உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» வாய்மையும் பொய்மையும் - கவிதை
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» புரட்சிப்பெண் நான்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» அறமற்ற அரசு – கவிதை
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:21 pm

» QATARம் கண்ட ராஜா-பிறந்த நாளில்  வாழ்த்துவோம், வாருங்கள் .
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» வேலன்:-பிடிஎப் பைல்களை இமெஜ் பைல்களாக மாற்ற -Weeny Free PDF to Image Converter
by velang Yesterday at 9:29 pm

» யுவன் சங்கர் ராஜா: தமிழ் சினிமாவில் தடம் பதித்து 23 ஆண்டுகள்
by ayyasamy ram Yesterday at 8:13 pm

» 100-ஆ! ஊஹூம்!
by T.N.Balasubramanian Yesterday at 7:48 pm

» கனகதாரா !! Short story by Krishnaamma
by T.N.Balasubramanian Yesterday at 7:41 pm

» தமிழகம் முழுவதும் பறவைகள் கணக்கெடுப்பு தொடக்கம்:
by T.N.Balasubramanian Yesterday at 7:34 pm

» ஜோதிடப்பிரியரா?எப்போது திருமணம் - தெரிந்து கொள்ள ஒரு சூத்திரம்!
by T.N.Balasubramanian Yesterday at 7:29 pm

» H-1B விசாவில் அமெரிக்கா சென்ற சிங்கத்தின் கதை.
by T.N.Balasubramanian Yesterday at 7:22 pm

» வார்த்தை ஜாலங்கள்
by T.N.Balasubramanian Yesterday at 7:02 pm

» ஒப்பனை – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஐந்தரிசி பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» சொல்லும் விதத்தில் வெல்லலாம்-வார்த்தை விளையாட்டு
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» அடிமையும் சிங்கமும் கதை (ஒரு நிமிடம்)
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தாலி கட்டற நேரத்திலே பொண்ணு ஓடிப்போயிட்டா...! ஆறு வித்தியசம் கண்டுபிடி
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பருவநிலை மாற்றத்தினால் தனுஷ்கோடி வந்திருக்கும் பிளமிங்கோ வெளிநாட்டு பறவைகள்:
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» சர்.சி.வி.ராமன் ஆராய்ச்சி வெளியான நாள் இன்று தேசிய அறிவியல் தினம்
by ayyasamy ram Yesterday at 5:16 pm

» ஹாலிவுட்டின் ‘நடிகையர் திலகம்’ இன்று(பிப்.27) எலிசபெத் டெய்லர் பிறந்தநாள்
by ayyasamy ram Yesterday at 5:15 pm

» எங்கள் நடுவர் ஒரு முட்டாள்…!
by சக்தி18 Yesterday at 4:24 pm

» ஆன்மீக தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:46 pm

» உலகின் தலைசிறந்த சொல்..!!
by ayyasamy ram Yesterday at 3:45 pm

» வீட்டுக் குறிப்புகள் -10
by ayyasamy ram Yesterday at 3:44 pm

» மொய் கவரை டேபிளுக்கு அடியிலே தர்றாங்களே...!!
by ayyasamy ram Yesterday at 3:42 pm

» பிடித்த கதை – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» ஸ்டார் வேல்யூ உள்ள திருவோடு..!
by ayyasamy ram Yesterday at 3:34 pm

» பாடு மனமே…!- ரசித்த கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 3:29 pm

» பூண்டி ஏரிக்கு முதல் முறையாக ஒரே தவணையில் 6 டி.எம்.சி. கிருஷ்ணா தண்ணீர் வந்தது
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» உரிமையாளர்கள் ஸ்டிரைக்- கேன் குடிதண்ணீர் சப்ளை பாதிப்பு
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» காலம் - ஒரு வரலாற்றுச் சுருக்கம் - ஸ்டீஃபன் ஹாக்கிங் புத்தகம் இருந்தால் பகிரவும்
by ஞானமுருகன் Yesterday at 2:21 pm

» கணக்கு வாத்தியாரும் செக்கு மாடும்! குட்டிக் கதை (படிக்கும் நேரம் 2 நி.12 .வினாடிகள்)
by SK Yesterday at 10:45 am

» நான் சிரித்தால் – சினிமா விமரிசனம்
by ayyasamy ram Yesterday at 8:28 am

» கைரேகை பார்க்கத் தெரிந்த நடிகை பி.பானுமதி
by ayyasamy ram Yesterday at 8:27 am

» பீர்பால் பெருமை
by ayyasamy ram Yesterday at 8:25 am

» தவிடு தூவி வழிபாடு
by ayyasamy ram Yesterday at 8:17 am

» பதவிக்கு வயது தடையல்ல…!
by ayyasamy ram Yesterday at 8:16 am

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 6:51 am

» 24 மணி நேரத்தில் 10 லட்சம் பாலோயர்: கலக்கும் ஜூனியர் ரொனால்டோ!
by ayyasamy ram Yesterday at 6:48 am

» அரையிறுதியில் இந்திய பெண்கள் அணி: உலக கோப்பையில் அசத்தல்
by ayyasamy ram Yesterday at 6:37 am

» மூன்று ஆண்டாக பூமியை சுற்றும் 'குட்டி நிலா'
by ayyasamy ram Yesterday at 6:35 am

» பாகிஸ்தான் செல்லும் சீன வாத்துப்படை
by ayyasamy ram Yesterday at 6:33 am

» கொரோனா பரவல்: ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்
by ayyasamy ram Yesterday at 6:30 am

» ஒரு நாடு, ஒரே ரேஷன்: மேற்கு வங்கம் இணைய மறுப்பு
by ayyasamy ram Yesterday at 6:29 am

» மெக்கா, மதீனா பயணம் ரத்து! முஸ்லிம்கள் கவலை
by ayyasamy ram Yesterday at 6:27 am

» என். கணேசன் புத்தகம் pdf
by prajai Thu Feb 27, 2020 11:17 pm

» `கடலூரில் லஞ்சம் வாங்கிய பெண் அதிகாரி!'- ஓய்வுக்கு 2 நாள்கள் இருந்த நிலையில் கைது
by T.N.Balasubramanian Thu Feb 27, 2020 8:32 pm

» திருமணங்களை ஏன் முகூர்த்த நாட்களில் செய்கிறார்கள்?
by T.N.Balasubramanian Thu Feb 27, 2020 8:31 pm

» கரகோரம் நெடுஞ்சாலை -காணொளி
by சக்தி18 Thu Feb 27, 2020 6:29 pm

Admins Online

தெரிஞ்சதும் தெரியாததும்

best தெரிஞ்சதும் தெரியாததும்

Post by heezulia on Sat Dec 16, 2017 6:47 pm

First topic message reminder :

16.12.2017

'தெரிஞ்சதும் தெரியாததும்' - ஏன் இந்த தலைப்புன்னு நெனச்சாலும் நெனப்பீங்க. நான் சொல்ற விஷயங்கள் எதுவும் எனக்கு தெரியாதது போல ஒரு சிலருக்கு தெரியாம இருக்கலாம். மத்தவங்களுக்கு தெரிஞ்சிருக்கலாம். அதுதான் 'உங்களுக்கு தெரிந்ததும் எனக்கு தெரியாததும்'.

சந்திரபாபு பாட்டுக்களை நாம் எல்லாரும் கேட்டிருக்கோம்ல ? நல்லாவே பாடியிருப்பார். சரி, ஜேசுதாஸ் எப்படி? அவரும் நல்ல ஒரு பாடகர்தான். ஆனா ............. பறக்கும் பாவை படத்துல சந்திரபாபுக்காக ஜேசுதாஸ் ஒரு பாட்டு பாடியிருக்கார்.  அது என்ன பாட்டுன்னு சொல்லுங்க பார்ப்போம். சரி................, ஜேசுதாசுக்கு சந்திரபாபு பாடியிருக்காரா?

எம்.ஜி.ஆருக்கு கலங்கரை விளக்கத்தில பஞ்சு அருணாச்சலம் ஒரு பாட்டு எழுதியிருக்காராம். அது என்ன பா.........................ட்டு?

உரிமைக் குரல் [1974] அப்டீன்னு ஒரு படம் இருக்குல்ல. அதுல "விழியே கதை எழுது" ன்னு ஒரு பாட்டு இருக்குல்ல. இந்த பாட்ட எழுதியது யாருன்னு தெரியும்னு நெனக்கிறேன். கண்ணதாசன்தானாங்க. ஆனா, பாட்டு புத்தகத்துல, ஆடியோ கேசட்டுல, அதுமட்டுமில்லீங்க, படத்தோட டைட்டில்ல கூட வாலின்னு போட்டிருந்ததாமே. அந்த சமயத்தில எம்.ஜி.ஆருக்கும், கண்ணதாசனுக்கும் என்னவோ லடாயாம். அதனால ஸ்ரீதர் [உரிமைக்குரல் எம்.ஜி.ஆர வச்சு எடுத்த முதல் படமாம்] எம்.ஜி.ஆருக்கு தெரியாம கண்ணதாசன்கிட்டே பாட்டை எழுதி வாங்கிட்டு, வாலி பேர போட்டுட்டாராம். இந்த சமாச்சாரம் எப்படியோ எம்.ஜி.ஆருக்கு தெரிய வந்துச்சாம். வருத்தப்பட்டாராம் எம்.ஜி.ஆர்.

Baby Heerajan  மீண்டும் சந்திப்போம்  
heezulia
heezulia
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 610
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 193

Back to top Go down


best Re: தெரிஞ்சதும் தெரியாததும்

Post by heezulia on Fri Dec 22, 2017 12:50 pm

22.12.2017 

மனிதன் - TKS சகோதரர்களுடையது. நாடகத்தைத் தழுவிய கதை. TK சண்முகம், TK பகவதி, SA நடராஜன், கிருஷ்ணகுமாரி, மாதுரிதேவி, பண்டரிபாய் நடிச்சிருந்தாங்க. நல்லா ஓடிய படம்.


வேற ஒரு நாடகத்தைத் தழுவி எடுக்கப்பட்ட படம் 'மனிதனும் மிருகமும்'. SD சுந்தரத்தின் கதை வசனம். இவரே K. வேம்புவுடன் சேர்ந்து இயக்கினார். சிவாஜி கணேசன், மாதுரிதேவி, MN ராஜம், SD சுந்தரம், K சாரங்கபாணி நடிச்சிருந்தாங்க. 

Heezulia 
heezulia
heezulia
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 610
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 193

Back to top Go down

best Re: தெரிஞ்சதும் தெரியாததும்

Post by heezulia on Fri Dec 22, 2017 12:56 pm

22.12.2017

இயக்குனர் ராமகிருஷ்ணா தனது மனைவி பானுமதியை இயக்குனரா அறிமுகப்படுத்த விரும்பி, 'சண்டிராணி' படத்தைத் தயாரிச்சார். இந்தப் படத்தை பானுமதி இயக்கியிருந்தார். தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் ஒரே நேரத்ல ரிலீசாச்சு. NTR, ஹீரோ. எஸ்.வி.ரங்காராவ், குமாரி துளசி, வித்யாவதி நடிச்சிருந்தாங்க. சி.ஆர்.சுப்பாராமனுடன் விஸ்வநாதன் இணைந்து இசையமைத்திருந்தார். வசூலைக் குவித்த படம் இது. 

சகஸ்ரநாமம் நடத்திய 'கண்கள்' நாடகம் அதே பெயரில் படமானது. சிவாஜி கணேசன், பண்டரிபாய், மைனாவதி, சகஸ்ரநாமம், எம்.என்.ராஜம், சந்திரபாபு, வி.கே.ராமசாமி நடிச்சிருந்தாங்க. என்.வி.ராஜாமணி வசனம் எழுதிய இப்படத்தை கிருஷ்ணன் - பஞ்சு இயக்கியிருந்தார். 

இதே ஆண்டில சிவாஜி கணேசனின் இன்னொரு படம் ரிலீசாச்சு. 'திரும்பிப் பார்'. மாடர்ன் தியேட்டர்ஸ் சார்பில் ட்டி.ஆர்.சுந்தரம் தயாரிச்சு இயக்கினார். கதை, திரைக்கதை, வசனம் கருணாநிதி. பண்டரிபாய், கிருஷ்ணகுமாரி, கிரிஜா, ட்டி.ப்பி.முத்துலட்சுமி, தங்கவேலு நடித்திருந்தாங்க. அடுத்தடுத்து ஹீரோவாக நடிச்ச படங்கள் சூப்பர் ஹிட் ஆனபோதும், துளியும் பின்வாங்காம, சிவாஜி கணேசன் தனது சினிமா கேரியரில் ஒரு புதுமையைக் கொண்டு வர, இந்தப் படத்தில் அவர் வில்லனா நடிக்க ஒப்புக்கொண்டார். காரணம் கருணாநிதியின் அழுத்தமான கதையும், படத்தின் பலமான வசனங்களும் தான். பல பெண்களுடன் தொடர்பு வைத்திருக்கும் ப்ளேபாய் வேஷத்தில் நடிச்சு, சிவாஜி அவரது நடிப்பில் இன்னொரு பரிணாமத்தைக் காட்டியிருந்தார். ஹீரோயனாக நடித்த கிருஷ்ணகுமாரி, சௌகார் ஜானகியின் தங்கை என்பது குறிப்பிடத்தக்கது. 


Heezulia
heezulia
heezulia
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 610
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 193

Back to top Go down

best Re: தெரிஞ்சதும் தெரியாததும்

Post by heezulia on Fri Dec 22, 2017 1:03 pm

22.12.2017

MGR ஐ முதன்முதலாக கதாநாயகனாக அறிமுகப்படுத்திய படம் 'ராஜகுமாரி'யாம். அந்தப்படத்தில் அவரோட கதாநாயகி மாலதியாம். கடைசியா நடிச்சு ரிலீஸ் ஆன படம் 'மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்'. [1979 ] இயக்கிய முதல் படம் நாடோடி மன்னனாம். 

MGR - சாவித்திரி ஜோடியாக நடிச்ச முதல் படம் 'மகாதேவி'யாம். சுந்தர் ராவ் நட்கர்னி யால் தயாரிக்கப்பட்டதாம். MGRட்ட இருந்த ஒரு முக்கியமான பழக்கம் என்ன தெரியுமா ? அவர் நடிக்கிற ஒரு புதுப் படத்தின் முதல் காட்சி அவர் நடிச்சதா இருக்கணும்னு அடம் பிடிப்பாராம். வி.என்.ஜானகி மற்றும் MGR ரெண்டு பேரும் மொத மோதலா சேர்ந்து நடிச்ச படம் 'மோகினி'யாம். 'மருதநாட்டு இளவரசி' படத்தில் ஜோடியாக நடிச்சபோதான் அவங்க உண்மையிலேயே காதலிக்கவும் ஆரம்பிச்சாங்களாம். 


மிஸியம்மா படம் எல்.வி.பிரசாத் ஆல் இயக்கப்பட்டுச்சாம். 

கல்யாணம் பண்ணிப்பார் & செல்லப்பிள்ளை இரண்டு படங்களிலும் சாவித்திரி வில்லியாக நடிச்சிருப்பாராமே. 

சாவித்திரிக்கு அவரது நடிப்பிற்கு அங்கீகாரம் கொடுத்த படம் 'தேவதாசாம்.'


Heezullia 
heezulia
heezulia
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 610
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 193

Back to top Go down

best Re: தெரிஞ்சதும் தெரியாததும்

Post by heezulia on Fri Dec 22, 2017 1:08 pm

22.12.2017

இயக்குனர் ஏ.சி.திருலோகச்சந்தர் முடிஞ்ச வரைக்கும் படகு சவாரி காட்சிகளைத் avoid செஞ்சிருவாராம். ஏன் தெரியுமா ? அவருக்கு நீச்சல் தெரியாதாம். 

ஜெயசங்கர் அவரே கடைக்குப் போய் சாமான்களை வாங்குவாராம். அதுவும் பயங்கரமாக பேரம் பேசுவாராம்.

ஏ.வி.மெய்யப்ப செட்டியாருக்கு ஒரு பழக்கம் இருந்துச்சாம். அவர் படத்துக்கு செலெக்ட் ஆகிற கலைஞர்களை ஒரு பல் டாக்டர்கிட்ட கூட்டிட்டு போயி, அவங்களுக்கு கெட்டு போன பல்லு இருந்துச்சுன்னா, அதுங்களை எடுத்துட்டு வேற பல்லுங்களை கட்ட சொல்வாராம். முன்னணி நடிக நடிகையர்கள் எல்லோரும் இப்படிப்பட்ட சிகிச்சை எடுத்துக் கொண்டவங்கதானாம். 

ராதிகாவின் உண்மையான பேரு ரதிகலாவாம். சில ஜோசியக்காரங்க ரதிகலா பேரு அவ்வளவு ராசியா இல்லேன்னு சொல்லிட்டாங்களாம். இயக்குனர் பாரதிராஜா அந்தப் பேரை ராதிகான்னு மாத்தினாராம். 


Heezulia 
heezulia
heezulia
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 610
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 193

Back to top Go down

best Re: தெரிஞ்சதும் தெரியாததும்

Post by T.N.Balasubramanian on Fri Dec 22, 2017 1:42 pm

VN ஜானகி --MGR ன் முதல் மனைவி அல்ல
அதே போல் ஜானகிக்கு MGR முதல் கணவனும் அல்ல
VN ஜானகியின் முதல் கணவர் கணபதி பட் (அல்லது நாராயண பட்) என்றும் சொல்வதுண்டு .
ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 26004
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9419

Back to top Go down

best Re: தெரிஞ்சதும் தெரியாததும்

Post by heezulia on Fri Dec 22, 2017 2:33 pm

22 .12 .2017 

ஜானகி MGR க்கு மூணாவது மனைவின்னு என் ரெக்கார்டிலும் இருக்கு. கொஞ்சம் கொஞ்சமா அனுப்பிட்டு இருக்கேன்.  இன்னும் நூத்துக்கணக்கான சினிமா தகவல்களும், பெரிய பெரிய விவரங்களும் எங்கிட்டே இருக்கு. அப்பப்ப அனுப்புறேன். எப்ப அனுப்புவேன், என்ன அனுப்புவேன்னு தெரியாது. ஆனா கண்டிப்பா அனுப்புவேன். 

Heezulia
heezulia
heezulia
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 610
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 193

Back to top Go down

best Re: தெரிஞ்சதும் தெரியாததும்

Post by SK on Fri Dec 22, 2017 2:36 pm

@T.N.Balasubramanian wrote:VN ஜானகி --MGR ன் முதல் மனைவி அல்ல
அதே போல் ஜானகிக்கு MGR முதல் கணவனும் அல்ல
VN ஜானகியின் முதல் கணவர் கணபதி பட் (அல்லது நாராயண பட்) என்றும் சொல்வதுண்டு .
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1254330
@T.N.Balasubramanian wrote:VN ஜானகி --MGR ன் முதல் மனைவி அல்ல
அதே போல் ஜானகிக்கு MGR முதல் கணவனும் அல்ல
VN ஜானகியின் முதல் கணவர் கணபதி பட் (அல்லது நாராயண பட்) என்றும் சொல்வதுண்டு .
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1254330

ஒன்னும் புரியல ஒன்னும் புரியல


SK
SK
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8072
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1548

Back to top Go down

best Re: தெரிஞ்சதும் தெரியாததும்

Post by heezulia on Fri Dec 22, 2017 2:47 pm

22.12.2017

பாசமலர் படத்ல நடிச்ச சாவித்திரி, அந்தப் படத்தின் பிற்பகுதில தனது பாத்திரத்துக்கு ஏற்ப ஒடம்ப குறைக்கணும்ங்கறதுக்காக ஒரு மாசத்துக்கு சாப்பாட்டைக் கொஞ்சம் கொறச்சுகிட்டாராம். அவர் நடிச்ச படங்களிலேயே 'பாசமலர்' & 'கை கொடுத்த தெய்வம்' சாவித்திருக்கு ரொம்ப பிடிச்ச படங்களாம். சாவித்திரியின் நூறாவது படம் 'கொஞ்சும் சலங்கை' யாம். கதாநாயகன் ஜெமினி கணேசன். 

ஸ்ரீதேவி தன் தாயுடன் வாழ்ந்த சமயத்ல, அவர் விரும்பிய பொழுதுபோக்கு என்ன தெரியுமா ? அவரது தாய் மடில படுத்துகிட்டு அம்புலிமாமா & காமிக்ஸ் புத்தகங்கள் படிக்கிறதுதானாம்.

Heezulia
heezulia
heezulia
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 610
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 193

Back to top Go down

best Re: தெரிஞ்சதும் தெரியாததும்

Post by heezulia on Fri Dec 22, 2017 2:51 pm

22.12.2017 


நாகையா தயாரிச்சு, நடிச்ச படம் 'என் வீடு'. படத்தை இயக்கி, இசையமைத்ததும் அவரே. பத்திரிகையாளர் சாண்டில்யன் வசனம் எழுதியிருந்தார். நாகையா, ட்டி.ஆர்.ராஜகுமாரி, ட்டி.எஸ்.பாலையா, வி.கோபாலகிருஷ்ணன், கிரிஜா நடிச்சிருந்தாங்க. ஜெயலலிதாவின் சித்தி வித்யாவதி முக்கிய வேஷத்தில நடிச்சிருந்தாராம். சில படங்கள்ல கதாநாயகியாகவும் நடிச்சவராம் இவர். தமிழ், தெலுங்கில் ரிலீஸ் ஆன இப்படம், சிறப்பான இசைச் சித்திரம் எனலாம். பாட்டூஸ் எல்லாமே பிரபலமானவை.

தமிழ் சினிமாவில் மறக்க முடியாத இன்னொரு படம் 'ஔவையார்'. ஜெமினிவாசன் தயாரிச்சது. தானே இயக்குனரா இருந்தும், இப்படத்தை அவர் இயக்கலியாம். கொத்தமங்கலம் சுப்புதான் இயக்கினார். மூன்று ஆண்டுகள் தயாரிச்சதுக்கப்புரம்தான் இப்படம் வெளியானது. அந்த அளவுக்குக் காட்சிகள் பிரமாண்டமாக அமைந்திருக்கும். இந்தப் படத்தில் வரும் பிரமாண்டமான காட்சிகள் யாவும் செட்டில் எடுத்தது தான். ஆனால் அவற்றைப் பார்க்கும்போது வெளிப்புறத்தில் படமாக்கியது போலிருக்கும். படத்ல ஏராளமான் பாத்துக்கலாம். அதனால் ரொம்ப நாளைக்கப்புறம் சுந்தராம்பாள் இந்தப்படத்தில் நடிச்சாராம். எம்.கே.ராதா, ஜெமினி கணேசன், வனஜா, சுந்தரிபாய் நடிச்சிருந்தாங்க. சின்ன ஔவையார் வேஷத்தில சச்சுவும், இளம் வயது ஔவையாராக குசலகுமாரியும் நடிச்சிருந்தாங்களாம். இதில் பாண்டிய மன்னனாக அசோகன் நடிச்சிருந்தார். இது அவரது முதல் படம். இயக்கத்துடன் திரைக்கதை, வசனம், பாடல்களையும் சுப்பு எழுதியிருந்தார். வெள்ளிவிழா கொண்டாடிய படம் இது. 

Heezulia
heezulia
heezulia
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 610
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 193

Back to top Go down

best Re: தெரிஞ்சதும் தெரியாததும்

Post by heezulia on Fri Dec 22, 2017 3:03 pm

22.12.2017 

எனக்கு கிடைக்கும் பாராட்டுக்களில் ரொம்ப ரொம்...............ப  சின் ............... ன  உதாரணம் இது. 

"அன்புள்ள சகோதரி,

திரைத்துளிகள் தொடரும், சுவாரசியமாக
இருக்கிறது. சில விஷயங்கள் நான் கேள்விப்படாதவை.
கேள்விப்பட்ட விஷயங்களும் , மீண்டும் படிக்க
இனிமையாக இருப்பதுடன், பழைய நினைவுகளை
மீண்டும் கொண்டுவருகிறது.

அதற்கே டபுள் தேங்க்ஸ் சொல்லவேண்டும்."

Heezulia 
heezulia
heezulia
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 610
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 193

Back to top Go down

best Re: தெரிஞ்சதும் தெரியாததும்

Post by SK on Fri Dec 22, 2017 3:12 pm

தொடருங்கள் அருமை

தோழி


SK
SK
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8072
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1548

Back to top Go down

best Re: தெரிஞ்சதும் தெரியாததும்

Post by heezulia on Fri Dec 22, 2017 3:59 pm

22.12.2017 

நன்றி SK.

AP நாகராஜன் முதல் முதலாக நடிச்சு, திரைக்கதை, வசனங்களையும் எழுதி ரிலீஸ் ஆன படம் 'நால்வர்'. கே.வி.மகாதேவன் இசையமைத்து, வி.கிருஷ்ணன் இயக்கி இருந்தார்.

பணக்காரி - MGR, ட்டி.ஆர்.ராஜகுமாரி நடிச்சது. லியோ டால்ஸ்டாய் என்ற ரஷ்ய எழுத்தாளரின் 'அன்னாகரீனா' நாவலைத் தழுவி உருவாச்சு இந்தப் படம்.


ஜெமினி கணேசன் முதன்முதலாக ஹீரோவா அறிமுகமான படம் 'மனம்போல் மாங்கல்யம்'. இவருக்கு இப்படத்தில் ரெட்டை வேஷம். புல்லையா இயக்கியிருந்தார். படம் வெற்றி பெற்றது. இவரது இந்த முதல் படத்ல ஜெமினிக்கு சாவித்திரி ஜோடி. இந்தப்படப் பிடிப்பின்போதுதான் சாவித்திரியும், ஜெமினுயும் லவ்வ ஆரம்பிச்சுட்டாங்களாம். படம் முடியும்போது அவங்க கண்ணாலம் கட்டிகினாங்களாம். 


Heezulia 
heezulia
heezulia
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 610
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 193

Back to top Go down

best Re: தெரிஞ்சதும் தெரியாததும்

Post by heezulia on Fri Dec 22, 2017 4:02 pm

22.12.2017

பத்திரிகையாளர் லட்சுமிகாந்தன் திரைப்பட கலைஞர்களைப் பற்றி அவதூறாக எழுதி வந்தாராம். இவரைப் பற்றி 'மின்மினி' என்ற படம் எடுத்துட்டாங்களாம். அப்போ வெளிவந்த சித்ரா என்ற சினிமா மாத இதழின் ஆசிரியர் சித்ரா கிருஷ்ணசாமி தான் ஹீரோவான். படம் ஓடலியாம்.

ஒரு வங்காள நாவலை தழுவி 'ரத்னதீபம்' என்ற பேர்ல தமிழ், வங்காள மொழிகளில் படம் ரிலீஸ் ஆச்சு. ஏ.வி.எம். தமிழில் தயாரிச்சதாம். வலம்புரி சோமநாதன் வசனம். வங்க நடிகர்கள் அபி பட்டாச்சார்யா, அனுபமா நடித்திருந்தனர். இப்படமும் வெற்றி பெறவில்லை


Heezulia 
heezulia
heezulia
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 610
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 193

Back to top Go down

best Re: தெரிஞ்சதும் தெரியாததும்

Post by heezulia on Fri Dec 22, 2017 4:07 pm

22.12.2017

ஏ.வி.எம். நிறுவனம் கூட சேர்ந்து, வில்லன் நடிகர் ஆர்.நாகேந்திர ராவ் 'ஜாதகம்' என்ற படத்தை இயக்கி, முக்கிய வேஷத்திலேயும் நடிச்சிருந்தாராம். தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் தயாரிக்கப்பட்டது. டி.கே.பாலச்சந்திரன், சாரங்கபாணி, நாகையா, சூரியகலா, கே.ஆர்.செல்வம் நடித்திருந்தனர்.

கல்கியின் 'பொன்மான் கரடு' என்ற நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட படம், பொன்வயல் 1954. அப்போ கச்சேரிகள் நடத்தி வந்த ஒருவர் இந்தப் படத்தின் மூலம் அறிமுகமானார், "சிரிப்புதான் வருகுதையா.....' என்கிற பாடல் மூலம். 

யார்னு கண்டுபிடிச்சிருப்பீங்களே

சரிதான். சீர்காழி கோவிந்தராஜன் தான்.

Heezulia  
heezulia
heezulia
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 610
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 193

Back to top Go down

best Re: தெரிஞ்சதும் தெரியாததும்

Post by heezulia on Fri Dec 22, 2017 4:16 pm

22.12.2017

சிறந்த படத்துக்கான விருது பெற்ற படம், மலைக்கள்ளன் 1954. தமிழக அரசின் அப்போதைய ஆஸ்தான கவிஞரும், சிறந்த நாவல் எழுத்தாளருமான நாமக்கல் வெ. ராமலிங்கம் எழுதிய நாவல் இது. 

இப்படம் எத்தனை மொழிகளில் தயாரிக்கப்பட்டுச்சு தெரியுமா ? 

முதலில் தமிழிலும், தெலுங்கிலும் மட்டும்தான் தயாரிச்சாங்களாம். அதுக்கப்புறமா, மலையாளம், கன்னடம், இந்தி, சிங்கள மொழிகளிலும் தயாரிக்கப்பட்டுச்சாம். இத்தனை மொழிகளிலும் தயாரிக்கப்பட்ட ஒரே தமிழ்ப்படம் என்ற பெருமை இந்த படத்துக்கு உண்டாம். தெலுங்கில் NTR ம், இந்தியில் திலிப் குமாரும் ஹீரோவா நடிச்சாங்களாம். 

சாய் & சுப்புலட்சுமி. சிறுமிகள். இவங்க யார் தெரியுமா ? 

இந்தப்படத்தில் புதுவிதமாவும், வேகமாவும் ஆடுற மாதிரி ஒரு பரதநாட்டியக் காட்சி இருக்காம். இந்த பரத நாட்டியத்தை ஆடியவங்கதான் இவங்க. மற்ற மொழிகளில் இப்படம் தயாரிக்கும்போது இந்த நடனக்காட்சியை மட்டும் அப்படியே வச்சுகிட்டாங்களாம். 

Heezulia 
heezulia
heezulia
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 610
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 193

Back to top Go down

best Re: தெரிஞ்சதும் தெரியாததும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை