாங்க".

வேற வழி? அப்டீ இப்டீன்னு ரெண்டு படங்களும் 14.01.1964 ல ரிலீஸ் ஆயிருச்சு. கர்ணன் ரிலீஸ் ஆன தியேட்டர்கள்ல பிரமாண்டமான பேனர்கள். படத்தை பார்த்தவங்க பாராட்டினாங்களாம். ஆனா அவ்ளோ பணம் செலவழிச்சு எடுத்த கர்ணன், வேட்டைக்காரன் மாதிரி வெற்றி பெறலியாம். ஆனா பாருங்க, 2012ல வெளியான டிஜிட்டல் படம் ஓஹோன்னு ஓடுச்சாம்.

ஆனா வேட்டைக்காரன் ரிலீஸ் ஆன தியேட்டர்களில் என்ன செஞ்சாங்க தெரியுமோ? தேவர் ஃபிலிம் ஆச்சே. நிஜமான கூண்டு வச்சு, நிஜமான புலியையும் கூண்டுக்குள்ள வச்சுட்டாங்களாம். இந்தப் புலியை பார்க்குறதுக்குன்னே .............. கூட்டம் கூடுச்சாம். Low பட்ஜெட் படம் வசூலை குவிச்சுதாம். இதுக்கு MGR என்ன செஞ்சார் தெரியுமா? பந்துலுவுக்கு 1965ல ஆயிரத்தில் ஒருவன் படத்திற்கு வாய்ப்பு கொடுத்தாராம். நல்ல லாபம் அள்ளிக் கொடுத்த படமாச்சே. கன்னாபின்னான்னு ஓடின படமாச்சே. நல்ல மனுஷர்தானே MGR.


Baby Heerajan மீண்டும் சந்திப்போம்
heezulia
heezulia
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 610
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 193

Back to top Go down


best Re: திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?

Post by heezulia on Sat Mar 03, 2018 2:04 pm

03.03.2018

பாக்கியராஜ் படங்கள் சக்................க போடு போட்டுக்கிட்டு இருந்த சமயம். செட்டியாருக்கு ஒரு ஆசை. பாக்கியராஜ் டைரக் ஷன்ல ஒரு படத்தை தயாரிக்கணும்னு. நல்ல ஆசைதானே. பாக்கியராஜ்ட்ட பேசினார். அவரும் சரீன்னுட்டு, கதை எழுத ஆரம்பிச்சார். பாக்கியராஜ் கதையை சொல்லவா வேணும். அவ்ளோ................. நல்லா எழுதுவார். கதையை எழுதிட்டார். செட்டியாரை ஹோட்டல்ல வந்து பார்க்க சொன்னார். ஆனா சரவணன், கதையை ஆபீஸ்லதான் கேக்குறதுதான் பழக்கம்னு சொல்லியிருக்கார்.

“நான் கதை சொல்லும்போது, எந்த வித எடஞ்சலும் இருக்கக்கூடாது. அதனாலதான் ஹோட்டலுக்கு வர சொல்றேன்” ன்னு பாக்கியராஜ் சொல்லிட்டார். AVM சகோதரர்களும்  ஹோட்டலுக்கு போனாங்க. பாக்கியராஜ் தன் ஆளுங்களை ரூமை விட்டு வெளியே போக சொல்லிட்டார். கதை சொல்றவரும், கேக்குறவங்களும் தவிர, ரூம்ல வேற யா............ரும் இல்ல.

பாக்கியரஜ் கதை சொல்ல ஆரம்பிச்சார். அவர் கைல டைரியோ, பேப்பரோ, பேனாவோ, padஓ, ஹின்ட்டுக்கு ஒரு பேப்பரோ எத்.............துவும்...............மே இல்ல. அவர்பா.................ட்டுக்கு கதை சொல்றார், மனுஷன். இவங்க பா.....................ட்டுக்கு கதையை ஆ..................ச்சரியத்துடன் கேட்டுகினு இருக்காங்க. அவர் கதை சொன்ன விதம் அப்டி.

எத்தனையோ................. பேர்ட்ட அவங்க கதை கேட்டிருப்பாங்க. ஆனா பாக்கியராஜ் சொன்னது மாதிரி, அவங்க இதுவரை கதை யா.............ர்ட்டயும்  கேட்டதில்லியாம். அப்டீன்னா, கதை அவங்களுக்கு புடிக்காம இருக்குமா? ரொம்ப ரொம்ப புடிச்சிருச்சு. சரி................. கதைக்கு என்ன பேர்ன்னு கேட்டாங்களாம். சின்ன வீடுன்ருக்கார் பாக்கியராஜ்.

“என்னது, சின்ன வீடா? இந்த பேர்ல படம் தயாரிக்கிறதா இல்ல” ன்னுட்டாங்க AVM சகோதரர்கள். பாக்கியராஜ் அப்புறமா யோசிச்சு முந்தானை முடிச்சுன்னு பேரை மாத்திறலாம்னு சொல்லியிருக்கார். இப்படியாகத்தானே பாக்கியராஜின் சின்னவீடு கதை முந்தானை முடிச்சாயிருச்சு........... [1983].

பேரை மாத்தி என்ன பிரயோஜனம்? இந்த பேர்ல ஒரு பிரச்னை. முந்தானை முடிச்சு – எட்டு எழுத்தாச்சே. எட்டு எழுத்து இருக்கக்கூடாதாமே. செண்ட்..........................டிமென்ட். என்ன செய்றது? இந்த எட்டு நம்பரை எவன் கண்டுபுடிச்சான்னு அவங்களுக்கு கோவம் வந்திருக்குமோ? என்ன செய்யலாம்னு யோசிச்சாங்க.

அர்ஜுன். இவர் யார் தெரியுமோ? ஆ............மா, இது கூடவா தெரியாது, இது ஒரு கேள்வீன்னு கேக்க வந்துட்டியேன்னு கேக்குறீங்களா? என்னது, அப்ப இல்லியா? 

உடனே.................. மகாபாரதத்துக்கு போயிறாதீங்க. இல்லேன்னா நடிகர் அர்ஜுன்னு சொல்லிறாதீங்க. ரெண்டுமே................. இல்ல.

இவர் AVMமின் டிசைனர். புத்திசா.....................லி. இவர் செஞ்சதை படிச்சு பார்த்து, எனக்கு ஆ..........ச்ச்சரியமா போச்சு. நீங்களும் ஆச்சரியப்பட வேணாமா? ஐயய்யோ, வேணான்னு சொல்லிறாதீங்க. அப்புறம் நான் எப்டீ எழ்துறது? நீங்களும் ஆச்சரியப்படணும், படணும், ணும், ம்ம்ம்

முந்தானை முடிச்சு. இந்த பேர்ல, ரெண்டு வார்த்தைக்கும் பொதுவான எழுத்து ‘மு’. சரியா? அதனால ரெண்டு வார்த்தைக்கும் ‘மு’ வையே பெருஸ்............ஸா எழுதி, பொதுவான எழுதாக மாத்தி எழுதிட்டார். இப்ப ஏழு எழுத்தாயிருச்சுல்ல. என்னா அறிவு, என்னா அறிவு அந்த அர்ஜுன்க்கு. அதனாலதான் AVM நிறுவனத்தில இருக்கார்.


திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 6 R107s2


படம் சென்னை அலங்கார் தியேட்டர்ல ரிலீஸ் ஆச்சு. படத்தை பார்த்த பாக்கியராஜின் மனைவி ப்ரவீனா, “நிச்சயமா இந்தப் படம் சில்வர் ஜூப்லி வரை போகும்”னு சொன்னாராம். ஆனா, 100 நாள் கூட ஓடல. “என்னடா இது, மதுரகாரனுக்கு வந்த சோதன”ன்னு என்னமோ சொல்வாங்களே, அது மாதிரி முந்தானை முடிச்சு படத்துக்கும் ஒரு சோதன வந்துச்சு.

‘தூங்காதே தம்பி தூங்காதே’, AVMஇன் தயாரிப்பு. கமலை வச்சு ப்ரமா..............ண்டமா உருவாயிட்டு இருந்துச்சு. இது ப்ரவீனாவுக்கு தெரிய வந்துச்சு. “ஏன் சார், உங்க அடுத்த படம் ‘தூங்காதே தம்பி தூங்காதே. அதை அலங்கார் தியேட்டர்லதான் ரிலீஸ் செய்ய போறீங்களா”ன்னு சரவணன்ட்ட கேட்டார். ப்ரவீணாவின் ஆதங்கள் சரவணனுக்கு புரிஞ்சிருச்சு. முந்தானை முடிச்சு அட்டகாசமான படம்னு மறுக்க முடியாது. ‘முந்தானை முடிச்சு’ நல்லா ஓடினா, இந்த தியேட்டர்லேயிருந்து எடுக்க மாட்டேன். ‘தூங்காதே தம்பி தூங்காதே’ படத்தை வேணும்னா சத்யம் தியேட்டர்ல ரிலீஸ் செஞ்சுக்கிறேன்”னு சொல்லிட்டாராம். அதுபடி செய்யவும் செஞ்சார். அலங்கார்ல முந்தானை முடிச்சு வெள்ளி விழா கொண்டாடியது.


- பரணி

Heezulia மீண்டும் சந்திப்போம்
heezulia
heezulia
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 610
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 193

Back to top Go down

best Re: திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?

Post by heezulia on Sat Mar 10, 2018 11:37 pm

10.03.2018


கவிதாலயம் ரஜினியை வச்சு முதல் தடவையாக தயாரிச்ச படம் நெற்றிக்கண். K பாலசந்தர் இந்தப் படத்துக்கு திரைக்கதை எழுதி தயாரிச்சார். இந்தப் படத்தின் டைரக்டர் SP முத்துராமனுக்கும் கவிதாலயம் முதல் படம்.
 
இந்தப் படப்பிடிப்புக்கு என்னல்லா...........ம் தேவையோ, அதெல்லாம் டக்கு டக்குன்னு கெடச்சுதாம். “செலவை பத்தி கவல்.........லயே.................. படாதீங்க. AVMக்காக எப்படி படம் எடுப்பீங்களோ, அப்படி க்ரா.......................ண்டா படத்தை எடுங்க.”ன்னு பாலசந்தர் சொல்லிட்டார். டைரக்டர் SP முத்துராமனுக்கு படு சந்தோஷம்.
 
மகன் ரஜினிக்கு ஜோடியாக நடிச்ச மேனகாவுக்கு, அவங்க அம்மாதான் எந்தெந்த ஸீனுக்கு எப்படி நடிக்கோணும்னு சொல்லி கொடுத்துட்டு இருந்தார்.
 
ஒரு தடவை பாலசந்தர் முத்துராமன்ட்ட, “உன் படத்தில சண்டை ஸீன்ல்லாம் பிரமாதமாய் இருக்கு. உன் ஷூட்டிங்கை நான் பாக்கணும்”னு சொன்னாராம். முத்துராமனும், “தாராளமாய் வாங்க சார். வர்ற புதன்கிழமை அன்னிக்கி, குன்றத்தூர்ல ஒரு நைட் ஷூட்டிங் ஸீன் எடுக்கிறேன்”ன்னு சொன்னார். பாலசந்தர், “நான் உன்னை தொந்தரவெல்லாம் பண்ணமாட்டேன். ஒரு ரசிகனாய் வந்து பார்க்கிறேன்”னு சொன்னார்.
 
பாலசந்தர் குன்றத்தூர் போனார். ரஜினிகூட, நாலு பேர் தீப்பந்தங்களோடு சண்டை போட்ற  ஸீன். தீப்பந்தங்களால ரஜினியின் முகத்தில அடிக்கணும். திடீர்னு “கட் கட் கட்”னு சத்தம். பார்த்தா............... பாலசந்தர். அவர் சொன்னதுதான் அந்த “கட் கட் கட்.” இப்படி சொல்லிட்டு, ரஜினிட்ட ஓ........................டி வந்துட்டார். முத்துராமனுக்கு ஷாக். ஷூட்டிங்ல மூக்கை நுழைக்க மாட்டேன்னு சொல்லிதானே வந்தார்னு ஷாக்.
 
பாலசந்தர் ரஜினியை கட்டிபுடிச்சு, “என்னப்பா, மூஞ்சில தீ பட்டுருச்சா?”ன்னு பதைத்து கேட்டிருக்கார். அப்புறம் முத்துராமனை திரும்பி பார்த்து, “என்னப்பா முத்துராமன், இப்படியா ரஜினி முகத்தில நாலு பேர் தீப்பந்தங்களை வச்சு அடிக்கிற மாதிரி ஷாட் வைப்பீங்க? இந்த ஃபைட் ஸீன்ல்லாம் வேண்டாம். எனக்கு ரஜினிதான் வேணும்”ன்னாராம். ஷூட்டிங்க் இடையில  பாலசந்தர் பூந்ததுக்கு காரணம் முத்துராமனுக்கு அப்பதான் புரிஞ்சுது.
 
முத்துராமன், “பயப்படாதீங்க சார், பாதுகாப்பாகத்தான் செய்வாங்க. ஜூடோ ரத்னம் மாஸ்டர் ரஜினியின் பாதுகாப்புக்கு எல்லா பிளானும் செஞ்சு வச்சிருக்கார்.”ன்னு சொன்னார். “இல்லப்பா, எனக்கு பயமா இருக்கு”ன்னு சொல்லிட்டு, தூரமா போயி உக்காந்துட்டாராம்.
 
பாலசந்தர் அங்க இருந்தா, ஃபைட் ஸீன் எடுக்க விடமாட்டார்னு, படத்தின் தயாரிப்பு நிர்வாகி நடராஜன், அவரை அங்கேயிருந்து கூட்டிகிட்டு போய்ட்டார். போகும்போது கூட, “ரஜினியை பத்திரமா பாத்துக்கோங்க.”ன்னு பாலசந்தர் சொல்லிட்டு போனார். பாலசந்தர் படங்களில அவர் ஏன் சண்டை காட்சியை வைக்கிறதில்லேன்னு அப்போதான் முத்துராமனுக்கு தெரிஞ்சுதாம்.
 
ஆமா............. பாலசந்தர் படத்தில ஃபைட் ஸீன் வந்ததே இல்லியா?
 
"ரஜினியின் நடிப்பு இதுல சூப்பரா வரணும். அதுவும் அப்பா கேரக்ட்டர் சூப்..............பரா வரணும் முத்துராமன்.” னு பாலசந்தர் சொன்னாராம். படம் முடிஞ்சதும், பாலசந்தர் படத்தை பார்த்துட்டு, தான் நெனச்சபடியே ரஜினி நடிச்சிருக்கார்னு பாராட்டி சொன்னார்.
 
- ஹிந்து  

Heezulia
heezulia
heezulia
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 610
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 193

Back to top Go down

best Re: திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?

Post by SK on Mon Mar 12, 2018 4:49 pm

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 6 3838410834 திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 6 3838410834 திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 6 3838410834


SK
SK
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8072
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1548

Back to top Go down

best Re: திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?

Post by heezulia on Fri Mar 16, 2018 12:07 am

16.03.2018

வெற்றிக்கூட்டணி தயாரிப்பாளர்  கோவைத்தம்பி & கதாசிரியர் cum டைரக்டர்  R சுந்தரராஜன் எடுத்த படம், நான் பாடும் பாடல். அம்பிகா & சிவகுமார் ஹீரோயின் & ஹீரோ. வழக்கம்போல இளையராஜா ம்யூஸிக். கன்னியாகுமரி மாவட்டத்தில எடுக்கப்பட்ட படம்.

இந்த படத்தில ரெண்டு மாதிரியான க்ளைமாக்ஸ் யோசிச்சு வச்சிருந்தார், இயக்குனர் R சுந்தரராஜன். ஒண்ணு.............., அம்பிகா இறந்து போற மாதிரி. இன்னொண்ணு, அம்பிகாவின்   நெத்தியில சிவகுமார் பொட்டு வச்ச  இடத்தை, அம்பிகாவே நெருப்பால சுட்டுக்கொள்ற மாதிரி.

இந்த ரெண்டில எதை செலக்ட் செய்றதுன்னு, கோவைத்தம்பிக்கும், சுந்தரராஜனுக்கும் குழப்பம். என்ன செய்றதுன்னு தெரியாம, முடிவு தங்களால எடுக்க முடியாதுன்னுட்டு, வேற ஒருத்தர்ட்ட அந்த பொறுப்பை கொடுத்துட்டாங்க. யாருன்னு நினைக்கிறீங்க, இளையராஜா.

அது சரி..................., பயணங்கள் முடிவதில்லை படத்துக்கு இளையராஜா போட்டு கொடுத்த 30 ட்யூன்கள்ல, காட்ச்சிக்கேத்த மாதிரி ட்யூன்களை செலெக்ட் செய்ய இளையராஜாவை கேட்டுகிட்டாங்க. அது ந்யாயம். ஏன்னா அது இசை சம்பந்தப்பட்டது. ஆனா நான் பாடும் படத்தில ஸீனையே செலக்ட் செய்ய சொல்லியிருக்காங்களே.

சரி சரி, அது அவங்களுக்குள்ள understanding. அது பத்தி உனக்கென்ன? நீ நடந்ததை மட்டும் சொல்லு.

படத்தில வந்த க்ளைமாக்ஸ், அதாவது, அம்பிகா நெருப்பால தன் நெத்தியை சுட்டுகிறது. ஸீனை கூட இளையராஜா நல்லாத்தான் செலக்ட் செஞ்சிருக்கார்.

இதுக்கப்புறம் சுந்தரராஜன் பிஸியான டைரடக்கர் ஆயிட்டார்.


- ரமணி  

Heezulia   
heezulia
heezulia
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 610
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 193

Back to top Go down

best Re: திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?

Post by SK on Fri Mar 16, 2018 1:16 pm

இதுக்கப்புறம் சுந்தரராஜன் பிஸியான டைரடக்கர் ஆயிட்டார்.

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 6 3838410834 திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 6 3838410834


SK
SK
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8072
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1548

Back to top Go down

best Re: திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?

Post by heezulia on Sun Mar 18, 2018 11:43 pm

18.03.2018

காதலிக்க நேரமில்லை [1964] படம். சித்ராலயா ஆபீஸ். அங்க ஒரு ஆர்மோனியம். அதுக்கு முன்னால, பாடல் கம்போஸிங்க்காக MSV உக்காந்திருக்கார்.

பின்ன என்ன, ஆர்மோனியத்துக்கு பின்னாலயா உக்காருவாங்க, மக்கு மக்கு.

MSVட்ட............., எந்த நாட்ல யார் முதலமைச்சர்னு கேட்டா, தெரியவே தெரியாது. அவருக்கு தெரிஞ்சதெல்லாம், ம்யூசிக், ம்யூசிக், ம்யூசிக். அது மட்டுமே.

கண்ணதாசன் அப்பதான் சித்ராலயா ஆபீஸுக்கு வந்தார்.

ஐசனோவர்னு ஒருத்தர். இவர் அமெரிக்காவில 1953 – 1965 வரைக்கும் ஜனாபதியாய் இருந்தவர். இவரைப் பற்றி பேப்பர்ல எதோ ந்யூஸ் அப்போ வந்துச்சு. அதை யாரோ சத்தம்போட்டு படிச்சாங்க போல. அது MSV காதுல விழுந்துச்சு. “ஐசனோவரா? யாருண்ணே அது?” ன்னு கண்ணதாசன்ட்ட கேட்டார். “அடேய் மண்டு.....................மண்டு, அவர் அமெரிக்காவில ஜனாதிபதியா இருந்தவருயா.”ன்னு கண்ணதாசன் சொன்னார்.

அந்த சமயத்தில ஸ்ரீதர் வந்தார். “அட, ரெண்டு பேரும் வந்துட்டீங்களா? ரொம்ப நல்லதா போச்சு. பாட்டோட situationஐ சொல்லிர்றேன். ஒரு எஸ்டேட் ஓணர். அவர்ட்ட ரவிச்சந்திரன் வேலை செஞ்சுட்டு இருக்கார். ஓணர் ரவிச்சந்திரனை வேலைல இருந்து தூக்கிர்றார். ரவிச்சந்திரன் சும்மா இருக்கல. போராட்டம் பண்றார். இதுக்கு ஒரு பாட்டு போடுங்க பார்க்கலாம்.”னு சொன்னார். இப்டி சொல்லிட்டு, கதை டிஸ்கஷனுக்கு பக்கத்து ரூமுக்கு போயிட்டார் ஸ்ரீதர். அங்க CV ராஜேந்திரனும், சித்ராலயா கோபுவும் இருந்தாங்க.

கொஞ்ச நேரத்துக்கு முன்னால ஐசனோவர் பற்றி பேப்பர்ல படிச்சாங்கல்ல, அந்த பேரை ஞாபகத்தில வச்சு, உளற ஆரபிச்சுட்டார் MSV. என்ன உளறினார்?

“ஐசனோவர் ............. ஆவலோவா” இப்படி வாய்க்கு வந்தபடி சத்தம் போட்டுட்டு இருந்தார். கதை டிஸ்கஷன்ல பக்கத்து ரூம்ல இருந்த ஸ்ரீதர், இந்த சத்தத்தை கேட்டிருக்கார். வெளியே எட்டி பார்த்து, “அண்ணே, இப்ப நீங்க என்னவோ உளறினீங்களே, அத்தாண்ணே இந்தப் பாட்டின் ட்யூன்.” னு சொல்லிட்டார். MSVக்கு ஆச்...............சரியமா போச்சு. “என் என்னவோ சத்தம் போட்டுட்டு இருந்தேன். அதுல என்னத்த ட்யூன் தெரிஞ்சுது” ன்னு யோசிச்சார்.

MSVதான் இப்டீன்னா, கண்ணதாசன் என்ன செஞ்சுட்டு இருந்தார்? அவர் பா.................ட்டுக்கு அரட்டை அடிச்சுட்டு இருந்தார். MSV “சீக்கிரமா பாட்டை சொல்லுங்கண்ணே. ஆலங்குடி சோமு கூட எனக்கு வேற ஒரு ரெக்கார்டிங் இருக்குண்ணே” ன்னு சொன்னார். அதுக்கு கண்ணதாசன், “இதப்பாரு விசு, நான் பெங்களூருக்கு வந்து ஒரு வாரமாச்சு. கைல இருந்த காசெல்லாம் செலவழிஞ்சிருச்சு. இப்ப எனக்கு பணம் வேணுமே. ஒண்ணு செய். சீக்கிரமா இன்னிக்கி ஸ்ரீதருக்கு ரெண்டு மூணு பாட்டு எழுதி குடுத்துரு. அவர் பணம் குடுப்பாரு. என்ட்ட பணம் இல்லாத சமயத்ல என்ன விட்டுட்டு எங்கயும் போயிறாத. நீ சீக்கிரமா ட்யூன் போட்டாதாண்டா நான் பாட்டு எழுத முடியும். எனக்கு வேலை குடுடா விஸ்வநாதா.”னார்.

என்னதான் ஸ்ரீதர் கதை டிஸ்கஷன்ல இருந்தாலும், காது என்னவோ கண்ணதாசன், விஸ்வநாதன் பேசுறதை கேட்டுட்டு இருந்துச்சு போல. கண்ணதாசன் பேசுறதையும் கேட்டுட்டார். “கவிஞரே, நீங்க இப்ப கடைசிலே சொன்னீங்களே, அதுதான் பல்லவி” ன்னு ஸ்ரீதர் சொன்னார்.

கண்ணதாசனுக்கும், விஸ்வநாதனுக்கும் ஆச்சர்யம் & அதிர்ச்சி. “நான் உளறினதை ட்யூன்ங்கறார், நீங்க “வேலை குடுடா விஸ்வநாதான்னு சொன்னதை பல்லவீங்கறார். ஸ்ரீதருக்கு என்ன ஆச்சு? என்னண்ணே இது?”ன்னு விஸ்வநாதன் கேட்டார்.

“இத பார் விசு. இது நமக்கொரு challenge. நீ கத்தினதுதான் ட்யூன், நான் சொன்னதுதான் பல்லவி. அம்புட்டுதான். ட்யூன் போடு விசு” னார்.

சரீன்னுட்டு ரெண்டு பேரும் அவங்கவங்க வேலைய ஆரம்பிச்சுட்டாங்க. MSV சொன்ன “ஐசனோவர் ஆவலோவா” வை, “வேலை கொடு விஸ்வநாதா”ன்னு வரிகளை போட்டாங்க. MSV அதில ஒரு திருத்தம் சொன்னாரு. “அண்ணே, பாலையா பெரியவர், முதலாளி. ஆனா ரவிச்சந்திரன், புதுமுகம், சின்ன வயசுக்காரர். பாலையாட்ட வேலை செஞ்சவர். முதலாளியை எப்படி “விஸ்வநாதா வேலை கொடு”ன்னு மரியாதை இல்லாம கேட்க முடியும்?”ன்னு கண்ணதாசன்ட்ட சொன்னார். இதை கவிஞரும் ஒத்துகிட்டார்.

கவிஞர் “சரி, இப்டி செய்வோம். “விஸ்வநாதா வேலை கொடு”ங்கறதை, “விஸ்வநாதன் வேலை வேணும்”னு போட்டுர்வோம்.”ன்னு சொன்னார். அவ்ளோதான். “தனன தனன”ன்னு MSV ட்யூன் போட, கவிஞர் மளமளன்னு பாட்டெழுத ஆரம்பிச்சுட்டார். 

இப்டித்தாங்க காதலிக்க நேரமில்லை படத்ல, “விஸ்வநாதன் வேலை வேணும்” வந்துச்சு.


- மின்னம்பலம் 

Heezulia  மீண்டும் சந்திப்போம்  
heezulia
heezulia
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 610
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 193

Back to top Go down

best Re: திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?

Post by SK on Mon Mar 19, 2018 4:07 pm

இதை ஒருமுறை MSV பொதிகை தொலைக்காட்சி பேட்டியில் கூறினார்

சூப்பருங்க சூப்பருங்க


SK
SK
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8072
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1548

Back to top Go down

best Re: திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?

Post by heezulia on Mon Mar 19, 2018 5:50 pm

19.03.2018 

அட, நீங்க பொதிகைல்லாம் பாக்குறீங்களா? அப்ப நல்ல பையன்தான். 

Heezulia
heezulia
heezulia
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 610
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 193

Back to top Go down

best Re: திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?

Post by SK on Mon Mar 19, 2018 5:53 pm

@heezulia wrote:19.03.2018 

அட, நீங்க பொதிகைல்லாம் பாக்குறீங்களா? அப்ப நல்ல பையன்தான். 

Heezulia
மேற்கோள் செய்த பதிவு: 1263026

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 6 1571444738 திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 6 1571444738


SK
SK
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8072
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1548

Back to top Go down

best Re: திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?

Post by heezulia on Mon Mar 19, 2018 5:59 pm

19.03.2018

என்ன செந்தில், சும்மா ஒரு பேச்.........சுக்கு சொன்னா........................., அதுக்குள்.............ள சந்தோஷப்பட்டுகினீங்க. 

Heezulia
heezulia
heezulia
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 610
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 193

Back to top Go down

best Re: திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?

Post by SK on Mon Mar 19, 2018 6:02 pm

இதற்கும் நன்றி தான்
திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 6 1571444738 திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 6 1571444738


SK
SK
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8072
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1548

Back to top Go down

best Re: திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?

Post by heezulia on Mon Mar 19, 2018 8:49 pm

19.03.2018 

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 6 3838410834   திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 6 103459460


Heezulia
heezulia
heezulia
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 610
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 193

Back to top Go down

best Re: திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?

Post by பழ.முத்துராமலிங்கம் on Tue Mar 20, 2018 12:20 pm

பேபி உங்கள் பதிவுகள் அனைத்தும் சினிமா துறையில் ஒவ்வொரு காலக்கட்டதில்
ஒரு படம் எப்படி உருவானது அதன் பின்னனி மற்றும் பிரச்சனை
அனைத்தையும் பதிவிட்டு அசத்தியுள்ளீகள்
நன்றி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13446
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3392

Back to top Go down

best Re: திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?

Post by heezulia on Tue Mar 20, 2018 7:06 pm

20.03.2018

நன்றி முத்து சார்.

நூத்துக்கணக்கா....................ன தகவல்கள் இருக்கு சார். நேரந்தான் பத்தல.

அதுக்குன்னு, சரியா பத்தவைங்க பத்தும்னு சொல்லாதீங்க. 

Heezulia 
heezulia
heezulia
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 610
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 193

Back to top Go down

best Re: திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?

Post by SK on Wed Mar 21, 2018 10:30 am

இந்தாங்க 10
திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 6 47D28owaQfuHHv49j314+10_hot
இப்போ பதுதான்னு பாருங்க


SK
SK
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8072
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1548

Back to top Go down

best Re: திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை