உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ஒரே அடியாக அதிகரிப்பு
by ayyasamy ram Today at 9:04 pm

» “இது நிச்சயம் தோனியின் நாய் தான்” ... கிரிக்கெட் விளையாடும் நாய் ...
by ayyasamy ram Today at 9:01 pm

» நான் ...நானாக இருப்பேன்.
by ayyasamy ram Today at 8:56 pm

» மகளிர் டி20 உலக கோப்பை: வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி
by ayyasamy ram Today at 8:49 pm

» நித்யானந்தாவுக்கு கைது 'வாரன்ட்'
by T.N.Balasubramanian Today at 8:13 pm

» நீ . . .நீயாக இரு !
by T.N.Balasubramanian Today at 7:39 pm

» உலகில் அதிகம் வரி விதிக்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது ; டிரம்ப் விமர்சனம்
by T.N.Balasubramanian Today at 7:30 pm

» ஷாக் ஆகாதீங்க.. வாக்கிங் போனால் உடல் எடை குறையாதாம்!
by T.N.Balasubramanian Today at 7:14 pm

» நாவல்கள் வேண்டும்
by mani2871967 Today at 7:08 pm

» இந்தியன் 2 படப்பிடிப்பில் பணியாற்றிய கிரேன் ஆபரேட்டர் ராஜன் கைது
by T.N.Balasubramanian Today at 7:01 pm

» வருங்கால மங்கையர் திலகங்கள்
by T.N.Balasubramanian Today at 6:53 pm

» ஹாலிவுட் கதாநாயகர்கள் : சோபியா லோரன்
by ayyasamy ram Today at 5:16 pm

» 10,11,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: மாணவிகளை சோதனை செய்ய தடை
by ayyasamy ram Today at 5:04 pm

» இடத்தை காலி செய்யுங்கள்
by சக்தி18 Today at 4:11 pm

» அப்துல் கலாம் கவிதைகள்
by ayyasamy ram Today at 3:53 pm

» வேலன்:-இலவச மீடியா ப்ளேயர்-Aiseesoft Free Media Player
by மாணிக்கம் நடேசன் Today at 10:16 am

» மகா சிவராத்திரியன்று தரிசிக்க வேண்டிய சிதம்பரம திருக்கோயில் மற்றும் சுற்றியுள்ள சிவாலயங்கள்
by ayyasamy ram Today at 6:47 am

» நடப்பதெல்லாம் நன்மைக்கே…!
by ayyasamy ram Today at 6:46 am

» அழகான வரிகள் பத்து.
by ayyasamy ram Today at 6:44 am

» இதயத்தை தொடும் தாய்மொழி!இன்று சர்வதேச தாய்மொழி தினம்
by ayyasamy ram Today at 6:13 am

» 16 நாட்டு ராணுவத்தில் உயர் பதவியில் பெண்கள்
by ayyasamy ram Today at 6:05 am

» அமித் ஷாவின் அருணாச்சல் பயணம்; சீனா 'பூச்சாண்டி'
by ayyasamy ram Today at 6:02 am

» மெகா காமெடிடா சாமி...!
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» சிவன் என்ற சீவனை வழிபடுங்கள்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm

» ஒப்பிலியப்பன் திருக்கோவில், 108 திவ்ய தேசங்களில் 13-வது திவ்ய தேசமாகும்.
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» கடலுக்குள் ஒரு சிவன் கோயில்!
by T.N.Balasubramanian Yesterday at 8:51 pm

» இஷ்ட தெய்வத்திடம் சரணாகதி
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» கமல் படப்பிடிப்பில் விபத்து; 3 பேர் பலி
by ayyasamy ram Yesterday at 8:12 pm

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:58 pm

» சடாரி சாற்றுவதில் உள்ள தத்துவம்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» உலகின் 100 சிறந்த பல்கலைகளில் 11 இந்திய நிறுவனங்கள்
by சக்தி18 Yesterday at 7:24 pm

» ராணுவ வீரரின் வீடு என தெரியாமல் பூட்டை உடைத்துவிட்டேன் - சுவரில் மன்னிப்பு வாசகம் எழுதிய திருடன்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» யாழ்ப்பாணத்துக்கு புதுச்சேரியிலிருந்து ஆரம்பமாகும் கப்பல் போக்குவரத்து!
by T.N.Balasubramanian Yesterday at 7:00 pm

» *ஒரு குட்டி கதை
by சக்தி18 Yesterday at 6:50 pm

» வில்லி - ஒரு பக்க கதை
by ஜாஹீதாபானு Yesterday at 5:36 pm

» மஞ்சள் நிற கோடு
by ஜாஹீதாபானு Yesterday at 5:34 pm

» விளக்கேற்றிய வீடு வீண் போகாது.
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:46 pm

» மாப்பிள என்ன வேலை பார்க்கிறாரு..?
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:43 pm

» அமெரிக்க நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக தமிழர்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:40 pm

» சீனாவில் கொரோனா வைரஸ் தொற்றுள்ள பணத்தை எரிக்க முடிவு
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:39 pm

» திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:35 pm

» சண்டை போட்டுக்கிட்டு இருந்ததை பாரத்து கணவன்,மனைவின்னு நம்பிட்டாங்க!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:34 pm

» சுய அறிமுகம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:33 pm

» விலங்குகளை அறிந்து படம் எடுங்க...!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:30 pm

» அக்கறை - ஒரு பக்க கதை
by ஜாஹீதாபானு Yesterday at 4:27 pm

» தேன் துளியாய் காதில் பாயும் பி.பி ஸ்ரீனிவாஸ் மற்றும் பி. சுசிலா இருவரின் முத்தான பாடல்கள்.....
by ayyasamy ram Yesterday at 2:03 pm

» உழைப்பே உயர்வு
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» பாட்டு வந்ததும் விதை முளைத்தது
by ayyasamy ram Yesterday at 1:11 pm

» வில்வம் கீர் - குமுதம்
by ayyasamy ram Yesterday at 1:05 pm

Admins Online

தெரிஞ்சதும் தெரியாததும்

best தெரிஞ்சதும் தெரியாததும்

Post by heezulia on Sat Dec 16, 2017 6:47 pm

First topic message reminder :

16.12.2017

'தெரிஞ்சதும் தெரியாததும்' - ஏன் இந்த தலைப்புன்னு நெனச்சாலும் நெனப்பீங்க. நான் சொல்ற விஷயங்கள் எதுவும் எனக்கு தெரியாதது போல ஒரு சிலருக்கு தெரியாம இருக்கலாம். மத்தவங்களுக்கு தெரிஞ்சிருக்கலாம். அதுதான் 'உங்களுக்கு தெரிந்ததும் எனக்கு தெரியாததும்'.

சந்திரபாபு பாட்டுக்களை நாம் எல்லாரும் கேட்டிருக்கோம்ல ? நல்லாவே பாடியிருப்பார். சரி, ஜேசுதாஸ் எப்படி? அவரும் நல்ல ஒரு பாடகர்தான். ஆனா ............. பறக்கும் பாவை படத்துல சந்திரபாபுக்காக ஜேசுதாஸ் ஒரு பாட்டு பாடியிருக்கார்.  அது என்ன பாட்டுன்னு சொல்லுங்க பார்ப்போம். சரி................, ஜேசுதாசுக்கு சந்திரபாபு பாடியிருக்காரா?

எம்.ஜி.ஆருக்கு கலங்கரை விளக்கத்தில பஞ்சு அருணாச்சலம் ஒரு பாட்டு எழுதியிருக்காராம். அது என்ன பா.........................ட்டு?

உரிமைக் குரல் [1974] அப்டீன்னு ஒரு படம் இருக்குல்ல. அதுல "விழியே கதை எழுது" ன்னு ஒரு பாட்டு இருக்குல்ல. இந்த பாட்ட எழுதியது யாருன்னு தெரியும்னு நெனக்கிறேன். கண்ணதாசன்தானாங்க. ஆனா, பாட்டு புத்தகத்துல, ஆடியோ கேசட்டுல, அதுமட்டுமில்லீங்க, படத்தோட டைட்டில்ல கூட வாலின்னு போட்டிருந்ததாமே. அந்த சமயத்தில எம்.ஜி.ஆருக்கும், கண்ணதாசனுக்கும் என்னவோ லடாயாம். அதனால ஸ்ரீதர் [உரிமைக்குரல் எம்.ஜி.ஆர வச்சு எடுத்த முதல் படமாம்] எம்.ஜி.ஆருக்கு தெரியாம கண்ணதாசன்கிட்டே பாட்டை எழுதி வாங்கிட்டு, வாலி பேர போட்டுட்டாராம். இந்த சமாச்சாரம் எப்படியோ எம்.ஜி.ஆருக்கு தெரிய வந்துச்சாம். வருத்தப்பட்டாராம் எம்.ஜி.ஆர்.

Baby Heerajan  மீண்டும் சந்திப்போம்  
heezulia
heezulia
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 610
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 193

Back to top Go down


best Re: தெரிஞ்சதும் தெரியாததும்

Post by heezulia on Sat Mar 03, 2018 3:37 pm

03.03.2018

SP கோதண்டபாணின்னு ஒரு தெலுங்கு ம்யூசிக் டைரக்டர். SPB பாடிய பாட்டுக்களை கேட்டிருக்கார். பாட்டு புடிச்சிருந்துச்சு. இவர் SPBட்ட சினிமாவில் பாட சொன்னார். அவரே தயாரிப்பாளர்கள்ட்ட SPBயை கூட்டிட்டும் போனார். SPB அவங்கள்ட்ட பாடி காட்டினார். அவங்க என்னவோ ஏதோ பாட்டு கச்சேரிய பாக்க வந்தது போல, பாட்டை கேட்டுட்டு, ரசிச்சிட்டு, ஒண்ணும் சொல்லாம இருந்துட்டாங்க. யாரும் அவருக்கு வாய்ப்பு கொடுக்க தயாரா இல்ல. 1966ல ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மரியாதை ராமண்ணாங்க்ற ஒரு தெலுங்கு படம். இதுக்கு கோதண்டபாணி ம்யூசிக். அவரே அந்த படத்துக்கு SPBக்கு சான்ஸ் கொடுத்தார்.

சென்னையில SPB படிச்சுட்டு இருக்குபோது, தியாகராஜா காலேஜ்ல ஒரு லை ம்யூசிக் காம்ப்பட்டிஷன் நடந்துச்சு. அதுல SPB கலந்துகிட்டார். அங்கதான், அப்பதான், SPBக்கு  அதிர்ஷ்டக்காத்து அடிக்க ஆரம்பிச்சுருச்சு. பரணின்னு ஒரு விளம்பர டிசைனர். அவர் அந்த காம்ப்பட்டிஷனுக்கு வந்திருந்தார். இல்ல இல்ல, பாட இல்ல. பாக்க. அங்க SPBக்கும், பரணிக்கும் பழக்கம் ஏற்பட்டுச்சு. அப்படியே.............. நல்ல நண்பர்கள் ஆயிட்டாங்க. அவர் மூலமாத்தான் டைரக்டர் ஸ்ரீதரின் பழக்கம் SPBக்கு ஏற்பட்டுச்சாம். ஆக................, சினிமாவுக்கு SPB வந்ததுக்கு முதல்................ காரணம் டிசைனர் பரணிதான் காரணம்னு வச்சுக்கலாமா?- பரணி

Heezulia  மீண்டும் சந்திப்போம்  
heezulia
heezulia
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 610
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 193

Back to top Go down

best Re: தெரிஞ்சதும் தெரியாததும்

Post by heezulia on Sat Mar 03, 2018 4:52 pm

03.03.2018 

ஒரு சின்ன பையன். அவன் படிக்கிற ஸ்கூல்ல எந்த பாட்டு போட்டி நடந்தாலும் இவன்தான் முதல் பரிசு வாங்குவான். அவன் பாட்டுன்னா எல்லாருக்கும் ரொம்ப புடிக்கும். அவன் பட்டால எல்லரையும் அப்டி மயக்கி வச்சிருந்தான். தண்ணில்லாம் தெளிச்சு எழுப்ப வேணாம். ஏன்னா, அவங்க மனசிலதான் மயங்கி இருந்தாங்க. பிற்காலத்தில அவன் பெரிய பின்னணி பாடகராக வருவான்னு அப்போ அவனுக்கு தெரியாது. SP பாலசுப்பிரமணியன்தான்.

தெலுங்கு சங்கம் ஒரு பாட்டு போட்டி நடத்துச்சாம். அதுல SPB பாடினார். அதில அவர் தொடர்ந்து ரெண்டு தடவை முதல் பரிசு வாங்கினார். மூணாவது தடவையும் அவர் முதல் பரிசு வாங்கிட்டா, அவருக்கு பெரிய வெற்றிக்கோப்பை கிடைக்கிற நிலை. அவருடைய ரசிகர்கள் அந்த கோப்பை அவருக்குத்தான் கிடைக்கும்னு நம்பினாங்க, எதிர்பார்த்தாங்க.

ஒருத்தர் முன்னேறினா, அதை பொறுக்காதவங்க கண்டிப்பா இருந்தாகணுமே. அந்த பொறாமை புடிச்சவங்க வேற யா..............ருமில்ல. விழா நடத்தியவங்களே..........தான். விழா நிர்வாகிகளுக்கு, அந்த வெற்றிக்கோப்பையை இழக்க இஷ்டமில்ல. அதனால அவங்க என்ன செஞ்சாங்க..........? SPBக்கு ரெண்டாவது பரிசை கொடுத்துட்டாங்க. என்னாமாதிரி சதி வேல செய்றாங்க பாருங்க.

SPBக்கு லக் இருக்கத்தான் செஞ்சுது. அன்னிக்கி பா...............த்து, பாட்டு போட்டிக்கு விழாவின் தலைய தாங்க வந்தவங்க யார் தெரிமோ? உங்களுக்கு எப்டீ தெரியும். நீங்கதான் நான் படிச்சத படிக்கலியே! சொல்லிறவா, சொல்லிறவா? ஜானகி அம்மையார்தான்.

பின்னணி பாடகி S. ஜானகி. “இன்னிக்கி பாடினதில பாலசுப்பிரமணியன் நல்லா பாடியிருக்கார். அதனால அவருக்குத்தான் முதல் பரிசை கொடுக்கணும்”னு ஜானகி சொல்லிட்டார். பாட்டு போட்டி குழுவால, இதை object பண்ண தைரியம் வரல. ஜானகி சொன்னதுக்கு அப்பீல் இல்லாம் போச்சு. சரீன்னுட்டு, SPBக்கு முதல் பரிசை அனௌன்ஸ் செஞ்சு, கோப்பையையும் அவருக்கு கொடுத்துட்டாங்க. பாட்டு போட்டி குழுவின் எண்ணம், ஜானகியால தவிடு பொடியாச்சு. பின்னால ஜானகியும், SPBயும் சேர்ந்து ஏகப்பட்ட டூயட் பாட்டு பாட சான்ஸ் கிடைக்கும்னு ரெண்டுபேருமே நெனச்சுக்கூட பார்த்திருக்க முடியாதுல்ல. 

- பரணி 
Heezulia 
heezulia
heezulia
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 610
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 193

Back to top Go down

best Re: தெரிஞ்சதும் தெரியாததும்

Post by மூர்த்தி on Sat Mar 03, 2018 8:48 pm

Emiyee Vinta Moham! முதல் பாடல் தெலுகு
Kanasido Nanasido இரண்டாவது கன்னடம்
இயற்கை என்னும் ….முதல் தமிழ் பாடல் 1969. அவர் பாடிய முதல் தமிழ் பாடல் எம்.எஸ்.வி இசையில் , அத்தானோடு இப்படியிருந்து ௭த்தனை நாளாச்சு ..என்ற பாடல்.ஆனாலும் படம் வெளிவரவில்லை. எஸ்பிபி முறையாக இசை கற்றுக் கொள்ளவில்லை. கேள்வி ஞானம் தான். அவர் சான்ஸ் கேட்டு எம்.எஸ்.வி. யிடம் சென்ற போது தமிழ் உச்சரிப்பு சரியில்லை கற்றுக் கொண்டு வா எனத் துரத்தி விட்டாராம் எம் எஸ் வி. கலைஞர் தொலைக்காட்சியில் அவரே சொன்னது.
நன்றி-இணையம்.

சொல்ல மறந்து விட்டேன். வழக்கம் போல் பதிவு ஜோர் தான்.

தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 15 7-ways-you-know-youre-doing-a-great-job
மூர்த்தி
மூர்த்தி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1046
இணைந்தது : 07/06/2016
மதிப்பீடுகள் : 506

Back to top Go down

best Re: தெரிஞ்சதும் தெரியாததும்

Post by heezulia on Sat Mar 03, 2018 9:40 pm

03.03.2018

SPBஐ பற்றி நீங்க எழுதியிருக்கிற தகவலை நானும் படிச்சிருக்கேன். 


ஆ...........ங் ஞாபகம் வந்திருச்சு. 


தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 15 9k=
Heezulia 
heezulia
heezulia
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 610
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 193

Back to top Go down

best Re: தெரிஞ்சதும் தெரியாததும்

Post by heezulia on Tue Mar 06, 2018 1:35 pm

06.03.2018

ஸ்ரீதர்  SPBயை  கூப்ட்டனுப்பினார். SPB யும் போனார். அங்க MSV & கோவும் இருந்தாங்க. அதாங்க, அவரோட ம்யூசிக் பார்ட்டி. அந்த பார்ட்டில எத்தன பேர் இருந்தாங்கன்னு நினைக்கிறீங்க. அம்..........பது பேர். இந்த கூட்டத்தை பார்த்ததும் SPBக்கு ஒரு கலக்கம். இதுக்கு முன்னால அப்படி ஒரு பெரிய இசைக்குழுவை பார்த்திருக்கமாட்டார்ல. அதான். ஸ்ரீதர் SPBயை MSVக்கு இன்ட்ரட்யூஸ் செஞ்சு வச்சார்.

MSV, SPB யை ஒரு பாட்டு பாட சொன்னார். அப்போ SPBக்கு தமிழ் வாசிக்க  தெரியாது போலியே. அதனால அவர் ஒரு ஹிந்தி பாட்டை பாடினார். தமிழ் பாட்டு பாட  சொல்லியிருக்கார், MSV. தமிழ் பாட்டு இல்லேன்னு SPB சொல்லியிருக்கார்.

காதலிக்க நேரமில்லை படத்தில ஒரு பாட்டு இருக்கே, “நாளாம் நாளாம் திருநாளாம்”ன்னு ஒரு பாட்டு. MSVயோட பாட்டுதான். அந்த பாட்டை SPBட்ட கொடுத்து பாட சொல்லியிருக்கார், MSV. ஆனா அவருக்குத்தான் தமிழ் வாசிக்க  தெரியாதுல்ல. அதனால அந்தப் பாட்டை தெலுங்கில எழுதி வச்சு பாடினார். MSVயும் அவர் பாடின பாட்டை கேட்டுட்டு, ஓரளவுக்கு திருப்தியானார். அது என்ன ஓரளவுக்குன்னு கேக்குறீங்களா? என்னது, கேக்கலியா? சரி நானே சொல்லிர்றேன்.  SPBயின் குரல் MSVக்கு புடிச்சிருந்துச்சு. ஆனா தமிழ் உச்சரிப்பு கொஞ்சம் புடிக்காம போச்சு. அதனால தமிழ் உச்சரிப்பை நல்ல கத்துகிட்டு வரசொல்லி அனுப்பிட்டார்.

SPBக்கு வருத்தம் ஒண்ணும் இல்லியாம். சான்ஸ் கிடைக்கலேன்னாலும், MSVக்கு அவருடைய குரல் புடிச்சிருந்துச்சே. உச்சரிப்புதானே, அதை சீக்கிரமாவே கத்துக்கலாம்னு ஒரு திருப்தி.

ஒரு வருஷமாச்சு. தற்செயலாக, அவங்க ரெண்டு பேரும் சந்திச்சுகிட்டாங்க. MSVக்கு SPBயை ஸ்ரீதர் ஆஃபிஸ்ல  பார்த்த ஞாபகம் வந்துச்சு. இவ்வளவு நாள் ஏன் சந்திக்க வரலேன்னு விசாரிச்சார். சரீன்னுட்டு, ‘ரம்பா’ன்னு ஒரு படத்துக்கு சான்ஸ் கொடுத்தார். ஆனால் அந்த படம் ரிலீஸ் ஆகல.

ஆனா, MSVக்கு SPBயின் குரல் ரொம்ப புடிச்சு போச்சு. அதனால அவர் இசையமைத்த சாந்தி நிலையம் படத்துல சான்ஸ் கொடுத்தார். அப்புறம், அடிமைப்பெண், அப்டியே...................... அப்புறம் என்ன ரவிச்சந்திரன், ஜெயசங்கர், முத்துராமன்னு அவர் குரல் சூட் ஆச்சு.

இப்டித்தான் SPB பாட ஆரம்பிச்சார். இதுக்கு நடுவில, சில பாட்டுங்களுக்கு TMS கோஆப்பரேட் பண்ணாம இருந்து, அதனால அந்தப் பாட்டை SPB பாட, இதெல்லாம் எல்லாருக்கும் தெரிஞ்ச தகவல்கள்தான்.


- ரமணி

நான் இப்டி பழைய தகவல்கள் கொடுத்துட்டு இருக்கேன். ஆனா புது புது செய்திகள், அது சினிமான்னாலும், நாட்டு நடப்புன்னாலும் ஒவ்.........வொரு  செய்தியும், ஒவ்............வொரு தலைப்பில வருது. அதுதான் ஏன்னு தெரியல. 

சினிமா செய்திகள் 
சினிமா விமர்சனம் 
உள்நாட்டு  செய்திகள் 
வெளிநாட்டு செய்திகள் 
இதுல வராதாது  இதர செய்திகள்
 
இப்படி ஐந்தே................  தலைப்பில அனுப்பலாம்ல. இதை எழுதணும் எழுதணும்னு கொஞ்ச நா..............ளா நெனச்சுட்டு இருந்தேன். எனக்கு தோணுச்சு, எழுதிட்டேன்.


ஒரு வேளை ஒரு நாளைக்கு இத்தனை தலைப்பில போஸ்டிங் போடணும்னு ஏதாவது target இருக்கா?

Heezulia
heezulia
heezulia
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 610
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 193

Back to top Go down

best Re: தெரிஞ்சதும் தெரியாததும்

Post by SK on Tue Mar 06, 2018 3:24 pm

நீங்க உங்க போஸ்டிங்க்கு உங்களுக்கு பிடிச்சமாதிரி தலைப்பு வைக்கறீங்க அதே மாதிரி அவங்க போஸ்டிங்க்கு அவங்க தலைப்பு வைக்கறாங்கSK
SK
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8068
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1548

Back to top Go down

best Re: தெரிஞ்சதும் தெரியாததும்

Post by மூர்த்தி on Tue Mar 06, 2018 3:47 pm

எனக்குப்  புரியலையே .தலைப்பை சொல்கிறீர்களா அல்லது திரியை சொல்கிறீர்களா?தலைப்பு என்றால் வலை-வெப் -மொழியில் Index  page என்பார்கள். இதில் முதல் பக்கத்தில் இருக்கும் தலைப்புக்கள்  நட்பு,அறிவிப்புகள்,சினிமா,கவிதை..... வரும்.அந்த தலைப்புகளில் பதியப்படும் செய்திகள்  திரியின்  (தலைப்பு) கீழ் வருகிறது.
மன்னிக்கவும் புரியாததால் கேட்டேன்.

என்னைப் பொறுத்த  வரையில் போதாது எனக் கருதுகிறேன். தமிழுக்கு ஒரு தனியாக  தலைப்பை Index  இல் சேர்த்திருக்கலாம்.அட்மின் கவனிக்கலாம்.
மூர்த்தி
மூர்த்தி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1046
இணைந்தது : 07/06/2016
மதிப்பீடுகள் : 506

Back to top Go down

best Re: தெரிஞ்சதும் தெரியாததும்

Post by heezulia on Tue Mar 06, 2018 6:22 pm

06.03.2018

சரி. சொல்றேன். 

இப்ப............. நான் சினிமா பகுதியில, பழைய திரைப்படங்கள்னு தலைப்பு கொடுத்து, 27 பழைய படங்களையும், 11 வித்தியாசமான படங்களையும் அனுப்பி இருக்கேன்.  மொத்தம் 38 வருது. நான் பழைய திரைப்படங்கள்னு தலைப்பு கொடுக்காம, 38 சினிமாவை தனித்தனியாக அனுப்பினா நல்லவா இருக்கும்?  இப்ப, அந்த 38 சினிமாவும் ஒரே..... தலைப்புல அடங்கிர்துல்ல. 

அதே மாதிரி 'யாரு இவரு கண்டுபுடிங்க' தலைப்புல, இதுவரை 10 பேரை பற்றி அனுப்பி, அது யார்னு கேட்டிருக்கேன். அதை விட்டுட்டு, ஒவ்வொரு தடவையும், யாரு இவரு கண்டுபுடிங்க, யாரு இவரு கண்டுபுடிங்கன்னு  நான் அனுப்பியிருந்தா,  அது நல்லாவா இருக்கும்? ஒரே தலைப்புல 10 பேரும் அடங்கிட்டாங்க. இல்லியா? 

அதே மாதிரிதான் நான் அனுப்பின ஒவ்வொரு தலைப்பும். 

உதாரணத்துக்கு  இப்போ சினிமா பகுதியை எடுத்துக்கோங்க. 

1. வரலட்சுமிக்கு மறக்க முடியாத  பிறந்தநாள் பரிசளித்த விஜய் படக்குழு 
2. நீயா 2 - நாகப்பாம்பாக மாறிய வரலட்சுமி 
3. கன்னட படத்தில் மணிரத்னம் 
4. ஜோதிகா படத்தில் இணைந்த பிரபல நடிகை 
5. AR ரஹ்மானின் மலையாள பட ஷூட்டிங் தொடங்கியது 
6. ஆஸ்கார் விருது 

இது போல வர்றத, சினிமா பகுதியில், 'சினிமா செய்திகள்'னு ஒரு தலைப்பு கொடுத்து எழுதலாம். 

சினிமா விமர்சனம் [ஏண்டா தலையில எண்ணை வைக்கல  எழுதணும்னா, 'சினிமா விமர்சனம்' னு ஒரு தலைப்பு கொடுத்தா, எல்லா சினிமா விமர்சனமும் ஒரே................. தலைப்பிலே வந்துரும்ல. 

தினசரி செய்திகளில், உள்நாட்டு செய்திகள், வெளிநாட்டு செய்திகள்னு தலைப்பு கொடுத்து, அதிலேயே எல்லா செய்திகளையும் எழுதிறலாம். 

ரஜினிகாந்த் உறுதியளித்தது, மிளகாய்ப்பொடி தூவினது, H ராஜாவின் முயற்சி, எதிர்க்கட்சியின் அமளி இதையெல்லாம் உள்நாட்டு செய்திகள் ன்னு எழுதலாம். 

வெளிநாட்டு செய்திகளை எழுதினா வெளிநாட்டு செய்திகள்னு தலைப்பு கொடுக்கலாம். 

நான் பார்த்தது வரை எழுதிட்டேன். ஏற்கனவே நான் சொன்னதுபோல, எனக்கு தோணுச்சு எழுதிட்டேன். 

Heezulia  
heezulia
heezulia
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 610
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 193

Back to top Go down

best Re: தெரிஞ்சதும் தெரியாததும்

Post by ரா.ரமேஷ்குமார் on Tue Mar 06, 2018 6:36 pm

ஒன்றோடு ஒன்று தொடர்புடைய பதிவுகளை ஒரே திரியில் தொடரலாம் ...

1. வரலட்சுமிக்கு மறக்க முடியாத பிறந்தநாள் பரிசளித்த விஜய் படக்குழு
2. நீயா 2 - நாகப்பாம்பாக மாறிய வரலட்சுமி
3. கன்னட படத்தில் மணிரத்னம்
4. ஜோதிகா படத்தில் இணைந்த பிரபல நடிகை
5. AR ரஹ்மானின் மலையாள பட ஷூட்டிங் தொடங்கியது
6. ஆஸ்கார் விருது

இது போல வர்றத, சினிமா பகுதியில், 'சினிமா செய்திகள்'னு ஒரு தலைப்பு கொடுத்து எழுதலாம்

இங்கு உள்ள அனைத்தும் சினிமா தொடர்புடைய செய்திகளாக இருந்தாலும் வேறு வேறானது ... எனவே இவைகளுக்கு தனி திரிகள் தொடங்குவதால் தகவல்களை எளிதாக அறிந்து கொள்ள இயலும் ..சினிமா விமர்சனம் என்று மட்டும் தொடங்கி அதில் அனைத்து பட விமர்சனங்களையும் தொடர்ந்து பதிவிடுவது என்பது எளிமையாக அணுக ஏதுவாக இருக்காது நண்பரே... புன்னகை


ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4539
இணைந்தது : 23/01/2011
மதிப்பீடுகள் : 1077

Back to top Go down

best Re: தெரிஞ்சதும் தெரியாததும்

Post by ரா.ரமேஷ்குமார் on Tue Mar 06, 2018 6:48 pm

பல நாட்கள்? இல்லை இல்லை... மாதங்கள்?? இல்லை இல்லை.. பல வருடங்கள் கழித்து சில நாட்களாக  தான் ஈகரையில் தொடந்து இணைந்திருக்கிறேன் ...  ரிலாக்ஸ் உங்களின் பதிவுகளுக்கு முறுமொழி இடவில்லை என்றாலும் உங்களின் பதிவுகளை படிக்கும் ஒருவன்...உங்கள் பதிவுகளில் உள்ள அனைத்து தகவல்களும் எனக்கு புதியதே... ஆனால் என் இவ்வாறு உங்களுக்கு தோன்றியது என தெரியவில்லை ... ஒன்னும் புரியல

ஒரு வேளை ஒரு நாளைக்கு இத்தனை தலைப்பில போஸ்டிங் போடணும்னு ஏதாவது target இருக்கா?

மீண்டும் சொல்கிறேன் இங்கு பதிவுகளின் எண்ணிக்கை முக்கியம் இல்லை நண்பரே ..புன்னகை  
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4539
இணைந்தது : 23/01/2011
மதிப்பீடுகள் : 1077

Back to top Go down

best Re: தெரிஞ்சதும் தெரியாததும்

Post by heezulia on Tue Mar 06, 2018 8:12 pm

06.03.2018
by ரா.ரமேஷ்குமார் 
on Tue Mar 06, 2018
பல வருடங்கள் கழித்து சில நாட்களாக  தான் ஈகரையில் தொடந்து இணைந்திருக்கிறேன் ...  தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 15 102564
வாங்க ரமேஷ். ஈகரைல வந்து ரிலா..................க்ஸ் பண்றீங்க போல. நான் எழுதுறத படிக்கிற அந்த ஆயிரக்கணக்கான பேர்கள்ல நீங்களும் ஒருத்தர்னு கேட்க சந்தோஷமா இருக்கு.
உங்களின் பதிவுகளுக்கு முறுமொழி இடவில்லை என்றாலும் உங்களின் பதிவுகளை படிக்கும் ஒருவன்  
பதில் எழுதலேன்னா என்ன, படிக்கிறீங்கல்ல. 

அதான் சொன்னேனே ரமேஷ், கொஞ்சநா............ளா எழுதணும்னு யோசிச்சு, இப்பதான் எழுதியிருக்கேன்.  

மற்ற forumsல நான் இங்க சொன்னமாதிரி  இருக்கிறதாலதான் நான் சொன்னேன். அது ஈஸியா இருக்கு. அங்க இங்க தேட வேண்டாம்ல. 

ஈகரைல அப்படியே பழக்கமாயிருச்சு. இருந்துட்டு போவட்டும். இங்க வேற மாதிரி உங்களுக்கெல்லாம் ஈஸியா இருக்கு. சரி, விடுங்க.

நண்பி Heezulia 
heezulia
heezulia
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 610
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 193

Back to top Go down

best Re: தெரிஞ்சதும் தெரியாததும்

Post by மூர்த்தி on Tue Mar 06, 2018 8:21 pm

Heezulia உங்கள் ஆலோசனை சிறப்பாக இருக்கிறது. இப்போது புரிந்து கொண்டேன்.அட்மின் கவனித்தால் சிறிய மாற்றங்களை செய்யலாம். படிப்பதற்கும் இலகுவாக இருக்கும். ஏற்கனவே Index பேஜ் இல் அப்படி செய்திருக்கிறார்கள்.நட்பு - தலைப்பின் கீழ் சிறிய பிரிவுகள் உண்டு.சினிமாவின் கீழ் பாடல் வரிகள் மட்டுமே உண்டு கூடவே நீங்கள் குறிப்பிட்டபடி சில சிறு பிரிவுகளை செய்தால் சுலபமாக இருக்கும்.

உங்கள் ஆலோசனைக்கு எனது ஆதரவும் உண்டு.கவனிப்பார்கள் என எண்ணுகிறேன். கவனித்தால், சிறுதலைப்பிற்கு தீமில் எழுத்துக்களுக்கு வேறு நிறத்தை கொடுத்தால் சிறப்பாக இருக்கும். வேறு forumotion பக்கங்களில் இப்படி செய்திருக்கிறார்கள்.
நன்றி.
மூர்த்தி
மூர்த்தி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1046
இணைந்தது : 07/06/2016
மதிப்பீடுகள் : 506

Back to top Go down

best Re: தெரிஞ்சதும் தெரியாததும்

Post by heezulia on Tue Mar 06, 2018 9:31 pm

06.03.2018

நன்றி மூர்த்தி. வீட்டிலும், ஆஃபிஸிலும் என் ஆலோசனை ஏத்துகிறமாதிரி, நீங்களும் ஆதரவு கொடுக்கிறதுக்கு நன்றி. பெருமையாவும், சந்தோஷமாவும் இருக்கு. 

இன்னொருக்கா நன்றி.

Heezulia
heezulia
heezulia
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 610
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 193

Back to top Go down

best Re: தெரிஞ்சதும் தெரியாததும்

Post by heezulia on Thu Mar 15, 2018 7:37 pm

15.03.2018

சுந்தரராஜன் கதைக்கு பயணங்கள் முடிவதில்லைன்னு பேர் வச்சு, கோவைத்தம்பி படம் தயாரிக்க ரெடியாயிட்டார். படத்துக்கு முக்கியமானதுல ம்யூசிக்கும் ஒண்ணு. யாரை கூப்பிடலாம்னு கோவை யோசிச்சார். இளையராஜா அவர் ஞாபகத்துக்கு வந்தார். அவரைப் போய் பார்த்தார். கதை சொல்லுங்க, கதை பிடிச்சிருந்தா மட்டும் நான் சம்மதிக்கிறேன். இப்படி இளையராஜா சொல்லிட்டார்.

சுந்தரராஜன் கதையை சொல்ல இளையராஜாட்ட போனார். “எவ்ளோ நேரத்தில கதையை சுருக்கமா சொல்வீங்க”ன்னு  இளையராஜா கேட்டார். அரைமணி நேரத்தில சொல்லிரலாம்”னு சுந்தரராஜன் சொல்லியிருக்கார். ஆனா என்னா ஆச்சுன்னா, கதை சொல்லி முடிக்க ரெண்...........................டு மணி நேரம் ஆயிருச்சு. இளையராஜாவும் நேரம் போறது தெரியாம கதை கேட்டிருக்கார். சரீ..........................ன்னுட்டு, ம்யூசிக் போட OK சொல்லிட்டார்.

இளையராஜாவை பற்றிதான் தெரியுமே. 30 ட்யூன் போட்டார். இதுக்கு எம்புட்டு நேரம் ஆச்சுன்னு தெரியுமா/ பன்...........................னெண்டு மணி நேரம். முப்பது ட்யூனையும் சுந்தரராஜன்ட்ட கொடுத்துட்டு, “இந்தாங்க பிடிங்க. எந்தெந்த ஸீனுக்கு என்னென்ன ட்யூன் வேணும்னு பாத்து எடுத்துக்கோங்க”ன்னுட்டார். ஆனா சுந்தரராஜன் என்ன சொன்னார் தெரியுமோ.................? “ஒவ்வொரு ஸீனையும் நான் வெளாவா.......................ரியா சொல்றேன். நீங்களே ஒரு பத்து ட்யூனை செலெக்ட் செஞ்சிருங்கோ”ன்னு இளையராஜா தலையில பொறுப்பை ஒப்படுச்சுட்டார்.

ஏன், சுந்தரராஜனுக்கு ம்யூஸிக் செலெக்ட் பண்ண தெராதா?

இப்படியாக இளையராஜா ம்யூஸிக் போட்டு பயணங்கள் முடிவதில்லை படம் 1982ல ரிலீஸ் ஆச்சு. இந்தப் படம் எடுக்க 13 லட்சமும், நாலு மாசமும் செலவாச்சாம்.

சரி, நடிக்க யாரை கூப்டலாம்? புதுமுகங்களை வச்சு படத்தை எடுக்கலாம்னு கோவைத்தம்பி  ஆசைப்பட்டார். ஆனா அவர் அரசியல்வாதியாச்சே. சுதரராஜனும் டைரக் ஷனுக்கு புதுசு. அதனால புதுசா யாரும் அந்தப் படத்தில நடிக்க முன்வரல.

நெஞ்சைக் கிள்ளாதே படத்தில நடிச்ச மோகன் பிடிச்சு போயிருந்துச்சு. மோகன் அழகாயிருக்கார், நல்லா நடிக்கிறார்னு கோவைத்தம்பி சொன்னார். அவரை இந்தப் படத்துக்கு புக் பண்ணிட்டார். மஞ்ச விரிச்ச பூக்கள் னு மலையாளப் படம். இந்த படத்தில பூர்ணிமா நடிச்சுட்டு இருந்தார். அவரையும் ஹீரோயினுக்காக புக் பண்ணியாச்சு. அப்டீ...............இப்டீன்னு படத்தை எடுத்து முடிச்சாச்சூன்னு வைங்க.

இது கோவைத்தம்பியின் முதல் படங்கறதால, இந்தப் படத்தை MGR பார்க்கணும்னு கோவை ஆசைப்பட்டார்.  கோவைத்தம்பி MGRஇன் தீ..........................விர ரசிகராச்சே, தலைவராச்சே. ஆண்டாள் ப்ரிவ்யூ தியேட்டர். இது அரங்கண்ணலுக்கு சொந்தமானது. இதுல MGRருக்காக பயணங்கள் முடிவதில்லை படம் ஸ்பெஷல் ஷோவாக ஓட விட்டாங்க. MGR மனைவி ஜானகியுடம் வந்து படத்தை பார்த்தார். பார்த்தாரா........................, அம்புட்டுதான். பார்த்து முடிச்சுட்டு அவர்பா......................ட்டுக்கு எந்திருச்சுட்டார். கார்ல ஏறினார், போயிட்டார். எத்............................துவுமே சொல்லல.

பேசவே இல்லேங்கறேன், அப்புறம் எங்கேயிருந்து சொல்றது.

தலைவர் ஏதாவது நல்ல வார்த்தை சொல்வார்னு, நம்பிக்கையாய் இருந்த கோவைத்தம்பி, ஒடஞ்...........................சு போயிட்டார். இல்ல, நொறுங்..........................கி போயிட்டார்னு சொல்லலாமா? என்னவோ ஆயிட்டார். அவ்ளோதான். அங்க உள்ளவங்க MGRக்கு படம் பிடிக்கல போலியே. இப்டி ஒண்ணும் சொல்லாம போயிட்டாரேன்னு பேசிக்கிட்டாங்க. ஏற்கனவே MGR ஒண்ணும் சொல்லல. இதுல இவங்க வேற பேச ஆரம்பிச்சுட்டாங்க. எப்டி இருக்கும் பாருங்க கொவையோட மனசு!!!

MGR கார் போச்சு. என்ன ஆச்சுன்னு தெரியல, கார் கொஞ்ச தூரம் போயி நின்னுருச்சு. MGR ரோட செக்யூரிட்டி கோவை தம்பியை பார்த்து ஓ....................டி வந்தாங்க. இங்க இருக்கிறவங்க எல்லாரு தெகச்சு பாத்துட்டு நிக்கிறாங்க. செக்யூரிட்டி வந்து கோவையை தலைவர் கூப்ட்றார்னு சொன்னாங்க. சொல்லவா வேணும்? கோவைக்கு தலகால் புரியல. MGR கார் நிக்கிற இடத்துக்கு ஓடினார். 

“படம் ரிலீஸாகி ஒரு வாரத்ல பாரு, நீ எங்கேயோ.................... போக போறே. படம் அவ்ளோ நல்லா இருக்கு. இந்தப் படத்தல உனக்கு கிடைக்கிற பேரை காப்பாத்து வச்சுகிறது உன்னோடு பொறுப்பு”ன்னு MGR சொல்லிட்டார். இப்பதான் கோவையின் மனசு சமாதானமாச்சு.

MGR சொன்ன மாதிரியே...................................தாங்க நடந்துச்சு. முதல் படத்திலேயே கோவைத்தம்பி, R சுந்தரராஜன் ரெண்டு பேரும், கன்னாபின்னான்னு உயர்ந்துட்டாங்க. பாராட்டாதவங்களே இல்லியாம். பூர்ணிமாவும், மோகனும் வேற நல்லா நடிச்சிருந்தாங்களா, ரிலீஸ் ஆனா தியேட்டர்லல்லாம், நூறு நாள் தாண்டி ஓடுச்சு. முக்கிய நகரங்களில் 25 வாரம் ஓடுச்சாம். சென்னை லிட்டில் ஆனந்த் தியேட்டர்ல, 425 நாள் ஓடிய ஒரு சாதனை. வெள்ளி விழா படம் பயணங்கள் முடிவதில்லை.

பயணங்கள் முடிவதில்லை படத்துக்கும், MGRக்கும் சம்பந்தம் இருக்குன்னு அன்னிக்கி சொன்னேன்ல. படிச்சவங்களுக்கு சொன்னது ஞாபகம் இருக்கும். இப்ப சரியா இருக்கா?


- ரமணி

Heezulia  மீண்டும் சந்திப்போம்  
heezulia
heezulia
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 610
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 193

Back to top Go down

best Re: தெரிஞ்சதும் தெரியாததும்

Post by SK on Fri Mar 16, 2018 3:02 pm

MGRக்கும் சம்பந்தம் இருக்குன்னு அன்னிக்கி சொன்னேன்ல. படிச்சவங்களுக்கு சொன்னது ஞாபகம் இருக்கும்

இருக்கு இருக்கு


SK
SK
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8068
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1548

Back to top Go down

best Re: தெரிஞ்சதும் தெரியாததும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை