உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» நீ . . .நீயாக இரு !
by சக்தி18 Today at 12:48 pm

» அப்துல் கலாம் கவிதைகள்
by சக்தி18 Today at 12:45 pm

» நித்யானந்தாவுக்கு கைது 'வாரன்ட்'
by மாணிக்கம் நடேசன் Today at 10:18 am

» வேலன்:-இலவச மீடியா ப்ளேயர்-Aiseesoft Free Media Player
by மாணிக்கம் நடேசன் Today at 10:16 am

» மகா சிவராத்திரியன்று தரிசிக்க வேண்டிய சிதம்பரம திருக்கோயில் மற்றும் சுற்றியுள்ள சிவாலயங்கள்
by ayyasamy ram Today at 6:47 am

» நடப்பதெல்லாம் நன்மைக்கே…!
by ayyasamy ram Today at 6:46 am

» அழகான வரிகள் பத்து.
by ayyasamy ram Today at 6:44 am

» இதயத்தை தொடும் தாய்மொழி!இன்று சர்வதேச தாய்மொழி தினம்
by ayyasamy ram Today at 6:13 am

» ஷாக் ஆகாதீங்க.. வாக்கிங் போனால் உடல் எடை குறையாதாம்!
by ayyasamy ram Today at 6:08 am

» 16 நாட்டு ராணுவத்தில் உயர் பதவியில் பெண்கள்
by ayyasamy ram Today at 6:05 am

» அமித் ஷாவின் அருணாச்சல் பயணம்; சீனா 'பூச்சாண்டி'
by ayyasamy ram Today at 6:02 am

» மெகா காமெடிடா சாமி...!
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» சிவன் என்ற சீவனை வழிபடுங்கள்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm

» ஒப்பிலியப்பன் திருக்கோவில், 108 திவ்ய தேசங்களில் 13-வது திவ்ய தேசமாகும்.
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» கடலுக்குள் ஒரு சிவன் கோயில்!
by T.N.Balasubramanian Yesterday at 8:51 pm

» இஷ்ட தெய்வத்திடம் சரணாகதி
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» கமல் படப்பிடிப்பில் விபத்து; 3 பேர் பலி
by ayyasamy ram Yesterday at 8:12 pm

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:58 pm

» சடாரி சாற்றுவதில் உள்ள தத்துவம்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» உலகின் 100 சிறந்த பல்கலைகளில் 11 இந்திய நிறுவனங்கள்
by சக்தி18 Yesterday at 7:24 pm

» ராணுவ வீரரின் வீடு என தெரியாமல் பூட்டை உடைத்துவிட்டேன் - சுவரில் மன்னிப்பு வாசகம் எழுதிய திருடன்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» யாழ்ப்பாணத்துக்கு புதுச்சேரியிலிருந்து ஆரம்பமாகும் கப்பல் போக்குவரத்து!
by T.N.Balasubramanian Yesterday at 7:00 pm

» *ஒரு குட்டி கதை
by சக்தி18 Yesterday at 6:50 pm

» வில்லி - ஒரு பக்க கதை
by ஜாஹீதாபானு Yesterday at 5:36 pm

» மஞ்சள் நிற கோடு
by ஜாஹீதாபானு Yesterday at 5:34 pm

» விளக்கேற்றிய வீடு வீண் போகாது.
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:46 pm

» மாப்பிள என்ன வேலை பார்க்கிறாரு..?
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:43 pm

» அமெரிக்க நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக தமிழர்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:40 pm

» சீனாவில் கொரோனா வைரஸ் தொற்றுள்ள பணத்தை எரிக்க முடிவு
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:39 pm

» திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:35 pm

» சண்டை போட்டுக்கிட்டு இருந்ததை பாரத்து கணவன்,மனைவின்னு நம்பிட்டாங்க!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:34 pm

» சுய அறிமுகம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:33 pm

» விலங்குகளை அறிந்து படம் எடுங்க...!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:30 pm

» அக்கறை - ஒரு பக்க கதை
by ஜாஹீதாபானு Yesterday at 4:27 pm

» தேன் துளியாய் காதில் பாயும் பி.பி ஸ்ரீனிவாஸ் மற்றும் பி. சுசிலா இருவரின் முத்தான பாடல்கள்.....
by ayyasamy ram Yesterday at 2:03 pm

» உழைப்பே உயர்வு
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» பாட்டு வந்ததும் விதை முளைத்தது
by ayyasamy ram Yesterday at 1:11 pm

» வில்வம் கீர் - குமுதம்
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» ஐம்பதிலும் அசத்தும் ஜெனிபர்
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» பான் அட்டையின் ஸ்டேட்டஸ் Active-ஆக இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:41 am

» வேலன்:-ஒன்றுக்கும் மேற்பட்ட பிடிஎப் பைல்களை இணைக்க-Weeny Free PDF Merger
by velang Yesterday at 8:08 am

» ஒரே நாளில் ரிலீசாகும் தனுஷ் - சிவகார்த்திகேயன் படங்கள்
by ayyasamy ram Yesterday at 6:59 am

» திருத்தணி முருகன் கோயிலில் பிப்.27-ல் மாசி பிரம்மோற்சவ விழா தொடக்கம்
by ayyasamy ram Yesterday at 6:51 am

» சாமுண்டிமலையில் உள்ள ஒரே கல்லிலான 15 அடி உயர நந்தி சிலையில் விரிசல்? தொல்லியல் துறையினர் ஆய்வு
by ayyasamy ram Yesterday at 6:45 am

» அமைச்சருக்கு எதிரான புகாரை கைவிடும் முடிவை முன்பே தெரிவிக்காதது ஏன்? - தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:41 am

» கொரோனா வைரசால் கடும் தட்டுப்பாடு; ஜப்பான் ஆஸ்பத்திரியில் 6 ஆயிரம் முகக்கவசங்கள் திருட்டு
by ayyasamy ram Yesterday at 6:35 am

» சசிகலா பினாமி சொத்துகள் முடக்கம் ஆதாரம் உள்ளதாக வரித்துறை விளக்கம்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» இந்தியா வல்லரசாக சுப்பிரமணியன் சுவாமி ஐடியா
by ayyasamy ram Yesterday at 6:27 am

» பிரான்சின் மிக பழமையான அணு ஆலை மூடப்படுகின்றது..!!
by ayyasamy ram Wed Feb 19, 2020 8:50 pm

Admins Online

மூக்கு

மூக்கு  Empty மூக்கு

Post by M.Jagadeesan on Thu May 04, 2017 5:58 pm

மூக்கு
======
மூக்கின் அழகே முகத்தழகு என்பது
முன்னோர்கள் சொன்ன மொழி.

பெண்கள்
மூக்கும் முழியுமாக இருந்தால்
பாக்கும் வெற்றிலையும் வைத்து
பரிசம் போட வருவார்கள்.

திருமணச் சந்தையில்
கிளிமூக்குப் பெண்களுக்கு வரதட்சிணை
துளிகூடக் கொடுக்காமல் திருமணத்தை
முடித்திடலாம்.

நாக்கும் மூக்கும் நல்ல நண்பர்கள்
மூக்கிலே சளி பிடித்தால்
நாக்கிலே சுவை தெரியாது.
கும்பகோணம் டிகிரி காபி குடித்தாலும்
கஷாயம் குடிப்பது போலத்தான் இருக்கும் .
நாக்குக்கு சுவையாக உணவு கிடைத்தால்
மூக்குப் பிடிக்க சாப்பிடும் வழக்கமுண்டு

முன்னாள் பிரதமர்
இந்திரா காந்தியின் மூக்குக்கு
இணையான மூக்கு ஒன்று
இந்தியத் துணைக் கண்டத்தில் யாருக்கும்
இதுவரையில் இருந்ததில்லை..

நமக்குத் தெரியாத விஷயங்களில்
மூக்கை நுழைத்தால்
மூக்கறுபட்டு மூலையிலே உட்கார வேண்டியதுதான்.

என்றுமே மூக்குக்கும் கண்ணுக்கும்
ஏழாம் பொருத்தம்தான்.
கண்ணிலே அணிகின்ற கண்ணாடிக்கு
மூக்குக் கண்ணாடி எனப்பெயர் வருவானேன்?
மூக்கிலே அணிகின்ற மூக்குத்திக்கு
" கண்குத்தி " என்றால் ஒப்புவரோ?

மூக்குத்தி அணிந்தால்
முகத்தின் அழகு
மும்மடங்கு அதிகமாகும்.

மூக்கின் இருபுறமும்
மூக்குத்தி அணிந்து
எம்.எஸ். அவர்களின்
பாடும் அழகைக் காணக்
கண்கோடி வேண்டும்.

கமலக்கண்ணன் என்றும் செந்தாமரைக்
கண்ணன் என்றும் முண்டகக்கண்ணி என்றும்
அங்கயற்கண்ணி என்றும் ஆயிரம் பெயர்வைத்து
கண்ணுக்குப் பெருமை செய்வோர்
மூக்கழகு கொண்டவனை ' மூக்கன்' என்றும்
மூக்கழகு கொண்டவளை ' மூக்கி' என்றும்
முன்மொழிய யாரும் வருவதில்லையே!

இதயத்தின் வாசல் கண்கள் என்றால்
நுரையீரலின் வாசல் மூக்கு ஆகும்
அவ்வாசலை
மூக்குப் பொடியிட்டு அடைத்து
சாக்கடையாய் மாற்றாதீர்!

மூக்குக்கு மேலே கோபம் வருவதால்
மூண்ட சண்டைகள் ஏராளம் உண்டு.
இலக்குவனால்
மூக்கறுபட்ட சூர்ப்பனகை இராமாயணத்தின்
போக்கையே மாற்றி அமைத்தாள்.

நம் வீட்டில்
அடை சுட்டாலும், வடை சுட்டாலும்
அண்டை வீட்டுக்காரனுக்கு மூக்கிலே வியர்த்து
அடுத்த நிமிடம் நம்வீட்டின் அடுக்களையில் வந்து நிற்பான்.

நம்மிடம்
வாக்கிலே நேர்மையும்
நோக்கிலே தூய்மையும்
இருந்தால் பிறர் தங்கள் மூக்கிலே விரல் வைத்து
அதிசயத்துடன் பார்ப்பர்.M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5293
இணைந்தது : 18/04/2015
மதிப்பீடுகள் : 2467

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை