உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» விருது பெற்ற தமிழ்த் திரைப் பாடல்கள்
by ayyasamy ram Today at 4:41 pm

» எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று...
by ayyasamy ram Today at 4:30 pm

» முகநூலில் ரசித்தவை
by ayyasamy ram Today at 4:23 pm

» இலவச காய்கறி விவசாயி தாராளம்
by ayyasamy ram Today at 4:13 pm

» துப்புரவாளருக்கு ரூபாய் மாலை
by ayyasamy ram Today at 4:11 pm

» உயிர் எழுத்துக்களில் கொரோனா கவிதை
by ayyasamy ram Today at 4:10 pm

» ஒரே மாதத்தில் 20 லட்சம்: அமெரிக்காவில் சூடு பிடிக்கும் துப்பாக்கி விற்பனை
by ayyasamy ram Today at 4:06 pm

» சீனாவில் நாளை துக்க தினம் அனுசரிப்பு
by ayyasamy ram Today at 4:02 pm

» வேலன்:-ஆடியோ பைல்களை பார்வையிட -Finetune.
by velang Today at 2:08 pm

» அமெரிக்க தடையை மீறி ஈரானுக்கு ஐரோப்பிய நாடுகள் உதவி
by சக்தி18 Today at 1:41 pm

» நடிகை ஸ்ரீதிவ்யா படங்களில் உங்களுக்கு பிடித்தது?
by சக்தி18 Today at 1:33 pm

» ஏப்ரல் 5 ஆம் தேதி இரவு 9 மணிக்கு மெழுகுவர்த்தி, செல்போன் விளக்குகளை ஒளிரவிட வேண்டும்; பிரதமர் மோடி
by சக்தி18 Today at 1:30 pm

» கொரோனா அவசரநிதி: இந்தியாவுக்கு ஒரு பில்லியன் டாலர் நிதியை வழங்குகிறது உலக வங்கி..!
by ayyasamy ram Today at 12:29 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 12:19 pm

» Can you imagine? (உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா?)
by Pranav Jain Today at 11:51 am

» கொரோனா தமாஷ் பாருங்கள்!
by சக்தி18 Today at 11:41 am

» கோவிலில் கூட்டுக் குடும்பம்!
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:40 am

» சமூக இடைவெளியை கடைபிடித்த குரங்குகள்.... நெகிழ்ந்து போன நடிகர்
by சக்தி18 Today at 11:39 am

» யார் இந்த சாலையோரம் பூக்கள் வைத்தது
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:36 am

» இறைவன் எங்கே? இறை தூதர்கள் எங்கே?
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:12 am

» அமெரிக்கா தனது நாட்டினரை இந்தியாவில் இருந்து அனுப்ப தொடங்குகியது - தூதரக அதிகாரி
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:00 am

» கொடுமைதான்.. கொரோனா
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:57 am

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:35 am

» விவேக் மீம் இணையத்தில் வைரல்! நெட்டிசன்களுக்கு அவர் வைத்த கோரிக்கை
by T.N.Balasubramanian Today at 10:19 am

» மூன்றாம் உலகப்போர் எப்படி நடக்கும்? -எழுத்ததிகாரன்
by Pranav Jain Today at 8:57 am

» கொரோனாவால் கற்ற பாடம்: நாய், பூனை இறைச்சிக்கு சீனா தடை
by பழ.முத்துராமலிங்கம் Today at 8:35 am

» 300 படங்கள் நடித்துள்ளேன்!
by பழ.முத்துராமலிங்கம் Today at 8:32 am

» இந்தியஅணி உலகக்கோப்பையை வென்ற, 2011, ஏப்ரல் 2-ம் தேதியை இந்திய ரசிகர்களால் மறக்கமுடியுமா
by ayyasamy ram Today at 8:29 am

» பல ஆண்டுகளுக்குப் பின் ஏழுமலையானுக்கு 6 மணிநேர ஓய்வு
by பழ.முத்துராமலிங்கம் Today at 8:23 am

» » » கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - ஏப்ரல் 3
by ayyasamy ram Today at 6:37 am

» மது போதைக்கு அடிமையாகி மீள முடியாத நபர்களுக்கு, 'ஆன்லைன்' மூலம் இலவசமாக மீட்பு உதவி
by ayyasamy ram Today at 6:26 am

» நண்பர்களே!!! ஒரு புளியமரத்தின் கதை நாவல் கிடைக்குமா?
by Akashgkr Yesterday at 9:06 pm

» குழந்தைகளுக்கு ‛கொரோனா', ‛லாக் டவுன்' என பெயர் சூட்டிய தம்பதியினர்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» ஏப்.,15க்கு பிறகான ரயில் முன்பதிவு: தெளிவுப்படுத்திய ரயில்வே
by ayyasamy ram Yesterday at 6:08 pm

» வேலன்:-கணிணியில் தேவையற்ற பைல்களை நீக்கிட -Wash and GO -Abelsoft
by velang Yesterday at 5:54 pm

» வேலன்:-20க்கும் மேற்பட்ட விதவிதமான ஆங்கில எழுத்துருக்கள்-English Fonts
by velang Yesterday at 5:49 pm

» வேலன்:-புகைப்படத்தில் தேவையில்லாதவற்றை நீக்கிட - PhotoScissors.
by velang Yesterday at 5:48 pm

» வீட்டுக்குறிப்புகள் -மங்கையர் மலர்
by ayyasamy ram Yesterday at 4:19 pm

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 3:58 pm

» சம்யுக்தாவின் சாகச பயிற்சி
by ayyasamy ram Yesterday at 3:55 pm

» துருக்கியில் நிகிஷா
by ayyasamy ram Yesterday at 3:54 pm

» ‘கமலி ப்ரம் நடுக்காவேரி’ ஹைடெக் பின்னணியில் ஒரு காதல் கதை
by ayyasamy ram Yesterday at 3:52 pm

» கரோனா: தமிழகம் முழுவதும் அபாயம் உள்ள பகுதியாக அறிவிப்பு!
by ayyasamy ram Yesterday at 3:43 pm

» ஏப்ரல் 2 - செய்தி சுருக்கம்)
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» பிறந்த தினவாழ்த்துகள் திரு மாணிக்கம் நடேசன் அய்யா அவர்கள்
by மாணிக்கம் நடேசன் Yesterday at 12:51 pm

» ஆஹா டிப்ஸ்
by மாணிக்கம் நடேசன் Yesterday at 10:33 am

» வீட்டுக்குறிப்புகள் -மங்கையர் மலர்
by ayyasamy ram Yesterday at 5:38 am

» கொரோனா தொற்று ஆய்வு பணியில் இந்திய கடற்படை
by ayyasamy ram Yesterday at 5:30 am

» » கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - ஏப்ரல் 2
by ayyasamy ram Yesterday at 5:27 am

» கொரோனாவுக்கு எதிரான போர்; சிவப்பு நிறத்தில் ஒளிரும் எம்பயர்
by ayyasamy ram Yesterday at 5:15 am

Admins Online

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?

best திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?

Post by heezulia on Sun Dec 17, 2017 2:18 pm

First topic message reminder :

17.12.2017

கர்ணன் vs வேட்டைக்காரன்

ரஜனி / கமல், விஜய் / சூர்யா மாதிரி அப்போ சிவாஜி / MGR. இவங்க படங்கள் ரிலீஸ் ஆனா, அவங்கவங்க ரசிகர்கள் மோதிக்குவாங்களாம்.

பந்துலு எக் ............. கச்சக்கமான செலவுல கர்ணன் படத்தையும், திருமுகம் கொறஞ்.................ச பட்ஜெட்ல வேட்டைக்காரன் படத்தையும் எடுத்தாங்களாம். கர்ணன் படத்ல முன்னணி நட்சத்திர கூட்டம். பாதி படம் முடிஞ்சிருச்சாம். மீதி படத்தை எடுக்கவும் ஆரம்பிச்சாச்சாம். ஆனா வேட்டைக்காரன் படத்தை அப்பதான் எடுக்க ஆரம்பிச்சாங்களாம்.

பந்துலு கர்ணன் படத்தை பொங்கல் அன்னிக்கி ரிலீஸ் செய்ய சுறுசுறுப்பா வேல செஞ்சுட்டு இருந்தாராம். அப்போ ஒருத்தர் பந்துலுட்ட ஒரு விஷயத்தை சொல்லியிருக்கார். பந்துலு யோசிக்க ஆரம்பிச்சுட்டாராம். அந்த ஆள் சொன்ன விஷயம் என்ன............? கர்ணன் ரிலீஸ் ஆகிற அன்னிக்கே, திருமுகம் வேட்டைக்காரன் படத்தை ரிலீஸ் செய்ய போறதா.

ரெண்டு மெகா ஸ்டார் படங்கள் ஒண்ணா ரிலீஸ் ஆனா நல்லா இருக்காதே, வசூல் அடிபடுமேன்னு பந்துலு நினைச்சு, தமது குழுவினருடன் பேசினாராம். சிவாஜி காதிலும் போட்டு வச்சாங்க. அவரும் யோசனை செய்ய ஆரம்பிச்சுட்டாராம். வேட்டைக்காரன் படத் தயாரிப்பாளர் தேவரையும் கூப்ட்டு பேசியிருக்காங்க. ஆனா இவங்கல்லாம் என்னதான் பேசினாலும், MGR தான் ரிலீஸ் date சொல்லணுமாமே. ஒரு வாரம் கழிச்சு படத்தை ரிலீஸ் செய்யலாம்னு அவர்ட்ட எப்படி, யார் சொல்றது? அப்புறமா ஒருத்தர் ஒரு ஐடியா சொன்னாராம். MGR க்கு கர்ணன் படத்தை தனியா போட்டு காட்டிட்டு, அதுக்கப்புறமா ரிலீஸ் பத்தி பேசலாம்னு முடிவு செஞ்சாச்சாம். MGRட்ட போய் சொன்னாங்களாம். அவரும் படத்தை பார்க்க உம் சொல்லிட்டாராம்.

படத்தை பார்த்த MGRக்கு சிவாஜியின் நடிப்பு ரொம்ப புடிச்சு போச்சாம். "நடிப்புக்குன்னே பொறந்தவர்யா. மனுஷன் கர்ணனாவே வாழ்ந்திருக்கார்"ன்னு பாராட்டினாராம். பந்துலு உள்பட, எல்லா கலைஞர்களையும் மனசா................ர புகழ்ந்தாராம். படத்தின் வெற்றிக்கு வாழ்த்து சொல்லிட்டு போய்ட்டாராம். இப்படிப்பட்ட சமயத்தில் ரிலீஸை பத்தி பேச எல்லாரும் தயங்கினாங்களாம். வேட்டைக்காரன் படத்தை ஒரு வாரம் கழிச்சு ரிலீஸ் பண்றத பத்தி எப்படி பேசுறது?
மறுநாள். தேவரை கூப்ட்டுட்டு MGR ஐ பாக்க போனாங்களாம். விஷயத்தை சொல்லியிருக்காங்க. "படத்தை பார்த்தேன். ப்ரமாதமாய், ப்ரமாண்டமாய் இருக்கு. நண்பர் சிவாஜியும் நல்லாவே நடிச்சிருக்கார். சரி, ஒண்ணு செய்ங்க, ரெண்டு படத்தையும் ஒண்ணாவே ரிலீஸ் செஞ்சிருங்க. ரெண்டு பேர் ரசிகர்களும் பார்த்து ரசிச்ச மாதிரி இருக்கும்ல. ரெண்டு பேர் ரசிகர்களும் ரெண்டு படத்தையும் பார்க்கட்டுமே. எல்லாரும் சந்தோஷப்படுவாங்க".

வேற வழி? அப்டீ இப்டீன்னு ரெண்டு படங்களும் 14.01.1964 ல ரிலீஸ் ஆயிருச்சு. கர்ணன் ரிலீஸ் ஆன தியேட்டர்கள்ல பிரமாண்டமான பேனர்கள். படத்தை பார்த்தவங்க பாராட்டினாங்களாம். ஆனா அவ்ளோ பணம் செலவழிச்சு எடுத்த கர்ணன், வேட்டைக்காரன் மாதிரி வெற்றி பெறலியாம். ஆனா பாருங்க, 2012ல வெளியான டிஜிட்டல் படம் ஓஹோன்னு ஓடுச்சாம்.

ஆனா வேட்டைக்காரன் ரிலீஸ் ஆன தியேட்டர்களில் என்ன செஞ்சாங்க தெரியுமோ? தேவர் ஃபிலிம் ஆச்சே. நிஜமான கூண்டு வச்சு, நிஜமான புலியையும் கூண்டுக்குள்ள வச்சுட்டாங்களாம். இந்தப் புலியை பார்க்குறதுக்குன்னே .............. கூட்டம் கூடுச்சாம். Low பட்ஜெட் படம் வசூலை குவிச்சுதாம். இதுக்கு MGR என்ன செஞ்சார் தெரியுமா? பந்துலுவுக்கு 1965ல ஆயிரத்தில் ஒருவன் படத்திற்கு வாய்ப்பு கொடுத்தாராம். நல்ல லாபம் அள்ளிக் கொடுத்த படமாச்சே. கன்னாபின்னான்னு ஓடின படமாச்சே. நல்ல மனுஷர்தானே MGR.


Baby Heerajan மீண்டும் சந்திப்போம்
heezulia
heezulia
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 610
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 193

Back to top Go down


best Re: திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?

Post by heezulia on Thu Jul 26, 2018 11:30 pm

26.07.2018

மறுபடியும் என்னை ஈகரைல சேத்துகிட்டதுக்கு  நன்றி. எதுக்குன்னா, நான் நிறை....................ய தடவ இங்க நுழைய ட்ரை செஞ்சேன், முறைப்படிதான். ஊ.......................ஹும், முடியாம போச்சு. இப்பதான் வழி கெடச்சுது. வேற பேர்ல register செஞ்சுக்கலாமான்னுகூட நெனச்சேன். 


இன்னொரு விஷயம். Fontஐ கலர் போடறது முன்னால நல்லா இருந்துச்சே. இப்ப எதுவுமே இல்லியே. ஏன் மாத்திட்டாங்க? நல்.............லாவே இல்ல, எனக்கு. என்னமா........... ஆசை ஆசையா கலர் கலரா போட்டு எழுதிட்டு இருந்தேனே. நான் கொஞ்ச நாள் வரலேன்னா எல்லாமே மாறிப்போச்சு. 

சரி, சமாச்சாரத்துக்கு வர்றேன்.

என்னோட பதிவு #102ல காக்கும் கரங்கள் [1965] படத்தை பற்றி சொல்ல ஆரம்பிச்சேன்.


இந்தப் படத்ல ஒரு புதுமுகம் அறிமுகம் ஆனார். ஆனாரா? ஆமா ஆனார். முதல் நாள் ஷூட்டிங்ல ஹீரோயின் கைய புடிச்சுட்டு வசனம் பேசணும். ஆனா பாருங்க, ஹீரோயின் கைய புடிச்ச உடனேயே, அந்த புதுமுகம் கை நடுங்க ஆரம்பிச்சிருச்சு. இதை பார்த்த டைரடக்கர் திருலோகசந்தர் ஹீரோயின்ட்ட சொன்னார்,

“நீங்க ஹீரோ கைய இறுக்கமா புடிச்சுக்கோங்க." ஹீரோயினும் ஹீரோ கைய டைரடக்கர் சொன்ன மாதிரி புடிச்சார். அவ்ளோதான், ஹீரோ கை, கூட கொஞ்சம் ‘கிடுகிடு’ன்னு நடுங்க ஆரம்பிச்சுது. 

என்னதான் சினிமாவுக்கு புதுமுகமா இருந்தாலும் இப்டியா? அது சரி, அது யார்னு தெரியுமோ? சினிமால ‘என்றும் 16’ ன்னு பேர் வாங்கினவர். இப்ப தெரிதா? சரி நானே சொல்லிர்றேன்.

சிவகுமார்.

ஆமாங்க. இவருக்குத்தான் அப்டி கைல்லாம் நடுங்குச்சு. ஆரம்பத்ல இவர் கொங்கு தமிழ்லதான் பேசினாராம். அதனால செட்ல அவரை ‘கொங்குகாரரே’னு கிண்டல் செஞ்சாங்களாம். அப்புறமா சிவகுமார், மேஜர் சுந்தரராஜன் நாடக குழூல சேந்து, தமிழை பலவிதமாக பேச கத்துகிட்டாராம்.

காக்கும் கரங்கள் படத்ல SV சுப்பையா பணக்காரரா நடிச்சிருந்தாராம். அவருக்கு நெஜமாவே ஒரு குணம் இருந்துச்சாம். டெய்.......................லி ஷூட்டிங்க்கு வரும்போது, செட்ல இருக்கிற எல்லாருக்கும், ட்ரிங்க்ஸ் கொண்டுவருவார். அதை செட்ல இருக்கிற எல்லாரும், அவர் டைரடக்கரா இருந்தாலும் சர்தான், லைட்மேனா இருந்தாலும் சர்தான், எல்லாரும் குடிச்சாகணும். அம்புட்டுதான். SVS எல்லாரையும் குடிக்க வச்சிருவாராம்.

ஆமா................. அது என்ன ட்ரிங்க்ஸ்? அட நீங்க ஒண்ணு, கற்பனை எங்க போகுது உங்களுக்கு? வீட்ல இருந்து கூழ் எடுத்து வருவாராம். அததான் எல்லாரும் குடிச்சாங்க. அப்டி அவருக்கு ஒரு பயக்கம்.

அவருக்கு இன்னொரு பழக்கம் இருந்துச்சு. சாயங்காலம் ஆறு மணிக்கு மேல செட்ல இருக்கமாட்டார். வூட்டுக்கு போயிருவார்.

ஒருநாள் SVS ராத்திரி நடிக்க வேண்டிய ஸீன். அவர் கண்டிப்பா ராத்திரி நடிச்சே ஆகணும்ங்ற நெலம. ஆனா SVSதான் சாயங்காலம் 6 மணிக்கு மேல நடிக்கமாட்டேங்க்ற பாலிஸில இருக்காரே. AVM சரவணன் அவர்ட்ட விஷயத்த சொன்னார். சரீன்னுட்டு, SVS ஒரு கண்டிஷன் போட்டார். அது என்னான்னா, அவர் AVM சரவணன்ட்ட சொன்னார்,

“நான் கொண்டு வர்ற கூழை உங்க அப்பா AVM குடிச்சார்னாக்கா, நான் ராத்திரி நடிக்கிறேன்”

AVM, SVS கொடுத்த கூழை நெஜமாவே குடிச்சார். அது மட்டுமா?

“கூழ் நல்லா இருக்கே, இன்னொரு டம்ளர் கூழ் வேணுமே”

SVS ஒரே சந்தோஷம். இன்னொரு டம்ளர் கூழ் கொடுத்தார். AVMமும் குடிச்சார். அவர் ரெண்டு டம்ளர் கூழ் குடிச்சதால, SVS தன்னோட பாலிஸியை மாத்திட்டார்.

“AVM ரெண்டு டம்ளர் கூழ் குடிச்சதால, நானும் ரெண்டு ராத்திரி நடிக்கிறேன்”னு SVS சொல்லிட்டார்.

காக்கும் கரங்கள் படத்தோட ம்யூஸிக் டைரடக்கர் KV மகாதேவன். “அல்லித்தண்டு காலெடுத்து அடி மேல் அடியெடுத்து” பாட்டு ஷூட்டிங். இந்த பாட்ல நடிக்க வேண்டிய குழந்தை வந்தாச்சு. குழந்தை நடந்து வரணும். ஆனா என்ன ஆச்சு? ஷூட்டிங்ல குழந்தை நடப்பேனாண்ட்ருச்சு. அடம் புடிச்சுது. யார்லாமோ என்னல்லாமோ செஞ்சு பாத்தாங்க. ஒண்......................ணும் நடக்கல. அப்புறமா திருலோகசந்தர்,
“சரி பரவால்ல. குழந்தை ஸீனை அப்புறமா எடுத்துக்கலாம். மத்த ஸீன்ல்லாம் இப்ப எடுத்துறலாம்.” ன்னுட்டார்.

இந்த படத்தோட கேமராமேன் முத்துசாமி. இவர் அந்த கொழந்தய தனியா கூட்டிட்டு போயி, பிஸ்கட், சாக்லேட்லாம் வாங்கி கொடுத்து, நடக்க வைக்க ட்ரை செஞ்சு பார்த்தார். கொழந்த நடக்..............கணுமே. முத்துசாமியின் முயற்சீல்லாம் வேஸ்ட். டயடாயிட்டார். சரி, ஒரு தம் அடிக்கலாமேன்னு சிகரட் பத்த வச்சார். ஸ்மோக் பண்ண ஆரம்பிச்சார்.

சிகரட்ட பத்த வச்சா ஸ்மோக் பண்ணுவார்தானேன்னு கேள்வி கேக்காதீங்க.  
முத்துசாமிக்கு ஒரு ரோசன தோணுச்சு. பத்த வச்ச சிகரட்ட குழந்தட்ட காட்டி,
“இங்க வாப்பா கொழந்த” ன்னு கூப்ட்டார். என்னத்தையோ காட்டி கூப்ட்றாங்களேன்னு , கொழந்தயும் முத்துசாமியை நோக்கி நடக்க ஆரம்பிச்சுது. இதை கவனிச்ச திருலோகசந்தருக்கு பத்தாதா?  முத்துசாமி கையாண்ட அதே முறையை வச்சு, கொழந்தய நடக்க வச்சு, அதுக்கான ஸீன் ஷூட் செஞ்சு முடிச்சுட்டார். எல்லாம் நல்லபடியா முடிஞ்சுது.

- இந்து

Heezulia மீண்டும் சந்திப்போம்
heezulia
heezulia
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 610
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 193

Back to top Go down

best Re: திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?

Post by SK on Fri Jul 27, 2018 10:57 am

நீ...........ண்ட நாட்களுக்கு அப்பறமா உங்க பதிவு 

  திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 8 3838410834 திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 8 3838410834


SK
SK
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8074
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1554

Back to top Go down

best Re: திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?

Post by heezulia on Fri Jul 27, 2018 11:13 am

27.07.2018


ஆமா SK, வந்துட்டேன். அதெப்டி இங்க வராம இருக்க முடியும், சொல்லுங்க? 


Heezulia
heezulia
heezulia
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 610
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 193

Back to top Go down

best Re: திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?

Post by SK on Fri Jul 27, 2018 11:17 am

@heezulia wrote:27.07.2018


ஆமா SK, வந்துட்டேன். அதெப்டி இங்க வராம இருக்க முடியும், சொல்லுங்க? 


Heezulia
காணாமல் போனவர்கள் பட்டியலில் உங்கள் பேரை சேத்துட்டேன் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்


SK
SK
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8074
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1554

Back to top Go down

best Re: திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?

Post by heezulia on Fri Jul 27, 2018 11:59 am

27.07.2018


லிஸ்ட்ல எத்தன பேர் இருக்காங்க? 

Heezulia 
heezulia
heezulia
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 610
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 193

Back to top Go down

best Re: திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?

Post by SK on Fri Jul 27, 2018 12:14 pm

http://eegarai.darkbb.com/t34396p1025-topic#1271227


இந்த பதிவில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்


SK
SK
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8074
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1554

Back to top Go down

best Re: திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?

Post by heezulia on Sun Jun 23, 2019 4:21 pm

23.06.2019

திரைக்குப்பின்னால் - ராமு 1

AVM சரவணன் ஒரு தடவை மும்பை போனார். அங்க உள்ள ஒரு சுவத்துல ஒரு வால்போஸ்ட் பாத்திருக்கார். Door Gagan Ki Chaaon Mein ங்கற ஹிந்தி படத்தின் போஸ்ட்டர்அதுல ஹிந்தி பாட்டு பழைய ஜாம்பவான் கிஷோர்குமாரும், அவர்  கூட ஒரு சின்ன  பையனும் இருந்தாங்க.  படத்தை பற்றி சரவணன் விசாரிச்சார். 

"படம் சுமாராத்தான் ஓடுது" ன்னு சொல்லிட்டாங்க. 

"அந்த பையனை பாத்தா படம் நல்லா இருக்கும்போல தோணுதே. அந்த படத்தை பார்க்க ஏற்பாடு செய்ங்க" இது சரவணன் சொன்னது. 

ஆனா படம் பார்க்க முடியல. இதை சுப்பிரமணியன்  கேள்விப்பட்டார். 

இப்டி மொட்டயா சுப்பிரமணியன்னு சொன்னா என்ன அர்த்தம். அது யார்னு சொல்லமாட்டியா? 

ஓஹோ, அத  சொல்லலியே. சரி சரி, கோவிச்சுகாதீங்க. சொல்றேன். 

இந்த சுப்பிரமணியன் வீனஸ் பிக்ச்சர்ஸ் ப்ரொடக் ஷன் மேனேஜர்.  அவர் சரவணனை மீட் பண்ணினார். 

"கிஷோர்குமார் படத்தை பார்க்க ஆசைப்பட்டீங்கன்னு சொன்னாங்க. படத்தோட உரிமை எங்கிட்டதான் இருக்கு. விநியோகஸ்தர்களுக்கு இந்த படத்தை போட்டு காட்டினேன். அவங்க, "இந்த படத்ல MGR நடிச்சாக்கூட ஓடவே ஓடாது"ன்னுட்டாங்க. இப்டிபட்ட படத்தை நீங்க பாக்கணுமா?"

சரவணன் ஆமான்னுட்டார். கண்டிப்பா பாத்தாகணும்னு சொல்லிட்டார். 

தைரியமும், நம்பிக்கையும் இருந்திருக்குது. அதான். 

படத்தை பார்த்தார். பிடிச்சுது. படத்தை விலை குடுத்து வாங்கிட்டார். திருலோகசந்தர், கிருஷ்ணன் - பஞ்சு, ஜாவர் சீதாராமன் இவங்களை கூப்பிட்டு போட்டு காட்டினார். அவங்களும் பாத்துட்டு உதட்டை பிதுக்கிட்டாங்க. ஆனாலும் சரவணன் விடல. 

"இந்த  படம் முழுசும், சின்ன பையனை ஊமையாக காட்டியிருக்காங்க. நாம அவனை பேசுறவனா மாத்தி, அப்புறமா பேச முடியாதவனா situation ஐ மாத்திருவோம். எப்டி?"

சரி................., அந்த சின்ன பையன், பிற்காலத்தில நல்ல நடிகனாயிட்டான். யார்னு தெரியுமா? அப்புறமா சொல்றேன்.   

"சரி, நீங்க சொல்றமாதிரி நான் கதையை மாத்தி எழுதி தாரேன்" னு ஜாவர் சொல்லிட்டார். அந்த ஹிந்தி  படம்  தமிழ்  கதையாக, அங்கங்க கொஞ்சம் மாத்தி உருவாச்சு. 

தமிழ் படத்துக்கு 'ராமு'ன்னு பேர் வச்சாங்க. திருலோகசந்தர் டைரக்ட்டினார்.  புஷ்பலதாவும் ஜெமினி கணேசனும், அந்த பையனோட அம்மா, அப்பாவா நடிச்சாங்க. 

படத்தின் கிளைமாக்ஸ் ஸீன்.  

வில்லனோட  அடியாளுங்க அந்த சின்ன பையன்  ராமுவை  கை ரெண்டையும் பின்னால கட்டி,  ஒரு  உரலோடு கட்டி போட்ருவாங்க. அவன் சின்ன பையன்ங்கிறதால, தப்பிச்சு வர தெரியல, முடியல. வில்லன் அசோகன் KR விஜயா கூட மல்லுக்கட்டிக்கிட்டு இருப்பார். ஜெமினி கணேசன் வந்து சண்டை போட்டு, விஜயாவை காப்பாத்துறார். 

அசோகன் ஒரு தீப்பந்தம் எடுத்துட்டு வந்து ஜெமினி கூட சண்டை போடுவார். தீ அந்த ரூம்ல விழுந்து  மடமடன்னு பரவும். விஜயா மயங்கி விழுந்து கெடப்பார். தீ விஜயா பக்கத்தில, ராமு பக்கத்தில பரவும். அந்த இடம் முழுசும் தீதான். அதனால, விஜயா விழுந்து கெடக்கும் இடத்துக்கு மேல உள்ள உத்திரம் எரிஞ்சு கீழ விழற மாதிரி இருக்கும். அதை பார்த்த ராமு பயந்து திகைக்கிறான். "அம்மா" னு சொல்ல முயற்சி செஞ்சு செஞ்சு, கடேசில, "அம்மா.................." ன்னு அலர்றான். 

இந்த ஸீனை சுடணும். திருலோகசந்தர் பரபரப்பா சுட்டுட்டு இருந்தார். ஸீன்ல தீ கொறஞ்சுட்டு வந்துச்சு. உடனே உதவியாளர்களை கூப்பிட்டு அந்த இடத்ல மண்ணெண்ணெய் ஊத்த சொன்னார். அவங்க என்னான்னா, ஆர்வக்கோளாறுல நிறைய எண்ணெய ஊத்திட்டாங்க. குப்புனு பத்திக்கிச்சு. அங்க உள்ளவங்க பயந்துட்டாங்க. 

விஜயாவை பத்திரமா கூட்டியாந்துட்டாங்க. ஆனா அந்த சின்ன பையனை கட்டி போட்டிருந்த கைத்த அவுக்க முடியல. தீ வேகமா பரவுச்சு. ராமு கத்த, மத்தவங்களும்  கத்த ...............
அப்புறம் என்னாச்சு ? 

என்னாச்சு என்னாச்சு?  

இருங்க இருங்க, தெரிஞ்சுக்கணுமா ? 

அடுத்த தடவ சொல்றேன். 

- ஹிந்து 

பேபி 
heezulia
heezulia
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 610
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 193

Back to top Go down

best Re: திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?

Post by T.N.Balasubramanian on Sun Jun 23, 2019 6:09 pm

நல்ல சஸ்பென்ஸ்.

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 26185
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9463

Back to top Go down

best Re: திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?

Post by சக்தி18 on Sun Jun 23, 2019 6:53 pm

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 8 1571444738
கிஷோக்குமார்,அமித்குமார் நடிகர்கள்.
ராஜ்குமார் (ராமு) தொடர்ந்து நடித்தாரா? தெரியவில்லையே!

ஐ ஆம் வெயிற்ரிங்க்.
சக்தி18
சக்தி18
தளபதி

தளபதி

பதிவுகள் : 1530
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 474

Back to top Go down

best Re: திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?

Post by heezulia on Sun Jun 23, 2019 9:10 pm

23.06.2019 


தேடிட்டேனே.
 
நீங்க வெய்ட்னது போதும். இந்தாங்க படிங்க. 


அசோக்குமார் பிரபல ஹிந்தி நடிகர். அவரோட தம்பி கிஷோர் குமார்.  கிஷோர் குமார் பாடகர், இசையமைப்பாளர், பாடலாசிரியர், நடிகர், பட தயாரிப்பாளர், திரைக்கதை, டைரடக்கர்.  கிஷோர் குமாரின் மகன் அமித்குமாரும் இந்த வேலைலாம் செஞ்சார். 


ஹிந்தி படத்ல ராமுவாக நடிச்சது இந்த அமித்குமார்.  ராஜ்குமார் இல்ல. 


ராமு ஹிந்தி படத்த கிஷோர் குமார்  தயாரிச்சதால, தன் மகன் அமித் குமாரை அதில ராமுவாக நடிக்க வச்சார். 


பேபி 
heezulia
heezulia
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 610
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 193

Back to top Go down

best Re: திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?

Post by சக்தி18 on Sun Jun 23, 2019 9:47 pm

நான் அதைக் கேட்கவில்லை. இந்திப் படம் பார்க்கவில்லை.
தமிழ் படம் ராமுவில், ராமுவாக நடித்த ராஜ்குமார் என்ன ஆனார்.
சக்தி18
சக்தி18
தளபதி

தளபதி

பதிவுகள் : 1530
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 474

Back to top Go down

best Re: திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?

Post by heezulia on Mon Jun 24, 2019 12:26 am

24.06.2019

பொறுமை பொறுமை. இப்ப அவர் யார்னு சொன்னா அசந்.............................து போவீங்க. 

நான் எழுதியதை நீங்க அதிகம் படிச்சிருக்க மாட்டீங்க. அதனால சொல்றேன். இந்த அசந்து இருக்கே அசந்து, அதை எப்படி படிக்கணும்னு சொல்றேன். அந்த புள்ளி வச்சிருக்கிற இடத்தை நீ.................ட்டி படிக்கணும். "ந்" கொஞ்ச தூரம் போகும். அப்புறம் அந்த "து" கூட சேரும். அதுதான் அசந்து. இப்ப படிச்சு பாருங்க. 

முன்னால செந்தில் [SK] வந்துட்டு இருந்தாரு. அவர்ட்ட கேலி கிண்டலா பேசுவேன். அவர காணோம். நீங்க எப்டீன்னு தெரீல. 

பேபி 
heezulia
heezulia
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 610
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 193

Back to top Go down

best Re: திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?

Post by சக்தி18 on Mon Jun 24, 2019 10:50 pm

கலாய்க்கலாம். ஆனால் புரிந்து கொள்வதில்தான் சிறிது சிக்கல்.
சக்தி18
சக்தி18
தளபதி

தளபதி

பதிவுகள் : 1530
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 474

Back to top Go down

best Re: திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?

Post by heezulia on Mon Jun 24, 2019 11:14 pm

24.06.2019
கலாய்க்கலாங்கிறீங்க. ஆனா புரிஞ்சிக்கிறதில சிக்கல்ங்கிறீங்க. இதை புரிஞ்சிக்கிறதுலதான் எனக்கு சிக்கலா இருக்கு.   
பேபி 
heezulia
heezulia
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 610
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 193

Back to top Go down

best Re: திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?

Post by சக்தி18 on Mon Jun 24, 2019 11:58 pm

அசந்.............................து தான் போயிட்டேன்.

@heezulia wrote:24.06.2019

அந்த புள்ளி வச்சிருக்கிற இடத்தை நீ.................ட்டி படிக்கணும். "ந்" கொஞ்ச தூரம் போகும். அப்புறம் அந்த "து" கூட சேரும். அதுதான் அசந்து. இப்ப படிச்சு பாருங்க. 

பேபி 
மேற்கோள் செய்த பதிவு: 1299611

அசந் ...........................................................................................................து. இவ்வளவு தூரம் போதுமா?
சக்தி18
சக்தி18
தளபதி

தளபதி

பதிவுகள் : 1530
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 474

Back to top Go down

best Re: திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை