உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» வேலன்:-ஆடியோ பைல்களை பார்வையிட -Finetune.
by velang Today at 2:08 pm

» அமெரிக்க தடையை மீறி ஈரானுக்கு ஐரோப்பிய நாடுகள் உதவி
by சக்தி18 Today at 1:41 pm

» நடிகை ஸ்ரீதிவ்யா படங்களில் உங்களுக்கு பிடித்தது?
by சக்தி18 Today at 1:33 pm

» ஏப்ரல் 5 ஆம் தேதி இரவு 9 மணிக்கு மெழுகுவர்த்தி, செல்போன் விளக்குகளை ஒளிரவிட வேண்டும்; பிரதமர் மோடி
by சக்தி18 Today at 1:30 pm

» கொரோனா அவசரநிதி: இந்தியாவுக்கு ஒரு பில்லியன் டாலர் நிதியை வழங்குகிறது உலக வங்கி..!
by ayyasamy ram Today at 12:29 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 12:19 pm

» Can you imagine? (உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா?)
by Pranav Jain Today at 11:51 am

» கொரோனா தமாஷ் பாருங்கள்!
by சக்தி18 Today at 11:41 am

» கோவிலில் கூட்டுக் குடும்பம்!
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:40 am

» சமூக இடைவெளியை கடைபிடித்த குரங்குகள்.... நெகிழ்ந்து போன நடிகர்
by சக்தி18 Today at 11:39 am

» யார் இந்த சாலையோரம் பூக்கள் வைத்தது
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:36 am

» இறைவன் எங்கே? இறை தூதர்கள் எங்கே?
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:12 am

» எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று...
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:05 am

» அமெரிக்கா தனது நாட்டினரை இந்தியாவில் இருந்து அனுப்ப தொடங்குகியது - தூதரக அதிகாரி
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:00 am

» கொடுமைதான்.. கொரோனா
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:57 am

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:35 am

» விவேக் மீம் இணையத்தில் வைரல்! நெட்டிசன்களுக்கு அவர் வைத்த கோரிக்கை
by T.N.Balasubramanian Today at 10:19 am

» மூன்றாம் உலகப்போர் எப்படி நடக்கும்? -எழுத்ததிகாரன்
by Pranav Jain Today at 8:57 am

» கொரோனாவால் கற்ற பாடம்: நாய், பூனை இறைச்சிக்கு சீனா தடை
by பழ.முத்துராமலிங்கம் Today at 8:35 am

» 300 படங்கள் நடித்துள்ளேன்!
by பழ.முத்துராமலிங்கம் Today at 8:32 am

» இந்தியஅணி உலகக்கோப்பையை வென்ற, 2011, ஏப்ரல் 2-ம் தேதியை இந்திய ரசிகர்களால் மறக்கமுடியுமா
by ayyasamy ram Today at 8:29 am

» பல ஆண்டுகளுக்குப் பின் ஏழுமலையானுக்கு 6 மணிநேர ஓய்வு
by பழ.முத்துராமலிங்கம் Today at 8:23 am

» » » கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - ஏப்ரல் 3
by ayyasamy ram Today at 6:37 am

» மது போதைக்கு அடிமையாகி மீள முடியாத நபர்களுக்கு, 'ஆன்லைன்' மூலம் இலவசமாக மீட்பு உதவி
by ayyasamy ram Today at 6:26 am

» நண்பர்களே!!! ஒரு புளியமரத்தின் கதை நாவல் கிடைக்குமா?
by Akashgkr Yesterday at 9:06 pm

» குழந்தைகளுக்கு ‛கொரோனா', ‛லாக் டவுன்' என பெயர் சூட்டிய தம்பதியினர்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» ஏப்.,15க்கு பிறகான ரயில் முன்பதிவு: தெளிவுப்படுத்திய ரயில்வே
by ayyasamy ram Yesterday at 6:08 pm

» வேலன்:-கணிணியில் தேவையற்ற பைல்களை நீக்கிட -Wash and GO -Abelsoft
by velang Yesterday at 5:54 pm

» வேலன்:-20க்கும் மேற்பட்ட விதவிதமான ஆங்கில எழுத்துருக்கள்-English Fonts
by velang Yesterday at 5:49 pm

» வேலன்:-புகைப்படத்தில் தேவையில்லாதவற்றை நீக்கிட - PhotoScissors.
by velang Yesterday at 5:48 pm

» வீட்டுக்குறிப்புகள் -மங்கையர் மலர்
by ayyasamy ram Yesterday at 4:19 pm

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 3:58 pm

» சம்யுக்தாவின் சாகச பயிற்சி
by ayyasamy ram Yesterday at 3:55 pm

» துருக்கியில் நிகிஷா
by ayyasamy ram Yesterday at 3:54 pm

» ‘கமலி ப்ரம் நடுக்காவேரி’ ஹைடெக் பின்னணியில் ஒரு காதல் கதை
by ayyasamy ram Yesterday at 3:52 pm

» கரோனா: தமிழகம் முழுவதும் அபாயம் உள்ள பகுதியாக அறிவிப்பு!
by ayyasamy ram Yesterday at 3:43 pm

» ஏப்ரல் 2 - செய்தி சுருக்கம்)
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» பிறந்த தினவாழ்த்துகள் திரு மாணிக்கம் நடேசன் அய்யா அவர்கள்
by மாணிக்கம் நடேசன் Yesterday at 12:51 pm

» ஆஹா டிப்ஸ்
by மாணிக்கம் நடேசன் Yesterday at 10:33 am

» வீட்டுக்குறிப்புகள் -மங்கையர் மலர்
by ayyasamy ram Yesterday at 5:38 am

» கொரோனா தொற்று ஆய்வு பணியில் இந்திய கடற்படை
by ayyasamy ram Yesterday at 5:30 am

» » கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - ஏப்ரல் 2
by ayyasamy ram Yesterday at 5:27 am

» கொரோனாவுக்கு எதிரான போர்; சிவப்பு நிறத்தில் ஒளிரும் எம்பயர்
by ayyasamy ram Yesterday at 5:15 am

» கரோனா விழிப்புணர்வு பாடல் எழுதியுள்ள இயக்குநர் சீனு ராமசாமி
by ayyasamy ram Wed Apr 01, 2020 11:18 pm

» 15 மூலிகைகள் அடங்கிய கபசுர குடிநீர்: அதிக அளவில் தயாரித்து வருகிறது இம்காப்ஸ்
by ayyasamy ram Wed Apr 01, 2020 11:13 pm

» முதல் நாள் டெஸ்ட் கிட் மறு நாள் மை கிட்
by ayyasamy ram Wed Apr 01, 2020 11:10 pm

» தமிழகத்தில் ஒரே நாளில் 110 பேருக்கு கரோனா தொற்று; அரசின் வேண்டுகோளை ஏற்று தாமாக வந்து தகவல் சொன்ன 1103 பேருக்கும் நன்றி: பீலா ராஜேஷ்
by ayyasamy ram Wed Apr 01, 2020 10:59 pm

» வேலன்:-பைல்கள் விரைந்து காப்பி செய்திட -Drop Zone
by velang Wed Apr 01, 2020 8:48 pm

» ராம நவமி வாழ்த்துகள் (2 ஏப்ரல் 2020 -கொண்டாடப்படுகிறது) -
by T.N.Balasubramanian Wed Apr 01, 2020 7:56 pm

» வால்மீகி ராமாயணம்
by ayyasamy ram Wed Apr 01, 2020 7:56 pm

Admins Online

பழைய தமிழ் திரைப்படங்கள்

best பழைய தமிழ் திரைப்படங்கள்

Post by heezulia on Sun Dec 03, 2017 5:13 pm

First topic message reminder :

தமிழ்  சினிமாவை  பற்றியும், பாட்டுக்களை பற்றியும் எழுதலாமா? எங்கிட்ட நிறைய நிறைய விஷயங்கள்  இருக்கு. அனுப்பலாமா?

நன்றி Baby Heerajan  மீண்டும் சந்திப்போம்
heezulia
heezulia
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 610
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 193

Back to top Go down


best Re: பழைய தமிழ் திரைப்படங்கள்

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon Feb 12, 2018 11:00 am

@heezulia wrote:11.02.2018 

எங்க ஊர்லலாம் முகத்தை மூஞ்சின்னுதான் சொல்வாங்க. தூங்கி முழிச்சு வந்தா, "மூஞ்சிய கழுவிட்டு வா"ன்னு சொல்வோம். இது மட்டுமில்ல, "மூஞ்சில பௌடர் நெறைய இருக்கு, மூஞ்சில பொட்டு கோணலா இருக்கு" இப்டீல்லாம்தான் சொல்வோம். 

நீங்க சொன்ன குறள் எண் 786

மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து. [90]


அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து
இன்சொலன் ஆகப் பெறின். [92]


முகத்தான் அமர்ந்து  இனிது நோக்கி அகத்தானாம்
இன்சொ லினதே அறம். [93]


அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்
கடுத்தது காட்டும்
முகம். [706] 


முகத்தின் முதுக்குறைந்தது உண்டோ உவப்பினும்
காயினும் தான்முந் துறும். [707]


சும்மா அனுப்பலாமேன்னு அனுப்பி வச்சேன்.  ஒரு இடத்தில 134உம், இன்னொரு இடத்தில 262  திருக்குறள்களை, பதவுரை, பொருளுடன் அனுப்பி இருக்கேன். இதுவும் எல்லோரும் புரிஞ்சுகிற மாத்ரி, பேச்சு தமிழ்லதான். 
படிக்கிறவங்க, அதை file பண்ணி வச்சுக்கிறதாக சொன்னாங்க. 

இங்க இலக்கணம் எழுதிட்டு இருக்கிறதை பார்த்தேன். நல்ல முயற்சி. 

Heezulia
மேற்கோள் செய்த பதிவு: 1259316
முகத்திற்கும் மூஞ்சிக்கும் இத்தனை விவாதம்.
கிராமத்தில்
மூஞ்சியும் மொகரகட்டையும் பாரு?
இன்று யார் மூஞ்சியில் முழித்தேனோ எதுவும் வெளங்கல (விளங்கவில்லை)
இவை யாவும் தினமும் நடக்கும் பேச்சு வழக்கு
திருக்குறளிள் புகுந்து விளையாடுகிறீர்கள் அருமை 'முகத்திறகு'
இத்தனை குறளா?
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13649
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3467

Back to top Go down

best Re: பழைய தமிழ் திரைப்படங்கள்

Post by மூர்த்தி on Mon Feb 12, 2018 12:04 pm

முர்த்துராமலிங்கம் அய்யாவின் பாராட்டை ஏற்று, நல்ல பதிவுகளை தொடர வாழ்த்துகள். நன்றி.

மூர்த்தி
மூர்த்தி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1046
இணைந்தது : 07/06/2016
மதிப்பீடுகள் : 506

Back to top Go down

best Re: பழைய தமிழ் திரைப்படங்கள்

Post by heezulia on Mon Feb 12, 2018 12:39 pm

12.02.2018 
மூஞ்சியும் மொகரகட்டையும் பாரு?
"மூஞ்சியும் மோரகட்டயும் பாரு"ன்னும்  சொல்வாங்க. 
இன்று யார் மூஞ்சியில் முழித்தேனோ எதுவும் வெளங்கல.
அது அப்படி இல்ல. "இன்னிக்கி  யார் மூஞ்சீல முழிச்சேனோ எதுவும் வெளங்கல"

ஏதோ, நாங்க இப்டித்தான் பேசுவோம்னு சொன்னேன். நீங்க தப்பா எழுதுட்டீங்கன்னு சொல்லல. 

முகத்தை பற்றின குறள் கெடச்சத எழுதினேன். இன்னும் எத்தன இருக்கோ எனக்கு தெரியாதுல்ல. 

நன்றி முத்து சார். 

Heezulia
heezulia
heezulia
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 610
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 193

Back to top Go down

best Re: பழைய தமிழ் திரைப்படங்கள்

Post by SK on Mon Feb 12, 2018 12:56 pm

இது போல ஒரு பதிவில் தொடர் விவாதம் நடப்பது ஈகரையில் மீண்டும் பார்க்கிறேன்

பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 8 1571444738 பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 8 1571444738 பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 8 1571444738


SK
SK
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8074
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1554

Back to top Go down

best Re: பழைய தமிழ் திரைப்படங்கள்

Post by heezulia on Mon Feb 12, 2018 1:13 pm

12.02.2018 

வாங்க SK. 

தொடர் விவாதமா? மீண்டும் பார்க்கிறீங்களா? அப்ப, இதுக்கு முன்னால இப்படி நடந்திருக்கா..............? இப்ப நடக்கிறது  என்ன விவாதமா? பட்டி மன்றம், விஜய் டீவீல 'நீயா நானா', இதுல நடக்கிறதுதான் விவாதம். 

இந்த விவாததுக்கு நீங்க நன்றி வே.............ற சொல்றீங்க, அதுவும் மூ.............ணு. 

SK ............. நீங்க தப்பா எதுவும் நெனச்சுக்கலியே. நீங்க முந்தீல்லாம் எழுதிய பதிலை பார்த்து, நீங்களும் கொஞ்சம் விளையாட்டா பேசுவீங்கன்னு நெனச்சு இப்படி எழுதிட்டு இருக்கேன். பிடிக்கலேன்னா சொல்லிருங்க. சொல்லிபுட்டேன். 

Heezulia  மீண்டும் சந்திப்போம்  
heezulia
heezulia
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 610
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 193

Back to top Go down

best Re: பழைய தமிழ் திரைப்படங்கள்

Post by heezulia on Mon Feb 12, 2018 1:50 pm

12.02.2018
@மூர்த்தி wrote:முர்த்துராமலிங்கம் அய்யாவின் பாராட்டை  ஏற்று, நல்ல பதிவுகளை தொடர வாழ்த்துகள். நன்றி.
மேற்கோள் செய்த பதிவு: 1259373

என்ன மூர்த்தி, உங்க பேர் எழுதுற ஞாபகத்திலேயே, முத்து சார் பேர எப்டி எழுதியிருக்கீங்கன்னு பாத்தீங்களா? 

நல்ல பதிவுகளை தொடரணுமா? அப்டீன்னா............., அப்டீன்னா நான் இதுவரை நல்ல பதிவுகளே அனுப்பலியா, அனுப்பலியா? ஹும்..... ஹும்... அதையும் நீங்களே சொல்லிருங்க. நல்ல பதிவுன்னா என்ன மாதிரி இருக்கணும்னு. 

என்னவோ, நான் அனுப்பறது எல்லாமே................ நல்ல பதிவூன்ல நெனச்சுட்டு இருக்கேன். போச்சா, போச்சு போச்சு. எல்லா.....மே வேஸ்ட். இப்ப எனக்கு என்ன அனுப்புறதுன்னு தெரீலயே. 

Heezulia
heezulia
heezulia
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 610
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 193

Back to top Go down

best Re: பழைய தமிழ் திரைப்படங்கள்

Post by மூர்த்தி on Mon Feb 12, 2018 2:06 pm

ஐயா பெயர் தான் தவறு நடந்து விட்டது.முத்துராமலிங்கம் என திருத்திக் கொள்ளவும் .ஐயா மன்னித்துக் கொள்வார்.

இதுவரை வந்தது அனைத்தும் நல்லவைதான்.இனிமேல் வரப் போவதும் நல்லவைகளாக இருக்கட்டும்.
எனப் புரிந்து கொள்ளவும்.
நள்ளிரவாகி விட்டது . மீண்டும் அடுத்த வாரம்............
மூர்த்தி
மூர்த்தி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1046
இணைந்தது : 07/06/2016
மதிப்பீடுகள் : 506

Back to top Go down

best Re: பழைய தமிழ் திரைப்படங்கள்

Post by SK on Mon Feb 12, 2018 3:36 pm

@heezulia wrote:12.02.2018 

வாங்க SK. 

தொடர் விவாதமா? மீண்டும் பார்க்கிறீங்களா? அப்ப, இதுக்கு முன்னால இப்படி நடந்திருக்கா..............? இப்ப நடக்கிறது  என்ன விவாதமா? பட்டி மன்றம், விஜய் டீவீல 'நீயா நானா', இதுல நடக்கிறதுதான் விவாதம். 

இந்த விவாததுக்கு நீங்க நன்றி வே.............ற சொல்றீங்க, அதுவும் மூ.............ணு. 

SK ............. நீங்க தப்பா எதுவும் நெனச்சுக்கலியே. நீங்க முந்தீல்லாம் எழுதிய பதிலை பார்த்து, நீங்களும் கொஞ்சம் விளையாட்டா பேசுவீங்கன்னு நெனச்சு இப்படி எழுதிட்டு இருக்கேன். பிடிக்கலேன்னா சொல்லிருங்க. சொல்லிபுட்டேன். 

Heezulia  மீண்டும் சந்திப்போம்  
மேற்கோள் செய்த பதிவு: 1259391

ஈகரையில் பழைய பதிவுகளை பார்த்தல் தெரியும் (2010 ஆண்டு ) பதிவுகள்


SK
SK
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8074
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1554

Back to top Go down

best Re: பழைய தமிழ் திரைப்படங்கள்

Post by SK on Mon Feb 12, 2018 3:38 pm

நான் எப்போதும் தீராத விளையாட்டு பிள்ளை தான்

இங்கு உங்களை யாரும் தவறாக நினைக்கமாட்டார்கள்SK
SK
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8074
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1554

Back to top Go down

best பழைய தமிழ் திரைப்படங்கள்

Post by heezulia on Thu Feb 22, 2018 1:15 pm

22.02.2018 

அச்சச்சோ SK, அப்ப நீங்க விஷால் மாதிரியா...........? சரியா போச்சு போங்க. பரவாயில்ல, சமாளிக்கலாம். சமாளிச்சுதானே ஆகணும்.

சரி, இங்க ஒரு பாவப்பட்ட பொண்ணு இருக்கா, அவளையும் கவனிங்க.

26. அனாதைப் பெண் 1938 

தயாரிப்பு : ஜுபிட்டர் பிக்சர்ஸ் 
டைரடக்டர் : ரகுபதி பிரகாஷ்
கதை : வை.மு.கோதைநாயகி

MK ராதா – ஹீரோ 
TA சுந்தராம்பாள் – அனாதைப் பெண், ஹீரோயின் 
PU சின்னப்பா – வில்லன் 
கொத்தமங்கலம் சுப்பு – காமெடியன் 
 

கோதைநாயகி அம்மா. இவங்க நவீன தமிழ் இலக்கியம் எழுதியவராம். அப்டீன்னா என்ன? இவர் நிறைய நாவல்கள் எழுதியிருக்கார். பெண்கள் மர்ம நாவல் எழுத ஆரம்பிக்காத காலத்தில, இவர் முதல் முதலா மர்ம நாவல் எழுதினார். 

ஜெகன்மோகினி. நமிதா கண்ணு முன்னா...........ல வந்து நின்னுருப்பாங்களே. இல்லேன்னு மட்டும் பொய் சொல்லாதீங்க, ஆ...................மா. இது படம் இல்ல. பத்திரிக்கை பேர்.
 
போச்............சூடா, அப்ப நமிதா படத்தை பத்தி எழுதலியா?  
இல்லவே இல்ல. நல............லா ஏமாந்து போனீங்களா? 

இந்தப் பத்திரிக்கை வெளிவராம பாதியில நின்னுபோச்சாம். கோதைநாயகி தனியாளா நின்னு, இந்த மாதப் பத்திரிகையை நடத்தினார். பெண்கள் விரும்பி படிச்சாங்க. 

இவர் எழுதிய நாவல்களில் பிரபலமானது அனாதைப் பெண். இந்த நாவல்தான் இதே பேர்ல படமாச்சு. 

MK ராதா இந்தப் படத்தில நாகரீகமான இளைஞனாக நடிச்சார். இவரை மனசுல நெனச்சுதான் இந்தப் பாத்திரத்தை உருவாக்கினதாக, தன் நண்பிகள்ட்ட கோதை சொன்னாராம். தன் கதை எப்படி படமாக்கப்படுதுன்னு, அப்பப்ப update கொடுக்கணும்னு கோதை, தயாரிப்பாளருங்ககிட்ட  சொல்லிட்டாராம். ஒரு பெண் எழுத்தாளர், இது மாதிரி சொல்றது, இந்த நாட்டில முதல் தடவையாம். கோதை கேட்டுக்கொண்டபடி தயாரிப்பாளருங்க செஞ்சாங்க, அதுவும் சந்தோ.............ஷமாக.
 
ஒரு அனாதைப் பெண், அழகான பணக்காரன் மேல ஆசைப்படறா. கல்யாணம் பண்ணிக்க விரும்புறா. அவன் மேல்படிப்புக்காக இங்க்லாண்டுக்கு போறான். அதனால இவளால அவனை பாக்க முடியாம போயிருச்சு. இவள் வாழ்க்கையில ரொம்..........ப கஷ்டப்படறா. அவன் படிப்பு முடிச்சுட்டு வர்றான். பின்னே என்ன, அவன் அவளை கல்யாணம் செஞ்சுக்கிறான். அவள் பட்ட கஷ்டமெல்லாம் ஒண்ணுமே இல்லாம போயிர்து. அவ்ளோதான் கதை. 

இந்தப் படம் MKR க்கு நட்சத்திர அந்தஸ்த்து கொடுத்துச்சாம். ஆனா சுந்தராம்பாள், இந்தப் படத்துக்கப்புறம் காணாம போயிட்டாராம். MKR இந்தப் படத்தில போட்டிருந்த நாகரீகமான ட்ரஸ், ஜனங்களுக்கு புடிச்சிருந்தாச்சாம். அவங்களும் அதே மாதிரி ட்ரெஸ் பண்ணினாங்களாம். 

MKR க்கு புடிச்ச படங்களில இந்தப் படமும் ஒண்ணாம். அவர் போட்டிருந்த நாகரீகமான ட்ரெஸ் போட்ட போட்டாவை பெரூ...................சாக்கி, அந்த போட்டாவ தன் வீட்டில் மாட்டி வச்சிருந்தாராம். அந்த போட்டாவ தன் friendsட்டல்லாம் பெரும்................மயா காட்டி சந்தோஷப்பட்டுக்கினார். 

இந்தப் படத்தின் வெற்றிக்கு இன்னொரு காரணம், செட்டியார்னு ஒரு character. பணக்கா................ர கஞ்சா...................மட்டி. இவரை சில திருடங்க கூட்டிட்டு  போயிர்றாங்க. அங்க நடக்கிற கூத்து நல்ல காமெடியாம். 

இந்த charaterல நடிச்சவர் சாதாரண ஆளில்ல. கதாசிரியர், நடிகர், தயாரிப்பாளர் & கவிஞர். கண்டு புடிக்கிறது கொஞ்சம் கஷ்டம்தா......ன். கொத்தமங்கலம் சுப்பு. ஆமா, இவர்தான் அந்த காமெடியன். இவரோட பேர் இந்தப் படத்தின் டைட்டில்ல ‘SM சுப்பிரமணியன்’ன்னு போட்டிருந்திச்சாம். 

ஆரம்பத்தில காமெடியனாக நடிச்சிட்டு இருந்தவர், அப்புறம் கதை எழுதுவதிலும், டைரக்ட் செய்றதலேயும் கவனம் செலுத்த ஆரம்பிச்சிட்டார், சுப்பு. 1940கள்ல எஸ்.எஸ்.வாசன் ஜெமினி ஸ்டூடியோவை ஆரம்பிச்சபோ, சுப்புவும் அங்க போயி சேந்துகிட்டார். வாசனுக்கு இவர் மேல நம்பிக்கை வர்றமாதிரி நல்............ல புள்ளயா நடந்துகிட்டார். 

சுப்பு டைரக்ட்டின படங்களில ஜெமினிக்காக டைரக்ட் செஞ்ச மிஸ் மாலினி[1947] சிறந்த படமாம்.  ‘Bit Notice’ சம்பத் என்ற characterல சுப்பு இந்தப் படத்தில ரொம்ப நல்லா நடிச்சிருந்தாராம்.

L. நாராயணராவ், ட்டி.எஸ்.கிருஷ்ணவேணி, PR மங்களம், எம்.ஆர்.சுவாமிநாதன், PG [ஆழ்வார்] குப்புசாமி, E கிருஷ்ணமூர்த்தி இவங்களும் நடிச்சிருந்தாங்க. எம்.கே.ராதாவின் நடிப்பும், அவருடைய நாகரீகமான தோற்றமும், சுப்புவின் காமெடியும் இந்தப் படம் வெற்றிகரமாக ஓட காரணமாம்.
 

Heezulia  மீண்டும் சந்திப்போம்  
heezulia
heezulia
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 610
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 193

Back to top Go down

best Re: பழைய தமிழ் திரைப்படங்கள்

Post by SK on Thu Feb 22, 2018 3:04 pm

ஜெகன்மோகினி. நமிதா கண்ணு முன்னா...........ல வந்து நின்னுருப்பாங்களே. இல்லேன்னு மட்டும் பொய் சொல்லாதீங்க, ஆ...................மா. இது படம் இல்ல. பத்திரிக்கை பேர்.

போச்............சூடா, அப்ப நமிதா படத்தை பத்தி எழுதலியா?
இல்லவே இல்ல. நல............லா ஏமாந்து போனீங்களா?

அழுகை அழுகை அழுகைSK
SK
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8074
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1554

Back to top Go down

best Re: பழைய தமிழ் திரைப்படங்கள்

Post by heezulia on Thu Feb 22, 2018 4:00 pm

22.02.2018

ஆறுதல்     ஆறுதல்     ஆறுதல்     ஆறுதல்     ஆறுதல்

Heezulia
heezulia
heezulia
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 610
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 193

Back to top Go down

best Re: பழைய தமிழ் திரைப்படங்கள்

Post by heezulia on Mon Feb 26, 2018 12:33 am

26.02.2018

வித்தியாசமான படங்கள்

10. சாரதா 1962

ஒரு பேராசிரியர். காலேஜ் ரெண்டாவது மாடி டெர்ரெஸ்ல இருந்து கீழே விழுந்துர்றார். இல்லற வாழ்க்கை நடத்தினா, அவர் இறந்துர்வார்னு டாக்டருங்க சொல்லிட்டாங்க. இளம் மனைவி. அவ வாழ்க்கை வீணா போயிருமேன்னு, அவளுக்கு இன்னொரு கல்யாணத்தை செஞ்சு வைக்க ஆசைப்படறார் பேராசிரியார் இப்படி வித்தியாசமா கதை போவுது.

ஓஹோன்னு ஓடிய படம். ஆனாலும் இந்தப் படத்துக்கு பயங்.....கர எதிர்ப்பாம். வழக்கமான தமிழ் படங்களை விட வித்தியாசமான கதைல. அப்போ பரபரப்பா பேசப்பட்ட படம்.

கல்லூரி பேராசிரியராக எஸ்.எஸ்.ஆரும், அவரோட மனைவியாக விஜயகுமாரியும் நடிச்சிருந்தாங்க.

விஜயகுமாரி எஸ்.எஸ்.ஆரின் மாணவி. இந்த மாணவி, எஸ்.எஸ்.ஆரை லவ்வுவாறா? இது அவருக்கு புடிக்கல. எவ்ளோ................... அட்வைஸ் பண்ணறார். 

இப்பதான் அட்வைஸ் புடிக்காதுன்னா, அப்பவே இப்டித்தான் போலியே.

விஜயகுமாரி எஸ்.எஸ்.ஆர். சொல்லறத கேக்.............கணுமே. கேக்கல. அவரைத்தான் கண்ணாலம் கட்டிக்கணும்ங்கற வெறித்தனமா லவ்வுறார்.

“மாதா, பிதா குரு, தெய்வம். இதில மூணாவது இடத்தில இருக்கிறவர் குரு. அந்த குருவை கல்யாணம் செய்றது தப்பு.” இப்டீல்லாம் எஸ்.எஸ்.ஆர். சொல்லி பாக்கிறார். கேக்கலியே. அவ்ளோ.............. பிடிவாதம். பின்ன என்ன செய்றது? அடிக்க அடிக்க அம்மியும் நகர்ந்துச்சு. வேற வழி?

கல்லூரியில விழா. கல்லூரியை அலங்காரம் பண்றாங்க. அதை எஸ்.எஸ்.ஆர். சூப்பர்வைஸ் பண்றார். அந்த சமயத்தில டெரெஸ்ல  நின்னு, “அதை அப்டி செய், இதை இங்க கட்டு”ன்னுட்டு வேலை செய்ற மாணவர்களுக்கு இன்ஸ்ட்ரக் ஷன் கொடுத்துட்டு இருந்த எஸ்.எஸ்.ஆர்., தெரியாத்தனமா அங்க இருந்து தொம்...................முன்னு கீழ விழுர்றார்.

தெரியாத்தனமா விழாம, அப்புறம் என்ன, தெரிஞ்சா விழுவாங்கன்னு எடக்.......கு மடக்கா எதையாவது கேட்டு வைக்காதீங்க. எனக்கு பதில் தெரியாது. கதைனா அப்படித்தான் எழுதணும். அம்புட்டுதான்.

கீழ விழுந்த எஸ்.எஸ்.ஆருக்கு வெளீல எதுவும் அடிபடல. உள்............. காயம். தாம்பத்யத்தில ஈடுபட்டா, அவர் உயிர் போயிரும். இப்படி டாக்டருங்க சொல்லிட்டாங்க. இவரது வாழ்க்கையில ஒரு அடி. இது அவரைத் தவிர மத்தவங்களுக்கெல்லாம்  தெரியும். 

எஸ்.எஸ்.ஆர். விஜயகுமாரியை நெருங்கும்போதெல்லாம் விஜயகுமாரி விலகி................. விலகி போறார். SSRக்கு  கோவமோ............ கோவம்.

ஒரு கட்டத்தில இந்த விஷயம் எஸ்.எஸ்.ஆருக்கும் தெரிஞ்சு போவுது. ரொம்பவும் fee.........................l பண்றார். மனைவியின் வாழ்க்கையே போச்சேன்னு வருத்தப்பட்றார். என்னவெல்லாமோ, எப்டீல்லாமோ யோசிச்சு....................... யோசிச்சு, ஒரு முடிவுக்கு வர்றார்.

மனைவிக்கு, இன்னொரு கல்யாணம் செஞ்சு வச்சுறலாம்னு. தாம்பொண்டாட்டிக்கு மறுமணம் செஞ்சு வைக்க ஆசைபட்ற புருஷன். தன் நண்பன் அசோகனுக்கு கல்யாணம் செஞ்சு வைக்க முடிவு செய்றார். அசோகன் விஜயகுமாரியின் தாய்மாமனும்கூட. ஆனா இதுக்கு விஜயகுமாரி எப்டீ சரீம்பார்? மாட்டேன்னுட்டார். அப்டீ இப்டீன்னு சம்மதிக்க வச்சுட்டார்னு வைங்க.

இப்போ இதுல இன்னொரு விஷயம் இருக்கு. மனைவிக்கு இன்னொரு கல்யாணம் செஞ்சு வைக்கணும்னா............, கணவன் மனைவி 

கனெக் ஷன் கட் ஆகணுமே. அதுவும் நடக்குது. ஆமா, ரெண்டு பேருக்கும் விவாகரத்து நடக்குது.

சரி, இவ்ளோவும் நடந்துருச்சு. இப்போ விஜயகுமாரிக்கும், அசோகனுக்கும் கல்யாணம் நடத்த எந்த தடையும் இல்லியே.

மாப்பிள்ளை கோலத்தில அசோகன் மணவறைல உக்காந்திருந்தார். விஜயகுமாரி மணக்கோலத்தில வந்து, SSRஇன் அம்மா முன்னால வந்து நின்னாரு. அவங்ககிட்ட ஆசீர்வாதம் வாங்கினாரு. எஸ்.எஸ்.ஆர்ட்டையும் ஆசீர்வாதம் வாங்க, அவர் கால்ல விழுந்தாரு. எந்திரிக்க முயற்சி செஞ்சார். முடியல. கீழ விழுந்துட்டார். அம்புட்டுதான். எந்திரிக்கல. இப்டீ முடியுது படம். ஆக இந்தப் படத்தின் மாரல் என்ன? ஒருவனுக்கு ஒருத்.............திதான்.

நல்ல வேள, அசோகன் தாலி கட்றதுக்கு முன்னாலயே விஜயகுமாரி அவுட். இல்லேன்னா அசோகன் வாழ்க்கைல வீணா போயிருக்கும். தப்பிச்சார் அசோகன். 

விஜயகுமாரி, புஷ்பலதா, MV ராஜம்மா, SSR, அசோகன், SV ரங்காராவ், நாகையா, MR ராதா, சகஸ்ரநாமம் போன்ற நட்சத்திர கும்பல்இந்தப் படத்தில. ம்யூசிக் KV மகாதேவனும், பாட்டுக்கள் கண்ணதாசனும்.

KS கோபாலகிருஷ்ணன் இந்தப் படத்துக்கு கதை, வசனம் எழுதினார். ஏ.எல்.ஸ்ரீனிவாசன் தயாரிப்பாளர். டைரக்டர் வேணுமே. யாரை புடிக்கிறது, எங்க தேடறது? ALS, KSG மேல ரொம்.............ப நம்பிக்கை வச்சிருந்தாராம். 

அதனால என்..............ன செஞ்சுட்டார்? டைரக்ட் பண்ற வேலைய KSGஐ நம்............பி, அவரை டைரக்ட் செய்ய சொல்லிட்டா.................ராம். இது ALSஇன் friendsக்கு புடிக்கல. இந்த ரிஸ்க்ல்லாம் வேணாம்னு அவர்ட்ட சொல்லியிருக்காங்க. கதை வசனம் எழுதுறவங்க, அதை மட்............டும்தான் செய்யணுமா? டைரக்ட்ட கூடாதாக்கும்.

பெட்ரோமாஸ் லைட்டே..............தான் வேணுமா?

கதை வசனம் எழுத மட்டும்தான் தெரியும்னு நெனச்சுட்டீங்களா, டைரக்ட்டும் செய்றேன் பாருங்கன்னு, சாரதா படத்தை KSG டைரக்ட்டும் செஞ்சுட்டார். அதுவும் இதுதான் KSGக்கு முதல் படம் வேற.

இது மட்டுமா, விநியோகஸ்தர்கள் சும்மா இருந்தாங்களா? கொடுத்த அட்வான்ஸை திரும்ப கேக்குற நெருக்கடியா............ன நிலைமை வந்துருச்சு.

எல்லா...............த்தையும் சமாளிச்சு, படமும் ரிலீஸ் ஆச்சு. அப்புறம் பாக்கணும். வசூல் கன்னா....................பின்னான்னு வந்துச்சு. அது மட்டுமா? மாநிலத்தின் சிறந்த படம்னு சொல்லி, தேசிய விருதும் கெடச்சிருச்சு.

இதுக்கப்புறமா ALS என்ன செஞ்சார் தெரீமா? மொதல்ல அவர் ALS ப்ரொடக் ஷன் மூலமா படங்களை தயாரிச்சிட்டு இருந்தார். அப்புறமா மெஜெஸ்டிக்னு ஒரு ஸ்டூடியோவை குத்தகைக்கு வாங்கி, படங்களை தயாரிக்க ஆரம்பிச்சார். இந்த சாராதா ஓஹோ..................ன்னு ஓடி வெற்றி பெற்றார்ல. அதனால, குத்தகைக்கு எடுத்திருந்த மெஜஸ்டிக் ஸ்டூடியோவை விலைக்கே..... வாங்கிட்டாராம். அதுக்கு பேரையும் மாத்திட்டார். என்னான்னு? சாரதா ஸ்டூடியோதான்.

விஜயகுமாரி பேர் படத்தில சாரதா. அதனாலதான் இந்தப் படத்துக்கு அந்த கேரக்டர் பேரையே வச்சுட்டார்.  - ரமணி

Heezulia மீண்டும் சந்திப்போம்
heezulia
heezulia
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 610
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 193

Back to top Go down

best Re: பழைய தமிழ் திரைப்படங்கள்

Post by மூர்த்தி on Mon Feb 26, 2018 1:06 am

சிறி தேவியை பற்றி ஸ்பெஷல் பதிவு போட்டிருக்கலாம்!
மூர்த்தி
மூர்த்தி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1046
இணைந்தது : 07/06/2016
மதிப்பீடுகள் : 506

Back to top Go down

best Re: பழைய தமிழ் திரைப்படங்கள்

Post by heezulia on Mon Feb 26, 2018 12:17 pm

26.02.2018 

சிறி தேவி யார்னே எனக்கு தெரியாதே.

ஸ்ரீதேவிதான் எனக்கு தெரிஞ்ச நடிகை. 

இவரை பற்றித்தான் ப்ரணவ், அய்யாசாமி சார் எழுதியிருக்காங்க. இதுக்..........கு மேல நான் என்னத்த புதுஸ்...........ஸா  எழுதிற போறேன், சொல்லுங்க. சினிமாவாகட்டும், வேற எந்த செய்தியும்தான் அய்யாசாமி சார்தான் சுடச்சுட update தந்துட்டே............... இருக்காரே. 

இதை எழுதிட்டு இருக்கும்போது கூட எனக்கு ஒரு நியூஸ் அலெர்ட் வந்துச்சு, 'துபாயில் ஸ்ரீதேவிக்கு உண்மையில் நடந்தது என்ன' ன்னு ஒரு தலைப்பில.

Heezulia 
heezulia
heezulia
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 610
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 193

Back to top Go down

best Re: பழைய தமிழ் திரைப்படங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை