ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
புத்தர் போதனைகள்
 Meeran

சிறுகதைகளின் தொகுப்பு
 kuloththungan

மெர்சல் விமர்சனம்
 Pranav Jain

இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 ayyasamy ram

அன்புடை உறவுகளே
 ayyasamy ram

சிரிப்பு என் ஸ்பெஷாலிட்டி! சினிமாக்காரன் கம்யூனிட்டி!
 Pranav Jain

கோடம்பாக்கத்திற்கு வெளியில் ஒரு கோலிவுட்!
 Pranav Jain

மருத்துவ முத்தம் தரவா...!
 ஜாஹீதாபானு

அரிய தமிழ் காமிக்ஸ்கள்
 kuloththungan


 Meeran

பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்*
 Meeran

காஞ்சனா ஜெயதிலகர் நாவல்கள் அனைத்தும்
 Meeran

பாரதியார் - சில புத்தகங்கள்
 Meeran

(இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் தொடர்ச்சி....
 Meeran

பட்டுக்கோட்டை பிரபாகர் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 thiru907

ஆன்மிக மலர்
 thiru907

பாலஜோதிடம்
 thiru907

ஞாபகம் வருதே - கவிதை
 ayyasamy ram

கண்ணதாசன் நாவல்கள்
 Meeran

சின்ன சின்ன சிந்தனை (கவிதைகள்) - தொடர் பதிவு
 ayyasamy ram

களவாணிப் பயலுகளை நம்பித்தான் பிழைப்பு ஓடுது...!!
 ayyasamy ram

ரா. கி. ரங்கராஜன் நாவல்கள்
 Meeran

புதுக்கவிதைகள் (நான்கு)
 ayyasamy ram

பரிமளா ராஜேந்திரன் நாவல்கள்
 Meeran

குதூகலச் சிரிப்பு! - கவிதை
 ayyasamy ram

(இந்திரா சௌந்தர்ராஜன் நாவல்கள் அனைத்தும் இதோ உணக்களுக்காக) (இந்திரா சௌந்தர்ராஜன் நாவல்கள் அனைத்தும் இதோ உணக்களுக்காக)
 Meeran

உவமைக்கவிஞர் சுரதா அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்
 Meeran

தேவாரம்,திருவாசகம்,திருமந்திரம் தேவை
 ajaydreams

இவ்வளவு நீள முடியா?
 sugumaran

மும்பை: ரயிலை ‛தள்ளிய' ஊழியர்கள்
 ayyasamy ram

சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் விமானம் தாமதம்
 ayyasamy ram

நாடு முழுவதும் வல்லபாய் பட்டேல் பிறந்தாளை சிறப்பாக கொண்டாட மத்திய அரசு முடிவு
 ayyasamy ram

இந்திய விமானப்படைக்கு ஆயுத தாக்குதல் நடத்தும் ஆளில்லாத விமானங்கள் அமெரிக்கா வழங்குகிறது
 ayyasamy ram

5 முன்னாள் ஜனாதிபதிகள் தோன்றினர் புயல்களால் பாதித்த மக்களுக்கு நிதி திரட்டும் இசை நிகழ்ச்சியில் பங்கேற்றனர்
 ayyasamy ram

சித்திரக் கதையில் ராமாயணம்! சிறப்பு தபால் தலை வெளியீடு
 ayyasamy ram

சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் விமானம் தாமதம்
 ayyasamy ram

ஆசிய ஹாக்கி: இந்தியா மூன்றாவது முறையாக சாம்பியன்
 ayyasamy ram

மும்பை: ரயிலை ‛தள்ளிய' ஊழியர்கள்
 ayyasamy ram

முதல் ஒரு நாள் கிரிக்கெட் : நியூசிலாந்து வெற்றி
 ayyasamy ram

தலைவர் ரொம்ப ஸ்ட்ரிக்ட்...!!
 Dr.S.Soundarapandian

ஓலம்! - கவிதை
 Dr.S.Soundarapandian

கார்ட்டூன் மற்றும் படத்துடன் செய்தி - தொடர் பதிவு
 Dr.S.Soundarapandian

ஓ! அழகுப் பெண்ணே! (பஞ்சாப் பாடல்)
 Dr.S.Soundarapandian

திமிர் வரி
 Dr.S.Soundarapandian

டெங்குவின் அறிகுறிகள் மற்றும் அதற்கான மருத்துவம் - தொடர் பதிவு
 Dr.S.Soundarapandian

இதுதான் காதல் என்பது! (நேபாள மொழிப் பாடல்)
 Dr.S.Soundarapandian

அக்.,30 ல் காங்., தலைவராக பொறுப்பேற்கிறார் ராகுல்
 ayyasamy ram

மோகன்லால் நடிக்கும் ஒடியன் படத்தில் நாயகிகளாக மீனா & திரிஷா
 ayyasamy ram

இனிமேல் சினிமா, இசை கச்சேரிகளில் பாட மாட்டேன்: பிரபல பாடகி ஜானகி அறிவிப்பு
 ayyasamy ram

மும்பை ஒருநாள் கிரிக்கெட்: இந்தியா பேட்டிங்;
 ayyasamy ram

ரமணிசந்திரன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 thiru907

பாலகுமாரன் தமிழ் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 thiru907

இந்திரா சௌந்தர்ராஜன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 thiru907

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்
 sugumaran

தமிழ் படத்தில் நடிக்காததற்கு காரணம்...
 ayyasamy ram

இதப்படிங்க முதல்ல...சினிமா செய்திகள்
 ayyasamy ram

'சங்கமித்ரா' நாயகி: குஷ்பு அதிகாரபூர்வ அறிவிப்பு
 ayyasamy ram

இணையத்தில் மெர்சல் படம் பார்த்த ஹெச்.ராஜா!!
 ayyasamy ram

தலாய் லாமாவை சந்திப்பது மிகப்பெரும் குற்றம்: உலக தலைவர்களுக்கு சீனா எச்சரிக்கை
 ayyasamy ram

சிறிய சிறுசேமிப்பு திட்டங்கள் வங்கிகளுக்கு அரசு அனுமதி
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

சர்க்கரையை வெல்லலாம்

View previous topic View next topic Go down

சர்க்கரையை வெல்லலாம்

Post by ayyasamy ram on Fri Apr 21, 2017 6:52 am


-
டயாபடீஸ் டயட் – 4 கட்டளைகள்
-
இந்தக் காலத்தில் சரியான உணவைத் தேர்வுசெய்வதுதான்
மிகவும் சிக்கலான விஷயமாக இருக்கிறது.
`ஆரோக்கியமான உணவு இதுதான்’ என்று மிகத் தெளிவாக
ஒரே ஓர் உணவைப் பரிந்துரைக்க முடியாது. அவரவர்
உடல்நிலைக்கு ஏற்ப, உணவுப்பழக்கம் திட்டமிடப்பட வேண்டும்.

நாம் சாப்பிடும் எந்த ஓர் உணவும் ஆற்றலாக மாற்றப்படுகிறது.
நம் ஆற்றலின் முக்கிய ஆதாரமாக இருப்பது, குளுக்கோஸ்.
இது ஒருவகையான சர்க்கரை. கார்போஹைட்ரேட், கொழுப்பு
மற்றும் புரதம் ஆகியவை தேவைக்கு ஏற்ப நம் உடலில்
குளுக்கோஸாக மாற்றப்படுகின்றன.

இதில், கார்போஹைட்ரேட் உணவுகள் ரத்தத்தில் சர்க்கரை
அளவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
நம்முடைய ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்க நாம்
சாப்பிடும் உணவின் தரம் மற்றும் அளவு மிக முக்கியம்.
இதைத் தெரிந்துகொள்வதன் மூலமே ஒருவரால்
ஆரோக்கியமான உணவுப்பழக்க வழக்கத்துக்குத் தன்னை
மாற்றிக்கொள்ள முடியும்.

1.சிறிய அளவில், அவ்வப்போது தொடர்ந்து உணவு உட்கொள்ளுதல்


நாம் இப்போது மூன்றுவேளை உணவு உட்கொள்கிறோம்.
வயிற்றை நிரப்பும் அளவுக்கு உணவு எடுத்துக்கொள்கிறோம்.
இதற்குப் பதில், உணவைப் பிரித்து ஆறு முறை
எடுத்துக்கொள்ளும்போது, திடீரென ரத்தத்தில் சர்க்கரை
அளவு அதிகரிக்கும் நிலை தடுக்கப்படுகிறது.
இதற்காக, உணவு உட்கொள்வதைத் தவிர்க்கவும் கூடாது.

2.கார்போஹைட்ரேட்டை கட்டுக்குள்வைத்தல்


எவ்வளவு கார்போஹைட்ரேட் உணவு உட்கொள்கிறோம்
என்ற விழிப்புடன் இருக்க வேண்டும். கார்போஹைட்ரேட்
என்றால் வெறும் சர்க்கரை மட்டும் அல்ல, அதிகப்படியான
அரிசி, மைதா உணவுகளில் கார்போஹைட்ரேட் அதிகம்
உள்ளது. இதைக் கட்டுப்படுத்த வேண்டும்.
-

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 31655
மதிப்பீடுகள் : 10174

View user profile

Back to top Go down

Re: சர்க்கரையை வெல்லலாம்

Post by ayyasamy ram on Fri Apr 21, 2017 6:54 am


-
3.விதவிதமாகச் சாப்பிடுதல்

முழு தானியம், பழங்கள், காய்கறிகள் என அனைத்து
விதமான உணவுகளும் இருக்கும்படியாக நம்முடைய
உணவுப் பழக்கத்தைத் திட்டமிட வேண்டும்.

ஒரே வகை உணவில் இருந்து எல்லா சத்துக்களும்
கிடைக்காது. எல்லா வகை உணவும் எடுக்கும்போது,
வைட்டமின், தாதுஉப்புக்கள், நார்ச்சத்து நிறைவாக
உள்ளன. மிகக் குறைவான கலோரி இருக்கிறது.
கொலஸ்ட்ரால் இல்லவே இல்லை; மிகக் குறைந்த
அளவில் கொழுப்புச்சத்தும் கிடைக்கிறது.

4.கொழுப்பு உணவைக் குறைத்தல்


எந்த ஓர் ஆரோக்கியமான நபரும் கொழுப்பில் இருந்து
பெறும் கலோரி, 30 சதவிகிதத்தைத் தாண்டாத
வகையில் பார்த்துக்கொள்ள வேண்டும்.

என்னுடைய தட்டை எப்படி உருவாக்குவது?


சமச்சீரான உணவு என்பதுதான் இதன் சிறப்பு.
இது மிகவும் எளிமையானது. இதை நம் தினசரி வாழ்வில்
பின்பற்றினால், ஆரோக்கியமான வாழ்வு நிச்சயம்.

இதற்கு உங்கள் தட்டில் பாதியை, கார்போஹைட்ரேட்
இல்லாத (Non starchy) பழங்கள், காய்கறிகளால் நிரப்புங்கள்.
மீதி இருக்கும் அரைத் தட்டை இரண்டாகப் பிரிக்க வேண்டும்.

ஒரு பகுதியில் கார்போ ஹைட்ரேட் உணவையும் இன்னொரு
பகுதியில் புரதச்சத்து உள்ள உணவையும் வைக்க வேண்டும்.

ஒரு கிளாஸ் குறைந்த கொழுப்பு உள்ள பால் அல்லது பால்
பொருட்களை எடுத்துக்கொள்ளலாம். இதைத் தொடர்ந்து
பின்பற்றினால், அனைத்து வகையான ஊட்டச் சத்துக்களும்
நிறைவாகக் கிடைக்கும்.
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 31655
மதிப்பீடுகள் : 10174

View user profile

Back to top Go down

Re: சர்க்கரையை வெல்லலாம்

Post by ayyasamy ram on Fri Apr 21, 2017 6:56 am

காய்கறி, பழங்கள்

சர்க்கரை நோயாளிகள் பழங்கள் எடுத்துக்கொள்ளக்
கூடாது என்ற தவறான கருத்து உள்ளது.
சில பழங்க ளை மட்டும் தவிர்த்தால் போதும்.
மற்றபடி, காய்கறி, பழங்கள்தான் சர்க்கரை
நோயாளிகளுக்குத் தேவையான வைட்டமின்,
தாதுஉப்புக்கள், நார்ச்சத்து, ஆன்டிஆக்ஸிடன்ட்களைக்
கொண்டு உள்ளன.

சிப்ஸ், இனிப்புகளுக்குப் பதில் காய்கறி, பழங்களால்
ஆன சாலட் எடுத்துக்கொள்ளலாம்.

பழச்சாறு, பாட்டிலில் அடைக்கப்பட்ட பழச்சாறுகளுக்குப்
பதில் பழங்களாகக் கடித்துச் சாப்பிடுவது நல்லது.

பச்சை, மஞ்சள், ஆரஞ்சு நிறக் காய்கறிகள் ப
ரிந்துரைக்கப்படுகின்றன.

முழு தானியங்கள்,
ஆரோக்கியமான கார்போஹைட்ரேட்டை அளிக்கிறது.
ஒரே வகையான தானியத்தைஎடுப்பதைத் தவிர்த்து,
கேழ்வரகு, கம்பு, தினை என விதவிதமாக எடுத்துக்கொள்ளலாம்.


மோனோ சாச்சுரேட்டட் கொழுப்பு உள்ள ஆலிவ், கனோலா,
கடலை எண்ணெய், மிகக் குறைந்த அளவில் பாலி
சாச்சுரேட்டட் கொழுப்பு உள்ள கார்ன், எள், சூரியகாந்தி
எண்ணெய் எடுத்துக்கொள்ளலாம். சாச்சுரேட்டட் ஃபேட்
உள்ள கொழுப்பு நிறைந்த இறைச்சி, பால் பொருட்கள்,
தேங்காய் எண்ணெய், பாமாயில் போன்றவற்றை எடுத்து
கொள்வதை மிகக் குறைந்த அளவாக மாற்றிக்கொள்ளலாம்.
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 31655
மதிப்பீடுகள் : 10174

View user profile

Back to top Go down

Re: சர்க்கரையை வெல்லலாம்

Post by ayyasamy ram on Fri Apr 21, 2017 6:58 am

ஸ்வீட்டர்: நொறுக்குத்தீனி சாப்பிட வேண்டும் என்றால்,
நேரடியாக பாக்கெட்டில் இருந்து எடுத்துச் சாப்பிடுவதைத்
தவிர்க்க வேண்டும். ஒரு பாத்திரத்தில் சிறிது கொட்டி,
மீதியை மூடி வைத்துவிட்டுச் சாப்பிடுவது நல்லது.

டயாபடீஸ் டவுட்


“சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ எடுத்துக்கொள்ளலாம்
என்று சொல்கிறார்களே. எனக்குச் சர்க்கரை நோய் உள்ளது.
நான் போதுமான அளவு சுகர் ஃப்ரீ உணவுகளை
எடுத்துக்கொள்ளலாமா?”


“சுகர் ஃப்ரீ என்றால், அது கார்போஹைட்ரேட், கலோரி, கொழுப்பு
இல்லாத உணவு என அர்த்தம் இல்லை.
சில சுகர் ஃப்ரீ உணவுகளில், மற்ற உணவுகளில் உள்ளது
போலவே கலோரி, கார்போஹைட்ரேட் உள்ளன. எனவே,
இதை `சுகர் ஃப்ரீ’ என்று சொல்ல முடியாது.

இத்தகைய உணவுகளை உட்கொள்ளும் முன் அதன்
லேபிளைப் பார்க்க வேண்டியது அவசியம். சந்தேகம்
இருந்தால், டாக்டர் மற்றும் டயட்டீஷியனின்
ஆலோசனையைப் பெற வேண்டும்.”
0
நன்றி-விகடன்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 31655
மதிப்பீடுகள் : 10174

View user profile

Back to top Go down

Re: சர்க்கரையை வெல்லலாம்

Post by Dr.S.Soundarapandian on Wed May 10, 2017 1:39 pm

avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4070
மதிப்பீடுகள் : 2145

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: சர்க்கரையை வெல்லலாம்

Post by ராஜா on Wed May 10, 2017 6:02 pm

சர்க்கரை நோய் சிறப்பு மருத்துவர் என்று ஒருவர் கிடையவே கிடையாது , இவர்களெல்லாம் மக்களை ஏமாற்றி பிழைக்கும் நூதன கொள்ளைக்காரர்கள்.

உங்களின் இரத்தசர்க்கரை அதிகமாக இருக்கிறது என்று தெரிந்தவுடன் மருத்துவர் முதலில் சொல்லுவது சர்க்கரை நோய் குணபடுத்தவே முடியாது ஒரு வியாதி என்று தான்.

அடுத்து , மூன்று மாதங்களுக்கு மாத்திரை தருகிறேன் சாப்பிடுங்கள் , பிறகு பார்க்கலாம் என்பார். மூன்று மாதத்திற்கு பிறகு சரியாயிடுமா டாக்டர் என்று கேட்டால். அதன் பிறகு இன்னொரு டெஸ்ட் எடுத்து பார்ப்போம். என்று சொல்லுவார். பிறகு இன்னொரு 3 மாதம். அப்புறம் மாத்திரையின் அளவை அதிகபடுத்துவார் புன்னகை


உறுப்பினர்கள் பதிவிடும் முன் ஈகரை விதிமுறைகளைப் படிக்கவும்.
ஈகரை உறுப்பினர் அல்லாதோர் அட்மினைத் தொடர்புகொள்ள!
தினமும் அதிகம் பார்வையிடும் திரிகளைப் பார்க்க!
என்னைத் தொடர்பு கொள்ள தனிமடல் அனுப்புங்கள்!
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30670
மதிப்பீடுகள் : 5539

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: சர்க்கரையை வெல்லலாம்

Post by T.N.Balasubramanian on Wed May 10, 2017 6:46 pm

சர்க்கரை நோய் சிறப்பு மருத்துவர் என்று ஒருவர் கிடையவே கிடையாது ,

சர்க்கரை என்பது வியாதியே கிடையாது. உடலின் சில உறுப்புகளின் குறைபாடுகள்தான் என்று கூறுகிறார்கள்.
ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20584
மதிப்பீடுகள் : 7946

View user profile

Back to top Go down

Re: சர்க்கரையை வெல்லலாம்

Post by ராஜா on Wed May 10, 2017 7:36 pm

T.N.Balasubramanian wrote:
சர்க்கரை நோய் சிறப்பு மருத்துவர் என்று ஒருவர் கிடையவே கிடையாது ,

சர்க்கரை என்பது வியாதியே கிடையாது. உடலின் சில உறுப்புகளின் குறைபாடுகள்தான் என்று கூறுகிறார்கள்.
ரமணியன்
ஆமாம் ஐயா புன்னகை

டைப்-1 என்பது சிறு வயதில் இருந்தே இருக்கும் ஒரு குறைபாடு இதை சரி செய்ய முடியாது இன்சுலின் நாம் வெளியில் இருந்து தான் எடுக்கணும் (மாத்திரை , ஊசி மூலம் )

ஆனால் இன்று பெரும்பாலோனோருக்கு வரக்கூடிய டைப்-2 சர்க்கரை வியாதியை!!! எளிதாக துரத்திவிடலாம்...

இதற்கு #LCHF என்ற குறைந்த கார்போஹைட்ரெட் அதிக கொழுப்பு உணவின் மூலம் சிறந்த தீர்வு காணலாம். இப்ப நம்ம ஊரில் பேலியோ டயட் என்ற பெயரில் சக்கை போடு போடுது புன்னகை


உறுப்பினர்கள் பதிவிடும் முன் ஈகரை விதிமுறைகளைப் படிக்கவும்.
ஈகரை உறுப்பினர் அல்லாதோர் அட்மினைத் தொடர்புகொள்ள!
தினமும் அதிகம் பார்வையிடும் திரிகளைப் பார்க்க!
என்னைத் தொடர்பு கொள்ள தனிமடல் அனுப்புங்கள்!
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30670
மதிப்பீடுகள் : 5539

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: சர்க்கரையை வெல்லலாம்

Post by T.N.Balasubramanian on Wed May 10, 2017 10:02 pm

Millet எனப்படும் சிறுதானிய உணவுகள் (தினை,வரகரிசி, குதிரைவாலி.கம்பு.கேழ்வரகு ) மேலும் கைக்குத்தல் அரிசி நல்லது என்கிறார்கள்.
தற்காலத்திய உணவுமுறையே முக்கிய காரணமாக கொள்ளலாம்.

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20584
மதிப்பீடுகள் : 7946

View user profile

Back to top Go down

Re: சர்க்கரையை வெல்லலாம்

Post by marudhuaiya on Sat Jun 17, 2017 3:41 pm

நான் 2001 முதல் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு மாத்திரை மற்றும் இன்சுலின் எடுக்கிறேன். சிறிய அளவில் eugluconate ல் ஆரம்பித்து இப்போது ரெண்டு வேலை நாலு மாத்திரை மற்றும் ஒரு வேலை இன்சுலின் என்றாகி விட்டது. அப்படியும் அதிகரித்து கொன்டே செல்கிறது. இத்தனைக்கும் நான் சுத்த சைவம் மற்றும் 90 % உணவு கட்டுப்பாடு மற்றும் நடை பயிற்சி செய்பவன். எடை கட்டுக்குள் தான் உள்ளது. என் வயது இப்போது 53 . தனியாரின் வேலை.மாத்திரை இன்சுலின் செலவு 4000 ஆகிறது. இத்துடன் நிற்கும் என்ற எந்த உறுதியும் இல்லை. வேலை ஓய்வுக்கு பின் மருந்து எப்படி வாங்குவது.? யோசித்து இப்போது மாற்று வழிகளை தேட ஆரம்பித்து பேலியோ உணவு முறைக்கும் மற்றும் ஹீலர் பாஸ்கரின் அனட்டாமிக் தெரபிய உணவு உண்ணும் முறையும் பின்பற்ற ஆரம்பித்துள்ளேன்.பலன் இருக்கும் பட்சத்தில் மற்றவருக்கு தெரிவிக்கிறேன். என் அனுபவத்தில் சர்க்கரை நோய்க்கு அலோபதி மருத்துவம் செய்வதில் எந்த பயனும் இல்லை. இது ஒரு பன்னாட்டு ஏமாற்று வேலையாக தெரிகிறது.
avatar
marudhuaiya
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8
மதிப்பீடுகள் : 25

View user profile

Back to top Go down

Re: சர்க்கரையை வெல்லலாம்

Post by ராஜா on Sun Jun 18, 2017 11:48 am

marudhuaiya wrote:நான் 2001 முதல் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு மாத்திரை மற்றும் இன்சுலின் எடுக்கிறேன். சிறிய அளவில் eugluconate ல் ஆரம்பித்து இப்போது ரெண்டு வேலை நாலு மாத்திரை மற்றும் ஒரு வேலை இன்சுலின் என்றாகி விட்டது. அப்படியும் அதிகரித்து கொன்டே செல்கிறது. இத்தனைக்கும் நான் சுத்த சைவம் மற்றும் 90 % உணவு கட்டுப்பாடு மற்றும் நடை பயிற்சி செய்பவன். எடை கட்டுக்குள் தான் உள்ளது. என் வயது இப்போது 53 . தனியாரின் வேலை.மாத்திரை இன்சுலின் செலவு 4000 ஆகிறது. இத்துடன் நிற்கும் என்ற எந்த உறுதியும் இல்லை. வேலை ஓய்வுக்கு பின் மருந்து எப்படி வாங்குவது.? யோசித்து இப்போது மாற்று வழிகளை தேட ஆரம்பித்து பேலியோ உணவு முறைக்கும் மற்றும் ஹீலர் பாஸ்கரின் அனட்டாமிக் தெரபிய உணவு உண்ணும் முறையும் பின்பற்ற ஆரம்பித்துள்ளேன்.பலன் இருக்கும் பட்சத்தில் மற்றவருக்கு தெரிவிக்கிறேன். என் அனுபவத்தில் சர்க்கரை நோய்க்கு அலோபதி மருத்துவம் செய்வதில் எந்த பயனும் இல்லை. இது ஒரு பன்னாட்டு ஏமாற்று வேலையாக தெரிகிறது.

பேலியோ உணவுமுறை ஆயிரக்கணக்கானவர்களால் பயன்படுத்தப்பட்டுகொண்டிருக்கும் வெற்றிகரமான ஒரு உணவு முறை .

ஹீலர்பாஸ்கர் மூலம் அவரை தவிர வேறு யாரும் பயனடைந்ததாக தெரியவில்லை புன்னகை


உறுப்பினர்கள் பதிவிடும் முன் ஈகரை விதிமுறைகளைப் படிக்கவும்.
ஈகரை உறுப்பினர் அல்லாதோர் அட்மினைத் தொடர்புகொள்ள!
தினமும் அதிகம் பார்வையிடும் திரிகளைப் பார்க்க!
என்னைத் தொடர்பு கொள்ள தனிமடல் அனுப்புங்கள்!
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30670
மதிப்பீடுகள் : 5539

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: சர்க்கரையை வெல்லலாம்

Post by மூர்த்தி on Sun Jun 18, 2017 8:02 pm

குணப்படுத்த முடியா விட்டாலும் உணவு ,உடற்பயிற்சி,எடுக்கும் உணவை 5-6 தடவை சிறிய அளவில் எடுப்பது போன்ற முறைகளால் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க முடியும்.

டயிப் 1 ற்கு சில நாடுகளில் Islet transplantation -Pancreas  transplantation- முறையைக் கையாளுகிறார்கள்.இந்த அறுவை சிகிச்சை மூலம் செல்களை கொடுப்பவரிடம்(donor) பெற்று கணைய செல்களை(beta cells) விதைப்பதன் மூலம் குணப்படுத்தப்படுகிறது. ஆனாலும் கணைய செல்கள் உடலில் சேர்ந்து முற்றாக குளுகோஸ் கட்டுப்பாட்டிற்கு வர அறுவை சிகிச்சை முடிந்து குறைந்தது ஒரு வருடம் ஆகும்.டயிப் 2 ற்கும் சிலருக்கு இந்த கணைய மாற்று சிகிச்சை பலனளித்துள்ளது. பொருத்தமான கணையம் (Pancreatic islets -Cells) கிடைப்பதில் உள்ள சிக்கலே தொடர்ந்து நடைமுறைக்கு வராததற்குக் காரணம் ஆகும்.



மாத்திரைகள் இன்சுலினுக்கு மாற்று அல்ல. இன்சுலின் என்பது கணையத்தில் சுரந்து குருதியில் சேர்க்கப்பட்டு குருதியில் உள்ள குளுகோசை சக்தியாக மாற்ற உதவுகிறது.

இன்சுலின் மாத்திரைகளாக கிடைப்பதில்லை. காரணம் இன்சுலின் குருதியில் இருந்து கொண்டு தான் குளுகோசை சக்தியாக மாற்ற அல்லது மேலதிகமாக இருப்பதை சேமிக்க உதவுகிறது.அதனால் மாத்திரைகளாக எடுக்கும் இன்சுலின் வயிற்றில் சென்று செமிபாடு அடைந்து குருதிக்கு செல்லும் போது அதன் சக்தி முற்றாக குறைந்து விடுகிறது. அத்துடன் குருதியில் சேர அதிக நேரமும் எடுக்கும். வயிற்றில் உள்ள அமிலம் இன்சுலினை உடைத்து சக்தி இழக்கச் செய்து விடும்.இதனால்தான் இன்சுலினை மாத்திரைகளாக தயாரிக்க முடியாத நிலை உள்ளது.

தற்போது பாவிக்கப்படும் மாத்திரைகள் ஆரம்ப நிலையில் உள்ளவர்களுக்கு மட்டுமே.இந்த மாத்திரைகள் இன்சுலினை தூண்ட அல்லது சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த மட்டுமே உதவுகிறது.



படங்கள்-இணையம்.
avatar
மூர்த்தி
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 665
மதிப்பீடுகள் : 390

View user profile

Back to top Go down

Re: சர்க்கரையை வெல்லலாம்

Post by T.N.Balasubramanian on Mon Jun 19, 2017 5:37 pm

நல்ல தகவல்கள்.

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20584
மதிப்பீடுகள் : 7946

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum