ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

நாவல் தேவை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

செய்யத் தகாத 16.
 சிவனாசான்

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நரை கூறிய அறிவுரை
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 amutha jothi

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

பழைய தமிழ் திரைப்படங்கள்

Page 4 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Go down

best பழைய தமிழ் திரைப்படங்கள்

Post by heezulia on Sun Dec 03, 2017 5:13 pm

First topic message reminder :

தமிழ்  சினிமாவை  பற்றியும், பாட்டுக்களை பற்றியும் எழுதலாமா? எங்கிட்ட நிறைய நிறைய விஷயங்கள்  இருக்கு. அனுப்பலாமா?

நன்றி Baby Heerajan  மீண்டும் சந்திப்போம்
avatar
heezulia
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 571
மதிப்பீடுகள் : 187

View user profile

Back to top Go down


best Re: பழைய தமிழ் திரைப்படங்கள்

Post by SK on Thu Jan 18, 2018 12:08 pm

@sk wrote:
"அடியே காந்தா..........".

சூப்பருங்க சூப்பருங்க
avatar
SK
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6408
மதிப்பீடுகள் : 1140

View user profile

Back to top Go down

best பழைய தமிழ் திரைப்படங்கள்

Post by heezulia on Mon Jan 22, 2018 12:06 am

21.01.2018 
by மூர்த்தி Today at 12:18 pm wrote:"நன்றாக இருந்தது. நன்றி. 
தொடக்கத்தில் இருந்து தரலாமே. முதல்  படம் கீசக வதம் 1918 ல் சலனப் பட ம்
ராஜ முதலியார் ஜீவரத்தினம் நடித்தது.1931 இல் காளிதாஸ் நடிகர்கள் பி.ஜி.வெங்கடேசன் - டி. பி. ராஜலட்சுமி. இப்படி வரிசையாக……..தொடரலாமே."

மேற்கோள் செய்த பதிவு: 1257496 

இது 'தெரிந்ததும் தெரியாததும்' பகுதியில் இருந்துச்சு. இப்போ சரியான இடத்துக்கு வந்திருக்கேன். 
"தவறாக நினைக்க வேண்டாம், சும்மா ஒரு ஆலோசனை தான்."

என்ன சார் நீங்க. இதுல தப்பா நெனச்சுக்கிறது என்ன சா..................ர் இருக்கு. உங்க கருத்தை சொல்றீங்க, அம்புட்டுதானே. 

ஆனா ஒண்ணு சார், நீங்க சொன்ன படங்களை பற்றி  எழுத நான் ரெடி. wikiயில கிடைக்கிற  சில தகவல்கள்  தப்பானதுன்னு சொல்றாங்க. அதனாலதான், இப்படிப்பட்ட தகவல்களை அதுலே இருந்து எழுதுறதில்ல. 

பழைய படங்களை பற்றி எழுதுறேனே, அதெல்..............லாமே ஹிந்து பேப்பர்ல வந்தது. ஆனா இங்கிலிஷ்ல இருக்கு. நான் அதை மொழிபெயர்த்து எழுதுறேன். 343 படங்கள் இருக்கு. அதில 1934 ல இருந்துதானே இருக்கு. 

நீங்க படத்தின் பேரை சொல்வீங்களா.................ம். அதை நான் தே.............டி, கெடச்............சா, எழுதுவேனாம். சரியா? 

23. இப்போ கீசக வதம் 1918 

தமிழ்ல மொத மொதலா...................... வந்த படம். இதிகாசங்களை படிச்சவங்களுக்கு 'கீசக  வதம்' பற்றி தெரியுமாம். இப்ப சொல்லுங்க, எத்தனை பேருக்கு தெரியும்? தெரியும்னாலும் பரவாயில்ல, நான் சொல்லாம விடமாட்டேன்.

பாண்டவர்களுடைய கதை. இவங்க பாஞ்சாலியோடு 13 வருஷம் வனவாசம் போறாங்க. வனவாசத்தின் அது பதிமூணாவது வருஷம். அஞ்ஞாத வாசம். இந்த வருஷத்ல, அடையாளம் தெரியாம வாழணும். 

விராட நாட்டில்  ஒரு அரண்மனைக்கு வர்றாங்க. அங்க சுதர்சனைன்னு ஒரு மகாராணியும், ராஜாவும் இருக்கிறாங்க.  இந்த அரண்மனைலதான் பாண்டவர்களும், பாஞ்சாலியும் தங்கி வேலை செய்றாங்க. அதுவும் மாறுவேஷத்தில.  தங்களை கூத்தாடிங்கன்னு சொல்லி, வேலைக்கு சேர்றாங்க. ஆளுக்கொரு வேலை செய்றாங்க. 

பாஞ்சாலி, சைரேந்திரி என்கிற பேர்ல, மகாராணி சுதர்சனைக்கு  வேலை செய்றாள். பீமன், வல்லன்னு பேர மாத்தி வச்சுட்டு சமையல்காரனா வேல செய்றான். தர்மன் பிரகனளை என்ற திருநங்கையாக விராட மன்னனுக்கு துணையாக இருக்கிறான்.  

ஒரு படம்னா வில்லன் இல்லாமலா? வில்லன் இருந்தாதானே படம் நகரும்.  இருக்............கானே, சுதர்சனையின்  சகோதரன் கீசகன். இவனுக்கு சைரேந்திரி மேல ஒரு இது.  அவள் சகோதரியின் வேலைக்காரிதானே, ஈ............ஸியா அவளை அடஞ்சிறலாம்  என்ற எண்ணத்தில், அவளை தன் ரூமுக்கு வரச்சொல்லி, கூப்ட்டு அனுப்புறான். அவளும் வர்றா. இவனுடைய தப்பான எண்ணத்தை  தெரிஞ்சுகுறா, சைரேந்திரி. அவன்கிட்டே இருந்து தப்பிக்கிறா. 

வல்லன்கிட்ட நடந்ததை சொல்லி, அவனை கொல்ல சொல்றா. வல்லனும், கீசகனை தந்............திரமாக நடன மாளிகைக்கு வரவைக்கிறான். கீசகனின் வருகைக்காக  காத்துட்டு இருக்கான். எப்படி? ஒரு துணியை சுத்திகிட்டு, சைரேந்திரி மாதிரி. 

கீசகன் வர்றான். சைரேந்திரியை நெருங்குறான். அடச்சே,  இல்ல இல்ல வல்லனை நெருங்குறான். பக்கத்தில வர்றான். 

கும்மாங்குத்து, கும்மாங்குத்து, சதக் சதக். அவ்ளோதான். கீசகன் ஔட். கொன்னுட்டான். இல்ல இல்ல வதம் செய்றான். இது தா..........ன்  கீசக வதம் படத்தின் கதை..................

நாடக நடிகர் ராஜு முதலியார் - கீசகன்  
நாடக நடிகை ஜீவரத்தினம் - பாஞ்சாலி 
தயாரிப்பு - ரங்கசாமி நடராஜ முதலியார் 

நடராஜ முதலியார் பேசாத படங்களை பாத்துட்டு இருந்தார். பேசும் படம் எடுக்கணும்னு  ஆசைப்பட்டாராம். ஸ்ட்டூவர்ட் ஸ்மித்னு ஒருத்தர். இவரை friend புடிச்சு வச்சுகிட்டார். இவர்கூட  நடராஜ முதலியார் பூனாவுக்கு போயி, சினிமா எடுக்கிறதைப் பற்றி கொஞ்சம் கத்துட்டு சென்னைக்கு வந்தார்.  'இந்தியா ஃபிலிம் கம்பெனி' னு சினிமா தொழில் பார்க்க ஆரம்பிச்சார். மூப்பனார்ட்ட 35 mm பேசாத பட வில்லியம்ஸன் கேமரா வாங்கினார். குடுத்து வச்.............ச கேமரா. கீசக வதம் இந்த கேமராதானே எடுத்துச்சு. 

சிவாஜி நடிச்ச 'பாபு' படத்தில கீசக வதம் தெருக்கூத்து நாடகமாக நடிச்சிருக்காங்க. இதுல சிவாஜி - பீமன் ; நாகேஷ் - கீசகன் ; விஜயஸ்ரீ - சைரந்திரி ; VKR இவங்கல்லாம் நடிச்சிருந்தாங்க.

கீசக வதம் படம் எடுக்கிறதுக்கு நடராஜ முதலியார் 35,௦௦௦/- ரூபாய் செலவளிச்சாராம், அப்..........பவே, 1917லேயே. 35 நாள்ல எடுத்த படம். ஓஹோஹோ படம். 

அந்த காலத்திலெல்லாம், ஜனங்களுக்கு தெரிஞ்ச கதையை எடுத்தாத்தான் ஓடும். அதனாலதான் இப்படிப்பட்ட கதைங்களயா............. படமா எடுத்திட்டு இருந்தாங்க. இந்த ஆலோசனையை நடராஜ முதலியாருக்கு கொடுத்தது, அவருடைய நண்பர் பம்மலார். 

என்ன மூர்த்தி சார், சந்தோஷமா? 

Heezulia
avatar
heezulia
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 571
மதிப்பீடுகள் : 187

View user profile

Back to top Go down

best Re: பழைய தமிழ் திரைப்படங்கள்

Post by மூர்த்தி on Mon Jan 22, 2018 12:52 am

மகிழ்ச்சி.நன்றி. ஹரிதாஸ் மூன்று ஆண்டுகள் ஓடியாதாமே,எங்கோ படித்தது. அதைத் தொடர்ந்து தியாகராசரும் என்.எஸ்.கே யும் கொலைக்கு குற்றம் சாடடப்பட்டு சிறைக்கு 2 வருடங்கள் சென்றதாகப் படித்திருந்தேன்.
avatar
மூர்த்தி
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1046
மதிப்பீடுகள் : 506

View user profile

Back to top Go down

best Re: பழைய தமிழ் திரைப்படங்கள்

Post by heezulia on Mon Jan 22, 2018 11:03 am

22.01.2018 


நானும் நிறைய இதை பற்றி படிச்சிருக்கேன். லட்சுமிகாந்தன் என்ற பத்திரிகையாளரின் கொலை வழக்கில்தான் பாகவதரும், NSK யும் ஜெயிலுக்கு போனாங்களாம். 

ஹரிதாஸை பற்றியும் எழுதுறேன். கொஞ்சம் டைம் கொடுங்க. தேடணும்ல. கொஞ்சம் வேற வேலையும் இருக்கு. 

இன்னொண்ணு நான் சொல்லணும். கீசக வதம் படத்தை பற்றி எழுதும்போது ஒரு விஷயத்தை சரியா கவனிக்காம  தப்பா எழுதிட்டேன். 
by heezulia on Mon Jan 22, 2018
தர்மன் பிரகனளை என்ற திருநங்கையாக விராட மன்னனுக்கு துணையாக இருக்கிறான்.
இதுலதான் ஒரு தப்பு நடந்துருச்சு. Friends சொன்னாங்க. அர்ஜுனன்தான் ப்ரஹன்னளையாக இருந்தானாம். ரெண்டு மூணு தளங்களில் உள்ளதை மாத்தி................... மாத்தி பாத்து எழுதிட்டு இருந்தேனா, அர்ஜுனன் தர்மனாகிட்டான்.  

Heezulia
avatar
heezulia
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 571
மதிப்பீடுகள் : 187

View user profile

Back to top Go down

best பழைய தமிழ் திரைப்படங்கள்

Post by heezulia on Sat Jan 27, 2018 8:02 pm

27.01.2018

24. பத்ம ஜோதி 1937

பத்மா - ஹீரோயின்  
TM சங்கரன் - ஹீரோ , 

MS முத்துகிருஷ்ணன்,  TP மனோஜ்ராவ், அம்புஜம் 

மாடர்ன் தியேட்டர்ஸ் TR சுந்தரம் தயாரிச்ச ரெண்டாவது படம். முதல் படம்? இதே வருஷத்தில ரிலீஸ் ஆன சதி அகல்யா.  

பத்ம ஜோதி  படத்ல, தமிழ் சினிமாவில முதல் முதலா,  ஒரு புது அம்சத்தை கொண்டு வந்திருக்கார் சுந்தரம். இந்தியாவிலேயே முதல் முதலாககூட இருக்கலாமாம்.  அது என்னான்னா, அனிமேஷன். அனிமேஷன்னா அனிமேஷன் மா................திரி.  அந்த காலத்தில அனிமேஷனா? நீங்க கேக்குறது எனக்கு கேக்குது.  

படத்தின் டைட்டில்ல ஹீரோயின் பேர  போடறாங்க. போட்றாங்களா, அந்த பேர் பக்கத்தில ஒரு பொண்ணோட கார்ட்டூன் மூஞ்சிய காட்டினாங்களாம்.  அந்த மூஞ்சி நவரசத்தையும் காட்டுச்சாம். தென்னிந்திய  சினிமாவில அனிமேஷன் இல்லா........த காலத்தில, இப்படி ஒரு கார்ட்டூன் மூஞ்சிய காட்டியது புதுமையா இருந்திருக்கும்ல. 

அனிமேஷன் கேமராவே... இல்ல. அப்ப எப்டீ இப்டீல்லாம் சுந்தரம் காட்டினார்? அதுக்குத்தான் இருந்துச்சாமே, 'Single frame exposure' னு ஒரு முறை. இந்த முறையை வச்சுதான், இந்தப் படத்தில நடிச்சவங்க  பேருக்கு பக்கத்தில, அந்தந்த கேரக்டருக்கு ஏத்தமாதிரி, கார்ட்டூன் மூஞ்சிய காட்டினாங்களாம். 

பத்ம ஜோதி படத்துல ஹீரோயின் பத்மா, பானை செய்ற ஒரு ஏழையின் மகள். பானை செய்யும் போது பத்மா பாடுவாளாம். ஆடிப்பாடி வேலை செஞ்சா அலுப்பிருக்காதுல்ல. ஆனா அவ அப்பாவுக்கு இந்த பாட்டு தெரியாது போல. திட்றான். செஞ்ச பானைகளை எடுத்துட்டு பக்கத்து ஊரு  மார்க்கெட்ல போயி வித்துட்டு வரச்சொல்லி அவளை அனுப்புறான். 

போற வழியில ஒரு பழத்தோட்டம். அங்க ஒரு இளைஞன். அவன் சும்மாவா நிக்கிறான். கல்லெடுத்து  பழத்துல எறியிறான். சின்ன வயசுதானே, மரத்துல ஏர்றதுதானே. ஓஹோ, தோட்டத்துக்கு சொந்தக்காரன் இருப்பானே. கல்லெறிஞ்சா, தோட்டக்காரன் வரும்போது ஓடிறலாம்ல. மரத்து மேல ஏறினா, குதிச்சு ஓடுறது கஷ்டமாச்சே. அதனாலதான். 

அப்டீ அவன் எறிஞ்ச ஒரு கல்லு, பத்மா கொண்டு போன பானைகள்ல பட்டு, பானைங்க  ஒடஞ்சுபோச்சு. அந்த இளைஞன், அவன் ஒடச்ச பானைங்களின் விலைய  கொடுத்துர்றதா சொல்றான். ஆனா பத்மா பணத்தை வாங்கமாட்டேங்கிறா. அதுக்கு ஒரு காரணமும் சொல்றா. அவன் வேணும்னுக்கு செய்யலியாம். தெரியாத்தனமா நடந்துருச்சாம். 

ஆட்டோ.....மே........ட்டிக்கா, என்ன நடக்கும்? அவளோட இந்த குணம் அவனுக்கு புடிச்சு போச்சு. அவன் இதயத்துக்குள்ள அவள் போயி உக்காந்துட்டா. வழக்கம் போல ஒரு வில்லன் இருக்கான்.  அந்த ஊர்ல ஒரு பணக்காரன். அவன் பத்மா மேல ஆசப்பட்டுட்டான்.  ஆசைப்பட்டான்ல, சைட் அடிச்சுட்டு இருக்க வேண்டியதுதானே. அவளை kidnap செஞ்சுட்டான். எப்படியோ பத்மா அவங்கிட்ட இருந்து தப்பிச்சுட்டா. நே..................ர லவ்வர்ட்ட வந்து சேந்துட்டா. 

ரெண்டு பேரும் தப்பிச்சு வர்ற வழியில ஒரு குடிசை இருக்கு. அதுக்குள்ள போய் ஒழிஞ்சுக்கிறாங்க. இதை அந்த பணக்காரனோட அடியாளுங்க பார்த்துர்றாங்க. சும்மாவிட்டங்களா? இல்லியே. குடிசையை கொளுத்திட்டாங்க. இதை கொஞ்ச பேர் பார்க்கிறாங்க. யாரு..................? ரோட்ல வித்தை காட்றவங்க. அவங்க ரெண்டு பேரையும் காப்பாத்திட்டாங்க. 

காப்பாத்தினது மட்டுமில்லாம, அவங்க ரெண்டு பேரையும் போலீஸ் ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு போய் காப்பாத்த சொல்லி  விட்டுட்டாங்க. போலீஸ் ஸ்டேஷன்ல என்ன செஞ்சாங்கன்னாக்கா, அவங்க ரெண்டு பேருக்கும் டும் டும் டும் கொட்டிட்டாங்க. அப்ப, அந்த காலத்திலேயே .................... ஆரம்பிச்சு வச்ச போலீஸ் ஸ்டேஷன் கல்யாணம்தான், இப்...............ப  வரைக்கும் கண்ட்டின்யூ  ஆயிட்டு இருக்கா.............? 

இந்தப் படத்தில 25 பாட்டாம். அதுல ஒரு பாட்டு, பாரதமாதாவை போற்றி பாடுற பாட்டாம். இந்தப் படத்தை விளம்பரம் செய்யும்போது "இந்தியாவின் பிரச்சினைகளை எடுத்துக்காட்டும் படம்" னு சுந்தரம் விளம்பரப்படுத்தினாராம்.  சுமாராத்தான் ஓடுச்சாம், பத்மஜோதி படம். 

பத்மஜோதி  கதை தேசப்பற்றை பற்றிய கதையாம். இசை நல்ல இருந்துச்சாம். அதுவும் தென்னிந்தியாவில் அனிமேஷன் டெக்க்குனிடன் வந்த படமா..........., அதனால ஓடுச்சாம். 

அந்த காலத்தில படத்தின் நீளம் குறைவா இருந்துச்சுன்னா, அதை சரி செய்றதுக்கு, இடைவேளைக்கு அப்புறம்,  ஏதா................வது ஒரு குட்...........டி  காமெடி படத்தை தயாரிப்பாளர்கள் சேத்துப்பாங்கன்னு  இந்தப் பகுதியிலேயே ஏற்கனவே சொல்லியிருக்கேன். மதுரம், NSK நடிச்சது, இந்த மாதிரி. 

'சினிமா கதம்பம்'னு ஒரு கார்ட்டூன் படம். ஒரு பத்து நிமிஷம்  ஓடின படமாம். 1947ல மிஸ் மாலினீன்னு ஒரு படம் வந்துச்சு. இந்தப் படத்ல, இந்தக் கார்ட்டூன் படத்தை காட்டினங்களாம். தென்னிந்திய தமிழ் சினிமாவில இப்படி முதல் முதலா  கார்ட்டூன் படம் போட்டது. ஜெமினி ஸ்டூடியோஸின் SS வாசன். இதுதான் இந்தப் படத்தின் புதுமை. இதை செஞ்சது கார்டூனிஸ்ட் தாணு.  இந்த பத்து நிமிஷ படத்தில நடிச்சவங்க யா................ரு...............?  ஜெமினியின் மங்கம்மா சபதம் படத்தின் ஹீரோயின், ஹீரோதான். அதாங்க வசுந்தராவும், ரஞ்சனும். 

அப்புறமா 1960கள்ல, இதே..................மாதிரி முக்தா சீனிவாசன், கார்ட்டூன் படங்கள டைட்டில்  பாட்ல போட்டு ஒரு படம் எடுத்தாரே, யோசிச்சு பாருங்க. நமக்கு இருக்கிற வேலையில, அதையெல்லாமா யோசிக்க டைம் இருக்கு! நானே சொல்லிர்றேன். சொன்ன பொறவு பாருங்க, அட  இந்....................... த படம்தானான்னு  நெனப்பீங்க. தேன்மழை. நான் நெனச்சது சரியா போச்சா? இந்தப் படம் எல்லாருக்கும் புடிச்ச படம்.

- ஹிந்து

Heezulia
avatar
heezulia
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 571
மதிப்பீடுகள் : 187

View user profile

Back to top Go down

best Re: பழைய தமிழ் திரைப்படங்கள்

Post by பழ.முத்துராமலிங்கம் on Sun Jan 28, 2018 11:09 am

avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8782
மதிப்பீடுகள் : 1989

View user profile

Back to top Go down

best Re: பழைய தமிழ் திரைப்படங்கள்

Post by மூர்த்தி on Sun Jan 28, 2018 12:01 pm

அனிமேஷன் முறை சலனப் படத்திலேயே வந்து விட்ட்து. இந்திப் படத்திலும் பாவித்துள்ளார்கள்.ஆனால் SFE இல் செய்திருப்பது அவரின் திறமையைக் காட்டுகிறது. பழைய படங்கள் பல அழிந்து விட்டன . பார்க்க முடியாது.இப்படி எழுதுவதை வைத்து தெரிந்து கொண்டால் சரி.நன்றி பல. தொடருங்கள்.
avatar
மூர்த்தி
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1046
மதிப்பீடுகள் : 506

View user profile

Back to top Go down

best பழைய தமிழ் திரைப்படங்கள்

Post by heezulia on Sun Jan 28, 2018 4:50 pm

28.01.2018 

முத்து சாரும், மூர்த்தி சாரும் நான் எழுதுறதை படிக்கிறது சந்தோ................ஷமா இருக்கு. பூஸ்ட் குடிச்ச மாதிரி தெம்பு வருது. 


நன்றி. 

Heezulia
avatar
heezulia
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 571
மதிப்பீடுகள் : 187

View user profile

Back to top Go down

best பழைய தமிழ் திரைப்படங்கள்

Post by heezulia on Sun Jan 28, 2018 4:50 pm

28.01.2018 

முத்து சாரும், மூர்த்தி சாரும் நான் எழுதுறதை படிக்கிறது சந்தோ................ஷமா இருக்கு. பூஸ்ட் குடிச்ச மாதிரி தெம்பு வருது. 


நன்றி. 

Heezulia
avatar
heezulia
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 571
மதிப்பீடுகள் : 187

View user profile

Back to top Go down

best Re: பழைய தமிழ் திரைப்படங்கள்

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon Jan 29, 2018 7:52 am

நீங்கள் ஒவ்வொரு பதிவுகளை எவ்வளவு நேர்த்தியாக சிரத்தை எடுத்துக் கொண்டு
அதிக நேரம் கவனமாக பதிவு செய்கிறீர்கள்
பாராட்டுக்கள் தொடருங்கள்.
நன்றி
பேபி
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8782
மதிப்பீடுகள் : 1989

View user profile

Back to top Go down

best Re: பழைய தமிழ் திரைப்படங்கள்

Post by heezulia on Thu Feb 08, 2018 4:38 pm

08.02.2018

25. சேது பந்தனம் 1937
R பத்மநாபன் - டைரக்டர் 
MD பார்த்தசாரதி - இசை 
சிதம்பரம் வைத்தியநாத சர்மா - பாடல்கள் 

MS மோகனாம்பாள் - மண்டோதரி 
KS அங்கமுத்து - அசோக வனத்ல சீதாவுக்கு அரக்கி காவலாளி 
PB ரங்காச்சாரி - ராவணன் 
நாட் அண்ணாஜிராவ் - ராமன் 
MD பார்த்தசாரதி  -  ஹனுமான் 

TK கண்ணம்மாள், பாகிரதி, MA சாண்டோ, குலத்து மணி, 
MR சுப்பிரமணியம்


1950களில, பத்மநாபன் தமிழிலயும்,  தெலுங்கிலயும் சில நல்ல நல்ல படங்களையா ................ எடுத்தார். பாம்பேல ராஜா சாண்டோ........... ன்னு ஒருத்தர். இவரை பத்மநாபன்தான் இந்திய சினிமாவுக்கு அறிமுகப்படுத்தினாராம். சாண்டோ, சென்னையில  சினிமா எடுக்க ஆரம்பிச்சுட்டாராம். இன்னொருத்தரையும் சினிமாவுக்கு கொண்டு வந்தவர், பத்மநாபன்.  கே.சுப்பிரமணியம். இவர், பத்மநாபன் எடுத்த பேசாத படங்களுக்கு திரைக்கதை எழுதினார். 

பத்மநாபன் எடுத்து, வெற்றிகரமாக ஓடிய படங்கள்ல, சேது பந்தனமும் ஒண்ணாம். இந்தப் படத்துக்கு 'சேது பந்தம்'னும் இன்னொரு பேர்  இருந்துச்சாம். இந்தப் படம் என்னான்னா,  சீதா, ராமன், ஹனுமான் இவங்க சம்பந்தப்பட்ட  கதை.  ஆனா முழு கதையில்ல. ராமாயணத்தின் ஒரு பகுதி. 

ஹனுமான் இலங்கையை எரிச்சதுக்கு பின்னால, சீதாவிடம்  இருந்து அடையாள மோதிரத்தை வாங்கிட்டு, ராமர்ட்ட போய் காட்றாருல? இதுக்கப்புறமா நடக்கிறதுதான் இந்தப் படம்.  ராமர்  படையெடுத்துட்டு  போயி,  சீதாவை மீட்டு வருவார்ல, இதுதான் இந்தப் படத்தின் கதை. 

மண்டோதரியாக நடிச்ச மோகனாம்பாளின் தங்கச்சி, 
MS சரோஜினியாம். மோகனாம்பாள் நடிச்ச படங்கள்ல்லாம், இவர் தங்கச்சி குட்டி குட்டி.................... ரோல்ல நடிச்சார். 1940கள்ல சரோஜினி பெரிய நடிகை ஆகிட்டாராம். தயாரிப்பாளர் ஸ்ரீராமுலுவின் பட்சிராஜா ஸ்டூடியோஸ் படங்களில நடிச்சிட்டு இருந்தார். 

ஹனுமானாக நடிச்ச பார்த்தசாரதிக்கு, கர்னாடக சங்கீதம் நல்லா படிச்சவரு. அவர்  சுகுண விலாஸ் சபா நடத்திய தமிழ்   நாடகங்களுக்கு  ம்யூசிக் போட்டுட்டு இருந்தாராம்.  ம்யூஸிக் போட்டுட்டு சும்மாவா இருந்தாரு? அந்த காலத்தில வந்த நிறைய படங்களில நடிச்சிட்டு இருந்திருக்கார் மனுஷன். ஆனா அவருக்கு நடிப்பை விட, ம்யூஸிக்தான் கை குடுத்துச்சாம். அப்புறமா ஜெமினி ஸ்டூடியோல ம்யூஸிக் டைரக்டரா இருந்த  ராஜேஸ்வர ராவ் கூட சேர்ந்து, அங்கேயே ஆஸ்தான ம்யூஸிக் டைரக்டராகிட்டாராம். 

பார்த்தசாரதி  இந்தப் படத்தில ஹனுமானாக அட்டகாசமாக நடிச்சு, படம் ஓஹோ.........................ன்னு ஓடுறதுக்கு ஒரு காரணமாக இருந்தாராம்.  

அரக்கியாக நடிச்ச அங்கமுத்து பற்றி ஒரு விஷயம் சொல்லோணும். அவர் நடிக்க ஆரம்பிச்சதுலே இருந்து, ஸ்டூடியோவுக்கு போனது  மாட்டு வண்டீலதான். அவருடைய நடிப்பு காலம் முழூ............சும் மாட்டு வண்டீலதான் ஷூட்டிங்குக்கு  போனாராம். 

தனது ஓரியண்ட்டல் ஃபிலிம்ஸுக்காக, பத்மநாபன், இந்தப் படத்தை தயாரிச்சு, டைரக்ட் செஞ்சிருந்தார்.   

அநேகமாக, இந்த படத்தில நடிச்சவங்க எல்லாருமே பாடியிருந்தாங்க. ஏன், ராவணன் ரங்காச்சாரி, அரக்கி அங்கமுத்து இவங்கல்லாம்  கூட பாடியிருந்தாங்களாமே.  படத்தில ராவணன்ட்ட வேல  செஞ்ச அரக்கீங்கல்லா....................ரும்  சேர்ந்துகிட்டு, ஜா.....லியா பாட்டு பாடி, டான்ஸ் ஆடினாங்களாம். அந்த பாட்டுல, 'புல்லாக்கு', 'சுங்குடி புடவை' ன்னு வார்த்தைங்கல்லாம் இருந்துச்சு. 

சுங்குடி சேலை அப்பவே..................... இருந்துச்சா?   ஆமா...............,  இந்த அரக்கீங்க, பாட்டு பாடி டான்ஸ் ஆடறதுக்கு, ராவணன்ட்ட பர்மிஷன் வாங்கினாங்களா? 

வழக்கம் போல அந்த கால படங்கள்ல இருந்துச்சாமே,  இடைச்செருகல் காமெடி ட்ராமா, அது போல இந்த சேது பந்தனம் படத்திலேயும் ஒரு காமெடி ட்ராமாவாம். இந்த ட்ராமா பேர் 'ஆசை'. இதுல முக்கியமான ரோல்ல நடிச்சவங்க, TN கமலவேணி & புலியூர் துரைசாமி அய்யா. 

இந்தப் படம் சம்பந்தமான ஒண்ரெண்டு போட்டா, பார்த்தசாரதி குடும்பத்தார்ட்ட   இருந்துச்சாம்.  படத்தின் பிரிண்ட் எங்கயும் இல்லியாம்.  

இந்தப்பட ஆரம்பத்ல, ராம காவியத்தை பற்றி, பார்த்தசாரதி அழக்.............................கா சொல்வாராம். மோகனாம்பாள்,  பார்த்தசாரதி, ரங்காச்சாரி  இவங்க நடிப்பெல்லாம் ரொம்ப நல்லா இருந்துச்சாம்.

 
Heezulia
avatar
heezulia
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 571
மதிப்பீடுகள் : 187

View user profile

Back to top Go down

best Re: பழைய தமிழ் திரைப்படங்கள்

Post by SK on Thu Feb 08, 2018 5:03 pm

சூப்பருங்க
avatar
SK
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6408
மதிப்பீடுகள் : 1140

View user profile

Back to top Go down

best Re: பழைய தமிழ் திரைப்படங்கள்

Post by heezulia on Sat Feb 10, 2018 5:23 pm

10.02.2018

வித்தியாசமான படங்கள் 

9. எதிர்பாராதது 1954 

ஜெயரவி என்கிறவர் ஈகரையில 2014  பெப்ருவரி 11ஆம் தேதி ஆரம்பிச்சு 14ஆம் தேதி வரை இந்தப் படத்தை பத்தி வெளா.....................வாரியா எழுதியிருக்கார், அதுவும் 22 பதிவுகளில, 1, 3, 6, 8 – 26. சரி, இருக்கட்டுமே, நாமும் நம்ம பாணீல எழுதி வைப்போமே.................ன்னு எழுதுறேன். ஏன்னா இந்தப் படம் என் லிஸ்ட்ல இருக்கே. அதை எப்டீ மிஸ் பண்றது? படிச்சுதான் பாருங்களேன்.

கிட்டத்தட்ட இந்தப் படத்தின் கதை மாதிரிதான், ரஜினி & கமல் நடிச்ச ‘மூன்று முடிச்சு’ படத்தின் கதையும். கொஞ்சூண்டு கதை மட்டும் மாறி இருக்கு.

மூன்று முடிச்சுல கதாநாயகியை வில்லன் ஒருதலையாய் லவ்வுறான். சந்தர்ப்ப வசத்தால் கதாநாயகி, வில்லனின் அப்பாவை கல்யாணம் செஞ்சுக்கிற நிலைமை. இந்த கல்யாணத்துக்கப்புறமாத்தான் வில்லனுக்கு விஷயம் தெரியுது. தன் மகன், தன்  மனைவியை ஒருதலையாய் காதலிச்சவன்னு அப்பாவுக்கு அப்புறமா தெரிய வருது. கொஞ்சம் வேதனைப்பட்றார். வில்லன் திருந்துறான். அப்டீ இப்டீன்னு, கதாநாயகியும், அவள் கணவனும், மகன் வில்லனாக இருந்தப்போ, அவனால் ஏமாற்றப்பட்டவளை, அவனுக்கு கல்யாணம் செஞ்சு வச்சுர்றாங்க.

ஆனா எதிர்பாராதது படத்தில, கொஞ்சம் கதை மாறுது. கதாநாயகனும், கதாநாயகியும் லவ்வுறாங்க. என்ன சந்தர்ப்பம்னு தெரியல, கதாநாயகி கதாநாயகனின் அப்பாவை கல்யாணம் செய்துகிறாளாம்.

மூன்று முடிச்சு படம் பார்த்தேன். எதிர்ப்பாராதது படம் வந்ததே தெரியாது. இப்பதான் கிளைமாக்ஸ் ஸீன் மட்டும் பார்த்தேன்.
எதிர்பாராதது படத்தில சிவாஜியும், பத்மினியும் காதலர்கள். இது சிவாஜியின் அப்பா நாகையாவுக்கு தெரியாது. சிவாஜி வெளிநாட்டுக்கு படிக்கப் போறார். போகும்போது விமான விபத்து. சிவாஜி இறந்து போறதாக ந்யூஸ் வருது.

பதிமினியும், நாகையாவும் சோகமே உருவாகிறாங்க.  
நாகையாவுக்கு ஒரு friend. அவர் நாகையாவ, மறுமணம் செஞ்சுக்க சொல்றார். சொல்றார் இல்ல, வற்புறுத்துறார். இவரும் பெண் தேட ஆரம்பிக்கிறாரு. பத்மினி மாட்டிக்கிறாரு. சிவாஜி வேற செத்து போயிட்டதாக பத்மினி நம்பிட்டு இருக்காங்களே.

முதல் இரவு. நாகையா பத்மினியை நெருங்குறார். அவர் வயசா.............னவரா இருந்ததால, “அப்பா......”னு அலறிட்டே நாகையா கால்ல தடா..................ல்னு  விழுந்துர்றார், பதிமினி. நாகையா தெகச்சு நிக்கிறாரு. பதிமினி சும்மா இல்லாம, சிவாஜி கூட தான் எடுத்துகிட்ட போட்டா, சிவாஜி எழுதின லெட்டர் எல்லா.............த்தையும் நாகையாட்ட காட்ட, நாகையாவுக்கு அதிர்ச்சி. “இன்னாங்கடா இது, நம்ம பையன் காதலிச்ச பொண்ணையா நாம கண்ணாலம் செஞ்சுகிட்டோம்”னு ஒரே ................சோகம்.

ஆமா, இந்த பதிமினி என்ன, அம்மா வீட்ல இருந்து வரும்போதே, போட்டா, லெட்டர் எல்லாம் எடுத்துட்டு வந்தாரா? நாகையாட்ட காட்னதே காட்னாரு, கண்ணாலம் செஞ்சுக்கிறதுக்கு முன்னாலேயே காட்டியிருக்கலாம்ல. சரி என்னவோ போங்க, ஸ்ரீதர் அப்டி ஒரு திரைக்கதை எழுதிட்டாரு. விடுங்க.

அதுக்கப்புறமா என்ன செய்யலாம்னு நாகையா யோசிச்சார். மனைவி கூட வாழ மனசு ஒத்துக்கல, ஒட்டல. வீட்டை விட்டு போக முடிவு செஞ்சுட்டார். எங்........................க போவாரு? வயசானவராச்சே. தீர்த்த யாத்திரைக்குத்தான். பதிமினியை, வேற யாரையாவது கல்யாணம் செய்ய சொல்லிட்டு, தீர்த்த யாத்திரைக்கு புறப்பட்டு போய்ட்டா............ர்.

தீர்த்த யாத்திரை போன இடத்தில, நாகையா சிவாஜியை சந்திக்கிறாரு. ஆனா எப்படி? ஒரு குருடனாக. பெத்த புள்ளைய, அப்படி ஒரு நெலமைல பார்த்தா, ஒரு அப்பாவுக்கு எப்..............புடி இருக்கும், இல்ல? அப்படி ஒரு நெலமைல இருந்தார் நாகையா. அதுலேயும், மகனை பார்த்த ஒடனே, என்ன ஞாபகம் வந்திருக்கும்? மகனுடைய காதலியை கல்யாணம் செஞ்சுகிட்டதுதானே ஞாபகத்துக்கு வரும். அவர் என்ன செயரார்னா, அவர் செத்து போயிட்டதாக பொய்யான ஒரு தகவலை பத்மினிக்கு  லெட்டர்  அனுப்புறாரு. பாவம் பதிமினி, அந்த இளம் வயதில விதவைக்கோலம்.

ஆனா சிவாஜிக்கு, தன் காதலியைத்தான் அப்பா கல்யாணம் செஞ்சுகினாருன்னு அதுவரை தெரியாது.  நாகையா சிவாஜியை ஊருக்கு போக சொல்றார். பதிமினியை கல்யாணம் செஞ்சுக்க சொல்றார். சிவாஜியும் ஊருக்கு போறார்.  மகனை பற்றிய சிந்தனையும், அவர் தெரியா...........ம செஞ்சுட்ட தப்பும், அவர் மனசை அரிச்சு, அரிச்சு, உயிரை விட்டுர்றார்.

பத்மினியை தேடி சிவாஜி அலைறார். கண்ணு தெரியாதுல்ல. பின்ன என்ன செய்வார்? அப்போல்லாம், குடும்பம் சேர ஒரு குடும்ப பாட்டூன்னு ஒண்ணு  இருக்குமே. அதை எம்புட்டு தூரத்திலிருந்து பாடினாலும், foreignல இருந்து பாடினா கூட, குடும்பத்தாருக்கு கேட்குமே, அதே................ மாதிரிதாங்க. இங்கயும் நடக்குது. பதிமினி மொதல்ல ஒரு பாட்டு பாடியிருக்காங்க போல. “சிற்பி செதுக்காத பொற்சிலையே” னு ஒரு பாட்டு. இப்...............ப அதே..... பாட்டை, சிவாஜி பாடறார். “அட நம்மாளு போல இருக்கே. நாம பாடின பாட்டாச்சே” ன்னு பதிமினிக்கு நினைவோ....... ஒரு பறவைன்னு, நினைவு சிறகடிக்குது.

என்னவோ, ஒரு காலத்தில காதலனாக இருந்தவனாச்சே, ஓ.................டி வர்றார். சிவாஜி பக்கத்தில நிக்கிறார். வந்தது தன் காதலி பத்மினிதான்னு சிவாஜியும் தெரிஞ்சுகிட்டார், ரெண்டு பேரும் அழுறாங்க, பேசுறாங்க. ரெண்டு பேரும் சேர்ந்து வாழலாம்னு சிவாஜி சொல்றார். அம்புட்டுதான். சிவாஜிக்கு பொறி கலங்…………….கிர்ச்சு. பளா................ர் பளார்னு ஓ...............ங்கி சிவாஜி கன்னங்கள்ல அடிச்சுட்டார் பதிமினி.

பத்மினி கொடுத்த அறைக்கு பின்னால ஒரு சமாச்சாரம் இருக்கு. அப்புறமா சொல்றேன், படிங்க.

பத்மினிக்கு ஒரு அண்ணனும், அண்ணியும் இருக்காங்க. அண்ணன் டாக்டர். சிவாஜிக்கு வைத்தியம் பார்த்து, அவருக்கு கண்பார்வை வந்துருச்சு. பத்மினியும், சிவாஜியும் ரொம்ப நா.............ள் கழிச்சு பாக்குறாங்க. ரெண்டு பேருக்குமே feelings. அண்ணனும், அண்ணியும் இவங்க ரெண்டு பேரையும் சேத்து வச்சுறலாமே................ன்னு ஆசைப்பட்றாங்க.

பார்வை வந்த சிவாஜி பத்மினியின் வீட்டுக்கு வந்தார். பயங்கரமான திகைப்பு அவருக்கு. அவர் ஒரு போட்டாவ பதிமினியின் ரூம்ல பார்க்குறார். யார் போட்டான்னு நெனக்கிறீங்க? அப்பா நாகையாவின் போட்ட, அதுவும் மாலை போட்டு. “இது யார்?” ன்னு தயங்கி தயங்கி பத்மினிட்ட சிவாஜி கேட்க, “என் கணவர்” னு அமைதியாக சொல்றார், பத்மினி. இப்பதான் விஷயம் முழ்சும்  தெரியுது, சிவாஜிக்கு. அலர்றார், கதர்றார். என்ன செய்ய முடியும்.

கணவன் இறந்துட்டானே, காதலனையே கட்டிக்கலாம்னு பத்மினி நெனச்சாரா? இல்ல. பத்மினியும், சிவாஜியும் அம்மா புள்ள ஆயிட்டாங்க.

சு ப ம்.

அன்னிக்கி சிவாஜியை பத்மினி அடிக்கிற ஸீன் ஷூட்டிங்னு பத்மினிட்ட சொல்றாங்க. பத்மினி முடியாதுன்னுட்டார். அதுதான் முக்கியமான ஸீன்னு டைரக்டர் CH நாராயணமூர்த்தி சொல்றார். சிவாஜியின் ரசிகர்கள் இந்த ஸீனை விரும்பமாட்டாங்கன்னு பத்மினி ஊஹும்னுட்டார்.

டைரக்டர் இத பத்தி சிவாஜிட்ட சொல்லி, இந்த ஸீனை பத்மினிட்ட விளக்கி சொல்ல சொல்றார். சிவாஜியும் அவரால முடிஞ்..............ச வரைக்கும் சொல்லிப் பார்க்கிறார். அது ஏன், மத்த பாஷைல உள்ள படங்கள்ல ஹீரோயின் ஹூரோவ அடிக்கிற ஸீனை போட்டு காட்டியிருக்கார். ஹாலிவுட் படங்களை கூட விடல. எல்லா....................த்தையும் பத்மினி பார்த்தார். அதுக்கப்புறமா உம் சொல்லிட்டார்.

ஹீரோ ஹீரோயின்ட்ட அடி வாங்குற படங்களை அவங்க எப்படி கலெக்ட் செஞ்சாங்க? அடி வாங்குற ஹீரோவே, ஹீரோயின் தன்னை அடிக்க எப்டீல்லா...............ம் ஏற்பாடு செஞ்சிருக்கார்!!!

சரி, அந்த ஸீனுக்கு வர்றேன். ரெண்டு பெரும் கண்ணாலம் கட்டிகினு சந்தோஷமா வாழலாம்னு சிவாஜி சொல்றார்ல. வந்துச்சே...................... பத்மினிக்கு கோவம். சிவாஜியின் ரெண்டு கன்னங்களிலும், மாறி, மாறி, மாறிமாறிமாறி அடிச்சார். சிவாஜிக்கு பயங்கரமா வலிச்சுதாம். அதையும் பொறுத்துக்கிட்டு, அடி வாங்கிட்டே............... இருந்தார், பத்மினியும் அடிச்சுட்டே...................... இருந்தாங்க. 

ஒரு கட்டத்தில சிவாஜி மூக்கில ரெத்தம் இல்ல ரெத்தம், அது வந்துருச்சாம். அந்த டைரடக்கர் இருக்காஹளே, அவுஹ ‘கட்’ சொல்வார், சொல்வார்னு சிவாஜி எதிர்ப்பார்த்தா, ‘கட்’டே............ சொல்லக்காணோம். பொருத்தது போதும், பொங்கி எழு, எரிமலை எப்படி பொறுக்கும், என்கிற நிலை ஆயிருச்சு சிவாஜிக்கு. 

பதிமினி கையை புடிச்சு, “கட், கட்” ன்னாராம். ன்னாராம் இல்ல கத்திட்டாராம். அப்பதான் சுயநினைவு வந்த மாதிரி, டைரக்டக்...............கர் “கட்” சொன்னாராம்.

ஆமா............... அந்த டைரடக்கர் பத்மினியின் நடிப்பில தன்னை மறந்து உக்காந்திருந்தாரா, இல்ல ................ சிவாஜியை நல்லா அடிக்கட்டும்னு வேணும்னுக்கே சும்மா இருந்துட்டாரா? சிவாஜியை என்னாத்துக்கு இப்படி பழி வாங்கினார்? சரி, அது அவங்களுக்குள்ள.

அந்த ஸீன் முடிஞ்சுது. ஆனாலும் பத்மினி அந்த நடிப்பிலிருந்து வெளிய வரல. அம்புட்டு உணர்ச்சிபூர்வமா நடிச்சிருந்தார். போர்வையால அவரை போர்த்தி, கைய காலை தேச்சு விடுற நெலமைல இருந்தாராம், பத்மினி. அதுமட்டுமில்லீங்க, டாக்டரு வந்தாராம், ஊசியும் போட்டாராம்.

நல்லா இருக்கூங்க. அடி வாங்கி, ரத்தம் வந்த சிவாஜி, ரத்தத்தை தொடச்சுட்டு, அப்பா..............வியாக நின்னாராம். அடிச்ச பத்மினி? அதுக்கப்புறமா ரெண்............டு  நாள் ஷூட்டிங் இல்ல. பத்மினியால வர முடியல, ரெண்டு நாள் லீவு.

இன்னொரு விஷயம் என்னான்னா, விமான விபத்துல சிவாஜி மாட்டிகிட்டார்ல? அட படத்திலேங்க. அப்போ அவர் காட்டில மயங்கி கிடக்கிறார். காட்டுவாசீங்க அவரை தூக்கிட்டு போயி சிகிச்சை கொடுக்கிறாங்க. அப்ப அவரை கவனிச்சுக்க ஒரு சின்ன பொண்ணு இருந்தா.  அந்த சின்ன பொண்ணு, பின்னால சூப்பர் காமெடி நடிகை. சச்சு. அதாங்க காதலிக்க நேரமில்லைல நடிச்சாங்களே, நாகேஷுக்கு ஜோடியா, அவங்கதான்.  
   
நூ.....................று நாள் ஓஹோன்னு ஓடிய படமாம். பத்மினியின் அண்ணனாக சகஸ்ரநாமம், அண்ணி எஸ்.வரலட்சுமி. கதை & வசனம் ஸ்ரீதர். நாலு பேர் பாட்டு எழுதியிருந்தாங்க, பாபநாசம் சிவன், KP காமாட்சி சுந்தரம், KS கோபாலகிருஷ்ணன் & சுரபி. பாண்டுரங்கன் ம்யூசிக். CH நாராயணசாமி டைரக்டர்.

KSG இந்தப் படத்துக்குத்தான் முதல் முதலாக பாட்டு எழுதினாராம், ஸ்ரீதரின் ரெக்கமண்டேஷன்ல.

- ரமணி

இது எப்படி இருக்குன்னு சொல்லுங்க.

Heezulia  மீண்டும் சந்திப்போம்
avatar
heezulia
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 571
மதிப்பீடுகள் : 187

View user profile

Back to top Go down

best Re: பழைய தமிழ் திரைப்படங்கள்

Post by SK on Sat Feb 10, 2018 5:53 pm

சொல்லமுடியாது

பைத்தியம் பைத்தியம் பைத்தியம் பைத்தியம் பைத்தியம் பைத்தியம் பைத்தியம் பைத்தியம்
avatar
SK
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6408
மதிப்பீடுகள் : 1140

View user profile

Back to top Go down

best Re: பழைய தமிழ் திரைப்படங்கள்

Post by heezulia on Sat Feb 10, 2018 6:40 pm

10.02 .2018

சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி புன்னகை சிரி நன்றி சியர்ஸ் சிரி சிரி ஓகே!!!! மப்பு ஏறிப்போச்சு குதூகலம் நக்கல் நாயகம் ஜொள்ளு நடனம் சிரிப்பு சிப்பு வருது

Heezulia
avatar
heezulia
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 571
மதிப்பீடுகள் : 187

View user profile

Back to top Go down

best Re: பழைய தமிழ் திரைப்படங்கள்

Post by பழ.முத்துராமலிங்கம் on Sat Feb 10, 2018 9:33 pm

@heezulia wrote:10.02 .2018

சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி புன்னகை சிரி நன்றி சியர்ஸ் சிரி சிரி ஓகே!!!! மப்பு ஏறிப்போச்சு குதூகலம் நக்கல் நாயகம் ஜொள்ளு நடனம் சிரிப்பு சிப்பு வருது

Heezulia
மேற்கோள் செய்த பதிவு: 1259190
என்ன இது இப்படி  ஒரே குழப்பம்
ஏன் ??
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8782
மதிப்பீடுகள் : 1989

View user profile

Back to top Go down

best Re: பழைய தமிழ் திரைப்படங்கள்

Post by heezulia on Sat Feb 10, 2018 10:06 pm

10.02.2018

பின்ன என்ன முத்து சார். 

சொல்லமுடியாதுன்னு SK கோவிச்சுகிட்டு, மூஞ்சியை தூக்கி வச்சுகிட்டார். அதுவும் எட்.....................டு மூஞ்சி. அதுக்கு என் சந்தோஷத்தை இப்படி காட்டிட்டேன். குழப்பமில்ல சார். அவர் எட்டு மூஞ்சியை போட்டிருக்கும்போது, அதை விட அதிகமான மூஞ்சியை நான் போட வேண்டாமா? அதான் போ...........ட்டு தள்ளிட்டேன். 

Heezulia
avatar
heezulia
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 571
மதிப்பீடுகள் : 187

View user profile

Back to top Go down

best Re: பழைய தமிழ் திரைப்படங்கள்

Post by மாணிக்கம் நடேசன் on Sun Feb 11, 2018 3:31 pm

@heezulia wrote:10.02.2018

பின்ன என்ன முத்து சார். 

சொல்லமுடியாதுன்னு SK கோவிச்சுகிட்டு, மூஞ்சியை தூக்கி வச்சுகிட்டார். அதுவும் எட்.....................டு மூஞ்சி. அதுக்கு என் சந்தோஷத்தை இப்படி காட்டிட்டேன். குழப்பமில்ல சார். அவர் எட்டு மூஞ்சியை போட்டிருக்கும்போது, அதை விட அதிகமான மூஞ்சியை நான் போட வேண்டாமா? அதான் போ...........ட்டு தள்ளிட்டேன். 

Heezulia
மேற்கோள் செய்த பதிவு: 1259208 மூஞ்சின்னா என்னா, முகம் னா என்ன?????

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4225
மதிப்பீடுகள் : 1232

View user profile

Back to top Go down

best Re: பழைய தமிழ் திரைப்படங்கள்

Post by heezulia on Sun Feb 11, 2018 4:13 pm

11.02.2018 

"கோவிச்சுகிட்டு"ன்னா என்ன, "கோபித்துக்கொண்டு" ன்னா என்ன?

Heezulia 
avatar
heezulia
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 571
மதிப்பீடுகள் : 187

View user profile

Back to top Go down

best Re: பழைய தமிழ் திரைப்படங்கள்

Post by மூர்த்தி on Sun Feb 11, 2018 8:04 pm

முகம் மனிதனின் முழு முகத்தையும் குறிக்கும். மூஞ்சி மனிதனுக்கு சொல்லப்படுவதில்லை.

மூஞ்சி என்பது மூக்கு வாயை குறிக்கும்.மூஞ்சி மிருகங்களுக்கு சொல்லப்படுவது.

முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து 
அகநக நட்பது நட்பு.

கோபம் -கோபித்துக் கொண்டு; கோவம் - கோவிச்சுக்கிட்டு -(பேச்சு வழக்கு); மருவியதால் கோபம்-கோவம் இரண்டும் பாவனையில் உள்ளது.

தவறானால் திருத்தவும்.
avatar
மூர்த்தி
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1046
மதிப்பீடுகள் : 506

View user profile

Back to top Go down

best Re: பழைய தமிழ் திரைப்படங்கள்

Post by heezulia on Sun Feb 11, 2018 9:54 pm

11.02.2018 

எங்க ஊர்லலாம் முகத்தை மூஞ்சின்னுதான் சொல்வாங்க. தூங்கி முழிச்சு வந்தா, "மூஞ்சிய கழுவிட்டு வா"ன்னு சொல்வோம். இது மட்டுமில்ல, "மூஞ்சில பௌடர் நெறைய இருக்கு, மூஞ்சில பொட்டு கோணலா இருக்கு" இப்டீல்லாம்தான் சொல்வோம். 

நீங்க சொன்ன குறள் எண் 786

மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து. [90]


அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து
இன்சொலன் ஆகப் பெறின். [92]


முகத்தான் அமர்ந்து  இனிது நோக்கி அகத்தானாம்
இன்சொ லினதே அறம். [93]


அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்
கடுத்தது காட்டும்
முகம். [706] 


முகத்தின் முதுக்குறைந்தது உண்டோ உவப்பினும்
காயினும் தான்முந் துறும். [707]


சும்மா அனுப்பலாமேன்னு அனுப்பி வச்சேன்.  ஒரு இடத்தில 134உம், இன்னொரு இடத்தில 262  திருக்குறள்களை, பதவுரை, பொருளுடன் அனுப்பி இருக்கேன். இதுவும் எல்லோரும் புரிஞ்சுகிற மாத்ரி, பேச்சு தமிழ்லதான். 
படிக்கிறவங்க, அதை file பண்ணி வச்சுக்கிறதாக சொன்னாங்க. 

இங்க இலக்கணம் எழுதிட்டு இருக்கிறதை பார்த்தேன். நல்ல முயற்சி. 

Heezulia
avatar
heezulia
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 571
மதிப்பீடுகள் : 187

View user profile

Back to top Go down

best Re: பழைய தமிழ் திரைப்படங்கள்

Post by heezulia on Sun Feb 11, 2018 11:28 pm

11.02.2018
@heezulia wrote:01.01.2018 
10. பக்த குசேலா 1936
நந்தனார் 1935ல ரிலீஸ் ஆச்சாம். படம் டணால். கல்கி இந்தப் படத்தை பத்தி கச்சாமுச்சானு விமர்சனம் எழுதிட்டாராம்.  
மேற்கோள் செய்த பதிவு: 1255532

20.12.2017

என் நண்பர் ஒருத்தர், கல்கி என்னத்ததான் எழுதினார்னு கேட்டார். நானும் தேடி பதில் அனுப்பினேன். அங்க பதில் எழுதவும், கேட்கிற விளக்கங்களை தேடி அனுப்பவும், எனக்கு கிடைக்கிற பாராட்டுதல்களுக்கு நன்றி சொல்லி பதில் அனுப்புவதற்கும் நேரம் பத்தமாட்டேங்குது. 


கல்கி எழுதிய விமர்சனம் பற்றி அங்க அனுப்பின பதிலை இங்கேயும் அனுப்பலாமேன்னு அனுப்புறேன்.

நந்தனார் படத்தைப் பற்றி விமர்சனம் எழுதும்போது  கல்கி கிழி கிழீன்னு இந்த படத்தை பற்றி எழுதி கிழிச்சுட்டாராம்.  ஆனா எனக்கு  இந்த ஒரே ஒரு வரி விமர்சனம்தான் கெடச்சுது.  "படத்தில் எருமை மாடும், பனை மரமும் நன்றாக நடித்திருந்தன". 

இந்த கம்பாரிஸன் பற்றி எனக்கு புரியல.  தெரிஞ்சவங்க சொல்லுங்க. 

நான் விகடன்ல வாசிச்சதை நீங்க இங்க படிங்க. 

அஸன்தாஸ் னு ஒரு தயாரிப்பாளராம். இவரது கம்பெனி அஸன்தாஸ் கிளாஸிகல் டாக்கீஸ்.  இவர் KB சுந்தராம்பாளின் தாய்மாமன்ட்ட, "சுந்தராம்பாளை நந்தனார் படத்தில நடிக்க ஏற்பாடு செய்ய முடியுமா"ன்னு கேட்டாராம். 

சுந்தராம்பாள் தன் கணவர் கிட்டப்பாவுடன் படங்களில நடிச்சுட்டு இருந்தாராம். அவர்  இறந்த பிறகு, வேற ஆம்பளைங்க கூட நடிக்கிறதில்லேன்னு முடிவு பண்ணி, அது மாதிரி வாழ்ந்துட்டும் இருந்தாராம். நந்தனார் படத்தில நடிக்கிறதைப் பற்றி சுந்தராம்பாள்ட்ட பேசினாங்களாம். அவரும் சம்மதிச்சுட்டார்.  அவருக்கு கொடுத்திருந்த வேஷம் அப்படி. சங்கீத பூபதி மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர்ன்னு ஒருத்தராமே. இவர் வேதியராக நடிச்சாராம். 

சுந்தராம்பாள் நந்தனார் படத்தில நடிக்கப் போறதா விகடன்தான் முதல்ல பbலிஷ் செஞ்சுதாம். "நந்தனார் படத்தில் நடிக்கப் போகும் ஸ்ரீமதி சுந்தராம்பாள்" ன்னு போட்டு, ஆம்பள  வேஷத்தில இருந்த  சுந்தராம்பாளின் படத்தை போட்டுட்டாங்களாம். அம்புட்டுதான். ஆம்பள வேஷத்தில ஒரு பொம்பள நடிக்கறதான்னு கல்கி விமர்சனம் எழுதினாராம். 

ந.ராமரத்னம்னு ஒரு எழுத்தாளர். இவர் தினமணில இந்தப் படத்தை பற்றி  பயங்கரமாக கண்டிச்சு, பெரீ.............ய கட்டுரை எழுதினாராம். அதுல இந்த வரிகள் இருந்துச்சாம். 

"KBS நந்தனாராக நடிப்பது கேலிக்கூத்தாகும். பெண்கள் ஆண்கள் வேஷத்லேயும் , ஆண்கள் பெண்கள் வேஷத்லேயும் நடிக்கிறது நாடகத்தோடு இருக்கட்டும். சினிமால வேண்டாம்"  

ஆனாலும் KBS தான், அப்புறமா இப்படி நடிச்சவங்களுக்கு முன்னோடி.

Heezulia  மீண்டும் சந்திப்போம் 
avatar
heezulia
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 571
மதிப்பீடுகள் : 187

View user profile

Back to top Go down

best Re: பழைய தமிழ் திரைப்படங்கள்

Post by மூர்த்தி on Mon Feb 12, 2018 12:45 am

சங்கீத பூபதி மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர் நடித்த முதலும் கடைசிப் படமும் நந்தனார்தான். கல்கியும் தினமணியும்  மிக மோசமாக விமர்சனம் செய்ததற்கு வேறு சில காரணமும் உண்டு.அன்று சாதிய வெறி தலைவிரித்தாடிய காலம். அய்யர் நடிப்பு என்று தெரிந்தும் கூட ,சேரிக் காட்சியில்,   நந்தனார் காலில் விழவும் மறுத்து விட்டாராம் .தலையை  தாழ்த்தி மட்டும் வணங்கினாராம்.

கோபாலகிருஷ்ண பாரதியார் இயற்றிய நந்தனார் சரித்திரம் என்னும் காவியத்தை தழுவி எடுக்கப்பட்ட ”பக்த நந்தனார்” என்னும் திரைப்படம்.கதையை மாற்றி ,அதில் உள்ளவற்றை ஏற்காமல் நடித்ததை கல்கி கிண்டலடித்திருந்தார்.

தலித் கதாநாயகியாக நடித்தாலும்,  கதாநாயகி தலித்தாக நடித்தாலும் ஏற்றுக்கொள்ள இயலாத குரூர மனநிலையில் அன்றைய  சாதிய சமூகம் கட்டமைக்கப்பட்டிருந்தது .இன்றும் முற்றாக மாறவில்லை.
இந்த படத்தில் நடித்ததற்காக அக்ரஹாரத்தில் ”பறையன் போறான் பாரு” என்று சொல்லி கேலி செய்தனராம்.

இதனால் பல பத்திரிகையாளர்கள் படத்தை மோசமாக விமர்சித்திருந்தனராம்.
அதிக செலவில் எடுத்திருந்தும், படம் வெற்றியடையவில்லை.கே.பி.எஸ்.ஒரு லட்ஷம் வாங்கி நடித்த படம்.
avatar
மூர்த்தி
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1046
மதிப்பீடுகள் : 506

View user profile

Back to top Go down

best Re: பழைய தமிழ் திரைப்படங்கள்

Post by heezulia on Mon Feb 12, 2018 10:36 am

12.02.2018 


நந்தனார் பற்றி விகடனில்  படிச்சபோ, நீங்க எழுதியதையும் படிச்சேன். 1933லேயும், 1942லேயும் கூட நந்தனார் படம் வந்தது போலியே.


Heezulia
avatar
heezulia
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 571
மதிப்பீடுகள் : 187

View user profile

Back to top Go down

best Re: பழைய தமிழ் திரைப்படங்கள்

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon Feb 12, 2018 10:52 am

@மூர்த்தி wrote:முகம் மனிதனின் முழு முகத்தையும் குறிக்கும். மூஞ்சி மனிதனுக்கு சொல்லப்படுவதில்லை.

மூஞ்சி என்பது மூக்கு வாயை குறிக்கும்.மூஞ்சி மிருகங்களுக்கு சொல்லப்படுவது.

முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து 
அகநக நட்பது நட்பு.

கோபம் -கோபித்துக் கொண்டு; கோவம் - கோவிச்சுக்கிட்டு -(பேச்சு வழக்கு); மருவியதால் கோபம்-கோவம் இரண்டும் பாவனையில் உள்ளது.

தவறானால் திருத்தவும்.
மேற்கோள் செய்த பதிவு: 1259305
எங்கெங்கு காண்கினும் திருக்குறள் அருமையான விளக்கம்
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8782
மதிப்பீடுகள் : 1989

View user profile

Back to top Go down

best Re: பழைய தமிழ் திரைப்படங்கள்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 4 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum