உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» ஐந்து நிலங்கள்!
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:13 am

» மூன்றாம் கட்டத்திற்கு நகரும் கொரோனா... அடுத்தடுத்த நாட்களில் கட்டுப்பாடுகளை கடுமையாக்கும் மத்திய அரசு
by T.N.Balasubramanian Today at 11:12 am

» அல்லல் நீங்க…
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:12 am

» டெல்லி மாநாட்டில் பங்கேற்றதை மறைத்து மலேசியா செல்ல முயன்ற 8 பேர் விமான நிலையத்தில் சிக்கினர்
by T.N.Balasubramanian Today at 11:08 am

» பிரதமரின் வேண்டுகோளை ஏற்று இந்தியா ஓரணியில் திரண்டது; வீடுகளில் மின்விளக்கை அணைத்துவிட்டு மக்கள் விளக்கு ஏற்றினார்கள்
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:06 am

» துளிப்பா
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:56 am

» குலதெய்வத்தை கும்பிடுங்கள்
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:54 am

» வேலன்:-ஹார்ட்டிஸ்கினை பரிசோதிக்க-CheckDrive.-Abelssoft
by மாணிக்கம் நடேசன் Today at 8:58 am

» வேலன்:-கணிணி வேகமாக செயல்பட -JET DRIVE.
by velang Today at 7:25 am

» வாரியாரின் சொற்பொழிவிலிருந்து:
by ayyasamy ram Yesterday at 11:36 pm

» தி.க.சிவசங்கரன் எழுதிய, ‘தாமரை’ இலக்கிய இதழிலிலிருந்து:
by ayyasamy ram Yesterday at 11:32 pm

» கல்கி எழுதிய, ‘படித்தேன், ரசித்தேன்…’ நுாலிலிருந்து:
by ayyasamy ram Yesterday at 11:32 pm

» சுற்றுலா போன சிவசாமி!
by ayyasamy ram Yesterday at 11:25 pm

» ருத்ர முத்திரையை பயன்படுத்தி வெரிகோஸ் வெயின் பிரச்சனையை சரிசெய்யலாம்…!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» தமிழகத்தில் 32 மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு: மாவட்ட வாரியாக முழு விவரம்...
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» இந்தியாவில் 15-ந் தேதி முதல் மீண்டும் ரெயில் சேவை - தயாராக இருக்க அனைத்து மண்டலங்களுக்கும் அறிவுறுத்தல்
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» ஆயுஷ் அமைச்சகம் வௌயிட்டுள்ள ஆலோசனைகள் + ட்விட்டரில் மோடி
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» உன்னோடு ஒரு நிமிஷம் - வெ.இறையன்பு நூலினை டவுன்லோட் செய்ய .
by prajai Yesterday at 6:12 pm

» புத்தகம் கிடைக்குமா
by prajai Yesterday at 6:08 pm

» அங்கேயும் நம்ம ஊரு போலத்தான், ஞாயிற்றுக்கிழமை லண்டன் பூங்காவுக்கு வந்த 3 ஆயிரம் பேர்
by சக்தி18 Yesterday at 5:42 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:41 pm

» வீரமாமுனிவர்
by சக்தி18 Yesterday at 5:39 pm

» பொருத்துக...
by சக்தி18 Yesterday at 5:36 pm

» உன் புன்னகை போதுமடி சில பூக்களும் பூக்குமடி
by சக்தி18 Yesterday at 5:12 pm

» காமராஜரின் தாயார் பெயர் - (குறுக்கெழுத்துப் போட்டி)
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» இறைவனின் கோபம்.......
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:46 pm

» பீலா ராஜேஷுக்கு ப.சிதம்பரம் பாராட்டு
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:44 pm

» எங்கள் நாட்டில் ஒருவருக்கு கூட கொரோனா இல்லை: வட கொரியா
by ayyasamy ram Yesterday at 4:39 pm

» ஆழ்ந்த துாக்கமே ஆரோக்கிய ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» பூமிப்பந்தில் ஒரு பூகம்ப வைரஸ்: வீட்டில் இருங்கள்... விழிப்புடன் இருங்கள்!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:31 pm

» வைரமுத்துவின் நூல்கள் இலவச பதிவிறக்கம்
by BookzTamil Yesterday at 4:17 pm

» மீம்ஸ் "கரோனா " பற்றியது .....
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:15 pm

» கடவுள் பார்க்கும் ஆட்டம்..
by ayyasamy ram Yesterday at 11:16 am

» வட்டியும் முதலும் - ராஜு முருகன்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» அந்த 3 பேரை காணவில்லை.
by T.N.Balasubramanian Yesterday at 10:49 am

» `டவுட் கேட்ட சிறுமி, வீட்டுக்கே வந்த ஆசிரியர்’ - `டீச்சர் ஆஃப் தி இயர்’ என்று புகழ்ந்த நெட்டிசன்கள்
by ayyasamy ram Yesterday at 10:42 am

» விளக்கு ஏற்றுதலும் விஞ்ஞானமும்!
by T.N.Balasubramanian Yesterday at 10:35 am

» பல்லக்கு ஏன் தவறான பாதையில் செல்கிறது?
by ayyasamy ram Yesterday at 7:10 am

» ராபர்ட் கால்டுவெல்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» கவிச்சக்கரவர்த்தி கம்பர்
by ayyasamy ram Yesterday at 7:07 am

» இங்கிலாந்தின் பிரபல டிவி தொடர் குழந்தை நட்சத்திரம் மரணம்
by ayyasamy ram Yesterday at 12:43 am

» நோயாளிகளுக்கு உதவ 'ரோபோ'க்கள் அறிமுகம்
by ayyasamy ram Yesterday at 12:39 am

» ஆஸ்திரேலியாவில் கொரோனா விகிதம் குறைந்தது ; பிரதமர் ஸ்காட் மோரிசன்
by ayyasamy ram Yesterday at 12:36 am

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by prajai Sat Apr 04, 2020 10:06 pm

» நாளை 9 நிமிட லைட் ஆஃப்; மின் தொடரமைப்பில் இப்படியொரு சிக்கல்- எப்படி சமாளிப்பார்கள்?
by krishnaamma Sat Apr 04, 2020 9:37 pm

» உணவுகளின் போட்டோகள் II :)'காரமல்/ caramel பாப்கார்ன் !
by krishnaamma Sat Apr 04, 2020 9:12 pm

» வீட்டிலே popcorn செய்வது எப்படி ? -இனிப்பு / Caramel Popcorn
by krishnaamma Sat Apr 04, 2020 9:01 pm

» சீனாவில் நாளை துக்க தினம் அனுசரிப்பு
by krishnaamma Sat Apr 04, 2020 8:43 pm

» அமெரிக்கர்கள் முகக்கவசம் அணியுங்கள்; ஆனால், நான் அணியமாட்டேன்: டிரம்ப்
by krishnaamma Sat Apr 04, 2020 8:42 pm

» கொரோனா பாதிப்பு - தொடர் பதிவு
by krishnaamma Sat Apr 04, 2020 8:39 pm

Admins Online

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?

best திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?

Post by heezulia on Sun Dec 17, 2017 2:18 pm

First topic message reminder :

17.12.2017

கர்ணன் vs வேட்டைக்காரன்

ரஜனி / கமல், விஜய் / சூர்யா மாதிரி அப்போ சிவாஜி / MGR. இவங்க படங்கள் ரிலீஸ் ஆனா, அவங்கவங்க ரசிகர்கள் மோதிக்குவாங்களாம்.

பந்துலு எக் ............. கச்சக்கமான செலவுல கர்ணன் படத்தையும், திருமுகம் கொறஞ்.................ச பட்ஜெட்ல வேட்டைக்காரன் படத்தையும் எடுத்தாங்களாம். கர்ணன் படத்ல முன்னணி நட்சத்திர கூட்டம். பாதி படம் முடிஞ்சிருச்சாம். மீதி படத்தை எடுக்கவும் ஆரம்பிச்சாச்சாம். ஆனா வேட்டைக்காரன் படத்தை அப்பதான் எடுக்க ஆரம்பிச்சாங்களாம்.

பந்துலு கர்ணன் படத்தை பொங்கல் அன்னிக்கி ரிலீஸ் செய்ய சுறுசுறுப்பா வேல செஞ்சுட்டு இருந்தாராம். அப்போ ஒருத்தர் பந்துலுட்ட ஒரு விஷயத்தை சொல்லியிருக்கார். பந்துலு யோசிக்க ஆரம்பிச்சுட்டாராம். அந்த ஆள் சொன்ன விஷயம் என்ன............? கர்ணன் ரிலீஸ் ஆகிற அன்னிக்கே, திருமுகம் வேட்டைக்காரன் படத்தை ரிலீஸ் செய்ய போறதா.

ரெண்டு மெகா ஸ்டார் படங்கள் ஒண்ணா ரிலீஸ் ஆனா நல்லா இருக்காதே, வசூல் அடிபடுமேன்னு பந்துலு நினைச்சு, தமது குழுவினருடன் பேசினாராம். சிவாஜி காதிலும் போட்டு வச்சாங்க. அவரும் யோசனை செய்ய ஆரம்பிச்சுட்டாராம். வேட்டைக்காரன் படத் தயாரிப்பாளர் தேவரையும் கூப்ட்டு பேசியிருக்காங்க. ஆனா இவங்கல்லாம் என்னதான் பேசினாலும், MGR தான் ரிலீஸ் date சொல்லணுமாமே. ஒரு வாரம் கழிச்சு படத்தை ரிலீஸ் செய்யலாம்னு அவர்ட்ட எப்படி, யார் சொல்றது? அப்புறமா ஒருத்தர் ஒரு ஐடியா சொன்னாராம். MGR க்கு கர்ணன் படத்தை தனியா போட்டு காட்டிட்டு, அதுக்கப்புறமா ரிலீஸ் பத்தி பேசலாம்னு முடிவு செஞ்சாச்சாம். MGRட்ட போய் சொன்னாங்களாம். அவரும் படத்தை பார்க்க உம் சொல்லிட்டாராம்.

படத்தை பார்த்த MGRக்கு சிவாஜியின் நடிப்பு ரொம்ப புடிச்சு போச்சாம். "நடிப்புக்குன்னே பொறந்தவர்யா. மனுஷன் கர்ணனாவே வாழ்ந்திருக்கார்"ன்னு பாராட்டினாராம். பந்துலு உள்பட, எல்லா கலைஞர்களையும் மனசா................ர புகழ்ந்தாராம். படத்தின் வெற்றிக்கு வாழ்த்து சொல்லிட்டு போய்ட்டாராம். இப்படிப்பட்ட சமயத்தில் ரிலீஸை பத்தி பேச எல்லாரும் தயங்கினாங்களாம். வேட்டைக்காரன் படத்தை ஒரு வாரம் கழிச்சு ரிலீஸ் பண்றத பத்தி எப்படி பேசுறது?
மறுநாள். தேவரை கூப்ட்டுட்டு MGR ஐ பாக்க போனாங்களாம். விஷயத்தை சொல்லியிருக்காங்க. "படத்தை பார்த்தேன். ப்ரமாதமாய், ப்ரமாண்டமாய் இருக்கு. நண்பர் சிவாஜியும் நல்லாவே நடிச்சிருக்கார். சரி, ஒண்ணு செய்ங்க, ரெண்டு படத்தையும் ஒண்ணாவே ரிலீஸ் செஞ்சிருங்க. ரெண்டு பேர் ரசிகர்களும் பார்த்து ரசிச்ச மாதிரி இருக்கும்ல. ரெண்டு பேர் ரசிகர்களும் ரெண்டு படத்தையும் பார்க்கட்டுமே. எல்லாரும் சந்தோஷப்படுவாங்க".

வேற வழி? அப்டீ இப்டீன்னு ரெண்டு படங்களும் 14.01.1964 ல ரிலீஸ் ஆயிருச்சு. கர்ணன் ரிலீஸ் ஆன தியேட்டர்கள்ல பிரமாண்டமான பேனர்கள். படத்தை பார்த்தவங்க பாராட்டினாங்களாம். ஆனா அவ்ளோ பணம் செலவழிச்சு எடுத்த கர்ணன், வேட்டைக்காரன் மாதிரி வெற்றி பெறலியாம். ஆனா பாருங்க, 2012ல வெளியான டிஜிட்டல் படம் ஓஹோன்னு ஓடுச்சாம்.

ஆனா வேட்டைக்காரன் ரிலீஸ் ஆன தியேட்டர்களில் என்ன செஞ்சாங்க தெரியுமோ? தேவர் ஃபிலிம் ஆச்சே. நிஜமான கூண்டு வச்சு, நிஜமான புலியையும் கூண்டுக்குள்ள வச்சுட்டாங்களாம். இந்தப் புலியை பார்க்குறதுக்குன்னே .............. கூட்டம் கூடுச்சாம். Low பட்ஜெட் படம் வசூலை குவிச்சுதாம். இதுக்கு MGR என்ன செஞ்சார் தெரியுமா? பந்துலுவுக்கு 1965ல ஆயிரத்தில் ஒருவன் படத்திற்கு வாய்ப்பு கொடுத்தாராம். நல்ல லாபம் அள்ளிக் கொடுத்த படமாச்சே. கன்னாபின்னான்னு ஓடின படமாச்சே. நல்ல மனுஷர்தானே MGR.


Baby Heerajan மீண்டும் சந்திப்போம்
heezulia
heezulia
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 610
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 193

Back to top Go down


best திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?

Post by heezulia on Sat Jan 20, 2018 3:45 pm

20.01.2018 

தங்கை 1967 

திருலோகசந்தருக்கு சிவாஜியை வச்சு இயக்கிய  முதல் படமாம்.  தெலுங்கு படத்தின் ரீமேக்காம். கதையைக் கேட்டதும் சிவாஜி கொஞ்சம் பின்வாங்கினாராம்.  ஏன்னா, இந்தப் படத்தில கொஞ்சம் டான்ஸ் + சண்டை இருக்காம்.  அப்புறமா தி.சந்தர் அவரை கன்வின்ஸ் செஞ்சுட்டாராம்.  இதுல நடிச்சதுக்கப்புறம்தான் மத்த ஆக் ஷன் படங்களில நடிக்க தைரியம் வந்துச்சாம் சிவாஜிக்கு.  

பாட்டெழுத  கண்ணதாசன், ம்யூசிக் போட எம்.எஸ்.வி.யும் ரெடி.  இவங்க கூட சுஜாதா சினி ஆர்ட்ஸ் நிர்வாகிகளும் ரெடி.  அப்புறம் டைரக்டர், தயாரிப்பாளர் இவங்களும் அங்கேதான் இருந்தாங்களாம்.  தி.சந்தர் சீன் சொன்னாராம்.  கே.ஆர்.விஜயா பர்த்டேல  சிவாஜி பாட்டு பாடணுமாம்.  ட்யூன் போட்டுட்டு அப்புறமா பாட்டு எழுதலாமேன்னு நிறைய பேர் சொன்னாங்களாம்.  சரின்ட்டு, எம்.எஸ்.வி. நாலு ட்யூன் போட்டுட்டாராம்.  நாலுமே நல்லா இருந்துச்சாம்.  எல்லாருக்கும் ஒரே குழப்பமா போச்சாம்.  

ஒரு ட்யூன் கண்ணதாசனுக்கு, அதேபோல எம்.எஸ்.விக்கு. தி.சந்தருக்கு, பாலாஜிக்கு இப்படி நாலு ட்யூன்களும் நாலு பேருக்குப் பிடிச்சிருந்துச்சாம்.  நாலு பெரும் அவங்க அவங்கவங்க ட்யூன்தான் எடுத்துக்கணும்னு 
சொன்னாங்களாம்.   

கண்ணதாசனுக்குக் கோபம் பொத்துகிட்டு வந்துச்சாம்.  

கண்ணதாசன் : ஒன்ன யா.............ர்யா நாலு ட்யூன் போடச்சொன்னதுஒரு ட்யூன போட்டு, இந்தா புடிங்கன்னு சொல்ல வேண்டியதுதானே 

ன்னு கத்தினாராம்.  

எம்.எஸ்.வி. : அதுக்கென்னப்பா, சரி, நான் வேணுன்னா விலகிக்கிறேன்.  நீங்க மூணு பெரும் சேர்ந்து ஏதாவது ஒரு ட்யூன செலெக்ட் செஞ்சுக்கோங்கப்பா. 

அந்த சமயத்தில "சார் போஸ்ட்" அப்படீன்னு ஒரு குரல் கேட்டுச்சாம்.
 

உடனே கண்ணதாசன் : ஏம்பா, அந்த போஸ்ட்மேன கூப்பிடுப்பா."

போஸ்ட்மேன் வந்தார்.


கண்ணதாசன் : ஏம்பா போஸ்ட்மேன்,  உன்னால ஒரு காரியம் ஆகணும்ப்பா.

போஸ்ட்மேன் : சொல்லுங்க சார்.

கண்ணதாசன் : ஒரு பர்த்டே பார்ட்டில பாடுற பாட்டு. இப்போ நாலு ட்யூன் போட்டுக் காட்டுவோம், அதுல உனக்கு பிடிச்ச ட்யூனை செலக்ட் செய்.

போஸ்ட்மேன் : சரீங்க சார். சொல்றேன்.

கண்ணதாசன் : விசு, நீ போட்டிருக்கிற அந்த நாலு ட்யூனையும் வாசிச்சுக்காட்டு. இந்த போஸ்ட்மேன் செலக்ட் செய்யட்டும்.

ஒண்ணு, ரெண்டு, மூணு, நாலுன்னு ஒவ்வொரு ட்யூனா எம்.எஸ்.வி. வாசிச்சாராம். போஸ்ட்மேனும் கண்ண மூடி கேட்டாராம்.
  

போஸ்ட்மேன் : சா..............ர், அந்த மூணாவது ட்யூன் ரொம்ப நல்லா இருக்கு சார்.

ஒடனே ஒருத்தருக்கு ரொம்ப சந்தோஷமா இருந்துச்சாம்.  ஏன்னா அவர் சொன்ன ட்யூன்தான் செலெக்ட் ஆச்சாம்.  அது வேற யாருமில்ல, தி.சந்தர்தான்.

"
ரொம்ப தாங்க்ஸ்பா" ன்னு சொல்லி போஸ்ட்மேன அனுப்பி வச்சாங்களாம்.

கண்ணதாசன் உடனே திருதிரு துருதுரு ஆயிட்டாராம். "விசு, நீ அந்த ட்யூனைப் போட ஆரம்பிடேய் பஞ்சு, இங்கே வா, நான் சொல்ல சொல்ல வரிகளை எழுது. " இப்படி சொல்லி வயக்கம்போல பாடல்வரிகளை பிரவாகமாக சொல்ல ஆரம்பிச்சுட்டாராம்.  

இதெல்லாம் உங்களுக்கு தெரிஞ்ச ஸ்டோரிதான்.  எனக்கு இதெல்லாம் சொல்லணும்னு ஆசை.  அந்த பாட்டும் உங்களுக்கு தெரியும்தான். "கேட்டவரெல்லாம் பாடலாம், உன் பாட்டுக்குத் தாளம்.................................... போடலாம்." 

சிவாஜி ஸ்டைலா ஆடும் ட்விஸ்ட் டான்சும், கைதட்டுவதையும் கொஞ்சம் மாற்றி 'ஊட்டிவரை உறவு' படத்துல "ஹாப்பி இன்றுமுதல் ஹாப்பி"ல  வருதாமே.  

இந்தப் படம் ரிலீஸ் ஆனப்போ,  "சிவாஜி இந்தப் படத்துல இன்னாத்த சண்ட போட்டு என்னாத்த நடிக்கப்போரா"ருன்னு ஜனங்க கமெண்ட் அடிச்சாங்களாம். சினிமால சிவாஜி அவ்வளவா சண்ட போட்டு பாத்ததில்லேல்ல. ஆனா அதுக்கப்புறம் நல்லாவே வரவேற்பு கெடச்சுதாம் இந்தப் படத்துக்கு.  


Heezulia 
heezulia
heezulia
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 610
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 193

Back to top Go down

best Re: திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?

Post by SK on Sat Jan 20, 2018 3:54 pm

@sk wrote:கேட்டவரெல்லாம் பாடலாம், உன் பாட்டுக்குத் தாளம்.................................... போடலாம்."SK
SK
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8074
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1554

Back to top Go down

best Re: திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?

Post by Dr.S.Soundarapandian on Sat Jan 20, 2018 4:47 pm

Heesulia !

சூப்பர் !

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 4 3838410834 திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 4 3838410834 திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 4 3838410834

மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம்
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 5059
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 2799

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

best Re: திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?

Post by heezulia on Sat Jan 20, 2018 9:58 pm

20.01.2018 

நான் பாடவே இல்லியே SK , அப்புறம் எப்படி தாளம் போட போறீங்க?திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 4 1571444738     திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 4 1571444738     திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 4 1571444738 டாக்டர் சார். 

Heezulia
heezulia
heezulia
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 610
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 193

Back to top Go down

best திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?

Post by heezulia on Sun Jan 21, 2018 12:11 am

21.01.2018

தெய்வச்செயல் 1967 

மிருகங்களுக்கு முக்கியத்துவம் குடுத்து அதுங்கள நடிக்க வச்சு நிறை.......................................ய படங்களை எடுத்து பேர் வாங்கினவரு தேவர் தான். 

தெய்வச்செயல் படம், நடிகர்களையோ இசையையோ நம்பி எடுக்கப்படலியாம்.  முழுக்க முழுக்க மிருகங்களை நம்...........பி எடுக்கப்பட்டது.  மிருகங்களுக்கு மட்டும் வால்யூ இருந்து என்...........ன பிரயோஜனம்?  ஸ்டார் வால்யூ இல்லியே!!!  அதனால படம் ஓடல.  
பெரிய பெரிய நடிகர்களை வச்சு படங்கள எடுத்துக்கிட்டு இருந்த தேவர்,  நட்சத்திரபட்டாளமே இல்லாம எடுத்த படம்தான் தெய்வச் செயல். மிருகத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து தேவர் தயாரித்த முதல் படம் இது.  

இந்தப் படத்தில சிங்கத்தை நடிக்க வச்சிருந்தார். இவர் மிருகங்களை வச்சு எடுத்த படமெல்.........லாம் ஓஹோன்னு ஓடினதால, மிருகங்கள் மேல அவருக்கு தனி............ பிரியம் வந்திருச்சாம்.  அதனால மிருகங்களை வளர்க்கணும்னு ஆசை வந்து, அதுக்குன்னே சென்னை வடபழனியில ஒரு இடத்தை வாங்கி போட்டார். [இப்போ அந்த இடத்தில ராமநாரயணனின் ஆபீஸ் இருக்குதாம்.]  அங்கே பலவித மிருகங்களை நல்ல முறையில் பராமரித்து வந்தார். அந்த மிருகங்களை தன்னுடைய படங்கள்ல முக்கிய கேரக்டர்களில் நடிக்க வச்சார். 

தேவரும், மேஜர் சுந்தரராஜனும் ரொம்ப நெருங்............கிய ஃப்ரெண்ட்ஸ். ஒருத்தர ஒருத்தர ரொம்ப பிடிக்குமாம். தேவர் அவரோட எல்லா படத்துலயும் சுந்தரராஜனுக்கு பொருத்தமான ரோல் கொடுப்பார். அதுபோலதான் இந்தப் படத்துலேயும் முக்கியமான பாத்திரத்தை மேஜருக்குக் கொடுத்தார்.  மேஜரோட ரோல், ஹீரோ முத்துராமனைவிட கனமான பாத்திரமாம்.  இந்தப் படத்துல மிருகங்களும்  ஆக்ட் குடுத்திருக்கு. அதுங்களோடு தேவரும் நடிச்சிருக்கார். 

படம் ஒடலேன்னாலும் தேவர் அஸ்சரவே............ இல்லியே.  இந்தியில படம் எடுக்கணும்னு அவருக்கு ஆசை வந்திருச்சாம்.  அதுவும் எப்படி? 
ராஜேஷ்கன்னா போன்ற பெரீ...................................................ய நடிகர்களை வச்சு.  எம்புட்டு தில்லு பாருங்க அவருக்கு?  தை………….ரியமா தெய்வச் செயல் படத்தையும், அவரோட மத்த படங்கள் காட்டுராணி, செங்கோட்டை சிங்கம், நீலமலைத் திருடன் இதுங்களையும் எடுத்துட்டு ராஜேஷ் கன்னாகிட்டே போய் போட்டுக்காட்டினார். அவரும் அந்த படங்களை பொறும்.......................................மையா பாத்தார்.  அந்த நாலு படங்கள்ல தெய்வச்செயல் படத்துக்கு ஓகே சொல்லிட்டார்.  ஆனா போட்டாரே ஒரு கண்டிஷன்.  மிருகங்களை விட தனக்குத்தான்  இம்பார்டன்ஸ் குடுக்கணும்னு சொல்லிட்டார். ராஜேஷ்கன்னா சொன்ன மாதிர்யே, படம் எடுக்க ஒத்துகிட்டாராம் தேவர்.  

இந்தப் படத்த எடுக்கும்போது நிறையப்பேர் வந்து "அண்ணே, ஒரு டப்பா படத்த போயி பெரிய நடிகர வச்சு... ஏண்ணே இப்படி ரிஸ்க் எடுக்குறீங்க?" ன்னு கேட்டாங்களாம்.  தேவரா கொக்கா?  அசந்து போனாரா?  இல்லியே. 

படத்த வெற்றிகரமா எடுத்து ஜெயிச்சுட்டார்ல. 'ஹாத்தி மேரே சாத்தி' பேர்ல எடுத்தாராம்.  இந்தப் படம் ரொம்ப நல்ல ஹிட்டாச்சு. 
அதுக்கப்புறமா, அதே..........  கதைய  கொஞ்சம் ச்சேஞ்ஜ் செஞ்சு, தமிழ்ல எம்.ஜி.ஆர வச்சு  படம் எடுத்தாராம்.  போச்சுடா,  இன்னொரு வாட்டி எல்லாருக்கும் திடுக்குன்னுச்சாம். ஆனா இந்தப் படம் ஜோரா போச்சாம். அந்த எம்.ஜி.ஆர். படம் 'நல்ல நேரம்'.

தேவர் தை............ரியமா எல்லார்கிட்டேயும் ஒண்ணு சொன்னாராம்.  "ராஜேஷ் கன்னா, எம்.ஜி.ஆர் நடிப்புல்லாம்  என்னாப்பா நடிப்பு. தெய்வச்செயல் படத்துல சுந்தர்ராஜன் நடிப்பில பாதிகூட அவங்க ரெண்டுபேரும் நடிச்சிருக்காங்களா, இல்லியே" அப்படீன்னு சொன்னாராம். 
தெய்வச்செயல் à ஹாத்தி மேரே சாத்தி à நல்ல நேரம்.  

'நல்ல நேரம்' படத்துக்குப்பின்னால இம்புட்டு விசயம் இருக்கா?  சரிதான்.

ஆனா சிவாஜிய வச்சு தேவர் ஒரு படம்கூட தயாரிக்கலியாம்ல. அதுக்கு என்ன காரணமாயிருக்கும்? 

Heezulia
heezulia
heezulia
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 610
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 193

Back to top Go down

best திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?

Post by heezulia on Sun Jan 21, 2018 12:54 am

21.01.2018

பக்த பிரகலாதா 1967

'அன்பே வா படத்துக்கு அப்புறமா ஏ.வி.எம். தயாரிச்ச ரெண்டாவது படமாம். 

ஆரம்ப காலத்தில நிறைய புராணப் படங்கள் தான் வந்துட்டு இருந்துச்சு.  அப்புறம் சமூக படங்கள் வர ஆரம்பிச்சதனால, புராணப் படங்கள் வர்றது நின்னு போச்சாம்.  அந்த சமயத்தில தான் ‘திருவிளையாடல்’ படம் வந்து ஓஹோன்னு ஆச்சுல?  அதைத் தொடர்ந்து மறுபடியும் புராணப் படம் வர ஆரம்பிச்சுருச்சாம்.  

இந்த சமயத்தில, நாமும் புராணப் படம் எடுத்தா நல்லா இருக்குமேன்னு ஏ.வி.எம்.செட்டியார் நெனச்சாராம். பழை......................ய புராணப் படங்கள உக்காந்து உக்காந்து பார்க்க ஆரம்பிச்சுட்டார்.  அதுல ‘பிரகலாதா’ படம் அவருக்கு ரொம்..................ப  புடிச்சு போச்சாம்.  சரி, இந்த படத்த விடக்கூடாது.  இதையே மறுபடியும் எடுப்போம்னு நெனச்சு.................... இந்தப் படத்தையே, அதே பேர்ல மொதல்ல தெலுங்கில எடுத்தாராம்.  அப்புறமா தமிழிலேயும், இந்தியிலேயும் தயாரிச்சாராம்.  

தெலுங்கிலிருந்து தமிழில் டப்பிங் செய்யப்பட்ட பக்த பிரகலாதா, டப்பிங் படம் போல தெரியாம இருக்க  நகைச்சுவை காட்சிகள தமிழ் வசனங்களுடன் எடுத்தாங்களாம். மூணு பாஷையிலுமே ஒரே டைரக்டர் தானாம்.  இந்தப் படத்துல நாரதர் யார் தெரியுமா யாருக்காவது? 

ஆ.............ச்சரியப்பட்டு போவீங்க சொன்னா.  ஒரு பின்னணிப் பாடகர்தானாம்,  கர்னாடக சங்கீதம் பாட்றவர்.   என்ன கண்டு பிடிச்சிட்டீங்களா?  அதெல்லாம் பிடிச்சிருப்பீங்க, பிடிச்சிருப்பீங்க.  ஆமாங்க, சரிதானுங்கோ, பாலமுரளி கிருஷ்ணாதானாம்.அவர் நடிச்ச  ஒரே படம் இது தானாம்ல. 


இரணியனாக ரங்காராவ் நடிச்சாராம்.  அவர் சரியா ஒத்துழைப்பு கொடுக்கலைன்னு செட்டியார் காதுக்குத் தகவல் போச்சு. ' ஷூட்டிங்கில் நடிக்க  மறுக்கிறார். ஒரு  நாள்ல,   மூணு   நாலு  மணி நேரம் ஆயிட்டா கிளம்பிடுறார்.' ன்னு கேள்விப்பட்டதும் செட்டியாருக்கு கோவம் வந்துருச்சாம்.
  
"நான் இன்னிக்கி செட்டுக்கு வர்றேன்.  ரங்காராவை பார்த்துக்கிறேன்" ன்னு செட்டியார் சொன்னாராம். 

ஷூட்டிங் ஆரம்பிச்ச கொஞ்ச நேரத்திலேயே செட்டியார் ப்ரெசென்ட்.  ரங்காராவ்  பார்த்தார்.  "என்ன, ஏதோ  சரியில்லாத  மா............திரி இருக்கே" ன்னு ரங்காராவ் யோசிச்சாராம்.  "சரி, நம்ம மேலே ஏதோ கம்ப்ளைண்ட் போயிருக்கு போலேயே" ன்னு  ஒரு சந்தேகம்.  

ஒடனே அவர் போட்டிருந்த நகைகளையெல்லாம் கழத்தி செட்டியார்கிட்ட கொடுத்து, "இந்தாங்க செட்டியார் புடிங்க,   எம்புட்டு கனமா இருக்கு பாருங்க, இத்தன கனத்தையும் சுமந்துகிட்டு, புராணகால வசனத்தையும் பேசிட்டு,  எவ்வளவு தூரம்தான் நான் உழைக்க முடியும்?  நீங்களே சொல்லுங்க செட்டியார்.  நான்  வீட்டுக்குப் போனாகூட இந்த   பாரம் சுமந்த வேதனைதான் பின்னாலேயே வருது " ன்னு ஒரு போடு போட்டாராம்.  அம்புட்டுதான், செட்டியாரோட கோபம் போயே போச்சு, it's gone. 

Heezulia
heezulia
heezulia
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 610
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 193

Back to top Go down

best திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?

Post by heezulia on Sun Jan 21, 2018 3:44 am

21.01.2018
 
பேசும் தெய்வம் 1967 
 
படம் 100 நாட்கள் ஓடலேன்னாலும் கூட, எல்லாருக்கும் லாபம் தந்த படம்.  படம் ரிலீஸ் ஆனபோ, சென்னை கெயிட்டி தியேட்டரில திருப்பதி கோவில் போலவே அமைக்கப்பட்டு பொது மக்களுக்கு லட்டு பிரசாதம் கொடுக்கப்பட்டதாம். 

கோபாலகிருஷ்ணன் ஒரு தடவ திருப்பதிக்குப் போயிருந்தாராம்.  

எதுக்குத் தெரியுமோ!  ஒரு  பக்தி படம், அதுவும்  பக்தி கலந்.........த குடும்பக் கதையை யோசிச்சு எழுதுறதுக்குத்தானாம்.  அவர் கோயிலுக்குப் போயி, சாமி கும்டுட்டு பிரகாரத்தைச் சுத்திட்டு வரும்போது ஒரு அதிசயக் காட்சியைப்  பார்த்தாராம்.  

கோயில்  தராசு. அதுக்கு முன்னால கண்ணீரும், கம்பலையுமா ஒரு குடும்பம்.  ஒரு கணவன் மனைவி, அவங்களோட அம்மா அப்பா.  
தராசு   சும்மா இல்ல .  ஒரு தட்டுல ஒரு சின்ன குழந்தை, இன்னொரு தட்டுல உருண்டை வெல்லம்.  இவ்வளவையும் பார்த்த இயக்குனர், என்னதான் நடக்குதுன்னு பார்க்கலாமேன்னு கவனிச்சாராம்.  

5 கிலோ வெல்லத்த வச்சிருந்தாங்களாம்.  தராசுத் தட்டு அசையணுமே!  

ஊஹும்...............  சமநிலைக்கு வந்த பாடில்லையாம்.  

ஒரு பெரியவர் வந்து "உங்க குழந்தை   உடம்பு சரியில்லாம இருந்தப்போ, கடவுளே,  எங்க குழந்தையைச் சரியாக்கினா, எடைக்கு எடை வெல்லம் தர்றோம்னு, நான் சொன்னபடி வேண்டிகிட்டீங்க.  சரி, ஆனா முழு மனசோடு, நம்பிக்கையோடு  வேண்டியிருக்க மாட்டீங்க போலிருக்கே.  கடவுளுக்கு வேண்டியது இந்த வெல்லக்கட்டியும்  இல்ல,  காசு பணமும் இல்ல.  உங்க மனப்பூர்வமான பக்தி  மட்டுமே."ன்னு சொன்னாராம்.   

அதுக்கப்புறமா  அந்த தம்பதிகள் மனமுருக வேண்டிகிட்டாங்களாம்.  இப்போ அந்தத் தட்டில  ஒரே ஒரு வெல்லக்கட்டி வச்சவுடனே  தராசு சமநிலைக்கு வந்திருச்சாம்.  

இவ்வளத்தையும் கே.எஸ்.ஜி. பாத்துட்டு இருந்தாராம்.  அம்புட்டுதான், அவருக்கு அவர் நெனச்ச  கதைக்குக்  கரு கெடச்சிருச்சு. இல்லியா?  படமும் உருவாக ஆரம்பிச்சிருச்சு. அதுதாங்க இந்த பேசும் தெய்வம் படம். 

 
Heezulia
heezulia
heezulia
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 610
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 193

Back to top Go down

best திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?

Post by heezulia on Sun Jan 21, 2018 4:03 am

21.01.2018

மகராசி   1967

கண்ணதாசன்தான் சங்கர்  கணேஷை தேவர்கிட்ட அறிமுகம்  செஞ்சு வச்சார்.

கண்ணதாசன் : உங்க படத்துலதான் மியூஸிக் டைரக்டர் சான்ஸ் கேட்டு வந்திருக்காங்க.

அவங்களைத் திரும்பிப் பார்த்த தேவர் : மியூஸிக் டைரக்டரா? இவனுங்களா? தூ' ன்னு  துப்பினாராம்.  அவங்களுக்கு என்னவோ போலாச்சாம்.  இருந்தாலும் கவிஞர் விடலையாம்.  

கவிஞர் : அப்படி இவங்களை லேசா நினைக்காதீங்க. விசு ட்ரூப்புல இப்போ மெயினா இருக்காங்க. ஒரு சான்ஸ் கொடுத்துப்பாருங்க.

கவிஞர் இவ்வளவு சிபாரிசு செய்றாரேன்னு  கொஞ்ச நேரம் யோசிச்ச 
தேவர் :
சரி, இப்போ புதுசா நான் மகராசின்னு ஒரு படம் எடுக்கப் போறேன். அதுல இவனுங்களைப் போட்டுக்கறேன். என்றாராம். 


மிகவும் மெலோடியாக அமஞ்ச 'ஆண் தொடாத கன்னிப்பெண்ணை மீன் தொடும்போது' என்ற பாடல் தேவருக்கு மிகவும் பிடிச்சுப்போச்சாம்.  
அவங்களுக்கு  அப்பாடான்னு  போன உயிர்   திரும்ப வந்தது போலிருந்துச்சாம்.  படம் ரிலீஸாகி முதல் நாள் தியேட்டரில 
பார்த்தபோ, 

'இசை : சங்கர்-கணேஷ்'

என்ற டைட்டிலைப் பார்த்ததும்   அவங்களுக்குத் தலைகால்  புரியலியாம்.  இருக்காதா பின்னே!  இந்த கௌரவம் கவிஞராலும், தேவராலும்தானே  கெடச்சுது  என்பதால, அந்த நன்றியின் அடையாளமா பின்னாளில அவங்க  இசையமச்ச  படங்கள்ல,  

இசை : 'கவிஞர் வழங்கிய தேவரின் சங்கர் கணேஷ்'

ன்னு  போட்டுக்க  ஆரம்பிச்சாங்களாம்.

கிட்டத்தட்ட அப்போதிருந்த எல்லா பெரிய கம்பெனிப் படங்களிலும் நடிச்சுட்டோமே.  ஆனா தேவர் பிலிம்ஸ் பானரில் இன்னும் ஒரு படம் கூட நடிக்கலையே என்ற ஒரு சின்ன வருத்தம் ரவிச்சந்திரனுக்கு இருந்த வேளையில, ஒரு நாள் தேவரிடமிருந்து அழைப்பு வந்துச்சாம்.

தேவர் : உன்னையும் ஜெயலலிதாவையும் வச்சு ‘மகராசி’ன்னு ஒரு படம் தயாரிக்கலாம்னு இருக்கேன். என்ன சொல்றே சம்மதம்னா அக்ரிமெண்ட் போட்டுடுவோம்.

ரவி : நான் இந்த வாய்ப்பை ரொம்ப நாளா எதிர்பார்த்திருக்கேன்.

உடனே ரவி சம்மதம் சொல்லிட்டாராம்.

மகராசி ஷூட்டிங்  ஆரம்பிச்ச கொஞ்சநாளிலேயே வேற ஒரு படப்பிடிப்பில, ரவிக்குக் கால்ல  அடிபட்டு கால் எலும்பு முறிஞ்சு,  கொஞ்சநாள் படுக்கையில இருந்தாராம். அப்போ வேறு கதாநாயகனைப் போட்டு மகராசி படத்தை முடிக்கலாம்ன்னு  மத்தவங்க  சொன்னதையும்  கேட்காம, அவர்  குணமடைற  வரைக்கும்  வெயிட்  செஞ்சு  ரவி  திரும்பி வந்த பின்னால தான்,  படத்தை முடிச்சாராம்  தேவர்'.   ரவியை தேவருக்கு ரொம்ப  பிடிச்சு போச்சோ!!! 

Heezulia  மீண்டும் சந்திப்போம்
heezulia
heezulia
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 610
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 193

Back to top Go down

best Re: திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?

Post by பழ.முத்துராமலிங்கம் on Sun Jan 21, 2018 5:25 pm

உங்கள் பதிவுகள் அருமை
நேரில் பேசுவது போல்
பதிவு உள்ளது
திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 4 3838410834 திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 4 1571444738
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13670
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3485

Back to top Go down

best திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?

Post by heezulia on Sun Jan 21, 2018 8:42 pm

21.01.2018

 by பழ.முத்துராமலிங்கம் Today 

நன்றி சார். 

நான் வருஷக்கணக்கா, ஏழெட்டு வருஷமா இப்படித்தான் எழுதிட்டு இருக்கேன். எல்லா....................ருக்கும் நான் எழுதும் இந்த பாணி புடிச்சிருக்குன்னுதான் சொல்றாங்க.  செந்தமிழ்ல எழுதினேன்னு வச்சுக்கோங்க, என்னமோ ஸ்கூல்ல தமிழ் பாடம் படிக்கிற  மாதிரி இருக்கும். எனக்கு அப்படி எழுத பிடிக்கவே ................. பிடிக்காது.  அதனால, நானும் இப்படியே.................... தொடர்ந்து எழுதிட்டு இருக்கேன். ஆனா நேரம்தான் போதல. 

இன்னொண்ணு விஷயம் என்னானா, நான் படிக்கிற தகவல்களை, அப்.........படியே காப்பி அடிச்சு, இங்க பேஸ்ட் பண்ண பிடிக்காது. அதுக்கு கொஞ்சம் பௌடர் பூசி, அலங்காரம் செஞ்சுதான் எழுதுவேன். ஆனா படிச்ச மேட்டர் மாறாது. மாத்தவும் முடியாதுல்ல. 

மீண்டும் நன்றி. 

Heezulia
heezulia
heezulia
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 610
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 193

Back to top Go down

best Re: திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?

Post by SK on Mon Jan 22, 2018 1:53 pm

மகராசி 1967

பக்த பிரகலாதா 1967

பேசும் தெய்வம் 1967

அனைத்தும் அருமை தொடருங்கள்


SK
SK
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8074
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1554

Back to top Go down

best திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?

Post by heezulia on Sun Jan 28, 2018 7:35 pm

28.01.2018

தில்லானா மோகனாம்பாள் 1968

நட்சத்திரப் பட்டாளமே நடிச்ச படம்.  இத்............தன பேரையும் ஸ்பாட்டுக்கு வரச்சொல்லி நடிக்க வைப்பது என்ன, சாதா...........ரண விஷயமாவா இருந்திருக்கும்?  நாகராஜன் செஞ்சிருக்கார்ல!!! ஒவ்வொரு நாளும் பிக்னிக் போவது போல ஷூட்டிங்க்கு போயிட்டு வருவாங்களாம். 
  
தமிழ் சினிமாவில ஓஹோஹோ...............ன்னு ஓடிய படங்கள்ல இதுவும் ஒண்ணாம்.  நடிச்சவங்க, இசை மட்டுமில்லீங்க, காமெடியாலும் நல்............................லா  ஆடி ஓடிய படமாம்.  நாகராஜனுக்கு இன்னொரு வெற்றிப்படமாம். 

கொத்தமங்கலம் சுப்பு, ஒரு  வார இதழில், கலைமணி என்கிற பேர்ல இந்தக் கதையைத் தொடரா எழுதிட்டு இருந்தாராம்.  நாகராஜனுக்கு அந்தக் கதை ரொம்ப பிடிச்சு போயிருச்சாம்.  படமா எடுக்க ஆசைப்பட்டு ஜெமினி வாசன்கிட்டே போய்க் கேட்டாராம்.  அவர் இதழில வந்த கதை என்கிறதால ஓக்கே சொல்லிட்டாராம்.  ஆனா அதுக்குன்னு நாகராஜன் கொடுத்த பணத்தை வாங்க மறுத்துட்டாராம்.  

“இந்தக் கதை சுப்புவோடது,  அதனால இந்தப் பணத்த அவர்ட்ட கொடுகிறதுதான் சரி” ன்னுட்டாராம்.  அந்த நேரத்ல கொத்தமங்கலம் சுப்பு உடம்பு சரியில்லாம ஆஸ்பத்திரில இருந்தாராம்.  நாகராஜன் ஆஸ்பத்திரிக்கே... போயி, பணத்த அவர்ட்ட கொடுத்தாராம்.  அவரும் வாங்கிட்டாராம்.  

ஆனா அவர்  என்ன செஞ்சார்னு தெரியாதவங்க கேட்டுக்கோங்க, இல்ல இல்ல வாசிச்சுக்கோங்க.  சுப்புகாரு  அந்தப் பணத்துல ஒரு நயாபைசா கூட எடுத்துக்கலியாம். 

“வாசனாலதான்  இந்த சான்ஸ் கெடச்சுது, அதனால இந்தப் பணம் அவருக்குத்தான் சேரணும்” னு சொல்லிட்டாராம்.  ஆனா வாசன் வாங்கலியாம்.  இப்படியாக இந்தப் படத்தின் கதை உருவான கதை.   

படத்தின் ஹீரோ நாதஸ்வர கலைஞர்.  ஹீரோயின் பரதநாட்டிய கலைங்கி. APN க்கு  சிவாஜி, பத்மினி ஞாபகம்தான் வந்துச்சாம்.  மத்தவங்க நெனப்பு எப்படி வரும்?  ச்சான்.................ஸே   இல்ல.

சிவாஜி கதையை கேட்டுட்டு ஒடனே சரின்னுட்டாராம். அந்த சமயத்தில பத்மினி அமெரிக்காவில இருந்தாராம். அவர் எங்.............க  சென்னைக்கு வந்து நடிக்கப்போறாருன்னு  பலரும் சொன்னாங்களாம்.  ஆனா நாகராஜன் எப்படியோ பேசி சம்மதிக்க வச்சுட்டாராம்.  

பத்மினி இந்தப் படம் தனக்கு ஒரு சவாலா எடுத்துட்டு, இந்தப் படத்த மிஸ் பண்ண விரும்பாம, அவங்க ஐத்தான்  கிட்ட பர்மிஷன் கேட்டாங்களாம்.  அவரும் ம்ம்னுட்டாராம்.  இவரும் பச்சைக்கொடி காட்டிட்டாராம்.  

சிவாஜி நடிக்க ஒத்துக்கிட்டதும், அவர் பல கச்சேரிக்கெல்லாம் போனாராம்.  நாதஸ்வரம் வாசிக்கிறதை உன்...........னிப்பா கவனிச்சாராம்.  கச்சேரி முடிஞ்சதும்  அந்த நாதஸ்வர வித்துவான்கள்ட்ட பேசுவாராம்.  அதுமட்டும் இல்லீங்க.  நாதஸ்வரம் வாசிக்கக் கூட பயிற்சி எடுத்துக்கிட்டாராம். 

நடிகை வசந்தி வீட்டுக்குப் பக்கத்து வீடு பாலையாவோட வீடாம்.  பாலையா வீட்ல ஒரே.............. மேளச்சத்தமாம். என்னான்னு கேட்டப்போ, 

“பாலையா புது படத்துல மேளக்காரரா  நடிக்கிறாரு.  அதுக்கு ப்ராக்ட்டீஸ் பண்றார்” ன்னு சொன்னாங்களாம்.  

பொதுவா சிவாஜி போன்ற கலைஞர்கள்தான் இப்படில்லாம்  செய்வாங்களாம்.  ஆனா பாலையாவையும் அப்படி செய்ய வச்சாருன்னா,  அதுதான் நாகராஜன். 
   
சரி............................. ஹீரோ, ஹீரோயின் ரெடி.  மத்தவங்களும் ரெடி.  இந்தப் படத்துல நாதஸ்வர இசை தான் அடுத்த ஹீரோ.  அதுக்கு கலைஞர்கள் வேணுமே.  நாதஸ்வர வித்வான்கள் மதுரை சேதுராமன், பொன்னுசாமி  ரெண்டுபேர் கிட்டேயும் நாகராஜன் போயி பேசினாராம்.  

அவங்க, “சினிமாவுக்கா வாசிக்கணும்,  அதெல்லாம் முடியாது” ன்னு சொல்லிட்டாங்களாம்.  அப்புறமா கம்ப்பெல் செஞ்சு படத்தோட கதையை அவங்க கிட்ட APN சொன்னாராம். இந்தப் படத்தில பரத நாட்டியத்துக்கும், நாதஸ்வரத்துக்கும் முக்கியத்துவம் இருப்பதை உணர்ந்த அவங்க ரெண்டு பேரும் படத்துக்கு ஒத்துக்கிட்டாங்களாம்.  

இப்படியா....................க படத்தோட pre-shooting வேலை ஆரம்பிச்சு, ஷூட்டிங்கும் முழு வீச்சா ஆரம்பிச்சாங்களாம்.
 
தெலுங்கில ‘ராஜ நர்த்தகி’ என்கிற பேர்ல டப் செஞ்சாங்களாம்.  வெளி நாடுகளிலேயும் இந்தப் படம் ரிலீஸ் ஆச்சாம், sub-title உடன்.  இந்தப் படத்துக்குக் கெடச்ச ஒரு பெரீ...........ய கௌரவம் என்னான்னு தெரியுமாங்க?  தெரியாதவங்களுக்கு நான் படிச்சத சொல்றேன், தெரிஞ்சுக்கோங்க.  

இந்த அமெரிக்கா, அமெரிக்கான்னு ஒரு ஊர் இருக்கே ஊர், [ஒரே ஒரு ஊர்தான்] அங்க ஒரு பல்கலை கழக லைப்ரரில இந்தப் படத்தின் ஃபிலிமை  வச்சுக்கணும்னு அங்க உள்ளவங்க கேட்டாங்களாம். இங்க இருந்து அனுப்பியும் வச்சாங்களாம்.  இது இந்தப் படத்துக்கு மட்டுமில்லீங்க, தமிழ் சினிமாவுக்கே கெடச்ச மரியாதையாச்சே.


Heezulia  மீண்டும் சந்திப்போம்
heezulia
heezulia
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 610
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 193

Back to top Go down

best Re: திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?

Post by SK on Mon Jan 29, 2018 2:43 pm

தில்லானா மோகனாம்பாள் 1968

அருமையான படம்


SK
SK
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8074
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1554

Back to top Go down

best Re: திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?

Post by பழ.முத்துராமலிங்கம் on Tue Jan 30, 2018 7:56 am

தில்லானா மோகனாம்பாள்
நான் இந்த பாடத்தை எத்தனை
தடவை பார்த்தேன் என்ற கணக்கே
தெரியாது .
எங்க தாத்தாவிற்கு திரையரங்கம்
இருந்தது அதனால் லீவுக்கு சென்றால்
இரவு சினிமா கொட்டகை தான்
பாசமலர் பல தடவை
பார்மகளே பார்
பாகப்பிரிவினை
பார்த்தால் பசி தீரும்
பாலும் பழமும்
புதிய பறவை
பறக்கும் பாவை
எங்க வீட்டுப்பிள்ளை
சிவந்த மண்
மன்னாதி மன்னன்
சிவாஜி படங்கள் 90 சதவீதம்
பல முறை பார்த்துள்ளேன்.
நன்றி பேபி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13670
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3485

Back to top Go down

best Re: திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?

Post by heezulia on Tue Jan 30, 2018 12:32 pm

30.01.2018 

முத்து சார், நீங்க பேபி, பேபீன்னு கூப்டறது ரொம்...............ப சந்தோ..............ஷமா இருக்கு. எங்க ஊர்ல, வீட்ல இப்படித்தான் கூப்டுவாங்க.

சரி.................., நீங்க தியேட்டர் ஓணரோட பேரனா............? பாம்சிங் படம்ல்லாம் நிறை...............ய பாத்திருக்கீங்க போல. 

Homework பண்ணாம இப்டீ சினிமா சினிமான்னு டெய்...................லி போயிட்டு இருந்தா, படிப்பு எங்கேர்ந்து வரும்னு கேக்குறேன். படிச்சீங்களா இல்லியா? ஒண்..............ணும் படிச்சிட்டு வரல, எழுதிட்டு வரலேன்னு சொல்லி, கிளாஸ்ல பெஞ்சு மேல ஏறி நிக்க சொன்னாங்களா, இல்ல முட்டி போட வச்சாங்களா? இப்பல்ல தெரியுது, நீங்க எப்டீ படிச்சீங்கன்னு.

என்ன பழசை கெளரி விட்டுட்டேனோ?

பேபி  மீண்டும் சந்திப்போம்
heezulia
heezulia
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 610
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 193

Back to top Go down

best Re: திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை