உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» அருமையான எருமை மாடுகள்
by ரா.ரமேஷ்குமார் Today at 5:15 pm

» ரா. கி. ரங்கராஜன் நாவல்கள்
by ரா.ரமேஷ்குமார் Today at 4:56 pm

» காதல்
by dhilipdsp Today at 4:46 pm

» திருச்சி முக்கொம்பில் ரூ.387 கோடி செலவில் புதிய அணை: தமிழக அரசு அரசாணை வெளியீடு
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:16 pm

» ரூ.1,258 கோடி மதிப்பீட்டில் மதுரையில் எய்ம்ஸ்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:14 pm

» மொபைல் எண் மாற்றாமல் வேறு நெட்வொர்க் மாறுவது இனி ரொம்ப ஈஸி!
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:05 pm

» சவுதி, கத்தார் உட்பட 18 நாடுகளில் வேலை செய்வோருக்கு இ-மைகிரேட் பதிவு: ஜன.1 முதல் கட்டாயம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 9:40 am

» நிலத்தடி நீருக்கும் இனி கட்டணம்; மனிதநேயமற்ற பெரும் கொள்ளை: ராமதாஸ் கண்டனம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 9:31 am

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by பழ.முத்துராமலிங்கம் Today at 9:22 am

» தண்ணீர் பருகுவதால் உடலில் உள்ள பல பிரச்சினைகள் தீர்க்கிறது
by பழ.முத்துராமலிங்கம் Today at 9:17 am

» மாயாஜாலம்...ரோன்டா பைர்ன்
by pkselva Today at 8:35 am

» 'தமிழ் சினிமா வளர்ந்த கதை' நுாலிலிருந்து:
by பழ.முத்துராமலிங்கம் Today at 7:26 am

» ஜம்மு-காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சி?
by பழ.முத்துராமலிங்கம் Today at 7:17 am

» கொடுப்பதற்கு மனம் இல்லையா!
by ayyasamy ram Today at 7:15 am

» ஒரே கோவிலில் இரண்டு அழகர்கள்!
by பழ.முத்துராமலிங்கம் Today at 7:13 am

» அறிவோம் ஆன்மிகம்! - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:09 am

» ரூ.2 லட்சம் விவசாய கடன் தள்ளுபடி: கமல்நாத் முதல் கையெழுத்து
by பழ.முத்துராமலிங்கம் Today at 7:09 am

» பி.சி.கணேசன் எழுதிய, 'அண்ணாவின் அரசியல்' நுாலிலிருந்து:
by ayyasamy ram Today at 7:02 am

» ஆந்திராவை புரட்டி போட்ட பெய்ட்டி புயல்
by பழ.முத்துராமலிங்கம் Today at 7:00 am

» அட.. அம்மா சமைச்ச மாதிரியே இருக்கே..
by விமந்தனி Yesterday at 10:11 pm

» உலக சுற்றுலா தினம் - கவிதை
by ayyasamy ram Yesterday at 10:09 pm

» தக்கர் கொள்ளையர்கள் - இரா வரதராசன் மின்னூல்
by விமந்தனி Yesterday at 10:08 pm

» அறம் சிறுகதைகள் - ஒலிப்புத்தகம்
by விமந்தனி Yesterday at 9:50 pm

» உலக அழகியானார் பிலிப்பைன்ஸ் நாட்டுப்பெண்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» ஆன்லைன் மருந்து விற்பனை தடை நீட்டிப்பு; விதிமுறைகளை உருவாக்க மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் கெடு
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 7:48 pm

» 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதை வாசித்தால் நன்று ஏனெனில் அவர்களுக்கு மட்டும்தான் புரியும்
by ரா.ரமேஷ்குமார் Yesterday at 7:33 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by ரா.ரமேஷ்குமார் Yesterday at 7:28 pm

» கற்பக தரு 30: பனையோலைக் கொழுக்கட்டை
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 7:27 pm

» கற்பக தரு 30: மீனவர்களின் மடப்பெட்டி
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 7:18 pm

» ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரியில் பெய்ட்டி புயல் கரையை கடந்தது; ஒடிசா, மே. வங்காளத்தில் மழை
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:54 pm

» ரயிலில் போகாமலேயே ‘விர்ச்சுவல் ரியாலிட்டி’யில் சுற்றுலா அனுபவம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:13 pm

» தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலய தரிசனம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:09 pm

» ஒரு அருமையான குட்டிக் கதை…!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:07 pm

» மார்கழி மாதம்- ஓசோன் ரகசியம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:04 pm

» ஊர்களும் உணவுகளும்...!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:56 pm

» சாலையோரம் - என் முதல் முயற்சி
by sridharnsr Yesterday at 4:52 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:24 pm

» சுய அறிமுகம் - ஸ்ரீதர் சிவராமன்
by sridharnsr Yesterday at 3:05 pm

» தமிழகத்தின் கண்ணாடி
by ரா.ரமேஷ்குமார் Yesterday at 2:14 pm

» கருணாநிதி சிலை திறப்பு: எச்.ராஜா ட்வீட்டால் மீண்டும் சர்ச்சை
by ரா.ரமேஷ்குமார் Yesterday at 2:00 pm

» புதிய அவதாரம் எடுக்கும் நயன்தாரா
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» மீண்டும் பிரபாசுடன் இணையும் அனுஷ்கா
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» பொங்கலுக்கு திரைக்கு வரும் அஜித்தின் ‘விஸ்வாசம்’ பாடல்கள் வெளியானது
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:59 am

» தூக்குதுரை வேடத்திற்காக முழுமையாக மாறிய, அஜீத்!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:37 am

» 3 காங்கிரஸ் முதல்வர்கள் இன்று பதவியேற்பு
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:41 am

» இதற்கு யாராவது விடை சொல்லுங்க...!!!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:39 am

» தற்போதைய செய்திகள் {சுருக்கம்}
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:32 am

» காவல் கோட்டம் - சு. வெங்கடேசன் மின்நூல்
by pkselva Yesterday at 8:51 am

» விடுகதைகள்
by ayyasamy ram Yesterday at 7:43 am

» ஐந்து அடுக்கு, நான்கு இடுக்கு - அது என்ன?
by ayyasamy ram Yesterday at 7:41 am

Admins Online

அந்தநாளாய தீபாவளி --இன்றைய வாழ்த்துக்கள்

அந்தநாளாய தீபாவளி --இன்றைய வாழ்த்துக்கள்

Post by sugumaran on Wed Oct 18, 2017 3:08 am


அந்தநாளாய தீபாவளி
--அண்ணாமலை சுகுமாரன்
இப்போதெல்லாம் தீபாவளி வரும்போதெல்லாம் இழந்துவிட்ட அந்த நாளைய சந்தோஷங்கள்தான் மனதை உறுத்துகிறது சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் நான் சிறுவனாக இருந்தபோது கொண்டாடிய தீபாவளிகள் இன்னமும் நினைவில் நிற்கிறது அப்போதெல்லாம் ஐப்பசிப்பிறந்தாலே அனைவருக்கும் தீபாவளி சந்தோசம் தொற்றிக்கொள்ளும் .
ஒரு மாதம் முன்பே தீபாவளி அட்வான்ஸ் , போனஸ் , கைத்தறி கடையில் கடன் ,காதியில் கடன் என தீபாவளிகளைக்கட்டும் .தினமும் ஒரு வேலை இருக்கும் .
அப்போதெல்லாம் இனிப்புக்கடைகள் அத்தனை இருக்கவில்லை .
ஆனால் அனைத்து வீடுகளிலும் தாங்களே இனிப்பும் , காரமும் சொந்தமாக செய்யும் பழக்கம் அதிகம் இருந்தது .
அதிகம் பலகாரங்கள் செய்து தங்கள் சாமர்த்தியத்தைக் காட்ட அப்போதைய பெண்கள் விரும்புவார்கள்
ஒரு மாதம் முன்பே அதற்க்கு வேண்டிய பொருள்களை கடைகளில் வாங்கி அவைகளை வெய்யலில் காயவைத்து ,அதை மாவு இயந்திரத்தில் கொண்டு சென்று அரைத்துக்கொண்டுவருவது சிறுவர்களின் வேலை .மாதம் முழுவதும்அந்த வேலை அப்போதெல்லாம்உண்டு கூடவே மழையும் உண்டு .ஐப்பசி அடைமழை என்று தவறாமல் பெய்யும் மழை அப்போதெல்லாம் உண்டு . தினமும் ஒரு தின்பண்டம் என வீடுகளில் செய்ய ஆரம்பிப்பார்கள் .தெருவே அப்போது மணக்கும் .சிறுவர்களுக்கு தினமும் குதுகோலம் தான்
புதுத்துணி வாங்க பயணம் , தையல் கடைகளில் அளவு கொடுத்து விட்டு தீபாவளி முதலிரவு வரை காத்திருந்து வாங்கிவருவது என எத்தனை சந்தோஷ அனுபவங்கள் அப்போது இருந்தது
அப்போதெல்லாம் ரெடிமேடுகள் கிடையாது .
வீட்டில் இருக்கும் பெண்களுக்கு வாங்கிய புதுப்புடவைப்பற்றியும் ,வீட்டில் செய்யும் திண்பண்டங்கள்
என பேச்செல்லாம் ஒரு மாதம் தீபாவளிப்பற்றியே இருக்கும் .தீபாவளிப்பற்றிய" கவுட்டவுன் " ஆரம்பம் ஆகிவிடும் .நினைவெல்லாம் தீபாவளி எதிர்பார்ப்பிலேயே சிறுவர்களுக்கு இருக்கும் .தினமும் கடைகளுக்கு சென்று கொஞ்சம் கொஞ்சம் பட்டாசுகள் வாங்கி நண்பர்களுடன் சேர்ந்து வெடிப்பது , பின்பு அதைப்பற்றியே பேசி நினைவில் மகிழ்வது என பல சந்தோஷங்கள் அப்போதைய தீபாவளிக்கு உண்டு .ஒருவாறு தீபாவளியும் வந்துவிடும் ,அன்று இரவு முழுவதும் வீடுகளில் பெண்கள் தூங்கமாட்டார்கள் .
விடியவிடிய திட்டம் போட்டு ,செய்யாமல் மிச்சம் இருக்கும் தின்பண்டங்களை செய்வதும் ,வடை சுழியன் என அன்றைய தின பலகாரங்கள் செய்வதில் இரவு போகும் .
சிறுவர்களும் தூங்கமாட்டார்கள் ,தாயார் ,சகோதரிகளுடன்
துணையாக இருப்பார்கள் .உற்சாக பேச்சு ,மனம் முழுக்க
மகிழ்ச்சி இவைகளே வீடு முழுவதும் நிறைத்திருக்கும் .
விடியும் முன் நாலு மணிக்கே வெந்நீர் சூடாகத்தொடங்கிவிடும் .விடியும் முன்பே தலை குளித்தால் தான் கங்காஸ்தானம் என ஆகும் என்ற கவலை பெரியவர்களுக்கு உண்டு ஐந்து மணிக்கே புதுதுணி போட்டுக்கொண்டு , தெருவில் வீடுகளுக்கு பலகார விநியோகமும் தொடங்கிவிடும் .
வீட்டில் செய்த தின்பண்டமும் ,புது ஆடைகளும் புகழப்படும் அப்போது சந்தோசம் கொஞ்சம் கூடும் .
பிறகு தொடங்கும் பட்டாசு வெடிப்பு நண்பர்களுடன் ஆரம்பமாகும் .இவையெல்லாம் இன்னமும் நீக்காத நினைவுகள் .தீபாவளி என்றாலே அப்போதெல்லாம்
சந்தோசம் தான் . பிறகு வீட்டுக்கு வீடு தீபாவளி மலர் வாங்குவது , அதைப்பற்றியே பேசுவது ,மாதம் முழுவதும் அதை பரிமாறிக்கொள்வது என்று பல சந்தோஷங்களை
அடங்கியதாக தீபாவளி அப்போது இருந்தது .
தீபாவளி எதற்க்காக கொண்டாடப்படுகிறது என்றகவலை யாருக்கும் இல்லை .தீபாவளி வருவதே அனைவருக்கும்
சந்தோசம்அளிப்பதற்காகவே என்பது அனைவரின் எண்ணம் .அப்போது ஏழைப் பணக்காரன் என்று பாகுபாடு இல்லாமல்
அனைவரும் அவரவர் தகுதிக்கு தக்கவாறு கொண்டாடி அனைவரும் சந்தோஷமாக இருந்தனர் .
அத்தகைய ஆண்டு முழுவதும் எதிர்பார்த்து சந்தோஷமாக கொண்டாடிய தீபாவளியின் இப்போதைய நிலை என்ன ?

இப்போது அனைவரிடமும் எதையும் வாங்கும் சக்தி இருக்கிறது .ஆனால் சந்தோஷத்தை தான் வாங்க முடியவில்லை எப்படி மகிழ்ச்சியாக இருப்பது ?போன்ற புத்தகங்கள் விற்பனை சக்கைப்போடு போடுகிறது .
மனிதனின் இயல்பே மகிழ்ச்சிதான் என்பது மறந்துவிட்டது ..
சின்னச் சின்னச் சந்தோஷ அனுபவங்களால் மனதை நிரப்பி மனத்தையும்உடலையும் எப்போதும் மகிழ்ச்சியாகவைத்துக்கொள்ளத் தவறிவிட்டோம்
பலரும் புன்னகைப்பதுகூடதினமுமல்ல .

இப்போதைய தீபாவளிக்கு இரவில் பூத்து காலையில் வாடும் மலர்களாக மாறிவிட்டது .வருவதும் தெரியவில்லை போவதும் தெரியவில்லை .
முதல் நாள் இரவு சென்று அனைவருக்கும் ஆயத்த ஆடையும் , ஆயத்த இனிப்புகளும் கொஞ்சமாக வாங்கி ,
விடிந்ததும் படைத்து , தலைகுளித்து புத்தாடை உடுத்தி ,
ஸ்மார்ட் போனைப்பார்த்துக்கொண்டே உணவருந்தி , விரைவில் விஜய் ,தலை படங்களை காண ஓட்டம் வயது குறைந்தவர்களுக்கு , மற்றவர்களுக்கோ முழு கவனமும்
டீ வி முன்தான் ,அன்பை பிறருக்கு கொடுப்பதற்கும் நேரமில்லை , எனவே அன்பை பெரும் வாய்ப்பும் இல்லை .
இப்போது தீபாவளி என்னமோ வருகிறது , அனால் அது தரும் சந்தோசம் தான் இல்லை .
அண்ணாமலை சுகுமாரன்
15/10/17
ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே என்று அனைவரும் மகிழ்ச்சியாக தீபாவளிக்
கொண்டாட வாழ்த்துக்கள் !
avatar
sugumaran
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 326
இணைந்தது : 05/08/2010
மதிப்பீடுகள் : 203

View user profile

Back to top Go down

Re: அந்தநாளாய தீபாவளி --இன்றைய வாழ்த்துக்கள்

Post by ayyasamy ram on Wed Oct 18, 2017 6:35 am


-
மலரும் நினைவுகள்...
-

-

-

-

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 41524
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 11742

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

Re: அந்தநாளாய தீபாவளி --இன்றைய வாழ்த்துக்கள்

Post by M.Jagadeesan on Wed Oct 18, 2017 11:27 am

தீபாவளி மட்டுமல்ல . எல்லாப் பண்டிகைகளும் பொலிவிழந்துவிட்டன. காரணம் சீரியல்களும் , செல்போனும்தான் . பட்டிமன்றம் என்ற பெயரில் எல்லா சேனல்களிலும் ஒரு வெட்டிப்பேச்சு ! தல படங்களால் , தளபதி படங்களால் நாட்டுக்கு என்ன நன்மை ? மக்கள் சிந்திக்கவேண்டும்..
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5192
இணைந்தது : 18/04/2015
மதிப்பீடுகள் : 2424

View user profile

Back to top Go down

Re: அந்தநாளாய தீபாவளி --இன்றைய வாழ்த்துக்கள்

Post by T.N.Balasubramanian on Wed Oct 18, 2017 5:11 pm

ஐந்து ரூபாய்க்கு பட்டாசு வாங்கி
ஓய்ந்து போகும் வரை வெடித்தது அந்தக்காலம்.
ஐம்பத்து ஐந்துக்கு கம்பி மத்தாப்பு ஒரு பெட்டி இன்று .
சந்தோஷமா வரும் ? கண்ணீர்தான் வரும்.

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 23611
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 8634

View user profile

Back to top Go down

Re: அந்தநாளாய தீபாவளி --இன்றைய வாழ்த்துக்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை