உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 9:15 am

» வேலன்:-வார்த்தைகளை கண்டுபிடிக்கும் கட்டங்கள் உருவாக்க-Word Search Architect
by மாணிக்கம் நடேசன் Today at 8:49 am

» நீடுழி வாழ்க இவர்கள் சமூகம்.
by T.N.Balasubramanian Today at 8:34 am

» வேலன்:-பிரிண்ட் செய்கையில் இங்க்கினை மிச்சப்படுத்த -Clever Print.-abelssoft
by velang Today at 7:54 am

» நியூயார்க்கில் குறைகிறது கொரோனா பாதிப்பு
by ayyasamy ram Today at 7:16 am

» கொரோனா பீதியால் கப்பலில் இருந்து கடலில் குதித்து பயணிகள்
by ayyasamy ram Today at 7:13 am

» சராசரி வெப்பநிலை நாடு முழுதும் குறைவு
by ayyasamy ram Today at 7:03 am

» கிளிண்டன்-மோனிகா உறவை அம்பலப்படுத்திய லிண்டா காலமானார்
by ayyasamy ram Today at 6:59 am

» ஒன்றல்ல,இரண்டல்ல பரிசோதனையில் 10 மருந்துகள்:டிரம்ப்
by ayyasamy ram Today at 6:56 am

» தமிழர்கள் இவ்வளவு பழமையானவர்களா?
by சக்தி18 Yesterday at 8:02 pm

» 15 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» கொரொனா ஆபத்தை முன் கூட்டியே சொன்ன இளம் சோதிடர் அபிக்கியா
by சக்தி18 Yesterday at 7:59 pm

» சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்கள்
by ஞானமுருகன் Yesterday at 7:56 pm

» Prabhakaran - Vaazhvum Maranamum ~ Pa. Raghavan
by i6appar Yesterday at 6:29 pm

» கேட்டதும்.., கொடுப்பவனே..?, கிருஷ்ணா..!, கிருஷ்ணா..!, கீதையின்..!, நாயகனே..?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கடவுள் ஏன் கல்லானான்-
by ayyasamy ram Yesterday at 4:34 pm

» மலர்களே மலர்களே இது என்ன கனவா
by ayyasamy ram Yesterday at 4:29 pm

» தத்துவம் மச்சி தத்துவம்
by ayyasamy ram Yesterday at 4:25 pm

» எங்கிருந்தாலும் வாழ்க
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» வாழ்க்கை தத்துவம்!
by ayyasamy ram Yesterday at 3:08 pm

» என் குட்டித் தேவதைக்கு…
by ayyasamy ram Yesterday at 3:04 pm

» உணர்ந்துகொள் !
by ayyasamy ram Yesterday at 3:04 pm

» தேடல்!- அவள் விகடனில் வாசித்த ஒரு சிறு கவிதை.
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» – பிரிவிற்குப் பிறகான காலம் –
by ayyasamy ram Yesterday at 3:02 pm

» வசந்தத்தில் வேம்பின் இனிப்பு!
by ayyasamy ram Yesterday at 3:01 pm

» ஹைட்ராக்சிகுளோரோகுயின் என்கிற மருந்து...
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:17 am

» சென்னையில் ஸ்விக்கி, ஸொமேட்டோ மூலம் காய்கறிகள் விநியோகம்
by ayyasamy ram Yesterday at 8:46 am

» அம்பேத்கா் பிறந்த நாள் விடுமுறை தினமாக அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 8:39 am

» இராவண - அமிஷ் திரிபாதியின் நாவல் கிடைக்குமா
by kargan86 Wed Apr 08, 2020 10:06 pm

» புத்தகம் கிடைக்குமா
by kargan86 Wed Apr 08, 2020 9:57 pm

» மேத்தா காமிக்ஸ் பகுதி - 1
by kargan86 Wed Apr 08, 2020 9:41 pm

» நாவல்கள் வேண்டும்
by kargan86 Wed Apr 08, 2020 9:35 pm

» கொரோனா வைரஸின் ’வீக் பாய்ண்ட்’ கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஆய்வாளர்கள்
by ayyasamy ram Wed Apr 08, 2020 8:45 pm

» கொரோனா வைரஸ்:காசநோய் பி.சி.ஜி தடுப்பூசி பயன்படுத்தும் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இறப்பு விகிதம் 6 மடங்கு குறைவு
by ayyasamy ram Wed Apr 08, 2020 8:41 pm

» தமிழ் கடவுள் முருகன் பக்தி பாடல்கள்
by ayyasamy ram Wed Apr 08, 2020 7:06 pm

» கருத்துள்ள தத்துவ பாடல்கள்
by ayyasamy ram Wed Apr 08, 2020 6:58 pm

» கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - ஏப்ரல் 8
by ayyasamy ram Wed Apr 08, 2020 6:12 pm

» கொரோனாவை விரட்ட எல்இடி சார்ந்து இயங்கும் இயந்திரம் கண்டறிந்த ஐஐடி மாணவர்கள்
by பழ.முத்துராமலிங்கம் Wed Apr 08, 2020 4:19 pm

» கொரானாவிற்கு ஏன் இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை
by சக்தி18 Wed Apr 08, 2020 4:19 pm

» துபை: தொற்று பாதித்தவர்களுக்கு முன்னின்று உதவிய இந்திய சமூக ஆர்வலருக்கு கரோனா
by சக்தி18 Wed Apr 08, 2020 4:17 pm

» மகிழ்ச்சியின் மந்திரச்சாவி Ichigyo - Zammai
by சக்தி18 Wed Apr 08, 2020 4:07 pm

» உடற்பயிற்சிகள் செய்யும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவை.
by ayyasamy ram Wed Apr 08, 2020 3:33 pm

» அமெரிக்காவில் கொரோனா தடுப்பு பணிகளில் 40 ஆயிரம் ராணுவ வீரர்கள்
by ayyasamy ram Wed Apr 08, 2020 3:16 pm

» மகா பெரியவா பக்தர்கள்-- தீபம் ஏற்றி வைத்துப் பிரார்த்திப்போம்.
by T.N.Balasubramanian Wed Apr 08, 2020 11:25 am

» மாணவர்கள் இணையதளம் மூலம் சுயமாகக் கற்கலாம்
by ayyasamy ram Wed Apr 08, 2020 11:22 am

» வேலன்:-கணிணியில் உள்ள சாப்ட்:வேர்களின் கீ யை கண்டுபிடிக்க.-My Key Finder.abelssoft
by velang Wed Apr 08, 2020 9:10 am

» வேலன்:-ஹார்ட்டிஸ்கினை பரிசோதிக்க-CheckDrive.-Abelssoft
by velang Wed Apr 08, 2020 9:08 am

» உனக்கான உணவை உற்பத்தி செய்ய பழகு...!!
by ayyasamy ram Wed Apr 08, 2020 8:57 am

» இஞ்சி, தனியா, கறிவேப்பிலை, வேப்பம் பூ என, இந்த நான்கில், ஏதாவது ஒரு துவையல் தினசரி உணவில் இருக்க வேண்டும்.
by ayyasamy ram Wed Apr 08, 2020 8:35 am

» சளி, இருமல் போன்ற உபாதைகள் வராமல் தடுக்கும் உணவுகளை சாப்பிடுவது நல்லது.
by ayyasamy ram Wed Apr 08, 2020 8:33 am

Admins Online

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?

best திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?

Post by heezulia on Sun Dec 17, 2017 2:18 pm

First topic message reminder :

17.12.2017

கர்ணன் vs வேட்டைக்காரன்

ரஜனி / கமல், விஜய் / சூர்யா மாதிரி அப்போ சிவாஜி / MGR. இவங்க படங்கள் ரிலீஸ் ஆனா, அவங்கவங்க ரசிகர்கள் மோதிக்குவாங்களாம்.

பந்துலு எக் ............. கச்சக்கமான செலவுல கர்ணன் படத்தையும், திருமுகம் கொறஞ்.................ச பட்ஜெட்ல வேட்டைக்காரன் படத்தையும் எடுத்தாங்களாம். கர்ணன் படத்ல முன்னணி நட்சத்திர கூட்டம். பாதி படம் முடிஞ்சிருச்சாம். மீதி படத்தை எடுக்கவும் ஆரம்பிச்சாச்சாம். ஆனா வேட்டைக்காரன் படத்தை அப்பதான் எடுக்க ஆரம்பிச்சாங்களாம்.

பந்துலு கர்ணன் படத்தை பொங்கல் அன்னிக்கி ரிலீஸ் செய்ய சுறுசுறுப்பா வேல செஞ்சுட்டு இருந்தாராம். அப்போ ஒருத்தர் பந்துலுட்ட ஒரு விஷயத்தை சொல்லியிருக்கார். பந்துலு யோசிக்க ஆரம்பிச்சுட்டாராம். அந்த ஆள் சொன்ன விஷயம் என்ன............? கர்ணன் ரிலீஸ் ஆகிற அன்னிக்கே, திருமுகம் வேட்டைக்காரன் படத்தை ரிலீஸ் செய்ய போறதா.

ரெண்டு மெகா ஸ்டார் படங்கள் ஒண்ணா ரிலீஸ் ஆனா நல்லா இருக்காதே, வசூல் அடிபடுமேன்னு பந்துலு நினைச்சு, தமது குழுவினருடன் பேசினாராம். சிவாஜி காதிலும் போட்டு வச்சாங்க. அவரும் யோசனை செய்ய ஆரம்பிச்சுட்டாராம். வேட்டைக்காரன் படத் தயாரிப்பாளர் தேவரையும் கூப்ட்டு பேசியிருக்காங்க. ஆனா இவங்கல்லாம் என்னதான் பேசினாலும், MGR தான் ரிலீஸ் date சொல்லணுமாமே. ஒரு வாரம் கழிச்சு படத்தை ரிலீஸ் செய்யலாம்னு அவர்ட்ட எப்படி, யார் சொல்றது? அப்புறமா ஒருத்தர் ஒரு ஐடியா சொன்னாராம். MGR க்கு கர்ணன் படத்தை தனியா போட்டு காட்டிட்டு, அதுக்கப்புறமா ரிலீஸ் பத்தி பேசலாம்னு முடிவு செஞ்சாச்சாம். MGRட்ட போய் சொன்னாங்களாம். அவரும் படத்தை பார்க்க உம் சொல்லிட்டாராம்.

படத்தை பார்த்த MGRக்கு சிவாஜியின் நடிப்பு ரொம்ப புடிச்சு போச்சாம். "நடிப்புக்குன்னே பொறந்தவர்யா. மனுஷன் கர்ணனாவே வாழ்ந்திருக்கார்"ன்னு பாராட்டினாராம். பந்துலு உள்பட, எல்லா கலைஞர்களையும் மனசா................ர புகழ்ந்தாராம். படத்தின் வெற்றிக்கு வாழ்த்து சொல்லிட்டு போய்ட்டாராம். இப்படிப்பட்ட சமயத்தில் ரிலீஸை பத்தி பேச எல்லாரும் தயங்கினாங்களாம். வேட்டைக்காரன் படத்தை ஒரு வாரம் கழிச்சு ரிலீஸ் பண்றத பத்தி எப்படி பேசுறது?
மறுநாள். தேவரை கூப்ட்டுட்டு MGR ஐ பாக்க போனாங்களாம். விஷயத்தை சொல்லியிருக்காங்க. "படத்தை பார்த்தேன். ப்ரமாதமாய், ப்ரமாண்டமாய் இருக்கு. நண்பர் சிவாஜியும் நல்லாவே நடிச்சிருக்கார். சரி, ஒண்ணு செய்ங்க, ரெண்டு படத்தையும் ஒண்ணாவே ரிலீஸ் செஞ்சிருங்க. ரெண்டு பேர் ரசிகர்களும் பார்த்து ரசிச்ச மாதிரி இருக்கும்ல. ரெண்டு பேர் ரசிகர்களும் ரெண்டு படத்தையும் பார்க்கட்டுமே. எல்லாரும் சந்தோஷப்படுவாங்க".

வேற வழி? அப்டீ இப்டீன்னு ரெண்டு படங்களும் 14.01.1964 ல ரிலீஸ் ஆயிருச்சு. கர்ணன் ரிலீஸ் ஆன தியேட்டர்கள்ல பிரமாண்டமான பேனர்கள். படத்தை பார்த்தவங்க பாராட்டினாங்களாம். ஆனா அவ்ளோ பணம் செலவழிச்சு எடுத்த கர்ணன், வேட்டைக்காரன் மாதிரி வெற்றி பெறலியாம். ஆனா பாருங்க, 2012ல வெளியான டிஜிட்டல் படம் ஓஹோன்னு ஓடுச்சாம்.

ஆனா வேட்டைக்காரன் ரிலீஸ் ஆன தியேட்டர்களில் என்ன செஞ்சாங்க தெரியுமோ? தேவர் ஃபிலிம் ஆச்சே. நிஜமான கூண்டு வச்சு, நிஜமான புலியையும் கூண்டுக்குள்ள வச்சுட்டாங்களாம். இந்தப் புலியை பார்க்குறதுக்குன்னே .............. கூட்டம் கூடுச்சாம். Low பட்ஜெட் படம் வசூலை குவிச்சுதாம். இதுக்கு MGR என்ன செஞ்சார் தெரியுமா? பந்துலுவுக்கு 1965ல ஆயிரத்தில் ஒருவன் படத்திற்கு வாய்ப்பு கொடுத்தாராம். நல்ல லாபம் அள்ளிக் கொடுத்த படமாச்சே. கன்னாபின்னான்னு ஓடின படமாச்சே. நல்ல மனுஷர்தானே MGR.


Baby Heerajan மீண்டும் சந்திப்போம்
heezulia
heezulia
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 610
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 193

Back to top Go down


best Re: திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?

Post by பழ.முத்துராமலிங்கம் on Tue Jan 30, 2018 7:29 pm

பேபி ரொம்ப சந்தோஷம்.
இந்த சினிமா கொட்டகை கிராமத்தின்
வசந்த மாளிகை. கிராம மக்களின்
பொழுது போக்கிடம் சினிமா தான்.
பீம்சிங்யின் அனைத்து படங்களும்
''பா'' சிரியல்
சிவாஜியின் அனைத்தும் பார்த்திருப்பேன்.
தாத்தா சிவாஜி படத்தை தான் அதிகம்
வாங்கி திரையிடுவார் விலை கம்மி.
எம்ஜிஆர் படம் எப்போதும் விலை அதிகம்.
சில நேரங்களில் ஓசியாக துக்ளக்
மிக மிக தள்ளுபடி விலையில்
காந்தா ராவ் படம் ,டிஆர் மகாலிங்கம்,
எஸ்எஸ் ஆர் , ஜெமினி கனேசன்
ஜெயசங்கரின் சிஐடி சங்கர்,பூம்புகார்
போன்றவைகளும் வரும்.

லீவு நாட்களில் மட்டுமே சினிமா.
படிப்பில் கிராமத்து பள்ளியில்
முதல் மூன்று இடங்களில்.
நன்றி பேபி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13704
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3518

Back to top Go down

best Re: திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?

Post by heezulia on Tue Jan 30, 2018 10:37 pm

30.01.2018 

அட்ரா சக்க அட்ரா சக்க அட்ரா சக்க, முத்து சார்.  

நல்லாதான் படிச்சிருக்கீங்க. அது சரி.................., நீங்க முதல் மூன்றாவது ரேங்க்னா, உங்க கிளாஸ்ல மொத்தம் எத்தன பேர்? 

பீம்சிங் பாம்சிங் ஆனதை பற்றி நான் எழுதினதுல இருந்து, எனக்கு பீம்சிங் பேர் மறந்து போச்சு. பாம்சிங்னுதான் ஞாபகத்துக்கு வருது. வசந்த மாளிகையில நீங்க பார்த்த படங்களை நீங்க ஒரு அலசு அலசிட்டீங்க. 

Heezulia  
heezulia
heezulia
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 610
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 193

Back to top Go down

best Re: திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?

Post by பழ.முத்துராமலிங்கம் on Wed Jan 31, 2018 1:59 pm

@heezulia wrote:30.01.2018 

அட்ரா சக்க அட்ரா சக்க அட்ரா சக்க, முத்து சார்.  

நல்லாதான் படிச்சிருக்கீங்க. அது சரி.................., நீங்க முதல் மூன்றாவது ரேங்க்னா, உங்க கிளாஸ்ல மொத்தம் எத்தன பேர்? 

பீம்சிங் பாம்சிங் ஆனதை பற்றி நான் எழுதினதுல இருந்து, எனக்கு பீம்சிங் பேர் மறந்து போச்சு. பாம்சிங்னுதான் ஞாபகத்துக்கு வருது. வசந்த மாளிகையில நீங்க பார்த்த படங்களை நீங்க ஒரு அலசு அலசிட்டீங்க. 

Heezulia  
மேற்கோள் செய்த பதிவு: 1258352
கிளாசில் முப்பது பேர்
இப்போது வருடத்திற்கு
இரண்டு படங்கள் கூட
பார்ப்பதில்லை.
பீம்சிங் இந்த பெயரை
எப்படி மறுப்பது
சிவாஜி கணேசன்
அவர்களை திரையுலகில்
ஜொலிக்க வைத்தவர்.
நன்றி
பேபி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13704
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3518

Back to top Go down

best Re: திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?

Post by heezulia on Tue Feb 20, 2018 3:08 pm

20.02.2018

சினிமாவை கலர்ல எடுக்க தொடங்கிய காலம். எம்.ஜி.ஆர்.என்ன செஞ்சார்னா, தன்னை வச்சு கருப்பு வெள்ளை படங்கள் எடுத்த தயாரிப்பாளருங்களுக்கு, தானே வாலன்டியரா போயி, கலர் படம் எடுக்க கால்ஷீட் கொடுத்தாராம். 
 
எம்.ஜி.ஆரை வச்சு சதிலீலாவதி படத்தை கருப்பு வெள்ளைல எடுத்த SS வாசன்,  நாமும் அவரை வச்சு  கலர் படம் எடுக்கலாமேன்னு யோசிச்சார். கதையை தே......................டு தேடுன்னு தேடினார். கடேசில ஹிந்தி படம் ஒண்ணு மாட்டுச்சு. தர்மேந்திரா நடிச்ச 'ஃபூல் ஒளர் பத்தர்' என்ற படம். 

இந்தப் படத்தில, ஹீரோ ஒரு குடிகார திருடன். அதனால முரடன். எல்லாரும் அவன பார்த்து பயப்பட்றாங்க. அவன் இருக்கிற இடத்ல, யார்கூடவும் பழக்கமில்ல. அவனை பார்க்கிறவங்க பயந்து ஓடினாங்க. அப்புறம் எப்படி மத்தவங்க கூட பழக முடியும்? ஆனா இவன் என்னடான்னா போலீஸுக்கு பயந்து ஓடினான். திருடனாச்சே, போலீஸ் துரத்தினாங்க. விட்ருவாங்களா? 

ஒரு இடத்தில இவன் திருட போறான். திருட போனா, திருடிட்டு வரவேண்டியதுதானே. அங்க ஒரு விதவையை பாக்றானாம். அவளை கூடவே.......................... தாவ்வீட்டுக்கு கூட்டியாரானாம். தேவயா? கடேசில அவளை கல்யாணம் செஞ்சுகுறான். இதுல வே..........ற அந்த திருட்டுகும்பல்ல ஒரு பொண்ணாம். அந்த பொண்ணுக்கு வேற வேல இல்ல போல, இவன லவ்வுது. அப்..........................டி போவுது கத. 

இந்தப் படத்தை எம்.ஜி.ஆருக்கு போட்டு காட்றாங்க. அவர் சும்மா இருப்பாரா? தமிழ் படத்துக்கு ஏத்த மாதிரியும், தனக்கு சரிப்பட்டு வர்ற மாதிரியும் அங்கங்க மாத்தினார். எப்டீ.....................?

யாருமில்லாத ஒரு சின்ன பையன். அவனுக்கு பசிக்குது. யாரும் சாப்பாடு குடுக்கல. என்ன செய்வான் பாவம்? திருடுறான். திருடிகிட்டே.............. பெரியவனாகிறான். பெரியவன் ஆனப்புறம் என்ன மாறவா போறான்? அப்பவும் திருடன்தான். போலீஸ் துரத்துது. ஆனா நல்லவன். திருடின பணத்துல ஏழைங்களுக்கு உதவுறான். 

அங்க ஒரு மோசமான கும்பல். அந்த கும்பல்ல உள்ளவங்க, அவங்க  தேவைங்களுக்காக, கெட்ட கெட்ட பழக்கத்தல்லா...........ம் அவனுக்கு சொல்லி குடுத்துர்றாங்க. அந்த கும்பல்ல ஒரு பொண்ணு. அவ இவனை லவ்வுறா. 

இவன் ஒரு இடத்தில திருட போறான். அங்க ஒரு விதவை பொண்ணு ஒரு ஆபத்துல சிக்கியிருக்கா. அவளை காப்பாத்தி தன் கூட கூட்டியாந்துர்றான். ஹிந்தி படத்தில விதவை பொண்ண கல்யாணம் செஞ்சுக்கிற மாதிரி இல்லாம, இதுல அவளை சகோதரியாய் நினைக்கிறான். இந்த சகோதரி, சகோதரனை திருத்த ட்ரை பண்றா. 

திடீர்னு அவன் இருக்கிற ஊர்ல தீப்பிடிக்குது. இவன் நிறைய பேரை காப்பாத்துறான். ஆனா அவன் தீக்கு நடுவில மாட்டிக்கிறான். ஆபத்தான நிலையில இருக்கான். இந்த தீ விபத்தில மாட்டிகிட்டவங்களை, தன் உயிருக்காக கூட பயப்படாம, மத்தவங்களை காப்பாத்தினான்ல, அவனுடைய இந்த  நல்ல குணத்தாள,  எல்லாரும் அவனை புரிஞ்சுக்குறாங்க. அதனால் கடவுள்ட்ட அவன் உயிருக்காக pray பண்றாங்க. பாட்டெல்லாம் பாடறாங்க. 

இப்டீல்லாம் ஜனங்களுக்கு புடிக்கிற மாதிரி, ஹிந்தி கதையில எம்.ஜி.ஆர். changes பண்ணார். 

வசனம் எழுத ஆள் புடிச்சாச்சு, கே. சொர்ணம். அவர் வேலைய ஆரம்பிச்சுட்டார். ஆரம்பத்தில எஸ்.எஸ்.வாசன் எம்.ஜி.ஆர். செஞ்ச மாற்றங்களுக்கு ஒத்துகிட்டதால, ஷூட்டிங் ஆரம்பிச்சாச்சு. 

ஆ.......ங், எனக்கு தெரியும் நீங்க கண்டுபுடிச்சிருப்பீங்க. 

அதே.............தான். ‘ஒளி விளக்கு’. அந்த படத்துக்கு இப்படித்தான் பேர் வச்சுட்டாங்க. எம்.ஜி.ஆரும் இந்தப் படத்தை, தான் நடிச்ச படங்கள்ல, இந்தப் படத்தை நூறாவது படமாக அறிவிச்சாராம். 

அதுக்கப்புறமா பிரச்ன ஆரம்பிச்சிருச்சு. ஆரம்பத்தில எம்.ஜி.ஆர் சொன்ன மாற்றங்களுக்கு “சரி.............சரி.....”ன்னு தலைய ஆட்டிட்டு, அதுக்கப்புறமா கதைல இருந்த மாதிரி படத்தை முடிக்கிறதா சொல்லிட்டாங்க. இதுக்கெல்லாம் எம்.ஜி.ஆர் அவ்ளோ சீக்கிரமா ஒத்துக்குவாரா என்ன. என்ன நடந்துச்சு? ஷூட்....................டிங் நின்...............னு போச்....................சு........................ கொஞ்ச நாளாச்சு. ஷூட்டிங் நடக்கல.  ரெண்டு பார்ட்டியும் உக்காந்து பேசி, ஒரு வழிக்கு வந்துட்டாங்க. என்ன பண்றது, படம் முன்னேறணுமே. ஷூட்டிங்கும் தொடர்ந்துச்சு. 

MGR தீ விபத்தில சிக்கி, உயிருக்கு போராட்ற சமயத்தில ஒரு பாட்டு இருக்குல்ல, வாலி எழுதிய “ஆண்டவனே உன் பாதங்களை”னு ஒரு பாட்டு, இந்தப் பாட்டோட காட்சிகளை, MGR விருப்பப்படி, கதைப்படி ஷூட் செஞ்சாங்களாம்.  

அந்த ஹிந்தி பாட்டு


https://www.youtube.com/watch?v=k0qCqt4IWgc

MGR நடிச்ச நிறை...............ய படங்கள் இப்டி ப்ரச்னை வந்துதான் ஷூட்டிங் நடக்குமாம். இவருக்கு புடிச்சது தயாரிப்பாளர்களுக்கு புடிக்காது, அவங்களுக்கு புடிக்காதது இவருக்கு புடிக்கும். தயாரிப்பாளர்கள் கதைப்படி எடுக்கணும்னு சொல்வாங்க. எம்.ஜி.ஆரோ கருத்துப்படிதான் எடுக்கணும்பார். 

படத்தை பாக்குறவங்களுக்கு நல்ல கருத்தை சொல்லணும், நம்பிக்கையை கொடுக்கணும், தன் படத்தை பாத்துட்டு ஜனங்கள் நல்ல வழியில நடக்கணும், அதே சமயத்தில படமும் எல்லா.....ரும் விரும்பும்படி ஜனரஞ்.................சகமா இருக்கணும்னு பெரும்பாலும் MGR விரும்புவாராம். அதுவும் சரிதானே. 

இதுலதான், இவருக்கும், அவங்களுக்கும் முரண்பாடு ஏற்படும். ஆனா படம் ரிலீஸ் ஆச்சுன்னா, படம் ஓஹோ...................ன்னு ஓடி, வசூல் பிச்..............சுகிட்டு போகுமே, அப்போ ரெண்டு பேருமே சேக்கா போட்டுக்குவாங்க. அப்புறமா பாருங்களேன், அதே..... தயாரிப்பாளருங்க, MGR வீட்ல போயி, அவரோட கால்ஷீட்டுக்காக தேவுடு காப்பாங்களாம்.  

இதெல்லாம் வாழ்க்கைல ஜகஜம்ப்பா. 
 

- Oneindia Tamil

Heezulia  மீண்டும் சந்திப்போம்
heezulia
heezulia
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 610
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 193

Back to top Go down

best Re: திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?

Post by SK on Tue Feb 20, 2018 5:07 pm

ஒளி விளக்கு

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 5 3838410834 திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 5 3838410834


SK
SK
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8074
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1554

Back to top Go down

best Re: திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?

Post by மூர்த்தி on Tue Feb 20, 2018 8:54 pm

நன்றி. ஆஷா போஷ்லே பாடிய இனிமையான ஆனால் சோகப்பாடல். நேரடியாக இணைத்திருக்கலாமே!

மேலே மனுவில் YouTube  ஐகானை கிளிக் செய்து லிங்கை ஒட்டி insert . அவ்வளவுதானே!

மூர்த்தி
மூர்த்தி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1046
இணைந்தது : 07/06/2016
மதிப்பீடுகள் : 506

Back to top Go down

best Re: திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?

Post by heezulia on Tue Feb 20, 2018 9:20 pm

20.02.2018 

நீங்க சொன்னபடிதான் செஞ்சேன் மூர்த்தி. ஆனா எனக்கு வரலியே. இதுக்கு முன்னால Youtube அனுப்பியிருக்கேன். ஆனா இந்த தடவ வரமாட்டேன்னு என்கூட டூ விட்டுருச்சு போல. என்னன்னு தெரியல. அதுக்கு நான் என்ன செஞ்சேன் மூர்த்தி? நீங்கதான் கேட்டு சொல்லுங்க.  ஆனா இப்ப ட்ரை செய்யலாமேன்னு செஞ்சேன். வந்துருச்சு பாருங்க. என்கூட சேக்கா போட்டுருச்சு. அப்போ என்னவோ கோவம் போல. 

மூர்த்தி, மூர்த்தி, அதை நீங்க ஏதாவது செஞ்சுராதீங்க. பாவம். இப்பதான் சரியாபோச்சுல்ல. விட்ருங்க. 

Heezulia
heezulia
heezulia
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 610
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 193

Back to top Go down

best Re: திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?

Post by மூர்த்தி on Wed Feb 21, 2018 12:04 pm

உங்களுக்கு  YouTube  காணொளி இணைப்பதில் பிரச்சனை ஏற்பட்டது  உண்மைதான் .
அதற்கு காரணம் YouTube  காணொளிகளை upload செய்யும் போது upload செய்பவர்கள் சில வசதிகளை டிசபிள் செய்து விடுவார்கள். அதாவது வேறொரு தளத்தில் பார்க்க முடியாமல், எம்பெட் செய்ய முடியாமல், தனிப்பட்ட காணொளியாக இப்படி சில வசதிகளை நீக்கி விட்டால்  அவை வேறு பக்கங்களில் செயல்படாது.

அப்படி எம்பெட்  முறை  டிசபிள் செய்தால் வேறு பக்கங்களில் பார்க்க முடியாது,மீண்டும் YouTube  ஐ கிளிக் செய்து அங்கே சென்று பார்க்க வேண்டும்.
மூர்த்தி
மூர்த்தி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1046
இணைந்தது : 07/06/2016
மதிப்பீடுகள் : 506

Back to top Go down

best Re: திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?

Post by heezulia on Wed Feb 21, 2018 12:07 pm

21.02.2018

சத்யா ஸ்டூடியோ. MGR படம். படப்பிடிப்பு நடந்துட்டு இருந்துச்சு. MGR படம்னா அவரும் அங்க இருந்திருப்பார்ல. நான் சொல்றது சரியா? ஆமா  அவர் அங்க இருந்தார். கவிஞர் முத்துலிங்கம்  வந்தார், அதுவும் MGRஐ பார்க்க. பார்த்தார்.

MGR கேட்டார், “இந்தப் படத்தில எந்த பாட்டு எழுதியிருக்கே?” 

“நான் எந்த பாட்டும் எழுதலியே.”

MGRக்கு  அதிர்ச்சியாம். “எழுதலியா? ஏன் எழுதல?”

“என்னை யாரும் பாட்டு எழுத கூப்டல.”

அந்த சமயத்தில, முத்துலிங்கம் பாட்டெல்லாம் ரொம்ப பிரபலமாம். அவர் தன் படத்தில பாட்டு எழுதலேன்னு தெரிஞ்சவுடனே, MGRக்கு கோவம் வந்துருச்சாம். படப்பிடிப்பில நின்னுட்டு இருந்த ப்ரொடக் ஷன் மேனேஜரை கூப்ட்டார்.

“முத்துலிங்கம் பாட்டு இந்தப் படத்தில வேணும்னு சொல்லியிருந்தேனே. ஏன் அவரை கேக்கல?”

“நாங்க பாக்கும்போது அவர் இல்ல”

“இப்பதான் வந்துட்டார்ல. அவர வச்சு ஒரு பாட்டு எழுதி வாங்குங்க.”

“இந்தப் படத்துக்கு தேவையான பாட்டு எல்லாமே........ படமாயிருச்சு. புதுசா எந்த பாட்டையும் சேக்க ச்சான்ஸே..... இல்ல. படம் வேற கடேசி கட்டத்தில இருக்கு. புது பாட்டெல்லாம் சேக்க முடியாது” ப்ரொடக் ஷன் மேனேஜர் சொல்லிட்டார்.

MGRக்கு  ஒரு மா.....திரியா போச்சு. அந்தப் படத்தின் தயாரிப்பாளர் சடையப்ப செட்டியாரையும், டைரக்டர் ஸ்ரீதரையும் கூப்ட்டனுப்பினார். முத்துலிங்கத்தை அவங்கள்ட்ட காட்டி, “இந்தப் படத்தில இவரோட ஒரு  பாட்டை சேக்கணுமே" ன்னு MGR சொன்னார். 

“படம் முடியுற கட்டத்தில இருக்கு. தவிர, பாட்டை சேக்கிற மாதிரி எந்த situationஉம் இந்தப் படத்தில இல்ல.”னு ப்ரொடக் ஷன் மேனேஜர் சொன்னதையே இவங்களும் சொல்லிட்டாங்க. 

“காட்சியும் தேவையில்ல, situationஉம் தேவையில்ல. இவரோட  ஒரு பாட்டை ரெக்கார்ட் செஞ்சுட்டு சொல்லி அனுப்புங்க அதுக்கப்புறம் ஷூட்டிங்கை வச்சுக்கலாம்"னு கண்டிப்பா சொல்லிட்டு  MGR போயிட்டார். 

இந்த சூழ்நிலையில முத்துலிங்கம், “ச்சே, நாம இங்க வரபோயிதானே இப்படிப்பட்ட ப்ரச்ன வந்துருச்சு”ன்னு நெனச்சு வருத்தப்பட்டு நின்னார். 

அப்புறம் என்ன, MGR சொன்ன பிறகு, அதுக்கு அப்பீல் உண்டா? முத்துலிங்கத்துகிட்ட பாட்டை வாங்கி.............., ரெக்கார்ட் செஞ்சு..........., வேற வழி?

அது என்ன பாட்டு? என்ன படம்? MGR கோவத்ல உருவான அந்த பாட்டு, “தங்கத்தில் முகமெடுத்து சந்தனத்தில் உடலெடுத்து"
படம் உங்களுக்கு இப்போ தெரிஞ்சிருக்கும். ஆமா 'மீனவ நண்பன்'.


Heezulia  மீண்டும் சந்திப்போம்
heezulia
heezulia
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 610
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 193

Back to top Go down

best Re: திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?

Post by மூர்த்தி on Wed Feb 21, 2018 12:12 pm

அப்பீல் இல்லைதான். ஆனால் எல்லாப் பதிவிலும் பார்த்தேன். அவருக்கு அடிக்கடி கோபம் வருகிறதே ஏன்?
மூர்த்தி
மூர்த்தி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1046
இணைந்தது : 07/06/2016
மதிப்பீடுகள் : 506

Back to top Go down

best Re: திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?

Post by heezulia on Wed Feb 21, 2018 12:35 pm

21.02.2018

நல்ல வேளை மூர்த்தி, Youtubeட்ட கோபப்படாம பேசி, விஷயத்தை கேட்டுடீங்க. நன்றி மூர்த்தி. 


ஷூட்டிங் ஸ்பாட்ல MGR அப்படித்தான் நடந்துக்குவாராம். அவருக்கு புடிக்காத மாதிரி மத்தவங்க நடந்துட்டாங்கன்னா, packup சொல்லிருவாராம். இப்படி நடந்து, சில படங்களில தயாரிப்பாளர்களுக்கு நஷ்டமும் வந்திருக்காம். தான் சொல்றத மத்தவங்க கேக்கணும்னு நினைப்பு. இல்ல இல்ல, கேட்டுத்தான் ஆகணும்ங்கிறதில உறுதியா இருப்பாராம். 

Heezulia 
heezulia
heezulia
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 610
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 193

Back to top Go down

best Re: திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?

Post by SK on Wed Feb 21, 2018 12:50 pm

@heezulia wrote:21.02.2018

நல்ல வேளை மூர்த்தி, Youtubeட்ட கோபப்படாம பேசி, விஷயத்தை கேட்டுடீங்க. நன்றி மூர்த்தி. 


ஷூட்டிங் ஸ்பாட்ல MGR அப்படித்தான் நடந்துக்குவாராம். அவருக்கு புடிக்காத மாதிரி மத்தவங்க நடந்துட்டாங்கன்னா, packup சொல்லிருவாராம். இப்படி நடந்து, சில படங்களில தயாரிப்பாளர்களுக்கு நஷ்டமும் வந்திருக்காம். தான் சொல்றத மத்தவங்க கேக்கணும்னு நினைப்பு. இல்ல இல்ல, கேட்டுத்தான் ஆகணும்ங்கிறதில உறுதியா இருப்பாராம். 

Heezulia 
மேற்கோள் செய்த பதிவு: 1260147

அப்போ MGR ஒரு angry bird னு சொல்ல வறீங்களாSK
SK
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8074
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1554

Back to top Go down

best Re: திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?

Post by T.N.Balasubramanian on Thu Feb 22, 2018 10:00 am

அதற்கு பெயர் கோபமில்லை.
அதற்கு பெயர் (நான்--என்கின்ற) ego .

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 26222
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9479

Back to top Go down

best Re: திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?

Post by heezulia on Wed Feb 28, 2018 7:33 pm

28.02.2018

பச்சை விளக்கு [1964] – இராம அரங்கண்ணல், இறைமுடிமணி, கதை எழுத, AVM செட்டியார் தயாரிச்ச படம். எஞ்சின் டிரைவர் சிவாஜி. இவரது நண்பர் நாகேஷ். இவங்களுக்காக உருவாக்கப்பட்ட பாத்திரங்கள். ஷூட்டிங் ஆரம்பிச்சாச்சு. பா.....................தி படம் எடுத்தாச்சு. ஆனா, படத்துக்கு இன்னும் பேர் வைக்கல.

சரவணன் ஸ்டூடியோவுக்கு போற வழியில, ஒரு ரெயில்வே கேட் இருந்துச்சாம். இந்த கேட் பக்கத்தில கட்அவுட் வச்சாராம். என்னான்னு? ‘சிவாஜி நடிக்கும்’னு போட்டு, அதுக்கு கீழ ஒரு பச்சை விளக்கு படம். அதுக்கும் கீழ ‘வருகிறது’ னு போட்டு, விளம்பரம் வச்சாங்களாம். இதை பார்த்த ஜனங்க என்ன பேசிக்கிட்டாங்க? AVM படம்னு தெரியுது. சிவாஜி நடிக்கிறார்னும் இருக்குது. ஆனா கதை என்னவா இருக்கும். பச்சை விளக்கு படத்தை போட்டு வச்சிருக்காங்களே. ஒரு வேளை, ரயில் சம்பந்தப்பட்ட படமா இருக்குமோன்னு பேசிக்கிட்டாங்களாம்.

படத்துக்கு என்ன பேர் வைக்கலாம்னு AVM நிறுவனத்தாரும், மத்தவங்களும் பேசினாங்க. இல்ல, விவாதம்மினாங்க. என்ன புரியலியா? விவாதிச்சாங்க. கொஞ்சமாவது புரிஞ்சுதா? இல்லியா? விவாதம் செஞ்சுகிட்டாங்க. அப்பா.................டா, ஓரளவுக்கு புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்.

விளம்பரத்தில, பச்சை விளக்கு படத்தை போட்டு ‘வருகிறது’ன்னு விளம்பரப்படுத்தி இறிருக்கீங்களே. அப்டீன்னா படத்துக்கு ‘பச்சை விளக்கு”ன்னே பேர் வச்சிருங்கன்னு இந்தப் படத்தின் டைரடக்கர் பீம்சிங் சொன்னார். பீம்சிங் கூட சேர்ந்துகிட்டு, வேற சிலரும் அதையே சொன்னாங்க. அப்டீ.............. இப்டீன்னு பச்சை விளக்குன்னே பேர் வச்சுட்டாங்க.

எடுத்த பாதி படத்தை செட்டியார் பார்த்தார். போச்சுடா, அவருக்கு படம் புடிக்கலேன்னுட்டாராம். அம்புட்டு செலவழிச்சுட்டு, இப்டீ சொன்னா எப்டீங்க? அது சரி, அவர்தானே தயாரிப்பாளர். அதனால அவர்தானே கவலைபடணும். படம் புடிக்கலேன்னு என்ன செஞ்சுட்டார்னு தெரியும்ல? வேற கதைய எழுத சொல்லிட்டாராம். அதுக்கப்புறமாத்தான், புஷ்பலதா, AVM ராஜன் பாத்ரதிங்களை உருவாக்கினாங்களாம்.


- பரணி

Heezulia  மீண்டும் சந்திப்போம் 
heezulia
heezulia
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 610
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 193

Back to top Go down

best Re: திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?

Post by heezulia on Sat Mar 03, 2018 1:30 pm

03.03.2018 

ஒரு திரைக்கதையை எழுதுவாங்கஅப்புறமா அதுல யாரை நடிக்க வைக்கலாம்னு தீர்மானம் பண்ணுவாங்க. அப்போ MGR படம்லாம் நல்லா ஓடிட்டிருந்த சமயம். அதனால அவரை வச்சு ஒரு படத்த தயாரிக்கலாமேன்னு AVM சரவணன் ஆசைப்பட்டார். யார்ட்ட போய் கதையை கேக்கலாம்னு யோசிச்சு, திருலோகசந்தரை போய் பார்த்திருக்கார். சரவணன் தன் ஆசையை சொல்லி டிஸ்கஸ் செஞ்சார். அவரும் MGRகுன்னே............ ஒரு கதையை ரெடி செஞ்சுட்டார். 

கண்டுபுடிச்சிருப்பீங்களே, ஆமா, அதே...............தான். அன்பே வா...............

இப்ப செட்டியார்ட்ட எப்டீ சொல்றது? MGRக்காக ஒரு கதை ரெடீ...............யா இருக்கு. அவரை வச்சு படம் எடுக்க போறோம்னு சொன்னா, செட்டியார் ஊஹும்ன்னுர்வாரு.

அந்த சமயத்தில MGR நடிச்ச எங்க வீட்டு பிள்ளை நல்.............லா ஓடிட்டு இருந்துச்சு. அதனால AVMஇன் distributors, MGRஐ வச்சு ஒரு படம் பண்ணலாமேன்னு சரவணன்ட்ட சொல்லியிருக்காங்க. சரவணனும் கொஞ்சம் தைரியத்தை வரவழச்சு, அப்பாட்ட போய் விஷயத்தை சொன்னார். செட்டியார் என்னன்னா, சரீ...........ன்னுட்டார். சரவணனுக்கு ஆச்சரியம்.

சந்தோஷமா MGR வீட்டுக்கு போயி, விஷயத்தை சொன்னார். 
MGRக்கும் AVM படத்தில நடிக்கணும்னு ஆசை இருந்துச்சாம். அந்த சமயத்தில் RM வீரப்பன் MGRஐ வச்சு ஒரு படம் எடுத்துட்டு இருந்தார், நான் ஆணையிட்டால். இந்தப் படத்தை முடிச்சிட்டுதான், AVM தயாரிக்கும் அன்பே வா படத்தில நடிப்பதாக சொல்லிட்டார், MGR. 1965ல எங்க வீட்டு பிள்ளை படம் ஓடிட்டு இருந்ததால, 1966 பொங்கலுக்கு அன்பே வா படத்தை ரிலீஸ் செய்யணும்னு  சரவணன் ஆசைப்பட்டார். ஆனா நான் ஆணையிட்டால் இடையில இருக்கே. இதை எப்ப முடிக்கிறது, அன்பே வா எப்ப ஆரம்பிக்கிறது?

MGRட்ட பேசினதில, RMVட்ட பேசிட்டு சொல்றாதாக சொல்லிட்டார். அப்புறமா சரவணன் MGRஐ போய் பார்த்தப்போ, MGR மூணு லட்சம் கேட்டிருக்கார். ஓரளவு சரவணன் சந்தோஷப்பட்டார், எப்படியோ MGR தாம்படத்தில நடிக்க சம்மதிச்சுட்டார்னு. சரவணன் தன் ஆபீசுக்கு போன கொஞ்ச நேரத்தில, RMV அங்க வந்தார். அன்பே வா ரிலீஸ் ஆனதுக்கு பிறகு, நான் ஆணையிட்டால் படத்தை ரிலீஸ் செய்றதா சொன்னார். சரவணனுக்கு சந்தோஷம் தா.............ங்கல. ஆனா அதுக்குப்பறமா RMV, ஒரு குண்டை தூக்கி போட்டாரு பாருங்க, சரவணனுக்கு அதிர்ச்சி. அன்பே வா படத்தில நடிக்கிறதுக்கு, MGR இன்னும் இருபத்தஞ்சாயிரம் கேக்குறதா சொன்னார், RMV.

MGR அந்தப் பணத்தை கேட்டாரா, இல்ல RMVயே கேட்டாரா, தெரியல.

செட்டியார் இதை கேட்டு வருத்தப்பட்டார்.
MGRக்கு அன்பே வா கதை புடிச்சு போச்சு. கதைப்படி சிம்லாவில நடக்கிறதா இருந்துச்சு. அஞ்சு நாள் சிம்லாவில ஷூட்டிங் நடத்திட்டு, மீதி படத்தை ஊட்டியில எடுத்தாங்க.

முழூ............... படத்தையும் சிம்லால நடக்கிறதாக நம்மள ஏமாத்திட்டாங்களோ?

சிம்லா குளிரில எல்லா...............ரும் நடுங்கிட்டு இருந்தாங்களாம். ஆனா MGR சட்டையில்லாமலேயே, காலை...............ல எந்திருச்சு, வெளிய போயி எக்சர்சைஸ் பண்ணுவாராம்.

இந்தப் படத்துக்கு TR ராமச்சந்திரனை புக் செய்றதா இருந்துச்சாம். செட்டியாரின் விருப்பம். ஆனா MGR தங்கவேலு வேணும்னு சொல்லிட்டாராம். சரீ.................. MGR சொல்லிட்டாரேன்னு தங்கவேலுவை புக் செஞ்சாங்க.
ஒரே பேர் இருக்கிறதால TRR நடிக்கிறது MGRக்கு ego ப்ராப்ளம் இருந்திருக்குமோ?

இந்தப் படத்தின் ஷூட்டிங்ல, சரவணனும், MGRஉம் நெருக்கமாயிட்டாங்களாம். MGRஐ பார்க்க ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சரவணன் அப்பப்போ வந்து, MGRட்ட பேசிட்டு போவாராம். திடுதிப்புன்னு MGR, “இனிமே என்னை பார்க்க இங்க வராதீங்க”ன்னு சரவணன்ட்ட சொல்லிட்டாராம். சரவணனுக்கு அதிர்ச்சி. என்னடா இவர் இப்டி சொல்லிட்டாரேன்னு வருத்தப்பட்டாராம். MGR, “நீங்க இங்க என்னை பார்க்க வந்தா, நான் உங்களுக்கு சரியா கால்ஷீட் கொடுக்கிறதில்ல. அதனாலதான் நீங்க என்னை வந்து பாத்து பேசுறீங்கன்னு மத்தவங்க நெனச்சுருவாங்கல்ல” ன்னு சொன்னாராம். மத்தவங்க MGRஐ பத்தி தப்பா நெனச்சுற கூடாதுங்களாம். இதை கேட்டு சரவணன் ஆச்சரியப்பட்டு போனார்.

- பரணி

Heezulia
heezulia
heezulia
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 610
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 193

Back to top Go down

best Re: திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை