ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
வானுயர்ந்த சோலையிலே - புகைப்படங்கள் (தொடர் பதிவு)
 ayyasamy ram

என் அப்பா.
 ayyasamy ram

‘சிங்கத்தின் வாலைப் பிடித்து விளையாடினால் வருத்தப்பட வேண்டியது வரும்’ அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை
 ayyasamy ram

போலி ரயில் டிக்கெட் தயாரித்து விற்பனை செய்தவா் கைது
 ayyasamy ram

‘திரில்’லர் படத்தில் நித்யா மேனன்!
 ayyasamy ram

சமந்தாவின் ‘யு டர்ன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
 ayyasamy ram

கை தேர்ந்த அரசியல்வாதி - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 ayyasamy ram

அமெரிக்கர்களை மிரட்டி பணம் பறித்த புகார்: 21 இந்தியர்களுக்கு சிறை - நியூயார்க் நீதிமன்றம் உத்தரவு
 ayyasamy ram

ஒரு பெக் தர்மம் பண்ணுங்க சாமி...!!
 ayyasamy ram

குறுக்கு வழியில போனா நல்லா சம்பாதிக்கலாம்...!!
 ayyasamy ram

1800 வாட்ஸ் ஆப் குழுக்கள்: பா.ஜ., அதிரடி
 ayyasamy ram

துணை ராணுவத்தில் 55 ஆயிரம் பேரை சேர்க்க திட்டம்
 ayyasamy ram

வில்லியாக நடிக்க ஆசை!
 ayyasamy ram

சன்னி லியோனின் இன்னொரு பக்கம்!
 ayyasamy ram

சினி துளிகள்
 ayyasamy ram

ஆர்யாவின் வில்லன் அவதாரம்!
 ayyasamy ram

பாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி
 ayyasamy ram

பூங்கொத்து விளையாட்டு
 ayyasamy ram

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ayyasamy ram

சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு
 கோபால்ஜி

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 ராஜா

'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு
 ayyasamy ram

குச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா
 ayyasamy ram

ஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்?
 ayyasamy ram

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்
 ayyasamy ram

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

கரையே இல்லாத ஆறு
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 sandhiya m

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

மின்னூல்கள் தரவிறக்கம்

Top posting users this week
ayyasamy ram
 

Admins Online

ஐ.பி.எல். கிரிக்கெட் - தொடர் பதிவு

View previous topic View next topic Go down

ஐ.பி.எல். கிரிக்கெட் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Wed Apr 05, 2017 6:24 pmசென்னை:

இந்தியன் பிரிமீயர் ‘லீக்’ என்று அழைக்கப்படும்
ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு
அறிமுகம் செய்யப்பட்டது.

வீரர்கள் ஏலம் முறையில் எடுக்கப்பட்டது, பல நாட்டு வீரர்கள்
ஒரு அணியில் இணைந்து ஆடியது ஆகியவற்றின் காரணமாக
இந்தப் போட்டிக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு
இருந்தது.

கோடிக்கணக்கில் பணம் புரண்டதால் இந்தப்போட்டி வர்த்தக
ரீதியாக நடத்தப்பட்டது. அதே நேரத்தில் ரசிகர்களுக்கு நல்ல
பொழுது போக்காகவும் அமைந்தது.

சென்னை சூப்பர் கிங்ஸ்,
மும்பை இந்தியன்ஸ்,
டெக்கான் சார்ஜர்ஸ்,
ராஜஸ்தான் ராயல்ஸ்,
கிங்ஸ் லெவன் பஞ்சாப்,
டெல்லி டேர்டெவில்ஸ்,
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்,
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
ஆகிய 8 அணிகள் கலந்து கொண்டன.
-
2008-ம் ஆண்டு நடந்த முதல் ஐ.பி.எல். போட்டியில் வார்னே
தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சாம்பியன் பட்டம் பெற்றது.

பாராளுமன்ற தேர்தல் காரணமாக 2009-ம் ஆண்டு போட்டி
இந்தியாவில் இருந்து தென்னாப்பிரிக்காவுக்கு மாற்றப்பட்டது.
இதில் கில்கிறிஸ்ட் தலைமையிலான டெக்கான் சார்ஜர்ஸ்
அணியும், 2010-ம் ஆண்டு டோனி தலைமையிலான சென்னை
சூப்பர் கிங்சும் சாம்பியன் பட்டம் பெற்றன.

4-வது போட்டியில் கூடுதலாக புனே வாரியர்ஸ்,
கொச்சி டஸ்கர்ஸ் ஆகிய 2 புதுமுக அணிகள் பங்கேற்றன.
10 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியிலும்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியே சாம்பியன் பட்டம் பெற்று
தொடர்ந்து 2-வது முறையாக ஐ.பி.எல். கோப்பையை வென்றது.

5-வது ஐ.பி.எல். போட்டியில் 9 அணிகள் விளையாடின.
விதிமுறை மீறி செயல்பட்டதால் கொச்சி டஸ்கர்ஸ் அணி
நீக்கப்பட்டது. இதில் காம்பீர் தலைமையிலான கொல்கத்தா
நைட் ரைடர்ஸ் அணி கோப்பையை வென்றது.

2013-ல் நடந்த 6-வது போட்டியில் டெக்கான் சார்ஜர்ஸ் அணி
நீக்கப்பட்டதால் சன்ரைசர்ஸ் அணி விளையாடியது.
இதில் மும்பை இந்தியன்ஸ் கோப்பையை வென்றது.
அந்த போட்டியோடு புனே வாரியர்ஸ் அணி கலைக்கப்பட்டது.

7-வது ஐ.பி.எல். ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் இந்தியாவில்
போட்டி நடந்தது. 8 அணிகள் பங்கேற்ற இந்தப்போட்டியில்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 2-வது முறையாக கோப்பையை
வென்றது.

2015-ம் ஆண்டு நடந்த ஐ.பி.எல். போட்டியில் மும்பை இந்தியன்ஸ்
சாம்பியன் பட்டம் பெற்றது. 2-வது முறையாக கோப்பையை
வென்றது.

கடந்த ஆண்டு ஸ்பாட்பிக்சிங் சூதாட்டத்தில் ஈடுபட்டதற்காக
சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகளுக்கு
2 ஆண்டு தடை விதிக்கப்பட்டது.

அவற்றுக்கு பதிலாக ரைசிங் புனே சூப்பர் ஜெய்ன்ட்ஸ்,
குஜராத் லயன்ஸ் ஆகிய 2 அணிகள் 2 ஆண்டுக்கு ஒப்பந்தம்
செய்யப்பட்டன. கடந்த ஆண்டு (2016) நடந்த போட்டியில்
வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் கோப்பையை
வென்றது.
-


10-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா (புதன்கிழமை)
தொடங்குகிறது. மே மாதம் 21-ந்தேதி வரை 41 நாட்கள்
இந்தப்போட்டி நடக்கிறது.
-
--------------------------------
-மாலை மலர்
------------------

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37396
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: ஐ.பி.எல். கிரிக்கெட் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Wed Apr 05, 2017 6:28 pm

10-வது ஐ.பி.எல். கிரிக்கெட்
--.

-
8 அணிகள் விளையாடும் இந்தப்போட்டியில் ஒவ்வொரு
அணிக்கும் 14 ஆட்டங்கள் இடம் பெறும். ‘லீக்’ முடிவில்
முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளேஆப்’ சுற்றுக்கு
முன்னேறும்.

எந்த ஐ.பி.எல் போட்டியிலும் இல்லாத வகையில் இந்த ஐ.பி.எல்.
போட்டியில் வீரர்களின் காயம் அதிகரித்து உள்ளது. அஸ்வின்,
முரளி விஜய், ராகுல், டுமினி, குயின்டன் டிகாக், மிச்சேல் மார்ஷ்,
ஸ்டார்க் போன்ற வீரர்கள் காயம் காரணமாக முற்றிலும்
விலகியுள்ளனர்.

விராட் கோலி, ஜடேஜா, உமேஷ் யாதவ் மற்றும் சில வெளிநாட்டு
வீரர்கள் காயத்தால் சில போட்டிகளில் ஆடமாட்டார்கள்.
உலகின் சிறந்த அதிரடி பேட்ஸ்மேனான டிவில்லியர்சும் காயத்தில்
உள்ளார். அவர் எப்போது அணியோடு இணைவார் என்று
தெரியவில்லை.

உலகின் தலைசிறந்த அதிரடி பேட்ஸ்மேன்கள் விளையாடுவதால்
எப்போதும் போல இந்த ஐ.பி.எல். போட்டியும் விறுவிறுப்பாக
இருக்கும்.

ஏலத்தில் அதிக தொகைக்கு விலைபோன இங்கிலாந்து
ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் மீது எதிர்பார்ப்பு இருக்கிறது.

கிறிஸ் கெய்ல், டி வில்லியர்ஸ், வார்னர், சுமித், மார்கன்,
மேக்ஸ்வெல் போன்ற வெளிநாட்டு அதிரடி வீரர்களுடன்
விராட் கோலி, ரகானே, ரெய்னா, யுவராஜ் சிங், காம்பீர்,
யூசுப் பதான், மனிஷ் பாண்டே, ஹர்த்திக் பாண்டியா போன்ற
இந்திய வீரர்களும் உள்ளனர்.

தமிழகத்தை சேர்ந்த புதுமுக வீரர்களான ஜெகதீசன் நடராஜன்,
முருகன் அஸ்வின் ஆகியோரும் தாக்கத்தை ஏற்படுத்துவார்கள்
என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஐதராபாத்தில் நாளை இரவு 8 மணிக்கு நடைபெறும் தொடக்க
ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சன்ரைசர்ஸ் ஐதராபாத்- ராயல்
சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன.
முன்னதாக தொடக்க விழா நிகழ்ச்சி நடக்கிறது.

சிறந்த அதிரடி வீரர்களை கொண்ட ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
அணியால் ஒரு முறை கூட ஐ.பி.எல். கோப்பையை வெல்ல
முடியாமல் போனது பரிதாபமே. அந்த அணி 3 தடவை இறுதிப்
போட்டியில் தோல்வியை தழுவி இருந்தது.

இதனால் இந்த முறையாவது கோப்பையை வென்று விட வேண்டும்
என்று ஆர்வத்தில் உள்ளது. அனைத்து ஐ.பி.எல்.லிலும் விளையாடிய
டெல்லி டேர்டெவில்ஸ் இதுவரை இறுதிப்போட்டிக்கு நுழைந்தது
இல்லை.
இதனால் இந்த தடவையாவது முன்னேற்றம் காண போராடும்.

கொல்கத்தா நைட்ரைடர்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள்
3-வது முறையாகவும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் 2-வது தடவையாகவும்
கோப்பையை வெல்லும் வேட்கையில் உள்ளது.

இதேபோல கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் புதிய அணிகளான
ரைசிங் புனே சூப்பர் ஜெய்ன்ட்ஸ், குஜராத் லயன்ஸ் ஆகிய அணிகளும்
முதல் முறையாக கோப்பைக்காக காத்திருக்கின்றன.

ஏற்கனவே வென்ற அணி ஐ.பி.எல். கோப்பையை வெல்லுமா?
அல்லது புதிய அணி சாம்பியன் பட்டம் பெறுமா? என்று அனைவராலும்
ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

======
மாலைமலர்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37396
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: ஐ.பி.எல். கிரிக்கெட் - தொடர் பதிவு

Post by krishnaamma on Wed Apr 05, 2017 7:56 pm

நல்ல திரி அண்ணா, எல்லாவிவரங்களும் ஒரே திரி இல் இருந்தால் படிக்க வசதி புன்னகை.............


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: ஐ.பி.எல். கிரிக்கெட் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Thu Apr 06, 2017 5:49 am


ஐ.பி.எல்., கிரிக்கெட்: முதல் ஆட்டத்தில் பெங்களூரு அணி தோல்வி

-


ஐதராபாத்:

ஐதராபாத் அணிக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் பெங்களூரு
அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.


பத்தாவது ஐ.பி.எல்., 'டுவென்டி-20' தொடர் இன்று(ஏப்.,5) துவங்கியது.
ஐதராபாத்தில் நடந்த முதல் லீக் போட்டியில் பெங்களூரு, ஐதராபாத்
அணிகள் மோதின,

காயத்தால் அவதிப்படும் கோஹ்லிக்கு பதில், பெங்களூரு கேப்டனாக
களமிறங்கிய வாட்சன், 'டாஸ்' வென்று 'பவுலிங்' தேர்வு செய்தார்.


யுவராஜ் விளாசல்:

ஐதராபாத் அணிக்கு வார்னர் (14) ஏமாற்றினார்.
ஷிகர் தவான் 40 ரன்கள் எடுத்தார்.
ஹென்ரிக்ஸ், யுவராஜ் சிங் ஜோடி அதிரடியாக விளையாடியது.
ஹென்ரிக்ஸ் (52) அரை சதம் கடந்தார்.

யுவராஜ் 27 பந்தில் 62 ரன்கள் விளாசினார்.


முடிவில், ஐதராபாத் அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 207 ரன்கள்
குவித்தது. தீபக் ஹூடா (16), பென் கட்டிங் (16) அவுட்டாகாமல்
இருந்தனர்.


நெஹ்ரா அசத்தல்:


கடின இலக்கை விரட்டிய பெங்களூரு அணிக்கு கெய்ல் (32)
சிறப்பான துவக்கம் தந்தார். ரஷித் கான் 'சுழலில்' மன்தீப் சிங் (24),
டிராவிஸ் ஹெட் (30) சிக்கினர். கேதர் ஜாதவ் 31 ரன்களில்
அவுட்டானார்.

சச்சின் பேபி (1) ஏமாற்றினார். நெஹ்ரா 'வேகத்தில்' வாட்சன் (22),
அரவிந்த் (0) ஆட்டமிழந்தனர். முடிவில், பெங்களூரு அணி
19.4 ஓவரில் 172 ரன்கள் ஆல்-அவுட்டாகி 35 ரன்கள் வித்தியாசத்தில்
தோல்வியடைந்தது.
-
-------------------------------
தினமலர்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37396
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: ஐ.பி.எல். கிரிக்கெட் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Fri Apr 07, 2017 3:49 am


ஐபிஎல் டி20 போட்டி: மும்பையை வீழ்த்தி புனே அணி அபார வெற்றி

-
புனே:
ஐபிஎல் டி20 10-வது சீசன் கிரிக்கெட் தொடரின் 2வது போட்டியில்
மும்பை இந்தியன்ஸ் அணியும் புனே அணியும் மோதின. டாஸ்
வென்ற புனே அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதையடுத்து முதலில் களமிறங்கிய
மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகள்
இழந்து 184 ரன்கள் எடுத்துத்துள்ளது. அந்த அணியில் அதிகபட்சமாக
பட்லர் 38 ரன்களும், பாண்டியா 35 ரன்களும் எடுத்தனர்.

இதையடுத்து 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன்
களமிறங்கிய புனே அணி 19.5 ஓவரில் வெற்றி இலக்கை எட்டியது.

புனே அணி அதிகபட்சமாக கேப்டன் ஸ்மித் 84 ரன்கள் எடுத்தார்.
இதேபோல் ரஹானே 60 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் புனே அணி
முதல் வெற்றியை ருசித்துள்ளது.
-
----------------------------------
தினகரன்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37396
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: ஐ.பி.எல். கிரிக்கெட் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Sat Apr 08, 2017 5:42 am


ஐபிஎல் டி20 போட்டி: விக்கெட் இழப்பில்லாமல் கொல்கத்தா அணி அபார வெற்றி

-


ராஜ்காட்:

ஐபிஎல் டி20 10-வது சீசன் கிரிக்கெட் தொடரில் இன்று
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் குஜராத் லயன்ஸ்
அணியும் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதையடுத்து முதலில் களமிறங்கிய குஜராத் லயன்ஸ் அணி
20 ஓவர் முடிவில்4 விக்கெட்டுகள் இழந்து 183 ரன்கள் எடுத்தது.

அந்த அணியில் அதிகபட்சமாக சுரேஷ் ரெய்னா 68 ரன்களும்,
தினேஷ் கார்த்திக் 47 ரன்களும் எடுத்தனர்.

இதையடுத்து 184 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன்
களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 15 ஓவரில்
விக்கெட் இழப்பில்லாமல் வெற்றி இலக்கை எட்டியது.

கொல்கத்தா அணியில் அதிகபட்சமாக கேப்டன் காம்பிர் 76 ரன்கள்
எடுத்தார். இதேபோல் லயன் 93 ரன்கள் எடுத்தார்.
இதன்மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதல் வெற்றியை
ருசித்துள்ளது.
-
--------------------------------------
தினகரன்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37396
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: ஐ.பி.எல். கிரிக்கெட் - தொடர் பதிவு

Post by krishnaamma on Sun Apr 09, 2017 10:43 am

எத்தனை பேர் நல்லா விளையாடினாலும் நம் சென்னை அணி இல்லாதது பெரும் குறையாகவே இருக்கு சோகம் ............ அழுகை அழுகை அழுகை எல்லோருமாக சேர்ந்து மெட்ராஸ் அணியை சாவடித்துவிட்டார்கள்.............இவர்கள் மிக நன்றாக விளையாடியது பொறுக்கவில்லை அவர்களுக்கெல்லாம் சோகம்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: ஐ.பி.எல். கிரிக்கெட் - தொடர் பதிவு

Post by ராஜா on Mon Apr 10, 2017 12:41 pm

நேற்றைய போட்டியில் கொல்கத்தாவை எதிர்த்து மும்பை வெற்றிபெற்றது.


மும்பையை விட கொல்கத்தா அணியை அதிகம் வெறுப்பதாலோ என்னவோ முதல் முறையாக மும்பை வெற்றி பெற்றதற்கு மகிழ்ந்தேன் புன்னகை

avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30935
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஐ.பி.எல். கிரிக்கெட் - தொடர் பதிவு

Post by பாலாஜி on Mon Apr 10, 2017 1:33 pm

@ராஜா wrote:நேற்றைய போட்டியில் கொல்கத்தாவை எதிர்த்து மும்பை வெற்றிபெற்றது.


மும்பையை விட கொல்கத்தா அணியை அதிகம் வெறுப்பதாலோ என்னவோ முதல் முறையாக மும்பை வெற்றி பெற்றதற்கு மகிழ்ந்தேன் புன்னகை

மேற்கோள் செய்த பதிவு: 1238259

எனக்கு இந்த இரண்டு அணிகளும் பிடிக்காது தல ....


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19828
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: ஐ.பி.எல். கிரிக்கெட் - தொடர் பதிவு

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum