உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» சிங்கை…மதியழகன் கவிதைகள்(நன்றி-உதயசூரியன்- காலாண்டிதழ்)
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:43 am

» மசூதியில் பெண்களை அனுமதிக்க சுப்ரீம் கோர்ட்டில் மனு
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:36 am

» ஒரு வாரத்துக்குள் அமைகிறது ராமர் கோவில் அறக்கட்டளை
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:29 am

» சினிமாவில் நிலைக்கும் ரகசியம் -நடிகை ஸ்ரேயா
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:26 am

» உங்க ஊருல தோசை எதுல ஊத்துவாங்க
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:24 am

» பட்டமளிப்பு விழாவில் ரகளை; வெளியேறினார் மே.வங்க கவர்னர்
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:20 am

» 6 அடி உயர தக்காளி, 'மரம்'
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:16 am

» அடுத்த மாதம் 25 படங்கள் ரிலீஸ்
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:13 am

» பாரதிராஜா இயக்கும் 3 படங்கள்
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:10 am

» பொன்னியின் செல்வன் திரைப்படம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:06 am

» இஸ்ரேலில் சொட்டு தண்ணீர் வீணாகாது!
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:03 am

» முதல் ஓவரில் 'ஹாட்ரிக்'; இந்திய வீரர் உலக சாதனை
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:58 am

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 9:24 am

» பாகிஸ்தானில் வாசனை திரவிய தொழிற்சாலையில் பயங்கர தீவிபத்து: 11 பேர் உடல் கருகி சாவு
by ayyasamy ram Today at 5:52 am

» அரியலூர், கள்ளக்குறிச்சியில் புதிய மருத்துவ கல்லூரிகள் மத்திய அரசு அனுமதி
by ayyasamy ram Today at 5:50 am

» புற்றுநோய் நோயாளிகளுக்கு சேவை: பத்மஸ்ரீ விருது பெற்ற தமிழக டாக்டர்
by ayyasamy ram Today at 5:36 am

» அமெரிக்க தூதராக தரன்ஜித் சிங் சந்து நியமனம்
by ayyasamy ram Today at 5:32 am

» 10 எளிமையான வீட்டுக் குறிப்புகள்!
by T.N.Balasubramanian Yesterday at 8:18 pm

» பாவம் முதியவர்கள் -தவிக்க விடும் தரம் கெட்டோர்
by T.N.Balasubramanian Yesterday at 8:08 pm

» மில்க்மெய்டு சேர்த்து சர்க்கரை பொங்கல் தயாரித்தால் - (வீட்டுக் குறிப்புகள்)
by ஜாஹீதாபானு Yesterday at 6:43 pm

» கடவுளுக்கு ஏற்றும் விளக்கை குளிர வைக்கும் முறை
by ayyasamy ram Yesterday at 6:05 pm

» பழுப்பு இல்லை, பளீச்!- வீட்டுக் குறிப்புகள்
by மாணிக்கம் நடேசன் Yesterday at 2:57 pm

» 40 நாள் போருக்கு ஆயுதங்களை தயாா்படுத்துகிறது ராணுவம்!
by சக்தி18 Yesterday at 2:29 pm

» தஞ்சை பெரிய கோவிலில் தமிழ், சமஸ்கிருதத்தில் குடமுழுக்கு நடத்தப்படும் - தமிழக அரசு
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» பத்மஸ்ரீ விருது பெற்ற ஆரஞ்சு பழ வியாபாரி - சுவாரசிய தகவல்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» சீனாவில் தவிக்கும் இந்தியர்களை அழைத்து வர சிறப்பு விமானம் தயார்
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கலாமின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» ஜனவரி 31, பிப். 1-இல் வங்கி ஊழியா் வேலை நிறுத்தம்: அகில வங்கி ஊழியா்கள் சங்கம் அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 12:13 pm

» இந்த வாரம் வெளியாகவுள்ள ஆறு தமிழ்ப் படங்கள்!
by ayyasamy ram Yesterday at 12:08 pm

» இரண்டாயிரம் பெண்கள் பங்கேற்ற பிரம்மாண்ட பரதநாட்டியம்: இந்திய மொழிகளின் பாடல்களுக்கு நடனமாடினா்
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» உலக அழகிப் போட்டி
by ayyasamy ram Yesterday at 11:48 am

» 'ஆக்ஸ்போர்டு' அகராதியில் இடம்பிடித்த, 'ஆதார்'
by ayyasamy ram Yesterday at 7:11 am

» உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுவதா: ஐரோப்பிய யூனியனுக்கு இந்தியா சூடு
by ayyasamy ram Yesterday at 7:09 am

» வேலன்:-உங்கள் ;பாஸ்வேர்டின் உறுதி தன்மை அறிந்துகொள்ள-Passwordium
by velang Yesterday at 7:07 am

» ஆந்திராவில் மேல்சபை கலைக்கப்படும்:அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றம்
by ayyasamy ram Yesterday at 7:07 am

» 'ஐ.என்.எஸ்., கவரட்டி' போர்க்கப்பல்:விரைவில் இந்திய கடற்படையில் சேர்ப்பு
by ayyasamy ram Yesterday at 7:04 am

» கவர்னர் சமாதானம்: மம்தா நிராகரிப்பு
by ayyasamy ram Yesterday at 7:01 am

» புத்தகம் தேவை : இறையன்பு IAS
by nahoor Mon Jan 27, 2020 9:54 pm

» முத்துலட்சுமி ராகவன் நாவல்கள்
by nahoor Mon Jan 27, 2020 9:50 pm

» வெற்றி உங்களுக்கே - பக்தி கதை
by ayyasamy ram Mon Jan 27, 2020 9:15 pm

» வடிவேலு -கைப்புள்ள உருவான விதம்
by T.N.Balasubramanian Mon Jan 27, 2020 9:14 pm

» கீதை காட்டும் பாதை
by ayyasamy ram Mon Jan 27, 2020 9:13 pm

» ஆன்மிகம் - கேளுங்க சொல்கிறோம் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Jan 27, 2020 8:44 pm

» நாராயணா என்னும் நாமம், நாவால் சொன்னால் வரும் ஷேமம்
by ayyasamy ram Mon Jan 27, 2020 8:17 pm

» குயிலே, குமரன் வரக் கூவுவாய்..! - எம்.எல் வசந்தகுமாரி பாடியது
by ayyasamy ram Mon Jan 27, 2020 8:10 pm

» பிறகேன் இத்தனை வாதம்?
by T.N.Balasubramanian Mon Jan 27, 2020 4:50 pm

» ஒரு வெட்டுக்கு இது இரண்டு கிடைக்கும் – குறுக்கெழுத்துப் போட்டி
by சக்தி18 Mon Jan 27, 2020 3:07 pm

» மூளை…முடுக்கு!- விடை சொல்லுங்கள்
by ayyasamy ram Mon Jan 27, 2020 2:51 pm

» சினிமா- பழைய பாடல்கள்- காணொளிகள்
by ayyasamy ram Mon Jan 27, 2020 12:20 pm

Admins Online

முற்பாடு – பிற்பாடு (சிற்றாராய்ச்சி)

முற்பாடு – பிற்பாடு (சிற்றாராய்ச்சி) Empty முற்பாடு – பிற்பாடு (சிற்றாராய்ச்சி)

Post by Dr.S.Soundarapandian on Fri Sep 01, 2017 6:50 pm

முற்பாடு – பிற்பாடு (சிற்றாராய்ச்சி)

‘அவள் வந்த பிற்பாடு பார்த்துக்கொள்ளலாம்!’ – சொல்கிறோம் !

இதிலுள்ள , ‘பிற்பாடு’ நோக்கத் தக்கது!

‘பிற்பாடு’ இருக்கிறதே , இதுபோல ‘முற்பாடு’ என ஒன்று இருக்கிறதா?
இருக்கிறது !

பதிற்றுப்பத்து என்ற சங்க இலக்கியத்திற்குப் பழைய உரை ஒன்று உள்ளது !
அதில், “வியன்றானை யென்றது பகைவர் நாட்டு எல்லையின் முற்பாடு சென்றுவிட்ட தூசிப் பெரும்படையை” என எழுதியுள்ளார் (பதிற்.33:5, பழைய உரை)!

இதற்குத் தனது அடிக்குறிப்பில் , உ.வே.சா. , “முற்பாடு – முன்னே; பிற்பாடு என்னும் சொல்லைப் போன்றது” என எழுதியுள்ளார்(பதிற்றுப்பத்து மூலமும் உரையும் , சென்னபட்டணம், மூன்றாம் பதிப்பு , 1941) !

ஆக , ‘பிற்பாடு’ என்று வழக்கில் உள்ள சொல்லுக்கு எதிர்ச்சொல்லாக ‘முற்பாடு’ என்றொரு சொல் தமிழில் இருந்துள்ளதை அறிகிறோம் !

நாம் கூறும் ‘பிற்பாடு’, காலப் பொருண்மை கொண்டது; பதிற்றுப் பத்தின் பழைய உரை குறிப்பிட்டது இடப் பொருண்மை கொண்டது ! இந்த வேறுபாட்டை நாம் கவனிக்கவேண்டும் !
ஆனாலும் , இடப் பொருண்மையிலும் , காலப் பொருண்மையிலும் ஒரு காலத்தில் ‘முற்பாடு’, ‘பிற்பாடு’ என்ற இரு வழக்குகளும் பயின்றிருக்கவேண்டும் என நாம் கருதலாம் !
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 5039
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 2794

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

முற்பாடு – பிற்பாடு (சிற்றாராய்ச்சி) Empty Re: முற்பாடு – பிற்பாடு (சிற்றாராய்ச்சி)

Post by M.Jagadeesan on Sat Sep 02, 2017 9:48 pm

முற்பாடு , பிற்பாடு ஆகிய சொற்கள் இரு சொற்களின் சேர்க்கையா அன்றி ஒரே சொல்லா ? இரு சொற்களாயின் புணர்ச்சி விதி கூறவும் .

பாடு என்ற சொல்லின் பொருள் என்ன ? Sing என்பதைத்தவிர வேறு பொருள் உள்ளதா ?
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5293
இணைந்தது : 18/04/2015
மதிப்பீடுகள் : 2467

Back to top Go down

முற்பாடு – பிற்பாடு (சிற்றாராய்ச்சி) Empty Re: முற்பாடு – பிற்பாடு (சிற்றாராய்ச்சி)

Post by T.N.Balasubramanian on Sun Sep 03, 2017 1:00 am

பிற்பாடு இன்றும் நடைமுறையில் உள்ள ஒரு சொல்.
முற்பாடு --இதுவரை கேள்விப்படாத ஒன்று ,நடைமுறையில்.

இருப்பினும் ,
முற்பாடு--- பெயர்ச்சொல்.
"தொடக்கத்தில் " என பொருள் தருகிறது,அகராதிகள்.

" முற்பாடு துன்பம் உறவரினும் துணிந்து செய்க" (குறள். 667, மணக்.) என
விக்கி கூறுகிறது. ( திருக்குறள் இல்லை என எண்ணுகிறேன்)

ரமணியன்


Last edited by T.N.Balasubramanian on Sun Sep 03, 2017 1:02 am; edited 1 time in total (Reason for editing : corrected once)


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 25910
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9378

Back to top Go down

முற்பாடு – பிற்பாடு (சிற்றாராய்ச்சி) Empty Re: முற்பாடு – பிற்பாடு (சிற்றாராய்ச்சி)

Post by Dr.S.Soundarapandian on Sun Sep 03, 2017 9:35 am

நன்றி ஜெகதீசன்! நன்றி ரமணியன் !

’பாடு’ என்ற பெயர்ச்சொல்லுக்கு ‘இடம்’ என்றொரு பொருள் உள்ளது! பிங்கல நிகண்டில் இதற்குச் சான்று உள்ளது. எனவே , ‘முற்பாடு’ இடப்பொருளில் வரும்போது , ’முன் + பாடு= முற்பாடு’ எனப் பிரிக்கவேண்டும் ! பதிற்றுப்பத்தில் , ‘முற்பாடு’ இடப்பொருளில்தான் வந்துள்ளது!

மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 5039
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 2794

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

முற்பாடு – பிற்பாடு (சிற்றாராய்ச்சி) Empty Re: முற்பாடு – பிற்பாடு (சிற்றாராய்ச்சி)

Post by T.N.Balasubramanian on Mon Sep 04, 2017 7:11 pm

"பாடு" ...........கஷ்டம் என்றும் அர்த்தம் கொள்ளலாமா?
"உன்னோடு பாடு படமுடியவில்லை "
என்று நடைமுறையில் உள்ளதே!

ரமணியன்
@Drசௌந்தரபாண்டியன்,
@MJagadeesan


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 25910
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9378

Back to top Go down

முற்பாடு – பிற்பாடு (சிற்றாராய்ச்சி) Empty Re: முற்பாடு – பிற்பாடு (சிற்றாராய்ச்சி)

Post by Dr.S.Soundarapandian on Mon Sep 04, 2017 8:25 pm

அருமை ரமணியன் அவர்களே!
தாங்கள் சொல்வது சரிதான்!
பாடு (பெயர்ச்சொல்) = துன்பம்= ’கஷ்டம்’
மீண்டும் சந்திப்போம்
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 5039
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 2794

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

முற்பாடு – பிற்பாடு (சிற்றாராய்ச்சி) Empty Re: முற்பாடு – பிற்பாடு (சிற்றாராய்ச்சி)

Post by M.Jagadeesan on Mon Sep 04, 2017 9:25 pm

" பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகல் " என்பது கலித்தொகை வரியாகும் .

பாடு என்றால் துன்பம் என்று ஒருபொருள் உண்டு .

" படுத்துகிறான் " என்றால் துன்பம் மிகச் செய்கின்றான் என்று பொருள் .

" பாலத்து ஜோசியனும் கிரகம்
...படுத்தும் என்று சொன்னான் ."

என்பது பாரதியின் வரிகள் .

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5293
இணைந்தது : 18/04/2015
மதிப்பீடுகள் : 2467

Back to top Go down

முற்பாடு – பிற்பாடு (சிற்றாராய்ச்சி) Empty Re: முற்பாடு – பிற்பாடு (சிற்றாராய்ச்சி)

Post by T.N.Balasubramanian on Tue Sep 05, 2017 4:10 am

நன்றி சௌந்தரபாண்டியன் & ஜெகதீசன் இருவருக்கும்.

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 25910
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9378

Back to top Go down

முற்பாடு – பிற்பாடு (சிற்றாராய்ச்சி) Empty Re: முற்பாடு – பிற்பாடு (சிற்றாராய்ச்சி)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை