புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Today at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Today at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Today at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Today at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Today at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Today at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Today at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Today at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Today at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Today at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மறக்கக் கற்றுக் கொள்ளுங்கள்… Poll_c10மறக்கக் கற்றுக் கொள்ளுங்கள்… Poll_m10மறக்கக் கற்றுக் கொள்ளுங்கள்… Poll_c10 
83 Posts - 55%
heezulia
மறக்கக் கற்றுக் கொள்ளுங்கள்… Poll_c10மறக்கக் கற்றுக் கொள்ளுங்கள்… Poll_m10மறக்கக் கற்றுக் கொள்ளுங்கள்… Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
மறக்கக் கற்றுக் கொள்ளுங்கள்… Poll_c10மறக்கக் கற்றுக் கொள்ளுங்கள்… Poll_m10மறக்கக் கற்றுக் கொள்ளுங்கள்… Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
மறக்கக் கற்றுக் கொள்ளுங்கள்… Poll_c10மறக்கக் கற்றுக் கொள்ளுங்கள்… Poll_m10மறக்கக் கற்றுக் கொள்ளுங்கள்… Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
மறக்கக் கற்றுக் கொள்ளுங்கள்… Poll_c10மறக்கக் கற்றுக் கொள்ளுங்கள்… Poll_m10மறக்கக் கற்றுக் கொள்ளுங்கள்… Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
மறக்கக் கற்றுக் கொள்ளுங்கள்… Poll_c10மறக்கக் கற்றுக் கொள்ளுங்கள்… Poll_m10மறக்கக் கற்றுக் கொள்ளுங்கள்… Poll_c10 
1 Post - 1%
rajuselvam
மறக்கக் கற்றுக் கொள்ளுங்கள்… Poll_c10மறக்கக் கற்றுக் கொள்ளுங்கள்… Poll_m10மறக்கக் கற்றுக் கொள்ளுங்கள்… Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மறக்கக் கற்றுக் கொள்ளுங்கள்… Poll_c10மறக்கக் கற்றுக் கொள்ளுங்கள்… Poll_m10மறக்கக் கற்றுக் கொள்ளுங்கள்… Poll_c10 
23 Posts - 88%
T.N.Balasubramanian
மறக்கக் கற்றுக் கொள்ளுங்கள்… Poll_c10மறக்கக் கற்றுக் கொள்ளுங்கள்… Poll_m10மறக்கக் கற்றுக் கொள்ளுங்கள்… Poll_c10 
2 Posts - 8%
mohamed nizamudeen
மறக்கக் கற்றுக் கொள்ளுங்கள்… Poll_c10மறக்கக் கற்றுக் கொள்ளுங்கள்… Poll_m10மறக்கக் கற்றுக் கொள்ளுங்கள்… Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மறக்கக் கற்றுக் கொள்ளுங்கள்…


   
   
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat Aug 09, 2014 2:58 pm

சிறு வயதிலிருந்தே நமக்கு நினைவு வைத்துக் கொள்ள சொல்லித் தருகிறார்கள். படிக்கும் பாடமாகட்டும், மற்ற விஷயங்கள் ஆகட்டும் அதிகமாய் நினைவு வைத்துக் கொள்வது எல்லோராலும் பாராட்டப்படுகிறது.

துரதிர்ஷடவசமாக அதையும் விட முக்கியமான கலை ஒன்றை யாரும் நமக்கு சொல்லித் தருவதில்லை. அந்தக் கலை மதிப்பெண்கள் வாங்கித் தராதென்றாலும் மன அமைதியை அடைய வைக்கும். அது தான் மறக்கும் கலை.

நம் மனதில் நாம் சேர்த்து வைத்துள்ள நினைவுகளில் எத்தனை நினைவுகள் நம் மனதில் ரணங்களாக இருக்கின்றன. எத்தனை நினைவுகள் வரப்பிரசாதமாக இருப்பதற்கு பதிலாக சாபக்கேடாக இருக்கின்றன.

ஒவ்வொரு முறை நினைவுபடுத்தப் படும் போதும் எப்படியெல்லாம் நாம் நிம்மதியில்லாமல் தவிக்கிறோம்.

பழைய தமிழ் திரைப்பாடல் போல “நினக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா?” என்று எத்தனை முறை நமக்குள்ளே கேட்டு நொந்திருக்கிறோம்? அப்படி நிறையவே நம் மனதில் சேர்த்து வைத்துள்ளோம். கடலளவு பலரும் சேர்த்து வைத்திருக்கிறோம். அலைகளாய் ஓயாமல் எழுந்து அவை நம்மை அழுத்துகின்றன. கடந்ததெல்லாம் பழங்கதை ஆகாமல் நம்மை நிகழ் காலத்திலும் வாழ விடாமல் செய்கின்றன.

அவற்றில் பெரும்பாலானவை அடுத்தவர்கள் நமக்குச் செய்த துரோகங்களாகவும், அவர்கள் நம்மை இழிவு படுத்திய நிகழ்ச்சிகளாகவுமாக இருக்கின்றன.

பிரபல ஆங்கில எழுத்தாளர் டேல் கார்னகி கூறுவார்: “நம் எதிரிகளை நாம் அதிகமாய் வெறுக்க வெறுக்க அவர்களுக்கு அதிக அதிகாரத்தைக் கொடுக்கிறோம். அவர்களால் நாம் நம் தூக்கத்தையும், சந்தோஷத்தையும் இழக்கிறோம். அவர்களால் நாம் எப்படி நிம்மதியின்றித் தவிக்கிறோம் என்று மட்டும் அவர்களுக்குத் தெரிய வந்தால் நிஜமாகவே அவர்கள் ஆனந்தக் கூத்தாடுவார்கள். நமது வெறுப்பு அவர்களை ஒன்றும் செய்வதில்லை. மாறாக நமது நாட்களை அது நரகமாக்குகின்றது”. அவர் கூறியதில் பெரிய உண்மை அடங்கியிருக்கிறது.

நமக்கு இழைக்கப்படும் நன்மைகளை நாம் தண்ணீரில் எழுதுகிறோம். தீமைகளையோ கல்லில் செதுக்குகிறோம். நண்பர்களை விட நம் நினைவுகளை எதிரிகளே அதிகமாக ஆக்கிரமிக்கிறார்கள். இதை நாம் உணர்வதாகவே தெரிவதில்லை.

ஒரு நாளில் எத்தனையோ இதமான சம்பவங்கள் நம் வாழ்வில் நடந்திருக்கலாம். ஆனால் யாரோ ஒருவர் சொன்ன சுடுசொல் எல்லாவற்றையும் மறக்க வைத்து அன்று முழுவதும் நம் மனதில் தனி ஆவர்த்தனம் செய்கிறது. அந்த நபரைப் பார்க்க நேரிடும் போதெல்லாம் பின் எப்போதும் அந்த ந்¢னைவு வந்து மனம் கொதித்து அமைதி இழக்கிறோம்.

ஒன்றை நாம் என்றும் மறந்து விடலாகாது. ஒவ்வொரு மனிதனின் தவறான குணாதிசயங்களும், நடத்தைகளும் அறியாமையால் அல்லது தவறான அறிவால் தான் ஏற்படுகின்றன.

வளர்த்த விதம், அமைந்த வாழ்க்கை, சூழ்நிலைகள், சேர்க்கை, விதி என்று பலதும் ஒருவன் எண்ணங்களையும், குண நலன்களையும், நடத்தைகளையும் ந்¢ர்ணயிக்கின்றன. இறைவன் தந்த ஆறாவது அறிவை முறையாகப் பயன்படுத்தினால் இவற்றின் தாக்கங்களையும் மீறி ஓருவன் பண்படுத்திக் கொள்ள முடியும்.

ஆனால் எத்தனை பேர் அந்த ஆறாவது அறிவை பயன்படுத்துகிறார்கள்? அதைப் பயன்படுத்தாதவன், அடுத்தவர்களைப் புண்படுத்துபவன், ‘இன்னாத சொற்களைக்’ கூறுபவன், ஏமாற்றுபவன் அவனது ‘கர்மா’வின் பலனைக் கண்டிப்பாக அனுபவிப்பான். ஆகவே அவனுக்காக அனுதாபப் பட வேண்டுமேயொழிய தொடர்ந்து வெறுப்பதும், உள்ளே கொதிப்பதும் அறிவிற்கு உகந்ததல்ல.

கைகேயியின் செயலால் வெகுண்ட இலக்குவனுக்கு இராமன் சொல்லும் சமாதானத்தை கம்பன் அழகாகக் கூறுவான்:

“நதியின் பிழையன்று நறும்புலன் இன்மை, அற்றே
பதியின் பிழையன்று, பயந்து நமைப்புரந்தாள்
மதியின் பிழையன்று, மகன் பிழையன்று, மைந்த,
விதியின் பிழை நீ இதற்கு என்கொல் வெகுண்டதென்றான்”

விதியின் செயல் என்று உணர்ந்ததால் இராமன் அமைதியடைய முடிந்தது. பதினான்கு வருட வனவாசத்திற்கு கைகேயி காரணமாகி அதன் விளைவுகளில் ஒன்றாய் சீதையை இழந்து பெரும் வேதனை அடைந்த போதும் ஒரு முறையாவது இராமன் “எல்லாம் இந்தக் கைகேயியால் வந்தது” என்று ஒரு முறை கூட மனதளவிலும் நினைத்ததாய் இராமாயணத்தில் செய்தி இல்லை.




M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat Aug 09, 2014 2:58 pm

சிலர் நம்மிடம் மிக நன்றாகப் பழகியிருப்பார்கள். ஏதோ ஒரு சிறு மனஸ்தாபம் அவர்களுடன் ஏற்பட்டால் அதைப் பெரிதுபடுத்தாமல் இருக்க நம்மில் பலருக்குத் தெரிவதில்லை. எத்தனையோ நல்லது உள்ள இடத்தில் ஓரிரு குறைகள் இருப்பது பெரிய குற்றமல்ல. நம்மிடம் குறைகள் இல்லையா? குறைகளே இல்லாத அந்த தனிப்பெரும் தன்மை இறைவனைத் தவிர யாரிடம் இருக்கிறது? திருவள்ளுவர் கூறுவார்-

“கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த
ஒன்று நன்று உள்ளக் கெடும்”

இராமன் செய்தான், திருவள்ளுவர் சொன்னார் என்பதற்காக மறக்கவும் மன்னிக்கவும் கூறவில்லை. நம் நிம்மதிக்காக, மன அமைதிக்காக மன்னித்து மறப்பது உத்தமம். குறுகிய வாழ்க்கையில் நாம் சாதிக்கவும், சந்தோஷப்படவும் வேண்டுமானால் இறந்த காலம் என்ற பிணத்தை நம்முடன் கட்டிக் கொண்டு அலைவது முட்டாள்தனம். இறந்ததைப் புதையுங்கள். கட்டிக் கொண்டு காலம் முழுவதும் புலம்பாதீர்கள்.

கால்குலேட்டர் உபயோகிக்கும் போது ஒரு கணக்கு முடிந்த பின்னர் அதை அழித்து விட்டு பின்பு அடுத்த கணக்கு போட்டால் தான் சரியான விடை கிடைக்கும். அதைச் செய்யாமல் தொடர்ந்து கணக்கு போட்டுக் கொண்டே போனால் தவறான விடை தான் வரும். இது நம் வாழ்க்கைக்கும் பொருந்தும். நிகழ்காலத்தில் கவனமாக வாழுங்கள். அதை விட்டு பழைய கவலைகளில் நிகழ்காலத்தை கோட்டை விட்டால் இந்த நிகழ்காலத்திற்கும் சேர்த்து எதிர்காலத்தில் வருந்த வேண்டி இருக்கும்.

சிலர் மறக்க என்று மதுவையும் போதைப் பழக்கத்தையும் நாடுகிறார்கள். இதை விட முட்டாள்தனம் வேறிருக்க முடியாது. தற்காலிகமாக நிம்மதி கிடைக்கிற மாதிரி தோன்றினாலும், இது நம்மை பரிபூரணமாக அழித்து விடும். கவலையை மறக்க போதையை நாடுபவன் பின்பு போதையை மறக்க படாத பாடு பட நேரிடும்.

ரமண மகரிஷியும், ஜே.கிருஷ்ணமூர்த்தியும் சரியான பூரணமான சிந்தனையால் (விசாரம்), இப்பிரச்னைக்கு தீர்வு காண முடியும் என்கிறார்கள்.

அரைகுறை ஆராய்ச்சியும் அலசலும் தான் சிலவற்றை மனதிலிருந்து முழுவதுமாகக் களையத் தடையாக இருக்கின்றன. முழுவதுமாய் சிந்தித்து உண்மையை உணர முடிந்தால், அந்த உண்மையே ஒருவனை விடுவிக்கும் என்கிறார்கள்.

அரவிந்தாஸ்ரமத்து அன்னை இன்னொரு வழி சொல்கிறார். “தேவையற்ற மறக்கப் பட வேண்டிய ஒரு எண்ணம் அடிக்கடி உங்களை தொந்தரவு செய்யுமானால் அதை முழுமையாக கவனமாக உணர்வு பூர்வமாக ஒரு காகிதத்தில் எழுதுங்கள். பின்பு ‘சரி மனமே நீ சொல்வதெல்லாம் சொல்லியாகி விட்டது. உன் வேலை முடிந்தது’ என எண்ணி அக்காகிதத்தை கவனத்துடனும், உறுதியுடனும் எடுத்து சுக்கு நூறாகக் கிழித்துப் போடுங்கள். அந்த எண்ணங்களின் தாக்கத்தில் இருந்து விடுபடுங்கள்”.

தியானமும், பிரார்த்தனையும் பல வேதனைகளை மறக்க மருந்தாக இருக்கின்றன. எல்லா பாரத்தையும் அந்த இறைவனிடம் இறக்கி வையுங்கள். காலமும், கடவுள் அருளும் எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்டு மறக்கும் பக்குவத்தை அளிக்க உதவும்.

வாழ்வில் நல்ல குறிக்கோள் ஒன்றை வைத்து கொள்ளுங்கள். வாழ்க்கையில் ஒரு குறிக்கோள் இருந்தால், அதை அடைய வேண்டும் என்ற உள்ளே ஒரு அக்னி இருந்தால் எல்லாவற்றையும் மறந்து உற்சாகத்தோடு வாழ்க்கையைத் தொடர முடியும்.

குறைகளும் நிறைகளும் எல்லோரிடமும் இருக்கின்றன. எதைப் பெரிது படுத்துகிறோமோ அவையே அதிகமாய் மனதில் தங்குகின்றன. வாழ்வது ஒரு முறை. அது குறைகளின் கணக்கெடுப்பாக இருக்க வேண்டாம். கவலைகளின் தொகுப்பாக இருக்க வேண்டாம். நல்லதை நினைவில் வைப்போம். தீயதை மறக்கக் கற்போம்.

நன்றி: தன்னம்பிக்கை இதழ்



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sat Aug 09, 2014 5:07 pm

ராமர் சொன்னாலும் திருவள்ளுவர் சொன்னாலும் திருந்தாத ஜென்மங்கள் திருந்தாது.
நம்ம பாலிசி மறப்போம் மறப்போம் மன்னிப்போம் தான்.
நல்ல பதிவு

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Jan 18, 2024 1:29 pm

மறக்கக் கற்றுக் கொள்ளுங்கள்… 3838410834 மறக்கக் கற்றுக் கொள்ளுங்கள்… 1571444738



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக