ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
வானுயர்ந்த சோலையிலே - புகைப்படங்கள் (தொடர் பதிவு)
 ayyasamy ram

என் அப்பா.
 ayyasamy ram

‘சிங்கத்தின் வாலைப் பிடித்து விளையாடினால் வருத்தப்பட வேண்டியது வரும்’ அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை
 ayyasamy ram

போலி ரயில் டிக்கெட் தயாரித்து விற்பனை செய்தவா் கைது
 ayyasamy ram

‘திரில்’லர் படத்தில் நித்யா மேனன்!
 ayyasamy ram

சமந்தாவின் ‘யு டர்ன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
 ayyasamy ram

கை தேர்ந்த அரசியல்வாதி - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 ayyasamy ram

அமெரிக்கர்களை மிரட்டி பணம் பறித்த புகார்: 21 இந்தியர்களுக்கு சிறை - நியூயார்க் நீதிமன்றம் உத்தரவு
 ayyasamy ram

ஒரு பெக் தர்மம் பண்ணுங்க சாமி...!!
 ayyasamy ram

குறுக்கு வழியில போனா நல்லா சம்பாதிக்கலாம்...!!
 ayyasamy ram

1800 வாட்ஸ் ஆப் குழுக்கள்: பா.ஜ., அதிரடி
 ayyasamy ram

துணை ராணுவத்தில் 55 ஆயிரம் பேரை சேர்க்க திட்டம்
 ayyasamy ram

வில்லியாக நடிக்க ஆசை!
 ayyasamy ram

சன்னி லியோனின் இன்னொரு பக்கம்!
 ayyasamy ram

சினி துளிகள்
 ayyasamy ram

ஆர்யாவின் வில்லன் அவதாரம்!
 ayyasamy ram

பாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி
 ayyasamy ram

பூங்கொத்து விளையாட்டு
 ayyasamy ram

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ayyasamy ram

சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு
 கோபால்ஜி

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 ராஜா

'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு
 ayyasamy ram

குச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா
 ayyasamy ram

ஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்?
 ayyasamy ram

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்
 ayyasamy ram

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

கரையே இல்லாத ஆறு
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 sandhiya m

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

மின்னூல்கள் தரவிறக்கம்

Top posting users this week
ayyasamy ram
 

Admins Online

வைணவ இலக்கியங்களில் வல்லுநர் பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்!

View previous topic View next topic Go down

வைணவ இலக்கியங்களில் வல்லுநர் பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்!

Post by ayyasamy ram on Fri Jan 27, 2017 9:32 pm


--

வைணவ இலக்கியங்களில் வல்லுநர்
பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்!

அஷ்ட பிரபந்தங்களான திருவரங்கத்தந்தாதி,
திருவரங்கத்துமாலை, திவரங்கக்கலம்பகம்,
திருவரங்கநாதர் ஊசல் திருவேங்கடமாலை,
திருவேங்கடத்தந்தாதி, அழகர் அந்தாதி நூற்றியெட்டுத்
திருப்பதி அந்தாதி எனும் பாசுரங்களைத் தமிழுக்கு
அளித்தவர்.

திருவரங்கநாதன் மேல் தீராத காதல் கொண்டு திருப்பாவை
அருளிச் செய்த திருவல்லிபுத்தூர் ஆண்டாள் நாச்சியார்
போலவே, இவரும் பக்தி கொண்டவர். பாடியே திட்டினாலும்
தித்திக்கும் செந்தமிழ்ப்பாடல்கள் இவை:

திரு அரங்கநாதரின் ஆசியால் அவதரித்த மறவர் குலத்தில்
பெண் கேட்டு ஓர் அரசன் “திருமுகம்’ (தூதுஓலை)
அனுப்புகிறான். வந்த தூதுவனிடம் “என்ன துணிச்சல்
இருந்தால், எம் குல மங்கையைப் பெண் கேட்டுத் திருமுகம்
(ஓலை) அனுப்புவான்?’ என வெகுண்டு.

கொற்றவன் தன் திருமுகத்தைக் கொணர்ந்த தூதா!
குறை உடலுக்கோ மறவர் கொம்பைக் கேட்டாய்!
அற்றவர்சேர் திருஅரங்கப் பெருமாள் தோழன்
அவதரித்த திருக்குலம் என்றறியாய் போலும்!
மற்றதுதான் திருமுகமே ஆனால் அந்த
வாய், செவி, கண், மூக்கு எங்கே? மன்னர்மன்னன்
பெற்ற இளவரசு ஆனால் ஆவின் கொம்பைப்
பிறந்த குலத்தினுக்கு ஏற்பப் பேசுவாயே!
-

-------------------------
-
தூதுவனே! கொள்ளவனின் “திருமுகம்’ இங்கே கொண்டு
வந்துவிட்டாயே! மீதியுள்ள குறையுடல்தானே தலையில்லாத
முண்டம்தானே அங்கே இருக்கும்?

அதற்கா மறக்குலக் கொம்பைப் பெண் கேட்டு வந்துள்ளாய்?
குலக்கொழுந்து இளம்தளிர் (வேப்பங்கொழுந்து) என
வேப்பமரத் துளிர்களைக் குறிப்பது போல்தான், குலம்
தழைக்கத் தோன்றிய மணப்பெண்!

ஆசையற்றவர் சென்று சேரும் திருவரங்கப் பெருமாளின்
தோழன் அவதரித்த குலம் இது.
சைவத்திலும் சுந்தரர் இறைவனைத் தோழனாகத்
தூதனுப்பியதுண்டு! ஆழ்ந்த பக்தி அனுபவம் அது!
இதை நீ அறியவில்லை போலும்.

சரி! சரி வந்துட்டே! இது இளவரசன் திருமுகம் என்றால்
முகத்திலிருக்க வேண்டிய உறுப்புகளான வாயைச்
செவிகளைக் கண்களை, மூக்கு எதையும் காணோமே!

ஆனாலும் மன்னாதி மன்னன் பெற்ற இளவரசுதான்!
ஆனால் அரசுக்கேற்றபடி ஆலமரத்தின் கொம்பைத் குலக்
கொழுந்தைப் பெண் கேட்கப்போ!

என அலட்சியமாகப் பதில் கூறுவதாகப் பாடல்!
அரசும் ஆலும் கோவில்களில் இருக்குமல்லவா?
அது போல என்றார்.

அரங்கபக்தனுக்கு அரசன் தூசி போன்றவன்.

விட்டாரா தூதர்?
துறவிக்கு வேந்தன் துரும்பு! என்பது பழமொழியன்றோ?
திருமணத் தூதராக வருவோர் சாமர்த்தியசாலிகளாகவே
இருப்பதுண்டு. காரியம் ஆகணுமே! அப்படியே நின்றார்!

வந்த வேளை சரியில்லையோ? நொந்த நெஞ்சோடு திரும்பலாமோ?
கெஞ்சுவதுபோலத் தன் பார்வையைச் செலுத்தினார்.

“என்ன நிற்கிறாய்! வா! வா! வந்து பார்த்துச் செல்!
பார்த்ததை உங்கள் அரசனிடம் சேர்த்துச் சொல்!
எங்கள் குலக்கொழுந்தைப் பெண் கேட்டு வந்தவங்க
நிலைமையினை மாளிகை முழுவதிலும் வந்து பார்த்துச் செல்!’
என அழைத்துக் கூறி காட்சி:

பேசவந்த தூத! செல்லரித்த ஓலை செல்லுமோ?
பெருவரங்கள் அருள்அரங்கர் பிள்ளைகேள்வர் தாளியே
பாசம் வைத்த மறவர் பெண்ணை நேசம்வைத்து முன்னமே
பட்டமன்னர் பட்டதெங்கள் பதிபுகுந்து பாரடா!
வாசலுக்கு இடும்படல் கவித்து வந்த கவிகையே!
மகுடகோடி தினை அளக்க வைத்த காலும்நாழியும்
வீசுசாமரம் குடில் தொடுத்த கற்றை சுற்றிலும்
வேலிஇட்டது அவர்கள்இட்ட வில்லும் வாளும் வேலுமே!


பொருள்:

திருமணம் பேச வந்துள்ள தூதுவனே! ஓலைச் சுவடியில் எழுத்தாணி
கொண்டு எழுதுவது அஞ்சல்! அது செல்லரித்து போல் புள்ளிப்
புள்ளியாகத் தோன்றும்!

கேலி பேசுவது போல இந்த செல்லரித்த ஓலையைக் கொண்டு
வந்திருக்கிறாயே? இது செல்லுமோ? செல்லாத ஓலையாச்சுதேயடா?
பெரிய பெரிய வரங்களை எல்லாம் வழங்கி அருள் தரும்
திரு அரங்கநாதர் மேல் பக்தி மிகுந்த பாசம் கொண்ட குலப்
பெண்ணை விரும்பி முன்பு வந்து பெண்கேட்ட பட்டத்து இளவரசர்கள்,
பட்டபாட்டை எங்கள் மாளிகையில் புகுந்து வந்த பாரடா! அங்கே
நுழைவாசலுக்குப் படல்வேலியாக இட்டிருப்பது வந்தவர்களின்
மகுடங்களே!

நாட்டுப்புறங்களில் வேலிகளில் பானைகளைக் கவிழ்த்து
வைப்பதுண்டு! அது போலவே நாங்கள் மகுடங்களைக் கவிழ்த்து
வைத்துள்ளோம் அவர்கள் சூடியிருந்த கிரீடங்களை, விளைந்து
வந்துள்ள தினைகளை அளக்க உதவும் மரக்கால்களாகவும்,
நாழியாகவும் பயன்படுத்துகிறோம்.

அவர்களின் கிரீடங்களில் சூடி இருந்த கற்றை முடிகளைக் கைப்பற்றி
எங்களின் சாமரமாக்கியுள்ளோம், விசிறிபோல் வீசுவதற்கு!
மாளிகையைச் சுற்றிலும் வேலிபோல ஊன்றி வைத்திருப்பது அவர்கள்
கொண்டு வந்து வில்லும், வாளும் வேலும்தான்! ஆழ்ந்த பக்தியால்
அடைந்த வீரம் இது!

திட்டினாலும் தித்திக்கின்றதல்லவா? அதுதான் இலக்கியங்களின்
பெருமை
-
-----------------------------------------------
-
நெல்லை ஆ. கணபதி
கலைமகள்
நன்றி- தினமலர்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37396
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: வைணவ இலக்கியங்களில் வல்லுநர் பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்!

Post by krishnaamma on Sat Jan 28, 2017 11:56 pm

மிக அருமையான பகிர்வு ராம் அண்ணா புன்னகை...................ரங்க ரங்கா!! :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum