உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» இதப்படிங்க முதல்ல...(சினிமா செய்திகள்- வாரமலர்)
by ayyasamy ram Today at 4:32 am

» தொடர்ந்து மாணவர் அணியிலேயே இருக்கப் போறாராம்…!
by ayyasamy ram Today at 4:20 am

» குடிச்சுட்டு வரலைன்னு சொன்னா நம்ப மாட்டேங்கிறா....!!
by ayyasamy ram Today at 4:14 am

» காஷ்மீரில் 7 மாதங்களுக்கு பின் நாளை பள்ளிகள் திறப்பு
by ayyasamy ram Today at 4:07 am

» யாருக்கு கடன் தள்ளுபடி செய்தீர்கள்? : பிரியங்கா
by ayyasamy ram Today at 4:04 am

» 5 ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு
by ayyasamy ram Today at 4:02 am

» எல்லாம் மாயைதானா? சோன்பத்ரா
by ayyasamy ram Today at 3:59 am

» புத்தக தேவைக்கு...
by Guest Yesterday at 11:54 pm

» திருக்கழுக்குன்றம்:-மலைக்கோயில்-அறிந்த சிலை -அறியாத தகவல்.
by velang Yesterday at 9:45 pm

» முஸ்லிம் தத்தெடுத்த பெண்ணுக்கு ஹிந்து முறைப்படி திருமணம்: குவியும் பாராட்டு
by T.N.Balasubramanian Yesterday at 5:29 pm

» பெண் பயிற்சியாளர்களை நிர்வாணமாக்கி சோதனை: குஜராத்தில் 'பகீர்'
by T.N.Balasubramanian Yesterday at 5:22 pm

» மேக்கப் இல்லீங்க… நிஜ பக்தி கோலத்தில் நம்ம நடிகைகள்!
by T.N.Balasubramanian Yesterday at 5:20 pm

» பாகுபலி ட்ரம்ப் -டுவிட்டரில் ட்ரம்ப்
by சக்தி18 Yesterday at 2:08 pm

» உத்தர பிரதேசம்: 3000 டன் தங்க சுரங்கம் - எப்போது அகழாய்வு? - விரிவான தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» எனக்கு பிடித்த பாடல், அது உனக்கு பிடிக்குமே, ...
by சக்தி18 Yesterday at 2:01 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by lakshmi palani Yesterday at 1:28 pm

» எனக்கு பிடித்த சினிமா பாடல் வரிகள்
by ayyasamy ram Yesterday at 10:42 am

» பின்னணி பாடகர்மலேசியா வாசுதேவன்
by ayyasamy ram Yesterday at 10:41 am

» ரிலீசுக்கு தயாராகும் திருவாளர் பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 10:38 am

» திரிஷாவிற்கு எச்சரிக்கை விடுத்த தயாரிப்பாளர்
by ayyasamy ram Yesterday at 10:37 am

» ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் – இந்திய வீரர் ரவி தாஹியா தங்கம் வென்றார்
by ayyasamy ram Yesterday at 10:33 am

» இதெல்லாம் அவங்க ஃபர்ஸ்ட் படம் இல்ல – விபரம் உள்ளே
by ayyasamy ram Yesterday at 10:31 am

» இட்லி சூப்பர் சாஃப்டாக வர என்ன செய்யலாம்?
by ayyasamy ram Yesterday at 10:22 am

» 'மூத்த குடிமக்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பதை பொறுத்தே அரசின் மதிப்பீடு' - ஐகோர்ட்
by ayyasamy ram Yesterday at 7:55 am

» தனியாா் பால் விலை உயா்வு: மநீம கண்டனம்
by ayyasamy ram Yesterday at 7:47 am

» வேலன்:-ஸ்கிரீன் ரிகார்டர்-Ice Cream Screen Recorder
by velang Yesterday at 7:32 am

» வாரணாசியில் சிவ வழிபாடு நடத்தும் முஸ்லிம் பெண் வக்கீல்
by ayyasamy ram Yesterday at 7:32 am

» நடைபாதையில் பைக் ஓட்டியவருக்கு பாடம் புகட்டிய 'சூப்பர் லேடி'
by ayyasamy ram Yesterday at 7:29 am

» பென்சன்தாரர்கள் ஆன்லைனில் லைப் சான்றிதழ் அளிக்கும் வசதி
by ayyasamy ram Yesterday at 7:26 am

» புத்தகம் தேவை : இறையன்பு IAS
by Sabeer ahamad Sat Feb 22, 2020 11:45 pm

» ஷாக் ஆகாதீங்க.. வாக்கிங் போனால் உடல் எடை குறையாதாம்!
by T.N.Balasubramanian Sat Feb 22, 2020 8:43 pm

» விளையாட்டு வினையாகலாம்!
by krishnaamma Sat Feb 22, 2020 8:17 pm

» மடிமீது காதல் கனா
by ayyasamy ram Sat Feb 22, 2020 7:37 pm

» கனகதாரா !! Short story by Krishnaamma
by krishnaamma Sat Feb 22, 2020 7:31 pm

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Sat Feb 22, 2020 7:17 pm

» கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியர்கள் சிங்கப்பூர் செல்வதை தவிர்க்க வேண்டும்...மத்திய அரசு அறிவிப்பு
by ayyasamy ram Sat Feb 22, 2020 4:25 pm

» பழியை தன் மேல் ஏற்று பெருமையை பிறர்க்கு உரித்தாக்கும் பண்பு
by ayyasamy ram Sat Feb 22, 2020 4:22 pm

» பின் நோக்கி இழுக்கப்படும் அம்புதான் வேகத்துடன் முன்நோக்கி பாய்கிறது
by ayyasamy ram Sat Feb 22, 2020 4:21 pm

» இலக்கியத்தில் காதல் தேவையா?
by ayyasamy ram Sat Feb 22, 2020 4:11 pm

» மனசும் குழந்தைமாதிரி தான்!
by ayyasamy ram Sat Feb 22, 2020 4:10 pm

» பணம் பத்தும் செய்யும்
by ayyasamy ram Sat Feb 22, 2020 4:05 pm

» மொக்க ஜோக்ஸ்!
by ayyasamy ram Sat Feb 22, 2020 4:01 pm

» சிதம்பரம் நடராஜா் கோயில் நாட்டியாஞ்சலி தொடக்க விழா
by சக்தி18 Sat Feb 22, 2020 3:57 pm

» பிறப்பு பாகிஸ்தானாக மாற்றி பிபிசி செய்தி தந்த குழப்பம்
by சக்தி18 Sat Feb 22, 2020 3:50 pm

» முத்தம் கொடுப்பதால் ஏற்படும் நன்மைகள்
by சக்தி18 Sat Feb 22, 2020 3:40 pm

» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு
by ayyasamy ram Sat Feb 22, 2020 3:27 pm

» எனக்கும் இப்போ ‘சீசன்-2’ காலம்! - தொகுப்பாளினி ஆர்த்தி உற்சாக நேர்காணல்
by ayyasamy ram Sat Feb 22, 2020 3:05 pm

» சதம் அடிப்பதில் ஜப்பானியர்களே வல்லவர்கள்
by ayyasamy ram Sat Feb 22, 2020 3:00 pm

» 99 சாங்ஸ் படத்தைத் தமிழில் எடுக்காதது ஏன்?: ஏ.ஆர். ரஹ்மான் பதில்
by ayyasamy ram Sat Feb 22, 2020 2:42 pm

Admins Online

தெரிஞ்சதும் தெரியாததும்

best தெரிஞ்சதும் தெரியாததும்

Post by heezulia on Sat Dec 16, 2017 6:47 pm

First topic message reminder :

16.12.2017

'தெரிஞ்சதும் தெரியாததும்' - ஏன் இந்த தலைப்புன்னு நெனச்சாலும் நெனப்பீங்க. நான் சொல்ற விஷயங்கள் எதுவும் எனக்கு தெரியாதது போல ஒரு சிலருக்கு தெரியாம இருக்கலாம். மத்தவங்களுக்கு தெரிஞ்சிருக்கலாம். அதுதான் 'உங்களுக்கு தெரிந்ததும் எனக்கு தெரியாததும்'.

சந்திரபாபு பாட்டுக்களை நாம் எல்லாரும் கேட்டிருக்கோம்ல ? நல்லாவே பாடியிருப்பார். சரி, ஜேசுதாஸ் எப்படி? அவரும் நல்ல ஒரு பாடகர்தான். ஆனா ............. பறக்கும் பாவை படத்துல சந்திரபாபுக்காக ஜேசுதாஸ் ஒரு பாட்டு பாடியிருக்கார்.  அது என்ன பாட்டுன்னு சொல்லுங்க பார்ப்போம். சரி................, ஜேசுதாசுக்கு சந்திரபாபு பாடியிருக்காரா?

எம்.ஜி.ஆருக்கு கலங்கரை விளக்கத்தில பஞ்சு அருணாச்சலம் ஒரு பாட்டு எழுதியிருக்காராம். அது என்ன பா.........................ட்டு?

உரிமைக் குரல் [1974] அப்டீன்னு ஒரு படம் இருக்குல்ல. அதுல "விழியே கதை எழுது" ன்னு ஒரு பாட்டு இருக்குல்ல. இந்த பாட்ட எழுதியது யாருன்னு தெரியும்னு நெனக்கிறேன். கண்ணதாசன்தானாங்க. ஆனா, பாட்டு புத்தகத்துல, ஆடியோ கேசட்டுல, அதுமட்டுமில்லீங்க, படத்தோட டைட்டில்ல கூட வாலின்னு போட்டிருந்ததாமே. அந்த சமயத்தில எம்.ஜி.ஆருக்கும், கண்ணதாசனுக்கும் என்னவோ லடாயாம். அதனால ஸ்ரீதர் [உரிமைக்குரல் எம்.ஜி.ஆர வச்சு எடுத்த முதல் படமாம்] எம்.ஜி.ஆருக்கு தெரியாம கண்ணதாசன்கிட்டே பாட்டை எழுதி வாங்கிட்டு, வாலி பேர போட்டுட்டாராம். இந்த சமாச்சாரம் எப்படியோ எம்.ஜி.ஆருக்கு தெரிய வந்துச்சாம். வருத்தப்பட்டாராம் எம்.ஜி.ஆர்.

Baby Heerajan  மீண்டும் சந்திப்போம்  
heezulia
heezulia
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 610
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 193

Back to top Go down


best Re: தெரிஞ்சதும் தெரியாததும்

Post by heezulia on Mon Feb 12, 2018 5:27 pm

12.02.2018

தமிழ்நாட்ல பெரீ.................ய நடிகர். எல்லாரும் அண்ணா.........................................ந்து பார்க்கிற இடத்ல இருந்த நடிகர். அவர் தன்னுடைய முதல் பட டைரக்டர்ட்ட போய் கையைக் கட்டி நிக்கிறாரு.
“சார்எப்படியா.....வது...................”
என்ன....., அதான் சான்ஸ் கொடுத்துட்டேன்".
“இந்தப் படத்தில் எப்படியாவது எனக்கு ஒரே ஒரு க்ளோஸப்” என்று கெஞ்சுறார். கோவம் வந்துருச்சு அந்த இங்கிலீஷ் டைரக்டருக்கு.
“ஓமுகத்த நீ கண்ணாடியில் பார்த்ததில்லையா மேன்? பல்லு வேற எத்திக்கிட்டிருக்கு. நாடியில் பள்ளம் விழுந்திருக்கு. எப்படி க்ளோஸப் போடமுடியும் போ! போ!” என்று விரட்டினார்.
அந்த முகத்துக்காகத்தான் தமிழகம் இருவது வருஷத்ல ஏங்க ஆரம்பிச்சுது. தீப்பெட்டில, சுவரொட்டீல அந்த முகத்தைப் பார்க்க முடியாதா, எங்யா.................வது  அந்த முகம் தெரிஞ்சுறாதான்னு  முப்பது நாப்பது வருஷமா  ஏங்குச்சு. அந்த முகத்துக்கு சொந்தக்காரர், உங்களுக்கு தெரியும்னு எனக்கும் தெரியும். இருந்தாலும் நான் சொல்லணும்ல. எம்.ஜி.ஆர்.
அவரை திட்டின டைரக்டர் எல்லீஸ்.ஆர். டங்கன். அந்தப் படத்தின் பெயர் சதிலீலாவதி.
***********************************************
இயக்குநர் ஸ்ரீதர் பம்பாய்க்குச் போனா, ஹிந்தி சினிமா பிரபலங்கள் எல்லாரும் வந்து வரவேற்பாங்களாம். அவங்களோடு தங்க சொல்வாங்களாம். 
  
காதலிக்க நேரமில்லை. எனக்கா? அது இல்லீங்க. பின்னே ஸ்ரீதருக்கா? அதுவும் இல்ல. அவர் எடுத்த படத்த சொல்றேன். அந்த படத்துக்காக ஹீரோயினை செலெக்ட் செஞ்சாராம். ஒரு பொண்ணு வந்தா. அவ போட்டாவ அவர்ட்ட கொடுத்தா. அவரும் வாங்கி வச்சுட்டு, “சரி போ. நான் சொல்றேன்” னு சொல்லி அனுப்பிட்டார்.   

ஒரு வாரம் ஆச்சு. அந்த பொண்ணு ஸ்ரீதர்ட்ட வந்தா. அவளை ஒரு பார்வை பார்த்தார். என்ன சொல்லிட்டார்? “நீ எத்தன தடவ வந்தாலும், நீ தலைகீழ நின்னாகூட, நீ நடிக்க முடியாதும்மா. போம்மா, போ..............” ன்னு அவளை அனுப்பிட்டாராம்.

அப்புறமா அந்த பொண்ணு தமிழ் படத்தில நடிக்கவே முடியாம போச்சு. ஆனா சினிமாவில கொடி கட்டி பறந்து, ஆம்பளைங்களோட கனவுக்கன்னியாய் இருக்கிற அளவுக்கு வளர்ந்துட்டா அவ. என்ன என்ன, என்ன யோசிக்கிறீங்கன்னு புரியுது.  தமிழ் சினிமாலதானே நடிக்கலேன்னு சொன்னேனா? ஹிந்தி சினிமாவுக்கு போயிட்டா. 
  
சரி, ஒரு டைரக்டர்தான் நம்மள வேணாம்னுட்டாரேன்னு அவள் பேசாம இருந்தாளா? இல்லியே. எப்படியோ சினிமாவுக்கு போயிட்டாள்ல. அந்த பப்லி நடிகை ஹேமமாலினி.

ஒரு நிகழ்ச்சில நம்பிக்கையை பற்றி பேசும்போது வைரமுத்து, இந்த ரெண்டு சமாச்சாரத்தையும் சொன்னார். 
 
Heezulia  மீண்டும் சந்திப்போம்
heezulia
heezulia
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 610
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 193

Back to top Go down

best Re: தெரிஞ்சதும் தெரியாததும்

Post by SK on Mon Feb 12, 2018 5:39 pm

இரண்டு தகவல்களும் அருமை


SK
SK
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8068
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1548

Back to top Go down

best Re: தெரிஞ்சதும் தெரியாததும்

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon Feb 12, 2018 8:25 pm

எம்ஜிஆர் மற்றும் ஹேமமாலினி ஆகியோர் எவ்வளவு உயரத்திற்கு சென்றார்கள்
என்பதை விட அதற்கு எவ்வளவு கஷ்டப்பட்டார்கள் என்பதை பதிவிட்ட முறை
அருமை.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13440
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3392

Back to top Go down

best Re: தெரிஞ்சதும் தெரியாததும்

Post by heezulia on Mon Feb 12, 2018 9:31 pm

12.02.2018 

நன்றி SK & முத்து சார்.

தல, கால்கள், கைகள், கண்கள் போச்சு. யாருக்கு? பாகவதருக்கு. தியாகராஜ பாகவதர்தான்.

என்ன ஆச்சு அவருக்கு? இதெல்லாம் ஒரே.......... சமயத்தில இல்லீங்க. ஒவ்வொண்ணும் ஒவ்வொரு சமயத்தில போச்சு. எப்பப்ப போச்சு. நவீன சாரங்கதாரா[1936]படத்தில கைகள்போச்சு. அம்பிகாபதி [1937] படத்தில தலையே........ போச்சு. அசோக்குமார் [1941] படத்தில கண்கள் போச்சு.


இப்படீல்லாம் நடிச்ச பாகவதர் சிவகாமி படத்தில நடிச்சிட்டுஇருக்கும்போதே, நிஜமா............வே கண்பார்வை போயிருச்சாம். ஆனா அவர்  1959ல மறைந்த பின்னால  1960லதான்  சிவகாமி படம் ரிலீஸ் ஆச்சாம்.


*******************************************************
ஆரம்ப காலத்ல, ஒரே................... ஒரு ப்ரொஜக்ட்டரை வச்சுதான் சினிமாவை காட்டினாங்களாம். அதனால ஒரு ரீல் முடிஞ்சதும், அடுத்த ரீலை மாத்தறதுக்கு கொஞ்ச நேரம் ஆகுமாம். இது தவிர, ஃபிலிம் சட்டுன்னு தீப்பிடிக்க கூடியது. இதனால கூட ரீலை மாத்த வேண்டிய நிலை. ரீல் ஓடிட்டே இருந்தா ப்ரொஜக்ட்டர் சூடாயிரும்ல. அந்த சமயத்தில படத்தை நிப்பாட்டிட்டு, ரீலை மாத்தினாங்க. அதனால என்னாச்சுன்னா, ஒரு படத்துக்கு அஞ்சாறு இடைவேளை விட்டாங்களாம்.

Heezulia
heezulia
heezulia
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 610
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 193

Back to top Go down

best Re: தெரிஞ்சதும் தெரியாததும்

Post by heezulia on Mon Feb 12, 2018 10:33 pm

12.02.2018

புதிய பறவை படத்ல மொதல்ல சரோஜாதேவி கேரக்டரில் சௌகார் ஜானகியும், சௌகார் ஜானகி கேரக்டரில் சரோஜாதேவியும் நடிப்பதாக இருந்துச்சு. அதுவரை குடும்பப் பொண்ணாக நடிச்ச சௌகார், கிளப் பாடகியாக, வித்தியாசமாக நடிக்கிறது நல்லா இருக்கும்னு சிவாஜிதான் சொன்னாராம். டைரக்டர் தாதா மிராசிக்கு, சரீன்னு சொல்றதுக்கு மனசே……………. இல்லயாம். இந்தப் படத்தில, முதல்ல படமாக்கப்பட்ட பாட்டு “பார்த்த ஞாபகம் இல்லையோ”. இந்தப் பாட்டில் சௌகாரின் ஸ்டைலை பார்த்து, தாதா அசந்து போயிட்டாராம். சரி, சிவாஜி நெனச்சது, சொல்றது சரிதான்னு, சிவாஜி சொன்னபடியே செஞ்சுட்டாராம்.


Heezulia  
heezulia
heezulia
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 610
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 193

Back to top Go down

best Re: தெரிஞ்சதும் தெரியாததும்

Post by heezulia on Mon Feb 12, 2018 10:39 pm

12.02.2018


K சங்கர், GN வேலுமணியுடன் இயக்கிய ஒரு படம். சங்கர் - MGRக்கான முதல் படம் பணத்தோட்டம்.

இந்தப் படத்துக்கு மொதல்ல வச்ச பேர் ‘பூவிலங்கு’. BS ராமையாவின் நாடகமாம் பூவிலங்கு. இந்தக் கதை சுந்தந்திர போராட்ட காலத்தில் உள்ளதாம். இதை தழுவிதான் இந்தப் படம் எடுக்கப்பட்டதாம். பாசுமணி திரைக்கதை வசனம் எழுதினாராம். மொதல்ல இந்தப் படத்துக்கான வெளம்பரத்தில, MGR ப்ரிட்டிஷ் காலத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் நிக்கிறமாதிரி இருந்துச்சாம். அப்புறமா கதையே மாறிப்போச்சாம்.

இந்தப் படத்தின் ஷூட்டிங்க்ல, MGRன் நடிப்பு சங்கருக்கு பிடிக்காம போச்சாம். நிறைய டேக் எடுத்துட்டு இருந்தாராம். MGR சிரிச்சாராம். சங்கரை தனியே கூப்ட்டு போனாராம். “என்ன சார், எத்தன டேக்தான் எடுப்பீங்க.. நீங்க பெரிய பெரிய நடிப்பெல்லாம் பார்த்திருப்பீங்க. அதமாதிரி எங்கிட்டேயும் நீங்க எதிர்பார்த்தா எப்படி சார்? என்னால இவ்வளவுதான் சார் முடியும். ஓவர் ஆக்டிங் எனக்கு தெரியாது. எடுத்து முடிங்க”ன்னு சொன்னாராம். இது பற்றி தெரிஞ்சவங்க, சங்கரும், MGRஉம் இனி சேரமாட்டாங்கன்னு நெனச்சாங்க. அவங்க நெனப்பு சரியில்லாம போச்சாம்.Heezulia 
heezulia
heezulia
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 610
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 193

Back to top Go down

best Re: தெரிஞ்சதும் தெரியாததும்

Post by மூர்த்தி on Wed Feb 14, 2018 8:25 pm

உங்களுக்கு தெரிந்தது எனக்கு தெரியாதது.இந்தப் பாடலைப் பாடியது யார்?

பாடகி சரளா அம்மையார் யார் தெரியவில்லையே !
மூர்த்தி
மூர்த்தி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1046
இணைந்தது : 07/06/2016
மதிப்பீடுகள் : 506

Back to top Go down

best Re: தெரிஞ்சதும் தெரியாததும்

Post by heezulia on Sat Feb 17, 2018 11:53 pm

17.02.2018

சரளாதானே, யார், கோவை சரளாவா? அந்தம்மா மாதிரி தெரியலியே. ஓ.........ஹோ நீங்க பாடகி சரளாவை சொல்றீங்களா? விஷால் சமாச்சாரம் படிச்சுட்டு, இவரைப் பற்றி தெரிஞ்சுக்கலாம்னு கேக்குறீங்களா? 

எனக்கு இவரைப் பற்றி தெரிந்த ஒரே............... விஷயம் இவர் நாகூர் EM ஹனீஃபா இசைக்குழூல சேர்ந்துட்டு, அவருடன் இஸ்லாமிய பாட்டுக்களை பாடிட்டு இருந்தவர். இம்புட்டுதான் தெரியும். 

அதுக்குன்னு இதோடு விட்டுருவேனா? கேட்டுட்டீங்களே. தேடாம இருக்க முடியுமா? கெடச்சதை எழுதியிருக்கேன். படிங்க. 

இவர் ரத்தக்கண்ணீர், தூக்குமேடை இந்த நாடகங்களில் பின்னணி பாடல்களை பாடியிருக்காராம். 

சரளாவின் கணவர் அம்பி சுமாமிநாதன். அவரது 16 வயசிலிருந்தே ஹனீஃபா க்ரூப்ல தபேலா வாசிச்சுட்டு இருந்தவராம். சரளா என்னான்னா அம்பியை லவ்வோ 
லவ்வி கல்யாணம் செஞ்சுகிட்டாங்க. அதனாலதான் ஹனீஃபா குழுல பாட ஆரம்பிச்சாரு போல. 

அப்புறமா எப்படியோ சினிமால பாட வந்துட்டார். 

இவர் பாடிய சில சினிமா பாட்டுக்கள் : 

நூறாண்டு காலம் வாழ்க - பேசும் தெய்வம் 
நந்தன் வந்தான் கோயிலிலே - நினைவில் நின்றவள் 
என்னடி செல்ல கண்ணு - தேன்மழை 
வருவாயோ வேல்முருகா - ஏன் 
உனக்கென்னாத்தானே இந்நேரமா - பொண்ணு ஊருக்கு புதுசு 
சிந்தனையில் மேடை கட்டி - திருமலை தென்குமரி 
ஊரும் சதமல்ல - அன்னை அபிராமி 

சுசீலா, LR ஈஸ்வரி, சீர்காழி கோவிந்தராஜன், சீர்காழி கோவிந்தராஜன், SPB, PBS இவங்களோடல்லாம் பாடியிருக்கார். 


அம்பி இறந்த பின்னால கச்சேரிகளில் பாடறதை நிப்பாட்டிட்டாராம். அதனால பாடுற சான்ஸ் இல்லாம போயிருச்சு. 76 வயசாகியும், அவர் குரல், முந்தி இருந்த மாதிரியே, சின்ன வயசுக்காரங்க பாட்ற மாதிரியே இருக்குதாம். 


- தந்தி, புதிய தலைமுறை, அவள் விகடன்.

Heezulia 
heezulia
heezulia
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 610
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 193

Back to top Go down

best Re: தெரிஞ்சதும் தெரியாததும்

Post by மூர்த்தி on Sun Feb 18, 2018 12:25 am

உங்கள் டுவிட்டர் பக்கத்தில் பாடலைக் கேட்டேன். படத்திற்கும் குரலுக்கும் சம்பந்தமே இல்லையே என்பதால் கேட்டேன் . இப்போதுதான் தெரிந்தது அவர் சினிமாப் பாடகியும் கூட என்பது.நன்றி.
மூர்த்தி
மூர்த்தி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1046
இணைந்தது : 07/06/2016
மதிப்பீடுகள் : 506

Back to top Go down

best Re: தெரிஞ்சதும் தெரியாததும்

Post by பழ.முத்துராமலிங்கம் on Sun Feb 18, 2018 10:10 am

சரளா அவர்கள் பற்றி நிறைய அரிய தகவல்கள், அருமை
நன்றி பேபி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13440
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3392

Back to top Go down

best Re: தெரிஞ்சதும் தெரியாததும்

Post by heezulia on Mon Feb 26, 2018 4:45 pm

26.02.2018 

ஊமைப்படங்களின் காலம் முடிஞ்சு, பம்பாய்ல பேசும் படங்கள் தயாரிக்கப்பட்டன. முதல் பேசும் படம், 'ஆலம் ஆரா.' இந்தப் படத்தை தயாரிச்சவர்,  அர்தேசிர் இராணி.

இவர் பிராந்திய மொழிகள்லேயும் படம் எடுக்க ஆசைப்பட்டாராம். அந்த வரிசையில, ஒரு தமிழ் படத்தை தயாரிக்க, பேசி நடிக்க, ஒரு தமிழ் நடிகை தேவைப்பட்டார். நடிகையைத் தேடிய ஆர்தேஷிர்இராணி,  டி.பி.ராஜலஷ்மியை தனது 'காளிதாஸ்' படத்ல நடிக்க வச்சார்.
1931ஆம் ஆண்டு வெளிவந்த முதல் தமிழ் பேசும் படமான 'காளிதாஸ்'   ராஜலஷ்மி கதாநாயகியாக நடிச்சு ரிலீஸ் ஆச்சுனு எல்லாருக்கும் தெரியும்னு வைங்க. படத்தின் ஒரு பாட்டை கொடுத்து பாடச் சொன்னாங்க. திருவையாறு மண்ணில் பிறந்தவராச்சே. பாடி அசத்தினார். பாட்டு நல்லா இருக்கவே, இன்னொரு பாடலைக் கொடுத்து, டான்ஸ் ஆடிட்டே........... பாடணும்ன்னாங்க.

'எனக்கு ஆட வராதே'னு  சொல்லிபுட்டார் ராஜலஷ்மி. 'உன்னால முடியும், திறமை இருக்கிறது. ட்ரை செஞ்சா வராதா..? யூ கேன் டூ it மா'ன்னு  ஊக்கம் கொடுத்தார், படத்தின் டைரக்டர். 'மன்மத பாணமடா, மாரினில் பாயுதடா' ங்கற அந்த பாட்டு, மதுரை பாஸ்கரதாஸ் சுவாமி எழுதியது. தாமேலே, தன் திறமை மேல நம்பிக்கை இருந்த ராஜலஷ்மி, 'ஆடித்தான் பாக்கலாமே...' னு  தெரிஞ்ச அளவுக்கு ஆடியிருக்கிறார். அதுவே சிறந்த நடனமாயிருச்சு.  ராஜலஷ்மியின் சினிமா பிரவேசம் இத்தனை சாகஸங்களுடன் நடந்துச்சு.

'காளிதாஸ்' படத்தில் இன்னொரு சுவாரஸ்யம் உண்டு. அதுல கதாநாயகி டி.பி.ராஜலஷ்மி தமிழ்ல பேசினார், பாடினார்; கதாநாயகன் தெலுங்குல பேசினார். மற்ற சில நடிகருங்க ஹிந்தீல வசனம் பேசினாங்க. ஆக இப்படி பல மொழிப்படமாக அது அமஞ்சிருச்சு. எது எப்படியோ அதுவே தமிழின் முதல் பேசும் படம்னு சினிமா வரலாற்ல பதிவாயிருச்சுல்ல.

Heezulia
heezulia
heezulia
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 610
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 193

Back to top Go down

best Re: தெரிஞ்சதும் தெரியாததும்

Post by heezulia on Mon Feb 26, 2018 7:00 pm

15.02.2018 

MGR ஐ சுட்டதனால எம்.ஆர். ராதாவுக்கு சிறைத்தண்டனை கெடச்சுதுல்ல. அப்போ அவர்கூட ஒரு இங்கிலீஷ்காரரும் இருந்தாராம். அவருக்கு ராதா கேசரியும், சாம்பாரும் சமைச்சு போட்டாராம். [இது என்னங்க காம்பினேஷன், கேசரியும், சாம்பாரும்?]  அது அந்த இங்கிலிஷ்காரருக்கு ரொம்ப புடிச்சு போச்சாம். 

ஒரு நாள் பேச்சுவா..........க்கில ராதா, "ஏன்யா வெள்ளக்காரா, உங்க ஊர்ல எப்படி? 30 வருஷமா வக்கீலா இருக்கிறவர்தான் ஜட்ஜா வருவாரா?" ன்னு கேட்டுபுட்டாராம். அதுக்கு அந்த வெள்ளைக்காரர், "ஆமா எங்க ஊரிலும் அதே........... பழக்கம்தான்" ன்னாராம். 

ராதா கெக்கே................... பிக்கேன்னு சிரிச்சிருக்கார்.  அப்பறம் கேட்டாராம், "அதெப்டிய்யா, பொய்யை மட்டுமே தொழிலாய் வச்சுக்கிட்டு வாதாடி சம்பாதிக்கிற ஒருத்தர், ஜட்ஜா வந்து உக்காந்ததும், "மை lord"ன்னு சொல்றோமே..............., இந்த அநியாயம் வேறெங்காவது நடக்குமாய்யா?" ன்னு ஒரு போடு போட்டாராம்.  இங்கிலீஸ்காரர் யோசிக்க ஆரம்பிச்சுட்டாராம். 
ஜெயில்ல இருந்துகிட்டுகூட  சும்மா இருந்தாரா பாருங்க. 

Heezulia   மீண்டும் சந்திப்போம்
heezulia
heezulia
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 610
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 193

Back to top Go down

best Re: தெரிஞ்சதும் தெரியாததும்

Post by heezulia on Sat Mar 03, 2018 10:53 am

03.03.2018

உலகத்தில் உயர்ந்த மனிதன்னு சிவாஜி நிரூபிச்ச படம் உயர்ந்த மனிதன் [1968].

உத்தர புருஷ். இது ஒரு வங்க மொழி படம். இந்த படத்தை தமிழ்ல எடுக்க AVM நிறுவனம் விரும்புச்சு. கதையின் உரிமையை வாங்கியாச்சு. கதை வேணுமே. யாரை வச்சு எடுக்கலாம்? ஜாவர் சீதாராமன் திரைக்கதை எழுதி கொடுத்துட்டார்.  யாரை நடிக்க வைக்கிறது? Discuss செஞ்சாங்க. 

செட்டியாரின் மகன் சரவணன், சிவாஜியை suggest செஞ்சார். செட்டியாரும் ஒட்..............டனே “உம்” சொல்லிட்டார். ஆனா அந்த சமயத்தில, AVMக்கும், சிவாஜிக்கும் ஏதோ லே..........சான லடாய். அதெல்லாம் பரவாயில்லன்னு நெனச்சு, சரவணன், முருகன், குமரன் மூணு பேரும், சிவாஜியை சந்திக்க, அவரோட வீட்டுக்கு போனாங்க. 

உத்தர் புருஷ் படத்தை சிவாஜிக்கு போட்டு காட்டினாங்க. ஆனா அவர் என்ன சொன்னார்னாக்கா, “நான் ஹீரோவா நடிக்க புடிக்கல. அதுல வர்ற டாக்டரா நடிக்கிறேன். சின்ன வேஷம்தான் பரவாயில்ல. கெஸ்ட்டா நடிக்கிறேன்”ன்னு சொல்லிட்டார். 

என்ன இவர் இப்டீ சொல்றார்னு மூணு பேரும் யோசிச்சாங்க. சரவணன் விடல. அவர்ட்ட பேசி கீசி, சம்மதிக்க வச்சுட்டார். கதாநாயகனாக சிவாஜி நடிச்சுட்டார். ஆனா முழு............ மனசோடு இல்ல. வேண்டா.............. வெறுப்போடுதான் நடிச்சார். ஆனாலும் படம் எப்படி? தூள் இல்ல? 


- பரணி

Heezulia
heezulia
heezulia
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 610
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 193

Back to top Go down

best Re: தெரிஞ்சதும் தெரியாததும்

Post by heezulia on Sat Mar 03, 2018 11:14 am

03.03.2018 

மனிதன் [1987] – மனித நேயம் நிறைந்த ரஜினியை மனசுல வச்சு வைக்கப்பட்ட பேர். படம் ஓஹோ. ஆனா 1953 ல இதே பேர்ல வந்த படம்..... வேஸ்ட்டா போச்சாம். அதனால் ரஜினியின் படத்துக்கு மனிதன்னு பேர் வைக்க வேணாம்னு சொன்னாங்களாம். AVM கேக்கல. மனிதன்ங்கற அதே பேரை ரஜினி படத்துக்கும் வச்சுட்டார்.

‘சுட்டாலு உன்னாரு ஜாக்கிரதா’. இது ஒரு தெலுங்கு படம். இதன் உரிமையை AVM வாங்கினார். ரஜினியை நடிக்க வைக்க ஆசைப்பட்டார். ரஜினிகூட பேசினார். அவர் என்னான்னா, ‘ஐயய்யோ, இந்தப் படமா? ஏற்கனவே நான் இந்தப் படத்தை பார்த்துட்டேன். இது எனக்கு செட்டே.....................ஆகாது. கமலை வேணும்னா நடிக்க வச்சுக்கோங்க.” ன்னுட்டார். சரவணன் விட்................டலயே. “நீங்கதான் நடிச்சாகணும்”னு கம்ப்..................பெல் பண்ணி சொல்லிட்டார்.

அந்தப் படத்தை விசுட்ட போட்டு காட்டினாங்க. அவரும் பார்த்தார். படத்தில நல்ல விஷயங்களை எல்லாரும் சேர்ந்து ஆராய்ச்சி செஞ்சாங்க. படத்தில அங்கங்க கொஞ்சம் changes பண்ண சொன்னார் விசு. ரஜினிக்கு ஏத்த மாதிரி படம் இருக்கணும்ல? இத்தன ஏற்பாடுகள் எந்த படத்துக்குன்னுதானே யோசிக்கிறீங்க. அதுதா.....................ன் ரஜினியின்  போக்கிரி ராஜா [1982].    நூ.................று நாள் ஓடிய படம்.

- பரணி

Heezulia
heezulia
heezulia
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 610
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 193

Back to top Go down

best Re: தெரிஞ்சதும் தெரியாததும்

Post by heezulia on Sat Mar 03, 2018 3:20 pm

03.03.2018

சகலகலா வல்லவன் [1982] – கமலுக்காகவே இந்தப் பேர் வைக்கப்பட்டுச்சாம்.

AVM தயாரிச்ச ப்ரமாண்டமான படங்கள்ல இதுவும் ஒண்ணு. வெள்ளி விழா படம். இந்த படத்தில ஒரு சண்டை ஸீன். அந்த சண்டை ஸீன்ல, அந்த லோகஷன்ல, சுவத்தில MGR படத்தின் போஸ்டர் ஒட்டியிருக்கும். அதை பார்த்த ரசிகர்கள், பயங்கரமா கைதட்டி விசிலடிச்சாங்க. இது ஒண்ணும் ஆச்சரியமில்ல.

AVMஇன் ரஜினி நடிச்ச பாயும் புலி படம். அதுலேயும் ஓர் சண்டை காட்சி. சுவத்தில MGR போஸ்ட்டர். ஷூட்டிங்க்கு முன்னால இந்த போஸ்ட்டரை ரஜினி பாத்திருக்கார். அந்த போஸ்ட்டரை ரஜினி எடுக்க சொல்லிட்டார். “எம்படத்தை பார்க்க வர்றவங்க, என்னை மட்டும்தான் பார்க்கணும். MGRங்கற பெரிய மனுஷர் மூலமா நான் பிரபலமாவது எனக்கு புடிக்கல.”ன்னு சொல்லிட்டாராம். அவர் விருப்பப்படியே MGR போஸ்ட்டரை எடுத்துட்டாங்களாம். வேற வழி?


- பரணி 

Heezulia
heezulia
heezulia
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 610
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 193

Back to top Go down

best Re: தெரிஞ்சதும் தெரியாததும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை