ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
கை தேர்ந்த அரசியல்வாதி - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 ayyasamy ram

1800 வாட்ஸ் ஆப் குழுக்கள்: பா.ஜ., அதிரடி
 ayyasamy ram

துணை ராணுவத்தில் 55 ஆயிரம் பேரை சேர்க்க திட்டம்
 ayyasamy ram

வில்லியாக நடிக்க ஆசை!
 ayyasamy ram

சன்னி லியோனின் இன்னொரு பக்கம்!
 ayyasamy ram

சினி துளிகள்
 ayyasamy ram

ஆர்யாவின் வில்லன் அவதாரம்!
 ayyasamy ram

பாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி
 ayyasamy ram

பூங்கொத்து விளையாட்டு
 ayyasamy ram

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ayyasamy ram

சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு
 கோபால்ஜி

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 ராஜா

'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு
 ayyasamy ram

குச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா
 ayyasamy ram

ஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்?
 ayyasamy ram

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்
 ayyasamy ram

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

கரையே இல்லாத ஆறு
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

என் அப்பா.
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 sandhiya m

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

ஆன்மீக கருத்துகள் ( பாகம் 1):

View previous topic View next topic Go down

ஆன்மீக கருத்துகள் ( பாகம் 1):

Post by ஸ்ரீ கிருஷ்ணன் on Thu Dec 10, 2009 12:09 pm

ஆன்மீக கருத்துகள் ( பாகம் 1) :


1) கடவுள் என்றால் என்ன?உன்னைக் கடந்து உன் உள்ளே செல், அதாவது உன்னையே நீ அறிவாய் எனும்
கருத்திலேயே கடவுள் (கட உள்) என்ற பதம் வந்ததாக அறிஞர்கள் சொல்வார்கள்.
பொதுப்படையில் God, இறைவன், ஆண்டவன் என்று கூறப்படும் சொற்களின் பதம் எம்மை
ஆளுகின்ற சக்தியை குறிக்கின்றது. அப்பனே உனக்கு தெரியும், இந்த உலகத்தில்
சக்தியின் துணையின்றி எதுவும் அசையாது, எதுவும் நடைபெறாது என்பது.
சிற்றறிவு கொண்ட எம்மை வியப்பில் ஆழ்த்தும் வகையில் இந்த உலகத்தை
இயக்குகின்ற, இந்த உலகத்தில் வியாபித்துள்ள, இந்த உலகத்தின் அடிநாதமாய்
அமைந்துள்ள தோற்றம், முடிவு அற்ற சக்தியை கடவுள் என்று கூறலாம்.


*அப்படி ஒருவர் இருகின்றாரா அல்லது இது நமது கற்பனையோ?


நிச்சயம் அப்படி ஒருவர் இருக்கின்றார். ஆனால், அது நீ எதிர்பார்க்கும்
விதத்தில் அல்ல என்பதை விரைவில் தெரிந்துகொள்வாய். கடவுள் என்பது வெறும்
கற்பனை அல்ல, அது நிஜம்! இதை ஞானக்கண் கொண்டு பார்க்கும் போது நீ
உணர்ந்துகொள்வாய். ஆனால், ஊனக்கண்களிற்கு எல்லாம் கடவுள் என்பது வெறும்
கற்பனை பொருளாகவும், கனவாகவுமே தென்படும்.


2) மனிதனை கடவுளாக கும்பிடுகின்றார்களே அவர்களை பற்றிய கருத்து என்ன?


கடவுள் அன்பு மயமானவன் என பல மதங்கள் கூறுகின்றன. நீ பிற உயிர்களில்
உண்மையான அன்பு செலுத்தும்போது உனது மனம் தூய்மை பெறுகின்றது. தூய்மையான
கலங்கமற்ற மனம் கொண்ட நீ ஒரு குழந்தை ஆகின்றாய். அதாவது கடவுளை உணர்வதின்
முதற்படியை நீ பூர்த்தி செய்கின்றாய். இன்னொரு வகையில் சொல்வதானால்,
குழந்தையின் உள்ளத்தை கொண்டவனால் மட்டுமே கடவுளை உணர்ந்துகொள்ள முடியும்.

இந்த வகையில் பார்த்தால், நீ ஒரு மனிதனை கடவுளாக கும்பிடும்போது உன்னில்
குழந்தையின் உள்ளம் தோன்றுமாக இருந்தால், குழந்தையின் உள்ளம் உன்னுள்
தோன்றுவதை இந்த செயல் ஊக்குவிக்குமாய் இருந்தால் அவ்வாறு நீ செய்வதில்
தவறில்லை. ஆனால், இவ்வாறு நீ ஒருவரில் மாத்திரம் உண்மையான அன்பு வைத்து
அவரை மட்டும் கும்பிட்டுக்கொண்டு மற்றையவர்களுடன் பக்கச்சார்பாக
நடந்துகொண்டால் அந்த அன்பு போலியானது. அது கடவுளை நீ உணர்வதற்குரிய படிமுறை
வளர்ச்சிக்கு உதவாது.


3) ஆசையை எப்படி துறப்பது?


ஆசையை நீ ஏன் துறக்க நினைக்கின்றாய்? உன் குருநாதர்கூட பல்வேறு ஆசைகளை
உள்ளத்தில் சுமக்கிறார். எனவே, ஆசையை துறக்கின்ற விபரீதமான வேலைகளில் நீ
இறங்காதே! ஆசைகள் உனது மனதில் புத்துணர்ச்சியை ஏற்படுத்தி உன்னை ஒரு
சுறுசுறுப்பு மிக்க மனிதனாக வைத்து இருக்கின்றது. ஆசையை துறந்த மனிதன்
செத்த பிணத்திற்கு சமம் என்பதை நீ நினைவில் கொள்வாய். ஆசையை துறக்க
நினைப்பது துறவிகளிற்கும் ஆகாது!


4) மதம் என்றால் என்ன?


மனிதன் தனது வாழ்வை இலகுவான முறையில் ஒழுங்கமைத்து குழப்பமற்ற முறையில்
வாழ்வதற்கு பல்வேறு வழி வகைகளை உருவாக்கினான். இவற்றில் ஒன்றே மதமாகும்.
அடிப்படையில் மதம் என்பது உலகத்தை ஆளும் சக்தியை வழிபடும் முறையாகவும்,
அந்த சக்தியை தமக்கு சாதகமான முறையில் பயன்படுத்தி தமது வாழ்வினை
வெற்றிகரமாக கொண்டு நடத்துவதற்கு மனிதனுக்கு உதவுகின்ற கருவியாகவும்
விளங்குகின்றது.


5) மன அமைதிக்கு நாம் செய்ய வேண்டியது என்ன?


முக்கியமான ஒரு கேள்வியை கேட்டாய். நான் சொல்பவற்றை கவனமாகக் கேள். உனக்கு
எம்.எஸ்.என் இல் அரட்டை அடிப்பதன் மூலம்தான் மனம் அமைதி அடையும் என்றால்
முதலில் அதை செய்! உனக்கு ஒரு சினிமா படம் பார்த்தால் தான் உன் மனம் அமைதி
அடையும் என்றால் முதலில் அதை செய்! உனக்கு யாழில் ஒருநாளைக்கு 100
கருத்துக்களை எழுதினால்தான் உனது மனம் அமைதி அடையும் என்றால் முதலில் அதை
செய்! அதாவது உனது மனம் கேட்கின்ற நியாயபூர்வமான தேவைகளை முதலில் நீ
பூர்த்தி செய்து கொள்! இதைவிட நீ தியானம் எனப்படுகின்ற செய்முறையை செய்வதன்
மூலம் மனதில் அமைதியை பெற முடியும்.

ஆனால், மனம் அமைதியாக இருக்க வேண்டும் என உனக்குள் வரிந்துகட்டிக்கொண்டு
உனது நியாபூர்வமான ஆசைகளையும், உணர்வுகளையும் அடக்கியபடி, உன்னையே நீ
துன்புறுத்தியவாறு தியானம் செய்கின்ற அல்லது அடக்கி ஆளுகின்ற முட்டாள்
தனமான வேலைகளில் இறங்காதே! உன்னையே நீ அடக்க வெளிக்கிடும்போது நீ உனது
இயல்பான மன ஒழுங்கமைப்பை குழப்புகின்றாய் என்பதை அறிந்துகொள். இயல்பான மன
ஒழுங்கமைப்பு குழம்பினால் இறுதியில் அது உன்னை பைத்தியக்காரனாக்கி விடும்.
மன அமைதிக்கு நீ நிச்சயம் செய்யவேண்டியது உன்னை நீ வெறுப்பது அல்ல என்பதை
நினைவில் கொள்.


6) பழைய சித்தாந்த கோட்பாடுகளுடன் இருப்பவர்களிற்கு நீங்கள் சொல்ல
விரும்புவது என்ன?நீ பழைய சித்தாந்த கோட்பாடுகளை தாராளமாக பின்பற்றலாம். இதேபோல் புதிய
சித்தாந்த கோட்பாடுகளையும் தாராளமாக பின்பற்றலாம். எதை பின்பற்றினாலும்..
ஏன்? எதற்கு? எப்படி? எதனால்? போன்ற கேள்விகளை உன்னிடம் முதலில்
கேட்டுவிடு. கும்பலில் இருந்து கோவிந்தா போடுவதன் மூலம் நீ உன்னை
குழப்பிக்கொள்வது தவிர வேறு ஒன்றும் நடைபெறப்போவதில்லை.

எதிலும், மெய்ப்பொருளை காண முயற்சி செய்! மற்றவன் பின்பற்றுகின்றான் அல்லது
உனது அப்பன் பின்பற்றுகின்றான் என்பதற்காக ஒரு கோட்பாட்டை கண்மூடித்தனமாக
ஏற்றுக்கொள்ளாதே! தற்கால நவீன உலகத்திற்கும், அதன் சட்டதிட்டங்களிற்கும்
பொருத்தமற்ற செயற்பாடுகளை ஊக்குவிக்கும் பழைய சிந்தனைகளை, பழைய கோட்பாடுகளை
பின்பற்றுவது உன்னை சிறைச்சாலையில் கம்பி எண்ணக்கூட வைத்துவிடலாம். எனவே,
கவனமாக இரு!


7) பெண்களை பற்றி ?


தாயை நினைக்கின்றேன். தமக்கையை நினைக்கின்றேன். தங்கையை நினைக்கின்றேன்.
காதலியை நினைக்கின்றேன். ஏன் கடவுளைக் கூட நினைக்கின்றேன். நான் இந்த
உலகில் பிறந்ததும் எனக்கு பால் ஊட்டி எனது உடலிற்கு தேவையான சக்தியை
முதலில் தாய் தந்தாள். எனது நாளாந்த வாழ்க்கையை வெற்றிகரமாக கொண்டு
நடத்துவதற்கு தேவையான உடல் உள சக்தியை - Energy ஐ தாய், தமக்கை, தங்கை,
காதலி, கடவுள் என பல ரூபங்களில் பெண்கள் எனக்கு வழங்கிக்கொண்டு
இருக்கின்றனர்.


8) திருமணம் என்றால் என்ன?


இருமனம் இணைவதை திருமணம் என சிலர் சொல்வார்கள். அதாவது ஒரே மாதிரியான
இரண்டு மனங்களே இணைய முடியும். வெவ்வேறு சிந்தனைகள், எண்ண ஓட்டங்கள்,
விறுப்பு, வெறுப்புக்கள், ரசனை மற்றும் சுவை உள்ள இரண்டு மனங்களால் பிரிய
முடியுமே தவிர இணைய முடியாது. ஆனால், ஒரே மாதிரியான மனங்கள் திருமணத்தில்
இணையும் போது அந்த மனதை கொண்ட ஆணும், பெண்னும் ஆண்டாண்டு காலமாக
ஒன்றாகவும், சந்தோசமாகவும், நிம்மதியாகவும் வாழமுடிகின்றது.

இதனால் தான் உனது குருநாதன் காதல் திருமணத்திற்கு ஓ போடுகின்றான்.
ஏனென்றால், பேசி வைத்து செய்யப்படும் திருமணத்தில் (proposed marriage)
இரண்டு ஒரே மாதிரியான மனங்கள் இணைக்கப்படுகின்றன எனும் கருத்தில் உனது
குருநாதனுக்கு நம்பிக்கை இல்லை. எனவே, அப்பனே நீ காதல் செய்து உனது மனதுடன்
பொருந்தக்கூடிய ஒரு மனதை உடைய பெண்ணை கண்டுபிடித்து அவளுடன் திருமண
பந்தத்தில் இணைந்து ஒருமனங்கொண்ட தம்பதியாய் வாழ்வாய்! இதற்கு உனது
குருநாதனின் ஆசீர்வாதங்கள்!


அதற்கு ஏன் குருவே தாலி?


திருமணத்திற்கு தாலி தேவையில்லை. மேலும், தாலியை நீ உன் வருங்கால மனைவியின்
கழுத்தில் கட்டுவதாலோ அல்லது தாலியை உனது வருங்கால பெண்டாட்டி கழுத்தில்
சுமந்து செல்வதாலோ உனது வாழ்வு செழித்து விடும் என்றோ அல்லது நீ
சந்தோசமாகவும், நிம்மதியாகவும் நீண்டகாலம் வாழ்வாய் என்றோ எதுவித
உத்தரவாதமும் இல்லை. தாலி என்பது ஒரு பண்பாட்டு அடையாளம் என்பதை மட்டும்
அறிந்துகொள். ஆனால், எவரது பண்பாட்டு அடையாளம் என்பது உனக்கு தேவையில்லாத
ஆராய்ச்சி.

உனக்கு விருப்பமானால், அல்லது உனது பெற்றோருக்கு விருப்பமாக இருந்தால் -
அவர்களது ஆசையை நீ பூர்த்தி செய்ய விரும்பினால் நீ உனது வருங்கால மனைவிக்கு
தாலியை கட்டி விடலாம். தெரிவு உன்னுடையது. எனினும், உனது குருநாதனை
பொருத்தவரையில் அவனது மனைவி தாலியை அணிய வேண்டுமா அல்லது இல்லையா என்ற
தீர்மானத்தை எடுக்கும் முழுச் சுதந்திரத்தை அவனது எதிர்கால மனைவியாக
வரக்கூடியவளின் கையிலேயே குருநாதன் கொடுத்துள்ளான். அவள் தாலியை
விரும்பினால் மட்டுமே உன் குருநாதன் திருமணத்தின் போது தாலியை கட்டி
விடுவான்.


9) பிறப்பு, இறப்பு இவை பற்றிய உங்கள் கருத்து?


தூங்குவது போலும் சாக்காடு
தூங்கி விழிப்பது போலும் பிறப்பு


என வள்ளுவன் கூறியுள்ளான். பிறப்பின் முன் நாம் எங்கே இருந்தோம், இறந்த
பின் நாம் எங்கே போகப்போகின்றோம் என்றெல்லாம் தீவிர யோசனைகள் செய்து உனது
வாழ்வின் அழகிய வாழ்நாட்களை வீண்செய்து விடாதே! இந்த நிமிடம் - இந்த
செக்கன் நீ மூச்சு விடுகின்றாய்! இப்போது நீ உயிருடன் இருக்கின்றாய்!
இதுதான் நிஜம்! தேவையற்ற தத்துவ ஆராய்ச்சிகள் உனது மனதின் இயல்பான
அகச்சமநிலையை குழப்பி உன்னை ஒரு பைத்தியக்காரனாக்குவது தவிர வேறு
ஒன்றினையும் உனக்கு தரப்போவதில்லை.


10) குருவே நான் என்றால் என்ன?


"நான் என்றால் அகங்காரம்! நான் என்ற வார்த்தயை உச்சரிக்கக்கூடாது!"
என்றெல்லாம் சிலர் பேசிக்கொள்வார்கள். அப்பனே, நீ தான் இந்த உலகத்தின் ராஜா
என்பதை முதலில் அறிந்துகொள். உன்னை பொருத்தவரை, உனது வாழ்வினை
பொறுத்தளவில் என்று உனது உடல் பிணமாகின்றதோ - அன்றைய தினத்தில் இருந்து நீ
இந்த பூமியில் இல்லாத ஒரு பொருள்! ஆனால், உன்னை, உனது வாழ்வை பொறுத்தளவில்
உனது உடல் பிணமான பின் பூமி உனக்கு வேண்டாத ஒரு பொருள்!

நீ இல்லாத பூமியில் பூகம்பம் வந்தால் என்ன? சுனாமி அடித்தால் என்ன? இவை
எதுவும் நீ இல்லாத உலகில் உன்னை பாதிக்கபோவதில்லை. எனவே, மீண்டும் இந்த
உலகின் ராஜா நீ என்பதை அறிந்துகொள்.

இந்த நான் என்ற சொல் - பதம் உன்னை குறிக்கின்றது. இந்த உலகின் முதல்வன் நீ
என்பதை குறிக்கின்றது. நீ ஆரம்பத்தில் கேட்டாயே ஒரு கேள்வி - குருவே கடவுள்
என்றால் என்ன? என்று!.. இதற்குரிய விடை இந்த நான் உள் உள்ளது. பல்வேறு
படிமுறை வளர்ச்சிகளின் பின் நான் என்பது யார் என்பதை நீ உணர்ந்து கொள்வாய்!

அப்பனே, உன்னை அடுத்த ஞாயிற்றுக்கிழமை மீண்டும் ஒரு போதி மரநிழலின் கீழ்
ஞானபோதனை தரும்போது சந்திக்கின்றேன். நன்றி! வணக்கம்!


(தொடரும்......)
avatar
ஸ்ரீ கிருஷ்ணன்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 771
மதிப்பீடுகள் : 3

View user profile

Back to top Go down

Re: ஆன்மீக கருத்துகள் ( பாகம் 1):

Post by krishnaamma on Thu Sep 30, 2010 11:02 pm

HO! MY God! நல்ல குரு ........ நல்ல சீடன் .............. என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum