ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
மனதை பலப்படுத்தும் வரிகள் - M.S. உதயமூர்த்தி
 krishnaamma

மருந்து சீட்டை டாக்டர்கள் கையால் எழுத கூடாது'
 krishnaamma

10 நாட்களுக்குள் மூன்று இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி?- மகிழ்ச்சியில் ரசிகர்கள்
 krishnaamma

தண்ணீர் பருகுவதால் உடலில் உள்ள பல பிரச்சினைகள் தீர்க்கிறது
 krishnaamma

என் பெயர் பாரதிசந்திரன்
 krishnaamma

சுய அறிமுகம்
 krishnaamma

பாலா தமிழ் கடவுள்
 krishnaamma

தில்குஷ் கேக்!
 krishnaamma

அனைவருக்கும் இனிய வணக்கம்
 krishnaamma

அமுதாவின்   அன்பான  வணக்கங்கள் !
 krishnaamma

வணக்கம் அன்பு நண்பர்களே
 krishnaamma

அருமை உறவுகளே
 krishnaamma

வணக்கம் நண்பர்களே ...
 krishnaamma

கும்பகோணம் கோயிகள் 62.
 krishnaamma

உலகளவில் மிகவும் பிரபலமான உணவு வகைகளின் சமையல் குறிப்புகள் ! ஹம்முஸ் !
 krishnaamma

பெண்கள் ஆண் நண்பரை வாடகைக்கு எடுக்கும் புதிய செயலி அறிமுகம்
 ராஜா

முத்தான பத்தாவது வருடத்தில் அடியெடுத்து வைக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வாழ்த்துகள்
 ராஜா

வாழ்க்கையின் சாரம்
 ayyasamy ram

விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸின் பிறந்த தினம் – செப்டம்பர் 19
 ayyasamy ram

உணவுகளின் போட்டோகள் ! :) - மெது பக்கோடா வித் ஆனியன் !
 krishnaamma

அதிக காலடிபடாத மலைவாசஸ்தலம்... நெல்லியம்பதிக்கு போயிருக்கீங்களா?
 krishnaamma

1330 திருக்குறளும் ஆடியோ வடிவில் உரையுடன் தரவிறக்க
 krishnaamma

புதிய தலைமை நடத்துனர்
 krishnaamma

பட்சண டிப்ஸ்..
 krishnaamma

ஹெர்பல் பூரி!
 krishnaamma

தாளிப்பு என்றால் என்ன? ஏன் ?
 krishnaamma

ஊறவைத்து தோலை உரி…! – வீட்டுக் குறிப்புகள்
 krishnaamma

பத்திரங்கள் பதிவு செய்ய சாட்சிகள் தேவையில்லை, ஆதார் எண் இருந்தால் போதும்!
 krishnaamma

சிந்திக்க!
 krishnaamma

39,000 பதிவுகளைக் கடந்துள்ள திரு அய்யாசாமி ராம் அவர்களுக்கு வாழ்த்துகள்
 krishnaamma

தற்போதைய செய்திகள் - தொடர் பதிவு
 ayyasamy ram

ஏளனச் சிரிப்பு – கவிதை
 T.N.Balasubramanian

செல்வாக்கு - ஒரு பக்க கதை
 ayyasamy ram

பொன்மொழிகள் - ஷீரடி பாபா
 ayyasamy ram

நாட்டின் முதல் பெண் ஐ.ஏ.எஸ்., அதிகாரி மரணம்
 ayyasamy ram

இந்திய - பாக்., எல்லையில் 'செல்பி டவர்'
 ayyasamy ram

தோழன் [Thozhan]
 drkavint

*ATM கார்டு மோசடிகளுக்கு முற்றுப் புள்ளி வைத்தது கனரா வங்கி*
 krishnaamma

பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்!
 krishnaamma

2018-ம் ஆண்டுக்கான குருப்பெயர்ச்சி எப்போது?
 சிவா

85015 பதிவுகள் கடந்த நம் தல சிவா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
 krishnaamma

உடையார் - தெளிவான மின்நூல் | Udaiyar Pdf
 பிரபாகரன் ஒற்றன்

வாழ்வியல் சிந்தனைகள் சில
 சிவனாசான்

ஊழலின் தந்தையே தி.மு.க-தான்
 சிவனாசான்

வாரத்துல ஒருநாள்தான் மனைவிக்கு பயப்படுவேன்”
 சிவனாசான்

கல்விமானுக்கு எழுந்த சந்தேகம்! -நீதிக்கதை
 SK

ஸ்பரிசம் - சிறுகதை
 ஜாஹீதாபானு

திருக்குறளின் இலக்கண நெறி அறிவோம்
 T.N.Balasubramanian

ஆரோவில்லில் மூங்கில் தினம்
 ayyasamy ram

தலைக்கு மேல் தனம் வந்தாலும் தலகாணியின் மேல் உட்காராதே. - பழமொழி விளக்கம்
 T.N.Balasubramanian

ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு விராட் கோலி, மீராபாய் சானு பெயர்கள் பரிந்துரை!
 ayyasamy ram

இன்றைய மாணவர்கள்
 ayyasamy ram

வாட்ஸ் அப் -ல் ரசித்தவை - பல்சுவை
 ayyasamy ram

இந்த வார சினிமா செய்திகள்
 ayyasamy ram

இந்த வார கருத்து சித்திரம்
 சிவனாசான்

பொன்மொழிகள் – வேதாத்ரி மகரிஷி
 சிவனாசான்

வானிலை அறிக்கை - தொடர் பதிவு
 சிவனாசான்

எச்.ராஜா விவகாரத்தில் தாமாக முன்வந்து வழக்கு ஏன்? - ஐகோர்ட் நீதிபதிகள் விளக்கம்
 சிவனாசான்

மாட்டு வண்டி ஊர்வலம்: புதுமண ஜோடி அசத்தல்
 சிவனாசான்

உவரி கடலில் தத்தளித்த சிறுவர்கள்! - சீருடையுடன் களமிறங்கிக் காப்பாற்றிய காவலர்
 ayyasamy ram

நாவல்கள் | தொடர்கள்

Admins Online

எழுத்து நம் ஸ்பெஷாலிட்டி எழுத்ததிகாரன் கம்யூனிட்டி!

View previous topic View next topic Go down

எழுத்து நம் ஸ்பெஷாலிட்டி எழுத்ததிகாரன் கம்யூனிட்டி!

Post by Pranav Jain on Mon Oct 30, 2017 2:31 pm

"I can’t understand why people are frightened of new ideas. I’m frightened of the old ones"

-John Gage

"புதிய கருத்துக்களை ஏற்றுக்கொள்ள மக்கள் ஏன் பயப்படுகிறார்கள் என்று எனக்கு புரியவில்லை, ஆனால், பழைய கருத்துக்களை(சிலவற்றை) கண்டு நான் பயப்படுகிறேன்."

எழுத்தாலும், சிந்தனையாலும், மொழியாலும் வாழ்வியல் இலக்கணத்தை உருவாக்கி பெயர்பெற்றவர்கள் (தமிழர்கள்) நம் முன்னோர்கள். இப்போது, நாம் அதிலிருந்து சிலவற்றை வெறுத்து ஒதுக்கிவிட்டு புதிதாக சிந்திக்க வேண்டிய தருணத்தில் இருக்கிறோம்!

----->>>

-எழுத்ததிகாரன்.
avatar
Pranav Jain
பண்பாளர்


பதிவுகள் : 160
மதிப்பீடுகள் : 45

View user profile

Back to top Go down

Re: எழுத்து நம் ஸ்பெஷாலிட்டி எழுத்ததிகாரன் கம்யூனிட்டி!

Post by Pranav Jain on Wed Nov 08, 2017 5:52 am

சிந்தனைகள், பழமொழிகள் என்பது அவரவர் வாழும் காலத்திற்கேற்பவும், பழக்க வழக்கத்திற்கேற்பவும், சூழ்நிலைகளைக் கொண்டும் அமைவதாகும். உதாரணமாக நாம் சொல்லும் கருத்துக்களை எளிதில் புரிந்து கொள்ளாதவர்களை "டியூப் லைட்" என்று நாம் விளையாட்டாக சொல்வதுண்டு. ஏனென்றால் டியூப் லைட் என்பது சுவிட்ச் அழுத்தியவுடன் எரியாமல் (வெளிச்சம் தராமல்), சில வினாடிகளுக்கு மின்னலடித்துவிட்டு அதன் பிறகுதான் முழுமையான வெளிச்சத்தைத் தரும். இதனால்தான் எளிதில் புரிந்து கொள்ளாதவர்களை அடையாளம் கட்டுவதற்காக டியூப் லைட்டை உதாரணமாக கூறினார்கள். இது பழைய காலகட்டத்திற்கு பொருந்தும் முறை.

ஆனால், இன்றும் நாம் அப்படி சொல்லிக்கொண்டிருந்தால் நாளைய தலைமுறையினர் நம்மை பார்த்து ஏளனமாக சிரிப்பார்கள். ஏனென்றால் பழங்காலத்தில் மின்னலடித்து எரிந்துகொண்டிருந்த டியூப் லைட்டுகள் இன்று சுவிட்ச் அழுத்தியவுடன் எரிகிறது!

இப்போது, நாம் புதிதாக சிந்திக்க வேண்டிய தருணத்தில் இருக்கிறோம்!
--->>
- எழுத்ததிகாரன்.
avatar
Pranav Jain
பண்பாளர்


பதிவுகள் : 160
மதிப்பீடுகள் : 45

View user profile

Back to top Go down

Re: எழுத்து நம் ஸ்பெஷாலிட்டி எழுத்ததிகாரன் கம்யூனிட்டி!

Post by Pranav Jain on Sun Jan 07, 2018 8:58 am

ரூபாய் நோட்டுக்களை மாற்றி பண பரிவர்த்தனை நவீன முறையில் அமைத்து "டிஜிட்டல் இந்தியா" என்னும் திட்டத்தை உருவாக்க நினைக்கும் பிரதமர் மோடி அவர்கள் இன்னும் வானொலியிலில்தான் பேசிக்கொண்டிருக்கிறார் என்பது வேடிக்கையாக இருக்கிறது!...

ஒருவேளை டிஜிட்டல் அலைவரிசையாக இருக்குமோ?....
---->>
- எழுத்ததிகாரன்.
avatar
Pranav Jain
பண்பாளர்


பதிவுகள் : 160
மதிப்பீடுகள் : 45

View user profile

Back to top Go down

Re: எழுத்து நம் ஸ்பெஷாலிட்டி எழுத்ததிகாரன் கம்யூனிட்டி!

Post by aeroboy2000 on Sun Jan 07, 2018 2:05 pm

ரேடியோவில் பேசி விட்டு

இமெயில்

எஸ்‌எம்‌எஸ் செய்வார்

1922 க்கு மிஸ் கால்
கொடுக்கச் சொல்லி


பின் அதில் பல மொழிகளில் பேசுவார்....இந்தி கற்றுக்கொள்ள

ஒரு முறை தமிழில் கேட்டு விட்டு
ரெக்கார்ட் பண்ணிக் கொள்ளுங்கள்

மறு நாள் மறுமுறை இந்தியில் கேளுங்கள்பாடகன் பாடகன் பாடகன் பாடகன்
avatar
aeroboy2000
பண்பாளர்


பதிவுகள் : 181
மதிப்பீடுகள் : 64

View user profile

Back to top Go down

Re: எழுத்து நம் ஸ்பெஷாலிட்டி எழுத்ததிகாரன் கம்யூனிட்டி!

Post by Pranav Jain on Wed Jan 10, 2018 11:56 am

"பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது" என்று முன்னோர்கள் சொன்னார்கள். ஆனால், வார நாட்களில் வரும் புதன் கிழமைதான் நல்ல காரியங்கள் செய்ய உகந்த நாள் என்று நாம் அதை தவறாகவே புரிந்து கொண்டிருக்கிறோம். ஆனால் புதன் கிழமைதான் வாரா வாரம் வந்து கொண்டிருக்கிறதே? இது எப்படி கிடைக்காமல் போகும் என்று நாம் யாரும் சிந்திப்பதில்லை...

முன்னோர் சொல்லிட்டாங்களா? அவ்வளவுதான். அதை யாரும் டச் பண்ணக் கூடாது.... மீறி டச் பண்ணிட்டோம்னா.... அவ்வளவுதான். நாம காலி!!
நீ என்ன புத்திசாலியா? இல்ல, நீ மட்டும்தான் அறிவாளியா? முன்னோர் சொன்னதை நீ எப்படி மாத்தி சொல்லலாம்?. அப்படின்னு நம்மள உண்டு இல்லன்னு ஆக்கிடுவாங்க. அறிவு இருக்கிறவன் புதுசா மாத்தி சொல்லத்தான் நினைப்பான். ஆனால், எல்லோருக்குமா அறிவு இருக்கும்?... என்னை மாதரி ஒரு சிலருக்கு மட்டும்தான் இருக்கும்.... எனக்கு இருக்கு....!

ஹா... ஹா.. ஹா...

SORRY பாஸ்!....

எனக்கு தெரியும். கண்டிப்பா இந்நேரம் என்னை எல்லாரும் மனசுக்குள்ள நல்லா திட்டி இருப்பீங்க. நான் தலைக்கனமா பேசுறதா நினைச்சிட்டீங்கதானே? அப்படியெல்லாம் இல்ல... தலைப்புக்கு விளக்கம் தான் சொல்லியிருக்கேன். புரியலல்ல?... தொடர்ந்து படிங்க புரியும்....

பொன் என்பது ஒருவருக்கு கிடைக்கக்கூடிய செல்வத்தை குறிக்கும். புதன் என்பது கல்வியை குறிக்கும். எனவே, ஒருவருக்கு எந்த நேரத்திலும் செல்வங்கள் கிடைக்கலாம். பிறருடைய செல்வங்களைக் கூட நாம் பெற்றுக்கொள்ள முடியும். ஆனால், கல்வியானது அவ்வாறு கிடைக்க முடியாது. நாம் படித்து வளர்த்துக்கொண்டால் மட்டுமே கல்வியறிவு பெற முடியும். பிறரால் நமக்கு கிடைக்காது. என்பதை உணர்த்தும் விதமாக சொல்லப்பட்டதுதான். இந்த பழமொழி என்பது எனது கருத்து. அதனால்தான் "இளமையில் கல்" என்றும் சொல்லியிருக்கக் கூடும். காலம் தவறிவிட்டால் பிறகு கல்வி பயில முடியாது அல்லவா. (இன்னைக்கு இருக்குற இன்டர்நெட் வசதியெல்லாம் அன்னைக்கு இருந்திருக்காதுல்ல... ஒருவேளை இருந்திருந்தா இப்படி சொல்லியிருக்க மாட்டாங்களோ என்னவோ...)

இதையே ஜோதிடத்தோடு ஒப்பிட்டும் சொல்லலாம், சும்மா படிச்சு பாருங்க. இதுவும் நம்புற மாதிரிதான் இருக்கும். அதாவது, ஒருவருடைய ஜாதகத்தில் தனது பார்வையின் மூலம். (அந்தப்பார்வை இல்லங்க. இது குரு பார்வை) யோகங்களை வழங்கக்கூடிய குரு பகவான் பொன் நிறம் உடையதாக சொல்லப்படுகிறது. அதனால் பொன் என்பதற்கு குருவை அடையாளமாக கொள்ளலாம். குருவின் 5,7,9 ஆகிய பார்வைகள் எல்லோருக்கும் கண்டிப்பாக கிடைக்கும். ஏன்னா? இருக்குற 12 கட்டத்துல ஏதாவது மூணு இடங்களையெல்லாம் பார்த்துத்தானே ஆகணும்? So, குரு இருக்க, குரு பார்க்க கோடி குற்றம் நிவர்த்தியாகிடும் என்பது சோதிட விதி. So, பொன் கெடச்சுடுச்சா?

ஆனால், புத்தியையும், அறிவையும் வழங்கக்கூடிய கல்விகாரகன், வித்யாகாரகனான புதன் கிரகத்தின் பலன் எல்லோருக்கு முழுமையாக கிடைப்பதில்லை. காரணம் புதன் கிரகமானது எப்போதும் சூரியனோடு பயணிக்கக் கூடியது. ஒன்னு, சூரியனோடு சேர்ந்து இருக்கும். இல்லேன்னா, சூரியனுக்குப் பக்கத்தில் இருக்கும். பொதுவாக சூரியனோடு சேரும்போது எல்லா கிரகங்களும் தங்கள் பலத்தை இழந்துவிடும் என்பது சோதிட விதி. எனவே எல்லா நேரத்திலும் சூரியனோடு இருக்கக் கூடிய புதன் தனது பலம் இழந்து விடுகிறார். அதனால் புதனுடைய முழு பலனும் கிடைப்பதில்லை. அதுமட்டுமல்லாமல், சூரியனை சுற்றும் கிரகங்களில் புதன் மிகவும் வேகமாக சுற்றிவரக்கூடிய கிரகம். எனவே சூரியனின் பாதிப்பிலிருந்து விலகி இருக்கும் நேரமும் குறைவாகவே இருக்கும். அதனால்தான் பொன் கிடைத்தாலும் (குருவின் பார்வை பலன் முழுமையாக கிடைத்தாலும்) புதன் கிடைக்காது (புதன் கிரகத்தின் முழு பலன் கிடைக்காது) என்று சொல்லியிருக்கலாம் என்பது புதனால் எனக்கு கிடைத்த அறிவுக்கு எட்டிய வரையில் உண்மை.

குறிப்பு: புதனானது உச்சம் பெற்ற லக்கினாதிபதியுடன் சேரும்போது, அல்லது தன்னோடு சேரும் கிரகங்களின் வலிமை, தான் இருக்கும் இடத்தின் அதிபதியின் பலம், காரக பலம், பரிவர்த்தனை யோகம், இவற்றால் மட்டுமே புதனின் பலம் ஒருவருக்கு முழுமையாக கிடைக்க முடியும். இல்லையென்றால் சூரியனுடைய ஒளியில் அஸ்தனமாகி வலுவிழந்துவிடும்.

அறிவுக்கு காரகன் புதன் அல்லவா? ஆனால், உலகத்தில் அறிவாளிகள் குறைவுதானே....? So, எல்லாருக்கும் புதன் அருள் கிடைக்காது!

இதெல்லாம் நானா சொல்லுறேன்... எல்லாம் என் கிரகம்... இப்படியெல்லாம் எழுத சொல்லுது. இதுமாதிரி நிறைய சொல்லலாம்.... அவங்க அவங்க அறிவுக்கு தகுந்தமாதரி...

--->>
- எழுத்ததிகாரன்.

Posted On: 15/8/2012, 7:08 am
avatar
Pranav Jain
பண்பாளர்


பதிவுகள் : 160
மதிப்பீடுகள் : 45

View user profile

Back to top Go down

Re: எழுத்து நம் ஸ்பெஷாலிட்டி எழுத்ததிகாரன் கம்யூனிட்டி!

Post by Pranav Jain on Tue Feb 27, 2018 3:52 pm

தற்போது அரசியல் களத்திற்கு வருபவர்கள் எல்லாம் மக்களுக்கு சேவை செய்ய வருவதாகவே முழக்கமிடுகிறார்கள். ஆனால் மக்களுக்கு சேவை செய்பவன் மன்னன் இல்லை. ஒரு மன்னனால் மக்களுக்கு சேவை செய்யவும் முடியாது. அதனால்தான் ஒரு மன்னன் மந்திரிகளை தேர்ந்தெடுக்கிறான். ஏனென்றால் ஒரு மன்னனால் அனைத்து மக்களை சந்திக்கவே முடியாது. அதற்கே நேரம் போதாது. பிறகு எப்படி சேவை செய்ய முடியும்? எப்படி ஆட்சி நடத்த முடியும்?. எனவே, மக்களுக்கு சேவை செய்ய வருவதாக சொல்பவர்கள் அரசியலுக்கு தகுதியற்றவர்கள். மக்களை ஏமாற்ற நினைப்பவர்கள்.

தனது ஆட்சியின் கீழுள்ள மக்களுக்கு உதவி செய்து அமைதியான வாழ்வை வழங்குபவன்தான் மன்னன். இந்த உதவியைத்தான் "இலவசம்" என்று சொல்லி "அவமானம்" என்று சொல்லி மக்களை ஏமாற்ற நினைக்கிறார்கள் இன்றைய அரசியல்வாதிகள். ஒரு சிலர் புத்திசாலி என்று நினைத்துக்கொண்டு இலவசம் வேண்டாம் வேலை கொடு என்று சொல்கிறார்கள். ஆனால், படித்தவர்களுக்குத்தான் வேலை கொடுக்க முடியும். ஆனால் படிக்காத பாமர மக்களுக்கு என்ன செய்வது? எனவே படித்தவர்கள் எல்லாம் சுயநலமாக சிந்திப்பதை தவிர்க்க வேண்டும். அதே நேரத்தில் மக்களுக்கு உதவி வழங்கவேண்டுமானால் அரசிடம் பொருளாதாரம் இருக்க வேண்டும். அரசுக்கு வருமானம் இருந்தால்தான் பொருளாதாரம் இருக்கும். எனவே, முதலில் வருமானத்தை ஏற்படுத்தி அதை வைத்து மக்களுக்கு என்னென்ன நல்லது செய்துகொடுக்க முடியும் என்பதை சிந்தித்து, ஆலோசித்து அதை தனது அதிகாரத்திற்கு உட்பட்ட மந்திரிகளைக்கொண்டு செயல்படுத்துபவன்தான் மன்னன்.

அதேபோல, ஒரு நாட்டின் மக்களை பிரித்தாளும் தகுதியுடையவன் மன்னன் மட்டும்தான். எனவேதான் யாரெல்லாம் பொருளாதாரத்தில் பின்தங்கி இருக்கிறார்கள்? யாருக்கு எவ்வளவு உதவி வழங்கவேண்டும்? என்பதை அறிந்து செயல்படுத்துவதற்காகத்தான் மக்களை பிரித்து அடையாளப்படுத்தினான் மன்னன். இதைத்தான் இன்று "ஜாதி" என்ற பெயரில் கலவரத்தை தூண்டுகிறார்கள் சிலர்.

எனவே, மக்களுக்கு சேவை செய்பவன் மன்னன் இல்லை. மக்களை ஒன்றுபடுத்தி சிந்திக்கவும், செயல்படுத்தவும், கட்டளையிடவும், காப்பாற்றவும் தெரிந்தவன்தான் மன்னன். இதுதான் பழங்கால ஆட்சி முறை. இது தவறியதால்தான் இன்று பலதவறுகள் நடக்கிறது.

இதை நான் சொல்லவில்லை, உலகப்பொதுமறை இயற்றிய தமிழன் திருவள்ளுவர் சொன்னது.

இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்லது அரசு.

- திருக்குறள் - இறைமாட்சி - எண்: 385

இதுவே  என் கட்டளை!...  என் கட்டளையே சாசனம்!!
ஜெய் மகிழ்மதி. (சும்மா கிண்டல்)

- எழுத்ததிகாரன்


Posted On: 2/1/2018, 3:50 am
avatar
Pranav Jain
பண்பாளர்


பதிவுகள் : 160
மதிப்பீடுகள் : 45

View user profile

Back to top Go down

Re: எழுத்து நம் ஸ்பெஷாலிட்டி எழுத்ததிகாரன் கம்யூனிட்டி!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum