உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» பிரான்சின் மிக பழமையான அணு ஆலை மூடப்படுகின்றது..!!
by ayyasamy ram Today at 8:50 pm

» யாழ்ப்பாணத்துக்கு புதுச்சேரியிலிருந்து ஆரம்பமாகும் கப்பல் போக்குவரத்து!
by ayyasamy ram Today at 8:46 pm

» வெற்றியை பாதிக்கும் பதற்றத்தைத் தவிர்க்கலாம்! தென்கச்சி சுவாமிநாதனின் குட்டிக்கதை
by ayyasamy ram Today at 8:31 pm

» மாப்பிள என்ன வேலை பார்க்கிறாரு..?
by ayyasamy ram Today at 8:18 pm

» வயிறு சம்பந்தமான வியாதிகள் நீங்க அருமையான முத்திரை
by T.N.Balasubramanian Today at 6:42 pm

» இவரல்லவோ தமிழறிஞர் - கவிதை
by T.N.Balasubramanian Today at 6:31 pm

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:33 pm

» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:19 pm

» மருத்துவ பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 2:15 pm

» சொர்க்கத்தில் இருப்பது போல பூமியில் வாழ்
by ayyasamy ram Today at 2:14 pm

» *ஒரு குட்டி கதை
by ayyasamy ram Today at 2:06 pm

» விளக்கேற்றிய வீடு வீண் போகாது.
by ayyasamy ram Today at 2:03 pm

» ஓ பட்டர் ஃபிளை… ! ஓ பட்டர் ஃபிளை ..! டாப்ஸியின் ரிசண்ட் போட்டோஷூட்
by ayyasamy ram Today at 2:02 pm

» குட்டி ரேவதி கவிதைகள்
by ayyasamy ram Today at 1:59 pm

» உறங்கிக்கொண்டிருக்கும் இரவு - கவிதை
by ayyasamy ram Today at 1:59 pm

» குழந்தைகளுக்கான புத்தகங்கள் - குட்டி ரேவதி
by ayyasamy ram Today at 1:57 pm

» கல்லீரலை நன்கு இயக்கும் பிராண முத்ரா
by ayyasamy ram Today at 1:34 pm

» மன அழுத்தத்தை போக்கும் தியான முத்திரை
by ayyasamy ram Today at 1:29 pm

» ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்.24-ம் தேதி பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம்- முதலமைச்சர் அறிவிப்பு
by ayyasamy ram Today at 1:21 pm

» தமிழைக் காத்த தமிழ் தாத்தா
by ayyasamy ram Today at 1:18 pm

» உ.வே.சா வின் தமிழ் பற்று
by ayyasamy ram Today at 1:13 pm

» ரயில் நிலையங்களில் இலவச வைபைக்கு முற்றுப்புள்ளி: கூகுள் திட்டம்
by ayyasamy ram Today at 9:38 am

» ஆர்.ஓ.வாட்டருக்கு தடை விதிக்க மத்திய அரசு முடிவு
by ayyasamy ram Today at 9:37 am

» தட்கல் ரெயில் டிக்கெட் இனி எளிதாக கிடைக்கும்- 60 ஏஜெண்டுகள் கைது
by ayyasamy ram Today at 9:35 am

» போலீஸ் கமிஷனராக களமிறங்கிய ஸ்ரீகாந்த்
by ayyasamy ram Today at 9:33 am

» மகா சிவாராத்திரி – முக்கியமான ஆறு அம்சங்கள்…
by ayyasamy ram Today at 9:31 am

» வாழ்வின் துளிகள்! – கவிதை
by ayyasamy ram Today at 9:30 am

» முக கவசம் முழுமையான பாதுகாப்பு தராது!
by ayyasamy ram Today at 7:51 am

» சுவரால் மறைக்க முடியுமா? காங்., கிண்டல்
by ayyasamy ram Today at 7:40 am

» வேலன்:-வேண்டிய நிறத்திற்கான கலர் கோடிங் கண்டுபிடிக்க -Colorism
by velang Today at 6:50 am

» வேலன்:-டிஸ்க் கவுண்டர் வியூ-Disk Counter View
by velang Yesterday at 9:14 pm

» என்.ஆர்.சி கட்சியை வாழ்த்தி வரவேற்கிறேன்…!!
by சக்தி18 Yesterday at 8:38 pm

» வாழ்க்கையும், வசதிகளும், நமது நோய்களும்
by சக்தி18 Yesterday at 8:26 pm

» 'கொத்து சேலை கட்டிக்கிட்டு' – இளசுகளுக்கு பக்கா கிராமிய ஸ்டைலில் லவ் சாங் ரெடி!
by சக்தி18 Yesterday at 8:24 pm

» கைலாயா நாட்டுக்கு போக ‘டூர்’
by சக்தி18 Yesterday at 8:18 pm

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by Guest Yesterday at 8:01 pm

» ஓட்ஸ் கோதுமை ரொட்டி
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ‘20 ஓவர் உலக கோப்பை போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம்’ இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் நம்பிக்கை
by ayyasamy ram Yesterday at 6:25 pm

» சட்டுனு துப்பட்டா கிடைக்கலியா…
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» மீன் புட்டு
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» முக நூலில் ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» ஜோடியா கட்சியிலே சேர்ந்தா கல்யாணம் பண்ணி வைக்கிறாங்களாம்..!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» சுயசரிதை ஜோக்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:08 pm

» தெய்வத்தைத் தேடாதே – கவிதை
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» அர்த்தமுள்ள சிந்தனைகள்
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 6:05 pm

» சிரிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:05 pm

» சிரிக்கலாம் வாங்க…!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» பணமா…பாசமா…! – ஆன்மீகம்
by ayyasamy ram Yesterday at 6:00 pm

Admins Online

அறம் - ஒரு கலைஞனின் அறம் !

அறம் - ஒரு கலைஞனின் அறம் ! Empty அறம் - ஒரு கலைஞனின் அறம் !

Post by seltoday on Sat Nov 18, 2017 8:12 am

ஒரு நல்ல சினிமாவை கொடுக்க வேண்டும் என்ற ஒரு கலைஞனின் பிடிவாதம் தான் இந்த'அறம்'. காட்சி மொழியை மிக நேர்த்தியாக பயன்படுத்தியிருக்கிறார். ஒரு சில காட்சிகளைத் தவிர மற்ற அனைத்து காட்சிகளிலும் ஒரு பிரேம் கூட வீண் இல்லை.காட்சிகளைப் பிரித்து புகைப்படங்களாக மாற்றினால் ஒவ்வொரு புகைப்படமும் ஒவ்வொரு கதை சொல்லும். அசலான வாழ்க்கையை காட்சிப்படுத்தி இருக்கிறார், இயக்குனர் மீஞ்சூர் கோபி. கதை சொல்லும் முறையிலும் , உருவாக்கத்திலும் அவ்வளவு நேர்த்தி.

கதையின் களத்தை , கதை மாந்தர்களின் வாழிடத்தை மிக நெருக்கமாக படம்பிடித்திருக்கிறார். விளையாட்டுகளில் திறமையிருந்தும் அடுத்த கட்டத்திற்கு போக முடியாதது , எளிய மக்களின் படுக்கை அறை, வீடு , குளிக்கும் முறை , மருத்துவமனை செலவீனத்திற்கு பயந்து மெடிக்கலில் மருந்து வாங்குவது , எளிய மக்கள் வரை பரவியிருக்கும் எப்பாடு பட்டாவது பிறந்தநாளுக்கு கேக் வெட்டும் கலாச்சாரம், அந்த கேக் வாங்க முன்பிருந்தே திட்டமிடுவது, வாழ்விற்கு நெருக்கமான குலதெய்வ வழிபாடு , சிப்பி சலிக்கும் வேலை , பிளாஸ்டிக் பையில் டீ வாங்கி வந்து குடிப்பது , ஏலச்சீட்டு நடத்துவது , கடைக்கோடி மக்களின் வாழ்க்கைக்கு பெரிதும் உதவும் இரு சக்கர வாகனங்களின் பயன்பாடு , ஒரு பிரச்சனை என்றால் ஊரே ஒன்று கூடுவது, பாதிக்கப்பட்டவர்களுக்கு துணை நிற்பது, ராக்கெட் ஏவுதளம் பற்றிய குறிப்புகள் என சிறப்பாக காட்சிபடுத்தி இருக்கிறார்.

கதையின் மையப்புள்ளியான அந்த நொடியை மிகத் திறமையாக கட்டமைத்து இருக்கிறார்.திரைமொழியின் சாத்தியங்களைப் புரிந்து கொண்ட ஒருவரால் தான் இவ்வாறு பதிவு செய்ய முடியும். முதலிலேயே குழந்தை காணாமல் போய் பிறகு கிடைப்பது , பாம்பு , தண்ணீர் தட்டுப்பாடு , அடுத்த முறை காணாமல் போவது , அப்போது பாம்பு சட்டையைக் காண்பிப்பது என நம்மை வேறு கோணத்தில் சிந்திக்க வைத்துவிட்டு திடீரென்று அந்த அதிர்ச்சியைத் தருவது என மிரட்டியிருக்கிறார். அந்த நொடியில் அதிர்ச்சியும் என்னையறியாமலேயே கண்ணீரும் வந்து விட்டது. அருகில் படம் பார்த்துக் கொண்டிருந்த என் மனைவி , மகளை இறுக அணைத்துக் கொண்டார். இப்போதும் அந்த நொடியை யோசிக்கும் போது பதைபதைப்பும் கண்ணீரும் வருவதை தடுக்க முடியவில்லை. அதற்கு பிறகான காட்சிகளும் பதைபதைப்புடனும் , நம்பும்படியாகவும் படமாக்கப்பட்டுள்ளன. ஆனாலும் இப்படத்தில் காட்டப்பட்டவாறு ஒரு குழந்தையை காப்பாற்ற முடியுமா என்று தெரியவில்லை.

மிகச்சிறப்பான, அழகான, திறமையான ஒளிப்பதிவு. எளிய மக்களின் வாழ்க்கையை படம்பிடித்த விதம் அவ்வளவு அழகு. அடுத்து குழிக்குள் செல்லும் கேமரா , அந்தக் குழந்தையை நம்பும்படி காட்டியது என பெரும் உழைப்பைச் செலவழித்திருக்கிறார், ஒளிப்பதிவாளர், ஓம் பிரகாஷ்.

படத்திற்கு வேகத்தையும் , திரையை விட்டு வேறு எதையும் சிந்திக்க விடாமலும் செய்கிறது, ஜிப்ரானின் இசை. இந்த படத்திற்கு இசை பெரும் பலம். எல்லோரும் சொல்வது போல அந்த டிவி விவாத நிகழ்வு தேவையில்லாததாக இருக்கிறது. படத்தின் வேகத்தைக் குறைப்பதுடன் , பார்வையாளர்களுக்கு கவனச் சிதறலையும் ஏற்படுத்துகிறது. ரூபனின் படத்தொகுப்பு அவ்வளவு கச்சிதம்.

மதிவதனி விசாரனை செய்யபடுவதுடன் ஊடாக விரியும் காட்சிகள் என கதை சொல்லலும் சிறப்பாகவே அமைந்திருக்கிறது. காட்சிகளின் ஊடாக உணர்வுகளைக் கடத்துவது அவ்வளவு எளிதானதல்ல. ஆனால் இந்த திரைப்படத்தின் நிறைய காட்சிகளில் கதைமாந்தர்களின் உணர்வுகளை எளிதாக நமக்கு கடத்தி விடுகிறார், இயக்குனர்.

அதிகாரிகளின் பொறுப்பற்ற தனத்தையும் , மாவட்ட ஆட்சியர் போன்றவர்கள் மக்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டிய அவசியத்தையும் , சட்டம் மக்களுக்கானது என்பதையும் , ஐனநாயகத்தில் மக்களின் பங்கேற்பு தான் முக்கியம் என்பதையும் , ஓட்டரசியலையும் நுட்பமான அரசியலுடன் வெளிப்படுத்த முயன்றிருக்கிறது , இத்திரைப்படம்.

குழந்தையின் அம்மாவாக நடித்திருக்கும் சுனு லட்சுமி குழந்தைகளின் அம்மாவாகவே வாழ்ந்திருக்கிறார். ஏக்கத்தை , அதிர்ச்சியை , சோகத்தை , பதைபதைப்பை அவ்வளவு இயல்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். குழந்தைகளின் அப்பாவாக வரும் ராமச்சந்திரன் துரைராஜ் தேர்ந்த நடிப்பைக் கொடுத்திருக்கிறார். அதிலும் தானும் ஒரு முன்னால் கபடி வீரர் என நினைவுபடுத்தும் காட்சி சிறப்பு.

இப்படியொரு திரைப்படத்தைப் பார்க்க பார்வையாளர்களைத் திரையரங்கிற்கு வரவழைத்ததில் நயன்தாராவின் பங்கு மிக முக்கியமானது. இத்திரைப்படத்தின் ஒரு இடத்தில் கூட நயன்தாரா சிரிக்கும்படியான காட்சி இல்லை. மக்களுக்கு பணியாற்றுவதில் ஒரு பிடிவாதமான, நேர்மையான மாவட்ட ஆட்சியரை கண்முன் நிறுத்துகிறார்.

ஒரு செய்தியாக கடந்து போகும் விசயத்தை மக்களுடன் , மக்களுக்கான அரசியலுடன் , மக்களுக்கான உணர்வுகளுடன், அதிகாரத்தின் மீதான கேள்விகளுடன் திரைப்படமாக கொடுத்திருக்கும் இயக்குநர், மீஞ்சூர் கோபி அவர்களுக்கு நன்றி !
seltoday
seltoday
பண்பாளர்


பதிவுகள் : 137
இணைந்தது : 20/06/2013
மதிப்பீடுகள் : 53

http://jselvaraj.blogspot.in/

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை