ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

தமிழ் நேசன் !?
 valav

நான் தேனி.
 Mr.theni

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

நரை கூறிய அறிவுரை
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 SK

நாவல் தேவை
 PKishanthini

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 ராஜா

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
 SK

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 SK

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு
 SK

Winmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்
 ayyasamy ram

RRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்
 thiru907

#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா?
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் !

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் !

Post by sugumaran on Thu Nov 30, 2017 8:22 am

ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் ! -- ௧- ( 1 )
வரலாற்றில் ஓலைச் சுவடிகளின் பங்கு - ௧ ( 1 )

வரலாறு என்பதன் அவசியம் கடந்து போன காலத்தை மீண்டும் மீண்டும் நினைத்துப் பார்ப்பதற்காக மட்டும் அன்று . வரலாற்றின் தேவை நிகழ்காலத்தின் தேவைக்கேற்ப மாறக்கூடியது . சொல்லப் போனால் வாழ்வின் வளர்ச்சியே நாம் புறப்பட்ட இடத்தையும் இதுவரை கடந்து வந்த பாதையை நினைவு படுத்திக் கொள்வதையும் அதிலிருந்து பாடங்கள் பெறுவதையும் பொறுத்துத்தான் அமைகிறது .வரலாறு எத்தனை ஆழமாகப் பாடங்களை ஒரே ரீதியில் கூறினாலும் அதன் பாடங்களைச் சரிவரப் புரிந்து கொள்ளாதவர்கள் வரலாற்றில் இடம் பெறுவதில்லை.
வரலாற்றுக்கு ஆதாரமான காலத்தை ஆய்வதற்கு அந்தக் காலத்தைய இலக்கியமும், நிகழ்காலத்தில் செய்யப்படும் தொல்பொருள் ஆய்வும் முக்கியப்பங்கு வகிக்கின்றன. அகழ்வாய்வில் பெறப்படும் முடிவுகளை அந்தக் காலத்தைய இலக்கியச் செய்திகளோடும், அந்தக் காலத்தைய இலக்கியச் செய்திகளை அகழ்வாய்வில் பெறப்படும் சான்றுகளோடும் ஒப்பிட்டுப் பார்க்கவேண்டும் . அப்போதுதான் ஓர் உறுதியான முடிவுக்கு வரஇயலும்.
ஆனால் உலகின் பெரும்பாலான இடங்களில் இதுவரை அகழ்வாய்வில் பெறப்பட்ட சான்றுகள் இலக்கியத்தோடு ஒப்பிடப்பட்டு முடிவுகள் பெறப் படவில்லை .காரணம் அங்கே தொல்லிலக்கியங்கள் அகப்படவில்லை.
எகிப்தில் பிரமிடுகள் வரலாற்றைப் பறை சாற்றிக் கொண்டு கண்ணுக்கேதிரே இன்னும் நிற்கின்றன. காலத்தை வென்ற சான்றுகள்தாம் அவை. ஆனால் ஒரே குறை ஒப்பு நோக்கத் தொல்லிலக்கியங்கள் மட்டும் அங்கே இல்லை .நம் நாட்டிலேயே கூட வட இந்தியாவில் சிந்து வெளியில் மொகஞ்சோதரோ , ஹாரப்பா அகழ்வாய்வில் கிடைத்த முடிவுகள் சான்றுகள் இருக்கின்றன . ஆனால் அந்த ஆய்வை நிலை நிறுத்தும் வகையில் ஒப்புநோக்கத் தக்க தொல்லிலக்கியங்கள் தான் கிடைக்கப் பெறவில்லை .
ஆனால் தமிழ்நாட்டின் நிலையோ நேர்மாறானது. இங்கே தொல்லிலக்கியங்கள் கொட்டிக் கிடக்கின்றன ஒப்பிட்டுப்பார்க்க. தொல்லி லக்கியங்கள் கூறும் சான்றுகளைத் தேடும் தொல்பொருள் ஆய்வுதான் அத்தனை இல்லை. பூம்புகாரின் சிறப்புக்களைக் கூறும் சிலப்பதிகாரம் நம்மிடம் உண்டு; ஆனால் பூம்புகார் இன்னும் ஆழ்கடலில் பத்திரமாகத் தேடுவாரின்றி உறங்கிகொண்டு இருக்கறது . அங்கே எகிப்தில் பிரமிடுகள், சிந்து வெளியில் மொகஞ்சோதரோ , ஹாரப்பா அகழ் வாய்வில் கிடைத்த முடிவுகள், சான்றுகள் இருக்கின்றன .ஆனால் நிலை நிறுத்த இலக்கியங்கள் போன்ற புறச் சான்றுகள்தான் இல்லை .
ஆனால் தமிழ்நாட்டின் வரலாற்றை நிலை நிறுத்த எந்த அகழ்வாய்வும் தேவைப்படாத அளவில் நம்மிடம் மிக முக்கிய ஆதாரங்கள் உள்ளன. அதுவே வழி வழி வந்து இன்றும் நிலைத்திருக்கும் பழந்தமிழர் மரபு ஆகும் . தொல்லிலக்கியங்களில் பேசப்படும் அதே மொழியை இன்றும் வழி வழியாகப் பேசிவரும் பழங்குடிகளான தமிழர் மரபு இன்றும் நீடித்து வருகிறது .இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்ட அதே இலக்கண விதிப்படி இன்னும் அதே போல் பாடல் இயற்றும் வல்லமை கொண்ட தமிழர் மரபு இழை இன்னும் அறுபடாமல் வாழ்ந்து வருகிறது; சீரிளமை குறையாமல் தமிழ்க்குடி வாழ்ந்து வருகிறது. ’யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என வாழ்ந்த குலம் இன்னும் வாழ்ந்து வருகிறது .
வாழும் வரலாற்றுச் சின்னங்கள்தான் தொல் தமிழர்கள் .
அவர்களிடமே இன்னும் தொல்லிலக்கியங்கள் ஓலைச் சுவடிகளிலே எழுதப்பட்டு ஆண்டாண்டு காலமாகப் பாதுகாப்பாக உள்ளன; வாழும் தொல்குடிகளும் இருக்கின்றனர்; ஆனால் இதை அனைவரும் ஒப்புக் கொள்ளும் வகையில் புறச் சான்றுகளான அகழ்வாய்வுகள் தான் தேவை .
தமிழர்களான நாம் உண்மையில் அதிர்ஷ்டம் செய்தவர்கள். ஆயிரம், இரண்டாயிரம் வருஷத்திற்கு முன் வாழ்ந்த ஒரு கவியின் உள்ளத்தை அறியக்கொடுத்து வைத்திருக்கிறோம்; அந்த மொழி இன்னும் அதே வடிவில் இருக்கிறது . இன்னும் அதில் உள்ள சொற்கள் நமக்குப் புரிகின்றன. அதே பொருளில் இன்னும் அதே சொல் புழக்கத்தில் இருக்கிறது .
ஆயிரம் வருடத்திற்கு முந்தைய இத்தாலிய, லத்தீன் நூல்களை அவற்றைத் தாய் மொழியாகக் கொண்டு வாசிப்பவர் தற்போது இல்லை; ஆயிரம் வருஷத்திற்கு முன் இருந்த ஆங்கில நூல் எதையும் தற் காலத்து ஆங்கிலேயர்களால் படித்து விட முடியாது.
இது எப்படித் தமிழ் நாட்டில் மட்டும் நிகழ்ந்தது ?
இதில்தான் தமிழர் தம் தொல்லறிவு வெளிப்படுகிறது . தன்னைச் சுற்றி இருந்த இயற்கையின் கொடையான செடி கொடி மரங்கள் இவை களைத் தனது உணவு மற்றும் உடல் நலம் பேணும் மருத்துவ குணங் களைக் கண்டு அவற்றைத் தக்கவாறு பயன்படுத்த அறிந்த தொல் தமிழ் இனம் மன வழி , செவி வழி பெற்ற கருத்துக் கோவைகளை வரி வடிவில் மாற்றுவதற்கு ஏற்ற சாதனம் ஒன்றைத் தங்கள் ஆற்றல்மிகு அறிவால் கண்டனர் .
கற்பக விருக்ஷமான பனை மரத்தின் ஓலைகளின் பெரும் பயன் பாட்டைக் கண்டனர். பனை ஓலைகளில் எழுதப்பட்டவை எவ்விதப் பராமரிப்பு இல்லாத போதும் குறைந்தது 300 ஆண்டுகளாவது இருக்கும் திறன் அறிந்தனர் . தொடர்ந்த பராமரிப்பு இருப்பின் ஓலைகளின் ஆயுள் நீடிப்பதையும் கண்டனர் . இவ்வாறு பழந்தமிழர் தொல் இலக்கி யங்கள் , அறிவுச் செல்வங்கள் காலம் காலமாக ஓலைச்சுவடிகளில் எழுதப்பட்டுத் தொடர்ந்து பாதுகாக்கப்பட்டன. வட இந்தியாவில் பனை ஓலைகள் கிடைக்காத இடங்களில் பத்திரங்கள் எனப்படும் இலைகளில் எழுதும் வழக்கம் இருந்தது .
.இதுவே தமிழ் நாட்டின் தொல் இலக்கியங்கள் தொடர்ந்து பாதுகாப் பட்டதன் காரணம் ஆனது. தமிழின் குன்றாத சீரிளைமைக்கு ஓலை களே ஒருவகையில் காரணம் ஆனது .
தொன்ம இலக்கியங்களை ஓலைகளில் பாதுகாத்துப் படிஎடுத்துப் பாதுகாத்து வருங்கால சமுதாயத்திற்கு தங்கள் மரபின் செல்வங்களாக வழங்கியதே அன்றிருந்த மொழியும், இலக்கணமும் இன்னும் ஜீவனுடன் விளங்குவதற்குக் காரணமானது எனலாம் . இன்றும் தமிழின் தொன்மைக்குச் சான்றாக நமக்குக் கிடைத்துள்ள எண்ணற்ற இலக்கியங்களுக்கும், அறிவுசார் நூல்களுக்கும் காரணம் ஓலைச் சுவடிகளில் எழுதும் பழக்கமே ஆகும் . பனையின் கொடையால்தான் நமக்கு ஜீவனுள்ள நமது தமிழ்மொழியும் அதன் தொன்மை இலக்கியங்களும் கிடைத்துள்ளன .
.
முன்னையோரின் புலமை, அவர்களுடைய கல்வி பண்பாட்டுப் பெருமை முதலியவற்றை அறிந்து கொள்வதற்குத் துணை நிற்பது ஓலை சுவடிகள் மூலம் அவர்கள் விட்டுச் சென்ற அறிவுசார்ந்த சொத்துக்களேயாகும். சென்ற நூற்றாண்டுவரை அவற்றைச் செல்வமாக மதித்துப் பூசித்து வந்தனர். சுவடிகள் இல்லாத வீடுகளே தமிழ் நாட்டில் இல்லை என்று சொல்லும்படி, அவை சிற்றூர்கள் அனைத்திலும் நீக்கமற நிறைந்திருந்தன . தமிழின் தொன்மையை அறிவதற்குத் துணையாக நிற்கும் சங்க நூல்களைச் சுவடிகளில்தான் எழுதித் தொடர்ந்து போற்றிப் பாதுகாத்தனர். பனை ஓலையை நன்கு பதப்ப டுத்தி ஒழுங்குபட நறுக்கிச் சுவடிவடிவில் அமைத்து எழுதினர். இன்றும் தமிழகத்தில் பல்லாயிரக்கணக்கான ஓலைச் சுவடிகள் தமிழ் நாட்டின் கிராமங்களில் பரவலாகக் காணப்படுவது நமது பண்டையோரின் அறிவின் ஆழத்தை நமக்கு எடுத்துக் காட்டுகின்றன.
சீனர், கிரேக்கர், பினிசியர், உரோமர், எபிரேயர், அர்மீனியர், அராபியர் ஆகியோர் கி.பி. ஏழாம் நூற்றாண்டு வரை பைரஸ் என்னும் ஒருவகை புல்லையே எழுதப்படும் பொருளாகப் பயன்படுத்தினர். பேப்பர் என்ற சொல்லும் ''பைபரஸ்'' என்னும் சொல்லிலிருந்து உருவானது என்பர். ஆனால் இவை நமது தொல்தமிழர் பயன்பாட்டில் இருந்த ஓலைச் சுவடிகளுக்குத் தரத்தில் ஈடாகாது .
பழஞ்சுவடிகளுள் பல போற்றுவாரின்றி அழிந்து போனமையால் நமக்குக் கிடைக்க வேண்டிய பல அரிய நூல்களும் கிடைக்கவில்லை. இலக்கண இலக்கியங்கள், மருத்துவம், சோதிடம், வானசாத்திரம் முதலான பல்வேறு சுவடிகள் இன்னும் அச்சிடப் பெறாத நிலையில் கிராமங்களில் இருக்கக் கூடும். அவற்றையெல்லாம் தொகுத்து முறைப் படுத்தி ஆராய வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். சுவடிகளைப் படித்து அவற்றைப் படியெடுத்துப் பாதுகாக்கும் அரிய கலையைப் பயிற்றுவிக்க ஆர்வம் கொண்டோர் அருகிப் போனதால் படி எடுக்கப் படாமலும் , பாதுகாக்கும் முறை அறியாததாலும் கொஞ்சம் கொஞ்ச மாகச் சுவடிகள் நமது கிராமங்களில் இருந்து மறையத் தொடங்கின. அப்போதுதான் எஞ்சிய ஓலைச் சுவடிகளைக் காப்பாற்ற வேண்டியதன் அவசியத்தையும், அவசரத்தையும் உணர்ந்த மத்திய அரசின் கலாசாரத் துறை 2003 ஆம் ஆண்டு பெப்ருவரி மாதம் இந்தியா முழுவதும் பரவிக் கிடக்கும் பழமை வாய்ந்த ஓலைச் சுவடிகள் , காகித சாசனங்கள் இவற்றைக் காக்க ஓர் இயக்கம் ( NMM) தொடங்கியது .
இந்த இயக்கம் தமிழ் நாட்டில் NSS மாணவர்களைக் கொண்டு அந்தந்தப் பகுதியில் இருந்த கிளை நூலகர்களைக் கொண்டு ஒரு மாபெரும் கணக்கெடுப்பு நடத்தித் தமிழ் நாட்டில் மட்டும் சுமார் ஐந்து லக்ஷம் சுவடிகள் சுமார் 16,000 இடங்களில் இருப்பதாக அறிவித்தது .
இன்னும் சுவையான இனிய பல அனுபவங்கள், ஓலையைத் தேடி நாங்கள் ஓடிய போது சந்தித்த பெரிய மனிதர்கள் , அவர்கள் காட்டிய பெருந்தன்மை ,தங்களின் பாரம்பர்ய சொத்தாகப் பாதுகாத்து வந்த அறிவின் செல்வங்களை நாங்கள் கொடையாகக் கேட்டபோது எந்தப் பொருளாதார எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் முக மலர்ச்ச்சியோடு அவர்கள் தஞ்சைப் பல்கலைக்கு வழங்கிய பண்பு ,அப்போது அவர்கள் காட்டிய உபசரிப்பு இவற்றை வாழ்நாள் முழுதும் மறக்க இயலாது .
தஞ்சைத் தமிழ்ப் பல்கலையும், தமிழ் மரபு அறக்கட்டளையும் சேர்ந்து செய்து கொண்ட MOU வின்படி மேற்கொள்ளப்பட ஓலைச் சுவடிகள் சேகரிப்புத் தொடர்பாக அண்ணாமலை சுகுமாரன் ஆகிய நான், செல்வமுரளி இருவரும் தமிழ் மரபு அறக்கட்டளை சார்பாகவும் முனைவர் கோவை மணி அவர்கள் தஞ்சைப் பல்கலை சார்பாகவும் கடந்த பெப்ருவரி, மார்ச் மாதங்களில் சென்னை ,திருவள்ளூர், காஞ்சி புரம், நாமக்கல், திருநெல்வேலி ,கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மேற்கொண்ட தேடுதலின் முக்கியமான சுவையான சந்திப்புகள் அடங்கிய இத்தொடர் அவர்களுக்கு நன்றி கூறும் முகத்தான் இங்கு எழுதப்படுகின்றது .
இந்தத் திட்டத்தின் பின்புலமாக இயக்கும் சக்தியாகச் செயல்பட்ட THF நிர்வாகிகள் சுபா ,கண்ணன், ஆண்டோ இவர்களின் அன்பும் ஆதரவும் என்றும் மறக்க முடியாதவை .
------------------------------------
ஏதோ தேடும் போது , எனது இந்தப் பழைய கட்டுரை கண்ணில் பட்டது .அதை மீண்டும் நண்பர்களின் பார்வைக்குப் பகிர்கிறேன் .--
இந்தக்கட்டுரை தொடர் சுமார் எட்டு ஆண்டுகளுக்கு முன் எனது முதல் கட்ட சுவடித்த தேடல் முழுமைபெற்றபின் ,கிடைத்த ஓய்வின் போது எழுதியது
எனது இரண்டாம் கட்ட தேடலில் பேராசிரியர் கோவைமணி , கணினி நிபுணர் செல்வமுரளி ஆகியோர் வரவில்லை .நான் மட்டுமே பயணித்தேன் .
அந்த இரண்டாம் கட்டத்தில் மட்டுமே பேருஇம்பாலான சுவடிகள் சுமார் 70,000 ஏடுகள் கண்டுபிடிக்கப்பட்டு தமிழ்ப் பலகலைக் கழகத்தில் ஒப்படைக்கப்பட்டது .
இந்த செய்திகளும் அப்போதேஇணையத்தில் பதிவு செய்யப்பட்டுவிட்டது .
அண்ணாமலை சுகுமாரன் M.A,
21/11/17
avatar
sugumaran
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 326
மதிப்பீடுகள் : 203

View user profile

Back to top Go down

Re: ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் !

Post by Dr.S.Soundarapandian on Thu Nov 30, 2017 8:34 pmஎனக்குப் பழைய நினைவுகளைக் கொண்டுவந்து தந்துள்ளீர்கள்!

படத்தில் இருக்கும் இராசேந்திரனும் நானும் ஓலைச்சுவடி ஆய்வகத்தில் ஒன்றாகப்
பணி புரிந்தவர்கள்! தாங்கள் குறிப்பிட்ட கோவை மணியும் என் நண்பரே!
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4609
மதிப்பீடுகள் : 2435

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் !

Post by sugumaran on Sat Dec 02, 2017 7:28 pm

ஓலைச் சுவடிகளைத் தேடிய படலம் ! -- ௩ - ( 3 )
2009 டிசம்பர் மாதம் 18 நாள் அன்று தமிழ் மரபு அறக்கட்டளை சார்பில் சுபாஷிணியும் , தமிழ்ப் பல்கலைக் கழகமும் ஓலைச் சுவடிகள் தேடுதல், அவற்றை மின்னாக்கம் செய்தல் ஆகியவை பொருட்டு ஓர் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனர். , நான் அதில் சாட்சி கையெழுத்து போட்டேன் .
அதைத் தொடர்ந்து உடனே பல்கலைக் கழகப் பட்டமளிப்பு விழா, அதைத் தொடர்ந்து அரையாண்டு விடு முறை என நாட்கள் நகர்ந்தன .
நானும் இடைவிடாது தஞ்சைக்கு அலைந்தேன் .அது தனிக்கதை .
நீண்ட அலைச்சலுக்குப்பிறகு ,ஒருவழியாக ,5/ 2 / 2010 முதல் திட்டமிட்டபடி சென்னையில் முனைவர் கோவை மணியுடன் தேடுதல் பணி தொடங்கலாம் என்த்தகவலின் படி பணி தொடங்கியது. தஞ்சையில் இருந்து நான் புறப்பட்ட நேரம் மாலை 6 மணி, நாள் 4 /2 /2010 . .நான் புதுவைக்கு விரைந்தேன் .
! செல்வமுரளி மறுநாள் கலந்து கொள்ள நிச்சயித்து உடுப்பு எடுக்க ஊருக்குப் போக , நான் எடுத்தேன் ஓட்டம் !இரவு முழுவதும் பயணம் ! விடியலில் மீண்டும்காலையில் சென்னைக்கு பயணம் ! அத்தனை ஆர்வம் !
பத்து மணிக்கே எழும்பூர் !ரயிலும் வந்தது, அத்துடன் கோவை மணியும் வந்தார் .
ரயில் நிலைய பிளாட்பாரத்தின் நாற்காலிகள் எங்கள் ஆலோசனை அறையாக மாறியது . சென்னையில் சுவடிகள் இருப்பதாக NMM தயாரித்த பட்டியலில் இருந்த முகவரிகள் மொத்தம் 76 .நான் முன்பே அவற்றைப் பகுதி வாரியாக ராயப்பேட்டை, மயிலாப்பூர் பகுதி என முகவரிகள் பிரித்து வைத்திருந்தேன். அன்று எங்கே போவது ? எங்கே முடிப்பது என ஆராய்ந்தோம். அருகில் இருக்கும் சிந்தாதிரிப்பேட்டை, மயிலாப்பூர் , திருவல்லிகேணி பார்த்து நான் அங்கே விடுதியில் தங்கு வது. மறுநாள் காலை மீண்டும் அங்கிருந்து ஆரம்பிப்பது என்று தீர்மானித்தோம் . எதிரே சென்று அவசர அவசரமாக மதிய உணவை முடித்துக் கொண்டோம் . அழைப்பு வண்டியை (CALL TAXI) அழைத்தோம் . மறுநாள் முதல் நான்கு நாட்களுக்கு ஒரு வண்டியை அமர்த்திக் கொண்டோம் .
உ வே சா அவர்கள் மாதிரி மாட்டு வண்டியில் செல்லும் பாக்கியம் இப்போது கிட்டாதே ! ஏதோ கிடைத்த வண்டியில் திருப்தி அடைய வேண்டியதுதான் என மனத்தை சமாதானப்படுத்திக் கொண்டோம். (சும்மா நகைச்சுவைக்குத்தான் ! முன்பே சொல்லிவிட்டேன், அது வேறுவகைத் தேடல். NO COMPARISON PLEASE ! )
சிந்தாதிரிப் பேட்டையில் ஒரே ஒரு முகவரிதான் இருந்தது. எனவே குழப்பம் இல்லை. வண்டி நேரே சிந்தாதிரிப் பேட்டை சென்றது. முகவரியில் இருந்த பெயர் நிமலன். பட்டியலில் எப்படி இருந்தது தெரியுமா ?
Nameelan .A
107 , CHIKANA CHETTY STREET
CHENDARIPET. CHENNAI -2
சிந்தாதிரிப் பேட்டை சென்று தோன்றிய ஓர் இடத்தில் வண்டியை நிறுத்தி நமீலன், சிக்கன செட்டித் தெரு என விசாரிக்க ஆரம்பித்தோம். யாருக்கும் தெருவும் தெரியவில்லை , நபரும் தெரியவில்லை . நடந்து நடந்து வண்டியை விட்டு நீண்ட தூரம் வந்து விட்டோம் . தாகம் நாக்கை இழுத்தது , நடை தளர்ந்தது ! அப்போது தான் தவறு புரிய ஆரமித்தது.
குளிர்பானம் குடிக்க ஒரு கடைக்குச் சென்று பானம் அருந்தி மீண்டும் மெதுவாக ’ இங்கே நமீலன் என யாராவது....’ எனக் கேட்க ஆரம்பித்ததும் ’ நிமலனைக் கேட்கிறீர்களா ? பக்கத்தில் சிக்கண்ண செட்டித் தெருவில் தான் போங்கள் !’ என்றார்.
.
இரண்டு புதிர்களை ஒரே நேரத்தில் விடுவித்த சாதனை அவருக்குத் தெரியவில்லை! இப்போது கொஞ்சம் தெம்பாக அருகில் இருந்த வீட்டை அடைந்தோம் வீட்டு எண்ணைப் பார்த்தேன் அதுவும் 107 இல்லை. என்னை அறியாமல் ’முருகா!’ என்றேன்! ஆனால் அப்படி உரக்கக் கூறும் வழக்கம் எனக்குக் கிடையாது. என்னவோ தோன்றியது, கூறிவிட்டேன். உள்ளே சென்று ’நிமலன் ஐயா இருக்கிறாரா?’ என்றேன்.
அது ஒரு புத்தகக் கடையாக இருந்தது. ஒரு சிறுமியும் சிறுவனும் இருந்தனர் .’ நிமலன் வெளியே சென்றிருக்கிறார், உங்களுக்கு என்ன வேண்டும்?’ என்று கேட்டனர். எங்களுக்குச் சுவடிகள் வேண்டும் என எப்படிக் கேட்பது . எனவே நாங்கள் எங்களைப் பற்றியும், சுவடி தேடிக் கிளம்பி இருப்பதையும் கூறினோம். இருவரும் எங்களைச் சில கணங் கள் பரிதாபமாகப் பார்த்தனர்.’ இங்கே ஏன் வந்தீர்கள்?’ எனக் கேட்டனர். பிறகு உடனே NMM பற்றி விளக்க ஆரம்பித்தோம் ‘ இந்தப் பட்டியலில் உங்கள் வீட்டில் 160 சுவடிகள் இருப்பதாகப் பதியப் பட்டுள்ளது’ என்றதும் அதுவரை உற்சாகமாகப் பேசிவந்தவர்கள் இப்போது எங்களை பயத்துடன் ஏதோ பிள்ளை பிடிக்க வந்தவர்களைப் பார்ப்பது போல் பார்த்து , அருகில் இருந்த அழைப்பு மணியை அலற விட்டனர்.
உடனே மாடியில் இருந்து ஒரு பெண்மணி இறங்கி வந்து, மீண்டும் ஒருமுறை எங்கள் கதையை முழுவதும் கேட்டார். பின் ’இது யார் வீடு தெரியுமா?’ எனக் கேட்டார். நாங்களும் முகத்தை அப்பாவித் தனமாக வைத்துக்கொண்டு ’ ‘இங்கே நிமலன்...’ என்று இழுத்தோம் . உடனே அந்தப் பெண்மணி மேலும் எங்களைச் சோதிக்க விரும்பாமல் ‘ இது வாரியார் சுவாமிகள் வீடு ! நான் அவரது சகோதரர் மகள்! நிமலன் அவரது சகோதரர் மகன். அவர் சுவாமிகளின் புத்தகங்களைப் பதிப்பித்து வருகிறார். நீங்கள் கூறியபடி இங்கே 160 புத்தகக் கட்டு வேண்டுமானால் இருக்கிறது. 160 சுவடிக் கட்டுகள் கிடையா " என்றார்.

வாரியார் சுவாமிகள் பெயரைக் கேட்டதும் ஒரு கணம் நாங்கள் இருவரும் மெய்சிலிர்த்து விட்டோம் . இறையருளாலேயே நாங்கள் முதலில் இங்கு வந்து எங்கள் தேடுதலை ஆரம்பித்ததை உணர்ந்தோம்.
இன்னும் சொல்லப்போனால் வாரியார் சுவாமிகளுக்கும் என் வாழ்க் கைக்கும் தொடர்பு உண்டு . நான் முதல் வெளிநாடு சென்று திரும்பி யதும் ஒரு தொழில் உற்பத்திசாலை ஆரம்பித்தேன் ;.அதைத் திறந்து வைத்தது (1985) வாரியார் சுவாமிகளே ! அத்தொடர்பை நான் கூறியதும் அந்தப் பெண்மணி எங்களை மாடியில் இருக்கும் சுவாமிகளின் பூஜை அறைக்கு அழைத்துச் சென்று, வழிபடச் செய்து, பூஜைகள் நடத்தி, எங்கள் பணி வெற்றியடையும் எனவும் வாழ்த்தினார். எங்களுக்குச் சில புத்தகங்களையும் பரிசாகத் தந்தனர். கந்தன் அருள் பெற்ற சந்தோ ஷத்துடன் அந்த வீட்டை விட்டு வெளியே வந்தோம். சிந்தாதிரிப் பேட்டையில் எங்களுக்குச் சுவடி கிடைக்காவிட்டாலும் நான்கு முக்கிய போதனைகள் கிடைத்தன.
அன்புடன்
அண்ணாமலை சுகுமாரன்
28/11/17
சுவடிகள் எங்கு எங்கு எல்லாம் இருக்கும் தெரியுமா ?
படத்தைப்பாருங்கள் !
கூரையில் சேமித்துவைத்ததை
கோரியவுடன் தானம் தரும்
தயவு கொண்ட தாத்தா !
இந்தக்கட்டுரை 01 May 2010 12:18 அன்று எழுதப்பட்டது .
2009 டிசம்பர் மாதம் 18 நாள் ஒப்பந்தம் செய்யப்பட்டது
மிகுந்த அலைச்சலுக்குப் பிறகு ,தேடல் துவங்கியது 5/2/2010
முதல் கட்டத தேடலில் சுமார் 26, 000 ஏடுகளைத்த தேடி பல்கலைக் கழகத்தில் ஒப்படைத்தோம் .அப்போது கிடைத்த ஓய்வில் இந்தக்கட்டுரைத் தொடரைத் தொடர்ந்தேன் .
அதன் பயனாக இரண்டாம் கட்ட தேடுதல் வாய்ப்பு கிடைத்தது .அப்போது நான் மட்டுமே தேடலில் ஈடுபட்டேன் .அப்போதுதான் அதிக அளவில் ஏடுகள் தேடி எடுக்கப்பட்டது சுமார் 70.000 ஏடுகள் கிடைத்தது .இரண்டாம் கட்ட தேடுதலின் முதல்நாளில் மட்டும் 9.000 ஏடுகள் கிடைத்தது .
அவை அத்தனையும் அப்போதே பதிவு செய்யப்பட்டுள்ளது .
அப்போது துணை வேந்தராக இருந்த முனைவர் ராஜேந்திரன் அவர்களின்
அன்பையும் ,அவர் நல்கிய ஒத்துழைப்பையும் மறக்க இயலாது .
இன்னமும் நிறைய அனுபவங்கள் தொடரும் .

avatar
sugumaran
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 326
மதிப்பீடுகள் : 203

View user profile

Back to top Go down

Re: ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் !

Post by sugumaran on Sat Dec 02, 2017 7:45 pm

@Dr.S.Soundarapandian wrote:

எனக்குப் பழைய நினைவுகளைக் கொண்டுவந்து தந்துள்ளீர்கள்!

படத்தில் இருக்கும் இராசேந்திரனும் நானும் ஓலைச்சுவடி ஆய்வகத்தில் ஒன்றாகப்
பணி புரிந்தவர்கள்! தாங்கள் குறிப்பிட்ட கோவை மணியும் என் நண்பரே!
மேற்கோள் செய்த பதிவு: 1252147


அப்படியா ? மிகுந்த மகிழ்ச்சி
முனைவர் ராஜேந்திரன் அப்போது தஞ்சைத் தமிழ் பல்கலைக் கழகத்தில்
துணை வேந்தராக இருந்த போது அவர் நல்கிய ஒத்துழைப்பு மறக்க இயலாது .
கோவை மணியைப் பற்றி சொல்ல நிறைய உள்ளது .

தங்களை சந்தித்து பேச நினைக்கிறேன் .
முன்பே ஒருமுறை எனது விருப்பத்தை தெரிவித்திருந்தேன் .
எனது எண் 9345419948

நான் இதைத்தொடரையெழுத்தியது , அந்த தேடுதல் நடைபெற்றபோதே 2010 இல்.

ஆனால் இப்போது வரலாறு ஏழு ஆண்டுகளில் திருத்தப்படுவதாக அறிந்தேன்.
எனவே இதை மறு பதிவு செயகிறேன் .
இத்தனை பெரிய தேடுதல் நடைபெற்றது ,இப்போதைய இளைய சமுதாயத்திற்கு தெரியவேண்டும் .
தங்களிடம் நேரில் பேச விழைகிறேன் .
அன்புடன்
அண்ணாமலை சுகுமாரன்
avatar
sugumaran
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 326
மதிப்பீடுகள் : 203

View user profile

Back to top Go down

Re: ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் !

Post by sugumaran on Mon Dec 04, 2017 2:07 pm
ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் !- ௪ (4 )
பழஞ்சுவடிகளில் ஒற்றெழுத்துகளுக்குப் புள்ளி இருக்காது; நெட்டெ ழுத்தைக் காட்டும் கொம்பு வேறுபாடுகளும் சுவடிகளில் இரா. ஏடுகள் ஒடிந்தும் கிழிந்தும் இருக்கும்; மெய்யெழுத்துகளில் புள்ளி இருக்காது ; இவற்றை அறிந்து எழுதுவதற்கு மிகுந்த பயிற்சி வேண்டும். அதை விட அதிகம் வேண்டுவது பொறுமை. பார்வைக் கூர்மை மிக அவசியம் .
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------
சிந்தாதிரிப் பேட்டையில் எங்களுக்குச் சுவடி கிடைக்காவிட்டாலும் நான்கு முக்கிய போதனைகள் கிடைத்தன என்று சொல்லி இருந்தேன். இப்போது நாங்கள் பெற்ற போதனைகளைப் பார்ப்போமா?
NMM பட்டியல் 2006ல் முழுமையாக வெளியிடப்பட்டுப் பயன்பாட்டில் இருந்தாலும் அதை நாங்கள் இப்போதுதான் மிகவும் தாமதமாகப் பயன்படுத்த இறங்கி இருக்கிறோம். பெரும்பாலான சேகரிப்பாளர்களும்,
நிறுவனங்களும் முன்பே முதல் அறுவடை செய்து சுலபமாகப் பெறகூடியவற்றைப் பெற்றுவிட்டன .எனவே இந்தப் பட்டியல் உண்மையா பொய்யா ? அதிலுள்ள தகவல்களை எந்த அளவு நம்பலாம் இந்தப் பட்டியலை வைத்துத் திறம்பட எவ்வாறு வேலை செய்வது.? அதில் இருந்து அதிக பட்ச வெற்றியைப் பெற என்ன செய்ய வேண்டும் ? எனப் பல சிந்தனைகள் மனத்தில் இருந்தன . வேறு முனையில் வேறு இந்தப்பட்டியல் முழுவதும் தவறு என ஒரு பேச்சு இருந்தது. ஆனால் சிந்தாதிரிப் பேட்டை விஜயம் எங்களுக்குச் சில தெளிவை உடனே உண்டாக்கியது.
க ) பட்டியலில் இருக்கும் ஊரின் பெயர், தெருவின் பெயர், நபரின் பெயர் இவை எதையும் அதில் உள்ளபடியே எடுத்துக்கொள்ளக் கூடாது; ஏன் எனில் தமிழ் நாட்டில் NSS மாணவர்களால் வீடு வீடாகச் சென்று எடுக்கப்பட்ட பட்டியல் தில்லிக்கு அனுப்பப்பட்டு அங்கிருக்கும் தமிழ் தாய்மொழி அல்லாத ஹிந்திக்காரர்களால் தட்டச்சு செய்யப்பட்டிருப்பதால் இதில் இருக்கும் ஊர், தெரு, நபர்கள் பெயருக்கு அவர்களுக்குத் தோன்றிய உச்சரிப்புக் கொடுத்துத் தட்டச்சுச் செய்திருக்கிறார்கள். எனவே நிமலன் என்பது நமீலன் ஆனது போல் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் எனவே பட்டியலில் இருப்பது ஒருவேளை சரியாக இருந்தாலும் இருக்கலாம் அல்லது அதை ஒத்த வேறு பெயராகவும் இருக்கலாம். எனவே விபரம் வழி முதலியவை விசாரிக்கும்போது பெயரை ஒத்த எல்லாவித மார்கத்திலும் விசாரிக்க வேண்டும்; நிறையக் கற்பனை வளம் வேண்டும். நிகண்டு அறிந்திருந்தாலும் நல்லதே. அம்மட்டுமா ?
௨) முகவரியைச் சரியாகக் கண்டபின் அங்கிருப்பவரிடம் எப்படி அணுகுவது என எங்களுக்கு ஒரு தெளிவு உண்டாகியது .வாரியார் சுவாமிகள் வீட்டில் இருந்தோர் மிகுந்த நல்ல எண்ணம் கொண்ட வர்கள். எங்களுக்கு ஆறுதலும் ,ஆசியும் வழங்கினர். ஆனால் பிற இடங்களில் எப்படிப் பேச வேண்டும் எப்படி அணுக வேண்டும் என ஒரு மனக்கணக்கு எனக்கு உருவானது .
’First impression is the best impression’ எனக் கூறுவார்கள். எனவே நாம் கூறும் முதற் சொற்களைப் பொறுத்தே, ஆரம்பிக்கும் விதத்தை வைத்தே அங்கே ஓலைச் சுவடி பெறுவதும், இதர உபசரிப்பும் இருக்கும் எனப் புரிந்து கொண்டேன்
௩) நடக்க ஆரம்பிக்கும்போது நாம் போகப் போக வண்டியையும் கூடவே நகரச் செய்ய வேண்டும். அதற்கு முதலில் ஓட்டுனரின் கை பேசி எண் மிகவும் தேவை. இதனால் ஒரு வேலை முடிந்ததும் அடுத்த இடம் போக வண்டியும் தயாராக இருக்கும் .
௪) பட்டியலில் இருக்கும் முகவரிகள் ஏதோ பொய் முகவரிகள் அல்ல. அவை ஓலைகள் இருக்கும் இடம், இருந்த இடம் அல்லது இருக்கும் சாத்தியம் உள்ள இடம்தான் என்பதை புரிந்து கொண்டோம். ஒவ்வொரு இடமும் அவசியம் போகவேண்டிய இடமே! எந்தப் புற்றில் பாம்பு இருக்குமோ தெரியாது.
புரிந்தவை எனக் குறிப்பிடுபவை மிகவும் elementary ஆகப் பலருக்கும் தோன்றலாம். ஆனால் சின்னச் சின்னப் புரிதலும் அதன் ஒழுக்கமும் தான் வாழ்வின் வெற்றியை நிர்ணயிக்கின்றன . நாங்கள் சென்னையை முதலில் ஓலை தேடுதலுக்குத் தேர்ந்தெடுத்த காரணமே, சென்னையில் கிடைக்கும் அனுபவங்களைப் பொறுத்தே தேடுதல் தொடர்பான சில முக்கியமான முடிவுகளை எடுக்க முடியும் என்பதால்தான்;.ஏனெனில் சென்னையில் மொத்தம் 76 இடங்கள்தான். எனவே முடிந்தவரை எல்லா இடங்களையும் சென்று பார்த்துப் பட்டிய லின் நம்பகத்தன்மையை அறிவதும், மக்களை எப்படி அணுகுவது, அவர்களின் reaction எவ்வாறு இருக்கிறது என்பதைக் காண்பதும் எனது நோக்கமாக இருந்தது. சென்னை அருகில் இருக்கிறது; .குடியிருப்புப் பகுதிகள் அருகருகே உள்ளன; ஓரளவு சாலை வசதி அங்கே உண்டு.பிற மாவட்டங்களில் ஒவ்வொன்றும் ஆயிரத்திற்கு மேல் முகவரி உண்டு. மொத்தமும் கிராமங்களை கொண்டது. இடைவெளி தூரம் அதிகம். எனவேதான் சோதனை செய்யச் சென்னையைத் தேர்ந்தெடுத்தேன்
விளையாட்டுப் பயிற்சிக்கு அருகில் இருக்கும் மைதானம் தானே சிறந்தது.
வாரியார் சுவாமிகளின் வீட்டில் இருந்து அவசர அவசரமாக மயிலாப்பூர் கிளம்பினோம். மயிலாப்பூரில் சமஸ்க்ருத கல்லூரி, K.S.R INSTITUTE NO. 84, T.V.K ROAD என இரு முகவரிகள் இருந்தன. மாலை எத்தனை மணிக்குக் கல்லூரி மூடப்படுமோ என்ற பயத்துடன் விரைந்தோம்; நல்லவேளை அங்கு கல்லூரி மூடப்படவில்லை; K.S.R NSTITUTE கல்லூரி வளாகத்திலேயே இருந்தது . நாங்கள் அதன் முதல்வர் முனைவர் காமேஸ்வரியை சந்தித்தோம். அவர்களிடத்தில் சுமார் 1500 சுவடிகள் இருப்பதைக் காட்டினார். அதில் ’சாரங்கன் கதை’ என்ற ஒரு கதைப் பாடலும், மற்றவை வைஷ்ணவ கிரந்தங்களாகவும் இருப்பதாகக் கூறினார். ஆனால் அவற்றைத் தஞ்சை பல்கலைக்குக் கொடையாகத் தர இயலாது என்றார். அவர்களிடம் அவற்றை மின் னாக்கம் செய்வது குறித்தும் பேசினோம். அவர்கள் முறைப்படி எழுத்து மூலம் அனுமதி கேட்கச் சொன்னார். முதல் நாளிலேயே ஓலைச் சுவடிகள் 1500 கண்ணால் கண்டது எங்களுக்கு உற்சாகத்தை அளித்தது. மேலும் ஒரு விஷயம் முகவரி சரியாக இருந்தது மட்டுமல்லாமல், ஓலைச் சுவடிகளின் எண்ணிக்கை அதில் 1050 + 600 எனவும் சரியாகக் குறிப்பிடப்பட்டிருந்தது மன சந்தோஷத்தை அளித்தது.
இவ்வாறு எங்கள் சுவடி தேடல் முதலில் அளித்த மனநிறைவால் ஆண்டவனுக்கு நன்றி கூறி, கபாலீசுவரரையும் கற்பகாம்பாளையும் மனத்தில் தொழுது அன்றைய வேலையை முடித்தோம் .
மறுநாள் காலை 8.30 மணிக்கே திருவல்லிக்கேணி வியாசராஜ மடத்தில் இருந்தோம் . அங்கே 200 சுவடிகள் இருப்பதாக பட்டியல் கூறியது .
மடம் என்பதால் எங்களுக்கும் இருக்கும் என நம்பிக்கை இருந்தது . ஆனால் எங்களை உபசரித்தார்களே தவிர அவர்கள் இது வரை ஓலையைக் கண்ணாலேயே பார்த்ததில்லை என ஒரே போடு போட்டனர் .அவர்களின் மைசூர் தலைமை முகவரி கேட்டுப் பெற்றுக்கொண்டு அங்கிருந்து கிளம்பினோம்.
அடுத்து ராயபுரம் அவ்வை கலைக் கழகம் என்ற முகவரி இருந்தது. அதல் 30 சுவடிகள் இருப்பதாகவும், அது ராமானுஜர் மியுசியம் எனவும் போட்டிருந்ததால் மனத்தில் பல கனவுகள்;
30 கட்டாக இருக்கும் எனப் பேசிக்கொண்டோம் .
ஆனால் அங்கே போனதும்தான் தெரிந்தது அது கணிதமேதை ராமானுஜர் கண்காட்சி என்று. அவர்களும் ஆர்வமுடன் பேசினர்.ஆனால் அங்கே ஓலைச் சுவடிகள் இல்லை; ஆனால் பார்க்கவேண்டிய இடம்தான் அது.
அடுத்து வண்ணாரப்பேட்டையை நோக்கி வண்டியை விட்டோம். அங்கே எங்களுக்கு ஒரு மிகப்பெரிய வியப்புக் காத்திருந்தது.
அன்புடன்
அண்ணாமலை சுகுமாரன்
------------------------------------------------------------------------------------
இந்தக் கட்டுரை 2010 ஏப்ரல் கடைசியில் எழுதப்பட்டது .
இப்போதுதான் மீண்டும் படித்தது ப்பார்க்கிறேன் .எனக்கே உற்சாகமாகஇருக்கிறது .
ஆனால் ஒரு மாத்சத்திற்கு முன் 2017 இல் நவம்பர் மாதம் மயிலையில் இருக்கும் சம்ஸ்கிருத கல்லூரிக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது .
சுவடிகள் தேடி 2010 வந்ததை பற்றி நான் கூறியதும் அவர்கள் நினைவுகூர்ந்தனர் என்னை அவர்கள் நன்றாக நினைவில் வைத்திருந்தனர் .மேலும் நான் அறிமுகப்படுத்திக்கொண்டு விதமும் அவர்களுக்கு பிடித்திருந்தது .
"நான் ஏழு ஆண்டுகளுக்கு முடி முழுவதும் கருத்திருந்த தலையுடன் வந்திருந்தேன் .இப்போது முழுவதும் நரைத்த முடியுடன் ,வெண்மை தலையுடன் வந்திருக்கிறேன் " என்றேன் . அவர்கள் அப்போது முழுவதும் மின்னாக்கம் செய்யப்பட அவர்களிடம் இருந்த சுவடிகளை கட்டினார்கள் .
மிகுந்த மகிழ்ச்சியுடன் அடுக்கடுக்காக வரிசைப்படுத்தப்பட்ட நான் ஏழு ஆண்டுகளுக்கு முன் கண்டவை ,இப்போது புதுப் பொலிவுடன் இருப்பதைக்கண்டேன் .
இன்னமும் ஒரு ஆனந்த செய்தியையும் அவர்கள் கூறினார்கள் .அவர்களிடம் திருக்குறள் சுவடிக்கட்டு ஒன்று இருப்பதாகவும் ., தற்போது புழக்கத்தில் இருக்கும் சில குறள்களில் மிக சிறிய மாறுபாடுகள் அவர்களிடம் இருக்கும் சுவடியில் கூறினார் .திருவள்ளுவர் பிறந்ததாக நம்பப்படும் மயிலையில் திருக்குறள் சுவடியைக்கண்டது
மிகுந்த நிறைவை அளித்தது .
அங்கு எடுத்த சில புகைப்படங்களை பகிர்கிறேன் .
கட்டுரையெழுத்தியது 2010, புகைப்படகள் 2017 நவம்பரில் எடுக்கப்பட்டது
அண்ணாமலை சுகுமாரன்
2/12/17
avatar
sugumaran
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 326
மதிப்பீடுகள் : 203

View user profile

Back to top Go down

Re: ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் !

Post by sugumaran on Tue Dec 05, 2017 1:57 pmஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் ! - ௫ - ( 5 )
தமிழ்த் தாத்தா உ.வே. சாமிநாதையர், ச. வையாபுரிப்பிள்ளை போன்ற பலரை நாம் ஓலைச் சுவடிப் பதிப்பாசிரியர்கள் என இப்போது கொண்டாடினாலும், இவர்கள் அத்துணை பேரையும் விட மிக முந்தைய ஒரு சுவடிப் பதிப்பாசிரியரை நாம் முழுமையாக மறந்து விட்டோம். சொல்லப்போனால் இதன் புரவலர் தஞ்சையில் இருந்து தான் அவரை இயக்கினார்.
அவர் யார் ? மேலும் விபரங்களை அடுத்தப் பகுதியில் காணலாம்
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------
வண்ணாரப் பேட்டையை நோக்கி வண்டி ஓட ஆரம்பித்தது. அங்கே மொத்தம் 9 முகவரிகள் இருந்தன. அனைத்துமே தனி நபர்கள்; ஒரே ஒரு மருத்துவமனை. எப்படி ஓலை வைத்திருக்கும் நபர்கள் பலரும் அதிக எண்ணிக்கையில் சென்னை வண்ணாரப் பேட்டையைத் தேர்ந்தெடுத்து வசிக்கிறார்கள் என்ற வினா மனத்தில் மின்னலடித்தது.
எப்படியும் அத்தனையையும் பார்த்து விடுவது என உறுதி எடுத்து அதிகம் அலைந்தோம். தனி நபர்கள், வீடுகளை எல்லாம் அலைந்து திரிந்து ஒவ்வொன்றாகத் தேடினோம். வழக்கம்போல் அப்படியும் இப்படியும் திரிந்து வழியில் அகப்படும் அனைவரையும் தொந்தரவு செய்து அவர்களையும் மிகவும் சிந்திக்கச் செய்து ஒவ்வொரு முகவரியாகச் சென்று விசாரித்தோம்.
ஆனால் சென்ற இடம் எங்கும் ஓலைச் சுவடிகள் இல்லை என்ற பதிலே கிடைத்தது. ஒருவேளை பட்டியல் தவறோ என்ற எண்ணம் வந்தபோது , ஓரிடத்தில் மட்டும் அவர்களுக்கும் ஓலைச் சுவடிக்கும் சம்பந்தம் இருக்கும் தகவலை கூறினார்கள். குடும்பமே கூடி அந்தத் தகவல்களை உறுதிப்படுத்தினர். பாஸ்கர் என்னும் அந்த குடும்பத் தினைச் சேர்ந்த வாலிபர் வீடுகட்டும் தொழில் செய்து வருகிறார்.
சென்னையில் ஒரு வீட்டைப் புதிதாக்க் கட்டுவதற்காக முழுமையும் இடிக்கும் வேலையில் ஈடுபட்டபோது இரண்டு சாக்குப்பை நிறைய அங்கே ஓலைச் சுவடிகள் கிடைத்தனவாம்; அந்தச் சுவடிக் குவியலை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் வைத்திருந் தனராம்; ஆறுமாதம் முன் யாரோ ஒரு மீசைக்காரர் அதை வாங்கிக் கொண்டு போனாராம். எங்களுக்கு எப்படி இருக்கும் பாருங்கள் ? அந்த மீசைக்காரர் பற்றி வேறு ஏதாவது மேல் விபரம் தெரியுமா என்று மிக்க ஆதங்கத்துடன் பலமுறை கேட்டோம்; ஆனால் அவர்கள் அதை அத்துணை சிரத்தை எடுத்துக் குறித்து வைக்கவில்லை. எங்களுக்கோ கைக்கு எட்டியது இப்படி நழுவி விட்டதே என்ற வேதனை. பிறகு மோர் எல்லாம் கொடுத்து எங்களை அவர்களே ஆறுதல் படுத்தினர். சில ஆண்டுகளுக்கு முன் NSS மாணவர்கள் வநது ஓலைச் சுவடி பற்றிக் கேட்டதையும் உறுதிப்படுத்தினர்; ஆனால் ’உடனே வருவது தானே, இவ்வளவு ஆண்டுகள் என்ன செய்தீர்கள் ?’ என்ற
அவர்களது கேள்விக்குத்தான் எங்களால் பதில் கூற முடியவில்லை.
பல இடங்களில் இப்படித்தான் ’அங்கே கொடுத்தோம், இங்கே கொடுத்தோம்’ என்று கூறுவதை அடிக்கடி கேட்பது வழக்கம் ஆனது. கொஞ்சம் விபரம் அறிந்தவர்கள் புதுவை பிரெஞ்சு நிறுவனம், சென்னை பல்கலை , திருப்பதி தேவஸ்தானம் என விபரம் கூறுவார்கள். பலர் யாரோ வந்து வாங்கிச் சென்றனர் என்பதோடு நிறுத்திக் கொள்வர். இன்னும் சில இடங்களில் வண்ணாரப் பேட்டையில் அலைந்தோம் ஆனால் அவர்களிடம் ஓலைச் சுவடிகள் இருந்த தடயமே இல்லை .
வெய்யில் சுட்டெரிக்க நண்பகல் உணவு நேரம் தாண்டி,மணி இரண்டைக் கடந்தது . உடல் களைப்பும், மனச் சோர்வும் மிகவும் உண்டாயின. காலையில் இருந்து சுவடிகளைக் கண்ணால் பார்க்காத ஏக்கம் வேறு !
அந்த நேரத்தில் குவளை நிறைய பாதாம் இட்ட சுவைமிக்க கெட்டியான குளிர்ந்த பானத்தைக் கொடுத்துக் கையில் ஒரு கட்டு திருவாசகம் ஏடுகளைக் கொடுத்தால் எப்படி இருக்கும் ? என்ன பகலிலேயே கனவா என்கிறீர்களா ?
உண்மையில் இது அப்படியே நடந்தது !
வண்ணாரப் பேட்டையில் மொத்தம் 9 முகவரிகளில் ஒரு மருத்துவ மனை முகவரி இருந்தது எனச் சொல்லிருந்தேன் அல்லவா ? அந்த மருத்துவமனையின் பெயர் ’ராகவேந்திரா மருத்துவமனை’ என்று இருந்தது; சென்றபோது எதிர்பார்த்தபடி அது சித்த மருத்துவசாலை தான்; ஆனால் நவீனமாக இருந்தது. மக்கள் கூட்டமும் அதிகம் இருந்தது . நாங்கள் முக்கிய விஷயமாக டாக்டரைப் பார்க்கணும் என்று சொல்லி எப்படியோ டாக்கடர் அறையில் நுழைந்து விட்டோம். எங்கள் பசி அப்படி ! டாக்டரும் நவீனமாகத்தான் இருந்தார். என்ன வேண்டும் என்றபோது ’ டாக்டர் உங்களிடம் நிறைய ஓலைச் சுவடிகள் இருப்ப தாக எங்களுக்குத் தகவல். நாங்கள் அதைப் பார்க்க தஞ்சைப் பல்கலை யில் இருந்து வருகிறோம்’ என்றோம் . இப்போது எல்லாம் எப்படிப் பேசுவது என்பது அத்துப்படி ஆகிவிட்டது. ’அப்படியா ?’ என்ற டாக்டர் வேறு ஒருவரை அழைத்து ’இவர்களை அலுவலகம் அழைத்துப் போங்கள் ’என்று கூறி , எங்களைப் பார்த்து "நீங்கள் அங்கே சென்று கொஞ்ச நேரம் இருங்கள்; நான் விரைவில் காத்திருப்பவர்களை அனுப்பிவிட்டு வநது உடனே வநது விடுகிறேன் " என்றார். அவர் ஓலைச் சுவடிகள் இல்லை என்று சொல்லாமல் காத்திருக்கச் சொன்னதுமே எங்கள் கற்பனை சிறகடித்துப் பறக்க ஆரம்பித்தது.
அங்கே நாங்கள் போனதும் பார்த்தால் கண்ணாடி அலமாரி நிறைய ஓலைச் சுவடிகள் மிக நேர்த்தியாக அடுக்கப்பட்டிருந்தன. இருவர் ஒரு சிறந்த மின்வருடி கொண்டு சுவடிகளை வருடிக்கொண்டிருந்தனர். அப்படியே நாம் என்ன செய்ய நினத்தோமோ அதை அங்கு செய்து கொண்டு இருந்தனர். நாங்கள் அவர்களுடன் பேசிக்கொண்டிருந்தோம்; செல்வமுரளி technical விபரம் கேட்டுக் கொண்டிருந்தார். நாங்கள் ஓலைச் சுவடிகளை ஆர்வமுடன் பார்த்துக் கொண்டிருந்தோம். சுமார் 300 கட்டுகள் இருக்கலாம். அத்தனையும் மருத்துவச் சுவடிகள். மிக நேர்த்தியாகச் சுத்தம் செய்யப்பட்டு, எண்ணெயிட்டு, மையிட்டு, புதிய நூலில் சுற்றி அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.
டாக்டர் "என்ன, பார்த்தீர்களா ?" என்று கேட்டபடி வந்தார். அவரது அறைக்கு அழைத்தார். முன்பு கூறியபடி குளிர்ந்த பாதாம்கீர் வந்தது. அவரது பெயர் Dr . ராமசாமி பிள்ளை; நாகர்கோயிலைச் சார்ந்தவர். பாளையங்கோட்டை சித்த மருத்துவக் கல்லூரியில் படித்தவர் என்று அறிமுகப் படுத்திக்கொண்டார். எங்களைப் பற்றிக் கேட்டார். நாங்கள் எங்கள் தேடுதல் , தமிழ் மரபு அறக் கட்டளை ஆகியவை பற்றிக் கூறினோம். அவரும் ’MEDICAL MANUSCRIPT RESEARCH CENTRE’ என்ற அமைப்பை உருவாக்கி, இதுவரை சுமார் 300 கட்டுகள் வரை சேர்த்து இருப்பதாகவும் , மத்திய சுகாதாரத் துறையின் நிதி உதவி பெற்று இதைச் செய்து வருவதாகவும் கூறினார்.
அவருக்கு மருத்துவச் சுவடிகள் மட்டுமே தேவை என்றாலும் ,வேறு வகைச் சுவடிகளும் கிடைப்பதாகக் கூறி அப்போதுதான் திருவாசகச் சுவடிக் கட்டை எங்கள் கையில் கொடுத்தார். அவர்களிடமிருந்தும் சுவடிகளைப் பெறமுடியாது என்று தெரிந்து கொண்டு சோகத்துடன் சுவடியைத் திருப்பிக் கொடுத்துக் கிளம்பினோம்.
பிறகு அருகில் இருந்த உணவு விடுதியில் கிடைத்ததை உண்டு விட்டு அருகில் இருக்கும் திருவொற்றியூர் சென்றோம். அங்கே நல்ல தண்ணி ஓடையை நாடிச் சென்று ஊர்ப் பஞ்சாயத்தில் மாட்டிக்கொண்ட கதையை சொல்கிறேன் .
அன்புடன்
அண்ணாமலை சுகுமாரன்
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இந்தக்கட்டுரை எழுதப்பட்டது 03 May 2010
ஆனால் இன்றையவரையில் 2017 வரை இந்தக்கட்டுரையில் குறிப்பிடப்படும் மருத்துவர் ராமசாமி பிள்ளை சிறந்த நண்பராக விளங்கிவருகிறார் .
அவரது அன்பு மரக்கையாளாதது .
எனக்கு பல முறை இலவசமாக சித்தமருத்துவ சிகிச்சை அளித்துள்ளார் .
இத்தனைக்கும் காரணம் என்னிடம் அவர் கண்ட ஈடுபாடும் , உழைப்பும் தான் .இன்றைய வரை அவர் சிறந்த நண்பராக இருந்து வருகிறார் இப்படி எத்தனையோ
ஓலைச் சுவடிகளைக் கொடுத்ததுடன் இன்றைய வரை நண்பர்களாகத்தொடர்கின்றனர் .
படங்கள் பயணத்தில் எடுக்கப்பட்டவையே .ஆனால் இந்த கட்டுரைக்கு தொடர்புடையவை இல்லை . இவை சேகரித்த சுவடிகளில் சிலவற்றைக் காட்டுகிறது
அண்ணாமலை சுகுமாரன்
3/12/17
avatar
sugumaran
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 326
மதிப்பீடுகள் : 203

View user profile

Back to top Go down

Re: ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் !

Post by Dr.S.Soundarapandian on Tue Dec 05, 2017 8:43 pm

avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4609
மதிப்பீடுகள் : 2435

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் !

Post by பழ.முத்துராமலிங்கம் on Wed Dec 06, 2017 7:29 pm

@sugumaran wrote:
இந்தக்கட்டுரை எழுதப்பட்டது 03 May 2010
ஆனால் இன்றையவரையில் 2017 வரை இந்தக்கட்டுரையில் குறிப்பிடப்படும் மருத்துவர் ராமசாமி பிள்ளை சிறந்த நண்பராக விளங்கிவருகிறார் .
அவரது அன்பு மரக்கையாளாதது .
எனக்கு பல முறை இலவசமாக சித்தமருத்துவ சிகிச்சை அளித்துள்ளார் .
இத்தனைக்கும் காரணம் என்னிடம் அவர் கண்ட ஈடுபாடும் , உழைப்பும் தான் .இன்றைய வரை அவர் சிறந்த நண்பராக இருந்து வருகிறார் இப்படி எத்தனையோ
ஓலைச் சுவடிகளைக் கொடுத்ததுடன் இன்றைய வரை நண்பர்களாகத்தொடர்கின்றனர் .
படங்கள் பயணத்தில் எடுக்கப்பட்டவையே .ஆனால் இந்த கட்டுரைக்கு தொடர்புடையவை இல்லை . இவை சேகரித்த சுவடிகளில் சிலவற்றைக் காட்டுகிறது
அண்ணாமலை சுகுமாரன்
3/12/17
மேற்கோள் செய்த பதிவு: 1252588

avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8782
மதிப்பீடுகள் : 1989

View user profile

Back to top Go down

Re: ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் !

Post by sugumaran on Thu Dec 07, 2017 8:32 am
ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் - ௬ (6 )
--------------------------------------------------------------------------------------------------
திருநாரையூரே அன்று களைகட்டி விட்டது மக்கள் புத்தாடை அணிந்து சாரி சாரியாகக் கோவிலை நோக்கி வந்தவண்ணம் இருந்தனர்; அனைவர் முகத்திலும் ஆனந்தக் களை. இருக்காதா பின்னே? மாமன்னர் ராஜராஜ உடையார் அல்லவா அவர்கள் ஊருக்கு விஜயம் செய்ய உள்ளார்; அதுவும் அவர்கள் ஊர் பொள்ளாப் பிள்ளையார், நம்பியாண்டார் நம்பி தரும் பிரசாதத்தை அருந்தும் அற்புதத்தை, நாடெங்கும் அதிசயமாக பேசப்பட்டு வரும் அற்புதத்தை அல்லவா பார்க்க வருகிறார் !
நால்வர் பாடிய உலகு புகழும் தேவாரப் பாடல்களால் ஈர்க்கப்பட்ட ராஜ ராஜ உடையார் தொடர்ந்து அவற்றைத் தொகுக்க முயன்று வந்தார்; ஆனால் சில பாடல்கள்தான் கிடைத்தனவே தவிர ,அவருக்குப் பாடல்கள் முழுவதும் இருக்குமிடம் தெரியவில்லை. நம்பியாண்டார் நம்பியின் பெருமையை அறிந்த மன்னன், திருநாரையூர் வந்து தனக்கு உதவும்படி கேட்க்கத்தான் வருகைப்புரிந்தார் .
பிறகு என்ன நடந்தது என்று அடுத்தப் பகுதியில் காணலாம் .
------------------------------------------------------------------------------------------------
திருவொற்றியூரை அடுத்த டோல் கேட் எனும் பகுதியில் நல்ல தண்ணி ஓடக்குப்பம் என்ற இடத்தில் கண்ணன் என்பவரிடம் 50 சுவடிகள் இருப்பதாக எங்களது NMM பட்டியல் கூறியது. அந்தப் பகுதி முழுவதும் கடலை ஒட்டிய மீனவர் குப்பங்கள். நாங்கள் ஒவ்வொரு கிராமமாக நல்ல தண்ணி ஓடக்குப்பம் என்பதையும், கண்ணன் என்ப வரைப் பற்றியும் விசாரித்துக்கொண்டு, கடலை ஒட்டியே நடந்தோம். ஆனால் எங்கள் நடவடிக்கைகளைக் கண்காணித்தபடியே ஒரு கும்பல் எங்களுக்குப் பின்னால் வருவதை நாங்கள் உணரவில்லை. இப்படியே போய்க்கொண்டிருந்த போது இடையில் ஒரு கோயில் வந்தது; அங்கே சுமார் 20 நபர்கள் உட்கார்ந்து பேசிக்கொண்டு இருந்தனர் .நாங்கள் இவர்களைக் கேட்டால் இவர்களில் ஒருவருக்கு நிச்சயம் கண்ணன் என்பவரைப்பற்றித் தெரிந்திருக்கும் என்று எண்ணி ’ இங்கு நல்ல தண்ணி ஓடக்குப்பம் என்ற இடத்தில் கண்ணன் என்று யாராவது இருக்கிறார்களா ?’ என்றோம். உடனே அவர்களில் ஒருவர் ’இதுதான் நல்ல தண்ணி ஓடக்குப்பம், உட்காருங்கள்’ என்றார்; .நாங்களும் உட் கார்ந்தோம். அடுத்தகணம் எங்கள் பின்னால் வந்த சுமார் 10 பேர் ’தலைவரே ! இவர்கள் ஒரு மணி நேரமாக நம்ம கண்ணனைத் தேடிக் கொண்டு இருக்கிறார்கள் ’ என்று கூறியபடி அவர்களும் அந்தக் கூட்டத்தில் அமர்ந்து விட்டனர்.
எனக்கு உடனே புரிந்துவிட்டது, நாங்கள் மீனவர் பஞ்சாயத்தில் அமர வைக்கப்பட்டிருக்கிறோம் என்பது. சரிவரச் சமாளிக்காவிட்டால் விஷயம் விபரீதமாகலாம் என்பதும் புரிந்தது. உடனே நான் எங்களது ஓலை தேடும் படலத்தைப் பற்றி மிக விரிவாகக் கூற ஆரம்பித்தேன்.
பிறகு ’ நல்ல தண்ணி ஓடை என்று சொன்னார்களே, அந்த நல்ல தண்ணி ஓடை எங்கே இருக்கிறது ?’ எனப் பேசி அங்கே ஒரு சுமுக சிநேகித சூழ்நிலையை உண்டாக்கத் தலைப்பட்டேன். உடனே தலைவர் எனப் பட்டவர் அந்தக் கூட்டத்திலேயே இருந்த ஒருவரைக்காட்டி ’இவர்தான் கண்ணன்’ என்று கூறி எங்களை அதிசயப்படுத்தினார். ஏன் எனில் அவர் எங்களுடனேயே இதுவரை நடந்து வந்தவர்களில் ஒருவர். பிறகு ’ எங்கள் குப்பத்தில் வந்து எங்களில் ஒருவரைப்பற்றி நீங்கள் விசாரிக் கிறீர்கள்; என்ன விஷயம் என்பது தெரியாமல் நாங்கள் எப்படி அவரைக் காட்டிக் கொடுப்போம். பின்னால் அவருக்கு உங்களால் ஏதாவது தீங்கு வந்தால் நாங்கள்தானே பொறுப்பாவோம் ’ என்று தம் செயலுக்குக் காரணமும் கூறினர். அவர்களின் ஒற்றுமையை அவரி டமே பாராட்டிவிட்டு ‘எங்களைப் பார்த்தால் அப்படித் தீங்கு செய்பவர் கள் மாதிரியா தெரிகிறது?’ என அப்பாவித்தனமாக முகத்தை வைத்துக் கொண்டு கேட்டோம் . ’நாங்கள் தமிழ் அன்னையின் தொலைந்து போன இலக்கிய, அறிவுசார் நூல்கள் போன்ற ஆபரணங்கள் எங்காவது மதிப்பறியாமல் புதைந்து போய்விடக் கூடாதே என அவற்றைத் தேடுகி றோம்’ என இலக்கிய ரீதியில் பேசத்தொடங்கினோம் . ’கண்ணன் அவரிடமிருக்கும் சுவடிகளை எங்களுக்குத் தந்தால் அரசு மூலம் பரிசுகளும் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது’ என்றோம். உடனே தலைவர் ’ஏம்ம்பா, உன்னிடம் ஓலைச் சுவடிகளிருக்கிறதா?’ என்று கேட்டார் .
கண்ணன் பவ்யமாக ’ நான் இதுவரை ஓலைச் சுவடிகளை சன் டி வி யில்தான் பார்த்திருக்கேன் தலைவா ! ’ என்று சிரிக்காமல் கூறினார் .
நாங்களும் அதை நம்பியதுபோல் காட்டிக்கொண்டு எழுந்தோம்; உடனே தலைவர் ’இந்த இடத்தில் ஒரு நல்ல தண்ணீர் ஓடை நீண்ட நாட்களாக மக்களுக்குக் குடிநீர் தந்து வந்தது; .இப்போது அந்த ஓடையும் கடலால் மூழ்கடிக்கப்பட்டு விட்டது. ஆனால் இப்பவும் கடலில் அந்த இடத்தில் இருக்கும் தண்ணீர் நல்ல தண்ணீராக இருக்கிறது. இத்தனைக்கும் காரணம் இந்த அம்மன்தான்’ என்று நாங்கள் அமர்ந்திருந்த கோயிலைக் காட்டினார் .நாங்களும் அம்மனை நோக்கி ஒரு கும்பிடு போட்டுவிட்டு இடத்தைக் காலி செய்தோம் .
இவ்வாறு இந்த நிகழ்ச்சியை விரிவாகக் கூறக்காரணம் இந்த மாதிரி எங்களுக்கு அடிக்கடி பின்னாளிலும் நேர்ந்தது. விசாரித்து உண்மையான முகவரி கண்டுபிடிப்பது ஒரு நம்பிக்கை ஏற்பட்டால்தான் எளிதாகிறது. சென்னையில் இருக்கும் முகவரிகளில் பார்க்கும்போது நிறையக் கோயில்கள் இருக்கக் கண்டோம். திருவேட்டீஸ்வரர் கோயில் சன்னதி என முகவரி இருந்தது .நாங்களும் சன்னதிக்குச் சென்று E.O மற்றும் குருக்களைக் கேட்டோம். நாங்கள் என்ன நம்பியாண்டார் நம்பியா ? இறைவனிடம் நேரடியாகப் பேசுவதற்கு; ஆனால் அவர்களே அவர்கள் கோயில் நிலத்தை மீட்கப் பழைய ஆதாரங்களைத் தேடிக்கொண்டிருப்ப தாகக் கூறினர். பழைய சுவடிகள் எங்கே போனது எனத் தெரியவில்லை எனக்கூறி, ஏதாவது எங்களுக்குக் கிடைத்தால் கூறுங்கள் என்றனர். நாங்களும் அவர்கள் கொடுத்த காப்பியைக் குடித்துவிட்டு அடுத்த இடம் நோக்கி நகர்ந்தோம் .
எங்கள் பட்டியலில் இன்னும் அமைந்தகரை மாங்காளி அம்மன் கோயில், வடபழனி முருகன் கோயில், வடபழனி 100 ரோடு சித்தர்கள் மடம்,வடபழனி ஜெயின் கோயில், வடபழனி வேங்கீஸ்வரர் கோயில், ஜாபர்கான் பேட்டை கங்கை அம்மன் கோயில், புரசைவாக்கம் நவசக்தி விநாயகர் கோயில், புவனேஸ்வரி அம்மன் கோயில், பாடி திரு வாலேஸ்வரர் கோயில், கோயம்பேடு குசேலேஸ்வரர், செம்பியம் சுந்தர விநாயகர் கோயில், தி நகர் சிவவிஷ்ணு கோயில், அண்ணா நகர் எல்லைப் பிடாரி கோயில், வில்லிவாக்கம் அகஸ்தீஸ்வரர் கோயில் போன்றவற்றுடன் ஏன் வள்ளுவர் கோட்டம் பெயர் கூட இருந்தது. பொறுமையாக எல்லாக் கோயிலுக்கும் சென்றோம். அங்கு பொறுப்பான அதிகாரிகளை க் காத்திருந்து பார்த்தோம். ஆனால் எந்த இடத்திலும் சுவடிகளின் சுவடுகூடக் கிடைக்கவில்லை.
எப்படி ? பட்டியல் தவறாகத் தயாரித்து விட்டார்களா என்ற வினா எழுந்தது; ஆனால் அப்படியும் எண்ணமுடியாதபடி ஜாபர் கான் பேட்டை கங்கை அம்மன் கோயில்பூசாரி முன்று கட்டுகள் முன்பு இருந்ததாகவும், ஓர் ஆண்டுக்கு முன் யாரோ வாங்கிச் சென்றனர் எனவும் கூறினார். எனவே நாங்கள் தாமதமாகத் தேடி வந்திருக் கிறோம்; சுவடிகள் இருந்தபோது பட்டியல் எடுக்கப்பட்டிருக்கிறது என உணர்ந்தோம். எனவே கோயில்கள் நீண்ட நாட்களாக சுவடிகளைப் பாதுகாக்கும் இடமாக, saraswathi பண்டாரம் எனப்படும் பொது நூலக மாக, தேவாரம் திருவாசங்கள் தினசரி பாடும் இடமாக ஒரு காலத்தில் இருந்து வந்துள்ளன என்பது உறுதியாகத் தெரிய வந்தது. தேவாரத் திருமுறைகள் வேண்டும்போது பொது மக்கள் கோயில்களில் இருக்கும் மூலங்களிலிருந்து படி எடுத்துப் போகும் வழக்கமும் இருந்திருக்கிறது. ஆனால் இப்போது படிப்படியாகக் காலப் போக்கில் சுவடிகளும் மாய மாகி விட்டன. இப்போது இருக்கும் குருக்களும், அதிகாரிகளும் வம்பில் மாட்டிக்கொள்ளவேண்டாம் என மிக்க முன்ஜாக்கிரதையாக ’ஓலைச் சுவடியா, அப்படி என்றால் என்ன?’ என்று கேட்டு விடுகின்றனர்.
தருமமிகு சென்னையாயிற்றே ! வாழ்க்கையில் உஷாராகத்தான் இருக்கவேண்டி இருக்கிறது ;.ஆனால் நாங்கள் மதுரைக்குத் தெற்கே பாண்டிய நாட்டுப்பகுதியில் தேடும்போது வேறுவிதமான அனுபவங்கள் கிடைத்தன.
ஒரு வழியாக மாலை ஏழு மணிக்கு வேலையை முடித்து அறைக்குத் திரும்பினோம். .அடுத்தநாள் ஒரு பெரிய சுவடிக் குவியலை சுமார் 150 கட்டுகள், 20, 000 ஏடுகள் பார்க்கப் போகிறோம் எனத் தெரியாததால் சற்றுச் சோர்வுடனேயே அன்று படுத்தோம் .
அன்புடன்
அண்ணாமலை சுகுமாரன்
-----------------------------------------------------------------------------------------------
தொடர்ந்து பல நண்பர்களும் இதை படித்துவருவது மகிழ்ச்சியை அளிக்கிறது .இந்த நிகழ்வு நடந்தது 2010 இல் .
அதில் பங்கேற்றவர்கள் ,சுவடி அளித்தவர்கள் , இந்தத் தொடரை அப்போது தொடர்ந்து படித்தவர்கள் என பல நூறு பேர்கள் இந்த நிகழ்வுகளை முழுமையாக அறிந்தவர்கள் இன்னமும் இருக்கிறார்கள் .
அப்போது எடுத்தப் புகைப்படங்கள் பல நூறு இருந்தன எனதுகணினியில் அத்தகைய புகைப்படங்களைத் தேடிவருகிறேன் .
இப்போது கிடைக்கும் சில படங்களைப்போடுகிறேன் .அவைகள் நான் எடுத்தப் படம் தான்
இந்தப்பகுதி வெளிவந்த நாள் 22 May 2010
கடந்த மாதம் கூட புதுவையைஅடுத்த காலாப்பட்டில் கிடைத்த சுவடிகளின் படங்களை அடுத்தது தொடரில் வெளியிடுகிறேன் .
அண்ணாமலை சுகுமாரன்
6/12/17
avatar
sugumaran
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 326
மதிப்பீடுகள் : 203

View user profile

Back to top Go down

Re: ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் !

Post by sugumaran on Sun Dec 10, 2017 9:36 pm

ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் ! ௭ - (7 )
=========================================================================
நால்வர் பாடிய உலகு புகழும் தேவாரப் பாடல்களால் ஈர்க்கப்பட்ட ராஜ ராஜ உடையார் தொடர்ந்து அவற்றைத் தொகுக்க முயன்று வந்தார்; ஆனால் சில பாடல்கள்தான் கிடைத்தனவே தவிர ,அவருக்குப் பாடல்கள் முழுவதும் இருக்குமிடம் தெரியவில்லை. நம்பியாண்டார் நம்பியின் பெருமையை அறிந்த மன்னன், திருநாரையூர் வந்து தனக்கு உதவும்படி கேட்டார். நம்பியும் விநாயகரிடம் முறையிட்டார். அப்போது ஒலித்த அசரீரி, சிதம்பரம் நடராஜர் கோயிலில் தென்மேற்கு மண்டபத்தில் திருமுறைச் சுவடிகள் இருப்பதாகக் கூறியது. இன்றும் சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் ஆலயத்தின் மேற்கு உள்பிராகாரத்தில் ‘திரு முறை காட்டிய விநாயகர்’ எனும் சந்நிதி இருப்பதைக் காணலாம் .

நம்பியாண்டார் நம்பியுடன் சிதம்பரம்சென்ற மன்னர், தீக்ஷிதர்கள் வைத்த நிபந்தனையை நிறைவேற்றி, மண்டபத்தில் புற்றுக்களால் மூடிக்கிடந்த திருமுறைச் சுவடிகளை மீட்டு எடுப்பதற்குப் புற்றின்மேல் எண்ணெயூற்றி, புற்றைக் கரைத்து, அரித்தது அழிந்தது போக எஞ்சி யதை எடுத்தனர். அவற்றை நம்பியாண்டார் நம்பி ஒழுங்குபடுத்தி 7 திருமுறைகளாகத் தொகுத்தார். தொகுக்கப்பட்ட தேவாரப் பதிகங் களுக்குப் பண் அமைக்க விரும்பிய நம்பியும், அரசனும் திருஎருக் கத்தம்புலியூரில் எழுந்தருளியுள்ள சிவபெருமானை வேண்டினார்கள். "திருநீலகண்ட யாழ்ப்பாணர் மரபில் பிறந்த பாடினி என்ற ஒரு பெண்ணுக்குப் பண்களை அருளினோம். இத்தலத்திலுள்ள அப் பெண்ணை அழைத்துச் சென்று பதிகங்களுக்குப் பண்முறை அமைக்கச் செய்வீர்" என்று தெய்வவாக்குக் கிடைத்தது. மனம் மகிழ்ந்த மன்னனும், நம்பியும் அத்தலத்திலுள்ள அப்பெண்ணைக் கண்டறிந்து, தில்லை கனகசபைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு எல்லோரது முன்னிலை யிலும் அப்பெண்ணைக் கொண்டு தேவாரப் பதிகங்களுக்குப் பண் முறைகளை முறையாக அமைக்கச் செய்தனர். இவ்வாறு, திருமுறைகள் கிடைக்கக் காரணமாக இருந்ததால் பொள்ளாப் பிள்ளையாருக்கு ’திருமுறை காட்டிய விநாயகர்’ என்ற பெயரும் உண்டானது. இந்தப் பிள்ளையார் சந்நிதிக்கு எதிரில் ராஜராஜ அபயகுலசேகர சோழ மன்னனுக்கும், நம்பியாண்டார் நம்பிக்கும் சிலைகள் உள்ளன. மன்னர் ’திருமுறை கண்ட சோழன்’ ஆனார் .

இவ்வாறு பத்தாம் நூற்றாண்டில் தஞ்சை மன்னர் ராஜராஜ உடையார் உதவியுடன் நம்பியாண்டார் நம்பி மறைந்து கிடந்த தேவாரத் திரு முறைகளைத் தொகுத்து, அவற்றை மீண்டும் பல நூறு ஏடுகளில் படியெடுத்துப் பதிப்பித்து, அந்த தேவாரச் சுவடிகளை எல்லா சிவால யங்களிலும் இடம் பெறச் செய்தார். சொல்லப்போனால் இவரே முதல் சுவடிப் பதிப்புச் செய்தவராக இருக்கலாம்; ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஏடுகளைத்தேடி, தொகுத்து, அவற்றைத் தமிழ் நாடெங்கும் இருக்கும் ஆலயங்களில் வைத்து அவற்றை மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவந்தார். அவரும் தஞ்சை மன்னர் ராஜராஜ உடையாரும் இதை மட்டும் செய்யாதிருந்தால் நமக்குத் தேவாரம், திருவாசகம் கிடைத்திராது .
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------ஒரு வழியாக முடிவுக்கு வந்த சென்னைத் தேடுதல் !


கோயில்களுக்கு அடுத்தபடியாக எங்கள் பட்டியலில் பல ஜோதிடர் களும் இடம் பெற்றிருந்தனர். நாங்கள் அவர்களையும் விடாமல் தேடித் தேடிச்சென்று பார்த்தோம். ஆனால் நாடி ஜோதிடர்கள் யாரும் நாங்கள் அவர்களை நாடியபோதும் திறந்த மனத்துடன் எங்களை வரவேற்க வில்லை; எங்களைத் துரத்துவதிலேயே குறியாக இருந்தனர்.
.
ஒரு நாடி ஜோதிடர் எங்களைப் பார்த்ததும் ஏதோ சரியான கிராக்கி கிடைத்து விட்டது என அவசர அவசரமாகச் சாப்பிட்டு விட்டு வந்தவர், நாங்கள் சுவடி தேடி வந்திருக்கிறோம் என்றவுடன் முகம் மாறி, உடல் வேர்த்து ‘ எங்களிடம் எந்தவித ஓலைச் சுவடியும் இல்லை; தேவைப் படும் போதெல்லாம் வைத்தீஸ்வரன் கோவிலில் எங்கள் குருவிடம் கேட்டுவாங்கிப் பின் திருப்பி அனுப்பிவிடுவோம்" என்றார். எங்களை விரைவில் கிளப்புவதிலேயே குறியாக இருந்தார். ஒரு வழியாக நாங்கள் கிளம்பியதும் ’யாருயா இந்த மாதிரி ஆளுங்களை உள்ளே விட்டது ? இனி சரியாக விசாரித்து உள்ளே விடுங்கப்பா’ என இரைந்தது நாங்கள் தெருக்கோடி போகும்வரை எங்கள் காதில் ஒலித்தது. மனிதரில் இத்தனை விதமா? என வியந்தபடி அடுத்த இடத்திற்கு நடையைக் கட்டினோம் .

ஆனால் மதுராந்தகத்தில் ஓர் உண்மையான நாடி ஜோதிடரைப் பார்த்ததையும் அவரிடம் இருந்த சுவடிகள் அனைத்தையும் காட்டிய தையும், அத்தனையும் உண்மையான ஜோதிடச் சுவடிகளாக இருந்த தையும் பின்னால் விரிவாகக் கூறுகிறேன்.

முருகு ராஜேந்திரன் என்ற ஒரு முதிய ஜோதிடரை வடபழநியில் சந்தித்தோம்; எனக்கும் முன்பே அவரைத் தெரியும் . இரண்டு ஜோதிடப் பத்திரிக் கைகளை நடத்தி வருகிறார். அவர் எங்களை அன்புடன் வரவேற்றார். அவரது மகனும் (B.A.B.L ) ஜோதிடம் பார்த்து வருவதையும் கூறி அறிமுகப்படுத்தினார் .அவரிடம் இருக்கும் மிகப் பழமை வாய்ந்த ஜோதிட நூல்களை மின்னாக்கம் செய்து கொள்ள அனுமதி வழங்கினார்.

பிறகு வேறு சில இடங்களைப் பார்த்து அரும்பாக்கம் சித்த மருத்துவ ஆராய்ச்சி நிலையம் வந்து சேர்ந்தோம். அங்கே அலுவலகத்தினுள் சென்றதுமே கண்ணாடி அலமாரிகளில் அடுக்கடுக்காக ஒவ்வாரு தட்டிலேயும் அடுக்கப்பட்டிருந்த ஓலைச்சுவடிகள்தான் எங்கள் கவனத்தை முதலில் ஈர்த்தன; அத்தனை சுவடிகளை ஒரே இடத்தில் எதிர்பார்க்கவில்லை! சந்தோஷமும் இத்தனை அத்தனை இல்லை எங்களுக்கு ! அந்த நிறுவனம் மத்திய அரசின் சுகாதாரத் துறையின் கீழ இயங்குவது. நாடெங்கிலும் கிடைக்கும் சித்த மருத்துவ ஏடுகளைத் திரட்டிப் பாதுகாத்து வருகிறார்கள். அனைத்தும் அருமையான சித்த மருத்துவ நூல்கள்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே வள்ளுவரே இத்தனை சிறப்பாக, விளக்கமாக மருந்து என ஒரு அதிகாரமே யாத்திருக்கிறார் என்றால், அதற்கு எத்தனை காலம் முந்தையதாக நமது தமிழ் மருத்து வம் இருந்திருக்கும் ? அத்தனை தமிழர் தொல் அறிவும் இப்படி உலகால் அறியப்படாமல் அங்கீகாரம் இன்றி உறங்குவது ஏக்கத்தைத் தந்தது .

என்னசெய்வது, எதற்கும் காலம் கூடிவரவேண்டுமே என எண்ணிக் கொண்டே , அந்த நிறுவனத்தின் இணை இயக்குனர் Dr. ஜகஜோதிப் பாண்டியன் அறைக்குள் நுழைந்தோம். அவரும் எங்களை இன்முகத்து டன் வரவேற்றார். சுவையான பேச்சு சிறிது நேரம் சித்த மருத்துவத்தின் ஆழம் குறித்து நடந்தது. சுவடிகள் பாதுகாப்பு அவர்களின் பணிகளில் ஒன்று; எனவே சுவடிகளைக் கொடையாகப் பெறும் பேச்சுக்கே இட மில்லை. ஆனால் இதுவரை சுவடிகள் மின்னாக்கம் செய்யப் பட வில்லை என்பதறிந்து அவரிடம் அனுமதி கேட்டோம். அவர் முறைப் படி அணுகக் கூறினார் .

பின் அடுத்த தேடுதலை நோக்கிய பயணத்திற்காகச் சுவடிகளை ஏக்கப்பார்வை பார்த்தபடியே விடைபெற்றோம் .

பிறகு அஹோபில மடம் சார்பில் நடத்தப்பெறும் நரசிம்ஹ பிரியா பத்திரிக்கை அலுவலம்,கோடம்பாக்கம் மீனாக்ஷி கல்லூரி முதலிய இடங்களுக்கும் ஆசையுடன் சென்று வெறுங்கையுடன் திரும்பினோம் .
சில பள்ளிக்கூடங்களும் பட்டியலில் இருந்தன; அங்கும் சென்றோம்.

வடபழனியில் ஒரு வீட்டில் முகவரியில் இருக்கும் கார்த்திக் என்பவரின் கைபேசி எண்ணை மிகுந்த சிரமத்தின் பேரில் பெற்றோம். வீட்டில் இருப்பவர்களும் ஓலை அவரிடம் இருப்பதாக கூறியதும் எங்கள் ஆவல் எல்லை மீறியது .ஆனால் கார்த்திக்கிடம் 50 ஏடுகள் வடமொழி மந்த்ரம் அடங்கிய சுவடி இருப்பதாகவும், ஆனால் அவர் காஞ்சியில் வேலை செய்வதாகவும், வரும்போது தெரிவிப்பதாகவும் கூறினர்.
இவ்வாறு எங்கள் தேடுதல் நிர்ணயித்த ஐந்தாம் நாளை அடைந்தது.

பெரும்பாலும் எல்லா முகவரிகளையும் பார்த்துவிட்டோம்; பட்டியல் எப்படித் தயாரிக்கப்பட்டிருக்கும் என மெல்லப் புரிய ஆரம்பித்தது .

ஆனால் எதிர்ப்பார்த்த சில இடங்களில் கூடச் சுவடி இல்லாதது வியப்பை அளித்தது; உதாரணமாக Chennai fort museum முகவரி கூடப் பட்டியலில் இருந்தது . அங்கே தக்க அதிகாரிகளை அணுகிப் பார்த்த போது சுவடிகளே அங்கே இல்லை; இது சற்று வியப்பாகவே இருந்தது.

ஒருவாறு சென்னை மாவட்ட 5 நாள் தேடல் முடிந்தது; தொடர்ச்சியாகச் சுவடிகளைப் பார்த்தோம்; ஆனால் கொடையாகப் பெற முடியவில்லை. மின்னாக்கம் செய்ய அனுமதி கேட்டோம். எப்படி அணுகுவது என ஒரு தெளிவு பிறந்தது. ஒருவழியாக அடுத்த தேடுதல் திருவள்ளூர் மாவட்டம் என முடிவு செய்து அவரவர் ஊருக்கு அடுத்த பயணம் ஆயத்தப் படுத்திக்கொள்ளப் புறப்பட்டோம்.

அடுத்து திருவள்ளூரில் !

அன்புடன்
அண்ணாமலை சுகுமாரன்
======================================================================
இந்தக்கட்டுரை எழுதப்பட்டது மே 2010 இல் . அதேகட்டுரையைத்தான் மீண்டும் இடுகிறேன் .
இதை எழுதும் போது முதல் கட்டத தேடல்தான் முடித்திருந்தது .
அடுத்தக்கட்டத் தேடல் இருக்கும் என்ற உறுதி இல்லாது இருந்தது .
இந்தக்கட்டுரை வெளிவந்தப்பிறகுத்தான் இரண்டாம் கட்டத் தேடல் அனுமதி
கிடைந்தது .அதில் தான் அதிக ஏடுகள் கண்டுபிடிக்கப்பட்டு ஒப்படைக்கப்பட்டது .
அந்த இரண்டாம் கட்டத் தேடலில் நான் மட்டுமே பயணித்தேன்
இரண்டாம் கட்ட த் தேடல் அனுபவங்கள் இன்னமும் சரிவர நான் எழுதவில்லை .
சுவடிக்குவியலைப் பார்த்தபின் எழுதும் ஆசை அப்போது எழவில்லை .
இப்போது இடம் பெற்றிருக்கும் படங்கள் ,

முதல் மற்றும் இரண்டாம் கட்டத் தேடல் முடிந்து கண்டெடுத்தத் சுவடிகள் ஒப்படைத்தல் நடந்த பின் எங்கள் குழுவுக்கு நடைபெற்ற பாராட்டுவிழா
!
தேடிப் பாதுகாக்காவிட்டால் அடையும் சுவடிகளின் நிலை .


.
அண்ணாமலை சுகுமாரன்
10/12/17
avatar
sugumaran
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 326
மதிப்பீடுகள் : 203

View user profile

Back to top Go down

Re: ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் !

Post by sugumaran on Fri Dec 15, 2017 12:43 pmஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் !- ௮ (8 )
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
கரிவலம் வந்த நல்லூரில் வரகுணபாண்டியருடைய ஏட்டுச் சுவடிகள் எல்லாம் ஆலயத்தில் வைத்திருப்பதாக கேள்விப்பட்டு இரண்டாம் முறையாக போகலானேன் . தேவஸ்தானத்தின் தர்ம கர்த்தாவைத் தேடிச் சென்றபோது அவரைச் சேர்ந்த ஒருவரைக் கண்டேன் .

"வரகுணபாண்டியர் வைத்திருந்த ஏட்டுச் சுவடிகள் எல்லாம் ஆலயத்தில் இருக்கின்றனவாமே ?"

"அதெல்லாம் எனக்குத்தெரியாது என்னவோ வைக்கோற் கூளம் மாதிரிக் கணக்குச் சுருணையோடு எவ்வளவோ பழைய ஏடுகள் இருந்தன "

"வாருங்கள் போகலாம் "

"அந்தக் கூளங்களையெல்லாம் எனன செய்வதென்று யோசித்தார்கள் .ஆகம சாஸ்திரத்தில் சொல்லியபடி செய்து விட்டார்கள்"

"எனன செய்துவிட்டீர்கள் ? "

"பழைய ஏடுகளைக் கண்ட கண்ட இடங்களில் போடக் கூடாதாம் .அவற்றை நெய்யில் தோய்த்து ஹோமம் செய்துவிட வேண்டுமாம் ,

இங்கே அப்படித்தான் செய்தார்கள் "

"ஹா ! " என்று என்னையும் மறந்து விட்டேன்

--- என்சரித்திரம் (உ வே சா) பக்கம் 666நாங்கள் திருநெல்வேலி மாவட்டத்தில் ஓலைச்சுவடி தேடுதல் ஆரம்பித்தபோது முதலில் போன இடம் கரிவலம் வந்தநல்லூர் தான்.

யார் சொல்லியும் அங்கே போகவில்லை! ஆனால் ஏனோ சென்றோம்.

என்னவோ சங்கரன் கோயிலில் தங்கியிருந்த ஐந்து நாளும் அங்கே போக நேர்ந்தது .அதன் அருகில் இருந்த ஓர் ஊரில் நான்கு இடங்களில் இருந்து ஓலைகளைப் பெற்றோம். ஓரிடத்தில் அதிகச் சுவடிகள் கிடைத்தது.
ஆனால் கரிவலம் வந்த நல்லூரில் கோயிலுக்கு மட்டும் போக வில்லை; காரணம் வழக்கம் போல் நேரமின்மை.

ஆச்சரியம் என்னவென்றால் அப்போது எங்களுக்கு இந்த வரலாறு தெரியாது. இந்தச் செய்தியை நான் படித்ததே சில நாட்களுக்கு முன்தான் இந்த நூலைச் சில வருடம் முன் படித்தது உண்டு ஆனால் ஊரின் பெயர் முற்றிலும் நினைவில் இல்லை.

ஆனாலும் இன்னும் ஹோமத்தில் இடப்படாமல் பல ஓலைச் சுவடிகள் அங்கே கிட்டியது நம்பிக்கையைத் தூண்டுகிறது. ஏன் நேரே கரிவலம் வந்த நல்லூர் சென்றோம் ? ஏன் திரும்பித் திரும்பி அங்கே போக நேர்ந்தது ? இதற்கெல்லாம் பதில் இன்னொரு முறை அங்கே போனால்தான் தெரியும் போலிருக்கிறது !
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------

திருவள்ளூரில் !

பிப் மாதம் 13 ஆம் நாள் அன்று எங்கள் திருவள்ளூர் மாவட்டம் ஓலைச் சுவடிகள் தேடுதல் துவங்கியது. குறிப்பிட்ட நேரத்தில் நாங்கள் மூவரும் குறிப்பிட்ட இடத்தில் சந்தித்தோம். திருவள்ளூர் மணவாள நகர் நாங்கள் சந்திக்கக் குறிப்பிட்டிருந்த இடம். அங்கே இருந்து ஒரு மகிழ்வுந்து ஏற்பாடு செய்து கொண்டோம். திருவள்ளூர் மாவட்டம் 8 வட்டம் , 14 ப்ளாக் கொண்டது.

இதில் 650 கிராமங்கள் இருக்கின்றன. எங்களிடம் இருக்கும் NMM பட்டியலில் மொத்தம் 126 முகவரிகள் இருந்தன . நாங்கள் இந்த மாவட்டத்தையும் ஐந்து நாட்களில் முடிக்கத் திட்டமிட்டிருந்தோம் .


எங்கள்" ஓலைச் சுவடி ஊர்தி" பயணத்தைத் தொடங்கியது. ஒரு நீண்ட ஆற்றின் பாலத்தைக் கடந்த போது 'இதுதான் குசஸ்தலை ஆறு’ என்றதோடு அங்கிருந்த அகஸ்தியர் கோயிலையும் போகும்போதே பார்த்தோம் . அந்த ஆற்றின் கரையில் பல சிவன் கோயில்கள் இருப்பதைப்பின் அறிந்தேன். அங்கே இருந்த அகஸ்தியர் கோயிலை நோக்கி மனத்தில் ஒரு வேண்டுதலை விடுத்தோம்.
அகத்தியர் கோயில் இல்லாத மாவட்டமே தமிழ் நாட்டில் கிடையாது .ஆனால் அவர் வடக்கே கயிலாயத்தில் இருந்துதானே வந்ததாக வரலாறு கூறுகிறது எனவே திருவள்ளூர் வந்திருக்க வாய்ப்பு இருக் கிறது என்று எண்ணி இந்த மாவட்டத்தில் கையில் கொஞ்சமாவது ஓலைச் சுவடிகள் கிடைக்க அவர் அருள் வேண்டினோம். முதலில் திருவாலங்காடு பிளாக் பாதையை தேர்ந்தெடுத்து எங்கள் பயணம் அமைந்தது. வழக்கம் போல் பட்டியலில் இருந்த பெயர்கள் சில சமயம் கொஞ்சம் குழப்பத்தை அளித்தன.

ஒரு பிளாக் என்று கொள்ளாமல் போகும் வழியில் இருந்த ஊர்க ளையும் பார்த்துக் கொண்டு சென்றோம். அலைந்து திரிந்து முகவரி களைத் தேடியபோதும் இல்லை என்ற பதிலையே பெறமுடிந்தது.
அம்மையார் குப்பம், அருங்குளம், திருமுல்லை வாயில் எனப் பார்த்த ஊர்கள்; ஊர்கள் வரிசைதான் நீண்டன .
A ARUMUGAM
AMMAIYARKUPPAM
AMOIL TAMIL SANGA ST,
TIRUVALLUR DIST
என்று இருந்த முகவரியைத்தேடி ,அலைந்து ஓய்ந்த போதுதான் தெரிந்தது அது அறநெறி தமிழ்ச் சங்க தெரு என்று! இப்படிப்பட்ட குழப்பங்கள் நிறையவே இருந்தன.

அருங்குளம் எனும் சிற்றூர் எங்களை வியப்பில் ஆழ்த்தியது .எங்கள் பட்டியல்படி சிவன் கோயில், சமணர் கோயில் என இரண்டு முகவரி கள் இருந்தன. ஆனால் சமணர் கோயில்தான் எங்களை வியப்பில் ஆழ்த்தியது . அருகில் சென்ற போது ஏனோ திருவதிகை சிவாலயம் நினைவு வந்தது; உள்ளே சென்று பார்த்தால் மிகப்பெரிய பிரகாரங்கள், மண்டபங்கள் நடுவில் அமைத்த கருவறை, உள்ளே சென்று பார்த் தாலோ சமணர்களின் தீர்த்தங்கரர் வடிவம். இத்தனை பெரிய கருங்கல் பாறைகளால் அமைந்த சமணக் கோயிலை நான் இதுவரைக் கண்ட தில்லை; ஆனால் நின்று பார்க்க நேரம் இல்லாததால் மீண்டும் ஒரு முறை இதைப் பார்க்கவென்று வரவேண்டும் என உறுதி எடுத்துக் கொண்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தேன். அங்கே இருந்த அகஸ் தீஸ்வரர் கோவிலையும் தொலைவில் இருந்தே ஒரு பார்வை பார்த்து நகர்ந்தோம்.

இந்த மாவட்டப் பட்டியலிலும் நிறையக் கோயில்கள் இடம் பெற்றி ருந்தன; எதையும் விடமனமில்லாமல் கோயில் கோயிலாக அலைந் தோம் . திருமுல்லைவாயில் கோயிலிலே வெள்ளெருக்கு வேர்களினா லேயே கருவறைத் தூண்கள் அமைக்கப்பட்டிருந்ததைக் கண்டோம்; குருக்கள் உள்ளே இருந்ததால் அங்கே செல்ல நேர்ந்தது .

பெரியபாளையம் கோயிலுக்குச் சென்று ஓலைச் சுவடிகளைப்பற்றிப் புலன்விசாரணை செய்து விட்டு இல்லை என்றதும் கிளம்பினோம்; கோயில் அதிகாரி "இருந்து அம்மனை தரிசித்துவிட்டுப் போங்களேன் " என்று கூறியபோது நேரமில்லை எனக் கூறி விரைந்த எங்களை வியப் பாகவே பார்த்தார் அந்த அதிகாரி. எனன செய்வது எங்கள் அவசரம் எங்களுக்கு; ஐந்து நாளில் 126 முகவரியைப் பார்க்க வேண்டுமே !

திருநின்றவூர் என்ற அழகிய ஊர் அந்த ஊரின் ஆலயம் மிகப் பழமை வாய்ந்தது; சிறந்த வைணவத் தலம். அங்கும் அப்படிதான் "என்னைப் பெற்ற தாயார்" எனப் பெயர் பெற்ற அந்தப் பிராட்டியையும் பார்க்க நேரம் இல்லாமல் விரைந்தோம்; வீட்டோடு மாப்பிள்ளையாக அங்கேயே தங்கிவிட்ட பக்தவத்சலனாரையும் பார்க்க நேரமில்லை.

திருமழிசைக் கோயில் எங்கள் பட்டியலில் இல்லை; எனவே உள்ளே செல்லும் பேறும் கிட்டவில்லை. கோபுர தரிசனம் மட்டுமே கிடைத்தது. பிராயம் பத்து என ஓர் ஊர்; திருமழிசை ஆழ்வார் 10 வயதுவரை அங்கு இருந்ததால் அந்தப் பெயராம் அந்த ஊருக்கு. அங்கும் இந்தக் கதை சொல்ல வந்த பெண்மணியிடம் பேச நேரம் இல்லை என ஓட்டம்.
திருவாலங்காடு இருமுறை செல்ல நேர்ந்தது ஆனாலும் கோயிலின் மதில் சுவரை மட்டுமே தரிசித்தோம். அத்தனை வேகம் எங்கள் குறி யெல்லாம் ஓலை சுவடியிலே ! திருவேற்காடு சென்றோம், அங்கேயும் அப்படித்தான்; கோயில் அருகில் கூடச் செல்லவில்லை. ஓலைச் சுவடி இல்லாத இடத்தில் எங்களுக்கு என்ன வேலை என்பது போல் ஒரே ஓட்டம்தான்; எப்படியாவது இந்த மாவட்டத்தில் ஓலைச் சுவடிகளைப் பெற்றிடவேண்டும் என்னும் துடிப்பு எங்கள் அனைவரிடமும் இருந்தது.
அங்கே ஐயப்ப சாமி மடம் என ஒரு முகவரி இருந்தது. எங்களுக்கு உண்மையிலேயே அதன் முக்கியத்துவம் தெரியாது. வழக்கம் போல் விசாரிப்புக்கு உள்ளே சென்றோம். சென்றதும் வியப்படைந்தோம் ! தஞ்சைப் பெருவுடையாருக்குக் குடமுழுக்கு நடத்திவைத்த வயது எண்பதுக்கு மேல் ஆகிப் பழுத்த ஞானியாக விளங்கும் ஐயப்ப சுவாமி கள் அங்கே அனைவருக்கும் ஆசி வழங்கிக் கொண்டிருந்தார் .
நாங்களும் அருகில் சென்று எங்கள் ஓலைச் சுவடி தேடுதல் பற்றிப் பணிவுடன் கூறினோம் ; எங்கள் மூவரையும் தலையில் கைவைத்து வெற்றி பெற வாழ்த்தினார். ஆனாலும் அங்கேயும் ஓலைச் சுவடி கிடைக்காதது கொஞ்சம் வருத்தம்தான். ஆனால் அங்கே ஆசியுடன் சுவையான சாப்பாடும் எங்களுக்குக் கிடைத்தது. சுவாமிகளின் அன்புக் கட்டளையைத் தட்ட இயலாமல் அங்கே கிடைத்த உணவை உண்டு அடுத்த இடம் நோக்கி புறப்பட்டோம்.

திருத்தணி வட்டம் ராமன்சேரி என்ற கிராமத்தில் ஒரு வித்தியாசமான கோயிலை கண்டோம். சிவனையும் விஷ்ணுவையும் அருகருகே அமைத்து இரண்டையும் சேர்த்து வழிபடும் வியப்பினை அங்கே கண்டோம். சிவனும் விஷ்ணுவும் ஒரே கோயிலில் வேறு வேறு இடங் களில் இருப்பதைக் கண்டதுண்டு. சிவனும் விஷ்ணுவும் பாதி பாதி உடலாக அமைத்த ஓருருவம் கொண்ட சங்கர நயினார் கோயிலும் கண்டதுண்டு. ஆனால் சிவனையும் விஷ்ணுவையும் அருகருகே நிறுத்தி வழிபடுவதை இங்குதான் கண்டேன்.

இப்படியாக எங்கள் தேடல் அலைச்சல் முதல் சுவடிக்கட்டுகளைப் பெறப்போகும் பழவேற்காடு போகும் வரை நீண்டது .அதன் பிறகு தொட்டதெல்லாம் வெற்றிதான். பழவேற்காட்டில்தான் எங்கள் தேடுதலின் முதல் வேட்டை கிடைத்தது. அந்த விபரம் அடுத்த பதிவில் பார்ப்போம்.

அன்புடன்
அண்ணாமலை சுகுமாரன்
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------


வழக்கம் இந்தக்கட்டுரை 2010 எழுதப்பட்டது எனக் கூறவிரும்புகிறேன் .
அப்போது அருங்குளம் என்ற ஊரில் கண்டசமணர்கள் கோயில் போல பலவற்றைத் தொடர்ந்து சென்று பார்த்தேன் .இன்றுவரை அத்தகைய சமணர் கோயில் பயணம் தொடர்கிறது .சமீபத்தில் கூட உப்புவேலூர் எனும் சமணததலம் சென்றுவந்தோம் .
அனுபவங்கள் சேர்ந்து கொண்டே வருகிறது .
தேடலும் தொடர்கிறது !
பயணங்களும் நீள்கிறது !
மூப்பைத்தேடி , அதை முடித்தவர்கள் அனுபவங்களை சேகரிக்க , 66 வருடங்களாக இதே ஆய்வில் தொடந்து வரும் வாசி யோகி முத்துசாமியுடம் (92)பயணித்தோம் .
அப்போது ஒரு ஓலைச் சுவடி கட்டும் பழனியில் பெற்றேன் . அது சுமார் 180 ஏடுகள் கொண்டது .ரோமரிஷி எழுதியது .
அதை சுத்தம் செய்து , எண்ணெயிட்டு மையிட்டு பத்திரப்படுத்தி அதை படிக்கச் செய்ய வேண்டும் .
இது பட்டியல் படி படித்துத் தேடியது இல்லை . நண்பர்களின் தகவல் மூலம் பேற்றது .
கடந்த சில வருடங்களாக நண்பர்களின் , பழகிய யானைகள் போல் , முன்பே கொடையளித்த பலர் தரும் தகவல் மூலமே பெறப்பட்டது .
கீழே உள்ள படம் இரண்டுநாட்கக்கு முன் பழனியில் பெற்ற ரோமரிஷியின் சுவடியுடையது .
அண்ணாமலை சுகுமாரன்
15/12/17
avatar
sugumaran
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 326
மதிப்பீடுகள் : 203

View user profile

Back to top Go down

Re: ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் !

Post by T.N.Balasubramanian on Fri Dec 15, 2017 2:40 pm

அருமை .
தமிழின் அருமை சிலருக்கே தெரியும் /புரியும்.

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22246
மதிப்பீடுகள் : 8287

View user profile

Back to top Go down

Re: ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் !

Post by sugumaran on Wed Dec 20, 2017 8:54 am

ஓலைச்சுவடிகளைத தேடிய படலம் ! - ௯ (9 )
ஓலைச் சுவடி தேடல் என்பது பன்முகம் கொண்டது. சரியான சுவடியைச் சரியான நபர் இடத்தில் இருந்து பெறுதல் (acquire ) என்பது தொடக்கம்; அதன் பிரதிகளைத் திரட்டல் ( collect ) - ஓலையிலும் தாளிலும் படிகள் கிடைக்கின்றனவா என முயற்சி மேற்கொள்ளுதல், அதுபற்றிய பிற தொடர்புடைய தகவல்களை நூலகப் பதிவுகள் (cataloque ) போன்றவற்றில் இருந்து பெறுதல் அடுத்த தளமாகும்.
.
சுவடியின் வரலாறு என்பது இதில் முக்கியமானது. மூலமா, படியா என்பதுடன் தனி நபர், மடம், கல்வியாளர் என யாரால் கையாளப் பெற்றது என்ற நெறியும், யாரை எட்டியது, யாரால் ஏற்கப்பட்டது ( reach and reception ) என்பன இதனால் புலப்பட்டு அச்சுவடிக்கான வரவேற்பைப் பற்றி அறிய முடியும்.
விருப்பம், ஆர்வம், முயற்சி என்பதுடன் ஆய்வு நுணுக்கமும், அறிவுத் திறனுமே இச்சுவடி தேடல் உழைப்புக்கு உறுதுணையாகும் .
- டாக்டர் அன்னி தாமஸ்
(பதிப்பியல் எண்ணங்கள் )

பழவேற்காட்டில்!
சென்னையைப் போல் பொலிவுடன் விளங்கி இருக்கவேண்டிய பழவேற்காடுவரலாற்றின் ஒரு சிறிய மாறுபாட்டால் இன்று அது ஒரு மீன்பிடிகிராமமாக அத்தனைப பரபரபின்றிக் கழிமுகங்களும் காடு நிலம்,ஏரி, கழிமுக நீர் என நாலா பக்கமும் விதவிதமாக விரிந்து கிடக்கிறது . இங்கிருக்கும் ஏரி இந்தியாவின் இரண்டாவது பெரிய உப்பு நீர் ஏரியாகும்.

பல இடங்களில் சுற்றி அலைந்தபடியே பழவேற்காடு வந்து சேர்ந்த போது மதியம் மணி இரண்டு ஆகிவிட்டது. ஆலய வழிபாடு செய்ய வில்லை என்றாலும் வயிற்றுக்கு வழிபாடு செய்தாக வேண்டுமே ! உணவு படைத்தல் என்றுதானே கூறுகிறோம். அங்கும் இங்கும் உணவு தேடியலைத்து ஒருவழியாக எதோ கிடைத்த உணவை அள்ளிப் போட்டுக் கொண்டு புறப்பட்டோம். புலிகாட் எனப்படும் பழவேற் காட்டில் எங்கள் பட்டியல்படி ஆறு முகவரிகள் இருந்தன.
B. Haridaas
PULICAT - 601205
என்று ஒரு முகவரி; நல்ல வேளையாக மீனவர் குப்பங்களைத் தவிர்த்துப் பழவேற்காட்டில் ஒரு சில தெருக்களே இருந்தன.
கிராமங்களில் முகவரி தேடும்போது நபரின் தந்தை பெயரோ அல்லது ஜாதியோ தெரிந்து விட்டால் கண்டுபிடிப்பது சுலபம். ஜாதி தெரிந்து விட்டால் அந்த ஜாதியினர் இருக்கும் தெருவை சுலபமாக்க் காட்டி விடுவார்கள்; அல்லது அந்த ஜாதியை சேர்ந்த வேறு யாராவது ஒருவரைக் கை காட்டுவார்கள்.முதலெழுத்து மட்டும் இருக்கும் போது நாங்கள் அதற்கு விரிவுரை தருவோம். B என்றால் பாலசுப்ரமணியமாக இருக்கலாம்; பாஸ்கராக இருக்கலாம் எனச் சொல்லிக்கொண்டே போவோம். வழி சொல்பவரும் ஏதாவது தெரிந்த பெயர் வந்தால் நாங்கள் கூறும் பட்டியலின் ஓட்டத்தைச் சற்று நிறுத்தி விபரம் கூறுவார். ஜாதிக்கு இன்னும் கிராமங்களில் அதிக முக்கியத்துவம் இருக்கிறது.
ஒருவாறு ஹரிதாஸ் வீட்டை கண்டுபிடித்தோம். வீட்டின் கதவோ மூடப்பட்டிருந்தது ; " சார் சார் " என்று கதவைத் தட்டிக்கொண்டு நின்றோம். கதவைத் திறந்து ஒரு பெண்மணி வெளியில் வந்தார்;
நாங்கள் நிறைய மார்க்கெட்டிங் தந்திரங்களைக் கையாளுவோம்; முதலில் அதிக நேரம் நம்மை இருக்க அனுமதித்தால்தான் நம்மால் அதிக விபரம் அவர்களிடம் இருந்து பெறமுடியும். எனவே சீராகப் பேசி நல்ல எண்ணம் பெற முயல்வோம் .
"அம்மா நாங்கள் தஞ்சைப் பலகலையில் இருந்து ஓலைச் சுவடி தேடி வந்திருக்கிறோம் ; சார் இல்லையா ? உங்களிடம் உங்களிடம் சில ஓலைச் சுவடிகள் இருப்பதாகக் கேள்விப்பட்டோம்" என்று கூறியபடி அங்கிருந்த திண்ணையில் அமர்ந்து விட்டோம். அந்த அம்மையார் "ஆமாம், இருக்கிறது" என்றது எங்கள் சோர்வு போனஇடம் தெரிய வில்லை; சற்று நிமிர்ந்து உட்கார்ந்தோம். "ஐயா எங்கே ? " எனக் கேட்ட போது அவர் கணவர் தலைமை ஆசிரியராக அருகில் இருக்கும் பள்ளியில் வேலை செய்வதாகக் கூறினார். எங்கள் பேச்சைச் சற்றே வளர்த்தோம்; அருகில் இருக்கும் கோயில்கள், திருவிழாக்கள் முதலி யன பற்றிப் பேசி அவரிடம் எங்கள்பால் ஓர் ஈடுபாட்டினை உருவாக் கினோம். அம்மையார் உடனே “களைப்பாக இருக்கிறீர்களே, மோர் வேண்டுமா?’ என்றார்; இது அவர்களிடம் இன்னும் சற்று நெருங்க ஒரு வழி ! "இருந்தால் கொஞ்சம் தாருங்கள்; தாகமாத்தான் இருக்கு" என்றோம். மோர் குடித்தவுடன் ”ஐயா கைபேசி எண் தந்தால் அவருடன் பேசுகிறோம் ” என்றோம். பொதுவாக அவர்களின் நல்ல எண்ணத் தையும், நம்பிக்கையையும் பெறாமல் கைபேசி எண் கேட்கக் கூடாது. அப்படி அவசரப்பட்டுக் கேட்டால் ”எனக்குத் தெரியாது” என்ற உஷா ரான பதில் உடனே கிடைத்துவிடும் . இதில் மிக நுட்பமான மன விளை யாட்டுக்களைப் பயன்படுத்த வேண்டும். அந்த அம்மையாரும் மனமு வந்து இப்போது ஒத்துழைக்கும் நிலையில் இருந்தார். அவரே அவரது கைபேசியில் அவரது கணவரின் எண்ணைப் போட்டு ”இதில் நீங்களே பேசுங்கள்; இதில் பேசினால் அவர் உடனே எடுப்பார்” என்று கூறினார். அதே சமயம் எங்களிடம் எண்ணைக் கொடுக்காமல் தவிர்த்த சாமர்த் தியமும் புரிந்து விட்டது.கொடுத்தால் ’ஏன் எண்ணைக் கொடுத்தாய்?’ என அவர் கணவர் கோபிக்கும் சாத்தியக்கூறு உண்டு. நம்ம கிராமத்துத் தாய்மார்கள் மிகவும் சாமர்த்தியம்; அதுவும் கணவர் நலம் காப்பதில் மிகுந்த உஷார் !
முனைவர் மணி பேசினார். அவர் தான் வர இரவு ஆகிவிடும் என்றும், தன்னிடம் ஓலைச் சுவடிகள் இருந்தது உண்மைதான் எனவும், சில ஆண்டுகளுக்கு முன் கணக்கெடுத்தபோதே அதைப் பொன்னேரி கிளை நூலகரிடம் தந்துவிட்டதாகவும் கூறினார்.
"ஐயா இப்போது வேறு சுவடிகளே இல்லையா ? அம்மா எதோ சுவடி இருப்பதாக கூறினார்களே" எனப் பணிவுடன் கேட்டோம்.
"ஆமாம் இருக்கிறது ஆனால் அது உங்களுக்கு பயன்படாது. அது கணக்கு வழக்குப் பற்றிய ஓலைச் சுவடி"
.
"அதைப் பார்க்கலாமா ? "
"அதைப் பார்த்து நீங்கள் என்ன செய்யபோகிறீர்கள்? இதை முன்பே பார்த்துவிட்டு வேண்டாம் என்று சொல்லிப் போய்விட்டார்கள் "
.
"வந்துவிட்டோம்; எதற்கும் பார்க்கிறோமே? "
"இல்லை; அது எங்கே இருக்கிறது என்று தேடமுடியாது. அது நான் வந்துதான் செய்யவேண்டும்; நீங்கள் போய் வாருங்கள் "
அம்மையாரின் முகத்தில் அதன் இருப்பிடம் தெரியும் என்ற குறிப்பும் தெரிந்தது; ஆனாலும் கணவர் கூறிவிட்டாரே இனி எப்படிக் காட்டுவது என்ற விசனமும் தெரிந்தது. "சரி மீண்டும் அவர் இருக்கும் போது வாருங்கள், நான் காட்டுகிறேன் " என்று கனிவுடன் கூறினார். அந்த சகோதரிக்கு நன்றி கூறி அந்த இடத்தைக் காலி செய்தோம்; ஆனால் பொன்னேரி சென்று கிளை நூலகரைப் பார்க்க வேண்டும் என உறுதி செய்து கொண்டோம்.
அடுத்தமுகவரி
K.GANESAN
PULICAT 601205 என்பதுதான் .
எங்கள் அதிர்ஷ்டம் அவர் வீட்டில் இருந்தார். இவர் பழவேற்காட்டில் இருக்கும் நூலகத்தில் பகுதி நேரப்பணி செய்கிறார்.
அவரிடம் பேசி நடப்பாகிப் பொன்னேரிக் கிளை நூலகர் கைபேசி எண் பெற்றோம். கணேசனும் அவர் வீட்டில் இருந்த இரண்டு கட்டு ஓலை சுவடிகளைப் பொன்னேரி நூலகரிடம் கொடுத்ததாகக் கூறினார்.
நாங்கள் அந்த "யானை பிடிக்கும் தந்திரத்தை" கையாண்டு அவரையும் காரில் தூக்கிப் போட்டுக்கொண்டோம். அவரே பழவேற்காட்டில் இருக்கும் இதர முகவரிகளுக்கும் அழைத்துப் போனார். பாவப்பட்ட பழவேற்காட்டு மக்கள் எங்கள் கேள்விக் கணைகளில் இருந்து தப்பித் துக் கொண்டனர். முகவரி கிடைக்கும் வரை எதிரில் அகப்படும் பொது ஜனத்தை அப்படிக் கேள்விகள் கேட்டுப் பாடாகப் படுத்தி விடுவோம். எங்களுக்கு ’டீ’ எல்லாம் வாங்கிக் கொடுத்துத் தப்பித்துக் கொண்டவர்களும் உண்டு.
கணேசன் எங்களைக் கந்தசாமி குருக்கள் என்பவர் வீட்டுக்கு அழைத்துச் சென்றார். அங்கிருந்த ஒரு முதியவர் தம்மிடம் இருந்த ஓலைச் சுவடிகளை சுமார் ஆறு ஆண்டுகளுக்கு முன் புதுச்சேரி பிரெஞ்சு நிறுவனத்திற்குக் கொடுத்துவிட்டதாகக் கூறினார். ஆனால் அவர் வீட்டில் இன்னும் ஆகமங்களைப் பற்றிய ஏராளமான வடமொழிப் புத்தகங்களைச் சேர்த்து வைத்திருக்கிறார். அவற்றை எங்களுக்குக் காட்டினார். நாங்கள் மின்னாக்கத்தின் பயன் பற்றி அவருக்கு எடுத்துக் கூறினோம். அவரும் அவற்றை மின்னாக்கத்திற்குத் தர சம்மதம் தெரிவித்தார்; ஆனால் அங்கேயே வந்து செய்ய வேண்டும் என்றார்.
வேறு பல இடங்களுக்கு கணேசன் அழைத்து சென்றார். பெரும்பாலான இடங்களில் யாரும் இல்லை; ஓலையும் கிடைக்கவில்லை.
பிறகு கணேசனிடம் பெற்ற கைபேசி எண் வைத்துப் பொன்னேரிக் கிளை நூலகர் போனிக் பாண்டியனிடம் பேசினோம். .அவரிடம் எங்களை அறிமுகப் படுத்திக்கொண்டு அவரைப் பார்க்க இப்போது பொன்னேரி வருவதாகக் கூறினோம்; அவரும் வரச் சொன்னார். ஆனால் அவரிடம் பழவேற்காட்டில் இருந்து பெற்ற ஓலைச் சுவடிகளைப் பற்றிக் கேட்கவில்லை; அவரை நேரிலேயே பார்த்துக் கேட்கலாம் என்று முடிவு செய்தோம்.
விரைவாகப் பொன்னேரி சென்றோம்; ஒருவழியாக நூலகம் சென்றால் அங்கே நூலகர் போனிக் பாண்டியன் இல்லை. எங்களுக்கு ஏமாற்றம் ! அவரது உதவியாளர்தான் எங்களை வரவேற்று ” நூலகர் அவசர வேலையாக வெளியே சென்றுவிட்டார்; நீங்கள் வந்தால் வேண்டிய உதவி செய்யச் சொன்னார்” என்று கூறி காபி ஆர்டர் செய்தார் .
நாங்கள் பழவேற்காட்டில் திரு.போனிக் வசம் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படும் ஓலைச் சுவடிகளைப் பற்றிக் கூறி அவரை அவசியம் பார்க்கவேண்டும் என்றோம். அவரும் அப்படி இங்கே எந்த ஒலைச் சுவடியும் இல்லையே என்று கூறி நூலகருக்குக் கைபேசியில் பேசினார் .
போனிக் பாண்டியனும் போனில் எங்களிடம் பேசும்போது "என்னிடம் எந்த ஓலைச் சுவடியும் இல்லையே, அப்போதே திருப்பித் தந்து விட்டேனே "என்று கூறினார். என்னடா இது இந்த ஓலை நம்மிடம் இப்படிக் கண்ணாமூச்சி காட்டுகிறதே என சற்று மயங்கினோம்; ஆனாலும் எப்படியும் பெற்றே தீருவது என முடிவு செய்து சில அதிரடித் திட்டங்களை வகுத்தோம்; பிறகு பொன்னேரியில் இருந்த சில முகவரிகளைப் பார்க்க ஆரம்பித்தோம் .
மறுநாள் அந்த ஓலைச் சுவடிகளை எப்படிக் கையில் வாங்கினோம் என்பதை அடுத்த இழையில் பார்ப்போம்.
அன்புடன்
அண்ணாமலை சுகுமாரன்
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
2010 இல் நடைபெற்ற இந்தத்தேடலைத் தொடர்ந்து எனக்கு எந்த வித அதிக முயற்சி இல்லாமல் நண்பர்கள் சிலர் மூலம் தொடர்ந்து சுவடிகள் கிடைத்துவந்தன .தமிழ் சித்தர்கள் ஓலைச் சுவடிகள் ஆய்வு நிறுவனம் என்ற பெயரில் ஒரு அறக்கட்டளை ஆரபித்து அதன் மூலம் பெற்று வருகிறேன் .கிடைத்த சுவடிகள் பிரெஞ்சு நிறுவனம் , பிரிட்டிஷ் நூலகம் இவைகள் வாயிலாக அப்போதோதே சுத்தம் செய்து மையிட்டு மின்னாக்கம் செய்யப்பட்டு சுவடிகள் என்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது .
கடந்த மூன்று நாட்களுக்கு முன் பழனியில் பெற்ற ரோமரிஷியின் சுவடியைத் தெரிவித்திருந்தேன் .
கிழேஉள்ளப்படம் மூன்று மாதங்களுக்கு முன் புதுச்சேரிக்கு அண்மையில் உள்ள காலாய் பட்டு என்னும் இடத்தில் இருந்து நண்பர் தியாக ராஜன் என்பவர் மூலம் இரண்டு கட்டுகள் கிடைத்தது .அதில் ஒரு கதைப்பாடல்களும் சிற்றிலக்கியமும் உள்ளதாகத் தெரிகிறது .விரைவில் அதன் விளக்கங்கள் வெளியாகும் .
அடுத்தபடம் சென்னைக்கு அருகில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க பழவேற்காடு
அருகில் உள்ள ஏரியின் அழகியாக காட்சி
அண்ணாமலை சுகுமாரன்
19/12/17
avatar
sugumaran
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 326
மதிப்பீடுகள் : 203

View user profile

Back to top Go down

Re: ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் !

Post by பழ.முத்துராமலிங்கம் on Wed Dec 20, 2017 11:13 am

ஐயா உங்கள் ஓலைச்சவடிகள் தேடுதல் படலத்தை படிக்கும்
போது உங்களின் உழைப்பின் உறுதி ,சிரமம், உற்சாகம் அலைகழிப்பு
அனைத்தும் தென்படுகிறது.
பிரமிப்பு அதிகரிக்கிறது.
உங்கள் பதிவுகள் அற்புதம் உங்கள் பணி தொடரட்டும்.
நன்றி
ஐயா
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8782
மதிப்பீடுகள் : 1989

View user profile

Back to top Go down

Re: ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் !

Post by sugumaran on Fri Dec 22, 2017 8:20 pm
ஓலைச் சுவடிகளைத தேடிய படலம் - 10சுவடிகளில் இருக்கும் எழுத்துக்கள் செவ்வனே தெரிவதற்காகச் சுவடியில் வசம்பு, மஞ்சள் , மணத்தக்காளி இலைச் சாறு அல்லது ஊமத்தை இலைச்சாறு ,மாவிலைக் கரி ,தர்பைக் கரி முதலியவற்றைக் கூட்டிச் செய்த மையை அதில் தடவுவார்கள். அந்த மை எழுத்துக்களை விளக்கமாகக் காட்டுவதோடு கண்ணுக்கும் குளிர்ச்சியைத் தரும் .

இங்ஙனம் சுவடி படிக்கத்தொடங்கும் முன் மை தடவுவதால் அக்ஷராப்பியாசத்தை "மையாடல் விழா" என்று சொல்லுவார்கள் ..

உவேசா அவர்களின் "நல்லுரைக் கோவை" தொகுதி

-------------------------------------------------------------------------------------------------------------------------------- முதல் சுவடிக்கட்டு !

காலை 8.00 மணி. அது தமிழ் நாட்டு மக்கள் ’டீ’ அருந்தியபடி ஆங்காங்கே அமர்ந்து அரசியலை அலசும் நேரம். நானோ தேடியலைந்து காலை உணவை எப்படியோ முடித்துக்கொண்டு திருவள்ளூர் கோயில் வாசலில் எங்கள் ஓலைச் சுவடி வாகனத்தின் வருகைக்காகக் காத்திருந்தேன். எதிரில் தெரிந்த திருவள்ளூர் வீரராகவ சுவாமியின் நெடிய அழகிய கோபுரத்தைப் பார்த்தபடி நின்றேன். இன்று காலை வழக்கத்துக்கு முன்னமே தயாராகிக் காலை ஆறு மணிக்கே கோயிலுக்குச் சென்றுவிட்டேன். ஆதிசேஷன் மீது பள்ளிகொண்ட கோலத்தில் காட்சியளுக்கும் வீரராகவப் பெருமாளையும் அருகில் உறையும் வசுமதி என்ற கனகவல்லியும் கண்டு "இன்றாவது எங்கள் ஓலை பெறும் கணக்கைத் துவக்கி வைத்திட" மனமுருகி வேண்டினேன்.மன அமைதியுடனும், உணவுண்ட திருப்தியுடனும் காத்திருந்த போது சிறிது நேரத்தில் எங்கள் ஊர்தியும் வந்துவிட்டது. பழவேற்காட்டில் திரு ஹரிதாஸ் வீட்டில் பேசும்போதே அவர் எங்கே வேலை செய்கிறார் என்று கேட்டு முகவரி வாங்கி இருந்தோம். அவர் திருப்பாலைவனம் என்ற ஊரில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றுகிறார் என்பதையும் அறிந்தோம். முன்பே ஒரு முறை அந்த திருப்பாலைவனம் ஊர் வழியாக சென்றிருக்கிறோம். அங்கே இருக்கும் அழகிய கோயிலும் எங்களைக் கவர்ந்தது.

அருகில் சென்று பார்க்க இயலவில்லையே என்ற வருத்தம் மனத்திலிருந்தது. இப்போது மீண்டும் திருப்பாலை வனம் செல்லும் வாய்ப்பு கிடைத்ததும் மனத்தில் மகிழ்ச்சி கூடியது; ஆனால் அங்கும் கோயிலைப்பார்க்க நேரம் ஒதுக்க இயலவில்லை. ஆனாலும் பலா மரம் அங்கு ஸ்தல விருக்ஷமாகவும், யோகாம்பாள் உடனுறை திருப்பாலீஸ்வரர் அங்கே அருள் பாலிப்பதாலும் அந்தப் பெயர் வந்ததாக அறிந்தேன். இதை அறிந்த உடன்தான் ஏன் பாலை வனம் எனப் பெயர் வந்தது தமிழ் நாட்டில், அருகில் ஏதாவது பாலை வனம் இருந்திருக்குமா என்ற என்னுடைய மனதில் அரித்துக் கொண்டிருந்த அறியும் வேட்கை சற்றுத் தணிந்தது.

சரியாகப் பள்ளிக்கூடம் ஆரம்பித்ததும் நாங்கள் பள்ளிக்கூடத்தில் நுழைந்து விட்டோம். ஹரிதாஸ் அவர்களுடன் அவரது பணிக்கு இடையூறு இல்லாமல் சற்று நேரம் தனியே பேச விரும்புவதாகக் கூறினோம். அவரும் அங்கே காலியாக இருந்த ஒரு வகுப்பறையில் சென்று சற்று நேரம் காத்திருக்குமாறு கூறினார். நாங்களும் சென்று வகுப்பறையில் சமர்த்துப் பிள்ளைகளாக அமர்ந்திருந்தோம்.

எங்களை அதிகநேரம் காக்க வைக்காமல் ஹரிதாஸ் அவர்களும் வந்துவிட்டார். அவரிடம் எங்களை அறிமுகப்படுத்திக்கொண்டோம் .

"ஆமாம் நேற்று வீட்டுக்கு வந்து போனதாக வீட்டில் கூறினார்கள் "என்றபடி "அதுதான் நேற்றே போனில் கூறினேனே, வீட்டில் இருக்கும் ஓலைச்சுவடி எங்கள் நிலம் பற்றிய ஆவணம். அது உங்களுக்குத் தேவை இராதே " என்றார். நாங்கள் "ஐயா நாங்கள் இங்கே தேடி வந்தது அதுபற்றிப் பேச இல்லை " "வேறு எனன வேண்டும் உங்களுக்கு ?" என்றார் அவர் முகத்தில் லேசான உஷார் நிலை, ஒரு விறைப்பு தன்மை வந்தது. "அது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை ஐயா, உங்கள் ஊரைச்சேர்ந்த கணேசனும் நீங்களும் உங்களிடம் இருந்த ஓலைச் சுவடிகளைப் பொன்னேரி நூலகரிடம் தந்ததாகக் கூறினார், அது பற்றி உங்களிடம் பேசிவிட்டுப் போகலாம் என்றுதான் வந்தோம். உங்கள் வீட்டில் இருக்கும் சுவடிகள் எங்களுக்கு வேண்டாம்" என்றோம்.

ஒருவாறு சற்று இறுக்கம் நீங்கியவராக ஹரிதாஸ் "அப்படியா ! ஆமாம் நாங்கள் எங்களிடம் இருந்த ஓலைச் சுவடிகள் அனைத்தையும் நான்கு வருடம் முன்பு இதுபற்றிக் கணக்கெடுக்க வந்த பொன்னேரி நூலகர் வசம் தந்துவிட்டோம்."

"அப்புறம் பிறகு அவரைப் பார்த்தீர்களா "

"இல்லையே பிறகு பார்க்கவில்லை "

”அந்த ஓலைச் சுவடி யார் மூலமாவது உங்களிடம் திரும்பி வந்ததா?”

"இல்லையே ! இதுவரை யாரும் வநது ஓலைச் சுவடியைத் தர வில்லையே "

”ஐயா, நீங்கள் அந்த ஓலைச் சுவடிகளை நூலகரிடம் தந்ததற்கு ஏதாவது ரசீது வாங்கினீர்களா ?”

"இல்லையே, அது அவ்வளவு முக்கியமா ? ஏதோ வீட்டில் இருந்தது, வந்து கேட்டார்கள், கொடுத்துவிட்டேன் " என்றார்.

அவரைப் பொருத்தவரை அதன் முக்கியத்துவம் அவ்வளவே !

"ஒன்றும் இல்லை சார்! நேற்று பழவேற்காட்டில் இருந்து நேராக போன்னேரிதான் போனோம் .ஆனால் அங்கே விசாரித்தபோது நூலகத்தில் அந்த ஓலைச் சுவடிகளை உங்களிடம் திருப்பித்தந்து விட்டதாகக் கூறுகிறார்கள் "

"என்ன இது புதுத் தொந்தரவு ! என்னிடம் எதுவும் திரும்ப வர வில்லையே "

”இல்லை ஐயா, நீங்கள் ஏதாவது ஞாபக மறதியாக எங்காவது வாங்கி வைத்திருக்கபோகிறீர்கள் என்றுதான் பள்ளிக்கூடத்திற்கே தேடி வந்தோம் "

"இல்லை இல்லை ! என்னிடம் யாரும் திரும்பக் கொடுக்கவில்லை. சரி நீங்கள் ஒருவாரம் கழித்து வாருங்கள்; நான் பொன்னேரி போனால் விசாரிக்கிறேன் "என்று சாவதானமாகக் கூறினார்.

"ஐயா, நாங்கள் இந்த மாவட்டம் வந்து நான்கு நாள் ஆகப்போகிறது.

நாளையுடன் இங்கு எங்கள் பணி முடிவடைகிறது. நாங்கள் பொன்னேரி நூலகர் கைபேசி எண் வைத்திருக்கிறோம். உங்கள் முன்னேயே அழைக்கிறோம்; அவர் எனன சொல்கிறார் பாருங்கள் " என்றபடி பொன்னேரி நூலகர் கைபேசி எண்ணிற்கு அழைத்தோம். அவர் நேற்று நாங்கள் வந்தபோது இல்லாமல் போனதற்கு அவசரக் காரியங்கள் திடீர் என வந்துவிட்டது எனக் கூறினார். நாங்கள் மீண்டும் பழவேற்காட்டில் பெற்ற ஓலைகளைப் பற்றிக் கேட்டோம். அவர் அதை அப்போதே வாங்கிய ஆசிரியரிடமே தந்துவிட்டதாகக் கூறினார்.

நாங்கள் பணிவாக "சார், நாங்கள் இப்போது ஓலைச் சுவடிகளைக் கொடுத்த அந்த ஆசிரியரின் பக்கத்தில்தான் இருக்கிறோம்; தயவு செய்து சற்று நேரம் அவரிடம் பேசுங்கள் " என்று கூறியபடி திரு ஹரிதாஸ் வசம் கைபேசியைத் தந்தோம். வேறு ஒன்றும் கூறவோ செய்யவோ முடியாமல் இருவரும் சற்றுத் திகைத்துப் போயினர். அவர்களிடையே நீண்ட நேரம் பேச்சு நடைபெற்றது. நாங்கள் அவர்களைத் தனியே பேசவிட்டுச் சற்று தூரத்தில் போய் நின்றோம். ஒருவாறு இருவரின் பேச்சும் ஒரு முடிவுக்கு வந்தது.

திரு ஹரிதாஸ் எங்களை அழைத்தார். நூலகர் உங்களுடன் பேசவேண்டுமாம் என்று கைபேசியைத் தந்தார். நூலகர் "சார், இன்று மாலை ஐந்து மணிக்கு நூலகம் வாருங்கள்; அதற்குள் நான் தேடி எடுத்துவைக்கிறேன் " என்று கூறினார். எங்களுக்கு மகிழ்ச்சி தாளவில்லை.

பிறகு நாங்களும் இதைக் கிளறவில்லை. யார் பக்கம் தவறு என்று கண்டுபிடிப்பதில் என்ன ஆதாயம்? எங்களுக்கு வேண்டியது கிடைத்து விட்டது. பின்னர் மகிழ்ச்சியுடன் திருப்பாலநாதர் பற்றி யெல்லாம் பேசி விட்டு ஹரிதாஸ் வாங்கிக் கொடுத்த தேநீரை அருந்திவிட்டு அங்கிருந்து கிளம்பினோம் .
பிறகு வேறு பல இடங்களுக்குச் சென்றுவிட்டு சரியாக ஐந்து மணிக்கு பொன்னேரி நூலகத்தில் நுழைந்தோம்.; அங்கு நூலகரும் காத்திருந்தார்; உடனே எங்களை அமரச்சொல்லிவிட்டு அங்கிருந்த அலமாரியில் இருந்து காகிதத்தில் சுற்றப்பட்ட ஓலைச் சுவடிக் கட்டுகளை எடுத்தார் . நாங்களும் நன்றி கூறிப் பெற்றுக்கொண்டோம்; வேறு ஒன்றும் அதிகம் பேசவில்லை; நேற்று ஏன் இல்லை என்றார், இப்போது எப்படி வந்தது என்றெல்லாம் கேட்கவில்லை .அது தெரிந்து என்ன செய்யப் போகிறோம்? ஓலைதான் கைக்கு வநது விட்டதே !

எங்களுக்கு உடலெங்கும் சிலிர்ப்பு 9 நாட்கள் சுற்றி முதல் ஓலைச் சுவடிகளைக் கொடையாகப் பெற்றுவிட்டோம். மனத்திற்குள் இறை வனுக்கு நன்றி கூறினோம்.

விரைவில் அந்த இடத்தை விட்டுப் புறப்பட்டோம். எப்போதுமே ஓலைச் சுவடிகள் பெற்றால் உடனே அந்த இடத்தைக் காலி செய்து விட வேண்டும். ஏனெனில் கொடுத்தவரே மனம் மாறிவிடலாம் .அல்லது வேறு யாராவது சுக்கிராசாரியார் மாதிரிக் கொடுக்கும் தானத்தைக் கெடுக்கலாம்; எதற்கு வம்பு என்று உடனே இடத்தை காலி செய்து விடுவோம்.

இன்னும் சில சுவடிகளைப் பற்றிய துப்பு அன்றே கிடைத்ததைப் பற்றி அடுத்துப் பார்க்கப் போகிறோம்.

அன்புடன்
அண்ணாமலை சுகுமாரன்
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
முதல் சுவடிக்கட்டைப் பெற்றதைப்பற்றி இத்தனை விரிவாகக் கூறியது .ஏன்னெனில் சுவடிகள் தேடும் பயணத்தில் எப்படியெல்;லாம் அனுபவம் இருக்கும் என தெளிவாக்கவே .அத்தோடு எங்களிடம் இருந்த பட்டியலின் உண்மைத்தன்மையை சோதனை செய்து தெளிந்து விட்டேன் .அதனாலேயே பிறகு சுவடிகள் தொடர்ந்து கிடைக்க ஆரபித்தது /சென்னை திருவள்ளூர் பகுதி தேடல் முடியும் முன்பேத தெளிவு பிறந்து விட்டது .
பிறகு இரண்டாம் கட்ட த் தேடலில் போது கிடைத்த சுவடிகளின் பொதி மற்றும் பயணித்த வாகனம் .

அடுத்த படம் நாங்கள் சென்னையில் சுவடி தேடி 2010இல் சென்ற ராமானுஜர் நிவைவிடத்தில் எடுத்தது .இன்று கணித மேதை ராமானுஜரின் பிறந்த தினம் என்று ஒரு பதிவுப் பார்த்தேன் .நான்இன்றுத தேடும் போது இந்தப்படம் கிடைத்தது என்னுடன் இருப்பது முனைவர் கோவைமணி அவர்கள் .
அக்ண்ணாமலை சுகுமாரன்
22/12/17
avatar
sugumaran
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 326
மதிப்பீடுகள் : 203

View user profile

Back to top Go down

Re: ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் !

Post by T.N.Balasubramanian on Sat Dec 23, 2017 11:57 am

உங்களின் மறு பெயர் பொறுமை, கடும் உழைப்பு .
வாழ்த்துகள்
ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22246
மதிப்பீடுகள் : 8287

View user profile

Back to top Go down

Re: ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் !

Post by sugumaran on Tue Jan 09, 2018 8:16 pmஓலைச்சுவடிகளைத தேடிய படலம் ! - ௧௧ (11 )
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஆறுமுகமங்கலத்திலிருந்து ஆழ்வார்திருநகரிக்குப் போய்விட்டுத் திருநெல்வேலி வந்தேன். தெற்குப் புதுத் தெருவிலிருந்த வக்கீல் சுபபையா பிள்ளை என்பவரிடம் சில ஏடுகள் உண்டென்று கேள்வியுற்று அங்கே சென்றேன்.
"எங்கள் வீட்டில் ஊர்க்காட்டு வாத்தியார் புத்தகங்கள் வண்டிக்கணக்கில் இருந்தன. எல்லாம் பழுதுபட்டு ஒடிந்து உபயோகமில்லாமல் போய் விட்டன. இடத்தை அடைத்துக்கொண்டு யாருக்கும் பிரயோஜனம் இல்லாமல் இருந்த அவற்றை எனன செய்வதென்று யோசித்தேன். ஆற்றில் போட்டு விடலாமென்றும் ஆடிப்பதினெட்டில் சுவடிகளைத் தேர் போலக்கட்டி விடுவது சம்பிரதாயமென்று சில முதிய பெண்கள் சொன்னார்கள்; நான் அப்படியே எல்லா ஏடுகளையும் ஓர் ஆடிப் பதினேட்டில் வாய்க்காலில் விட்டுவிட்டேன்" என்றார்.
உ வே சா அவர்களின் ’என் சரித்திரம்’ எனும் நூலில் இருந்து

சிறியவயதில் ஆடிப் பதினெட்டில் சப்பரம் எனும் சிறிய தேர் செய்து அதை இழுத்துக்கொண்டு ஆற்றங்கரை சென்றதுண்டு; ஆனால் நல்ல வேளையாக அதில் சுவடிகளை வைத்து யாரும் இழுத்து சென்றதைப் பார்த்ததில்லை; ஆனால் இந்தப் பழக்கம் ஏன் வந்திருக்கிறது என்று தெரிந்தபோது மனம் பதறுகிறது.
உலகின் எந்த ஒரு நாட்டிலும் அவர்களின் பழைய அறிவுச் செல்வங்களான சுவடிகளுக்கு இத்தகைய ஒரு முடிவு கிடைத்ததாக எந்தச் சான்றும் இல்லை; ஆனால் நாம் மட்டும் ஏன் அப்படிச் செய்தோம ? சுவடிகள் ஹோமத்தீயில் ஆஹுதி ஆகிறது.
கட்டுக்கட்டாக ஆற்றில் வரும் புது வெள்ளத்தில் பூசனை செய்து விடப்படுகிறது ! ஏன் இப்படி ? நம் மரபுச் செல்வங்கள் மட்டும் ஏன் நம்மால் மதிக்கப்படவில்லை ?
இப்படி அழிந்த செல்வங்கள் எத்தனை எத்தனையோ !
------------------------------------------------------
முடிவடைந்த திருவள்ளூர்த் தேடல்
ஆடவல்லான் நாட்டியமாடிய பஞ்ச சபைகளில் முதல் தலமாவதும், ரத்தினசபை என்றழைக்கப்படுவதுமான திருவாலங்காட்டுக்கு நாங்கள் மீண்டும் போக நேர்ந்தது. பலாவனத்தில் இருந்து ஆலங்காட்டிற்குச் சென்றோம். ஆலங்காட்டிலும் சிதம்பரம் மாதிரி ஒரு ரகசியம் மறைந்து கிடக்கிறது. நடராஜருக்குப் பின்புறம் சன்னிதியில் பாதியை மறைத்துச் சுவர் கட்டப் பட்டுள்ளது; இதற்குள் எப்போதும் காரைக் காலம்மையார் சிவ தாண்டவத்தை தரிசித்துக் கொண்டிருப்பதாக ஒரு வரலாறு இருக்கிறது. காரைக்காலம்மையார் மூத்த திருப்பதிகம் பாடி, முக்தியடைந்த ஸ்தலம் இதுவே.
திருவாலங்காட்டில் பட்டியலின் படி நிறைய முகவரிகள் இருந்தன.
நாங்கள் ஒவ்வொன்றாகப் பார்த்து வந்தோம். பலருக்கும் ஓலைச் சுவடியுடன் தொடர்பே இல்லை எனக் கூறிவிட்டார்கள். ஆனால் அதில் கணேசன் என்பவர் மட்டும் ” சுமார் 120 ஆண்டுகளுக்கு முன் எம் முன்னோர் வருடாவருடம் நாடகம் போடுவது உண்டு. அது சம்பந்த மான மகா பாரதக்கதைகளைக் கவிதையாக எழுதிய ஓலைச்சுவடிப் பாடங்கள் எங்கள் வீட்டில் இருந்தன; ஆனால் நாங்கள் படித்துவிட்டு வேறுவேறு வேலைகளுக்கு இரண்டு தலைமுறையாக போகத் தொடங்கியதும் இந்த நாடகம் போடும் வழக்கம் எங்கள் குடும்பத்தை விட்டுப் போய்விட்டது" என்றார்.
அவரது பாட்டனார் பெயர் தாண்டவ ராய ரெட்டியார். அவர்கள் குடும்பத்தைச் சேர்ந்த மற்ற சகோதரர்கள் பெயர்கள் எங்கள் பட்டியலில் இடம் பெற்றிருந்தன. ஆவலை அடக்க முடியாத நாங்கள் "எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் காத்திருக்கி றோம் கொஞ்சம் தேடிப்பாருங்கள் " என்று நயமாகப் பேசத்தொடங்கி னோம் . அவர் ” நான் அரசுப் போக்கு வரத்துத்துறையில் நடத்துனராக இருக்கிறேன் . எனக்கு இந்த ஓலைச் சுவடி பற்றிய அறிவோ, ஆவலோ கொஞ்சம் கூடக் கிடையாது; நான் வீடு கட்டிக்கொண்டு தனியே வந்து விட்டேன்; அப்போதில் இருந்தே நான் வீட்டில் எந்தச் சுவடிகளையும் எப்போதும் கண்டதில்லை ; எனவே தேடவேண்டிய அவசியமே இல்லை” என்றார்; ஆனாலும் வாடத்தொடங்கிய எங்கள் முகத்தைக் கண்டு எனன நினைத்தாரோ " சரி, வாருங்கள். எங்கள் பூர்வீக வீட்டில் இப்போது எங்கள் அண்ணன்தான் இருக்கிறார்; அவரிடம் அழைத்துப் போகிறேன்" என்றார். எங்கள் முகவரிப் பட்டியலில் அவர் அண்ணன் பெயரும் இருந்தது; எப்படியும் போகத்தான் போகிறோம்; ஆனால் அலைந்து திரிந்து போவதைவிட வழி தெரிந்தவர் கூடப் போவது சுலபமல்லவா? எனவே சந்தோஷத்துடன் அவருடன் புறப்பட்டோம் .
அவர் அண்ணன் திரு கோதண்டம் வீட்டிற்குச் சென்றடைந்தோம் .
தம்பி உள்ளே சென்றுவிட்டு வெளியில் வந்தார் ."அண்ணன் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார். நீங்கள் வந்திருப்பதைக் கூறிவிட்டேன், அவர் உட்காரச் சொன்னார் " என்றார். உட்கார்ந்ததும் ஆசைகள் கிளை விட்டுப் பெருக ஆரம்பித்தன. நிச்சயம் ஏதோ பெரிதாக இங்கே கிடைக்கப் போகிறது என எண்ணங்கள் ஓடத்தொடங்கின. உட்காரச் சொன்ன தம்பி அதற்குள் போய் எங்களுக்கு குளிர்பானம் வாங்கி வந்துவிட்டார். நாங்கள் இந்த இரண்டு மாதத்தில் நாங்கள் சென்னையில் இருந்து கன்னியாகுமரிவரை சுற்றி வந்து விட்டோம். இதில் வாழும் தமிழரிடம் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் அதிசய குணம் இந்த விருந்தோம்பல்தான். அனைவருமே கட்டாயமாக வீட்டுக்கு வருவோருக்கு ஏதாவது உண்பதற்கோ, குடிப்பதற்கோ தர விரும்புகிறார்கள்; அதை மறுப்பது அவர்களுக்குப் பிடிப்பதில்லை. எனவே நாங்களும் விருப்பமுடன் ஏற்றுக் கொள்வோம்; இது மேலும் ஒரு சுமுக நிலையையும் அங்கே தோற்றுவிக்கும்.
சில இடங்களில் குடிக்க நீராவது கொடுக்காமல் இருப்பதில்லை.
நீரை மட்டும் வாங்கிப் பேசாமல் கொஞ்ச நேரம் கையில் வைத் திருந்து, பிறகு அவர்கள் பார்க்காத போது மெல்லக் கீழே வைத்து விடுவோம். ஓர் இடத்தில் இப்படித்தான் உற்சாக மிகுதியில் தட்ட மாட்டாமல் அவர்கள் கொடுத்த தண்ணீரைக் குடித்த்தால் அன்றைய இரவே மாத்திரை வாங்க நூறு ருபாய் செலவு செய்ய நேர்ந்தது; எனவே அது ஓர் எச்சரிக்கையாக எங்கள் பயணம் முழுவதும் அமைந்தது.
நாங்கள் குளிர்பானம் அருந்தி முடிப்பதற்குள் அண்ணன் கோதண்டமும் சாப்பிட்டுவிட்டு அருகில் வந்து திண்ணையில் அமர்ந்தார்; கிராமங் களில்தான் இன்னும் சில இடங்களில் திண்ணை இருக்கிறது, இப்படி உட்கார்ந்து பேச வசதியாக. காற்றோட்டமான திண்ணைப் பேச்சின் சுகமே தனி !
வழக்கம் போல் எங்கள் அறிமுகம் , எங்கள் பயணத்தின் நோக்கம் இவை பற்றிய விளக்க உரை எங்களால் அளிக்கப்பட்டது.
அவரும் அவரது மலரும் நினைவுகளில் ஆழ்ந்தார்.
பிறகு " தம்பி சொன்னது உண்மைதான்; நிறையச் சுவடிகள் பலகாலம் எங்களிடம் இருந்தன. இரண்டு தலைமுறையாக எங்கள் குடும்பத்தில் அவற்றைப் படிப்பவர் குறைந்து போனதால் நாங்களும் சுவடிகளைக் கவனிப் பதில்லை; அவைகளே மெல்ல மெல்ல அழியத்தொடங்கின. சரஸ்வதி பூஜை காலங்களில் அவற்றைத் தேடி எடுத்து வைத்துப் படைப்ப துண்டு; பிறகு பரண் மேலேயே வைத்துவிடுவோம். " என்றார்.
”இப்போ இருப்பவைகளைக் கொஞ்சம் காட்டுங்களேன், அவைகளை யாவது அழிவில் இருந்து காப்பாற்றுவோம் "
" கொஞ்ச நாள் முன்னே வந்திருக்கக் கூடாதா? ஒரு மூன்று மாதத்திற்கு முன் நீங்கள் வைத்திருக்கும் அதே பட்டியலை வைத்துக்கொண்டு வருவாய்த் துறை அதிகாரிகள் எனது வீட்டிற்கு வந்தார்கள்; அவர்களும் நீங்கள் சொல்வதுபோல் கூறி எங்களிடம் இருக்கும் ஓலைச்சுவடி பற்றிக் கேட்டார்கள். எங்களால் அப்போதும் உடனே ஓலைச் சுவடிகளைத் தேடி எடுக்க முடியவில்லை. நாங்கள் அவர்களிடம் தேடிப்பார்க்கிறோம் என்று கூறினோம் . பிறகு ஒரு வாரத்தில் சுவடிகளைத் தேடி எடுத்து நாங்களே நேரில் திருத்தணி சென்று திருத்தணி தாசில்தாரிடம் கொடுத்துவிட்டோம். "
" எத்தனை கட்டுகள் கொடுத்தீர்கள் ?"
"நான்கு கட்டுகள், சுமார் 200 ஏடுகள் இருக்கும்; நாங்கள் தாசில்தாரிடம் ஓலைச் சுவடிகளைத் தந்ததும் அவர்கள் ஓர் ஒப்புதல் கடிதம் கொடுத் தார்கள் ; அதை வேண்டுமானால் காட்டட்டுமா ? "
"வேண்டாம் வேண்டாம் அதைப் பார்த்து எனன செய்யப்போகிறோம் ?"
முனைவர் கோவை மணி அவரிடம் தஞ்சைப் பல்கலைதான், அனைத்து மாவட்டத் தலைவர்களுக்கும் கடிதம் எழுதியிருப்பதாகவும், அதன் தொடர்பாகவே திருவள்ளூர் மாவட்டத்தலைவர் மூலம் நடவ டிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்தார்; பிறகு நாங்கள் சென்ற பல இடங்களிலும் வருவாய்த் துறை அதிகாரிகள் வந்தார்கள்; ஓலைச்சுவடி பற்றிக் கேட்டார்கள் என்ற தகவல்களை எங்களுக்கு அந்த அந்த மாவட்டத்தில் கூறினார்கள். பிறகு திருத்தணி சென்று தாசில்தாரை சந்திக்கவேண்டும் என்று முனைவர் கோவைமணி கூறினார் .
பிறகு அடுத்த இடங்களையும் பார்க்க விரைந்தோம். நல்லாத்தூர் எனும் கிராமத்தில் தேடி அலைந்து பட்டியலில் இருந்த பாலசுப்ரமணித்தைப் பார்க்க அவர் வீட்டிற்குச் சென்றடைந்தோம் .அங்கே அவர் இல்லை; அவரின் சிறிய தந்தை ஆறுமுக உடையாரை சந்தித்தோம் . ” எங்க குடும்பம் பரம்பரையில் வைத்திய குடும்பம்; சுற்றுப்பட்டு ஐம்பது கிராமங்களில் இருந்து ஒரு காலத்தில் மக்கள் தேடிவந்து காத்துக் கிடப்பார்கள். நோய்களை மருந்து, மாந்திரீகம் இவைகளால் எங்கள் முன்னோர்கள் நீக்கினார்கள்" எனப் பெருமையுடன் தம் பரம்பரை பற்றிக் கூறினார். பிறகு அவரே “ இரண்டு தலைமுறையாக இப்போது வைத்தியம் செய்வதில்லை; எல்லோரும் வேறு வேலைக்குப் போய்விட்டார்கள்” என்றார்.
நாங்களும் " உங்கள் முன்னோர் பயன்படுத்திய ஓலைச் சுவடிகள் எல்லாம் எங்கே ? நாங்கள் அவற்றைப் பார்க்க வேண்டும் " என்றோம். அதற்கு முருகேச உடையார் இருபது வருடத்திற்கு முன்னேயே திருப்பதிப் பல்கலை ஆசிரியர் என்று ஒருவர் வநது அவற்றை வாங்கிக்கொண்டு போய்விட்டதாகக் கூறினார்.
” கொஞ்சம் தேடிப்பாருங்களேன், ஏதாவது மீதி இருக்கிறதா ?
நாங்கள் உங்களைத்தேடி இவ்வளவு தூரம் வந்திருக்கிறோம். எங்களை வெறுங்கையுடனா அனுப்புவது ? " என்றோம்.அவர்களும் உள்ளே சென்று சிறிது நேரம் கழித்து “ஓலைச் சுவடிகள் ஒன்றும் இல்லை; இவை ஏதாவது பயன்படுமா பாருங்கள்” என்றபடி இரண்டு எழுத்தாணிகளின் கைப்பிடியை கொண்டுவந்தார். நன்றி சொல்லி அவற்றை முனைவர் கோவை மணி பெற்றுக் கொண்டார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் சென்னையின் அருகில் இருக்கும் அம்பத்தூர், கொரட்டூர் , முகப்பேர் முதலியவை இருந்தன. இவற்றை திருவள்ளூர் மாவட்டம் தேடுதல் முடியப்போகும் கடைசி நாளான ஐந்தாம் நாள் மாலையில் வைத்துக்கொண்டு பயணத்தை முடிப்பதாக முன்பே திட்டமிட்டிருந்தோம். அவ்வாறே அந்தப் பகுதிகளுக்குச் சென்றோம்.
பல இடங்களில் எங்களுக்கு பயனளிக்கும் பதில் கிடைக்கவில்லை; .ஆனால் கொரட்டூரில் பழனியப்பன் என்பவரின் முகவரியைத் தேடிய லைந்து அங்கு போய்ச் சேர்ந்தபோது அங்கே இருந்தவர்கள் பழனி யப்பன் இறந்து சில தினங்களே ஆனதாகக் கூறினார்கள் .
நாங்கள் வந்த நோக்கத்தை எவ்வாறு தெரிவிப்பது எனத் தயங்கி நின்றபோது அவரது மருமகன் பாலசந்தர் என்பவர் , " பரவாயில்லை சார், நீங்க வந்த விஷயம் சொல்லுங்க " என்று எங்களை உள்ளே கூப்பிட்டு அமரச் சொன்னார்; நாங்களும் எங்களைப் பற்றிய சிறிய முகவுரை கூறினோம்.
அவர் " திரு பழனியப்பன் ஒரு மிகப் பெரிய ஜோதிடர்; ஜோதிட சாஸ்திரத்தையே கரைத்து குடித்தவர்; .பல சிறந்த கட்டுரைகளை ஆங்கிலத்தில் எழுதியவர்; உயர் அதிகாரியாகப் பணியாற்றி ஒய்வு பெற்றதும் ஜோதிடம் சம்பந்தமாக நீண்ட ஆராய்ச்சிகள் செய்து வந்தார்” என அவரது மாமனாரைப்பற்றி மிக உயர்வாகப் பேசினார்.
மேலும் மாடியில் ஓர் அறை முழுவதும் சுமார் 2000 சோதிடம், மற்றும் பல பண்டைய நூல்கள் சேர்த்து வைக்கப்பட்டிருப்பதாகவும், ஆனால் தற்போது அவரது மகன் தந்தையின் இறப்பிற்கு வந்து விட்டு அமெரிக்கா சென்றுவிட்டதாகவும், அவரிடம் அனுமதி வாங்கினால் நாம் விரும்பும்படி அவற்றைப் பார்ப்பதோ, மின்னாக்கம் செய்வதோ முடியும் என்று கூறிவிட்டார். திரு பழனியப்பனைச் சந்திக்க முடியா மல் போனதை எண்ணி வருத்தம் தெரிவித்து அவரது மகனின் முகவரி யைப் பெற்றுக்கொண்டோம்.
எப்படியும் நிச்சயம் அந்தப் புத்தகக் குவியலைப் பார்த்தே தீர வேண்டும் என்ற உறுதியுடன் அந்த இடத்தை விட்டு நகர்ந்தோம்.
இவ்வாறு எங்கள் ஐந்து நாள் திருவள்ளூர் தேடல் அன்று முடிவுக்கு வந்தது. அடுத்ததாக்க் காஞ்சீபுரம் மாவட்டம் பார்ப்பதாக உறுதி செய்து கொண்டு அவரவர் உடைகள் அடங்கிய மூட்டையுடன் எங்கள் வீடு நோக்கிய பயணத்தை தொடங்கினோம். பல்லவர் காலத்திலேயே நகரம் என்றால் காஞ்சி என்று பெயரெடுத்த காஞ்சியில் ,நாலந்தா போல் சிறந்த கல்விக் களமாக விளங்கிய காஞ்சியில் எங்களுக்குக் கிடைக்கப்போகும் சுவடிக்குவியல்களை மனம் வட்டமிட எங்கள் பயணம் அமைத்தது. மனத்தில் எண்ணியபடியே உண்மையில் நாங்கள் கண்ட சுவடிக் குவியல் பற்றி அடுத்த பகுதியில் பார்க்கலாம் .
அன்புடன்
அண்ணாமலை சுகுமாரன்
---------------------------------------------------------------------------------------
இந்தத்தொடர் 2010 இல் எழுதப்பட்டது .இதில் குறிப்பிடப்பட்டிருக்கும் கொரட்டூர் திரு பழனியப்பன்வீட்டில் சென்று அந்த அரிய புத்தகக் குவியலைக் காணமுடியவில்லை .இப்படி இந்தத் தொடரில்; குறிப்பிட்ட பல இடங்களுக்கு மீண்டும் செல்லவில்லை .
தக்க சூழல் அமையவில்லை .இப்போது போனால் என்ன கிடைக்கும் என்பதும் தெரியவில்லை .
இவ்வாறாரு எனது பயணம் 2010 முடிவடைதானும் விடுபட்ட பல செயல்கள் உள்ளன ..
பணி செய்ய ஆர்வமும் முயற்சியும் இன்னமும் இருக்கிறது .
விதி என்ன செய்ய எண்ணியிருக்கிறது எனப்பார்க்கலாம் ?
அண்ணாமலை சுகுமாரன்
25/12/17
avatar
sugumaran
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 326
மதிப்பீடுகள் : 203

View user profile

Back to top Go down

Re: ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் !

Post by T.N.Balasubramanian on Tue Jan 09, 2018 9:07 pm

இப்படி அழிந்த செல்வங்கள் எத்தனை எத்தனையோ !

ஆம் அய்யா, மிகவும் வருந்த வேண்டிய ஒன்று. சோகம்தான் தான் மிஞ்சுகிறது சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22246
மதிப்பீடுகள் : 8287

View user profile

Back to top Go down

Re: ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் !

Post by sugumaran on Wed Jan 10, 2018 9:06 am


ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் ! ௧௨ - ( 12 )

சிலநாள் ஓய்வுக்குப் பின் மீண்டும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஓலைச் சுவடி தேடுதலுக்காக நாங்கள் மூவரும் 22 / 02/ 10 அன்று செங்கல்பட்டில் ஒன்றாகக் கூடினோம். இந்த முறை காஞ்சிபுரம் மாவட்டத் தேடலுக் காக நாங்கள் தங்குவதற்குச் செங்கல்பட்டைத் தெரிவு செய்தோம்.

மாவட்டத்தின் நடுவே நான்குபுறமும் செல்வதற்கு வாகாக செங்கல் பட்டே அமைந்திருந்தது. காஞ்சிபுரம் நகரம் ஒரு ஓரமாக ஒதுங்கி இருந்தது. எப்போதும் ஒன்றுகூடியபின் நாங்கள் உடனே தங்குவதற்கு விடுதியைத் தேடமாட்டோம் , உடனே எங்கள் சுவடி தேடுதலைத் தான் ஆரமிப்போம் . இரவில் திரும்பிவந்து அலைந்து திரிந்து ஏதாவது ஒரு விடுதியைத் தேர்ந்தெடுத்துத் தங்குவோம்; இதனால் எங்களுக்கு ஒரு நாள் தங்கும் செலவு மிச்சமாகும். அவ்வாறே வழக்கம் போல் முதலில் ஒரு வாகனத்தை அமர்த்திக்கொண்டு எங்கள் தேடுதலைத் தொடங்கினோம்.
ஆயிரம் கோயில்களின் நகரம் என்று வழங்கப்பெறும் காஞ்சிபுரம் அந்த மாவட்டத்தின் தலைநகரம் ஆகும் .இது ஒரு பாரம்பரியமான தலை நகரம். இது முந்தய சோழர் காலத்திலேயும் ,பல்லவர்கள் காலத்தி லேயும் தலைநகராக விளங்கி "நகரேஷு காஞ்சி " (நகரென்றால் காஞ்சிதான்) என மாபெரும் கவிஞர் பாரவியால் புகழப்பெற்றது. மணி மேகலை, பெரும்பாணற்றுப்படை , பத்துப்பாட்டு இவற்றில் காஞ்சியின் பெருமை பலவாறு கூறப்பட்டுள்ளது. இந்நகர் பண்டைய நாளில் கல்வியின் முக்கிய இருப்பிடமாக விளங்கியது; எனவே மிகுந்த எதிர்ப்பார்ப்புடன் எங்கள் தேடுதல் துவங்கியது .
காஞ்சிபுரம் மாவட்டம் பத்து வட்டங்கள் அடங்கியது; எங்களது MNN முகவரிப்பட்டியல் படி அனைத்து வட்டங்களிலும் சேர்த்து மொத்தம் 133 முகவரிகள் இருந்தன. நாங்கள் இவற்றை ஐந்து நாட்களில் முடிக்கத் திட்டமிட்டிருந்தோம்.
எங்கள் வாகனம் திருக்கழுகுன்றம் கடந்து செல்ல ஆரம்பித்தது.
திருக்கழுகுன்றம் ஊரில் இரு முகவரிகள் இருந்தன. கடம்பாடி ,வீராபுரம் ,ஓரகடம் முதலிய பகுதியில் ஒவ்வொரு முகவரி. நாங்கள் முதலில் ஓரகடம் சென்றுவிட்டுத் திரும்பிவரும்போது வழியில் இருப்பனவற்றைப் பார்த்துவரலாம் எனத் திட்டமிட்டோம் .
ஓரகடத்தில்
விஜயராகவன்.ஆர்
ஓரகடம்
என்று ஒரு முகவரி இருந்தது. நாங்களும் வழக்கம் போல் எங்கள் விசாரிப்பைத் தொடங்கினோம். ஓரகடம் ஓரளவு பெரிய ஊராகவே விளங்கியது. எனவே நாங்கள் தேடுவதும் சிரமம் ஆயிற்று. விஜயராகவன். ஆர் என்ற பெயரில் இருந்து அவரின் தொழிலை ஊகிக்க முடியவில்லை. சில முகவரிகளில் பட்டர் ( வெண்ணையன்று), குருக்கள் ,ஜோதிடர், சாஸ்திரிகள் எனச் சில' CLUE' இருக்கும் .இதில் அப்படி ஏதும் இல்லை. நாங்களும் எதையும் அவ்வளவு எளிதில் விடுவதாக இல்லை. அப்படியே விசாரித்துக் கொண்டு பிராமணர் தெருவுக்கு வந்தோம். அங்கும் யாருக்கும் இந்த விஜய ராகவன் யாரெனத் தெரியவில்லை. ஒரு முதியவர் மட்டும் எங்கள் முழுக்கதையையும் பொறுமையுடன் முழுமையாகக் கேட்டு விட்டு "யார், பாஷ்யத்தைப் பார்க்கணுமா ?" என்றார்; நாங்களும் ’ஆமாம் ஆமாம் அவரேதான்’ என்றோம். எங்க ளுக்கு ஏதாவது பிடிப்புக் கிடைக்காதா என்ற ஆவல். எது கிடைத் தாலும் பிடித்துக்கொள்வோம். அதில் இருந்து பாதை போடமுடியுமா என்று பார்ப்போம்.
அந்த முதிய அந்தணர் ஒரு சிறிய ஓட்டு வீட்டைக் காட்டினார்.
"சார் சார் " என்று அழைத்தபடி உள்ளே சென்றோம்; அங்கே ஒரு பெரியவர் தன்னந்தனியே ஒரு ஈசிச்சேரில் சாய்ந்திருந்தார்.

"ஐயா வணக்கம் "
"நமஸ்காரம், என்ன வேணும் ?"
"ஐயா உங்களிடம் ஓலைசுவடிகள் நிறைய இருப்பதாக தகவல் "
"ஆமாம், அதற்கு என்ன இப்போ ?"
"ஐயா, நாங்கள் தஞ்சைப் பல்கலையில் இருந்து வருகிறோம் ; உங்களிடம் இருக்கும் ஓலைச் சுவடிகளைப் பார்க்கவேண்டுமே "
அவர் சற்று தூரத்தில் இருந்த ஓர் இரும்புப் பெட்டியை டிரங்க் பெட்டி என்று சொல்லும் ஒரு ரகப்பெட்டியை சுட்டிக்காட்டி அதை எடுங்கள் என்றார்; அதை எடுத்தோம் .
பார்த்தால் அது முழுவதும் ஓலைச் சுவடிகள் !
நாங்கள் இத்தனைநாள் தேடியது மொத்தமாக ஒரே இடத்தில். அதை ஒன்று ஒன்றாக வெளியில் எடுக்க ஆரம்பித்தோம்; எங்களைச் சுற்றி ஓலைச் சுவடி, கடை பரப்பப்பட்டது. மெதுவாக ”ஐயா இவை அத்தனையும் பயன்பாட்டில் இருக்கிறதா ? " என்று ஆரம்பித்தோம். அவரும் " ஆம், நான் படித்ததுதான் அனைத்தும், எப்போதாவது எடுத்துப் பார்ப்பேன் " என்றார். " தக்கபடி பாதுகாக்க வசதியாக இவற்றைத் தஞ்சைப் பல்கலைக் கழகத்துக்குக் கொடையாகத் தாருங்களேன். நாங்கள் நல்லபடி உங்கள் பெயரிலேயே பாதுகாக்கிறோம் " என்றோம். " ஊஹும், அது எப்படி! நான் இவற்றை அவ்வப்போது பார்ப்பதுண்டு” என்றார். "ஐயா, இங்கிருந்தால் மேலும் மேலும் வீணாகும், நாங்கள் உங்கள் பெயரால் பாதுகாத்து வைக்கிறோம்” என்றோம்.
யாரையும் கட்டாயப்படுத்தியோ, கட்டளையிட்டோ சுவடி களைப் பெற இயலாது; அது அவர்களது சொத்து. அவர்களை உணர வைத்து நயமாகத்தான் பெறவேண்டும். என்ன செய்வது! இவை அத்தனையும் எப்படிப் பெறுவது? என்ற கவலை வந்தது. அப்போது அக்கவலையைத் தீர்க்கக் கடவுளே அனுப்பியமாதிரி அவரது மனைவி வேகமாக வீட்டினுள் நுழைந்தார்.
எங்கோ ஊருக்குப் போகப் புறப்பட்டு பஸ்ஸுக்கு காத்திருந்தவரை
ஊர்ஜனங்கள் சிலர் ’உங்கள் கணவரை யாரோ மூன்று பேர் தேடிக் கொண்டு உங்கள் வீட்டுக்குப் போகிறார்கள்’ என்றதும் பார்த்து விட்டுப் போகலாமே என்று வீட்டுக்கு திரும்பிவிட்டார். நாங்கள் தான் வழியில் அத்தனைபேரை விசாரித்திருக்கிறோமே ! நாங்கள் விசாரித்ததில் யாரோ சிலர் அவரிடம் சொல்லிருக்கிறார்கள்.
வந்த அவர் மனைவி " நீங்கள்தான் நேற்று போன் செய்தீர்களா? " என்றார் ."இல்லையம்மா, நாங்கள் இப்போதுதான் வருகிறோம்" என்றோம். " இல்லை, யாரோ பத்திரிகையில் இருந்து இவரிடம் பேச வருவதாக போன் செய்தார்கள்; காமரா எல்லாம் எடுத்துக்கொண்டு வந்ததும் நீங்கள்தான் என்று நினைத்தோம் " என்றார் அந்த அம்மா.
பிறகு நாங்கள் விபரமாக எங்கள் தேடுதல் பயணம் இவற்றைப் பற்றி கூறினோம்; அவரும் பரிவுடன் கேட்டார். பேச்சை கேட்ட அம்மா உடனே " உங்களுக்கு இந்த ஓலைச் சுவடிகள் தானே வேண்டும் எடுத்துக் கொள்ளுங்கள் " என்றார்.
அவரது கணவரால் ஒன்றும் பேச முடிய வில்லை; அவரது மனைவியை முறைத்தார்.
ஆனால் அவர்கள் ஒருவர் போல் ஒருவர் கொண்ட அன்பு தெளிவாக வெளிப்பட்டது .மனைவி சொல்வதை அவர் தட்டவில்லை. "இவர் ஆசைப்படுவார்; ஆனால் இனி அவரால் படிக்க முடியாது.வயதும் ஆகிவிட்டது ,கண்ணும் சரிவரத் தெரியவில்லை. இனி இவரால் படிக்க முடியாது. நீங்கள் எடுத்துப் போய்ப் பாதுகாத்து வைத்திருங்கள் " என்றார் .அந்த அம்மா. அத்தோடு விட்டாரா " இன்னும் ஏராளமான புத்தகங்கள் பரணில் தூங்குகிறது பாருங்கள் ! இனி அவற்றையும் அவரால் படிக்க முடியாது; ஆசைப் படுகிறார் ,ஆனால் படிக்க முடிவதில்லை " என்று கூறிப் பரணைக் காண்பித்தார்.
நாங்களும் பரணில் ஏற முஸ்தீபுகள் செய்ய ஆரம்பித்தோம். பரணில் அடுக்கடுக்கான மூட்டைகள்; அவ்வளையும் கீழே இறக்கி னோம். மெதுவாகப் புத்தகங்களைப் பிரித்தெடுக்க ஆரம்பித்தோம். எங்களைச் சுற்றி புத்தகங்களும் ஓலைச் சுவடிகளும் குவிந்தன !

பெரியவரோ ஒன்றும் செய்ய இயலாது சோகமாக எங்களைப் பார்க்க ஆரம்பித்தார். அதற்குள் அம்மா உள்ளே சென்று மோர் எடுத்துவந்து குவளை குவளையாக வழங்க ஆரம்பித்தார். நாங்கள் பரணில் இருந்து புத்தகங்களையும் ஓலைச் சுவடிகளையும் எடுத்த மாதிரியே, அம்மாவும் அடுக்களையில் இருந்த பழங்கள், தின் பண்டங்களை எங்கள் முன் பரப்பினார்.

நாங்கள் பரப்பிய ஒவ்வொரு புத்தகத்தையும் அவர் எடுத்துத் தன் பக்கம் திரும்ப அடுக்க ஆரம்பித்தார். ஒவ்வொரு புத்தகத்தின் மேலும் அவரது ஒரு இனிய நினைவு பொதிந்திருந்தது. அவர் அவற்றைக் கூற ஆரம்பித்தார் - "இது என் பையன் வாங்கிக் கொடுத்தது; இதை வைத்து இந்தப் பத்திரிகையில் ஒரு கட்டுரை எழுதினேன்" என்று தம் நினைவுகளை விவரிக்க ஆரம்பித்து விட்டார்; எங்களுக்கோ பாவமாகிவிட்டது. ஆனாலும் எதையும் விட மனமில்லை.

நாங்கள் அடுக்குவதும் அவர் திருப்பி எடுப்பதுமாக சிறிது நேரம் போனது; ஆனாலும் அவர் மனைவி சொல்லை அவர் தட்டவில்லை. அவரது மனைவிக்கும் அவர் கவலை புரிந்து விட்டது. அவர் முகம் வாடியதை அந்த அம்மா உணர்ந்து கொண்டார்கள்.
" சரி, அப்படியானால் ஒன்று செய்யுங்கள்; ஓலைச் சுவடி களை நீங்கள் எடுத்து கொள்ளுங்கள் ! புத்தகங்களைச் சிறிது காலம் கழித்து எடுத்துக் கொள்ளலாம் " என்றார். பெரியவரும் புத்தகங்கள் கிடைத்ததும் சற்று அமைதியாகி விட்டார்; எங்களுக்கோ ஓலைச் சுவடிகள் கிடைத்த சந்தோஷம் .

பெரியவர் புத்தகங்களிலேயே மீண்டும் ஆழ்ந்துவிட்டார் . எங்களுக்கு அந்தப் பெரியவரின் வாட்டம் புரிந்தது. வாழ்நாள் முழுவதும் அவர் படித்த புத்தகங்களை அவர் நண்பர்போல் கருதுகிறார்; நண்பர்களைப் பிரிவது போல் அவர் மனம் வருந்தினார். நாங்கள் ஒருவழியாக அவ்வளவு ஓலைச்சுவடிக் கட்டுகளையும் ஒரு அட்டைப்பெட்டியில் அடுக்கினோம். அவரிடம் இருந்த எழுத்தாணியையும் பெற்றுக் கொண்டோம்.

அவருக்கும் அவரது மனைவிக்கும் நன்றி கூறினோம்; அவருக்கு நமஸ்காரம் செய்தேன். ஒருபுறம் மிக்க மகிழ்ச்சி, ஒருபுறம் இந்தப் பெரியவருக்குப் பிடிக்காத காரியத்தைச் செய்கிறோமே என்ற வேதனை.
இருந்தாலும் முதல்நாளே ஒரு மிகப்பெரிய சுவடிப் புதையல் ஒன்று கிடைத்ததில் மனத்தில் மிக்க மகிழ்ச்சி; எல்லாம் இறைவன் செயல் என்று மன மகிழ்வுடன் விடுதியில் அறை போடும் போதே சுவடிப் பொதியுடன் சென்றோம். இறையரு ளால் அனேகமாக வரும் நாட்களில் சில நாட்களைத் தவிர தினமும் ஓலைச் சுவடிகளைத் தொடர்ந்து பெற ஆரம்பித்தோம்.
அன்புடன்
அண்ணாமலை சுகுமாரன்
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இந்த நிகழ்வு நடந்தது 2010 இல் .அவர்களின் அன்பை என்னால் மறக்கவே இயலவில்லை .மீண்டும் சிலமாதங்கள் கழித்து நசன் மட்டும் சென்று அவர்களை மீண்டும் சந்தித்தேன் .அப்போதும் அவர்களிடம் இருந்த கிரந்த பழைய புத்தகங்களைக் கண்டேன் .
ஆசையிருந்தும் அவைகளை மின்னாக்கம் செய்ய அப்போது அமைப்பு எதுவும் என்னிடம் இல்லை .2010 இல் சேகரித்த சுவடிகளை அனைத்தையும் முறைப்படி அப்போதையதமிழ்ப் பல்கலைக் கழகத் துறைத் தலைவர் முனைவர் திரு மாதவன் அவர்களிடம் முற்றிலுமாக ஒப்படைத்தப் பின் , தேடல் பணியில் இருந்து விடுபட்டுவிட்டேன் .
ஆனால் மழை விட்டும் தூவானம் விடாததுபோல , எனக்கு சில மாதங்களுக்கு ஒரு முறையாவது சுவடிகள் இருக்கும் தகவல்கள் தானே என்னைத் தேடிவந்தது
எனவே 2013 இல் தமிழ் சித்தர்கள் ஓலைச் சுவடிகள் ஆய்வு மையம் என ஒரு அறக்கட்டளைப்பதிவு செயதேன் அதைப்பற்றிய செய்திகள் ஒரு நாள் மட்டும் சில ஆங்கில இதழ்களில் வந்தது .
இவாறு இந்தத் தேடல் பயணத்தில் நான் சந்தித்த பலரும் இன்னமும் என்னுடன் நண்பர்களாகத் தொடர்பில் இருந்து வருகிறார்கள் .
உலகில் எத்தனை நல்ல மனிதர்கள் , பண்பட்டவர்கள் இருக்கிறார்கள் என்பது அவர்களின் குடும்ப சொத்தான அவர்களின் அரிய சுவடிகளை என்னிடம் ஒப்படைத்தும் கூட என்னையும் நண்பராக ஏற்றுக்கொண்டது என்னை இன்னமும் நெகிழ்ச் செயகிறது அவர்களுக்கு என்ன கைம்மாறு செய்யப்போகிறோனோத் தெரியவில்லை .
இன்னமும் சொல்ல நிறைய அனுபங்களை உள்ளது .
அண்ணாமலை சுகுமாரன்
9/1/18
இந்தப்படங்கள் அப்போது எடுத்தது .ஏடுகள் கிடைக்க சிபாரிசு செய்த்த அந்த அன்னையாரும் படத்தில் இருக்கிறார் .பெரியவரின் சோகம் படிந்த முகத்தை பா
ருங்கள் .இவ்வரிகளை இப்போது மீண்டும் பார்க்கும் போது அந்த நாள் ஞாபகம்
மீண்டும் வந்தது
avatar
sugumaran
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 326
மதிப்பீடுகள் : 203

View user profile

Back to top Go down

Re: ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் !

Post by sugumaran on Fri Jan 12, 2018 9:26 am


ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் - ௧௩ (13 )
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------
சுவடிகளைத் தேடி அவற்றை அச்சில் பதிப்பிக்கும் துறையின் முன்னோடிகளாகத் திகழ்ந்தோர் –
அ. தாண்டவராய முதலியார்,
சிவக்கொழுந்து தேசிகர்,
திருத்தணிகை விசாகப் பெருமாளையர்,
களத்தூர் வேதகிரி முதலியார்,
புஷ்பரதஞ் செட்டியார்,
ஆறுமுக நாவலர்,
சி.வை. தாமோதரம் பிள்ளை,
மழவை மகாலிங்கையர்,
உ.வே. சாமிநாதையர்,
ச. வையாபுரிப்பிள்ளை

இவர்கள் அத்துணை பேர்களின் அரிய தமிழ்த் தொண்டும், சீரிய பதிப்பு முயற்சிகளும் தமிழுக்குப் பல தொல் இலக்கியங்களை மீட்டுத் தந்தன. இவர்கள் அனைவருக்கும் எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.
-- ------------------------------------------------------------------------------------------------------------------------------------------

ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் - ௧௩ (13 )ஒரகடத்தில் இருந்து நாங்கள் நேரே செங்கல்பட்டு திரும்பவில்லை; வழியில் இருந்த ஊர்களையும் பார்த்துவிட்டு ஏழு மணிக்குத்தான் செங்கல் பட்டு திரும்பினோம்.

இது எங்களின் தினசரி வாடிக்கை ஆனது; உடல் களைத்து இருப்பினும் ‘திரும்பி வந்தோமா? உணவுண்டு படுத்தோமா?’ என்று இருக்காமல், பிறகு இணைய இணைப்பு எங்கே கிடைக்கும் என்று அங்கே அலைவதும், அதற்கு மேல் அடுத்த நாளைய பயணம் பற்றி ஒரு சிறிய திட்டம் வகுப்பதுமாக நேரம் ஓடிவிடும்; பிறகு மனம் ஒடுக்கம் பெறச் சிறிய அவகாசம் தேவைப் படும். காலையில் பெரும் பாலும் எட்டு மணிக்கு முன்னே புறப்பட்டு விடுவோம்; இதில் பல் வேறு பயன்கள் உண்டு. இன்று ஸ்ரீபெரும்புதூரில் இருந்து தொடங்க எண்ணி அங்கே விரைந்தோம் .

விட்ட இடத்தில் தானே தொடர வேண்டும் !

இன்றும் நாங்கள் பார்க்க வேண்டிய முகவரி விஜய ராகவன் டீ .ஆர் .!

ஆனால் ஓரகடம் அன்று ! ஸ்ரீபெரும்புதூர் .

ஆனால் இதில் ஆச்சரியமாக தெருப் பெயரும் இருந்தது; எனவே நேரே அந்தத் தெருவுக்கு நாங்கள் விரைந்தோம். முகவரிக்கும் சற்று எளிதில் போகமுடிந்தது; ஓலைச் சுவடியையும் சற்று எளிதாகவே வாங்க முடிந்தது !

ஏதோ காத்துக்கொண்டு இருப்பவர்கள் போல் திரு விஜயராகவன் அவரது மகன் ஸ்ரீதர் இருவரும் எங்களை வரவேற்றனர். கேட்டவுடன் அவர்களிடம் ஓலைச் சுவடிகள் இருப்பதை ஒப்புக்கொண்டனர். நாங்கள் கூறிய ஓலைச் சுவடிப் பாதுகாப்பு விஷயங்களை அவர்களும் ஒப்புக் கொண்டனர். இத்தகைய அரிய அறிவின் எச்சங்களைப் பாதுகாக்க வேண்டியது இன்றைய தலையாய கடமை என அவர்களும் கருதினர்.அவர்களிடம் வடமொழிச் சுவடிகள் மூன்று கட்டுகள் இருந்தன. அவை நீத்தார் கடன்கள் செய்வது பற்றிய மந்திரங்களும், அதன் முறைகளும், சாம வேதக் குறிப்புகளும் அடங்கிய சுவடிகள் என அவர்கள் கூறினர். நன்றி கூறி அவர்களிடம் இருந்து அந்த மூன்று சுவடி கட்டுகளைப் பெற்றுக்கொண்டோம்; அவர்களும் எங்களை மகிழ்வுடன் வழி அனுப்பினர் .

அடுத்து ஸ்ரீபெரும்புதூரில் அடுத்த முகவரி.

திரு பாஸ்கரர்
ஸ்ரீபெரும்புதூர்

வியப்பாக அது ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீமத் ராமானுஜர் சன்னிதிக்கு நேர் எதிர் வீடு. நாங்கள் ஸ்ரீபெரும்புதூரிலும் கோவிலுக்குச் செல்ல முயலவே இல்லை. என்னுடன் வரும் அனைவரையும் வற்புறுத்திக் கோயிலுக்கு அழைப்பதை நான் விரும்புவ தில்லை. செய்யும் தொழிலே தெய்வம் என்று இந்த தேடுதல் வேட்டை முடியும் வரைஎண்ணியிருந்தேன்ஆனால் ராமானுஜர் சன்னிதிக்கு எதிர்வீடாகவே திரு பாஸ்கரர் வீடு அமைத்தால் , கோயிலைப் பார்த்து மனத்தில் பிரார்த்தனை செய்தவாறே அந்தப் பாரம்பரிய வீட்டில் நுழைந்தோம். வீடும் பார்ப்பதற்கு ஓலைச் சுவடிகளைப் பேணும் இடம் போலவே கலையுடனும், மரபு அழகுடனும் விளங்கியது.


திரு. பாஸ்கரர் எங்கள் அழைப்பிற்கு பதிலொலி தந்தபடி வெளியே வந்தார்; அப்படியே அசரவைக்கும் முக ஒளி. நெறி தவறாத தீவிர நோன்பு மிகுந்த வாழ்க்கையாலும், ஆழ்ந்த ஞானத்தாலும் கண்களின் கூர்மை முதலில் எங்களைக் கவர்ந்தது; "வாங்க" எனப் பரிவுடன் வரவேற்றார் . நாங்கள் எங்களைப்பற்றிக் கூறிக்கொண்டோம் . " ஓலைச் சுவடிகள் இருப்பது உண்மைதான்; ஆனால் அவற்றைத் தருவது என்பதுதான் சற்று சிரமம்; எனக்கும் மகன் இருக்கிறான். அவனுக்கும் இதில் நாட்டம் உண்டு. எனவே சற்று யோசிக்கணும் " என்றார்.
"சுவாமி ! அவற்றைக் கண்ணாலாவது பார்க்க முடியுமா ? "
”செத்தே இருங்கோ !" என்றபடி தனது மகனை அழைத்து எங்களுக்கு அறிமுகப்படுத்தினார் .

அவரிடம் ஏதோ கூறினார். அவரும் உள்ளே சென்று முதலில் சில சுவடிகளைக் கொணர்ந்து திண்ணையில் வைத்தார் . நாங்கள் அவற்றை ஆர்வமுடன் பார்த்தபடி பேச ஆரம்பித்தோம் .பேச்சு பல திசையில் நீண்டது. பாஸ்கரர் விரும்பும் வண்ணம் பேச்சு அமைத்தது; அவரும் எங்களை விரும்ப ஆரம்பித்தார். யாருமுணராமல் திண்ணையில் இருந்த ஓலைச் சுவடிகளின் எண்ணிக்கையும் கூடிக்கொண்டே போனது.

சிறிது நேரத்தில் மகனை நோக்கிய பாஸ்கரர் "எல்லாம் வெளியில் வநது விட்டதா? ” என்றார்.
"இன்னும் கொஞ்சம் மீதி இருக்கிறது "
” சரி ! எல்லாத்தையும் எடுத்து வந்துடு ! இவாதான் இப்படி சொல்லுகிறார்களே !"
மீண்டும் உள்ளே சென்ற அவரது மகன் தம் இருகை கொள்ளாமல் சுவடிகளை அடுக்கிச் சுமந்துவந்தார் .


" எல்லாம் இவ்வளவுதாம்பா "
"சுவாமி, இவ்வளவும் தாங்கள் படித்திருக்கிறீர்களா ?"
"ஆமாம் அத்தனையும் படித்திருக்கிறேன் ."
"இவைகளில் தமிழ் ,கிரந்தம் ,தெலுங்கு இவை கலந்துள்ளது ”
"இவைகளில் எத்தகைய நூல்கள் இருக்கின்றன ? "
"இவற்றில் திருவாய் மொழி ,பிள்ளை லோகாசார்யர், தத்வ போதினி, தத்வ மாலிகா, பாணினி சூத்திரம் இன்னும் பல அரிய வேதாந்த நூல்கள் இருக்கின்றன. இவை பூர்விகமாக எங்கள் வீட்டில் இருந்து வருகின்றன; நாங்களும் இவற்றை மிகப் புனிதமாக மதித்து வருகிறோம் "நான் முன்னே சொன்னபடி இது ஒரு மன விளையாட்டு , சரியாகக் கையாண்டால் நிச்சயம் ஓலைச் சுவடி கிடைத்து விடும்.
அதுவும் நாங்கள் வாங்கியது அத்தனையும் கொடை!
எந்த விதப் பணமோ, விலையோ பேசப்படாமல் இவை அன்புடன் தரப்பட்டன. தற்போது இருக்கும் காலநிலையில் யாராவது இத்தகைய அரிய பொருட்களை இனாமாகத் தருவார்களா ?

"சுவாமி இவற்றைப் பாருங்கள் ! சிறுகச் சிறுக முனை முறிந்து, இடையில் ஒடிந்து, மையில்லாமல், எண்ணெய் இல்லாமல் எப்படிப் பொலிவிழந்து இருக்கிறது பாருங்கள்! இத்தனை உயர் தத்துவங்கள் நமது முன்னோரின் அறிவு செல்வங்கள் இப்படி இந்த ஓலைகளோடு முடிவடைந்து, இவை இல்லாமல் மறைந்து போக நீங்கள் விடலாமா ?"
" இவற்றைப் பாதுகாப்பதும் உங்கள் கடமையல்லவா? இத்தனை காலம் உங்கள் முன்னோர் பாதுகாத்து உங்களுக்குத் தந்தது போல், நீங்களும் பாதுகாத்து வரப்போகும் தலைமுறைக்குத் தரவேண்டாமா ? இதுவே சமுதாயத்திற்கு நீங்கள் செய்யும் பெரும் தொண்டாக அமையுமே ! தெய் வங்களின் ஆசியும் இதற்குக் கிடைக்குமே ! இவற்றை எழுதிய பெரிய வர்கள் இவை இப்படி அழிந்து போகவேண்டும் என்றா எழுதிருப்பார்கள் ? இத்தனை புனிதர்கள் கைப்பட்ட ஓலைச்சுவடி இது ! இவை இப்படி அழிந்து போகலாமா? நாம் இன்றைய நவீனக் கண்டுப்பிடிப்புக்களை இவற்றைப் பாதுகாக்கப் பயன்படுத்தலாமே ."

" இதுவே எங்களிடம் இருந்தால் இவற்றைப் பராமரித்து, மையிட்டு, எண்ணெயிட்டு , சிங்காரித்து, புதுக் கயிற்றில் கோத்து, இப்போது இதில் குடிகொண்டிருக்கும் பூச்சிகளை அழித்து , இவற்றை குளிரூட்டப்பட்ட அறைகளிலே வைத்து இன்னும் சில நூறாண்டுகள் சுவடிகளின் வாழ்வை அதிகரிக்கச் செய்வோம்.

இத்தனையும் செய்தாலும் அவற்றில் உங்கள் பெயரையே, இந்த இடத்தில் எடுத்தது , இவர்கள் கொடையாகத் தந்தது எனக் குறிப்பிடுவோம். உங்கள் பரம்பரைப் பெயர்கள் அத்தனையும் குறிப்பிடுவோம். நீங்கள் எப்போது வேண்டுமானாலும் உங்கள் சுவடிகளைத் தஞ்சை வந்து பார்க்கலாம் படிக்கலாம். சுத்தம் செய்தவுடன் இவற்றை மின்னாக்கம் செய்து, சில சி டி களில் அத்தனையும் பதிவுசெய்து உங்களிடம் தந்துவிடுவோம். தாங்கள் அவற்றைக் கணினியிலோ ,டீ வீ யிலோ இட்டு வேண்டும்போது பார்த்துக் கொள்ளலாம்" இவ்வாறு மீண்டும் மீண்டும் பேச ஆரம்பித்ததும், அவர்களும் மெளனமாக யோசனை செய்ய ஆரம்பித்தனர்; அவர்களுக்கும் இவற்றைப் பாதுகாக்க வேண்டும் என்பதில் எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை; நாங்கள் இவற்றைப் பாதுகாக்கிறோம் என்று சொன்னதும் அந்தத் தன்னல மில்லாப் பெரிய உள்ளங்கள், தங்கள் பிள்ளைகளைப் பிரிவது போல் பாசத்துடன் அவற்றை எங்களிடம் ஒப்படைக்க முன்வந்தனர்.

ஒருவாறு ஒரு மிகப்பெரிய சுவடிக் குவியல் ஸ்ரீ பெரும்புதூர் ராமானுஜர் சன்னிதிக்கு எதிரில் கிடைத்தது எங்களுக்கும் பெரும் மகிழ்ச்சி தந்தது. வழக்கம் போல் கையோடு கொண்டு சென்று இருந்த ஒரு பெரிய அட்டைப் பெட்டி நிறைய அங்கிருந்த சுவடிகள் அனைத்தையும் அடுக்கி கொண்டு பெரியவரிடம் விடை பெற்றோம்.

அவர்களும் உணர்ச்சிக் கொந்தளிப்பில் இருந்தனர்; எங்களுக்கும் மனத்திற்குள் வேதனைதான் ! ஆயினும் அறிவுச் செல்வங்கள் எப்படியும் காக்கப்படவேண்டும். தமிழர் பண்டைய கலைகள் இன்னும் உலகோரின் அங்கீகாரம் பெறக் காத்திருக்கின்ற னவே எந்தவித ஆய்வும் இல்லாமல்! தகுதியில்லை என முதல் சுற்றிலேயே நிராகரிக்கப்படும் அவலம் தொடர்கிறதே !

இன்னும் இத்தகைய அறிவுகளின் மூலமும் அழிந்து விட்டால், பிறகு சொல்வது எல்லாம் வீணர்களின் பிதற்றல் என்றுதானே ஒதுக்கப்படும். முதலில் மூலத்தைப் பாதுகாப்போம். பிறகு அதில் என்ன இருக்கிறது என்பதைப் பதிவு செய்வோம். பிறகு அதைப் பன்னாட்டு மொழிகளிலேயும் மொழி மாற்றம் செய்து உலகத்தார் யாவரும் அறியச் செய்வோம். இவ்வா றாக எங்கள் சிந்தனை அடுத்த இடத்தை அடையும் வரை என்னை ஆட்கொண்டிருந்தது
அன்புடன்
அண்ணாமலை சுகுமாரன்
------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இந்தக்கட்டுரை முதல் காட்டாத தேடுதல் முடிந்தது கிடைத்த ஓய்வில் 2010 ஜூன் மாதம் எழுதியது .
மீள்பதிவுக்காக இப்போது மீண்டும் நான் எழுதியதைப்பமீள்பதிவுக்காக படிக்கும் போதே நெஞ்சை அடைக்கிறது .
பிராமணர் இல்லாத என்னை நம்பி இத்தனை காலம் அவர்களின் குடும்ப சொத்தாக இருந்ததை ஒரு ஆசார பிராமணர் , கற்றறிந்த பண்டிதர் எப்படிக்கொடுத்தார் என்னும் போது வியப்பு மேலுழுகிறது .
இது எங்களால் நடைபெற்றதில்லை ,சித்தர்களின் அருளும் ஆசியும் இல்லாது நடைபெற்றிருக்க இயலாது என பரிபூரணமாக நம்புகிறேன் .
படங்கள் நான் அப்போது எடுத்தது .
முதல்கட்ட இரண்டாம் கட்ட தேடுதல் பற்றிய அனுபவங்கள்எழுதி முடிந்ததும் ,
சொல்ல வேண்டியவை நிறைய இருக்கிறது

எங்களுக்குள் நடைபெற்ற சம்பாஷணைகளை இத்தனை விரிவாக எழுதுவதின் காரணம் 2010 இல் இதை எழுதும் போது , இந்த திட்டத்தின் முக்கியஅங்கமான தமிழ் மரபு அறக்கட்டளை நிர்வாகிகளுக்கு களத்தில் என்ன நடைபெறுகின்றது? , எப்படி சுவடிகள் பெறப்பட்டது என்பதைத் தெரிவிக்கவும் , அப்போது மின்தமிழில் ஆர்வமுடன் செயல்பட்ட நண்பர்களின் புரிதலுக்காகவே ஆகும்
போகப்போக இத்தனை விரிவாக சம்பாஷணைகள் இடம் பெறாது .
சுவடிகள் கொடுத்த அனைவரையும் மீண்டும் கரம் கூப்பி வணங்குகிறேன்
தொடர்ந்து படித்து பயணித்து பாராட்டும் அனைத்து முக நூல் நண்பர்களுக்கும் நன்றி
அண்ணாமலை சுகுமாரன்
12/1/18
avatar
sugumaran
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 326
மதிப்பீடுகள் : 203

View user profile

Back to top Go down

Re: ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் !

Post by T.N.Balasubramanian on Fri Jan 12, 2018 4:37 pm

மிக ஆர்வத்தை தூண்டும் வகையில் எழுதி உள்ளீர் சுகுமாரன்.
அயராத உழைப்பு .

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22246
மதிப்பீடுகள் : 8287

View user profile

Back to top Go down

Re: ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் !

Post by sugumaran on Sun Jan 21, 2018 9:46 pm


ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் ! --- ௧௪ (14 )

இப்போது ஸ்ரீபெரும்புதூராக அழைக்கப்படும் இந்த ஊர் முன்னொரு காலத்தில் பூதபுரி என்ற பெயரில் இருந்தது என்கிறது புராண. பின் அதுவே புதூர் என மாறி , ஸ்ரீமத் ராமானுஜர் அவதரித்ததினால் ஸ்ரீபெரும்புதூராக மாறியது. அத்தகைய புண்ணிய பூமியான ஸ்ரீபெரும் புதூரில் இரு இடங்களில் சுவடிகளைப் பெற்று பின் அதன் அருகில் இருக்கும் சில இடங்களையும் பார்த்துவிட்டு
Dr Dharmalingam and Dr Gunaseelan Thennam pettai Sriperumbudur
என்று இருந்த முகவரிக்கு சென்றோம். நாங்கள் என்னவோ சாதார ணமாக நினைத்துச் சென்றோம் ஆனால் அங்கு இருந்ததோ ஒரு மிகப் பிரம்மாண்டமான சித்தவைத்தியக் கல்லூரியும், அதனைச் சார்ந்த மருத்துவமனையும் ஆகும். தம் தந்தை வேலு மயிலு ஆசான் என்பவரின் பெயராலும், தமது பெயராலும் தர்மலிங்கம் எனும் மருத்துவர் பல நிறுவனங்களை அங்கே சிறப்பாக நடத்தி வருகிறார் .

அதனுள்ளே சென்று நீண்ட நேரம் காத்திருந்தோம்; ஆனால் வேலையில் மும்முரமாக இருந்ததால் மருத்துவரைக் காண முடிய வில்லை. அவர்களிடமும் சுமார் 150 கட்டுகள் மருத்துவச் சுவடிகள் இருக்கின்றன. அவற்றை மின்னாக்கம் செய்வதை அவர்களே செய்வ தாக கூறியதால் அவரைப் பார்ப்பதால் பயனினில்லை என அங்கிருந்து கிளம்பினோம். ஆனாலும் அங்கிருக்கும் சுவடிகளை மருத்துவ உலகம் ஆராய்ந்தால் அரிய பல தகவல்கள் புதிதாகவும் கிடைக்கக் கூடும். .
பிறகு உத்திரமேரூர் சென்றோம். தமிழகத்தின் மக்களாட்சி பாரம்பரி யத்திற்கு உதாரணமாக ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த உத்திர மேரூர் கல்வெட்டுகளில் காணப்படும் குடவோலை முறையில் ஆன வாரியத்தேர்தல் பற்றிய குறிப்புகளை மேற்கோளாகக் காட்டுவார்கள். .
அத்தகைய பழமையும், புகழும் வாய்ந்த ஊர் உத்திரமேரூர்.
உத்திரமேரூரில் இருந்த முகவரிகளில் கைலாச ஈஸ்வரர் கோயில் என்ற முகவரியில் ஒரு ஓலைச் சுவடிக் கட்டு இருந்ததாக எங்கள் பட்டியலில் இருந்தது; ஆனால் அங்கே யாரையும் பார்க்க இயல வில்லை. அந்தக் கோயிலைத் தான் REACH நிறுவனம் புனரமைத்து வருகிறது.
கந்தசாமி குருக்கள் என்பவர் சுப்ரமணியசாமி தெரு என்னும் இடத்தில் இருப்பதாக எங்கள் பட்டியலில் இருந்தது. நாங்களும் வழக்கம் போல் விசாரித்தபடி சென்றோம். அங்கே போனால் அவர் இறந்து சில ஆண்டுகள் ஆகியிருந்தது. அங்கே ராஜப்பா குருக்கள் என்பவரை சந்தித்தோம். அவர்களிடம் முன்னர் சில சுவடிக்கட்டுகள் இருந்ததாகவும், அவற்றைப் புதுச்சேரி பிரெஞ்சு நிறுவனத்திற்குப் பல ஆண்டுகளுக்கு முன்னே தந்து விட்டதாகவும் தெரிவித்தார். மேலும் அவர் சகோதரர் சம்பந்த குருக்கள் அங்கே பணி புரிவதாகவும் தெரிவித்தார். எங்கேயோ ஒரு நல்ல இடத்தில் பாதுகாப்பாகப் போய்ச் சேர்ந்தால் அதுவே சுவடிக்கும் நல்லது, நாட்டிற்கும் நல்லது என்று நினைத்தபடி அங்கிருந்து புறப்பட்டோம்.
அடுத்து உத்திரமேரூரில் ' தண்டரை வைத்தியர் ' சி கார்த்திகேயன் ,
எண் 30, என்று இருந்தது; தெருப் பெயர் இல்லை; ஆனால் அதிக அலைச்சல் இல்லாமல் அந்த முகவரியைக் கண்டுபிடித்தோம்.
அங்கே கார்த்திகேயன் என்பவரை சந்தித்தோம். சிறிய வீடுதான், ஆனால் பெரிய உள்ளம். எங்களுக்கு ஓலைச்சுவடிகள் தந்ததால் மட்டும் இப்படிக் கூறவில்லை. நாங்கள் உள்ளே சென்றதும் அவர்கள் எங்களை உபசரித்த பண்பு, அமரச்சொன்ன விதம், நாங்கள் கூறுவதைப் பரிவுடன் கேட்டது, ஓலைச்சுவடிகள் இருப்பதாக ஒப்புக்கொண்டது, அவற்றைக் காட்டியது, நாங்கள் அவற்றை நன்றாகப் பாதுகாப்போம் என்று கூறி அந்த ஓலைச் சுவடிகளைக் கேட்டபோது இது பற்றிக் குடும்பத்தினருடன் பேசியபின் முடிவு சொல்வதாகக் கூறியது இவை அனைத்திலும் திரு கார்த்திகேயனின் பண்பும், பாரம்பரிய முதிர்ச்சியும் தெளிவாகத் தெரிந்தன.

நாங்களும் அவர்களிடம் வழக்கம்போல் அவரிடம் இருந்த சுமார் ஆயிரம் மருத்துவச் சுவடிகளையும் தஞ்சைப் பல்கலைக்குக் கொடையாகக் கேட்டோம்.
" இந்தச் சுவடிகள் அத்தனையும் பரம்பரையாக எங்கள் குடும்பத்தில் இருந்து வருகிறது; எங்கள் தாத்தா, அவரின் தாத்தா அனைவரும் மூலிகை மருத்துவர்களே, தண்டரை வைத்தியர்கள் என்று இந்தப் பகுதியில் எங்கள் பரம்பரை மிகப் புகழ் பெற்றது" என்றார் அவர்.
"எத்தகைய மருத்துவங்களில் உங்கள் பரம்பரையினர் பெயர் பெற்ற வர்கள்? ” இது நாங்கள்.
"தோல் மருத்துவத்திலும் , வாதம் குணப்படுத்துவதிலும் எங்கள் மருந்துகள் மிகப்பெயர் பெற்றவை."
"நீங்களும் இப்போது அதே மருந்துகளை செய்துவருகிறீர்களா ?"
"இப்போதெல்லாம் அத்தனை மருந்துகளும் செய்ய வேண்டிய வேலை இல்லை. சில மருந்துகள் மட்டும் செய்து சிறிய அளவில் வீட்டில் இருந்து வைத்தியம் செய்து வருகிறேன் "
"அத்தனை ஓலைச் சுவடிகளும் உங்கள் பயன்பாட்டில் உள்ளனவா ?"
" இல்லை ! இவற்றைப் பார்த்துக் குறிப்புகள் முன்பே எழுதி வைத்துள் ளேன்; எனவே குறிப்பைப் பார்த்துச் சில மருந்துகள் மட்டுமே செய்கி றேன். அதுவும் பெரும்பாலும் அனுபவத்தில் வந்து விட்டது "
நாங்கள் மீண்டும் எங்கள் வேண்டுதலை ஆரம்பித்தோம்;
அவர்களது பூர்விகமாக அறிவையும், அவர்களின் பரம்பரையில் வந்த முன்னோர்களின் அனுபவ பூர்வமான பட்டறிவையும் நவீன விஞ்ஞானத்தின் மூலம் பாதுகாக்கும் வசதிகள் இருப்பதையும், அவற்றை மின்னாக்கம் செய்து கணினியில் பயன்பாட்டில் கொண்டு வரும் சாத்தியக்கூறுகள் பற்றியும், அவர்களின் மருத்துவ அறிவின் மூலமான இந்த ஓலைச் சுவடிகளைக் காக்கும் அவசியம் பற்றியும் மேலும் கூறியதும், " சரி, நான் எங்கள் குடும்பத்தில் இருக்கும் அனைவரின் அனுமதியையும் , முக்கியமாக எனது அம்மாவின் அனுமதியைப் பெறவேண்டும். பெரியவர்கள் அனுமதி இல்லாமல் நான் மட்டும் முடிவெடுக்க முடியாது " என்று கூறி எங்களைச் சற்று நேரம் காத்திருக்கச் சொல்லிவிட்டு வீட்டின் உள்ளே சென்றார். இதனிடையே அவரது மனைவி எங்களுக்கு மோர் கொடுத்து உபசரித்தார். “சாப்பாடு தயாரிக்கட்டுமா? இருந்து சாப்பிட்டுப் போக முடியுமா?” என அன்புடன் கேட்டார்.
நாங்கள் அவரின் விருந்தோம்பலுக்கு நன்றி கூறி, நாங்கள் இன்னும் போக வேண்டிய ஊர்கள் நிறைய இருப்பதால் அதிக நேரம் காத்திருக்க இயலாதாகையால் எங்களுக்கு இப்போது உணவு வேண்டாம் என்று பணிவுடன் கூறினோம். இதனிடையே தண்டரை வைத்தியர் தம் தாயுடன் நாங்கள் அமர்ந்திருந்த இடத்திற்கு வந்தார். அவரது அம்மா எங்களிடம் , " தம்பி எல்லாம் கூறினான், நீங்கள் எடுத்துப் போய்ப் பாதுகாப்பது குறித்து எனக்கு மறுப்பு இல்லை; நல்லபடியாக மக்களுக்குப் பயன்பட்டால் போதும்" என்றார். எங்களுக்கும் மகிழ்ச்சி வெள்ளம் கரைபுரண்டு ஓட ஆரம்பித்தது.
பிறகு அவர்கள் ஓலைகளைப் பரப்பி வைத்து, அவர்களது பரம்பரையின் மருத்துவச் சிறப்புகளையும், மக்கள் அவர்கள் மருந்துகளின் மேல் நீண்ட காலம் வைத்திருந்த நம்பிக்கையைப் பற்றி மலரும் நினைவுகளில் முழ்கினார்கள். அவர்களின் முன்னோரின் புகைப்படங்களைக் காட்டி அவர்களின் அனுபவ அறிவைப் பற்றிக் கூறினார்கள். பிறகு தற்போது மக்கள் பாரம்பரிய மருந்துகளின் மேல் நம்பிக்கை இழந்து இப்படி ஆங்கில மருந்தின் மோஹம் பிடித்து அலைகிறார்களே எனக் கவலையைப் பகிர்ந்து கொண்டார்கள். சுவடிகளைப் பெற்றுக் கொண்டு அவர்களிடம் இருந்து ஒருவாறு விடை பெற்றோம்; ஆனாலும் நீண்ட நேரம் அவர்களின் தொழிலின் மூலதனமான ஓலைகளை, அவர்களின் பரம்பரையின் வைத்திய அறிவின் சான்றான ஓலைகளை அப்படியே எங்களிடம் கொடுத்ததையும், அவர்களின் தியாக உள்ளத்தையும், சீலத்தையும் குறித்து மனத்தில் வியந்தவாறே அடுத்த இடம் நோக்கிப் புறப்பட்டோம் .
காஞ்சியில் அடுக்கடுக்காக ஓலைச் சுவடிகளைக் காணப்போவதை அறியாமல் காஞ்சியை நோக்கி விரைந்தது எங்கள் ஓலைச் சுவடி ஊர்தி. இன்னும் அதிக விபரம் அடுத்ததில் பார்க்கலாம் .
அன்புடன்
அண்ணாமலை சுகுமாரன்
எந்தவிதப் பிரதி பலனும் எதிர்பாராமல் ,தங்களிடம் இருந்த அரிய பொக்கிஷங்களை இனாமாக, எந்தப் பொருள் உதவியோ, விலையோ, விளம்பரமோ இல்லாமல் தந்தனர். இத்தகைய உதாரண மனிதர்களை அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு இந்த தேடுதல் பயணம் முழுவதுமே கிடைத்து வந்துள்ளது.
0000000000000000000999999999999999999999999999999999999999999999999999999999999999
-- இந்தப்பகுதி 2010 ஜூன் மாதம் எனது பிறந்த நாளை ஒட்டி எழுதியிருக்கிறேன் .
இப்போது மீள் பதிவுக்காக இதை மீண்டும் படிக்கும் போது எனக்கு உடல் சிலிர்க்கிறது . அந்த தண்டரை வைத்தியக்குடும்பம் என்னிடம் காட்டிய அன்பு , அவர்களின் பண்பு இவைகளை நினைத்ததும் என் கண்ணில் நீரை வரவழைக்கிறது .இதில் குறிப்பிடும் எதுவும் கற்பனை இல்லை .இது 2010 லேயே எழுதப்பட்டது பலரால் பாராட்டப்பட்டது .அப்போது எடுத்தப் பலப்படங்கள் இன்னமும் என்னிடம் இருக்கிறது .
இதில் இப்போதுஇட்டிருக்கும் அத்தனை படங்களும் அப்போதுஎடுத்ததுதான் .
அவர்களை மீண்டும் சந்தித்து வணங்கவும் , எனது அன்பைத்ததெரிவிக்கவும் விரும்புகிறேன் .மேலும் நான் குறிப்பிட்டிரும் மருத்துவர் தர்மலிங்கம் அவர்களிடம் நான் கண்டா 150 கட்டுகளும் ஆராயப்பட்டு பதிப்பிக்கப்பட்டதா எந் தெரியவில்லை .
இது மாதிரி இந்தப்பயணத்தில் நான் சந்தித்த அத்தனை பெரியவர்களையும் மீண்டும் சந்திக்க விரும்புகிறேன் .எத்தனை அரிய அனுபவங்கள் !
இன்னமும் சொல்ல நிறைய உண்டு .
அண்ணாமலை சுகுமாரன்
19/1/18
avatar
sugumaran
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 326
மதிப்பீடுகள் : 203

View user profile

Back to top Go down

Re: ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் !

Post by T.N.Balasubramanian on Mon Jan 22, 2018 8:22 pmரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22246
மதிப்பீடுகள் : 8287

View user profile

Back to top Go down

Re: ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் !

Post by sugumaran on Wed Jan 24, 2018 8:36 pm
ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் ! ---- ௧௫ (15)

தற்போது தொண்டை நாடு எனப் பொதுவாக அறியப்படும் காஞ்சியைத் தலைநகராகக் கொண்ட பல்லவ நாடு அதற்குமுன், முற்காலச் சோழர் ஆட்சியிலும் அதையே தலைநகராகக் கொண்டு சிறப்புற விளங்கி இருந்திருக்கிறது. அப்போதும் அதற்குத் தொண்டை நாடு என்றுதான் பெயர் இருந்திருக்கிறது. ஏறத்தாழ 700 ஆண்டுகள் பல்லவர்கள் தென்னிந்தியாவில் நிலைத்து ஆட்சி புரிந்திருந்தும், அவர்களைப் பற்றிய பல பட்டயங்களும் கல்வெட்டுக்களும் கிடைத்திருந்தும் அவர்கள் யார்? எங்கிருந்து வந்தவர் என்பன போன்ற கேள்விகட்கு விடையளித்தல் இன்னமும் சிரமமானதே.
இது குறித்துப் பல்வேறு கருத்துக்கள் இன்னும் ஆராய்ச்சியாளர் மத்தியில் விளங்கி வருகின்றன. இந்திய வரலாற்று நூலாசிரியரான வின்ஸென்ட் ஸ்மித் என்பார், தமது 'பழைய இந்திய வரலாறு' என்னும் நூலின் முதற் பதிப்பில், 'பல்லவர் என்பவர் பஃலவர் என்னும் பாரசீக மரபினர்' என்று கூறுகிறார்; பிறகு அவரே மறுபதிப்பில் தம் கூற்றை மறுக்கிறார். ஆராய்ச்சியாளராகிய எலியட் செவேல் முதலியோர் தொண்டை மண்டலத்துப் பழங்குடியினரான குறும்பர் மரபினரே பிற்காலப் பல்லவர் என்றும் முடிவு செய்தனர். குறும்பர் ஆடுமாடுகளை மேய்ப்பவர். இதனைக் கருத்திற் கொண்டு. பால்-அவர் (பால் கறப்பவர் - குறும்பர்) என்பதே பல்லவர் எனத் திரிந்திருக்கலாம் என முடிவு செய்தவரும் பலருண்டு.
மணிமேகலையில் கூறப்படும் ஆதொண்டச்சக்கரவர்த்தி குறும்பரை வென்று, அவர்தம் குறும்பர் பூமியைத் தனதாக்கித் தன் பெயர் இட்டுத் தொண்டை மண்டலம் என வழங்கினான்' என்பது செவிவழி வரும் செய்தியாகும். வடபெண்ணை முதல் தென்பெண்ணை வரை இருந்த நிலப்பரப்பே அக்காலத்தில் தொண்டை மண்டலம் எனப்பட்டது. அது அருவா நாடு, அருவா வடதலைநாடு என இரண்டு பிரிவுகளாக இருந்தது. அருவா நாடு என்பது காஞ்சிநகரம் உட்பட்டது. பின்னது காஞ்சி முதல் வடபெண்ணை வரை இருந்த நாடாகும். இது குன்று களும் காடுகளும் சூழ்ந்த இடமாகும்; காளத்தி முதலிய மலையூர் களைத் தன்னகத்தே பெற்றது. அவ்விடம் இன்றும் 'தொண்டைமான் மாகணி' (மாகாணம்) எனப்படும். கரிகாற்சோழன் காடு கெடுத்து நாடாக் கினான், விளை நிலங்களை ஆக்கினான். ஏரி குளங்களை வெட்டு வித்தான்; தொண்டை மண்டலத்தை நாடாக்கினான்; நாகரிகத்தைத் தோற்றுவித்தான் என்று பட்டினப்பாலை முதலிய தமிழ் நூல்கள் கூறு கின்றன. இங்ஙனம் தொண்டை மண்டலம் சோழர் ஆட்சிக்கு வந்தது. முதல் சோழர் மரபினர் ஒருவர் தொண்டை மண்டலத்தை ஆண்ட செய்தி சங்க நூல் களில் காணக் கிடைக்கின்றது. திரையன் எனும் மன்னன் அருவா வட தலை நாட்டை ஆண்டபோது, இளந்திரையன் அருவா நாட்டை ஆண்ட னன் என்பதும் அறியக்கிடக்கிறது. தொண்டைமான் இளந்திரையன் என்பவன் காஞ்சியை ஆண்ட தமிழ் அரசனாகப் பெரும் பாணாற்றுப் படையில் சிறப்பிக்கப்படுகிறான். இத்தனை மாறுபாடுகள் கொண்ட கருத்துக்கள் உலவும் தொண்டை மண்டலம் பெயரில் ஒரு மடம் காஞ்சிபுரத்தில் இருந்து வருகிறது.
எங்கள் பட்டியலில்
*gnanaprakasham ,
thondai mandala aathinam
57, ubathalaivar brama sivam st ,
kanchipuram -2*
என ஒரு முகவரி இருந்தது .அதிக சிரமமில்லாமலேயே, அதைத் தேடிக் கண்டுபிடித்தோம்; .
மிகப்பெரிய விஸ்தாரமான கட்டிடம் ! கூடம் கூடமாக நீண்டது கட்டிடம் .
எத்தனை பெரிய மாளிகை என வியந்து கொண்டே மேலே சென்றோம். கடைசியில் இருந்த ஒரு கூடத்தில் தனிமையில் சாயந்தபடி அமர்ந்திருந்தார் ஆதீனம். இத்தனை பெரிய மாளிகையில் இப்படித் தனியே இருப்பது எத்தனை கொடுமை என எண்ணியவாறே ஆதீனத்திற்கு வணக்கம் கூறி எங்களைப் பற்றிய அறிமுகம் நிகழ்த்தினோம்.
அங்கே ஒரு சாரியில் இருந்த மர அடுக்குகளில் அடுக்கடுக்காக வைக்கப்பட்டிருந்த ஓலைச் சுவடிகள் எங்கள் கண்ணையும் கருத்தையும் சுண்டி இழுத்தன. ஓரக்கண்ணால் அவற்றைப் பார்த்தபடி ஆதீனத்திடம் பேசிக்கொண்டிருந்தோம். ஆதீனம் எங்களைச் சற்று அமரச்சொல்லிவிட்டு உள்ளே சென்று தலையில் அணியும் உருத்திராக்க முடியையும், கழுத்தில் அணியும் மாலைகளையும் அணிந் தபடி திரும்பி வந்து அவரது அரியாசனத்தில் அமர்ந்தார்.
அவரது புதிய கோலம் அவரது பெருமையையும், பாரம்பரியத்தையும் சொல்லா மலேயே சொல்லும் விதத்தில் அமைந்திருந்தது. எங்கள் பேச்சிலும் ஒரு வினயமும், மரியாதையும் வந்தது. ஆதீனத்தின் பேச்சிலும் ஒரு கம்பீரம் வந்தது. அந்த அரியாசனத்திற்குரிய கொடை குணமும், அற வழிச்சீலமும் ஆதீனத்திடம் தானே வந்துவிடும் என்னும் நம்பிக்கையில் நாங்களும் பேச ஆரம்பித்தோம். ஆதீனமும் எங்களுடன் மிகப் பரிவுடன் பேசினார். அவர் இந்த ஆதீனத்தின் 232 வது சந்நிதானம். நாங்கள் அங்கே அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் சுவடி வரிசைகளைச் சுட்டிக் காட்டி அவற்றை அருகில் சென்று கையில் எடுத்துப் பார்க்கலாமா எனக் கேட்டோம்

ஆதீனமும் சம்மதித்துப் பூட்டியிருந்த அல மாரிகளைத் திறந்து விட்டார். ஆவலுடன் அருகில் பாயத் தயாரா னோம். அப்போது ஆதீனம் அவை அத்தனையும் அவர்கள் மடத்தின் கணக்கு வழக்குப் பற்றியது என்று கூறியதும், உடன் வந்த முனைவர் கோவை மணிக்குச் சற்று சுவா ரஸ்யம் குறைந்துவிட்டது. அவர் எதிர்பார்த்தது ஏதாவது பழந்தமிழ் இலக்கியம் சிக்காதா என்று. எனினும் கிடைத்த வாய்ப்பை விட்டுவிட மனமில்லாமல் அருகில் சென்று அவற்றைப் பார்த்தோம். எங்களுக்கு வியப்பளிக்கும் விதமாக அதில் இருந்த மூன்று பெரிய சுவடிக்கட்டுகள் தேவாரம், நிகண்டு முதலியவையாக இருந்தன. அவற்றை மட்டும் தனியே எடுத்து வந்து ஆதீனத்திடம் காட்டினோம்.

அவர் "நீங்களே பாருங்கள், நாங்கள் இந்த சுவடிகளை எத்தனை சீராக வைத்திருக்கிறோம் என்று ? இவற்றை நிபுணர்களின் துணையுடன் அவ்வப்போது சுத்தி செய்து எண்ணெய் இட்டு வைத்திருக்கிறோம்; எனவே உங்கள் துணை தொண்டை மண்டல ஆதீனத்திற்குத் தேவையில்லை " என்றார். உண்மையிலேயே ஓலைச் சுவடிகள் நல்ல முறையில் பாதுகாக்கப்பட்டிருந்தன. எனவே எங்கள் முதல் அஸ்திரம் கூர் மழுங்கிப்போனதால் அடுத்ததை எடுத்தோம் .
"ஐயா, இவை சுவடிகளாக இங்கேயே இருந்தால் ,குடத்தில் இட்ட விளக்கு போல் ஆகிவிடுமே ! மேலும் காலத்தை வென்ற இந்தச் சுவடிகளில் உள்ளதைப் பாதுகாக்க வேண்டுமானால் இவற்றை மின்னாக்கம் செய்து கணினி வழிப் பயன்பாட்டில் கொண்டுவர வேண்டும் "
இதைக்கேட்டதும் அதற்க்கு உடன்பட்ட ஆதீனம் ,"இந்த நூல்களை நீங்கள் இங்கேயே வந்து
மின்னாக்கம் செய்து கொண்டு போவதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை " என்றார்.

முனைவர் கோவை மணியும் இந்த மூன்று கட்டுகளையும் விரைவில் வந்து மின்னாக்கம்
செய்து கொள்வதாக உறுதி கூறினார் .
ஆதீனனம் பிறகு எங்களுக்கு திருநீறு அளித்து எங்கள் தேடுதல் முயற்சி
நல்லவித்தமே நடைபெற ஆசி கூறினார் .
தமிழ்நாட்டில் நாடி சாஸ்திரம்அல்லது ஏடு பார்த்தல் என்று ஒரு கலை பல
இடங்களில் வழங்கி வருகிறது. மூன்று காலத்தையும் ஜாதகருக்குக் கூறும் அந்த ரிஷிகளின் கூறப்படும் பலன்கள் பாடல்களின் வடிவில் பனை ஓலையால் ஆன ஏட்டுச்சுவடிகளில் எழுதப்பட்டிருக்கின்றன.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த ரிஷிகளும் சித்தர்களும் எதிர்காலத்தில் வாழப்போகும் குறிப்பிட்ட மனிதர்களைப் பற்றியும், அவர்களின் ஜாதக அமைப்புகளைப் பற்றியும், வாழ்க்கை நிகழ்ச்சிகளைப் பற்றியும் அந்த ஏடுகளில் எழுதி வைத்திருக்கின்றனர் என நம்பப்படுகிறது . ஜாதகரின் பெயர், ஊர், பெற்றோர், உருவ அமைப்பு, முதற்கொண்டுஅந்த ஏடுகளில் காணப்படும் எனக் கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் வழங்கும் நாடிகளில் காகபுசுண்டர் நாடி, கெளசிக நாடி, சப்த ரிஷி நாடி, அகத்தியர் நாடி போன்றவை மிக முக்கியமானவை. இந்தப் பிரபஞ்சத்தில் நடைபெறும் அனைத்து செயல்களும் ஓர் ஒழுங்கு முறையும் நியதியும்,கட்டுக்கோப்பும் கொண்டே விளங்கு கின்றன. இதையே "Cosmic Order" என்று கூறுவார்கள்.இதில் விளங்கும் அனைத்துப் பொருள்களும், அனைத்து நிகழ்ச்சிகளும் ஒரு நியதிக்குட்பட்டு ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டவையாக விளங்கு கின்றன. காலதத்துவத்தின் ரகசியங்களையும் "Cosmic Order" எனப்படும் பிரபஞ்ச நியதியையும் தன்னுள்ளடக்கிக் காட்டும் நூல்களில் நாடி சாஸ்திரமும் ஒன்று என நம்பப்படுகிறது; ஆனால் இந்த நாடிகள் குறிப் பிட்ட சில ஊர்களிலேயே மிகப் பிரபலமாக வழக்கத்தில் உள்ளன.
நாங்கள் இதுவரை பார்த்த மூன்று மாவட்டங்களில் சுமார் இருபது நாடி ஜோதிடர்களின் முகவரிகள் இடம் பெற்றிருந்தன; ஆனால் இவற்றில் பெரும்பாலானோர் அவர்கள் வைத்திருந்த சுவடிகளை அருகில் சென்று பார்ப்பதையோ ,அதைத் தொடுவதையோ விரும்ப வில்லை. எங்களை முதலில் இடத்தை விட்டுக் கிளப்புவதிலேயே குறியாக இருப்பார்கள். எனக்கு இது பற்றிய உண்மையை அறியும் வாய்ப்பு வராதா என்ற ஏக்கம் நீண்ட காலமாக உண்டு .இதன் உண்மை அறியவே நானும் நிறைய நாடி ஜோதிடர்களிடம் ஜோதிடம் பார்ப்பது போல் தொடர்ந்து சென்று நட்பாக இருக்க முயன்றதுண்டு; ஆயினும் எவ்வளவு பணம் செலவு செய்தாலும் அவர்கள் தங்கள் ரகசியங்களை காப்பதிலேயே குறியாக இருந்தனர்; ஆனால் இந்த ஓலைச் சுவடி தேடும் படலத்தில் ஒரு நாணயமான, திறந்த மனம் கொண்ட ஜோதிடரைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது .அது குறித்து அடுத்த பகுதியில் விரிவாக எழுதுகிறேன் .
அன்புடன்
அண்ணாமலை சுகுமாரன்
-- -------------------------------------------------------------------------------------------------------------------------------------
இதுவும் 2010 எழுதியாக கட்டுரைதான் .
ஆதீனம் அனுமதிக்கொடுத்த மின்னாக்கம் பணி நிறைவேறியதா என இன்னம் தெரியவில்லை . பிறக்காலத்திலயாரவது செய்வார்கள் என்றுதான் செய்திகளை ஆற்றுப்படுத்தி சென்றேன் .
தேடலில் இன்னம் நிறைய ஆதினங்களை சந்தித்தேன் .நிரயத் தகவல்கள்களை
அப்போதே சொல்லியிருக்கிறேன் .
இன்னமும் நிறைய சொல்ல இருக்கிறது
அண்ணாமலை சுகுமாரன்
24/1/18
avatar
sugumaran
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 326
மதிப்பீடுகள் : 203

View user profile

Back to top Go down

Re: ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் !

Post by T.N.Balasubramanian on Thu Jan 25, 2018 1:49 pm

சொல்லுங்கள் ,அறிய காத்திருக்கிறோம்.

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22246
மதிப்பீடுகள் : 8287

View user profile

Back to top Go down

Re: ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் !

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum