உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்கத் தயார்: நடிகர் ரஜினிகாந்த்
by சிவனாசான் Today at 2:30 am

» தமிழ் இனத்திற்கே பெரும் அவமானம்: பொன்பரப்பி சம்பவம் தொடர்பாக கமல் ஆவேசம்
by சிவனாசான் Today at 2:27 am

» மதுரை:ஓட்டு எண்ணிக்கை மையத்தில் நுழைந்த அதிகாரி யார்?
by ayyasamy ram Today at 12:37 am

» புத்தகப்பிரியன்
by புத்தகப்பிாியன் Yesterday at 10:37 pm

» செய்திகள்
by சிவனாசான் Yesterday at 8:42 pm

» வெஜ் பேலியோ பா.ராகவன்
by aeroboy2000 Yesterday at 6:34 pm

» பல ஆண்டுக் கனவான கருந்துளை (black hole ) படமாக்கப்பட்டது.
by சக்தி18 Yesterday at 6:09 pm

» மனைவியை அடிப்பது எப்படி?
by சக்தி18 Yesterday at 6:01 pm

» கேட்டு ரசித்த பாடல்கள் - காணொளி - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» வண்ணப்பறவைகள் போல் விளையாடு
by ayyasamy ram Yesterday at 3:06 pm

» கண்கவர் அந்தமான் போட்டோக்கள் ! by Krishnaamma !
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» கடி ஜோக்ஸ்
by ayyasamy ram Yesterday at 2:54 pm

» தொழில் நுட்பம் புது வரவு
by சக்தி18 Yesterday at 2:50 pm

» பூரிராம் கெமர் திருவிழா, தாய்லாந்து!
by சக்தி18 Yesterday at 2:34 pm

» படமும் செய்தியும் - தொடர் பதிவு
by சக்தி18 Yesterday at 2:30 pm

» இந்தியாநீதித்துறை கடும் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளது : பாலியல் புகார் குறித்து தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் விளக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» பூந்தி லட்டு
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» உடம்புல ஒரு கரும்புள்ளி. அது என்ன?
by ayyasamy ram Yesterday at 12:54 pm

» தாய்லாந்தில் கடலுக்குள் வீடு கட்டிய காதல் ஜோடி - மரண தண்டனைக்கு வாய்ப்பு
by ayyasamy ram Yesterday at 12:45 pm

» நிதிஷ் ரானா, ரசல் அதிரடி வீண் - கொல்கத்தாவை 10 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது பெங்களூர்
by ayyasamy ram Yesterday at 12:43 pm

» இந்தாண்டு 14 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» நாளை நிழல் இல்லா நாள்: புதுச்சேரியில் கண்டு ரசிக்க ஏற்பாடு
by ayyasamy ram Yesterday at 12:17 pm

» சிவகார்த்திகேயன் படம்: வெளியீட்டுத் தேதியில் மாற்றம்!
by ayyasamy ram Yesterday at 12:14 pm

» நுங்கம்பாக்கம் தொழிற்சாலையில் தீ விபத்து
by ayyasamy ram Yesterday at 12:11 pm

» அமமுக பொதுச் செயலாளரானார் டிடிவி தினகரன்: கட்சியாக பதிவு செய்ய நடவடிக்கை
by ayyasamy ram Yesterday at 12:05 pm

» இடைத்தேர்தல்: 4 தொகுதிகளுக்கான திமுக பொறுப்பாளர்கள் நியமனம்
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நாடு முழுவதும் ஒரே அவசர உதவி எண் 112 : 20 மாநிலங்களில் அமல்
by ayyasamy ram Yesterday at 11:34 am

» புத்தகப்பிரியன்
by புத்தகப்பிாியன் Yesterday at 6:13 am

» புத்தகப்பிரியன்
by புத்தகப்பிாியன் Yesterday at 6:10 am

» புத்தகப்பிரியன்
by புத்தகப்பிாியன் Yesterday at 6:06 am

» பாஜகவுக்கு வாக்களித்ததால் விரலையே வெட்டிக்கொண்ட தலித் இளைஞர்
by கோபால்ஜி Fri Apr 19, 2019 4:33 pm

» புன்னகைத்துப் பாருங்கள்...!!
by ayyasamy ram Fri Apr 19, 2019 3:51 pm

» நாட்டு நடப்பு -படமும் செய்தியும்
by ayyasamy ram Fri Apr 19, 2019 3:48 pm

» வாழ்க்கையை வாழும்போதே ரசித்து வாழுங்கள்...!!
by ayyasamy ram Fri Apr 19, 2019 3:43 pm

» கவிதை தூறல்...
by ayyasamy ram Fri Apr 19, 2019 2:52 pm

» குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க….(டிப்ஸ்)
by ayyasamy ram Fri Apr 19, 2019 2:44 pm

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Apr 19, 2019 2:32 pm

» அக்காவும், அப்பாவும், காங்., மகனும், மருமகளும், பா.ஜ.
by ayyasamy ram Fri Apr 19, 2019 1:40 pm

» நாங்கள் என்ன நாற்றமடிக்கிறோமா? - பாஜக வேட்பாளர் ஹேமமாலினியைச் சாடிய விவசாயி
by ayyasamy ram Fri Apr 19, 2019 12:51 pm

» பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு
by ayyasamy ram Fri Apr 19, 2019 12:48 pm

» சசி இயக்கும் சிவப்பு மஞ்சள் பச்சை: ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!
by ayyasamy ram Fri Apr 19, 2019 12:13 pm

» தேர்தல் முடிந்த பிறகு வெளியாகும் 3 தமிழ்ப் படங்கள்!
by ayyasamy ram Fri Apr 19, 2019 12:11 pm

» திருக்கழுக்குன்றம்:-ஒளிமயமான எதிர்காலம்.-ஜிதமிழ் தொலைக்காட்சியில்.
by velang Fri Apr 19, 2019 8:16 am

» பஞ்சராக்ஷரம் - திரைப்படம்
by krishnaamma Fri Apr 19, 2019 12:44 am

» காய்கறி ஓவியங்கள் !
by krishnaamma Thu Apr 18, 2019 9:45 pm

» சித்திரை திருவிழாவின் உச்சமாக இன்று ஸ்ரீ மதுரை மீனாட்சி - சுந்தரரேஸ்வர் திருக்கல்யாணம்
by krishnaamma Thu Apr 18, 2019 9:31 pm

» திரை விமர்சனம் - Shazam!
by krishnaamma Thu Apr 18, 2019 9:21 pm

» தமிழ் மின் புத்தகங்கள்
by krishnaamma Thu Apr 18, 2019 9:17 pm

» அனைவருக்கும் ஒரு அன்பான வேண்டுகோள்.....
by krishnaamma Thu Apr 18, 2019 9:13 pm

» ஒரே நாளில் இரு இளம் நடிகைகள் கார் விபத்தில் மரணம்... டோலிவுட் அதிர்ச்சி!
by krishnaamma Thu Apr 18, 2019 9:13 pm

Admins Online

ஹேவிளம்பி ஆண்டு பலன்கள் !

 ஹேவிளம்பி ஆண்டு பலன்கள் ! Empty ஹேவிளம்பி ஆண்டு பலன்கள் !

Post by krishnaamma on Sun Apr 16, 2017 4:43 pm

மேஷம்

தழைத்துக் குலுங்கும் மரங்களுக்கு ஆதாரமாக விளங்கும் ஆணி வேரைப் போல் ஆர்ப்பாட்டம் இல்லாமல் அமைதி காப்பவர்களே! யார் மனதும் நோகாமல் பேசும் நீங்கள், சில நேரங்களில் உணர்ச்சி வசப்பட்டு கோடை மழையாக கொட்டுவீர்கள். மந்திரி முதல் அடிமட்டத் தொண்டன் வரை அனைவரின் திரைமறைவு வேலைகளையும் சுட்டிக் காட்டிப் பேசுவதால் உங்களை சிலர் அரை கிறுக்கன் என்பார்கள்! உங்கள் ராசிக்கு தனாதிபதியாகிய சுக்கிரன் 12வது வீட்டிலே உச்சம் பெற்று அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்த ஹேவிளம்பி ஆண்டு பிறப்பதால் வீடு, மனை வாங்கக்கூடிய யோகம் உண்டாகும். ஏற்கனவே வாங்கி வைத்திருக்கக்கூடிய வீட்டுமனையிலே வீடு கட்டத் தொடங்குவீர்கள்.

வங்கிக் கடன் உதவியும் கிடைக்கும். உங்களுடைய ராசியை சந்திரன் பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் இந்த புத்தாண்டு பிறப்பதால் அழகு, இளமை அதிகமாகும். உங்களின் பாக்யாதிபதியாகிய குருபகவான் 1.9.2017 வரை 6வது வீட்டிலே மறைந்து காணப்படுவதனால் அதுவரை செலவுகளும், அலைச்சல்களும், கடன் பிரச்னைகளும் இருந்து கொண்டே இருக்கும் 2.9.2017 முதல் 13.2.2018 வரை குரு பகவான் உங்கள் ராசிக்கு ஏழாவது வீட்டிலே அமர்ந்து உங்கள் ராசியை நேருக்குநேர் பார்க்க இருப்பதனால் பிரிந்திருந்த கணவன்மனைவி ஒன்று சேருவீர்கள்.

மன இறுக்கங்களெல்லாம் விலகும். மகளுக்கு தள்ளிப்போன திருமணம் வெகுவிமர்சையாக நடைபெறும். அரைகுறையாக இருந்த வீட்டை கட்டி முடித்து புது வீட்டிலே மகிழ்ச்சியாக குடிபுகுவீர்கள். வேலையும் கிடைக்கும். குழந்தை பாக்யமும் உண்டாகும். பழைய கடனை பைசல் செய்ய வழி வகைகளும் வந்து சேரும். ஆனால், 14.2.2018 முதல் 13.4.2018 வரை குருபகவான் அதிசாரத்திலும், வக்ரகதியிலும் உங்கள் ராசிக்கு எட்டாவது வீட்டிலே சென்று அமர்வதால் அந்த காலக்கட்டத்தில் பணம் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

மற்றவர்களுக்காக ஜாமீன், கேரண்டர் கையெழுத்து போட வேண்டாம். அரசுக்கு செலுத்த வேண்டிய வருமான வரியை தாமதிக்காமல் செலுத்துவது நல்லது. உங்களுடைய ராசிக்கு லாபஸ்தானத்திலே 26.7.2017 வரை கேது அமர்ந்திருப்பதால் பிரபலங்களை பயன்படுத்தி முன்னேறுவீர்கள். மகான்களின் ஆசிர்வாதமும் உங்களுக்கு வந்து சேரும். பணவரவு உண்டு. செல்வாக்கு அதிகரிக்கும், உறவினர்கள், நண்பர்களுக்குள்ளே இருந்து வந்த மனத்தாங்கல் களெல்லாமே விலகும். 26.7.2017 வரை ராகு 5வது வீட்டிலேயே அமர்ந்திருப்பதனால் பிள்ளைகளால் கொஞ்சம் அலைச்சலும், ஏமாற்றங்களும் இருந்து கொண்டேயிருக்கும். பூர்வீகச் சொத்து பிரச்னையில் சிக்கிக் கொள்ளாதீர்கள். கொஞ்சம் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. 27.7.2017 முதல் வருடம் முடியும் வரை ராகு உங்கள் ராசிக்கு 4வது வீட்டிலே அமர்வதால் அதுமுதல் தாயாரின் உடல் நிலை பாதிக்கும்.

தாய்வழி உறவினர்களால் அலைச்சல்களும், தர்ம சங்கடங்களும் வந்துபோகும். சிறு சிறு வாகன விபத்துகளும், பராமரிப்புச் செலவுகளும் வரும். 27.7.2017 முதல் வருடம் முடியும் வரை கேது 10வது வீட்டிலே வந்து அமர்வதால் உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகமாகிக் கொண்டே போகும். அதிகாரிகள் மற்றும் சகஊழியர்களுடன் ஈகோ பிரச்னைகளை சந்திக்க நேரிடும். உத்யோகத்திலே விரும்பத்தகாத இடமாற்றமெல்லாம் இருக்கும். சனிபகவான் 18.12.2017 வரை உங்களுடைய ராசிக்கு எட்டாவது வீட்டிலே அமர்ந்து அஷ்டமத்துச் சனியாக தொடர்வதனால் அதுவரை மனநிம்மதியற்ற போக்கும், பழைய கசப்பான சம்பவங்களை நினைத்தும் வருந்துவீர்கள். வீண் செலவுகளும் வரக்கூடும்.

திடீரென்று அறிமுகமாகும் நபர்களை வீட்டிற்கு அழைத்து வர வேண்டாம். மற்றவர்களை நம்பி பெரிய முதலீடுகளும் செய்ய வேண்டாம். பணம் கொடுக்கல், வாங்கல் விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது. ஆனால் 19.12.2017 முதல் வருடம் முடியும் வரை சனிபகவான் 9வது வீட்டிலே வந்து அமர்வதால் அதுமுதல் காரியத்தடைகளெல்லாம் விலகும். இழந்த தொகையை மீண்டும் பெறுவீர்கள். வழக்குகள் சாதகமாகும். 14.4.2017 முதல் 26.5.2017 வரை சனியும், செவ்வாயும் நேருக்கு நேர் பார்வையிடுவதாலும், 12.7.2017முதல் 30.8.2017 வரை உங்களுடைய ராசிநாதன் செவ்வாய் நீச்சமாகி இருப்பதனாலும் 20.1.2018 முதல் 10.3.2018 வரை செவ்வாய் எட்டில் மறைவதாலும் 11.3.2018 முதல் 13.4.2018 வரை சனியும், செவ்வாயும் ஒன்று சேர்வதனாலும், இந்த காலகட்டத்தில் வீடு, மனை வாங்குவது, விற்பதிலே எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

வீடு, மனை வாங்குவதாக இருந்தால் தாய்ப்பத்திரத்தை சரிபார்த்து விட்டு பிறகு சொத்து வாங்குங்கள். சகோதரங்களுடன் கருத்து மோதல்கள் வரும். 10.10.2017 முதல் 5.11.2017 வரை உள்ள காலகட்டத்தில் சுக்கிரன் 6வது வீட்டிலே சென்று மறைவதனால் கணவன்-மனைவிக்குள் கருத்து மோதல், வாகன விபத்து, தங்க ஆபரணங்கள் தொலைந்து போகுதல் போன்ற நிகழ்வுகள் நிகழக்கூடும். கவனமாக இருப்பது நல்லது. 17.11.2017 முதல் 15.12.2017 வரை சூரியனும், சனியும் எட்டாவது வீட்டில் அமர்வதால் இந்த காலகட்டத்தில் கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி மருந்து எடுத்துக் கொள்ள வேண்டாம். பிள்ளைகளின் திருமண விஷயத்தில் அவசர முடிவுகளை தவிர்ப்பது நல்லது. பூர்வீகச் சொத்து மற்றும் பாகப்பிரிவினை விஷயமாக இந்த காலகட்டத்தில் வழக்கு எதுவும் பதிவு செய்ய வேண்டாம். சுமுகமாக பேசி முடிவெடுப்பது மிகவும் நல்லது.

வியாபாரிகளே! 2.9.2017 முதல் குருபகவான் 7வது வீட்டில் நுழைவதனால் அந்த காலக்கட்டத்திலிருந்து புதிதாக முதலீடு செய்வீர்கள். பங்குதாரர்களுடன் இருந்து வந்த கருத்து மோதல்களெல்லாம் விலகும். அனுபவமிக்க வேலையாட்களை பணியிலே அமர்த்துவீர்கள். பங்குதாரர்களையும் மாற்றுவீர்கள். நியாயமான வாடகை அதே நேரத்தில் பெரிய இடமாக பார்த்து கடையை மாற்றுவீர்கள்.

உத்யோகஸ்தர்களே! உத்யோகத்தில் ஆகஸ்ட் மாதம் வரை வேலைச்சுமை இருக்கும். செப்டம்பர் மாதம் முதல் குருபகவான் ராசியை பார்க்கயிருப்பதால் செல்வாக்கு அதிகரிக்கும். வெகுநாட்களாக தள்ளிப்போன பதவி உயர்வு, சம்பள உயர்வையெல்லாம் செப்டம்பர் மாதத்திலே நீங்கள் எதிர்ப்பார்க்கலாம். கூடுதல் சலுகைகளெல்லாம் கிடைக்கும். வெளிநாட்டு நிறுவனத்திலும் வேலைக்கு முயற்சிக்கலாம்.

கன்னிப்பெண்களே! காதல் விவகாரத்தில் சிக்கிக் கொள்ளாதீர்கள். 18.12.2017 வரை அஷ்டமத்துச் சனியிருப்பதால் அன்பாக பேசுபவர்களெல்லாம் நல்லவர்கள் என்று ஏமாறாதீர்கள். உங்களுடைய பாரம்பரியத்தையும், பண்பாட்டையும் விட்டுக்கொடுக்க வேண்டாம். திருமண விஷயத்தில் பெற்றோரை மீறி எதையும் செய்ய வேண்டாம். ஜனவரி மாதத்திலிருந்து உங்களுக்கு வேலைகிடைக்கும், உயர்கல்வியிலும் அதிக மதிப்பெண்கள் பெறுவீர்கள். திருமணமும் கூடிவரும்.

மாணவ, மாணவியர்களே! ஆகஸ்ட் மாதம் வரை விளையாட்டின்போது சிறுசிறு காயங்கள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. முன்கோபம் வேண்டாம். வகுப்பறையில் அரட்டைப் பேச்சை தவிர்க்கப் பாருங்கள். செப்டம்பர் மாதம் முதல் மதிப்பெண்கள் அதிகமாகும். நினைவாற்றல் அதிகரிக்கும். நல்லவர்கள் நண்பர்களாவார்கள். எதிர்பார்த்த கல்வி பிரிவில் சேருவீர்கள்.

கலைத்துறையினரே! அரைகுறையாக நின்ற வேலைகளெல்லாம் செப்டம்பர் மாதத்திலிருந்து விரைந்து முடியும். புதுப்பட வாய்ப்புகளும் வரும். தெலுங்கு, மலையாளம் மொழிப் படங்கள் மூலமாகவும் புகழடைவீர்கள். வருமானமும் கிடைக்கும். கடன் பிரச்னையிலிருந்து மீள்வீர்கள்.

அரசியல்வாதிகளே! ஆகஸ்ட் மாதம் வரை கோஷ்டி பூசல்கள் இருந்து கொண்டிருக்கும். செப்டம்பர் மாதம் முதல் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். எதிர்ப்பார்த்த பதவியும் கிடைக்கும்.

விவசாயிகளே! 18.12.2017 வரை அஷ்டமத்துச் சனி நீடிப்பதனால் அதுவரை பூச்சி, எலி தொந்தரவு இருக்கும். பக்கத்து நிலத்துக்காரரை பகைத்துக் கொள்ள வேண்டாம். 19.12.2017 முதல் தொந்தரவுகளெல்லாம் குறையும். அடகிலிருந்த நகைகளையும் மீட்பீர்கள். இந்த ஹேவிளம்பி வருடம் முற்பகுதி அலைச்சலையும், செலவுகளையும் தந்தாலும், மையப்பகுதி மனநிறைவையும், பணவரவையும் தருவதாகவும், இறுதிப் பகுதி சுபச்செலவுகளாக அமையும்.

பரிகாரம்:

மதுரைக்கு அருகேயுள்ள திருமோகூர் சக்கரத்தாழ்வாரை தரிசித்து வாருங்கள். ஏழைகளின் மருத்துவச் செலவுகளை ஏற்றுக் கொள்ளுங்கள்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58539
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 11886

View user profile

Back to top Go down

 ஹேவிளம்பி ஆண்டு பலன்கள் ! Empty Re: ஹேவிளம்பி ஆண்டு பலன்கள் !

Post by krishnaamma on Sun Apr 16, 2017 4:43 pm

ரிஷபம்

மந்திரியே எதிர்த்தாலும் முன்வைத்த காலை பின் வைக்க மாட்டீர்கள். கலா ரசனை அதிகமுள்ள நீங்கள், சுற்றுப் புறத்தை மட்டுமில்லாமல் மனசையும் சுத்தமாக வைத்திருப்பீர்கள். காசுபணம்தான் குறிக்கோள் என்றில்லாமல் வாழ்க்கையை காதலிப்பீர்கள். அதிகம் ஆசைப்படாமல் அடுத்தவர் சொத்து மீதும் கண் வைக்காமல், உதிக்கும்போது விதிக்கப்பட்டதை உணர்ந்து வாழ்பவர்களே! உங்கள் ராசிக்கு 6வது ராசியில் இந்த புத்தாண்டு பிறப்பதால் திடீர் பயணங்கள் இருந்துக் கொண்டேயிருக்கும். உங்கள் ராசிநாதன் சுக்கிரன் உச்சமாகியிருக்கும் நேரத்தில் இந்த ஆண்டு பிறப்பதால் உங்களிடம் மறைந்திருந்த திறமைகளெல்லாம் வெளிப்படும். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலைகள் உருவாகும்.

எதிர்பார்த்த தொகை உங்கள் கைக்கு வரும். இழுபறியாக இருந்து வந்த வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். உங்களை விட்டு விலகியிருந்த உறவினர்களெல்லாம் வளிய வந்து பேசுவார்கள். அரைகுறையாக நின்ற வீடு கட்டும் பணியை விரைந்து முடிப்பீர்கள். பழுதான பழைய வாகனத்தை மாற்றி புதிய வாகனம் வாங்குவீர்கள். செல்போன், டிவி போன்ற எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் புதிதாக வாங்குவீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். 1.9.2017 வரை குரு உங்கள் ராசிக்கு 5வது வீட்டிலே தொடர்வதால் பூர்வீகச் சொத்து பிரச்னை தீரும். பிள்ளைகளுடைய உயர்கல்வி, உத்யோகம், திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் யாவும் வெற்றியடையும். குழந்தை பாக்யமும் உண்டாகும். ஆனால், 2.9.2017 முதல் 13.2.2018 வரை குருபகவான் உங்கள் ராசிக்கு 6வது வீட்டிலே சென்று மறைவதால் செலவுகள் துரத்தும். குடும்பத்தில் எதைப் பேசினாலும் சண்டையில் போய் முடியும். பணக் கையிருப்புகள் கரையும்.

அக்கம் பக்கத்தில் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை வரும். சொத்துப் பிரச்னைக்காக நீதிமன்றம் செல்ல வேண்டியது வரும். எதிலும் அகலக்கால் வைக்க வேண்டாம். விரலுக்கேற்ற வீக்கம் இருந்தால் போதும். அரசு விவகாரங்களில் கவனம் தேவை. ஆனால், 14.2.2018 முதல் 13.4.2018 வரை குருபகவான் அதிசாரத்திலும், வக்ரகதியிலும் உங்கள் ராசிக்கு 7ம் வீட்டில் சென்று அமர்ந்து உங்கள் ராசியை பார்க்க விருப்பதால் அந்தக்கால கட்டத்தில் பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்று சேருவீர்கள். மறைவாக இருந்த நீங்கள், பல விசேஷங்களில் முன்வரிசையில் காணப்படுவீர்கள். பணத்தட்டுபாடு குறையும். அரசு பதவி கிடைக்கும். வீடு வாங்குவீர்கள். பிரபலங்களுக்கு நெருக்கமாவீர்கள். வழக்குகளில் வெற்றியுண்டு.

அரைகுறையாக நின்றுபோன கட்டிட வேலைகளையும் முடிப்பீர்கள். பூர்வீகச் சொத்துப் பிரச்னை தீரும். புது வாகனமும் வாங்குவீர்கள். 18.12.2017 வரை சனி 7வது வீட்டிலே நிற்பதால் மனைவிக்கு அடிக்கடி சின்னச் சின்ன உடல் நலக்குறை ஏற்படும். கர்ப்பப்பை, தைராய்டு சம்மந்தப்பட்ட தொந்தரவுகள் வர வாய்ப்பிருக்கிறது எனவே, மனைவியின் ஆரோக்யத்தில் அக்கறை காட்டுவது நல்லது. 19.12.2017 முதல் அஷ்டமத்துச்சனி தொடங்குவதால் பணம் கொடுக்கல், வாங்கல் விஷயத்தில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். மற்றவர்களுக்கு ஜாமீன், கேரண்டர் கையெழுத்து இட வேண்டாம். வழக்குகளில் வழக்கறிஞரை அவ்வப்போது சென்று சந்தித்து வழக்கின் போக்கைத் தெரிந்து கொள்வது மிகவும் நல்லது. 26.7.2017 வரை உங்கள் ராசிக்கு 4வது வீட்டில் ராகு அமர்ந்திருப்பதால் தாயாருடைய ஆரோக்யம் பாதிக்கும்.

தாய்வழிச் சொத்துக்களை அடைய தடைகள் வரும். வீடு, வாகன பராமரிப்புச் செலவுகளும் அதிகமாகும். ஆனால், 27.7.2017 முதல் ராகு உங்கள் ராசிக்கு மூன்றாவது வீட்டில் நுழைவதனால் குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்கள் குறையும். வீண் செலவுகளும் குறையும். தைரியமாக சில முக்கிய முடிவுகளெல்லாம் எடுப்பீர்கள். கேது 26.7.2017 வரை உங்கள் ராசிக்கு பத்தாவது வீட்டில் தொடர்வதால் எந்த ஒரு வேலையும் இழுபறியாகி முடியும். உத்யோகத்தில் அதிகாரிகளை பகைத்துக் கொள்ள வேண்டாம். இடமாற்றம் வரும். 27.7.2017 முதல் கேது உங்கள் ராசிக்கு 9வது வீட்டில் நுழைவதனால் தந்தையாரின் உடல்நிலை பாதிக்கும். தந்தையாருடன் மனத்தாங்கல் வர வாய்ப்பிருக்கிறது அதனால் தந்தையாரை அனுசரித்துப் போவது நல்லது.

3.11.2017 முதல் 27.11.2017 வரைக்கும் உங்கள் ராசிநாதன் சுக்கிரன் 6வது வீட்டில் சென்று மறைவதனால் சிறு சிறு விபத்துகள், வாகனம் பழுதாகுதல், வீடு பராமரிப்பு செலவுகள், தொண்டைப் புகைச்சல் மற்றும் காய்ச்சல் சளி தொந்தரவு வந்து நீங்கும். 10.3.2018 முதல் 13.4.2018 வரை செவ்வாய் உங்களுடைய ராசிக்கு 8வது வீட்டில் மறைவதால் வீடு, மனை வாங்குவது விற்பது எதுவாக இருந்தாலும் கவனமாக இருங்கள் அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். சகோதரங்களுடன் சின்னச் சின்ன கருத்து மோதல்கள் வர வாய்ப்பிருக்கிறது. பணம் கொடுக்கல், வாங்கல் விஷயத்திலும் கவனமாக இருங்கள். உங்களுடைய ராசிக்கு லாப ஸ்தானத்தில் புதன் நின்று கொண்டிருக்கும்போது இந்த வருடம் பிறப்பதால் பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். நீங்கள் எதிர்பார்த்ததுபோல சாதித்தும் காட்டுவார்கள்.

வியாபாரிகளே! லாபம் அதிகரிக்கும். ஆனால், வியாபார ரகசியங்கள் கசியாமல் பார்த்துக் கொள்ளுங்கள். கண்டகச் சனியும், அஷ்டமத்துச் சனியும் அடுத்தடுத்து தொடர்வதால் பங்குதாரர்களுடன் மனத்தாங்கல் வரும். பரிவும் ஏற்படும். அவர்களை பகைத்துக் கொள்ள வேண்டாம். ஒருசிலர் தனியே வந்து வியாபாரம் செய்ய வேண்டிய சூழ்நிலை வரும். உங்களுக்கு அனுபவம் இல்லாத துறையில் இறங்க வேண்டாம். ஆகஸ்ட் மாதம் வரைக்கும் குரு நன்றாக இருப்பதால் வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். ஆனால், செப்டம்பர் மாதம் முதல் குரு ஆறாவது வீட்டிற்குச் சென்று மறைவதால் அந்த காலகட்டத்திலே கவனமாக இருக்க வேண்டும்.

உத்யோகஸ்தர்களே! ஆகஸ்ட் மாதம் வரை சின்னச் சின்ன கூடுதல் சலுகைகள் கிடைக்க வாய்ப்புள்ளது. அதிகாரிகளும் உங்களுக்கு ஆதரவாக பேசுவார்கள். ஆனால், செப்டம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் முற்பகுதி வரை வேலைச்சுமையும், அலைச்சலும் இருக்கும். உத்யோகத்தில் பிப்ரவரி மாதம் பிற்பகுதி முதல் மார்ச், ஏப்ரல் மாதங்களில் பதவி உயர்வு, சம்பள உயர்வு எல்லாம் எதிர்பார்க்கலாம். 19.12.2017 முதல் அஷ்டமத்துச் சனி தொடங்கவிருப்பதால் அலைச்சலும், ஏமாற்றங்களும் ஒரு பக்கம் இருக்கும். வேலைச்சுமையும் அதிகமாகிக் கொண்டே போகும். சக ஊழியர்களுடன் சின்னச் சின்ன மோதல்கள் வரும். அலுவலகத்தில் மரியாதை குறைவான சம்பவங்கள் வந்து நீங்கும்.

கன்னிப் பெண்களே! முகநூல், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைத்தலங்களில் காதலாக இருந்தாலும், அரசியல் சார்ந்த கருத்துகளாக இருந்தாலும் கவனமாக பதிவு செய்யுங்கள். உயர்கல்வியிலே கவனம் செலுத்துங்கள். கல்யாணம் தடைபட்டு முடியும்.

மாணவ, மாணவியர்களே! சனிபகவானின் போக்கு சரியில்லாமல் இருப்பதால் கூடுதல் கவனம் செலுத்தி படியுங்கள். அலட்சியமாக இருக்க வேண்டாம். கூடாப்பழக்க வழக்கமுள்ள நண்பர்களை தவிர்ப்பது நல்லது. பெற்றோர்களிடம் மோதிக் கொண்டிருக்காதீர்கள். கணிதம், அறிவியல் பாடங்களில் அதிக அக்கறைகாட்டி படிப்பது நல்லது. வகுப்பு ஆசிரியர்களிடம் மோதல் வரும்.

அரசியல்வாதிகளே! தொகுதி மக்களை அடிக்கடி சென்று பாருங்கள். தொகுதிக்குள் நடக்கும் விசேஷங்களில் கலந்து கொள்ளுங்கள். அடிக்கடி உண்ணாவிரதம், ஊர்வலம் என்று செல்ல வேண்டியிருக்கும்.

கலைத்துறையினரே! சம்பள விஷயத்தில் கொஞ்சம் கறாராக இருங்கள். சினிமா கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் வரும். திரைக்கு வராமல் அரைகுறையாக இருந்த படப்பிடிப்பு மீண்டும் தொடங்கி படத்தை வெற்றிகரமாக முடித்து திரையிடுவீர்கள். ரசிகர்களின் ஆதரவு அதிகரிக்கும்.

விவசாயிகளே! பூச்சித் தொல்லை கொஞ்சம் இருக்கும். பக்கத்து நிலத்துக்காரருடன் சண்டை, சச்சரவுகள் வேண்டாம். விட்டுக் கொடுத்து போவது நல்லது. பூச்சி மருந்தை பிள்ளைகள் கைக்கு எட்டும் தூரத்தில் வைக்க வேண்டாம். மரப்பயிர்கள் மூலமாகவும் லாபம் வரும். இந்த வருடம் முற்பகுதி செலவுகளையும், அலைச்சல்களையும் தந்தாலும் இறுதிபகுதி ஓரளவு நிம்மதியையும், மகிழ்ச்சியையும் தருவதாக அமையும்.

பரிகாரம்:

திருநெல்வேலி நெல்லையப்பரையும், காந்திமதி அம்மையையும் தரிசித்து வாருங்கள். முதியோர்களுக்கு இயன்ற வரை உதவுங்கள்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58539
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 11886

View user profile

Back to top Go down

 ஹேவிளம்பி ஆண்டு பலன்கள் ! Empty Re: ஹேவிளம்பி ஆண்டு பலன்கள் !

Post by krishnaamma on Sun Apr 16, 2017 4:44 pm

மிதுனம்

மண்ணைப் பார்த் தோ, மற்றதை பார்த்தோ பேசாமல் கண்ணைப் பார்த்தும் கருத்துகளை பார்த்தும் பேசிப் பழக்கப்பட்டவர்கள் நீங்கள். கப்பலே கவிழ்ந்தாலும் கன்னத்தில் கை வைக்காமல் கிடைத்தத் துரும்பை துடுப்பாக்கி கரையேறுவீர்கள். தன் சொந்த உழைப்பால் உயர விரும்பும் நீங்கள், பாதை மாறி சென்று பணம் சம்பாதிக்க தயங்குவீர்கள்! உங்களுடைய ராசிக்கு 6ம் வீட்டிலே சனிபகவான் வலுவாக இருக்கும் நேரத்தில் இந்த ஹேவிளம்பி ஆண்டு பிறப்பதால் பல சாதனைகளை இந்த வருடத்தில் நீங்கள் செய்வீர்கள். நெடுநாட்களாக இழுபறியாக இருந்து வந்த வேலைகளெல்லாம் உங்களுக்கு நல்ல விதத்திலே முடியும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். பணப் புழக்கம் அதிகமாகும். ஷேர் மார்க்கெட் மூலமாகவும் கூடுதல் வருவாய் வர வாய்ப்பிருக்கிறது. வெளிமாநிலம், வெளிநாடு செல்லக்கூடிய விஷயங்கள் வெற்றிகரமாக முடிவடையும். புதிய வீடு, மனை வாங்குவீர்கள்.

தந்தை வழிச் சொத்துகளில் இருந்து வந்த பிரச்னைகளெல்லாம் தீரும். பாகப்பிரிவினை பிரச்னைகள் சுமுகமாக முடிவடையும். உங்களுடைய ராசிக்கு 12வது வீட்டில் செவ்வாய் அமர்ந்திருக்கும் போது இந்த வருடம் பிறப்பதால் சகோதர, சகோதரிகளுடன் கருத்து மோதல்கள் வரும். சொத்து, வீடு மனை வாங்குவதாக இருந்தால் தாய்ப் பத்திரத்தை சரிபார்த்து வாங்குவது நல்லது. வெளிநாடு செல்வதற்கு குறுக்கு வழி வேண்டாம். இடைத்தரகர்களிடம் பணம் கொடுத்து ஏமாறாதீர்கள். வைகாசி, ஆணி, ஆடி மாதங்களிலே உங்களுக்கு செலவினங்கள் அதிகமாகும். 1.9.2017 வரை 4வது வீட்டிலே குருபகவான் நீடிப்பதால் அதுவரைக்கும் அலைச்சலும், ஏமாற்றங்களும் இருந்து கொண்டேயிருக்கும். மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகளோ, முதலீடுகளோ வேண்டாம்.

தாயாரின் உடல்நிலையும் பாதிக்கும். சிறுசிறு வாகன விபத்துகள் வரும். அடிக்கடி வாகனம் பழுதாகும். வீடு கட்டுவதாக இருந்தால் முறைப்படி ப்ளான் அப்ரூவல் வாங்கிக் கட்டுவது நல்லது. குருபகவான் 2.9.2017 முதல் 13.02.2018 வரை உங்கள் ராசிக்கு 5ம் வீட்டிலே அமர்வதால் அந்த காலகட்டத்தில் சொத்து, சுகம் உண்டு. பிள்ளைகளால் இருந்து வந்த அலைச்சல்களும், ஏமாற்றங்களும் விலகும். பிள்ளைகளும் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். குழந்தை பாக்யமும் கிடைக்கும். சொந்த ஊரில் செல்வாக்கு கூடும். கௌரவப் பதவிகளும், பொறுப்புகளும் தேடிவரும். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் இருந்து வந்த கருத்து மோதல்களெல்லாம் விலகும்.

ஆனால், 14.2.2018 முதல் 13.04.2018 வரை குருபகவான் உங்கள் ராசிக்கு 6ம் வீட்டிலே வக்ரத்திலும், அதிசாரத்திலும் சென்று மறைவதனால் பணத் தட்டுப்பாடும், கடன்பிரச்னைகளும் வந்து நீங்கும். 18.12.2017 வரை சனிபகவான் உங்கள் ராசிக்கு 6வது வீட்டில் நீடிப்பதால் வாழ்க்கையின் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். புதுப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். ஆனால், 19.12.2017 வரை சனி 7வது வீட்டில் வந்து அமர்வதால் அதுமுதல் கணவன் மனைவிக்குள் கருத்து மோதல்கள் வரும். சந்தேகத்தால் இருவரும் பிரிய வேண்டி வரும். நண்பர்களை நம்பி பெரிய முடிவுகள் எதுவும் எடுக்க வேண்டாம். யாருக்காகவும் ஜாமீன், கேரண்டர் கையெழுத்திட வேண்டாம். மனைவிக்கு மாதவிடாய் கோளாறு, தைராய்டு பிரச்னைகள் வரக்கூடும்.

26.7.2017 வரை உங்களுடைய ராசிக்கு ராகு 3ம் வீட்டிலே தொடர்வதனால் முக்கியமான முடிவுகளெல்லாம் தைரியமாக எடுப்பீர்கள். இந்தி, மலையாளம், கன்னடம் பேசுபவர்களால் ஆதாயமடைவீர்கள். வெளிநாடு, வெளி மாநிலத்திலே இருப்பவர்களாலும் நன்மை உண்டாகும். மன இறுக்கங்கள் யாவும் நீங்கும். ஆனால், இக்காலகட்டத்தில் கேது பகவான் 9வது வீட்டிலே அமர்ந்திருப்பதனால் தந்தையாருடன் மனத்தாங்கல் வரும். தந்தை வழி உறவினர்களுடன் சின்னச் சின்ன மோதல் போக்கு வந்து நீங்கும். 27.7.2017 முதல் ராகு உங்கள் ராசிக்கு 2வது வீட்டிலும், கேது உங்கள் ராசிக்கு 8வது வீட்டிலும் வந்தமர்வதால் கணவன் மனைவிக்குள் கருத்து மோதல்கள் வரக்கூடும். சந்தேகத்தால் பிரிவுகள் வராமல் பார்த்துக் கொள்வது நல்லது. கண்ணிலே அடிபட வாய்ப்பிருக்கிறது. கண்ணில் ஏதேனும் பிரச்னை என்றால் கை வைத்தியம் பார்க்காமல் உடனடியாக மருத்துவரை சந்தித்து கலந்து ஆலோசிப்பது நல்லது.

15.10.2017 முதல் 2.12.2017 வரை 4வது வீட்டிலே செவ்வாய் வந்தமர்வதனால் தாயாருக்கு மருத்துவச் செலவுகள், வீடு, வாகனப் பராமரிப்பு செலவுகள் வந்துபோகும். சிறுசிறு உடல்நலக் குறைவுகளும் வந்து நீங்கும். 28.11.2017 முதல் 21.12.2017 வரை 6வது வீட்டிலே சுக்கிரன் மறைவதனால் கணவன் மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப்போவது நல்லது. தங்க ஆபரணங்கள், செல்போன் போன்றவைகளை இரவல் தர வேண்டாம். 10.3.2018 முதல் 13.4.2018 வரை செவ்வாயும், சனியும் ஒன்று சேர்ந்து ஏழாவது வீட்டில் அமர்வதால் மனைவிக்கு கர்ப்பப்பை கோளாறு, தலைச்சுற்றல், ஆரோக்யக் குறைவுகள் வந்து நீங்கும். சொத்து விஷயத்திலும் கவனமாக இருப்பது நல்லது.

வியாபாரிகளே! செப்டம்பர் மாதம் முதல் வியாபாரம் சூடு பிடிக்கும். பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளெல்லாம் வசூலாகும். வேலையாட்களால் இருந்து வந்த பிரச்னைகள் தீரும். ஆனால், 19.12.2017 முதல் சனிபகவான் 7வது வீட்டில் வந்து அமர்வதால் அந்தக் காலகட்டத்தில் கூட்டுத் தொழிலை தவிர்ப்பது நல்லது. பங்குதாரர்களுடன் பிரச்னைகள் வரும். திடீரென்று அறிமுகமாகும் நபர்களை நம்பி பெரிய முயற்சிகளெல்லாம் வேண்டாம். செப்டம்பர் மாதத்திலிருந்து பிப்ரவரி மாதம் வரையில் உள்ள காலகட்டத்தில் வியாபாரம் உங்களுக்கு நன்றாக இருக்கும். உணவு, துணி, ஏற்றுமதி, இறக்குமதி வகைகளால் லாபம் அதிகரிக்கும்.

உத்யோகஸ்தர்களே! வேலைச்சுமை அதிகமாகும். ஆனாலும், அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். செப்டம்பர் மாதம் முதல் குருபகவான் சாதகமாவதால் எதிர்பார்த்த இடமாற்றம், சம்பள உயர்வு எல்லாம் கைக்கு வரும். மூத்த அதிகாரிகளின் ஆதரவும் கிடைக்கும். வெளிநாட்டுத் தொடர்புடைய நிறுவனங்களிலும் வேலை கிடைக்கும். மூத்த அதிகாரிகளைப்பற்றி சகஊழியர்களிடம் சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம். கவனமாக இருங்கள்.

கன்னிப்பெண்களே! இனிமையாகப் பேசுகிறார்கள் என்று மற்றவர்களை நம்பி ஏமாறாதீர்கள். தாய், தந்தையாரின் பேச்சை கேட்டு நடந்துக் கொள்வது நல்லது. கல்யாண விஷயத்தில் கவனமாக இருங்கள். செப்டம்பர் மாதம் முதல் உயர்கல்வியில் வெற்றி உண்டு. திருமணமும் நீங்கள் எதிர்பார்த்தபடி கூடி வரும். கோபத்தை குறைக்கப் பாருங்கள். மொபைல்போனில் பேஸ்புக், வாட்ஸ் அப் இவற்றையெல்லாம் கவனமாக கையாளுங்கள். அவற்றால் பிரச்னை வர வாய்ப்பிருக்கிறது.

மாணவ, மாணவியர்களே! வகுப்பாசிரியர் பாராட்டும்படி உங்களுடைய திறமைகளை மேற்கொண்டு வளர்த்துக் கொள்வீர்கள். விளையாட்டைக் குறைத்துக்கொண்டு படிப்பிலே கூடுதல் கவனம் செலுத்துங்கள். எதிர்பார்த்த பாடப்பிரிவு, எதிர்பார்த்த பள்ளி, கல்லூரிகளில் உங்களுக்கு இடம் கிடைக்கும். பெற்றோருக்கு உங்களால் புகழ், கொளரவம் கூடும்.

அரசியல்வாதிகளே! தொகுதியிலே செல்வாக்கு பெறுவீர்கள். மக்கள் ஆதரவு பெருகும். தலைமைக்கு நெருக்கமாவீர்கள். தேர்தலிலும் வெற்றி உண்டு.

கலைத்துறையினரே! உங்களுடைய யதார்த்தமான படைப்புகள் எல்லோராலும் பாராட்டி பேசப்படும். ஒப்பந்தங்கள் எதுவாக இருந்தாலும் ஒப்பந்தத்திற்கான சரத்துகளை படித்து விட்டு கையெழுத்திடுங்கள். சம்பளப்பாக்கி கைக்கு வரும். புகழ் பெற்ற கலைஞர்களால் ஆதரிக்கப்படுவீர்கள். பழைய கலைஞர்களாலும் முன்னேறுவீர்கள்.

விவசாயிகளே! மரப்பயிர்களாலும், கரும்பினாலும், எண்ணெய் வித்துக்களாலும் ஆதாயமடைவீர்கள். கடனும் கொஞ்சம் குறையும். அரசாங்கத்தாலும் ஆதாயம் உண்டு. இந்த வருடத்தின் முற்பகுதி செலவுகளையும், ஆரோக்ய குறைவுகளையும் தந்தாலும் மையப்பகுதி முதல் குடும்பத்தில் மகிழ்ச்சியும், பணவரவும் உண்டாகும்.

பரிகாரம்:

கும்பகோணத்திற்கு அருகேயுள்ள திருபுவனம் தலத்தில் அருளும் சரபேஸ்வரரை தரிசித்து வணங்கி வாருங்கள். பசுவிற்கு அவ்வப்போது அகத்திக்கீரை கொடுங்கள்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58539
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 11886

View user profile

Back to top Go down

 ஹேவிளம்பி ஆண்டு பலன்கள் ! Empty Re: ஹேவிளம்பி ஆண்டு பலன்கள் !

Post by krishnaamma on Sun Apr 16, 2017 4:44 pm

கடகம்

தன் பெண்டு, தன் பிள்ளை, சோறு, வீடு, சம்பாத்யம் இவையுண்டு, தானுண்டு என்றில்லாமல் சுற்றம்நட்புக்காகவும் உழைப்பீர்கள். பத்து ரூபாயை பையில் வைத்துக் கொண்டு பத்தாயிரம் ரூபாய் பொருளை விலைபேசுமளவிற்கு சாதுர்யமானவர்கள். சாம்பார் முதல் சாட்டிலைட் வரை அனைத்தையும் அறிந்து வைத்திருப்பீர்கள். அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதை யூகித்துணரும் ஆற்றல் உங்களிடம் உண்டு. ஒரு குடும்பத்தையோ, இயக்கத்தையோ வழிநடத்திச் செல்லும் தலைமைப் பண்பு உள்ளவர்கள் நீங்கள்தான். நண்டு கொழுத்தால் வலையில் இருக்காது என்பார்கள் அதுபோல சிலநேரங்களில் சிலவற்றை நீங்களே இழுத்துப் போட்டுக் கொண்டு நிம்மதியில்லை என்பீர்கள்! உங்கள் ராசிக்கு பிரபல யோகாதிபதியாகிய குருபகவானின் நட்சத்திரத்தில் இந்த ஹேவிளம்பி ஆண்டு பிறப்பதால் நினைத்தது நிறைவேறும்.

தடைபட்ட வேலைகள் நல்ல விதத்திலே முடிவடையும். குடும்பத்திலே இருந்து வந்த நிம்மதியற்ற சூழ்நிலைகள் மாறும். உங்கள் ராசிநாதனாகிய சந்திரன் 4வது வீட்டிலே வலுவடைந்திருக்கும் நேரத்தில் இந்த ஆண்டு பிறப்பதால் வீடு மாறுவீர்கள். ஒரு சொத்தை விற்று விட்டு மறுசொத்தை வாங்கக்கூடிய அமைப்பு உண்டாகும். வீடு வாங்குவதற்கு, கட்டுவதற்கு வங்கிக் கடன் உதவியும் கிடைக்கும். உங்கள் பிரபலயோகாதிபதியாக இருக்கக்கூடிய செவ்வாய் லாப வீட்டிலே அமர்ந்திருக்கும் போது இந்த ஆண்டு பிறப்பதால் பெற்றோருடன் இருந்து வந்த மனத்தாங்கல் நீங்கும். பூர்வீகச் சொத்து பிரச்னை சுமுகமாக முடியும். சகோதரங்கள் ஆதரவாக இருப்பார்கள்.

நீண்ட காலமாக இழுபறியாக இருந்த சொத்து பிரச்னைகள், சொத்து சம்பந்தப்பட்ட வழக்குகள் நல்ல விதத்திலே முடிவடையும். பெரிய பொறுப்புகள், பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். வேலையும் கிடைக்கும். உங்களுடைய ராசிக்கு 9வது வீட்டில் சுக்கிரனும், புதனும் அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்த புத்தாண்டு பிறப்பதால் வீட்டை புதுப்பிப்பீர்கள். பழுதான எலக்ட்ரானிக்ஸ் மற்றும் மின்சார மின்னணு சாதனங்களை மாற்றுவீர்கள். மனைவி வழியிலும் சில உதவிகளெல்லாம் கிடைக்கும். குருபகவான் 1.9.2017 வரை உங்கள் ராசிக்கு மூன்றாவது வீட்டிலே தொடர்வதனால் அதுவரை கொஞ்சம் பணத்தட்டுப்பாடும், தவிர்க்க முடியாத செலவுகளும் இருக்கும். சின்னச் சின்ன வேலைகளும் தடைப்பட்டு முடிவடையும்.

2.09.2017 முதல் 13.02.2018 வரை உள்ள காலக்கட்டத்தில் குருபகவான் நான்காவது வீட்டிலே வந்து அமர்வதால் அலைச்சலும், ஏமாற்றங்களும் கொஞ்சம் இருக்கும். வேலைச்சுமையும் அதிகரிக்கும். தாயாரின் உடல் நலத்திலும் அக்கறை காட்ட வேண்டும். ஆனால், வேலை கிடைக்கும். அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளை உடனுக்குடன் செலுத்தி விடுங்கள். ஆனால் 14.02.2018 முதல் 13.04.2018 வரை உள்ள காலகட்டத்திலே குருபகவான் வக்ரகதியிலும், அதிசாரத்திலும் உங்கள் ராசிக்கு 5வது வீட்டிலே அமர்வதால் இந்த காலக்கட்டத்தில் எதிர்பாராத பணவரவு உண்டு. குழந்தை பாக்யம் கிடைக்கும். மகளுக்கு திருமணம் கூடி வரும். மகனுக்கு இருந்து வந்த கூடாபழக்க வழக்கங்கள் எல்லாம் விலகும். மகனுக்கு பொறுப்பு வரும்.

அரைகுறையாக நின்ற வீடு கட்டும் பணி தொடரும். 18.12.2017 வரை சனிபகவான் உங்கள் ராசிக்கு 5வது வீட்டிலே அமர்ந்திருப்பதனால் உறவினர்கள் மத்தியிலே சலசலப்பு வரும். அவர்கள் இடத்தில் விட்டுக் கொடுத்து போவது மிகவும் நல்லது. கர்ப்பிணிப் பெண்கள் கொஞ்சம் கவனமாக இருப்பது நல்லது. எதிலும் தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் திணறுவீர்கள். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். குடும்ப சூழ்நிலையை அவர்களிடம் அன்பாக எடுத்துச் சொல்லிப் புரிய வையுங்கள். சிலரின் தவறுகளை சுட்டிக் காட்டுவதன் மூலம் சச்சரவுகளில் சிக்குவீர்கள். ஆனால் 19.12.2017 முதல் சனிபகவான் உங்கள் ராசிக்கு 6வது வீட்டில் அமர்வதால் அதுமுதல் வாழ்க்கையின் நெளிவு, சுளிவுகளைக் கற்றுக் கொள்வீர்கள்.

சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். புது பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். அயல்நாடு, வேற்றுமாநிலம் செல்லும் வாய்ப்பு வரும். பிதுர்வழி சொத்தை பெறுவதில் இருந்த போராட்டம் விலகும். வாய்தா வாங்கி தள்ளிப் போய் கொண்டிருந்த வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். நெடுநாட்களாக வட்டி மட்டுமே கட்டிக் கொண்டிருந்தீர்களே! இனி அசலையும் கட்டி முடிக்கும் அளவிற்கு வருமானம் உயரும். 26.7.2017 வரை உங்கள் ராசிக்கு 2ம் வீட்டில் ராகுவும், 8ம் வீட்டில் கேதுவும் நின்று கொண்டிருப்பதனால் பேச்சில் நிதானம் தேவை. சில சமயங்களில் நீங்கள் விளையாட்டாக பேசப் போய் அது விபரீதமாக முடியும். எந்த ஒரு விஷயத்திலும் இடைத்தரகர்களை நம்பி பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்.

நீங்களே நேரடியாக சென்று முடிப்பது நல்லது. கணவன்மனைவிக்குள் வீண் சந்தேகம், ஈகோ பிரச்னை வந்து போகும். இரவு நேரத்தில் தொலை தூரப் பயணத்தில் வாகனத்தை இயக்க வேண்டாம். விபத்துகள் நிகழக்கூடும். கண் பார்வையை பரிசோதித்துக் கொள்ளுங்கள். 27.7.2017 முதல் உங்கள் ராசிக்குள்ளேயே ராகுவும், உங்கள் ராசிக்கு 7ம் வீட்டில் கேதுவும் அமர்வதால் எளிதில் செரிமானமாகும் உணவுகளை உட்கொள்ளுங்கள். அவ்வப்போது முன்கோபப்படுவீர்கள். சக்கரையின் அளவையும் சரி பார்த்துக் கொள்ளுங்கள். சாப்பாட்டில் உப்பை குறைத்துக் கொள்ளுங்கள்.

மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். மனைவி உங்களுடைய குறைகளை சுட்டிக் காட்டினால் அமைதியாக ஏற்றுக் கொள்ளுங்கள். 26.5.2017 முதல் 28.8.2017 வரை உள்ள காலக்கட்டத்தில் செவ்வாய் 12ம் வீட்டில் மறைவதால் இக்காலக்கட்டத்தில் சிறுசிறு விபத்துகள், பொருள் இழப்பு, ஏமாற்றங்கள் வந்து நீங்கும். சகோதர சகோதரிகளுடன் மனவருத்தம் ஏற்படும். முன் கோபத்தால் ரத்த அழுத்தம் அதிகரிக்கும். 22.12.2017 முதல் 14.1.2018 வரை சுக்கிரன் 6ல் மறைவதால் குடும்பத்தில் அவ்வப்போது சலசலப்பு இருக்கும். வீண் சந்தேகம் வேண்டாம். மனைவிவழி உறவினருடன் மனக்கசப்பு வரும். வாகன விபத்து வரக்கூடும்.

வியாபாரிகளே! தேங்கிக்கிடந்த சரக்குகளை சாமர்த்தியமாக விற்றுத் தீர்ப்பீர்கள். வேலையாட்கள் இனி முரண்டு பிடிக்க மாட்டார்கள். முக்கிய பிரமுகர்களின் அறிமுகத்தால் வெளிநாட்டு நிறுவனத்தின் ஒப்பந்தம் கிடைக்கும். ஷேர் மார்க்கெட், இரும்பு, கட்டிட உதிரி பாகங்களால் லாபமடைவீர்கள். வாடிக்கையாளர்கள் விரும்பி வருவார்கள். புது கிளைகள் தொடங்குவீர்கள். விலகிச் சென்ற பங்குதாரர் மீண்டும் வந்து இணைவார். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்கள் உங்களின் வாடிக்கையாளர்களாக அறிமுகமாவார்கள்.

உத்யோகஸ்தர்களே! வேலைச்சுமை அதிகரிக்கும். ஆனி, மாசி மாதங்களில் சம்பள உயர்வு உண்டு. உங்களைத் தரக்குறைவாக நடத்திய அதிகாரிகளின் மனம் மாறும். சக ஊழியர்களின் சம்பள உயர்விற்காக போராடுவீர்கள். வெளிநாட்டுத் தொடர்புடைய நிறுவனங்களில் வாய்ப்பு வரும். கணினி துறையினர்களுக்கு அதிக சம்பளத்துடன் புது வேலை கிடைக்கும்.

கன்னிப் பெண்களே! ஆவணி, கார்த்திகை மாதங்களில் கல்யாணம் கூடிவரும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். மாதவிடாய்க்கோளாறு, வயிற்றுவலி நீங்கும்.

மாணவ, மாணவியர்களே! விளையாட்டைக் குறைத்து படிப்பில் ஆர்வம் காட்டுங்கள். வகுப்பறையில் வீண் அரட்டை வேண்டாம். உங்களின் திறமையை வெளிக்கொண்டுவர முயற்சி செய்யுங்கள்.

கலைத்துறையினரே! விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். உங்களின் படைப்புக்கு வேறு சிலர் உரிமை கொண்டாடுவார்கள். வெளியாகாமல் இருக்கும் படம் ரிலீசாகும்.

அரசியல்வாதிகளே! வீண் பேச்சில் காலம் கழிக்காமல் செயலில் ஆர்வம் காட்டுவது நல்லது. ஜெயிக்கும் அணியில் இடம் பிடிப்பீர்கள். தலைமையைப் பற்றி வீண் விமர்சனங்களை தவிர்க்கப்பாருங்கள்.

விவசாயிகளே! குறுகிய காலப் பயிர்களை தவிர்த்து விடுங்கள். பக்கத்து நிலத்துக்காரருடன் அனுசரித்துப் போங்கள். எலி, பூச்சித் தொல்லை வந்து நீங்கும். வாழை, மக்காச்சோளம், மா, பலா வகைகளால் ஆதாயமடைவீர்கள். இந்த புத்தாண்டு உங்களுக்கு ஒரு பக்கம் அலைச்சலையும், செலவுகளையும், ஆரோக்யக்குறைவுகளையும் தந்தாலும் மற்றொருபக்கம் விடாமுயற்சியாலும், தன்னம்பிக்கையாலும் சாதிக்க வைக்கும்.

பரிகாரம்:

திருச்சி உறையூர் வெக்காளி அம்மனை தரிசித்து வாருங்கள். தந்தையிழந்த பிள்ளைக்கு உதவுங்கள்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58539
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 11886

View user profile

Back to top Go down

 ஹேவிளம்பி ஆண்டு பலன்கள் ! Empty Re: ஹேவிளம்பி ஆண்டு பலன்கள் !

Post by krishnaamma on Sun Apr 16, 2017 4:45 pm

சிம்மம்

கிளம்பினா சிங்கம் போல, கம்பீரமாக கிளம்புவீர்கள். இல்லேன்னா ஆடு போல அடங்கிக் கிடப்பீர்கள். சுருக்கென்று சுண்டி இழுக்கும் பேச்சுக்கு சொந்தக்காரர்களான நீங்கள், எந்த வேலையையும் உடனே முடிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். உருட்டல், மிரட்டலுக்கு அஞ்சமாட்டீர்கள். மற்றவர்கள் முயன்று முடியாது என ஒதுக்கித் தள்ளிய விஷயத்தை கையிலெடுத்து முடித்துக் காட்டுவீர்கள். பத்து நாட்கள் பாசமாகப் பேசிப் பழகுபவர்களை எல்லாம் நல்லவர்கள் என நினைக்கும் அளவிற்கு ஏமாளித்தனமும் உங்களுக்குண்டு! உங்கள் ராசிக்கு மூன்றாவது ராசியில் இந்த ஹேவிளம்பி ஆண்டு பிறப்பதால் முடியாததை முடித்துக் காட்டுவீர்கள். பாதியிலேயே நின்றுபோன காரியங்கள் உடனே நிறைவேறும். தைரியம் பிறக்கும். செவ்வாய் 10ம் வீட்டில் அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்த ஆண்டு பிறப்பதால் சிலருக்கு புதுத் தொழில் தொடங்கும் வாய்ப்பு உண்டாகும். புது சொத்து வாங்குவீர்கள்.

குழந்தை இல்லாத தம்பதியருக்கு குழந்தை பாக்யம் கிட்டும். பெரிய பதவிகள் தேடி வரும். 18.12.2017 வரை சனிபகவான் 4ம் வீட்டில் அர்த்தாஷ்டமச் சனியாக தொடர்வதால் தாயாரின் உடல் நிலை பாதிக்கும். தாய்வழி உறவினர்களுடன் மனத்தாங்கல் வரும். சாலையை கடக்கும் போதும், வாகனத்தை இயக்கும் போதும் அலைபேசியில் பேச வேண்டாம். கூடாநட்பை இக்காலக்கட்டத்தில் தவிர்ப்பது நல்லது. திடீரென்று அறிமுகமாகி நெருக்கமாக பேசுபவர்களை வீட்டிற்கு அழைத்து வர வேண்டாம். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். வீட்டில் கழிவுநீர், குடிநீர் பிரச்னை வந்துபோகும். உங்களைப் பற்றிய விமர்சனங்களும், வீண்பழியும் அதிகரிக்கும். 19.12.2017 முதல் சனி 5ல் நுழைவதால் பிள்ளைகளின் வருங்காலம் குறித்த கவலைகள் வரக்கூடும்.

மகளின் திருமணத்திற்காக வெளியில் கடன் வாங்க வேண்டி வரும். மகனின் உயர்கல்விக்காக சிலரின் சிபாரிசை நாட வேண்டி வரும். பூர்வீக சொத்தில் புதிய முதலீடுகள் வேண்டாம். பாகப்பிரிவினை விஷயத்தில் உணர்ச்சிவசப்படாதீர்கள். 12.7.2017 முதல் 28.8.2017 வரை உள்ள காலக்கட்டங்களில் செவ்வாய் 12ல் சென்று மறைவதனால் பணத்தட்டுபாடு, ஏமாற்றங்கள், சகோதரசகோதரியுடன் பிரச்னைகளை சந்திக்க வேண்டி வரும். 14.1.2018 முதல் 7.2.2018 வரை சுக்கிரன் 6ல் மறைவதனால் சிறுசிறு விபத்துகள் வந்து போகும். வாகனத்தை வேகமாக இயக்க வேண்டாம். அக்கம்பக்கம் வீட்டாருடன் கவனமாக பழகுங்கள். கணவன் மனைவிக்குள் ஈகோ பிரச்னையால் மோதல்கள் வரும். மனைவிக்கு மாதவிடாய்க் கோளாறு, மனஇறுக்கத்தால் உடல் நிலையும் பாதிக்கும். குருபகவான் 1.9.2017 வரை உங்கள் ராசிக்கு 2வது வீட்டிலேயே தொடர்வதால் குடும்பத்தில் அமைதி நிலவும். விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள்.

வழக்குகள் சாதகமாக முடியும். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். பழைய கடனில் ஒரு பகுதியை தந்து முடிப்பீர்கள். ஆனால் 02.9.2017 முதல் 13.2.2018 வரை உள்ள காலக்கட்டத்தில் குருபகவான் உங்கள் ராசிக்கு 3ம் வீட்டிலே அமர்ந்திருப்பதனால் அதுமுதல் காரியத் தடைகள் அதிகரிக்கும். முதல் முயற்சியிலேயே எந்த ஒரு வேலையையும் முடிக்க முடியாமல் இரண்டாவது அல்லது மூன்றாவது முயற்சியில் போராடி முடிக்க வேண்டி வரும். இளைய சகோதரர் ஆதரவாக இருப்பார். பழைய நண்பர்களில் ஒரு சிலர் விலகுவார்கள். பணத்தட்டுப்பாடு அதிகரிக்கும். தவிர்க்க முடியாத செலவினங்களும் வந்துபோகும். என்றாலும் தந்தைவழியில் உதவிகள் உண்டு. தந்தைவழி சொத்துகள் வந்து சேரும்.

14.2.2018 முதல் 13.4.2018 வரை வக்ரகதியிலும், அதிசாரத்திலும் உங்கள் ராசிக்கு குருபகவான் 4வது வீட்டில் செல்வதால் வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். வீடு கட்டும் பணி தாமதமாகும். தாயாரை தவறாகப் புரிந்து கொள்ளாதீர்கள். அவருக்கு ரத்த அழுத்தம், செரிமானக் கோளாறு, கை, கால்வலி வந்துபோகும். தாய்வழி உறவினர்களுடன் விரிசல்கள் வரக்கூடும். தாய்வழி சொத்தை போராடிப் பெற வேண்டி வரும். மற்றவர்கள் சில ஆலோசனைகள் வழங்கினாலும் அதை அப்படியே ஏற்காமல் யோசித்து சில விஷயங்களில் ஈடுபடுவது நல்லது. 26.7.2017 வரை உங்கள் ராசிக்குள்ளேயே ராகுவும், 7ம் வீட்டிலேயே கேதுவும் இருப்பதால் முன்கோபம், மனதில் ஒருவித சஞ்சலம், எதிலும் ஆர்வமில்லாத நிலை, ஹார்மோன் பிரச்னை, தலைச்சுற்றல் வந்து செல்லும். இரும்பு, நார்ச் சத்து அதிகமுள்ள காய், கனிகளை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

கணவன் - மனைவிக்குள் வீண் சந்தேகம், ஈகோ பிரச்னைகள் வரக்கூடும். மனைவியின் உடல்நிலை பாதிக்கும். அவருடன் மோதல்கள் வந்து போகும். மனைவிவழி உறவினர்களுடன் உரிமையாகப் பேசி பெயரைக் கெடுத்துக் கொள்ளாதீகள். உங்களை நீங்களே குறைத்து மதிப்பிட்டுக் கொள்ளாதீர்கள். 27.7.2017 முதல் உங்கள் ராசிக்கு பன்னிரெண்டில் ராகு அமர்வதால் வீண் பழி, பண இழப்பு, ஏமாற்றங்கள் வந்து போகும். தூக்கம் குறையும். தன்னம்பிக்கை குறையும். இளைய சகோதரங்கள் தவறாகப் புரிந்து கொள்வார்கள். சந்தேக புத்தியால் நல்லவர்களை இழக்க வேண்டி வரும். யாரை நம்புவது என்கிற மனக்குழப்பத்திற்கு ஆளாவீர்கள்.

ஆனால் 27.7.2017 முதல் கேது உங்கள் ராசிக்கு 6ம் வீட்டில் அமர்வதால் வி.ஐ.பிகள் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்ளுமளவிற்கு அவர்களுக்கு நெருக்கமாவீர்கள். உங்களை ஏமாற்றிக் கொண்டிருந்தவர்களை இனங்கண்டறிந்து ஒதுக்குவீர்கள். பழமையான புத்தகங்கள், நாவல்கள் மீது நாட்டம் அதிகரிக்கும். ஆன்மிக வழிபாட்டில் மனம் லயிக்கும். மற்றமாநில புண்ணிய ஸ்தலங்களுக்கும் சென்று வருவீர்கள். வேற்றுமதத்தவர்கள், வேற்று மொழி பேசுபவர்கள் நண்பர்களாவார்கள். அயல்நாட்டில் இருப்பவர்களால் ஆதாயம் உண்டு.

வியாபாரிகளே! குறைந்த லாபம் வைத்து விற்பதன் மூலம் வாடிக்கையாளர்கள் அதிகமாவார்கள். புரட்டாசி மாதம் வியாபாரம் சூடுபிடிக்கும். புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். பங்குதாரர்களிடம் வளைந்து கொடுத்துப் போங்கள். மார்கழி, தை மாதங்களில் பழைய பாக்கிகள் வசூலாகும். அயல்நாட்டு தொடர்புடைய புது பங்குதாரர் வர வாய்ப்பிருக்கிறது. கொடுக்கல், வாங்கலில் நிம்மதி ஏற்படும். உணவு, ஷேர், கல்வி வகைகளால் ஆதாயம் உண்டு.

உத்யோகஸ்தர்களே! உங்கள் கை ஓங்கும். எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். புரட்டாசி மாதம் புது வாய்ப்புகள் வரும். உங்கள் மீது வீண்பழி சுமத்திய உயரதிகாரி மாற்றப்படுவார். மூத்த அதிகாரிகள் உங்களுக்கு முன்னுரிமை தருவார்கள். சில கூடுதல் சிறப்பு பொறுப்புகளை உங்களிடம் ஒப்படைப்பார்கள். சக ஊழியர்களின் ஒத்துழைப்புடன் தேங்கிக் கிடந்த வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். பங்குனி மாதத்தில் பதவி உயர்வு உண்டு. எதிர்பார்த்த சம்பள பாக்கியும் கைக்கு வரும்.

கன்னிப்பெண்களே! தடைபட்ட கல்யாணம் இனி கூடி வரும். காதல் கனியும். பெற்றோருக்கு சில ஆலோசனைகள் வழங்குவீர்கள். புதிதாக அறிமுகமாகுபவரிடம் கொஞ்சம் தள்ளியே இருப்பது நல்லது.

மாணவ, மாணவியர்களே! மதிப்பெண் உயரும். வகுப்பாசிரியர் பாராட்டும்படி நடந்து கொள்வீர்கள். பெற்றோர் உங்களின் தேவைகளை நிறைவேற்றுவார்கள். கவிதை, கட்டுரை போட்டிகளில் முதலிடம் பிடிப்பீர்கள்.

கலைத்துறையினரே! பெரிய நிறுவனங்களின் அழைப்பு உங்களை தேடி வரும். வீண் வதந்திகளிலிருந்து விடுபடுவீர்கள்.

அரசியல்வாதிகளே! சகாக்களுடன் உரிமையாகப் பேசி பெயரைக் கெடுத்துக் கொள்ளாதீர்கள். கட்சியில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள்.

விவசாயிகளே! விளைச்சல் ரெட்டிப்பாகும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். வேர்கடலை, நெல், சூரிய காந்தி மற்றும் உளுந்து வகைகளால் லாபமடைவீர்கள். இந்த ஆண்டு அனுபவ அறிவாலும், இங்கிதமான பேச்சாலும், மாறுபட்ட அணுகுமுறையாலும் வெற்றி பெற வைக்கும்.

பரிகாரம்:

கும்பகோணம் சென்னை நெடுஞ்சாலையில் மீன்சுருட்டிக்கு அருகேயுள்ள கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரரை தரிசித்து வாருங்கள். வயோதிகர்களுக்கு குடையும், காலணிகளும் வாங்கிக் கொடுங்கள்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58539
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 11886

View user profile

Back to top Go down

 ஹேவிளம்பி ஆண்டு பலன்கள் ! Empty Re: ஹேவிளம்பி ஆண்டு பலன்கள் !

Post by krishnaamma on Sun Apr 16, 2017 4:45 pm

கன்னி

தொலைதூரச் சிந்தனை கொண்ட நீங்கள், சிறு வயதிலேயே பெரிய கனவுகள் காண்பவர்கள். இலக்கை எட்டிப் பிடிக்க இரவு, பகல் பார்க்காமல் உழைப்பீர்கள். தர்மசங்கடமான நேரத்திலும் நகைச்சுவையாகப் பேசுபவர்களே! இறைவனின் படைப்பில் ஏற்றத்தாழ்வுகள் இல்லை என்பதை அறிந்த நீங்கள், பணம், பதவி பார்த்து பழக மாட்டீர்கள். எந்த நிகழ்வுகளையும் தொகுத்து கோர்வையாக வெளியிடுவதில் வல்லவர்கள். அளவுக்கு அதிகமாக செல்வம் சேர்க்க விரும்பாத நீங்கள், எதற்காகவும் சுதந்திரத்தை விட்டுக் கொடுக்க மாட்டீர்கள். குழந்தைகளைக் கண்டால் குதூகளிக்கும் உங்கள் மனதின் ஓரத்தில் விளையாட்டுத்தனமும் விளைந்திருக்கும்! உங்கள் ராசிக்கு தன வீடான 2ம் வீட்டில் இந்த புத்தாண்டு பிறப்பதால் சோர்ந்து முடங்கி போயிருந்த உங்கள் உள்மனதில் தன்னம்பிக்கை பிறக்கும். புதிய திட்டங்கள் நிறைவேறும்.

ஒத்து வராத, உதவாத, உண்மையில்லாத உறவுகளை ஒதுக்கித் தள்ளுவீர்கள். புதியவர்கள் அறிமுகமாவார்கள். சிரித்துப் பேசி சிற்றுண்டி சாப்பிட மட்டும் இருந்த வி.ஐ.பி நட்பை இனி சரியாக பயன்படுத்தி பல வேலைகளை முடிப்பீர்கள். மற்றவர்களை நம்பி ஏமாந்ததெல்லாம் போதும், இனி களத்தில் நேரடியாக குதிப்பீர்கள். கற்பனையில் மூழ்காமல் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவீர்கள். வெளிநாடு, வெளி மாநிலங்கள் சென்று வருவீர்கள். கணவன் மனைவிக்குள் ஆரோக்கியமான விவாதங்கள் வந்துபோகும். பிள்ளைகளால் சமூகத்தில் அந்தஸ்து உயரும். மகளுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். ஊரே மெச்சும்படி திருமணத்தை நடத்துவீர்கள். பல நிறுவனங்களில் வேலைக்கு விண்ணப்பித்துக் காத்துக்கொண்டிருந்த உங்கள் மகனுக்கு இனி வேலை கிடைக்கும்.

உடன்பிறந்தவர்களிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் மறையும். குலதெய்வ பிராத்தனைகளை நிறைவேற்றுவீர்கள். ஆனால் இந்த ஆண்டு பிறக்கும் போது செவ்வாய் 9ம் வீட்டில் நிற்பதால் தந்தையாருடன் கருத்து மோதல்கள் வந்து போகும். தந்தை வழி சொத்துகள் மற்றும் அவர் வழி சொந்தங்களால் அவ்வப்போது பிரச்னைகள் வந்துபோகும். திடீர் பயணங்களால் கையிருப்பு கரையும். 18.12.2017 வரை சனி 3ல் நிற்பதால் பெரிய திட்டங்கள் நிறைவேறும். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். தூரத்து சொந்தபந்தங்கள் தேடி வருவார்கள். கனிவாகப் பேசி எந்த காரியத்தையும் முடிப்பீர்கள். அடுக்கடுக்காய் வந்த செலவுகளை சமாளிக்க முடியாமல் அக்கம்பக்கத்தில் கடன் வாங்கினீர்களே! இனி பணவரவு அதிகரிக்கும்.

19.12.2017 முதல் ஆண்டு இறுதி வரை சனி 4ல் அமர்வதால் தாயாருக்கு நெஞ்சு வலி வந்து போகும். ரத்த அழுத்தம் அதிகரிக்கும். அவருடன் விவாதங்கள் வந்து போகும். பூர்வீக சொத்துப் பிரச்னை ஒரு முடிவுக்கு வரும். குலதெய்வக் கோயிலை புதுப்பிக்க முற்படுவீர்கள். உணவு விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். வாகனம் அடிக்கடி தொந்தரவு தரும். ஒரு சொத்தைக் காப்பாற்ற மற்றொரு சொத்தை விற்க வேண்டி வரும். அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளை உடனுக்குடன் செலுத்தி விடுங்கள். புது நண்பர்கள் மூலம் உங்கள் நடத்தை மாறாமல் பார்த்துக் கொள்ளுங்கள். வருங்காலத்தைப் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். 1.9.2017 வரை குருபகவான் உங்கள் ராசிக்குள்ளேயே அமர்ந்திருப்பதனால் பழைய பிரச்னைகள் தலைதூக்கும். மஞ்சள் காமாலை, காய்ச்சல், காது வலி வரக்கூடும். சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரைக் குடிப்பது நல்லது. லாகிரி, வஸ்துக்களை தவிர்ப்பது நல்லது.

சிலர் உங்களைப் பற்றி அவதூறாகப் பேசுவார்கள். கௌரவக் குறைவான சம்பவங்கள் நிகழும். மற்றவர்களை நம்பி பெரிய முயற்சிகளில் ஈடுபடாதீர்கள். ஆனால், 02.9.2017 முதல் 13.2.2018 வரை குருபகவான் உங்கள் ராசிக்கு 2வது வீட்டில் அமர்வதால் குடும்பத்தில் நிலவி வந்த நிம்மதியற்ற போக்கு மாறும். கணவன்மனைவிக்குள் கலகத்தை ஏற்படுத்தியவர்களை இனங்கண்டறிந்து ஒதுக்குவீர்கள்.14.02.2018 முதல் 13.4.2018 வரை குருபகவான் உங்கள் ராசிக்கு 3வது வீட்டில் வக்ரகதியிலும், அதிசாரத்திலும் செல்வதால் மூச்சுத் திணறல், தூக்கமின்மை வந்துபோகும். 26.7.2017 வரை ராகு உங்கள் ராசிக்கு 12ல் நீடிப்பதால் உடல்நலம் சீராகும். ஆனால், தூக்கம் கெடும். 26.7.2018 வரை கேது 6ல் நீடிப்பதால் திடீர் பணவரவு, யோகம் உண்டு. கடன் பிரச்னை தீரும். வழக்கு சாதகமாகும். ஷேர் மூலம் பணம் வரும். அவ்வப்போது வரும் முன்கோபத்தை தவிர்க்கப்பாருங்கள். எதிர்காலத்தை நினைத்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.

கோயில் கோயிலாக அலைந்தும் நமக்கு ஒரு வாரிசு கூட இல்லையே என வருந்திய தம்பதியருக்கு குழந்தைபாக்யம் உண்டாகும். 27.7.2017 முதல் ராசிக்கு லாப வீட்டில் ராகு அமர்வதால் உங்களை தலைநிமிர வைக்கும். அரசாங்க விஷயங்கள் நல்ல விதத்தில் முடிவடையும். ஆனால் 27.7.2017 முதல் கேது ராசிக்கு 5வது வீட்டில் அமர்வதால் பிள்ளைகளை ஆரம்பத்திலிருந்தே இன்னும் கொஞ்சம் கண்டித்து வளர்த்திருக்கலாமென இப்போது நினைப்பீர்கள். மகளின் திருமணத்திற்காக வெளியில் கடன் வாங்க வேண்டி வரும். மகனின் உயர்கல்வி, உத்யோகத்திற்காக சிலரின் சிபாரிசை நாடுவீர்கள். கர்ப்பிணிப் பெண்கள் அதிக எடையுள்ள சுமைகளை தூக்க வேண்டாம். 7.2.2018 முதல் 2.3.2018 வரை உள்ள காலக்கட்டத்தில் சுக்கிரன் 6ல் மறைவதனால் குடும்பத்தில் சின்ன சின்ன பிரச்னைகள் அதிகமாகும். 28.8.2017 முதல் 2.12.2017 வரை செவ்வாயின் போக்கு சரியில்லாததால் பூர்வீக சொத்துப் பிரச்னைக்கு சுமுகத் தீர்வு காண்பது நல்லது.

வியாபாரிகளே! புது ஏஜென்சி எடுப்பீர்கள். செப்டம்பர் மாதம் முதல் சிலர் புதுத் துறையில் முதலீடு செய்வீர்கள். வாடிக்கையாளர்களின் ரசனைக்கேற்ற பொருட்களை கொள்முதல் செய்து லாபத்தை பெருக்குவீர்கள். வேலையாட்களிடம் தொழில் ரகசியங்களை சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். ஆவணி மாதத்தில் அனுபவமிக்க வேலையாட்களை பணியில் சேர்ப்பீர்கள். கார்த்திகை, மார்கழி மாதங்களில் புது கிளை தொடங்கும் வாய்ப்பு உண்டாகும். பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிப்பது நல்லது.

உத்யோகஸ்தர்களே! மேலதிகாரிகளிடம் பக்குவமாகப் பேசி சில காரியங்களைத் சாதித்துக் கொள்வீர்கள். சூழ்ச்சிகளைத் தாண்டி முன்னேறுவீர்கள். உங்களைப் பற்றி அவதூறானக் கடிதங்கள் உங்களை விமர்சித்து வரக் கூடும். உங்களுக்கு நெருக்கமாக இருந்த உயர் அதிகாரி வேறு இடத்திற்கு மாற்றப்பட்டாலும் புது அதிகாரியின் ஒத்துழைப்பால் நெருக்கடிகளை முறியடிப்பீர்கள். என்றாலும் நவம்பர் மாதம் முதல் அதிரடி முன்னேற்றங்கள் உண்டு. அலுவலகச் சூழ்நிலை அமைதியாகும். பெரிய பொறுப்புகள் தேடி வரும். சம்பளம் உயரும். 19.12.2017 முதல் சனி 4ல் வந்தமர்வதால் சக ஊழியர்கள் மனஉளைச்சலை ஏற்படுத்துவார்கள். முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடும் முன் சட்ட ஆலோசகரை கலந்தாலோசிப்பது நல்லது.

கன்னிப் பெண்களே! காதல் விவகாரத்தில் கொஞ்சம் உஷாராக இருங்கள். பெற்றோரின் கனவுகளை நனவாக்க முயலுங்கள். உயர்கல்வியில் வெற்றி பெறுவீர்கள். போராடி நல்ல வேலையில் அமர்வீர்கள்.

மாணவ, மாணவியர்களே! படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். அவ்வப்போது மந்தம், மறதி வந்து நீங்கும். ஆசிரியர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். கணிதம், வேதியியல் பாடங்களில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் கிடைக்கும்.

கலைத்துறையினரே! தெலுங்கு, ஹிந்தி மொழிக்காரர்கள் உதவுவார்கள். ஒருபுறம் விமர்சனம் இருக்கத்தான் செய்யும். மற்றொரு புறம் உங்களின் திறமையால் சாதித்துக் காட்டுவீர்கள்.

அரசியல்வாதிகளே! சிலர் உங்கள் பெயரை தவறாகப் பயன்படுத்துவார்கள். கவனமாக இருங்கள். கட்சி மேலிடம் உங்களை நம்பி சில போராட்டங்களுக்கு தலைமை தாங்க வைக்கும். புது பதவிகள் கிடைக்கும்.

விவசாயிகளே! மகசூல் பெருகும். எலிகளை அழிக்கும் பாம்புகளை அடிக்க வேண்டாம். பூச்சித் தொல்லை குறையும். பம்பு செட் அவ்வப்போது பழுதாகும். கரும்பு, சவுக்கு, தேக்கு, கொள்ளு வகைகளால் ஆதாயமடைவீர்கள். இந்தப் புத்தாண்டு சோர்ந்து கிடந்த உங்களை சுறுசுறுப்பாக்குவதுடன், வசதி வாய்ப்புகளை அதிகப்படுத்துவதாக அமையும்.

பரிகாரம்:

சென்னை செங்கல்பட்டு நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சிங்கப்பெருமாள் கோயில் நரசிம்மரை தரிசித்து வாருங்கள். மரக்கன்றை நட்டு பராமரியுங்கள்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58539
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 11886

View user profile

Back to top Go down

 ஹேவிளம்பி ஆண்டு பலன்கள் ! Empty Re: ஹேவிளம்பி ஆண்டு பலன்கள் !

Post by krishnaamma on Sun Apr 16, 2017 4:46 pm

துலாம்

ஈரப்பார்வையால் அனைவரையும் தன் வசம் ஈர்க்கும் ஆற்றல் கொண்ட நீங்கள், எல்லோரின் இயக்கங்களையும் அசைபோட்டு எடைபோடுவதில் வல்லவர்கள். சுற்றியிருப்பவர்களை சிரிக்க வைப்பதுடன் சிந்திக்கவும் வைக்கும் நீங்கள், அவ்வப்போது தத்துவமாகவும் பேசுவீர்கள். தலைமைப் பண்பு அதிகமுள்ள நீங்கள், மற்றவர்களை வழி நடத்திச் செல்வதில் வல்லவர்கள். சகிப்புத் தன்மை கொண்ட நீங்கள் சளைக்காமல் உழைப்பவர்கள்! இந்த ஹேவிளம்பி ஆண்டு பிறக்கும் நேரத்தில் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்திலே ராகுபகவான் அமர்ந்திருப்பதனால் உங்களின் செல்வாக்கு கூடும். ஷேர் மூலம் பணம் வரும். சுப நிகழ்ச்சிகளில், பொது விழாக்களில் உங்களுக்கு முதல் மரியாதை கிடைக்கும்.

அனுபவ பூர்வமாகவும், அறிவு பூர்வமாகவும் பேசி எல்லோரையும் கவர்வீர்கள். ஆனால், இந்த ஆண்டு உங்கள் ராசியிலேயே பிறப்பதால் வேலைச்சுமை அதிகரிக்கும். முக்கிய வேலைகளை மற்றவர்களை நம்பி ஒப்படைக்க வேண்டாம். அடிக்கடி கோபப்படுவீர்கள். குடும்பத்தில் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. சனிபகவான் 18.12.2017 வரை உங்கள் ராசிக்கு 2வது வீட்டில் அமர்ந்து ஏழரைச் சனியில் பாதச்சனியாக தொடர்வதால் குடும்பத்தில் வீண் சந்தேகத்தால் பிரிவுகள் வரக்கூடும். பிள்ளைகளின் முரட்டுத்தனத்தை அன்பால் மாற்றுங்கள். கர்ப்பிணிப் பெண்கள் மாடிப்படி ஏறும் போது கவனம் தேவை. கண், காது வலி வந்து செல்லும். பல் ஈறு வலிக்கும்.

பூர்வீகச் சொத்துப் பிரச்னையை அறிவுபூர்வமாக அணுகுவது நல்லது. உடம்பில் சர்க்கரை அளவை பரிசோதித்துக் கொள்ளுங்கள். அந்தரங்க விஷயங்களை வெளியிடாமல் தேக்கி வைப்பது நல்லது. ஆனால், 19.12.2017 முதல் சனி 3ம் வீட்டில் நுழைவதனால் அதுமுதல் பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்று சேர்வீர்கள். எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். வழக்குகளில் வெற்றி பெறுவீர்கள். உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். உள் மனதில் இருக்கும் தாழ்வு எண்ணங்களை தூக்கி எறிவீர்கள். நகரின் எல்லையை ஒட்டியிருக்கும் பகுதியிலே நிலம், வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும். குருபகவான் 1.9.2017 வரை உங்கள் ராசிக்கு 12ம் வீட்டில் அமர்ந்திருப்பதனால் எதிர்பாராத பயணங்கள் அதிகரிக்கும்.

கனவுத் தொல்லை, தூக்கக்குறைவால் அசதியாவீர்கள். எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியவில்லையே என ஆதங்கப்படுவீர்கள். பைனான்ஸ் தொழில் செய்பவர்கள் தகுந்த ஆதாரமில்லாமல் யாருக்கும் பணம் தரவேண்டாம். 2.9.2017 முதல் 13.2.2018 வரை உள்ள காலக்கட்டத்தில் குருபகவான் உங்கள் ராசிக்குள்ளேயே நுழைய இருப்பதனால் வீண் அலைச்சல், அலைக்கழிப்பு குறையும். என்றாலும் முன்கோபம் அதிகரிக்கும். உணர்ச்சிவசப்பட்டு வார்த்தைகளை விட வேண்டாம். ஆரோக்யத்தில் கூடுதல் கவனம் செலுத்தப் பாருங்கள்.

எதிலும் ஒருவித சலிப்பு, யூரினரி இன்ஃபெக்‌ஷன், காய்ச்சல், வாயுத் தொந்தரவால் நெஞ்சு வலி வந்து செல்லும். ஆனால், 14.2.2018 முதல் 13.4.2018 வரை உள்ள காலக்கட்டத்தில் குருபகவான் உங்கள் ராசிக்கு 2ம் வீட்டில் அமர்வதால் குடும்பத்தில் இருந்து வந்த நிம்மதியற்ற போக்கு மாறும். கணவன்மனைவிக்குள் கலகத்தை ஏற்படுத்தியவர்களை இனங்கண்டறிந்து ஒதுக்குவீர்கள். பெரிய நோய் இருப்பதைப் போன்ற பிரமையிலிருந்து விடுபடுவீர்கள். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம், காது குத்து போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். அநாவசியச் செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். பழைய வாகனத்தை மாற்றுவீர்கள்.

கேது பகவான் 26.7.2017 வரை உங்கள் ராசிக்கு 5ம் வீட்டில் தொடர்வதால் தூக்கம் குறையும். பிள்ளைகளின் வருங்காலம் குறித்த ஒரு பயம் வந்து நீங்கும். தாய் மாமன் வகையில் மனத்தாங்கல் வரும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். புகழ்பெற்ற புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். 27.7.2017 முதல் கேது 4வது வீட்டில் நுழைவதனால் கூடாப் பழக்க வழக்கங்கள் தொற்றிக் கொள்ளாமல் பார்த்துக் கொள்ளுங்கள். உங்களை அறியாமலேயே தாழ்வு மனப்பான்மை தலைதூக்கும். தாயாரின் உடல் நலம் பாதிக்கும். அவருடன் வீண் கருத்துமோதல் வரக்கூடும். வீண் அலைச்சல், டென்ஷன், காரியத் தாமதம், வாகன விபத்துகள் வந்து போகும். மன அழுத்தத்தைக் குறைக்க தியானம் செய்யுங்கள்.

ஆனால், 27.7.2017 முதல் ராகு 10ம் வீட்டில் நுழைவதனால் அதுமுதல் வெளிவட்டாரத்தில் உங்களைப் பற்றிய மதிப்பு, மரியாதை கூடும். கௌரவப் பதவி கிடைக்கும். வழக்குகளில் இருந்து வந்த தேக்க நிலை மாறும். 2.3.2018 முதல் 26.3.2018 வரை சுக்கிரன் 6ல் மறைவதால் மனைவிக்கு மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். அவருடன் கருத்து மோதல்களும் வரும். சிறுசிறு வாகன விபத்துகள் வந்து நீங்கும். மின் சாதனங்கள், மின்னணு சாதனங்களையெல்லாம் கவனக்குறைவால் தொலையாமல் பார்த்துக் கொள்ளுங்கள். 14.4.2017 முதல் 27.5.2017 வரை செவ்வாய் 8லும், 15.10.2017 முதல் 4.12.2017 வரை 12லும் மறைவதால் சகோதரங்களால் நிம்மதியிழப்பீர்கள். வாகனத்தில் அதிக வேகம் வேண்டாம்.

உங்கள் சக்தி மீறி எந்த உறுதிமொழியும், யாருக்கும் தர வேண்டாம். கூடுதல் செலவுகளால் திணறுவீர்கள். நெடுநாள் பழகிய நண்பர் ஒருவரின் நட்பை இழக்க நேரிடும். வீடு, மனை வாங்கும் போது தாய் பத்திரத்தை சரி பார்த்துக் கொள்ளுங்கள். பணம் எடுத்துக் கொண்டு செல்லும் போதும், கொண்டு வரும் போதும் உங்கள் கவனத்தை சிதற விடாதீர்கள். தக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யாமல் வெளியூர் பயணங்கள் செல்ல வேண்டாம்.

வியாபாரிகளே! லாபம் கணிசமாக உயரும். வேலையாட்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பங்குதாரர்களுடன் இருந்த பகைமை நீங்கும். புதிய திட்டங்கள் நிறைவேறும். புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். ஏற்றுமதி, இறக்குமதி வகைகளால் ஆதாயமடைவீர்கள். வெளிநாட்டில், வெளிமாநிலத்தில் இருப்பவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள்.

உத்யோகஸ்தர்களே! இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். ஆனாலும் ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச்சுமை இருக்கும். குடும்பத்தினருடன் செலவிடக்கூடிய நேரம் குறையும். மூத்த அதிகாரி உங்களுக்கு ஆதரவு தந்தாலும் உங்களுக்கு உயரதிகாரியால் பிரச்னைகள் வந்து போகும்.

கன்னிப் பெண்களே! முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். கல்யாணம் கூடி வரும். வேலை கிடைக்கும்.

மாணவ, மாணவியர்களே! சுற்றுலா பயணங்கள் சென்று வருவீர்கள். பழைய நண்பர்களுடன் மனம் விட்டு பேசுவீர்கள்.

அரசியல்வாதிகளே! எதிர்ப்புகளையும் தாண்டி வெற்றி பெறுவீர்கள். பொது மக்கள் பாராட்டி பேசுவார்கள். தலைமைக்கு நெருக்கமாவீர்கள்.

கலைத்துறையினரே! வருமானம் உயரும். உங்களுடைய படைப்புகள் பரிசு, பாராட்டுகள் பெறும்.

விவசாயிகளே! மகசூல் பெருகும். தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க புது வழி கிடைக்கும். இந்தப் புத்தாண்டு விரக்தியின் விளிம்பில் நின்ற உங்களை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்வதாக அமையும்.

பரிகாரம்:

வேதாரண்யம் திருத்துறைப்பூண்டி பாதையிலுள்ள தகட்டூர் காசி பைரவரை தரிசித்து வணங்கி வாருங்கள். அனாதை இல்லங்களுக்குச் சென்று உதவுங்கள்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58539
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 11886

View user profile

Back to top Go down

 ஹேவிளம்பி ஆண்டு பலன்கள் ! Empty Re: ஹேவிளம்பி ஆண்டு பலன்கள் !

Post by krishnaamma on Sun Apr 16, 2017 4:46 pm

விருச்சிகம்

ஏர்முனையாக இருந்தாலும், போர் முனையாக இருந்தாலும் எதிலும் முதலில் நிற்கும் நீங்கள், எண்ணுவதை எழுத்தாக்கும் படைப்பாற்றல் மிக்கவர்கள். அதிர்ஷ்டத்தை நம்பி காலத்தை கழிக்காமல் உழைப்பால் உயர்பவர்களே! எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் என்ற எண்ணம் கொண்ட நீங்கள், புரட்சிகரமான தொலைநோக்குத் திட்டங்கள் தீட்டுவதில் வல்லவர்கள். நீதி கிடைக்கும் வரை ஓயமாட்டீர்கள். மனதில் பட்டதை பளிச்சென்று பேசி உண்மைகளை வெட்ட வெளிச்சத்திற்கு கொண்டு வரும் நீங்கள், சில சமயங்களில் பலருக்கு எதிரியாகவே தெரிவீர்கள். சுக்கிரன் உங்கள் ராசிக்கு 5ல் அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்த ஆண்டு பிறப்பதால் சவாலான காரியங்களையும் எளிதாக முடித்துக் காட்டுவீர்கள்.

பிள்ளைகளுடன் இருந்து வந்த கருத்து மோதல்கள் நீங்கும். குழந்தை பாக்யம் உண்டாகும். இந்த புத்தாண்டு உங்கள் ராசிக்கு விரயஸ்தானமான 12ம் வீட்டில் பிறப்பதால் திடீர் பயணங்கள் அதிகரிக்கும். கொஞ்சம் சிக்கனமாக இருங்கள். இந்த ஆண்டு பிறக்கும் நேரத்தில் குருபகவான் உங்கள் ராசிக்கு லாப வீட்டில் அமர்ந்திருப்பதனால் 1.9.2017 வரை திடீர் யோகம், அதிர்ஷ்டம் உண்டாகும். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். அடுத்தடுத்த சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். கடனாகவும், கைமாற்றாகவும் கொடுத்த பணம் கைக்கு வரும். நல்லவர்களின் நட்பு கிடைக்கும். கணவன் மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவீர்கள். இருவரும் கலந்தாலோசித்து செலவுகளைக் குறைக்க திட்டமிடுவீர்கள்.

குழந்தை பாக்யம் கிடைக்கும். பிள்ளைகளின் பிடிவாதம் தளரும். ஆனால், 2.9.2017 முதல் 13.02.2018 வரை உங்கள் ராசிக்கு 12வது வீட்டில் குரு மறைவதனால் எதிர்பாராத பயணங்கள் அதிகரிக்கும். கனவுத் தொல்லை, தூக்கமின்மை வந்து செல்லும். எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியவில்லையே என ஆதங்கப்படுவீர்கள். பைனான்ஸ் தொழில் செய்பவர்கள் தகுந்த பத்திரம், ஆவணம் இல்லாமல் யாருக்கும் பணம் தரவேண்டாம். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம் பொருட்டு அவர்களை பிரிய வேண்டிய சூழ்நிலை உருவாகும். கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவரின் ஆலோசனைக்கேற்ப உணவு முறைகளை அமைத்துக் கொள்வது நல்லது.

14.02.2018 முதல் 13.4.2018 வரை குரு வக்ரத்திலும், அதிசாரத்திலும் உங்கள் ராசிக்குள்ளேயே ஜென்ம குருவாக அமர்வதால் அதுமுதல் திடீர் பயணங்களால் ஏற்பட்ட வீண் அலைச்சல்கள், அலைக்கழிப்புகள் குறையும். என்றாலும் முன்கோபம் அதிகரிக்கும். உணர்ச்சிவசப்பட்டு வார்த்தைகளை விட வேண்டாம். சின்னச் சின்ன நடைப்பயிற்சி மேற்கொள்வது நல்லது. உடல் அசதி, சோர்வு, எதிலும் ஒருவித சலிப்பு வந்துபோகும். நேரம் கடந்து சாப்பிடுவதை தவிர்க்கப் பாருங்கள். சனிபகவான் 18.12.2017 வரை உங்கள் ராசிக்குள்ளேயே அமர்ந்து ஜென்மச் சனியாக தொடர்வதால் சில விஷயங்களில் கொஞ்சம் தடுமாற்றம், மறதி, ஏமாற்றம் வரக்கூடும். கைகால் மூட்டுவலியால் அவதிப்படுவீர்கள். சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் வரக்கூடும். உணவுப் பழக்கத்தில் மாற்றம் வேண்டாம்.

பழைய நண்பர்கள், உறவினர்களிடத்தில் கருத்து வேறுபாடுகள் வரக்கூடும். கடனை முழுமையாக அடைக்க முடியவில்லையே என்று அவ்வப்போது ஆதங்கப்படுவீர்கள். வழக்கு விஷயத்தில் வழக்கறிஞரை சந்திப்பதில் அலட்சியம் வேண்டாம். ஆனால் 19.12.2017 முதல் சனிபகவான் உங்கள் ராசிக்கு 2ம் வீட்டில் அமர்வதால் பேச்சில் நிதானம் அவசியம். பணம் கொடுக்கல், வாங்கல் விஷயத்திலும் கறாராக இருங்கள். நான் செய்து தருகிறேன் என்று யாருக்கும் உறுதிமொழி தராதீர்கள். கால்வலி, இடுப்புவலி வந்துபோகும். 26.7.2017 வரை ராகுபகவான் 10ம் வீட்டிலும், கேது ராசிக்கு 4ம் வீட்டிலும் இருப்பதால் மனதில் இனம்புரியாத பயம், முடிவுவெடுப்பதில் தடுமாற்றம் வந்து செல்லும்.

எடுத்த வேலையை முழுமையாக முடிக்க முடியாமல் அவதிக்குள்ளாவீர்கள். சிக்கலான, சவாலான காரியங்களையெல்லாம் கையில் எடுத்துக் கொண்டிருக்காதீர்கள். யாருக்காகவும் ஜாமீன், கேரன்டர் கையெழுத்திடாதீர்கள். முன்பின் தெரியாதவர்கள் யாரேனும் உங்களுக்கு உதவுவதாக முன்வந்தால் உடனே நம்பி ஏமாற வேண்டாம். நயமாக பேசுகிறார்கள் என்று குடும்ப அந்தரங்க விஷயங்கள், சொந்த விஷயங்களையெல்லாம் பகிர்ந்து கொள்ளாதீர்கள். ஆனால், 27.7.2017 முதல் 13.4.2018 வரை கேது பகவான் 3ம் வீட்டிலேயே அமர்வதால் தைரியமாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். வீண் விவாதங்கள், சண்டையிலிருந்து ஒதுங்குவீர்கள்.

வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். கைமாற்றாகவும், கடனாகவும் வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். சித்தர்கள், ஆன்மிகப் பெரியோரின் ஆசி பெறுவீர்கள். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். நீங்கள் சொல்லாததையும் சொன்னதாக நினைத்துக் கொண்டு உங்களிடம் கருத்து மோதல்களுடன் இருந்து வந்த பழைய நண்பர் இப்போது வலிய வந்து பேசுவார். ராகு 9ம் வீட்டில் அமர்வதால் செலவுகளை குறைக்க முடியாமல் திணறுவீர்கள். கடந்த கால இழப்புகளை நினைத்து அவ்வப்போது கொஞ்சம் டென்ஷனாவீர்கள். நல்ல வாய்ப்புகளையெல்லாம் பயன்படுத்தாமல் விட்டுவிட்டோமே என்றெல்லாம் வருத்தப்படுவீர்கள். தந்தையாருக்கு நெஞ்சு வலி, சர்க்கரை நோய், கை, கால் வலி வந்து போகும்.

26.5.2017 முதல் 30.8.2017 வரை உங்களின் ராசிநாதனாகிய செவ்வாய் 8ல் மறைந்து பலவீனமாவதால் மன இறுக்கமும், எதிர்காலம் பற்றிய பயமும், எந்த காரியத்தை தொட்டாலும் தாமதமாக முடியும் போக்கும் உண்டாகும். சகோதரங்களால் அலைச்சல் இருக்கும். முழுமையாக யாரையுமே நம்ப முடியவில்லையே என்று ஆதங்கப்படுவீர்கள். கணவன் மனைவிக்குள் ஈகோ பிரச்னையால் சண்டைகள் வந்து நீங்கும். 31.5.2017 முதல் 28.6.2017 வரை சுக்கிரன் 6ல் மறைவதனால் அலைச்சல், செலவினங்கள், கணவன் மனைவிக்குள் சந்தேகத்தால் சின்னச் சின்ன வாக்குவாதங்களும் வரக்கூடும். சிறுசிறு அறுவை சிகிச்சைகளும் வந்து போக வாய்ப்பிருக்கிறது.

வியாபாரிகளே! குறைந்த லாபம் வைத்து விற்பதன் மூலம் வாடிக்கையாளர்கள் அதிகமாவார்கள். ஆவணி, புரட்டாசி மாதங்களில் வியாபாரம் சூடுபிடிக்கும். புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். ஏழரைச் சனி தொடர்வதால் அனுபவமிக்க வேலையாட்கள் திடீரென்று பணியை விட்டு விலகுவார்கள். பங்குதாரர்களிடம் வளைந்து கொடுத்துப் போங்கள். தை, மாசி மாதங்களில் பழைய பாக்கிகள் வசூலாகும். பங்குனி மாதத்தில் அயல்நாட்டுத் தொடர்புடைய புது பங்குதாரர் வர வாய்ப்பிருக்கிறது.

உத்யோகஸ்தர்களே! உங்கள் கை ஓங்கும். எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். ஆவணி மாதங்களில் புது வாய்ப்புகள் வரும். உங்கள் மீது வீண்பழி சுமத்திய உயரதிகாரி மாற்றப்படுவார். மூத்த அதிகாரிகள் உங்களுக்கு முன்னுரிமை தருவார்கள். சில கூடுதல் சிறப்பு பொறுப்புகளை உங்களிடம் ஒப்படைப்பார்கள். சக ஊழியர்களின் ஒத்துழைப்புடன் தேங்கிக் கிடந்த வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். பங்குனி மாதத்தில் பதவி உயர்வு உண்டு. எதிர்பார்த்த சம்பள பாக்கியும் கைக்கு வரும்.

கன்னிப் பெண்களே! தடைப்பட்ட கல்யாணம் இனி கூடி வரும். காதல் கனியும். பெற்றோருக்கு சில ஆலோசனைகள் வழங்குவீர்கள். புதிதாக அறிமுகமாகும் நபர்களிடம் கொஞ்சம் தள்ளியே இருப்பது நல்லது.

மாணவ, மாணவியர்களே! மதிப்பெண் உயரும். வகுப்பாசிரியர் பாராட்டும்படி நடந்து கொள்வீர்கள். பெற்றோர் உங்களின் தேவைகளை நிறைவேற்றுவார்கள். கவிதை, கட்டுரை போட்டிகளில் முதலிடம் பிடிப்பீர்கள்.

கலைத்துறையினரே! பெரிய நிறுவனங்களின் அழைப்பு உங்களை தேடி வரும். வீண் வதந்திகளிலிருந்து விடுபடுவீர்கள்.

அரசியல்வாதிகளே! சகாக்களுடன் உரிமையாகப் பேசி பெயரைக் கெடுத்துக் கொள்ளாதீர்கள். கட்சியில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள்.

விவசாயிகளே! விளைச்சல் இரட்டிப்பாகும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். வேர்கடலை, நெல், சூரிய காந்தி மற்றும் உளுந்து வகைகளால் லாபமடைவீர்கள். ஆகமொத்தம், இந்தப் புத்தாண்டு தொலைநோக்குச் சிந்தனையுடன் செயல்பட வைத்து உங்களை மேலும் சாதிக்க வைப்பதாக அமையும்.

பரிகாரம்:

திருத்தணி முருகப்பெருமானை தரிசித்து வாருங்கள். சாலையோரம் வாழும் சிறார்களுக்கு ஆடைகள் கொடுத்து உதவுங்கள்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58539
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 11886

View user profile

Back to top Go down

 ஹேவிளம்பி ஆண்டு பலன்கள் ! Empty Re: ஹேவிளம்பி ஆண்டு பலன்கள் !

Post by krishnaamma on Sun Apr 16, 2017 4:47 pm

தனுசு

காரசாரமாக கை ஓங்கிப் பேசத் தயங்கும் உங்கள் உள்மனசில் எப்போதும் காதல் கசிந்து கொண்டிருக்கும். வெகு தொலைவிலிருந்து வீசும் வாடைக் காற்றில் கலந்து வரும் பூக்களின் வாசத்தை உணரும் ஆற்றலைக் கொண்ட நீங்கள், நல்லவர் யார் கெட்டவர் யார் என்பதை பிரித்துப் பார்க்கத்தெரிந்தவர்கள். பயிற்சி இல்லாமலே பாடும் குயிலைப் போல இயற்கையாகவே இசை, கவிதை ஞானம் உங்களுக்குண்டு. மண்ணாக இருந்தாலும், பொன்னாக இருந்தாலும் வாரி பூசிக் கொள்ளாமல் தூரத்தில் வைத்து அழகு பார்ப்பீர்கள். உங்கள் ராசிக்கு லாப வீட்டில் சந்திரன் நிற்கும் போது இந்த ஹேவிளம்பி வருடம் பிறப்பதால் கணவன்மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும். குழந்தை பாக்யம் கிடைக்கும். புது வேலை அமையும்.

சனிபகவான் 18.12.2017 வரை உங்கள் ராசிக்கு விரயச்சனியாக அமர்ந்திருப்பதனால் கணவன்-மனைவிக்குள் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து போங்கள். வீண் சந்தேகங்கள், சேமிக்க முடியாதபடி செலவுகள் உண்டாகும். காசோலை தருவதற்கு முன் வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்று பார்த்து கொள்ளுங்கள். பால்ய நண்பர்களானாலும், பழைய சொந்தங்கள் ஆனாலும் அத்துமீறிப் பழகவோ, குடும்ப ரகசியங்களை சொல்லி ஆறுதல் அடையவோ வேண்டாம். யாருக்கும் விலை உயர்ந்த பொருட்களை, ஆபரணங்களை இரவல் தர வேண்டாம். நீங்களும் இரவல் வாங்க வேண்டாம். வழக்குகளில் வழக்கறிஞரை மாற்றவேண்டி வரும். அதுபோல 19.12.2017 முதல் சனி உங்கள் ராசிக்குள்ளேயே நுழைந்து ஜென்மச் சனியாக வருவதனால் பெரிய நோய்கள் இருப்பதை போல நினைப்பீர்கள். நடைப்
பயிற்சியை மேற்கொள்ளுங்கள்.

1.9.2017 வரை குருபகவான் உங்கள் ராசிக்கு 10வது வீட்டில் தொடர்வதனால் வேலைச்சுமையால் பதட்டம் அதிகரிக்கும். தங்க ஆபரணங்களை யாருக்கும் இரவல் தரவோ, வாங்கவோ வேண்டாம். உங்களிடம் திறமை குறைந்து விட்டதாக நினைத்துக் கொள்வீர்கள். சிறுசிறு அவமானங்களும் வந்து செல்லும். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்த சிலர் முயற்சிப்பார்கள். யாருக்கும் வாக்குறுதி தர வேண்டாம். பிள்ளைகளிடம் உங்களின் எண்ணங்களை திணிக்க வேண்டாம். ஆனால், 2.9.2017 முதல் 13.2.2018 வரை குரு உங்கள் ராசிக்கு லாப வீட்டில் அமர்வதால் திடீர் யோகம், அதிர்ஷ்டம் உண்டாகும். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். அடுத்தடுத்த சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். கடனாகவும், கைமாற்றாகவும் கொடுத்த பணம் கைக்கு வரும். நல்லவர்களின் நட்பு கிடைக்கும். கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள்.

இருவரும் கலந்தாலோசித்து செலவுகளைக் குறைக்க திட்டமிடுவீர்கள். குழந்தை பாக்யம் கிடைக்கும். உறவினர்களால் ஆதாயம் கிடைப்பதுடன் கௌரவமும் ஒருபடி உயரும். ஏளனமாகவும், இழிவாகவும் திட்டியவர்கள் எல்லாம் இனி உங்களை பாராட்டுவார்கள். வீட்டை மாற்றுவது, விரிவுபடுத்திக் கட்டுவது போன்ற முயற்சிகள் வெற்றியடையும். இயக்கம், சங்கம் இவற்றில் கௌரவப் பதவிகள் தேடி வரும். 14.02.2018 முதல் 13.4.2018 வரை உங்கள் ராசிக்கு குருபகவான் வக்ரகதியிலும், அதிசாரத்திலும் 12வது வீட்டில் அமர்வதால் கொஞ்சம் சிக்கனமாக இருங்கள்.

26.7.2017 வரை கேது உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான மூன்றாவது வீட்டில் தொடர்வதால் சவாலான விஷயங்களையும் சாதாரணமாக முடிப்பீர்கள். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். வெளிமாநில புண்ணிய தலங்கள் செல்வீர்கள். வி.ஐ.பிகள் நட்பால் செல்வாக்கு அடைவீர்கள். பெரிய பதவிகள் தேடி வரும். குல தெய்வக் கோயிலை புதுப்பிக்க உதவுவீர்கள். பல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கி நின்றீர்களே! இனி விழாக்களில் முதல்மரியாதை கிடைக்கும். மகளின் கல்யாணத்தை சிறப்பாக முடிப்பீர்கள். வேலைக்கு விண்ணப்பித்துக் காத்துக்கொண்டிருந்த ராசிக்கு 9ம் வீட்டில் ராகு தொடர்வதால் தந்தையாருடன் மனஸ்தாபங்கள் வரக்கூடும். மருத்துவச் செலவுகளும் உண்டு. பிதுர் வழி சொத்துகளை பெறுவதில் பிரச்னைகள் வந்து நீங்கும்.

27.7.2017 முதல் 2ம் வீட்டில் கேதுவும், 8ம் வீட்டில் ராகுவும் அமர்வதால் கடு கடுப்பாகப் பேசாதீர்கள். சில சமயங்களில் நீங்கள் விளையாட்டாக பேசப் போய் அது விபரீதமாக முடியும். உறவினர்கள் சிலர் பணம் கேட்டு நச்சரிப்பார்கள். 12.7.2017 முதல் 28.8.2017 வரை செவ்வாய் 8ல் அமர்வதால் கணவன்மனைவிக்குள் மனக்கசப்புகள் வரும். உங்கள் இருவருக்குள் வீண் சந்தேகத்தை ஏற்படுத்தி பிரிவை உண்டாக்க சிலர் முயற்சி செய்வார்கள். பழைய கசப்பான சம்பவங்களையெல்லாம் அவ்வப்போது நினைவுகூர்ந்து பேசாதீர்கள். அதன் மூலமாக இருவருக்குள்ளும் பிரச்னைகள் வரக்கூடும்.

சகோதர வகையில் சச்சரவு வரும். சொத்துப் பிரச்னை தலைதூக்கும். பூர்வீக சொத்து விஷயத்தில் அதிகம் செலவு செய்து கொண்டிருக்க வேண்டாம். வழக்குகளில் எச்சரிக்கையாக இருங்கள். தேவைப்பட்டால் வழக்கறிஞரை மாற்றுவது நல்லது. 28.6.2017 முதல் 26.7.2017 வரை சுக்கிரன் 6ல் மறைவதால் பேச்சால் பிரச்னைகளும் வரக்கூடும். மற்றவர்கள் வீட்டு விஷயங்களில் நீங்கள் தலையிடாமல் இருப்பது நல்லது. நீங்கள் நியாயமாகவும், யதார்த்தமாகவும் பேசினாலும் சிலர் நீங்கள் ஒருசார்பாக பேசுவதாக குறை கூறுவார்கள்.

வியாபாரிகளே! சித்திரை, வைகாசி, ஆவணி மாதங்களில் பற்று வரவு உயரும். திடீரென்று அறிமுகமாகுபவர்களை நம்பி கடன் தர வேண்டாம். புது ஒப்பந்தங்களும் கைகூடும். பெரிய வாய்ப்புகளும் தேடி வரும். சந்தையில் உங்கள் நிறுவனத்தின் மதிப்பு கூடும். வர்த்தக சங்கத்தில் பதவி கிடைக்கும். கடையை நவீனமாக்குவீர்கள். புது வேலையாட்களை பணியில் அமர்த்துவீர்கள். பங்குதாரர்களை மாற்ற வேண்டி வரும். வியாபார விஷயமாக வழக்கு என நீதிமன்றம் செல்ல வேண்டாம். எதுவாக இருந்தாலும் பேசித் தீர்ப்பது நல்லது. முடிந்தவரை புதிய பங்குதாரரை சேர்க்கும் போது வழக்கறிஞரை ஆலோசித்து முடிவெடுக்கப்பாருங்கள்.

உத்யோகஸ்தர்களே! உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். அலுவலகம் சம்பந்தமாக வெளி மாநிலம், அயல்நாடு செல்ல வேண்டி வரும். என்றாலும் அதிகாரிகள் ஒருதலைப் பட்சமாக செயல்பட வாய்ப்பிருக்கிறது. அலுவலகம் சம்பந்தப்பட்ட முக்கிய ஆவணங்களை கவனமாகக் கையாளுங்கள். ஆவணங்கள் காணாமல் போக வாய்ப்பிருக்கிறது. சக ஊழியர்களின் சொந்த விஷயங்களில் தலையிட வேண்டாம். விரும்பத்தகாத இடமாற்றங்களும் இருக்கும். வைகாசி, ஆனி மாதங்களில் சம்பளம் கூடும். மார்கழி, பங்குனி மாதங்களில் புது பொறுப்புகள் வரும்.

கன்னிப்பெண்களே! காதல் கைகூடும். தாயாரை தவறாகப் புரிந்து கொள்ளாதீர்கள். விடுபட்ட பாடத்தை மீண்டும் எழுதி தேர்ச்சி பெறுவீர்கள். கெட்ட நண்பர்களிடமிருந்து விடுபடுவீர்கள். வேலை கிடைக்கும். அயல்நாடு செல்லும் வாய்ப்பு உண்டாகும்.

மாணவ, மாணவியர்களே! விளையாட்டுத்தனம் வேண்டாம். ஆசிரியர்கள் பக்கபலமாக இருப்பார்கள். பெற்றோரின் ஒத்துழைப்பும் அதிகரிக்கும்.

கலைத்துறையினரே! விருதுக்கு உங்கள் பெயர் தேர்ந்தெடுக்கப்படும். சக கலைஞர்கள் உங்களை மதிப்பார்கள். அரசால் கௌரவிக்கப்படுவீர்கள்.

அரசியல்வாதிகளே! வெறும் பேட்டி, வெத்துப் பேச்சை எல்லாம் தவிர்த்து விட்டு தொகுதி மக்களிடம் நேரடியாக சென்று குறை கேட்டு உதவப்பாருங்கள். மேலிடத்திற்கு நெருக்கமாவீர்கள். என்றாலும் உட்கட்சி பூசல் வெடிக்கும்.

விவசாயிகளே! நெல், உளுந்து, வேர்க்கடலை போன்றவை பூச்சித் தொல்லையால் கொஞ்சம் பாதிக்கும். கரும்பு, வாழை போன்றவை ஆதாயம் தரும். தேக்கு, தென்னை மரங்களும் லாபம் தரும். இந்தப் புத்தாண்டு தத்தளித்துக் கொண்டிருந்த உங்களை தலை நிமிர வைப்பதுடன் புகழையும் பணத்தையும் தருவதாக அமையும்.

பரிகாரம்:

சென்னை மயிலாப்பூர் லஸ் கார்னரில் அருளும் நவசக்தி விநாயகருக்கு அறுகம்புல்மாலை அணிவித்து அர்ச்சனை செய்யவும். கட்டிடத் தொழிலாளர்களுக்கு நீர்மோர் வழங்கவும்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58539
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 11886

View user profile

Back to top Go down

 ஹேவிளம்பி ஆண்டு பலன்கள் ! Empty Re: ஹேவிளம்பி ஆண்டு பலன்கள் !

Post by krishnaamma on Sun Apr 16, 2017 4:47 pm

மகரம்

வெளிப்படையாக மற்றவர்களை விமர்சிப்பதைக் கூட விரும்பாத நீங்கள், விரக்தியடைந்து வருபவர்களை கனிவான பேச்சால் கரையேற்றுபவர். மேல் தட்டு மக்களை விட குடிசையில் வாழ்பவர்களுக்காக அதிகம் யோசிப்பீர்கள். கூட்டுக் குடும்பமாய் வாழ விரும்பும் நீங்கள், அசைக்க முடியாத தெய்வ பக்தி உள்ளவர்கள். கற்பனையில் சிறகடித்து கதை, கவிதை வடிக்கும் நீங்கள் யாருக்கும் கட்டுப்படாத சுதந்திரப் பறவைகள். உதட்டால் உளறாமல் இதயத்தால் பேசும் நீங்கள், குலம், கோத்திரம் பார்க்காமல் பாசமுடன் பழகுபவர்கள். உங்கள் ராசிக்கு பிரபல யோகாதிபதியாகிய சுக்கிரன் உச்சம் பெற்று இருக்கும் நேரத்தில் இந்த புத்தாண்டு பிறப்பதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். உயர் ரக ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். எதிர்ப்புகள் நீங்கும். வாகனத்தை சீர் செய்வீர்கள். தாய்வழி உறவினர்களுடன் இருந்து வந்த உரசல்கள் விலகும். வீடு வாங்குவது, விற்பது போன்ற முயற்சிகள் பலிதமாகும்.

உங்கள் ராசிக்கு 10வது வீட்டில் இந்த ஹேவிளம்பி ஆண்டு பிறப்பதால் உங்களின் நிர்வாகத் திறன், ஆளுமைத் திறன் அதிகரிக்கும். இதுநாள் வரை நீங்கள் உழைத்த உழைப்பு, சிந்திய வியர்வைக்கெல்லாம் நல்ல பலன் கிடைக்கும். வேலைக்கு விண்ணப்பித்துக் காத்துக்கொண்டிருந்தவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் புது உத்யோகம் அமையும். அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். மகிழ்ச்சியான சம்பவங்கள் குடும்பத்தில் நடக்கும். 1.9.2017 வரை குருபகவான் உங்கள் ராசிக்கு 9வது வீட்டில் நின்று கொண்டிருப்பதனால் உங்களின் அடிப்படைத் தேவைகள் பூர்த்தியடையும். அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். புது வீடு கட்டி குடி புகுவீர்கள். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். குடும்பத்திற்காக கொஞ்சம் நேரம் ஒதுக்குவீர்கள். கணவன்மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவீர்கள். மழலை பாக்யம் கிடைக்கும். குடும்பத்துடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள்.

உறவினர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். பால்ய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். மனைவிவழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். மனைவிவழி உறவினர்கள் புகழும்படி நடந்து கொள்வீர்கள். சொந்த ஊர் பொதுக் காரியங்களை எடுத்து நடத்துவீர்கள். ஆனால், 2.9.2017 முதல் 13.2.2018 வரை குருபகவான் உங்கள் ராசிக்கு 10வது வீட்டிற்கு வருவதால் அதுமுதல் சிறு சிறு அவமானங்களும், விமர்சனங்களும், வீண்பழியும் அதிகரிக்கும். யாருக்கும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். மனைவியின் குற்றம், குறைகளை அடிக்கடி குத்திக்காட்ட வேண்டாம். மனைவிவழி உறவினர்களுக்காக நாம் எவ்வளவு கொடுத்து உதவினாலும் நமக்கு நல்ல பெயர் இல்லையே என்றெல்லாம் ஆதங்கப்படுவீர்கள். தாய்வழி சொத்துப் பிரச்னை தலைதூக்கும்.

ஆனால், 14.2.2018 முதல் 13.4.2018 வரை உள்ள காலக்கட்டத்தில் குருபகவான் வக்ரகதியிலும், அதிசாரத்திலும் லாப வீட்டில் வந்து அமரவிருப்பதனால் அதுமுதல் தொட்டது துலங்கும். பணப்புழக்கம் அதிகமாகும். செலவுகளைக் குறைக்க திட்டமிடுவீர்கள். எங்கு சென்றாலும் வரவேற்பு அதிகரிக்கும். பிதுர்வழி சொத்து கைக்கு வரும். உறவினர்கள் சிலர் உங்களின் அதிரடியான வளர்ச்சியைக் கண்டு பொறாமைப்படுவார்கள். 26.7.2017 வரை உங்கள் ராசிக்கு 2ல் கேதுவும், 8ல் ராகுவும் நிற்பதனால் அடுத்தவர்களின் அந்தரங்க விஷயங்களில் தலையிட வேண்டாம். எதிலும் நாட்டமின்மை, பிடிப்பற்ற போக்கு வந்து செல்லும். சில நேரங்களில் கறாராகப் பேசி சிலரின் மனதை புண்படுத்துவீர்கள். சாதாரணமாகப் பேசப் போய் சண்டையில் முடியும். யாருக்காகவும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். அவ்வப்போது கண் பார்வையை பரிசோதித்துக் கொள்ளுங்கள். பல் மற்றும் காது வலி வந்து போகும்.

27.7.2017 முதல் இந்த வருடம் முடியும் வரை ராசிக்கு 7ல் ராகுவும், ராசிக்குள்ளேயே கேதுவும் அமர்வதால் காலாவதியான மாத்திரைகளைத் தவிர்ப்பது நல்லது. ஆன்மிக விழாக்களில் முதல் மரியாதை கிடைக்கும். லாகிரி வஸ்துகளை தவிர்ப்பது நல்லது. அவ்வப்போது தலைசுத்தல் வரும். எண்ணெயில் பொரித்த உணவுகள், வெளிஉணவுகள் போன்றவற்றை உட்கொள்ள வேண்டாம். அவ்வப்போது உணர்ச்சிவசப்படுவீர்கள். கணவன்மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. சனிபகவான் உங்கள் ராசிக்கு 18.12.2017 வரை லாப வீட்டில் தொடர்வதால் திடீர் பணவரவால் பழைய கடனையெல்லாம் பைசல் செய்வீர்கள். வி.ஐ.பிகளின் துணையுடன் சில காரியங்களை சாதிப்பீர்கள். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். ஆனால் 19.12.2017 முதல் சனி 12ல் மறைந்து விரய சனியாக வருவதனால் வீண் பழி, பண இழப்பு, ஏமாற்றங்கள் வந்து போகும். தூக்கம் குறையும்.

தன்னம்பிக்கை குறையும். தாயாரின் உடல் நலம் பாதிக்கும். அவருக்கு முதுகுத் தண்டில் வலி, பல், முழங்கால், மூட்டு வலி வந்து செல்லும். தாய்வழி உறவினர்களுடன் பனிப்போர் வெடிக்கும். இளைய சகோதரங்கள் உங்களை தவறாகப் புரிந்து கொள்வார்கள். சந்தேக புத்தியால் நல்லவர்களை இழக்க வேண்டி வரும். யாரை நம்புவது என்கிற மனக்குழப்பத்திற்கு ஆளாவீர்கள். மற்றவர்களின் ஆலோசனையை முழுமையாக ஏற்காமல் நீங்களும் ஒருமுறைக்கு பல முறை யோசித்து சில முடிவுகள் எடுக்கப்பாருங்கள். பழைய கடனை நினைத்து அவ்வப்போது கலங்குவீர்கள். 26.7.2017 முதல் 21.8.2017 வரை சுக்கிரன் 6ல் மறைவதால் சிறுசிறு வாகன விபத்துகள் வந்து நீங்கும். எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் அடிக்கடி பழுதாகும். 28.8.2017 முதல் 15.10.2017 வரை செவ்வாய் 8ல் மறைவதனால் மனஇறுக்கமும், எதிர்காலம் பற்றிய பயமும், எந்த காரியத்தை தொட்டாலும் தாமதமாக முடியும் போக்கும் உண்டாகும். சகோதரங்களால் அலைச்சல் இருக்கும்.

வியாபாரிகளே! தொட்டது துலங்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். வேலையாட்களின் ஒத்துழைப்பும் அதிகரிக்கும். வணிகர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். சித்திரை, வைகாசி, ஆனி, பங்குனி மாதங்களில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். விளம்பர யுக்திகளை கையாண்டு லாபத்தை இரட்டிப்பாக்குவீர்கள். சந்தை நுணுக்கங்களை கற்றுக் கொண்டு பெரிய முதலீடுகள் செய்வீர்கள். மார்கழி, தை மாதங்களில் லாபம் குறையும். பங்குதாரர்களுடன் வீண் வாக்குவாதம் வேண்டாம். வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குங்கள். கூட்டுத் தொழில் வேண்டாம்.

உத்யோகஸ்தர்களே! உங்கள் கை ஓங்கும். அலுவலக ரகசியங்களை மூத்த அதிகாரி உங்களிடம் பகிர்ந்து கொள்வார். வைகாசி, ஆனி மாதங்களில் சம்பள உயர்வு, பதவி உயர்வு உண்டு. புது வாய்ப்புகளும் வரும். சக ஊழியர்கள் உங்கள் வேலையை பகிர்ந்து கொள்வார்கள். இழந்த சலுகைகள், பதவிகளை மீண்டும் பெறுவீர்கள். வேறு சில வாய்ப்புகளும் தேடி வரும். வழக்கிலிருந்து விடுபடுவீர்கள். மார்கழி, தை மாதங்களில் உத்யோகத்தில் உங்களை பற்றி மறைமுக விமர்சனங்கள் வந்து போகும். அதிகாரியிடம் வளைந்து கொடுத்துப் போவது நல்லது.

கன்னிப்பெண்களே! போலியாக பேசுபவர்களை நம்பி இனியும் ஏமாற வேண்டாம். நிஜம் எது நிழல் எது என்பதையும் உணர்வீர்கள். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். நல்ல வேலை கிடைக்கும். சிலருக்கு அரசு உத்யோக வாய்ப்புகளும் உண்டு. திருமண முயற்சி கூடி வரும்.

மாணவ, மாணவியர்களே! படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். மதிப்பெண் உயரும். வகுப்பாசிரியர் பாராட்டும்படி நடந்து கொள்வீர்கள். கவிதை, கட்டுரைப் போட்டிகளிலும் வெற்றி பெறுவீர்கள். சிலர் வேறு பள்ளிக்கு மாற வேண்டியிருக்கும்.

கலைத்துறையினரே! புது வாய்ப்பு கிடைத்து அதிகம் சம்பாதிப்பீர்கள். வேற்றுமொழி வாய்ப்புகளால் புகழடைவீர்கள். சிலருக்கு உயர்ந்த விருது கிடைக்கும்.

அரசியல்வாதிகளே! நகைச்சுவையாகவும், நாசூக்காகவும் பேசி மக்கள் மனதில் இடம் பிடிப்பீர்கள். பெரிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். செல்வாக்குக் கூடும்.

விவசாயிகளே! வாய்க்கால், வரப்புச் சண்டைக்கு தீர்வு கிடைக்கும். புதிதாக ஆழ்குழாய் கிணறு அமைப்பீர்கள். எதிர்பார்த்த வங்கிக் கடன் உதவி கிட்டும். உளுந்து, வேர்க் கடலை, சவுக்கு வகைகளால் லாபமடைவீர்கள். இந்தப் புத்தாண்டு எடுத்த காரியங்களை முடித்துக் காட்டும் வல்லமையையும், வசதி வாய்ப்புகளையும் தருவதாக அமையும்.

பரிகாரம்:

சென்னை நங்கநல்லூர் ஆதிவியாதி ஹர ஆஞ்சநேயரை தரிசிக்கவும். நாய்களுக்கு உணவளிக்கவும்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58539
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 11886

View user profile

Back to top Go down

 ஹேவிளம்பி ஆண்டு பலன்கள் ! Empty Re: ஹேவிளம்பி ஆண்டு பலன்கள் !

Post by krishnaamma on Sun Apr 16, 2017 4:48 pm

கும்பம்

எதிரில் இருப்பவர் பேசத் தொடங்கும் போதே அடுத்ததாக அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை அறிவதில் கில்லாடிகள் நீங்கள்தான். கவரிமானைப் போல கௌரவம் பார்க்கும் உங்களை பணத்தைக் காட்டி விலைக்கு வாங்க முடியாது. பெற்ற பிள்ளைகள் முதல் வளர்ப்புப் பிராணிகள் வரை வரம்பு மீறி நடந்து கொள்ள அனுமதிக்க மாட்டீர்கள். சுவையான சாப்பாட்டை விரும்பும் நீங்கள், சில நேரங்களில் காடு, மலைகளில் கிடைக்கும் காய், கனிகளில் கூட திருப்தியடைவீர்கள். வாக்குவாதம் என வந்து விட்டால் வரிந்து கட்டி வாதாடுபவர்களே! உங்கள் ராசிக்கு 9ம் வீட்டில் இந்த புத்தாண்டு பிறப்பதால் மற்றவர்கள் செய்ய முடியாத சவாலான காரியங்களையும் சாமர்த்தியமாக செய்து முடிப்பீர்கள். உங்கள் ராசிக்கு 2ம் வீட்டில் சுக்கிரனும், 3ம் வீட்டில் சூரியனும் அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்த ஆண்டு பிறப்பதால் தைரியமாக சில முடிவுகள் எடுப்பீர்கள்.

பிரபலங்களையும் நல்ல விதத்தில் பயன்படுத்திக் கொள்வீர்கள். 1.9.2017 வரை குரு உங்கள் ராசிக்கு 8ம் வீட்டில் இருப்பதால் எதையோ இழந்ததைப் போல் ஒருவித கவலைகள், சிலர் மீது நம்பிக்கையின்மை, வீண் அலைச்சல் வந்து செல்லும். மறைமுக எதிரிகள் முளைப்பார்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். முன்கோபத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க நேரிடும். அனாவசியமாக யாரையும் வீட்டிற்குள் அழைத்து வர வேண்டாம். குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை, மனைவி, பிள்ளைகளுடன் மனம் விட்டுப் பேச முடியாத நிலை வந்து போகும். 2.9.2017 முதல் 13.2.2018 வரை உள்ள காலக்கட்டத்தில் 9ம் வீட்டில் குரு அமர்வதால் இடையூறுகளைக் கடந்து வெற்றி பெறுவீர்கள். சில இடங்களில், சில நேரங்களில் அமைதியாக இருந்து காரியம் சாதிப்பீர்கள். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். பாதியில் நின்ற வீடு கட்டும் பணியை தொடங்குவீர்கள்.

அரசால் அனுகூலம் உண்டு. குடும்பத்தில் தள்ளிப் போன திருமணம், சீமந்தம், காதுகுத்து போன்ற நிகழ்ச்சிகளெல்லாம் விரைந்து முடியும். ஆனால், 14.2.2018 முதல் 13.4.2018 வரை உள்ள காலக்கட்டத்தில் குரு வக்ரகதியிலும், அதிசாரத்திலும் 10வது வீட்டில் செல்வதனால் தாய்வழி சொத்துப் பிரச்னை தலைதூக்கும். உத்யோகத்திலும் இடமாற்றம் இருக்கும். வி.ஐ.பிகளை பகைத்துக் கொள்ளாதீர்கள். யாருக்கும் யாரையும் பரிந்துரை செய்யாதீர்கள். மறதியால் விலை உயர்ந்த பொருட்கள், செல் போன் போன்றவற்றை இழக்க நேரிடும். அக்கம்பக்கம் வீட்டாருடன் அளவாகப் பழகுங்கள். சிலர் உங்களிடம் நயமாகப் பேசினாலும் தன் சொந்த விஷயங்களை பகிர்ந்து கொள்ள வேண்டாம்.

26.7.2017 வரை உங்கள் ராசிக்கு 7ம் வீட்டில் ராகுவும், ராசிக்குள்ளேயே கேதுவும் நின்று கொண்டிருப்பதனால் ஆரோக்யத்தில் அக்கறை காட்டுங்கள். யோகா, தியானப் பயிற்சியில் ஈடுபடுவது நல்லது. முன்கோபத்தைக் குறையுங்கள். மின்சாரம், நெருப்பு இவற்றைக் கவனமாக கையாளுங்கள். அடிக்கடி தலைசுற்றல் வரும். ரத்த அழுத்தம் அதிகரிக்கும். அவ்வப்போது வெளிக் காற்று வாங்குவது நல்லது. மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம். கணவன்மனைவிக்குள் கருத்து மோதல்கள் வரும். சந்தேகத்தால் இருவரும் பிரிய வேண்டி வரும். திடீர் நண்பர்களை நம்பி பெரிய முடிவுகள் எதுவும் எடுக்க வேண்டாம். வெளி நபர்களை வீட்டிற்குள் அனுமதிக்க வேண்டாம். யாருக்காகவும் ஜாமீன், கேரன்டர் கையெழுத்திட வேண்டாம்.

மனைவிக்கு மாதவிடாய் கோளாறு, தைராய்டு பிரச்னைகள் வரக்கூடும். ஆனால், 27.7.2017 முதல் உங்கள் ராசிக்கு 6வது வீட்டில் ராகு அமர்வதால் அரைகுறையாக நின்று போன வீடு கட்டும்பணி முழுமையடையும். தெலுங்கு, ஹிந்தி பேசுபவர்களால் திடீர் யோகமுண்டு. அரசாங்க அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். மறைமுக எதிரிகளை இனங்கண்டறிந்து ஒதுக்குவீர்கள். 27.7.2017 முதல் 12ல் கேது நிற்பதால் சில நேரங்களில் அலைச்சல், தூக்கமின்மை வந்துசெல்லும். நெடுநாட்களாக தடைபட்டுக் கொண்டிருந்த குலதெய்வ நேர்த்திக்கடனை செய்து முடிப்பீர்கள்.

21.8.2017 முதல் 15.9.2017 வரை சுக்கிரன் 6ல் மறைவதால் அலைபேசியில் பேசிக் கொண்டு வாகனத்தை இயக்க வேண்டாம். வாகனம் பழுதாகும். கணவன்-மனைவிக்குள் யார் ஜெயிப்பது, யார் தோற்பது என்ற போட்டிகளெல்லாம் வேண்டாம். ஈகோ பிரச்னையை தவிர்க்கப்பாருங்கள். வீண் சந்தேகத்தாலும் சண்டை, சச்சரவுகள் வரக்கூடும். 15.10.2017 முதல் 1.12.2017 வரை உள்ள காலக்கட்டத்தில் செவ்வாய் 8ல் மறைவதனால் கட்டுக்கடங்காத செலவுகள் வந்து கொண்டேயிருக்கும். சொத்துக்குரிய ஆவணங்கள், பத்திரங்கள் தொலைந்து விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். சகோதர வகையிலும் போதிய ஒத்துழைப்பு இல்லையே என்று வருத்தப்படுவீர்கள்.

உங்களின் ராசிநாதனாகிய சனிபகவான் உங்கள் ராசிக்கு 18.12.2017 வரை 10வது வீட்டில் தொடர்வதால் எதையும் சாதிக்கும் துணிச்சல் வரும். உடல் ஆரோக்யம் சீராகும். வெளிவட்டாரத்தில் செல்வாக்குக் கூடும். உங்களை புகழ்வதைப் போல் இகழ்ந்தவர்களை எல்லாம் ஓரங்கட்டுவீர்கள். வேற்றுமதத்தவர்கள் உதவுவார்கள். அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். என்றாலும் வேலைச்சுமை இருந்து கொண்டேயிருப்பதாக ஆதங்கப்படுவீர்கள். 19.12.2017 முதல் வருடம் முடியும் வரை சனி லாப வீட்டில் அமர்வதால் உங்களை தலைநிமிர வைக்கும். செயலில் வேகம் கூடும். வருமானம் உயரும். ஹிந்தி, தெலுங்கு பேசுபவர்கள் உதவுவார்கள். சுயதொழில் தொடங்கும் முயற்சியில் இறங்குவீர்கள். சொந்த ஊரில் பொதுகாரியங்களில் ஈடுபடுவீர்கள். வெளிவட்டாரத்தில் புகழ், கௌரவம் வளரும்.

வியாபாரிகளே! போட்டியாளர்களை முறியடிக்க அதிகம் உழைக்க வேண்டி வரும். வெளிநாட்டு நிறுவனம், புகழ் பெற்ற நிறுவனம் என்று விளம்பரங்களை நம்பி தீர விசாரிக்காமல் முதலீடு செய்ய வேண்டாம். வேலையாட்களின் குறை, நிறைகளை அன்பாக சுட்டிக் காட்டி திருத்துங்கள். வைகாசி, ஐப்பசி, ஆடி மாதங்களில் லாபம் அதிகரிக்கும். புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். பழைய பங்குதாரர் விலகுவார்.

உத்யோகஸ்தர்களே! வேலைச்சுமை அதிகரிக்கும். உங்கள் திறமையை மூத்த அதிகாரி பரிசோதிப்பார். அடிக்கடி விடுப்பில் செல்வோரின் வேலையையும் சேர்த்துப் பார்க்க வேண்டி வரும். நேரங்காலம் பார்க்காமல் உழைத்தும் எந்த பயனும் இல்லையே, என்று அவ்வப்போது ஆதங்கப்படுவீர்கள். ஆடி, ஆவணி மாதங்களில் சூழ்ச்சிகளை தாண்டி அதிகாரியின் ஆதரவை பெறுவீர்கள். கார்த்திகை, மாசி மாதங்களில் அலுவலகத்தில் உங்கள் கை ஓங்கும்.

கன்னிப்பெண்களே! ஆகஸ்ட் மாதம் வரை கனவுத் தொல்லை, முகப்பரு, தலை முடி உதிர்தல் வந்து செல்லும். செப்டம்பர் மாதம் முதல் உங்கள் கனவுகள் நனவாகும். திருமணம் நீங்கள் நினைத்த படி முடிவடையும். புது வேலை கிடைக்கும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள்.

மாணவ, மாணவியர்களே! சாதித்துக் காட்ட வேண்டுமென்ற வேகம் இருந்தால் மட்டும் போதாது அதற்கான உழைப்பும் வேண்டும். அன்றன்றைய பாடங்களை அன்றே படியுங்கள். விரும்பிய கோர்ஸில் போராடி சேர்வீர்கள்.

கலைத்துறையினரே! விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். உங்களின் படைப்புக்கு வேறு சிலர் உரிமைக் கொண்டாடுவார்கள். வெளியாகாமல் இருக்கும் படம் ரிலீசாகும்.

அரசியல்வாதிகளே! வீண் பேச்சில் காலம் கழிக்காமல் செயலில் ஆர்வம் காட்டுவது நல்லது. ஜெயிக்கும் அணியில் இடம் பிடிப்பீர்கள். தலைமைக்கு நெருக்கமாவீர்கள்.

விவசாயிகளே! குறுகிய காலப் பயிர்களை தவிர்த்து விடுங்கள். பக்கத்து நிலத்துக்காரருடன் அனுசரித்துப் போங்கள். எலி, பூச்சித் தொல்லை வந்து நீங்கும். பழைய கடன் குறையும். இந்த புத்தாண்டு ஆடி மாதம் வரை உங்களை அலைக்கழித்தாலும், ஆவணி மாதம் முதல் எதிர்பாராத யோகங்களை தருவதாக அமையும்.

பரிகாரம்:

வேதாரண்யம் தலத்தில் அருளும் வேதாரண்யேஸ்வரர் ஆலயத்திலுள்ள துர்க்கையை வழிபடுங்கள். ஏழைப் பெண்ணின் திருமணத்திற்கு உதவுங்கள்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58539
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 11886

View user profile

Back to top Go down

 ஹேவிளம்பி ஆண்டு பலன்கள் ! Empty Re: ஹேவிளம்பி ஆண்டு பலன்கள் !

Post by krishnaamma on Sun Apr 16, 2017 4:48 pm

மீனம்

தங்கத்தின் தரம் கூட குறையலாம் ஆனால் உங்கள் நடத்தையின் தரம் என்றும் குறையாது. குடிசை வீட்டில் பிறந்தாலும் விண்ணை முட்டும் உயர்ந்த லட்சியங்களுடன் வாழ்பவர்கள் நீங்கள்தான். சந்தர்ப்ப சூழ்நிலைக்கேற்ப வளைந்து கொடுத்துப் போவதில் உங்களுக்கு உடன்பாடில்லை. ஏக்கர் கணக்கில் சொத்து சேர்ந்தாலும் ஆறடி நிலம் கூட சொந்தமாவப் போவதில்லை என்ற பிரம்ம சூத்திரத்தை அறிந்திருப்பீர்கள். அதனால்தான் கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி எல்லோருக்கும் இருப்பதைக் கொடுப்பீர்கள். ராகு 6ம் வீட்டில் நின்று கொண்டிருக்கும் போது இந்த ஹேவிளம்பி ஆண்டு பிறப்பதால் வருமானம் அதிகரிக்கும். கடன் குறையும். வழக்குகளில் வெற்றி பெறுவீர்கள். கௌரவப் பதவிகள் தேடி வரும். வேற்று மொழிக்காரர்கள் மற்றும் வேற்றுமதத்தைச் சார்ந்தவர்களால் ஆதாயம் உண்டு. ஆடை, ஆபரணங்கள் சேரும். மிடுக்காக உடுத்துவீர்கள்.

செவ்வாய் 3ம் வீட்டில் நிற்கும் போது இந்த ஆண்டு பிறப்பதால் மனோ தைரியம் கூடும். புதிய முயற்சிகள் வெற்றியடையும். வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். மூத்த சகோதர வகையில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகம் ஆவார்கள். புதுத் தொழில் தொடங்குவதற்கு சிலர் உதவுவார்கள். ஆனால் இந்த ஹேவிளம்பி வருடம் உங்கள் ராசிக்கு 8ம் வீட்டில் பிறப்பதால் எளிதாக முடிய வேண்டிய விஷயங்களை கூட கொஞ்சம் சிரமப்பட்டு முடிப்பீர்கள். ஒரு பக்கம் பணம் வரும் என்றாலும் செலவுகள் இருமடங்காக இருந்து கொண்டேயிருக்கும். வேலைச்சுமை அதிகரிக்கும். வீட்டில் குடி நீர் குழாய், கழிவு நீர் குழாய் அடைப்பு, மின்னணு, மின்சார சாதனப் பழுது வந்து செல்லும். மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். வாகனத்தில் அதிக வேகம் வேண்டாம்.

1.9.2017 வரை உங்களின் ராசிநாதனாகிய குருபகவான் 7வது வீட்டிலேயே தொடர்வதால் அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகளாலும், நண்பர்கள், உறவினர்களின் வருகையாலும் வீடு களைகட்டும். கணவன்-மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும். அவ்வப்போது வரும் சிறு சிறு வாக்குவாதங்களை பெரிது படுத்த வேண்டாம். குழந்தை பாக்யம் உண்டு. பிள்ளைகளின் பெருமைகளைச் சொல்லி சொந்த பந்தங்கள் மத்தியில் திருப்தியடைவீர்கள். மகளுக்கு எதிர்பார்த்தபடி நல்ல வரன் அமையும். மகனுக்கு வேலை கிடைக்கும். குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். பூர்வீகச் சொத்தை உங்கள் ரசனைக்கேற்ப புதுப்பிப்பீர்கள். விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். ஆனால், 2.9.2017 முதல் 13.2.2018 வரை குரு ராசிக்கு 8ல் சென்று மறைவதால் வீண் அலைச்சல், வதந்திகள், இனம்புரியாத கவலைகள், ஒருவித பய உணர்வுகள் வந்து செல்லும்.

உங்களை சிலர் விமர்சிப்பார்கள். எதிர்மறை எண்ணங்கள் வரக்கூடும். பிள்ளைகள் கோபப்படுவார்கள். அவர்களிடம் கனிவாக நடந்து கொள்ளுங்கள். கர்ப்பிணிப் பெண்கள் நீண்ட தூரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது. பூர்வீகச் சொத்தை சரியாக பராமரிக்க முடியவில்லையே என வருத்தப்படுவீர்கள். மகனுக்கு உயர்கல்வி, உத்யோகம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் தாமதமாக முடியும். வாயுத் தொந்தரவால் நெஞ்சுவலி வரக்கூடும். பயந்து விடாதீர்கள். மெடிக்ளைம் எடுத்துக் கொள்ளுங்கள். 14.2.2018 முதல் 13.4.2018 வரை உங்களின் பாக்யஸ்தானமான 9ம் வீட்டில் குரு நுழைவதால் இடையூறுகளை கடந்து வெற்றி பெறுவீர்கள். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். பாதியில் நின்ற வீடு கட்டும் பணியை தொடங்குவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. குடும்பத்தில் தள்ளிப்போன சுப நிகழ்ச்சிகளெல்லாம் ஏற்பாடாகும்.

16.9.2017 முதல் 10.10.2017 வரை சுக்கிரன் 6ல் அமர்வதால் அந்த காலகட்டத்தில் கணவன் மனைவிக்குள் சந்தேகத்தால் சின்னச் சின்ன வாக்குவாதங்களும் வரக்கூடும். மனைவிக்கு சிறுசிறு அறுவை சிகிச்சைகளும் வந்து போக வாய்ப்பிருக்கிறது. 1.12.2017 முதல் 20.1.2018 வரை செவ்வாய் 8ல் அமர்வதால் சகோதர, சகோதரிகளுடன் பகைமை வரும். செலவினங்கள் அதிகமாகும். பழைய கடனை நினைத்தும் அவ்வப்போது அச்சப்படுவீர்கள். சிறுசிறு விபத்துகள் ஏற்படக்கூடும். 26.7.2017 வரை கேது பகவான் உங்கள் ராசிக்கு 12ல் மறைந்திருப்பதால் திடீர் பயணங்கள் அதிகரிக்கும். நீண்ட நாட்களாகப் போக நினைத்த புண்ணிய தலங்களுக்குச் சென்று வருவீர்கள். கோயில் கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்துவீர்கள். சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும் அத்தியாவசியச் செலவுகள் அதிகரிக்கும்.

ஆனால், 27.7.2017 முதல் இந்த வருடம் முடியும்வரை உங்கள் ராசிக்கு லாப வீட்டில் கேது அமர்வதால் எதிர்பார்த்த பணம் வரும். வழக்குகள் சாதகமாகும். வேற்றுமொழி பேசுபவர்கள் உதவுவார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் மூலமாக சில காரியங்களை சாதிப்பீர்கள். ட்ரஸ்ட் தொடங்குவீர்கள். ஆனால், 5ல் ராகு நிற்பதால் பூர்வீகச் சொத்தில் சட்டச் சிக்கல் வரும். கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம். சில நேரங்களில் மன இறுக்கம் வந்து நீங்கும். தாய்மாமன் வகையில் செலவுகள் அதிகரிக்கும்.

சனிபகவான் 18.12.2017 வரை 9ம் வீட்டில் நீடிப்பதால் குடும்ப வருமானத்தை அதிகப்படுத்துவீர்கள். தன்னம்பிக்கை பிறக்கும். தோல்வி மனப்பான்மையிலிருந்து விடுபடுவீர்கள். தந்தையாருடன் மனத்தாங்கல் வந்து நீங்கும். ஆனால், 19.12.2017 முதல் 13.4.2017 வரை 10ம் வீட்டில் அமர்வதால் எதையும் சாதிக்கும் துணிச்சல் வரும். உடல் ஆரோக்யம் சீராகும். வெளிவட்டாரத்தில் செல்வாக்குக் கூடும். உங்களை சுற்றி உள்ளவர்களில் நல்லவர் யார், கெட்டவர் யார் என இனங்கண்டறிந்து ஒதுக்குவீர்கள். அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். என்றாலும் வேலைச்சுமை இருந்து கொண்டேயிருப்பதாக ஆதங்கப்படுவீர்கள். உத்யோகத்தில் அடிக்கடி இடமாற்றம் வந்து போகும். மேலதிகாரி உங்கள் திறமையை குறைத்து மதிப்பிடுவார். மறைமுக அவமானம் ஏற்படக்கூடும்.

வியாபாரிகளே! தள்ளுபடி விற்பனை மூலம் பழைய சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். சித்திரை, வைகாசி, ஆவணி மாதங்களில் வியாபாரம் சூடுபிடிக்கும். புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். அனுபவமிக்க வேலையாட்கள் திடீரென்று பணியை விட்டு விலகுவார்கள். பங்குதாரர்களிடம் வளைந்து கொடுத்துப் போங்கள். மார்கழி, தை மாதங்களில் பழைய பாக்கிகள் வசூலாகும். அயல்நாட்டு தொடர்புடைய புது பங்குதாரர் வர வாய்ப்பிருக்கிறது. கொடுக்கல், வாங்கலில் நிம்மதி ஏற்படும். உணவு, ஷேர், கல்வி வகைகளால் ஆதாயம் உண்டு.

உத்யோகஸ்தர்களே! உங்கள் கை ஓங்கும். எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். வைகாசி, ஆனி மாதங்களில் புது வாய்ப்புகள் வரும். உங்கள்மீது வீண்பழி சுமத்திய உயரதிகாரி மாற்றப்படுவார். மூத்த அதிகாரிகள் உங்களுக்கு முன்னுரிமை தருவார்கள். சில கூடுதல் சிறப்பு பொறுப்புகளை உங்களிடம் ஒப்படைப்பார்கள். சக ஊழியர்களின் ஒத்துழைப்புடன் தேங்கிக் கிடந்த வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். பதவி உயர்வு உண்டு. எதிர்பார்த்த சம்பள பாக்கியும் கைக்கு வரும்.

கன்னிப் பெண்களே! தடைப்பட்ட கல்யாணம் இனி கூடி வரும். காதல் கனியும். பெற்றோருக்கு சில ஆலோசனைகள் வழங்குவீர்கள். புதிதாக அறிமுகமாகுபவரிடம் கொஞ்சம் தள்ளியே இருப்பது நல்லது.

மாணவ, மாணவியர்களே! மதிப்பெண் உயரும். வகுப்பாசிரியர் பாராட்டும்படி நடந்து கொள்வீர்கள். பெற்றோர் உங்களின் தேவைகளை நிறைவேற்றுவார்கள். கவிதை, கட்டுரை, விளையாட்டுப் போட்டிகளில் பரிசு உண்டு.

கலைத்துறையினரே! பெரிய நிறுவனங்களின் அழைப்பு உங்களைத் தேடி வரும். வீண் வதந்திகளிலிருந்து விடுபடுவீர்கள்.

அரசியல்வாதிகளே! சகாக்களுடன் உரிமையாகப் பேசி பெயரைக் கெடுத்துக் கொள்ளாதீர்கள். கட்சியில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள்.

விவசாயிகளே! விளைச்சல் ரெட்டிப்பாகும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். வேர்கடலை, நெல், சூரிய காந்தி மற்றும் உளுந்து வகைகளால் லாபமடைவீர்கள். இந்த புத்தாண்டு உங்களின் சாதனை பட்டியலை நீளமாக்குவதுடன், அடிப்படை வசதி, வாய்ப்புகளை அதிகப்படுத்துவதாக அமையும்.

பரிகாரம்:

திருச்செந்தூர் முருகரை தரிசித்து வரவும். ஏதேனும் ஆலய உழவாரப்பணியை மேற்கொள்ளவும்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58539
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 11886

View user profile

Back to top Go down

 ஹேவிளம்பி ஆண்டு பலன்கள் ! Empty Re: ஹேவிளம்பி ஆண்டு பலன்கள் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை