ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு)
 T.N.Balasubramanian

நம்ம தலைவர் பேசத்தெரியாம பேசறார்...!!
 SK

முக்கியச் செய்திகள்
 SK

வாட்ஸ்அப் வதந்திகளைக் கட்டுப்படுத்துவது எப்படி?
 T.N.Balasubramanian

முத்தான பதினோராம் வருடத்தில் அடியெடுத்து வைக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வாழ்த்துகள்
 பழ.முத்துராமலிங்கம்

எண்ணும் எண்ணங்களே உங்களைத் தீர்மானிக்கும்.
 SK

பெண்கள் பெயரில் பேஸ்புக் மூலம் இந்தியர்களுக்கு ஆசை வலை விரிக்கும் பாகிஸ்தான் உளவு அமைப்பு
 SK

இதை அடிக்கடி படிக்கவும்......
 SK

அமுதாவின்   அன்பான  வணக்கங்கள் !
 சிவா

முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான்
 T.N.Balasubramanian

அன்றைய தமிழகம் இன்றைய தமிழகம்
 சிவா

கார்த்திகை பட்சணங்கள் - மனோகரம் - என் செய்முறை விடியோவுடன் !
 krishnaamma

ஐஸ்கிரீம் வகைகள் -பனானா பீ நட் பட்டர் ஐஸ் கிரீம் ! - போட்டோவுடன்
 krishnaamma

அண்ணனுக்கு ஜே - சினிமா விமரிசனம்
 krishnaamma

உத்தரகண்ட் மாநிலத்தில் பசுவுக்கு பெயர் ராஜமாதா
 ayyasamy ram

செப்.,29ஐ சர்ஜிக்கல் ஸ்டிரைக் தினமாக கொண்டாட முடிவு
 ayyasamy ram

கணவரோட கழுத்து வலி சரியாகணும்னா, கொஞ்ச நாளைக்கு அவரோட நீங்க பேசாம இருக்கணும்...!!
 சிவனாசான்

சார் சுண்டல் - உணவே மருந்து
 சிவனாசான்

APOLLO ACADEMY வெளியிட்ட முக்கிய அறிவியல் குறிப்புகள்
 சிவனாசான்

தோசை வகைகள் - மிக்சட் தால் அடை - பல பருப்பு அடை + Photo
 சிவனாசான்

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
 T.N.Balasubramanian

இது குடிகாரங்களுக்கான ‘ஆப்’…!
 krishnaamma

மனநிறைவானது இயற்கையான செல்வம்!
 சிவனாசான்

ஸ்ரீ ஜெயந்தி பக்ஷணங்கள் - அவல் கேக் !
 krishnaamma

என்னைப் பற்றி ஞான முருகன்
 ஞானமுருகன்

சிறுகதைகள் பற்றிய ஆய்வு செய்ய நல்ல சிறுகதை ஆசிரியரை பரிந்துரைக்க முடியுமா...?
 T.N.Balasubramanian

ஏழாம் சுவர்க்கத்தில்
 முனைவர் ப.குணசுந்தரி

கட்டபொம்மன் கொள்ளைக்காரன் - Thamizvanan
 ஞானமுருகன்

மருந்தாகும் காலிஃப்ளவர்
 ayyasamy ram

மலரே மலரே மலரே மலரே முகவரி என்ன?
 ayyasamy ram

பல்லவர் ஆட்சி ஏன் வீழ்ச்சி அடைந்தது..?
 ayyasamy ram

மலரே, உன்னைப் பறிக்க மனமில்லை!
 ayyasamy ram

கொடிகளுக்கான விதி…!- கவிதை
 ayyasamy ram

மும்முறை ரெய்டுதான் நடக்கிறது மன்னா…!
 SK

இன்றைய மருத்துவ குறிப்பு- தொடர் பதிவு
 krishnaamma

உணவுகளின் போட்டோகள் ! :) - ஸ்ரீ ஜெயந்தி போட்டோக்கள் !
 krishnaamma

மருந்து சீட்டை டாக்டர்கள் கையால் எழுத கூடாது'
 krishnaamma

சர்வதேச அமைதி தினம்
 ayyasamy ram

தற்போதைய செய்தி சுருக்கம் - தொடர் பதிவு
 ayyasamy ram

டால்பின்களை கொடுமைப்படுத்தியதாக நடிகை திரிஷாவுக்கு எதிர்ப்பு
 SK

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 krishnaamma

மங்கையர் மலர் வாசகிகளின் பயனுள்ள குறிப்புகள் - தொடர் பதிவு
 krishnaamma

நட்பு நாடுகளின் பொருட்களுக்கு வரி குறைப்பு சீனா முடிவு
 krishnaamma

எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான கிரிமினல் வழக்குகளை விசாரிக்க சென்னையில் தனிக்கோர்ட்டு அமைக்கப்பட்டது
 ayyasamy ram

ரயில்களில் விற்கப்படும் டீ, காபி விலை உயர்கிறது !
 ayyasamy ram

சென்னை-சேலம் 8 வழி சாலை திட்டம் ரத்து ஆகும் ஐகோர்ட்டில் மத்திய அரசு தகவல்
 ayyasamy ram

ஆர்.எஸ்.எஸ்., கொள்கைகளில் மாற்றமா: டில்லி மாநாடு சொல்வது என்ன?
 ayyasamy ram

கவுரவ டாக்டர் பட்டத்தை மறுத்த சச்சின்
 ayyasamy ram

காவல் பூட்டு - கவிதை
 ayyasamy ram

உலகளவில் மிகவும் பிரபலமான உணவு வகைகளின் சமையல் குறிப்புகள் ! 'உப்பு பாதாம்' - salted badham
 krishnaamma

வாட்ஸ் அப் -ல் ரசித்தவை - பல்சுவை
 ayyasamy ram

சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதம் உயர்வு: மத்திய அரசு உத்தரவு
 krishnaamma

85015 பதிவுகள் கடந்த நம் தல சிவா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
 சிவா

சுய‌ அறிமுகம் - சே.செய்யது அலி
 சே.செய்யது அலி

மிக இளம் வயதிலேயே சிங்கப்பூரில் எம்.பி ஆன தமிழர்!
 T.N.Balasubramanian

150 பிணங்களை ஏற்றிக்கொண்டு சுற்றித்திரியும் லாரி - அதிர்ச்சியில் மெக்ஸிகோ பொதுமக்கள்
 ayyasamy ram

விராட் கோலி , மீராபாய் சானுக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது மத்திய அரசு அறிவிப்பு
 ayyasamy ram

உபநயனம் என்றால் என்ன?
 ayyasamy ram

வீரயுக நாயகன் வேள் பாரி - 100 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 பிரபாகரன் ஒற்றன்

10 நாட்களுக்குள் மூன்று இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி?- மகிழ்ச்சியில் ரசிகர்கள்
 SK

நாவல்கள் | தொடர்கள்

























Admins Online

ஒக்கி' புயல் அறிவிப்பு தாமதம் காரணம் யார்?

View previous topic View next topic Go down

ஒக்கி' புயல் அறிவிப்பு தாமதம் காரணம் யார்?

Post by ayyasamy ram on Mon Dec 04, 2017 6:33 am

ஒக்கி' புயல் குறித்து, வானிலை மையம் முன் எச்சரிக்கை செய்யாதது குறித்து, மத்திய அரசு அதிகாரிகள் விசாரணையை துவக்கி உள்ளனர்.

'ஒக்கி' புயல் அறிவிப்பு தாமதத்திற்கு காரணம் யார்?  

'டிசம்பரில் மீண்டும் புயல், கனமழை வரலாம்' என, வானிலை ஆய்வாளர்கள் கணிப்புகளை வெளியிட்டனர். ஆனால், இந்திய வானிலை ஆய்வு மையம், தமிழக வருவாய்த்துறை மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம், இதை உறுதி செய்யவில்லை.

இந்நிலையில், தென்மேற்கு வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, இந்திய பெருங்கடலுக்கு நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், பின், புயலாகவும் மாறியது.
'ஒக்கி' என, பெயரிடப்பட்ட இந்த புயல், நவ.,30ல், சூறாவளி காற்றுடன் குமரியை துவம்சம் செய்தது. திருநெல்வேலி மாவட்டத்தில், அதிகபட்சம், 45 செ.மீ., மழை கொட்டியது.

இந்த புயலால், கன்னி யாகுமரி மாவட்டம் மற்றும் கேரள பகுதிகளில், கடலுக்குள் சென்ற ஆயிரக்கணக்கான மீனவர்கள் மாயமாகி உள்ளனர். அவர்களில் சிலர் இறந்தும், பலர் உயிருடனும் மீட்கப்பட்டு வருகின்றனர். நுாற்றுக்கணக்கான மீனவர்களின் நிலை

என்ன ஆனது என்று, இன்னும் தெரியவில்லை. அதனால், கன்னியாகுமரி மாவட்டம், கேரளாவில் மீனவ கிராமங்களில் சோகம் சூழ்ந்துள்ளது.

எந்த முன் எச்சரிக்கையும் இல்லாததால், கடலுக்குள் வழக்கம்போல் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள், ராட்சத அலையிலும், சூறாவளி காற்றிலும் சிக்கி, மிக மோசமான பாதிப்பை சந்தித்துள்ளனர்.

இந்த பிரச்னை குறித்து, சென்னை வானிலை ஆய்வு மையம், இந்திய வானிலை ஆய்வு மையம், ராடார் மையம், திருவனந்தபுரம் வானிலை மையம் ஆகியவற்றில் பணியில் இருந்தவர்கள், அளித்த வானிலை அறிவிப்பு விபரங்கள் குறித்து, மத்திய அரசு அதிகாரிகள் விசாரணை நடத்த துவங்கியுள்ளனர்.உள்துறை உத்தரவின்படி, இந்த விசாரணை துவங்கி உள்ளதாக தெரிகிறது.

ஒக்கி புயல் உருவாகி, நவ., 29 நள்ளிரவு முதல், பிற்பகல், 3:00 மணி வரை, கன்னியாகுமரியில், சூறாவளி காற்று வீசி, கனமழை கொட்டியது. ஆனால், நவ., 30, நண்பகல், 12:00 மணிக்கு தான், 'ஒக்கி' புயல் உருவாகி உள்ளதாக, அதிகாரப்பூர்வ அறிவிக்கையை, இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

முன்னதாக, தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம்,புயலாக மாறும் வாய்ப்புள்ளதாக, அரசுத் துறை அதிகாரிகளுக்கு, காலை, 9:30 மணிக்கு குறுஞ்செய்தி எச்சரிக்கையில், இந்திய வானிலை மையம் தெரிவித்தது.

இந்த குறுஞ்செய்தி அனுப்பிய நேரத்தில், குமரியில் புயலின் தாக்கம் ஏற்பட்டு, பல மணி நேரமாகி இருந்தது.அதேபோல், புயல் உருவாகியுள்ளதாக,

சென்னை வானிலை ஆய்வு மையம், நவ., 30, பகல், 12:45 மணிக்கு தான், ஊடக சந்திப்பில் அறிவிப்பை வெளியிட்டது. அதனால், முன் எச்சரிக்கை எதுவும் மீனவர்களுக்கு கிடைக்கவில்லை.

வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்ட நேரத்தில், கடலுக்குள் ஏற்கன வே சென்ற மீனவர்களை, துவம்சம் செய்த புயல், கேரளாவை நோக்கி, நகர்ந்து கொண்டு இருந்தது.அதேபோல் தமிழக வருவாய்த் துறை, பொதுப்பணித் துறை, கடற்படை, துறைமுகம் என, எந்தத்துறையும், புயல் தாக்குவதற்கு முன், பொதுமக்களுக்கும், ஊடகத்திற்கும் தகவல் தெரிவிக்கவில்லை என, பாதிக்கப்பட்டவர்கள் குமுறுகின்றனர்.

இதேபோல், நவ., 1, 2ல், தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கன மழை பெய்யும் என, வானிலை மையம் எச்சரித்தது. ஆனால், இதற்கு மாறாக, சென்னையில் கன மழை பெய்து, வெள்ளக்காடானது.

- நமது நிருபர் -தினமலர்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 39120
மதிப்பீடுகள் : 11535

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum