உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» நீ . . .நீயாக இரு !
by சக்தி18 Today at 12:48 pm

» அப்துல் கலாம் கவிதைகள்
by சக்தி18 Today at 12:45 pm

» நித்யானந்தாவுக்கு கைது 'வாரன்ட்'
by மாணிக்கம் நடேசன் Today at 10:18 am

» வேலன்:-இலவச மீடியா ப்ளேயர்-Aiseesoft Free Media Player
by மாணிக்கம் நடேசன் Today at 10:16 am

» மகா சிவராத்திரியன்று தரிசிக்க வேண்டிய சிதம்பரம திருக்கோயில் மற்றும் சுற்றியுள்ள சிவாலயங்கள்
by ayyasamy ram Today at 6:47 am

» நடப்பதெல்லாம் நன்மைக்கே…!
by ayyasamy ram Today at 6:46 am

» அழகான வரிகள் பத்து.
by ayyasamy ram Today at 6:44 am

» இதயத்தை தொடும் தாய்மொழி!இன்று சர்வதேச தாய்மொழி தினம்
by ayyasamy ram Today at 6:13 am

» ஷாக் ஆகாதீங்க.. வாக்கிங் போனால் உடல் எடை குறையாதாம்!
by ayyasamy ram Today at 6:08 am

» 16 நாட்டு ராணுவத்தில் உயர் பதவியில் பெண்கள்
by ayyasamy ram Today at 6:05 am

» அமித் ஷாவின் அருணாச்சல் பயணம்; சீனா 'பூச்சாண்டி'
by ayyasamy ram Today at 6:02 am

» மெகா காமெடிடா சாமி...!
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» சிவன் என்ற சீவனை வழிபடுங்கள்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm

» ஒப்பிலியப்பன் திருக்கோவில், 108 திவ்ய தேசங்களில் 13-வது திவ்ய தேசமாகும்.
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» கடலுக்குள் ஒரு சிவன் கோயில்!
by T.N.Balasubramanian Yesterday at 8:51 pm

» இஷ்ட தெய்வத்திடம் சரணாகதி
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» கமல் படப்பிடிப்பில் விபத்து; 3 பேர் பலி
by ayyasamy ram Yesterday at 8:12 pm

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:58 pm

» சடாரி சாற்றுவதில் உள்ள தத்துவம்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» உலகின் 100 சிறந்த பல்கலைகளில் 11 இந்திய நிறுவனங்கள்
by சக்தி18 Yesterday at 7:24 pm

» ராணுவ வீரரின் வீடு என தெரியாமல் பூட்டை உடைத்துவிட்டேன் - சுவரில் மன்னிப்பு வாசகம் எழுதிய திருடன்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» யாழ்ப்பாணத்துக்கு புதுச்சேரியிலிருந்து ஆரம்பமாகும் கப்பல் போக்குவரத்து!
by T.N.Balasubramanian Yesterday at 7:00 pm

» *ஒரு குட்டி கதை
by சக்தி18 Yesterday at 6:50 pm

» வில்லி - ஒரு பக்க கதை
by ஜாஹீதாபானு Yesterday at 5:36 pm

» மஞ்சள் நிற கோடு
by ஜாஹீதாபானு Yesterday at 5:34 pm

» விளக்கேற்றிய வீடு வீண் போகாது.
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:46 pm

» மாப்பிள என்ன வேலை பார்க்கிறாரு..?
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:43 pm

» அமெரிக்க நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக தமிழர்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:40 pm

» சீனாவில் கொரோனா வைரஸ் தொற்றுள்ள பணத்தை எரிக்க முடிவு
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:39 pm

» திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:35 pm

» சண்டை போட்டுக்கிட்டு இருந்ததை பாரத்து கணவன்,மனைவின்னு நம்பிட்டாங்க!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:34 pm

» சுய அறிமுகம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:33 pm

» விலங்குகளை அறிந்து படம் எடுங்க...!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:30 pm

» அக்கறை - ஒரு பக்க கதை
by ஜாஹீதாபானு Yesterday at 4:27 pm

» தேன் துளியாய் காதில் பாயும் பி.பி ஸ்ரீனிவாஸ் மற்றும் பி. சுசிலா இருவரின் முத்தான பாடல்கள்.....
by ayyasamy ram Yesterday at 2:03 pm

» உழைப்பே உயர்வு
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» பாட்டு வந்ததும் விதை முளைத்தது
by ayyasamy ram Yesterday at 1:11 pm

» வில்வம் கீர் - குமுதம்
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» ஐம்பதிலும் அசத்தும் ஜெனிபர்
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» பான் அட்டையின் ஸ்டேட்டஸ் Active-ஆக இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:41 am

» வேலன்:-ஒன்றுக்கும் மேற்பட்ட பிடிஎப் பைல்களை இணைக்க-Weeny Free PDF Merger
by velang Yesterday at 8:08 am

» ஒரே நாளில் ரிலீசாகும் தனுஷ் - சிவகார்த்திகேயன் படங்கள்
by ayyasamy ram Yesterday at 6:59 am

» திருத்தணி முருகன் கோயிலில் பிப்.27-ல் மாசி பிரம்மோற்சவ விழா தொடக்கம்
by ayyasamy ram Yesterday at 6:51 am

» சாமுண்டிமலையில் உள்ள ஒரே கல்லிலான 15 அடி உயர நந்தி சிலையில் விரிசல்? தொல்லியல் துறையினர் ஆய்வு
by ayyasamy ram Yesterday at 6:45 am

» அமைச்சருக்கு எதிரான புகாரை கைவிடும் முடிவை முன்பே தெரிவிக்காதது ஏன்? - தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:41 am

» கொரோனா வைரசால் கடும் தட்டுப்பாடு; ஜப்பான் ஆஸ்பத்திரியில் 6 ஆயிரம் முகக்கவசங்கள் திருட்டு
by ayyasamy ram Yesterday at 6:35 am

» சசிகலா பினாமி சொத்துகள் முடக்கம் ஆதாரம் உள்ளதாக வரித்துறை விளக்கம்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» இந்தியா வல்லரசாக சுப்பிரமணியன் சுவாமி ஐடியா
by ayyasamy ram Yesterday at 6:27 am

» பிரான்சின் மிக பழமையான அணு ஆலை மூடப்படுகின்றது..!!
by ayyasamy ram Wed Feb 19, 2020 8:50 pm

Admins Online

அந்தநாள் ஞாபகம் - வீடுகளும் உறவுகளும்!

அந்தநாள் ஞாபகம் - வீடுகளும் உறவுகளும்!   Empty அந்தநாள் ஞாபகம் - வீடுகளும் உறவுகளும்!

Post by B.VENKATESAN on Thu May 11, 2017 11:16 am

அந்தநாள் ஞாபகம் - வீடுகளும் உறவுகளும்! - பா.வெ.

தபால்காரர் கண்ணில் பட தவறிய
தனிக்குடும்பம் ஏதும்
புதிதாய் ஊருக்குள்
புகுவதில்லை!

வாழையடி வாழையாய்
வாழ்ந்த வீடுகள்
வரிசையாய் நின்று தெரு போக
வழிவிடும்!

அனேக வீடுகள்
அரைவட்ட வாசலுடன்
வெயில் தாங்கும் ஓடுகளையும்
குளிர் வாங்கும் கூரைகளையும்
அணிந்து நிற்கும்!

சாணக் குளியல் போடும்
சகதியற்ற வாசல்களில்
காற்றில் திரியும்
கணக்கற்ற கிருமிகள் கூட
காணாமல் போகும்!

மக்களின் விருந்தோம்பலை
மாக்கோலம் தின்னும்
எறும்புகளும் எண்ணும்!
வாசலில் தொடங்கும்
விருந்தோம்பல்
கொல்லைப்புற காக்கை வரை
கொண்டுபோய் விடும்!

வாசலில் விசாலமாய் பூத்த
தெளிந்த புள்ளிகள் தழுவி
தெரிந்தே விழுந்த சிக்கல் -
அழகிய சிக்கு கோலங்கள்!

சிக்கல் விழுந்த கோலங்களில்
சிக்கித் தவிக்கும் வாசல்கள்
சிறிதும் வெளிவர துடிப்பதில்லை -
சிதையாத கோல அழகில்!

வாசலில் இறைத்த கோல அழகு
வரிசையாய் உயரும்
படிகளின் மீதும்
படிந்திருக்கும்!

வாசலில் பதித்த
வரைகலையை மதித்த விழிகள்
வழி தவறி மிதித்த
வரலாறு சிக்கியதில்லை
கோலங்களில்!

தெளிவாய் இழைத்த
தேக்கு மர தூண்கள்
திண்ணை தோறும்
திரண்டு நிற்கும்!

அக்கம் பக்கத்தினர்
அமர்ந்து பேச
அந்தி வேளைகளில்
அரட்டை நீள
அமர்களமாகும் அனேக
திண்ணைகள்!

கூரை முனையில் முளைத்த
கூடை சுமந்த குண்டு பல்பின்
கூசாத ஒளிக்கீற்று
இரவு பொழியும் இருள் மீது
இதமான மஞ்சள் பூசும்!
இரவெல்லாம் பகல் பேசும்!

விழாக்கால வழிபோக்கரும்
வேண்டுதல் நிறைவேற்ற
வெகுதூரம் நடக்கும் பக்தரும்
வேண்டிய நேரம் இளைப்பாற
வெகுநேரம் இடம் தரும்
திண்ணைகள்!

திண்ணை நிலை அருகில்
தெளிவாய் குடைந்த மாடங்கள்
அந்தி நேர தீபங்களை
அணையாமல் ஏந்தி நிற்கும்!

மின்கம்பம் நடாத
மின்சாரம் தொடாத
இரவு பயணங்களில்
மாட விளக்குகளின்
மங்கிய ஒளிகளில்
மீண்டன வழிகள்!

கனமாய் இழைத்த
கதவுகளின் காதுகளில்
கடின வளையங்கள்
கவனமாய் தாழிடும்!

வீட்டின் நடுவே
விளைந்த முற்றத்தில்
காற்றும் ஒளியும்
கடை போட மறுப்பதில்லை!

வெயிலும் மழையும்
வீட்டை தழுவ
முற்றத்தில் முயன்று
தோற்கும்!

இரவு வானம்
இறைத்த விண்மீன்களை
முற்றம் மெல்ல
அள்ள பார்க்கும்!

வடகம் தின்ற வெயிலை
விரட்ட தெரியாத
வெள்ளந்தி முற்றம்
வீட்டுக்குள் விட்டு விடும்!

அடுக்களை மேடையின் கீழ்
அடுக்கிய விறகு இடுக்கில்
அனுபவித்து உறங்கும்
அழகான பூனைக்குட்டி ஒன்று!

வெள்ளிதோறும் வீடு அலசி
விறகு நிறைத்த சாம்பல் நீக்கி
சாண மொழுகலும் கோலமும்
சூடிய அடுப்புக்கொண்டையில்
சுவையாக தொடங்கும்
பசியின் பொறுமை!

கோடை வீசும்
கொடூர க(கா)னல் மீது
குளிராடை போர்த்தும்
கொல்லைப்புற கிணற்று நீர்!

மா, பலா,வாழை,தென்னை,
கொய்யா,எலுமிச்சை என
கொல்லை கொஞ்சம்
கொழுத்திருக்கும்!

அடுத்த வீட்டு கீரை விதைப்பினை
அடுத்தடுத்து சரி பார்க்கும் கோழி
அடிவாங்காத குறையாய்
ஓடி வரும்!

நலமாய் பசு ஈன்ற
நாட்டு கன்றுக்குட்டி
துள்ளித் திரியும் அழகை
துரத்தித் திரியும்
தும்புக் கயிறு!

வீட்டுத்தேவை குடிக்காத பாலை
வீடு தேடி விரும்பிக் குடிக்கவே
பால்காரர் வண்டி கலன்
பெரும்பாலும் வாய் திறக்கும்!

காளையோடு இணை சேர
களைத்த வயலில் எரு சேர
கணக்கெடுத்து விடப்பட்ட
கிடைய மாட்டு மந்தையில்
நம் வீட்டு பசுவை தேடும் கண்களில்
நாளும் மகிழ்ச்சிதான்!

ஊர் சென்று வீடு திரும்பும்
உடையவரை கண்டு
உள்ளன்பில் வாலாட்டி அழும்
நாட்டு நாய்கள்...
பழைய சோற்றில் கூட
பசியாறும்!

“சிசேரியன்” என்ற வார்த்தை
சிறிதும் மனதை கீறாத
நாட்கள் அவை!

வீட்டு வேலைகளே
வீட்டில் தந்த
சுலபமான சுகப்பிரசவம் -
சுப ஜனனம்!

அழுதாலும் சிரித்தாலும்
அனைவரும் கூடும் அழகு
குழந்தையுடன் கூட வந்த
முதல் சொத்து!

காது குத்த மடி கொடுக்கவும்
காலத்தில் பருவமடைந்தால்
பச்சைக்கீற்று பின்னவும்
முதலும் கடைசியுமாய் –
தாய்மாமன்!

“தாய்”மாமன் - சிலநேரம்
முதலிரு எழுத்துகள் சேர்ந்து
குழந்தையை வளர்ப்பதும் உண்டு!

உறவுகள் கூடி வாழ்ந்த
உறைவிடத்தில்
இல்லுறை இறை கூட
மகிழ்வாய் உறையும்!

அப்பா, அம்மா,
தாத்தா , பாட்டி,
பெரியப்பா,பெரியம்மா,
சித்தப்பா,சித்தி,
அத்தை, மாமா,
அண்ணன்,தம்பி,
அக்காள்,தங்கை –
முழு நிறைவில் வீடு...
முழுமை பெறாத
குழந்தை அழுகை...!

பசி மறந்து சோறூட்டும் அன்னை,
பகல் இரவாய் பாடுபடும் தந்தை,
கடை செல்ல தோளில் சுமக்கும் தாத்தா,
காதோரம் கதை சொல்லும் பாட்டி,
கருவிலேயே மணமுடிக்கும் அத்தை-மாமா,
விளையாட்டில் சேர்த்துக்கொள்ள
வெளியில் சண்டையிடும் அண்ணன்,
வீம்பாய் பொம்மை பிடுங்கும் தம்பி,
அடிக்கடி பரிந்து பேசும் அக்காள்,
அன்போடு தின்பண்டம் பகிரும் தங்கை –
இவர்கள் மத்தியில் என்றும்
இன்னொரு முறை குழந்தையாய்...!
B.VENKATESAN
B.VENKATESAN
பண்பாளர்


பதிவுகள் : 168
இணைந்தது : 13/04/2015
மதிப்பீடுகள் : 67

Back to top Go down

அந்தநாள் ஞாபகம் - வீடுகளும் உறவுகளும்!   Empty Re: அந்தநாள் ஞாபகம் - வீடுகளும் உறவுகளும்!

Post by ஜாஹீதாபானு on Thu May 11, 2017 3:07 pm

நல்ல கவிதை... படிக்கும் போதே பின்னோக்கி சென்று வாழமாட்டோமா என ஏக்கம் வருகிறது

அந்தக் காலத்தில வாழ்ந்தவர்கள் எல்லாம் வரம் வாங்கி வந்து வாழ்ந்தவர்கள் ...
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 30933
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7360

Back to top Go down

அந்தநாள் ஞாபகம் - வீடுகளும் உறவுகளும்!   Empty Re: அந்தநாள் ஞாபகம் - வீடுகளும் உறவுகளும்!

Post by B.VENKATESAN on Thu May 11, 2017 3:32 pm

மிக்க நன்றி ! உண்மைதான்...
B.VENKATESAN
B.VENKATESAN
பண்பாளர்


பதிவுகள் : 168
இணைந்தது : 13/04/2015
மதிப்பீடுகள் : 67

Back to top Go down

அந்தநாள் ஞாபகம் - வீடுகளும் உறவுகளும்!   Empty Re: அந்தநாள் ஞாபகம் - வீடுகளும் உறவுகளும்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை