ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
நரை கூறிய அறிவுரை
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 ஜாஹீதாபானு

தமிழ் நேசன் !?
 valav

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

நான் தேனி.
 ஜாஹீதாபானு

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 amutha jothi

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ராஜா

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 SK

நாவல் தேவை
 PKishanthini

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
 SK

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 SK

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு
 SK

Winmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்
 ayyasamy ram

RRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்
 thiru907

#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா?
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

வித்யா பாலன், திரிஷா, அதிதி ராவ்.. இவங்களுக்கு டப்பிங் பேசிய கிருத்திகா யார் தெரியுமா?

View previous topic View next topic Go down

வித்யா பாலன், திரிஷா, அதிதி ராவ்.. இவங்களுக்கு டப்பிங் பேசிய கிருத்திகா யார் தெரியுமா?

Post by ayyasamy ram on Tue Apr 18, 2017 3:09 pm



-


கிருத்திகா நெல்சன். தமிழ் சினிமாவின் புதிய வாரிசு.
இன்னார் மகள், இன்னார் மனைவி என்ற அடையாளங்கள்
தாண்டி.. தனக்கென ஓர் அடையாளம் பெற்றிருக்கிறார்

இப்போது. டப்பிங் ஆர்ட்டிஸ்ட். அவர் யார் என்பதைப்
பின்னால் பார்ப்போம். டப்பிங் ஆர்ட்டிஸ்டாக அவர்
மாறியது எப்படி மற்றும் அவரது டப்பிங் அனுபவங்களை
அவர் சொல்லக் கேட்போம்;

''எலெக்ட்ரானிக் மீடியா படிச்சேன். அப்புறம் ரேடியோ,
டி.வி.னு சில வருடங்கள் வேலை. இப்போ பெங்களூர்ல
முன்னணி மீடியா ஏஜென்சியில கன்டென்ட் ஹெட்டா
இருக்கேன். ‘கோ’ படத்துல பியாவுக்கு டப்பிங் பேச
எந்த வாய்ஸும் செட் ஆகலை.

‘நான் பேசட்டுமா’னு விளையாட்டா கேட்டேன்.
'ட்ரை பண்ணிப் பார்'னு சொன்னாங்க. என் வாய்ஸ்
பியாவுக்கு ஓகே ஆயிடுச்சு. அடுத்தடுத்து 'உருமி'
(வித்யா பாலன்), 'ஆதிபகவன்' (நீது சந்திரா), 'கடல்' (துளசி),
'ஒருநாள் கூத்து' (மியா ஜார்ஜ்), 'என்னை அறிந்தால்',
'அரண்மனை 2', 'நாயகி' (த்ரிஷா), தொடர்ந்து 'காற்று
வெளியிடை' வரைக்கும் வந்திருக்கு...'' என்றவர்,
தொடர்கிறார்.
-
----------------------------------
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37338
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: வித்யா பாலன், திரிஷா, அதிதி ராவ்.. இவங்களுக்கு டப்பிங் பேசிய கிருத்திகா யார் தெரியுமா?

Post by ayyasamy ram on Tue Apr 18, 2017 3:09 pm


-
கிருத்திகா நெல்சன்
--
''மணி சார் கூட வொர்க் பண்ணணும்ங்கிறது எல்லாரோட
கனவா இருக்கும். எப்போதும் ஒரு ஸ்மைலோட சிம்பிளா
இருப்பார். நல்லா பண்ணிட்டோம்னா மனசார பாராட்டுவார்.

'கடல்' படத்துல ஒரு சீன்ல நான் குரல்ல சரியா
எமோஷன்ஸ் காட்டலை. டேக் மேல டேக் போயிட்டிருந்தது.
மணி சார் எதிர்பார்த்த எமோஷன்ஸ் வரலை. அவர் டப்பிங்
ரூமுக்குள்ள வந்து, 'ஏன் என்னாச்சு... என்னவோ
தயக்கத்தோட இருக்கியே... நீ குரலால நடிக்கணும்.
கை கால்களை ஆட்டணும். குதிக்கணும்... அதுல சத்தம்
வருமேனு எல்லாம் கவலைப்படாதே. அது சவுண்ட்
இன்ஜினியர் பிரச்னை. எதிர்பார்த்த எமோஷன்ஸ் வர்றதுக்கு
என்னவெல்லாம் முடியுமோ அத்தனையும் நீ பண்ணு'னு
சொன்னார்.

அந்தக் கணம் எனக்குள்ள எல்லாமே மாறினது.
டப்பிங் என்பது வெறுமனே குரல் கொடுக்கிறது மட்டுமில்லை.
நானும் நடிக்கணும்னு உணர வெச்சார் மணி சார். அன்னைக்கு
அவர் பக்கத்துல உட்கார்ந்து டீ குடிச்சேன். அந்த நிமிஷத்தை
என்னால மறக்கவே முடியாது.

அது ஒருமாதிரியான சிலிர்ப்பு. அந்த சிலிர்ப்பே இன்னும்
அடங்கலை. அதுக்குள்ள மணி சாரோட அடுத்த படத்துக்கு
அழைப்பு. அதுதான், 'காற்று வெளியிடை' வாய்ப்பு.'' என்றவர்,
அந்த அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்.
-
-----------------------------------
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37338
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: வித்யா பாலன், திரிஷா, அதிதி ராவ்.. இவங்களுக்கு டப்பிங் பேசிய கிருத்திகா யார் தெரியுமா?

Post by ayyasamy ram on Tue Apr 18, 2017 3:10 pm


-

'' 'காற்று வெளியிடை' படத்துல ஹீரோயின் அதிதி ராவுக்கு
டப்பிங் பேசினேன். 'நாங்க சில குரல்களை ட்ரை
பண்ணினோம். எதுவுமே திருப்தியா இல்லை... நீங்க வந்து
பேசுங்க'னு சொன்னாங்க.

வந்தேன். பேசினேன். மணி சார் உடனே ஓகே பண்ணிட்டார்.
என்னால அவங்க கூப்பிட்டபோதெல்லாம் வந்து பேச முடியாம
இருந்திருக்கு. ஆனாலும் எனக்காக அட்ஜஸ்ட் பண்ணினாங்க.
படத்துல 'நான் ஏன் திரும்பத் திரும்ப உன்கிட்ட வரேன்'னு
அதிதி, கார்த்திகிட்ட கேட்கற மாதிரி ஒரு சீன் வரும்.
பார்க்கிறவங்களுக்குத்தான் அது வெறும் சீன். டப்பிங்
பேசினபோது அந்தக் காட்சியில அவங்க ரெண்டுபேருக்கும்
இடையிலான அந்தக் காதல்ல இருந்த வலியை நான்
உணர்ந்தேன். எனக்கு அது ரொம்பவே ஸ்பெஷலான சீனும்கூட.

ரொம்ப முக்கியமான காட்சிகளுக்கு மட்டும் மணி சார்
டப்பிங்கின் போது இருப்பார். இந்த சீன்லயும் இருந்தார்.
அழுகையில ஆரம்பிச்சு, கோபத்துக்குள்ள போய்,
ஹெல்ப்லெஸ்னெஸ்ல முடிஞ்சு, விரக்திக்குப் போற மாதிரி
ஏகப்பட்ட உணர்ச்சிகளை உள்ளடக்கின சீன் அது.

அத்தனை எமோஷன்ஸையும் காட்டிப் பேச வேண்டியிருந்தது.
அந்த சீன் பேசி முடிச்சபோது எனக்கு கண்ணீர் வந்திருச்சு.
அந்த சீன்ல நான் நல்லா பேசியிருக்கேன்னு மணி சார்
பாராட்டினதும் மறக்க முடியாதது.

கிருத்திகாநான் சாதாரணமா பேசுற குரலுக்கும் டப்பிங்
பேசுற குரலுக்கும் நிறைய வித்தியாசம் இருக்குனு என்
ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் சொல்வாங்க. குறிப்பிட்ட ஒரு
கேரக்டருக்கு டப்பிங் பேசும்போது அவங்களோட
பாடிலாங்குவேஜூக்கு நம்மளை அறியாமலே போயிடுவோம்.
அதிதியோட வாய்ஸ் ரொம்ப ஸ்வீட்டா இருக்கும்.

பிரமாதமான பாடகி. அவங்களோட குரலோட மேட்ச் பண்ற
சேலஞ்ச் எனக்கு இருந்தது. ரெண்டு, மூணு சீன்ல அவங்க
பாடியிருப்பாங்க. அங்கெங்ல்லாம் நானும் பாடவேண்டியிருந்தது.
பேசறது வேற... பாடறது வேற... எனக்கு சாங்ஸுக்கான
டிராக்கையும் முதல் நாளே அனுப்பிட்டாங்க. நான்
அதுவரைக்கும் பாட்டுக்கு டப்பிங் பண்ணினதில்லை.

எனக்கும் சங்கீதம் தெரியும்ங்கிற அடிப்படையில அதிதியைத்
திருப்திப்படுத்துற அளவுக்குப் பாடியிருக்கேன்னு நினைக்கிறேன்.''
அதிதி மாதிரியே அழகாகப் பேசுகிறவருக்கு, படத்தின் பல
காட்சிகள் உலகம் மறக்கச் செய்தனவாம்.

''என் வேலை டப்பிங் பேசறது. ஆனா மணிசார் படத்துல
கேமரா அழகு பத்திச் சொல்லவே வேண்டாம். ஒவ்வொரு
சீனும் அவ்வளவு அழகா இருக்கும். ஒரு சீன்ல முழுக்க
வெண்பனி மூடியிருக்கிற மாதிரியான ஒரு ஏரியா. கிட்டத்
தட்ட 'ரோஜா' படத்தை ஞாபகப்படுத்தும்.

அதுல நிறைய டேக் வாங்கினேன். அந்தக் காட்சியோட
அழகைப் பார்த்துட்டு, என்னையே மறந்துட்டேன்.
டப்பிங் பேசறதையும் மறந்துட்டு அந்த இடத்தோட அழகுல
மூழ்கிட்டேன். அதுலேருந்து வெளியில வந்து
சுதாரிச்சுக்கிட்டுப் பேசறதுக்குள்ளே போதும் போதும்னு
ஆயிடுச்சு...'' எனச் சிரிக்கிறார் கிருத்திகா.
-
-------------------------------
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37338
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: வித்யா பாலன், திரிஷா, அதிதி ராவ்.. இவங்களுக்கு டப்பிங் பேசிய கிருத்திகா யார் தெரியுமா?

Post by ayyasamy ram on Tue Apr 18, 2017 3:11 pm


''காற்று வெளியிடை' படம் பண்ணாமப் போயிருந்தேன்னா
ரொம்ப வருத்தப்பட்டிருப்பேன். என் டப்பிங் கேரியர்லயே
இது ரொம்ப ஸ்பெஷல் படம். மணிரத்னம் சார் மாதிரியான
ஒருத்தர் ஒரு டப்பிங் ஆர்ட்டிஸ்ட் பெங்களூர்லேருந்து வந்து
வாரா வாரம் பேசிட்டுப் போகறதுக்காக வெயிட்
பண்ணணும்னு எந்த அவசியமும் இல்லை.

அதையும் தாண்டி அவருக்கு என் திறமையில ஒரு
நம்பிக்கை இருந்ததா நம்பறேன். அதே நேரம் தொடர்ந்து
இதையே என் முழுநேர வேலையா எடுத்துக்கிற ஐடியா
இப்போதைக்கு இல்லை.

எனக்கு மீடியாவுல பெரிய கனவுகள் இருக்கு.
ஆனா அதுக்கான சரியான வாய்ப்புகள் சென்னையில
கிடைக்கலை. பெங்களூர்ல இப்போ நான் பார்த்துக்கிட்டு
இருக்கிற வேலை ரொம்பப் பிடிச்சிருக்கு. எனக்கு எப்போதும்
நாலஞ்சு விஷயங்கள் பண்ணிட்டிருக்கணும்.

பாடப் பிடிக்கும். டப்பிங் பேசுறேன். எழுதுறேன்.
'யுகேலேலே'னு ஒரு இசைக்கருவி வாசிக்கக்
கத்துக்கிட்டிருக்கேன்.'' ஸ்மைலியுடன் சைன் ஆஃப்
செய்கிறார்.

சரி.. கிருத்திகா நெல்சன் யார்? இரட்டை எழுத்தாளர்கள்
சுபா இணையில், சுரேஷின் மகள். 'ஒருநாள் கூத்து'
இயக்குநர் நெல்சனின் காதல் மனைவி.
-
--------------------------
ஆர்.வைதேகி
நன்றி-விகடன்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37338
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: வித்யா பாலன், திரிஷா, அதிதி ராவ்.. இவங்களுக்கு டப்பிங் பேசிய கிருத்திகா யார் தெரியுமா?

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum