உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» தமிழ் மின் நூலகம் - 8600 புத்தகங்கள்
by i6appar Yesterday at 8:48 pm

» தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....
by kabeerdoss Yesterday at 8:16 pm

» மதுபாலா: இவருக்கு ஏன் கூகுள் டூடுள் வெளியிட்டது? - 5 சுவாரஸ்ய தகவல்கள்
by T.N.Balasubramanian Yesterday at 6:45 pm

» பிச்சைக்காரனும் அறிவாளியே (வாரியார் அருள் அமுதத்தில் வழங்கியது)
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm

» பெண் குழந்தையை பெற்றெடுத்த தாய் மூளைச்சாவு: உடலுறுப்புகள் தானம்!
by T.N.Balasubramanian Yesterday at 5:18 pm

» காப்பியை கைவிடுவதால் ஏற்படும் நன்மைகள்
by T.N.Balasubramanian Yesterday at 5:12 pm

» எல்லா அவசர உதவிக்கும் ஒரே எண் ‘112’தமிழ்நாடு உள்பட 14 மாநிலங்களில் 19-ந்தேதி அமலுக்கு வருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 5:02 pm

» 2019 ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடர் அட்டவணை, இந்திய நேர விவரங்கள்
by T.N.Balasubramanian Yesterday at 4:57 pm

» ரூ 4 கோடி மதிப்பிலான மொபைல் போன்களுடன் கன்டெய்னர் லாரியை கடத்திய கும்பல்
by T.N.Balasubramanian Yesterday at 4:51 pm

» மோடியைத் தாக்கி மம்தா எழுதிய கவிதை - வைரலாகும் வரிகள்
by T.N.Balasubramanian Yesterday at 4:46 pm

» பாலகுமாரன் பதில்கள்
by T.N.Balasubramanian Yesterday at 4:39 pm

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by kabeerdoss Yesterday at 3:04 pm

» கொற்கை pdf
by Monumonu Yesterday at 1:30 pm

» சாக்லேட் பக்கங்கள்
by kuloththungan Yesterday at 1:00 pm

» இது வாட்ஸ் அப் கலக்கல்
by சக்தி18 Yesterday at 12:54 pm

» சென்னைக்கு வரும் காஷ்மீரிகள்: வெடிகுண்டுச் சத்தத்திலிருந்து வெளியேறி புறக்காற்றை சுவாசிக்க வாய்ப்பு
by ayyasamy ram Yesterday at 7:42 am

» தேர்தல் கமிஷனராக சுஷில் சந்திரா நியமனம்
by ayyasamy ram Yesterday at 4:53 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Yesterday at 4:50 am

» கம்யூ., எம்.எல்.ஏ.,வை கதறவிட்ட பெண் கலெக்டர்: யார் இந்த ரேணுராஜ்?
by ayyasamy ram Thu Feb 14, 2019 9:33 pm

» அரசியல் துளிகள்.
by ayyasamy ram Thu Feb 14, 2019 9:29 pm

» நீதி மன்ற துளிகள்.
by T.N.Balasubramanian Thu Feb 14, 2019 8:31 pm

» உயர்வு பெறுவதற்கு ஒரே வழி...!!
by T.N.Balasubramanian Thu Feb 14, 2019 8:29 pm

» என்னை முதல்-அமைச்சராக்க ஜெயலலிதா விரும்பினார்: விஜயசாந்தி
by T.N.Balasubramanian Thu Feb 14, 2019 7:19 pm

» தன்னுடைய சொந்த வாழ்க்கையையே இயக்கும் கங்கணா ரணாவத்
by ayyasamy ram Thu Feb 14, 2019 6:09 pm

» கட்சி முடிவு செய்தால் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவேன்- வைகோ பேட்டி
by T.N.Balasubramanian Thu Feb 14, 2019 6:00 pm

» கௌரவம் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Feb 14, 2019 4:44 pm

» திருத்தம் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Feb 14, 2019 4:42 pm

» தரணி தூற்றும் - கவிதை
by ayyasamy ram Thu Feb 14, 2019 4:09 pm

» இலவச மகிழ்ச்சி - கவிதை
by ayyasamy ram Thu Feb 14, 2019 4:07 pm

» செவ்வாய் கிரகத்தை ஆராய்ந்து வந்த ஆப்பர்சுனிட்டி ரோவருக்கு விடை கொடுத்தது நாசா
by ayyasamy ram Thu Feb 14, 2019 3:59 pm

» வெனிசுலாவில் இருந்து கச்சா எண்ணைய் இறக்குமதி: இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை
by ayyasamy ram Thu Feb 14, 2019 3:58 pm

» நைஜீரிய அதிபர் கலந்துகொண்ட தேர்தல் பேரணியில் நெரிசல்; 14 பேர் பலி
by ayyasamy ram Thu Feb 14, 2019 3:50 pm

» இந்தியாவில் காற்று மாசு அதிகம் உள்ள நகரங்கள் பட்டியல்: 3 நகரங்கள் டெல்லியை பின்னுக்கு தள்ளின
by ayyasamy ram Thu Feb 14, 2019 3:48 pm

» தமிழகம் முழுவதும் 275 புதிய பேருந்துகள் சேவை: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்
by ayyasamy ram Thu Feb 14, 2019 3:47 pm

» சாதி, மதம் அற்றவர் என்ற சான்றிதழ் பெற 10 ஆண்டாக போராடிய பெண் வக்கீல்
by சக்தி18 Thu Feb 14, 2019 3:40 pm

» என். கணேசன் புத்தகம் pdf
by Monumonu Thu Feb 14, 2019 2:21 pm

» தேவ் - திரைப்பட விமரிசனம்
by ayyasamy ram Thu Feb 14, 2019 12:42 pm

» டெல்லியில் அதிக அதிகாரம் ஆளுநருக்கா, முதல்வருக்கா? - உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு
by ayyasamy ram Thu Feb 14, 2019 12:27 pm

» குஜராத்தில் காதலர் தினத்தை முதியோர்களோடு இணைந்து கொண்டாடிய இளைஞர்கள்
by ayyasamy ram Thu Feb 14, 2019 12:25 pm

» பிறந்த நாளுக்கு நோ.
by பழ.முத்துராமலிங்கம் Thu Feb 14, 2019 12:13 pm

» ஃபோர்ப்ஸ் இந்தியா இதழில் இந்திய நட்சத்திரங்கள்!
by பழ.முத்துராமலிங்கம் Thu Feb 14, 2019 11:56 am

» விஜய் சேதுபதி நடித்துள்ள மாமனிதன் படத்துக்கு வித்தியாசமான பாணியில் இசையமைக்கவுள்ள இளையராஜா!
by பழ.முத்துராமலிங்கம் Thu Feb 14, 2019 11:51 am

» வெள்ளிக்கொலுசு
by பழ.முத்துராமலிங்கம் Thu Feb 14, 2019 11:48 am

» காதலர் தினம் உருவான கதை.
by ayyasamy ram Thu Feb 14, 2019 8:25 am

» காலம்
by Monumonu Thu Feb 14, 2019 6:27 am

» மின் கம்பத்தை பிடித்து விளையாடிய சிறுவன்.. ஷாக் அடித்து பலி..
by சக்தி18 Wed Feb 13, 2019 11:48 pm

» சபாஷ் அப்சர்!
by T.N.Balasubramanian Wed Feb 13, 2019 8:01 pm

» பாம்பை வைத்து விசாரணை.
by சக்தி18 Wed Feb 13, 2019 7:12 pm

» காதல் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Feb 13, 2019 6:02 pm

» காதல் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Feb 13, 2019 6:01 pm

Admins Online

சரோஜினி நாயுடு

சரோஜினி நாயுடு

Post by சிவா on Sat Mar 14, 2009 3:44 am


மகாத்மா காந்தியுடன் சரோஜினி நாயுடு


பெண் விடுதலை, பெண் சுதந்திரம் என்று இன் றைக்கும் நாம் பேசியும், எழுதியும் வருகிற சூழலில் சென்ற நூற்றாண்டின் தொடக்க வருடங்களில் அதற் கொரு வாழும் உதாரணமாக இருந்தவர் சரோஜினி நாயுடு.

பிறப்பால் சரோஜினி நாயுடு அல்லர். அவரது தந்தையார் ஒரு வங்காளி பிராமணர். டாக்டர் அகோரநாத் சட்டோபாத்தியாயா என்பது அவர் பெயர். பெரிய கல்வியாளர். வேதம், உபநிடதங்கள், ஆகமம் ஆகியவற்றில் முறையான படிப்பும், பயிற்சியும், தேர்ச்சியும் கொண்டவர். தவிர விஞ்ஞானத்திலும் உயர் கல்வி கற்றவர். மாணவர் சமூகத்துக்கு ஏதாவது செய்வதே தன் லட்சியம் என்று மிக இளம் வயதிலேயே முடிவு செய்துகொண்டு அதன்படியே அன்றைய நிஜாம் சமஸ்தானத்துக்கு வந்து (ஹைதராபாத்) ஒரு கல்லூரியை நிறுவிய வர். ஆகவே சரோஜினியின் இளம் பருவம் முழுவதும் ஹைதரா பாத்திலேயே கழிந்தது.

பெரிய குடும்பம். நான்கு பெண்கள், மூன்று ஆண் குழந்தைகள், அகோரநாத் துக்கு. வசதியான குடும்பம் என்பதால் சரோஜினிக்கு இளம் வயதுகள் பிரச்சினை ஏதுமில்லாமலேயே கழிந்தது. வாத்தியார் பிள்ளை மக்கு என்கிற பழ மொழி சரோஜினி விஷயத்தில் பொய்யாகி விட்டது. பள்ளியில் எப்போதும் முதல் மாணவியாகவே விளங்கினாள். படிப்பில் படு கெட்டி. அதேசமயம் அந்தச் சிறு வயதிலேயே சரோஜினிக்குக் கவிதை எழுதும் ஆர்வமும் உண்டாகி விட்டது. தமது கணக்கு வாத்தியாரைப் பற்றியெல்லாம் கவிதை எழுதி பள்ளியில் இயல்பாக ஒரு சூப்பர் ஸ்டார் அந்தஸ்தை அடைந்தாள் சரோஜினி.

கொஞ்ச நாள்தான் அவள் ஹைதராபாத்தில் படித்தது. அவளது தந்தை, தன் மகள் சென்னைக் குப் போனால் படிப்பில் மேலும் சிறக்கலாமே என்று நினைத்து, தனியாக ரயிலேற்றி அனுப்பி விட்டார். பன்னிரெண் டாம் வயதிலேயே மெட்ரிகுலேஷன் தேர்வெழுதி வெற்றி கண்டவர் சரோ ஜினி. அதுவும் சாதாரண வெற்றி இல்லை. மாநிலத்திலேயே முதல் மாணவி. ஆகவே மேல் படிப்புக்கு இங்கிலாந்துக்கு அனுப்பினார் அவளது தந்தை.

1895-ம் வருடம் லண்டன் போய்ச் சேர்ந்த சரோஜினி, அங்கே கிங்ஸ் கல்லூரியில் கணிதம் படிக்கச் சேர்ந்தார். அது அவளது அப்பாவின் விருப்பம். ஆனால் சரோஜினிக்கு அப்போது கணிதத்தைக்காட்டிலும் கவிதையில் தான் அதிக ஆர்வம் இருந்தது. இங்கிலாந்தின் தட்ப வெப்பம், பசுமை, நளினமான வாழ்க்கை முறை இதெல்லாம் அன்றைக்கு அவரது கவிதை ஆர்வத்தை மேலும், மேலும் தூண்டிய விஷயங்கள்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10875

View user profile http://www.eegarai..net

Back to top Go down

Re: சரோஜினி நாயுடு

Post by சிவா on Sat Mar 14, 2009 3:55 am

சும்மா மானே, தேனே என்று எழுதிக் கொண்டிராமல் சரோஜினி உருப்படியான கவிதைகள் எழுதியதைக் கண்ட சில ஆங்கில எழுத் தாளர்களும், கவிஞர்களும் சரோஜினியின் கவிதைகளைத் தொகுத்து நூலாகக் கொண்டு வரவும் உதவி செய்தார்கள். அவர்களுக்கெல் லாம் என்ன பிரமிப்பு என்றால், ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக் கொள்ளாத ஒரு பெண், இப்படி இங்கிலீஷ கவிதைகளில் வெளுத்து வாங்குகிறாளே என்பதுதான். ஆயிரம், ஆயிரத் தைந்நூறு வரிகளில் கூட அவரது சில கவிதைகள் அமைந்திருந்தன. அதேசமயம் நறுக்குத் தெரித்த மாதிரி நாலு வரிகளிலும் அவரால் தம் கருத்துக்களை வெளியிட முடிந்தது.

கவிதைப்புத்தகம் வெளியாகி, நல்ல வரவேற்பும் பெற்ற பிறகு தொடர்ந்து தன்னால் கணக்குப் பாடங்களைப் படிக்க முடியும் என்று சரோஜினிக்குத் தோன்றவில்லை. தோதாக அப்போது குளிர்காலம் வந்துவிட, 1898-ல் சரோஜினிக்கு உடம்புக்கு முடியாமல் போய் விட்டது. நோயுற்றதைக் காரணமாகச் சொல்லி விட்டு நேரே ஹைத ராபாத்துக்குக் கிளம்பி வந்துவிட்டார். அப்போ கணக்கு? அவ்வளவு தான்!

சரோஜினியின் தந்தைக்கு மகளின் விருப்பம் புரிந்தது. சரி, பெண் கவிதை எழுதிக் கொண்டு இருக்கட்டும் என்று பெருந்தன்மையாக விட்டு விட்டார். ஆனால் சரோஜினி கவிதை எழுதிய நேரம் போக மிச்ச நேரத்தில் கொஞ்சம் காதலும் செய்தார்.

ஹைதராபாத்தில் அப்போது வசித்து வந்த மேஜர் கோவிந்தசாமி நாயுடு என்பவரின் மீது அவருக்கு ஈர்ப்பு ஏற்பட்டது. நாயுடு, பிரம்ம சமாஜத்தைச் சேர்ந்தவர். ஏற்கனவே திருமணமாகி, மிக இளம் வய தில் மனைவியை இழந்தவர். தொழில் முறையில் அவர் ஒரு டாக்டர்.

எப்படிப் பார்த்தாலும் சரோஜினிக்கு ஆசாரமான பிராமண குலத் தாருக்கு இந்தக் காதல் கசமுசா ஒத்து வராது என்பது நிச்சயம். எத்தனை டிஸ்குவாலிஃபிகேஷன்கள்! நாயுடு. ஏற்கனவே திருமணமான வர். பிரம்ம சமாஜத்தைச் சேர்ந்தவர். அத்தகைய ஒருவரோடு காதல், ஹும். அதெல்லாம் முடியாது சும்மாகிட என்று சொன்னார்கள் சரோஜினியின் குடும்பத்தினர்.

ஆனால் அன்றைய தேதியில் இதனைத் தன் தனியொருவரின் பிரச்சினையாகப் பார்க்காமல், ஒட்டுமொத்த சமூகப் பிரச்சினை ஒன்றின் ஒரு எடுத்துக்காட்டாகக் கண்டார் சரோஜினி. கேவலம், சாதியை முன்னிட்டு காதலை நிராகரிப்பதா என்று பொங்கி எழுந்து விட்டார். அவரது அதிர்ஷடம், உற்றார், உறவினர்கள் என்ன சொன்ன போதும் அவரது தந்தை, சரோஜினியின் விருப்பத்துக்குக் குறுக்கே நில்லாததால் அந்தப் புரட்சித் திருமணம் வெற்றிகரமாக நடந்தேறி யது. பிரம்மசமாஜ முறைப்படி நடந்த திருமணம் அது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10875

View user profile http://www.eegarai..net

Back to top Go down

Re: சரோஜினி நாயுடு

Post by சிவா on Sat Mar 14, 2009 3:56 am

தேசம், சுதந்திர தாகம் கொண்டு தவித்த தருணம் அது. சரோஜினிக்கு ஹைதராபாத் நிஜாம் சமஸ்தானத் தில் வசித்துக்கொண்டு கவிதை எழுதிக்கொண்டிருப் பது கஷடமாக இருந்தது. நாட்டுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்கிற உணர்ச்சி மேலோங்க, கணவரை யும் பிறந்த இரு குழந்தைகளையும் அங்கேயே விட்டுவிட்டு பம்பாய்க்கு ரயிலேறி விட்டார். அவரது தந்தையைப் போலவே கணவரான கோவிந்தசாமி நாயுடுவும் அவரை முழுவதும் புரிந்துகொள்ளக்கூடியவராக அமைந்தது மிகப்பெரிய விஷயம்.

தமது எழுச்சிமிக்கக் கவிதைகளின் மூலம் அவர் ஏராளமான மக்கள் மத்தியில் சுதந்திரக் கனவை ஊதி வளர்த்துக் கொண்டிருந்தார். நம்மூரில் மகாகவி பாரதி செய்த வேலையை அன்று அங்கே சரோஜினி செய்தார். பம்பாயில் இருந்த காலத்தில் சரோஜினி தேவிக்கு குருவாக அமைந்தவர்கள் ரொம்பப் பெரிய ஆசாமிகள். பாலகங்காதர திலகர், கோபாலகிருஷண கோகலே, முகம்மதலி ஜின்னா போன்ற காங்கிரஸ் இயக்கப் பெருந் தலை வர்களின் நிழலில் அரசியல் பாடம் கற்றார் சரோஜினி. தோதாக அன்னிபெசண்ட் அப் போதுதான் இந்தியா வந்து ஹோம்ரூல் இயக்கப் பணிகளில் தீவிரம் காட்டிக் கொண்டிருந்தார். சரோஜினிக்கு ஒரு நல்ல சப்போர்ட் கிடைத்த மாதிரி ஆகி விட்டது. தன்னைப் போல் இன்னொரு பெண்மணி!

காந்தியடிகள் இந்தியா திரும்பியதும் தென்னாப்பிரிக்காவில் அடக்குமுறை அதிகரித்து விட்டதாகச் சொல்லி, மகாத்மாவை மீண்டும் தென்னாப்பிரிக்கா வரும்படி அழைத்துக் கொண்டே இருந்தார்கள். நான் அங்கே வந்தால் என்னென்ன செய்ய முடியுமோ, அதையெல்லாம் சரோஜினி நாயுடு செய்வார் எஎன்று சொல்லி, தன் சார்பாக சரோஜினியைத் தென் னாப்பிரிக்காவுக்கு அனுப்பி வைத்தார் மகாத்மா காந்தி.

சரோஜினி நாயுடு தென்னாப்பிரிக்கா சென்றதும் முதலில் மாம்பஸா என்கிற இடத்தில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொண்டு பேசினார். கேட்போர் ரத்தம் கொதிக்கும்படி அமைந்திருந்தது அவர் பேச்சு. ஆங்கில அரசின் அராஜகங்களை மிக அழகான ஆங்கிலத்தில் அவர் அடுக்கடுக்காக எடுத்து வைத் ததைக் கேட்டு அங்கிருந்த ஆங்கில அதிகாரிகளே அவரது ஆங் கிலப் புலமை கண்டு வியந்த தாகச் சொல்லுவார்கள்.

தென்னாப் பிரிக்க இந்தி யர்களுக்கு சரோஜினி நாயுடுவைத் திரும்ப அனுப்பவே மனமில்லை. ஆனாலும் அவருக்கு காந்தி வேறு பல வேலைகளை வைத்துக்கொண்டு ரெடியாகக் காத்திருந்தார். காங்கிரசின் கொள்கை பரப்புச் செயலாளர் பணியை சரோஜினி நாயுடு ஏற்று நடத்திய லாவகம் இன்று வரை பேசப்படுகிற ஒரு விஷயம். தென் னிந்தியாவிலும், இலங்கையிலும் அவர் மேற்கொண்ட சுற்றுப் பயணங்கள், ஆற்றிய உரைகளெல்லாம் காங்கிரஸ் சரித்திரத்தில் மிக முக்கியமான அத்தியாயங்கள். காங்கிரசின் செயற்குழு உறுப் பினராக, கொள்கை பரப்புச் செயலாளராக, தலைவராக ஒவ்வொரு காலக் கட்டத்தில் ஒவ்வொரு பொறுப்பில் இருந்தாலும் சரோ ஜினியின் அர்ப்பணிப்பிலும், ஈடுபாட்டிலும், பணிகளிலும் வித்தி யாசமே இருந்ததில்லை. தேசமும் கவிதையும் அவரது இரு கண் களாக இருந்தன.

தேசம் சுதந்திரமடைந்தபோது ஜவஹர்லால் நேரு தலைமையில் மத்திய ஆட்சி அமைந்தது. மாநில கவர்னர்களை நியமிக்கத் தொடங்கியபோது அன்றைக்கு மாபெரும் மாநிலமாக இருந்த ஐக்கிய மாகாணத்துக்கு (இன்றைய உத்தரபிரதேசம்) யாரை கவர்னராக்கலாம் என்று பேச்சு வந்தது. சரோஜினி நாயுடுவின் பேரைத் தவிர வேறு யார் பேரையும் யாராலும் அப்போது நினைத்துப் பார்க்கக்கூட முடியவில்லை.

அவர் பலவிதங்களில் ஒரு முன்னோடிப் பெண்மணி. நம்ப முடியாத அளவுக்கு சாதித்தவர். பெண் உரிமை பெண் சுதந்திரம் என்றெல்லாம் பேசிக்கொண்டிருப்பதில் நயா பைசா பிரயோஜனமில்லை. நமது சுதந்திரம் என்பது நம்மிடம்தான் இருக்கிறது. 1879 பிப்ரவரி 13-ம் தேதி பிறந்த சரோஜினி நாயுடு, 1949 மார்ச் 2-ம் தேதி காலமானார். நிறைவாழ்வுதான். ஆனால் வயதினால் மட்டுமல்ல.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10875

View user profile http://www.eegarai..net

Back to top Go down

Re: சரோஜினி நாயுடு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை