ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
நரை கூறிய அறிவுரை
 T.N.Balasubramanian

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

அனைவருக்கும் இனிய வணக்கம்
 ரா.ரமேஷ்குமார்

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 SK

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 Mr.theni

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 ராஜா

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

கோழியும் மனிதனும்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 Mr.theni

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
 SK

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 SK

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு
 SK

Winmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்
 ayyasamy ram

RRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்
 thiru907

#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா?
 Dr.S.Soundarapandian

கட்சி கொடியை ஏற்றி வைத்து நிர்வாகிகள் பெயரை நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார்
 Dr.S.Soundarapandian

பிரபல சினிமா கதையாசிரியர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை
 Dr.S.Soundarapandian

ஏழு ஜென்மத்திற்கும் அதே கணவன்
 Dr.S.Soundarapandian

தமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை
 T.N.Balasubramanian

காலை 5 மணி காட்சியுடன் அமர்க்களமாக வெளியாகியுள்ள தமிழ்ப்படம் 2
 SK

எந்த பதவியிலும் இல்லாத உதயநிதி கட்சிக் கொடி ஏற்றுவதால் திமுக-வில் சலசலப்பு
 T.N.Balasubramanian

சதுரங்கத்தில் ராஜாவை மட்டும் வெட்ட முடியாது…
 SK

பெண்ணின் பெருந்துயர்!
 குழலோன்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Go down

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்

Post by sugumaran on Fri Jan 13, 2017 7:04 pm

First topic message reminder :


ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள் – பகுதி 1முகப்புரை
குறள் என்றதும் பலருக்கும் குறளுக்கு முன்னால் திரு என்பது போடாவிட்டாலும் திருக்குறளையும் அதை எழுதிய திருவள்ளுவருமே நினைவுக்கு வரும் .

ஆனாலும் ஔவை பிராட்டி இயற்றிய குறள் மற்றும் விநாயகர் அகவல்,சித்தர் இலக்கியத்தில் மிகத்தொன்மையானவைகளாக மதிக்கப்பட்டு ஞானப் பொக்கிஷம் என ஞானத்தைத் தேடும் சாதகர்களால் போற்றப்பட்டு வருகிறது . ஆனால் போற்றப்படவேண்டிய பல விஷயங்கள் இன்னமும் சற்று மறைவாகவே இருக்கிறது .பொது மக்களிடையே பரவலாக்கப்படவில்லை.

திருவள்ளுவரைப்போலவே ஔவைப் பிராட்டியும் இம்மானிடம் உய்வுபெற அரிய கருத்துக்களை இரு அடிகளில் ,குறள் வெண்பாக்களாக மொத்தம் 310 எண்ணிக்கையில் வீட்டு நெறிப்பால் ,திருவருட்பால் ,தன்பால் என்று மூன்று அதிகாராங்களாகப் பிரித்து இயற்றி இருக்கிறார்.

திருக்குறள் எடுத்தியம்பும் அறம் ,பொருள் ,இன்பம் போன்றே இக்குறள்களும் மானுட தேக அமைப்பு ,அதனுள் துலங்கும் ஆதி அறிவு , வாழ்வியல் குறிக்கோள் இவைகளை தெளிவுற எடுத்தியம்புகிறது.

அத்தனை உலக மதங்களும் வாழ்வின் முடிவில் சொர்க்கம் சென்று சேர்வதையே குறிக்கோளாகக் கொண்டு இயங்குகையில் ,நமது சனாதன நெறிதானே வீடுபேறு அல்லது முக்தி என்பதை வாழ்வின் இறுதிப பயனாகக் கூறுகிறது .

இதனை அடிப்படையாகக் கொண்டே ஔவையின் குறளும் ஒரு உத்தமமான யோகசாஸ்திரத்தின்,அத்துனை பரிமாணங்களையும் உள்ளடக்கியதாக இருக்கிறது .மனதை ஆராய்ந்து அறியும் கருவியாகக் கொண்டு ,மனதைப் பற்றியும் அதன் தன்மைகளைபற்றியும் ,அதன் மேன்மைகளை அறிந்துகொண்டு ,வாழ்வின் குறிக்கோளை அடைவது எப்படி என்பதை இயம்புகிறது .இன்னும் ஜனன மரணம் என்றால் எனன ? பஞ்சபூத சேர்க்கையால் இந்த உடம்பு எவ்வாறு உருவாகி ,செயல்பட்டுக் கொண்டிருக்கிறது ?அதன் தலையாய குறிக்கோள் என்னவாக இருக்கவேண்டும் அதை அடையும் வழி முறைகள் எனன ? வாசியோக நிலை , சரவோடுக்கம் இவைகளைப் பற்றியெல்லாம் விளக்குகிறது.

யோகத்தில் திளைத்த பல அனுபவபூதிகள் அருளாளர்கள் காட்டிய மார்கங்களைவிட ,ஔவைக்குறள் மிக இலகுவாக யோகத்தின் தன்மையைப் பற்றி விளக்குகிறது .

சங்கத் தமிழ் பாடல் தொகுப்பில் ஏறத்தாழ 457 புலவர்கள் பாடிய பாடல்கள் இடம் பெற்றிருக்கிறது .கி .மூ இரண்டாம் நூற்றாண்டின் இறுதியில் இருந்து கி .பி மூன்றாம் நூற்றாண்டின் நடுப்பகுதிவரை சுமார் நானூறு ஆண்டுகளில் சுமார் ஐநூறு புலவர்கள் பாடிய அருமையான தமிழ் பாடல்கள் தொகுக்கப்பட்டிருப்பதும் ,அத்துணை தகுதி வாய்ந்த புலவர்கள் தொடர்ச்சியாக அந்தக்காலக்கட்டத்தில் வாழ்ந்திருப்பதும் ,தமிழின் சிறப்பினையும் ,அந்த காலகட்டத்தில் இடம்பெற்றிருந்த தமிழர் தம் அறிவின் திறனையும் ,தகுதியையும் எடுத்துக்காட்டுகிறது.

இன்னும் சொல்லப்போனால் அவர்கள் வெறும் தமிழ்படித்த புலவர்கள் மட்டுமல்லர் ,அவர்களில் ,சமுதாயத்தின் எல்லா பிரிவினைச் சேர்ந்த அனைத்து தரப்பினரும் இருந்திருக்கின்றனர் . பாடல்கள் புனைந்திருக்கின்றனர் .அந்தணர் ,வணிகர் ,கணக்கர் ,வேடர் ,குயவர் ,மருத்துவர் எல்லாபிரிவினரும் புலவர்களில் இருந்திருக்கின்றனர் .அத்துனைபேரும் தமிழில் புலமைபெற்று பாடல் புனையும் வல்லமை பெற்றிருக்கின்றனர்.

சங்கப்புலவர்களில் முப்பதுக்கும் மேல்பட்டவர்கள் பெண்கள் .அதாவது ஏறத்தாழ 7 % சதவிகித புலவர்கள் பெண்களாக இருந்திருக்கின்றனர் .அத்துணை உயர்கல்வி படைத்திருந்தனர் .

ஆனால் சங்ககாலம் தாண்டிப் பல்லவர் காலம் ,பாண்டியர் ,சோழர் ,நாயக்கர் ,முகமதியர் ,மராட்டியர் ,மேலை நாட்டவர் ஆட்சிக் காலங்களில் அத்துணை பெண் புலவர்கள் இடம்பெறவில்லை. ஏன் விடுதலைக்குப் பின் கூட அதிக அளவில் பெண் புலவர்கள் இடம் பெறவில்லை என்பது தெரியவில்லை.

ஆனால் சங்ககாலத்தில் ஔவையார் பாரி ,அதியமான் போன்றவர்க்கு அரசவை தூதர் போலும் அறிவுரை கூறிடும் அமைச்சர் போலும் இருந்திருக்கின்றனர் .அச்சமின்றி காடு மேடு சுற்றி அலைந்திருக்கின்றனர்.

தமிழில் பாடி அறநெறிக் காவலர்களாக இருந்திருக்கின்றனர் .ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஔவையார் ,காரைக்கால் அம்மையார,சித்தர்களில் திலோத்தமை மற்றும் பல பெண் ஞானிகள் தமிழ் நாட்டில் வாழ்திருப்பது ஒரு பெருமையளிக்கும் செய்தியே ..

அந்தக் காலகட்டத்தில் உலகின் எந்தப்பகுதியிலும் பெண்கள் இத்துனை உயர்வு பெற்றிருந்தார்களா என்பது சந்தேகமே .ஆனால் இடையில் இங்கு என்னதான் நடந்தது என்பதும் ஆய்வுக்குரியதே .

அந்த சங்ககால ஔவையார் தான் இந்த ஔவையின் ஞானக் குறளை எழுதினாரா என்பது ஆய்வுக்குரியதே . இன்னும் சொல்லப் போனால் விநாயகர் அகவல் எழுதிய ஔவையும் குறள் எழுதிய ஔவையும் ஒருவரேவா ? என்பதுக் கூட உறுதியில்லை.

ஆனால் சங்கக்காலத்தில் திருக்குறள் எழுதப்பட்டது .ஔவையின் குறளும் குறள் வெண்பாவிலே இருக்கிறது .பிற்காலத்தில் ஏனோ குறள் வெண்பாவில் எந்த இலக்கியமும் இயற்றப்படவில்லை.

இவற்றை எல்லாம் புலவர் பெருமக்கள் பார்த்துக்கொள்ளட்டும் .அவர்கள் விடுவிக்கவேண்டிய வரலாற்று புதிர்கள் நிரம்ப இருக்கிறது .நாம் ஔவையின் குறளில் கூறப்பட்டிருக்கும் ஞானத்தை மட்டும் பார்க்க மேலே செல்வோம்.நாம் இவ்வுலகில் வந்த வேலையை விரைவில் பார்க்கவேண்டும் அல்லவா ?

மனிதராய்ப் பிறந்தவர் அனைவரும் மனிதர் ஆகிவிடமுடியுமா ?
மனதை உடையவன் மனிதன் ,ஆனால் அதை கருவியாகப் பயன் படுத்தவேண்டும் .அதன்வழி போகக் கூடாது .உறங்குவது,உண்பது, மக்களைப் பெறுவது, உலாவுவது முதலியவை யாவையும் ,விலங்குகளும் தான் செய்கின்றன .இருவருக்கும் இவை பொதுவானவையே. பின் நாம் எப்படி விலங்கைக்காட்டிலும் மேல்?நினைக்க வேண்டும்.

நான் யார் ,எனது மனம் யார் , எதற்குப் பிறந்தேன் , எங்கிருந்துவந்தேன் , இந்த உடம்பு தானே வந்ததா ,ஒருவன் தந்ததா , அந்த ஒருவன் யார் , அந்த ஒருவன் தன்மை எனன , இவைகளை நினைக்க வேண்டும். இவைகளுக்கு விடையறிய அறவழியில் நிற்கவேண்டும் .நமது பிறப்பே, பிறப்பறுக்கும் வழி காணத்தான் .

விலங்குக்கும் ,மனிதனுக்கும் இருக்கும் எல்லைக் கோடு,இந்த இறைபற்றிய எண்ணம் தான் .விலங்கு இரை மட்டும் தேடுகிறது .மனிதன் இறையைத் தேடுகிறான் .பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்
செம்பொருள் காண்பதறிவு —திருக்குறள் -358அஞஞானம தான் பிறப்பைத் தருகிறது ,எனவே பிறப்பையே
அஞஞானம என்கிறார் திருவள்ளுவர் .

மனிதரிலும் பறவையுண்டு விலங்குண்டு
கல்லுண்டு மரமுண்டு
மனிதரிலும் நீர்வாழும் சாதியுண்டு
அநேககுல மனிதருண்டு
மனிதரிலும் மனிதருண்டு வானவரும்
மனிதராய் பிறப்பதுண்டு
மனிதரிலே பிறப்பறுக்க வந்ததுவே
அருமைஎன வகுத்தார் முன்னோர்

இது சிவானந்த போதம் அளிக்கும் அறிவு

இனி ஔவை கூறும் உடம்பு எனும் சடப்பொருள் பற்றிய அறிவையும் ,மனம் எனும் சூக்ஷும பொருள் பற்றியும் ,உயிர் எனும் அதிஷுக்ஷும பொருள் பற்றியும் விளக்கும் அறிவியலோடு இணைந்த ஆன்மீகப் பார்வையை அடுத்தப் பகுதியில் இருந்து பார்ப்போமா ? சித்தர்களின் சித்தாந்த தொன்மை விளக்கத்தைப் படிப்படியாகக் காணலாம்.-தொடரும்
avatar
sugumaran
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 326
மதிப்பீடுகள் : 203

View user profile

Back to top Go down


Re: ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்

Post by sugumaran on Sat Aug 05, 2017 8:53 pm

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள் -21
--அண்ணாமலை சுகுமாரன்
அதிகாரம் 3 = உள்ளுடம்பின் நிலை


25 ) அல்லல் பிறப்பை அகற்றிவிக்கும் ஆய்ந்தாய
தொல்லை உடம்பின் தொடர்பு


உள்ளுடம்பு ,தொல்லை தரும் பிறவியை ஒழித்துவிடும் என்கிறார் இந்தக்குறளில் அவ்வையார் .


ஆய்ந்தாய = ஆராய்ந்து பார்த்தால்
அல்லல் பிறப்பை அகற்றிவிக்கும் = தொல்லைகளைக் கொடுத்துக்கொண்டிருக்கும் தொடரும் ,பிறவிகளை நீக்கும்

தொல்லை உடம்பின் = தூலஉடம்பினுடன்
தொடர்பு = ஏற்படும் உள்ளுடம்பின் தொடர்பு .

தொல்லைகளைக் கொடுத்துக்கொண்டிருக்கும் தொடரும் ,பிறவிகளை நீக்கும் ஆற்றல் தூல உடம்பிற்கு
உள்ளுடம்பின் தொடர்பு கொண்டு ஏற்படுகிறது .

புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன்
எம்பெருமான் மெய்யேயுன் பொன்னடிகள் கண்டின்று
வீடுற்றேன். என்கிறார் அருளாளர் மாணிக்கவாசகர் .

பிறவி பிணியை நீக்கும் வழி அறியாமல் எத்தனை எத்தனை பிறவிகள் பெற்று அல்லலுறுகிறோம் .

பிறவிப் பிணி அறுபட வேண்டுமானால் என்ன என்ன குணங்கள் இருக்க வேண்டும் என்று ஒருபாடலில் கம்பன் கூறுவதைபாருங்கள்

தெளிந்து தீவினையைச் செற்றர் பிறவியின் தீர்வரென்னவிளிந்திலா உணர்வினோரும் வேதமும் விளம்பவேயும்நெளிந்துறை புழுவை நீக்கி நறவுண்டு நிறை கின்றேனால்அளிந்து அகத்து எரியும் தீயை நெய்யினால் அவிக்கின்றாரின்---

அதாவது மனம் தெளிந்து தீய செய்கைகளை விட்டவர்கள் பிறவி நோயை ஒழித்தவராவர்
இதை ஞானிகளும் வேதங்களும் விரிவாகக் கூறுவர்

நானோ புழுக்கள் நெளியும் கள்ளில் அந்த புழுக்களை வடிகட்டிவிட்டுச் சாப்பிட்டு இப்படி மகிழ்வடைகிறேன் . இது எதற்குச் சமம் என்றால் எரியும் நெருப்பை நெய்யை ஊற்றி அணப்பதற்குச் சமம் என்று சுக்ரீவன் சொல்லுவது போல் கம்பர் கூறுகிறார் ..

அதாவது மனம் தெளிந்து தீவினைகளை விட்டவர்கள் ,
பிறவி பிணி நீக்க இயலும் .அப்படி இல்லாமல் இப்பிறப்பில் , பிறப்பின் சுவையில் இன்பம் கொண்டு மேலும்
வினை சேர்க்கும் போக்கில் உழன்று கொண்டிருக்கிறோம் .

அதை ஊக்குவிக்கும் மனம் உள்ளுடம்பில் அடங்கியது .
உள்ளுடம்பின் தெளிதலால்
தூல உடம்பு தீவினை தவிர்க்கும் .

எத்தனை ஊர்? எத்தனை வீ(டு) எத்தனை தாய் ? பெற்றவர்கள் எத்தனை பேர் ? இட்டழைக்க ஏன் என்றேன் - நித்தம் . எனக்குக் கலையாற்றாய் ஏகம்பா கம்பா
உனக்குத் திருவிளையாட்டோ? என பட்டினத்தார் கூறுவது போல் பிறவி ஒழிக்கும் உபாயம் அறிவதே வாழ்வின் பயன்
என்று தெளித்தல் நன்று .

அண்ணாமலை சுகுமாரன்
5/8/17
avatar
sugumaran
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 326
மதிப்பீடுகள் : 203

View user profile

Back to top Go down

Re: ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்

Post by sugumaran on Wed Aug 09, 2017 7:00 pmஞானக் களஞ்சியம் ஔவையின் குறள் -22
--அண்ணாமலை சுகுமாரன்
அதிகாரம் 3 = உள்ளுடம்பின் நிலை

26 ) நல்வினையும் தீவினையும் உண்டு  திரிதரும்
     செய்வினைக்கு வித்தாம்  உடம்பு
தூல தேகமானது ,
நல்வினையும்  = புண்ணியம் எனப்படும் நல்கர்மத்தையும் ,தீவினையும் =    பாவம் எனப்படும் தீயகர்மத்தையும் ,உண்டு = அனுபவித்து ,

திரிதரும்    = திரிந்து கொண்டிருக்கும் , ஆனால் ,

உடம்பு   = உள்ளுடம்பு எனும் சூக்ஷும தேகம் ,

செய்வினைக்கு =   செய்யும்படியானகர்மவினை போக்கும்ஞான கர்மங்களுக்கு
வித்தாம் =   விதையாக அமையும் .

அதாவது தூல தேகம் கொண்டு செய்யும் நல்வினை தீவினை எனும் கர்மங்களுக்கு ,பதிலாக  உள்ளுடம்பு ஞானவழியில்நின்றுவினைகளை  போக்கஉதவிடும்   விதை போல்இருந்துஉதவிடும்

நாம் நல்வினை செய்தாலும் ,தீவினை செய்தாலும் அவைகளின்  பலனை அனுபவித்து , மீண்டும் மீண்டும் அத்தகைய வினைகளை செய்து , அதன் சுழற்சியிலேயே நீடித்து நம்மை இந்த பிறவியில் சுவை கொள்ளச் செய்யும்

தானே புரிவினையாற் சாரு மிருபயனுந்
தானே யனுபவித்தல் தப்பாது – தானூறு
கோடி கற்பஞ் சென்றாலுங் கோதையே செய்தவினை
நாடிநிற்கு மென்றார் நயந்து  என்கிறது நீதி நெறி

இதன் பொருள்:

பெண்ணே!  அளவற்ற கோடி கோடி கற்பங்கள் கடந்துவிட்டாலும், ஒருவனை அவன் செய்த வினைகள் எப்படியும் வந்து சேரும் என்று பெரியோர் சொல்லுவர்.  ஒருவன் தானே செய்த வினையினால் வந்து சேரக் கூடிய இரண்டு பயன்களும் (நல்லதும், தீயதும்), செய்தவன் அனுபவித்துத்தான் ஆகவேண்டும். அது தப்பவே தப்பாது

கையில் பூட்டும் விலங்கு  தங்கத்தால் செய்தால் என்ன ?இரும்பில் செய்தால் என்ன விலங்கு ,விலங்கு தானே என்கிறார் ஓஷோ . அப்போது வினையே ஆற்றாமல் இருக்கலாமா என்றால் அதுவும் முடியாது .செயல்களைத் துறவாமல், ஞானத்திற்கு தயார் செய்து கொள்வது கர்ம யோகவழி.

செயல்களை செய்யும்போதே , நம் விருப்பு வெறுப்புகளென்னும் வண்ணக்கண்ணாடிகளால்தான் இவ்வுலகத்தை பார்க்க நேரிடுகிறது. இவ்விருப்பு, வெறுப்புகள் தான்ஞானத்தினை அடைவதில் பெரும் தடைக் கற்கள் என்பதனால், அவை விலக்க வேண்டியவை

சொல்வதற்கும் ,படிப்பதற்கும் இவை எளியவைதான்  .நடை முறைப்படுத்த அத்தனை கடினமானது .

ஆனால் செய்யும் கர்மங்களை வெறுப்பு வெறுப்பு இன்றி செய்வது எப்படி சாத்தியம் என்றால் அதற்க்கு ஒரே வழி ,அதனால் கிடைக்கும் பலனை நம்முடையது  இல்லை என முன்பே துறப்பதால் தான் சாத்தியமாகும்  இந்த சமச்சீரான மனநிலைக்குப் பக்குவப்படுத்துவது தான் கர்ம யோகம்.

செயலைச் செய். ஆனால், எப்படிப்பட்ட பலன் ஏற்பட்டாலும், அதை இறைவனின் பிரசாதமாக,நன்றியுடன் ஏற்றுக்கொள்வது கர்மயோகம். மனதை அமைதியுறச் செய்து, ஞானத்தை ஏற்றுக் கொள்வதற்கு, அது தயார் செய்திடும்.

இதை அடைய நமது முக்குணம் எனும் ரஜோ ,தமஸ், சாத்வீகம் எனும் முக்குணத்தில் உயர்குணமான சத்துவத்தில் இருந்து செயல்களை செய்தால் மட்டுமே சாத்தியம் ஆகும் .

கீதையும் இதையே வலியுறுத்துகிறது .ரஜோகுணத்தில் உதித்தஎந்த  கர்மமும் பெரும்பாவத்தில் ஆழ்த்துபவை என்கிறது . இராஜச குணத்தால் தூண்டப்படும் ஆசையானது, சித்தம், மனம், புத்தி இவைதனை மூடி மறைத்து, உயர் ஞானம் வந்தடையும் வழி தனை மறிக்கும்.

உடலை விட, புலன்களும், புலன்களை விட மனமும், மனத்தை விட புத்தியும், புத்தியை விட ஆன்மாவும் உயர்ந்தது. ஆகவே, அந்த ஆன்மாவை அறிவதே ஞானத்தின் குறிக்கோள்

அண்ணாமலை சுகுமாரன்
9/8/17
avatar
sugumaran
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 326
மதிப்பீடுகள் : 203

View user profile

Back to top Go down

Re: ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்

Post by T.N.Balasubramanian on Thu Aug 10, 2017 8:24 am

ஒளவையின் குரல் + கீதையுடன் கலந்து

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22239
மதிப்பீடுகள் : 8287

View user profile

Back to top Go down

Re: ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்

Post by sugumaran on Sat Aug 12, 2017 9:34 am
ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள் -23
--அண்ணாமலை சுகுமாரன்

அதிகாரம் 3 = உள்ளுடம்பின் நிலை

27) உள்ளுடம்பின் வாழ்வன ஒன்பதும் ஏழைக்
கள்ள உடம்பு ஆகிவிடும்

வாழ்வன = (தூல தேகத்தில் இருப்பு கொண்டு )
செயல்பட்டுக்கொண்டிருக்கும் ,
ஒன்பதும் = நவத்துவாரங்கள் எனப்படும் ஒன்பது
ஓட்டைகளும் ,

உள்ளுடம்பின் = உள்ளுடம்பின் தொடர்பு இல்லாதபோது ,
ஏழை = வறியவரைப்போல் செயலற்று ,

கள்ள உடம்பு = மறைந்து நிற்கும் உடம்பாக ,
ஆகிவிடும் = மாறிவிடும் .

அன்னமய கோசம் எனும் இந்த தூல உடம்பில் ஒன்பது வாசல் உண்டு .அவைகள் நவத்துவாரங்கள் எனப்படும் .
அவையாவன கண்கள் இரண்டு, காதுகள் இரண்டு, நாசித் துவாரங்கள் இரண்டு, கருவாய் ஒன்று,உணவு செல்லும் வாய் ,கழிக்கும்கழிவுக்கு எருவாய் ஆக ஒன்பது வாசல் .
கண்டத்துக்கு மேலே ஏழு வாயில் ,
இடுப்பிலே இரண்டு வாயில் .அமைந்துள்ளது

ஒன்பது வாயில் உடம்பில் முன்பே இருந்தாலும்
பத்தாவது ஒரு வாயிலைத்திறப்பதுதான் முக்திக்கு வழி என ஞானிகள் கூறுகிறார்கள் .

இந்த துவாரங்கள் தூல உடம்பில் இருந்தாலும் அவைகளை இயக்கும் விசை உள்ளுடம்பில் இருக்கிறது .
உள்ளுடம்பின் தொடர்பு இல்லாதபோது இந்த துவாரங்கள்
வறியவரைப்போல் செயலற்று இருக்கும் .


ஒன்பது வாசல் உடையதோர் பிண்டத்துள்
ஒன்பது நாடி யுடையதோ ரோரிடம்
ஒன்பது நாடி ஒடுங்கவல் லார்கட்கு
ஒன்பது காட்சி யிலைபல வாமே.-- என்கிறது திருமந்திரம் .

அது தூல உடம்பின் ஒன்பது வாயிலைமட்டும் கூறாமல் அவைகளின் வழியே புகும் ஏனைய ஒன்பது காற்றையும் ,யோகம் கற்றோர் அந்த ஒன்பது துவாரம் மூலம் பெறும் அக உணர்வுகளைக் கூறுகிறது .இப்படிப் பட்ட வினோத ஒன்பது ஓட்டையுள்ள இந்த உடலை ஆளும் ஆன்மாவும்வின் அளப்பரிய ஆற்றலை அடுத்து வரும் பகுதியில் காணலாம்அண்ணாமலை சுகுமாரன்

12/8/17
avatar
sugumaran
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 326
மதிப்பீடுகள் : 203

View user profile

Back to top Go down

Re: ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்

Post by T.N.Balasubramanian on Sat Aug 12, 2017 8:35 pm

அருமை.
ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22239
மதிப்பீடுகள் : 8287

View user profile

Back to top Go down

Re: ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்

Post by sugumaran on Mon Aug 14, 2017 8:42 pm
ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள் -24
- -அண்ணாமலை சுகுமாரன்

அதிகாரம் 3 = உள்ளுடம்பின் நிலை


28 )
பொய்க்கெல்லாம் பாசனமாயுள்ள அதற்க்கு ஓர் வித்தாகும்
மெய்க்குஉள்ளாம் மாயஉடம்பு

பொய்க்கெல்லாம் = எல்லாவித பொய்களுக்கு ,
பாசனமாயுள்ள = விளை நிலமாக உள்ள ,
அதற்க்கு = இந்த தூல தேகத்திற்கு ,
மெய்க்குஉள்ளாம் = அந்த தூல தேகத்திற்கு உள்ளே இருக்கின்ற ,

மாயஉடம்பு = சூக்ஷும தேகமானது ,
ஓர் வித்தாகும் = ஒரு விதை போல ஆகிறது

யானே பொய் என் நெஞ்சும் பொய் என் அன்பும் பொய்
ஆனால் வினையேன் அழுதால் உன்னைப் பெறலாமே”
– திருவாசகம்
என மாணிக்க வாசகர் நமது சார்பில் அவர் அழுவதுபோல்
மாற்றிக் கூறுகிறார் .
யானே பொய் என ஏன் சொல்லுகிறார் ?
யான் என்று பெருமைக்கொள்ளும் , மெய் என்று கூறப்படும் இந்த தூல உடம்பு பொய்யானது .
என்றாவது ஒரு நாள் மறையக்கூடியது .ஒருநாள் மண்ணோடு மண்ணாக போகவேண்டியது
ஒரு நாள் இந்த தூல உடல் தீக்கு இரையாகும்

இப்படி பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்து பொய்யிலே வாழும் நாம், ஞானம் பெற முயலவேண்டும்
பல்வேறுவிதமான பிறப்புக்களில், பல்வேறு வடிவுடன் கிடைக்கும் இவ் உடம்பு அனைத்துமே தோல், சதை, எலும்பு, மஜ்ஜை முதலான கலந்த ஒன்றாகும். அமீபா தொடங்கி,
ஆறறிவு மனிதன்வரை எல்லா உடல்களுக்கும்,
"வேற்று, விகார, விடக்கு " அமைந்திருந்தல் எனும் உண்மை உணர்ந்து " ஆற்றேன், எம் ஐயா, அரனே'" என்று கதறுகிறார்.
மாணிக்கவாசகர் தனது சிவபுராணத்தில் .
மேலும் " போற்றிப் புகழ்ந்திருந்து பொய் கெட்டு மெய்யானார் மீட்டு இங்கு வந்து வினைப் பிறவி சாராமே கள்ளப்
புலக் குரம்பை கட்டு அழிக்க வல்லானே" என உருகுகிறார் .
சிவபுராணம் ஒரு ஞான பிரவாகம் .
உடம்பில் கண், காது, மூக்கு, நாக்கு, தோல் ஆகிய ஞானேந்திரியங்கள் ஐந்தும்
கை, கால், வாய், எருவாய், கருவாய் ஆகிய கர்மேந்திரி யங்கள் ஐந்தும் உள்ளன
ஞானேந்திரியங்கள் , கர்மேந்திரி யங்கள் தூல உடம்பில் இருந்தாலும் , அவைகளை இயக்கம் அறிவு உள்ளுடம்பில் தான் அமைந்துள்ளது .அத்தகைய இயக்கம் அறிவுக்கெல்லாம் பெயர்கள் கூட உள்ளது .
ஸ்ரோத்திரம் என்பது காது கேட்க செய்யும் அறிவு .
ரஸ்னா நாக்கின் சுவை !
ஏன் ரஸ்னாவுக்கு இந்த பெயர் புரிகிறதா ?
ஷாசுகு கண் பார்வை
இவ்வாறு அனைத்து ஞானேந்திரியங்கள் , கர்மேந்திரி யங்கள்ஆகியவற்றிற்கு உள்ளுடம்பில் தனித்தனியே கண்ணுக்குத்தெரியாத அறிவு மொட்டுகளை பெற்றிருப்பதாக கூறப்படுகிறது

இவ்வாறு தூல உடம்பிற்கு அதன் உள்ளே இருக்கும் ,உள்ளுடம்பு ஆதாரமாக ,ஒரு வித்தைப்போல் இருப்பதாக இந்தக் குறளில் கூறுகிறார் .

ஔவையின் குறள் மொத்தமாக 310
இப்படி ஒருகுறளுக்கு ஒரு பதிவுக்குப்பதிலாக இரண்டு
குறள் சேர்த்து எழுதலாமா என நினைக்கிறேன் .
சற்று பெரிதாக இருக்கும் , படிப்பவர்கள் எப்படி எடுத்துக்கொள்வார்கள் என தெரியவில்லை .
முடிந்தால் உங்கள் எண்ணத்தை தெரிவியுங்கள் .
அண்ணாமலை சுகுமாரன்
14/8/17
avatar
sugumaran
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 326
மதிப்பீடுகள் : 203

View user profile

Back to top Go down

Re: ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்

Post by T.N.Balasubramanian on Mon Aug 14, 2017 8:56 pm


எனது footer இல் கொடுத்தபடி "கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால் ",
"சுருக்கமாக விளக்கம் இருந்தால் படிக்காத தோன்றும்."
இரு குறளை ஒரு பதிவில் போட்டாலும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தால் ,
யாவரும் படிப்பர் என்றே எண்ணுகிறேன்.
ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22239
மதிப்பீடுகள் : 8287

View user profile

Back to top Go down

Re: ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்

Post by sugumaran on Thu Aug 17, 2017 8:34 am
ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள் -25
- -அண்ணாமலை சுகுமாரன்
அதிகாரம் 3 = உள்ளுடம்பின் நிலை

29 ) வாயுவினால் ஆய உடம்பின் பயனே
ஆயுளின் எல்லை அது

-- வாயுவினால் ஆய உடம்பின் பயனே என்பதின் பொருள் நாம் முன்பே கண்டபடி , உள்ளுடம்பு மனோ மய கோசம் பிராண மய கோசத்தால் ஆகியவற்றால் ஆகியது .
இதில் பிராண மய கோசம் பிராணனுடன் ,பிராண வாயு
ஆகிய தச வாயுவைக் கொண்டது .
இந்த பிராண வாயு உடலைவிட்டு நீங்கும் போது ,
உயிரும் தூல உடலைவிட்டு நீங்கிவிடும் .
உயிர் நீங்குவதை 'ஆயுளின் எல்லை அது ' என்கிறார் .
உள்ளுடம்பு இருக்கும் வரையே தூல உடம்பு வாழும் .

மனித உடலில் பத்துவித வாயுக்கள் உண்டு .
இவை தச வாயுக்கள் எனப்படும்.
பிராணன், அபானன், உதானன், வியானன், சமானன், நாகன், கூர்மன், தனஞ்செயன், கிரிகரன், தேவதத்தன்
பிராணன் அபானன், உதானன் , சமானன் , வியானன் முதலிய இவையே மனிதனின் அனைத்து இயக்கத்தையும் நிர்வகிக்கின்றன
உயிர் வெளியே புறப்படும் நேரம் நெருங்கியுடன் உடலின் அனைத்து செயல்களும் ஒவ்வொன்றாக முடக்கப்படும் , எல்லாவித வாயுக்களின் வழிகளும் ஒவ்வொன்றாக அடைக்கப்பட்டுக் கொண்டே வரும்.
பிறகு .சிலருக்கு கண்களின் வழியாகவும், சிலருக்கு வாயின் வழியாகவும், வேறு சிலருக்கு உச்சிமண்டையின் வழியாகவும் , இன்னும் சிலருக்கு ஆசன துவாரத்தின் வழியாகவும் , மூத்திர வாசல் வழியாகவும் , காதின் வழியாகவும் , மூக்கின் வழியாகவும், தொப்புள் குழி வழியாகவும் உயிர் வெளியேறும் .
இவ்வாறு உள்ளுடம்பில் இடம்பெற்ற வாயு வெளியேறியவுடன் ,தூல உடம்பும் வாழ்வும் முடிந்துவிடும்
என்பதை இந்தக் குறளில் கூறுகிறார் .
அடுத்து வரப்போகும் குறள் மிக அரிய உண்மைகளைக் கூறப்போகிறது .அதை ஆடுத்துக் காணலாம்
அண்ணாமலை சுகுமாரன்
17/8/17
avatar
sugumaran
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 326
மதிப்பீடுகள் : 203

View user profile

Back to top Go down

Re: ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்

Post by T.N.Balasubramanian on Thu Aug 17, 2017 9:27 pm

நன்றி

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22239
மதிப்பீடுகள் : 8287

View user profile

Back to top Go down

Re: ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்

Post by ayyasamy ram on Fri Aug 18, 2017 10:28 am-
தனஞ்ஜயன் வாயு: 
-
இது தாயின் கர்ப்பத்தின் இருக்கும் சிசுவை வெளித்தள்ளும். 
மேலும் தசவித வாயுக்களில் தனஞ்சய வாயுவைத் தவிர மற்ற 
வாயுக்கள் எல்லாம் மரணத்தின் போது பிராணனுடன் 
சேர்ந்து உடனே வெளியேறிவிடும். 


இந்த தனஞ்சய வாயு உடனே வெளியேறாமல் உடம்பை.
வீங்கச் செய்தல். நவதுவாரங்களில் நுரை, நீர் வரச்செய்தல், 
உடம்பைப் நாற்றம் எடுக்கச் செய்தல் போன்றவற்றைச் 
செய்து கொண்டே இருக்கும்.


 உடம்பை இடுகாட்டிற்குக் கொண்டுபோய் தீ மூட்டியவுடன் 
பாதி உடம்பு வெந்த பிறகு 'டப்' என்ற சப்தத்துடன் 
வெடித்துத்தான் போகும்.

---
உடம்பை எரியூட்டாமல் புதைத்தால் உடம்பை மண்ணோடு 
மண்ணாகச் செய்து பிறகுதான் தனஜய வாயு வெளியேறும்.


---
இறந்த நபரை உயிருடன் மீண்டு வரச் செய்த யோகிகள் 
இந்த தனஜய வாயுயின் உதவி கொண்டுதான் அப்படிச்
 செய்துள்ளார்கள்.


---ஜீவசமாதி எய்திய யோகியின் உடலில் இருந்து இந்தப் பத்துவித 
வாயுக்களுமே வெளிவருவது இல்லை.

-
---------------------------------------------

நன்றி- இணையம்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37338
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்

Post by T.N.Balasubramanian on Fri Aug 18, 2017 8:13 pm

இவ்வளவு விஷயமா????

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22239
மதிப்பீடுகள் : 8287

View user profile

Back to top Go down

Re: ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்

Post by sugumaran on Tue Aug 22, 2017 2:48 pm
ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள் -26
- -அண்ணாமலை சுகுமாரன்
அதிகாரம் 3 = உள்ளுடம்பின் நிலை

30 ) ஒன்பது வாசலும் ஓக்க அடைத்தாக்கால்
அன்பதிலொன்றாம் அரன்
உள்ளுடம்புப் பற்றிய அதிகாரத்தின் கடைசிப் பாடல் இது .
அடுத்து நாடி தாரணை என்று நம் உடலில் உள்ள நாடிகளை பற்றி நமக்கு கூறப்போகிறார் ஔவைப்பிராட்டி
இந்தக்குறளில் உள்ளுடம்பின் முக்கிய பபண்பைக் கூறுகிறார்

ஒன்பது வாசலும் = உள்ளுடம்பில் இடம்பெற்ற ஒன்பது வாசல் எனும் ,நவதுவாரங்களையும் ,
ஓக்க = ஒருமிக்க
அடைத்தாக்கால் = மனத்தால் எண்ணி தியானித்தால் ,
அன்பதிலொன்றாம் = 50 ரகசிய அட்ஷரங்களையும் ,மற்றும் முக்கிய பிரணவத்தின் மூலமாக ஒன்றும் ஆக 51.,
அரன் = சிவத்தை உணரலாம்
ஒன்பது வாசல் என்பது தூல உடம்பில் இருக்கும் கண்கள் இரண்டு, காதுகள் இரண்டு, நாசித் துவாரங்கள் இரண்டு, கருவாய் ஒன்று,உணவு செல்லும் வாய் ,கழிக்கும்கழிவுக்கு எருவாய் ஆக ஒன்பது வாசல்களின் மேல் மனத்தை குவிப்பதின் மூலம் உள்ளுடம்பில் இடம்பெற்றிருக்கும்
இவைகளுக்கு ஆதாரமான இடங்களைத் தியானிப்பதால் , ,
உடம்பில் இடம்பெற்றிருக்கும் ரகசிய 50 எழுத்துக்களையும் ,அத்துடன் சேர்ந்த பிரணவத்தின் தன்மையையும் சேர்த்து 51 அட்சரம் மூலமாக சிவத்தை உணரலாம் என்கிறார் ,

இந்த அண்டத்தின் சப்தம் நம் பிண்டத்தில்இடம்பெற்ற சக்கரங்களின் ஒவ்வொரு இதழ்களிலும் ஒலிப்பதை ஞானத்தால் கண்டு, அவை 51 அட்சரங்கள் என்பதையும் கண்டு அதில் இருந்து மொழியை வடிவமைத்தார்கள் நம் சித்தர்கள்

என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன் றாகத் தமிழ்செய்யு மாறே என்று பாடிய திருமூலர் கூட தமிழில் 51 எழுத்துக்கள் என்கிறார் .அவர் காலத்தில் 51 இருந்திருக்கலாம் ஆனால் இப்போது 31 தான் உள்ளன . தற்போது உள்ள எழுத்துக்களின் மாறுதல்குறித்துபின்பு விரிவாக தனியேவேறு பதிவில் பேசலாம் .

இப்போது ஔவையும் 51 எழுத்துக்களைபற்றிக்கூறுகிறார்
எனவே 51 எழுத்துக்களைப்பற்றி சிறிது அறிவது அவசியமாகிறது .
சுருக்கமாக சில செய்திகளைமட்டும் இப்போது பார்க்கலாம்

எழுத்துக்கள் உருவாகும் முறைப்பற்றி தொல்காப்பியர் பிறப்பியலின் முதல் நூற்பாவில் எழுத்துகளின் பொதுப் பிறப்பு முறையை விளக்குகிறார்.

உந்தி முதலா முந்துவளி தோன்றித்
தலையினும் மிடற்றினும் நெஞ்சிலும் நிலைஇப்
பல்லும் இதழும் நாவும் மூக்கும்
அண்ணமும் உளப்பட எண்முறை நிலையான்
உறுப்புற்று அமைய நெறிப்பட நாடி
எல்லா எழுத்தும் சொல்லுங் காலைப்
பிறப்பின் ஆக்கம் வேறு இயல
திறம்படத் தெரியும் காட்சியான
(தொல். எழுத்து. பிறப்பு. 1)

எழுத்துக்கள் பொதுவாக எவ்வாறு பிறக்கின்றன என விளக்குவது பிறப்பியல் இலக்கணம். தொல்காப்பியர் பிறப்பியலின் முதல் நூற்பாவில் எழுத்துகளின் பொதுப் பிறப்பு முறையை விளக்குகிறார்.
1. கொப்பூழ் அடியாகத் தோன்றி மேலே எழுகின்ற உதானன் எனும் காற்று தலையிலும், கழுத்திலும், நெஞ்சிலும் தங்குகிறது.
2. பின்னர்த் தலை, கழுத்து, நெஞ்சு எனும் அம்மூன்றுடன் பல், இதழ், நாக்கு, மூக்கு, அண்ணம் உட்பட எட்டு இடங்களிலும் ஓர் உறுப்போடு ஓர் உறுப்பு பொருந்தி அமைய ஒலிகள் உருவாகின்றன.
3. இவ்வாறு காற்று எழுந்து வெவ்வேறு உறுப்புகளின் வெவ்வேறு முயற்சிகளால் எழுத்துகள் பிறப்பதால் அவ்வெழுத்துகள் வெவ்வேறாகத் தோன்றுகின்றன என்கிறார் .
நமது சித்தர்களோஉடலின் இயக்கங்களுக்கு ஆதாரமான சக்கரங்களையும் அதில் இடம்பெற்றுள்ள இதழ்கள் எனும் 4,6,10,12,16,2 மொட்டுக்களை காரணமாக் கூறுகின்றனர் .
1. மூலாதாரம் 4
2. சுவாதிட்டானம் 6
3. மணிபூரகம் 10
4. அநாகதம் 12
5. விசுத்தி 16
6. ஆக்ஞை 2
இந்த ஆறு ஆதாரங்களில் மூச்சு பொருந்தும் போது அந்தந்த ஆதாரங்களைச் சுற்றியுள்ள இதழ்களில் 4,6,10,12,16,2 என அதிர்வின் விளைவாக ஒலி தோன்றும். இவ்வொலியைக் குறிக்கும் வகையில் வரி வடிவங்களைக் குறித்து வருகின்றனர். 50 இதழ்களுக்கு 50 எழுத்துக்கள் விளங்குகின்றன. பிரணவம் எனப்படும் ‘ஓம்’ எனும் ஒலியே அனைத்து ஒலிகளுக்கும் காரணமாகின்றது. ஆக, 50+1 = 51 எழுத்துக்கள். சித்தர்களின் பாடல்களில் 51 அட்சரம் எனக் குறிப்பிடப்படுபவைஇவையேயாகும். ஆறு ஆதாரங்களில் ஏற்படும் அதிர்வுகளே 51 ஒலிகள். அவற்றின் வடிவங்களே 51 அட்சரங்கள்.
இதையே இந்தக்குறளில் ஔவை கூறுகிறார் .
"ஔவையார்" என்பதே ஒரு மந்திரச்சொல் என்று நம்புபவர்கள் இருக்கிறார்கள் .
உடலில் இடம்பெற்றிருக்கும் இந்த சக்கரங்கள் கண்ணுக்குத்தெரியாதவை . அவை உள்ளுடம்பின் பகுதிகள் ஆகும் .
இன்னமும் 51 அட்சரங்களைப்பற்றி நிறைய செய்திகள்
மற்றும் உண்மைகள் சொல்வதற்கு நிறைய உள்ளன .
அத்தனையும் இங்கே இப்போது கூற இடமில்லை .

அடுத்து வரும் குறள்களில் சிறுக சிறுகக் காணலாம் .
அண்ணாமலை சுகுமாரன்
22/8/17
avatar
sugumaran
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 326
மதிப்பீடுகள் : 203

View user profile

Back to top Go down

Re: ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்

Post by sugumaran on Mon Aug 28, 2017 9:21 am
ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள் -26
--அண்ணாமலை சுகுமாரன்

ஒளவையின் குறளில் அடுத்ததற்கு போவதற்குமுன் நான் சில செய்திகளை .பகிர எண்ணுகிறேன் .
3 ஆம் பகுதியில் உள்ளுடம்பு பற்றி 10 குறள்களில் விளக்கம் கூறியுள்ளார் .அடுத்தப் பகுதி நாடி தாரணை பற்றியது .
அண்மையில் வந்த விநாயகர் சதுர்த்தியின் போது ஒளவை எழுதிய விநாயகர் அகவல் படித்தேன்
அப்போது அதில் வந்த சிறப்பான ஒரு வரி என்னை ஈர்த்தது .
- புரியட காயம் புலப்பட எனக்கு
தெரியெட்டு நிலையும் தெரிசனபடுத்தி----என்கிறார்
புரியட காயம் என்பது உள்ளுடம்பு .
அதைப்பற்றி உள்ளுடம்பு பற்றி எழுதியசமயத்தில் குறிப்பிடமறந்தோமே என்ற எண்ணம் வந்தது .இதைப்பற்றியும் எழுதி பின் அடுத்த பகுதி போவதே உசிதம்
என்ற எண்ணம் வந்தது .
புரி - முடிச்சு
அட்டம் - எட்டு
காயம் - உடம்பு

அதாவது உள்ளுடம்பு எட்டு முடிச்சி கொண்டது இவை அனைத்தும் முடிச்சு போன்று பரு உடலில் ஓர் இடத்தில் கட்டப்பட்டு இருக்கின்றது
இதை சித்தர்கள் எட்டு ( அ ) என்பர்
அசபை, எண்குணம் என்றெல்லாம் கூறியுள்ளார்கள்.
இட பிங்களா நாடிகள் மூன்று இடத்தில் மார்டி மாறி சென்று கிரந்தி மூலம் மூன்று மண்டலங்களை ஏற்படுத்துகிறது .
அது வேறு இந்த எட்டு முடிச்சு வேறு .
எனவே உள்ளுடம்பு என்பது புரியட்ட காயம் எனப்படுகிறது இந்த உடலானது மறைவாக இருந்து இந்த பரு உடலை நடத்தி வருகின்றது.
இந்த புரியட்ட காயத்தை குரு நாதர் மூலம் தெரிந்து கொள்ளுதலே தீட்சை எனப்படுகிறது. இதை சித்தர்கள் மாற்றி பிறத்தல் என்கிறார்கள் .
அழுகண்ணி சித்தரும்
ஊத்தை சடலமடி உப்பிருந்த பாண்டமடி
மாற்றி பிறக்க மருந்தெனக்கு கிட்டுதில்லை
மாற்றி பிறக்க மருந்தெனக்கு கிட்டுமென்றால்
ஊத்தை சடலம் விட்டு உன் பாதம் சேரேனோ என்கிறார் .
எனவே உள்ளுடம்பினைஉணர்வதின் வழியே மாற்றி பிறக்க மருந்து எனலாம் .
இனி நாடிகளைப்பற்றி பார்க்கலாம்
அண்ணாமலை சுகுமாரன்
28/8/17
avatar
sugumaran
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 326
மதிப்பீடுகள் : 203

View user profile

Back to top Go down

Re: ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்

Post by T.N.Balasubramanian on Mon Aug 28, 2017 8:20 pm

"புரியட காயம் " & "மாற்றி பிறத்தல்"

நன்றி ,சுகுமாரன் அவர்களே.

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22239
மதிப்பீடுகள் : 8287

View user profile

Back to top Go down

Re: ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்

Post by sugumaran on Thu Aug 31, 2017 8:02 pm
ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள் -27
- -அண்ணாமலை சுகுமாரன்
அதிகாரம் 4 = நாடி தாரணை
31 ) எழுபத்தீராயிர நாடி அவற்றுள்
முழுப்பத்து நாடி முதல்
எழுபத்தீராயிர நாடி = நமது உடலில் 72000 நாடிகள் இருக்கிறது
அவற்றுள் = அந்த 72000 நாடிகளுக்குள்
முழுப்பத்து நாடி = முழுமையான முக்கியமான
பத்து நாடிகள் உள்ளன .
முதல் = அந்த 10 நாடிகளில் முதன்மையான முக்கிய நாடி ஒன்று இருக்கிறது .
நமது உடலில் உள்ள 72000 நாடிகளில் தச நாடிகள் எனும் பத்து நாடிகள் முக்கியமானவை அவை
1-இடா –
2- பிங்களா –
3- சுழுமுனை –
4 – சிங்குவை –
5 – புருடன்
6 – காந்தாரி –
7 – அத்தி –
8 – அலம்புடை –
9 – சங்கினி –
10 – குரு எனப்படும் .இவைகளில்
1-இடா – வலதுகால் பெருவிரல் தொடக்கி கத்தரிக்கோல் போல் மாறிசென்று இடது மூக்கைச் சென்று அடையும்
2- பிங்களா – இடது கால் பெரு விரலில் ஆரம்பித்து மாறிச் சென்று வலது புற மூக்கை பற்றி நிற்கும்
3- சுழுமுனை – மூலாதாரத்தில் தொடங்கி எல்லா நாடிகளுக்கும் ஆதாரமாக நடுநிலையாய் இருந்து ஆறு ஆதாரங்களின் வழியே சிரசில் போய் முட்டி நிற்கும்
இதுவே இங்கு ஔவைசொல்லும் முதன்மையான முக்கியஒரு நாடி ஆகும் .
இதில் இப்போது நாம் முக்கியமாக உணரவேண்டிய விடயம் ஒன்று உண்டு .அது நாடிகள்என்பது நரம்புகள் அல்ல என்பதுவே .
நாடிகள் சூக்ஷுமமானவை , கண்ணுக்குத்தெரியாதது .
இது உடம்பினுள் உயிராற்றல் எனும் பிராணனை உடல் முழுவதும் கடத்த பயன்படுகிறது .
மனித உடம்பில் நரம்பு மண்டலம் ஓர் அதிசயம்தான்
மூளையும், தண்டுவடமும், அவற்றில் இருந்து புறப்படும் பல நரம்புகளும் இதில் முக்கியமானவை .தண்டுவடம், மூளை, அவற்றின் நரம்புகள் உணர்ச்சிகளையும், அசைவுகளையும் தீர்மானிக்கின்றன
நரம்புகளின் இயக்கம் பயன் இவர்களைப்பற்றி மருத்துவ நூல்கள் விவரிக்கின்றன .
ஞான நூல்கள் கண்ணுக்குத்தெரியாத சூக்ஷுமமான நாடிகளை ஆயகின்றன .
இடகலை , பிங்கலை என்று சிலர் கூறுவது உண்டு .
ஆனால் இடகலை என்பது இடது மூக்கு துவாரம் ,
பிங்கலை என்பது வலது மூக்கு துவாரம் .
கலை என்பது காற்றைக் குறிப்பிடும் வார்த்தை ஆகும் .
அது நாடிகளை குறிக்காது .
நாம் சுவாசிக்கும் காற்றில் உள்ள பிராணனை அந்தந்த மூக்குத்துளைகளில் உள்ள நாடிகள் எடுத்து சென்று
சேமிக்கும் .
இன்னும் பல நாடிகள் பற்றிய செய்திகளை அடுத்ததாக குறளில் காணலாம் .
அண்ணாமலை சுகுமாரன்
31/8/17
avatar
sugumaran
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 326
மதிப்பீடுகள் : 203

View user profile

Back to top Go down

Re: ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்

Post by T.N.Balasubramanian on Fri Sep 01, 2017 12:46 am

நாடி வரும் பதிவர்களுக்கு நாடி பற்றிய செய்தி.

எனது சகோதரி ,நீண்ட நாட்களுக்கு பின் கருவுற்று இருந்த சமயம் , எனது உறவினர்,
நாடி பார்த்து கருவுற்று இருப்பதை கூறியது நினைவுக்கு வருகிறது.

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22239
மதிப்பீடுகள் : 8287

View user profile

Back to top Go down

Re: ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்

Post by M.Jagadeesan on Fri Sep 01, 2017 12:48 pm

@T.N.Balasubramanian wrote:நாடி வரும் பதிவர்களுக்கு நாடி பற்றிய செய்தி.

எனது சகோதரி ,நீண்ட நாட்களுக்கு பின் கருவுற்று இருந்த சமயம் , எனது உறவினர்,
நாடி பார்த்து கருவுற்று இருப்பதை கூறியது நினைவுக்கு வருகிறது.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1247280

இன்றுகூட கிராமத்தில் பாட்டிகள் , நாடி பிடித்துப்பார்த்து கர்ப்பமா இல்லையா என்று சொல்லிவிடுவார்கள் .
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5112
மதிப்பீடுகள் : 2406

View user profile

Back to top Go down

Re: ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்

Post by sugumaran on Wed Sep 06, 2017 7:17 pmஞானக் களஞ்சியம் ஔவையின் குறள் -28
- -அண்ணாமலை சுகுமாரன்
அதிகாரம் 4 = நாடி தாரணை

32 ) நரம்பெனும் நாடி இவைகளுக்கெல்லம்
உரம் பெறும் நாடி ஒன்று உண்டு

நரம்பெனும் நாடி = நரம்பென்றுக்

கருதப்படும் நாடிகளில் ,
இவைகளுக்கெல்லாம் = இந்த

நாடிகளுக்கெல்லாம் ,
உரம் பெறும் = வலிமை

அளிக்கக்கூடிய
நாடி ஒன்று உண்டு = முக்கிய நாடி

ஒன்று உண்டு .

நாடிகளை நரம்பு என எண்ணுபவர்கள்

ஔவையின் காலத்திலும் இருந்திருக்கிறார்கள்

போலும் .எனவேதான் நரம்பெனும் நாடி

எனக்குறிக்கிறார் . நாடிகள் சூக்ஷுமமானவை

. எனவே இது ஞான நூல்களில் பேசப்படுகிறது

.மேலும் அவர் இவைகளுக்கு எல்லாம் என

பன்மையில் குறிப்பிடுவதால் நாடி வேறு நரம்பு

வேறு என்பதும் உறுதியாகிறது .
இன்னமும் நாடிகள் பற்றிய பல விஷயங்களை

இந்த அதிகாரத்தின் பத்து குறள்களில்

விவரிக்கிறார் .நாடிதாரணை ,வாயு தாரணை

,அங்கி தாரணை ,அமுத தாரணை என்று பல

அற்புத தகவல்களை இரண்டு அடிகளில் அருமைக்காக நம் பால் கொண்ட அன்பினால் நமது ஔவை பாட்டி அடுத்தெடுத்து அளித்திருக்கிறார் .இதைத் தொடர்ந்து படிக்கும் அன்பர்களுக்கு எனது நன்றி .
தமிழன் பெருமை ஆன்மீகத்திலும் அதிகம்

உள்ளது .

முக்கிய நாடி என்று ஔவை குறிப்பிடும் அந்த

முக்கியநாடி சுழுமுனை எனும் ஆற்றல் மிக்க

நாடிதான் .
சுழுமுனைநாடிமூலம் பிராணன் எனும்

உயிர்ப்பு சக்தி உடல் முழுவதும் பரவி உள்ளது

.பிராண சக்தி தன போக்கில் அந்த நாடிவழியே

பாதம் முதல் தலை உச்சி வரை சென்று

கொண்டுதான் இருக்கிறது .ஆனால் அது

மெதுவாக செல்கிறது .யோகத்தின் மூலம்

அதை வேகப்படுத்துகிறோம் .வேகமாக மேல

ஏற்றுவதால் இன்னமும் அதிக பிராணன்
உடலில் சேருகிறது .இது அசைந்து அசைந்து

மேலே செல்லும் போது இன்னமும் அதிக

பிராணன் உடலில் சேருகிறது .உடல் இளமை

ஆகிறது .முகம் பிரகாசிக்கிறது .
நரை திரை இல்லாமல் ஆகிறது .
'உருத்தரித்த நாடியில்ஒடுங்குகின்றவாயுவைக்
கருத்தினால் இருத்தியே கபாலம் ஏற்ற

வல்லீரேல்விருத்தரும் பாலராவர் மேனியும்

சிவந்திடும்
சிவவாக்கியா;

இங்கு உருத்தரித்த நாடிஎன்பது சுழுமுனை ,

ஒடுங்குகின்ற வாயு பிராணன் ஆகும்

மூலாதாரத்தில் இருக்கும் பிராணனை

கருத்தினால் இருத்தியே உச்சிக்கு ஏற்றினால்

முதியவரும் இளையவராவார் .
என்கிறார் சிவவாக்கியர் .
மேலும் பல நாடிபற்றிய தகவல்களை அடுத்த

பகுதியில் காணலாம் .
அண்ணாமலை சுகுமாரன்
6/9/17
avatar
sugumaran
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 326
மதிப்பீடுகள் : 203

View user profile

Back to top Go down

Re: ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்

Post by sugumaran on Tue Sep 12, 2017 9:06 am
ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள் -29
- -அண்ணாமலை சுகுமாரன்
அதிகாரம் 4 = நாடி தாரணை

33 ) உந்தி முதலாய உறு முடி கீழ் மேலாய்ப்
பந்தித்து நிற்கும் பரிந்து .

உந்தி முதலாய = உந்தி என்பது நாடியின் மத்திய தளம்
நாபிக்கமலம் என்று கூறும் இடம்
அதுவே மணிப்பூரக ஸ்தானம் அது முதல் ,
முடி = உச்சி வரை
கீழ் மேலாய் = நாபிக்கு கீழாகவும் மேலாகவும்
உறு = பொருந்தி
பரிந்து = அன்புடன்
பந்தித்து நிற்கும் = உறுதியாக நிற்கும் .
இங்கு அவ்வை கூறும் நாடி முந்தய குறளில் கூறிய முக்கிய நாடியைப்பற்றியது
அந்த முக்கிய நாடியை குருநாடி .,ஓங்கார நாடி , குண்டலினி நாடி என பலவாறு அழைப்பார்கள் .அந்த ஒப்பற்ற நாடியே நாபிக்கு கீழாகவும் மேலாகவும் ஓடி உச்சிவரை செல்கிறது .
இந்த உந்தியை தொப்பூழ எனக்கூறுவாரும் உண்டு .
ஆயினும் அது உந்தி , நாபிக்கமலம் ,உந்திக்கமலம் , நாபி
என குறிப்பிடும் அனைத்தும் மணிபூரகம் எனும் மத்திய பாகத்தையே .என குருமார்கள் கூறுகிறார்கள் .இந்த‌முக்கிய ‌நாடியான‌து நேர‌டியாக‌ ஆறு ஆதார‌ங்க‌ளுட‌ன் எந்த‌வித‌த‌டையுமின்றி இணைந்துள்ள‌ ஒரேயொரு
நாடியாகும்.
இத‌னூடாக நிரந்தரமாக பிராண‌ ச‌க்தி செலுத்த‌ப்பட்டால்
சூஷ்ம‌ ச‌ரீர‌த்தின்முழுமையான‌ க‌ட்டுப்பாடும்,
அழிவ‌ற்ற‌ ச‌க்தியும், காயகற்பநிலையும் கிடைக்கிறது.
நாடிகளைப்பற்றிக் கூறும் வைத்தியத்தில் பயன்பயன்படும்
நாடிகளைப்பற்றி சில நண்பர்கள் கேட்டிருந்தார்கள் .
ஆனால் ஞான நூல்களில் கூறப்படும் 72,000 நாடிகளில் முக்கிய நாடுகளான தசநாடியின் பெயர்களை நான் முன்பே குறிப்பிட்டிருந்தேன் .அவைகளில் வைத்திய நாடிகளான
வாத , பித்த ,கப நாடிகள் பற்றி குறிப்பு இல்லையே என வினா எழுப்பினார்கள் .
ஞான நூல்களில் வாத பித்த கப நாடிகளிலின் பெயர்கள் இடம்பெறவில்லை .அதே சமயம் அந்த நாடிகள் இல்லாமலும் இல்லை .
சித்த வைத்தியம் எனும் தத்துவமே நாடிகளைவைத்துதான்
எழுப்பப்படுகிறது .
சித்த மருத்துவத்தில் நோயினைக் கண்டறிவதற்கு அடிப்படையான பரிசோதனை முறைகள் எட்டு உள்ளன.
அவை, நாடி, ஸ்பரிசம், நாக்கு, நிறம்,மொழி (நோயாளியின் பேச்சு) விழி, மலம்,சிறுநீர்
இவற்றுள் முதன்மையானது நாடி பார்ப்பது ஆகும்
இருதயம் இரத்தத்தை இரத்தக் குழாய்களின் வழியாக உடலின் எல்லா பாகங்களுக்கும் உந்தித் தள்ளுகிறது. இப்படி ஓடும் இரத்தத்தினால் இரத்தக் குழாய்களில் உணரப்படும் துடிப்பே அலோபதியில் நாடிஎனக் கருதப்படுகிறது
பொதுவாக எந்த மருத்துவ முறையைச் சேர்ந்த மருத்துவரிடம் சென்றாலும் கையைப் பிடித்து நாடி பார்ப்பார்.
சாதாரணமாக அலோபதி மருத்துவர்கள் பார்க்கும் நாடி என்பது வெறும் எண்ணிக்கைதான். அதாவது ஒரு நிமிடத்திற்கு சராசரியாக 72 முறை துடிக்கவேண்டும்.
இதற்கு pulse rate என்று பெயர்.
இந்த எண்ணிக்கை கூடுவதை, குறைவதைக் கொண்டு உடலின் செயல்பாட்டை பொதுவாக அறிந்து கொள்ளலாம்.
ஆனால் இந்த நாடி கணிப்பு வேறு, சித்த மருத்துவமுறை நாடி கணிப்பு வேறு.ஞான நூல்களில் கூறப்படும் நாடிவேறு
இன்னமும் நாடி ஜோதிடம் என்ற ஒரு முறையும் உண்டு

ஆனால் ஞான நூல்களில் கூறப்படும் நாடி என்பது முற்றிலும் வேறானது .மிக முக்கியம் வாய்ந்தது .

ஒட்டுமொத்த தச நாடிகளின் சங்கமம்தான் நமது உடல் .
நமது உடலின் ஆரோக்கியம் வாதம் , பித்தம் , கபம் என்னும்
மூன்று தோஷங்களால் அமைகிறது .
இதில் வாதம் என்பது பஞ்ச பூதத்தில் காற்றின் அம்சம்
இதில் பித்தம் என்பது பஞ்ச பூதத்தில் தீயின் அம்சம்
இதில் கபம் என்பது பஞ்ச பூதத்தில் நீரின் அம்சம்
தசநாடிகளில் முதல் மூன்று நாடிகள் இடா , பிங்களா , நடுநாடி வாதத்தின் கூறு ஆகும் .
அடுத்த நான்கு நாடிகள் சுழுமுனை,காந்தாரி ,அத்தி ,சிங்குவை , ஆகியவை வெப்பம் எனும் பித்த நாடியாகும் .
இறுதியாக அலம்புடை ,புருடன் ,சங்கினி ஆகியவை மூன்றும் கப நாடியின் அம்சமாகும் .
நாடிகளைப்பற்றிய 10 குறள்களும் ,வாயு தாரணை எனும் அடுத்த 10 குறள்களையும் படித்த பின் உங்களுக்கு நல்ல தெளிவான நிலை ஏற்படும் .
சித்தர்களின் வைத்திய நாடி முறை மிக அற்புதமானது , அவர்களைப்பற்றிய பல தகவல்களைத் தனியே காணலாம் .
அண்ணாமலை சுகுமாரன்
12/9/17
avatar
sugumaran
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 326
மதிப்பீடுகள் : 203

View user profile

Back to top Go down

Re: ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்

Post by sugumaran on Sat Sep 16, 2017 9:00 am
ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள் -30
- -அண்ணாமலை சுகுமாரன்

அதிகாரம் 4 = நாடி தாரணை

34 )காலொடு கையின் நடு இடத்து தாமரை
நூல் போலு நாடி நுழைந்து

காலொடு = கால்களோடு
கையின் = கைகளிலும்
நடு = மத்திய பாகத்திலும்
இடத்து = ( உடல்முழுவதும் )பக்கங்களிலும்
நாடி = ஓம்கார நாடியானது
தாமரை
நூல் போலு = தாமரை தண்டில் இருக்கும் நூல் போன்று
நுழைந்து = உள்ளே நுழைந்து இருக்கிறது .
கால்களில் ஆரபித்து கைமுதலாக உடலின் எல்லா பகுதியிலும் ,
ஓம்கார நாடி தாமரை தண்டின் நூல் போல மெல்லியதாக வியாபித்து உள்ளது .
இந்த குறளில் முக்கிய நாடியின் அளவை தாமரைத் தண்டின் நூல் போல
அத்தனை மெல்லியதாக இருப்பதாகக் கூறுகிறார் .
இந்த ஓம்காரநாடி உடலில் வியாபித்து அறிவின் மயமாகவே இடம்பெற்றிருப்பதால் , ஒருவரை ஒருவர் பார்க்கும் போது கடவுளை கண்டதும் கும்பிடுவது போல கும்பிடுகிறோம் என்று கூறுகிறார் சுந்தரமாணிக்க யோகியேஸ்வரர் .
உடலில் முழுவதும் வியாபித்துள்ள 72,000 நாடிகளில் முக்கிய 10 நாடிகளின் பெயர்களை முன்பு பார்த்தோம் , அவைகள் எவ்வாறு உடலில் வியாபித்திருக்கிறது என்பதை இப்போது பார்க்கலாம் .
இடா = வலது கால் பெருவிரல் முதல் உடலில் பெருக்கல் குறிபோல மாறி மாறி சென்று இடது பக்கநாசியை அடைவது
பிங்களா = இடது கால் பெருவிரல் முதல் உடலில் பெருக்கல் குறிபோல மாறி மாறி சென்று வலது பக்க நாசியை அடைவது
நடு நாடி = மூலாதாரத்தில் தொடங்கி அனைத்து நாடுகளுக்கும் ஆதாரமாக
விளங்குவது .

சுழி முனை = இதுவே உச்சித தாமரை வரை சென்று விளங்குவது
காந்தாரி = கண்களில் சென்று செயல்படுவது
அத்தி =உடலெங்கும் வியாபித்து செயல்படுவது
சிங்குவை = உண்ணாக்கில் நின்று உணவு , நீர் இவைகளை விழுங்க செய்வது
தற்காலத்தில் முக்கியமாக மருந்து மாத்திரைகளையும் விழுங்க செயகிறது
அலம்புடை = இரு செவி வரை சென்று இயங்க செயகிறது .
புருடன் = புரு > புருவம்: கண்ணுக்குப் பாதுகாப்புத் தருவது.
புருவம் புருடன் (புருசன் ) புரு > புருவம்: கண்ணுக்குப் பாதுகாப்புத் தருவது., புரு > புருடன் பெண்ணுக்குப் பாதுகாப்புத் தருபவன்
இறைவனை தவிர அனைத்து ஆன்மாக்களும் பெண் தன்மை கொண்டவை
புருடனை நாடுவது ஆன்மாக்களின் இயல்பு .
இந்த புருடன் எனும் நாடி பரத்தை பற்றி நிற்பது .
இன்னமும் விரிவாக தனினயே விவாதிக்கலாம் .

சங்கினி = இது மார்பை பற்றி நிற்பது .இதய கமலத்துடன் தொடர்பு கொண்டு .
இவாறு நாடிகள் உடலெங்கும் வியாபித்து தாமரை தண்டின் நூல்போல
முக்கிய பங்காற்ற உதவுகிறது .
தச நாடிகளும் தசவாயுக்களும் மிக முக்கியமானவை , இவைகளை புரிந்து கொள்வது மிக முக்கியமானது .
இனி அடுத்த குறளை அடுத்தட்டுக்கனலாம் .
அண்ணாமலை சுகுமாரன்
16/9/17
avatar
sugumaran
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 326
மதிப்பீடுகள் : 203

View user profile

Back to top Go down

Re: ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்

Post by sugumaran on Sat Sep 23, 2017 8:26 am

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள் -31
- -அண்ணாமலை சுகுமாரன்
அதிகாரம் 4 = நாடி தாரணை

35) ஆதித்தன்தனகதிர் போலஅந்த நாடிகள்
பேதித்தும் தாம் பரந்தவாறு
ஆதித்தன் = சூரியன்
தன கதிர் போல = தன்னுடைய கலைகளை இவ்வுலகெங்கும் பரப்புவதுபோல ,
அந்த நாடிகள் = அந்த தசை நாடிகள் மற்றும் 72,000 நாடிகளின் வழியே

பேதித்தும் தாம் பறந்தவாறு = உயிரின் ஆற்றலை உடலெங்கும் பரப்பி இயக்குகிறது .
ஆதவன் எவ்வாறு ஒளிர்ந்து தன கதிர்களை அனைத்து திசைகளிலும் பரப்பி மற்ற கோள்களையம் இந்த பூமியையும் இயக்குவது போல ,
உடலில் இடம் பெற்றுள்ள உயிரின் ஒளி நடு நாடியில் இருந்து தச நாடிகளின் வழியாக பொறிகளை இயக்கி , இதர
72,000 நாடிகள் வழியே உடலெங்கும் விரவி அனைத்து
உறுப்புகளையும் இயக்குகிறது .

நாடிகள் கண்ணுக்கு தெரியாத சூக்ஷுமமானது .
அந்த நாடிகள் வழியே பிராணன் எனும் சக்தி பரவி உடலை
இயக்குகிறது .
இப்போது நமது உடலில் அமைந்திருக்கும் 72,000 நாடிகள்
உடலில் எங்கனம் பரவி இருக்கிறது என்ற விபரத்தைக் காணலாம்
தலையில் 15000
கண்களில் 4000
செவியில் 3300
மூக்கில் 3380
பிடரியில் 6000
கண்டத்தில் 5000
கைகளில் 3000
முண்டத்தில் 2170
இடையின் கீழ் 8000
விரல்களில் 3000
லிங்கத்தில் 7000
மூலத்தில் 5000
சந்துகளில் 2000
பாதத்தில் 5150
மொத்தம் 72000
இவ்வாறு உடலெங்கும் பரவி பிராணனை செலுத்தி ஒரு வலைபின்னல் போல ஆராவில் உள்ள நாடிகள் சக்கரங்கள் மூலமாக உடலுடன் தொடர்பு கொள்கிறது.
நாடிகள் தடையின்றி பிராண சக்தியை உடல் முழுவதும் பாயச் செய்ய வேண்டியது மிகவும் அவசியம், நாடிகளில் அடைப்பு ஏற்பட்டு சக்தி தேக்கம் ஏற்பட்டால், உடலில் வலி, நோய் போன்ற பிரச்சினைகள் தோன்றும்.

உற்ற விபரம் உறுதியாம் என்நந்தி
பற்றிய மூலம் பகர்ந்திடும் நாடிதான்
எற்றியே எண்ணிடில் எழுபத்து ஈராயிரம்
மற்றதில் பத்து வளமான நாடியே.

வளமான பத்தில் வழங்குந் தசவாயு
உளமான இடைபின் சுழியென மூன்றுண்டு
களமான சக்கரம் காட்டியது ஆறுண்டு
தளமான மண்டலந் தான் மூன்றும் பாருமே

இவைகள் சித்தர் திருமூலர் தரும் சான்றுகள் ஆகும்
இனியும் நாடிகள் பற்றிய அதிக செய்திகளை அடுத்தப் பகுதியில் காணலாம் .
நண்பர்கள் சிலர் என்னுடன் பேசும் போது என்ன அய்யா எப்போது அவ்வையின் படத்தைப் போடுகிறீர்கள் ஔவைக்கு பதிலாக யாராவது அம்மணியின் படத்தைப்போட்டாலாவது இன்னமும் அதிகம் பேர் படிப்பார்கள் , ஏன் ஔவைக்கு பதில் ஓவியாவின் படத்தை போடுங்களேன் என்றார் .
நான் இதில் ஔவையின் படத்தையே இப்போதும் போடுகிறேன் .
நல்லவிஷயங்கள் நல்ல இடத்தைப் போய் சேர்ந்தால் போதும் என்பதே என் எண்ணம்
அண்ணாமலை சுகுமாரன்
21/9/17
avatar
sugumaran
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 326
மதிப்பீடுகள் : 203

View user profile

Back to top Go down

Re: ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்

Post by T.N.Balasubramanian on Sat Sep 23, 2017 9:14 am

நண்பர்கள் சிலர் என்னுடன் பேசும் போது என்ன அய்யா எப்போது அவ்வையின் படத்தைப் போடுகிறீர்கள் ஔவைக்கு பதிலாக யாராவது அம்மணியின் படத்தைப்போட்டாலாவது இன்னமும் அதிகம் பேர் படிப்பார்கள் , ஏன் ஔவைக்கு பதில் ஓவியாவின் படத்தை போடுங்களேன் என்றார்

பாருங்கள் மனிதர்களின் ரசனையை . சோகம் சோகம் சோகம்

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22239
மதிப்பீடுகள் : 8287

View user profile

Back to top Go down

Re: ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்

Post by sugumaran on Wed Oct 11, 2017 7:40 pmஞானக் களஞ்சியம் ஔவையின் குறள் -31
- -அண்ணாமலை சுகுமாரன்

அதிகாரம் 4 = நாடி தாரணை
35) ஆதித்தன் தன கதிர் போல அந்தநாடிகள்
பேதித்துத் தாம் பரந்தவாறு

ஆதித்தன் தன கதிர்களை நீக்கமற இந்த அகிலம் எங்கும்
பரப்புவது போல நாடிகளும் , பிராணன் எனும் உயிராற்றலை நமது உடலெங்கும் பரப்பி செயல்படுகிறது என்கிறார் . சூரியன் மையமாக நின்று ,தன கதிர்களால் கோள்கள் அனைத்தையும் இயக்குவது போல , உடலின் உயிர் ஆற்றல் நாடிகளில் தச நாடிகள் மற்றும் 72,000 நாடிகள் வழியே பரவி உடலின் அத்தனை உறுப்புக்களையும் இயக்குகிறது .


அண்டத்தில் இருப்பதே இந்த பிண்டத்திலும் இருக்கிறது .
அண்டம் இயங்குவது போலவே இந்த பிண்டமும் இயங்குகிறது .

நாடிகளை பற்றி யூகிமுனிவர் ஒரு பாடல் மூலம் விளக்கியுள்ளாரஅதை பார்போம்…
சிறந்த இடை பிங்கலையும் சுழினையோடு
சிறப்பான காந்தாரி யத்திச் சிங்கூவையாம்
பிறந்த அலம் பூரூடனொடு குகுதன்றானூம்
பேரான சங்கினியும் வயிரவன்றான்
திறந்தவிவை பத்துந்தான் நாடியாகும்
திரிமூன்று நாளையினி லொடுங்கும்பாரு


பத்து நாடிகள் என்பவை இடா ,பிங்களா .சுழிமுனை… என்பவற்றோடுகாந்தாரி,அத்தி..சிங்கவை,அலம்புருடன்.. குகுதன்,சங்கினி,வயிரவன்…என பத்து நாடிகளாம்..
இதில்இடா ,பிங்களா .சுழிமுனை… இவை மூன்றும் …வாதத்தில் ஒடுங்கும் இயல்புடையவையாகும்.ீ. .

இடா …பிங்கலை…என்ற இரண்டு நாடிகளூம் உடம்பில் அடிபபாகமாகிய மூலத்திலிருந்துகிளம்பி….
சுழிமுனையோடு.. கூடி ஏறி சிரசு வரை சென்று முட்டி,அவை உகார வளைவில் திரும்பி,வரும் வழி நாசி,நடுப்புருவம் ,நெற்றி…ஆகிய இடங்களை தொட்டுக்கொண்டுமீண்டும் மூலத்தில் சேருகின்றது….
அடுத்துகந்தாரி என்ற நாடி உந்தி கமலத்தில் இருந்து கிளம்பி நரம்புகள் ஏழுக்கும் உருவமாகி மேலே சென்று சிரசில் மூட்டி மீண்டும் கண்டத்தில் புகுந்து நாவின் அடியில் வந்த அமர்ந்து விடுக்கின்றது
அடுத்து அத்தி சிங்குவை..
இரண்டும் மூலத்தின் மேற்பகுதியில் இருந்து கிளம்பி மேலே ஏறி இரண்டு செவிகளில் உள்ள காதுகளை தொட்டுக்கொண்டு..நரம்புகளில் எல்லாம் துடிப்புகளை உண்டாக்கிக் இரண்டு கண்களில் வந்து நிற்க்கும.
அடுத்து அலம்புருடன்,வயிரவனும் என்ற இரண்டு நாடிகளும் அடிமூலம் பற்றி மேலே ஏறி இரண்டுகன்னங்களிலும் வந்து நிற்க்கும்.
அடுத்து..சங்கினியும்குரு என்ற நாடிகள் நாபித் தளத்தில் தோன்றி குதம் வரையில்ஓடிக்கொண்டுயிருக்கும்..
இத்தனை செய்திகள் நாடிகளைப்பற்றி இருந்தும் நாம் இன்னும் முழுமையும் உணரவில்லை தெரிந்துகொள்ள பல வழியிருந்தும் நாம் தெரிந்துக்கொள்ள முயற்சிக்க வில்லை.பல நூற்று கக்காண சித்தர்கள் நூல்கள் இருந்தும் நாம் அதனை படிக்கமுற்படவில்லை.ஒருவேளைஅவைகள் எண்ணிக்கையில் அதிகமாக இருப்பதாலும் ,பாமரத்தமிழில் ,மறைபொருள் அதிகம் கொண்டு இருப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம் ..
மனித உடலானது தொண்ணூற்றிஆறுதத்துவங்களால் ஆனது அதில் தசநாடிகளும் அடங்கியது . அது பற்றி திருமூலர் பின்வருமாறு உரைக்கிறார்.

"பூதங்கள் ஐந்தும் பொறியவை ஐந்துளும்

ஏதம் படஞ்செய்து இருந்து புறநிலை

ஓதும் மலம்குணம் ஆகும்ஆ தாரமொடு

ஆதி அவத்தைக் கருவிதொண் ணூற்றாறே------

இந்த தொண்ணூற்றி ஆறு தத்துவங்களை அறிந்து, தெளிந்து கொள்வதே சித்தர்களின்ஞானத்தின் அடிப்படையாகிறது

நமது ஔவைப் பிராட்டி அத்தனை ஞானத்தின் அடிப்படைச் செய்திகளையும் சுருக்கமாக இரண்டடியில் விளக்கியுள்ளார் .இந்த பத்துநாடிகளும் மனித உடம்பில் உள்ள ஆறுஆதாரங்களையும், மனதையும், உயிரையும்இயக்குகிறது என்பது சித்தர்களின்முடிவாகும்

அடுத்த செய்தியை அடுத்தப்பதிவில் காணலாம் .

அண்ணாமலை சுகுமாரன்

12/10/17
avatar
sugumaran
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 326
மதிப்பீடுகள் : 203

View user profile

Back to top Go down

Re: ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்

Post by sugumaran on Sun Oct 22, 2017 11:35 am
ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள் -32
- -அண்ணாமலை சுகுமாரன்

அதிகாரம் 4 = நாடி தாரணை
36) மெய்யெல்லாமாகி நரம்போ டெலும்பிசைந்து
பொய்யில்லை நாடிப் புணர்வு.

மெய்யெல்லாமாகி = இந்த உடல் முழுவதுமாகி
நரம்போடெலும்பிசைந்து = உடலெங்கும் இருக்கும் நரம்புகள் ,மற்றும் எலும்புகளுடன் இணைந்து
நாடிப் புணர்வு. = நாடிகள் செயல்படுகிறது .
பொய்யில்லை = பொய்யில்லை உண்மையே ,! கண்ணால் காணமுடியவில்லை என்பதால் பொய் என நினைக்க வேண்டாம்

நாடிகள் உடம்பெங்கும் வியாபித்து இருக்கும் நரம்புகள் மற்றும் எலும்புகளுடன் இணைந்து செயல் படுகிறது .இதை கண்ணால் காணமுடியவில்லை என்பதால் பொய் என நினைக்கவேண்டாம் என்கிறார் . அவர் பொய்யில்லை என்று சொல்லுவது கண்ணுக்குத் தெரியாத நாடிகளை பற்றிமட்டுமில்லை மெய்யெல்லாமாகி என்றுக் கூறி அதிலும் ஒரு நுட்பத்தை தெரிவிக்கிறார் என்று நினைக்கிறேன் .
மண்ணோடு மண்ணாக மறைந்தொழியும் இந்த மனித உடலைநாம்என்றும்உள்ளதுஎன்று பொருள்படும் மெய் என்ற சொல்லால் அழைக்கின்றோம்.
மனித உடல் அழியக்கூடியதே. ஆயினும், அதனுள் என்றும் உள்ளதான அறிவுப் பொருளாகிய ‘உயிர்’ இணைந்துள்ளது. இந்த உண்மையை சங்ககாலம் தொட்டு வழங்கிவரும் தமிழ்க் கவிதைகள் உயிருக்கு வழங்கியுள்ள ‘மன்’ என்னும் நிலைபேற்றுக்குறிப்பு முன்ஒட்டு. தமிழில் ‘மன்’ என்பதற்கு ‘என்றும் உள்ளது’ என்று பொருள். காட்டாக, சில பாடல்களைக் காண்போம்.

மன்னுயிர் ஓம்பி அருளாள்வார்க்கு இல்லென்ப
தன்னுயிர் அஞ்சும் வினை. - என்கிறது திருக்குறள்:244

அறம் எனப்படுவது யாதெனக் கேட்பின்
மறவாது இதுகேள்! மன்னுயிர்க் கெல்லாம்
உண்டியும் உடையும் உறையுளும் அல்லது
கண்டது இல். என்கிறது (மணிமேகலை – 25:228-231)

மெய்யனான இறைவனும், என்றுமுள்ள நிலைப்பேறு பெற்ற உயிரும் உள்ளே உறைவதால், அழியும் தன்மையுள்ள,பொய்யான ஊன் உடம்பை மெய் எனத் தமிழர் காலம் காலமாக அழைத்துவருகின்றனர்

தமிழில் வெற்றுச் சொல் என்பதே கிடையாது., தமிழ் மொழி மெய் அநுபவம் மூலம் உருவாக்கப் பட்டுள்ளதால் எப்படிப்பட்ட இடையூறு இடை இடையே தோன்றி வந்தாலும் இந்த மொழி அசைக்க முடியாத சக்தியாக காலத்தை கடந்து நிலைத்து நிற்கிறது

நம் உடல் அவரவர் கையால் எட்டு ஜாண்! அவரவர் கையால் அவரவர் உடம்பு எட்டு ஜாணே! இன்றைய விஞ்ஞான உலகம் ஒவ்வொருவரும் உயரத்தில் 150 செமீ 160 செமீ என்ற பல கணக்குகளைச் சொல்கிறது! உலகிலுள்ள மனிதர் ஒவ்வொருவரின் உயரமும் வெவ்வேற என பிரித்தே காட்டுகிறது. ஆனால் நமது மெய்ஞ்ஞானிகளோ மனிதர்கள் ஆகிய நாம் அனைவரும் ஜீவாத்மாக்களே என்றும் அவர்களின் வடிவமைப்பும் ஒன்றே என என்றும் நிறுவுகிறது எவ்விதத்திலும் மனிதர்கள் தங்களுக்குள் வேற்றுமை கொள்ளக்கூடாது என்று எல்லோரின் உயரமும் எட்டு ஜாணே என்று உண்மையை கூறி விட்டனர்!
உடம்பு அழிந்தால் உயிர் அழியும். உயிர் அழிந்தால் மெய்ஞ்ஞானம் கிடைக்காது . எனவே உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்து உடம்பையும் வளர்க்கலாம் , விளைவாக உயிரையும் வளர்க்கலாம் . உயிரை வளர்த்தால் சீவன், சிவமாகும். ஞானம் சித்திக்கும் .
உடம்பார் அழியின் உயிரார் அழிவார்
திடம்பட மெய்ஞானம் சேரவும் மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே!!!
— திரு மூலர் —
உடம்பினை முன்னம் இழுக்கென்று இருந்தேன்
உடம்புக்குள்ளே உறு பொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில் கொண்டானென்று
உடம்பினை யான் இருந்து ஓம்புகின்றேனே” – –திருமூலர் திருமந்திரம்.
இவ்வாறு மெய் எனும் இந்த உடலுக்குள்உறு பொருள் மறைவாக இருப்பது போல் இந்தஉடலுக்குள் கண்ணுக்குத் தெரியும் நரம்புகளும் எலும்புகளுக்கும் இடையே
நாடிகளும் இயைந்து வினையாற்றுகிறது என்கிறார் எனக் கொள்ளலாம் .
அடுத்து விரைவில் அடுத்ததக குறளைப் பார்க்கலாம் .
அண்ணாமலை சுகுமாரன்
22/10/17
avatar
sugumaran
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 326
மதிப்பீடுகள் : 203

View user profile

Back to top Go down

Re: ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்

Post by sugumaran on Thu Nov 02, 2017 4:46 pm


ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள் -33
- -அண்ணாமலை சுகுமாரன்
அதிகாரம் 4 = நாடி தாரணை

37 ) உத்திமுதலாகி ஒங்காரத்து உட்ப்பொருளாய
நின்றது நாடி நிலை
உத்திமுதலாகி = நாபிக் கமலத்தை முதன்மையாக்கிக் கொண்டு ,
ஒங்காரத்து உட்ப்பொருளாய = ஓங்காரத்தின் உட்பொருளாக விளக்குவதாக ,
நின்றது = நிலைத்து இருக்கிறது
--நாடி நிலை = உடலில் இயங்குவது நாடிகளின் நிலை
ஓங்காரத்தின் மறைபொருளாக இருக்கும் பேருண்மையை ஆதாரமாகக் கொண்டு , உந்திக்கமலத்தில் இருந்து உதித்திருக்கும் நாடிகள், செயல்படுவதாகக் அவ்வாய்ப்பிராட்டி கூறுகிறார் .
.
முதலில் ஓங்காரம் என்பது என்ன என்பதை ,முழுமையாக அறியவேண்டும் . பின்புதான் அதன் உட்பொருளாக இருப்பது எது என அறியமுடியும் .
''ஓம் - என்ற ஒலியையே ஓங்காரம்-பிரணவம் என்று கூறுவர். உலகம் தோன்றுவதற்கு முன்பு ஓங்காரம்-பிரணவம் ஒலியே நிலவி இருந்தது என்றும் , ஓங்காரத்திலிருந்து விந்துவும், விந்திலிருந்து நாதமும் அதிலிருந்து உலகமும் உயிர்களும் ஒன்றிலிருந்து ஒன்றாகத் தோன்றின எனத் தத்துவ நூல்கள் கூறுகின்றன.
"ஆதியிலே பராபரத்திற் பிறந்த சத்தம்
அருவுருவாய் நின்ற பரசிவமுமாகி
தோதியென்ற சிவனிடமாய்ச் சத்தியாகித்
தொல்லுலகில் எழுவகையாந் தோற்றமாகி "
என்னும் சுப்பிரமணிய ஞானத்திலிருந்து அறியலாம்.
விஷயம் தெரிந்தவர்கள் இதை ஆங்கிலத்தில் Om என்று எழுதாமல் Aum என்றே எழுதுவார்கள். ‘அதுவே சரி .
சிவமே இவ்வாறு ஓங்காரத்தின் உட்பொருளாக இருந்து இருந்து உயிரையும் அந்தக்கரணங்களையும் இயக்கி மனவாக்கு காயங்களால் வினை செய்ய ஊக்குகின்றது என்பதனைத் தமக்கு இறைவன் அறிவுறுத்தியதாக
மாணிக்க வாசகர்,
“”பாசமெனும் தாழுருவி, உய்யுநெறி காட்டுவித்திட்டு ஓங்காரத் துட்பொருளை, ஐயனெனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே” --(திருவாசகம், அச்சோப்பதிகம்,7) எனக் கூறுகின்றார்.
.
அ, உ, ம ஆகியவை சேர்ந்த “ஓம்” எனும் பிரணவமாய் ஒலிக்கிறது
ஓம் என்பது அழகானதொரு இறை-ஒலித் தத்துவம்! சமணம் , புத்த மதம், சீக்கியர்கள், சைனாவில் கூட "ஓம்" புனிதமாக கருதப்படுகிறது .
சிவமே ஓங்காரத்தின் உட்பொருள் எனத் திருமுறைகள் அனைத்தும் கூறுகின்றன.
* ஒன்றவே உணர்திராகில் ஓங்காரத்து ஒருவனாகும்
* ஓங்காரன்காண்
* ஓங்காரத் துட்பொருளாய் நின்றான்காண்
* ஓங்காரத் தொருவனை
இவை போன்ற சொற்றொடர்கள் பல திருமுறைகளில் உள்ளன.
“ஓங்காரத்து உள்ளொளிக்கு உள்ளே முருகன் உருவம்கண்டுதூங்கார் … … என்செவார் யமதூதருக்கே”என்ற கந்தர் அலங்காரப் பாடலுள் முருகனே ஓங்காரத்துட்பொருள் என அருணகிரிநாதர் பாடுகின்றர்.
திருப்புகழ் ஒன்றில், “ஓரெழுத்தில் ஆறெழுத்தை ஓதுவித்த பெருமாளே” என்ற அடியில், ‘ஓம்” என்ற ஓரெழுத்து மந்திரமே, தன்னுள் அடங்கியிருந்த திருவைந்தெழுத்து மந்திரங்களையும் விரியச் செய்து ஆறெழுத்து மந்திரமாயிற்று என உணர்த்தினார்.
திருமந்திரத்தில் ஓங்காரத்தின் சிறப்புப்பற்றி ,
ஓமெனு ஓங்காரத் துள்ளே ஒரு மொழி
ஓமெனு ஓங்காரத் துள்ளே உருவம்
ஓமெனு ஓங்காரத் துள்ளே பல பேதம்
ஓமெனு ஓங்காரம் ஒண்முத்தி சித்தியே
என்று திருமூலர் பாடியுள்ளார்.
சட்டைமுனி சூத்திரத்தில்
" ஒடுக்கமடா ஓங்காரக் கம்பமாச்சு ஓகோகோ அகாரமங்கே பிறந்ததாச்சு "
என்று சட்டைமுனி தனது சூத்திரத்தில் பாடியுள்ளார்.
இவ்வாறு ஓங்காரத்தின் சிறப்புகள் பல இருந்தாலும் ., அதன் உட்பொருளாதான் இந்த உடலை இயக்குகிறது என்பதை அறியமுடிகிறது
அகத்திய பெருமான் தனது மெய்ஞான சுத்திரத்தில் ,
" அவ்வாகி உவ்வாகி மவ்வுமாகி ,
- ஐம்பத்தோ ரெழுத்துக்கு தியாகி "
"அகாமுதல் அவ்வைமுத்தும் தியாகும்
அறிந்தோர்க்கு இதிலேதான் வெளியதாகும் "
என்று பாடியுள்ளத்தின் மூலம் நன்கு அறியலாம்.
உருவமும்- உடலும்.
உடம்பை உருவைக் குறிக்கும் போது ஏற்கனவே குறித்தப்பிட்டபடிஇதுவே கருவில் தரிக்கும் பிண்டத்திற்குக் காரணமாய் விளங்குகிறது.இறைவன் அவ்வெழுத்தின் உருவமாய் உடம்பினுள் அமைந்துள்ளார்
என்பது கீழ்காணும் மெஞ்ஞான முனிவர்களது சூத்திரம் மூலம் விளங்கும்.
"கண்டது அவ்வென்னுங் கடைய தோரட்சாம்,
பிண்டத்துக் குற்பத்தி பிறக்கு மிதிலே"
- மச்சைமுனி தீட்சை ஞானம்
"உந்தியினுள்ளெ அவ்வும் உவ்வுமாய் மவ்வுமாகி
விந்துவாய் நாதமாகி விளங்கிய சோதிதன்னை "
- அகத்தியர் முதுமொழி ஞானம்.
இவ்வாறு உடம்பினுள்ளே இயங்கும் இறைசக்தியான ஓங்காரம் , நாடிகள் வழியே பிராணனாக பரவி இயங்குகிறது .
அண்ணாமலை சுகுமாரன்
2/11/17
avatar
sugumaran
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 326
மதிப்பீடுகள் : 203

View user profile

Back to top Go down

Re: ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum