ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
தமிழ் நேசன் !?
 sudhagaran

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

நான் தேனி.
 Mr.theni

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

நரை கூறிய அறிவுரை
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 SK

நாவல் தேவை
 PKishanthini

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 ராஜா

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
 SK

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 SK

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு
 SK

Winmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்
 ayyasamy ram

RRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்
 thiru907

#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா?
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

200 ஆண்டு வரலாற்றில் இதுவே முதல் முறை ஜப்பான் மன்னர் அகிஹிட்டோ பதவி விலகுகிறார்

View previous topic View next topic Go down

200 ஆண்டு வரலாற்றில் இதுவே முதல் முறை ஜப்பான் மன்னர் அகிஹிட்டோ பதவி விலகுகிறார்

Post by ayyasamy ram on Sat May 20, 2017 9:50 am



டோக்கியோ,

ஜப்பான் மன்னராக அகிஹிட்டோ (வயது 83) உள்ளார்.
இவர் அந்த நாட்டின் 125-வது மன்னர்.

கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 8-ந் தேதி அவர் நாட்டு
மக்களுக்கு டெலிவிஷன் மூலம் உரை ஆற்றினார்.
அப்போது அவர் வயோதிகம், உடல் நலக்குறைவு
ஆகியவற்றின் காரணமாக பதவி விலக விருப்பம் தெரிவித்தார்.

ஒரு கட்டத்தில் தனது பொறுப்புகளை மற்றொருவரிடம்
ஒப்படைப்பதுதான் புத்திசாலித்தனமானது என அவர் குறிப்பிட்டார்.

புதிய சரித்திரம்

ஜப்பானில் கடந்த 200 ஆண்டுகளில் எந்த மன்னரும் பதவி
விலகியதாக சரித்திரம் இல்லை. அங்கு கடைசியாக 1817-ம்
ஆண்டு, கொகக்கு என்ற மன்னர்தான் பதவி விலகி உள்ளார்.
அதன்பின்னர் யாரும் பதவி விலகியது இல்லை.

அந்த வகையில், தற்போதைய ஜப்பான் மன்னர் அகிஹிட்டோ
பதவி விலகி புதிய சரித்திரம் படைக்கிறார்.

சட்ட மசோதா

இந்த நிலையில், மன்னர் அகிஹிட்டோ பதவி விலகி,
‘கிறிசாந்தமம்’ சிம்மாசனத்தை பட்டத்து இளவரசர்
நருஹிட்டோவிடம் ஒப்படைப்பதற்கான சட்ட மசோதாவுக்கு
ஜப்பான் மந்திரிசபை தனது ஒப்புதலை நேற்று வழங்கியது.

தற்போது ஜப்பானில் இம்பீரியல் இல்ல சட்டத்தில், மன்னர்
பதவி விலகுவதற்கான விதி இல்லை.

இதன் காரணமாக மன்னர் பதவி விலகுவதற்கான மசோதா
தயாரிக்கப்பட்டது.

மந்திரிசபை ஒப்புதலைத் தொடர்ந்து இந்த மசோதா ஜப்பான்
பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. நடப்பு
பாராளுமன்ற கூட்டத்தொடர் அடுத்த மாதம் இறுதியில் முடிகிற
போது, அந்த மசோதா நிறைவேற்றப்படும் என தகவல்கள்
கூறுகின்றன.

அடுத்த ஆண்டு விலகல்

மன்னர் அகிஹிட்டோவுக்கு அடுத்த ஆண்டு டிசம்பர் மாதம்
23-ந் தேதி 85-வது வயது பிறக்கிறபோது, அவர் பதவி விலகலாம்
என பச்சைக்கொடி காட்டப்பட்டுள்ளது.

2019-ம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து தற்போதைய கெங்கோ
சகாப்தம் முடிவுக்கு வந்து, புதிய சகாப்தம் மலர இருக்கிறது.

மன்னர் அகிஹிட்டோ பதவி விலகிய பிறகு பட்டத்து இளவரசர்
நருஹிட்டோ முறைப்படி மன்னராக முடிசூட்டப்படுவார்.

உறுப்பினர் எண்ணிக்கை குறைகிறது

மன்னர் பதவி விலகுகிற நிலையில், மன்னர் குடும்ப
உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைந்து வருவது அந்த நாட்டு
மக்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளதாக அங்கிருந்து
வரும் தகவல்கள் கூறுகின்றன.

ஜப்பான் மன்னர் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை 19 ஆக
உள்ளது.

ஆனால் இளவரசி மேக்கோ, பொதுமக்களில் ஒருவரான கீ கொமுரு
என்பவரை காதலித்து வருகிறார். அவரையே திருமணம் செய்து
கொள்ள இருக்கிறார். இதற்காக அவர் இளவரசி அந்தஸ்தை
விட்டுத்தருகிறார். எனவே அவரது திருமணத்துக்கு பின்னர் மன்னர்
குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை 18 ஆக குறைந்து விடும்
என்பது குறிப்பிடத்தக்கது.
-
-------------------------------
தினத்தந்தி
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37338
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum