ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

கரையே இல்லாத ஆறு
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

என் அப்பா.
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 சிவனாசான்

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 sandhiya m

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 PKishanthini

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Go down

best திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?

Post by heezulia on Sun Dec 17, 2017 2:18 pm

First topic message reminder :

17.12.2017

கர்ணன் vs வேட்டைக்காரன்

ரஜனி / கமல், விஜய் / சூர்யா மாதிரி அப்போ சிவாஜி / MGR. இவங்க படங்கள் ரிலீஸ் ஆனா, அவங்கவங்க ரசிகர்கள் மோதிக்குவாங்களாம்.

பந்துலு எக் ............. கச்சக்கமான செலவுல கர்ணன் படத்தையும், திருமுகம் கொறஞ்.................ச பட்ஜெட்ல வேட்டைக்காரன் படத்தையும் எடுத்தாங்களாம். கர்ணன் படத்ல முன்னணி நட்சத்திர கூட்டம். பாதி படம் முடிஞ்சிருச்சாம். மீதி படத்தை எடுக்கவும் ஆரம்பிச்சாச்சாம். ஆனா வேட்டைக்காரன் படத்தை அப்பதான் எடுக்க ஆரம்பிச்சாங்களாம்.

பந்துலு கர்ணன் படத்தை பொங்கல் அன்னிக்கி ரிலீஸ் செய்ய சுறுசுறுப்பா வேல செஞ்சுட்டு இருந்தாராம். அப்போ ஒருத்தர் பந்துலுட்ட ஒரு விஷயத்தை சொல்லியிருக்கார். பந்துலு யோசிக்க ஆரம்பிச்சுட்டாராம். அந்த ஆள் சொன்ன விஷயம் என்ன............? கர்ணன் ரிலீஸ் ஆகிற அன்னிக்கே, திருமுகம் வேட்டைக்காரன் படத்தை ரிலீஸ் செய்ய போறதா.

ரெண்டு மெகா ஸ்டார் படங்கள் ஒண்ணா ரிலீஸ் ஆனா நல்லா இருக்காதே, வசூல் அடிபடுமேன்னு பந்துலு நினைச்சு, தமது குழுவினருடன் பேசினாராம். சிவாஜி காதிலும் போட்டு வச்சாங்க. அவரும் யோசனை செய்ய ஆரம்பிச்சுட்டாராம். வேட்டைக்காரன் படத் தயாரிப்பாளர் தேவரையும் கூப்ட்டு பேசியிருக்காங்க. ஆனா இவங்கல்லாம் என்னதான் பேசினாலும், MGR தான் ரிலீஸ் date சொல்லணுமாமே. ஒரு வாரம் கழிச்சு படத்தை ரிலீஸ் செய்யலாம்னு அவர்ட்ட எப்படி, யார் சொல்றது? அப்புறமா ஒருத்தர் ஒரு ஐடியா சொன்னாராம். MGR க்கு கர்ணன் படத்தை தனியா போட்டு காட்டிட்டு, அதுக்கப்புறமா ரிலீஸ் பத்தி பேசலாம்னு முடிவு செஞ்சாச்சாம். MGRட்ட போய் சொன்னாங்களாம். அவரும் படத்தை பார்க்க உம் சொல்லிட்டாராம்.

படத்தை பார்த்த MGRக்கு சிவாஜியின் நடிப்பு ரொம்ப புடிச்சு போச்சாம். "நடிப்புக்குன்னே பொறந்தவர்யா. மனுஷன் கர்ணனாவே வாழ்ந்திருக்கார்"ன்னு பாராட்டினாராம். பந்துலு உள்பட, எல்லா கலைஞர்களையும் மனசா................ர புகழ்ந்தாராம். படத்தின் வெற்றிக்கு வாழ்த்து சொல்லிட்டு போய்ட்டாராம். இப்படிப்பட்ட சமயத்தில் ரிலீஸை பத்தி பேச எல்லாரும் தயங்கினாங்களாம். வேட்டைக்காரன் படத்தை ஒரு வாரம் கழிச்சு ரிலீஸ் பண்றத பத்தி எப்படி பேசுறது?
மறுநாள். தேவரை கூப்ட்டுட்டு MGR ஐ பாக்க போனாங்களாம். விஷயத்தை சொல்லியிருக்காங்க. "படத்தை பார்த்தேன். ப்ரமாதமாய், ப்ரமாண்டமாய் இருக்கு. நண்பர் சிவாஜியும் நல்லாவே நடிச்சிருக்கார். சரி, ஒண்ணு செய்ங்க, ரெண்டு படத்தையும் ஒண்ணாவே ரிலீஸ் செஞ்சிருங்க. ரெண்டு பேர் ரசிகர்களும் பார்த்து ரசிச்ச மாதிரி இருக்கும்ல. ரெண்டு பேர் ரசிகர்களும் ரெண்டு படத்தையும் பார்க்கட்டுமே. எல்லாரும் சந்தோஷப்படுவாங்க".

வேற வழி? அப்டீ இப்டீன்னு ரெண்டு படங்களும் 14.01.1964 ல ரிலீஸ் ஆயிருச்சு. கர்ணன் ரிலீஸ் ஆன தியேட்டர்கள்ல பிரமாண்டமான பேனர்கள். படத்தை பார்த்தவங்க பாராட்டினாங்களாம். ஆனா அவ்ளோ பணம் செலவழிச்சு எடுத்த கர்ணன், வேட்டைக்காரன் மாதிரி வெற்றி பெறலியாம். ஆனா பாருங்க, 2012ல வெளியான டிஜிட்டல் படம் ஓஹோன்னு ஓடுச்சாம்.

ஆனா வேட்டைக்காரன் ரிலீஸ் ஆன தியேட்டர்களில் என்ன செஞ்சாங்க தெரியுமோ? தேவர் ஃபிலிம் ஆச்சே. நிஜமான கூண்டு வச்சு, நிஜமான புலியையும் கூண்டுக்குள்ள வச்சுட்டாங்களாம். இந்தப் புலியை பார்க்குறதுக்குன்னே .............. கூட்டம் கூடுச்சாம். Low பட்ஜெட் படம் வசூலை குவிச்சுதாம். இதுக்கு MGR என்ன செஞ்சார் தெரியுமா? பந்துலுவுக்கு 1965ல ஆயிரத்தில் ஒருவன் படத்திற்கு வாய்ப்பு கொடுத்தாராம். நல்ல லாபம் அள்ளிக் கொடுத்த படமாச்சே. கன்னாபின்னான்னு ஓடின படமாச்சே. நல்ல மனுஷர்தானே MGR.


Baby Heerajan மீண்டும் சந்திப்போம்
avatar
heezulia
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 571
மதிப்பீடுகள் : 187

View user profile

Back to top Go down


best Re: திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?

Post by heezulia on Thu Dec 28, 2017 10:39 pm

28 .12 .2017 

BR பந்துலு சில படங்களை எடுத்து நஷ்டமாச்சு. அந்த சமயத்தில ஏதாவது ஒரு லோ baட்ஜெட் படம் எடுக்கலாம்னு அவர் முடிவு செஞ்சாராம். அவர் குழுவுடன் diஸ்க்கஸ் செஞ்சார். சரி, யாரை ஹீரோவா போடலாம்? விஜயன் or ஜெய்சங்கர், யாரை செலெக்ட் செய்றது? விஜயன் யார் தெரியுமோ? ‘பாதை தெரியுது பார்’ படத்தில ஹீரோவா அறிமுகமாகி, பிற்காலத்தில K விஜயன்ட்டு டைரக்டரானவர். சரி, இவங்க ரெண்டு பேர்ல யாரையாவது வச்சு படம் எடுக்கலாம்னு முடிவாச்சு.

கதை வேணும். Piratesனு ஒரு இங்லிஷ் நாவலாம். இதை படமா எடுக்கலாம்னு திரைக்கதையை ரெடி பண்ணினாங்க. எழுதியவர் RK சண்முகம். 


படம் எடுக்க பணம் வேணுமே. யார்ட்ட கேக்கலாம்? வீனஸ் பிக்சர்ஸ். இவங்க பட்ஜெட் படங்களுக்கு ஃபைனான்ஸ் செஞ்சுட்டு இருந்தாங்களாம். இவங்க பந்துலுவுக்கும் பணம் கொடுக்க முன் வந்தாங்க. 

அவங்ககிட்ட கதையை சொன்னார். இந்தப் படத்துக்கு ஹீரோ யார்ன்னு வீனஸ் கேட்டாங்களாம். பந்துலு, விஜயன் இல்ல ஜெய்சங்கர்னு சொல்லியிருக்கார். “இல்ல இல்ல, இந்தக் கதையை நீங்க சொல்ற பட்ஜெட்ல எடுக்க முடியாது. இதுக்கு MGRதான் சரியா இருக்கும். நீங்க போட்ற பணமும், நான் தர்ற பணமும் நமக்கு திரும்ப கிடைக்கணும்னா அவரை நடிக்க வச்சாதான் முடியும். என்ன சொல்றீங்க. OK ன்னா சொல்லுங்க”ன்னு வீனஸ் சொல்லிட்டாங்களாம். பந்துலு யோசிக்காமையே “OK, MGRரே நடிக்கட்டும். நீங்களே அவர்ட்ட பேசி முடிச்சுருங்களேன்”ன்னு வீனஸாரிடம் சொல்லிட்டாராம், பந்துலு. 

சிவாஜியை வச்சு படங்களை எடுத்துட்டு இருந்த பந்துலு, வீனஸ் பிக்சர்ஸ் மூலம், தன்னை வச்சு படம் எடுக்கப் போறார்னு MGR கேள்விப்பட்டார். பந்துலுவை அவர் குழுவோடு கூப்ட்டனுப்பி பேசி சம்மதம் சொல்லிட்டாராம். கதையை MGRட்ட சொன்னாங்க. அவர் அந்தக் கதையை அங்கங்க கொஞ்சம் மாத்தினாராம். வந்தவங்களும் ஒத்துகிட்டாங்க.

படத்துக்கு ‘ஆயிரத்தில் ஒருவன்’ன்னு பேர் வச்சாங்க. கோவாவில ஷூட்டிங். பாட்டு ஸீன் எல்லாம் எடுத்து முடிச்சாச்சாம். 


அப்...........புறமா வாலியை “ஏன் என்ற கேள்வி” பாட்டை எழுத சொல்லி, கடசீ ................ ல படமாக்கி சேத்தாங்களாம். JJ & MGR ஜோடியின் முதல் படம். பந்துலுவுக்கு ரெண்டு பங்கு லாபமாம். அவருடைய எல்லா கஷ்டங்களையும் போக்கிய படமாம்.

2014ல இந்தப் படம் re-entry ஆச்சு. அப்பவும் வெள்ளிவிழா கொண்டாடியது.

- Oneindia

Heezulia
avatar
heezulia
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 571
மதிப்பீடுகள் : 187

View user profile

Back to top Go down

best Re: திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?

Post by heezulia on Thu Dec 28, 2017 11:08 pm

28 .12 .2017 

ஒரு சர்வாதிகாரி ராஜா கொடுங்கோல் ஆட்சி நடத்துறான். மக்கள் கொத்தடிமைகளாக இருக்கிறாங்க. அப்போ ஒரு பெண் அந்த ஊர்ல பாட்டு பாடி, டான்ஸ் ஆடி, டென்ஷன்ல இருக்கிற அந்த ஊர் ஜனங்களை சந்தோஷப்படுத்துறா. அவளுடைய பாட்டு அந்த ஊர் ஜனங்களுக்கு மான அவமான உணர்ச்சிகளை தட்டி எழுப்புது. இது அந்த ராஜாவுக்கு தெரிஞ்சு, அவளை விரட்ட வீரர்களை அனுப்புறான். அவளும் ஊரை விட்டு போற சமயத்தில, கதாநாயகன் வர்றான். அவளுக்கு தைரியம் சொல்லி, சுதந்திரத்தை பற்றி ஜனங்களுக்கு பாடி உணர்த்துறான்.

இதுதான் K சங்கர் வாலியிடம் சொன்ன situation. வாலியும் "உலகத்ல இறைவன் கட்டளையை தவிர, வேற யார் கட்டளையும் செல்லுபடி ஆகாது" என்கிற அர்த்தத்ல "ஆண்டவன் கட்டளை முன்னால உன் அரசகட்டளை என்னாகும்" ன்னு அந்த ராஜாவை பார்த்து பாட்ற மாதிரி எழுதியிருந்தார். இதை பார்த்த சங்கர் மூஞ்சியும், பக்கத்தில இருந்த அசிஸ்டண்ட் டைரக்டர்கள் மூஞ்சியும் மாறிருச்சு. MGR உம் அந்த வரிகளை பார்த்துட்டு, வாலியை முறச்சாராம். வாலிக்கு குழப்பம். "என்ன, யார் முகத்திலும் ஈயாடலியே. என்ன காரணம்னும் தெரியலியே" னு பயந்து முழிச்சாராம். 

MGR எப்பவுமே வாலியை "ஆண்டவனே "ன்னுதான் கூப்டுவாராம். அந்த சமயத்தில "என்னங்க வாலி" னு கூப்ட்டாராம். அம்புட்டுதான், வாலி வெலவெலத்து போனாராம். "இவர் என்ன செல்லப்போறாரோ தெரியலியே" னு பயந்து பக்கத்தில போனாராம். 

MGR : இப்படி என்னை அவமானப்படுத்தணும்னு எத்தனை நாளா நெனச்சுட்டு இருந்தீங்க? நேரடியாவே சொல்லியிருக்கலாமே. இப்படி பாட்டு எழுதியிருக்கீங்களே.

வாலி : [கொஞ்சம் தைரியத்தை வரவழைச்சு]என்னண்ணே இப்டி சொல்லிட்டீங்க. நீங்க நினைக்கிறமாதிரி ஒண்ணும் இந்தப் பாட்ல நான் உங்களை அவமானப் படுத்துற மாதிரி எழுதலியே. எனக்கு புரியலியேண்ணே.

MGR [கோபம் அதிகமாகி] : என்னது புரியலையா? அந்த வரிகளை படிங்க.

வாலி : [அந்த வரிகளை படிச்சு காட்டினார்] இதுல என்னண்ணே தப்பு இருக்கு?

MGR : நான் இந்தப் படத்துக்கு வச்ச பேர் என்னானு தெரியுமா? 

வாலி : அதான் தெரியுமே, அரசகட்டளை. 

MGR : தெரிஞ்சுமா இப்படி எழுதினீங்க? ஆண்டவன் கட்டளை சிவாஜி நடிச்ச படம். அரசகட்டளை நான் இப்ப நடிக்கிற படம். யோசிச்சு பாருங்க. சிவாஜி படத்துக்கு முன்னால் உன் படம் என்னாகும்னு கேக்குற மாதிரி இல்ல? 

MGR படபடன்னு கோவத்துல கடுகு மாதிரி வெடித்தார். 

வாலி : அந்த அர்த்தத்ல நான் எழுதலேண்ணே. Situationக்கு ஏத்த மாதிரிதான் எழுதியிருக்கேன். சத்தியமா நான் தப்பா நெனச்சு எழுதலேண்ணே. 

வாலி எல்லா தெய்வங்கள் மேலேயும் சத்தியம் செஞ்சுகூட, MGR ஓரளவுக்குதான் சமாதானமானராம். அடுத்த நாள் முத்துக்கூத்தன் கவிஞரை கூப்ட்டு அந்த situationக்கு ஏற்ற பாட்டை எழுத சொன்னாராம். அவரும் எழுதினார்.

"ஆடப் பிறந்தவளே ஆடிவா" 

- வாலி எழுதிய 'எனக்குள் MGR' தொடரில் இருந்து. 

Heezulia
avatar
heezulia
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 571
மதிப்பீடுகள் : 187

View user profile

Back to top Go down

best Re: திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?

Post by heezulia on Thu Dec 28, 2017 11:59 pm

28 .12 .2017 

29.12.2017ல இருந்து 31.12.2017  வரைக்கும் நான் லீவு. 

தேன்நிலவு 

இதப்பத்தி நான் படிச்சத சொல்றேன். அச்சச்சோ ................என்னா கற்பனை கன்னாபின்னான்னு போவுதா? ஸ்டாப்..................ஸ்டாப். நான் அந்த படத்த பத்திதான் சொல்ல போறேங்க. என்ன மனசு சோர்ந்து போச்சோ. இத படிங்க சரியா போகும். 

இந்த படத்த காஷ்மீர்ல 52 நாள்ல எடுத்தாங்களாம். இப்போல்லாம் எடுத்து முடிச்ச சீன்ஸ போட்டு பார்த்து, ஏதாவது காட்சி பிடிக்கலேன்னா, சரியா வரலேன்னா மறுபடியும் எடுத்துக்குவாங்கல்ல. அப்போ இதமாதிரி வசதீல்லாம் இல்லியாம். ஷூட்டிங் குழுவினர் தங்கி இருந்த இடம் ஒரு கிராமமாம். அங்கே ஒரே ஒரு தியேட்டர்தானாம். அம்புட்டு குக்...................கிராமம். 


இப்டி ஒரு கிராமத்திலே இருந்துகிட்டு, காஷ்மீர்ல, அதுவும் அந்த குளிரில, கஷ்...............................டப்பட்டு எடுத்த படத்த எப்டி போட்டு பார்க்க முடியும்னு சொல்லுங்க பார்ப்போம்! சரி, எடுத்த படத்த சென்னைக்கு கொண்டு போயி, அங்க பிலிம டெவலப் செஞ்சு, படத்த பாத்துட்டு, திருப்தியில்லாத காட்சிய எல்லாம் மறுபடியும் காஷ்மீருக்கு வந்து.................................... ஹ்ம்...................................அந்த காட்சிய எல்லாம் எடுக்கணும்னா.........................................இதெல்லாம் முடியுற காரியமா? 

அதனால காஷ்மீர்ல இருக்கும்போதே படத்த போட்டு பாத்துற வேண்டியதுதான், சரியா வராத காட்சிய எல்லாம் மறுபடியும் எடுத்துரலாம்னு முடிவு செஞ்சாங்களாம். காஷ்மீர்ல பிலிம் கழுவி பிரிண்ட் போட எல்லாம் வசதி இல்லியாம். 

அப்போ எப்டி? 

பிலிம் ரோல்கள எல்லாம் சென்னைக்கு அனுப்பிதான் பிரிண்ட் போட்டுவரணும். 

அந்த காலகட்டத்தில, வாரம் ரெண்டு தடவ மட்டும் 'டகோட்டா' விமானமாமே. அது காஷ்மீர்லே இருந்து டெல்லிக்கு போகுமாம். அதிலே சித்ராலயா நிர்வாகி ராமகிருஷ்ணன் மற்றும் இன்னொருத்தர் பிலிம் ரோல்களோட டெல்லிக்கு போய், 


அங்கேயிருந்து சென்னைக்கு போய், 

அங்கே விஜயா லேபுக்கு போய், 

அவ்வளவு தூரம் போய் போய், 

பிலிம் ரோல்கள எல்லாம் பிரிண்ட் போட்டு காஷ்மீருக்கு போய் சேர்வாங்களாம். டெல்லி வழியாத்தான். சரி பிரிண்ட் போட்டு வந்தாச்சு. அத திரையில போட்டு பார்க்கணுமே. அதுக்கு இன்னா செய்றது?

அவங்க தங்கி இருந்த கிராமத்தில் ஒரே ஒரு தியேட்டர்தான் இருந்துச்சாம். ஆமாங்க அந்த தியேட்டருக்கு பிரிண்ட் போட்ட பிலிமை எடுத்துகிட்டு போய், அந்த தியேட்டர்ல ராத்திரி காட்சி முடிஞ்சபின்னால, ஒரு மணிக்கு மேலே படத்தை திரையிலிட்டு பாத்தாங்களாம். யார் யாருன்னு தெரியுமா? 


ஸ்ரீதர், கோபு, ஜெமினி, வைஜயந்திமாலா, நம்பியார், வின்சென்ட், பி.என். சுந்தரம் மற்றும் படப்பிடிப்பு குழுவினர் இவங்க எல்லாரும் உக்காந்து பாத்தாங்களாம். 

பின்னே என்ன, நின்னா பாப்பாங்கன்னு ஒரு க்ராஸ் கொஸ்ட்டின் கேட்டுராதீங்க. 

அதுல நல்ல வந்த காட்சிய எல்லாம் வச்சுகிட்டு, திருப்தி இல்லாதத மறுபடியும் எடுத்திருக்காங்களாம். அப்டி இப்டீன்னு காலை மூணு மணி ஆயிருமாம். அதுக்கப்புறமா போய் தூங்கிட்டு மறுபடியும் ஆறு மணிக்கெல்லாம் ஜாலியா ஷூட்டிங்குக்கு கெளம்பிருவாங்களாம். 

மொதல் மொதலா தேன் நிலவு படம் எங்கே ரிலீசாச்சுன்னு தெரியுமா? அந்த குக்கிராமாத்திலுள்ள தியேட்டர்லதானே, அப்படியும் வச்சுக்கலாம்ல. 


காஷ்மீர்லதான் இந்தப் படம் முதல்ல ரிலீசாச்சுன்னு சொல்லணும்னு ஸ்ரீதரே சொன்னாராம். 

இதுல இன்னொரு விஷயம் என்னான்னா, அந்த தியேட்டருக்கு போகணும்னா கொஞ்ச தூரம் நடந்துதான் போகணுமாம். லக்கேஜ் இல்லேன்னா பரவாயில்ல. பிலிம் பொட்டியையும் கொண்டு போகணுமே. 

எப்டீ? 

நம்ம வில்லன் நடிகர்தான். நாமதான் பெரீ............................ய வில்லன் நடிகராச்சேன்னு ஒரு பிரிஸ்டிஜ் பார்க்காம அந்த பொட்டிகள தன்னோட தலைலேயும், தோளிலேயும் சுமந்து போனாராம். அத ஸ்ரீதர் நன்றியோட நெனச்சு பாத்துக்குவாராம். 

தேன் நிலவுல யார் வில்லன்னுதான் தெரியுமே. 

நம்பியார்தான் அந்த வெயிட்ட தூக்கிட்டு போனாராம். இம்புட்டு தூரம் எல்லாரும் பட்ட கஷ்டமெல்லாம், அந்த படம் ரிலீசானவுடனே போயிருச்சுல்ல!!! படம் கன்னாபின்னான்னுல ஒடுச்சு. 


Heezulia 
avatar
heezulia
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 571
மதிப்பீடுகள் : 187

View user profile

Back to top Go down

best Re: திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?

Post by SK on Fri Dec 29, 2017 5:41 pm

தேன் நிலவு காட்சிகள் அருமை

ஸ்டாப்..................ஸ்டாப். நான் அந்த படத்த பத்திதான் சொன்னேன்
avatar
SK
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6435
மதிப்பீடுகள் : 1140

View user profile

Back to top Go down

best Re: திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?

Post by heezulia on Thu Jan 04, 2018 12:41 am

03.01.2018 

ஒரு சர்வாதிகாரி ராஜா கொடுங்கோல் ஆட்சி நடத்துறான். 
மக்கள் கொத்தடிமைகளாக இருக்கிறாங்க. அப்போ ஒரு பெண்
அந்த ஊர்ல பாட்டு பாடி, டான்ஸ் ஆடி, டென்ஷன்ல இருக்கிற அந்த ஊர் ஜனங்களை சந்தோஷப்படுத்துறா. அவளுடைய 
பாட்டு அந்த ஊர் ஜனங்களுக்கு மான அவமான 
உணர்ச்சிகளை தட்டி எழுப்புது. 

இது அந்த ராஜாவுக்கு தெரிஞ்சு, அவளை விரட்ட வீரர்களை 
அனுப்புறான்.  அவளும் ஊரை விட்டு போற சமயத்தில, 
கதாநாயகன் வர்றான். அவளுக்கு தைரியம் சொல்லி, 
சுதந்திரத்தை  பற்றி  ஜனங்களுக்கு பாடி உணர்த்துறான். 

இதுதான் K சங்கர் வாலியிடம் சொன்ன situation. வாலியும் 

"உலகத்ல இறைவன் கட்டளையை தவிர, வேற யார் 
கட்டளையும் செல்லுபடி ஆகாது"  

என்கிற அர்த்தத்ல 

"ஆண்டவன் கட்டளை முன்னால உன் அரச கட்டளை 
என்னாகும்"ன்னு 

அந்த ராஜாவை பார்த்து பாட்ற மாதிரி எழுதியிருந்தார். இதை பார்த்த சங்கர் மூஞ்சியும், பக்கத்தில இருந்த அசிஸ்டண்ட் 
டைரக்டர்கள் மூஞ்சியும்  மாறிருச்சு. 

MGR உம் அந்த வரிகளை பார்த்துட்டு, வாலியை முறச்சாராம். 

வாலிக்கு குழப்பம். 

"என்ன, யார் முகத்திலும் ஈயாடலியே. என்ன காரணம்னும் 
தெரியலியே" னு 

பயந்து  முழிச்சாராம்.
 
MGR எப்பவுமே வாலியை "ஆண்டவனே "ன்னுதான் 
கூப்டுவாராம். 

அந்த சமயத்தில "என்னங்க வாலி" னு கூப்ட்டாராம். 

அம்புட்டுதான், வாலி வெலவெலத்து போனாராம். 

"இவர் என்ன செல்லப்போறாரோ தெரியலியே" னு பயந்து 
பக்கத்தில போனாராம்.
 
MGR : இப்படி என்னை அவமானப்படுத்தணும்னு எத்தனை 
நாளா நெனச்சுட்டு இருந்தீங்க? நேரடியாவே 
சொல்லியிருக்கலாமே. இப்படி பாட்டு எழுதியிருக்கீங்களே.

வாலி : [கொஞ்சம் தைரியத்தை வரவழைச்சு] என்னண்ணே 
இப்டி சொல்லிட்டீங்க. நீங்க நினைக்கிறமாதிரி ஒண்ணும் 
இந்தப் பாட்ல நான் உங்களை அவமானப் படுத்துற மாதிரி 
எழுதலியே. எனக்கு புரியலியேண்ணே.

MGR [கோபம் அதிகமாகி] : என்னது புரியலையா? அந்த 
வரிகளை படிங்க.

வாலி : [அந்த வரிகளை படிச்சு காட்டினார்] இதுல என்னண்ணே தப்பு இருக்கு?

MGR : நான் இந்தப் படத்துக்கு வச்ச பேர் என்னானு தெரியுமா?
 
வாலி : அதான் தெரியுமே, அரசகட்டளை. 
 
MGR : தெரிஞ்சுமா இப்படி எழுதினீங்க?  ஆண்டவன் கட்டளை சிவாஜி நடிச்ச படம். அரசகட்டளை நான் இப்ப நடிக்கிற படம். யோசிச்சு பாருங்க. சிவாஜி படத்துக்கு முன்னால் உன் படம் 
என்னாகும்னு கேக்குற மாதிரி இல்ல? 

MGR படபடன்னு கோவத்துல கடுகு மாதிரி வெடித்தார்.

வாலி : அந்த அர்த்தத்ல நான் எழுதலேண்ணே. Situationக்கு ஏத்த மாதிரிதான் எழுதியிருக்கேன். சத்தியமா  நான் தப்பா நெனச்சு எழுதலேண்ணே.  

வாலி எல்லா தெய்வங்கள் மேலேயும் சத்தியம் செஞ்சுகூட, MGRஓரளவுக்குதான் சமாதானமானராம். அடுத்த நாள் 
முத்துக்கூத்தன் கவிஞரை கூப்ட்டு அந்த situationக்கு ஏற்ற 
பாட்டை எழுத சொன்னாராம். அவரும் எழுதினார்.

"ஆடப் பிறந்தவளே ஆடிவா" 
 
வாலி எழுதிய 'எனக்குள் MGR'  தொடரில் இருந்து.
 
Heezulia 
avatar
heezulia
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 571
மதிப்பீடுகள் : 187

View user profile

Back to top Go down

best Re: திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?

Post by SK on Fri Jan 05, 2018 4:37 pm

இந்த பதிவு ஒன்ஸ் மோர் வந்திருக்கிறது அடுத்த பதிவுக்காக

ஐ அம் வைட்டிங்
avatar
SK
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6435
மதிப்பீடுகள் : 1140

View user profile

Back to top Go down

best Re: திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?

Post by heezulia on Fri Jan 05, 2018 5:16 pm

05.01.2018 

ஒன்ஸ்மோர் வந்த ஞாபகமே இல்லியே, SK.  இப்படி வசனங்கள் நான் நிறைய அனுப்புறதால, உங்களுக்கு அப்டி தோணுதுன்னு நினைக்கிறேன். 

Hөөz∩ꞁ!ɐ
avatar
heezulia
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 571
மதிப்பீடுகள் : 187

View user profile

Back to top Go down

best Re: திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?

Post by SK on Sat Jan 06, 2018 10:27 am

:வணக்கம்:
avatar
SK
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6435
மதிப்பீடுகள் : 1140

View user profile

Back to top Go down

best Re: திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?

Post by heezulia on Sat Jan 06, 2018 1:42 pm

06.01.2018 


என்னவோ இப்பதான் முதல் தடவையா பார்க்கிறமாதிரி வணக்கம் சொல்றீங்க. 


avatar
heezulia
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 571
மதிப்பீடுகள் : 187

View user profile

Back to top Go down

best Re: திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?

Post by SK on Sat Jan 06, 2018 2:02 pm

இன்னிக்கு இது தான் முதல் தடவை பைத்தியம் பைத்தியம்
avatar
SK
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6435
மதிப்பீடுகள் : 1140

View user profile

Back to top Go down

best Re: திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?

Post by heezulia on Sat Jan 06, 2018 4:31 pm

06.01.2018 

அதுக்கு ஏன் பைத்தியம் மாதிரி கொவிச்சுகிறீங்க? 


[நான் கோபம்னு நெனச்சேன். ஆனா அந்த smileyல பைத்தியம்னு எழுதியிருக்கு.]

Heezulia
avatar
heezulia
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 571
மதிப்பீடுகள் : 187

View user profile

Back to top Go down

best Re: திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?

Post by SK on Sat Jan 06, 2018 5:00 pm

கோவத்தில் பலரும் பைத்தியமா தானே ஆய்டுறாங்க
avatar
SK
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6435
மதிப்பீடுகள் : 1140

View user profile

Back to top Go down

best Re: திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?

Post by heezulia on Sat Jan 06, 2018 5:57 pm

06.01.2018
அட, இப்பதான் தெரியுது. அதுல நீங்களும் ஒருத்தர்னு.  அதிர்ச்சி பயம் நக்கல் நாயகம்

Heezulia
avatar
heezulia
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 571
மதிப்பீடுகள் : 187

View user profile

Back to top Go down

best Re: திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?

Post by பழ.முத்துராமலிங்கம் on Sat Jan 06, 2018 8:23 pm

தேன்நிலவு படப்பிடிப்பு கதை ரசிக்கும் படி இருந்தது
நன்றி
சகோதரி
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8782
மதிப்பீடுகள் : 1989

View user profile

Back to top Go down

best Re: திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?

Post by heezulia on Sat Jan 06, 2018 9:12 pm

06.01.2018 

உங்களை போலவங்க ரசிச்சு படிக்கத்தானே எழுதி அனுப்பிட்டே .................. இருக்கேன் Bro. 


நீங்க படிக்கிறதில எனக்கு சந்தோஷம். 

Heezulia 
avatar
heezulia
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 571
மதிப்பீடுகள் : 187

View user profile

Back to top Go down

best Re: திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?

Post by heezulia on Thu Jan 11, 2018 2:44 pm

11.01.2018
 
பீம்சிங் ரொம்......................... பிஸியான சமயம். KV கொட்டாரக்கா, அப்டீன்னு ஒரு கதாசிரியர். இவர் பீம்சிங்கை பார்த்து, தான் எழுதி வச்சிருந்த கதை சொல்லணும்னு ஒத்...................த கால்ல நிக்கிறார். அவரை சுத்..........தி சுத்...........தி வர்றார். ஆனா ஊஹும், பீம்சிங்குக்கு நேரமே இல்ல, அவரை கவனிக்க. அவர் விடலியே. விடாக்கண்டன் மாதிரி, விடாப்பிடியா கஜினி முஹம்மது மாத்ரி படை எடுத்தார்.
 
அப்பாடா, ஒரு வழியா பீம்சிங் அதிர்ந்து, வழிக்கு வந்துட்டா........................ர். அதுக்கு ஒரு காரணம் இருக்கு. கொட்டாரக்கா சொன்ன விஷயம். பீம்சிங் அதிர்ச்சி ஆகிறமாதிரி இவர் என்ன சொன்னார்? என்...................ன சொன்னார்?


“அண்ணன் தங்கை உயிருக்குயிரா காதலிக்கிற கதை, அவங்க சாகிற வரைக்கும் அப்படித்தான் இருந்தாங்க” ன்னு போட்டாரே .......................ஒரு போடு. அதனாலதான் பீம்சிங் அதிர்ந்தார். பின்னே, இருக்காதா அதிர்ச்சி? பீம்சிங் தன் குழுட்ட, “என்ன இவர் இப்படீல்லாம் பேசுறார்?” னு சொல்லி கோபப்பட்டிருக்கார்.  சரி, அவர் ஏதோ வித்தியாசமா ஏதோ சொல்றாரே, கதையைத்தான் கேட்டு பார்ப்போமேன்னு எல்லாரும் பேசி வச்சு, அவரை கூப்டனுப்பினாங்க.


கொட்டாரக்கா சந்தோ..................ஷமா வந்தாரு. கதை சொல்ல சொல்ல, கேட்டுட்டு இருந்தவங்க, என்ன செஞ்சாங்க தெரியுமா? சிரிச்சாங்களா? இல்ல, கோபப்பட்டாங்களா? இல்ல. சீ....................ரியஸா கதை கேட்டுட்டு இருந்தாங்களா? அதுவும் இல்ல. அப்போ என்னதான் செஞ்சாங்க?  
அத்.........................தன பேரும்  அழ ஆரம்பிச்சுட்டாங்க. அதுல பாருங்க, பீம்சிங்தான் ஏங்கி ஏங்கி அழுதாராம். அப்டி இப்டீன்னு எல்லாரும் கண்ட்ரோல் பண்ணிட்டு சமாதானமாயிட்டாங்க. பீம்சிங் கொட்டாரக்காட்ட,
“என்னய்யா இது, அண்ணன் தங்கை பாசத்தை, அன்பை, இப்படியா காதல்னு அசிங்கமா சொல்வே?” ன்னு திட்டினாராம். அதுக்கு அவர் என்ன சொன்னார்னு தெரியுமா?


“காதல்ங்கறது அன்பும், பாசமும் கலந்தது தானே. அதனாலதான் அப்டி சொன்னேன். இன்னொரு விஷயமும் இருக்கு. அப்படி சொல்லபோய்தானே, என்னை கூப்ட்டு கதைய சொல்ல சம்மதிச்சு  சொன்னீங்க.”
 
இந்தப் படந்தான் ‘பா.....................சமலர். ஆரூர்தாஸின் வசனம். நடிகையர் திலகமும், நடிகர் திலகமும், இவங்களுக்கிடையே ஜெமினி கணேசனும் போட்..............................டி போட்டு நடிச்ச படம். அண்ணன் தங்கைக்கான பாசப்பிணைப்புள்ள படம் இதுவரை வேற வந்திருக்கா, வந்திருக்கா, வந்திருக்கா சொல்லுங்க, நாம எல்லோருமே சேர்ந்.....................து சொல்லுவோம், “இல்ல இல்ல இல்லவே இல்...................ல”


சின்னசாமி சார் ‘நெஞ்சில் பூத்த பாசமலர்’ னு ஆரூர்தாஸ் சொன்னதை ‘சாதனை படைத்த தமிழ் திரைப்பட கலைஞர்கள்’ ல எழுதியிருக்கார்.
 
க்ளைமாக்ஸ் ஸீன் எடுக்கணும். பீம்சிங் சிவாஜியை கூப்ட்டு, அடுத்த நாள் எடுக்கப் போகும் இந்த க்ளைமாக்ஸ் சீனை பற்றி சொல்லிட்டு இருந்தார். “நாளைக்கு கிளைமாக்ஸ் ஸீன்ல, நீங்க “கை வீசம்மா கை வீசு” ன்னு சொல்லி உணர்ச்சிகரமா நடிக்கிற ஸீன். அண்ணன் தங்கை கடைசியா பேசிட்டு இறந்து போகும் ஸீன். அந்த ஸீன்ல தாடில்லாம் வளர்த்து, களைத்து, கண்ணுக்கு கீழ கருவளையத்துடன் சோர்ந்து, உங்க முகம் வயசானது போல தெரியணும். அதுக்கேத்த மாதிரி மேக்கப் போட்டுக்கோங்க”ன்னு சொல்லிட்டு பீம்சிங் போய்ட்டார்.
 
சிவாஜிக்கு எப்படி நடிக்கணும், என்ன செய்யணும்னு வீட்ல யோசிச்சிட்டு இருந்தார். அன்னிக்கி ராத்திரி முழுக்............................ க தூங்கலியாம். அவர் வீட்டையே சுத்..................தி சுத்தி வந்தாராம். தூங்காம இருக்க டீ மட்டும் குடிச்சுட்டு இருந்தாராம். சரியா சாப்பிடல.
 
காலைல பார்த்தா........................., அவர் கண்ணுக்கு கீழ லேசான கரு வளையம். மூஞ்சி சோர்ந்து போய் இருந்துச்சு, மொத்தத்ல அவரே டய...................ர்டா இருந்தார். சரி, இப்படி இருந்தா, அந்த க்ளைமாக்ஸ் ஸீன்க்கு சரியா இருக்கும்னு, ஷூட்டிங்க்கு கெளம்பி போனார். அங்க அந்த ஸீன்க்கான எல்................லா ஏற்பாடுகளும் நடந்துட்டு இருந்துச்சாம். நடிகர் திலகம் போய் மேக்கப் போட்டுட்டு வந்தார்.
 
அந்த க்ளைமாக்ஸ் ஸீன் படமாக்கப்பட்டுச்சாம். அண்ணன் தங்கை நடிச்ச அந்த ஸீனை, எல்லா..........................ரும் அசந்.................................து போய் ரசிகர்கள் மாதிரி பாத்துட்டு இருந்தாகளாம். பின்னே, அவங்களும் ரசிகர்கள்தானே. ஸீன் முடிஞ்சிருச்சு. ஒரே ஒருத்தர் கை தற்ற சத்தம் மட்டும் கேட்டுச்சாம். அவ்வளவு நேரமா அந்த ஸீனை பாத்துட்டு இருந்தவங்க, கைதட்டல் சத்தம் வந்த பக்கம் திரும்பி பார்த்தா................... பீம்சிங்தான் கை தட்டிட்டு இருந்தாராம், “கட்” சொல்லாம. அவரும் அந்த ஸீன்ல அவ்ளோ இன்வால்வ் ஆய்ட்டார்.
 
இதுதாங்க அந்த  அண்ணன் தங்கை காதலிச்ச கதை.
 
அந்த காலத்துல நடிச்சவங்கல்லாம், சினிமாவில நடிக்கிறதுக்கு, தங்களையே எப்டீல்லாம் தங்களை வருத்தி நடிச்சிருக்காங்கன்னு பார்த்தீங்களா?  
- Oneindia


Heezulia 
avatar
heezulia
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 571
மதிப்பீடுகள் : 187

View user profile

Back to top Go down

best திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?

Post by heezulia on Fri Jan 19, 2018 8:40 pm

19.01.2018

வீரத்திருமகன்

விஜயபுரி வீரன் 1960. இந்தப் படத்தில நடிச்ச ஆனந்தன் நிஜத்திலும் வீரன்தான். இவருடைய சுறுசுறுப்பும், தைரியமும்தான் இந்த  படத்துக்கு சான்ஸ் கிடைக்க காரணம். 

குத்துச்சண்டைனாலும் சரி, குதிரை சவாரினாலும் சரி, ஆனந்தன் அட்டகாசமாக செய்வாராம். அவ்ளோ சுறுசுறுப்பாக இருப்பாராம். இதனாலேயே திருலோகசந்தருக்கு அவருக்கு ரொம்ப புடிக்கும். 

வீரத்திருமகன் படத்தின் ஸ்டண்ட் டைரக்டர் சுவாமிநாதன். இவர் பெப்ஸி விஜயனின் மகன். டைரக்டர் திருலோகசந்தர் பாக்ஸராமே. சண்டை காட்சிகளை படமாக்கும்போது, எப்படி எப்படி சண்டை போடணும்னு சொல்லியும் காட்டுவார், செஞ்சும் காட்டுவாராம். 

சண்டைக் காட்சியில ஆனந்தன் ஜாக்கிரதையா face பண்ணுவாராம். அவ்ளோ நல்லா டைமிங்க்ஸ் keepup பண்ணுவாராம்.  வீரத்திருமகன் படத்தில திவானாக நடிச்ச ராமதாஸ், முகத்தில குத்து வாங்கிருவாராம். 

குதிரை சவாரி. இதில ஆனந்தன் ராமதாசை சேஸ் பண்ற ஸீன். ஆனா  ஆனந்தன் முன்னால போயிருவார், ராமாதாஸ் பின்னால போவாராம். 

அப்போ ஆனந்தன் ராமதாஸை  பார்த்து,  "குதிரய விரட்டுங்க, குதிரைய விரட்டுங்க" ன்னு கத்திகிட்டே, ராமதாஸுக்கு பின்னால வருவாராம். ராமதாஸ் குதிரையை விரட்டுற சமயத்தில, அவர் கீழே விழுந்துவிடுவாராம். சேஸிங் ஸீன் காமெடி ஸீன் மாதிரி ஆகிவிடுமாம். ஆனா திருலோகசந்தர் இந்த ஸீனை எடிட்டிங்க்ல சரி செஞ்சுருவார். 

அசோகன் சினிமாவில  முரட்டுத்தனமான நடிகராம். சண்டை ஸீன்லாம் படமாக்கும்போது, நெஜமாவே குத்திருவாராம். அவர் கூட சண்டை போடறவர், ஜாக்..............கிரதையா நடிக்கணும். 

அப்போல்லாம் அட்டை கத்தியாலதான் சண்டை போடறாங்கன்னு ஜனங்கள் கண்டுபுடிச்சிட்டாங்க. அதனால அப்புறமா நிஜக் கத்தியை வச்சு படமாக்க ஆரம்பிச்சாங்க. விஜயபுரி வீரன் படத்தில, வாள்சண்டையை படமாக்கியதில, திருலோகசந்தருக்கு நல்ல பேர். இந்த வீரத்திருமகன் படத்திலேயும் அப்படித்தானாம். இப்படி அவர் டைரக்ட் செஞ்ச வாள்சண்டை, குத்துச்சண்டை, குதிரை சேஸ்ஸிங் இவை எல்லாத்தையும், ஒளிப்பதிவாளர் முத்துசாமி சூப்............பரா ஒளிப்பதிவு செஞ்சாராம். 

BR பந்துலுவின் மனைவி MV ராஜம்மா. இவர் இந்தப் படத்தில முக்கிய ரோல்ல  நடிச்சிருந்தார். இவர் மேக்கப் ரூமுக்கு வந்து, தான் நடிக்க வேண்டிய காட்சியை விவரமாக சொல்ல சொல்வாராம். அவலத்தையும் கேட்டுட்டு, அங்கேயே அந்த பாத்திரமாக மாறிவிடுவாராம். யார் என்ன பேசினாலும், கேட்டாலும், அந்த பாத்திரத்தின் பாணியிலேயே பதில் சொல்வாராம். நடிப்பில அவ்ளோ............. இன்வால்வ்மென்ட். 

வீரத்திருமகன் பாட்டு ஸீன். இதை எடுக்கிறதுக்கு தலக்காடு என்கிற இடத்துக்கு போனாங்களாம். ஹீரோயின் சச்சு காதில மாட்டியிருந்த கொக்கி தோடு, படப்பிடிப்பின்போது கீழ விழுந்துருச்சு. மணல்ல தேட முடியல.  என்ன செய்றதுன்னு தெரியாம முழிச்சாங்க. அதுக்குள்ள மேக்கப் மேன், இன்னொரு தொடு இருக்கிறதா சொல்லி கொண்டு வந்தாராம்.  அதை சச்சுவின் காதுல மாட்டி, படப்பிடிப்பை தொடர்ந்துச்சு. மறுபடியும் அந்த தோடு கீழ விழுந்துருச்சு. அந்த மணல்ல எங்க போய் தேட்றது. 

"இனிமே அட்டையில கல்லை ஒட்டி, அதை சச்சுவின் காதில வச்சு தச்சுதான் ஷூட்டிங் எடுக்கனும்போல" ன்னு மேக்கப் மேன் சொன்னாராம். "ஏம்பா, அவங்களே..............  புதுப்பொண்ணு,  நீங்க ஏன் பயமுறுத்துறீங்க?" ன்னு சொல்லி சமாளிச்சாங்க. அப்புறமா ஜிகினா ஒட்டிய அட்டையை சச்சு காதில ஒட்டி, எப்படியோ ஷூட்டிங்கை முடிச்சாங்க. இப்படி சின்ன சின்ன விஷயத்தில கூட அக்கறை எடுத்துக்குவாங்களாம். 

சில ஸீன்களை மைசூர் பிருந்தாவனம் கார்டனில் இருக்கிற கோட்டையில எடுக்கலாம்னு முடிவு செஞ்சு வச்சிருந்தாகளாம். ஆனா அங்க ஷூட்டிங் எடுக்ககூடாதுன்னு சொல்லிட்டாங்களாம். அந்த ஷூட்டிங்க்கு மனோரமா வரவேண்டியதாம். 

"அந்த ஸீனை எல்லாம் சென்னையிலேயே எடுத்துக்கலாம். அதனால மனோரமா ஆச்சியை வரவேண்டாம்னு ட்ரங்க்கால் அனுப்பிருங்க. தந்தியும் கொடுத்திருங்க"ன்னு ப்ரொடக் ஷன் மேனேஜர்ட்ட AVM சாரவணன் சொல்லிட்டார். 

அங்க எடுக்க வேண்டிய பாடல் காட்சி ஷூட்டிங்கை தொடர்ந்தாங்க. ரெண்டு நாளாச்சு. கால்ஷீட் கொடுத்த சரியா..................ன நேரத்தில, ராத்திரியோடு ராத்திரியா மதுரைல இருந்து கார்ல கெளம்பி வந்துட்டார். யாரு, யாரு? மனோரமா ஆச்சிதான்.  வேலைல சின்ஸியாரிட்டிய பாருங்க, ஆச்சிக்கு. அவரை பார்த்த எல்லாருக்கும் ஷாக். 

சரவணன், "என்னப்பா, ஆச்சிக்கு தந்தி அனுப்பலியா?" ன்னு ப்ரொடக் ஷன் மேனேஜர்ட்ட கேட்டார். அவர், "வேலைகள பிஸியா இருந்ததில மறந்துட்டேன் சார்"ன்னு சொல்லியிருக்கார். 

"ஏதோ மறதில சொல்ல மறந்துட்டார். அவரை ஒண்ணும் சொல்லாதீங்க."ன்னு ஆச்சி சரவணன்ட்ட சொல்லி நெலமைய சமாளிச்சார். ஆச்சி நல்ல நடிகை மட்டுமில்ல, மனித நேயமுள்ள மனுஷி, இல்ல? 

- ஹிந்து 

Heezulia 
avatar
heezulia
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 571
மதிப்பீடுகள் : 187

View user profile

Back to top Go down

best திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?

Post by heezulia on Sat Jan 20, 2018 1:23 am

18.01.2018

நானும் ஒரு பெண் 1963 


நம்ம க்ரூப்ல எத்தனை பேர் சிவப்பு, எத்தனை பேர் கருப்பு? நான் மாநிறம். 

கருப்பா இருக்கிறவங்கள மத்தவங்களுக்கு புடிக்காதாம். அதுலயும் கருப்பு பெண்களை?  ஏனாம்? அவங்களும் மனுஷங்கதானேன்னு நினைக்கலாம்ல? அவங்க என்ன பாவம் செஞ்சாங்க? 

சரி நம்ம  சப்ஜெக்ட்டுக்கு வர்றேன். இப்படி ஒரு கருப்பு நிறத்தில் இருக்கிற பெண்ணை பற்றிய கதைதான் AVM மின் இந்தப் படம். திருலோகசந்தர் இயக்கியிருக்கார். விஜயகுமாரி ஹீரோயின். எது தேவையோ, அதை சிறப்பாக நடிக்கும் ஒரு நடிகை. SSR, ஹீரோ, லட்சிய நடிகர். இவருடைய நடிப்பு, வசன உச்சரிப்பு சொல்லவே வேணாம். அவ்வளவு அருமையாக இருக்கும். 

படம் ஓஹோஹோஹோன்னு ஓடி, மத்திய அரசின் விருதும் கெடச்சுது. 

SV ரங்காராவ், இறந்து போன தன் மனைவியின் ஃபோட்டோவை தன் ரூம்ல வச்சிருக்கார். அந்த ஃபோட்டோவின் முன்னால நின்னுட்டு, எதை செய்யணும்னாலும், ஃபோட்டோட்ட பர்மிஷன் வாங்கிட்டுதான் செய்வார். 
அப்படி ஒரு கேரக்டர்.

இதுல ஒரு இண்ட்ரஸ்ட்டிங்கான விஷயம் இருக்கு.  ரங்காராவ் மனைவி ஃபோட்டோவா நடிக்கிறதுக்கு ஒரு ஃபோட்டோ  வேணும். ஒரு அழகான  பெண்ணை வச்சு அந்த ஃபோட்டோவை எடுக்கணும். AK சேகர்னு ஒரு கலை இயக்குனர்.  அவர்ட்ட அந்த ஸீனை சொல்லி, இப்படி ஒரு ஃபோட்டோ எடுக்கணும்னு திருலோகசந்தர் சொன்னார். 

அவர் பா...............ட்டுக்கு சொல்லிட்டு போய்ட்டார். இப்ப அழகான பொண்ணை எங்க போயி தேட்றது? அந்த சமயத்தில, SP முத்துராமன் திருலோகசந்தர்ட்ட உதவியாளராக இருந்தாராம். 

சேகர் அவர்ட்ட, "நம்ம குரூப் டான்ஸர்களில, அழகான ஒரு பொண்ண பார்த்திருக்கேனே"ன்னு சொல்லியிருக்கார். 

SPM : நிறைய பேர் இருக்கிறாங்களே. எப்படி கண்டுபுடிக்கிறது? 

சேகர் : ஜெமினியின் டான்ஸர் க்ரூப்ல உள்ள பொண்ணுங்களை பார்த்து கூட்டிட்டு வாங்க. நான் பாத்துக்குறேன்.

ஜெமினியின் டான்ஸர் பொண்ணுங்க வந்தாங்க. ஒவ்வொருத்தரையா................ பார்த்த சேகர், அவர் ஏற்கனவே பார்த்த பொண்ணை அடையாளம் தெரிஞ்சுக்கிட்டார். அந்த அழகா..............ன பொண்ணு பேரு ராஜேஸ்வரியாம். இந்தப் பொண்ண வச்சு, சேகர் முன்னால போஸ் போஸா ................ ஃபோட்டோ எடுத்து தள்ளியிருக்காங்க. அதுல ஒரு போட்டோதான், இந்தப் படத்தில வாழும் மனைவி ஆகிட்டா. 

இந்தப் படத்தில SSR, பொண்ணு பார்க்க வரும்போது புஷ்பலதாவை காட்டுவாங்க. ஆனா கல்யாணத்தின் போது, மணவறைல விஜயகுமாரி உக்காந்திருப்பாங்க. இதை MR ராதாவின்  மனைவி CK சரஸ்வதி கவனிச்சிருவாங்க. இப்போ அவங்க கோபமாக ஒரு வசனம் பேசணும். 

"கண்ணுல மண்ணை அள்ளிப் போட்டுட்டு, நம்மளை ஏமாத்துறாங்களே" இதுதான் CK சரஸ்வதி அந்த ஸீன்ல பேசவேண்டிய வசனம். இந்த SSR சும்மா இருக்காம, நைஸா CKS பக்கத்ல வந்து, "CKS, வசனத்தை மாத்தி பேசிறாதீங்க" ன்னு சொல்லிட்டு போய்ட்டார். 

நடிக்கிறவங்களுக்கு, வசனம் பேச போற சமயத்தில இப்படி யாராவது எதையாவது சொல்லிட்டா, ஒரு மாதிரி பயம் வந்துரும். அப்படித்தான் CKS கும் இருந்துச்சாம். அவர் என்ன பேசியிருக்கார்னு பாருங்க.

CKS : மண்ணுல கண்ணை அள்ளிப்போட்டு நம்மள ஏமாத்த பாக்குறாங்களே. 

அம்புட்டுதான், குபீ............................ர் சிரிப்பு. எல்லா.................ரும் சிரிச்சுட்டாங்க. CKSக்கு  ஒண்ணும் புரியலியாம்.  அவர் பேசின வசனத்தை போட்டு காட்டியிருக்காங்க. "ஐயோ ஐ............ய்யோனு CKS தலைல அடிச்சுகிட்டாராம். 

"எல்லா..................த்துக்கு இந்த ராஜுதான் காரணம்" ன்னு SSR ஐ சொன்னார். அப்புறமா சரியான வசனத்தை பேசி, ஷூட் செஞ்சாங்களாம். 

"கண்ணா ............... கருமை நிறக் கண்ணா" பாட்டு பாட சுசீலா வந்தார். MSV படத்தின் கதையையும்,  அந்தப் பாட்டுக்கான சூழ்நிலையையும் சொல்லி, எப்படி பாடணும்னும் பாடிக்காட்டினாராம். சுசீலாவும் உணர்ச்சிகளை கொட்டி பாடியிருப்பார். 

படமும், பாட்டுக்களும் வெற்றியோ, வெற்றி.

- ஹிந்து 


Heezulia
avatar
heezulia
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 571
மதிப்பீடுகள் : 187

View user profile

Back to top Go down

best Re: திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?

Post by பழ.முத்துராமலிங்கம் on Sat Jan 20, 2018 11:08 am

பிரித்து பகுதிகளாக பதிவு
செய்தால் படிக்க ஏதுவாக
இருக்கும்.
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8782
மதிப்பீடுகள் : 1989

View user profile

Back to top Go down

best Re: திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?

Post by heezulia on Sat Jan 20, 2018 12:00 pm

20.01.2018 

திரைக்குப் பின்னால் நடந்ததை 'தெரிந்ததும் தெரியாததும்' பகுதியில தெரியாத்தனமா போட்டுட்டேன். 


சரி சார். இனிமே பார்த்து அனுப்புறேன். 

நன்றி. 

Heezulia
avatar
heezulia
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 571
மதிப்பீடுகள் : 187

View user profile

Back to top Go down

best திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?

Post by heezulia on Sat Jan 20, 2018 3:45 pm

20.01.2018 

தங்கை 1967 

திருலோகசந்தருக்கு சிவாஜியை வச்சு இயக்கிய  முதல் படமாம்.  தெலுங்கு படத்தின் ரீமேக்காம். கதையைக் கேட்டதும் சிவாஜி கொஞ்சம் பின்வாங்கினாராம்.  ஏன்னா, இந்தப் படத்தில கொஞ்சம் டான்ஸ் + சண்டை இருக்காம்.  அப்புறமா தி.சந்தர் அவரை கன்வின்ஸ் செஞ்சுட்டாராம்.  இதுல நடிச்சதுக்கப்புறம்தான் மத்த ஆக் ஷன் படங்களில நடிக்க தைரியம் வந்துச்சாம் சிவாஜிக்கு.  

பாட்டெழுத  கண்ணதாசன், ம்யூசிக் போட எம்.எஸ்.வி.யும் ரெடி.  இவங்க கூட சுஜாதா சினி ஆர்ட்ஸ் நிர்வாகிகளும் ரெடி.  அப்புறம் டைரக்டர், தயாரிப்பாளர் இவங்களும் அங்கேதான் இருந்தாங்களாம்.  தி.சந்தர் சீன் சொன்னாராம்.  கே.ஆர்.விஜயா பர்த்டேல  சிவாஜி பாட்டு பாடணுமாம்.  ட்யூன் போட்டுட்டு அப்புறமா பாட்டு எழுதலாமேன்னு நிறைய பேர் சொன்னாங்களாம்.  சரின்ட்டு, எம்.எஸ்.வி. நாலு ட்யூன் போட்டுட்டாராம்.  நாலுமே நல்லா இருந்துச்சாம்.  எல்லாருக்கும் ஒரே குழப்பமா போச்சாம்.  

ஒரு ட்யூன் கண்ணதாசனுக்கு, அதேபோல எம்.எஸ்.விக்கு. தி.சந்தருக்கு, பாலாஜிக்கு இப்படி நாலு ட்யூன்களும் நாலு பேருக்குப் பிடிச்சிருந்துச்சாம்.  நாலு பெரும் அவங்க அவங்கவங்க ட்யூன்தான் எடுத்துக்கணும்னு 
சொன்னாங்களாம்.   

கண்ணதாசனுக்குக் கோபம் பொத்துகிட்டு வந்துச்சாம்.  

கண்ணதாசன் : ஒன்ன யா.............ர்யா நாலு ட்யூன் போடச்சொன்னதுஒரு ட்யூன போட்டு, இந்தா புடிங்கன்னு சொல்ல வேண்டியதுதானே 

ன்னு கத்தினாராம்.  

எம்.எஸ்.வி. : அதுக்கென்னப்பா, சரி, நான் வேணுன்னா விலகிக்கிறேன்.  நீங்க மூணு பெரும் சேர்ந்து ஏதாவது ஒரு ட்யூன செலெக்ட் செஞ்சுக்கோங்கப்பா. 

அந்த சமயத்தில "சார் போஸ்ட்" அப்படீன்னு ஒரு குரல் கேட்டுச்சாம்.
 

உடனே கண்ணதாசன் : ஏம்பா, அந்த போஸ்ட்மேன கூப்பிடுப்பா."

போஸ்ட்மேன் வந்தார்.


கண்ணதாசன் : ஏம்பா போஸ்ட்மேன்,  உன்னால ஒரு காரியம் ஆகணும்ப்பா.

போஸ்ட்மேன் : சொல்லுங்க சார்.

கண்ணதாசன் : ஒரு பர்த்டே பார்ட்டில பாடுற பாட்டு. இப்போ நாலு ட்யூன் போட்டுக் காட்டுவோம், அதுல உனக்கு பிடிச்ச ட்யூனை செலக்ட் செய்.

போஸ்ட்மேன் : சரீங்க சார். சொல்றேன்.

கண்ணதாசன் : விசு, நீ போட்டிருக்கிற அந்த நாலு ட்யூனையும் வாசிச்சுக்காட்டு. இந்த போஸ்ட்மேன் செலக்ட் செய்யட்டும்.

ஒண்ணு, ரெண்டு, மூணு, நாலுன்னு ஒவ்வொரு ட்யூனா எம்.எஸ்.வி. வாசிச்சாராம். போஸ்ட்மேனும் கண்ண மூடி கேட்டாராம்.
  

போஸ்ட்மேன் : சா..............ர், அந்த மூணாவது ட்யூன் ரொம்ப நல்லா இருக்கு சார்.

ஒடனே ஒருத்தருக்கு ரொம்ப சந்தோஷமா இருந்துச்சாம்.  ஏன்னா அவர் சொன்ன ட்யூன்தான் செலெக்ட் ஆச்சாம்.  அது வேற யாருமில்ல, தி.சந்தர்தான்.

"
ரொம்ப தாங்க்ஸ்பா" ன்னு சொல்லி போஸ்ட்மேன அனுப்பி வச்சாங்களாம்.

கண்ணதாசன் உடனே திருதிரு துருதுரு ஆயிட்டாராம். "விசு, நீ அந்த ட்யூனைப் போட ஆரம்பிடேய் பஞ்சு, இங்கே வா, நான் சொல்ல சொல்ல வரிகளை எழுது. " இப்படி சொல்லி வயக்கம்போல பாடல்வரிகளை பிரவாகமாக சொல்ல ஆரம்பிச்சுட்டாராம்.  

இதெல்லாம் உங்களுக்கு தெரிஞ்ச ஸ்டோரிதான்.  எனக்கு இதெல்லாம் சொல்லணும்னு ஆசை.  அந்த பாட்டும் உங்களுக்கு தெரியும்தான். "கேட்டவரெல்லாம் பாடலாம், உன் பாட்டுக்குத் தாளம்.................................... போடலாம்." 

சிவாஜி ஸ்டைலா ஆடும் ட்விஸ்ட் டான்சும், கைதட்டுவதையும் கொஞ்சம் மாற்றி 'ஊட்டிவரை உறவு' படத்துல "ஹாப்பி இன்றுமுதல் ஹாப்பி"ல  வருதாமே.  

இந்தப் படம் ரிலீஸ் ஆனப்போ,  "சிவாஜி இந்தப் படத்துல இன்னாத்த சண்ட போட்டு என்னாத்த நடிக்கப்போரா"ருன்னு ஜனங்க கமெண்ட் அடிச்சாங்களாம். சினிமால சிவாஜி அவ்வளவா சண்ட போட்டு பாத்ததில்லேல்ல. ஆனா அதுக்கப்புறம் நல்லாவே வரவேற்பு கெடச்சுதாம் இந்தப் படத்துக்கு.  


Heezulia 
avatar
heezulia
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 571
மதிப்பீடுகள் : 187

View user profile

Back to top Go down

best Re: திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?

Post by SK on Sat Jan 20, 2018 3:54 pm

@sk wrote:கேட்டவரெல்லாம் பாடலாம், உன் பாட்டுக்குத் தாளம்.................................... போடலாம்."

avatar
SK
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6435
மதிப்பீடுகள் : 1140

View user profile

Back to top Go down

best Re: திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?

Post by Dr.S.Soundarapandian on Sat Jan 20, 2018 4:47 pm

Heesulia !

சூப்பர் !மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம்
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4616
மதிப்பீடுகள் : 2445

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

best Re: திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?

Post by heezulia on Sat Jan 20, 2018 9:58 pm

20.01.2018 

நான் பாடவே இல்லியே SK , அப்புறம் எப்படி தாளம் போட போறீங்க?           டாக்டர் சார். 

Heezulia
avatar
heezulia
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 571
மதிப்பீடுகள் : 187

View user profile

Back to top Go down

best திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?

Post by heezulia on Sun Jan 21, 2018 12:11 am

21.01.2018

தெய்வச்செயல் 1967 

மிருகங்களுக்கு முக்கியத்துவம் குடுத்து அதுங்கள நடிக்க வச்சு நிறை.......................................ய படங்களை எடுத்து பேர் வாங்கினவரு தேவர் தான். 

தெய்வச்செயல் படம், நடிகர்களையோ இசையையோ நம்பி எடுக்கப்படலியாம்.  முழுக்க முழுக்க மிருகங்களை நம்...........பி எடுக்கப்பட்டது.  மிருகங்களுக்கு மட்டும் வால்யூ இருந்து என்...........ன பிரயோஜனம்?  ஸ்டார் வால்யூ இல்லியே!!!  அதனால படம் ஓடல.  
பெரிய பெரிய நடிகர்களை வச்சு படங்கள எடுத்துக்கிட்டு இருந்த தேவர்,  நட்சத்திரபட்டாளமே இல்லாம எடுத்த படம்தான் தெய்வச் செயல். மிருகத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து தேவர் தயாரித்த முதல் படம் இது.  

இந்தப் படத்தில சிங்கத்தை நடிக்க வச்சிருந்தார். இவர் மிருகங்களை வச்சு எடுத்த படமெல்.........லாம் ஓஹோன்னு ஓடினதால, மிருகங்கள் மேல அவருக்கு தனி............ பிரியம் வந்திருச்சாம்.  அதனால மிருகங்களை வளர்க்கணும்னு ஆசை வந்து, அதுக்குன்னே சென்னை வடபழனியில ஒரு இடத்தை வாங்கி போட்டார். [இப்போ அந்த இடத்தில ராமநாரயணனின் ஆபீஸ் இருக்குதாம்.]  அங்கே பலவித மிருகங்களை நல்ல முறையில் பராமரித்து வந்தார். அந்த மிருகங்களை தன்னுடைய படங்கள்ல முக்கிய கேரக்டர்களில் நடிக்க வச்சார். 

தேவரும், மேஜர் சுந்தரராஜனும் ரொம்ப நெருங்............கிய ஃப்ரெண்ட்ஸ். ஒருத்தர ஒருத்தர ரொம்ப பிடிக்குமாம். தேவர் அவரோட எல்லா படத்துலயும் சுந்தரராஜனுக்கு பொருத்தமான ரோல் கொடுப்பார். அதுபோலதான் இந்தப் படத்துலேயும் முக்கியமான பாத்திரத்தை மேஜருக்குக் கொடுத்தார்.  மேஜரோட ரோல், ஹீரோ முத்துராமனைவிட கனமான பாத்திரமாம்.  இந்தப் படத்துல மிருகங்களும்  ஆக்ட் குடுத்திருக்கு. அதுங்களோடு தேவரும் நடிச்சிருக்கார். 

படம் ஒடலேன்னாலும் தேவர் அஸ்சரவே............ இல்லியே.  இந்தியில படம் எடுக்கணும்னு அவருக்கு ஆசை வந்திருச்சாம்.  அதுவும் எப்படி? 
ராஜேஷ்கன்னா போன்ற பெரீ...................................................ய நடிகர்களை வச்சு.  எம்புட்டு தில்லு பாருங்க அவருக்கு?  தை………….ரியமா தெய்வச் செயல் படத்தையும், அவரோட மத்த படங்கள் காட்டுராணி, செங்கோட்டை சிங்கம், நீலமலைத் திருடன் இதுங்களையும் எடுத்துட்டு ராஜேஷ் கன்னாகிட்டே போய் போட்டுக்காட்டினார். அவரும் அந்த படங்களை பொறும்.......................................மையா பாத்தார்.  அந்த நாலு படங்கள்ல தெய்வச்செயல் படத்துக்கு ஓகே சொல்லிட்டார்.  ஆனா போட்டாரே ஒரு கண்டிஷன்.  மிருகங்களை விட தனக்குத்தான்  இம்பார்டன்ஸ் குடுக்கணும்னு சொல்லிட்டார். ராஜேஷ்கன்னா சொன்ன மாதிர்யே, படம் எடுக்க ஒத்துகிட்டாராம் தேவர்.  

இந்தப் படத்த எடுக்கும்போது நிறையப்பேர் வந்து "அண்ணே, ஒரு டப்பா படத்த போயி பெரிய நடிகர வச்சு... ஏண்ணே இப்படி ரிஸ்க் எடுக்குறீங்க?" ன்னு கேட்டாங்களாம்.  தேவரா கொக்கா?  அசந்து போனாரா?  இல்லியே. 

படத்த வெற்றிகரமா எடுத்து ஜெயிச்சுட்டார்ல. 'ஹாத்தி மேரே சாத்தி' பேர்ல எடுத்தாராம்.  இந்தப் படம் ரொம்ப நல்ல ஹிட்டாச்சு. 
அதுக்கப்புறமா, அதே..........  கதைய  கொஞ்சம் ச்சேஞ்ஜ் செஞ்சு, தமிழ்ல எம்.ஜி.ஆர வச்சு  படம் எடுத்தாராம்.  போச்சுடா,  இன்னொரு வாட்டி எல்லாருக்கும் திடுக்குன்னுச்சாம். ஆனா இந்தப் படம் ஜோரா போச்சாம். அந்த எம்.ஜி.ஆர். படம் 'நல்ல நேரம்'.

தேவர் தை............ரியமா எல்லார்கிட்டேயும் ஒண்ணு சொன்னாராம்.  "ராஜேஷ் கன்னா, எம்.ஜி.ஆர் நடிப்புல்லாம்  என்னாப்பா நடிப்பு. தெய்வச்செயல் படத்துல சுந்தர்ராஜன் நடிப்பில பாதிகூட அவங்க ரெண்டுபேரும் நடிச்சிருக்காங்களா, இல்லியே" அப்படீன்னு சொன்னாராம். 
தெய்வச்செயல் à ஹாத்தி மேரே சாத்தி à நல்ல நேரம்.  

'நல்ல நேரம்' படத்துக்குப்பின்னால இம்புட்டு விசயம் இருக்கா?  சரிதான்.

ஆனா சிவாஜிய வச்சு தேவர் ஒரு படம்கூட தயாரிக்கலியாம்ல. அதுக்கு என்ன காரணமாயிருக்கும்? 

Heezulia
avatar
heezulia
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 571
மதிப்பீடுகள் : 187

View user profile

Back to top Go down

best Re: திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum