புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 8:59 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am

» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am

» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am

» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:38 pm

» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am

» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am

» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am

» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm

» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm

» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm

» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm

» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm

» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm

» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am

» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm

» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm

» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm

» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am

» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am

» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm

» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm

» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am

» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am

» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 10:59 am

» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 9:59 am

» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 7:31 am

» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:56 am

» ஐபிஎல் 2024 : ஜேக் ஃப்ரேசர், ரிஷப் பந்த் அதிரடி.. டெல்லி அபார வெற்றி..!
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:50 am

» நீ கோவமா இருக்கியான்னு கேட்டா...
by ayyasamy ram Fri Apr 12, 2024 5:13 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அந்தநாள் ஞாபகம் – ஊராட்சி ஒன்றிய பள்ளி! Poll_c10அந்தநாள் ஞாபகம் – ஊராட்சி ஒன்றிய பள்ளி! Poll_m10அந்தநாள் ஞாபகம் – ஊராட்சி ஒன்றிய பள்ளி! Poll_c10 
46 Posts - 47%
ayyasamy ram
அந்தநாள் ஞாபகம் – ஊராட்சி ஒன்றிய பள்ளி! Poll_c10அந்தநாள் ஞாபகம் – ஊராட்சி ஒன்றிய பள்ளி! Poll_m10அந்தநாள் ஞாபகம் – ஊராட்சி ஒன்றிய பள்ளி! Poll_c10 
32 Posts - 33%
mohamed nizamudeen
அந்தநாள் ஞாபகம் – ஊராட்சி ஒன்றிய பள்ளி! Poll_c10அந்தநாள் ஞாபகம் – ஊராட்சி ஒன்றிய பள்ளி! Poll_m10அந்தநாள் ஞாபகம் – ஊராட்சி ஒன்றிய பள்ளி! Poll_c10 
4 Posts - 4%
லதா மெளர்யா
அந்தநாள் ஞாபகம் – ஊராட்சி ஒன்றிய பள்ளி! Poll_c10அந்தநாள் ஞாபகம் – ஊராட்சி ஒன்றிய பள்ளி! Poll_m10அந்தநாள் ஞாபகம் – ஊராட்சி ஒன்றிய பள்ளி! Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
அந்தநாள் ஞாபகம் – ஊராட்சி ஒன்றிய பள்ளி! Poll_c10அந்தநாள் ஞாபகம் – ஊராட்சி ஒன்றிய பள்ளி! Poll_m10அந்தநாள் ஞாபகம் – ஊராட்சி ஒன்றிய பள்ளி! Poll_c10 
3 Posts - 3%
prajai
அந்தநாள் ஞாபகம் – ஊராட்சி ஒன்றிய பள்ளி! Poll_c10அந்தநாள் ஞாபகம் – ஊராட்சி ஒன்றிய பள்ளி! Poll_m10அந்தநாள் ஞாபகம் – ஊராட்சி ஒன்றிய பள்ளி! Poll_c10 
3 Posts - 3%
Ratha Vetrivel
அந்தநாள் ஞாபகம் – ஊராட்சி ஒன்றிய பள்ளி! Poll_c10அந்தநாள் ஞாபகம் – ஊராட்சி ஒன்றிய பள்ளி! Poll_m10அந்தநாள் ஞாபகம் – ஊராட்சி ஒன்றிய பள்ளி! Poll_c10 
2 Posts - 2%
manikavi
அந்தநாள் ஞாபகம் – ஊராட்சி ஒன்றிய பள்ளி! Poll_c10அந்தநாள் ஞாபகம் – ஊராட்சி ஒன்றிய பள்ளி! Poll_m10அந்தநாள் ஞாபகம் – ஊராட்சி ஒன்றிய பள்ளி! Poll_c10 
2 Posts - 2%
Barushree
அந்தநாள் ஞாபகம் – ஊராட்சி ஒன்றிய பள்ளி! Poll_c10அந்தநாள் ஞாபகம் – ஊராட்சி ஒன்றிய பள்ளி! Poll_m10அந்தநாள் ஞாபகம் – ஊராட்சி ஒன்றிய பள்ளி! Poll_c10 
1 Post - 1%
Pampu
அந்தநாள் ஞாபகம் – ஊராட்சி ஒன்றிய பள்ளி! Poll_c10அந்தநாள் ஞாபகம் – ஊராட்சி ஒன்றிய பள்ளி! Poll_m10அந்தநாள் ஞாபகம் – ஊராட்சி ஒன்றிய பள்ளி! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அந்தநாள் ஞாபகம் – ஊராட்சி ஒன்றிய பள்ளி! Poll_c10அந்தநாள் ஞாபகம் – ஊராட்சி ஒன்றிய பள்ளி! Poll_m10அந்தநாள் ஞாபகம் – ஊராட்சி ஒன்றிய பள்ளி! Poll_c10 
214 Posts - 42%
heezulia
அந்தநாள் ஞாபகம் – ஊராட்சி ஒன்றிய பள்ளி! Poll_c10அந்தநாள் ஞாபகம் – ஊராட்சி ஒன்றிய பள்ளி! Poll_m10அந்தநாள் ஞாபகம் – ஊராட்சி ஒன்றிய பள்ளி! Poll_c10 
187 Posts - 37%
Dr.S.Soundarapandian
அந்தநாள் ஞாபகம் – ஊராட்சி ஒன்றிய பள்ளி! Poll_c10அந்தநாள் ஞாபகம் – ஊராட்சி ஒன்றிய பள்ளி! Poll_m10அந்தநாள் ஞாபகம் – ஊராட்சி ஒன்றிய பள்ளி! Poll_c10 
52 Posts - 10%
mohamed nizamudeen
அந்தநாள் ஞாபகம் – ஊராட்சி ஒன்றிய பள்ளி! Poll_c10அந்தநாள் ஞாபகம் – ஊராட்சி ஒன்றிய பள்ளி! Poll_m10அந்தநாள் ஞாபகம் – ஊராட்சி ஒன்றிய பள்ளி! Poll_c10 
18 Posts - 4%
sugumaran
அந்தநாள் ஞாபகம் – ஊராட்சி ஒன்றிய பள்ளி! Poll_c10அந்தநாள் ஞாபகம் – ஊராட்சி ஒன்றிய பள்ளி! Poll_m10அந்தநாள் ஞாபகம் – ஊராட்சி ஒன்றிய பள்ளி! Poll_c10 
16 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
அந்தநாள் ஞாபகம் – ஊராட்சி ஒன்றிய பள்ளி! Poll_c10அந்தநாள் ஞாபகம் – ஊராட்சி ஒன்றிய பள்ளி! Poll_m10அந்தநாள் ஞாபகம் – ஊராட்சி ஒன்றிய பள்ளி! Poll_c10 
6 Posts - 1%
manikavi
அந்தநாள் ஞாபகம் – ஊராட்சி ஒன்றிய பள்ளி! Poll_c10அந்தநாள் ஞாபகம் – ஊராட்சி ஒன்றிய பள்ளி! Poll_m10அந்தநாள் ஞாபகம் – ஊராட்சி ஒன்றிய பள்ளி! Poll_c10 
4 Posts - 1%
prajai
அந்தநாள் ஞாபகம் – ஊராட்சி ஒன்றிய பள்ளி! Poll_c10அந்தநாள் ஞாபகம் – ஊராட்சி ஒன்றிய பள்ளி! Poll_m10அந்தநாள் ஞாபகம் – ஊராட்சி ஒன்றிய பள்ளி! Poll_c10 
4 Posts - 1%
Kavithas
அந்தநாள் ஞாபகம் – ஊராட்சி ஒன்றிய பள்ளி! Poll_c10அந்தநாள் ஞாபகம் – ஊராட்சி ஒன்றிய பள்ளி! Poll_m10அந்தநாள் ஞாபகம் – ஊராட்சி ஒன்றிய பள்ளி! Poll_c10 
3 Posts - 1%
Abiraj_26
அந்தநாள் ஞாபகம் – ஊராட்சி ஒன்றிய பள்ளி! Poll_c10அந்தநாள் ஞாபகம் – ஊராட்சி ஒன்றிய பள்ளி! Poll_m10அந்தநாள் ஞாபகம் – ஊராட்சி ஒன்றிய பள்ளி! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அந்தநாள் ஞாபகம் – ஊராட்சி ஒன்றிய பள்ளி!

B.VENKATESAN
B.VENKATESAN
பண்பாளர்

பதிவுகள் : 170
இணைந்தது : 13/04/2015

PostB.VENKATESAN Wed May 03, 2017 1:06 am

அந்தநாள் ஞாபகம் – ஊராட்சி ஒன்றிய பள்ளி! - பா.வெ.

ஓட்டுக்கட்டிடம் தாங்கிய
ஊராட்சி ஒன்றிய பள்ளி ஒன்று
ஊர்புறத்தில் கல்வியை
ஊட்டி வளர்க்கும்!

ஆரம்ப கல்வியை
ஆரம்பிக்கும் குழந்தைகள்
ஆரஞ்சு மிட்டாய்களை
அனைவருக்கும் வழங்கி
மகிழும்!

கல்லு சிலேட்டும் தகர சிலேட்டும்
நாலு கோடு போட்ட நோட்டும்
ஆரம்ப வகுப்புகளை
ஆரம்பிக்கும்!

முக்காலித் தாங்கியில் கரும்பலகையும்
முழங்கால் மடிக்காத மர நாற்காலியும்
முக்காலமும் வாழும்
வகுப்பறை சின்னங்கள்!

மண்வாசம் நீங்காத மழலைகள் மீது
மரத்தடி நிழல் வகுப்பும்
மண் தரை இருக்கையும்
மாறாத நேசம் நீட்டும்!

தலைக்கு எண்ணெய்
தாராளமாய் தடவி
வாகு எடுத்து வழித்து சீவி
விபூதி பொட்டு நெற்றியில் இட்டு
பவுடர் பூக்க பாதி துடைத்து
பையில் புத்தகம் ஏந்தி
பள்ளி செல்லும் குழந்தைகள்
பார்க்கவே கொள்ளை அழகு!

பொதிசுமையற்ற போதுமான
புத்தகங்கள் திணிப்பின்றி
புகுந்திருக்கும் - ஜோல்னா பைகளில்!

புத்தக சித்திரங்களை உயிர்ப்பித்து
புது வாழ்வு வாழ்ந்த
புதிர் வாழ்க்கை அது!

அந்நாளில் அறவே குறையாத
ஆசிரியர் மீதான மரியாதை
அழகாய் தெரியும் –
அக்குள் தாண்டி கைகட்டும்
அழகிய கைகள் இரண்டில்!

ஆசிரியரோடு பாடம் சொல்ல
அனைத்து குழந்தைகளும்
அழகாய் ராகமிடும்!

வால்தனம் நீட்டிய
வழக்கமான புகார்களை
வகுப்பறைக்குள் சரிசெய்வது
வாத்தியார் கடமை!

கால் அனாவும் அரை அனாவும்
கனமாய் தெரிந்த
காலம் அது!

கால்சட்டை ஓட்டை தொலைத்த
காசை கண்டெடுப்பது
கணநேர சொர்க்கம் அன்று...!

பத்து பைசா சேமிப்பில்
பத்தாயிரம் கனவுகளை
பதுக்கிய பருவம் அது!

தந்தையிடம் வாங்கிய பின்பு
தாத்தா மடியில் கிட்டும் காசு
தட்டையான தகர பெட்டியில்
தஞ்சம் புகும்!

குச்சி வாங்கி எழுதவும்
குச்சி மிட்டாய் தின்னவும்
தகர பெட்டி பற்களால்
திறக்கப்படும்!

பள்ளிகூட வாசலில்
பரப்பிய கோணியில்
கணிவாய் கடை நடத்துவாள் -
காது கனமாய் தொங்கும்
கிழவி ஒருத்தி!

கால் அனா லாபத்தை கூட
கடனாக விற்கும்
கனிந்த மனம் கிழவிக்கு!

மண் தரை வகுப்புகள் நெய்த
மண்ணாடைகளை களைய
மதிய இடைவேளை மணியோசை
மறுப்பு சொல்லும்!

தண்டவாள இரும்பு போல்
தடித்திருக்கும் பள்ளி மணி!
மணி அடிக்க ஓடுவதும்
மணி அடித்தால் ஓடுவதும்
மகிழ்ச்சி தரும் நிகழ்வுகள்!

பெற்றோர் கெளரவம்
பெற்ற மதிப்பெண்ணில் இல்லை;
பிஞ்சு மனதிற்கு இறுக்கமில்லை ;
இயல்பான தேர்ச்சியில்
இடைஞ்சல் ஏதுமில்லை!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 03, 2017 1:22 am

மிக அழகாக எழுதுகிறீர்கள் வெங்கடேசன் .........நதி இன் அமைதியான ஓட்டம் போல தங்கு தடை இன்றி வந்து விழுகின்றன வார்த்தைகள்......ஆரஞ்சு மிட்டாயும் தகர சிலேட்டும் நாலு வரி நோட்டும் நேரே அந்தக் காலத்துக்கு என்னை கொண்டு போய்விட்டது...........அருமை அருமை அருமை.............வாழ்த்துகள் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் ......நிறைய எழுதுங்கள்...சிலருக்குத்தான் இப்படி வரம் கிடைக்கும்...எனக்கு ரசிக்க மட்டுமே தெரியும் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
B.VENKATESAN
B.VENKATESAN
பண்பாளர்

பதிவுகள் : 170
இணைந்தது : 13/04/2015

PostB.VENKATESAN Wed May 03, 2017 8:10 am

மிக்க நன்றி அம்மா! தங்கள் மிகையான பாராட்டுகள் என்னுள் இன்னும் வரிகளை விதைக்கின்றன.எல்லாம் இறை சித்தம்.நான் வெறும் கருவி மட்டுமே..."நன்றி" என்ற வார்த்தையின் நீளம் மூன்று எழுத்துக்களில் முடங்கினாலும் ஈகரை நட்புகள் மீதான நான் கொண்ட நன்றி நாளும் நீளும்.அனைவருக்கும் அன்பு கலந்த நன்றிகள் பல...

எண்ணம் போல் வாழ்வு
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 03, 2017 11:36 am

B.VENKATESAN wrote:மிக்க நன்றி அம்மா! தங்கள் மிகையான பாராட்டுகள் என்னுள் இன்னும் வரிகளை விதைக்கின்றன.எல்லாம் இறை சித்தம்.நான் வெறும் கருவி மட்டுமே..."நன்றி" என்ற வார்த்தையின் நீளம் மூன்று எழுத்துக்களில் முடங்கினாலும் ஈகரை நட்புகள் மீதான நான் கொண்ட நன்றி நாளும் நீளும்.அனைவருக்கும் அன்பு கலந்த நன்றிகள் பல...
மேற்கோள் செய்த பதிவு: 1240922

மிகையான பாராட்டுகள் இல்லை வெங்கடேசன், நிஜமாகவே நன்றாக இருக்கு உங்கள் கவிதைகள் புன்னகை.......ஆமாம் நீங்கள் சொல்வது போல இது இறைவன் கொடுத்த வரம் தான் , அதைத்தான் நான் குறிப்பிட்டேன் 'இதுபோல் எல்லோருக்கும் வருவது இல்லை' என்று புன்னகை ....GOD BLESS YOU ! அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
B.VENKATESAN
B.VENKATESAN
பண்பாளர்

பதிவுகள் : 170
இணைந்தது : 13/04/2015

PostB.VENKATESAN Wed May 03, 2017 12:33 pm

மிக்க நன்றி அம்மா!

எண்ணம் போல் வாழ்வு
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu May 04, 2017 10:11 am

ஒரு கவிக்குரிய லட்சணங்கள் தங்கள் கவிதையில் தெரிகின்றன . வார்த்தைகளும் அழகு ! சொல்கின்ற செய்திகளும் அழகு ! சொல்லும் விதமும் அழகு !

மரபுக்கவிதைகளில் தங்கள் கவனத்தை செலுத்தவும் ; குறிப்பாக வெண்பா , விருத்தப்பா ஆகிய இலக்கணங்களைப் பயின்று , கவிதைகள் செய்யப் பழகவும் . இதே தளத்தில் ரமணி என்பவர் மரபுக் கவிதைகள் எழுதி வருகிறார் . அவருடைய கவிதைகளை வாசிக்கவும் . மேலும் காளமேகம் , புகழேந்திப் புலவர் ஆகியோரின் கவிதைகள் வெண்பா கற்றுக்கொள்ள உதவியாக இருக்கும் . தினமும் திருக்குறள் படித்து வந்தாலே , நல்ல கவிஞராக உருவாகலாம் என்பது என் கருத்து .

மரபுக் கவிதைகளின் அழகிலே தோய்ந்த உள்ளம் , புதுக்கவிதை , ஹைக்கூ போன்ற கவிதைகளை விரும்பாது . அதற்காக புதுக்கவிதைகளை நான் வெறுப்பவனல்ல. மரபுக் கவிதைகளை படிப்பவர்கள் , எழுதுபவர்கள் குறைந்துகொண்டே வருகிறார்கள் . அந்த எண்ணிக்கையை நும்போலும் கவிஞர்கள் முயன்றால் அதிகப்படுத்தலாம் .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
B.VENKATESAN
B.VENKATESAN
பண்பாளர்

பதிவுகள் : 170
இணைந்தது : 13/04/2015

PostB.VENKATESAN Thu May 04, 2017 10:44 am

மிக்க நன்றி ஐயா! நிச்சயமாக முயல்கிறேன்.ஓரளவு எழுத வரும்.ஆனால் பெரும்பாலும் யாரும் விரும்புவதில்லை.உரைநடை அடுக்குகளை கவிதை என ஏற்கும் காலகட்டம் இது. எனினும் மரபு வழுவா மனம் கொண்ட தங்களுக்காக எனது பழைய கவிதை ஒன்று...

தோன்று நிலை தொட வொன்னா
தொன்மை தொட்டதென் தேன்தமிழே!!!

பாட்டனும வன்முப் பாட்டனும் பயின்று
பகிர்ந்த தென் பைந்தமிழே!!!

நாவிற் கினியநற் சுவைபொ திந்ததோர்
"ழ"கரம் சூடியதென் நற்றமிழே!!!

இலக்கணம் வழுவா இலக்கிய மெடுத்து
இயம்பிய தென் இயற்றமிழே!!!

முச்சங்கமும் முன்னிலை நல்கி யதோர்
மூத்த மொழியென் முத்தமிழே!!!

தீராச் சுவையிற் திகட்டா தொரு
பாயின்பம் பகர்வதென் தீந்தமிழே!!!

சென்ற விடமெல்லாஞ் சிறப்பு சேர்
செம்மொ ழியென் செந்தமிழே!!!

தென்னன் புகழ் தன்னைதிக்கு தோறும்
தெளித்த தென் தெளிதமிழே!!!

காலத்தா லழியாக் கடவுள் நிலை
கண்ட தென் கன்னித்தமிழே!!!

நாகரிகம் மெல்லநா வடைத்திடினும் நாளும்
நாவில் நவில்வது நறுந்தமிழே!!!

எண்ணம் போல் வாழ்வு
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக