ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ரா.ரமேஷ்குமார்

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 PKishanthini

நாவல் தேவை
 SK

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

எம்.ஜி.ஆர். பயன்படுத்திய கார் பங்கேற்பு: சென்னையில், பழமையான கார்கள் கண்காட்சி

View previous topic View next topic Go down

எம்.ஜி.ஆர். பயன்படுத்திய கார் பங்கேற்பு: சென்னையில், பழமையான கார்கள் கண்காட்சி

Post by ayyasamy ram on Mon Aug 21, 2017 6:24 am







சென்னையில் பழமையான கார்கள் கண்காட்சி தொடங்கியது. இந்த கண்காட்சியை நடிகர் விக்ரம் பிரபு தொடங்கிவைத்தார்.

-
ஆகஸ்ட் 21, 2017, 04:15 AM
சென்னை,
-
எம்.ஜி.ஆர். பயன்படுத்திய கார் உள்பட பழமையான கார்கள் பங்கேற்றன.


‘மெட்ராஸ் ஹெரிடேஜ் மோட்டாரிங் கிளப்’ சார்பில் பழமையான கார்கள் கண்காட்சி சென்னை திருவான்மியூர் வாசுதேவன் நகரில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா மாநாட்டு மையத்தில் நேற்று காலை நடந்தது.


இதனையொட்டி மைய வளாகத்தில் காட்சிக்காக நிறுத்துவதற்காக அதிகாலையிலேயே தங்களது பழைய மற்றும் பாரம்பரியமான கார்களை அதன் உரிமையாளர்கள் கொண்டு வந்திருந்தனர். அதேபோல பழமையான மோட்டார் சைக்கிள்களும் நிறுத்தப்பட்டு இருந்தன.


இந்த கண்காட்சியை நடிகர் விக்ரம் பிரபு தொடங்கிவைத்தார். அவருடன் ஏவி.எம்.சரவணன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் உடனிருந்தனர். இதனைத்தொடர்ந்து கண்காட்சியில் நிறுத்தப்பட்டு இருந்த கார்களை ஒவ்வொன்றாக விக்ரம் பிரபு பார்த்து ரசித்தார்.


முன்னாள் முதல்–அமைச்சர் எம்.ஜி.ஆர். பயன்படுத்திய 1957–ஆம் ஆண்டு இங்கிலாந்தில் தயாரிக்கப்பட்ட ‘டாட்ஜ் கிங்ஸ்வே’ காரும் (வண்டி எண்: எம்.எஸ்.எக்ஸ்.–3157) வைக்கப்பட்டு இருந்தது. இந்த கார் ‘அன்பே வா’ படத்தில் எம்.ஜி.ஆர். பயன்படுத்தியது ஆகும். அதேபோல ‘சிவாஜி’ படத்தில், ரஜினிகாந்த்–ஸ்ரேயா நடித்திருந்த ஒரு பாடல் காட்சியில் இடம்பெற்ற ‘எம்.ஜி–டி.பி. 1939’ கார் இடம்பெற்று இருந்தது.


மேலும் ஏவி.மெய்யப்ப செட்டியாரின் முதல் கார் என்று கூறப்படும் 1938–ம் ஆண்டு தயாரிப்பான ‘வாக்ஸ்ஹால் 14’ கார், ஜெமினி ஸ்டூடியோ நிறுவனரான எஸ்.எஸ்.வாசன் பயன்படுத்திய 1951–ம் ஆண்டு தயாரிப்பான ‘வாக்ஸ்ஹால் வெலாக்ஸ்’ என்ற காரும் இடம்பெற்று இருந்தன.


தொழில் அதிபரான டி.ஏ.எஸ்.ஜெயராமையா பயன்படுத்தி வரும் 1951–ம் ஆண்டு தயாரிப்பான ‘பக்–பியட்’ (எம்.எஸ்.இசட்.–7990) காரும் கண்காட்சியில் இடம்பெற்று இருந்தது.


‘ரோல்ஸ்ராய்ஸ்’, ‘இம்பீரியல்’, ‘கார்டிலக்’, ‘போர்டு’, ‘ஜாக்குவார்‘, ‘மெர்சிடஸ் பென்ஸ்’, ‘ஹெரால்டு’, ‘டாட்ஜ்’, ‘பக்’, ‘செவ்ரெலே’, ‘இந்துஸ்தான் மோட்டார் கமண்டோ’, ‘பியட்’ உள்ளிட்ட கார் நிறுவனங்கள் சார்பில் பல்வேறு காலகட்டங்களில் தயாரிக்கப்பட்ட 125 கார்கள் கண்காட்சியில் நிறுத்தப்பட்டு இருந்தன.


இதேபோல ‘பி.எஸ்.ஏ.’, ‘ராயல் என்பீல்டு’, ‘டிரையம்ப்’, ‘தி வொல்ப்’, ‘ஜேம்ஸ்’, ‘பென்னோனியா சிஸ்பெல்’, ‘விஜய் சூப்பர்’, ‘லம்பிரட்டா எல்.டி’ உள்ளிட்ட நிறுவனங்களின் தயாரிப்புகளான 31 பழமையான மோட்டார் சைக்கிள்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தன.


இதுதவிர ‘ஏர்போர்னே’ நிறுவனத்தின் 1938–ம் ஆண்டு தயாரிப்பான பழமையான சைக்கிள் ஒன்றும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.


கண்காட்சியில் இடம் பெற்றிருந்த கார்களை பார்வையிடுவதற்காக பொதுமக்கள் ஆர்வமுடன் வந்திருந்தனர்.



இதுவரை பழைய சினிமாக்களிலும், போட்டோக்களிலும் மட்டுமே பார்த்திருந்த பழமையான கார்களை, நேரில் பார்த்து ஆச்சரியப்பட்டனர். பழமையான கார்கள் முன்பு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.


 நண்பர்கள், குடும்பத்தினர்கள் என சேர்ந்து நின்று ‘செல்பி’ எடுத்தும் மகிழ்ந்தனர்.

தொழில் அதிபர் டி.ஏ.எஸ்.ஜெயராமையாவின் ‘பக்–பியட்’ காரை கண்காட்சிக்கு வந்தவர்கள் ஆர்வமுடன் பார்த்து ரசித்தனர். மேலும் காரின் சிறப்புகள் குறித்து ஜெயராமையாவிடம் கேட்டறிந்தனர். 



அவரது காரில் அமர்ந்து புகைப்படமும் எடுத்து மகிழ்ந்தனர்.
சென்னையில் நடக்கும் பழமையான–பாரம்பரிய கார்கள் கண்காட்சியில் தவறாது ஜெயராமையாவின் கார் பங்கேற்பது வழக்கம். இதுதவிர ‘எம்.ஜி.’, ‘பிளைமோத்’, ‘ஹெரால்டு’ ஆகிய 3 கார்களையும் ஜெயராமையா பராமரித்து வருகிறார்.

இதுகுறித்து டி.ஏ.எஸ்.ஜெயராமையா கூறுகையில், இந்த காரை ஓட்டும்போது, எனக்கு பெருமையாகவும், சந்தோ‌ஷமாகவும் இருக்கிறது. மற்றவர்களும் இந்த காரை ஆச்சரியத்துடன் பார்த்து செல்வார்கள். சிலர் இந்த கார் குறித்து என்னிடம் கேட்டுவிட்டு செல்வதும் உண்டு. பழமையான கார்களின் மீதான இன்றைய தலைமுறையினரின் ஆர்வம் அதிகரித்து வருகிறது’’, என்றார்.


கண்காட்சி அணிவகுப்பு நிகழ்ச்சியில், பழமையான கார்களை சிறப்பாக பராமரிப்பு செய்திருக்கும் உரிமையாளருக்கு பரிசு வழங்கப்பட்டது. அதன்படி, நடுவர்கள் மற்றும் பார்வையாளர்கள் கருத்துக்கணிப்பு படி, 1964–ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட ‘பியட் – ஸ்பைடர்’ தேர்ந்தெடுக்கப்பட்டு, அதன் உரிமையாளர் ரஞ்சித் பிரதாப்புக்கு பரிசு வழங்கப்பட்டது.


அதேபோல சிறந்த மோட்டார் சைக்கிளாக 1929–ம் ஆண்டு தயாரிப்பான ‘தி வொல்ப்’ தேர்வு செய்யப்பட்டு, அதன் உரிமையாளர் சுமந்த் செகந்த்க்கு பரிசு வழங்கப்பட்டது.


தினத்தந்தி
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37350
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: எம்.ஜி.ஆர். பயன்படுத்திய கார் பங்கேற்பு: சென்னையில், பழமையான கார்கள் கண்காட்சி

Post by Dr.S.Soundarapandian on Wed Aug 23, 2017 6:48 pm

புன்னகை :நல்வரவு:
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4609
மதிப்பீடுகள் : 2445

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum