உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» களத்தில் மட்டும் தான் வீரன்: கருணை காட்டிய காளை
by ayyasamy ram Today at 1:11 pm

» இதப்படிங்க முதல்ல...(சினிமா செய்திகள்- வாரமலர்)
by சக்தி18 Today at 12:58 pm

» அவரை பிரிந்ததால் போதைக்கு அடிமையானேன் - விஷ்ணு விஷால்
by சக்தி18 Today at 12:51 pm

» அச்சம் என்பது மடமையடா!
by சக்தி18 Today at 12:47 pm

» சினிமா- பழைய பாடல்கள்- காணொளிகள்
by சக்தி18 Today at 12:34 pm

» கணினி/இணைய உலகில் ஒரு சில துளி டிப்ஸ்
by சக்தி18 Today at 12:31 pm

» கணிதப் புதிர்- தொண்ணூறிலிருந்து எழுபத்தைந்து...
by சக்தி18 Today at 12:21 pm

» அருமையான வாழைப்பூ புளிக்குழம்பு
by ayyasamy ram Today at 10:38 am

» தூங்குவதும் தனி ‘டயட்’ தான்
by ayyasamy ram Today at 10:36 am

» வேலன்:-வீடியோவில் உள்ள சப் டைடிலை நீக்கிட-MKV Tool Nix
by velang Today at 7:45 am

» வேலன்:-இரண்டு தேதிகளுக்கு இடைப்பட்ட நாட்களை கணக்கிட-Calculator Days
by velang Today at 7:43 am

» இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி: பெங்களூருவில் இன்று நடக்கிறது
by ayyasamy ram Today at 7:26 am

» செல்ஃபி மோகத்தால் இளம் பெண்ணுக்கு முகத்தில் 40 தையல்
by ayyasamy ram Today at 7:22 am

» யானை சிலை கோயில்
by ayyasamy ram Today at 7:13 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Today at 6:59 am

» சீனாவை மிரட்டும் 'கொரனோ' வைரஸ்: கோவை விமான நிலையத்தில், 'அலர்ட்'
by ayyasamy ram Today at 6:54 am

» கார் விபத்தில் காயமடைந்த நடிகை ஷபானா ஆஸ்மி குணமடைய மோடி பிரார்த்தனை
by ayyasamy ram Today at 6:53 am

» வசூல்ராஜா பட பாணியில் தேர்வெழுத வந்த இளைஞர்
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» ஈகரையில் இந்து என்ற தலைப்பில் வந்த..........
by T.N.Balasubramanian Yesterday at 10:18 pm

» இரட்டை வேடத்தில் யோகிபாபு
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» நயன்தாராவுக்கு அண்ணன்
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» விண்ணைத்தொடும் கட்டடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» ஆஹா கோதுமை ரெசிப்பிகள்
by ஜாஹீதாபானு Yesterday at 5:16 pm

» கண்ணதாசன் பாடல்களில் பிடித்த சில வரிகள்
by ayyasamy ram Yesterday at 5:13 pm

» திரைப்பட பாடல் வரிகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:09 pm

» நல்லவை சூழ்ந்திருக்க அல்லாதவை அணுகுமா?
by ayyasamy ram Yesterday at 4:48 pm

» ஈசாப் கதைப் பாடல்கள் - ஜாதி நாய
by ayyasamy ram Yesterday at 4:24 pm

» நல்லவை முப்பது
by ayyasamy ram Yesterday at 4:21 pm

» தேன் தினை லட்டு
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» ஊக்கம் தரும் அறிவுரைகள்
by ayyasamy ram Yesterday at 1:04 pm

» பாலித்தீன் சூட்!
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» மகிழ வைப்பதே சிறந்த ஓவியம்!
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» உலகின் மிகச்சிறிய கின்னஸ் சாதனையாளர் காலமானார்
by ayyasamy ram Yesterday at 10:44 am

» பிரபாஸின் அடுத்த படம் பற்றிய அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 10:39 am

» நல்ல நண்பர்கள் ஏன் தேவை?
by ayyasamy ram Yesterday at 7:23 am

» பாரதீய ஜனதா கட்சியின் அகில இந்திய தலைவராகிறார் ஜே.பி.நட்டா: 20-ந்தேதி தேர்தல்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» சிந்தனையாளர் முத்துக்கள்!
by ayyasamy ram Yesterday at 6:54 am

» கோழி முட்டையிலிருந்து இன்சுலின்!
by ayyasamy ram Yesterday at 6:52 am

» பாரத ரத்னா விருதை விட உயர்ந்தவர் மஹாத்மா: உச்சநீதிமன்றம் கருத்து
by ayyasamy ram Yesterday at 6:46 am

» இந்தியா அசத்தல் வெற்றி * தவான், கோஹ்லி, ராகுல் அபாரம்
by ayyasamy ram Yesterday at 6:44 am

» மோடிக்கு குடியுரிமை இருக்கா?: ஆர்டிஐ.,யில் கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:40 am

» அமெரிக்காவில் ஹிந்தி பேசுவோர் அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:38 am

» நாவல்கள் வேண்டும்
by saravanapriyaprakash Fri Jan 17, 2020 11:33 pm

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by sethu756 Fri Jan 17, 2020 8:49 pm

» கோகுல் ஷேசாத்ரி எழுதிய மதுர கவி தெளிவான மின்னூல்
by sethu756 Fri Jan 17, 2020 8:48 pm

» புத்தக தேவைக்கு...
by sethu756 Fri Jan 17, 2020 8:46 pm

» கோகுல் சேஷாத்ரி திருமாளிகை
by sethu756 Fri Jan 17, 2020 8:45 pm

» ரொம்பக் கோவக்கார மாடா இருக்குமோ...!!
by ayyasamy ram Fri Jan 17, 2020 8:19 pm

» அர்ஜூன்னுக்கு நடந்தது எல்லோருக்கும் நடக்கும்
by ayyasamy ram Fri Jan 17, 2020 8:04 pm

» வெள்ளிக்கிழமை பூஜை
by ayyasamy ram Fri Jan 17, 2020 8:01 pm

Admins Online

மேகமலை: கோடைக்கு ஓர் சூப்பர் டூரிஸ்ட் ஸ்பாட்!

மேகமலை: கோடைக்கு ஓர் சூப்பர் டூரிஸ்ட் ஸ்பாட்!  Empty மேகமலை: கோடைக்கு ஓர் சூப்பர் டூரிஸ்ட் ஸ்பாட்!

Post by பழ.முத்துராமலிங்கம் on Sat Dec 02, 2017 7:47 pm

மேகமலை: கோடைக்கு ஓர் சூப்பர் டூரிஸ்ட் ஸ்பாட்!  YrNjexhRyxBAu9UaP2xw+MEGAMALAIONE

டிராவல் விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில், 'இந்தக் கோடையில் நீங்கள் எந்த மலைப் பிரதேசத்துக்கு சுற்றுலா செல்ல விரும்புகிறீர்கள்?" என்று ஒரு திடீர் கருத்துக் கணிப்பு நடத்தினோம். இதில் மக்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்று முதல் இடத்தை பிடித்த இடம் மேகமலைதான்!. அடுத்த இடங்களில்தான் கொடைக்கானல், ஊட்டி, வால்பாறை, கொல்லிமலை, ஏலகிரி, ஏற்காடு போன்றவை இருக்கின்றன. ஃபேஸ்புக் மக்களுக்கு பிடித்த மேகமலையில் அப்படி என்னதான் ஸ்பெஷல்?

மேகமலை சிறப்புகள்!

மேகமலை நான்கைந்து மலைச்சிகரங்கள் நடுவே உள்ள ஒரு பள்ளத்தாக்கு ஆகும். இது தமிழ்நாட்டில் உள்ள மலைவாசஸ்தலங்களில் சிறந்த நில அமைப்பு கொண்டதாக இருக்கிறது. கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1,500 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. மலை முழுவதும் மேகங்களின் ஆட்சி என்பதால் மேகமலை என்று பெயர். மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டி பச்சை பசேல் என விரிந்து பரந்து கிடக்கும் மேகங்களின் தாய்வீடுதான், இந்த மேகமலை.

நன்றி
விகடன்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13343
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3304

Back to top Go down

மேகமலை: கோடைக்கு ஓர் சூப்பர் டூரிஸ்ட் ஸ்பாட்!  Empty Re: மேகமலை: கோடைக்கு ஓர் சூப்பர் டூரிஸ்ட் ஸ்பாட்!

Post by பழ.முத்துராமலிங்கம் on Sat Dec 02, 2017 7:50 pm

பசுமையான நிலபரப்புடன் பெரிய பெரிய மரங்களுடன் இந்தப் பகுதி காணப்படுகிறது. மிக அழகான சாய்ந்த நிலப்பரப்பில் உள்ள தேயிலை மற்றும் காபி பயிர் தோட்டங்களைக் காண கண் கோடி வேண்டும். உயர்ந்த மலை, மிக ஆழமான பள்ளம், அழகிய ஏரி என என பல இயற்கை அழகுகள் கொட்டிக் கிடக்கும் ஊர் மேகமலை. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இங்குள்ள தேயிலைத் தோட்டங்களில் பறிக்கப்படும் தேயிலைகளை பக்குவப்படுத்தும் தொழிற்சாலை அமைக்கப்பட்டிருந்தது.
மேகமலை: கோடைக்கு ஓர் சூப்பர் டூரிஸ்ட் ஸ்பாட்!  9rQhs5Szy2ZdDkzGrbQi+146249
எங்கே இருக்கிறது?

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே இந்த நகரம் உள்ளது. சின்னமனூரிலிருந்து மேகமலைக்கு மலைப் பாதைவழியாகதான் செல்ல முடியும். மலைப் பாதையின் முதல் 30 கி.மீ. வனப்பகுதி, அடுத்த 20 கி.மீ. தேயிலை தோட்டங்கள்...மேகமலை செல்ல பஸ் வசதி இருக்கிறது. காரில் செல்பவர்களுக்கு கொஞ்சம் கடினம் தான். ஜீப், எஸ்யூவி போன்ற வாகனங்களை பயன்படுத்தினால் அதிக கஷ்டம் இல்லாமல் மலைப் பாதையில் பயணிக்கலாம்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13343
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3304

Back to top Go down

மேகமலை: கோடைக்கு ஓர் சூப்பர் டூரிஸ்ட் ஸ்பாட்!  Empty Re: மேகமலை: கோடைக்கு ஓர் சூப்பர் டூரிஸ்ட் ஸ்பாட்!

Post by பழ.முத்துராமலிங்கம் on Sat Dec 02, 2017 7:53 pm

எப்படிப் போகவேண்டும்?

சின்னமனூரிலிருந்து சுமார் 30 கி.மீ. தொலைவில் இருக்கிறது மேகமலை. பேருந்தில் சின்னமனூரிலிருந்து நேராகச் செல்லலாம். குறிப்பிட்ட நேரம் மட்டுமே பேருந்து வசதி உண்டு. கட்டணம் சுமார் 20 ரூபாய். காரில் செல்பவர்கள் ஆண்டிப்பட்டியிலிருந்து கண்டமநாயக்கனூர் சென்று அங்கிருந்து நேராக மேகமலை போகலாம்.
மேகமலை: கோடைக்கு ஓர் சூப்பர் டூரிஸ்ட் ஸ்பாட்!  4VDmDsfSRBKILvVGJr0D+146253
தங்கும் வசதி!

சில ரிசார்ட்டுகள் இருக்கின்றன. தங்கும் அறைகளுக்கு ஒருநாளைக்கு ஆயிரம் ரூபாய் வரை செலவாகும். குடும்பத்துடன் சுற்றுலா செல்பவர்கள் இருட்டுவதற்குள் மலையிலிருந்து இறங்கி விடுவது நல்லது.

பயணம் எப்படி?

ஒரு காலத்தில் மேகமலைக்கு செல்லும் மலை பாதை தனியார் தேயிலை நிறுவனம் ஒன்றின் கட்டுப்பாட்டில் இருந்தது. அந்த நிறுவனத்தால் இந்தப் பாதையைச் சரியாக பராமரிக்க முடியவில்லை. இதனால், அந்த தேயிலைத் தோட்ட நிறுவனம், தமிழக அரசின் மாவட்ட நிர்வாகத்தின் கீழ் சாலை பராமரிப்பை ஒப்படைத்திருக்கிறது. சின்னமனூரில் இருந்து சில சிற்றூர்களை கடந்து சென்றால், தென்பழனி வனப் பகுதி செக் போஸ்ட் வரும். இந்த செக்போஸ்டில் உள்ள அதிகாரிகளிடம், சுற்றுலா செல்பவர்கள் தங்களை பற்றிய விவரங்களை எழுதிக்கொடுத்தால்தான் வனப் பகுதிக்குள் நுழைய அனுமதி கொடுப்பார்கள்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13343
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3304

Back to top Go down

மேகமலை: கோடைக்கு ஓர் சூப்பர் டூரிஸ்ட் ஸ்பாட்!  Empty Re: மேகமலை: கோடைக்கு ஓர் சூப்பர் டூரிஸ்ட் ஸ்பாட்!

Post by பழ.முத்துராமலிங்கம் on Sat Dec 02, 2017 7:55 pm

சிறிது தூரத்தில், அடிவாரத்தில் வழிவிடு முருகன் என்ற கோவில் இருக்கிறது. இந்தக் கோவில் அருகே மலை மேல் போகிற வாகனங்களுக்கும், அதில் பயணிப்பவர்களுக்கும் பாதிப்பு ஏற்படக் கூடாது என பெண்கள் ஆரத்தி காட்டுவார்கள். இவர்களில் வயதான மூதாட்டிகளும் உண்டு. ஆரத்தி காட்டுபவர்களுக்கு தட்டில் காணிக்கை செலுத்தி விட்டு மலை மேல் ஏற ஆரம்பிக்கலாம்.

போகப் போக சாலை 20 அடியாகக் குறுகி போகிறது. அதனால், பேருந்துகள் மெல்ல மெல்ல ஊர்ந்துதான் செல்கின்றன. பறவைக் கூட்டத்தை அதிகம் பார்க்கலாம். மலை மீது ஏற ஏற பல ஹேர்பின் வளைவுகள் இருக்கின்றன. சாலை அகலம் குறைவு. ஒரு நேரத்தில், ஒரு வண்டி மட்டுமே செல்ல முடியும். உயரே செல்ல செல்ல பசுமையான மரங்கள் அடர்ந்து காணப்படுகின்றன. பசுமையான காட்டில் ஓங்கி உயர்ந்த மரங்கள் மற்றும் பெரும் பள்ளத்தாக்குகள் அதிசயிக்கவும் ஆச்சர்யப்படவும் அச்சப்படவும் வைப்பதுதான் வனத்தின் அழகு.
மேகமலை: கோடைக்கு ஓர் சூப்பர் டூரிஸ்ட் ஸ்பாட்!  GZt7emWRQqaTBWzkFa4R+146259
காட்டுக் கோழிகள், சேவல்களை அதிகம் பார்க்கலாம். சிங்க வால் குரங்குகளுக்கும் பஞ்சமில்லை. தேயிலை தோட்டங்கள் பச்சை பசேல் என பசுமையாக காட்சி அளிக்கின்றன. தொடர்ந்து பயணித்தால், ஹைவேவிஸ் என்ற ஊர் வருகிறது. கரடு முரடான பாதை என்றாலும் பசுமையான இயற்கை ரம்மியமாக இருக்கிறது. மேலும், பள்ளத்தாக்குகளில் இருக்கும் அணை நீர், குளிர்ந்த காற்றை வெளிப்படுத்தி ரசிக்க வைக்கிறது. ஹைவேவிஸ் -ல் சாப்பிட ஹோட்டல் இருக்கிறது. ஹோட்டலில் சைவம் மற்றும் அசைவம் சாப்பாடு கிடைக்கிறது. அணையில் பிடித்த கோல்டு ஃபிஷ் என்கிற மீன் பொரியல் கிடைக்கும்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13343
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3304

Back to top Go down

மேகமலை: கோடைக்கு ஓர் சூப்பர் டூரிஸ்ட் ஸ்பாட்!  Empty Re: மேகமலை: கோடைக்கு ஓர் சூப்பர் டூரிஸ்ட் ஸ்பாட்!

Post by பழ.முத்துராமலிங்கம் on Sat Dec 02, 2017 7:57 pm

மேகமலை: கோடைக்கு ஓர் சூப்பர் டூரிஸ்ட் ஸ்பாட்!  QdFkcrhPQ0Ssj96mdInB+megamalaitwo
அடுத்து மகாராஜா மெட்டு என்கிற இடம் வருகிறது. இதுவும் கரடுமுரடான சாலையை கொண்டதுதான். இருபுறமும் கண்ணுக்கு குளுமையாக தேயிலைத் தோட்டங்கள், வெண்ணியார், இரவங்கலாறு, வட்டப்பாறை என பல  இடங்கள் இருக்கின்றன. அணைகளும் அதிக எண்ணிக்கையில் இருக்கின்றன. அணைகளிலிருந்து வழிந்தோடும் தண்ணீர் மூலம் மின்சாரம் எடுக்கப்படுகிறது. இரண்டு மலைகளுக்கு இடையே பெரிதாக கட்டப்பட்டிருக்கிறது மலையாறு அணை. அணைத் தண்ணீரில் முகம் பார்க்கலாம். அத்தனை தெளிவு.

சுமார் 3 மணி நேரப் பயணத்திற்குப் பின்னர் மேகமலையை அடையலாம். வீடுகளின் எண்ணிக்கை மிக குறைவு. பகல் நேர வெப்பநிலை ஏறக்குறைய 12 டிகிரி செல்சியஸ். அதனால்தான் எப்போதும் இதமான குளிர். சீசன் நேரம் என்றால் பகலில் கூட "ஸ்வெட்டர்' தேவைப்படும். வழியில் ஆங்காங்கே அருவிகள் உள்ளன. எல்லாப் பருவ நிலைகளிலும் அருவிகளில் தண்ணீர் கொட்டுகிறது என்கிறார்கள் அங்குள்ளவர்கள்.
உட்பிரையர் என்கிற தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான தேயிலை தோட்டங்களே மேகமலை முழுக்க பரவியிருக்கின்றன. இந்த நிறுவனத்தில் டீத்தூள் உருவாகும் முறையை தெரிந்து கொள்ளலாம். அதற்கு நபர் ஒருவருக்கு 100 ரூபாய் வசூலிக்கிறார்கள்.
இயற்கையின் ரசிகர்கள் அவசியம் செல்ல வேண்டிய இடம் இது. இதை ஓர் ஆரோக்கிய பயணம் (ஹெல்த் டிராவல்) என்று கூட சொல்லலாம்.

நன்றி
விகடன்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13343
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3304

Back to top Go down

மேகமலை: கோடைக்கு ஓர் சூப்பர் டூரிஸ்ட் ஸ்பாட்!  Empty Re: மேகமலை: கோடைக்கு ஓர் சூப்பர் டூரிஸ்ட் ஸ்பாட்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை