உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» ஆறாத் துயரம் மாறாதோ ?
by T.N.Balasubramanian Today at 5:46 pm

» தாழம்பூ - திரைப்பட பாடல் வரிகள் & காணொளி
by சக்தி18 Today at 4:04 pm

» ராமர் சிலையை செருப்பால் அடித்ததை ஒப்புக்கொண்ட தி.க.,
by சக்தி18 Today at 3:54 pm

» கூடையில் வெட்டுக்கிளி பார்சலை எடுத்து வந்த எம்.எல்.ஏ
by kram Today at 3:51 pm

» பள்ளிக்கு ஒருநாள் தலைமை ஆசிரியையான 10-ம் வகுப்பு மாணவி
by சக்தி18 Today at 3:51 pm

» வழிகாட்டிய மலர்கள்!
by ayyasamy ram Today at 2:00 pm

» மணி ரத்னம் தயாரிப்பில் சித் ஸ்ரீராம் இசையமைத்துள்ள வானம் கொட்டட்டும் படத்தின் பாடல்கள்!
by ayyasamy ram Today at 1:57 pm

» நான் ரசித்த சமீபத்திய கவிதைகள்
by ayyasamy ram Today at 1:50 pm

» உலகில் ஏன் இத்தனை மொழிகள்?
by ayyasamy ram Today at 1:42 pm

» தாத்தா காந்தி!
by ayyasamy ram Today at 1:41 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by சக்தி18 Today at 1:40 pm

» அடுத்த தலை முறை ஏ,பி,சி,டி
by சக்தி18 Today at 1:38 pm

» பொன்மொழிகள்! தொகுப்பு: சுவாமி கமலாத்மானந்தர்
by ayyasamy ram Today at 12:46 pm

» குளிக்காமலும் தரிசிக்கலாம்
by ayyasamy ram Today at 12:16 pm

» கரோனா வைரஸ்: சீனாவில் வெளியே வர முடியாமல் தவிக்கும் தமிழக மாணவர்கள்!
by ayyasamy ram Today at 11:34 am

» முதியோர் இல்லத்தில் அடைத்துவைக்கப்பட்டிருந்த 73 பேர் மீட்பு
by ayyasamy ram Today at 11:31 am

» அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி. பழனிசாமி கைது
by ayyasamy ram Today at 11:30 am

» நண்பா
by சண்முகம்.ப Today at 10:37 am

» குறியீடாய் மாறினாய்
by சண்முகம்.ப Today at 10:25 am

» அதிக வரி சமூக அநீதி: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி
by ayyasamy ram Today at 5:30 am

» சர்ச்சைகளில் மாட்டுவதில் நானும் கோலியும் ஒன்று: கங்கனா ரனாவத்
by ayyasamy ram Today at 5:24 am

» சேலையணிந்து வந்து ஸ்ரீரெங்கநாதரைதரிசித்த தாய்லாந்து நாட்டுப் பெண்கள்
by ayyasamy ram Today at 5:23 am

» குதிரையில் சவாரி செய்த மணப்பெண்கள்! எதற்காகத் தெரியுமா?
by ayyasamy ram Today at 5:22 am

» தாய்மையே அன்பு!
by ayyasamy ram Today at 5:16 am

» ஹெட்போன் ஜாக்கிரதை
by ayyasamy ram Today at 5:16 am

» பிரச்சனைகளை சிரிப்போடு கடந்து போக கற்றுக் கொள்ளுங்கள்..!!
by ayyasamy ram Today at 5:14 am

» எண்ணம் போல் வாழ்க்கை…!
by ayyasamy ram Today at 5:12 am

» ஏல இங்கிலீசு பேசலாம் வாரீயால?
by ayyasamy ram Today at 5:11 am

» நேரு காட்டிய நகைச்சுவை
by ayyasamy ram Today at 5:07 am

» ஜீரோவின் மதிப்பு!
by ayyasamy ram Today at 5:06 am

» ஆரோக்கியம் பெற எளிய வழி
by ayyasamy ram Today at 5:05 am

» புத்தகம் தேவை : இறையன்பு IAS
by prajai Yesterday at 10:26 pm

» ஒற்றுமைக் கும்மி
by duraisingam Yesterday at 9:38 pm

» குண்டூசி - ஆசிரியப்பா
by duraisingam Yesterday at 9:22 pm

» ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்
by syedbasha Yesterday at 9:22 pm

» சனிப் பெயர்ச்சி பலன்கள் - 2020 (மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம்)
by ayyasamy ram Yesterday at 6:13 pm

» குடியரசு தினம் ஏன் ஜனவரி 26ம் தேதி கொண்டாடப்படுகிறது?
by ayyasamy ram Yesterday at 5:11 pm

» ஹல்வா விழா : பட்ஜெட்டுக்கு முன்பு நிதி அமைச்சகம் ஏன் இதை கொண்டாடுகிறது?
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தம்பி என்னப்பா வித்தியாமா ஃபிரண்ட் பிடிச்சிருக்க
by ஜாஹீதாபானு Yesterday at 4:24 pm

» கீழடி தொன்மை
by VEERAKUMARMALAR Yesterday at 2:55 pm

» மின் நூல் படிப்பவர்களுக்கு.............
by சக்தி18 Yesterday at 2:51 pm

» Microsoft Edge புதிய வடிவில்
by சக்தி18 Yesterday at 2:47 pm

» மொக்க ஜோக்ஸ்
by சக்தி18 Yesterday at 2:35 pm

» திரை இசையில் முருகன் பக்தி பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:36 pm

» கண்களை கட்டிக்கொண்டு தன்னை சுற்றி உள்ளதை கூறி அசத்தும் மாணவர்
by ayyasamy ram Yesterday at 1:07 pm

» இன்று தை அமாவாசை: ராமேசுவரம் அக்னி தீர்த்தக்கடலில் பக்தர்கள் புனித நீராடினர்
by ayyasamy ram Yesterday at 1:04 pm

» தட்டையான வயிற்றை பெற, கொழுப்பை கரைக்க உதவும் எளிய உடற்பயிற்சிகள்
by ayyasamy ram Yesterday at 12:35 pm

» ஆன்மிக தகவல் சரபப் பறவை
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஆக்கபூர்வமான சிந்தனை, ஆக்கபூர்வமான பேச்சு!
by ayyasamy ram Yesterday at 12:09 pm

» மனைவியும் ஒரு திருக்குறள் தான்…!!
by ayyasamy ram Yesterday at 12:08 pm

Admins Online

வளவளப் பேச்சு , தேவைதான் ! (ஒருபக்கக் கதை)

வளவளப் பேச்சு , தேவைதான் !  (ஒருபக்கக் கதை) Empty வளவளப் பேச்சு , தேவைதான் ! (ஒருபக்கக் கதை)

Post by Dr.S.Soundarapandian on Thu Sep 21, 2017 8:50 pm

வளவளப் பேச்சு , தேவைதான் ! (ஒருபக்கக் கதை)

குருமூர்த்தி வீட்டு வாசலில் அக்கம் பக்கத்தார் சோகத்துடன் நின்றனர்;

அதில் ஒருவர் மற்றவரிடம் , “குருமூர்த்தி ,ராத்திரி படுத்தவர்தாங்க; காலையில் பொணமாக் கிடக்கிறாரு !” என்று தனது துக்கத்தை வெளிப்படுத்தினார்!

“ரெண்டு பொம்பளைப் பிள்ளைங்க! இனிமே அதுங்கள வளர்த்து ஆளாக்கி …அவரு பொஞ்சாதி தலையில எல்லாம் விழுந்துடுச்சு!” இன்னொருவர் புலம்பினார் !

ஒரு வாரம் ஆயிற்று!

குருமூர்த்தியின் சாவின் மர்மம் கசிந்தது!

“அவரு மருந்தக் குடிச்சுத்தான் செத்தாராம்ல!” – ஒருத்தி.

“ அவரு எப்போப் பாத்தாலும், நான் ரெண்டு பொம்பளப் புள்ளைங்களை வச்சிருக்கிறேன் ! .. என்ன செய்யப்போறேன்னு பொலம்புவாருங்க!- இன்னொருத்தி.

“குருமூர்த்தி யாரு கிட்டேயும் பேச மாட்டாருங்க! .. வீட்டுப்பக்கம் , கடைப்பக்கம் .. ம்ஹூம்! எந்த இடத்திலயும் பேசவே மாட்டாரு !” – அறுபது வயதுக்காரி !

ஆக மொத்தம் , இரண்டு பெண் குழந்தைகளால்தான் தற்கொலை பண்ணிக்கொண்டாருன்னு அங்கே முடிவாயிற்று !

அது உண்மைதான் !

அவர் ஒரு மருந்துக் கடையில் வேலை பார்த்தார்; அந்தச் சம்பளத்தில் என்னத்தப் பெண்களை வளர்த்தோம்னு குருமூர்த்தி நினைத்ததில் வியப்பில்லைதான் !

அப்போது, ஒருவர் , “சே! என்னா ஆளுய்யா! நாங்கள் இல்லே? நாங்க என்ன பெரிய சம்பாத்தியக் காரங்களா?.. வேற ஒண்ணும் இல்லைங்க! பெண் குழந்தையைப் படிக்க வக்கிறது; ஒரு சின்ன வேலைக்கு அனுப்புறது; பிறகு அதுங்களே நமக்கு வழி சொல்லுங்களே?... மொதல்ல என்ன தெரியுமா? அவரு யாரு கூடயும் பேசாததுதான் கொறையே.. அக்கம் பக்கத்தாருடன் பேசியிருந்தால் இதெல்லாம் தெரிஞ்சிருக்குமே? … இங்க கூட என்னையச் சொல்லுவாங்கங்க , இவரு சளளன்னு எப்போப் பாத்தாலும் பேசிக்கிட்டே இருப்பாரேன்னு! கிண்டல் செய்வாங்க! .. நாலு பேருகிட்டப் பேசினாத்தாங்க வாழ்க்கையின் எல்லாமும் தெரியவரும்!” என்று நீளமாகப் பேசினார் !

சளசளப் பேச்சும் வளவளப் பேச்சும் ஒரு சமுதாயத்திற்குத் தேவையான அம்சமே என்று அங்கே நிரூபித்துச் சென்றுள்ளார் குருமூர்த்தி!

***
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 5039
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 2794

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

வளவளப் பேச்சு , தேவைதான் !  (ஒருபக்கக் கதை) Empty Re: வளவளப் பேச்சு , தேவைதான் ! (ஒருபக்கக் கதை)

Post by M.Jagadeesan on Fri Sep 22, 2017 7:06 am

வளவளப் பேச்சும் வம்புப் பேச்சும்
வாழ்க்கைக் குதவா வெட்டிப் பேச்சு !
பயனில் சொல்லைப் பேசும் மாந்தர்
நெல்லின் உமிக்கு நிகராம் அறீவீர் !
வெட்டிப் பேச்சு நேரம் போக்கும்
கட்டிப் பேச்சு காரியம் ஆக்கும் !
சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும்
பெருமை யாரும் பெறுதல் அரிதே !

இரண்டு பெண்களைப் பெற்ற அப்பன்
இறந்த காரணம் யாரே அறிவார் ?
காரணம் தெரியா முன்னர் மக்கள்
கண்ணும் காதும் மூக்கும் வைத்து
கதைகள் கட்டும் வழக்கம் இங்கு
தொன்று தொட்டு உள்ளது தானே !

பட்டி மன்றம் வைத்துப் புலவர்
வெட்டிப் பேச்சுப் பேசுதல் தவிர்த்து
சட்டிப் பானை செய்தால் கூட
சங்கடம் தீர்ந்து செல்வம் பெருகும் !
வாயில் வீரம் காட்டும் ஒருவன்
ஆயுள் முழுவதும் துன்பப் படுவான்
செயலில் வீரம் காட்டும் ஒருவன்
செல்வம் சேர்ந்து செழிப்புடன் வாழ்வான் !  

அடுக்கு மொழிகள் பேசி நாட்டை
அவல நிலைக்கு கொண்டு சென்றார் !
எடுத்த காரியம் முடித்துக் கொடுக்க
எதிலும் லஞ்சம் குறித்து வைத்தார் !
கோடி செல்வம் சேர்த்து வைத்தார்
மாடி வீடுகள் வாங்கி வாழ்ந்தார்
கண்ணில் பட்டதை எல்லாம் வாங்கி
எண்ணில் அறியா குற்றம் செய்தார் !
முற்பகல் செய்தால் விளையும் என்ற
ஐயனின் வாக்கை அறவே மறந்தார் !

ஆதலால்

அக்கம் பக்க உறவுகள் தம்முடன்
அரட்டைப் பேச்சு என்றும் வேண்டாம் !
தாமரை இலையின் தண்ணீர் போல
ஒட்டியும் ஒட்டா உறவுடன் வாழ்ந்தால்
வம்புகள் குறையும் வழக்குகள் வாரா
கம்புகள் கொண்டு அடித்துக் கொள்ளும்
காட்சிகள் வாரா ஆனால்  
மாட்சிமை  மிக்க மாண்புகள் வருமே !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5293
இணைந்தது : 18/04/2015
மதிப்பீடுகள் : 2467

Back to top Go down

வளவளப் பேச்சு , தேவைதான் !  (ஒருபக்கக் கதை) Empty Re: வளவளப் பேச்சு , தேவைதான் ! (ஒருபக்கக் கதை)

Post by Dr.S.Soundarapandian on Fri Sep 22, 2017 7:16 pm

ஆறுதல்

மீண்டும் சந்திப்போம்
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 5039
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 2794

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

வளவளப் பேச்சு , தேவைதான் !  (ஒருபக்கக் கதை) Empty Re: வளவளப் பேச்சு , தேவைதான் ! (ஒருபக்கக் கதை)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை