உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» இதப்படிங்க முதல்ல...(சினிமா செய்திகள்- வாரமலர்)
by ayyasamy ram Today at 4:32 am

» தொடர்ந்து மாணவர் அணியிலேயே இருக்கப் போறாராம்…!
by ayyasamy ram Today at 4:20 am

» குடிச்சுட்டு வரலைன்னு சொன்னா நம்ப மாட்டேங்கிறா....!!
by ayyasamy ram Today at 4:14 am

» காஷ்மீரில் 7 மாதங்களுக்கு பின் நாளை பள்ளிகள் திறப்பு
by ayyasamy ram Today at 4:07 am

» யாருக்கு கடன் தள்ளுபடி செய்தீர்கள்? : பிரியங்கா
by ayyasamy ram Today at 4:04 am

» 5 ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு
by ayyasamy ram Today at 4:02 am

» எல்லாம் மாயைதானா? சோன்பத்ரா
by ayyasamy ram Today at 3:59 am

» புத்தக தேவைக்கு...
by Guest Yesterday at 11:54 pm

» திருக்கழுக்குன்றம்:-மலைக்கோயில்-அறிந்த சிலை -அறியாத தகவல்.
by velang Yesterday at 9:45 pm

» முஸ்லிம் தத்தெடுத்த பெண்ணுக்கு ஹிந்து முறைப்படி திருமணம்: குவியும் பாராட்டு
by T.N.Balasubramanian Yesterday at 5:29 pm

» பெண் பயிற்சியாளர்களை நிர்வாணமாக்கி சோதனை: குஜராத்தில் 'பகீர்'
by T.N.Balasubramanian Yesterday at 5:22 pm

» மேக்கப் இல்லீங்க… நிஜ பக்தி கோலத்தில் நம்ம நடிகைகள்!
by T.N.Balasubramanian Yesterday at 5:20 pm

» பாகுபலி ட்ரம்ப் -டுவிட்டரில் ட்ரம்ப்
by சக்தி18 Yesterday at 2:08 pm

» உத்தர பிரதேசம்: 3000 டன் தங்க சுரங்கம் - எப்போது அகழாய்வு? - விரிவான தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» எனக்கு பிடித்த பாடல், அது உனக்கு பிடிக்குமே, ...
by சக்தி18 Yesterday at 2:01 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by lakshmi palani Yesterday at 1:28 pm

» எனக்கு பிடித்த சினிமா பாடல் வரிகள்
by ayyasamy ram Yesterday at 10:42 am

» பின்னணி பாடகர்மலேசியா வாசுதேவன்
by ayyasamy ram Yesterday at 10:41 am

» ரிலீசுக்கு தயாராகும் திருவாளர் பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 10:38 am

» திரிஷாவிற்கு எச்சரிக்கை விடுத்த தயாரிப்பாளர்
by ayyasamy ram Yesterday at 10:37 am

» ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் – இந்திய வீரர் ரவி தாஹியா தங்கம் வென்றார்
by ayyasamy ram Yesterday at 10:33 am

» இதெல்லாம் அவங்க ஃபர்ஸ்ட் படம் இல்ல – விபரம் உள்ளே
by ayyasamy ram Yesterday at 10:31 am

» இட்லி சூப்பர் சாஃப்டாக வர என்ன செய்யலாம்?
by ayyasamy ram Yesterday at 10:22 am

» 'மூத்த குடிமக்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பதை பொறுத்தே அரசின் மதிப்பீடு' - ஐகோர்ட்
by ayyasamy ram Yesterday at 7:55 am

» தனியாா் பால் விலை உயா்வு: மநீம கண்டனம்
by ayyasamy ram Yesterday at 7:47 am

» வேலன்:-ஸ்கிரீன் ரிகார்டர்-Ice Cream Screen Recorder
by velang Yesterday at 7:32 am

» வாரணாசியில் சிவ வழிபாடு நடத்தும் முஸ்லிம் பெண் வக்கீல்
by ayyasamy ram Yesterday at 7:32 am

» நடைபாதையில் பைக் ஓட்டியவருக்கு பாடம் புகட்டிய 'சூப்பர் லேடி'
by ayyasamy ram Yesterday at 7:29 am

» பென்சன்தாரர்கள் ஆன்லைனில் லைப் சான்றிதழ் அளிக்கும் வசதி
by ayyasamy ram Yesterday at 7:26 am

» புத்தகம் தேவை : இறையன்பு IAS
by Sabeer ahamad Sat Feb 22, 2020 11:45 pm

» ஷாக் ஆகாதீங்க.. வாக்கிங் போனால் உடல் எடை குறையாதாம்!
by T.N.Balasubramanian Sat Feb 22, 2020 8:43 pm

» விளையாட்டு வினையாகலாம்!
by krishnaamma Sat Feb 22, 2020 8:17 pm

» மடிமீது காதல் கனா
by ayyasamy ram Sat Feb 22, 2020 7:37 pm

» கனகதாரா !! Short story by Krishnaamma
by krishnaamma Sat Feb 22, 2020 7:31 pm

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Sat Feb 22, 2020 7:17 pm

» கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியர்கள் சிங்கப்பூர் செல்வதை தவிர்க்க வேண்டும்...மத்திய அரசு அறிவிப்பு
by ayyasamy ram Sat Feb 22, 2020 4:25 pm

» பழியை தன் மேல் ஏற்று பெருமையை பிறர்க்கு உரித்தாக்கும் பண்பு
by ayyasamy ram Sat Feb 22, 2020 4:22 pm

» பின் நோக்கி இழுக்கப்படும் அம்புதான் வேகத்துடன் முன்நோக்கி பாய்கிறது
by ayyasamy ram Sat Feb 22, 2020 4:21 pm

» இலக்கியத்தில் காதல் தேவையா?
by ayyasamy ram Sat Feb 22, 2020 4:11 pm

» மனசும் குழந்தைமாதிரி தான்!
by ayyasamy ram Sat Feb 22, 2020 4:10 pm

» பணம் பத்தும் செய்யும்
by ayyasamy ram Sat Feb 22, 2020 4:05 pm

» மொக்க ஜோக்ஸ்!
by ayyasamy ram Sat Feb 22, 2020 4:01 pm

» சிதம்பரம் நடராஜா் கோயில் நாட்டியாஞ்சலி தொடக்க விழா
by சக்தி18 Sat Feb 22, 2020 3:57 pm

» பிறப்பு பாகிஸ்தானாக மாற்றி பிபிசி செய்தி தந்த குழப்பம்
by சக்தி18 Sat Feb 22, 2020 3:50 pm

» முத்தம் கொடுப்பதால் ஏற்படும் நன்மைகள்
by சக்தி18 Sat Feb 22, 2020 3:40 pm

» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு
by ayyasamy ram Sat Feb 22, 2020 3:27 pm

» எனக்கும் இப்போ ‘சீசன்-2’ காலம்! - தொகுப்பாளினி ஆர்த்தி உற்சாக நேர்காணல்
by ayyasamy ram Sat Feb 22, 2020 3:05 pm

» சதம் அடிப்பதில் ஜப்பானியர்களே வல்லவர்கள்
by ayyasamy ram Sat Feb 22, 2020 3:00 pm

» 99 சாங்ஸ் படத்தைத் தமிழில் எடுக்காதது ஏன்?: ஏ.ஆர். ரஹ்மான் பதில்
by ayyasamy ram Sat Feb 22, 2020 2:42 pm

Admins Online

திரைப்பட விமர்சனம்: சங்கிலி புங்கிலி கதவத் தொற

திரைப்பட விமர்சனம்: சங்கிலி புங்கிலி கதவத் தொற Empty திரைப்பட விமர்சனம்: சங்கிலி புங்கிலி கதவத் தொற

Post by kumarv on Tue May 23, 2017 9:07 am

சில ஆண்டுகளுக்கு முன்பாக தமிழ் சினிமாவில் துவங்கிய பேய் அலை இன்னமும் ஓயவில்லை. கடந்த வாரம் சரவணன் இருக்க பயமேன். இந்த வாரம் சங்கிலி புங்கிலி கதவத் தொற.
வாசு (ஜீவா) ஒரு ரியல் எஸ்டேட் தரகர். விற்காத வீடுகளைக்கூட விற்கச் செய்பவர். தனக்கென ஒரு வீட்டை அடையாளம் கண்டு, அந்த வீட்டில் பேய் இருப்பதாக புரளியை ஏற்படுத்தி குறைந்த விலைக்கு வாங்கிவிடுகிறார்.
அதே வீட்டுக்கு ஜம்புலிங்கம் (தம்பி ராமைய்யா) என்பவரும் உரிமைகோரி அதே வீட்டில் தங்குகிறார்.
ஜம்புலிங்கத்தின் மகள் ஸ்வேதா (ஸ்ரீ திவ்யா).
ஜம்புலிங்கத்தின் குடும்பத்தை விரட்ட, மீண்டும் பேய் இருப்பதுபோல பயமுறுத்தலில் ஈடுபடுகின்றனர் வாசுவும் அவனது நண்பனும் (சூரி).
ஆனால், அந்த வீட்டில் உண்மையிலேயே சங்கிலியாண்டவன் (ராதாரவி) என்ற பேய் இருக்கிறது.
அந்த வீட்டில் ஏன் பேய் இருக்கிறது, வாசுவுக்கு வீடு கிடைத்ததா என்பதுதான் மீதிக் கதை.
kumarv
kumarv
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 23
இணைந்தது : 17/04/2017
மதிப்பீடுகள் : 16

Back to top Go down

திரைப்பட விமர்சனம்: சங்கிலி புங்கிலி கதவத் தொற Empty Re: திரைப்பட விமர்சனம்: சங்கிலி புங்கிலி கதவத் தொற

Post by ayyasamy ram on Wed May 24, 2017 6:13 am

திரைப்பட விமர்சனம்: சங்கிலி புங்கிலி கதவத் தொற QCjIAy05SDuTspZMZ2Xa+skbt1_3167513f
-
திரைப்பட விமர்சனம்: சங்கிலி புங்கிலி கதவத் தொற 103459460
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 53129
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12728

https://rammalar.wordpress.com/

Back to top Go down

திரைப்பட விமர்சனம்: சங்கிலி புங்கிலி கதவத் தொற Empty Re: திரைப்பட விமர்சனம்: சங்கிலி புங்கிலி கதவத் தொற

Post by ayyasamy ram on Wed May 24, 2017 6:14 am

3 நாட்களில் 6 கோடி வசூல்: 'சங்கிலி புங்கிலி கதவ தொற' படக்குழு மகிழ்ச்சி
--
3 நாட்களில் 6 கோடியை தாண்டி வசூல் செய்துள்ளதால்
'சங்கிலி புங்கிலி கதவ தொற' படக்குழு மகிழ்ச்சியில்
உள்ளது.

புதுமுக இயக்குநர் ஐக் இயக்கத்தில் வெளியாகி இருக்கும்
படம் 'சங்கிலி புங்கிலி கதவ தொற'.

ஜீவா, ஸ்ரீதிவ்யா, சூரி, ராதிகா சரத்குமார், தம்பி ராமையா
ஆகியோர் நடித்துள்ள இப்படத்துக்கு விஷால் சந்திரசேகர்
இசையமைத்துள்ளார்.

இப்படத்தை இயக்குநர் அட்லீ மற்றும் ஃபாக்ஸ் ஸ்டார்
நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளார்கள்.

தமிழகமெங்கும் மே 19ம் தேதி வெளியான இப்படம்,
மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
3 நாட்களில் 6 கோடியைத் தாண்டி வசூலித்துள்ளதால்
படக்குழு மகிழ்ச்சியில் உள்ளது.

இதனை பகிர்ந்து கொள்ளும் விதமாக செய்தியாளர்கள்
சந்திப்பில் படக்குழுவினர் நன்றி தெரிவித்தனர்.
-
---------------------------------
தி இந்து
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 53129
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12728

https://rammalar.wordpress.com/

Back to top Go down

திரைப்பட விமர்சனம்: சங்கிலி புங்கிலி கதவத் தொற Empty Re: திரைப்பட விமர்சனம்: சங்கிலி புங்கிலி கதவத் தொற

Post by விமந்தனி on Wed May 24, 2017 11:18 pm

சூப்பருங்க பார்க்கணும்.


திரைப்பட விமர்சனம்: சங்கிலி புங்கிலி கதவத் தொற EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonதிரைப்பட விமர்சனம்: சங்கிலி புங்கிலி கதவத் தொற L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312திரைப்பட விமர்சனம்: சங்கிலி புங்கிலி கதவத் தொற EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8334
இணைந்தது : 11/06/2013
மதிப்பீடுகள் : 2531

Back to top Go down

திரைப்பட விமர்சனம்: சங்கிலி புங்கிலி கதவத் தொற Empty Re: திரைப்பட விமர்சனம்: சங்கிலி புங்கிலி கதவத் தொற

Post by Dr.S.Soundarapandian on Sun May 28, 2017 9:26 pm

புன்னகை புன்னகை புன்னகை
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 5052
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 2799

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

திரைப்பட விமர்சனம்: சங்கிலி புங்கிலி கதவத் தொற Empty Re: திரைப்பட விமர்சனம்: சங்கிலி புங்கிலி கதவத் தொற

Post by ayyasamy ram on Tue May 30, 2017 4:53 am

சங்கிலி புங்கிலி கதவதொற - -குங்குமம் விமர்சனக்குழு
-
திரைப்பட விமர்சனம்: சங்கிலி புங்கிலி கதவத் தொற OcKaYwCfTOaVy7yLAulL+29
வீட்டிற்குள் குடியிருக்கும் பேய்களை வேட்டையாடி துரத்துவதே ‘சங்கிலி புங்கிலி கதவதொற’. வாடகை வீட்டில் குடியிருந்து, அதன் சொந்தக்காரர்களின் அடாவடித்தனத்தால் ஜீவாவும் அவரது அம்மா ராதிகாவும் அவதியுறுகிறார்கள். இதனால் சொந்த வீடு வாங்குவது ஒன்றே அவர்களது லட்சியமாகிறது. மிகுந்த சிரமங்களுக்கு இடையில் பாடுபட்டு ஒரு பங்களாவையே வாங்குகிறார்கள்.
-
அம்மா, தாய்மாமா உட்பட குடும்பத்தினருடன் குடியேறப் போக அங்கே ஸ்ரீதிவ்யா குடும்பமும் கூடவே ரெண்டு ஆவிகளும் வசிப்பது தெரிய வருகிறது. ஜீவா, ஸ்ரீதிவ்யா குடும்பம் இணைந்து அந்த ஆவிகளை விரட்டியதா என்பதே சிரிப்பும், திகிலுமாய் நீளும் மீதிக்கதை. ஒரு சராசரி வீடு வாங்கும் இளைஞனை பிரதிபலிக்கிறார் ஜீவா.

அவர் வாங்க நினைத்த வீட்டில் பேய்கள் உலவுவதாக செய்திகளைப் பரப்புவது சுவாரஸ்ய ரகம். எப்படியாவது திவ்யா குடும்பத்தையும், ஆவிகளோடு சேர்த்தே விரட்ட அவர் போடும் திட்டங்களே ஹாரர் காமெடியாக உருவெடுக்கிறது. ஆனால் ஜீவா, கொஞ்சம் கொஞ்சமாக திவ்யாவிடமே காதலில் விழுவது கலகலப்பு. ஒவ்வொரு தடவையும் ஆவிகளோடு சேர்ந்து அல்லாடும் காட்சிகள் சிரிப்பு மேளா.

புதுமுக இயக்குநர் ஐக் கவனம் ஈர்க்கிறார். தம்பி ராமையா – தேவதர்ஷினியின் வாஷிங்மெஷின் காமெடியில் டபுள் மினீங் ஓவர். மொத்தப் படத்தையும் சுறுசுறுப்பாக தாங்குவதில் ஈர்க்கிறார் ஜீவா. எப்படியிருந்த ஸ்ரீதிவ்யா இப்படி ஆகிவிட்டாரே! ஊதா கலர் ரிப்பனில் பளிச்சென வந்தவர், இதில் ஆங்காங்கே தொட்டுக் கொள்வது மாதிரியே வந்து போகிறார்.

ஜீவாவும், சூரியும் வாழை இலையைச் சுற்றிக் கொண்டு வீதியில் பவனி வரும் காமெடி உச்சபட்ச ரகளை. படத்தில் வருகிற அத்தனை பேரையும் காெமடி ஆட வைத்திருக்கிறார்கள். குடும்ப ஒற்றுமை ஒன்றையே பிடியாக வைத்துக் கொண்டிருக்கும் சென்டிமென்ட் பேயும் புதுசு. ராதாரவி குரூரத்தின் பக்கம் போய்விடாமல் சென்டிமென்ட் ஆவியாகவே விஸ்வரூபம் எடுக்கிறார்.

கோவை சரளாவுக்குப் பேய் படங்களில் நடிப்பதெல்லாம் அல்வா சாப்பிடுவது மாதிரி. அவர் படத்தில் கொண்டு வந்து திணிக்கப்படுவது கண்கூடாகத் தெரிகிறது. பார்த்துப் பார்த்து பழகிய கதையென்றாலும் இவ்வளவு கேரக்டர்களை வைத்துக் கொண்டு, சின்னச்சின்ன கலகல வசனங்களில் ஐக் கைதட்டல் பெறுகிறார்.

மொத்த ஹாரர் களேபரத்தையும், சூழலையும் அருமையாக படம் பிடிக்கிறது சந்திரன் சூரியனின் கேமரா. தொலை தூரத்தில் பங்களாவிலிருந்து உள்ளே வரைக்கும் போட்ட ‘செட்’ சாமர்த்தியத்தில் லால்குடி இளையராஜா மனதில் நிற்கிறார். தொடர்ந்து ஆவிகளின் ஆட்டத்தை பார்த்துக் கொண்டிருப்பதில் சற்று சலிப்பு தட்டுவதை தவிர்த்திருக்கலாம்.

ஜீவாவும் சூரியும் ‘மிஸ்டர், மிஸ்டர்…’ என்று அழைத்துக் கொண்டே இருப்பதில் சூடுபிடிக்கிறது அவர்களின் காமெடி கெமிஸ்ட்ரி! ஆனால், சமயங்களில் ஹாரரா? காமெடி படமா? என்ற சந்தேகம் வந்துவிடுவது நிஜம். பாடல்களில் தவறவிட்டதை பயமுறுத்தும் பின்னணி இசையில் ஸ்கோர் செய்கிறார் விஷால் சந்திரசேகர். காமெடி சங்கிலியில் கட்டிப் போடுகிறார்கள்!
-
--------------------------
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 53129
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12728

https://rammalar.wordpress.com/

Back to top Go down

திரைப்பட விமர்சனம்: சங்கிலி புங்கிலி கதவத் தொற Empty Re: திரைப்பட விமர்சனம்: சங்கிலி புங்கிலி கதவத் தொற

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை