ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

நாவல் தேவை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

செய்யத் தகாத 16.
 சிவனாசான்

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நரை கூறிய அறிவுரை
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 amutha jothi

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

View previous topic View next topic Go down

best திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?

Post by heezulia on Sun Dec 17, 2017 2:18 pm

First topic message reminder :

17.12.2017

கர்ணன் vs வேட்டைக்காரன்

ரஜனி / கமல், விஜய் / சூர்யா மாதிரி அப்போ சிவாஜி / MGR. இவங்க படங்கள் ரிலீஸ் ஆனா, அவங்கவங்க ரசிகர்கள் மோதிக்குவாங்களாம்.

பந்துலு எக் ............. கச்சக்கமான செலவுல கர்ணன் படத்தையும், திருமுகம் கொறஞ்.................ச பட்ஜெட்ல வேட்டைக்காரன் படத்தையும் எடுத்தாங்களாம். கர்ணன் படத்ல முன்னணி நட்சத்திர கூட்டம். பாதி படம் முடிஞ்சிருச்சாம். மீதி படத்தை எடுக்கவும் ஆரம்பிச்சாச்சாம். ஆனா வேட்டைக்காரன் படத்தை அப்பதான் எடுக்க ஆரம்பிச்சாங்களாம்.

பந்துலு கர்ணன் படத்தை பொங்கல் அன்னிக்கி ரிலீஸ் செய்ய சுறுசுறுப்பா வேல செஞ்சுட்டு இருந்தாராம். அப்போ ஒருத்தர் பந்துலுட்ட ஒரு விஷயத்தை சொல்லியிருக்கார். பந்துலு யோசிக்க ஆரம்பிச்சுட்டாராம். அந்த ஆள் சொன்ன விஷயம் என்ன............? கர்ணன் ரிலீஸ் ஆகிற அன்னிக்கே, திருமுகம் வேட்டைக்காரன் படத்தை ரிலீஸ் செய்ய போறதா.

ரெண்டு மெகா ஸ்டார் படங்கள் ஒண்ணா ரிலீஸ் ஆனா நல்லா இருக்காதே, வசூல் அடிபடுமேன்னு பந்துலு நினைச்சு, தமது குழுவினருடன் பேசினாராம். சிவாஜி காதிலும் போட்டு வச்சாங்க. அவரும் யோசனை செய்ய ஆரம்பிச்சுட்டாராம். வேட்டைக்காரன் படத் தயாரிப்பாளர் தேவரையும் கூப்ட்டு பேசியிருக்காங்க. ஆனா இவங்கல்லாம் என்னதான் பேசினாலும், MGR தான் ரிலீஸ் date சொல்லணுமாமே. ஒரு வாரம் கழிச்சு படத்தை ரிலீஸ் செய்யலாம்னு அவர்ட்ட எப்படி, யார் சொல்றது? அப்புறமா ஒருத்தர் ஒரு ஐடியா சொன்னாராம். MGR க்கு கர்ணன் படத்தை தனியா போட்டு காட்டிட்டு, அதுக்கப்புறமா ரிலீஸ் பத்தி பேசலாம்னு முடிவு செஞ்சாச்சாம். MGRட்ட போய் சொன்னாங்களாம். அவரும் படத்தை பார்க்க உம் சொல்லிட்டாராம்.

படத்தை பார்த்த MGRக்கு சிவாஜியின் நடிப்பு ரொம்ப புடிச்சு போச்சாம். "நடிப்புக்குன்னே பொறந்தவர்யா. மனுஷன் கர்ணனாவே வாழ்ந்திருக்கார்"ன்னு பாராட்டினாராம். பந்துலு உள்பட, எல்லா கலைஞர்களையும் மனசா................ர புகழ்ந்தாராம். படத்தின் வெற்றிக்கு வாழ்த்து சொல்லிட்டு போய்ட்டாராம். இப்படிப்பட்ட சமயத்தில் ரிலீஸை பத்தி பேச எல்லாரும் தயங்கினாங்களாம். வேட்டைக்காரன் படத்தை ஒரு வாரம் கழிச்சு ரிலீஸ் பண்றத பத்தி எப்படி பேசுறது?
மறுநாள். தேவரை கூப்ட்டுட்டு MGR ஐ பாக்க போனாங்களாம். விஷயத்தை சொல்லியிருக்காங்க. "படத்தை பார்த்தேன். ப்ரமாதமாய், ப்ரமாண்டமாய் இருக்கு. நண்பர் சிவாஜியும் நல்லாவே நடிச்சிருக்கார். சரி, ஒண்ணு செய்ங்க, ரெண்டு படத்தையும் ஒண்ணாவே ரிலீஸ் செஞ்சிருங்க. ரெண்டு பேர் ரசிகர்களும் பார்த்து ரசிச்ச மாதிரி இருக்கும்ல. ரெண்டு பேர் ரசிகர்களும் ரெண்டு படத்தையும் பார்க்கட்டுமே. எல்லாரும் சந்தோஷப்படுவாங்க".

வேற வழி? அப்டீ இப்டீன்னு ரெண்டு படங்களும் 14.01.1964 ல ரிலீஸ் ஆயிருச்சு. கர்ணன் ரிலீஸ் ஆன தியேட்டர்கள்ல பிரமாண்டமான பேனர்கள். படத்தை பார்த்தவங்க பாராட்டினாங்களாம். ஆனா அவ்ளோ பணம் செலவழிச்சு எடுத்த கர்ணன், வேட்டைக்காரன் மாதிரி வெற்றி பெறலியாம். ஆனா பாருங்க, 2012ல வெளியான டிஜிட்டல் படம் ஓஹோன்னு ஓடுச்சாம்.

ஆனா வேட்டைக்காரன் ரிலீஸ் ஆன தியேட்டர்களில் என்ன செஞ்சாங்க தெரியுமோ? தேவர் ஃபிலிம் ஆச்சே. நிஜமான கூண்டு வச்சு, நிஜமான புலியையும் கூண்டுக்குள்ள வச்சுட்டாங்களாம். இந்தப் புலியை பார்க்குறதுக்குன்னே .............. கூட்டம் கூடுச்சாம். Low பட்ஜெட் படம் வசூலை குவிச்சுதாம். இதுக்கு MGR என்ன செஞ்சார் தெரியுமா? பந்துலுவுக்கு 1965ல ஆயிரத்தில் ஒருவன் படத்திற்கு வாய்ப்பு கொடுத்தாராம். நல்ல லாபம் அள்ளிக் கொடுத்த படமாச்சே. கன்னாபின்னான்னு ஓடின படமாச்சே. நல்ல மனுஷர்தானே MGR.


Baby Heerajan மீண்டும் சந்திப்போம்
avatar
heezulia
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 571
மதிப்பீடுகள் : 187

View user profile

Back to top Go down


best Re: திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?

Post by SK on Thu Apr 05, 2018 9:26 am

சிவாஜி கூட எங்க கேப்டன் நடிச்சிருக்காரா
ஓகே!!!! ஓகே!!!! ஓகே!!!! ஓகே!!!! ஓகே!!!! ஓகே!!!!
avatar
SK
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6408
மதிப்பீடுகள் : 1140

View user profile

Back to top Go down

best Re: திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?

Post by heezulia on Wed Apr 11, 2018 1:35 pm

11.04.2018 

நானும் ஒரு பெண் படத்ல, விஜயகுமாரிக்கு மேக்கப் போடறது சவாலா இருந்துச்சு.  கினின்னு ஒரு மேக்கப் கலைஞர். இவர்தான் விஜயகுமாரிக்கு இந்தப் படத்துல மேக்கப் போட்டு விட்டார்.
இவர் பராசக்தி படத்ல, சிவாஜிக்கு முதல் முதலா பொட்டு வச்சு மேக்கப் போட்டவர்.

மேக்கப்  போடறதுக்குன்னே ................... தனியா பான்கேக்னு இருக்காமே. இதுல ரெண்டு மூணு கலர்களை மிக்ஸ் செஞ்சு, புது மாதிரியான கருப்பு கலரை உண்டாக்கி, விஜயகுமாரிக்கு மேக்கப் போட்டார்.

இந்தப் படத்தில ரங்கராவும், MR ராதாவும் நடிச்சிருந்தாங்க. ரங்காராவ்  எப்பவுமே 11 மணிக்குதான் வருவார். ஒருநாள் ராதா ரங்காராவ்ட்ட, “மொதலாளி செலவுல நாங்கல்லாம் காலைலயே டிஃபன்ல்லாம் சாப்ட்டுட்டு ஷூட்டிங்காக வெய்ட் பண்ணிட்டு இருக்கோம். நீங்க இப்டி 11 மணிக்கு வர்றதா இருந்தா, ஷூட்டிங்கையும் 11 மணிக்கே வச்சிருக்கலாம் போலியே”ன்னு அவர் பாணியிலேயே சொன்னார். ரங்காராவுக்கு ஒரு மாதிரியா போச்சு.

இந்த படத்தில “ஏமாற சொன்னதும் நானோ” அப்டீன்னு ஒரு பாட்டு. புஷ்பலதாவும், AVM ராஜனும் பாட்றமாதிரி. ரெண்டு பேரும் NCC உடையை போட்டு ஆட்றாங்க, பாட்றாங்க. பெங்களூர்ல ஷூட் பண்ணாங்க. படம் சென்ஸாருக்கு போச்சு.
சென்ஸார் குழுல, சாஸ்திரின்னு ஒருத்தர். அவர் படத்தை பார்த்தார். செட்டியாரை கூப்ட்டனுப்பினார். செட்டியாரும் வந்தார். சாஸ்த்திரி, “ஏன் செட்டியாரே, உங்க படத்தில இப்டி செய்யலாமா? NCC உடை போட்டுக்கிட்டு, டூயட் பாட்ற மாதிரி ஸீன் வச்சிருக்கீங்களே.”

உடையை மாத்தி, அந்த பாட்டை மறுபடியும் எடுக்கிறதா செட்டியாரும், டைரக்டரும்  ப்ராமிஸ் செஞ்சாங்க. 

அதே................. மாறி, அந்த பாட்டை இன்னொரு தடவை எடுத்துட்டாங்க. எப்டி? பெங்களூர்ல இயற்கை காட்சிகள்ல எடுத்தாங்கல்ல? இப்போ அந்த பாட்டை விஜயா கார்டன்ல, ஒரே.................. நாள்ல எடுத்துட்டாங்க.

AVM தயாரிப்புல நாகேஷ் நடிச்ச முதல் படம் நானும் ஒரு பெண். நாகேஷின் சம்பளத்தை பற்றி பேசும்போது, AVM சரவணன்
“ஐயாயிரம் வச்சுக்கலாமா?” ன்னு கேட்டார்.

ஆனா நாகேஷ் ஒத்துகல. “ஏன் ஏழாயிரம் எப்டீ?”

“சரி உங்களுக்கும் வேணாம், எங்களுக்கும் வேணாம். ஆறாயிரமா இருக்கட்டும்” னு முடிவு செஞ்சாங்க.

“சரவணன் சார், நான் பெருமைக்காக சொல்றேன்னு நினைக்காதீங்க. திமிர்னு நெனச்சாலும் பரவாயில்ல. ஒரு காலம் வரும் பாருங்க. நான் கேக்குற சம்பளத்தை, கேள்வி கேக்காம நீங்களே குடுப்பீங்க பாருங்க”

“அப்படி ஒரு காலம் வந்தா, நான் குடுக்காமயா இருக்க போறேன்? கண்...................டிப்பா குடுப்பேன்.”

அதுமாதிரிதான் நடந்துச்சு. நாகேஷ் கேட்ட பணத்தை, கேக்காம கொள்ளாம குடுத்தார். தாம்மேல நாகேஷுக்கு அவ்ளோ............. நம்பிக்கை.

படத்தில விஜயகுமாரிக்கு சகோதரன் நாகேஷ். விஜயகுமாரி பட்ற கஷ்டத்தை பார்த்து நாகேஷ் அழணும். டைரக்டர் திருலோக்ட்ட “ஏன் சார், நானோ காமெடியன். நான் அழுது நடிச்சா, சரியா வருமா?”னு நாகேஷ் கேட்டார்.

“ஏன் சரியா வராது. நான் என்ன சொல்றேனோ, அதே................... மாதிரி நடிங்க. உணர்ச்சி பூர்வமா நடிங்க. கண்...................டிப்பா சரியா வரும்”

நாகேஷும், திருலோக் சொன்னபடியே நடிச்சார்.

காமெடியன் சோக காட்சியில் நடிச்சா சரியா வருமான்னு பேச்சு அடிபட்டது, செட்டியார் காதுல போய் விழுந்துச்சு. அவர் திருலோக்கிடம் இதை பற்றி பேசினார்.

“நாகேஷ் சோக காட்ச்சீல நடிக்கிறது, அவருக்கு ஒரு திருப்புமுனையாக இருக்கும் பாருங்க”ன்னு திருலோக் சொல்லிட்டார். டைரக்டர் மேல உள்ள நம்பிக்கைல, செட்டியாரும் சரீன்னுட்டார்.

நானும் ஒரு பெண் படத்தில சோக காட்சியில நாகேஷ் நடிச்சதை பார்த்துதான், பாலசந்தருக்கு சர்வர் சுந்தரம் படத்தில நாகேஷை நடிக்க வைக்க எண்ணம் வந்துச்சுன்னுகூட பேசிக்கிட்டாங்களாம்.
நானும் ஒரு பெண் ரிலீஸ் ஆகி, சக்.................க போடு போட்டுச்சு.

அடுத்தாபுல, செட்டியாரும், திருலோக்கும் சேர்ந்து ஒரு படம் எடுத்தாங்க, ‘காக்கும் கரங்கள்’. நானும் ஒரு பெண் படத்தின் ஜோடிதான் இந்தப் படத்திலேயும்.

ஒரு புதுமுகம் அறிமுகம் ஆனார். முதல் நாள் ஷூட்டிங். புதுமுகம் காதலியின் கையை புடிச்சு பேசணும். கையை புடிச்சார். ரெண்டு கையும் நடு நடு நடுன்னு நடுங்..............குச்சு. திருலோக் இதை பார்த்தார். காதலிட்ட, “நீங்க அவர் கையை கெட்.............டியா புடிச்சுக்கோங்க”ன்னு சொன்னார். காதலியும் அவர் கைகளை இறுக்.......................க புடிச்சுகிட்டார். அம்புட்டுதான், புதுமுகம் கைகள், கூட கொஞ்சம் நடுங்க ஆரம்பிச்சுருச்சு.
யாருங்க அந்த புதுமுகம்?

அடுத்த பதிவுல சொல்றேன். காத்.....................திருங்க.

- இந்து 18

Heezulia
avatar
heezulia
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 571
மதிப்பீடுகள் : 187

View user profile

Back to top Go down

best Re: திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?

Post by heezulia on Sat Apr 21, 2018 7:50 am

21.04.2018

விஜயா வாஹினி ஸ்டூடியோ. பெரீ.....................ய செட். ஒரு பாட்டோட ஸீன் ஷூட்டிங் நடந்துட்டு இருந்துச்சு. 

“வாங்கைய்யா வாத்யாரையா வரவேற்க வந்தோமையா” 

நம்நாடு படத்ல உள்ள பாட்டு. இந்த பாட்ல நூத்துக்கணக்கா................ன பொம்பளைங்க, ஆமபளைங்க நடன கலைஞர்கள். இவங்களுக்கு நடூல ஜெயலலிதா & எம்.ஜி.ஆர்.

டைரக்டக்கர் ஜம்பு. சக்கரபாணியும், நாகிரெட்டியும் தயாரிச்சாங்க. 

கொஞ்ச பாட்டை ஷூட் செஞ்சாங்க. சாப்பாட்டு நேரம். மத்யான சாப்பாடு. எல்லாரும் சாப்ட போய்ட்டாங்க. 

எம்.ஜி.ஆருக்கு ஒரு பழக்கம். சென்னை, தி.நகர், ஆற்காடு சாலையில அவருக்கு ஒரு ஆபிஸ் இருக்கு. சாப்ட்டுட்டு அவர் அங்கதான் போய் ஓய்வெடுப்பார். அதுமாதிரிதான் அன்னிக்கும் இங்க சாப்ட்டுட்டு, ஓய்வெடுக்க அங்க போய்ட்டார். 

இங்க நடன கலைஞர்கள்லாம் சாப்ட்டுட்டாங்க. மேனேஜர் எல்லா...............ரையும் கூப்ட்டு அனுப்பினார். அவங்களும் டான்ஸ் ஆட ரெடியாயிட்டாங்க. 

எம்.ஜி.ஆரின் கார் வந்து நின்னுச்சு. கரீட்டு டைம்க்கு வந்துட்டார்ல. அவர் கார்லேயிருந்து இறங்கினார். நடன கலைஞர் ஒருத்தர்ட்ட, “சாப்ட்டாச்சா”ன்னு கேட்டார். எவ்ளோ நல்ல மனசு பாருங்க எம்.ஜி.ஆருக்கு. 

ஷூட்டிங் ஆரம்பிச்சாச்சு. ஜெயலலிதா சம்பந்தப்பட்ட ஸீன்லாம் எடுத்து முடிச்சாச்சு. எம்.ஜி.ஆர். சம்பந்தப்பட்ட பாட்டு ஸீன் எடுக்கணும். இயக்குனர் ஜம்பு அவரை கூப்ட்டு வர ப்ரொடக் ஷன் மேனேஜரை அனுப்பினார். அவர் எம்.ஜி.ஆர். ரூமுக்கு ஓடினார். ரூம் மூடியிருந்துது. டொக் டொக். கதவை தட்டினார் மேனேஜர். நோ பதில். கதவு தொறந்துச்சு. ஆனா எம்.ஜி.ஆர். இல்ல, வேற ஒருத்தர். 


“எம்.ஜி.ஆர். இருக்காரா?” ன்னு கேட்டுட்டே.................... உள்ள நொழஞ்சார் மேனேஜர்.

“அவர் இங்க வரவே இல்லியே” ரூமுக்குள்ள இருந்தவர் சொல்லிட்டார்.

“இப்பத்தானே கார்லே இருந்து எறங்கினார். நான் பாத்தேனே. எங்க போய்ட்டார்?” னு மேனேஜர் யோசிச்சுகிட்டே அங்க இங்க தேடினார். எம்.ஜி.ஆர்தான் இல்லேன்னா, அவரோட காரும்ல இல்ல. என்ன செய்றதூன்னு தெரியாம, ஜம்புட்ட சமாச்சாரத்த சொன்னார்.

“சின்னவரு ரூம்ல இல்ல”

இன்னாங்கடா இது, ஜம்புவுக்கும், மேனேஜருக்கும்  வந்த சோதன.

“அவர் கார் வந்துச்சே. யாரோ ஒரு டான்ஸரட்ட பேசினதை கூட பாத்தேனே. பின்ன எங்கதான் போய்ட்டார்?” ஜம்பு யோசிச்சுட்டு இருந்தார். ஸ்டூடியோ முழுக்க தேடு தேடுன்னு தேடினாங்க. ஊ........................ஹும். காணவே காணோம். 

அப்புறம் ஒரு தகவல் வந்துச்சு எம்.ஜி.ஆர். எங்க இருந்தார்னு. ஆற்காடு சாலைல இருந்த அவரோட ஆபிஸுக்குத்தான். எல்லாருக்கும் ஷாக்கோ................ ஷாக். இந்த நேரத்தில அவர் அங்க எதுக்கு போனார்னு எல்லாரும் குழம்பி, கவலைப்பட்டுட்டு இருந்தாங்க. பயம் வேற. என்ன பிரச்னைனு தெரியலியே. அதான். விஷயம் விஜயா வாஹினி ஸ்டூடியோல உள்ள மூல முடுக்குக்கெல்லாம் தெரிஞ்சு போச்சு. 

“எம்.ஜி.ஆர். இங்க வந்தபோ, யாரோ ஒரு டான்ஸர்ட்ட பேசிட்டு இருந்தாரே. நீ என்ன செய்வியோ ஏது செய்வியோ தெரியாது. அவர் யார்னு தே..............டி கண்டுபுடிச்சு, அவரை கூட்டிட்டு வா” ன்னு ஜம்பு மேனேஜரை வெரட்டி விட்டார். 

மேனேஜர் தன் உதவியாளர்களை கூட்டிக்கிட்டு, ஓடி................. ஓடி தேடினார். அப்பா.....................டா, அந்த டான்ஸர் கெடச்சுட்டார். செட்ல ஒரு ஓ....................ரமா உக்காந்திருந்தார். அவர கூட்டிட்டு போயி ஜம்புட்ட விட்டார் மேனேஜர். 

ஜம்பு டான்ஸரை தனியா இஸ்துகினு போயி, “சின்னவரு உங்ககிட்ட பேசிட்டிருந்தாருல்ல?”னு விசாரிச்சார்.

“ஆமா, என்ட்ட பேசிட்டிருந்தார்”

“என்ன பேசினார்?”

“சாப்ட்டாச்சான்னு கேட்டார்.”

“நீங்க என்ன சொன்னீங்க”

“சாப்ட்டோம்”னு சொன்னேன். “என்ன சாப்ட்டீங்க?”ன்னு கேட்டார். “புளியோதரை, தயிர்சாதம் பொட்டலம் கட்டி குடுத்தாங்க”ன்னு சொன்னேன். அதுக்கப்புறம் எதுவும் கேக்கல. விறுவிறுன்னு கார்ல ஏறி வெளியே போய்ட்டார்” 


அம்புட்டுதான். புரிஞ்சுபோச்சு, புரிஞ்சுபோச்சு. எதுக்காக எம்.ஜி.ஆர். வெளிய போனார்னு காரணம் தெரிஞ்சுபோச்சு. ஜம்புவும், மேனேஜரும் ஆற்காடு சாலை ஆபீஸுக்கு ஓடினாங்க. 

ஓடினாங்களா? அட நீங்க ஒண்ணு. கார்ல வேகமா போனாங்கன்னு அர்த்தம். என்ன புரிஞ்சுதா? 

எம்.ஜி.ஆர். ஆபீஸுக்கு போனாங்களா? போனா....................ங்க. அவரை பாத்தாங்களா? பாத்தா.............................ங்க. மேனேஜர் பேசினார்.


“எம்மேலதான் தப்பு. இது மேனேஜ்மெண்ட்டுக்கு தெரியாது. லஞ்ச் சாப்ட்ட உடனே சீக்கிரமா ஷூட்டிங் ஆரம்பிக்கணும். நிறைய பேர் இருந்ததால, பொட்டலமா சாப்பாடு குடுத்தா சீக்கிரமா சாப்ட்டு முடிப்பாங்கன்னுதான் இப்படி ஏற்பாடு செஞ்சுட்டேன். இனிமே இப்படி தப்பு நடக்காம பாத்துக்குறேன். மன்னிச்சுருங்க”

அப்றம் என்ன? மன்னிப்புதான் கேட்டாச்சுல்ல. ஷூட்டிங் ஆரம்பிச்சுது. அந்த பாட்டு ஷூட்டிங் முடியுற வரைக்கும் எம்.ஜி.ஆர். மற்ற கலைஞர்களோடுதான் இருந்தாராம். 

ப்ரொடக் ஷன் மேனேஜர் கம்பெனி செலவுல கலைஞர்களுக்கு நல்ல சாப்பாடு வாங்கி கொடுக்காம, பொட்டல சாப்பாடு வாங்கி கொடுத்ததுதான் எம்.ஜி.ஆருக்கு கோவம். அதுவும் மேனேஜ்மென்ட்டுக்கு தெரியாம, அவராவே தன் இஷ்டத்துக்கு  முடிவு எடுத்திருக்காரே. அவர் என்ன சாப்ட்ராறோ, அதே சாப்பாடுதான் ஷூட்டிங்க்கு வர்றவங்களுக்கும் கொடுக்கணும்னு அவரோட கண்டிப்பான உத்தரவாம். 

எம்.ஜி.ஆர். பட ஷூட்டிங்க்னா, அது எந்த கம்பெனி படம்னாலும் சர்தான், எல்லாருக்கும் நல்ல சாப்பாடு கிடைக்குதா, எல்லாருக்கும் சரியான சம்பளம், முழு................ சம்பளம் போய் சேருதாங்கறதுல கவனமா இருப்பாராம். அவர்கூட நடிச்சவங்களுக்கெல்லாம்கூட இது தெரியும். 

இந்த நல்ல குணமும், மனமும்தான் அவர் பேருக்கும் புகழுக்கும் காரணம்னு எல்லாருக்கும் தெரிஞ்ச ரகசியம்தானே. 


“வாங்கைய்யா வாத்யாரையா, வரவேற்க வந்தோமையா, ஏழைகள் உங்களை நம்பி எதிர்பார்த்து நின்றோமையா”

வாலி பொருத்தமாத்தான் எழுதியிருக்காரப்பு.

- Oneindia Tamil


Heezulia  மீண்டும் சந்திப்போம்  
avatar
heezulia
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 571
மதிப்பீடுகள் : 187

View user profile

Back to top Go down

best Re: திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?

Post by SK on Sat Apr 21, 2018 9:48 am

அது எந்த கம்பெனி படம்னாலும் சர்தான், எல்லாருக்கும் நல்ல சாப்பாடு கிடைக்குதா, எல்லாருக்கும் சரியான சம்பளம், முழு................ சம்பளம் போய் சேருதாங்கறதுல கவனமா இருப்பாராம். அவர்கூட நடிச்சவங்களுக்கெல்லாம்கூட இது தெரியும்.

எங்க கருப்பு எம்.ஜி.ஆர். கூட இப்படி தானாம்

avatar
SK
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6408
மதிப்பீடுகள் : 1140

View user profile

Back to top Go down

best Re: திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?

Post by Dr.S.Soundarapandian on Sat Apr 21, 2018 2:52 pm

சூப்பருங்க
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4609
மதிப்பீடுகள் : 2445

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

best Re: திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum