உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» கழிவறை கட்டி தராத தந்தை மீது புகாரளித்த சிறுமி தூதுவரானார்
by சிவனாசான் Today at 10:30 pm

» கற்பக தரு 27: பாளையருவா, மட்டையருவா
by பழ.முத்துராமலிங்கம் Today at 9:49 pm

» தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலய தரிசனம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 9:47 pm

» அமெரிக்கா நிலவில் கால்பதிக்கவே இல்லை! கண்டறிந்த சீனா.. நடுக்கத்தில் நாசா.!
by பழ.முத்துராமலிங்கம் Today at 9:42 pm

» தமிழறிஞர்களின் நூல்கள் - நாட்டுடைமையாக்கப்பட்ட புத்தகங்களின் மின்னூல் தொகுப்பு
by Dr.S.Soundarapandian Today at 7:44 pm

» `ஒரே நாளில் இருமுறை குளுக்கோமீட்டர் சோதனை செய்யும் சர்க்கரை நோயாளிகள்' - அச்சுறுத்தும் ஆய்வு!
by பழ.முத்துராமலிங்கம் Today at 7:32 pm

» வரலாறு படைத்தது இந்தியா: அடிலெய்டில் அடி பணிந்தது ஆஸி.
by Dr.S.Soundarapandian Today at 7:25 pm

» தமிழ் மின் நூலகம் - 8600 புத்தகங்கள்
by Dr.S.Soundarapandian Today at 7:23 pm

» தோல்வி நிலையென நினைத்தால்-மினி தொடர்கதை
by T.N.Balasubramanian Today at 5:18 pm

» தந்தையை திருமணம் செய்து கொண்ட 4 வயது சிறுமி : ஒரு நெகிழ்ச்சி தருணம்
by T.N.Balasubramanian Today at 4:07 pm

» தமிழக பெண்களின் பாதுகாப்பிற்காக 181 இலவச தொலைபேசி: முதலமைச்சர் நாளை தொடங்கி வைக்கிறார்
by T.N.Balasubramanian Today at 3:56 pm

» அம்பானி மகள் திருமணம் ஜரூர் ஏற்பாடு: ஆயிரம் சொகுசு கார்கள் தயார்
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:33 am

» முகலாயர்கள் - முகில் மின்னூல்
by badri2003 Today at 10:07 am

» கெட்ட வார்த்தை பேசிய மாணவர்கள் வாயில் டேப் ஒட்டிய ஆசிரியை...!!
by aeroboy2000 Yesterday at 9:57 pm

» தக்கர் கொள்ளையர்கள் - இரா வரதராசன் மின்னூல்
by aeroboy2000 Yesterday at 9:51 pm

» புழுதி பறக்கும் சாலைகள்... தொடரும் போக்குவரத்து நெரிசல்: நான்கு துறைகளின் திட்டப்பணிகளால் திணறும் ஈரோடு
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 7:33 pm

» ரூ.289 விலையில் ஏர்டெல் புது சலுகை அறிவிப்பு
by சிவனாசான் Yesterday at 3:21 pm

» அ" வுக்கு அடுத்து "ஆ" வருவதேன்?
by சிவனாசான் Yesterday at 3:18 pm

» நம்மிடமே இருக்கு மருந்து - வாழை இலை!
by சிவனாசான் Yesterday at 3:15 pm

» புகைப்படம் எடுத்த போது பெண்ணுக்கு சரமாரியாக முத்தம் கொடுத்த குரங்கு
by சிவனாசான் Yesterday at 3:02 pm

» கடவுளைப் பூரணமாக நம்பு
by சிவனாசான் Mon Dec 10, 2018 11:57 pm

» பொழுது போக்கு - சினிமா
by சிவனாசான் Mon Dec 10, 2018 11:53 pm

» ரயில்களில் விரைவாக தண்ணீர் நிரப்ப ஏற்பாடு
by சிவனாசான் Mon Dec 10, 2018 11:47 pm

» நிம்மதியான நல்வாழ்வுக்கு மஹா பெரியவரின் பத்து கட்டளைகள்:
by T.N.Balasubramanian Mon Dec 10, 2018 4:52 pm

» முதல் முறையாக ரஷிய அதிபர் புதின் மகள் டி.வி.யில் தோன்றினார்
by ayyasamy ram Mon Dec 10, 2018 9:15 am

» மத்திய அரசு திட்டங்களில் செங்கல் பயன்படுத்த தடை?
by ayyasamy ram Mon Dec 10, 2018 8:30 am

» சிவசைலநாதர் திருக்கோவில்
by ayyasamy ram Sun Dec 09, 2018 11:00 pm

» கனிமொழிக்கு சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர் விருது: டெல்லியில் 13-ந்தேதி துணை ஜனாதிபதி வழங்குகிறார்
by சிவனாசான் Sun Dec 09, 2018 7:58 pm

» பொது அறிவு தகவல்கள்
by T.N.Balasubramanian Sun Dec 09, 2018 6:05 pm

» பகல்ல நகைக்கடை எப்படி இருக்கும்...?!
by ayyasamy ram Sun Dec 09, 2018 3:43 pm

» வங்கக்கடலில் மீண்டும் புயல் சின்னம்
by ஞானமுருகன் Sun Dec 09, 2018 2:42 pm

» விஸ்வரூபமெடுக்கும் ‘புத்தாண்டு புத்தக இரவு’ இயக்கம்!
by ஞானமுருகன் Sun Dec 09, 2018 2:39 pm

» தங்கம் விலை நிலவரம்
by ayyasamy ram Sun Dec 09, 2018 2:31 pm

» ஆர்.எஸ்.எஸ்(RSS) மதம் மதம் மற்றும் மதம் - பா. ராகவன்
by ஞானமுருகன் Sun Dec 09, 2018 2:26 pm

» 9/11: சூழ்ச்சி - வீழ்ச்சி - மீட்சி --- பா. ராகவன் மின்னூல்
by ஞானமுருகன் Sun Dec 09, 2018 2:24 pm

» டெல்லியில் சோனியா காந்தியுடன் முக ஸ்டாலின் சந்திப்பு: கருணாநிதி சிலை திறப்பு விழாவிற்கு அழைப்பு
by ayyasamy ram Sun Dec 09, 2018 1:37 pm

» மாயவலை - பா.ராகவன் மின்னூல்
by பிரபாகரன் ஒற்றன் Sun Dec 09, 2018 12:46 pm

» தீர்த்த மகிமை விருட்ச மகிமை 03: வாகையை வலம் வருவோம்!
by பழ.முத்துராமலிங்கம் Sun Dec 09, 2018 11:25 am

» வைகை ஆற்றின் குறுக்கே பிரிட்டிஷார் கட்டிய சுமைதாங்கி: மதுரையின் அடையாளம் ஏவி மேம்பாலத்துக்கு வயது ‘133’
by பழ.முத்துராமலிங்கம் Sun Dec 09, 2018 11:14 am

» அவரவர் விருப்பத்துக்கேற்ப படங்களை வெளியிட்டுக் கொள்ளுங்கள்: தயாரிப்பாளர்கள் சங்கம்
by ayyasamy ram Sun Dec 09, 2018 11:14 am

» 336 ஏக்கர் பரப்பளவில் அமைகிறது கே.ஆர்.எஸ். அணைப்பகுதியில் ரூ.1,500 கோடியில் பொழுதுபோக்கு பூங்கா மந்திரி டி.கே.சிவக்குமார் தகவல்
by ayyasamy ram Sun Dec 09, 2018 11:06 am

»  விஜய்யின் 63-ஆவது படம்
by ayyasamy ram Sun Dec 09, 2018 10:54 am

» எஸ்ரா ‘மேப்’!
by பழ.முத்துராமலிங்கம் Sun Dec 09, 2018 10:51 am

» திருவண்ணாமலையில் வயது முதிர்வால் மூக்கு பொடி சித்தர் காலமானார்
by ayyasamy ram Sun Dec 09, 2018 10:46 am

» முதல் முறையாக பவுண்டரி --சென்னை விமான நிலையம்
by ayyasamy ram Sun Dec 09, 2018 10:42 am

» வெற்றி பெற தகுந்த நேரம் வரும் வரை அமைதியாக காத்திரு...!!
by பழ.முத்துராமலிங்கம் Sun Dec 09, 2018 10:07 am

» புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
by fefe Sun Dec 09, 2018 8:35 am

» நான் நல்லது மட்டும் தான் செய்வேன் பிரண்ட்ஸ்...நம்புங்க
by T.N.Balasubramanian Sat Dec 08, 2018 9:22 pm

» 17 வயது சிறுவனை விரும்பி அழைத்துச் சென்ற 23 வயது பெண்
by T.N.Balasubramanian Sat Dec 08, 2018 9:14 pm

» நான் சொல்றதை பத்து K B யாவது கேளுங்க
by SK Sat Dec 08, 2018 7:32 pm

Admins Online

அரசியலும் - சினிமாவும்!

அரசியலும் - சினிமாவும்!

Post by Pranav Jain on Sun Oct 01, 2017 1:40 pm

மரபை மீறும் சினிமாவும் - மாற்றத்தை தேடும் அரசியலும்!!
- எழுத்ததிகாரன்.

ஆழமானது - அதே நேரத்தில் சாதாரணமானது. தெளிவானது - அதே நேரத்தில் கேலிக்கூத்தையும் கொண்டது. உணர்ச்சி மிக்க பல்வேறு கோணங்களில் அரசியல் ஆய்வு, இவைகளையெல்லாம் ஒருங்கே கொண்டதுதான் திரைப்படக்கலை. சினிமாவின் பிறப்பிடம் பிரான்ஸ் என்பது நாம் எல்லோரும் அறிந்த விஷயம். லூமியரும், ஜியார்ஜ் மீலேவும் அங்குதான் தோன்றினார்கள். ஆனால் இதை ஒரு வெகுஜன பொழுது போக்காக மாற்ற வேண்டும் என்ற தேவை அமெரிக்காவில்தான் உணரப்பட்டது. உலகெங்குமுள்ள ரசிகர்களுக்கு எல்லாவித பொழுது போக்கையும் தரும் பெரிய தொழில்துறையாக இந்த சினிமா அமெரிக்காவில் வளர்ந்தது.

வெள்ளித்திரையில் தோன்றிய இந்த மாயையை ரசிகர்களும் விரும்பிப் பார்த்தார்கள். ஆனால், இரண்டாம் உலகப்போருக்குப் பின் முற்றிலும் புதிய சினிமாவை அவர்கள் எதிர்பார்த்தார்கள். இந்த அடிப்படையில் முதலில் செயல்பட்டது இத்தாலியர்கள்தான். வாழ்க்கையைப் பற்றி நவீன யதார்த்தவாத நோக்கிலான படங்களை எடுத்தார்கள். இவர்களின் முயற்சிகள் வரலாற்றின் ஒரு பகுதியாக மாறிவிட்டது. அதே நேரத்தில் பிரெஞ்சுக்காரர்களும் அமெரிக்காவின் அதிவேக விறுவிறுப்பு படங்களுக்கு மாற்றாக தங்கள் படங்கள் அமைய வேண்டுமென விரும்பினார்கள். நவீன சினிமாவின் மேதை என்று கருதப்படும் "ஆந்த்ரே பாஸன்"  (Andre Bazin) அப்போது "காஹியெ து சினிமா" என்ற தீவிர சினிமா பத்திரிக்கையைத் துவக்கினார். இந்தப் பத்திரிக்கையை மையமாகக் கொண்டு சினிமாவில் அதீத ஆர்வம் கொண்ட ஐந்து இளைஞர்கள் ஒரு குழுவாக உருவானார்கள். பிரான்சுவா ட்ரூபோ, ழான் லுக் கோதார், க்ளோத் ஷப்ரோல், எரிக் ரோமர், ழாக் ரிவெத் ஆகியவர்கள்தான் அந்த ஐவர்கள்.

இவர்கள் சினிமாவைப் பார்ப்பதிலும், ஆய்வு செய்வதிலும், புதிய பிரெஞ்சு சினிமாவுக்கான உத்திகளை திட்டமிடுவதிலும் பல ஆண்டுகளைக் கழித்தனர். ஒரு எதிர்க் கலாச்சாரத்தை உருவாக்குவதில் அவர்கள் சிற்பிகளாக திகழ்ந்தனர். இது போன்ற ஒன்று இதுவரையில் உலகில் வேறெங்கும் நிகழ்ந்ததாக தெரியவில்லை. எனவே அதுபோன்ற ஒரு ஐவர் குழுவை இந்திய சினிமாவிலும் உருவாக்க வேண்டும் என்று நாங்கள் முடிவு செய்து பல வருடங்களை உதிர்த்து வருகிறோம்.... இந்த ஐவர் குழுவில் மிக முக்கியமாகவும், மூலையாகவும் செயல்படுபவர் யார்? என்பது இந்தக் கட்டுரையை விரும்பிப் படிக்கும் பலருக்கும் நன்றாகத் தெரியும். மற்றவர்கள் விரைவில் தெரிந்து கொள்வார்கள். கோடம்பாக்கத்திற்கு வெளியில் ஒரு கோலிவுட் செயல்பட்டு வருகிறது என்பது பலருக்குத் தெரியாது!!

ஆரம்பம் முதல் இன்றுவரையிலான எல்லா காலங்களிலும் சினிமா என்பது மக்களிடம் தவறாகவே சித்தரிக்கப்பட்டு வந்திருக்கிறது. இதற்கு மிக முக்கிய காரணம் அரசியல் தலைவர்கள் என்பதை யாராலும் மறுக்கவே முடியாது. ஏனென்றால் சினிமா என்பது அரசியல் சித்து வேலைகளை மக்களுக்கு தோலுரித்துக் காட்டுவதை தனது இயல்பாகக் கொண்டிருந்தது. இதனால் மக்கள் தங்களுடைய சுயத்தை உணரத் தொடங்கினார்கள். இன்று சமூக இணையதளங்களில் பொதுமக்கள் பலரும் அரசியல் விமர்சனங்கள் செய்து வருகிறார்கள் என்றால் அதற்கு சினிமா மிக முக்கிய காரணம் என்பதை யாராலும் மறுக்க முடியாது. இத்தனை பலம்பொருந்திய இந்த சினிமா அரசியல் சூழ்ச்சியால் கொள்ளைக்காரர்கள், வீரர்கள், பூதங்கள், சொகுசுக்காரிகள், பாடல்கள், வசனங்கள் என்று அழுகையிலும், களியாட்டத்திலும் மூழ்கடிக்கப்பட்டது.

உயர்ந்த பாராட்டுக்களையும், தவறான விமர்சனங்களையும் சரி சமமாக பெற்று வளர்ந்துகொண்டிருக்கும் இந்த சினிமா ஏன் தவறாக சித்தரிக்கப்பட்டு வந்திருக்கிறது? என்பதில் அதிக கவனம் செலுத்தியபோதுதான் இந்த சினிமாவின் மூலம் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்று முடிவு செய்தோம். கெட்ட பெயரை உடனே சம்பாதித்துவிட முடியும். ஆனால் நல்ல பெயரை சம்பாதிப்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. அதிலும் நூறு ஆண்டுகளாக மக்களிடையே மதிப்பிழந்து நிற்கும் சினிமாவால் தன்னை எப்படி நிரூபிக்க முடியும்? தன்னால் எந்த ஒரு மாற்றத்தையும் நிகழ்த்திக்காட்ட முடியும் என்பதை மக்களிடம் எப்படி புரிய வைக்க முடியும்?...

அதன் விளைவாக உருவானதுதான் ஊழலற்ற அரசியல்! என்ற டிஜிட்டல் இந்தியாவுக்கான சினிமாக்காரனின் திட்டம்!! இந்திய அரசால் அறிவிக்கப்பட்ட திட்டம் என்றாலும் இது ஒரு சினிமாக்காரனின் சிந்தனை என்பதை வரலாறு சொல்லும்!!

*** சினிமா என்பது வெறும் நுகரப்பட வேண்டிய ஒன்றல்ல. மாறாக அனைவரும் ஈடுபட வேண்டிய ஒன்று. ***

தொடரும்....
- எழுத்ததிகாரன்
on 5th December 2016, 1:25 pm
avatar
Pranav Jain
பண்பாளர்


பதிவுகள் : 167
இணைந்தது : 14/11/2016
மதிப்பீடுகள் : 45

View user profile

Back to top Go down

Re: அரசியலும் - சினிமாவும்!

Post by Pranav Jain on Fri Oct 20, 2017 4:46 pm

இந்திய அரசால் அங்கீகாரம் பெற்ற சென்சார் போர்டால் அனுமதிக்கப்பட்டு, தற்போது வெளிவந்துள்ள ஒரு திரைப்படத்தில் இருந்து முக்கிய காட்சிகளை நீக்க வேண்டும் என்று சில அரசியல் பிரமுகர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். இப்போது புரிகிறதா சினிமா துறை ஏன் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது என்று? மக்களை பாதுகாக்க வேண்டிய அரசியல்வாதிகள் எல்லா காலங்களிலும் தங்களை மட்டுமே காப்பாற்றிக்கொள்ள முயற்சிக்கிறார்கள்!

இது எப்படி மக்களாட்சியாகும்?

மேலே உள்ள கட்டுரையை படிக்கத் தவறாதீர்கள்...
மரபை மீறும் சினிமாவும் - மாற்றத்தை தேடும் அரசியலும்!! தொடர வேண்டும்...
avatar
Pranav Jain
பண்பாளர்


பதிவுகள் : 167
இணைந்தது : 14/11/2016
மதிப்பீடுகள் : 45

View user profile

Back to top Go down

Re: அரசியலும் - சினிமாவும்!

Post by Pranav Jain on Thu Feb 22, 2018 5:52 pm

சினிமாத்துறையை சேர்ந்தவர்கள் அரசியலுக்கு வருவது புதிதில்லை. பல தலைவர்கள் சினிமாவை விட்டுவிட்டும், சினிமாவில் இருந்துகொண்டும் அரசியல் செய்திருக்கிறார்கள். ஆனால் தற்போது வரும் சினிமாக்காரர்கள் எல்லோரும் அரசியலையும் சினிமாவாகவே நினைத்து பஞ்சு டையலாக்கே பேசுகிறார்கள்.

சினிமாவுல முதல்ல மோஷன் போஸ்ட்டர் வெளியிடுவாங்க, அப்புறம் லிரிக்கல் வீடியோ வெளியிடுவாங்க, அப்புறம் டிரைலர், தியேட்டரிக்கல் டிரைலர், புரமோஷன், கோர்ட்டுல கேஸு அதுக்கப்புறம்தான் சினிமாவை ரிலீஸ் பண்ணுவாங்க. அதே மாதிரிதான் இன்னைக்கு அரசியல் கட்சியும் அறிவிக்கிறாங்க. முதல்ல டிவிட்டர், பேஸ்புக்குல அறிவிப்பு, அப்புறம் ரசிகர்கள் சந்திப்பு, அப்புறம் கல்யாண மண்டபத்துல விருந்து, விமர்சனம், பேட்டி கடைசியாத்தான் கட்சி பெயரை அறிவிக்கிறாங்க.

ஆனா, கட்சியோட கொள்கையை மட்டும் ஏன் யாருமே சொல்ல தயங்குறாங்கன்னு தெரியலை.. ரஜினிகிட்ட கேட்டா, நான் கொழந்த.... இப்பதான் பொறந்துருக்கேன் தலை சுத்துதுங்கறார். கமல்கிட்ட கேட்டா, நான் சோறு வடிச்சுகிட்டு இருக்கேன் தொட்டு பார்த்தால் சுட்டுடுவேன்ங்கறார். தமிழ்நாட்டோட அரசியல் களம் என்பது ஸ்டார் கிரிக்கெட்டா? இல்ல ஸ்டார் சமையலறையா? என்றே புரியவில்லை. கொழந்தைங்க எல்லாம் வந்து ஓடி புடிச்சு விளையாடுறதுக்கு இது என்ன பிளே கிரவுண்டும் இல்ல, சமையல் புரோகிராம் பண்ணுறதுக்கு ஸ்டார் சமையலறையும் இல்ல.

இன்னைக்கு இருக்குற அரசியல் நிலைமையில மக்கள் செல்வாக்கு உள்ளவங்க திறமையா செயல்படுவாங்கன்னு பார்த்தா.... வரவங்க எல்லாம் ஓடிப்புடிச்சு விளையாட நினைக்கிறாங்க. ரஜினியும், கமலும் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர்கள், நீண்ட கால நண்பர்களும் கூட. ரெண்டு பெரும் ஒண்ணா சேர்ந்து செயல்படனும் இல்லேன்னா யாராவது ஒருத்தர் விட்டுக்கொடுத்து விலகி இருக்கணும்.. அப்பத்தான் தமிழ்நாட்டை காப்பாத்த முடியும். மாற்று அரசியலை உருவாக்க முடியும். ஆனால், ரெண்டு பேரும் வெவ்வேற கருத்துக்களோடு ஒரே நேரத்தில் போட்டி போட்டா ஓட்டுக்கள் பிரியுமே தவிர ரெண்டு பேருமே வெற்றி பெற முடியாது.

எனவே, ரஜினி தலை சுத்தல்லேருந்து விடுபடனும். கமல் சமையலறையை விட்டு வெளியில வரணும். அதுதான் நல்லது.

அட்வைஸ் கேட்டாங்க அதான் சொல்லிருக்கேன்.
ப்ரீ அட்வைஸ்!
கேட்டா கேளுங்க, கேக்காட்டி போங்க.!!

- எழுத்ததிகாரன்.
avatar
Pranav Jain
பண்பாளர்


பதிவுகள் : 167
இணைந்தது : 14/11/2016
மதிப்பீடுகள் : 45

View user profile

Back to top Go down

Re: அரசியலும் - சினிமாவும்!

Post by T.N.Balasubramanian on Thu Feb 22, 2018 9:04 pm

@pranav jain wrote:அட்வைஸ் கேட்டாங்க அதான் சொல்லிருக்கேன்.
ப்ரீ அட்வைஸ்!

யார் இப்போ உங்களை கேட்டாங்க ?
இருந்தாலும் நன்றாகவே அலசி இருக்கிறீர்கள். ரசித்தேன்.
நீங்கள் அரசியலில் ஈடுபடுவதாகவும் / உங்கள் சமூக பிரதிநிதியாக நிற்கப்போவதாக சொன்னது எவ்வளவு தூரத்தில் இருக்கிறது. அம்மா வேறு இப்போது இல்லை.

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 23529
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 8626

View user profile

Back to top Go down

Re: அரசியலும் - சினிமாவும்!

Post by Pranav Jain on Thu Feb 22, 2018 10:56 pm

@T.N.Balasubramanian wrote:
யார் இப்போ உங்களை கேட்டாங்க ?

இருந்தாலும் நன்றாகவே அலசி இருக்கிறீர்கள். ரசித்தேன்.
நீங்கள் அரசியலில் ஈடுபடுவதாகவும் / உங்கள் சமூக பிரதிநிதியாக நிற்கப்போவதாக சொன்னது எவ்வளவு தூரத்தில் இருக்கிறது.  அம்மா வேறு இப்போது இல்லை.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1260347

கமல்தான் அறிவுரை கேட்டாராம். அதற்காகத்தான் சொல்லப்பட்டிருக்கிறது.

மேலும் நாங்கள் அரசியலில் ஈடுபடுவது இன்னும் இறுதி முடிவாகவில்லை. ஆனால், எல்லா புதிய கட்சிகளுக்கும் முன்னோடியாக கட்சி பெயர், கொடி, சின்னம், கொள்கை என்று எல்லாவற்றையும் நாம்தான் முதலில் அறிவித்து வருகிறோம்.
நமது கட்சியின் பெயர் "இந்திய ஜனசமூக கட்சி"
நமது கட்சியின் சின்னம் "இரு விழிகள்"
கொள்கை "சாதி, மத, மொழி வேறுபாடுகளற்ற சமூகம், இலவச கல்வி மற்றும் மருத்துவம், மற்றும் மக்கள் நலனுக்கான எல்லா நடவடிக்கையும் எங்கள் கொள்கையாகும்.
நமது முகநூல் குழு (3500 உறுப்பினர்கள்): https://www.facebook.com/groups/publicpoliticalofindia/

தமிழ்நாட்டில் "தமிழ்நாடு ஜனசமூக கட்சி" என்ற பெயரில் செயல்படுவோம். தேர்தலில் போட்டியிடுவோமா அல்லது வெளியில் இருந்து செயல்படுவோமா என்பது இன்னும் முடிவாகவில்லை. மற்றபடி கிட்டத்தட்ட கமல் மாதிரியேதான். ஆனால் கமலுக்கு முன்பாகவே நாம் செயல்படுகிறோம் என்பது பெருமையாகத்தான் இருக்கிறது. முதலில் நம்மை மக்களிடம் பிரபலப்படுத்த வேண்டும். பிறகு உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். நிதி திரட்ட வேண்டும். எனவே கால அவகாசம் என்பது நமக்கு அதிகம் தேவைப்படும். அதே நேரத்தில் இது விளையாட்டாக போகுமா அல்லது விஸ்வரூபம் எடுக்குமா என்பதும் இன்னும் தெரியவில்லை. காலம் பதில் சொல்லட்டும்... நம்மால் செய்ய முடியவில்லையென்றால் மக்கள் நலனுக்காக செயல்படும் மற்றவர்களுக்கு உறுதுணையாக இருப்போம் என்பதில் எந்த மாற்றமும் இருக்காது.


avatar
Pranav Jain
பண்பாளர்


பதிவுகள் : 167
இணைந்தது : 14/11/2016
மதிப்பீடுகள் : 45

View user profile

Back to top Go down

Re: அரசியலும் - சினிமாவும்!

Post by T.N.Balasubramanian on Fri Feb 23, 2018 8:37 am

மிக்க நன்று பிரணவ்,
எங்கள் தொகுதியில் நீங்கள் போட்டி இட்டால்
எங்கள் குடும்பத்தார் ஒட்டு உங்களுக்கே.

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 23529
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 8626

View user profile

Back to top Go down

Re: அரசியலும் - சினிமாவும்!

Post by மூர்த்தி on Sat Feb 24, 2018 12:59 am

தமிழ் நாட்டில் 63 கட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அத்துடன் தினகரன் ,ரஜனி,கமல், .....தமிழ்நாடு ஜனசமூக கட்சி என தொடருகிறது. 10 கட்சிகள் செயலிழந்து போய் விட்டன.
avatar
மூர்த்தி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1046
இணைந்தது : 07/06/2016
மதிப்பீடுகள் : 506

View user profile

Back to top Go down

Re: அரசியலும் - சினிமாவும்!

Post by Pranav Jain on Sat Feb 24, 2018 4:32 pm

@மூர்த்தி wrote:தமிழ் நாட்டில் 63 கட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அத்துடன் தினகரன் ,ரஜனி,கமல், .....தமிழ்நாடு ஜனசமூக கட்சி என தொடருகிறது. 10 கட்சிகள் செயலிழந்து போய் விட்டன.
மேற்கோள் செய்த பதிவு: 1260418

'தமிழ்நாடு ஜனசமூக கட்சி' உருவாவதற்கு தாமதமாகலாம். உருவாகிவிட்டால் பின்பு செயல் இழக்காது. உங்கள் ஆதரவுக்கு நன்றி.
avatar
Pranav Jain
பண்பாளர்


பதிவுகள் : 167
இணைந்தது : 14/11/2016
மதிப்பீடுகள் : 45

View user profile

Back to top Go down

Re: அரசியலும் - சினிமாவும்!

Post by Pranav Jain on Sat Feb 24, 2018 4:33 pm

@T.N.Balasubramanian wrote:மிக்க நன்று பிரணவ்,
எங்கள் தொகுதியில் நீங்கள் போட்டி இட்டால்
எங்கள் குடும்பத்தார் ஒட்டு உங்களுக்கே.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1260358

கேட்பதற்கே மகிழ்ச்சியாக இருக்கிறது. உங்கள் ஆதரவுக்கு நன்றி...
avatar
Pranav Jain
பண்பாளர்


பதிவுகள் : 167
இணைந்தது : 14/11/2016
மதிப்பீடுகள் : 45

View user profile

Back to top Go down

Re: அரசியலும் - சினிமாவும்!

Post by Pranav Jain on Sat Feb 24, 2018 11:30 pmகமல் சார், முதல்ல..... நீங்க ஒரு அரசியல்வாதி மாதரி உக்கார்ந்து பேசுங்க. தெனாவட்டா உக்கார்ந்துக்கிட்டு தினுசா பேசுறதெல்லாம் சினிமாவோட இருக்கட்டும். கூடாது  கூடாது
ஏன்னா, மக்கள் எல்லாம் இது ஏதோ சினிமா புரமோஷன்னு நினைச்சுக்க போறாங்க...  சிரிப்பு  சிரிப்பு

அது சரி, மக்கள் எல்லாம் பொங்கி எழுந்து இப்ப என்ன பண்ணனும்?... கட்சியில மெம்பர்ஷிப் ஆகுறதுக்கு ஏன் பொங்கி ஏழனும்? அதான் தேர்தலுக்கு மூணு வருஷம் இருக்கே...
ஒருவேளை.... ஆட்சி கலையப்போகுதா என்ன?...
தெளிவா சொன்னீங்கன்னா நாங்களும் கேமெராவை தூக்கிடுவோம்ல....

- மக்கள். (வேடிக்கை பார்க்க முடியல அதான்...)
avatar
Pranav Jain
பண்பாளர்


பதிவுகள் : 167
இணைந்தது : 14/11/2016
மதிப்பீடுகள் : 45

View user profile

Back to top Go down

Re: அரசியலும் - சினிமாவும்!

Post by மூர்த்தி on Sun Feb 25, 2018 12:42 am

கமல் ஒரு அதிரடி முடிவு எடுத்துள்ளாராம். தான் ஒரு பெரிய நடிகராக இருந்தாலும் ஒவ்வொரு வீட்டின் வரவேற்பறைக்கு செல்லும் வகையில் தன்னை பிரபலப்படுத்தியது பிக்பாஸ் நிகழ்ச்சிதான். எனவே மீண்டும் பிக்பாஸ் 2 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி, அதன் மூலம் தனது கட்சியையும் அவ்வப்போது பிரபலப்படுத்த அவர் திட்டமிட்டுள்ளாராம். தனது முடிவினை விஜய் டிவியிடம் அவர் தெரிவிக்க, டிவி நிர்வாகத்தினர்களும் மகிழ்ச்சியாக ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. எனவே விரைவில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் 2 என்ற விளம்பரம் வரவாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

நன்றி-வெப்துனியா
avatar
மூர்த்தி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1046
இணைந்தது : 07/06/2016
மதிப்பீடுகள் : 506

View user profile

Back to top Go down

Re: அரசியலும் - சினிமாவும்!

Post by Pranav Jain on Sun Feb 25, 2018 1:37 pm

சினிமா, தொலைக்காட்சியில் என்ன செய்தாலும் ரசிக்கலாம்...
avatar
Pranav Jain
பண்பாளர்


பதிவுகள் : 167
இணைந்தது : 14/11/2016
மதிப்பீடுகள் : 45

View user profile

Back to top Go down

Re: அரசியலும் - சினிமாவும்!

Post by Pranav Jain on Wed Feb 28, 2018 8:54 pm

அரசியல் செல்வாக்கு உள்ளவர்கள் சினிமாவிற்கு வருவதும், சினிமாவில் செல்வாக்கு பெற்றவர்கள் அரசியலில் வெற்றி பெறுவதும் வரலாறு. ஆனால் இன்று முகப்புத்தகம் டிவிட்டர் போன்ற மிகப்பெரும் சக்தி வாய்ந்த சமூக இணையதளங்களில் எழுதுவது எளிமையானதால் தகுதி இல்லாதவர்கள் எல்லாம் எழுத தொடங்கி விட்டனர். 3 லைக், 2 கமெண்ட் கிடைத்துவிட்டால் நாமளும் பிரபலம்தான் என்ற நிலையாகி விட்டது.

முன்பெல்லாம் சிந்திக்க தெரிந்த எழுத்து திறமையுள்ள பத்திரிக்கையாளர்கள், நிருபர்கள், எழுத்தாளர்கள் மட்டுமே அரசியலை விமர்சனம் செய்வார்கள். அது தொலைகாட்சி, வானொலி, செய்தித்தாளில் மட்டுமே வெளிவரும். அதனால் அரசியல் தலைவர்கள் தவறு செய்வதற்கு தயங்கினார்கள். மக்களுக்கு தவறுகள் தெரிந்துவிட்டால் பதவிக்கு ஆபத்து வருமோ என்று பயமும் இருந்தது. ஆனால் இன்று பத்திரிகை ஆபீஸில் கூட்டி பெருக்கி தூசு துடைத்தவர்கள், ஆபீஸ் ஓரத்தில் பஜ்ஜி விற்றவர்கள், நாய், நரி, பேய், பிசாசு, குட்டி சாத்தான், முகவரி இல்லாத மூடர்கள் எல்லாம் விமர்சனம் எழுத தொடங்கி விட்டன. அதோடு சேர்ந்து சாதாரண மக்களும் எழுத ஆரம்பித்து விட்டனர். அதன் விளைவுதான் இன்று அரசியலில் பலர் நுழைவதற்கு காரணமாக அமைகின்றது. ஏனென்றால் மக்கள் விமர்சனம் மட்டும்தான் எழுதுகிறார்கள் ஆனால் யாரையும் தண்டிக்க முடியவில்லை. எனவே மக்களுக்கு விஷயம் தெரிந்தாலும் எதையும் செய்ய முடியாது என்பதை அனைவரும் புரிந்து கொண்டனர் மக்கள் மீது இருந்த பயம் மறந்தே போய்விட்டது.

நாமதான் எல்லாத்துக்கும் எழுத்து சுதந்திரம் என்று கத்த தொடங்கி விடுகிறோமே... அதுமட்டுமல்லாது அரசியலில் கோடி கோடியாக கொள்ளையடிக்கலாம் என்பதையும் புள்ளி விவரத்தோடு விளம்பரமும் செய்கிறோம். அப்புறம் என்ன?...... டிசைன்லயே டி.எஸ்.பி ஆகுறமாதிரி. கம்பியூட்டர்லயே கட்சி கொடி உருவாக்க வேண்டியதுதான்...

வருஷத்துக்கு 365 நாள் இருக்கு. 3 வருஷத்துக்கு எத்தனை கட்சி கொடி உருவாக்கலாம்?

ரெடி.... ஜூட்!
avatar
Pranav Jain
பண்பாளர்


பதிவுகள் : 167
இணைந்தது : 14/11/2016
மதிப்பீடுகள் : 45

View user profile

Back to top Go down

Re: அரசியலும் - சினிமாவும்!

Post by Pranav Jain on Tue Mar 06, 2018 5:05 pm

@Pranav Jain wrote:
தமிழ்நாட்டிற்கு தற்போதைய தேவை நேர்மையான, திறமையான தலைமைதான். அது இல்லை என்பதற்காகத்தான் பலரும் புதிதாக அரசியலுக்குள் வர முயற்சிக்கிறோம். மக்களின் தேவைகளை அறிந்து உதவி செய்வதும், நாட்டில் உள்ள கூச்சல் குழப்பங்களை தீர்த்து, முறைப்படுத்தி அமைதியை நிலைநாட்டுவதும்தான் ஒரு அரசின் கடமை.

- எழுத்ததிகாரன்
மேற்கோள் செய்த பதிவு: 1260382

வெற்றிடத்தை நிரப்பவே வருகிறேன - ரஜினி பேச்சு

சென்னை மதுரவாயலில் தனியார் கல்லூரியில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு எம்ஜிஆர் சிலையை திறந்து வைத்து கூடி இருந்த மாணவர்கள் தொண்டர்கள் மத்தியில் ரஜினி பேசியபோது...

இப்போது தமிழகத்தில் நல்ல தலைவனுக்கான வெற்றிடம் இருக்கிறது. கருணாநிதிக்கு உடல்நிலை சரியில்லை, ஜெயலலிதா மறைந்து விட்டார். தமிழ்நாட்டில் நல்ல தலைவன் இல்லை என்பதால் அந்த இடத்திற்கு நான் வர விரும்புகிறேன் என்றும் ரஜினி பேசினார்.
avatar
Pranav Jain
பண்பாளர்


பதிவுகள் : 167
இணைந்தது : 14/11/2016
மதிப்பீடுகள் : 45

View user profile

Back to top Go down

Re: அரசியலும் - சினிமாவும்!

Post by T.N.Balasubramanian on Tue Mar 06, 2018 5:36 pm

காமராஜர் ,கக்கன் போன்றவர்கள்
வெறுங்கையோடு வந்தார்கள் வெறுங்கையோடு போனார்கள்
மக்களுக்கு உதவும் வகையில் சேவை செய்தார்கள்.
இப்போது அரசியலில் குதிக்கவிரும்பும் ஆட்கள் சேவை செய்யவா
வருகிறார்கள்.இல்லை பணம் சேர்க்கவே வருகிறார்கள்.
இல்லை சேவைதான் பெரிது என்றால் , சேர்த்து வைத்து இருக்கிற சொத்தை எல்லாம்
ஏழைகளுக்கு தானம் செய்து விட்டு அரசியலில் நுழையட்டும்
செய்வார்களா? மாட்டார்கள். தமிழனை ஐநூறுக்கும் ரெண்டாயிரத்திற்கும்
பிச்சைகாரனாக மாற்றிவிட்டு கெரிபீன் தீவுக்கூட்டங்களில் தீவை வாங்கிக்கொண்டு
போலி பெயரில் கம்பெனி நடத்திக்கொண்டு மக்களின் நிலையை கீழ்நிலைக்கு
கொண்டுசெல்வார்கள்.

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 23529
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 8626

View user profile

Back to top Go down

Re: அரசியலும் - சினிமாவும்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை