உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» விருது பெற்ற தமிழ்த் திரைப் பாடல்கள்
by ayyasamy ram Today at 4:41 pm

» எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று...
by ayyasamy ram Today at 4:30 pm

» முகநூலில் ரசித்தவை
by ayyasamy ram Today at 4:23 pm

» இலவச காய்கறி விவசாயி தாராளம்
by ayyasamy ram Today at 4:13 pm

» துப்புரவாளருக்கு ரூபாய் மாலை
by ayyasamy ram Today at 4:11 pm

» உயிர் எழுத்துக்களில் கொரோனா கவிதை
by ayyasamy ram Today at 4:10 pm

» ஒரே மாதத்தில் 20 லட்சம்: அமெரிக்காவில் சூடு பிடிக்கும் துப்பாக்கி விற்பனை
by ayyasamy ram Today at 4:06 pm

» சீனாவில் நாளை துக்க தினம் அனுசரிப்பு
by ayyasamy ram Today at 4:02 pm

» வேலன்:-ஆடியோ பைல்களை பார்வையிட -Finetune.
by velang Today at 2:08 pm

» அமெரிக்க தடையை மீறி ஈரானுக்கு ஐரோப்பிய நாடுகள் உதவி
by சக்தி18 Today at 1:41 pm

» நடிகை ஸ்ரீதிவ்யா படங்களில் உங்களுக்கு பிடித்தது?
by சக்தி18 Today at 1:33 pm

» ஏப்ரல் 5 ஆம் தேதி இரவு 9 மணிக்கு மெழுகுவர்த்தி, செல்போன் விளக்குகளை ஒளிரவிட வேண்டும்; பிரதமர் மோடி
by சக்தி18 Today at 1:30 pm

» கொரோனா அவசரநிதி: இந்தியாவுக்கு ஒரு பில்லியன் டாலர் நிதியை வழங்குகிறது உலக வங்கி..!
by ayyasamy ram Today at 12:29 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 12:19 pm

» Can you imagine? (உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா?)
by Pranav Jain Today at 11:51 am

» கொரோனா தமாஷ் பாருங்கள்!
by சக்தி18 Today at 11:41 am

» கோவிலில் கூட்டுக் குடும்பம்!
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:40 am

» சமூக இடைவெளியை கடைபிடித்த குரங்குகள்.... நெகிழ்ந்து போன நடிகர்
by சக்தி18 Today at 11:39 am

» யார் இந்த சாலையோரம் பூக்கள் வைத்தது
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:36 am

» இறைவன் எங்கே? இறை தூதர்கள் எங்கே?
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:12 am

» அமெரிக்கா தனது நாட்டினரை இந்தியாவில் இருந்து அனுப்ப தொடங்குகியது - தூதரக அதிகாரி
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:00 am

» கொடுமைதான்.. கொரோனா
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:57 am

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:35 am

» விவேக் மீம் இணையத்தில் வைரல்! நெட்டிசன்களுக்கு அவர் வைத்த கோரிக்கை
by T.N.Balasubramanian Today at 10:19 am

» மூன்றாம் உலகப்போர் எப்படி நடக்கும்? -எழுத்ததிகாரன்
by Pranav Jain Today at 8:57 am

» கொரோனாவால் கற்ற பாடம்: நாய், பூனை இறைச்சிக்கு சீனா தடை
by பழ.முத்துராமலிங்கம் Today at 8:35 am

» 300 படங்கள் நடித்துள்ளேன்!
by பழ.முத்துராமலிங்கம் Today at 8:32 am

» இந்தியஅணி உலகக்கோப்பையை வென்ற, 2011, ஏப்ரல் 2-ம் தேதியை இந்திய ரசிகர்களால் மறக்கமுடியுமா
by ayyasamy ram Today at 8:29 am

» பல ஆண்டுகளுக்குப் பின் ஏழுமலையானுக்கு 6 மணிநேர ஓய்வு
by பழ.முத்துராமலிங்கம் Today at 8:23 am

» » » கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - ஏப்ரல் 3
by ayyasamy ram Today at 6:37 am

» மது போதைக்கு அடிமையாகி மீள முடியாத நபர்களுக்கு, 'ஆன்லைன்' மூலம் இலவசமாக மீட்பு உதவி
by ayyasamy ram Today at 6:26 am

» நண்பர்களே!!! ஒரு புளியமரத்தின் கதை நாவல் கிடைக்குமா?
by Akashgkr Yesterday at 9:06 pm

» குழந்தைகளுக்கு ‛கொரோனா', ‛லாக் டவுன்' என பெயர் சூட்டிய தம்பதியினர்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» ஏப்.,15க்கு பிறகான ரயில் முன்பதிவு: தெளிவுப்படுத்திய ரயில்வே
by ayyasamy ram Yesterday at 6:08 pm

» வேலன்:-கணிணியில் தேவையற்ற பைல்களை நீக்கிட -Wash and GO -Abelsoft
by velang Yesterday at 5:54 pm

» வேலன்:-20க்கும் மேற்பட்ட விதவிதமான ஆங்கில எழுத்துருக்கள்-English Fonts
by velang Yesterday at 5:49 pm

» வேலன்:-புகைப்படத்தில் தேவையில்லாதவற்றை நீக்கிட - PhotoScissors.
by velang Yesterday at 5:48 pm

» வீட்டுக்குறிப்புகள் -மங்கையர் மலர்
by ayyasamy ram Yesterday at 4:19 pm

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 3:58 pm

» சம்யுக்தாவின் சாகச பயிற்சி
by ayyasamy ram Yesterday at 3:55 pm

» துருக்கியில் நிகிஷா
by ayyasamy ram Yesterday at 3:54 pm

» ‘கமலி ப்ரம் நடுக்காவேரி’ ஹைடெக் பின்னணியில் ஒரு காதல் கதை
by ayyasamy ram Yesterday at 3:52 pm

» கரோனா: தமிழகம் முழுவதும் அபாயம் உள்ள பகுதியாக அறிவிப்பு!
by ayyasamy ram Yesterday at 3:43 pm

» ஏப்ரல் 2 - செய்தி சுருக்கம்)
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» பிறந்த தினவாழ்த்துகள் திரு மாணிக்கம் நடேசன் அய்யா அவர்கள்
by மாணிக்கம் நடேசன் Yesterday at 12:51 pm

» ஆஹா டிப்ஸ்
by மாணிக்கம் நடேசன் Yesterday at 10:33 am

» வீட்டுக்குறிப்புகள் -மங்கையர் மலர்
by ayyasamy ram Yesterday at 5:38 am

» கொரோனா தொற்று ஆய்வு பணியில் இந்திய கடற்படை
by ayyasamy ram Yesterday at 5:30 am

» » கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - ஏப்ரல் 2
by ayyasamy ram Yesterday at 5:27 am

» கொரோனாவுக்கு எதிரான போர்; சிவப்பு நிறத்தில் ஒளிரும் எம்பயர்
by ayyasamy ram Yesterday at 5:15 am

Admins Online

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?

best திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?

Post by heezulia on Sun Dec 17, 2017 2:18 pm

First topic message reminder :

17.12.2017

கர்ணன் vs வேட்டைக்காரன்

ரஜனி / கமல், விஜய் / சூர்யா மாதிரி அப்போ சிவாஜி / MGR. இவங்க படங்கள் ரிலீஸ் ஆனா, அவங்கவங்க ரசிகர்கள் மோதிக்குவாங்களாம்.

பந்துலு எக் ............. கச்சக்கமான செலவுல கர்ணன் படத்தையும், திருமுகம் கொறஞ்.................ச பட்ஜெட்ல வேட்டைக்காரன் படத்தையும் எடுத்தாங்களாம். கர்ணன் படத்ல முன்னணி நட்சத்திர கூட்டம். பாதி படம் முடிஞ்சிருச்சாம். மீதி படத்தை எடுக்கவும் ஆரம்பிச்சாச்சாம். ஆனா வேட்டைக்காரன் படத்தை அப்பதான் எடுக்க ஆரம்பிச்சாங்களாம்.

பந்துலு கர்ணன் படத்தை பொங்கல் அன்னிக்கி ரிலீஸ் செய்ய சுறுசுறுப்பா வேல செஞ்சுட்டு இருந்தாராம். அப்போ ஒருத்தர் பந்துலுட்ட ஒரு விஷயத்தை சொல்லியிருக்கார். பந்துலு யோசிக்க ஆரம்பிச்சுட்டாராம். அந்த ஆள் சொன்ன விஷயம் என்ன............? கர்ணன் ரிலீஸ் ஆகிற அன்னிக்கே, திருமுகம் வேட்டைக்காரன் படத்தை ரிலீஸ் செய்ய போறதா.

ரெண்டு மெகா ஸ்டார் படங்கள் ஒண்ணா ரிலீஸ் ஆனா நல்லா இருக்காதே, வசூல் அடிபடுமேன்னு பந்துலு நினைச்சு, தமது குழுவினருடன் பேசினாராம். சிவாஜி காதிலும் போட்டு வச்சாங்க. அவரும் யோசனை செய்ய ஆரம்பிச்சுட்டாராம். வேட்டைக்காரன் படத் தயாரிப்பாளர் தேவரையும் கூப்ட்டு பேசியிருக்காங்க. ஆனா இவங்கல்லாம் என்னதான் பேசினாலும், MGR தான் ரிலீஸ் date சொல்லணுமாமே. ஒரு வாரம் கழிச்சு படத்தை ரிலீஸ் செய்யலாம்னு அவர்ட்ட எப்படி, யார் சொல்றது? அப்புறமா ஒருத்தர் ஒரு ஐடியா சொன்னாராம். MGR க்கு கர்ணன் படத்தை தனியா போட்டு காட்டிட்டு, அதுக்கப்புறமா ரிலீஸ் பத்தி பேசலாம்னு முடிவு செஞ்சாச்சாம். MGRட்ட போய் சொன்னாங்களாம். அவரும் படத்தை பார்க்க உம் சொல்லிட்டாராம்.

படத்தை பார்த்த MGRக்கு சிவாஜியின் நடிப்பு ரொம்ப புடிச்சு போச்சாம். "நடிப்புக்குன்னே பொறந்தவர்யா. மனுஷன் கர்ணனாவே வாழ்ந்திருக்கார்"ன்னு பாராட்டினாராம். பந்துலு உள்பட, எல்லா கலைஞர்களையும் மனசா................ர புகழ்ந்தாராம். படத்தின் வெற்றிக்கு வாழ்த்து சொல்லிட்டு போய்ட்டாராம். இப்படிப்பட்ட சமயத்தில் ரிலீஸை பத்தி பேச எல்லாரும் தயங்கினாங்களாம். வேட்டைக்காரன் படத்தை ஒரு வாரம் கழிச்சு ரிலீஸ் பண்றத பத்தி எப்படி பேசுறது?
மறுநாள். தேவரை கூப்ட்டுட்டு MGR ஐ பாக்க போனாங்களாம். விஷயத்தை சொல்லியிருக்காங்க. "படத்தை பார்த்தேன். ப்ரமாதமாய், ப்ரமாண்டமாய் இருக்கு. நண்பர் சிவாஜியும் நல்லாவே நடிச்சிருக்கார். சரி, ஒண்ணு செய்ங்க, ரெண்டு படத்தையும் ஒண்ணாவே ரிலீஸ் செஞ்சிருங்க. ரெண்டு பேர் ரசிகர்களும் பார்த்து ரசிச்ச மாதிரி இருக்கும்ல. ரெண்டு பேர் ரசிகர்களும் ரெண்டு படத்தையும் பார்க்கட்டுமே. எல்லாரும் சந்தோஷப்படுவாங்க".

வேற வழி? அப்டீ இப்டீன்னு ரெண்டு படங்களும் 14.01.1964 ல ரிலீஸ் ஆயிருச்சு. கர்ணன் ரிலீஸ் ஆன தியேட்டர்கள்ல பிரமாண்டமான பேனர்கள். படத்தை பார்த்தவங்க பாராட்டினாங்களாம். ஆனா அவ்ளோ பணம் செலவழிச்சு எடுத்த கர்ணன், வேட்டைக்காரன் மாதிரி வெற்றி பெறலியாம். ஆனா பாருங்க, 2012ல வெளியான டிஜிட்டல் படம் ஓஹோன்னு ஓடுச்சாம்.

ஆனா வேட்டைக்காரன் ரிலீஸ் ஆன தியேட்டர்களில் என்ன செஞ்சாங்க தெரியுமோ? தேவர் ஃபிலிம் ஆச்சே. நிஜமான கூண்டு வச்சு, நிஜமான புலியையும் கூண்டுக்குள்ள வச்சுட்டாங்களாம். இந்தப் புலியை பார்க்குறதுக்குன்னே .............. கூட்டம் கூடுச்சாம். Low பட்ஜெட் படம் வசூலை குவிச்சுதாம். இதுக்கு MGR என்ன செஞ்சார் தெரியுமா? பந்துலுவுக்கு 1965ல ஆயிரத்தில் ஒருவன் படத்திற்கு வாய்ப்பு கொடுத்தாராம். நல்ல லாபம் அள்ளிக் கொடுத்த படமாச்சே. கன்னாபின்னான்னு ஓடின படமாச்சே. நல்ல மனுஷர்தானே MGR.


Baby Heerajan மீண்டும் சந்திப்போம்
heezulia
heezulia
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 610
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 193

Back to top Go down


best Re: திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?

Post by SK on Fri Jan 05, 2018 4:37 pm

இந்த பதிவு ஒன்ஸ் மோர் வந்திருக்கிறது அடுத்த பதிவுக்காக

ஐ அம் வைட்டிங்


SK
SK
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8074
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1554

Back to top Go down

best Re: திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?

Post by heezulia on Fri Jan 05, 2018 5:16 pm

05.01.2018 

ஒன்ஸ்மோர் வந்த ஞாபகமே இல்லியே, SK.  இப்படி வசனங்கள் நான் நிறைய அனுப்புறதால, உங்களுக்கு அப்டி தோணுதுன்னு நினைக்கிறேன். 

Hөөz∩ꞁ!ɐ
heezulia
heezulia
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 610
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 193

Back to top Go down

best Re: திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?

Post by SK on Sat Jan 06, 2018 10:27 am

:வணக்கம்:


SK
SK
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8074
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1554

Back to top Go down

best Re: திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?

Post by heezulia on Sat Jan 06, 2018 1:42 pm

06.01.2018 


என்னவோ இப்பதான் முதல் தடவையா பார்க்கிறமாதிரி வணக்கம் சொல்றீங்க. 

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 3 Hதிரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 3 Eதிரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 3 Eதிரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 3 Zதிரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 3 Uதிரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 3 Lதிரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 3 Iதிரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 3 A
heezulia
heezulia
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 610
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 193

Back to top Go down

best Re: திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?

Post by SK on Sat Jan 06, 2018 2:02 pm

இன்னிக்கு இது தான் முதல் தடவை பைத்தியம் பைத்தியம்


SK
SK
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8074
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1554

Back to top Go down

best Re: திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?

Post by heezulia on Sat Jan 06, 2018 4:31 pm

06.01.2018 

அதுக்கு ஏன் பைத்தியம் மாதிரி கொவிச்சுகிறீங்க? 


[நான் கோபம்னு நெனச்சேன். ஆனா அந்த smileyல பைத்தியம்னு எழுதியிருக்கு.]

Heezulia
heezulia
heezulia
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 610
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 193

Back to top Go down

best Re: திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?

Post by SK on Sat Jan 06, 2018 5:00 pm

கோவத்தில் பலரும் பைத்தியமா தானே ஆய்டுறாங்க


SK
SK
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8074
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1554

Back to top Go down

best Re: திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?

Post by heezulia on Sat Jan 06, 2018 5:57 pm

06.01.2018
அட, இப்பதான் தெரியுது. அதுல நீங்களும் ஒருத்தர்னு.  அதிர்ச்சி பயம் நக்கல் நாயகம்

Heezulia
heezulia
heezulia
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 610
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 193

Back to top Go down

best Re: திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?

Post by பழ.முத்துராமலிங்கம் on Sat Jan 06, 2018 8:23 pm

தேன்நிலவு படப்பிடிப்பு கதை ரசிக்கும் படி இருந்தது
நன்றி
சகோதரி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13649
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3475

Back to top Go down

best Re: திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?

Post by heezulia on Sat Jan 06, 2018 9:12 pm

06.01.2018 

உங்களை போலவங்க ரசிச்சு படிக்கத்தானே எழுதி அனுப்பிட்டே .................. இருக்கேன் Bro. 


நீங்க படிக்கிறதில எனக்கு சந்தோஷம். 

Heezulia 
heezulia
heezulia
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 610
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 193

Back to top Go down

best Re: திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?

Post by heezulia on Thu Jan 11, 2018 2:44 pm

11.01.2018
 
பீம்சிங் ரொம்......................... பிஸியான சமயம். KV கொட்டாரக்கா, அப்டீன்னு ஒரு கதாசிரியர். இவர் பீம்சிங்கை பார்த்து, தான் எழுதி வச்சிருந்த கதை சொல்லணும்னு ஒத்...................த கால்ல நிக்கிறார். அவரை சுத்..........தி சுத்...........தி வர்றார். ஆனா ஊஹும், பீம்சிங்குக்கு நேரமே இல்ல, அவரை கவனிக்க. அவர் விடலியே. விடாக்கண்டன் மாதிரி, விடாப்பிடியா கஜினி முஹம்மது மாத்ரி படை எடுத்தார்.
 
அப்பாடா, ஒரு வழியா பீம்சிங் அதிர்ந்து, வழிக்கு வந்துட்டா........................ர். அதுக்கு ஒரு காரணம் இருக்கு. கொட்டாரக்கா சொன்ன விஷயம். பீம்சிங் அதிர்ச்சி ஆகிறமாதிரி இவர் என்ன சொன்னார்? என்...................ன சொன்னார்?


“அண்ணன் தங்கை உயிருக்குயிரா காதலிக்கிற கதை, அவங்க சாகிற வரைக்கும் அப்படித்தான் இருந்தாங்க” ன்னு போட்டாரே .......................ஒரு போடு. அதனாலதான் பீம்சிங் அதிர்ந்தார். பின்னே, இருக்காதா அதிர்ச்சி? பீம்சிங் தன் குழுட்ட, “என்ன இவர் இப்படீல்லாம் பேசுறார்?” னு சொல்லி கோபப்பட்டிருக்கார்.  சரி, அவர் ஏதோ வித்தியாசமா ஏதோ சொல்றாரே, கதையைத்தான் கேட்டு பார்ப்போமேன்னு எல்லாரும் பேசி வச்சு, அவரை கூப்டனுப்பினாங்க.


கொட்டாரக்கா சந்தோ..................ஷமா வந்தாரு. கதை சொல்ல சொல்ல, கேட்டுட்டு இருந்தவங்க, என்ன செஞ்சாங்க தெரியுமா? சிரிச்சாங்களா? இல்ல, கோபப்பட்டாங்களா? இல்ல. சீ....................ரியஸா கதை கேட்டுட்டு இருந்தாங்களா? அதுவும் இல்ல. அப்போ என்னதான் செஞ்சாங்க?  
அத்.........................தன பேரும்  அழ ஆரம்பிச்சுட்டாங்க. அதுல பாருங்க, பீம்சிங்தான் ஏங்கி ஏங்கி அழுதாராம். அப்டி இப்டீன்னு எல்லாரும் கண்ட்ரோல் பண்ணிட்டு சமாதானமாயிட்டாங்க. பீம்சிங் கொட்டாரக்காட்ட,
“என்னய்யா இது, அண்ணன் தங்கை பாசத்தை, அன்பை, இப்படியா காதல்னு அசிங்கமா சொல்வே?” ன்னு திட்டினாராம். அதுக்கு அவர் என்ன சொன்னார்னு தெரியுமா?


“காதல்ங்கறது அன்பும், பாசமும் கலந்தது தானே. அதனாலதான் அப்டி சொன்னேன். இன்னொரு விஷயமும் இருக்கு. அப்படி சொல்லபோய்தானே, என்னை கூப்ட்டு கதைய சொல்ல சம்மதிச்சு  சொன்னீங்க.”
 
இந்தப் படந்தான் ‘பா.....................சமலர். ஆரூர்தாஸின் வசனம். நடிகையர் திலகமும், நடிகர் திலகமும், இவங்களுக்கிடையே ஜெமினி கணேசனும் போட்..............................டி போட்டு நடிச்ச படம். அண்ணன் தங்கைக்கான பாசப்பிணைப்புள்ள படம் இதுவரை வேற வந்திருக்கா, வந்திருக்கா, வந்திருக்கா சொல்லுங்க, நாம எல்லோருமே சேர்ந்.....................து சொல்லுவோம், “இல்ல இல்ல இல்லவே இல்...................ல”


சின்னசாமி சார் ‘நெஞ்சில் பூத்த பாசமலர்’ னு ஆரூர்தாஸ் சொன்னதை ‘சாதனை படைத்த தமிழ் திரைப்பட கலைஞர்கள்’ ல எழுதியிருக்கார்.
 
க்ளைமாக்ஸ் ஸீன் எடுக்கணும். பீம்சிங் சிவாஜியை கூப்ட்டு, அடுத்த நாள் எடுக்கப் போகும் இந்த க்ளைமாக்ஸ் சீனை பற்றி சொல்லிட்டு இருந்தார். “நாளைக்கு கிளைமாக்ஸ் ஸீன்ல, நீங்க “கை வீசம்மா கை வீசு” ன்னு சொல்லி உணர்ச்சிகரமா நடிக்கிற ஸீன். அண்ணன் தங்கை கடைசியா பேசிட்டு இறந்து போகும் ஸீன். அந்த ஸீன்ல தாடில்லாம் வளர்த்து, களைத்து, கண்ணுக்கு கீழ கருவளையத்துடன் சோர்ந்து, உங்க முகம் வயசானது போல தெரியணும். அதுக்கேத்த மாதிரி மேக்கப் போட்டுக்கோங்க”ன்னு சொல்லிட்டு பீம்சிங் போய்ட்டார்.
 
சிவாஜிக்கு எப்படி நடிக்கணும், என்ன செய்யணும்னு வீட்ல யோசிச்சிட்டு இருந்தார். அன்னிக்கி ராத்திரி முழுக்............................ க தூங்கலியாம். அவர் வீட்டையே சுத்..................தி சுத்தி வந்தாராம். தூங்காம இருக்க டீ மட்டும் குடிச்சுட்டு இருந்தாராம். சரியா சாப்பிடல.
 
காலைல பார்த்தா........................., அவர் கண்ணுக்கு கீழ லேசான கரு வளையம். மூஞ்சி சோர்ந்து போய் இருந்துச்சு, மொத்தத்ல அவரே டய...................ர்டா இருந்தார். சரி, இப்படி இருந்தா, அந்த க்ளைமாக்ஸ் ஸீன்க்கு சரியா இருக்கும்னு, ஷூட்டிங்க்கு கெளம்பி போனார். அங்க அந்த ஸீன்க்கான எல்................லா ஏற்பாடுகளும் நடந்துட்டு இருந்துச்சாம். நடிகர் திலகம் போய் மேக்கப் போட்டுட்டு வந்தார்.
 
அந்த க்ளைமாக்ஸ் ஸீன் படமாக்கப்பட்டுச்சாம். அண்ணன் தங்கை நடிச்ச அந்த ஸீனை, எல்லா..........................ரும் அசந்.................................து போய் ரசிகர்கள் மாதிரி பாத்துட்டு இருந்தாகளாம். பின்னே, அவங்களும் ரசிகர்கள்தானே. ஸீன் முடிஞ்சிருச்சு. ஒரே ஒருத்தர் கை தற்ற சத்தம் மட்டும் கேட்டுச்சாம். அவ்வளவு நேரமா அந்த ஸீனை பாத்துட்டு இருந்தவங்க, கைதட்டல் சத்தம் வந்த பக்கம் திரும்பி பார்த்தா................... பீம்சிங்தான் கை தட்டிட்டு இருந்தாராம், “கட்” சொல்லாம. அவரும் அந்த ஸீன்ல அவ்ளோ இன்வால்வ் ஆய்ட்டார்.
 
இதுதாங்க அந்த  அண்ணன் தங்கை காதலிச்ச கதை.
 
அந்த காலத்துல நடிச்சவங்கல்லாம், சினிமாவில நடிக்கிறதுக்கு, தங்களையே எப்டீல்லாம் தங்களை வருத்தி நடிச்சிருக்காங்கன்னு பார்த்தீங்களா?  
- Oneindia


Heezulia 
heezulia
heezulia
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 610
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 193

Back to top Go down

best திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?

Post by heezulia on Fri Jan 19, 2018 8:40 pm

19.01.2018

வீரத்திருமகன்

விஜயபுரி வீரன் 1960. இந்தப் படத்தில நடிச்ச ஆனந்தன் நிஜத்திலும் வீரன்தான். இவருடைய சுறுசுறுப்பும், தைரியமும்தான் இந்த  படத்துக்கு சான்ஸ் கிடைக்க காரணம். 

குத்துச்சண்டைனாலும் சரி, குதிரை சவாரினாலும் சரி, ஆனந்தன் அட்டகாசமாக செய்வாராம். அவ்ளோ சுறுசுறுப்பாக இருப்பாராம். இதனாலேயே திருலோகசந்தருக்கு அவருக்கு ரொம்ப புடிக்கும். 

வீரத்திருமகன் படத்தின் ஸ்டண்ட் டைரக்டர் சுவாமிநாதன். இவர் பெப்ஸி விஜயனின் மகன். டைரக்டர் திருலோகசந்தர் பாக்ஸராமே. சண்டை காட்சிகளை படமாக்கும்போது, எப்படி எப்படி சண்டை போடணும்னு சொல்லியும் காட்டுவார், செஞ்சும் காட்டுவாராம். 

சண்டைக் காட்சியில ஆனந்தன் ஜாக்கிரதையா face பண்ணுவாராம். அவ்ளோ நல்லா டைமிங்க்ஸ் keepup பண்ணுவாராம்.  வீரத்திருமகன் படத்தில திவானாக நடிச்ச ராமதாஸ், முகத்தில குத்து வாங்கிருவாராம். 

குதிரை சவாரி. இதில ஆனந்தன் ராமதாசை சேஸ் பண்ற ஸீன். ஆனா  ஆனந்தன் முன்னால போயிருவார், ராமாதாஸ் பின்னால போவாராம். 

அப்போ ஆனந்தன் ராமதாஸை  பார்த்து,  "குதிரய விரட்டுங்க, குதிரைய விரட்டுங்க" ன்னு கத்திகிட்டே, ராமதாஸுக்கு பின்னால வருவாராம். ராமதாஸ் குதிரையை விரட்டுற சமயத்தில, அவர் கீழே விழுந்துவிடுவாராம். சேஸிங் ஸீன் காமெடி ஸீன் மாதிரி ஆகிவிடுமாம். ஆனா திருலோகசந்தர் இந்த ஸீனை எடிட்டிங்க்ல சரி செஞ்சுருவார். 

அசோகன் சினிமாவில  முரட்டுத்தனமான நடிகராம். சண்டை ஸீன்லாம் படமாக்கும்போது, நெஜமாவே குத்திருவாராம். அவர் கூட சண்டை போடறவர், ஜாக்..............கிரதையா நடிக்கணும். 

அப்போல்லாம் அட்டை கத்தியாலதான் சண்டை போடறாங்கன்னு ஜனங்கள் கண்டுபுடிச்சிட்டாங்க. அதனால அப்புறமா நிஜக் கத்தியை வச்சு படமாக்க ஆரம்பிச்சாங்க. விஜயபுரி வீரன் படத்தில, வாள்சண்டையை படமாக்கியதில, திருலோகசந்தருக்கு நல்ல பேர். இந்த வீரத்திருமகன் படத்திலேயும் அப்படித்தானாம். இப்படி அவர் டைரக்ட் செஞ்ச வாள்சண்டை, குத்துச்சண்டை, குதிரை சேஸ்ஸிங் இவை எல்லாத்தையும், ஒளிப்பதிவாளர் முத்துசாமி சூப்............பரா ஒளிப்பதிவு செஞ்சாராம். 

BR பந்துலுவின் மனைவி MV ராஜம்மா. இவர் இந்தப் படத்தில முக்கிய ரோல்ல  நடிச்சிருந்தார். இவர் மேக்கப் ரூமுக்கு வந்து, தான் நடிக்க வேண்டிய காட்சியை விவரமாக சொல்ல சொல்வாராம். அவலத்தையும் கேட்டுட்டு, அங்கேயே அந்த பாத்திரமாக மாறிவிடுவாராம். யார் என்ன பேசினாலும், கேட்டாலும், அந்த பாத்திரத்தின் பாணியிலேயே பதில் சொல்வாராம். நடிப்பில அவ்ளோ............. இன்வால்வ்மென்ட். 

வீரத்திருமகன் பாட்டு ஸீன். இதை எடுக்கிறதுக்கு தலக்காடு என்கிற இடத்துக்கு போனாங்களாம். ஹீரோயின் சச்சு காதில மாட்டியிருந்த கொக்கி தோடு, படப்பிடிப்பின்போது கீழ விழுந்துருச்சு. மணல்ல தேட முடியல.  என்ன செய்றதுன்னு தெரியாம முழிச்சாங்க. அதுக்குள்ள மேக்கப் மேன், இன்னொரு தொடு இருக்கிறதா சொல்லி கொண்டு வந்தாராம்.  அதை சச்சுவின் காதுல மாட்டி, படப்பிடிப்பை தொடர்ந்துச்சு. மறுபடியும் அந்த தோடு கீழ விழுந்துருச்சு. அந்த மணல்ல எங்க போய் தேட்றது. 

"இனிமே அட்டையில கல்லை ஒட்டி, அதை சச்சுவின் காதில வச்சு தச்சுதான் ஷூட்டிங் எடுக்கனும்போல" ன்னு மேக்கப் மேன் சொன்னாராம். "ஏம்பா, அவங்களே..............  புதுப்பொண்ணு,  நீங்க ஏன் பயமுறுத்துறீங்க?" ன்னு சொல்லி சமாளிச்சாங்க. அப்புறமா ஜிகினா ஒட்டிய அட்டையை சச்சு காதில ஒட்டி, எப்படியோ ஷூட்டிங்கை முடிச்சாங்க. இப்படி சின்ன சின்ன விஷயத்தில கூட அக்கறை எடுத்துக்குவாங்களாம். 

சில ஸீன்களை மைசூர் பிருந்தாவனம் கார்டனில் இருக்கிற கோட்டையில எடுக்கலாம்னு முடிவு செஞ்சு வச்சிருந்தாகளாம். ஆனா அங்க ஷூட்டிங் எடுக்ககூடாதுன்னு சொல்லிட்டாங்களாம். அந்த ஷூட்டிங்க்கு மனோரமா வரவேண்டியதாம். 

"அந்த ஸீனை எல்லாம் சென்னையிலேயே எடுத்துக்கலாம். அதனால மனோரமா ஆச்சியை வரவேண்டாம்னு ட்ரங்க்கால் அனுப்பிருங்க. தந்தியும் கொடுத்திருங்க"ன்னு ப்ரொடக் ஷன் மேனேஜர்ட்ட AVM சாரவணன் சொல்லிட்டார். 

அங்க எடுக்க வேண்டிய பாடல் காட்சி ஷூட்டிங்கை தொடர்ந்தாங்க. ரெண்டு நாளாச்சு. கால்ஷீட் கொடுத்த சரியா..................ன நேரத்தில, ராத்திரியோடு ராத்திரியா மதுரைல இருந்து கார்ல கெளம்பி வந்துட்டார். யாரு, யாரு? மனோரமா ஆச்சிதான்.  வேலைல சின்ஸியாரிட்டிய பாருங்க, ஆச்சிக்கு. அவரை பார்த்த எல்லாருக்கும் ஷாக். 

சரவணன், "என்னப்பா, ஆச்சிக்கு தந்தி அனுப்பலியா?" ன்னு ப்ரொடக் ஷன் மேனேஜர்ட்ட கேட்டார். அவர், "வேலைகள பிஸியா இருந்ததில மறந்துட்டேன் சார்"ன்னு சொல்லியிருக்கார். 

"ஏதோ மறதில சொல்ல மறந்துட்டார். அவரை ஒண்ணும் சொல்லாதீங்க."ன்னு ஆச்சி சரவணன்ட்ட சொல்லி நெலமைய சமாளிச்சார். ஆச்சி நல்ல நடிகை மட்டுமில்ல, மனித நேயமுள்ள மனுஷி, இல்ல? 

- ஹிந்து 

Heezulia 
heezulia
heezulia
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 610
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 193

Back to top Go down

best திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?

Post by heezulia on Sat Jan 20, 2018 1:23 am

18.01.2018

நானும் ஒரு பெண் 1963 


நம்ம க்ரூப்ல எத்தனை பேர் சிவப்பு, எத்தனை பேர் கருப்பு? நான் மாநிறம். 

கருப்பா இருக்கிறவங்கள மத்தவங்களுக்கு புடிக்காதாம். அதுலயும் கருப்பு பெண்களை?  ஏனாம்? அவங்களும் மனுஷங்கதானேன்னு நினைக்கலாம்ல? அவங்க என்ன பாவம் செஞ்சாங்க? 

சரி நம்ம  சப்ஜெக்ட்டுக்கு வர்றேன். இப்படி ஒரு கருப்பு நிறத்தில் இருக்கிற பெண்ணை பற்றிய கதைதான் AVM மின் இந்தப் படம். திருலோகசந்தர் இயக்கியிருக்கார். விஜயகுமாரி ஹீரோயின். எது தேவையோ, அதை சிறப்பாக நடிக்கும் ஒரு நடிகை. SSR, ஹீரோ, லட்சிய நடிகர். இவருடைய நடிப்பு, வசன உச்சரிப்பு சொல்லவே வேணாம். அவ்வளவு அருமையாக இருக்கும். 

படம் ஓஹோஹோஹோன்னு ஓடி, மத்திய அரசின் விருதும் கெடச்சுது. 

SV ரங்காராவ், இறந்து போன தன் மனைவியின் ஃபோட்டோவை தன் ரூம்ல வச்சிருக்கார். அந்த ஃபோட்டோவின் முன்னால நின்னுட்டு, எதை செய்யணும்னாலும், ஃபோட்டோட்ட பர்மிஷன் வாங்கிட்டுதான் செய்வார். 
அப்படி ஒரு கேரக்டர்.

இதுல ஒரு இண்ட்ரஸ்ட்டிங்கான விஷயம் இருக்கு.  ரங்காராவ் மனைவி ஃபோட்டோவா நடிக்கிறதுக்கு ஒரு ஃபோட்டோ  வேணும். ஒரு அழகான  பெண்ணை வச்சு அந்த ஃபோட்டோவை எடுக்கணும். AK சேகர்னு ஒரு கலை இயக்குனர்.  அவர்ட்ட அந்த ஸீனை சொல்லி, இப்படி ஒரு ஃபோட்டோ எடுக்கணும்னு திருலோகசந்தர் சொன்னார். 

அவர் பா...............ட்டுக்கு சொல்லிட்டு போய்ட்டார். இப்ப அழகான பொண்ணை எங்க போயி தேட்றது? அந்த சமயத்தில, SP முத்துராமன் திருலோகசந்தர்ட்ட உதவியாளராக இருந்தாராம். 

சேகர் அவர்ட்ட, "நம்ம குரூப் டான்ஸர்களில, அழகான ஒரு பொண்ண பார்த்திருக்கேனே"ன்னு சொல்லியிருக்கார். 

SPM : நிறைய பேர் இருக்கிறாங்களே. எப்படி கண்டுபுடிக்கிறது? 

சேகர் : ஜெமினியின் டான்ஸர் க்ரூப்ல உள்ள பொண்ணுங்களை பார்த்து கூட்டிட்டு வாங்க. நான் பாத்துக்குறேன்.

ஜெமினியின் டான்ஸர் பொண்ணுங்க வந்தாங்க. ஒவ்வொருத்தரையா................ பார்த்த சேகர், அவர் ஏற்கனவே பார்த்த பொண்ணை அடையாளம் தெரிஞ்சுக்கிட்டார். அந்த அழகா..............ன பொண்ணு பேரு ராஜேஸ்வரியாம். இந்தப் பொண்ண வச்சு, சேகர் முன்னால போஸ் போஸா ................ ஃபோட்டோ எடுத்து தள்ளியிருக்காங்க. அதுல ஒரு போட்டோதான், இந்தப் படத்தில வாழும் மனைவி ஆகிட்டா. 

இந்தப் படத்தில SSR, பொண்ணு பார்க்க வரும்போது புஷ்பலதாவை காட்டுவாங்க. ஆனா கல்யாணத்தின் போது, மணவறைல விஜயகுமாரி உக்காந்திருப்பாங்க. இதை MR ராதாவின்  மனைவி CK சரஸ்வதி கவனிச்சிருவாங்க. இப்போ அவங்க கோபமாக ஒரு வசனம் பேசணும். 

"கண்ணுல மண்ணை அள்ளிப் போட்டுட்டு, நம்மளை ஏமாத்துறாங்களே" இதுதான் CK சரஸ்வதி அந்த ஸீன்ல பேசவேண்டிய வசனம். இந்த SSR சும்மா இருக்காம, நைஸா CKS பக்கத்ல வந்து, "CKS, வசனத்தை மாத்தி பேசிறாதீங்க" ன்னு சொல்லிட்டு போய்ட்டார். 

நடிக்கிறவங்களுக்கு, வசனம் பேச போற சமயத்தில இப்படி யாராவது எதையாவது சொல்லிட்டா, ஒரு மாதிரி பயம் வந்துரும். அப்படித்தான் CKS கும் இருந்துச்சாம். அவர் என்ன பேசியிருக்கார்னு பாருங்க.

CKS : மண்ணுல கண்ணை அள்ளிப்போட்டு நம்மள ஏமாத்த பாக்குறாங்களே. 

அம்புட்டுதான், குபீ............................ர் சிரிப்பு. எல்லா.................ரும் சிரிச்சுட்டாங்க. CKSக்கு  ஒண்ணும் புரியலியாம்.  அவர் பேசின வசனத்தை போட்டு காட்டியிருக்காங்க. "ஐயோ ஐ............ய்யோனு CKS தலைல அடிச்சுகிட்டாராம். 

"எல்லா..................த்துக்கு இந்த ராஜுதான் காரணம்" ன்னு SSR ஐ சொன்னார். அப்புறமா சரியான வசனத்தை பேசி, ஷூட் செஞ்சாங்களாம். 

"கண்ணா ............... கருமை நிறக் கண்ணா" பாட்டு பாட சுசீலா வந்தார். MSV படத்தின் கதையையும்,  அந்தப் பாட்டுக்கான சூழ்நிலையையும் சொல்லி, எப்படி பாடணும்னும் பாடிக்காட்டினாராம். சுசீலாவும் உணர்ச்சிகளை கொட்டி பாடியிருப்பார். 

படமும், பாட்டுக்களும் வெற்றியோ, வெற்றி.

- ஹிந்து 


Heezulia
heezulia
heezulia
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 610
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 193

Back to top Go down

best Re: திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?

Post by பழ.முத்துராமலிங்கம் on Sat Jan 20, 2018 11:08 am

பிரித்து பகுதிகளாக பதிவு
செய்தால் படிக்க ஏதுவாக
இருக்கும்.
திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 3 3838410834 திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 3 103459460 திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 3 1571444738
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13649
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3475

Back to top Go down

best Re: திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?

Post by heezulia on Sat Jan 20, 2018 12:00 pm

20.01.2018 

திரைக்குப் பின்னால் நடந்ததை 'தெரிந்ததும் தெரியாததும்' பகுதியில தெரியாத்தனமா போட்டுட்டேன். 


சரி சார். இனிமே பார்த்து அனுப்புறேன். 

நன்றி. 

Heezulia
heezulia
heezulia
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 610
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 193

Back to top Go down

best Re: திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை