ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஏழு தாளங்கள்
 SK

``2 நிமிசம்தான் டைம்... அதுக்குள்ள தப்பிச்சி ஓடிரு!"
 SK

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

கரையே இல்லாத ஆறு
 T.N.Balasubramanian

குறுக்கு வழியில போனா நல்லா சம்பாதிக்கலாம்...!!
 SK

'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு
 SK

பாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி
 SK

துணை ராணுவத்தில் 55 ஆயிரம் பேரை சேர்க்க திட்டம்
 SK

ஆர்யாவின் வில்லன் அவதாரம்!
 SK

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்
 SK

1800 வாட்ஸ் ஆப் குழுக்கள்: பா.ஜ., அதிரடி
 SK

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 SK

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 கோபால்ஜி

கை தேர்ந்த அரசியல்வாதி - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 SK

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 SK

என் அப்பா.
 SK

அமெரிக்கர்களை மிரட்டி பணம் பறித்த புகார்: 21 இந்தியர்களுக்கு சிறை - நியூயார்க் நீதிமன்றம் உத்தரவு
 SK

சன்னி லியோனின் இன்னொரு பக்கம்!
 SK

வில்லியாக நடிக்க ஆசை!
 SK

‘திரில்’லர் படத்தில் நித்யா மேனன்!
 SK

வானுயர்ந்த சோலையிலே - புகைப்படங்கள் (தொடர் பதிவு)
 SK

போலி ரயில் டிக்கெட் தயாரித்து விற்பனை செய்தவா் கைது
 SK

‘சிங்கத்தின் வாலைப் பிடித்து விளையாடினால் வருத்தப்பட வேண்டியது வரும்’ அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை
 SK

சமந்தாவின் ‘யு டர்ன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
 ayyasamy ram

ஒரு பெக் தர்மம் பண்ணுங்க சாமி...!!
 ayyasamy ram

சினி துளிகள்
 ayyasamy ram

பூங்கொத்து விளையாட்டு
 ayyasamy ram

சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு
 கோபால்ஜி

குச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா
 ayyasamy ram

ஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்?
 ayyasamy ram

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

தெரிஞ்சதும் தெரியாததும்

Page 7 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

View previous topic View next topic Go down

best தெரிஞ்சதும் தெரியாததும்

Post by heezulia on Sat Dec 16, 2017 6:47 pm

First topic message reminder :

16.12.2017

'தெரிஞ்சதும் தெரியாததும்' - ஏன் இந்த தலைப்புன்னு நெனச்சாலும் நெனப்பீங்க. நான் சொல்ற விஷயங்கள் எதுவும் எனக்கு தெரியாதது போல ஒரு சிலருக்கு தெரியாம இருக்கலாம். மத்தவங்களுக்கு தெரிஞ்சிருக்கலாம். அதுதான் 'உங்களுக்கு தெரிந்ததும் எனக்கு தெரியாததும்'.

சந்திரபாபு பாட்டுக்களை நாம் எல்லாரும் கேட்டிருக்கோம்ல ? நல்லாவே பாடியிருப்பார். சரி, ஜேசுதாஸ் எப்படி? அவரும் நல்ல ஒரு பாடகர்தான். ஆனா ............. பறக்கும் பாவை படத்துல சந்திரபாபுக்காக ஜேசுதாஸ் ஒரு பாட்டு பாடியிருக்கார்.  அது என்ன பாட்டுன்னு சொல்லுங்க பார்ப்போம். சரி................, ஜேசுதாசுக்கு சந்திரபாபு பாடியிருக்காரா?

எம்.ஜி.ஆருக்கு கலங்கரை விளக்கத்தில பஞ்சு அருணாச்சலம் ஒரு பாட்டு எழுதியிருக்காராம். அது என்ன பா.........................ட்டு?

உரிமைக் குரல் [1974] அப்டீன்னு ஒரு படம் இருக்குல்ல. அதுல "விழியே கதை எழுது" ன்னு ஒரு பாட்டு இருக்குல்ல. இந்த பாட்ட எழுதியது யாருன்னு தெரியும்னு நெனக்கிறேன். கண்ணதாசன்தானாங்க. ஆனா, பாட்டு புத்தகத்துல, ஆடியோ கேசட்டுல, அதுமட்டுமில்லீங்க, படத்தோட டைட்டில்ல கூட வாலின்னு போட்டிருந்ததாமே. அந்த சமயத்தில எம்.ஜி.ஆருக்கும், கண்ணதாசனுக்கும் என்னவோ லடாயாம். அதனால ஸ்ரீதர் [உரிமைக்குரல் எம்.ஜி.ஆர வச்சு எடுத்த முதல் படமாம்] எம்.ஜி.ஆருக்கு தெரியாம கண்ணதாசன்கிட்டே பாட்டை எழுதி வாங்கிட்டு, வாலி பேர போட்டுட்டாராம். இந்த சமாச்சாரம் எப்படியோ எம்.ஜி.ஆருக்கு தெரிய வந்துச்சாம். வருத்தப்பட்டாராம் எம்.ஜி.ஆர்.

Baby Heerajan  மீண்டும் சந்திப்போம்  
avatar
heezulia
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 571
மதிப்பீடுகள் : 187

View user profile

Back to top Go down


best தெரிந்ததும் தெரியாததும்

Post by heezulia on Sun Jan 21, 2018 12:34 am

21.01.2018

நல்ல கதையம்சம். சக்……………கைபோடு போட்ட படம்.  இந்த வருஷத்திலே ஒரே வெள்ளிவிழா படமாம். நான் [1967] ன்னு ஒரு படம்.  

1967 ல காலேஜ் மாணவர்கள் ரொம்ப விரும்பி கேட்ட ஒரு ஆங்கில இசை "கம் செப்டெம்பர்".  ராமண்ணாவுக்கும் அந்த இசை கவர்ந்துச்சாம்.  ட்டி.கே.ஆர் கிட்ட  அவரோட இந்தப் படத்தில அந்த இசை வேணும்னு கேட்டாராம்.  அந்த ம்யூசிக் தான் எல்.ஆர்.ஈ. பாடிய "வந்தால் என்னோடு இங்கே வா தென்றலே" யாம்.   

கன்னையா இந்தப் படத்துலதான் "என்னத்த பார்த்தது...........என்னத்த தெரிஞ்சு" ன்னு சொல்லி 'என்னத்த கன்னையா' ஆனாராம். அப்போ அத சொல்லிட்டு, இப்போ "வரூ.....................ம்  ஆனா வரா.............து" ன்னு சொல்லி அசத்தினார்.  

"அதே முகம் அதே குணம்" பாட்டுல ஜெயலலிதா பிக்னில வர்றார்னு படிச்சேன். பார்த்தா..................... அது நிஜம்தான். நான் பார்த்த வேற படங்கள்ல அப்படி பார்த்ததில்ல.  

"வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்" னு ஒரு பழமொழி இருக்குல்ல?  ராமண்ணா இந்த பழமொழியை யூஸ் பண்ணிட்டார்.  "போதுமோ இந்த இடம்" பாட்டு பெட்டிக்குள்ள பாடுறாங்கல்ல?  அதான் ராமண்ணாவுக்கு "வல்லவனுக்கு காரும் லொக்கேஷன்."


*******************************
பௌடர் போடாம நாம வெளியே போவாமாங்க? போகமாட்டோம்ல!  ஆனா அந்த காலத்தில பெரிய நடிகை நடிகர்களை மேக்கப் போடாம நடிக்க வச்ச பெருமை ஸ்ரீதருக்கே சேரும்.  மேக்கப் இல்லாம நடிக்கவே மாட்டோம்னு சொல்றவங்க மத்தியிலே ஸ்ரீதர் இப்படி ஸ்டெப் எடுத்தது ஒரு ‘ஓ....’ போடலாம்ல?  போடலாமே!!! ஓ...........................ஹோ.   
ஆனா சிவாஜி மேக்கப் இல்லாம நடிப்பாரான்னு ஒரு சந்தேகம் இருந்துச்சாம்.  அதுக்கு ஒரு காரணம் இருக்கு.  பீம்சிங் இயக்கத்தில, ஒரு படத்ல, சிவாஜி நடிக்க, பீம்சிங் அக்ரிமென்ட் போட்டார். படத்துக்கு பூஜை நடந்துச்சு.  அப்போதான் பீம்சிங் சிவாஜிகிட்டே மேக்கப் இல்லாம நடிக்கணும்னு சொன்னாராம்.  அம்புட்டுதான். Back, Back, Back னு விலகிட்டாராம்.  படமும் நின்னே போச்சு.  அது இன்னா படம்னு யாருக்காவது தெரீமா?

ஆனா இந்த தடவை, ஸ்ரீதர் சிவாஜிகிட்டே என்ன சொன்னாரோ, அவர் நெஞ்சிருக்கும்வரை [1967] படத்துக்கு மேக்கப் இல்லாம நடிக்க ஒத்துகிட்டாராம்.  படமும் ஓஹோ ஹிட்டு. அதுலேயும் “பூ முடிப்பாள்” பாட்டு எல்லா கல்யாண வீட்டிலேயும் ஒலிக்கிற பாட்டு.

Heezulia
avatar
heezulia
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 571
மதிப்பீடுகள் : 187

View user profile

Back to top Go down

best தெரிஞ்சதும் தெரியாததும்

Post by heezulia on Sun Jan 21, 2018 3:36 am

21.01.2018

'The Brass Bottle'1964 என்ற அமெரிக்கன் படத்தை வச்சு வந்த படம்.
ஜெயசங்கருக்கு  முதல் கலர் படம்.  தமிழ்ப் படங்களில் முதன்முதலா ஹெலிகாப்டர் யூஸ் பண்ணின படம். என்ன படம்? பூதம் வந்துச்சே, எந்த படத்தில? அப்பாடா, கண்டு புடிச்சிட்டீங்களா? அதே அதே அதே.................தான். பட்டணத்தில் பூதம் [1967].


சில படங்களின் பாட்டுப் புத்தகங்களை கொஞ்சம்  வித்தியாசமா வெளியிடுவாங்களாம். அது போல் இந்தப்  படத்தின்  பாட்டுப் புத்தகம் ‘ஜாடி’ வடிவத்தில வெளியிட்டாங்களாமே. 

கோவர்த்தனம் இசையமைத்த  எல்லாப் படங்களுக்கும் பாடல்கள் தான் மொதல்ல எழுதப்பட்டதாம்.  அப்புறமாதான் ட்யூன் போட்டாராம்.  இப்படி ஒரு கொள்கையை வச்சிட்டிருக்கிற கோவர்தனம்க்கு  இந்தப் படத்தில ஒரு சோதனை  வந்திருச்சாம்.  ஒரே ஒரு ” டூயட்” பாட்டுக்கு ” கஜல் ” இசையில் பாட்டு அமைக்கணும்னு  அப்படத்தின் இயக்குனர் ஆசைப்பட்டாராம்.  

கண்ணதாசனும் பாட்டை எழுதிக் கொடுத்துட்டார்.  கோவர்த்தன் ” கஜல் ” முறையில் இசை அமைக்க ட்ரையோ ட்ரை செஞ்சாராம்.  

ஊஹும் .........................முடியல ! கண்ணதாசனின் பாடல் வரிகளை  மாத்தினா முடியும்போல இருந்துச்சாம்.  ஆனால் கண்ணதாசன் அந்தப் பாட்டை ரொம்ப நல்லா எழுதி இருந்ததால, கோவர்த்தனம் அத மாத்த மாட்டேன்னுட்டாராம். [இந்தப் பாட்டைக் கண்ணதாசன் எழுதியதுக்கு ஒரு காரணம் இருப்பதா படிச்சேன்.  அதுல கொஞ்சம் அரசியல் வாடை அடிக்கிறதால விட்டுட்டேன்]  எனவே , இயக்குனர்ட்ட கேட்டுட்டு, ” கஜல் ” எண்ணத்த  தள்........................ளி  வச்சுட்டு,  வீணை  இசையில  மெல்லிசையைப் போட்டு, ஓர்  அழகான பாடலை கொடுத்திருக்கார்.  இப்போ புரிஞ்சிருக்குமே, என்ன பாட்டுன்னு,  ஆமாங்க நீங்க நெனக்கிறது சரிதான்.  "அந்த சிவாகாமி மகனிடம் சேதி சொல்லடி, என்னை சேரும் நாள் பார்க்கச் சொல்லடி".  

Heezulia
avatar
heezulia
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 571
மதிப்பீடுகள் : 187

View user profile

Back to top Go down

best தெரிஞ்சதும் தெரியாததும்

Post by heezulia on Sun Jan 21, 2018 11:33 am

21.01.2018

‘எதிர்நீச்சல்’ னு ஒரு நாடகத்தை நடத்த நெனச்சாராம், பாலச்சந்தர்.  சினிமான்னா போதும், ஒரே பைத்தியம். எதுக்கெடுத்தாலும் சினிமாவைத்தான் உதாரணமா சொல்லுவார். அப்படி ஒரு லேடி கேரக்டர் அந்த நாடகத்தில. அதுக்கு யார போடலாம்னு ஒரே................ யோசனையாம் அவருக்கு.  சரி, சௌகார்ஜானகி இதுக்கு பொருத்தமா இருப்பார்னு நெனச்சாராம்.  ஆனாலும், மேடையில படபடப்பில்லாம, வசனங்களை நல்ல உச்சரிச்சு நடிப்பாரான்னு ஒரு சந்தேகம் வந்திருச்சாம் பாலச்சந்தருக்கு. பயமும்தான்.  

இருந்தாலும் அந்த ரோலுக்கு சௌகார்தான் கரீட்டா இருப்பார்னு தெகிரியமா மேடையில ஏத்தி விட்டுட்டாராம்.  சௌகாரின் நடிப்பைப் பார்த்து ரசிகர்கள் கைதட்டி நல்லா...........வே ரசிச்சாங்களாம்.  பாலச்சந்தரும் சந்தோஷம் தாங்காம, சந்தோஷத்த எப்படி காட்டினார் தெரியும்ல?  துள்...................ளி குதிச்சார்.  

நாடகத்துக்கு நல்ல வரவேற்பு கெடச்சா, அத ஒட்.....................டனே படமாக்கிருவார்ல!  அப்டித்தான் இந்த நாடகமும்.  அதே பேர்ல படமாக்க ஆசைப்பட்டார்.  1968ல படமும் ரிலீஸ் ஆச்சு. படத்திலேயும் சௌகார்தான் அந்த ரோலுக்கு சூட் ஆவார்னு தீர்மானம் செஞ்சு, அவரையே நடிக்க வச்சிருக்காராம்.  படம் எப்படி? சூப்பர்ல?


Heezulia  மீண்டும் சந்திப்போம்
avatar
heezulia
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 571
மதிப்பீடுகள் : 187

View user profile

Back to top Go down

best Re: தெரிஞ்சதும் தெரியாததும்

Post by heezulia on Sun Jan 21, 2018 11:59 am

21.01.2018
 
முந்தீல்லாம் நடிக்கிறவங்களே பாடி நடிச்சுட்டு இருந்தாங்க. ஆனா இப்போ? பாஷையே தெரியாமல நடிக்கிறாங்க. பின்னணி பேசுறதுக்கு யாராவது தேவைப்பட்றாங்க. அப்புறமா, எங்கேயிருந்து பாட்றது. இப்படி பின்னணி பாட்றது எப்போ ஆரம்பிச்சுதுன்னு தெரியணும்ல. தெரிஞ்சுக்கலாமா?
  
1937ல, சிந்தாமணி படத்ல, MKT & அசுவத்தம்மா சேர்ந்து நடிச்சாங்களாம். அப்போ ரெண்டு பேருக்கும் duet பாட்டு இருக்கும்ல. ஆனா பாட்டு பாடறதில ஒரு ப்ராப்ளம். அசுவத்தமா இருக்காஹளே, அவுஹ, MKTகூட பாடமாட்டேன்னுட்டாஹளாம். சேர்ந்து நடிப்பாங்களாம், ஆனா, பாட மாட்டாங்களாம். அவங்களுக்குள்ள என்ன லடாயோ.

என்னமோ. சரி, பாடமாட்டேன்ட்டாங்களா? கர்னாடக இசையில ஜாம்பவனாமே வித்துவான் ராஜகோபால் சர்மா, அவர்தான் MKTக்கு பாடி, அந்தப் பாட்டு ரெக்கார்ட் ஆச்சாம். இதுல இருந்து என்ன தெரீது, வித்வான் ராஜகோபால் சர்மாதான், பின்னணி பாட்டு பாடறவங்களுக்கு முன்னோடி. அப்படிதானே, அப்படித்தான்.
இதே………………. மாதிரி இன்னொரு சமாச்சாரம். சாந்தா சக்குபாய்னு [1939] ஒரு படம். அசுவத்தம்மா நடிச்சது. அப்போ, அவருக்கு உடம்பு சரியில்லயாம். பாட முடியலியாம். VR தனம்னு ஒருத்தர் அவருக்காக பின்னணி பாடினாராம். 

1945ல AVMன் ஸ்ரீவள்ளி படம். TR மகாலிங்கம், குமாரி ருக்மணி நடிச்சது.  இந்தப் படத்ல ருக்மணி பாடியிருந்தார். படத்த செட்டியார் பார்த்தாராம். TR மகாலிங்கம் ஹை.......... பிட்ச்ல பாட்றவராமே. இவர் குரலுக்கு, ருக்மணியின் குரல் சரிபட்டு வரலியோன்னு செட்டியார் நெனச்சாராம். PA பெரியநாயகின்னு ஒருத்தராம். அவர் மேடைக் கச்சேரியில பாடிட்டு இருந்தவராம். ருக்மணிக்கு பதிலா, இந்த பெரியநாயகியை பாடவச்சு, படத்ல சேர்த்தாராம்.

அப்புறமா இதே.......... மாதிரி பின்னணி பாட்றது தொடர்ந்துட்டு வருது.
 
Heezulia  மீண்டும் சந்திப்போம்
avatar
heezulia
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 571
மதிப்பீடுகள் : 187

View user profile

Back to top Go down

best Re: தெரிஞ்சதும் தெரியாததும்

Post by மூர்த்தி on Sun Jan 21, 2018 12:44 pm

முந்தீல்லாம் நடிக்கிறவங்களே பாடி நடிச்சுட்டு இருந்தாங்க. ஆனா இப்போ? பாஷையே தெரியாமல நடிக்கிறாங்க. பின்னணி பேசுறதுக்கு யாராவது தேவைப்பட்றாங்க.

அதனால்தான் இன்றைய படங்கள் தொழில் நுட்பம் சிறந்து இருந்தாலும் படங்கள்,நடிப்பு நன்றாக இருப்பதில்லையோ .
avatar
மூர்த்தி
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1046
மதிப்பீடுகள் : 506

View user profile

Back to top Go down

best தெரிஞ்சதும் தெரியாததும்

Post by heezulia on Sun Jan 21, 2018 4:24 pm

21.01.2018 

நடிப்பு இல்லேன்னா என்ன, அந்த தொழில் நுட்பம் என்னா...............மாதிரி டெவலப் ஆகியிருக்கு. சங்கர் படம்ல்லாம் பாத்திருக்கீங்களா? நடிப்பை யார் சா................ர் ரசிக்கிறோம். நான் கிராஃபிக்ஸை      நல்..................லா ரசிப்பேன். பார்க்க எவ்ளோ....................... பிரம்மா...............ண்டமாய் இருக்கு. 

Heezulia 
avatar
heezulia
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 571
மதிப்பீடுகள் : 187

View user profile

Back to top Go down

best Re: தெரிஞ்சதும் தெரியாததும்

Post by Dr.S.Soundarapandian on Sun Jan 21, 2018 9:12 pm

:நல்வரவு:
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4616
மதிப்பீடுகள் : 2445

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

best Re: தெரிஞ்சதும் தெரியாததும்

Post by SK on Mon Jan 22, 2018 11:01 am

@sk wrote:[இந்தப் பாட்டைக் கண்ணதாசன் எழுதியதுக்கு ஒரு காரணம் இருப்பதா படிச்சேன். அதுல கொஞ்சம் அரசியல் வாடை அடிக்கிறதால விட்டுட்டேன்]

அந்த சிவாகாமி மகனிடம்

கர்மவீரர் நன்றி நன்றி
avatar
SK
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6460
மதிப்பீடுகள் : 1140

View user profile

Back to top Go down

best தெரிஞ்சதும் தெரியாததும்

Post by heezulia on Mon Jan 22, 2018 11:14 am

22.01.2018 

அதே .................... அதே.

Heezulia 
avatar
heezulia
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 571
மதிப்பீடுகள் : 187

View user profile

Back to top Go down

best Re: தெரிஞ்சதும் தெரியாததும்

Post by SK on Mon Jan 22, 2018 11:37 am

நான் கேட்ட பாடல் கிடைத்ததா
avatar
SK
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6460
மதிப்பீடுகள் : 1140

View user profile

Back to top Go down

best Re: தெரிஞ்சதும் தெரியாததும்

Post by heezulia on Mon Jan 22, 2018 12:03 pm

@heezulia wrote:20.01.2018 
SK ,  நீங்க ஒரு பாட்டு  கேட்டிருந்தீங்க.
பாடல் : என்னம்மா வருத்தம் வானம்தான்
படம் : பத்தினிப் பெண் 1993 
பாடியவர் : SPB  
இயக்குனர் : RC சக்தி 
இசை : MS விஸ்வநாதன் 
நடிச்சவங்க : ரூபினி, ஜனகராஜ், நிழல்கள் ரவி, கோபாலகிருஷ்ணன், சந்திரசேகர். 
ஆனா ஒரு விஷயம் SK . இந்தப் பாட்டு கேக்குறமாதிரி கிடைக்கல. நீங்க சோம்பேறித்தனமில்லா.................ம, டௌன்லோடிதான் கேக்கணும். சிரமப்பட்டுதான் கெடச்சுது. 
Heezulia
மேற்கோள் செய்த பதிவு: 1257436 

22.01.2018 

இதை நீங்க பாத்தீங்களா இல்லியா? 

Heezulia
avatar
heezulia
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 571
மதிப்பீடுகள் : 187

View user profile

Back to top Go down

best Re: தெரிஞ்சதும் தெரியாததும்

Post by T.N.Balasubramanian on Mon Jan 22, 2018 3:18 pm

@heezulia wrote:
@heezulia wrote:20.01.2018 
SK ,  நீங்க ஒரு பாட்டு  கேட்டிருந்தீங்க.
பாடல் : என்னம்மா வருத்தம் வானம்தான்
படம் : பத்தினிப் பெண் 1993 
பாடியவர் : SPB  
இயக்குனர் : RC சக்தி 
இசை : MS விஸ்வநாதன் 
நடிச்சவங்க : ரூபினி, ஜனகராஜ், நிழல்கள் ரவி, கோபாலகிருஷ்ணன், சந்திரசேகர். 
ஆனா ஒரு விஷயம் SK . இந்தப் பாட்டு கேக்குறமாதிரி கிடைக்கல. நீங்க சோம்பேறித்தனமில்லா.................ம, டௌன்லோடிதான் கேக்கணும். சிரமப்பட்டுதான் கெடச்சுது. 
Heezulia
மேற்கோள் செய்த பதிவு: 1257436 

22.01.2018 

இதை நீங்க பாத்தீங்களா இல்லியா? 

Heezulia
மேற்கோள் செய்த பதிவு: 1257571

முக்கியமாக SK பார்க்கவேண்டுமெனில்,பதிவிற்கு முடிவில்
@SK என்று tag பண்ணவும்.

ரமணியன்
@Heezulia


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22277
மதிப்பீடுகள் : 8298

View user profile

Back to top Go down

best Re: தெரிஞ்சதும் தெரியாததும்

Post by SK on Mon Jan 22, 2018 3:55 pm

பார்த்துவிட்டேன் டவுன்லோட் செய்ய முடியவில்லை
avatar
SK
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6460
மதிப்பீடுகள் : 1140

View user profile

Back to top Go down

best தெரிஞ்சதும் தெரியாததும்

Post by heezulia on Mon Jan 22, 2018 4:12 pm

22.01.2018

சரி ரமணியன் சார். அப்படியே செய்கிறேன். எனக்கு தெரியாதுல்ல. 

ஆனா எனக்கு ஒரு டௌட். 
@heezulia wrote:20.01.2018 
SK ,  நீங்க ஒரு பாட்டு  கேட்டிருந்தீங்க.
மேற்கோள் செய்த பதிவு: 1257436
இப்படி quote செஞ்சிருக்கேனே. அதில SK ன்னு இருக்கே. 

Heezulia 
avatar
heezulia
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 571
மதிப்பீடுகள் : 187

View user profile

Back to top Go down

best தெரிஞ்சதும் தெரியாததும்

Post by heezulia on Mon Jan 22, 2018 4:25 pm

22.01.2018

ஏன் SK டௌன்லோட முடியல. sign up பண்ண சொல்லுதா. செய்ங்க. அந்த தளத்தில எத்தனை ஆயிரம் பாட்டு இருக்குன்னே தெரியாது. எந்த பாட்டை கேட்டாலும் 95% கொடுக்கக்கூடிய தளம் அது. sign up பண்றதில "என்னம்மா வருத்தம்?" அந்தப் பாட்டு உங்களுக்கு வேணும்னா அது சொல்றபடி நீங்க கேட்டுத்தான் ஆகணும். ஏன்னா அந்த பாட்டு வேற இடத்தில கெடக்கலியே. சரி SK, உங்க இஷ்டம். நீங்க கேட்ட பாட்டு கொடுத்துட்டேன். அம்புட்டுதான் என் வேல.

Heezulia  
@SK
avatar
heezulia
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 571
மதிப்பீடுகள் : 187

View user profile

Back to top Go down

best Re: தெரிஞ்சதும் தெரியாததும்

Post by T.N.Balasubramanian on Mon Jan 22, 2018 4:33 pm

@heezulia wrote:22.01.2018

சரி ரமணியன் சார். அப்படியே செய்கிறேன். எனக்கு தெரியாதுல்ல. 

ஆனா எனக்கு ஒரு டௌட். 
@heezulia wrote:20.01.2018 
SK ,  நீங்க ஒரு பாட்டு  கேட்டிருந்தீங்க.
மேற்கோள் செய்த பதிவு: 1257436
இப்படி quote செஞ்சிருக்கேனே. அதில SK ன்னு இருக்கே. 

Heezulia 
மேற்கோள் செய்த பதிவு: 1257588

உங்கள் பதிவின் தலைப்பே "தெரிஞ்சதும் தெரியாததும்"தானே .
நீங்கள் புதியவர் ஆனதால் தெரியாத  டிப்ஸ் கொடுத்தேன்.
@ XXX  tag போடுவது, அது ,அவரை மனதில் கொண்டு,அவருக்காக எழுதப்பட்ட பதிவு
என அர்த்தம். அதனால்தான் அது bold எழுத்துக்களில் கவரும் வண்ணம் உள்ளது.
அதை பார்ப்பதும்,பார்த்து பதில் இடுவதும் அவரவர் விருப்பம் அல்லவா?
உங்களை போல் எல்லோரும் இருப்பார்களா? tag ஐ பார்த்து உடனே மறுமொழி இட்டதை கூறுகிறேன்.

tag பண்ணவேண்டும் என்ற அவசியமில்லைதான்! நீங்கள் SK என்றே குறிப்பிட்டு உள்ளீர்.அதற்கும் பதில் மெதுவாக வரலாம். பொதுவாக 5 மணி சுமாருக்கு அவர் அம்பேல் ஆவது சகஜம்.

(SK தவறாக நினைக்கவேண்டாம்)

ரமணியன்
@Heezulia


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22277
மதிப்பீடுகள் : 8298

View user profile

Back to top Go down

best Re: தெரிஞ்சதும் தெரியாததும்

Post by SK on Mon Jan 22, 2018 4:38 pm

ஆம் ஐயா நான் இன்று 4 மணிக்கே கம்பி நீட்டிவிடலாம் என்று இருந்தேன்
avatar
SK
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6460
மதிப்பீடுகள் : 1140

View user profile

Back to top Go down

best Re: தெரிஞ்சதும் தெரியாததும்

Post by T.N.Balasubramanian on Mon Jan 22, 2018 6:59 pm

@SK wrote:ஆம் ஐயா நான் இன்று 4 மணிக்கே கம்பி நீட்டிவிடலாம் என்று இருந்தேன்
மேற்கோள் செய்த பதிவு: 1257594

தங்கம் ஐயா நீங்க!
1 கிராம் தங்கத்தை 3 கிலோமீட்டர் கம்பியாக நீட்டலாம். என்பது ஆராய்ச்சி.
(1 கிராம் தங்கத்தை என்கிட்டே கொடுங்க. காணாத தூரத்திற்கு கம்பி நீட்டுகிறேன்
என்று கூறுபவர்களும் உண்டு
)

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22277
மதிப்பீடுகள் : 8298

View user profile

Back to top Go down

best தெரிஞ்சதும் தெரியாததும்

Post by heezulia on Mon Jan 22, 2018 9:25 pm

22.01.2018


எங்க, எங்க, எங்.....................க கம்பி நீட்டிட்டு போக போறீங்க, ரெண்டு பேரும்? அம்புட்டு ஈஸியா உட்டுர்வேனா.................?  அது.............என்னவோ ஒரு பாட்டு உண்டே. "என்னை விட்டுட்டு போக முடியாது"ன்னு என்னவோ வரும். ஒரு பழைய பாட்டு. அதுமாதிரிதான், 

தங்கம் விக்கிற வெலைல, பாலு சாருக்கு, தங்...............கம் வேற வேணுமா தங்கம்?  SK  SK, தங்கத்த குடுத்து ஏமாந்துறாதீங்க. எதை செய்யணும்னாலும் யோசிச்சு செய்ங்க, ஆ.................மா.

Heezulia மீண்டும் சந்திப்போம்
avatar
heezulia
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 571
மதிப்பீடுகள் : 187

View user profile

Back to top Go down

best Re: தெரிஞ்சதும் தெரியாததும்

Post by heezulia on Tue Jan 23, 2018 10:39 am

22.01.2018

ஆ.............ங், இப்போ ஞாபகம் வந்துருச்சு, அது என்ன பாட்டுன்னு. 

"என்னை விட்டு ஓடிப் போக முடியுமா, அது முடியுமா" 

Heezulia
avatar
heezulia
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 571
மதிப்பீடுகள் : 187

View user profile

Back to top Go down

best Re: தெரிஞ்சதும் தெரியாததும்

Post by SK on Tue Jan 23, 2018 12:03 pm

@heezulia wrote:22.01.2018

ஆ.............ங், இப்போ ஞாபகம் வந்துருச்சு, அது என்ன பாட்டுன்னு. 

"என்னை விட்டு ஓடிப் போக முடியுமா, அது முடியுமா" 

Heezulia
மேற்கோள் செய்த பதிவு: 1257626

போனால் மட்டும் விட்ருவீங்களா தொறத்திட்டு வருவீங்க தானே
avatar
SK
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6460
மதிப்பீடுகள் : 1140

View user profile

Back to top Go down

best தெரிஞ்சதும் தெரியாததும்

Post by heezulia on Mon Jan 29, 2018 7:24 pm

29.01.2018

கே.எஸ்.ஜி.யின் திறமைக்கு இன்னொரு சர்டிபிகேட் இந்தப் படமாம்.  பயங்கரமான வசூலைத் தந்த படமாம். 

ஒரு புது தகவல்.  அந்த காலத்தில புதுப் படங்கள் ரிலீஸ் ஆனாக்கா, பரிசுப்போட்டில்லாம் நடத்தினாங்களாம்.  அந்த  அளவுக்கு ஜனங்கள் சினிமா பைத்தியங்களா இருந்தாங்களாம்.  

அப்போதான் இந்த பணமா பாசமா ரிலீஸ் ஆச்சாம்.  இந்தப் படத்தின் நூறாவது நாளில டிக்கெட் கட்டணம் அரைக்கட்டணமா ஆக்கினாங்களாம்.  இந்த சம்பவம் சென்னையில ராணி தியேட்டராமே,  அங்கே நடந்துச்சாம்.  

"எலந்த பயம்" பாட்டு பட்டிதொட்டி எல்லாம் கன்னாபின்னான்னு பேரு பெற்ற பாட்டு, இல்லியா?  விஜயநிர்மலாவுக்காக எல்.ஆர்.ஈ. பாடிய பாட்டு.  இந்தப் பாட்டு தியேட்டர்ல ஒலிக்கும்போது ஒரே விசில் சத்தம் பிச்சுகிட்டு போச்சாம்.  விஜயநிர்மலாவுக்கு 'அலேக் நிர்மலா' னு பேர் வாங்கி தந்த படமாம்.  ரஷ்யாவிலேயும் இந்தப் படம் திரையிட்டு புகழ் பெற்றுச்சாமே.  

பணத்திமிர் பிடித்த மாமியார் ரோலுக்கு கே.எஸ்.ஜி.க்கு  எஸ்.வரலட்சுமியை நடிக்க வைக்க கொஞ்சங்........... கூட பிடிக்கலயாம்.  

சாவித்திரிகிட்ட போயி, "நீ அந்த இடத்திற்கு ரொம்ப பொருத்தமா நடிப்பே.  நீயே நடியேன்." ன்னு கெஞ்சினாராம்.  சாவித்திரி  யோசிச்சாராம்.  "ஹீரோ ஜெமினி.  அவருக்கு மாமியாரா நடிக்கிறதா ?"  இப்படித்தான் அவர் யோசிச்சாராம். 

அப்புறமா கே.எஸ்.ஜி.கிட்டே போயி, "நான் நடிக்க தயார்.  ஆனா ஒரு கண்டிஷன்." இப்படி சொன்னாராம்.  

கே.எஸ்.ஜி.யும் "சரி சரி, என்ன கண்டிஷன்னு சொல்லு" ன்னாராம்.  

"ஹீரோவை மாத்துங்க, அப்படீன்னா நடிக்கிறேன்" ன்னு சொன்னாராம்.  கே.எஸ்.ஜி.கோ அந்த ரோலுக்கு ஜெமினிதான் சரியானவர்னு தோணுச்சாம்.  அவரை மாத்த மனசில்லை.  

அவரது நிலையை தெரிஞ்சுகிட்ட சாவித்திரி, கே.எஸ்.ஜி.கிட்ட, "சார், வேணுமின்னா ஒண்ணு செய்யலாம்.  வரலட்சுமிக்கு நானே ட்ரெய்னிங் கொடுக்கிறேன்" னு சொல்லிட்டு கோச்சிங் கொடுத்தாராம்.  

ஏன், அந்த வரலட்சுமிக்கு சரியா நடிக்க வராதா?

அதுசரி................சாவித்திரிக்கு திமிர் புடிச்ச கேரக்டர்ல நடிப்பாரா? Heezulia  மீண்டும் சந்திப்போம்  
avatar
heezulia
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 571
மதிப்பீடுகள் : 187

View user profile

Back to top Go down

best தெரிஞ்சதும் தெரியாததும்

Post by heezulia on Mon Jan 29, 2018 9:11 pm

29.01.2018

சத்யா மூவீஸ் தயாரிப்புன்னாலே எம்.ஜி.ஆர். நடிக்கிற படமாத்தான் இருக்குமாம்.  ஆர்.எம்.வீரப்பன் இருக்காஹளே, அவுஹ எம்.ஜி.ஆரைத் தவிர வேற ஒருத்தரையும் வச்சு படம் எடுத்தாராம்.  இதுக்கு காரணம் என்னான்னு நெனக்கிறீங்க? அப்போதைய சூப்பர் ஸ்டார் எம்.ஜி.ஆர்.தான் காரணமாங்க.  

மத்தவங்களும் சத்யா மூவிஸால பயனடையணும்னு நல்ல எண்ணத்தால இப்படி ஒரு ஏற்பாட்டை செஞ்சாராம்.  அதனாலதான் வீரப்பன் இந்தப் படத்த ஜெயசங்கர வச்சு எடுத்தாராம்.  ஆனா 'சத்யா மூவீஸ்' என்கிற பேர்ல இல்லாம, 'சத்யா பிலிம்ஸ்' என்கிற பேர்ல, கன்னிப்பெண் என்கிற இந்தப் படத்த எடுத்தாராம்.  எம்.ஜி.ஆர் படத்துக்கு மட்டும்தான் 'சத்யா மூவிஸாம்.

சத்யா மூவீஸ் ஆர்.எம்.வீரப்பன் படம் என்கிறதால  விநியோகஸ்தர்களில் ஒருவர் உணர்ச்சி வசப்பட்டுட்டாராம். அதாவது ஒரு ஆர்வக்கோளாறினால ஒரு நியூஸ் பேப்பர்  விளம்பரத்தில், ‘புதிய புரட்சி நடிகர் ஜெய் நடிக்கும்’ என்று தெரியாத்தனமா  விளம்பரப்படுத்தப்போக, விஷயம் எம்.ஜி.ஆர் காதுக்குப் போயிருச்சாம். அம்புட்டுதானாம். 

அந்த சமயத்தில  ‘நம் நாடு’ படம் வேற ரிலீஸ் நேரமாம்.  ஒடனே ஆர்.எம்.வீ.யை  கூப்பிட்டு  அனுப்பிச்சாராம் எம்.ஜி.ஆர். கன்னா................பின்னான்னு லெப்ட் ரைட் வாங்கிட்டாராம்.  அதே............... வேகத்துடன், ஆர்.எம்.வீ, அந்த விநியோகஸ்தர்  கிட்டே போயி, கா.................ச் மூச்சுன்னு  கத்தி,  அவரோட உரிமையை கேன்ஸல் செஞ்சுட்டு, பிரிண்ட்களையும்  திரும்ப வாங்கிட்டு போயிட்டாராமே.  அப்படியாங்க விஷயம்!!! 


Heezulia  மீண்டும் சந்திப்போம்
avatar
heezulia
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 571
மதிப்பீடுகள் : 187

View user profile

Back to top Go down

best தெரிஞ்சதும் தெரியாததும்

Post by heezulia on Mon Jan 29, 2018 9:41 pm

29.01.2018

எஸ்.வி.சுப்பையா தயாரிக்கும் தன்னோட ஒரு படத்தில சிவாஜி கௌரவ வேஷத்தில நடிக்கணும்னு ஆசைப்பட்டாராம்.  சிவாஜிகிட்டே  கேட்டாராம்.  கூட நடிக்கிற நடிகராச்சேன்னு நட்புக்காக சிவாஜியும் “உம்” சொல்லிட்டாராம்.  சம்பளம் வேண்டாம்னுட்டாராம். என்ன படத்துக்கு? 'காவல் தெய்வம் 1969' படத்துக்கு.  

ஆனா பாருங்க, சிவாஜிக்கான காட்சிகள் போகப் போக கூடிகிட்டே போச்சாம்.  அதனால சுப்பையா சிவாஜிக்கு சம்பளம் குடுத்துறலாம்னு நெனச்சு,  சம்பளத்த சிவாஜிகிட்டே குடுத்தாராம்.  அவரோ “ஊஹும்” னுட்டாராம்.


Heezulia மீண்டும் சந்திப்போம்
avatar
heezulia
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 571
மதிப்பீடுகள் : 187

View user profile

Back to top Go down

best தெரிஞ்சதும் தெரியாததும்

Post by heezulia on Mon Jan 29, 2018 10:04 pm

29.01.2018

எஸ்.வி.சுப்பையா தயாரிக்கும் தன்னோட ஒரு படத்தில சிவாஜி கௌரவ வேஷத்தில நடிக்கணும்னு ஆசைப்பட்டாராம்.  சிவாஜிகிட்டே  கேட்டாராம்.  கூட நடிக்கிற நடிகராச்சேன்னு நட்புக்காக சிவாஜியும் “உம்” சொல்லிட்டாராம்.  சம்பளம் வேண்டாம்னுட்டாராம். என்ன படத்துக்கு? 'காவல் தெய்வம் 1969' படத்துக்கு.  

ஆனா பாருங்க, சிவாஜிக்கான காட்சிகள் போகப் போக கூடிகிட்டே போச்சாம்.  அதனால சுப்பையா சிவாஜிக்கு சம்பளம் குடுத்துறலாம்னு நெனச்சு,  சம்பளத்த சிவாஜிகிட்டே குடுத்தாராம்.  அவரோ “ஊஹும்” னுட்டாராம்.


Heezulia  மீண்டும் சந்திப்போம்  
avatar
heezulia
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 571
மதிப்பீடுகள் : 187

View user profile

Back to top Go down

best Re: தெரிஞ்சதும் தெரியாததும்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 7 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum