உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» கலெக்டர் வைத்த 'டெஸ்ட்'; தாசில்தார்கள் 'பெயில்'
by சிவனாசான் Yesterday at 9:53 pm

» பணி இடமாற்றம்: ஆசிரியரை கட்டியணைத்து மாணவ-மாணவிகள் பாச போராட்டம்
by சிவனாசான் Yesterday at 9:44 pm

» அறிவுடையார் செய்வதறிவார் ! story by Krishnaamma :)
by krishnaamma Yesterday at 9:04 pm

» மிகவும் அழகான, வினோதமான விதவிதமான பூக்கள் :)
by krishnaamma Yesterday at 8:33 pm

» நிலமெல்லாம் ரத்தம் - பா.ராகவன் -
by lakshmi palani Yesterday at 5:24 pm

» சர்க்கரை நோயாளிகளுக்கான பழங்கள்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:09 pm

» ஏன்?
by ஆதிரன் Yesterday at 4:54 pm

» நண்பா
by ஆதிரன் Yesterday at 4:30 pm

» என் கணவருக்கு பக்க பலமா இருந்து நான் எடையைக் குறைச்சது இப்படித்தான்!” - VJ ஐஸ்வர்யா
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:22 pm

» நீச்சல் உடையில் வருபவர்களுக்கு இலவச பெட்ரோல்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:17 pm

» மொக்கை ஜோக்ஸ் !
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:15 pm

» நம்பிக்கை துரோகம்!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:15 pm

» எந்த ஒரு கஷ்டமான வேலையையும் ஒரு புன்னகை எளிதாக்கிவிடும்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 3:58 pm

» அறிமுகம்
by ஆதிரன் Yesterday at 3:54 pm

» ஸ்மாா்ட் செல்லிடப்பேசியால் அச்சுறுத்தல்: 'சிம் ஸ்வப்' மோசடி மூலம் பல கோடிகள் கபளீகரம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 3:53 pm

» புத்தகம் வேண்டும்
by ஆதிரன் Yesterday at 2:59 pm

» வேலன்:-விதவிதமான ஒலிகளில் அலாரம் செட் செய்திட-weesy free alarm clock
by velang Yesterday at 12:22 pm

» சென்னையில் கனமழை !
by krishnaamma Yesterday at 11:24 am

» முதல்-அமைச்சர் ஆவோம் என்று எடப்பாடி பழனிசாமி கனவில் கூட நினைத்திருக்க மாட்டார் ரஜினிகாந்த் பரபரப்பு பேச்சு
by krishnaamma Yesterday at 11:18 am

» திரு அய்யாசாமி ராம் 50000 பதிவுகள் வாழ்த்தலாம்.
by ayyasamy ram Wed Nov 20, 2019 9:52 pm

» ராத்திரி அது வந்துச்சா.. லபக்கென பிடிச்சுட்டேன்..
by ராஜா Wed Nov 20, 2019 9:16 pm

» கின்னஸ் கில்லாடிகள்!
by T.N.Balasubramanian Wed Nov 20, 2019 9:13 pm

» அனுமதி கிடைக்குமா
by krishnaamma Wed Nov 20, 2019 8:53 pm

» தீராத கஷ்டத்தை தீர்க்கும் சக்திமிகு எளிமையான பரிகாரம் !
by krishnaamma Wed Nov 20, 2019 8:51 pm

» முக்கீரை துவையல் & முளைக்கீரை மசியல்- மணத்தக்காளி குழம்பு
by krishnaamma Wed Nov 20, 2019 8:16 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by krishnaamma Wed Nov 20, 2019 8:01 pm

» கறிவேப்பிலை தொக்கு
by krishnaamma Wed Nov 20, 2019 7:53 pm

» கேட்டு ரசித்த திரைப்பட பாடல் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Nov 20, 2019 5:03 pm

» நாவல்கள் வேண்டும்
by saravanapriyaprakash Wed Nov 20, 2019 3:33 pm

» குட் நியூஸ் படத்தின் விளம்பரதார நிகழ்வு
by ayyasamy ram Wed Nov 20, 2019 2:32 pm

» அடுத்த தேர்தல்ல ‘மிக்ஸிங்’ கிடையாது. ‘ராவா’த்தான் நிற்போம்…!!
by ayyasamy ram Wed Nov 20, 2019 2:02 pm

» தலைவருக்கு, நெஞ்சு வலி வந்த மாதிரி நடிக்க ‘டைம்’ கொடுங்க…!!
by ayyasamy ram Wed Nov 20, 2019 2:01 pm

» செல்போனை ஒட்டுக் கேட்கிறாங்கன்னு எப்படி சொல்றீங்க?
by ayyasamy ram Wed Nov 20, 2019 2:00 pm

» புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே!
by ayyasamy ram Wed Nov 20, 2019 1:30 pm

» நிதானமாக செய்யும் செயல்களில் பொறுமையாக வெற்றி கிடைக்கும் ..!
by ayyasamy ram Wed Nov 20, 2019 12:09 pm

» தெரிந்து கொள்வோம் - பொது அறிவு தகவல்
by ayyasamy ram Wed Nov 20, 2019 11:30 am

» அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பில்லை - வடகொரியா திட்டவட்டம்
by ayyasamy ram Wed Nov 20, 2019 7:46 am

» டேவிட் ஆட்டன்பரோவுக்கு ‘இந்திரா காந்தி அமைதி விருது’
by ayyasamy ram Wed Nov 20, 2019 7:41 am

» வேலன்:-சிஸ்டம் கிளினர்.-System Cleaner
by velang Wed Nov 20, 2019 7:41 am

» விமானத்தில் டெல்லி செல்லும் பயணிகளுக்கு முகக்கவசம் - ‘ஏர் ஏசியா’ நிறுவனம் அறிவிப்பு
by ayyasamy ram Wed Nov 20, 2019 7:38 am

» இந்த வாரம் வெளியாகவுள்ள ஐந்து தமிழ்ப் படங்கள்
by ayyasamy ram Wed Nov 20, 2019 2:56 am

» மூத்த நடிகரும், கதாசிரியருமான ஸ்ரீனிவாசன் மருத்துவமனையில் அனுமதி
by ayyasamy ram Wed Nov 20, 2019 2:22 am

» இருட்டு, ஆயிரம் ஜென்மங்கள்திரைக்கு வரும் 2 பேய் படங்கள்
by ayyasamy ram Wed Nov 20, 2019 2:20 am

» அன்ன தானத்தையும் எவ்வித தம்பட்டம் இல்லாமல் அமைதியாக செய்ய வேண்டும்.
by ayyasamy ram Wed Nov 20, 2019 2:15 am

» இந்தியர்களை குறி வைக்கும் நோய்: இன்று உலக சி.ஓ.பி.டி., தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2019 2:13 am

» மேயர்: நேரடி தேர்தல் இல்லை; அமைச்சரவை கூட்டத்தில் முடிவு?
by ayyasamy ram Wed Nov 20, 2019 2:02 am

» பர்சை ‛பதம் பார்க்கப்போகுது' மொபைல் கட்டணம்
by ayyasamy ram Wed Nov 20, 2019 2:00 am

» '' லஞ்சம் வாங்காதவன்'': அதிகாரி வைத்த அறிவிப்பு பலகை
by ayyasamy ram Wed Nov 20, 2019 1:56 am

» போலி விமான பைலட் கைது
by ayyasamy ram Wed Nov 20, 2019 1:54 am

» ஸ்ரீ பத்ரி நாராயணனின் லீலை !
by krishnaamma Tue Nov 19, 2019 9:39 pm

Admins Online

தெரிஞ்சதும் தெரியாததும்

best தெரிஞ்சதும் தெரியாததும்

Post by heezulia on Sat Dec 16, 2017 6:47 pm

First topic message reminder :

16.12.2017

'தெரிஞ்சதும் தெரியாததும்' - ஏன் இந்த தலைப்புன்னு நெனச்சாலும் நெனப்பீங்க. நான் சொல்ற விஷயங்கள் எதுவும் எனக்கு தெரியாதது போல ஒரு சிலருக்கு தெரியாம இருக்கலாம். மத்தவங்களுக்கு தெரிஞ்சிருக்கலாம். அதுதான் 'உங்களுக்கு தெரிந்ததும் எனக்கு தெரியாததும்'.

சந்திரபாபு பாட்டுக்களை நாம் எல்லாரும் கேட்டிருக்கோம்ல ? நல்லாவே பாடியிருப்பார். சரி, ஜேசுதாஸ் எப்படி? அவரும் நல்ல ஒரு பாடகர்தான். ஆனா ............. பறக்கும் பாவை படத்துல சந்திரபாபுக்காக ஜேசுதாஸ் ஒரு பாட்டு பாடியிருக்கார்.  அது என்ன பாட்டுன்னு சொல்லுங்க பார்ப்போம். சரி................, ஜேசுதாசுக்கு சந்திரபாபு பாடியிருக்காரா?

எம்.ஜி.ஆருக்கு கலங்கரை விளக்கத்தில பஞ்சு அருணாச்சலம் ஒரு பாட்டு எழுதியிருக்காராம். அது என்ன பா.........................ட்டு?

உரிமைக் குரல் [1974] அப்டீன்னு ஒரு படம் இருக்குல்ல. அதுல "விழியே கதை எழுது" ன்னு ஒரு பாட்டு இருக்குல்ல. இந்த பாட்ட எழுதியது யாருன்னு தெரியும்னு நெனக்கிறேன். கண்ணதாசன்தானாங்க. ஆனா, பாட்டு புத்தகத்துல, ஆடியோ கேசட்டுல, அதுமட்டுமில்லீங்க, படத்தோட டைட்டில்ல கூட வாலின்னு போட்டிருந்ததாமே. அந்த சமயத்தில எம்.ஜி.ஆருக்கும், கண்ணதாசனுக்கும் என்னவோ லடாயாம். அதனால ஸ்ரீதர் [உரிமைக்குரல் எம்.ஜி.ஆர வச்சு எடுத்த முதல் படமாம்] எம்.ஜி.ஆருக்கு தெரியாம கண்ணதாசன்கிட்டே பாட்டை எழுதி வாங்கிட்டு, வாலி பேர போட்டுட்டாராம். இந்த சமாச்சாரம் எப்படியோ எம்.ஜி.ஆருக்கு தெரிய வந்துச்சாம். வருத்தப்பட்டாராம் எம்.ஜி.ஆர்.

Baby Heerajan  மீண்டும் சந்திப்போம்  
heezulia
heezulia
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 610
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 193

Back to top Go down


best Re: தெரிஞ்சதும் தெரியாததும்

Post by heezulia on Fri Aug 03, 2018 1:38 pm

03.08.2018

தமிழ் சினிமா உலகத்ல ஓஹோன்னு இருந்தவங்கள்ல ஒரு சிலர், பின்னால ரொம்ப கஷ்டப்பட்டாங்க. கஷ்டப்பட்டாங்கன்னா, அவங்களுக்கு வந்த புகழ் மட்டும்தான் மிஞ்சி இருந்துச்சு. பணம் லேது, இல்ல, நோ பணம். இவ்ளோ புகழை கொடுத்த அதிர்ஷ்டம், மறுபடியும் எப்போ வரும்னு, வானத்தை எட்டி எட்டி பார்க்கும் விவசாயியை போல, எதிர்பார்த்துட்டு இருந்தாங்க. ஒரு நம்பிக்கைதான்.

எல்லாரும் வாழ்றது அந்த ஒரு நம்பிக்கையை புடிச்சிட்டுதானே.

இதுல வேற, எப்ப நல்ல காலம் வரும்னு ஜோசியர்களை கேட்டுட்டு இருந்தாங்க. அப்டி ஜோசியத்தை நம்பி மோசம் போன சில சினிமாக்காரங்க.  

இப்டிபட்டவங்கள்ல ஒருத்தர்தான் BR பந்துலு. நடிகர் திலகத்தை வச்சு கப்பலோட்டிய தமிழன், கர்ணன், வீரபாண்டிய கட்டபொம்மன், மக்கள் திலகத்தை வச்சு ஆயிரத்தில் ஒருவன் மாதிரி படங்களை டைரக்ட் செஞ்சவர்.

கப்பலோட்டிய தமிழன் படம் ரொம்ப நல்ல படம்னு ஜனங்கள் சொன்னாங்க. ஆனா போட்ட பணம் வரலியாம்ல. திண்..........................டாடி போய்ட்டாராம் பந்துலு.  அனாவசியமான செலவுகளை குறைக்கிற அளவுக்கு வந்துட்டாராம்.

சரி, எப்படியாவது பழைய நிலைக்கு வரணுமேன்னு நெனச்சார். MGRஐ வச்சு ஒரு படம் எடுக்கலாமேன்னு யோசிச்சார். மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் படம் எடுக்க முடிவு செஞ்சார். MGRஐ போய் பார்த்து, விஷயத்தை சொல்லி, அட்வான்ஸ் குடுத்துட்டார். திரைக்கதையும் எழுத ஆரம்பிச்சுட்டார்.

எல்லாம் சரி, படத்தை எடுக்க பணம்? அதுக்கு என்ன செய்றது? படத்தை தயாரிப்பதுக்கான பணத்தை திரட்ட முடியாம இருந்துச்சாம்.

Friend ஒருத்தர் ஒரு ஜோஸியர்ட்ட கூட்டிட்டு போனாராம். அந்த ஜோஸியர் பந்துலுவோட ஒலைசுவடியை பாத்துட்டு சொன்னார்,

“உங்க எதிர்காலம் ப்ரகா.......................சமா இருக்கும். நீங்க எடுக்கப் போற படத்தோ.........................டு, உங்க கஷ்டமெல்லாம் தீர்ந்துடும்”

ஜோஸியர் சொன்னத கேட்ட பந்துலுவுக்கு படு குஷி.

படத்துக்கான ட்ரெஸ் வாங்க பெங்களூருக்கு போயிருக்கார். அந்த பாத்ரூம்ல வழுக்கி விழுந்து இறந்து போய்ட்டார்.  

இவர் இப்டீன்னா, இன்னொருத்தர், வித்துவான் வே. லட்சுமணன், கவிஞர், எழுத்தாளர். இவர் ஜோசியரும் கூடவாம். இவரும், மணியனும் சேர்ந்து நல்ல நல்ல படங்களை குடுத்திருக்காங்களாம். அதுல ஒண்ணு இதயவீணை, MGR நடிச்சது. ஓஹோ.......................ன்னு ஓடின படம்.

அதோடு விட்டிருக்கலாம்ல. ரெண்டு பேரும் சேந்து, இதய வீணை படத்தை, ஹிந்தில எடுக்க நெனச்சாங்களாம்.

இவங்களுக்கு ஏன் இந்த வேண்டாத வேல?

எடுத்தாங்க. இதய வீணை படத்தை ஹிந்தியில எடுத்தாங்க. தர்மேந்திரா ஹீரோ. செலவு எவ்ளோங்க்றீங்க. ஒரு கோ...........................டி ருவா. என்ன ப்ரயோஜனம்? எல்லாமே போச்சு. படம் புஸ்வானம் ஆயிருச்சு.

திருநெல்வேலிக்கே அல்வாவான்னு சொல்வாங்க. ஒரு ஜோஸ்யருக்கே, வித்வான் வே லட்சுமனந்தான், இந்த நெலம. இதை பத்தி அவர்ட்ட கேட்டதுக்கு அவர் சொன்னார்,

“ஒருத்தருக்கு கெட்ட நேரம் வந்தா, எந்த கொம்பனாலயும் ஒண்ணும் செய்ய முடியாது”ன்னு ஒரு சமாளிஃபிகேஷன்.

இன்னொருத்தர், AK வேலன். இவர் எழுத்தாளர், புத்தகங்கள், சினிமாவுக்கு வசனங்கள் எழுதி பணம் சம்பாதிச்சார். புலவர். பணம் கையில் சேந்துச்சு. சும்மா இருக்க முடியாம, அருணாசலம் ஸ்டூடியோவை உருவாக்கினார். இங்க பல சினிமா படங்கள் தயாராச்சு. விதி அவரை சும்மா விடலியே. கஷ்டம் வந்துச்சு. இவருக்கும் ஒரு ஜோஸியர் சொன்னார், தெனே.........................மும் புள்ளையார கும்டணுமாம். கஷ்டமெல்லாம் போயிருமாம்.

ஜோஸியர் சொன்ன மாதிரி, புள்ளையார கும்டுட்டு இருக்க வேண்டியதுதானே. ஒரு யானைய வாங்கி போட்டார். அதை தெனமும் கும்ட்டார். யானைக்கு தீனி போடணும்ல. போட்டார், பாப்பராயிட்டார். ஒரு கட்டத்தில அதுக்கு சாப்பாடு போட முடியாம போச்சு. யானைக்கு கோபம் வந்து, வர்றவங்க, போறவங்கள தொரத்த ஆரம்பிச்சுது.

என்னான்னு சொல்றது.

- ரமணி

Heezulia
heezulia
heezulia
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 610
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 193

Back to top Go down

best Re: தெரிஞ்சதும் தெரியாததும்

Post by SK on Fri Aug 03, 2018 1:45 pm

என்னான்னு சொல்றது. 

ஒன்னும் சொல்ல முடியாது  பைத்தியம் பைத்தியம்


SK
SK
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8068
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1548

Back to top Go down

best Re: தெரிஞ்சதும் தெரியாததும்

Post by heezulia on Fri Aug 03, 2018 3:46 pm

03.08.2018

அட, செந்தில், நம்ம ரெண்டு பேருக்கும் எவ்ளோ.................. ஒற்றுமை பாருங்க.

நான் "என்னான்னு சொல்றது" ன்னு எழுதினதுக்கப்புறம், இப்டித்தான், நீங்க எழுதினதை "ஒண்........................ணும் சொல்றதுகில்ல" ன்னு எழுதணும்னுதான் நெனச்சேன். நான் எழுதாம விட்டத, நீங்க எழுதிட்டீங்க பாருங்க. நான் நெனச்சத, உங்களுக்கு தெரிஞ்சிருக்கே.

Heezulia
heezulia
heezulia
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 610
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 193

Back to top Go down

best Re: தெரிஞ்சதும் தெரியாததும்

Post by SK on Fri Aug 03, 2018 4:10 pm

அதான் டெலிபதி 

நம்ம பசுபதியோட தம்பி


SK
SK
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8068
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1548

Back to top Go down

best Re: தெரிஞ்சதும் தெரியாததும்

Post by சிவனாசான் on Fri Aug 03, 2018 7:41 pm

படிக்க காலம் போதல பொருமையும் இல்லை
என்னங்க புத்தகம் படிப்பதுபோல ஆர்வம்குரையுது.
இணையத்தில் படிப்பதுபோல் இல்லை.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4317
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1200

Back to top Go down

best Re: தெரிஞ்சதும் தெரியாததும்

Post by சிவனாசான் on Fri Aug 03, 2018 7:45 pm

ஈகரையில் உண்மை முகங்களை பதிந்தால் மிக
சிறப்பாய் அமையும் இருக்கும் எனலாம். பொய்
தோற்றம் நிலைப்தில்லை. உண்மையைச் சொல்.
உழைத்து உண். உத்தமனாவாய்.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4317
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1200

Back to top Go down

best Re: தெரிஞ்சதும் தெரியாததும்

Post by heezulia on Thu Jun 20, 2019 8:26 pm

20.06.2019
தெரிஞ்சதும் தெரியாததும் 

ஏ.வி எம்.  சாதனைகள் 
தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 17 0?ui=2&ik=25ecfa0c99&attid=0   தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 17 0?ui=2&ik=25ecfa0c99&attid=0

ஏ.வி.எம்.  நிறுவனம்  இந்திய  சினிமாவில  70 வருஷத்துக்கு மேலா நெலச்சு நிக்குது. 300 படங்களுக்கு மேலா தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்,  ஹிந்தி, பெங்காலினு பல மொழிகள்ல  படங்களை தயாரிச்சுது. இதே ஒரு பெரிய சாதனை, இல்லியா?  
விருதுகள் :  தங்க மெடல், சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது, சிறந்த திரைப்படத்துக்கான மத்திய அரசின் சான்றிதழ், வெள்ளி பதக்கம், சிறந்த பாடகிக்கான தேசிய விருது, சிறந்த ஜாலியான படத்துக்கான மத்திய அரசின்  தங்க பதக்கம், ஒரே படத்துக்கு நான்கு தேசிய விருது.
பின்னணி குரல் குடுக்கிறது, பின்னணி பாட்டு பாடுறதுன்னு இந்த ரெண்டையும்  தமிழ்  சினிமாவுக்கு கொண்டு வந்தது ஏ.வி.எம்.நிறுவனம்தான். 
ஏகப்பட்ட நட்சத்திரங்கள், டைரடக்கர்கள்,  இந்திய திரைக்கு அறிமுகப்படுத்தியதும் இந்த நிறுவனம். 
இப்டி பல வகையில சினிமாவில சாதனை செஞ்சுட்டு இருந்த ஏ.வி.எம். நிறுவனம் சின்னத்திரையையும் விட்டு வைக்கல. பல தொடர்களை தயாரிச்சுது. 
AVM நிறுவனம்   சினிமாவுக்கு செஞ்ச தொண்டை பாராட்டி, மத்திய அரசு 2006ல ஸ்டாம்ப்        வெளியிட்டுச்சு.  

தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 17 0?ui=2&ik=25ecfa0c99&attid=0   

பேபி தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 17 Emoji_u1f478தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 17 Emoji_u1f478தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 17 Emoji_u1f478  
 
heezulia
heezulia
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 610
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 193

Back to top Go down

best Re: தெரிஞ்சதும் தெரியாததும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை