உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» செய்திகள் பலவிதம் -இது ஒரு விதம்
by சக்தி18 Today at 8:18 pm

» புத்தகம் தேவை - ஐராவதம் மஹாதேவன்
by ManiThani Today at 7:52 pm

» 5ஜி ஒவ்வொருவரையும் டிஜிட்டலுக்குள் கொண்டு வரும் - மத்திய அரசு
by பழ.முத்துராமலிங்கம் Today at 7:35 pm

» பண்ருட்டி மலைக்கோயிலில் சித்தர்கள் அமர்ந்த நிலையில் ஜீவ சமாதியாகியுள்ளதால் பக்தர்கள் பரவசம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 7:07 pm

» சித்தர்களின் பரிசு படித்ததில்!!! தொப்புளில் எண்ணை போடுங்கள்!
by பழ.முத்துராமலிங்கம் Today at 6:58 pm

» வலிமிகும் & வலிமிகா இடங்கள்.
by பழ.முத்துராமலிங்கம் Today at 6:52 pm

» விளக்கேற்றிய வீடு வீண் போகாது.
by பழ.முத்துராமலிங்கம் Today at 6:43 pm

» பில் கேட்ஸ் கண்டு பிடித்த டாயிலெட்.
by பழ.முத்துராமலிங்கம் Today at 6:38 pm

» கூட்டணி பேச்சுக்கு மிரட்டல் வருதாம்…!
by பழ.முத்துராமலிங்கம் Today at 6:36 pm

» கொத்தனார் சூடி
by பழ.முத்துராமலிங்கம் Today at 6:36 pm

» சிலைகளோட வேல்யூ இப்பதான் தெரிஞ்சுதாம்..!
by பழ.முத்துராமலிங்கம் Today at 6:35 pm

» பம்லிடி வௌவால் – பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 6:05 pm

» 83 ஆண்டுகளாக 'மட்டன் பிரியாணி' பிரசாதம்: வரும் 25-ம் தேதி திருவிழாவுக்காக மதுரை பக்தர்கள் காத்திருப்பு
by பழ.முத்துராமலிங்கம் Today at 6:05 pm

» சுய அறிமுகம்.
by ஞானமுருகன் Today at 5:21 pm

» ஒரு கருவறை... இருவாசல்கள்... சூரியத் தேரில் அருள்புரியும் சாரங்கபாணி பெருமாள்!
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:54 pm

» மின் வாகன சார்ஜ் மையங்கள் ‘பெல்’ நிறுவனம் அமைக்கிறது
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:24 pm

» உலகின் முதல் 5 ஜி கால்- சக்கைபோடு போட்ட இசட்டிஇ.!
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:20 pm

» புத்தகம் கிடைக்குமா ?
by gans Today at 4:10 pm

» அன்புக்காக அன்பு வைத்திடு, அதுவே நிலைத்து நிற்கும்...!!
by பழ.முத்துராமலிங்கம் Today at 3:56 pm

» பிறக்கும்போதே கொடியோடு பிறந்தவன்...!!
by பழ.முத்துராமலிங்கம் Today at 3:43 pm

» ஆன்மிக படங்கள்
by ayyasamy ram Today at 2:50 pm

» இங்கு சிறந்த முறையில் பட்டி டிங்கரிங் பார்த்து பூச்சு பூசப்படும்...!! - வாட்ஸ் அப் பகிர்வு
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:40 pm

» உதவி தேவை
by கவுண்டர் Today at 12:40 pm

» வண்ணாரப்பேட்டை-டி.எம்.எஸ். இடையே இன்று முதல் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:33 pm

» காளானின் மருத்துவ பயன்கள்
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:29 pm

» ஆண்களை பெண்களாக மாற்றிய கேரள அரசின் பித்தலாட்டம் அம்பலம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:06 pm

» ஆன்மிக பொன்மொழிகள்!
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:55 am

» நண்பர்களே
by கவுண்டர் Today at 10:05 am

» கோணலாக இருந்தாலும் குறையாத ருசி - விடுகதை
by ayyasamy ram Today at 6:15 am

» “சினிமா இசையில் கட்டுப்பாடுகள் அதிகம்” -ஏ.ஆர்.ரகுமான்
by ayyasamy ram Today at 5:49 am

» நடன பார்கள் பற்றிய சில சட்ட பிரிவுகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு
by ayyasamy ram Today at 5:45 am

» எண்ணூர் துறைமுகம்-மாமல்லபுரம் இடையே வெளிவட்ட சாலை அமைக்க ஜப்பான் ரூ.3,420 கோடி கடன் -டெல்லியில் ஒப்பந்தம் கையெழுத்து
by ayyasamy ram Today at 5:42 am

» சொல்லிவிடு வெள்ளி நிலவே
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» ‘வயசு அப்படி…’- சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:44 pm

» பிரமாண்டப் பெருமாள் சிலைக்கு மீண்டும் சிக்கல்! - உயர்நீதிமன்றம் திடீர் நடவடிக்கை
by T.N.Balasubramanian Yesterday at 7:42 pm

» ஏழு கழுதை வயசு ஆகுது… இன்னும் ! - வாட்ஸ் அப் பகிர்வு
by T.N.Balasubramanian Yesterday at 7:34 pm

» இது வாட்ஸ் அப் கலக்கல்
by ayyasamy ram Yesterday at 7:28 pm

» 'தல' தோனி சிறப்பில் இந்தியா 'த்ரில்' வெற்றி
by T.N.Balasubramanian Yesterday at 7:26 pm

» ஏழு ஏழு ஏழு ஏழு ஏழு....
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» குடைமிளகாயின் மருத்துவப் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 5:58 pm

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» ரூபே கார்டு மூலம் கதர் துணி ஷாப்பிங் செய்த மோடி
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:50 pm

» குலதெய்வம் விஞ்ஞானத்தோடு எப்படி ஒத்துபோகின்றது...?
by ராஜா Yesterday at 5:25 pm

» `வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்!' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» ஆறு விக்கெட் வீழ்த்தினார் சகால்: 230 ரன்னில் ஆஸி., ஆல் அவுட்
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:12 am

» 'வாட்ஸ் ஆப்' மூலம் விவாகரத்து; நாக்பூர் நீதிமன்றத்தில் புதுமை
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:44 am

» அமெரிக்க வாழ் இந்தியர்கள் 3 முக்கிய பதவிகளில் நியமனம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:45 am

» பிறர் இன்பம் கண்டு மகிழ்வது பெரும் புண்ணியம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:41 am

» சி.பி.ஐ. சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா திடீர் நீக்கம் மத்திய அரசு உத்தரவு
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:40 am

Admins Online

'சொன்னால் நம்ப மாட்டீர்கள்' என்னும் நுாலிலிருந்து:

'சொன்னால் நம்ப மாட்டீர்கள்' என்னும் நுாலிலிருந்து:

Post by ayyasamy ram on Sun Nov 12, 2017 6:32 am

சின்ன அண்ணாமலை எழுதிய, 'சொன்னால் நம்ப மாட்டீர்கள்'
என்னும் நுாலிலிருந்து:
-
திருச்சியில், ஒரு காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் பேசிய பின்,
சென்னை வருவதற்காக ரயில்வே ஜங்ஷனுக்கு வந்தேன்.
வண்டியில் இடமில்லாமல் அங்குமிங்கும் போய்க்
கொண்டிருந்தேன். திடீரென, ஒரு போலீஸ் அதிகாரி வந்து,
'உங்களை, சி.எம்., கூப்பிடுகிறார்...' என்றார்.

'யார், அண்ணாதுரையா...' என்றேன். 'ஆம்' என்றார்.

அவரை பின் தொடர்ந்து, அண்ணாதுரை இருந்த பெட்டிக்கு
போனேன். அவர் என்னை வரவேற்று, 'சென்னைக்கு தானே...'
என்றார். 'ஆம்' என்றதும், 'என்னுடன் பயணம் செய்வதில்,
உங்களுக்கு ஆட்சேபனை இல்லையே...' என்றார்.

'இல்லை' என்று கூறி, அவருடன் பயணத்தை துவங்கினேன்;
ரயில் நகர ஆரம்பித்ததும், 'உங்களிடம் முதல் வகுப்பு டிக்கெட்
இருக்கிறதா?' என்று கேட்டார்.

'வித் அவுட்டில் வருவதாக நினைத்து விட்டீர்களோ... இதோ,
என் முதல் வகுப்பு டிக்கெட்...' என்று, டிக்கெட்டை எடுத்து
காண்பித்தேன்.

'என் தம்பிமார்களில் சிலர், என்னுடன் வரும் தைரியத்தில்
டிக்கெட் வாங்காமல் பயணம் செய்வதுண்டு. அவர்களுக்காக,
நான் டிக்கெட் வாங்குவது வழக்கம்; அதனால் தான் கேட்டேன்...'
என்றார்.

'நான், உங்களை நம்பி பயணம் செய்பவன் இல்லயே...'
என்றேன்.

'நீங்கள் சொல்லும் அரசியல் கருத்து எனக்குப் புரிகிறது;
திருச்சிக்கு எங்கே வந்தீர்கள்?' என்று கேட்டார்.
'ஒரு காங்கிரஸ் பொதுக் கூட்டத்திற்காக வந்தேன்...' என்றேன்.

'சரி... தி.மு.க., ஆட்சிக்கு வந்திருக்கிறது; இந்த ஆட்சி எவ்வளவு
நாள் நீடிக்குமென்று நினைக்கிறீர்கள்?' என்று எக்குத்தப்பான
கேள்வியை கேட்டார்.

நான் சிறிது யோசித்து, 'நுால் தீருகிற வரை, கழி சுற்றிக்
கொண்டேயிருக்கும்...' என்றேன்.

'விளக்கம் தேவை...' என்றார்.

'இந்தி எதிர்ப்பு என்ற மாயை நீங்கும் வரை, தி.மு.க., ஆட்சி
இருக்கும்...' என்றேன்.

'இதுதான், காங்கிரஸ்காரர்களுடைய அபிப்ராயமா?' என்றார்.

'பெரும்பாலோரின் எண்ணம்...' என்றேன்.

'தேர்தலில், காங்கிரஸ்  தோற்றதற்கு என்ன காரணம் என்று
சிந்தித்தீர்களா...' என்று கேட்டார்.

'கடந்த, 1962ல் நடந்த தேர்தலில் உங்களை காஞ்சிபுரத்தில்
தோற்கடித்தது தான், காங்கிரஸ் தோற்றதற்குக் காரணம்...'
என்றேன்.

'எப்படி?' என்றார்.

'உங்களை, 1962ல் வெற்றி பெற விட்டிருந்தால், இவ்வளவு
முனைப்பாக வேலை செய்து, தங்களுக்கு பரம எதிரியான
ராஜாஜி போன்றோருடன் சேர்ந்து, கூட்டணி அமைத்திருக்க
மாட்டீர்கள்;

எதிர்க்கட்சி தலைவராகவே இருந்திருப்பீர்கள்; காலம்
ஓடியிருக்கும். இதை, நான் அப்போதே காமராஜரிடம்
சொன்னதுடன், காஞ்சிபுரம் தேர்தல் கூட்டங்களில் பேசவும்
மறுத்து விட்டேன்...' என்றேன்.

பின்னர் இருவரும் படுத்து துாங்கி விட்டோம். காலையில்
எழுந்ததும், செங்கல்பட்டு ஸ்டேஷனில், காலை
ஆகாரத்தை அன்புடன் எனக்கு அவரே பரிமாறினார்.
அது முடிந்ததும், என்னிடமிருந்த ஒரு புத்தகத்தை வாங்கிப்
பார்த்தார்; அது, நான் எழுதிய, 'மானமே பெரிது' என்ற
நாவல்!

'இந்த நாவல், நம் சந்திப்பின் நினைவாக என்னிடமே
இருக்கட்டும்; இதில், 'அன்பளிப்பு' என்று எழுதி,
கையெழுத்திட்டு தாருங்கள்...' என்று புத்தகத்தை நீட்டினார்.
கையெழுத்து போட்டுக் கொடுத்தேன்.

மாம்பலம் ஸ்டேஷன் வந்ததும், அண்ணாதுரையிடம்
விடைபெற்று, ரயிலை விட்டு இறங்கினேன்.

உண்மையில், என் மனதில் அது வரையில், அண்ணாதுரையை
பற்றி இருந்த துவேஷ எண்ணம், ஸ்டேஷனை விட்டு ரயில்
போனதைப் போல், என் இதயத்தை விட்டு போய் விட்டது!
-
-----------------------------------

நடுத்தெரு நாராயணன்-
வாரமலர்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 42361
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 11755

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

Re: 'சொன்னால் நம்ப மாட்டீர்கள்' என்னும் நுாலிலிருந்து:

Post by Dr.S.Soundarapandian on Sun Nov 12, 2017 5:47 pm

சிரிக்கச் சிரிக்கப் பேசும் சின்ன அண்ணாமலையின் பேச்சை மேடைக்குக் கீழ் அமர்ந்து கேட்டு இரசித்தவர்களில் நானும் ஒருவன்!
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 4652
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 2445

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை