ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
மின்னூலகம் இணையதளத்தினுள் நுழைய அனுமதி பெறுவது எப்படி??
 sudhagaran

'50 ஆண்டுகளுக்கு சுத்தம்செய்ய வேண்டாம்'- பசுமைக் கழிப்பறையை உருவாக்கி அசத்திய மாணவர்கள்
 பழ.முத்துராமலிங்கம்

தேங்காய்ப்பாலுக்கு "அப்படி" ஒரு சக்தி...!
 பழ.முத்துராமலிங்கம்

வரும் மாதம் வானில் நடக்க இருக்கும் அதிசியம்..! மிஸ் பண்ணிடாதீங்க..!! இப்பவே ரெடியா இருங்க..!!!
 பழ.முத்துராமலிங்கம்

யார் இந்த ஆசிரியர் பகவான்? மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி?
 T.N.Balasubramanian

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

எனக்குள் ஒரு கவிஞன் SK
 T.N.Balasubramanian

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 T.N.Balasubramanian

மின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து
 ஜாஹீதாபானு

என்ன ஆனது கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு?
 SK

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 SK

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!
 SK

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 SK

சாண்டில்யனின் புகழ் பெற்ற 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ..
 sudhagaran

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

இந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்
 பழ.முத்துராமலிங்கம்

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 பழ.முத்துராமலிங்கம்

அமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’
 anikuttan

மாரி 2 படப்பிடிப்பில் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட காயம்!
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 ஜாஹீதாபானு

அதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை
 SK

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 SK

நீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை
 T.N.Balasubramanian

அரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்
 SK

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 SK

கோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்!
 SK

தயாரிப்பாளரான சுருதிஹாசன்
 SK

இனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்
 பழ.முத்துராமலிங்கம்

5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்
 ayyasamy ram

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 ajaydreams

மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 பழ.முத்துராமலிங்கம்

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 பழ.முத்துராமலிங்கம்

அப்பா
 பழ.முத்துராமலிங்கம்

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 பழ.முத்துராமலிங்கம்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 பழ.முத்துராமலிங்கம்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

2017 ஆங்கில புத்தாண்டு, பொது மற்றும் ராசி பலன்கள் !

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

2017 ஆங்கில புத்தாண்டு, பொது மற்றும் ராசி பலன்கள் !

Post by ayyasamy ram on Sat Dec 24, 2016 3:45 pm

 
-

ஆண்டின் முதல் தேதியில் எண் கணிதப்படி, 3 ஆக வருகிறது.
2017 ஆம் ஆண்டின் எண் 1 என்று வருகிறது. அதனால் 1 ஆம்
எண்ணுக்குரிய சூரியபகவானும் 3 ஆம் எண்ணுக்குரிய
குருபகவானும் இந்த புத்தாண்டில் முக்கியமானவர்களாக
கருதப்பட வேண்டும்.

இந்த ஆண்டு 26.1.2017 (வியாழக்கிழமை) இரவு 7.28 (ஐஎஸ்டி)
மணிக்கு சனி ஹோரையில் சனிபகவான் விருச்சிக
ராசியிலிருந்து தனுசு ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். 7.4.2017
(வியாழக்கிழமை) பின்னிரவு 5.40 (ஐஎஸ்டி) மணிக்கு
(விடிந்தால் வெள்ளிக்கிழமை) சூரியஹோரையில் மூலம்
நட்சத்திரம் 2 ஆம் பாதத்தில் சனிபகவான் தனுசு ராசியில்
வக்கிரமடைகிறார்.

இந்த ஆண்டு 21.6.2017 (செவ்வாய்க்கிழமை) பின்னிரவு
4.49 (ஐஎஸ்டி) மணிக்கு சூரிய ஹோரையில் சனிபகவான்
அதிவக்கிர கதியில் விருச்சிக ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார்.

இங்கு சனிபகவான் 25.10.2017 வரை சஞ்சரித்துவிட்டு 26.10.2017
(வியாழக்கிழமை) பிற்பகல் 3.32 (ஐஎஸ்டி) மணியளவில் சூரிய
ஹோரையில் விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு
மறுபடியும் பெயர்ச்சி ஆகிறார்.

12.9.2017 (செவ்வாய்க்கிழமை) காலை 7.00 (ஐஎஸ்டி) மணிக்கு
செவ்வாய் ஹோரையில் குருபகவான் கன்னி ராசியிலிருந்து
துலாம் ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார்.

இங்கு 10.10.2018 வரை சஞ்சரித்துவிட்டு குருபகவான் 11.10.2018
(வியாழக்கிழமை) இரவு 7.20 (ஐஎஸ்டி) மணிக்கு சனிஹோரையில்
துலாம் ராசியை விட்டு விருச்சிக ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்.
இந்த ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் இந்த சனி மற்றும்
குருபகவான்களின் சஞ்சாரத்தைக் கருத்தில் கொண்டும்
எழுதப்பட்டுள்ளது.

இந்த ஆங்கிலப் புத்தாண்டு ஜாதகத்தில் லக்னம் மற்றும்
தொழில் ஸ்தானாதிபதியான புதபகவான் சுக ஸ்தானத்தில்
விரயாதிபதியான சூரியபகவானுடன் இணைந்து புத ஆதித்ய
யோகத்தைப் பெறுகிறார்.

புதபகவான் கேதுபகவானின் சாரத்தில் அமர்ந்து நவாம்சத்தில்
தன் ஆட்சி வீடான மிதுன ராசியை அடைகிறார். சூரியபகவானும்
தன் ஆட்சி வீடான சிம்மராசியை அடைகிறார். புதபகவான்
கல்விக் காரகராவார். வியாபாரத்திற்கும் புதபகவான்
காரகராகிறார். இதனால் தொழில் துறை, பேச்சு, கணினி,
கணிதம், எழுத்துத்துறை போன்ற துறைகள் ஏற்றம் காணும்.

அதோடு நீதித் துறையிலும் நவீன மாற்றங்கள் உண்டாகும்.
பூர்வபுண்ணிய (ஐந்து) மற்றும் ருணம் (கடன்), ரோகம் (வியாதி),
சத்ரு (விரோதி) ஆகிய ஆறாம் வீட்டுக்கும் அதிபதியான சனி
பகவான் மூன்றாம் வீட்டில் விபரீத ராஜயோகம் பெற்று
லக்னாதிபதியின் சாரத்தில் (கேட்டை) நட்சத்திரத்தில் அமர்ந்து
நவாம்சத்தில் மீன ராசியை அடைகிறார்.
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37078
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: 2017 ஆங்கில புத்தாண்டு, பொது மற்றும் ராசி பலன்கள் !

Post by ayyasamy ram on Sat Dec 24, 2016 3:45 pm

சனிபகவான் வலுத்திருப்பதால் இயல்பாகவே தத்துவத்தில்
நாட்டம் அதிகரிக்கும். அவர் இந்த ஆண்டு ஞானப்பிழம்பான
குருபகவானுடன் பெரும்பாலும் சஞ்சரிப்பதால் தத்துவம்,

வேதம், வேதாந்தம் ஆகிய துறைகளும் வளர்ச்சி அடையும்.
ஆட்டோமொபைல், இரும்பு, ஈயம், கனரக வாகனங்கள்,
சமுதாய பொதுமக்கள், எண்ணெய், ஆடுகள், எருமை மாடுகள்,
தாதுப்பொருள்கள் சார்ந்த துறைகளிலும் எதிர்பாராத அளவுக்கு
வளர்ச்சி அடையும்.

தனம், வாக்கு, குடும்பம் ஆகிய இரண்டு மற்றும் பாக்கிய
ஸ்தானமான ஒன்பதாம் வீட்டிற்கும் அதிபதியான சுக்கிர
பகவான் கன்னி லக்னத்திற்கு யோககாரகராகி ஆறாம் வீட்டில்
அமர்ந்து நவாம்சத்தில் தன் மூலத்திரிகோண வீடான துலாம்
ராசியை அடைகிறார்.

சுகம் (4), களத்திர, நட்பு (7) ஸ்தானாதி பதியான குருபகவான்
லக்னத்தில் அமர்ந்து வர்கோத்தமத்தில் (ராசியிலும்
நவாம்சத்திலும் ஒரே ராசியில் அமர்ந்திருக்கும் நிலை)
அமர்ந்திருக்கிறார். தைரிய (3) அஷ்டமாதிபதியான (8) செவ்வாய்
பகவான் ருணம், ரோகம், சத்ரு ஸ்தானமான ஆறாம் வீட்டில்
வர்கோத்தமத்தில் அமர்ந்திருக்கிறார்.

செவ்வாய்பகவான் நெருப்பு கிரகமாகி ஆறாம் வீட்டில்
ராகுபகவானின் சாரத்தில் இருப்பதாலும் அவருடன் சுக்கிர
பகவான் இணைந்து இருப்பதால் கேளிக்கை, சினிமா, நாடகம்
போன்ற துறைகள் உயர்வடைந்தாலும் அவர்களுடன் கேது
பகவான் இணைந்து இருப்பதால் இந்த துறைகள் மிதமான
வளர்ச்சியையே அடையும்.

இந்த வகையில் சில விபத்துகளையும் சந்திக்க நேரிடலாம்.
ஆறாம் வீட்டில் கேதுபகவானும் அயன ஸ்தானத்தில் ராகு
பகவானும் இருக்கிறார்கள். அவர்கள் முறையே மகர, கடக
ராசிகளில் நவாம்சத்தில் அமர்கிறார்கள்.

இது சர்ப்ப கிரகங்கள் அசுப பலம் பெறவில்லை என்று குறிக்கிற
அம்சமாகும். லாபாதிபதியான சந்திரபகவான் ஐந்தாம் வீடான
மகர ராசியில் சுயசாரத்தில் (திருவோணம் நட்சத்திரம்) அமர்ந்து
நவாம்சத்தில் தன் உச்ச வீடான ரிஷப ராசியை அடைகிறார்.

மேலும் ராசி நவாம்சம் இரண்டிலும் முறையே குருபகவானின்
பார்வை மற்றும் குருபகவானுக்குத் திரிகோணம் என்கிற நிலை
உண்டாகிறது. இதனால் குருசந்திர யோகமும் உண்டாகிறது.

இதனால் இவ்வாண்டு, குரு, சந்திர பகவான்களின்
காரகத்துவங்கள் சிறப்பாக பரிமளிக்கும் என்று கூறலாம்.
குருபகவானின் அருளால் இந்த ஆண்டு நீதி, நிர்வாகம்
ஏற்றமளிக்கும். புதிய மாற்றங்களும் மக்களுக்கு நிரந்தர நன்மை
கிடைக்கும் விதத்தில் அமையும். மேலும் ஆன்மிகம் யோகம்
போன்றவைகளும் புகழ் பெறும்.

லக்னத்தில் குருபகவான் இருப்பதால் நமது நாட்டின் பெயர்
உலகளவில் பாராட்டப்படும். சந்திரபகவானின்
காரகத்துவங்களான காவியம், சுகபோகங்கள், கப்பல், வாணிபம்,
அரசாங்கம், திரவப்பொருள்கள், கரும்பு, கிணறு, குளங்கள் போன்ற
நீர்ப்பாசனத் துறைகளும் வளர்ச்சியடையும்.

ஆங்கிலப் புத்தாண்டு (1.1.2017) சனிக்கிழமை இரவு ஞாயிற்றுக்
கிழமை விடியற்காலை கன்னி லக்னம், சுக்கிர ஹோரையில்
பிறக்கிறது.

——–ஜோதிடர் கே.சி.எஸ். ஐயர் சென்னை

தினமணி

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37078
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: 2017 ஆங்கில புத்தாண்டு, பொது மற்றும் ராசி பலன்கள் !

Post by krishnaamma on Tue Dec 27, 2016 10:59 am

சென்னை: 2017ம் ஆண்டு ஆரம்பத்தில் சனி பெயர்ச்சியும் ஆகஸ்ட் மாதம் ராகு கேது பெயர்ச்சியும், செப்டம்பரில் குரு பெயர்ச்சியும் நிகழ உள்ளது. அவரவருக்கென்று தனியாக இருக்கும் ஜாதக லக்கினம் தசாபுத்தி பலன்கள், குணாதிசயம், ராசி பலன்கள் மாறுபடலாம். ஜாதகத்தில் சுபபலன்கள் தரக்கூடிய தசை புக்தி அந்தரங்கள் நடக்குமானால் இங்கே கோசார ரீதியாக சொல்லப்பட்டுள்ள நற்பலன்கள் கூடும் கெடுபலன்கள் குறையும். ஜாதக பலமும் சிறப்பாக இல்லாமல் கோசாரமும் அனுகூலமாக அமையாமல் போனால் கெடுபலன்கள் அதிகமாகும். இப்படிப்பட்ட கிரக நிலை அமையப் பெற்றவர்கள் கிரகப் பிரீதி கோயில் வழிபாடு தான தர்ம காரியங்கள் ஆகியவற்றின் மூலம் அதிக சங்கடங்கள் ஏற்படாமல் தங்களை பாதுகாத்துக் கொள்ளலாம்.

பொதுவாக நற்பலன் தரக்கூடிய குரு மற்றும் தீய பலன் தரக்கூடிய சனியின் கோசார நிலையைக் கொண்டு புத்தாண்டில் நிகழக்கூடிய நல்ல கெட்ட பலன்கள் நிர்ணயிக்கப்படுகின்றன. கோசார கிரகங்களின் நற்பலன்களை அதிகப்படுத்திக்கொள்ளவும் தீய பலன்களை குறைத்துக் கொள்ளவும் அன்பர்கள் அவரவர்களின் இஷ்ட தெய்வங்களை வழிபடுவது சிறப்பு.

மேஷம் ராசியினருக்கு ஆங்கில புத்தாண்டு எப்படி?

வீர பராக்கிரமம் கொண்ட மேஷ ராசி அன்பர்களே எதிலும் துணிச்சலும் தான் நினைத்த காரியம் சாதிக்கின்ற எண்ணமும் தான் நினைக்கும் எண்ணப்படி பிறர் நடக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களே! 2017 புத்தாண்டு பொதுவாக உங்களுக்கு நல்லவிதமான பலன்களை அள்ளி அள்ளி கொடுக்கப்போகிறது. ஆண்டின் பிற்பகுதியில் பண வரவு சரளமாக இருக்கும். கடன்கள் எல்லாம் தீர்வாகும் பிரச்சினைகள் எல்லாம் முடிவுக்கு வந்துவிடும்.

இந்த புத்தாண்டின் தொடக்கத்திலிருந்தே தொழில் உத்தியோகம் சிறப்படையும் இது வரை தடைபட்டிருந்த தொழில் கொஞ்சம் கொஞ்சமாக விருவிருப்படையும். பரம்பரை தொழில் நல்லபடியாக செழித்து வளரும். தொழில் சம்பந்தமாக வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். தொழில் லாபம் அதிகரிக்கும். சனி பகவான் ஜனவரி மாதம் 26ம் தேதி விருச்சிகத்தில் இருந்து தனுசு ராசிக்கு இடம் பெயர்கிறார்.

மேஷ ராசிக்கு 9ம் இடத்தில் சனி பகவான் அமர்வதால் நற்பலன்கள் அதிகரிக்கும். இதே போல குருபகவான் செப்டம்பர் 12ம் தேதியன்று கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு இடம் பெயர்கிறார். இது உங்கள் ராசிக்கு ஏழாம் இடம் ஆகும். துலாம் ராசியில் அமரும் குரு பகவான் உங்கள் ராசியை சம சப்தம பார்வையிடுவது சிறப்பு. ஆண்டு துவக்கத்தில் ராகு 5ம் இடத்தில் இருக்கிறார். கேது 11ம் இடத்தில் இருக்கின்றனர்.

ஆகஸ்ட் மாதத்தில் 18ம் தேதியில் இருந்து ராகு கடகத்திற்கும், கேது மகரத்திற்கும் இடப் பெயர்ச்சியடைகின்றனர். இது மேஷ ராசிக்கு ராகு 6ம் இடத்திற்கும் கேது 11ம் இடத்திற்கும் பெயர்ச்சியடைகின்றனர். இனி 12 மாதங்களுக்கும் என்னென்ன பலன் நடைபெறும் என்பதை பார்க்கலாம்.

ஜனவரி - தொழிலில் இடமாற்றம் மாதக் கடைசியில் தொழிலில் மேன்மை நிலை உண்டாகும் புதிய தொழில் வாய்ப்புகள், தொழில் உத்தியோகம் சம்பந்தமாக இடமாற்றம் உண்டாகும்.
14ந் தேதிக்குப் பிறகு புதிய இடத்தில் பணியில் அமரும் நிலை உண்டாகும். பணியில் கொஞ்சம் மன ஈடுபாடு குறைவாக இருக்கும். வெளியூர் பயணம் காரணமாக செலவுகள் அதிகரிக்கும் சிலர் வெளிநாடு செல்லும் யோகமும் கிடைக்கும். ஆடம்பரச் செலவுகளை கட்டுப்படுத்துவது நல்லது. மாதக் கடைசியில் மனைவிக்காக செலவுகள் அதிகரிக்கும்.

பிப்ரவரி - சுப செய்தி வரும் மாத ஆரம்பத்திலிருந்தே உத்தியோகம் சிறப்பாக இருக்கும். சம்பள உயர்வு எதிர்பார்த்திருந்தவர்களுக்கு 03ம் தேதி அலுவலகத்திலிருந்து உத்தரவு கிடைக்கும். 13ம் தேதிக்குப் பிறகு சம்பள உயர்வு கிடைக்கலாம். 27ம் தேதிக்குப் பிறகு கமிஷன் தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும் நீங்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த சுபமங்கள தகவல் வந்துசேரும்.

மார்ச் - புத்திசாலித்தன காரியம் இந்த மாதம் 14ம் தேதிக்குப் பிறகு அரசு ஊழியர்களுக்கு இடமாற்றம் உண்டாகலாம். உத்தியோகத்தில் பதவி உயர்வு எதிர்பார்த்தவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். மாத ஆரம்பத்தில் உறவினர் ஒருவர் காலமாகலாம். 27ம் தேதிக்குப் பிறகு புத்திசாலித்தனமாக சமயோசிதமாக காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள்.

ஏப்ரல் - வருமானம் அதிகரிக்கும் மாத ஆரம்பத்தில் செலவுகள் அதிகரிக்கும். 14ம் தேதிக்குப் பிறகு அப்பாவின் வகையில் ஆதாயம் கிடைக்கும். சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு இம்மாதம் 13ம் தேதிக்குப் பிறகு வருமானம் அதிகரிக்கும்.

மே - சகோதரர்களால் நன்மை வீடு நிலம் வகையில் செலவுகள் அதிகரிக்கும். 15ம் தேதிக்குப் பிறகு புதிதாக வாகனம் வாங்குவீர்கள். 27ம் தேதிக்குப் பிறகு வெளிநாட்டு தொழில் தொடர்புகள் சிறப்படையும். நிலபுலன்களில் முதலீடு செய்வீர்கள். சகோதரர்களால் பணவரவு உண்டாகும்.

ஜூன் - பணவரவு மாத ஆரம்பத்தில் பூர்வீக சொத்திலிருந்து பணவரவு தாராளமாக இருக்கும். மாதத்தின் பிற்பகுதியில் அப்பா சம்பாதித்த பூர்வீக வீட்டை விற்பனை செய்யும் நிலை உண்டாகலாம். தாய் மாமனுடன் சச்சரவு உண்டாகலாம். தகவல் தொடர்பு சிறப்பாக இருக்கும்.

ஜூலை - கடன்கள் தீரும் மாதத்தின் ஆரம்பத்தில் அலைச்சல் அதிகரிக்கும் 17ம் தேதிக்குப் பிறகு புதிதாக நான்கு சக்கர வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். வீடு நிலம் வாங்குவதில் எச்சரிக்கையாக இருக்கவும். 21ம் தேதிக்குப் பிறகு வாங்கிய கடன்கள் தீர்வாகும். 26ம் தேதிக்குப் பிறகு ஆடம்பரப் பொருட்களை வாங்குவீர்கள்.

ஆகஸ்ட் - பூர்வீ க சொத்து குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பிறக்கும் மாதமிது. பூர்வீக சொத்து கிடைக்கப் பெறுவீர்கள் உல்லாசப் பயணம் செல்வீர்கள். புதிதாக வாகனம் வாங்கும் வாய்ப்பு இருக்கிறது. பழைய வீட்டை வாங்கி புதுப்பீர்கள். அம்மாவின் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம்.

செப்டம்பர் - பொருளாதாரத்தில் கவனம் பரம்பரை நிலம் வீடு வகையில் கடன் வாங்கும் சூழ்நிலை உண்டாகலாம். வியாபாரத்தில் கடன் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. எதிர்பாலினரிடம் நட்புறவு சிறப்படையும். கைக்கு வந்த காசு கையில் நிற்காது. பொருளாதார விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டிய மாதம் இது.

அக்டோபர் - தடை நீங்கும் அப்பா வகையில் நெருங்கிய உறவினர் ஒருவர் காலமாவார். சகோதர சகோதரிகளிடம் நல்லுறவு பாராட்டுவீர்கள். வியாபாரத்தில் இருந்த தடை நீங்கும் பண வரவு அதிகரிக்கும். மனைவியிடம் சச்சரவு செய்வதை தவிர்ப்பது நல்லது.

நவம்பர் - பெண்களால் அதிர்ஷ்டம் அலுவலகத்தில் உயர் அதிகாரிகளால் தொல்லை உண்டாகலாம். எச்சரிக்கையாக இருக்கவும். மாணவர்கள் படிப்பில் கவனமாக இருக்க வேண்டும். மனதில் எரிச்சல் அதிகரிக்கும். பெண்களால் அதிஷ்டம் அதிகரிக்கும்.

டிசம்பர் - ஆன்மீக சுற்றுலா குடும்பத்துடன் ஆன்மீக சுற்றுலா செல்வீர்கள். அடிக்கடி அலுவலகத்திற்கு விடுப்பு போட வேண்டிய சூழ்நிலை உண்டாகும். கணவன் மனைவி அன்னியோன்னியம் அதிகரிக்கும். மனைவிக்கு வேண்டியதை எல்லாம் வாங்கி கொடுப்பீர்கள்.

நன்றி: தமிழ் ஜோதிடம்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55631
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: 2017 ஆங்கில புத்தாண்டு, பொது மற்றும் ராசி பலன்கள் !

Post by krishnaamma on Tue Dec 27, 2016 11:03 am

பொதுவாக நற்பலன் தரக்கூடிய குரு மற்றும் தீய பலன் தரக்கூடிய சனியின் கோசார நிலையைக் கொண்டு புத்தாண்டில் நிகழக்கூடிய நல்ல கெட்ட பலன்கள் நிர்ணயிக்கப்படுகின்றன. கோசார கிரகங்களின் நற்பலன்களை அதிகப்படுத்திக்கொள்ளவும் தீய பலன்களை குறைத்துக் கொள்ளவும் அன்பர்கள் அவரவர்களின் இஷ்ட தெய்வங்களை வழிபடுவது சிறப்பு.

ரிஷப ராசிக்காரர்களே! இந்த ஆண்டு துவக்கத்தில் சுபஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு பகவானால் உங்களுடைய பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும் ஆண்டின் இறுதியில் குருவின் ராசி மாற்றமானது பொருளாதார வகையில் சிக்கலைக் கொடுக்கலாம். ஆண்டின் ஆரம்பத்திலேயே சனிபகவான் சுபஸ்தானத்திற்கு வருவது தொழிலில் இருந்து வந்த தடை நீங்கி சிறப்படைய வைக்கும்.


இவ்வாண்டு ராகு கேது பெயர்ச்சி ஆகஸ்ட் மாதம் வரை ராகு நான்கில் இருப்பது வாகனம் வீடு ரிப்பேர் செய்து பராமரிக்கும் நிலை உண்டாகும் கேது பத்தில் இருப்பது தொழில் மாற்றத்தை கொடுக்கும். ஆகஸ்ட் மாதம் 18ம் தேதிக்கு மேல் ராகு சிம்மத்தில் இருந்து கடகத்திற்கும் கேது கும்பத்தில் இருந்து மகரத்திற்கும் இடம் பெயர்ச்சியடைகிறார். இதன் மூலம் ராகு மூன்றாம் இடத்திற்கும் கேது ஒன்பதாம் இடத்திற்கும் பெயர்ச்சியடைகின்றனர்.

ஜனவரி - பொருளாதார நிலை சிறப்பு சூரியன் இந்த மாதம் 14ம் தேதி ஒன்பதாம் இடத்திற்கு வருகிறார் இது வரை தொழில் இருந்து வந்த தடை தாமதங்கள் நீங்கிவிடும். செவ்வாய் 20ம் தேதி லாபஸ்தானத்திற்கு வருகிறார் தொழில் லாபம் அதிகரிக்கும் புதன் இம்மாதம் முழுவதும் எட்டாம் இடத்தில் இருப்பது ஷேர் மார்க்கெட் முதலீடுகளை தவிர்க்க வேண்டும் குரு 05ம் இடத்திலிருப்பது பொதுவாக பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும் சுக்கிரன் பத்தாம் இடத்தில் இருப்பது தொழில் நிலை சிறப்பைத் தரும் 27ம் தேதி 11ம் இடத்திற்கு வருவது மனதில் எண்ணியவை எல்லாம் இனிய வகையில் நிறைவேறும். சனி 07ல் இருப்பது வியாபாரம் சிறப்படைய உதவும்.

பிப்ரவரி - குல தெய்வ வழிபாடு பத்தாமிடத்திலிருக்கும் சூரியன் உத்தியோகத்தில் நல்ல நிலையை கொடுப்பார் 13ம் தேதி முதல் பத்தாமிடத்திற்கு வருவது பதவி உயர்வைத் தரும். செவ்வாய் இம்மாதம் முதல் 11ம் இடத்திலேயே இருக்கிறார் உறவினர்களுடன் நல்லுறவைத் தரும். புதன் 03ம் தேதி ஒன்பதாம் இடத்திற்கு வருகிறார் குடும்பத்துடன் குல தெய்வ கோயிலுக்கு போகும் நிலை உண்டாகும் 22ம் தேதி பத்தாம் இடத்திற்கு வருவது வியாபார விருத்தியை கொடுக்கும் ஐந்தாம் இடத்திலிருந்து குரு பொருளாதார நிலையை சீராக வைத்திருக்க உதவுவார் சுக்கிரன் 11ல் இருப்பது மனதில் எண்ணியவை எல்லாம் இனிய வகையில் நிறைவேறும். சனி 08ல் இருப்பது தொழில் வியாபாரத்தில் மந்த நிலையைக் கொடுக்கும் ராகு 4ல் இருப்பதும் கேது 10ல் இருப்பது வாகனப் பராமரிப்பு தொழில் செய்பவர்களுக்கு சிறப்பைத் தரும்.

மார்ச் - வீடு நிலம் வாங்கலாம் இது வரை உத்தியோகத்தில் ஏற்றம் தந்த சூரியன் 14ம் தேதி பதினொன்றாமிடத்திற்கு வருவதால் சம்பள உயர்வை கொடுப்பார் செவ்வாய் 02ம் தேதி பன்னிரெண்டாமிடத்திற்கு வருவது வீடு நிலம் வகையில் முதலீடுகளை செய்யும் நிலையைக் கொடுக்கும். புதன் 11ம் தேதி பதினொன்றாமிடத்திற்கு வருகிறார் நினைப்பதற்கு மாறுபட்ட வகையில் செயல்கள் நடைபெறும் 27ம் தேதி பன்னிரெண்டாமிடத்திற்கு வருவது குடும்ப செலவுகளை அதிகப்படுத்துவார். குரு 5மிடத்திலிருந்து பண வரவைத் தருவார் சுக்கிரன் பனினொன்றாமிடத்திலிருந்து நல்ல லாபத்தை தருவார் சனி தொழிலில் இடையூறுகளைத் தருவார் ராகு 4ல் இருப்பதும் கேது 10ல் இருப்பது வாகனப் பராமரிப்பு தொழில் செய்பவர்களுக்கு சிறப்பைத் தரும்.

ஏப்ரல் - இடமாற்றம் 14ம் தேதி வரை தொழில் லாபத்தை 14ம் தேதி பன்னிரெண்டாமிடத்திற்கு வருவது அரசு ஊழியர்களுக்கு இட மாற்றத்தை தருவார் செவ்வாய் 13ம் தேதி ஜென்ம ராசிக்கு வருகிறார் பதவி உயர்வு உண்டாகும் புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது இம்மாதம் ராசி மாற்றம் இல்லை எனவே கடந்த மாத பலன்களையே தொடர்ந்து தருவார்கள்.

மே - உத்தியோக உயர்வு சூரியன் இம்மாதம் 15ம் தேதி உங்கள் ஜென்ம ராசிக்கு வருகிறார் உத்தியோக சிறப்பைத் தருவார். செவ்வாய் 27ம் தேதி இரண்டாமிடத்திற்கு வருவது பண வரவைத் தரும் சுக்கிரன் 27ம் தேதி பன்னிரெண்டாமிடத்திற்கு வருகிறார் மனைவி வகையில் அதிக செலவுகளை கொடுப்பார் புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது இம்மாதம் ராசி மாற்றம் இல்லை எனவே கடந்த மாத பலன்களையே தொடர்ந்து தருவார்கள்.

ஜூன் - சம்பள உயர்வு சூரியன் இம்மாதம் 15ம் தேதிக்கு இரண்டாம் இடத்திற்கு வருகிறார் சம்பள உயர்வு கிடைக்கும். புதன் 03ம் தேதி ஜென்ம ராசிக்கு வருவது சமயோசிதமாக செயல் பட்டு வெற்றியடையக் கூடிய தன்மையைத் தரும் 18ம் தேதி இரண்டாமிடற்கு வருவது வியாபாரத்தில் பண வரவை அதிகரிக்கச் செய்யும் குடும்ப சந்தோஷமும் அதிகரிக்கும். சுக்கிரன் இம்மாதம் 29ம் தேதி சுக்கிரன் ஜென்மராசிக்கு வருவது மனதில் சந்தோஷத்தை அதிகரிக்கச் செய்யும். செவ்வாய், குரு, சனி, ராகு, கேது இம்மாதம் ராசி மாற்றம் இல்லை எனவே கடந்த மாத பலன்களையே தொடர்ந்து தருவார்கள்.

ஜூலை - குடும்பத்தில் சந்தோஷம் சூரியன் இம்மாதம் 17ம் தேதி இரண்டாமிடத்திற்கு வருகிறார் செவ்வாய் இம்மாதம் 11ம் தேதி மூன்றாமிடத்திற்கு வருகிறார் சகோதரவகையில் சச்சரவுகளை கொடுப்பார் புதன் 03ம் தேதி மூன்றாம் இடத்திற்கு வருகிறார் நீங்கள் நீண்ட நாட்கள் எதிர்பார்த்திருந்த சுப மங்கல தகவல் வந்து சேரும் 21ம் தேதி நான்காமிடதிற்கு மாறுகிறார் படிப்பில் மேன்மை நிலை உண்டாகும் சுக்கிரன் 26ம் தேதி இரண்டாமிடத்திற்கு வருகிறார் குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். குரு, சனி, ராகு, கேது இம்மாதம் ராசி மாற்றம் இல்லை எனவே கடந்த மாத பலன்களையே தொடர்ந்து தருவார்கள்.

ஆகஸ்ட் - மனக்குழப்பம் அதிகரிக்கும் சூரியன் இம்மாதம் 17ம் தேதி நான்காமிடத்திற்கு வருகிறார் அரசாங்க ஒதுக்கீட்டில் வீடு மனை கிடைக்கலாம் செவ்வாய் 27ம் தேதி நான்காம் இடத்திற்கு வருகிறார் புதிதாக நிலம் வாங்குவீர்கள் சுக்கிரன் 21ம் தேதி மூன்றாமிடத்திற்கு வருகிறார் அலைச்சல் அதிகரிக்கும் இம்மாதம் 18ம் தேதி மூன்றாமிடத்திற்கு வருகிறார் மனக் குழப்பங்கள் அதிகரிக்கும் இம்மாதம் 18ம் தேதி கேது ஒன்பதாம் இடத்திற்கு வருகிறார் கடவுள் பக்தி அதிகரிக்கும் புதன், குரு சனி ராசி மாற்றம் இல்லை கடந்த மாத பலன்களையே தொடர்ந்து தருவார்கள்.

செப்டம்பர் - கவனம் தேவை சூரியன் 17ம் தேதி ஐந்தாமிடத்திற்கு வருகிறார் அரசாங்க வேலை தொடர்பான தேர்வுகளில் வெற்றி கிடைக்கும் செவ்வாய் 13ம் தேதி ஐந்தாம் இடத்திற்கு வருகிறார் பூர்வீக வீட்டை பாகம் பிரிக்கும் நிலை உண்டாகும் புதன் 27ம் தேதி ஐந்தாம் இடத்திற்கு வருகிறார் தாய் மாமனுடன் நல்லுறவு உண்டாகும் குரு 12ம் தேதி ஆறாமிடத்திற்கு பெயர்ச்சியடைகிறார் பொருளாதர விஷயங்களில் கவனம் தேவை சுக்கிரன் 15ம் தேதி நான்காமிடத்திற்கு வருகிறார் புதிதாக வாகனம் வாங்குவீர்கள். சனி, ராகு, கேது ராசி மாற்றம் இல்லை கடந்த மாத பலன்களையே தொடர்ந்து தருவார்கள்.

அக்டோபர் - கடன் வாங்கும் சூழ்நிலை சூரியன் 16ம் தேதி ஆறாமிடத்திற்கு வருகிறார் உத்தியோகத்தில் கடுமையான நெருக்கடி ஏற்படும் செவ்வாய் 30ம் தேதி ஆறாமிடத்திற்கு வருகிறார் சகோதரர்களுடன் பிரச்சினை உண்டாகும் புதன் 14ம் தேதி ஆறாமிடத்திற்கு வருகிறார் வியாபாரத்திற்காக கடன் வாங்கும் சூழ்நிலை உண்டாகும் சுக்கிரன் 15ம் தேதி ஐந்தாம் இடத்திற்கு வருகிறார் குடும்பத்துடன் உல்லாசப் பயணம் செல்லும் நிலை உண்டாகும் குரு,சனி, ராகு, கேது ராசி மாற்றம் இல்லை கடந்த மாத பலன்களையே தொடர்ந்து தருவார்கள்.

நவம்பர் - வியாபாரம் விருத்தி சூரியன் 17ம் தேதி ஏழாம் இடத்திற்கு வருகிறார் அரசு அதிகாரிகளுடன் நல்லுறவு உண்டாகும் புதன் 02ம் தேதி ஏழாம் இடத்திற்கு வருகிறார் வியாபாரம் விருத்தியாகும் 24ம் தேதி எட்டாம் இடத்திற்கு வருகிறார் ஷேர் மார்க்கெட் முதலீடுகளில் கவனம் தேவை சுக்கிரன் 03ம் தேதி ஆறாம் இடத்திற்கு வருகிறார் விலை உயர்ந்த ஆபரணங்களை யாருக்கும் இரவல் தர வேண்டாக்ம் 26ம் தேதி ஏழாம் இடத்திற்கு வருகிறார் கணவன் மனைவி அன்னியோன்னியம் அதிகரிக்கும் குரு,சனி, ராகு, கேது ராசி மாற்றம் இல்லை கடந்த மாத பலன்களையே தொடர்ந்து தருவார்கள்.

டிசம்பர் - பெண்களால் கஷ்டம் சூரியன் 16ம் தேதி எட்டாம் இடத்திற்கு வருகிறார் அப்பாவுக்கு விபத்து கண்டம் உண்டாகலாம் சுக்கிரன் 20ம் தேதி எட்டாம் இடத்திற்கு வருகிறார் பெண்களால் கஷ்டம் உண்டாகலாம் செவ்வாய், புதன், குரு,சனி, ராகு, கேது ராசி மாற்றம் இல்லை கடந்த மாத பலன்களையே தொடர்ந்து தருவார்கள்.


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55631
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: 2017 ஆங்கில புத்தாண்டு, பொது மற்றும் ராசி பலன்கள் !

Post by krishnaamma on Tue Dec 27, 2016 11:06 am

பொதுவாக நற்பலன் தரக்கூடிய குரு மற்றும் தீய பலன் தரக்கூடிய சனியின் கோசார நிலையைக் கொண்டு புத்தாண்டில் நிகழக்கூடிய நல்ல கெட்ட பலன்கள் நிர்ணயிக்கப்படுகின்றன. கோசார கிரகங்களின் நற்பலன்களை அதிகப்படுத்திக்கொள்ளவும் தீய பலன்களை குறைத்துக் கொள்ளவும் அன்பர்கள் அவரவர்களின் இஷ்ட தெய்வங்களை வழிபடுவது சிறப்பு.

மிதுன ராசிக்காரர்களே! இந்த ஆண்டு துவக்கத்தில் நான்காமிடத்தில் சஞ்சரிக்கும் குரு பகவானால் பொருளாதார நிலை நன்றாக இருக்கும் ஆண்டின் ஆரம்பத்திலேயே சனிபகவான் சுபஸ்தானத்திற்கு வருவது தொழிலில் இருந்து வந்த தடை நீங்கி சிறப்படைய வைக்கும். இவ்வாண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ள ராகு கேது பெயர்ச்சி சுப அசுப பலன்களை கலந்து கொடுக்கும். செப்டம்பர் மாதம் குரு பகவான் கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு மாறுகிறார். இந்த ராசி மாற்றமானது பொருளாதார வகையில் மிகவும் சிறப்பைக் கொடுக்கும்.

ஜனவரி - இடமாற்றம் ஆண்டின் துவக்கத்தில் ஏழாமிடத்தில் இருக்கும் சூரியன் இடமாற்றத்தை தருவார். இம்மாதம் 14ம் தேதி எட்டாமிடத்திற்கு சூரியன் வருகிறார் உத்தியோகத்தில் மன உளைச்சலை கொடுப்பார். செவ்வாய் இம்மாதம் 20ம் தேதி பத்தாம் இடத்திற்கு வருகிறார் ரியல் எஸ்டேட் தொழிலில் உள்ளவர்களுக்கு தொழில் சிறப்படையும் புதன் இம்மாதம் முழுவதும் ஏழாம் இடத்தில் இருப்பது தரகு கமிஷன் தொழிலில் ஈடுப்பட்டிருப்பவர்களுக்கு தொழிலில் மேன்மை நிலையைக் கொடுக்கும். குரு நான்காம் இடத்திலிருப்பது பணவரவு சரளமாக இருக்கும் சுக்கிரன் ஒன்பதாமிடத்திலிருப்பது குலதெய்வ அருள் அதிகரிக்கச் செய்யும் இம்மாதம் 27ம் தேதி பத்தாமிடத்திற்கு வருகிறார் தொழில் வியாபாரம் உத்தியோகம் மேன்மையடையும் சனி வருட ஆரம்பத்தில் ஆறாமிடத்தில் இருந்தாலும் இம்மாதம் 26ம் தேதி தேதி ஏழாமிடத்திற்கு வருவது தொழிலில் இருந்து வந்த தடை தாமதங்களை நீக்கும். ராகு மூன்றாமிடத்தில் இருப்பது அடிக்கடி பயணங்களைக் கொடுக்கும் கேது ஒன்பதாமிடத்திலிருப்பது ஆன்மீகத்தில் ஆர்வத்தை அதிகரிக்கச் செய்யும்.

பிப்ரவரி - வியபார விருத்தி சூரியன் இம்மாதம் 13ம் தேதி ஒன்பதாமிடத்திற்கு வருகிறார் உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும் புதன் இம்மாதம்03ம் தேதி எட்டாமிடத்திற்கு வருவது வியாபாரத்தில் தொல்லையை உண்டாக்கும் 22ம் தேதி ஒன்பதாமிடத்திற்கு வருவது தொல்லையைக் குறைத்து வியாபார விருத்தியைத் தரும். செவ்வாய், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது இம்மாதம் பெயர்ச்சி கிடையாது கடந்த மாத பலன்களையே இம்மாதமும் தொடர்ந்து கொடுப்பார்கள்.

மார்ச் - தொழில் சிறப்பு சூரியன் இந்த மாதம் 14ம் தேதி பத்தாமிடத்திற்கு வருகிறார் பிரமோஷன் எதிர்பார்த்திருந்தவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் செவ்வாய் 02ம் தேதி பதினொன்றாமிடத்திற்கு வருகிறார் தொழிலில் லாபம் அதிகரிக்கும் புதன் 11ம் தேதி பத்தாமிடத்திற்கு வருவது தரகு கமிஷன் தொழில் சிறப்படைய வழி வகுக்கும் 27ம் தேதி பதினொன்றாமிடத்திற்கு வருகிறார் எண்ணியவை யாவும் எளிதில் எண்ணியபடி நடக்கும். குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது இம்மாதம் பெயர்ச்சி இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

ஏப்ரல் - சம்பள உயர்வு சூரியன் இந்த மாதம் 14ம் தேதி பதினொன்றாம் இடத்திற்கு வருகிறார் சம்பள உயர்வு எதிபார்த்திருந்தவர்களுக்கு சம்பள உயர்வும் தொழிலில் லாபமும் கிடைக்கும் செவ்வாய் இந்த மாதம் 13ம் தேதி பன்னிரெண்டாமிடத்திற்கு வருகிறார் வீடு நிலம் போன்ற வகைகளில் செலவுகள் அதிகரிக்கும். புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது இம்மாதம் பெயர்ச்சி இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

மே - உடல் உஷ்ணம் அதிகரிக்கும் சூரியன் இந்த மாதம் 15ம் தேதி பன்னிரெண்ட்டாமிடத்திற்கு வருகிறார் அப்பாவுக்காக செலவுகள் அதிகரிக்கும் செவ்வாய் இந்த மாதம் 27ம் தேதி உங்கள் ஜென்ம ராசிக்கு வருகிறார் கோபம் அதிகரிக்கும் உடலில் உஷ்ணம் அதிகரிக்கும் சுக்கிரன் இந்த மாதம் 27ம் தேதி பதினொன்றாமிடத்திற்கு வருகிறார் அழகு ஆடம்பரப் பொருட்கள் தொடர்பான தொழில் மூலம் லாபம் அதிகரிக்கும். இந்த மாதம் புதன், குரு, சனி, ராகு, கேது பெயர்ச்சி இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

ஜூன் - வெற்றி கிடைக்கும் இந்த மாதம் சூரியன் 15ம் தேதி உங்கள் ஜென்ம ராசிக்கு வருகிறார் வேலை தேடுபவர்களுக்கு வேலை தேடி வரும் புதன் இந்த மாதம் 03ம் பன்னிரெண்டாம் இடத்திற்கு வருகிறார் செலவுகள் அதிகரிக்கும் 18ம் தேதி உங்கள் ஜென்ம ராசிக்கு வருகிறார் சமயோசிதமாக செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள் சுக்கிரன் இம்மாதம் 29ம் தேதி பன்னிரெண்டாமிடத்திற்கு வருகிறார் மனைவிக்காக செலவுகள் அதிகரிக்கும். இந்த மாதம் செவ்வாய், குரு, சனி, ராகு, கேது பெயர்ச்சி இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

ஜூலை - வசீகரம் அதிகரிக்கும் சூரியன் இந்த மாதம் 17ம் தேதி இரண்டாமிடத்திற்கு வருகிறார் குடும்ப சந்தோஷம் அதிகரிக்கும் செவ்வாய் 11ம் தேதி இரண்டாமிடத்திற்கு வருகிறார் மின்சார உபகரணங்கள் சம்பந்தமான தொழிலில் பண வரவு அதிகரிக்கும் புதன் இந்த மாதம் 03ம் தேதி இரண்டாமிடத்திற்கு வருகிறார் வாக்கு வன்மை அதிகரிக்கும் 21ம் தேதி மூன்றாமிடத்திர்கு வருகிறார் வெளியூரிலிருந்து நல்ல தகவல் கிடைக்கும் சுக்கிரன் 26ம் தேதி உங்கள் ஜென்மராசிக்கு வருகிறார் முக வசீகரம் அதிகரிக்கும் இந்த மாதம் செவ்வாய், குரு, சனி, ராகு, கேது பெயர்ச்சி இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

ஆகஸ்ட் - பணவரவு அதிகரிக்கும் சூரியன் 17ம் தேதி மூன்றாமிடத்திற்கு வருகிறார் அரசுமுறை பயணம் உண்டாகும் செவ்வாய் 27ம் தேதி மூன்றாமிடத்திற்கு வருகிறார் சகோதரர்களால் நன்மை உண்டாகும் சுக்கிரன் 21ம் தேதி இரண்டாமிடத்திற்கு வருகிறார் பொன்னாபரணங்களின் சேர்க்கை அதிகரிக்கும் ராகு 18ம் தேதி இரண்டாமிடத்திற்கு வருகிறார் பண வரவு அதிகரிக்கும் கேது 18ம் தேதி எட்டாமிடத்திற்கு வருகிறார் எல்லா விஷயங்களிலும் எச்சரிக்கையாக இருக்கவும். இந்த மாதம் புதன், குரு, சனி, பெயர்ச்சி இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

செப்டம்பர் - குருவால் நன்மை சூரியன் 17ம் தேதி நான்காமிடத்திற்கு வருகிறார் அரசு வாகன யோகம் உண்டாகும் செவ்வாய் 13ம் தேதி நான்காமிடத்திர்கு வருகிறார் நிலம் வீடு போன்றவை வாங்குவீர்கள் புதன் 27ம் தேதி நான்காமிடத்திற்கு வருகிறார் படிப்பில் மேன்மை நிலை உண்டாகும் குரு 12ம் தேதி ஐந்தாமிடத்திற்கு வருகிறார் பண வரவு அபரிமிதமாக இருக்கும் சுக்கிரன் 15ம் தேதி மூன்றாமிடத்திற்கு வருகிறார் அண்டைஅயலாரால் நன்மை உண்டாகும் இந்த மாதம் சனி, ராகு, கேது பெயர்ச்சி இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

அக்டோபர் - அதிர்ஷ்டம் உண்டாகும் சூரியன் பதினெட்டாம் தேதி ஐந்தாமிடத்திற்கு வருகிறார் செவ்வாய் 30ம் தேதி ஐந்தாமிடத்திற்கு வருகிறார் ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும் பூர்வீகமான நிலம் வீடு போன்ற சொத்துகளில் இருந்து பங்கு கிடைக்கும் புதன் 30ம் தேதி ஐந்தாமிடத்திற்கு வருகிறார் தரகு கமிஷன் தொழில் சிறப்படையும் சுக்கிரன் 15ம் தேதி நான்காமிடத்திற்கு வருகிறார் புதிதாக வாகனம் வாங்கும் அதிர்ஷ்டம் உண்டாகும் இந்த மாதம் குரு, சனி, ராகு, கேது பெயர்ச்சி இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

நவம்பர் - உல்லாச பயணம் சூரியன் 17ம் தேதி ஆறாமிடத்திற்கு வருகிறார் உயர் அதிகாரிகளால் தொல்லை உண்டாகும் புதன் 02ம் தேதி ஆறாமிடத்திற்கு வருகிறார் தாய் மாமனுடன் சச்சரவு உண்டாகும் 24ம் தேதி ஏழாமிடத்திற்கு வருகிறார் வியாபாரம் விருத்தியாகும். சுக்கிரன் 03ம் தேதி ஐந்தாமிடத்திற்கு வருகிறார் குடும்பத்துடன் உல்லாசப் பயணம் செல்வீர்கள் 26ம் தேதி ஆறாமிடத்திற்கு வருகிறார் வாழ்க்கைத்துணையுடன் சச்சரவைத் தவிர்க்கவும். இந்த மாதம் குரு, சனி, ராகு, கேது பெயர்ச்சி இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

டிசம்பர் - தம்பதியர் அன்னியோன்னியம் சூரியன் 16ம் தேதி ஏழாமிடத்திற்கு வருகிறார் அரசு ஊழியர்களுக்கு நீண்ட தூரத்தில் இட மாற்றம் உண்டாகும் சுக்கிரன் 20ம் தேதி ஏழாமிடத்திற்கு வருகிறார் கணவன் மனைவி அன்னியோன்னியம் அதிகரிக்கும். இந்த மாதம் செவ்வாய், புதன், குரு, சனி, ராகு, கேது பெயர்ச்சி இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55631
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: 2017 ஆங்கில புத்தாண்டு, பொது மற்றும் ராசி பலன்கள் !

Post by krishnaamma on Tue Dec 27, 2016 11:10 am

2017ம் ஆண்டு ஆரம்பத்தில் சனி பெயர்ச்சியும் ஆகஸ்ட் மாதம் ராகு கேது பெயர்ச்சியும், செப்டம்பரில் குரு பெயர்ச்சியும் நிகழ உள்ளது. அவரவருக்கென்று தனியாக இருக்கும் ஜாதக லக்கினம் தசாபுத்தி பலன்கள், குணாதிசயம், ராசி பலன்கள் மாறுபடலாம். ஜாதகத்தில் சுபபலன்கள் தரக்கூடிய தசை புக்தி அந்தரங்கள் நடக்குமானால் இங்கே கோசார ரீதியாக சொல்லப்பட்டுள்ள நற்பலன்கள் கூடும் கெடுபலன்கள் குறையும்.

ஜாதக பலமும் சிறப்பாக இல்லாமல் கோசாரமும் அனுகூலமாக அமையாமல் போனால் கெடுபலன்கள் அதிகமாகும். இப்படிப்பட்ட கிரக நிலை அமையப் பெற்றவர்கள் கிரகப் பிரீதி கோயில் வழிபாடு தான தர்ம காரியங்கள் ஆகியவற்றின் மூலம் அதிக சங்கடங்கள் ஏற்படாமல் தங்களை பாதுகாத்துக் கொள்ளலாம்.

கடக ராசிக்காரர்களே!

இந்த ஆண்டு துவக்கத்தில் மூன்றாமிடத்தில் சஞ்சரிக்கும் குரு பகவானால் இடமாற்றம் உண்டாகும் மனம் நிம்மதியாக இருக்கும் ஆண்டின் இறுதியில் குருவின் ராசி மாற்றமானது புதிதாக வீடு வாகனம் வாங்கும் வகையில் மிகவும் சிறப்பைக் கொடுக்கும். ஆண்டின் ஆரம்பத்திலேயே சனிபகவான் அசுபஸ்தானத்திற்கு வருவது தொழிலில் தடை உண்டாக்கும் இவ்வாண்டு இறுதியில் நடைபெறும் ராகு கேது பெயர்ச்சி சுப அசுப பலன்களை கலந்து கொடுக்கும்.

ஜனவரி - எச்சரிக்கை தேவை ஆண்டின் துவக்கத்தில் ஆறாமிடத்தில் இருக்கும் சூரியன் கடன் வாங்கும் சூழ்நிலையை தருவார். இம்மாதம் 14ம் தேதி ஏழாமிடத்திற்கு சூரியன் வருகிறார் பண சிக்கல்கள் தீரும் செவ்வாய் இம்மாதம் 20ம் தேதி ஒன்பதாம் இடத்திற்கு வருகிறார் பரம்பரையாக குடும்பத்தார் அனுபவித்து வந்த சொத்தில் பங்கு கிடைக்கும் புதன் இம்மாதம் முழுவதும் ஆறாம் இடத்தில் இருப்பது தாய் மாமனிடம் சச்சரவைக் கொடுக்கும். குரு மூன்றாம் இடத்திலிருப்பது அடிக்கடி பயணம் செய்யும் நிலையை கொடுக்கும் சுக்கிரன் எட்டாமிடத்திலிருப்பது உடன் பிறந்த சகோதரிகளால் மனக் கஷ்டத்தை கொடுக்கும் இம்மாதம் 27ம் தேதி ஒன்பதாமிடத்திற்கு மனைவியால் அதிர்ஷ்டம் உண்டாகும் சனி வருட ஆரம்பத்தில் ஐந்தாமிடத்தில் இருந்தாலும் இம்மாதம் 26ம் தேதி தேதி ஆறாமிடத்திற்கு வருவது தொழிலில் தடையை கொடுக்கும் ராகு இரண்டாமிடத்தில் இருப்பது அடிக்கடி வருமானத்தை அதிகப் படுத்தும் கேது எட்டாமிடத்திலிருப்பது எல்லா விஷயங்களிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

பிப்ரவரி - வியாபாரத்தில் மேன்மை சூரியன் இம்மாதம் 13ம் தேதி எட்டாமிடத்திற்கு வருகிறார் உத்தியோகத்தில் மன லயிப்பு இல்லாமல் ஏனோதானோ என்று வேலை பார்க்கும் மன நிலையை உண்டாக்கும் புதன் இம்மாதம்03ம் தேதி ஏழாமிடத்திற்கு வருவது வியாபாரத்தில் மேன்மையை உண்டாக்கும் 22ம் தேதி எட்டாமிடத்திற்கு வருவது ஷேர்மார்க்கெட் முதலீடுகளை தவிர்ப்பது சிறப்பு. செவ்வாய், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது இம்மாதம் பெயர்ச்சி கிடையாது கடந்த மாத பலன்களையே இம்மாதமும் தொடர்ந்து கொடுப்பார்கள்.

மார்ச் - பணியிடமாற்றம் சூரியன் இந்த மாதம் 14ம் தேதி ஒன்பதாமிடத்திற்கு வருகிறார் அரசு ஊழியர்களுக்கு தாங்கள் விரும்பிய இடத்திற்கு பணியிடமாற்றம் கிடைக்கும். செவ்வாய் 02ம் தேதி பத்தாமிடத்திற்கு வருகிறார் பதவி உயர்வு கிடைக்கும் புதன் 11ம் தேதி ஒன்பதாமிடத்திற்கு வருவது வெளிநாடு செல்லும் யோகத்தை தரும் 27ம் தேதி பத்தாமிடத்திற்கு வருகிறார் ஒப்பந்தத் தொழில் சிறப்படையும். குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது இம்மாதம் பெயர்ச்சி இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

ஏப்ரல் - லாபம் அதிகரிக்கும் சூரியன் இந்த மாதம் 14ம் தேதி பத்தாம் இடத்திற்கு வருகிறார் வேலை தேடி எதிபார்த்திருந்தவர்களுக்கு வேலை கிடைக்கும் செவ்வாய் இந்த மாதம் 13ம் தேதி பதினொன்றாமிடத்திற்கு வருகிறார் குறைந்த விலைக்கு வாங்கிய நிலம் அதிக விலைக்கு விற்பதன் வகைகளில் லாபம் அதிகரிக்கும். புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது இம்மாதம் பெயர்ச்சி இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

மே - சந்தோஷம் அதிகரிக்கும் சூரியன் இந்த மாதம் 15ம் தேதி பதினொன்றாமிடத்திற்கு வருகிறார் தொழில் லாபமும் குடும்ப சந்தோஷமும் அதிகரிக்கும் செவ்வாய் இந்த மாதம் 27ம் தேதி பன்னிரெண்டாமிடத்திற்கு வருகிறார் உடன் பிறப்புகளால் செலவுகள் அதிகரிக்கும் சுக்கிரன் இந்த மாதம் 27ம் தேதி பத்தாமிடத்திற்கு வருகிறார் தொழில் உத்தியோகத்தில் வாழ்க்கைத் துணையின் ஒத்துழைப்பு கிடைக்கும். இந்த மாதம் புதன், குரு, சனி, ராகு, கேது பெயர்ச்சி இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

ஜூன் - முதலீடுகள் அதிகரிக்கும் இந்த மாதம் சூரியன் 15ம் தேதி பன்னிரெண்டாமிடத்திற்கு வருகிறார் அப்பாவுக்காக செலவுகள் அதிகரிக்கும் புதன் இந்த மாதம் 03ம் தேதி பதினொன்றாம் இடத்திற்கு வருகிறார் லாபம் அதிகரிக்கும் 18ம் தேதி உங்கள் பன்னிரெண்டாமிடத்திற்கு வருகிறார் வியாபார முதலீடுகள் அதிகரிக்கும் சுக்கிரன் இம்மாதம் 29ம் தேதி பதினொன்றாமிடத்திற்கு வருகிறார் விலை உயர்ந்த பட்டு ஆடை பொன் ஆபரண சேர்க்கைகள் அதிகரிக்கும். இந்த மாதம் செவ்வாய், குரு, சனி, ராகு, கேது பெயர்ச்சி இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

ஜூலை - வாக்கு வன்மை அதிகரிக்கும் சூரியன் இந்த மாதம் 17ம் தேதி உங்கள் ஜென்ம ராசிக்கு வருகிறார் அரசாங்க வகையில் விருது கௌரவம் எதிர்பார்க்கலாம் செவ்வாய் 11ம் தேதி உங்கள் ஜென்ம ராசிக்கு வருகிறார் மனதில் தேவையில்லாமல் கோபமும் எரிச்சலும் அதிகரிக்கும் புதன் இந்த மாதம் 03ம் தேதி உங்கள் ஜென்ம ராசிக்கு வருகிறார் ஏற்கனவே போட்ட திட்டங்கள் செயல்படுத்துவீர்கள் 21ம் தேதி இரண்டாமிடத்திற்கு வருகிறார் வாக்கு வன்மை அதிகரிக்கும் சுக்கிரன் 26ம் தேதி உங்கள் பன்னிரெண்டாமிடத்திற்கு வருகிறார் மனைவிக்காக செலவுகள் அதிகரிக்கும் இந்த மாதம் செவ்வாய், குரு, சனி, ராகு, கேது பெயர்ச்சி இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

ஆகஸ்ட் - நல்லுறவு உண்டாகும் சூரியன் 17ம் தேதி இரண்டாமிடத்திற்கு வருகிறார் சம்பள உயர்வு எதிர்பார்த்திருந்தவர்களுக்கு சம்பளம் அதிகரிக்கும் செவ்வாய் 27ம் தேதி இரண்டாமிடத்திற்கு வருகிறார் மின்சாரம் தொடர்பான தொழிலில் அதிகமான பண வருமானம் உண்டாகும் சுக்கிரன் 21ம் தேதி உங்கள் ஜென்ம ராசிக்கு வருகிறார் முக வசீகரம் அதிகரிக்கும் ராகு 18ம் தேதி உங்கள் ஜென்ம ராசிக்கு வருகிறார் எந்த விஷயத்திலும் உடனடியாக முடிவெடுக்க இயலாத மன நிலை உண்டாகும் கேது 18ம் தேதி ஏழாமிடத்திற்கு வருகிறார் அனைவரிடமும் நல்லுறவு உண்டாகும் இந்த மாதம் புதன், குரு, சனி, பெயர்ச்சி இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

செப்டம்பர் - செல்வ சேர்க்கை சூரியன் 17ம் தேதி மூன்றாமிடத்திற்கு வருகிறார் உத்தியோகம் தொடர்பான பிரயாணம் உண்டாகும் செவ்வாய் 13ம் தேதி மூன்றாமிடத்திர்கு வருகிறார் சகோதரர்களால் நன்மை உண்டாகும் புதன் 27ம் தேதி மூன்றாமிடத்திற்கு வருகிறார் விற்பனை அதிகரிக்கும் குரு 12ம் தேதி நான்காமிடத்திற்கு வருகிறார் புதிதாக வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும் சுக்கிரன் 15ம் தேதி இரண்டாமிடத்திற்கு வருகிறார் செல்வச்சேர்க்கை அதிகரிக்கும் இந்த மாதம் சனி, ராகு, கேது பெயர்ச்சி இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

அக்டோபர் - கல்வி நிலை சிறப்பு சூரியன் 18ம் தேதி நான்காமிடத்திற்கு வருகிறார் அரசு ஒதுக்கீட்டில் வீடு கிடைக்கலாம் செவ்வாய் 30ம் தேதி நான்காமிடத்திற்கு வருகிறார் நிலம் வீடு வாங்கும் யோகம் உண்டாகும் புதன் 30ம் தேதி நான்காமிடத்திற்கு வருகிறார் கல்வி நிலை சிறப்படையும் சுக்கிரன் 15ம் தேதி மூன்றாமிடத்திற்கு வருகிறார் வீடு மாறும் நிலை உண்டாகும் இந்த மாதம் குரு, சனி, ராகு, கேது பெயர்ச்சி இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

நவம்பர் - உல்லாச பயணம் சூரியன் 17ம் தேதி ஐந்தாமிடத்திற்கு வருகிறார் தேர்வுகளில் சிறப்பான மதிப்பெண்கள் கிடைக்கும் புதன் 02ம் தேதி ஐந்தாமிடத்திற்கு வருகிறார் ஷேர் மார்க்கெட் முதலீடுகளில் நல்ல லாபம் உண்டாகும் 24ம் தேதி ஆறாமிடத்திற்கு வருகிறார் கடன் கொடுப்பதை தவிர்க்கவும் சுக்கிரன் 03ம் தேதி நான்காமிடத்திற்கு வருகிறார் வீட்டை அழகுபடுத்தும் நிலை உண்டாகும் 26ம் தேதி ஐந்தாமிடத்திற்கு வருகிறார் குடும்பத்துடன் உல்லாசப் பயணம் செல்வீர்கள் இந்த மாதம் குரு, சனி, ராகு, கேது பெயர்ச்சி இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

டிசம்பர் - குடும்பத்தில் சச்சரவு சூரியன் 16ம் தேதி ஆறாமிடத்திற்கு வருகிறார் அதிகாரிகளுடன் சச்சரவைத் தவிர்க்கவும் சுக்கிரன் 20ம் தேதி ஆறாமிடத்திற்கு வருகிறார் கணவன் மனைவியிடையே பிரச்சினை உண்டாகலாம் இந்த மாதம் செவ்வாய், புதன், குரு, சனி, ராகு, கேது பெயர்ச்சி இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55631
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: 2017 ஆங்கில புத்தாண்டு, பொது மற்றும் ராசி பலன்கள் !

Post by krishnaamma on Tue Dec 27, 2016 11:13 am

சிம்ம ராசிக்காரர்களே!

ஆண்டின் ஆரம்பத்திலேயே சனிபகவான் சுபஸ்தானத்திற்கு வருவது இதுவரை இருந்து வந்த கஷ்டநஷ்டத்தை நீக்கும் இவ்வாண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெறும் ராகு கேது பெயர்ச்சி சுப அசுப பலன்களை கலந்து கொடுக்கும். இந்த ஆண்டு துவக்கத்தில் இரண்டாமிடத்தில் சஞ்சரிக்கும் குரு பகவானால் பண வரவு சிறப்பாக இருக்கும் குடும்பத்தில் நிம்மதி நிலவும் செப்டம்பர் மாதம் நிகழ உள்ள குருவின் ராசி மாற்றமானது வீடு மாறும் நிலையைக் கொடுக்கும்.

ஜனவரி - கவனம் தேவை ஆண்டின் துவக்கத்தில் ஐந்தாமிடத்தில் இருக்கும் சூரியன் அனைத்திலும் வெற்றியைத் தருவார். இம்மாதம் 14ம் தேதி ஆறாமிடத்திற்கு சூரியன் வருகிறார் உத்தியோகத்தில் தொல்லைகள் உண்டாகும் செவ்வாய் இம்மாதம் 20ம் தேதி எட்டாம் இடத்திற்கு வருகிறார் வாகனங்களைக் கையாளும் பொழுது கவனமாக இருக்க வேண்டும் விபத்துகளுக்கு வாய்ப்புகள் உள்லது.

புதன் இம்மாதம் முழுவதும் ஐந்தாம் இடத்தில் இருப்பது கமிஷன் வியாபாரத்தில் லாபத்தைக் கொடுக்கும். குரு இரண்டாம் இடத்திலிருப்பது செல்வச் சேர்க்கையைக் கொடுக்கும் சுக்கிரன் ஏழாமிடத்திலிருப்பது கணவன் மனைவி அன்னியோன்னியத்தை அதிகரிக்கச் செய்யும் இம்மாதம் 27ம் தேதி எட்டாமிடத்திற்கு மாறுகிறார் பெண்களால் தொல்லை உண்டாகும் சனி வருட ஆரம்பத்தில் நான்காமிடத்தில் இருந்தாலும் இம்மாதம் 26ம் தேதி தேதி ஐந்தாமிடத்திற்கு வருவது தொழிலில் இருந்து வந்த தடையை நீக்கும் ராகு ஜென்ம ராசியில் இருப்பது மன சலனத்தை கொடுக்கும் கேது ஏழாமிடத்திலிருப்பது அனைவரிடமும் சரளமான உறவு நிலை வைத்துக்கொள்வது சிறப்பு.

பிப்ரவரி - ஷேர் மார்க்கெட்டில் லாபம் சூரியன் இம்மாதம் 13ம் தேதி ஏழாமிடத்திற்கு வருகிறார் உத்தியோகம் தொடர்பாக பிரயாணம் செய்ய வேண்டியிருக்கும் புதன் இம்மாதம்03ம் தேதி ஆறாமிடத்திற்கு வருவது வியாபாரத்தில் சிக்கலை உண்டாக்கும் 22ம் தேதி ஏழாமிடத்திற்கு வருவது ஷேர்மார்க்கெட் முதலீடுகள் லாபத்தை தரும். செவ்வாய், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது இம்மாதம் பெயர்ச்சி கிடையாது கடந்த மாத பலன்களையே இம்மாதமும் தொடர்ந்து கொடுப்பார்கள்.

மார்ச் - பரம்பரை சொத்துக்கள் சூரியன் இந்த மாதம் 14ம் தேதி எட்டாமிடத்திற்கு வருகிறார் அரசு அதிகாரிகளால் தொல்லை உண்டாகும் செவ்வாய் 02ம் தேதி ஒன்பதாமிடத்திற்கு வருகிறார் பரம்பரை சொத்திலிருந்து பங்கு கிடைக்கும் புதன் 11ம் தேதி எட்டாமிடத்திற்கு வருவது தாய் மாமனுடன் கருத்து வேறுபாட்டைத் தரும் 27ம் தேதி ஒன்பதாமிடத்திற்கு வருகிறார் வெளிநாடு செல்லும் யோகத்தைக் கொடுக்கும் குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது இம்மாதம் பெயர்ச்சி இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

ஏப்ரல் - தொழில் சிறப்பு சூரியன் இந்த மாதம் 14ம் தேதி ஒன்பதாம் இடத்திற்கு வருகிறார் பரம்பரையாகச் செய்து வந்த தொழில் சிறப்படையும் செவ்வாய் இந்த மாதம் 13ம் தேதி பத்தாமிடத்திற்கு வருகிறார் வீடு நிலம் போன்ற வகை தொழில்கள் சிறப்படையும் புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது இம்மாதம் பெயர்ச்சி இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

மே - உத்தியோகத்தில் மேன்மை சூரியன் இந்த மாதம் 15ம் தேதி பத்தாமிடத்திற்கு வருகிறார் தொழில் உத்தியோகத்தில் மேன்மை நிலை உண்டாகும் செவ்வாய் இந்த மாதம் 27ம் தேதி பதினொன்றாமிடத்திற்கு வருகிறார் தொழில் லாபம் அதிகரிக்கும் சுக்கிரன் இந்த மாதம் 27ம் தேதி ஒன்பதாமிடத்திற்கு வருகிறார் அதிர்ஷ்டம் அதிகரிக்கும் இந்த மாதம் புதன், குரு, சனி, ராகு, கேது பெயர்ச்சி இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

ஜூன் - பண வரவு அதிகரிப்பு இந்த மாதம் சூரியன் 15ம் தேதி பதினொன்றாமிடத்திற்கு வருகிறார் உத்தியோகத்தில் சம்பளம் அதிகரிக்கும் புதன் இந்த மாதம் 03ம் தேதி பத்தாம் இடத்திற்கு வருகிறார் ஒப்பந்தத் தொழில் சிறப்படையும் 18ம் தேதி பதினொன்றாமிடத்திற்கு வருகிறார் பண வரவு அதிகரிக்கும் சுக்கிரன் இம்மாதம் 29ம் தேதி பத்தாமிடத்திற்கு வருகிறார் தொழிலில் வாழ்க்கைத் துணையின் உதவி கிடைக்கும் இந்த மாதம் செவ்வாய், குரு, சனி, ராகு, கேது பெயர்ச்சி இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

ஜூலை - வீண் செலவுகள் சூரியன் இந்த மாதம் 17ம் தேதி பன்னிரெண்டாமிடத்திற்கு வருகிறார் அரசாங்க வேலையில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் உண்டாகலாம் வீண் செலவுகள் அதிகரிக்கும் செவ்வாய் 11ம் தேதி பதினொன்றாமிடத்திர்கு வருகிறார் ரியல் எஸ்டேட் தொழிலில் லாபம் அதிகரிக்கும் புதன் இந்த மாதம் 03ம் தேதி பன்னிரெண்டாம் இடத்திற்கு வருகிறார் வியாபார முதலீடுகள் அதிகரிக்கும் 21ம் தேதி உங்கள் ஜென்ம ராசிக்கு வருகிறார் புத்தி கூர்மை அதிகரிக்கும் சுக்கிரன் 26ம் தேதி உங்கள் பதினொன்றாமிடத்திற்கு வருகிறார் வீட்டிற்கு ஆடம்பரப் பொருட்கள் சேர்க்கை அதிகரிக்கும் இந்த மாதம் செவ்வாய், குரு, சனி, ராகு, கேது பெயர்ச்சி இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

ஆகஸ்ட் - தேவையற்ற செலவுகள் சூரியன் 17ம் தேதி உங்கள் ஜென்ம ராசிக்கு வருகிறார் நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த பதவி உயர்வு கிடைக்கும் செவ்வாய் 27ம் தேதி உங்கள் ஜென்ம ராசிக்கு வருகிறார் மனதில் கோபம் அதிகார குணம் உண்டாகும் சுக்கிரன் 21ம் தேதி பன்னிரெண்டாமிடத்திற்கு வருகிறார் மனைவியால் செலவுகள் அதிகரிக்கும் ராகு இம்மாதம் 18ம் தேதி பன்னிரெண்டாமிடத்திற்கு வருகிறார் தேவையற்ற செலவுகள் அதிகரிக்கும் கேது 18ம் தேதி ஆறாமிடத்திற்கு வருகிறார் அனைவரிடமும் பிரச்சினை உண்டாகும் இந்த மாதம் புதன், குரு, சனி, பெயர்ச்சி இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

செப்டம்பர் - வசீகரம் அதிகரிக்கும் சூரியன் 17ம் தேதி இரண்டாமிடத்திற்கு வருகிறார் பணவரவு அதிகரிக்கும் செவ்வாய் 13ம் தேதி இரண்டாமிடத்திற்கு வருகிறார் புதிதாக வீடு வாங்குவீர்கள் புதன் 27ம் தேதி இரண்டாமிடத்திற்கு வருகிறார் வாக்கு வன்மை அதிகரிக்கும் குரு 12ம் தேதி மூன்றாமிடத்திற்கு வருகிறார் புதிதாக வீடு வாங்கி அதில் குடிபுகும் யோகம் உண்டாகும் சுக்கிரன் 15ம் தேதி உங்கள் ஜென்ம ராசிக்கு வருகிறார் முக வசீகரம் அதிகரிக்கும் இந்த மாதம் சனி, ராகு, கேது பெயர்ச்சி இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

அக்டோபர் - குடும்பத்தில் சந்தோஷம் சூரியன் 18ம் தேதி மூன்றாமிடத்திற்கு வருகிறார் பணியிடமாற்றம் உண்டாகும் செவ்வாய் 30ம் தேதி மூன்றாமிடத்திற்கு வருகிறார் சகோதரர்களின் உதவி கிடைக்கும் புதன் 30ம் தேதி மூன்றாமிடத்திற்கு வருகிறார் நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த தகவல் வந்து சேரும் சுக்கிரன் 15ம் தேதி இரண்டாமிடத்திற்கு வருகிறார் குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். இந்த மாதம் குரு, சனி, ராகு, கேது பெயர்ச்சி இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

நவம்பர் - உல்லாச பயணம் சூரியன் 17ம் தேதி நான்காமிடத்திற்கு வருகிறார் அரசு ஒதுக்கீட்டில் வீடு கிடைக்கும் புதன் 02ம் தேதி நான்காமிடத்திற்கு வருகிறார் புதிதாக வீடு வாங்குவீர்கள் 24ம் தேதி ஐந்தாமிடத்திற்கு வருகிறார் தாய் மாமனின் உதவி கிடைக்கும் சுக்கிரன் 03ம் தேதி மூன்றாமிடத்திற்கு வருகிறார் குடும்பத்துடன் உல்லாசப் பயணம் செல்வீர்கள் 26ம் தேதி நான்காமிடத்திற்கு வருகிறார் உறவினர்களின் வீட்டு விஷேசத்தில் கலந்து கொள்வீர்கள் இந்த மாதம் குரு, சனி, ராகு, கேது பெயர்ச்சி இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

டிசம்பர் - கலைகளில் ஆர்வம் சூரியன் 16ம் தேதி ஐந்தாமிடத்திற்கு வருகிறார் அரசாங்க வேலை சம்பத்தப்பட்ட போட்டி தேர்வுகளில் வெற்றி கிடைக்கும் சுக்கிரன் 20ம் தேதி ஐந்தாமிடத்திற்கு வருகிறார் கலைகளில் ஆர்வம் அதிகரிக்கும் இந்த மாதம் செவ்வாய், புதன், குரு, சனி, ராகு, கேது பெயர்ச்சி இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55631
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: 2017 ஆங்கில புத்தாண்டு, பொது மற்றும் ராசி பலன்கள் !

Post by krishnaamma on Tue Dec 27, 2016 11:15 am

2017ம் ஆண்டு ஆரம்பத்தில் சனி பெயர்ச்சியும் ஆகஸ்ட் மாதம் ராகு கேது பெயர்ச்சியும், செப்டம்பரில் குரு பெயர்ச்சியும் நிகழ உள்ளது. அவரவருக்கென்று தனியாக இருக்கும் ஜாதக லக்கினம் தசாபுத்தி பலன்கள், குணாதிசயம், ராசி பலன்கள் மாறுபடலாம். ஜாதகத்தில் சுபபலன்கள் தரக்கூடிய தசை புக்தி அந்தரங்கள் நடக்குமானால் இங்கே கோசார ரீதியாக சொல்லப்பட்டுள்ள நற்பலன்கள் கூடும் கெடுபலன்கள் குறையும்.

கன்னி ராசி நேயர்களே!

இந்த ஆண்டு துவக்கத்தில் உங்கள் ஜென்ம ராசியில் சஞ்சரிக்கும் குரு பகவானால் மனதில் சந்தோஷமும் நிம்மதியும் அதிகமாக இருக்கும் ஆண்டின் இறுதியில் குருவின் ராசி மாற்றமானது பொருளாதாரத்தில் ஏற்றமான நிலையைக் கொடுக்கும். ஆண்டின் ஆரம்பத்திலேயே சனிபகவான் நான்காமிடத்திற்கு வருவது வருவது வீடு நிலம் வாகன யோகத்தைக் கொடுக்கும் இவ்வாண்டு இறுதியில் நடைபெறும் ராகு கேது பெயர்ச்சி அசுப பலன்களை அதிகமாக கொடுக்கும். ராகு பதினொன்றாமிடத்திற்கும் கேது ஐந்தாமிடத்திர்கும் வருவது சிறப்பு.

ஜனவரி - வீடு, வாகனம் வாங்கும் யோகம் ஆண்டின் துவக்கத்தில் நான்காமிடத்தில் இருக்கும் சூரியன் அரசாங்க வாகன யோகத்தை தருவார். இம்மாதம் 14ம் தேதி ஐந்தாமிடத்திற்கு சூரியன் வருகிறார் குழந்தைகளால் செலவுகள் அதிகரிக்கும் செவ்வாய் இம்மாதம் 20ம் தேதி ஏழாம் இடத்திற்கு வருகிறார் ரியல் எஸ்டேட் தொழில் மிகவும் நன்றாக இருக்கும் புதன் இம்மாதம் முழுவதும் நான்காம் இடத்தில் இருப்பது கல்வி நிலையை மேம்படுத்த வழிவகுக்கும்

குரு உங்கள் ஜென்ம ராசியில் இருப்பது மனதில் சந்தோஷத்தையும் சமுதாயத்தில் மதிப்பு மரியாதையையும் ஏற்படுத்திக் கொடுக்கும் சுக்கிரன் ஆறாமிடத்திலிருப்பது பெண்களால் தொல்லை உண்டாகும் இம்மாதம் 27ம் தேதி எட்டாமிடத்திற்கு மாறுகிறார் கணவன் மனைவி அன்னியோன்னியத்தை அதிகரிக்கச் செய்யும் சனி வருட ஆரம்பத்தில் மூன்றாமிடத்தில் இருந்தாலும் இம்மாதம் 26ம் தேதி தேதி நான்காமிடத்திற்கு வருவது புதிதாக வீடு வாகனம் வாங்கும் யோகத்தைக் கொடுக்கும் ராகு பன்னிரெண்டாமிடத்தில் இருப்பது அலைச்சலை அதிகரிக்கச் செய்யும் கேது ஆறாமிடத்திலிருப்பது உடல் நிலை சீராக இருக்கும்.

பிப்ரவரி - அதிகாரிகளுடன் சச்சரவு சூரியன் இம்மாதம் 13ம் தேதி ஆறாமிடத்திற்கு வருகிறார் அதிகாரிகளுடன் அடிக்கடி சச்சரவு உண்டாகும் புதன் இம்மாதம்03ம் தேதி ஐந்தாமிடத்திற்கு வருவது படிப்பில் உன்னத் நிலையை உண்டாக்கும் 22ம் தேதி ஆறாமிடத்திற்கு வருவது ஷேர்மார்க்கெட் முதலீடுகளைத் தவிர்ப்பது நல்லது. செவ்வாய், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது இம்மாதம் பெயர்ச்சி கிடையாது கடந்த மாத பலன்களையே இம்மாதமும் தொடர்ந்து கொடுப்பார்கள்.

மார்ச் - கவனம் தேவை சூரியன் இந்த மாதம் 14ம் தேதி ஏழாமிடத்திற்கு வருகிறார் அரசாங்க உத்தியோகம் காரணமாக பிரயாணத்தைக் கொடுக்கும் செவ்வாய் 02ம் தேதி எட்டாமிடத்திற்கு வருகிறார் வாகனங்களைக் கையாளும் பொழுது கவனம் தேவை புதன் 11ம் தேதி ஏழாமிடத்திற்கு வருவது வியாபாரத்தில் விருத்தியைத் தரும் 27ம் தேதி எட்டாமிடத்திற்கு வருகிறார் தொழிலில் தடையைக் கொடுக்கும் குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது இம்மாதம் பெயர்ச்சி இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

ஏப்ரல் - சொத்துக்களில் பங்கு சூரியன் இந்த மாதம் 14ம் தேதி எட்டாம் இடத்திற்கு வருகிறார் அப்பாவினால் மனக் கஷ்டம் உண்டாகும் செவ்வாய் இந்த மாதம் 13ம் தேதி ஒன்பதாமிடத்திற்கு வருகிறார் அப்பா சம்பாதித்த நிலம் வீடு போன்ற சொத்துகளில் பங்கு கிடைக்கும் புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது இம்மாதம் பெயர்ச்சி இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

மே - வெளிநாடு யோகம் சூரியன் இந்த மாதம் 15ம் தேதி ஒன்பதாமிடத்திற்கு வருகிறார் வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும் செவ்வாய் இந்த மாதம் 27ம் தேதி பத்தாமிடத்திற்கு வருகிறார் தொழில் நிலை சிறப்படையும் சுக்கிரன் இந்த மாதம் 27ம் தேதி எட்டாமிடத்திற்கு வருகிறார் பெண்கள் விஷயத்தில் கவனம் தேவை. இந்த மாதம் புதன், குரு, சனி, ராகு, கேது பெயர்ச்சி இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

ஜூன் - பதவி உயர்வு இந்த மாதம் சூரியன் 15ம் தேதி பத்தாமிடத்திற்கு வருகிறார் பதவி உயர்வு எதிர்பார்த்திருந்தவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் புதன் இந்த மாதம் 03ம் தேதி ஒன்பதாம் இடத்திற்கு வருகிறார் தகவல் தொடர்பு சிறப்படையும் 18ம் தேதி பத்தாமிடத்திற்கு வருகிறார் தரகு கமிஷன் வியாபாரம் தொழில் சிறப்படையும் சுக்கிரன் இம்மாதம் 29ம் தேதி ஒன்பதாமிடத்திற்கு வருகிறார் குல தெய்வக் கோயிலுக்கு செல்லும் நிலை உண்டாகும் இந்த மாதம் செவ்வாய், குரு, சனி, ராகு, கேது பெயர்ச்சி இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

ஜூலை - லாபம் அதிகரிப்பு சூரியன் இந்த மாதம் 17ம் தேதி பதினொன்றாமிடத்திற்கு வருகிறார் அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும் செவ்வாய் 11ம் தேதி பத்தாமிடத்திற்கு வருகிறார் வீடு நிலம் வாங்கி விற்பவர்களுக்கு தொழில் சிறப்படையும் புதன் இந்த மாதம் 03ம் தேதி பதினொன்றாம் இடத்திற்கு வருகிறார் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும் 21ம் தேதி பன்னிரெண்டாமிடத்திற்கு வருகிறார் வியாபார முதலீடுகள் அதிகரிக்கும் சுக்கிரன் 26ம் தேதி உங்கள் பத்தாமிடத்திற்கு வருகிறார் பொன் ஆடை ஆபரணத் தொழில் சிறப்படையும். இந்த மாதம் செவ்வாய், குரு, சனி, ராகு, கேது பெயர்ச்சி இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

ஆகஸ்ட் - பணவரவு சூரியன் 17ம் தேதி உங்கள் பன்னிரெண்டாமிடத்திற்கு வருகிறார் அப்பாவுக்காக செலவுகள் அதிகரிக்கும் செவ்வாய் 27ம் தேதி பன்னிரெண்டாமிடத்திற்கு வருகிறார் நிலம் வீடு வகையில் முதலீடுகள் செய்வீர்கள் சுக்கிரன் 21ம் தேதி பதினொன்றாமிடத்திற்கு வருகிறார் பண வரவு அதிகரிக்கும் ராகு இம்மாதம் 18ம் தேதி பதினொன்றாமிடத்திற்கு வருகிறார் செலவுகள் குறையும் வரவினங்கள் அதிகரிக்கும் கேது 18ம் தேதி ஐந்தாமிடத்திற்கு வருகிறார் கடன்கள் அத்தனையும் தீர்வாகும் உடல் ஆரோக்கியம் சிறப்படையும். இந்த மாதம் புதன், குரு, சனி, பெயர்ச்சி இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

செப்டம்பர் - உத்தியோக உயர்வு சூரியன் 17ம் தேதி உங்கள் ஜென்ம ராசிக்கு வருகிறார் பதவி உயர்வு எதிர்பார்த்திருந்தவர்களுக்கு உத்தியோக உயர்வு கிடைக்கும் செவ்வாய் 13ம் தேதி உங்கள் ஜென்மராசிக்கு வருகிறார் மனதில் கோபம் அதிகரிக்கும் புதன் 27ம் தேதி உங்கள் ஜென்ம ராசிக்கு வருகிறார் சமயோசித புத்தி சிறப்பைத் தரும் குரு 12ம் தேதி இரண்டாமிடத்திற்கு வருகிறார் பணவரவும் வங்கி சேமிப்பும் அதிகரிக்கும் சுக்கிரன் 15ம் தேதி பன்னிரெண்டாமிடத்திற்கு வருகிறார் பெண்களால் செலவுகள் அதிகரிக்கும். இந்த மாதம் சனி, ராகு, கேது பெயர்ச்சி இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

அக்டோபர் - சம்பள உயர்வு சூரியன் 18ம் தேதி இரண்டாமிடத்திற்கு வருகிறார் கோபமான பேச்சை தவிர்க்கவும் உண்டாகும் செவ்வாய் 30ம் தேதி இரண்டாமிடத்திற்கு வருகிறார் காவல் துறையில் பணிபுரிபவர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும் புதன் 30ம் தேதி இரண்டாமிடத்திற்கு வருகிறார் பேச்சில் நகைச்சுவைத் தன்மை அதிகரிக்கும் சுக்கிரன் 15ம் தேதி உங்கள் ஜென்ம ராசிக்கு வருகிறார் மனதில் சந்தோஷம் அதிகரிக்கும். இந்த மாதம் குரு, சனி, ராகு, கேது பெயர்ச்சி இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

நவம்பர் - வெளியூர் பிரயாணம் சூரியன் 17ம் தேதி மூன்றாமிடத்திற்கு வருகிறார் இடமாற்றம் உண்டாகும் புதன் 02ம் தேதி மூன்றாமிடத்திற்கு வருகிறார் எதிர்பார்த்திருந்த நல்ல தகவல் கிடைக்கும் 24ம் தேதி நான்காமிடத்திற்கு வருகிறார் படிப்பில் கவனம் அதிகரிக்கும் சுக்கிரன் 03ம் தேதி இரண்டாமிடத்திற்கு வருகிறார் புதிதாக நகை நட்டுகள் வாங்குவீர்கள் 26ம் தேதி மூன்றாமிடத்திற்கு வருகிறார் அடிக்கடி வெளியூருக்கு பிரயாணம் செல்லும் நிலை உண்டாகும். இந்த மாதம் குரு, சனி, ராகு, கேது பெயர்ச்சி இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

டிசம்பர் - அரசால் பலன் சூரியன் 16ம் தேதி நான்காமிடத்திற்கு வருகிறார் அரசாங்க ஒதுக்கீட்டில் வீடு கிடைக்கும் சுக்கிரன் 20ம் தேதி நான்காமிடத்திற்கு வருகிறார் புதிதாக வாகனம் வாங்குவீர்கள். இந்த மாதம் செவ்வாய், புதன், குரு, சனி, ராகு, கேது பெயர்ச்சி இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55631
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: 2017 ஆங்கில புத்தாண்டு, பொது மற்றும் ராசி பலன்கள் !

Post by krishnaamma on Tue Dec 27, 2016 11:19 am

துலாம் ராசி நேயர்களே!

ஆண்டின் ஆரம்பத்திலேயே சனிபகவான் மூன்றாமிடத்திற்கு வருவது புதிதாக வீடு கட்டி அதில் புதுமனை புகுவிழா நடத்தும் நன்மையைக் கொடுக்கும். ஆகஸ்ட் மாதம் நடைபெறும் ராகு கேது பெயர்ச்சி சுப பலன்களை அதிகமாக கொடுக்கும். ராகு பத்தாமிடத்திற்கும் கேது நான்காமிடத்திற்கும் வருவது சிறப்பு.

இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் சஞ்சரிக்கும் குரு பகவானால் செலவுகள் அதிகமாக இருக்கும் ஆண்டின் இறுதியில் குரு உங்கள் ஜென்ம ராசிக்கு வருகிறார் சமுதாயத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.

ஜனவரி - இடமாற்றம் ஆண்டின் துவக்கத்தில் மூன்றாமிடத்தில் இருக்கும் சூரியன் இடமாற்றத்தைத் தருவார். இம்மாதம் 14ம் தேதி நான்காமிடத்திற்கு சூரியன் வருகிறார் அரசாங்க நிதி உதவியுடன் வீடு கட்டுவீர்கள் செவ்வாய் இம்மாதம் 20ம் தேதி ஆறாம் இடத்திற்கு வருகிறார் உடன் பிறப்புகளால் தொல்லை உண்டாகும் புதன் இம்மாதம் முழுவதும் மூன்றாம் இடத்தில் இருப்பது எல்லோரிடமும் ஏற்படும் தகவல் தொடர்பு சிறப்படையும் குரு உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருப்பது அதிகமான செலவினங்களை கொடுக்கும் பொருளாதார விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும் சுக்கிரன் ஐந்தாமிடத்திலிருப்பது குடும்பத்துடன் உல்லாசப் பயணம் செல்வீர்கள் இம்மாதம் 27ம் தேதி ஆறாமிடத்திற்கு மாறுகிறார் பெண்களால் தொல்லை உண்டாகும் சனி வருட ஆரம்பத்தில் இரண்டாமிடத்தில் இருந்தாலும் இம்மாதம் 26ம் தேதி தேதி மூன்றாமிடத்திற்கு வருவது இடமாற்றத்தைக் கொடுக்கும் ராகு பதினொன்றாமிடத்தில் இருப்பது லாபத்தை அதிகரிக்கச் செய்யும் கேது ஐந்தாமிடத்திலிருப்பது ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்..

பிப்ரவரி - வெற்றி கிடைக்கும் சூரியன் இம்மாதம் 13ம் தேதி ஐந்தாமிடத்திற்கு வருகிறார் போட்டி பந்தயங்களில் வெற்றி கிடைக்கும் உண்டாகும் புதன் இம்மாதம்03ம் தேதி நான்காமிடத்திற்கு வருவது கல்வியில் மேன்மை நிலையை உண்டாக்கும் 22ம் தேதி ஐந்தாமிடத்திற்கு வருவது தரகு கமிஷன் வியாபரத்தில் நல்ல லாபத்தைத் தரும். செவ்வாய், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது இம்மாதம் பெயர்ச்சி கிடையாது கடந்த மாத பலன்களையே இம்மாதமும் தொடர்ந்து கொடுப்பார்கள்.

மார்ச் - மாமனுடன் சச்சரவு சூரியன் இந்த மாதம் 14ம் தேதி ஆறாமிடத்திற்கு வருகிறார் தொழிலில் கஷ்டம் உண்டாகலாம் செவ்வாய் 02ம் தேதி ஏழாமிடத்திற்கு வருகிறார் வீடு மனை நிலம் வியாபாரம் சிறப்படையும் புதன் 11ம் தேதி ஆறாமிடத்திற்கு வருவது தாய் மாமனுடன் சச்சரவைத் தரும் 27ம் தேதி ஏழாமிடத்திற்கு வருகிறார் வியாபாரம் விருத்தியாகும் குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது இம்மாதம் பெயர்ச்சி இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

ஏப்ரல் - கவனம் தேவை சூரியன் இந்த மாதம் 14ம் தேதி ஏழாம் இடத்திற்கு வருகிறார் கோதுமை பொருட்கள் வியாபாரம் விருத்தியாகும் செவ்வாய் இந்த மாதம் 13ம் தேதி எட்டாமிடத்திற்கு வருகிறார் மின்சாதனங்களைக் கையாளும்பொழுது கவனம் தேவை புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது இம்மாதம் பெயர்ச்சி இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

மே - தொழில் சிறப்பு சூரியன் இந்த மாதம் 15ம் தேதி எட்டாமிடத்திற்கு வருகிறார் தொழில் உத்தியோகத்தில் மன உளைச்சல் உண்டாகும் செவ்வாய் இந்த மாதம் 27ம் தேதி ஒன்தாமிடத்திற்கு வருகிறார் பரம்பரையாக செய்து வரும் தொழில் சிறப்படையும் சுக்கிரன் இந்த மாதம் 27ம் தேதி ஏழாமிடத்திற்கு வருகிறார் வாழ்க்கைத் துணையுடன் நல்லுறவு சிறப்படையும். இந்த மாதம் புதன், குரு, சனி, ராகு, கேது பெயர்ச்சி இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

ஜூன் - வெளிநாடு யோகம் இந்த மாதம் சூரியன் 15ம் தேதி ஒன்பதாமிடத்திற்கு வருகிறார் தாத்தா அப்பா வகையில் பரம்பரையாக செய்து வந்த தொழில் மேன்மை நிலையை அடையும் புதன் இந்த மாதம் 03ம் தேதி எட்டாம் இடத்திற்கு வருகிறார் ஷேர் மார்க்கெட் முதலீடுகள் நஷ்டத்தை கொடுக்கலாம் 18ம் தேதி ஒன்பதாமிடத்திற்கு வருகிறார் வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும் சுக்கிரன் இம்மாதம் 29ம் தேதி எட்டாமிடத்திற்கு வருகிறார் பொன்னகை போன்ற விலை உயர்ந்த பொருட்களை கவனமாக பார்த்துக் கொள்ளவும் இந்த மாதம் செவ்வாய், குரு, சனி, ராகு, கேது பெயர்ச்சி இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

ஜூலை - அரசு வேலை கிடைக்கும் சூரியன் இந்த மாதம் 17ம் தேதி பத்தாமிடத்திற்கு வருகிறார் அரசாங்க வேலைக்கு விண்ணப்பித்திருந்தவர்களுக்கு வேலை கிடைக்கும் செவ்வாய் 11ம் தேதி ஒன்பதாமிடத்திற்கு வருகிறார் அன்னிய தேச தொழில் வர்த்தக நிலை மேன்மை நிலையை அடையும் புதன் இந்த மாதம் 03ம் தேதி பத்தாம் இடத்திற்கு வருகிறார் சில்லறை வணிகத்தில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு வியாபாரம் விருத்தியாகும் 21ம் தேதி பதினொன்றாமிடத்திற்கு வருகிறார் வியாபார லாபம் அதிகரிக்கும் சுக்கிரன் 26ம் தேதி ஒன்பதாமிடத்திற்கு வருகிறார் அதிர்ஷ்டம் அதிகரிக்கும். இந்த மாதம் செவ்வாய், குரு, சனி, ராகு, கேது பெயர்ச்சி இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

ஆகஸ்ட் - யோகம் உண்டாகும் சூரியன் 17ம் தேதி உங்கள் பதினொன்றாமிடத்திற்கு வருகிறார் சம்பளம் அதிகரிக்கும் செவ்வாய் 27ம் தேதி பதினொன்றாமிடத்திற்கு வருகிறார் தீயணைப்பு துறையில் பணிபுரிபவர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும் சுக்கிரன் 21ம் தேதி பத்தாமிடத்திற்கு வருகிறார் தொழில் உத்தியோகத்தில் வாழ்க்கைத் துணையின் உதவி கிடைக்கும் ராகு இம்மாதம் 18ம் தேதி பத்தாமிடத்திற்கு வருகிறார் தொழிலில் புதிய கிளை துவக்கும் யோகம் உண்டாகும் கேது 18ம் தேதி நான்காமிடத்திற்கு வருகிறார் புதிதாக வீடு வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும் இந்த மாதம் புதன், குரு, சனி, பெயர்ச்சி இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

செப்டம்பர் - வியாபாரத்தில் முதலீடு சூரியன் 17ம் தேதி பன்னிரெண்டாமிடத்திற்கு வருகிறார் பதவி அரசு துறை நிறுவனங்களில் முதலீடுகள் செய்வீர்கள் செவ்வாய் 13ம் தேதி பன்னிரெண்டாமிடத்திற்கு வருகிறார் மருத்துவ சிகிச்சை பெறும் நிலை உண்டாகும் புதன் 27ம் தேதி பன்னிரெண்டாமிடத்திற்கு வருகிறார் வியாபாரத்தில் முதலீடுகள் அதிகரிக்கும் குரு 12ம் தேதி உங்கள் ஜென்ம ராசிக்கு வருகிறார் மனதில் சந்தோஷமும் சமுதாயத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும் சுக்கிரன் 15ம் தேதி பதினொன்றாமிடத்திற்கு வருகிறார் மனைவி மூலம் பண வரவு அதிகரிக்கும். இந்த மாதம் சனி, ராகு, கேது பெயர்ச்சி இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

அக்டோபர் - புத்தி தெளிவடையும் சூரியன் 18ம் தேதி உங்கள் ஜென்ம ராசிக்கு வருகிறார் அப்பாவின் ஆலோசனை சில பிரச்சினைகள் தீர்வு கிடைக்க உதவும் செவ்வாய் 30ம் தேதி உங்கள் ஜென்ம ராசிக்கு வருகிறார் மனதில் கோபம் அதிகரிக்கும் புதன் 30ம் தேதி உங்கள் ஜென்ம ராசிக்கு வருகிறார் குழப்ப நிலையில் இருந்த புத்தி தெளிவடையும் சுக்கிரன் 15ம் தேதி இரண்டாமிடத்திற்கு வருகிறார் வீட்டிற்கு ஆடம்பர பொருட்கள் சேர்க்கை அதிகரிக்கும். இந்த மாதம் குரு, சனி, ராகு, கேது பெயர்ச்சி இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

நவம்பர் - செல்வ சேர்க்கை சூரியன் 17ம் தேதி இரண்டாமிடத்திற்கு வருகிறார் சம்பள உயர்வு உண்டாகும் புதன் 02ம் தேதி இரண்டாமிடத்திற்கு வருகிறார் வாக்கு வன்மை அதிகரிக்கும் 24ம் தேதி மூன்றாமிடத்திற்கு வருகிறார் தகவல் தொடர்பு சிறப்படையும் சுக்கிரன் 03ம் தேதி உங்கள் ஜென்ம ராசிக்கு வருகிறார் முக வசீகரம் அதிகரிக்கும் 26ம் தேதி இரண்டாமிடத்திற்கு வருகிறார் செல்வச் சேர்க்கை அதிகரிக்கும். இந்த மாதம் குரு, சனி, ராகு, கேது பெயர்ச்சி இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

டிசம்பர் - சகோதரிகளால் நன்மை சூரியன் 16ம் தேதி மூன்றாமிடத்திற்கு வருகிறார் வீடு மாறும் நிலை உண்டாகும் சுக்கிரன் 20ம் தேதி மூன்றாமிடத்திற்கு வருகிறார் சகோதரிகளால் நன்மை உண்டாகும். இந்த மாதம் செவ்வாய், புதன், குரு, சனி, ராகு, கேது பெயர்ச்சி இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55631
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: 2017 ஆங்கில புத்தாண்டு, பொது மற்றும் ராசி பலன்கள் !

Post by krishnaamma on Tue Dec 27, 2016 11:23 am

விருச்சிக ராசி நேயர்களே!

ஆண்டின் ஆரம்பத்திலேயே சனிபகவான் இரண்டாமிடத்திற்கு வருவது அசையா சொத்துகளான பூமி வீடு போன்றவற்றினை வாங்கும் யோகத்தினை கொடுக்கும். இவ்வாண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெறும் ராகு கேது பெயர்ச்சி சுப பலன்களை அதிகமாக கொடுக்கும். ராகு ஒன்பதாமிடத்திற்கும் கேது மூன்றாமிடத்திற்கும் வருவது சிறப்பு.

இந்த ஆண்டு துவக்கத்தில் உங்கள் ஜென்ம ராசிக்கு பதினொன்றாமிடத்தில் சஞ்சரிக்கும் குரு பகவானால் தன வரவு மற்றும் செல்வச்சேர்க்கை அதிகமாக இருக்கும் செப்டம்பர் மாதம் குரு உங்கள் ஜென்ம ராசிக்கு பன்னிரெண்டாமிடத்திற்கு வருகிறார் புதிய தொழில்களில் முதலீடுகளும் செலவுகளும் அதிகரிக்கும்.

ஜனவரி - குல தெய்வ வழிபாடு ஆண்டின் துவக்கத்தில் இரண்டாமிடத்தில் இருக்கும் சூரியன் சரளமான பண புழக்கத்தைத் தருவார். இம்மாதம் 14ம் தேதி மூன்றாமிடத்திற்கு சூரியன் வருகிறார் அடிக்கடி பிரயாணம் செல்லும் நிலை உருவாகும் செவ்வாய் இம்மாதம் 20ம் தேதி ஐந்தாம் இடத்திற்கு வருகிறார் குலதெய்வக் கோயிலுக்கு சென்று நேர்த்திக்கடனை நிறைவேற்றுவீர்கள்.

புதன் இம்மாதம் முழுவதும் இரண்டாம் இடத்தில் இருப்பது பேச்சினாலேயே எல்லா காரியத்தையும் சாத்தித்துக் கொள்வீர்கள் குரு உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருப்பது அதிகமான லாபத்தை கொடுக்கும் சுக்கிரன் நான்காமிடத்திலிருப்பது வாகன யோகத்தை கொடுக்கும் இம்மாதம் 27ம் தேதி ஐந்தாமிடத்திற்கு மாறுகிறார் குடும்பத்துடன் உல்லாசப் பயணம் செல்வீர்கள்

சனி வருட ஆரம்பத்தில் உங்கள் ஜென்ம ராசியில் இருந்தாலும் இம்மாதம் 26ம் தேதி தேதி இரண்டாமிடத்திற்கு வருவது பண வரவை அதிகப்படுத்தும் ராகு பத்தாமிடத்தில் இருப்பது தொழில் உத்தியோகத்தை மேன்மையடையச் செய்யும் கேது நான்காமிடத்திலிருப்பது வீடு வாகனம் வாங்கும் நற்பலனைக் கொடுக்கும்.

பிப்ரவரி - வியாபாரம் சிறப்பு சூரியன் இம்மாதம் 13ம் தேதி நான்காமிடத்திற்கு வருகிறார் அரசாங்க ஒதுக்கீட்டில் வீடு கிடைக்கலாம். புதன் இம்மாதம்03ம் தேதி மூன்றாமிடத்திற்கு வருவது வியாபாரம் சிறப்படையச் செய்யும் 22ம் தேதி நான்காமிடத்திற்கு வருவது படிப்பில் மேன்மை நிலையைத் தரும். செவ்வாய், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது இம்மாதம் பெயர்ச்சி கிடையாது கடந்த மாத பலன்களையே இம்மாதமும் தொடர்ந்து கொடுப்பார்கள்.

மார்ச் - லாபம் அதிகரிப்பு சூரியன் இந்த மாதம் 14ம் தேதி ஐந்தாமிடத்திற்கு வருகிறார் அரசாங்க வகையில் விருது பரிசு கிடைக்கும் வாய்ப்புகள் அதிகம் செவ்வாய் 02ம் தேதி ஆறாமிடத்திற்கு வருகிறார் சகோதரர்களால் தொல்லை உண்டாகும் புதன் 11ம் தேதி ஐந்தாமிடத்திற்கு வருவது ஷேர்மார்க்கெட் முதலீடுகளில் லாபத்தைத் தரும் 27ம் தேதி ஆறாமிடத்திற்கு வருகிறார் வியாபாரத்தில் யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம். குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது இம்மாதம் பெயர்ச்சி இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

ஏப்ரல் - தொழிலில் நன்மை சூரியன் இந்த மாதம் 14ம் தேதி ஆறாம் இடத்திற்கு வருகிறார் தொழிலில் பிரச்சினைகள் உண்டாகலாம் செவ்வாய் இந்த மாதம் 13ம் தேதி ஏழாமிடத்திற்கு வருகிறார் நிலம் வீடு வாகனம் வாங்கி விற்கும் தொழில் செய்பவர்களுக்கு நன்மை உண்டாகும். புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது இம்மாதம் பெயர்ச்சி இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

மே - இடமாற்றம் சூரியன் இந்த மாதம் 15ம் தேதி ஏழாமிடத்திற்கு வருகிறார் அரசு ஊழியர்களுக்கு இடமாற்றம் உண்டாகும் செவ்வாய் இந்த மாதம் 27ம் தேதி எட்டாமிடத்திற்கு வருகிறார் கூர்மையான கத்தி மற்றும் கண்ணாடிப் பொருட்களை கையாளும் பொழுது கவனம் தேவை இவற்றால் காயங்கள் உண்டாகலாம். சுக்கிரன் இந்த மாதம் 27ம் தேதி ஆறாமிடத்திற்கு வருகிறார் பெண்களால் பிரச்சினை உண்டாகும். இந்த மாதம் புதன், குரு, சனி, ராகு, கேது பெயர்ச்சி இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

ஜூன் - கவனம் தேவை இந்த மாதம் சூரியன் 15ம் தேதி எட்டாமிடத்திற்கு வருகிறார் அப்பாவுக்கு விபத்து, காயம் உண்டாகலாம் புதன் இந்த மாதம் 03ம் தேதி ஏழாம் இடத்திற்கு வருகிறார் தாய் மாமனுடன் நல்லுறவு உண்டாகும் 18ம் தேதி எட்டாமிடத்திற்கு வருகிறார் ஷேர் மார்க்கெட் முதலீடுகள் நஷ்டத்தை கொடுக்கலாம். சுக்கிரன் இம்மாதம் 29ம் தேதி ஏழாமிடத்திற்கு வருகிறார் கணவன் மனைவி அன்னியோன்னியம் அதிகரிக்கும். இந்த மாதம் செவ்வாய், குரு, சனி, ராகு, கேது பெயர்ச்சி இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

ஜூலை - பெண்களால் கஷ்டம் சூரியன் இந்த மாதம் 17ம் தேதி ஒன்பதாமிடத்திற்கு வருகிறார் உத்தியோக உயர்வுடன் பணியிட மாற்றம் உண்டாகும் செவ்வாய் 11ம் தேதி ஒன்பதாமிடத்திற்கு வருகிறார் பரம்பரை சொத்துகளில் உங்களுக்கு பங்கு கிடைக்கும் புதன் இந்த மாதம் 03ம் தேதி ஒன்பதாம் இடத்திற்கு வருகிறார் அன்னிய தேச தொழில் தொடர்புகள் சிறப்படையும் 21ம் தேதி பத்தாமிடத்திற்கு வருகிறார் தரகு கமிஷன் வியாபாரம் சிறப்படையும் சுக்கிரன் 26ம் தேதி எட்டாமிடத்திற்கு வருகிறார் பெண்களால் கஷ்டம் உண்டாகும். இந்த மாதம் செவ்வாய், குரு, சனி, ராகு, கேது பெயர்ச்சி இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

ஆகஸ்ட் - விருது கிடைக்கும் சூரியன் 17ம் தேதி உங்கள் பத்தாமிடத்திற்கு வருகிறார் மன லயிப்புடன் வேலை செய்வீர்கள் செவ்வாய் 27ம் தேதி பத்தாமிடத்திற்கு வருகிறார் காவல் துறையில் பணிபுரிபவர்களுக்கு விருது கிடைக்கும். சுக்கிரன் 21ம் தேதி ஒன்பதாமிடத்திற்கு வருகிறார் வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும் ராகு இம்மாதம் 18ம் தேதி ஒன்பதாமிடத்திற்கு வருகிறார் பொதுவாக நல்ல பலன்களை அள்ளித் தருவார் கேது 18ம் தேதி மூன்றாமிடத்திற்கு வருகிறார் அடிக்கடி பயணம் செல்லும் நிலை உண்டாகும். இந்த மாதம் புதன், குரு, சனி, பெயர்ச்சி இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

செப்டம்பர் - எண்ணம் நிறைவேறும் சூரியன் 17ம் தேதி பதினொன்றாமிடத்திற்கு வருகிறார் சம்பள உயர்வு கிடைக்கும் செவ்வாய் 13ம் தேதி பதினொன்றாமிடத்திற்கு வருகிறார் மனதில் எண்ணியவை யாவும் எளிதில் நிறைவேறும் புதன் 27ம் தேதி பதினொன்றாமிடத்திற்கு வருகிறார் ஷேர்மார்க்கெட் முதலீடுகள் நல்ல லாபத்தைத் தரும் குரு 12ம் தேதி உங்கள் பன்னிரெண்டாமிடத்திற்கு வருகிறார் வங்கியில் முதலீடுகளும் செலவுகளும் அதிகரிக்கும் சுக்கிரன் 15ம் தேதி பத்தாமிடத்திற்கு வருகிறார் தொழில் வியாபாரம் சிறப்படையும். இந்த மாதம் சனி, ராகு, கேது பெயர்ச்சி இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

அக்டோபர் - செலவுகள் அதிகரிக்கும் சூரியன் 18ம் தேதி உங்கள் பன்னிரெண்டாமிடத்திற்கு வருகிறார் அப்பா வகையில் செலவுகள் அதிகரிக்கும் செவ்வாய் 30ம் தேதி பன்னிரெண்டாமிடத்திற்கு வருகிறார் நிலம் வீடு போன்றவைகளில் முதலீடுகள் அதிகரிக்கும் புதன் 30ம் தேதி பன்னிரெண்டாமிடத்திற்கு வருகிறார் வெளிநாட்டு வியாபாரத் தொடர்புகள் சிறப்படையும். சுக்கிரன் 15ம் தேதி பதினொன்றாமிடத்திற்கு வருகிறார் பெண்களால் அதிர்ஷ்டம் அதிகரிக்கும். இந்த மாதம் குரு, சனி, ராகு, கேது பெயர்ச்சி இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

நவம்பர் - பதவி உயர்வு சூரியன் 17ம் தேதி உங்கள் ஜென்ம ராசிக்கு வருகிறார் பதவி உயர்வு கிடைக்கும் புதன் 02ம் தேதி உங்கள் ஜென்ம ராசிக்கு வருகிறார் சமயோசிதமாக செயல்படுவீர்கள் 24ம் தேதி இரண்டாமிடத்திற்கு வருகிறார் வியாபார லாபம் அதிகரிக்கும் சுக்கிரன் 03ம் தேதி பன்னிரெண்டாமிடத்திற்கு வருகிறார் மனைவிக்காக செலவுகள் அதிகரிக்கும் 26ம் தேதி உங்கள் ஜென்ம ராசிக்கு வருகிறார் மனதில்சந்தோஷம் அதிகரிக்கும். இந்த மாதம் குரு, சனி, ராகு, கேது பெயர்ச்சி இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

டிசம்பர் - சம்பளம் அதிகரிக்கும் சூரியன் 16ம் தேதி இரண்டாமிடத்திற்கு வருகிறார் சம்பளம் அதிகரிக்கும் சுக்கிரன் 20ம் தேதி இரண்டாமிடத்திற்கு வருகிறார் வீட்டுக்கு தேவையான ஆடம்பரப் பொருட்களை வாங்குவீர்கள். இந்த மாதம் செவ்வாய், புதன், குரு, சனி, ராகு, கேது பெயர்ச்சி இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55631
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: 2017 ஆங்கில புத்தாண்டு, பொது மற்றும் ராசி பலன்கள் !

Post by krishnaamma on Tue Dec 27, 2016 11:26 am

தனுசு ராசி நேயர்களே!

ஆண்டின் ஆரம்பத்திலேயே சனிபகவான் உங்கள் ஜென்ம ராசிக்கு வருவது சுய முயற்சி மூலம் பண வரவை அதிகமாகக் கொடுக்கும். இந்த ஆண்டு துவக்கத்தில் உங்கள் ஜென்ம ராசிக்கு பத்தாமிடத்தில் சஞ்சரிக்கும் குரு பகவானால் சொந்தமாக செய்யும் தொழில் சிறப்பாக இருக்கும்.

செப்டம்பர் மாதம் குரு உங்கள் ஜென்ம ராசிக்கு பதினொன்றாமிடத்திற்கு வருகிறார் தொழில் லாபம் அதிகரிக்கும் மனதில் நினைப்பவை எல்லாம் எளிதில் நிறைவேறும். இவ்வாண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெறும் ராகு கேது பெயர்ச்சி சுபஅசுப பலன்களை கலந்து கொடுக்கும். ராகு எட்டாமிடத்திற்கு வருவது சிறப்பு அல்ல கேது இரண்டாமிடத்திற்கு வருவது நற்பலனைத் தரும்.

ஜனவரி: ஆண்டின் துவக்கத்தில் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கும் சூரியன் தலைமைப் பதவியைத் தருவார். இம்மாதம் 14ம் தேதி இரண்டாமிடத்திற்கு சூரியன் வருகிறார் அப்பா மூலம் பண வரவு உண்டாகும் செவ்வாய் இம்மாதம் 20ம் தேதி நான்காம் இடத்திற்கு வருகிறார் புதிதாக நிலம் வாங்கும் யோகம் உண்டாகும். புதன் இம்மாதம் முழுவதும் உங்கள் ஜென்ம ராசியில் இருப்பது சமயோசிதமாக செயல்பட்டு எல்லாவற்றிலும் வெற்றி பெறுவீர்கள்.

குரு உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருப்பது சொந்தமாக செய்யும் தொழிலில் மேன்மையைக் கொடுக்கும் சுக்கிரன் மூன்றாமிடத்திலிருப்பது வெளியூர் பயணத்தைக் கொடுக்கும் இம்மாதம் 27ம் தேதி நான்காமிடத்திற்கு மாறுகிறார் புதிதாக வாகனம் வாங்குவீர்கள். சனி வருட ஆரம்பத்தில் பன்னிரெண்டாமிடத்தில் இருந்தாலும் இம்மாதம் 26ம் தேதி உங்கள் ஜென்ம ராசிக்கு வருவது உடல் உழைப்பை அதிகப்படுத்தும் ராகு ஒன்பதாமிடத்தில் இருப்பது வெளிநாடு செல்லும் யோகத்தைக் கொடுக்கும் கேது மூன்றாமிடத்திலிருப்பது அடிக்கடி பயணம் செய்யும் நிலையைத் தரும்.

பிப்ரவரி: சூரியன் இம்மாதம் 13ம் தேதி மூன்றாமிடத்திற்கு வருகிறார் அரசு ஊழியர்களுக்கு பணியிட மாற்றம் உண்டாகும். புதன் இம்மாதம்03ம் தேதி இரண்டாமிடத்திற்கு வருவது வாக்கு வன்மை அதிகரிக்கும் 22ம் தேதி மூன்றாமிடத்திற்கு வருவது சுப மங்கல தகவல் வரும். செவ்வாய், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது இம்மாதம் பெயர்ச்சி கிடையாது கடந்த மாத பலன்களையே இம்மாதமும் தொடர்ந்து கொடுப்பார்கள்.

மார்ச்: சூரியன் இந்த மாதம் 14ம் தேதி நான்காமிடத்திற்கு வருகிறார் வீடு நிலம் வாங்கும் யோகம் உண்டாகும். செவ்வாய் 02ம் தேதி ஐந்தாமிடத்திற்கு வருகிறார் குல தெய்வ கோயிலுக்கு செல்வீர்கள் புதன் 11ம் தேதி நான்காமிடத்திற்கு வருவது சில்லறை வியாபாரத்தில் லாபத்தைத் தரும் 27ம் தேதி ஐந்தாமிடத்திற்கு வருகிறார் படிப்பில் மேன்மை நிலை உண்டாகும். குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது இம்மாதம் பெயர்ச்சி இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

ஏப்ரல்: சூரியன் இந்த மாதம் 14ம் தேதி ஐந்தாம் இடத்திற்கு வருகிறார் பூர்வீக சொத்து கிடைக்கும் செவ்வாய் இந்த மாதம் 13ம் தேதி ஆறாமிடத்திற்கு வருகிறார் உடன் பிறப்புகளால் தொல்லை உண்டாகும். புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது இம்மாதம் பெயர்ச்சி இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

மே: சூரியன் இந்த மாதம் 15ம் தேதி ஆறாமிடத்திற்கு வருகிறார் உயர் அதிகாரிகளால் தொல்லை உண்டாகும் செவ்வாய் இந்த மாதம் 27ம் தேதி ஏழாமிடத்திற்கு வருகிறார் ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்களுக்கு வியாபாரம் விருத்தியாகும். சுக்கிரன் இந்த மாதம் 27ம் தேதி ஐந்தாமிடத்திற்கு வருகிறார் குடும்பத்துடன் உல்லாசப் பயணம் செல்வீர்கள். இந்த மாதம் புதன், குரு, சனி, ராகு, கேது பெயர்ச்சி இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

ஜூன்: இந்த மாதம் சூரியன் 15ம் தேதி ஏழாமிடத்திற்கு வருகிறார் அடிக்கடி வெளியூர் பயணம் செல்லும் நிலை உண்டாகும். புதன் இந்த மாதம் 03ம் தேதி ஆறாம் இடத்திற்கு வருகிறார் ஷேர்மார்க்கெட் முதலீடுகளை தவிர்க்கவும் 18ம் தேதி ஏழாமிடத்திற்கு வருகிறார் தொழில் வியாபாரம் விருத்தியாகும். சுக்கிரன் இம்மாதம் 29ம் தேதி ஆறாமிடத்திற்கு வருகிறார் பெண்களால் தொல்லை உண்டாகும். இந்த மாதம் செவ்வாய், குரு, சனி, ராகு, கேது பெயர்ச்சி இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

ஜூலை: சூரியன் இந்த மாதம் 17ம் தேதி எட்டாமிடத்திற்கு வருகிறார் தொழிலில் மன உளைச்சல் உண்டாகும் செவ்வாய் 11ம் தேதி எட்டாமிடத்திற்கு வருகிறார் நெருப்பினால் காயம் உண்டாகலாம் கவனம் தேவை. புதன் இந்த மாதம் 03ம் தேதி எட்டாம் இடத்திற்கு வருகிறார் தாய் மாமனுடன் மனஸ்தாபம் உண்டாகும் 21ம் தேதி ஒன்பதாமிடத்திற்கு வருகிறார் தொழில் வியாபாரம் சம்பந்த்தமாக வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும் சுக்கிரன் 26ம் தேதி ஏழாமிடத்திற்கு வருகிறார் கணவன் மனைவி அன்னியோன்னியம் அதிகரிக்கும். இந்த மாதம் செவ்வாய், குரு, சனி, ராகு, கேது பெயர்ச்சி இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

ஆகஸ்ட்: சூரியன் 17ம் தேதி உங்கள் ஒன்பதாமிடத்திற்கு வருகிறார் அப்பாவின் தொழில் சிறப்படையும் செவ்வாய் 27ம் தேதி ஒன்பதாமிடத்திற்கு வருகிறார் பரம்பரை சொத்துகளில் பங்கு கிடைக்கும். சுக்கிரன் 21ம் தேதி எட்டாமிடத்திற்கு வருகிறார் பெண்களால் மனக் கஷ்டம் உண்டாகும் ராகு இம்மாதம் 18ம் தேதி எட்டாமிடத்திற்கு வருகிறார் வாகனப் போக்குவரத்தில் கவனம் தேவை. கேது 18ம் தேதி இரண்டாமிடத்திற்கு வருகிறார் வீண் விவாதங்களைத் தவிர்ப்பது சிறப்பு. இந்த மாதம் புதன், குரு, சனி, பெயர்ச்சி இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

செப்டம்பர்: சூரியன் 17ம் தேதி பத்தாமிடத்திற்கு வருகிறார் பரம்பரையாக செய்து வந்த தொழிலில் முன்னேற்றம் உண்டாகும் செவ்வாய் 13ம் தேதி பத்தாமிடத்திற்கு வருகிறார் விளையாட்டு வீரர்களுக்கு புகழ் கிடைக்கும் புதன் 27ம் தேதி பத்தாமிடத்திற்கு வருகிறார் தரகு கமிஷன் வியாபாரம் மிகவும் முன்னேற்றம் அடையும். குரு 12ம் தேதி உங்கள் ஜென்ம ராசிக்கு பதினொன்றாமிடத்திற்கு வருகிறார் எண்ணியவை யாவும் எளிதில் நிறைவேறும். சுக்கிரன் 15ம் தேதி ஒன்பதாமிடத்திற்கு வருகிறார் ஆன்மீக சுற்றுலா செல்வீர்கள். இந்த மாதம் சனி, ராகு, கேது பெயர்ச்சி இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

அக்டோபர்: சூரியன் 18ம் தேதி உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்திற்கு வருகிறார் தொழில் லாபம் அதிகரிக்கும் செவ்வாய் 30ம் தேதி பதினொன்றாமிடத்திற்கு வருகிறார் விளையாட்டு வீரர்களுக்கு பண வரவு அதிகரிக்கும் புதன் 30ம் தேதி பதினொன்றாமிடத்திற்கு வருகிறார் ஷேர்மார்க்கெட் முதலீடுகள் லாபத்தைத் தரும். சுக்கிரன் 15ம் தேதி பத்தாமிடத்திற்கு வருகிறார் தொழிலில் வாழ்க்கைத் துணையின் உதவி கிடைக்கும். இந்த மாதம் குரு, சனி, ராகு, கேது பெயர்ச்சி இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

நவம்பர்: சூரியன் 17ம் தேதி பன்னிரெண்டாமிடத்திற்கு வருகிறார் அரசு நிறுவனங்களில் முதலீடுகள் அதிகரிக்கும் புதன் 02ம் தேதி பன்னிரெண்டாமிடத்திற்கு வருகிறார் வியாபாரத்திற்க்காக வெளியூர் பயணம் செல்லும் நிலை உண்டாகும் 24ம் தேதி உங்கள் ஜென்ம ராசுக்கு வருகிறார் புத்திகூர்மை அதிகரிக்கும் சுக்கிரன் 03ம் தேதி பதினொன்றாமிடத்திற்கு வருகிறார் வங்கி சேமிப்பு அதிகரிக்கும் 26ம் தேதி பன்னிரெண்டாமிடத்திற்கு வருகிறார் பொன்னகைகள் வாங்குவீர்கள். இந்த மாதம் குரு, சனி, ராகு, கேது பெயர்ச்சி இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

டிசம்பர்: சூரியன் 16ம் தேதி உங்கள் ஜென்ம ராசிக்கு வருகிறார் பதவி உயர்வு உண்டாகும் சுக்கிரன் 20ம் தேதி உங்கள் ஜென்ம ராசிக்கு வருகிறார் முக வசீகரம் அதிகரிக்கும். இந்த மாதம் செவ்வாய், புதன், குரு, சனி, ராகு, கேது பெயர்ச்சி இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55631
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: 2017 ஆங்கில புத்தாண்டு, பொது மற்றும் ராசி பலன்கள் !

Post by krishnaamma on Tue Dec 27, 2016 11:30 am

இந்த ஆண்டு துவக்கத்தில் உங்கள் ஜென்ம ராசிக்கு ஒன்பதாமிடத்தில் சஞ்சரிக்கும் குரு பகவானால் செல்வச் செழிப்பு மனதிற்கு திருப்தி தருவதாக இருக்கும் ஆண்டின் இறுதியில் குரு உங்கள் ஜென்ம ராசிக்கு பத்தாமிடத்திற்கு வருகிறார். தொழில் நிலையில் முன்னேற்றம் உண்டாகும்.

ஆண்டின் ஆரம்பத்திலேயே சனிபகவான் உங்கள் ஜென்ம ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் வருவது செலவினங்கள் அதிகரிக்கச் செய்யும். இவ்வாண்டு இறுதியில் நடைபெறும். ராகு கேது பெயர்ச்சி சுப பலன்களை கொடுக்கும். ராகு ஏழாமிடத்திற்கு வருவது வியாபார விருத்தியை கொடுக்கும் கேது உங்கள் ஜென்ம ராசிக்கு வருவது உழைப்பை அதிகப்படுத்தும்.

ஜனவரி - வேலை கிடைக்கும் ஆண்டின் துவக்கத்தில் பன்னிரெண்டாமிடத்தில் இருக்கும் சூரியன் அதிகமாக செலவழிக்கும் சூழ்நிலையை உருவாக்குவார் இம்மாதம் 14ம் தேதி உங்கள் ஜென்ம ராசிக்கு சூரியன் வருகிறார் வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும் செவ்வாய் இம்மாதம் 20ம் தேதி மூன்றாம் இடத்திற்கு வருகிறார் உடன் பிறப்புகளால் நன்மை உண்டாகும்.

புதன் இம்மாதம் முழுவதும் பன்னிரெண்டாமிடத்தில் இருப்பது வியாபாரத்தில் முதலீடுகளை அதிகரிக்கச் செய்யும் குரு உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருப்பது அனைவரிடமும் நல்லுறவு நிலவும் அதிர்ஷ்டம் அதிகரிக்கும் சுக்கிரன் இரண்டாமிடத்திலிருப்பது தாராளமான செல்வத்தை கொடுக்கும் இம்மாதம் 27ம் தேதி மூன்றாமிடத்திற்கு மாறுகிறார் வெளியூர் செல்லும் நிலை உண்டாகும். சனி வருட ஆரம்பத்தில் பதினொன்றாமிடத்தில் இருந்தாலும் இம்மாதம் 26ம் தேதி உங்கள் ஜென்ம ராசிக்கு பன்னிரெண்டாமிடத்திற்கு வருவது செலவுகள் அதிகரிக்கும் ராகு எட்டாமிடத்தில் இருப்பது மனதில் முடிவெடுக்க முடியாத நிலையை உண்டாக்கும் கேது இரண்டாமிடத்திலிருப்பது அடிக்கடி தேவையற்ற பேச்சை தவிர்ப்பது நல்லது.

பிப்ரவரி - வருமானம் அதிகரிக்கும் சூரியன் இம்மாதம் 13ம் தேதி இரண்டாமிடத்திற்கு வருகிறார் எதிர்பாராத வருமானம் அதிகரிக்கும். புதன் இம்மாதம்03ம் தேதி உங்கள் ஜென்மராசிக்கு வருவது வருவது சமயோசித புத்தியுடன் செயல்படுவீர்கள் 22ம் தேதி இரண்டாமிடத்திற்கு வருவது வாக்கு வன்மை அதிகரிக்கும். செவ்வாய், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது இம்மாதம் பெயர்ச்சி கிடையாது கடந்த மாத பலன்களையே இம்மாதமும் தொடர்ந்து கொடுப்பார்கள்.

மார்ச் - கவனம் அதிகரிப்பு சூரியன் இந்த மாதம் 14ம் தேதி மூன்றாமிடத்திற்கு வருகிறார் அடிக்கடி பயணம் செல்லும் நிலை உண்டாகும். செவ்வாய் 02ம் தேதி நான்காமிடத்திற்கு வருகிறார் வீடு வாங்கும் எண்ணம் நிறைவேறும். புதன் 11ம் தேதி மூன்றாமிடத்திற்கு வருவது வியாபாரம் சிறப்படையும் 27ம் தேதி நான்காமிடத்திற்கு வருகிறார் படிப்பில் கவனம் அதிகரிக்கும். குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது இம்மாதம் பெயர்ச்சி இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

ஏப்ரல் - வாகனம் வாங்குவீர்கள் சூரியன் இந்த மாதம் 14ம் தேதி நான்காம் இடத்திற்கு வருகிறார் அரசாங்க ஒதுக்கீட்டில் வீடு கிடைக்கும் செவ்வாய் இந்த மாதம் 13ம் தேதி ஐந்தாமிடத்திற்கு வருகிறார் புதிதாக வாகனம் வாங்குவீர்கள். புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது இம்மாதம் பெயர்ச்சி இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

மே - உல்லாச பயணம் சூரியன் இந்த மாதம் 15ம் தேதி ஐந்தாமிடத்திற்கு வருகிறார் உல்லாசப் பயணம் செல்வீர்கள் செவ்வாய் இந்த மாதம் 27ம் தேதி ஆறாமிடத்திற்கு வருகிறார் நெருப்பினால் காயம் உண்டாகலாம் கவனம் தேவை. சுக்கிரன் இந்த மாதம் 27ம் தேதி நான்காமிடத்திற்கு வருகிறார் புதிதாக வாங்கும் யோகம் உண்டாகும். இந்த மாதம் புதன், குரு, சனி, ராகு, கேது பெயர்ச்சி இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

ஜூன் - அதிகாரிகளால் தொல்லை இந்த மாதம் சூரியன் 15ம் தேதி ஆறாமிடத்திற்கு வருகிறார் அதிகாரிகளால் தொல்லை உண்டாகும். புதன் இந்த மாதம் 03ம் தேதி ஐந்தாம் இடத்திற்கு வருகிறார் தரகு கமிஷன் வியாபாரம் சிறப்படையும் 18ம் தேதி ஆறாமிடத்திற்கு வருகிறார் தாய் மாமனுடன் கருத்து வேற்றுமை உண்டாகும். சுக்கிரன் இம்மாதம் 29ம் தேதி ஐந்தாமிடத்திற்கு வருகிறார் குடும்பத்துடன் உல்லாசப் பயணம் செல்வீர்கள். இந்த மாதம் செவ்வாய், குரு, சனி, ராகு, கேது பெயர்ச்சி இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

ஜூலை - வாழ்க்கை துணையால் தொல்லை சூரியன் இந்த மாதம் 17ம் தேதி ஏழாமிடத்திற்கு வருகிறார் தொழில் வியாபாரத்தில் சிறந்த நிலை உண்டாகும் செவ்வாய் 11ம் தேதி ஏழாமிடத்திற்கு வருகிறார் காவல் துறையில் பணிபுரிபவர்களுக்கு இடமாற்றம் உண்டாகும். புதன் இந்த மாதம் 03ம் தேதி ஏழாம் இடத்திற்கு வருகிறார் ஷேர்மார்க்கெட் முதலீடுகள் சிறப்படையும் 21ம் தேதி எட்டாமிடத்திற்கு வருகிறார் தாய் மாமனால் மனக் கஷ்டம் உண்டாகும் சுக்கிரன் 26ம் தேதி ஆறாமிடத்திற்கு வருகிறார் வாழ்க்கைத் துணையினால் தொல்லை உண்டாகும். இந்த மாதம் செவ்வாய், குரு, சனி, ராகு, கேது பெயர்ச்சி இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

ஆகஸ்ட் - மனதில் கலக்கம் சூரியன் 17ம் தேதி உங்கள் எட்டாமிடத்திற்கு வருகிறார் உயர் அதிகரிகளால் மனதில் கலக்கம் உண்டாகும் செவ்வாய் 27ம் தேதி எட்டாமிடத்திற்கு வருகிறார் வாகன விபத்து உண்டாகலாம். சுக்கிரன் 21ம் தேதி ஏழாமிடத்திற்கு வருகிறார் வாழ்க்கைத் துணையால் நன்மை உண்டாகும் ராகு இம்மாதம் 18ம் தேதி ஏழாமிடத்திற்கு வருகிறார் வியாபாரத்தில் இதுவரை இருந்து வந்த மந்த நிலை நீங்கி வியாபாரம் விருத்தியாகும் கேது 18ம் தேதி உங்கள் ஜென்ம ராசிக்கு வருகிறார் மன சிந்தனை தெளிவடையும். இந்த மாதம் புதன், குரு, சனி, பெயர்ச்சி இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

செப்டம்பர் - தொழிலில் மேன்மை சூரியன் 17ம் தேதி ஒன்பதாமிடத்திற்கு வருகிறார் அப்பாவின் அறிவுரை நன்மையைக் கொடுக்கும். செவ்வாய் 13ம் தேதி ஒன்பதாமிடத்திற்கு வருகிறார் பரம்பரை சொத்தில் பங்கு கிடைக்கும் புதன் 27ம் தேதி ஒன்பதாமிடத்திற்கு வருகிறார் வெளிநாட்டு தொழில் தொடர்பு சிறப்பு அடையும். குரு 12ம் தேதி உங்கள் ஜென்ம ராசிக்கு பத்தாமிடத்திற்கு வருகிறார் தொழில் நிலை மேன்மையடையும். சுக்கிரன் 15ம் தேதி எட்டாமிடத்திற்கு வருகிறார் பெண்கள் விஷயத்தில் கவனம் தேவை. இந்த மாதம் சனி, ராகு, கேது பெயர்ச்சி இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

அக்டோபர் - பதவி உயர்வு சூரியன் 18ம் தேதி உங்கள் ராசிக்கு பத்தாமிடத்திற்கு வருகிறார் உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும் செவ்வாய் 30ம் தேதி பத்தாமிடத்திற்கு வருகிறார் காவல் துறையில் பணி புரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் புதன் 30ம் தேதி பத்தாமிடத்திற்கு வருகிறார் ஒப்பந்தத் தொழில் சிறப்படையும். சுக்கிரன் 15ம் தேதி ஒன்பதாமிடத்திற்கு வருகிறார் அதிர்ஷ்டம் அதிகரிக்கும். இந்த மாதம் குரு, சனி, ராகு, கேது பெயர்ச்சி இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

நவம்பர் - திடீர் வருமானம் சூரியன் 17ம் தேதி பதினொன்றாமிடத்திற்கு வருகிறார் திடீர் வருமானம் அதிகரிக்கும் புதன் 02ம் தேதி பதினொன்றாமிடத்திற்கு வருகிறார் தாய் மாமன் உதவி கிடைக்கும் 24ம் தேதி பன்னிரெண்டாமிடத்திற்கு வருகிறார் வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். சுக்கிரன் 03ம் தேதி பத்தாமிடத்திற்கு வருகிறார் தொழிலில் வாழ்க்கைத் துணையின் உதவி கிடைக்கும் 26ம் தேதி பதினொன்றாமிடத்திற்கு வருகிறார் லாபம் அதிகரிக்கும். இந்த மாதம் குரு, சனி, ராகு, கேது பெயர்ச்சி இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

டிசம்பர் - வீண் அலைச்சல் சூரியன் 16ம் தேதி உங்கள் ஜென்ம ராசிக்கு பன்னிரெண்டாமிடத்திற்கு வருகிறார் வீண் அலைச்சல் உண்டாகும் சுக்கிரன் 20ம் தேதி உங்கள் ஜென்ம ராசிக்கு பன்னிரெண்டாமிடத்திற்கு வருகிறார் மனைவிக்காக செலவுகள் அதிகரிக்கும். இந்த மாதம் செவ்வாய், புதன், குரு, சனி, ராகு, கேது பெயர்ச்சி இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55631
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: 2017 ஆங்கில புத்தாண்டு, பொது மற்றும் ராசி பலன்கள் !

Post by krishnaamma on Tue Dec 27, 2016 11:33 am

கும்ப ராசி நேயர்களே!

ஆண்டின் ஆரம்பத்திலேயே சனிபகவான் உங்கள் ஜென்ம ராசிக்கு பதினொன்றாமிடத்தில் வருவது தொழில் லாபத்தை அதிகரிக்கச் செய்யும். இவ்வாண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெறும் ராகு கேது பெயர்ச்சி சுப பலன்களை கொடுக்கும். ராகு ஆறாமிடத்திற்கு வருவது எதிரிகளை வெல்லும் திறனை கொடுக்கும் கேது பன்னிரெண்டாமிடத்திற்கு வருவது தொழில் தொடர்பான வெளிநாட்டு தொடர்புகளைக் கொடுக்கும்.

இந்த ஆண்டு துவக்கத்தில் உங்கள் ஜென்ம ராசிக்கு எட்டாமிடத்தில் சஞ்சரிக்கும் குரு பகவானால் எதிர்பாராத பண வரவு தருவதாக இருக்கும். செப்டம்பர் மாதம் குரு உங்கள் ஜென்ம ராசிக்கு ஒன்பதாமிடத்திற்கு வருகிறார் மதிப்பு கௌரவம் அந்தஸ்து அதிகரிக்கும்.

ஜனவரி - தொழிலில் லாபம் ஆண்டின் துவக்கத்தில் பதினொன்றாமிடத்தில் இருக்கும் சூரியன் தொழிலில் லாபத்தை அதிகமாக தருவார் இம்மாதம் 14ம் தேதி உங்கள் ஜென்ம ராசிக்கு பன்னிரெண்டாமிடத்திற்கு சூரியன் வருகிறார் அரசாங்க ஊழியர்களுக்கு பணியிட மாற்றம் உண்டாகும். செவ்வாய் இம்மாதம் 20ம் தேதி இரண்டாம் இடத்திற்கு வருகிறார் நிலம் வீடு வகையில் நன்மை உண்டாகும். புதன் இம்மாதம் முழுவதும் பதினொன்றாமிடத்தில் இருப்பது கமிஷன் ஒப்பந்தத் தொழிலில் லாபத்தை அதிகரிக்கச் செய்யும்

குரு உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருப்பது எதிர்பாராத வகையில் பண வரவைக் கொடுக்கும். சுக்கிரன் உங்கள் ஜென்மராசியில் இருப்பது முக வசீகரத்தை அதிகரிக்கச் செய்யும் இம்மாதம் 27ம் தேதி இரண்டாமிடத்திற்கு மாறுகிறார் பொன்னகைகளின் சேர்க்கை அதிகரிக்கும். சனி வருட ஆரம்பத்தில் பத்தாமிடத்தில் இருந்தாலும் இம்மாதம் 26ம் தேதி பதினொன்றாமிடத்திற்கு வருவது தொழிலில் லாபம் அதிகரிக்கும் ராகு ஏழாமிடத்தில் இருப்பது வியாபாரத்தை அதிகரிக்கச் செய்யும் கேது ஜென்ம ராசியிலிருப்பது மன சிந்தனை தெளிவாக இருக்கும்..

பிப்ரவரி - அதிகாரிகள் ஒத்துழைப்பு சூரியன் இம்மாதம் 13ம் தேதி உங்கள் ஜென்ம ராசிக்கு வருகிறார் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். புதன் இம்மாதம்03ம் தேதி உங்கள் ஜென்மராசிக்கு பன்னிரெண்டாமிடத்திற்கு வருவது தொழிலில் முதலீடுகள் அதிகரிக்கும் 22ம் தேதி ஜென்ம ராசிக்கு வருவது புத்தி சாதுரியம் அதிகரிக்கும். செவ்வாய், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது இம்மாதம் பெயர்ச்சி கிடையாது கடந்த மாத பலன்களையே இம்மாதமும் தொடர்ந்து கொடுப்பார்கள்.

மார்ச் - பண வரவு சூரியன் இந்த மாதம் 14ம் தேதி இரண்டாமிடத்திற்கு வருகிறார் அரசு நிறுவனங்கள் மூலம் பண வரவு உண்டாகும். செவ்வாய் 02ம் தேதி மூன்றாமிடத்திற்கு வருகிறார் அண்டை அயலாரால் நன்மை உண்டாகும். புதன் 11ம் தேதி இரண்டாமிடத்திற்கு வருவது வாக்கு வன்மை அதிகரிக்கும் 27ம் தேதி மூன்றாமிடத்திற்கு வருகிறார் எதிர்பார்த்திருந்த சுப மங்கல தகவல் வந்து சேரும். குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது இம்மாதம் பெயர்ச்சி இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

ஏப்ரல் - எண்ணம் நிறைவேறும் சூரியன் இந்த மாதம் 14ம் தேதி மூன்றாம் இடத்திற்கு வருகிறார் அரசு தொடர்பான பயணம் உண்டாகும் செவ்வாய் இந்த மாதம் 13ம் தேதி நான்காமிடத்திற்கு வருகிறார் வீடு கட்டும் எண்ணம் நிறைவேறும். புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது இம்மாதம் பெயர்ச்சி இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

மே - மன தைரியம் சூரியன் இந்த மாதம் 15ம் தேதி நான்காமிடத்திற்கு வருகிறார் புதிதாக வாகனம் வாங்குவீர்கள் செவ்வாய் இந்த மாதம் 27ம் தேதி ஐந்தாமிடத்திற்கு வருகிறார் மன தைரியம் அதிகரிக்கும். சுக்கிரன் இந்த மாதம் 27ம் தேதி மூன்றாமிடத்திற்கு வருகிறார் அடிக்கடி பயணம் செய்யும் நிலை உண்டாகும். இந்த மாதம் புதன், குரு, சனி, ராகு, கேது பெயர்ச்சி இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

ஜூன் - வெற்றி கிடைக்கும் இந்த மாதம் சூரியன் 15ம் தேதி ஐந்தாமிடத்திற்கு வருகிறார் போட்டி பந்தயங்களில் வெற்றி கிடைக்கும். புதன் இந்த மாதம் 03ம் தேதி நான்காம் இடத்திற்கு வருகிறார் கல்வி நிலை சிறப்படையும் 18ம் தேதி ஐந்தாமிடத்திற்கு வருகிறார் கமிஷன் வியாபாரத்தில் மேன்மை உண்டாகும். சுக்கிரன் இம்மாதம் 29ம் தேதி நான்காமிடத்திற்கு வருகிறார் புதிதாக வாகனம் வாங்குவீர்கள். இந்த மாதம் செவ்வாய், குரு, சனி, ராகு, கேது பெயர்ச்சி இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

ஜூலை - மன தைரியம் சூரியன் இந்த மாதம் 17ம் தேதி ஆறாமிடத்திற்கு வருகிறார் மன தைரியம் அதிகரிக்கும் செவ்வாய் 11ம் தேதி ஆறாமிடத்திற்கு வருகிறார் எதிரிகளை வெல்லும் திறன் உண்டாகும். புதன் இந்த மாதம் 03ம் தேதி ஆறாம் இடத்திற்கு வருகிறார் தாய் மாமனுடன் கருத்து வேறுபாடு உண்டாகும் 21ம் தேதி ஏழாமிடத்திற்கு வருகிறார் தொழில் கூட்டாளிகளுடன் நல்லுறவு உண்டாகும் சுக்கிரன் 26ம் தேதி ஐந்தாமிடத்திற்கு வருகிறார் குடும்பத்துடன் உல்லாசப் பயணம் செல்வீர்கள். இந்த மாதம் செவ்வாய், குரு, சனி, ராகு, கேது பெயர்ச்சி இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

ஆகஸ்ட் - உறவினர்களுடன் நல்லுறவு சூரியன் 17ம் தேதி உங்கள் ஏழாமிடத்திற்கு வருகிறார் உறவினர்களுடன் நல்லுறவு உண்டாகும் செவ்வாய் 27ம் தேதி ஏழாமிடத்திற்கு வருகிறார் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு நன்மை விளையும். சுக்கிரன் 21ம் தேதி ஆறாமிடத்திற்கு வருகிறார் பெண்களால் தொல்லை உண்டாகும் ராகு இம்மாதம் 18ம் தேதி ஆறாமிடத்திற்கு வருகிறார் மன தைரியம் அதிகரிக்கும் கேது 18ம் தேதி பன்னிரெண்டாமிடத்திற்கு வருகிறார் திருக்கோயில்களுக்கு டொனேசன் கொடுப்பீர்கள். இந்த மாதம் புதன், குரு, சனி, பெயர்ச்சி இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

செப்டம்பர் - திடீர் யோகம் சூரியன் 17ம் தேதி எட்டாமிடத்திற்கு வருகிறார் திடீர் யோகம் உண்டாகும். செவ்வாய் 13ம் தேதி எட்டாமிடத்திற்கு வருகிறார் நெருப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனம் தேவை புதன் 27ம் தேதி எட்டாமிடத்திற்கு வருகிறார் தாய் மாமனுடன் கருத்து வேறுபாடு உண்டாகும். குரு 12ம் தேதி உங்கள் ஜென்ம ராசிக்கு ஒன்பதாமிடத்திற்கு வருகிறார் அதிர்ஷ்டம் அதிகரிக்கும். சுக்கிரன் 15ம் தேதி ஏழாமிடத்திற்கு வருகிறார் கணவன் மனைவி அன்னியோன்னியம் அதிகரிக்கும். இந்த மாதம் சனி, ராகு, கேது பெயர்ச்சி இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

அக்டோபர் - வெளிநாடு பயணம் சூரியன் 18ம் தேதி உங்கள் ராசிக்கு ஒன்தாமிடத்திற்கு வருகிறார் உத்தியோகம் தொடர்பாக வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும் செவ்வாய் 30ம் தேதி ஒன்பதாமிடத்திற்கு வருகிறார் பூர்வீக சொத்திலிருந்து பங்கு கிடைக்கும் புதன் 30ம் தேதி ஒன்பதாமிடத்திற்கு வருகிறார் உயர் கல்வியில் மேன்மை உண்டாகும். சுக்கிரன் 15ம் தேதி எட்டாமிடத்திற்கு வருகிறார் பெண்கள் விஷயத்தில் கவனம் தேவை. இந்த மாதம் குரு, சனி, ராகு, கேது பெயர்ச்சி இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

நவம்பர் - லாபம் அதிகரிப்பு சூரியன் 17ம் தேதி பத்தாமிடத்திற்கு வருகிறார் தொழில் வியாபாரம் சிறப்படையும் புதன் 02ம் தேதி பத்தாமிடத்திற்கு வருகிறார் தரகு கமிஷன் வியாபாரம் மேன்மையடையும் 24ம் தேதி பதினொன்றாமிடத்திற்கு வருகிறார் தொழில் லாபம் அதிகரிக்கும். சுக்கிரன் 03ம் தேதி ஒன்பதாமிடத்திற்கு வருகிறார் அதிர்ஷ்டம் அதிகரிக்கும் 26ம் தேதி பத்தாமிடத்திற்கு வருகிறார் எல்லா செயல்களும் சிறப்படையும். இந்த மாதம் குரு, சனி, ராகு, கேது பெயர்ச்சி இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

டிசம்பர் - சம்பள உயர்வு சூரியன் 16ம் தேதி பதினொன்றாமிடத்திற்கு வருகிறார் சம்பள உயர்வு உண்டாகும். சுக்கிரன் 20ம் தேதி உங்கள் பதினொன்றாமிடத்திற்கு வருகிறார் பொன்னகைகளின் சேர்க்கை அதிகரிக்கும். இந்த மாதம் செவ்வாய், புதன், குரு, சனி, ராகு, கேது பெயர்ச்சி இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55631
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: 2017 ஆங்கில புத்தாண்டு, பொது மற்றும் ராசி பலன்கள் !

Post by krishnaamma on Tue Dec 27, 2016 11:38 am

ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்- 2017 - மீனம் .................அவர்களே இன்னும் போடவில்லை சோகம் ...................... அழுகை அழுகை அழுகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55631
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: 2017 ஆங்கில புத்தாண்டு, பொது மற்றும் ராசி பலன்கள் !

Post by T.N.Balasubramanian on Tue Dec 27, 2016 12:11 pm

நன்றி .

பதிவு எண் #12 , மகர ராசிக்குதானே !

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22164
மதிப்பீடுகள் : 8272

View user profile

Back to top Go down

2017 ஆங்கிலப் புத்தாண்டு ராசி (குடும்ப) பலன்கள் - ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

Post by ayyasamy ram on Thu Dec 29, 2016 6:37 pm


-
சூரியனின் ஆதிக்க எண்ணாகிய ஒன்றாம் எண்ணிலும்,
கதிரவனின் நாளான ஞாயிற்றுக்கிழமையிலும் 2017ம் வருடம்
பிறப்பதால் அதிரடி அரசியல் நிகழ்வுகள் தினந்தோறும்
அரங்கேறும்.

எண் ஜோதிடப்படி விதி எண்ணாக குருவின் ஆதிக்கம் கொண்ட
மூன்றாம் எண் வருவதால் பணக்காரர்கள், பதுக்கல்காரர்கள்
பாதிக்கப்படுவார்கள். பஞ்சபட்சி சாஸ்திரப்படி மயில் துயில்
கொள்ளும் நேரத்தில் இந்த வருடம் பிறப்பதால் ஊர்க்குருவிகள்
பருந்துகளாக தம்மை காட்டிக்கொள்ளும்.

திருவோணம் நட்சத்திரம், மகர ராசி, கன்னி லக்னத்தில் இந்த
ஆண்டு பிறப்பதால் கேமரா, டிவி, மொபைல், லேப்டாப் போன்ற
எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களின் விலை குறையும்.

தனக்காரகன் குரு தனது பகைக்கிரகமான புதன் வீட்டில் ஆகஸ்ட்
மாதம் வரை தொடர்வதால் அதுவரை பணத்தட்டுப்பாடு இருக்கும்.
பதுக்கல் தங்கம் பிடிபடும். வங்கிகளில் கடன் பெற கடுமையான
விதிமுறைகள் பிறப்பிக்கப்படும்.

ஹவாலா மோசடிகள் தடுக்கப்படும். பாலியல் வல்லுறவுக்
குற்றத்திற்கான தண்டனைகள் கடுமையாக்கப்படும். 10-ம் மற்றும்
12-ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் முறை
கணினிமயமாக்கப்படும்.

28.1.2017 முதல் 5.6.2017 வரை சுக்ரன் மீன ராசியிலேயே அமர்வதால்
சினிமாத் தொழில் பாதிப்படையும். புகழ்பெற்ற படத்தயாரிப்பாளர்கள்
மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் நஷ்டமடைவர்.

பழைய முன்னணி இயக்குனர்கள், நடிகர், நடிகைகளை விட புது
முகங்கள் பிரபலமாவார்கள். கலைஞர்கள் பாதிப்படைவார்கள்.
அதிவேக அதிநவீன வாகனங்கள் மற்றும் சுற்றுச்சுழலை பாதிக்காத
மின்சாரம் மற்றும் சூரிய ஆற்றலில் இயங்கும் வாகனங்கள்
விற்பனைக்கு வரும்.

செவ்வாயின் போக்கையும், சனியின் சஞ்சாரத்தையும் அடிப்படையாகக்
கொண்டு பார்க்கும்போது பிப்ரவரி மாதம் முதல் உச்ச நீதிமன்றத்திற்கும்,
மத்திய அரசிற்கும் உள்ள பனிப்போர் நீங்கும். காலியாக உள்ள நீதிபதி
பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்படும்.

ராணுவம் மற்றும் நாட்டின் பாதுகாப்பிற்கு அதிக நிதி ஒதுக்கப்படும்.
ரியல் எஸ்டேட், பத்திரப்பதிவு மற்றும் கட்டுமானத்துறையில் ஊழல்களைத்
தடுக்க புதிய சட்டங்கள் அமலுக்கு வரும். புதிய மேம்பாலங்கள் மற்றும்
புதிய நகரங்கள் அமைக்கப்படும்.

அமெரிக்கா, ரஷ்யா, சிங்கப்பூர் ஆகிய நாடுகள் இந்தியாவிற்கு உதவும்.
பாகிஸ்தான், சீனாவின் அத்துமீறல்களுக்கு தகுந்த பதிலடி தரப்படும்.
கிரிக்கெட்டில் மேலும் இந்தியா சாதிக்கும்.

10.4.2017முதல் 16.4.2017 வரை, 28.5.2017முதல் 4.6.2017வரை,
25.6.2017முதல் 3.7.2017 வரை, 23.7.2017முதல் 29.7.2017வரை,
19.8.2017முதல் 25.8.2017வரை, 13.9.2017முதல் 19.9.2017வரை,
9.10.2017முதல் 14.10.2017வரை, 1.11.2017முதல் 6.11.2017வரை,
17.11.2017முதல் 30.11.2017வரை உள்ள காலகட்டத்தில் புயல் சின்னம்
உருவாகி மழை பொழியும் வாய்ப்புள்ளது.
-
------------------------------
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37078
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: 2017 ஆங்கில புத்தாண்டு, பொது மற்றும் ராசி பலன்கள் !

Post by ayyasamy ram on Thu Dec 29, 2016 8:23 pm

மேஷம்

எதிலும் முதலிடத்தைப் பிடிக்க வேண்டுமென்று நினைப்பவர்களே! உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் கடின உழைப்பால் சாதிப்பீர்கள். மனப்போராட்டங்கள் ஓயும். சமயோஜிதமான பேச்சால் தடைபட்ட வேலைகளை முடிப்பீர்கள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் காத்திருந்த பணம் கைக்கு வரும். பழைய கடன் பிரச்சினைகள் தீரும். 26.7.2017 வரை உங்கள் ராசிக்கு ராகு 5-ல் நிற்பதால் பிள்ளைகளின் பிடிவாதம் அதிகரிக்கும். மகளுக்கு வரன் தேடும் போது மணமகனின் பழக்கவழக்கங்களை விசாரித்து முடிவெடுப்பது நல்லது. பணம் கொடுக்கல், வாங்கல் விஷயத்தில் கவனமாக இருங்கள்.

பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் வழக்கறிஞரின் ஆலோசனையின்றி எந்த முடிவுகளும் எடுக்காதீர்கள். கேது 11-ம் வீட்டில் தொடர்வதால் பணவரவு அதிகரிக்கும். பழைய கடனை அடைக்க வழி பிறக்கும். அயல்நாட்டிலிருக்கும் உறவினர்கள், நண்பர்களால் உதவிகள் கிடைக்கும். வேற்றுமொழி, மதத்தவர் களால் ஆதாயமடைவீர்கள். வி.ஐ.பிகள், தொழிலதிபர்களின் நட்பைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்வீர்கள். வீட்டில் தடைபட்ட சுபகாரியங்கள் ஏற்பாடாகும். ஆனால் 27.7.2017 முதல் வருடம் முடியும் வரை உங்கள் ராசிக்கு ராகு 4-ம் வீட்டிலும், கேது 10-ம் இடத்திலும் அமர்வதால் ஓய்வெடுக்க முடியாதபடி அடுத்தடுத்த வேலைப்பளு இருந்துக் கொண்டேயிருக்கும்.

வீண்பழிகளும் வரக்கூடும். தாயாருடன் வீண் விவாதம், அவருக்கு கை, கால் வலி, இரத்த அழுத்தம் வந்து போகும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகளும் அதிகரிக்கும். உத்யோகத்தில் நெருக்கடிகள், இடமாற்றங்கள் வந்து செல்லும். மற்றவர்களுக்காக ஜாமீன், உத்தரவாதக் கையொப்பமிட வேண்டாம். உடல் எடை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். சின்ன சின்ன உடற்பயிற்சி, நடைப்பயிற்சி மேற்கொள்வது நல்லது.

புத்தாண்டின் தொடக்கம் முதல் 01.09.2017 வரை உங்களின் குரு உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் குடும்பத்தில் வீண் சச்சரவுகள் வரக்கூடும். முக்கியக் கோப்புகளைக் கையாளும் போது அலட்சியம் வேண்டாம். வங்கிக் காசோலையில் முன்னரே கையொப்பமிட்டு வைக்காதீர்கள். வீண் சந்தேகத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க நேரிடும். ஆனால் 02.9.2017 முதல் குருபகவான் 7-ம் வீட்டில் அமர்ந்து உங்களைப் பார்க்கவிருப்பதால் உங்களிடம் மறைந்துக் கிடந்த திறமைகளை வெளிப்படுத்த நல்ல சந்தர்ப்பம் கிடைக்கும்.

தள்ளிப் போன திருமணம் கூடி வரும். அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். குடும்பத்தில், பிரிந்திருந்தவர்கள் ஒன்று சேருவீர்கள். இந்த வருடத்தில் வாரிசு உருவாகும். ஆரோக்கியம் சீராகும். அடகிலிருந்த நகை, சொத்தையெல்லாம் மீட்க வழி, வகை பிறக்கும். வங்கிக் கடன் உதவி கிடைக்கும். எதிர்த்தவர்கள் நண்பர்களாவார்கள்.

சொந்தபந்தங்களின் சுயரூபத்தை தெரிந்துக் கொண்டு அதற்கேற்ப இனி செயல்படுவீர்கள். 14.12.2017 வரை சனி 8-ல் நின்று அஷ்டமத்துச் சனியாக வருவதால் அவ்வப்போது கோபப்படுவீர்கள். ஏமாந்து போன தொகையை நினைத்து வருத்தப்படுவீர்கள். மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். தாழ்வுமனப்பான்மை தலைத்தூக்கும். பெரிய நோய்கான அறிகுறிகளெல்லாம் இருப்பதைப் போல் தோன்றும். ஆனால் மருத்துவப் பரிசோதனை செய்யும் போது பெரிய பாதிப்புகள் இருக்காது. கொழுப்புச் சத்துள்ள உணவுகளை தவிர்ப்பது நல்லது. 15.12.2017 முதல் சனி 9-ம் வீட்டில் அமர்வதால் எதிலும் ஒரு தெளிவு பிறக்கும்.

மற்றவர்களின் மனநிலையைப் புரிந்துப் பேசும் பக்குவம் உண்டாகும். நெருடலான, தர்ம சங்கடமான சூழ்நிலைகளெல்லாம் நீங்கும். வியாபாரத்தில் அதிக முதலீடு செய்து சிக்கிக் கொள்ளாதீர்கள். செப்டம்பர் மாதம் முதல் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் அலுவலகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். மற்றவர்கள் செய்யும் தவறுகளை தட்டிக் கேட்கப்போய் சக ஊழியர்களுடன் மனத்தாங்கல் வரும்.
-
குடும்பத்தினருக்கு

ஆகஸ்ட் மாதம் வரை குரு சரியில்லாததால் பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பாங்க. கல்யாணம், உத்யோகம் கொஞ்சம் தள்ளிப்போகும் அதற்குப் பரிகாரமாக பக்கத்தில் இருக்கும் பழமையான சிவாலயத்தில் நவகிரகத்தில் இருக்கும் குருபகவானுக்கு வியாழக்கிழமைகளில் நெய் விளக்கேற்றுங்கள். ஆகஸ்ட் மாதத்திலிருந்து ராகு சரியில்லாததால் தாயாருடன் சின்னச் சின்ன மோதல் வரும். வண்டியை கவனமாக ஓட்டுங்கள் முடிந்தால் ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு விளக்கேற்றுங்கள். வருடம் முழுக்க அஷ்டமத்துச் சனி இருப்பதால் நரசிம்மரை சனிக்கிழமைகளில் வணங்குங்கள்.

உங்கள் குடும்பத்தில் விருச்சிகம், தனுசு, கும்ப ராசியில் கணவரோ, பிள்ளைகளோ இருந்தால் பாதிப்புகள் அதிகமாகும். ஆனால் கடகம், சிம்மம், மகரம், மீன ராசியில் இருந்தால் யோகப் பலன் அதிகரிக்கும். மேலும் குடும்பத்தில் அனைவருக்கும் சுபிட்சம் உண்டாக கீழ்கண்ட சூரியகிரகத்தின் சூட்சமமந்திர வடிவத்தை பூஜையறையில் மாகோலமிட்டு ஞாயிற்றுக்கிழமைகளில் வணங்கி வாருங்கள்.
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37078
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: 2017 ஆங்கில புத்தாண்டு, பொது மற்றும் ராசி பலன்கள் !

Post by ayyasamy ram on Thu Dec 29, 2016 8:24 pm


ரிஷபம்

கடந்து வந்த பாதையை மறக்காதவர்களே! உங்களுடைய 9-வது ராசியில்
இந்தாண்டு பிறப்பதால் பணவரவு உயரும். எதிர்ப்புகள் அகலும். கடன்
பிரச்சினையிலிருந்து விடுபடுவதற்காக ஓயாமல் உழைப்பீர்கள்.

முகப்பொலிவு, ஆரோக்யம் கூடும். வீட்டில் சுபகாரியங்கள் நடக்கும்.
வாகனத்தை மாற்றுவீர்கள். பூர்வீகச் சொத்தை சீர் செய்வீர்கள்.
உங்கள் ரசனைக்கேற்ப வீடு அமையும். உறவினர் வீட்டு விசேஷங்களை
முன்னின்று நடத்துவீர்கள். எதிர்பார்த்த பணம் வரும். 14.12.2017 வரை
ராசிக்கு 7-ம் வீட்டில் சனி நிற்பதால் எதையும் திட்டமிட்டு செய்யப்பாருங்கள்.
குடும்ப அந்தரங்க விஷயங்களில் மற்றவர்கள் தலையிட அனுமதிக்காதீர்கள்.

புதிய நண்பர்களை வீட்டிற்கு அழைத்து வர வேண்டாம். யாருக்கும் ஜாமீன்,
உத்தரவாதக் கையெழுத்திட வேண்டாம். நம்பிக்கைக்குரியவராக இருந்தாலும்
ரகசியங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டாம். வருங்காலத்தை மனதில்
கொண்டு சேமித்து வைத்துக் கொள்ளுங்கள். பூர்வீகச் சொத்துப் பிரச்சனைகள்
தலை தூக்கும். கணவன், மனைவிக்குள் விட்டுக்கொடுத்து போவது நல்லது.
மனைவி வழி உறவினர்களுடன் கருத்து மோதல்கள் வரக்கூடும்.

மகனுக்கோ, மகளுக்கோ வாழ்க்கைத்துணை தேடுபவர்கள் நிச்சயதார்த்தத்திற்கும்,
திருமணத்திற்கும் அதிகம் இடைவெளி தராமல் உடனே முடிப்பது நல்லது. யாருக்கும்
ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். 26.7.2017 வரை உங்கள் ராசிக்கு 10-ல் கேதுவும்,
4-ம் வீட்டில் ராகுவும் நீடிப்பதால் அடுக்கடுக்கான வேலைகளால் அவதிக்குள்ளாவீர்கள்.

தாயாருக்கு முதுகு தண்டு வடத்தில் வலி, தலைச்சுற்றல் வந்து செல்லும்.
அலைபேசியில் பேசிக்கொண்டே வாகனத்தை இயக்க வேண்டாம். சிலர் வீடு
மாற வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாவீர்கள். ஜுலை 27-ம் தேதி முதல் ராசிக்கு
9-ம் வீட்டில் கேது தொடர்வதால் பிதுர்வழிச் சொத்துப் பிரச்சினை தலைதூக்கும்.

தந்தையாருடன் மனஸ்தாபங்கள் வரக்கூடும். அவருக்கு சிறுசிறு அறுவை
சிகிச்சைகள் வந்து செல்லும். செலவுகள் அதிகமாகிக்கொண்டே போகும்.
ஆனால் ராகு 3-ம் வீட்டில் அமர்வதால் பயம், படபடப்பு நீங்கும். தைரியம் கூடும்.
ஷேர் மூலம் பணம் வரும். வீட்டு மனை வாங்கும் யோகம் உண்டாகும்.
வெளிவட்டாரத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். வீட்டில்
தடைப்பட்டு வந்த சுப நிகழ்ச்சிகளெல்லாம் அடுத்தடுத்து நடந்தேறும். தைரியமாக
சில முக்கிய முடிவுகளெல்லாம் எடுப்பீர்கள். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும்.
சிலர் அயல்நாடு சென்று வருவீர்கள்.

01.09.2017 வரை குரு உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டில் நிற்பதால் கல்வியாளர்கள்,
அறிஞர்களின் நட்பால் தெளிவடைவீர்கள். குடும்பத்தில் நல்லது நடக்கும்.
குழந்தை பாக்யம் கிடைக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனின் உயர்
கல்வி, உத்யோகம், திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் பலிதமாகும்.

குடும்பத்தினருடன் குலதெய்வக் கோவிலுக்குச் சென்று நேர்த்திக் கடனை
செலுத்துவீர்கள். பூர்வீக சொத்துப் பங்கை கேட்டு வாங்குவீர்கள். பிள்ளைகள்
உங்கள் அருமையைப் புரிந்துக் கொள்வார்கள்.

உறவினர்கள் தேடி வருவார்கள். நட்பு வட்டம் விரிவடையும். ஆனால் 02.9.2017
முதல் குரு 6-ம் வீட்டில் அமர்வதால் சின்னச் சின்ன காரியங்களைக் கூட இரண்டு,
மூன்று முறை முயன்று முடிக்க வேண்டி வரும்.

எதிர்காலம் பற்றிய கவலைகள் வந்து விலகும். வி.ஐ.பிகளைப் பகைத்துக்
கொள்ளாதீர்கள். சின்னச் சின்ன அவமானங்கள் ஏற்படக்கூடும். பழைய கடனை
நினைத்து அவ்வப்போது கலங்குவீர்கள். குடும்பத்தில், கணவன்,மனைவிக்குள்
ஈகோவால் பிரிவுகள் வரக்கூடும். எனவே அனுசரித்து போகப் பாருங்கள். உடல்
ஆரோக்கியத்திலும் கூடுதல் கவனம் செலுத்தப்பாருங்கள்.

நோய்த் தொற்று வர வாய்ப்பிருக்கிறது. வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி
லாபம் சம்பாதிப்பீர்கள். சின்னச் சின்ன நட்டங்கள் இருக்கும். உத்யோகத்தில்
தலைமைக்கு நெருக்கமாவீர்கள். என்றாலும் கொஞ்சம் வேலைச்சுமை, டென்ஷன்
இருக்கத்தான் செய்யும்.
-
குடும்பத்தினருக்கு
-
சனியின் போக்கு இந்த வருடம் முழுக்க சரியில்லாமல் இருப்பதால் சனிக்கிழமை
தோறும் ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று வாருங்கள். முடிந்தால் வெற்றிலை
மாலை சாற்றுங்கள். அதனால் கணவர், பிள்ளைகளுடன் இருக்கும் கருத்து மோதல்கள்
விலகி நிம்மதி உண்டாகும். செப்டம்பர் மாதம் முதல் குரு மறைவதால் பிள்ளைகளுக்கு
வாழ்க்கைத்துணையை தேர்ந்தெடுக்கும் விஷயத்தில் அவசரம் வேண்டாம்.
பிள்ளைகளுக்கு எல்லாம் கிடைக்க ஸ்ரீரங்கநாதரை தாமரை மலர் தந்து வணங்குவது
நல்லது.

உங்கள் குடும்பத்தில் மேஷம், துலாம், விருச்சிகம், தனுசு ராசியில் கணவரோ,
பிள்ளைகளோ இருந்தால் பாதிப்புகள் அதிகமாகும். ஆனால் கடகம், கன்னி,
மகரம், மீன ராசியில் இருந்தால் யோகப் பலன் கிடைக்கும். மேலும் குடும்பத்தில்
அனைவருக்கும் நல்லது நடக்க கீழ்கண்ட சந்திர கிரகத்தின் சூட்சமமந்திர வடிவத்தை
பூஜையறையில் மாகோலமிட்டு திங்கட்கிழமைகளில் வணங்கி வாருங்கள்.
-
-------------------------------------------------

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37078
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: 2017 ஆங்கில புத்தாண்டு, பொது மற்றும் ராசி பலன்கள் !

Post by ayyasamy ram on Thu Dec 29, 2016 8:25 pm

மிதுனம்

தீவிர யோசனைக்குப் பின் முடிவெடுப்பவர்களே! 14.12.2017 வரை சனிபகவான் உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டிலேயே பலம் பெற்று நீடிப்பதால் பிரச்சனைகள் எதுவானாலும் அவற்றையெல்லாம் சமாளிக்கக் கூடிய மனோபலம் உங்களுக்கு கிடைக்கும். முன்னேற்றப்பாதையை நோக்கி பயணிப்பீர்கள். கணவன், மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவீர்கள். வீண் சந்தேகம் விலகும். குடும்ப வருமானம் உயரும். வங்கிக் கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். விலை உயர்ந்த ஆபரணங்கள் வீடு வந்து சேரும். நாடாளுபவர்கள், வேற்று மொழிக்காரர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். உங்களுக்கு 8-வது ராசியில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். திடீர் பயணங்கள் அதிகரிக்கும்.
-
அவ்வப்போது பணப்பற்றாக்குறையும் வரும். என்றாலும் சமாளித்து விடுவீர்கள். குடும்ப அந்தரங்க விஷயங்களையெல்லாம் வெளியில் சொல்லி ஆறுதல் தேட வேண்டாம். 26.7.2017 வரை உங்கள் ராசிக்கு 9-ல் கேது நிற்பதால் தந்தைக்கு நெஞ்சு வலி வந்து போகும். அ- செலவுகளை கட்டுப்படுத்தப் பாருங்கள். ஆனால் மூன்றாம் இடத்தில் ராகு இருப்பதால் புது முயற்சிகள் பலிதமாகும். இளைய சகோதர வகையில் ஆதரவு பெருகும். வேற்றுமதம், மாற்றுமொழி பேசுபவர்களால் உங்களது வாழ்க்கைத் தரம் ஒரு படி உயரும். புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். அரசால் அனுகூலம் உண்டாகும்.
-
ஜுலை 27-ம் தேதி முதல் ராசிக்கு 2-ல் ராகுவும், 8-ம் வீட்டில் கேதுவும் தொடர்வதால் வீண் விரயம், அலைச்சல், பொருள் இழப்புகள் வந்து போகும். சாதாரணமாகப் பேசப் போய் சண்டையில் முடிய வாய்ப்பிருக்கிறது. வாகனத்தை இயக்கும் முன் எரிபொருள் இருக்கிறதா, ப்ரேக் இருக்கிறதா எனப் பார்த்துக் கொள்ளுங்கள். அநாவசியமாக மற்றவர்கள் விவகாரத்தில் தலையிட வேண்டாம். வீண் பழிக்கு ஆளாவீர்கள். கண் பார்வையை பரிசோதித்துக் கொள்ளுங்கள். புத்தாண்டின் தொடக்கம் முதல் 01.09.2017 வரை குரு உங்கள் ராசிக்கு 4-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் எதிர்ப்புகள் அதிகமாகும். இனம்புரியாத கவலைகள் வந்துபோகும். தாயாருடன் மனஸ்தாபங்கள் வெடிக்கும். வர வேண்டிய பணத்தைப் போராடி வசூலிப்பீர்கள். உறவினர்கள், நண்பர்களுடன் விரிசல்கள் வரக்கூடும். அரசுக்குச் செலுத்த வேண்டிய வரிகளைத் தாமதிக்காதீர்கள்.
-
வாகனத்தை கொஞ்சம் கவனமாக இயக்குங்கள். விபத்துகள் நிகழக்கூடும். ஆனால் 02.09.2017 முதல் குருபகவான் உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டில் நுழைவதால் பிரிந்திருந்த கணவன், மனைவி ஒன்று சேர்வீர்கள். குழந்தை பாக்யம் உண்டு. பிள்ளைகளால் மதிப்பு, மரியாதை கூடும். மகன் குடும்ப சூழ்நிலையறிந்து பொறுப்பாக நடந்து கொள்வார். வாடகை வீட்டிலிருந்த சிலர் சொந்த வீட்டிற்கு குடி புகுவீர்கள். பூர்வீகச் சொத்துப் பிரச்சினை முடிவுக்கு வரும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். தங்க ஆபரணங்கள், இரத்தினங்கள் வாங்குவீர்கள். சொந்தபந்தங்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். சொந்த ஊர் பொது நிகழ்ச்சிகளையெல்லாம் முன்னின்று நடத்துவீர்கள்.
-
திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். திடீர் லாபம், பெரிய நிறுவனங்களுடன் புது ஒப்பந்தங்கள் கூடி வரும். உத்யோகத்தில் செப்டம்பர் மாதம் முதல் தேக்க நிலை மாறும். வேலைச்சுமை குறையும்.
-
குடும்பத்தினருக்கு
-
ஜூலை மாதம் வரை ராகு உங்களுக்கு சாதகமாக இருப்பதால் கணவர் மற்றும் பிள்ளைளை நன்றாக வழி நடத்துவீர்கள். உங்கள் ஆலோசனைகளையும் ஏற்றுக் கொள்வார்கள். ஆனால் ஆகஸ்ட் வரை குரு சரியில்லாததால் பணத்தட்டுப்பாட்டையும், உறவினர் பகைகளையும் சந்தித்துக் கொண்டிருக்கிறீர்கள் அந்த பாதிப்பு விலக வியாழக்கிழமைகளில் பசுவிற்கு அகத்திக்கீரை அல்லது கேரட் கொடுங்கள்.
-
உங்கள் குடும்பத்தில் மேஷம், விருச்சிகம், தனுசு ராசியில் கணவரோ, பிள்ளைகளோ இருந்தால் பாதிப்புகள் அதிகமாகும். ஆனால் சிம்மம், கன்னி, மீன ராசியில் இருந்தால் யோகப் பலன் கிடைக்கும். மேலும் குடும்பத்தில் அனைவருக்கும் லட்சுமி கடாட்சம் கிடைக்க கீழ்கண்ட சுக்கிர கிரகத்தின் சூட்சமமந்திர வடிவத்தை பூஜையறையில் மாகோலமிட்டு வெள்ளிக்கிழமைகளில் வணங்கி வாருங்கள்.
-
-----------------------------------------------
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37078
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: 2017 ஆங்கில புத்தாண்டு, பொது மற்றும் ராசி பலன்கள் !

Post by ayyasamy ram on Thu Dec 29, 2016 8:26 pm

கடகம்

கள்ளம் கபடமற்ற பேச்சால் கவர்பவர்களே! உங்கள் ராசியை சந்திரன் பார்த்துக் கொண்டிருக்கும் போது இந்தாண்டு பிறப்பதால் மனஇறுக்கம் குறையும். திட்டமிட்டு செயல்படுவீர்கள். வேலையில்லாதவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். பழைய சிக்கல்களுக்கு தீர்வு கிடைக்கும். கணவன் மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். பொது விழாக்கள், கல்யாணம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். 26.7.2017 வரை உங்கள் ராசிக்கு 2ல் ராகுவும், 8ம் வீட்டில் கேதுவும் நிற்பதால் படபடப்பு, எதிலும் பிடிப்பற்றப் போக்கு, பிறர்மீது நம்பிக்கையின்மை, வீண் விரயம் வந்து செல்லும்.

வழக்கில் தீர்ப்பு தள்ளிப் போகும். மற்றவர்களை தாக்கிப் பேச வேண்டாம். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார், கெட்டவர்கள் யார் என்பதைப் புரிந்துக் கொள்வதில் தடுமாற்றம் வரும். 27.7.2017 முதல் வருடம் முடியும் வரை உங்கள் ராசிக்குள் ராகுவும், 7ல் கேதுவும் தொடர்வதால் எதிலும் ஒருவித பயம், ஒற்றைத் தலை வலி, செரிமானக் கோளாறு, வலிப்பு வந்து செல்லும். முன்கோபத்தை தவிர்க்கப்பாருங்கள். வாயுத் தொந்தரவால் நெஞ்சு வலிக்கும். புதிது புதிதாக வரும் விளம்பரங்களை பார்த்து சோப்பு, பற்பசை, ஷாம்பு, வாசனை திரவியங்களையெல்லாம் மாற்றிக் கொண்டிருக்காதீர்கள். அலர்ஜி வரக்கூடும். விஷப் பூச்சிகளான பூரான், பாம்பு, தேள் கடிக்க வாய்ப்பிருக்கிறது. எனவே கவனம் தேவை.

கணவன் மனைவிக்குள் விட்டு கொடுத்து போவது நல்லது. எந்த வேலையாக இருந்தாலும் நீங்களே நேரடியாகச் சென்று முடிப்பது நல்லது. இடைத்தரகர்களை நம்பி பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். புத்தாண்டின் தொடக்கம் முதல் 01.09.2017 வரை குரு உங்கள் ராசிக்கு 3ம் வீட்டில் நிற்பதால் புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று வேலைகளைப் பார்க்க வேண்டிய சூழ்நிலையும் உருவாகும். அவ்வப்போது பலவீனமாக உணருவீர்கள். தாழ்வுமனப்பான்மை தலைத்தூக்கும். கூடாப்பழக்க வழக்க முள்ளவர்களின் நட்பை தவிர்ப்பது நல்லது. இளைய சகோதர வகையில் பிணக்குகள் வரும்.

விமர்சனங்கள் கண்டு அஞ்ச வேண்டாம். ஆனால் 02.9.2017 முதல் வருடம் முடியும் வரை குரு உங்கள் ராசிக்கு 4ம் வீட்டிலேயே அமர்வதால் இழுபறியாக இருந்த காரியங்களெல்லாம் முடிவடையும். அவருக்கு பார்வைக் கோளாறு, முதுகு, மூட்டு வலி, சிறுசிறு அறுவை சிகிச்சைகள் வந்து செல்லும். தாயார், அம்மான், அத்தைவழியில் மனஸ்தாபம் வந்து நீங்கும். வாகனத்தில் செல்லும் போது தலைக்கவசம் அணிந்துச் செல்லுங்கள். சிறுசிறு விபத்துகள் நிகழக்கூடும். தந்தையாரின் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. சொத்து வாங்கும் போதும் சட்ட நிபுணர்களை கலந்தாலோசித்து தாய்ப் பத்திரம், பட்டா, வில்லங்க சான்றிதழ்களையெல்லாம் சரி பார்த்து வாங்குங்கள். செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். அவ்வப்போது கனவு தொல்லையால் தூக்கம் குறையும்.

14.12.2017 வரை சனி 5ல் நிற்பதால் தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் குழம்புவீர்கள். மகளின் திருமண விஷயத்தில் அவசரம் வேண்டாம். வரன் வீட்டாரைப் பற்றி நன்கு விசாரித்து முடிக்கப்பாருங்கள். மகன் காரண காரியமேயின்றி கோபப்படுவார். பிள்ளைகள் இன்னும் கொஞ்சம் பொறுப்பாக நடந்துக் கொண்டால் நலமாக இருக்குமே என்று ஆதங்கப்படுவீர்கள். கர்ப்பிணிப் பெண்கள் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. 15.12.2017 முதல் 6ம் வீட்டில் சனிபகவான் அமர்வதால் எதிர்ப்புகள் அடங்கும். பிள்ளைகளின் பொறுப்பற்ற போக்கு மாறும். வியாபாரத்தில் ஆழம் தெரியாமல் காலை விடாதீர்கள். பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். வேலையாட்களை அவர்கள் போக்கிலேயே விட்டுப்பிடிப்பது நல்லது. உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும்.
--
குடும்பத்தினருக்கு
---
இந்த வருடம் முழுக்க ராகுவும், கேதுவும் உங்களுக்கு சரியில்லாததால் நீங்கள் சாதாரணமாகப் பேசுவது கூட குடும்பத்தில் உள்ள மாமியார், நாத்தனார் தவறாக புரிந்துக்கொள்வார்கள் இதுபோன்ற சங்கடங்கள் விலக அருகிலுள்ள புற்றுக்கோயிலுக்கு மாதம் ஒரு வெள்ளிக்கிழமை ராகுகாலத்தில் சென்று விளக்கேற்றுங்கள். உங்கள் குடும்பத்தில் விருச்சிகம், தனுசு, கும்ப ராசியில் கணவரோ, பிள்ளைகளோ இருந்தால் பாதிப்புகள் அதிகமாகும். ஆனால் ரிஷபம், கன்னி, மீன ராசியில் இருந்தால் யோகப் பலன் கிடைக்கும். மேலும் நல்வாழ்வு அமைய கீழ்கண்ட குருபகவான் கிரகத்தின் சூட்சமமந்திர வடிவத்தை பூஜையறையில் மாகோலமிட்டு வியாழக்கிழமைகளில் வணங்கி வாருங்கள்.
--
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37078
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: 2017 ஆங்கில புத்தாண்டு, பொது மற்றும் ராசி பலன்கள் !

Post by ayyasamy ram on Thu Dec 29, 2016 8:26 pm

சிம்மம்

எதிலும் உடனடித் தீர்வை விரும்புபவர்களே! உங்கள் ராசிக்கு 6வது வீட்டில் 2017-ம் ஆண்டு பிறப்பதால் எதிரிகளை வீழ்த்தும் வல்லமை உண்டாகும். கறாராகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். ஆடம்பரச் செலவுகளை குறைப்பீர்கள். சேமிக்கும் அளவிற்கு வருவாய் அதிகரிக்கும். பழுதான சாதனங்களை மாற்றுவீர்கள். அடிப்படை வசதிகள் பெருகும். கணவன் மனைவிக்குள் பாசம் அதிகரிக்கும்.

மனைவிவழி உறவினர்களால் ஆதாயமுண்டு. பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். என்றாலும் திடீர் பயணங்களும், செலவுகளும் அதிகரிக்கும். கல்யாணம், கிரகப்பிரவேசம், சீமந்தம் என வீடு களைகட்டும். விலகிச் சென்ற பழைய சொந்த பந்தங்கள் இனி தேடி வருவார்கள். 14.12.2017 வரை ராசிக்கு 4-ம் வீட்டில் சனி அமர்ந்திருப்பதால் தாயாருக்கு நரம்புக் கோளாறு, ரத்த அழுத்தம் வரும்.

தாய்வழி உறவினர்களால் அலைச்சலும், மனக்கசப்பும் வந்து நீங்கும். தாய்வழி சொத்தை விற்று புது சொத்து வாங்குவீர்கள். நெடுந்தூர, இரவு நேரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது. கெட்ட பழக்க வழக்கங்களுக்கு அடிமையாகி விடாதீர்கள். ஜுலை 26-ம் தேதி வரை ராசிக்கு 7-ல் கேதுவும், உங்கள் ராசிக்குள்ளேயே ராகுவும் நிற்பதால் மூச்சுத் திணறல், ஹார்மோன் பிரச்சினை, அல்சர், இரத்த சோகை வந்து செல்லும். கணவன், மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து விலகும். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போங்கள்.

முன்கோபத்தைக் குறையுங்கள். மனைவிக்கு மாதவிடாய்க் கோளாறு, கர்ப்பப்பையில் நீர்க் கட்டி, நரம்புச் சுளுக்கு வந்து நீங்கும். பழைய இழப்புகள், ஏமாற்றங்களை நினைத்து வருத்தப்படுவீர்கள். 27.7.2017 முதல் ராகு 12-ம் வீட்டிலும், கேது 6-ம் வீட்டிலும் தொடர்வதால் மனப்போராட்டங்கள் ஓயும். பிரிந்திருந்த கணவன், மனைவி ஒன்று சேருவீர்கள். நோய்களெல்லாம் விலகும். தோற்றப் பொலிவு கூடும். சோர்ந்துப் போய் கலையிழந்திருந்த உங்கள் முகத்தில் இனி புன்னகை மலரும். கோவில் கும்பாபிஷேகத்தை எடுத்து நடத்துவீர்கள். தள்ளிப் போன வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். பழைய கடன் பிரச்சினை கட்டுப்பாட்டிற்குள் வரும்.

ஷேர் மூலம் பணம் வரும். பதவிகள் தேடி வரும். வெளிவட்டாரத்தில் உங்களை எதிர்த்தவர்களெல்லாம் அடங்குவார்கள். வேற்றுமதத்தவர், வெளிநாட்டிலிருப்பவர்களால் ஆதாயமடைவீர்கள். சொந்த ஊர் திருவிழாக்களை முன்னின்று நடத்துவீர்கள். புது வேலையும் அமையும். புத்தாண்டின் தொடக்கம் முதல் 01.09.2017 வரை குரு உங்கள் ராசிக்கு தனஸ்தானத்தில் அமர்ந்திருப்பதால் எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். குடும்பத்தாரின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு, அதற்கேற்ப வளைந்து கொடுப்பீர்கள்.

ஆடை, ஆபரணம் சேரும். வழக்குகள் சாதகமாக முடியும். நீண்ட நாளாக செல்ல வேண்டுமென்று நினைத்திருந்த அண்டை மாநிலப் புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். ஆனால் 02.09.2017 முதல் குரு 3-ம் வீட்டிலேயே அமர்வதால் எந்த ஒரு காரியத்தையும் முதல் கட்டத்திலேயே முடிக்க முடியாமல் மூன்றாவது முயற்சியில் போராடி முடிக்க வேண்டி வரும். இளைய சகோதர வகையில் மனத்தாங்கல் வரும். முன்பின் தெரியாதவர்களிடம் உங்களுடைய குடும்ப விஷயங்களைப் பகிர்ந்துக் கொள்ள வேண்டாம்.

பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம், திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் சற்று தாமதமாகி முடியும். கர்ப்பிணிப் பெண்கள் எடைமிகுந்த பொருட்களை சுமக்க வேண்டாம். வங்கிக் காசோலையில் முன்னரே கையொப்பமிட்டு வைக்க வேண்டாம். வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். வியாபாரத்தில் புதிய திட்டங்களை நடைமுறைப்படுத்துவீர்கள். சந்தை நிலவரத்தை அறிந்து அதற்கேற்ப முதலீடு செய்து வாடிக்கையாளர்களை கவர்வீர்கள். உத்யோகத்தில் வேலையில் ஆர்வம் அதிகரிக்கும்.
--
குடும்பத்தினருக்கு
---
இந்த வருடம் முழுக்க சனியின் வீீச்சு சரியில்லாததால் தான் அடிக்கடி குடும்பத்தில் சண்டை, சச்சரவு மருத்துவ செலவுகள் அதிகரித்துக் கொண்டேயிருக்கிறது. அதிலிருந்து விடுபட அருகிலிருக்கும் சிவாலயத்திலுள்ள பைரவரை அஷ்டமி திதியில் சின்ன பூசணிக்காயில் நல்லெண்ணெய் விட்டு தீபம் ஏற்றுங்கள். உங்கள் குடும்பத்தில் மேஷம், துலாம் விருச்சிகம், தனுசு ராசியில் கணவரோ, பிள்ளைகளோ இருந்தால் பாதிப்புகள் அதிகமாகும். ஆனால் ரிஷபம், மிதுனம், கன்னி ராசியில் இருந்தால் யோகப் பலன் கிடைக்கும். மேலும் குடும்பத்தில் செல்வம் செழிக்க கிடைக்க கீழ்கண்ட கேது கிரகத்தின் சூட்சமமந்திர வடிவத்தை பூஜையறையில் மாகோலமிட்டு வியாழக்கிழமைகளில் வணங்கி வாருங்கள்.
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37078
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: 2017 ஆங்கில புத்தாண்டு, பொது மற்றும் ராசி பலன்கள் !

Post by ayyasamy ram on Thu Dec 29, 2016 8:27 pm

கன்னி

நுணுக்கமாகவும், துல்லியமாகவும் யோசிப்பவர்களே! தைரியஸ்தானமான 3-ம் வீட்டில் சனிபகவான் வலுவாக அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்த புத்தாண்டு பிறப்பதால் திடீர் யோகங்களை அனுபவிப்பீர்கள். சவாலான காரியங்களையும் சாதாரணமாக முடித்துக் காட்டுவீர்கள். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். எதிர்பார்த்த விலைக்கே பழைய சொத்தை விற்பீர்கள். பெரிய மனிதர்கள், வெற்றி பெற்றவர்களின் நட்பு கிடைக்கும். இந்தாண்டு பிறக்கும் போது செவ்வாய் 6-ல் இடத்திலும், சூரியன் 4-லும் வலுவாக அமர்ந்திருப்பதால் எதிலும் வெற்றி பெறுவீர்கள். அரசால் அனுகூலம் உண்டாகும். புதிதாக சொத்து வாங்குவீர்கள். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். திடீர் பயணங்கள் உண்டு.

26.7.2017 வரை உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டில் கேது பகவான் நிற்பதால் எதிர்ப்புகள் அடங்கும். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். உங்களிடம் பழகும் நண்பர்கள், உறவினர்களின் பலம், பலவீனத்தை உணர்வீர்கள். மகான்கள், ஆன்மிகவாதிகளைச் சந்தித்து ஆசி பெறுவீர்கள். வெளிவட்டாரத்தில் பெருமையாகப் பேசப்படுவீர்கள். ஆனால் ராசிக்கு 12-ம் வீட்டில் ராகு நிற்பதால் மற்றவர்களுக்காக ஜாமீன் கையெழுத்திடாதீர்கள். பழைய கடனை நினைத்து அவ்வப்போது அச்சம் வரும். சுபச் செலவுகள் அதிகமாகும். கட்டிட வேலைகளைத் தொடங்குவீர்கள். வங்கி லோன் கிடைக்கும். 27.7.2017 முதல் கேது 5-ம் வீட்டில் அமர்வதால் முடிவுகள் எடுப்பதில் தயக்கம், தடுமாற்றம் வந்து போகும். பிள்ளைகளுக்கு அதிக அறிவுரைச் சொல்லி நெருக்கடிக்குள்ளாக்காதீர்கள்.

கர்ப்பிணிப் பெண்கள் தூரத்துப் பயணங்களை தவிர்ப்பது நல்லது. பூர்வீக சொத்துப் பிரச்னை வெடிக்கும். ஆனால் ராகு 11-ம் வீட்டில் நீடிப்பதால் பெரிய திட்டங்கள் நிறைவேறும். வெற்றி பெற்ற மனிதர்களின் நட்பு கிடைக்கும். திடீர் பணவரவு உண்டு. உங்களுடைய உழைப்பிற்கு ஏற்ற பலன் கிட்டும். அயல் நாடு செல்லும் வாய்ப்பு வரும். குடும்பத்தினருடன் சுற்றுலாப் பயணம் சென்று வருவீர்கள். உறவினர்கள், விருந்தினர்களின் வருகையால் வீடு களைகட்டும். திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு கூடி வரும். புத்தாண்டின் தொடக்கம் முதல் 01.09.2017 வரை உங்கள் ராசியிலேயே குரு அமர்ந்து ஜென்ம குருவாக தொடர்வதால் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.

கணவன், மனைவிக்குள் வீண் சந்தேகம், ஈகோ பிரச்னையை தவிர்க்கப் பாருங்கள். பிரிவுகள் வரக்கூடும். தண்ணீரை காய்ச்சி அருந்துங்கள். உங்களைப் பற்றிய வதந்திகளை சிலர் பரப்புவார்கள். கொழுப்புச் சத்து அதிகமுள்ள உணவுகள், கார உணவுகள் மற்றும் லாகிரி வஸ்துக்களை தவிர்ப்பது நல்லது. 02.09.2017 முதல் குரு 2-ம் வீட்டில் சென்று அமர்வதால் எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளெல்லாம் அடுத்தடுத்து நடந்தேறும். சிலர் புது வீடு கட்டி குடிப்புகுவீர்கள். குடும்பத்தில் நிலவி வந்த கூச்சல், குழப்பம் விலகும். பிரிந்திருந்தவர்கள் ஒன்று சேருவீர்கள். அழகு, அறிவுள்ள குழந்தை பிறக்கும். மனைவிக்கு இருந்து வந்த ஆரோக்கிய குறைவு சீராகும்.

வழக்கால் இருந்த நெருக்கடிகள் நீங்கும். சொத்துச் சேர்க்கை உண்டு. சொந்த ஊர் பொதுக் காரியங்களையெல்லாம் முன்னின்று நடத்தி வைப்பீர்கள். விலை உயர்ந்த ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள். எப்படியாவது ஒரு சொத்து வாங்கிவிட வேண்டுமென்று முயற்சி செய்வீர்கள், அந்த முயற்சியும் நல்ல விதத்தில் முடியும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். மக்களின் ரசனையைப் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப புதிய சரக்குகள் கொள்முதல் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் ஓரங்கட்டி ஒதுக்கப்பட்டிருந்த உங்களுக்கு செப்டம்பர் மாதம் முதல் முக்கியத்துவம் கிடைக்கும். அதிகாரிகளுடன் அரவணைத்துப் போகும் இயல்பு உண்டாகும்.

--

குடும்பத்தினருக்கு
--
ஆகஸ்ட் வரை ஜென்ம குருயிருப்பதால் கணவருடன் ஈகோ பிரச்சினை, மாமியார், மாமனாருடன் பனிப்போர் இவைகளையெல்லாம் சந்தித்துக் கொண்டிருக்கிறீர்கள். அந்த பிரச்சினையிலிருந்து விடுபட சதுர்த்தி திதியில் அருகம்புல் வைத்து விநாயகர வழிபடுங்கள். உங்கள் குடும்பத்தில் மேஷம், சிம்மம், தனுசு, கும்ப ராசியில் கணவரோ, பிள்ளைகளோ இருந்தால் பாதிப்புகள் அதிகமாகும்.

ஆனால் ரிஷபம், கடகம், மகரம், மீன ராசியில் இருந்தால் யோகப் பலன் கிடைக்கும். மேலும் குடும்பத்தில் உள்ளவர்கள் நல்ல நிலைமைக்கு வர கீழ்கண்ட சனி கிரகத்தின் சூட்சமமந்திர வடிவத்தை பூஜையறையில் மாகோலமிட்டு சனிக்கிழமைகளில் வணங்கி வாருங்கள்.

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37078
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: 2017 ஆங்கில புத்தாண்டு, பொது மற்றும் ராசி பலன்கள் !

Post by ayyasamy ram on Thu Dec 29, 2016 8:28 pm


துலாம்

எதையும் கலை நயத்துடன் செய்யக் கூடியவர்களே! இந்தாண்டு முழுக்க சனிபகவான் ராசிக்கு 2-ம் வீட்டில் அமர்ந்து பாதச் சனியாகத் தொடர்வதால் வீண் வாக்குவாதங்களையெல்லாம் தவிர்க்கப்பாருங்கள். பல் வலி வந்து போகும். காலில் அவ்வப் போது அடிபடும். பொது இடங்களில் யாரையும் தாக்கிப் பேச வேண்டாம். திடீர் பணவரவு, செல்வாக்கு எல்லாம் உண்டு. இருந்தாலும் வரவுக்கு மிஞ்சிய செலவுகளும் இருக்கத்தான் செய்யும். வழக்கில் வழக்கறிஞரை மாற்றுவீர்கள். உங்களின் நிதி நிலை தெரியாமல் உறவினர்கள், நண்பர்களில் சிலர் பண உதவி கேட்டு தொந்தரவு தருவார்கள்.

உங்களுக்கு சுக வீட்டில் இந்தாண்டு பிறப்பதால் மனதில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் ஏற்படும். கல்யாணம், சீமந்தம், காதுகுத்து என வீடு களைகட்டும். பழைய சொந்த பந்தங்கள் தேடி வருவார்கள். 26.7.2017 வரை உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டில் கேது நிற்பதால் பிள்ளைகளின் எதிர்பார்ப்புகள் அதிகமாகிக் கொண்டே போகும். அவர்களை அன்பாக நடத்துங்கள். உங்களுடைய கனவுகளை அவர்கள் மீது திணிக்க வேண்டாம். கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம்.

ராகு லாப வீட்டில் நிற்பதால் வசதி, வாய்ப்புகள் ஒரளவு பெருகும். ஷேர் மூலம் பணம் வரும். கடந்த கால இனிய அனுபவங்களை நினைவுக்கூர்ந்து மகிழ்வீர்கள். புது பதவி, பொறுப்புகள் தேடி வரும். மூத்த சகோதர வகையில் ஆதரவுக் கிட்டும். சமூக சேவையில் ஈடுபாடு அதிகரிக்கும். பயணங்களால் புத்துணர்ச்சிப் பெறுவீர்கள். ஆனால் 27.7.2017 முதல் வருடம் முடியும் வரை கேது 4-ம் வீட்டிலும், ராகு 10-ம் இடத்திலும் அமர்வதால் சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும்.

ஒரே நாளில் முக்கியமான நான்கைந்து வேலைகளைப் பார்க்க வேண்டி வரும். இதை முதலில் முடிப்பதா, அதை முதலில் முடிப்பதா என்ற ஒரு டென்ஷன் இருக்கும். புறநகர் பகுதியில் இடம் வாங்கி வைத்திருப்பவர்கள் அவ்வப்போது உங்களுடைய இடத்தை கண்காணித்து வருவது நல்லது. ட்ரைவிங் லைசன்ஸ், பாஸ்போர்ட் இவற்றையெல்லாம் புதுப்பிக்கத் தவறாதீர்கள். அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளையும் உடனுக்குடன் செலுத்துவது நல்லது. உங்களுடைய அடிப்படை நடத்தைகளை மாற்றிக் கொள்ளாதீர்கள். உங்களுடைய தனித்தன்மையை இழந்து விடாதீர்கள்.

பெரிய விஷயங்களில் தன்னிச்சையாக முடிவெடுக்காமல் குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து முடிவெடுக்கப் பாருங்கள். முடிந்த வரை இரவு நேரப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. தாயாருக்கு கழுத்து எலும்புத் தேய்வு, மூட்டு வலி, கை, கால் வலி, அசதி வந்து போகும். அவருடன் மனத்தாங்கலும் வரக்கூடும். புத்தாண்டின் தொடக்கம் முதல் 01.09.2017 வரை குரு உங்கள் ராசிக்கு 12-ம்

வீட்டில் மறைந்து நிற்பதால் திடீர் பயணங்களால் அலைச்சல், செலவுகள் இருக்கும். சிக்கனமாக இருக்கலாம் என்று நீங்கள் எப்போது திட்டமிட்டாலும் முடியாமல் போகும். தூக்கமின்மை, கனவுத் தொல்லை, ஒருவித படபடப்பு வந்து செல்லும். உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களையெல்லாம் நீங்களே எடுத்து நடத்துவீர்கள். கோவில் கும்பாபிஷேகத்தில் முதல் மரியாதை கிடைக்கும்.

ஆனால் 02.9.2017 முதல் வருடம் முடியும் வரை குரு உங்கள் ராசிக்குள் நுழைந்து ஜென்ம குருவாக அமர்வதால் ஒரு தேடலும், நிம்மதியற்ற போக்கும் அதிகரிக்கும். அவ்வப்போது கோபப்படுவீர்கள். சாப்பாட்டில் உப்பை குறையுங்கள். இரத்த அழுத்தம் அதிகமாகும். பெரிய நோய் இருப்பதாக நினைத்து பயம் வரும். மருத்துவக் காப்பீடு எடுத்துக் கொள்ளுங்கள். அல்சர், மஞ்சள் காமாலை, வாயுக் கோளாறால் நெஞ்சு வலி, யூரினரி இன்பெக்ஷன் வரக்கூடும். உணவில் காய்கறிகள், பச்சை கீரை வகைகளை சேர்த்துக் கொள்ளுங்கள். தண்ணீரைக் காய்ச்சி அருந்துங்கள்.

வீண் சந்தேகம், ஈகோ பிரச்னையால் கணவன், மனைவிக்குள் பிரிவு ஏற்படக்கூடும். முதுகுக்குப் பின்னால் விமர்சிப்பவர்களைப் பற்றி கவலைப்படாதீர்கள். வியாபாரத்தில் ஏற்ற இறக்கங்கள் இருந்து கொண்டேயிருக்கும். லாபம் சுமாராக இருக்கும். சின்ன சின்ன நட்டங்களும், ஏமாற்றங்களும் வரும். உத்யோகத்தில் நாளுக்கு நாள் வேலைச்சுமை கூடிக் கொண்டே போகும். அலுவலக ரகசியங்களை வெளியே சொல்ல வேண்டாம்.

--
குடும்பத்தினருக்கு
---

பாதச்சனி தொடர்வதால் காலில் வலி, சின்னச் சின்ன அவமானங்கள் வந்த வண்ணம் இருக்கும் அதிலிருந்து உங்களைக் காத்துக் கொள்ள உங்கள் குலதெய்வ கோயிலுக்கு ஒரு முறை சென்று வருவதுடன் புதன்கிழமை தோறும் மீனாட்சி அம்மனின் படத்தை வீட்டில் வைத்து வழிபடுங்கள். உங்கள் குடும்பத்தில் மேஷம், ரிஷபம், கடகம், கும்ப ராசியில் கணவரோ, பிள்ளைகளோ இருந்தால் பாதிப்புகள் அதிகமாகும் ஆனால் ரிஷபம், கடகம், சிம்மம், மகரம் ராசியில் இருந்தால் யோகப் பலன் கிடைக்கும். மேலும் பிள்ளைகள் கல்வியில் உயர்ந்து விளங்க கீழ்கண்ட புதன் கிரகத்தின் சூட்சமமந்திர வடிவத்தை பூஜையறையில் மாகோலமிட்டு புதன்கிழமைகளில் வணங்கி வாருங்கள்
--
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37078
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: 2017 ஆங்கில புத்தாண்டு, பொது மற்றும் ராசி பலன்கள் !

Post by ayyasamy ram on Thu Dec 29, 2016 8:28 pm

விருச்சிகம்

கொள்கை, கோட்பாடு களை விட்டுக் கொடுக்காதவர்களே! உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டில் இந்த புத்தாண்டு பிறப்பதால் துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். புதியவர்கள் அறிமுகமாவார்கள். வர வேண்டிய பணமெல்லாம் கைக்கு வரும். வருங்காலத்திற்காக சேமிக்கத் தொடங்குவீர்கள். வழக்குகள் சாதகமாக முடியும். ஜென்மச் சனி தொடர்வதால் உடல் நலத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள்.

மருத்துவக்காப்பீடு எடுத்துக் கொள்ளுங்கள். ஜெனரல் செக்கப் செய்து கொள்வது நல்லது. வறுத்த, பொரித்த மற்றும் அசைவ உணவுகளை தவிர்த்து விடுவது நல்லது. வாயுக் கோளாறால் நெஞ்சு வலி, செரிமானக் கோளாறு வரும். மனைவிவழியில் கொஞ்சம் அலைச்சலும், செலவும் இருக்கும். நீங்கள் பெருந்தன்மையாக நடந்து கொண்டாலும் சிலர் உங்களை குறை கூறுவார்கள்.

நெருங்கிய உறவினர்கள், நண்பர்களாக இருந்தாலும் யாருக்கும் ஜாமீன், உத்தரவாதக் கையெழுத்திட வேண்டாம். நாடாளுபவர்கள், பிரபலங்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். ரத்தத்தில் சர்க்கரையின் அளவைப் பரிசோதித்துக் கொள்ளுங்கள். உடல் எடை கூடும். பணப்புழக்கம் இருந்தாலும் வெளியில் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலையும் ஏற்படும். 26.7.2017 வரை உங்கள் ராசிக்கு 4-ம் வீட்டில் கேது பகவானும், ராசிக்கு 10-ம்

வீட்டில் ராகுவும் நிற்பதால் வாகன விபத்துகள், காரிய தாமதம், வீண் அலைச்சல், டென்ஷன் வந்து போகும். தாயாருக்கு கை, கால் வலி, சோர்வு வந்து நீங்கும். வீடு, மனை வாங்குவது, விற்பதில் வில்லங்கம் வந்து விலகும். சின்னச் சின்ன மரியாதைக் குறைவான சம்பவங்கள் நிகழக்கூடும். 27.7.2017 முதல் வருடம் முடியும் வரை கேது 3-ம் வீட்டில் அமர்வதால் புதிய முயற்சிகள் பலிதமாகும்.

உங்களுக்குள் ஒரு சுயக்கட்டுப்பாட்டை ஏற்படுத்திக் கொள்வீர்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். இளைய சகோதர வகையில் ஆதாயமடைவீர்கள். ஆனால் ராகு 9-ம் வீட்டில் நிற்பதால் சேமிப்புகள் கரையும். தந்தையின் ஆரோக்கியம் பாதிக்கும். பிதுர்வழி சொத்தைப் பெறுவதில் தடைகள் வந்து நீங்கும். உங்களை அறியாமலேயே தாழ்வுமனப்பான்மை தலைதூக்கும். வேற்றுமொழி பேசுவர்கள், வேற்று மதத்தைச் சார்ந்தவர்கள், வெளிநாட்டிலிருப்பவர்களால் ஆதாயமடைவீர்கள்.

புத்தாண்டின் தொடக்கம் முதல் 01.09.2017 வரை குரு உங்கள் ராசிக்கு லாப வீட்டில் நிற்பதால் உங்களின் புகழ், கௌரவம் ஒருபடி உயரும். பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். தொடங்கிய பணிகள் உடனே முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். வருமானத்தை உயர்த்த புது வழிகளில் முயற்சி செய்வீர்கள். திடீர் யோகம், பணவரவு உண்டு. பழைய கடனில் ஒருபகுதியைத் தீர்க்க வழி பிறக்கும். மூத்த சகோதரர் முன் வந்து உதவுவார். பெரிய பதவிகள் தேடி வரும். தடைபட்ட வீடு கட்டும் பணியை தொடர்வீர்கள்.

தூரத்து சொந்த பந்தங்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். ஆனால் 02.9.2017 முதல் வருடம் முடியும் வரை குருபகவான் உங்களுடைய ராசிக்கு 12-ம் வீட்டில் சென்று மறைவதால் திடீர் பயணங்கள், செலவுகள் அதிகரிக்கும். ஒரே நேரத்தில் நான்கைந்து வேலைகளையும் சேர்த்துப் பார்க்க வேண்டி வரும். ஆடம்பரச் செலவுகளை குறைக்கப்பாருங்கள். நன்கு அறிமுகமாகாதவர்களை வீட்டில் சேர்க்க வேண்டாம். நீண்ட நாட்களாக தரிசிக்க நினைத்த புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள்.

கோவில் கும்பாபிஷேகம் மற்றும் சகோதரர்கள், உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களையெல்லாம் நீங்களே செலவு செய்து முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் ஜென்மச் சனி தொடர்வதால் புது தொழில் தொடங்கும் முயற்சிகள், பெரிய முதலீடுகள் வேண்டாம். போட்டிகளைச் சமாளிக்க புது திட்டங்களை நடைமுறைப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் ஜூலை 26-ம் தேதி வரை சின்னச் சின்ன அலைகழிப்புகள் இருக்கும். சம்பள பாக்கி கைக்கு வரும்.

--

குடும்பத்தினருக்கு
---
ஜுலை மாதம் வரை ராகு, கேதுவால் காரியத்தடைகள், வாகனப் பழுது மற்றும் விபத்துகள் நிகழும். அதிலிருந்து உங்களை காத்துக் கொள்ள அருகிலிருக்கும் முருகர் கோவிலுக்கு சஷ்டி திதியில் வணங்குவதுடன் திருத்தணி முருகர் படத்தை வீட்டில் வைத்து செவ்வாய்க்கிழமைகளில் வணங்கி வாருங்கள். உங்கள் குடும்பத்தில் மேஷம், மிதுனம், தனுசு ராசியில் கணவரோ, பிள்ளைகளோ இருந்தால் பாதிப்புகள் அதிகமாகும். ஆனால் கடகம், சிம்மம், மகரம், மீன ராசியில் இருந்தால் யோகப் பலன் கிடைக்கும். மேலும் உங்கள் குடும்பத்திற்கு சொந்தமாக வீடு, மனை அமைய கீழ்கண்ட செவ்வாய் கிரகத்தின் சூட்சமமந்திர வடிவத்தை பூஜையறையில் மாகோலமிட்டு செவ்வாய்க்கிழமைகளில் வணங்கி வாருங்கள்.
--
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37078
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: 2017 ஆங்கில புத்தாண்டு, பொது மற்றும் ராசி பலன்கள் !

Post by ayyasamy ram on Thu Dec 29, 2016 8:29 pm

தனுசு

அழுத்தமாகவும், ஆணித்தரமாகவும் வாதாடுபவர்களே! உங்களுக்கு 2வது ராசியில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் எதிர்பார்த்திருந்த தொகை வந்து சேரும். குடும்பத்தில் அமைதி பிறக்கும். உங்கள் ஆலோசனையை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள். அனுபவப்பூர்வமாகவும், எதார்த்தமாகவும் பேசுவீர்கள். எதிர்பார்த்த வகையில் பணம் வரும். தடைபட்ட பல காரியங்களை முடித்துக் காட்டுவீர்கள். குடும்பத்தில் குழப்பங்களை ஏற்படுத்திய உறவினர்கள், நண்பர்களின் சுயரூபத்தைக் கண்டறிந்து ஒதுக்குவீர்கள்.

கணவன், மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவீர்கள். குடும்ப வருமானத்தை உயர்த்த கூடுதல் நேரம் ஒதுக்கி உழைப்பீர்கள். சனிபகவான் ராசிக்கு 12-ம் வீட்டில் தொடர்வதால் வருங்காலத்தைப் பற்றிய பயம் வந்து நீங்கும். பணவரவு ஓரளவு இருக்கும். எல்லோருக்கும் நல்லது செய்தும் கெட்ட பெயர்தான் மிஞ்சும். சிலர் உங்களைப் பற்றிய வதந்திகளை பரப்பிவிடுவார்கள். இரவு நேரப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. வாகனங்களை இயக்குவதில் கவனம் தேவை. அரசாங்க அதிகாரிகள், வி.ஐ.பிகளுடன் கருத்து மோதல்கள் வரக்கூடும். சிறுசிறு விபத்துகள் ஏற்படக்கூடும். நண்பர், உறவினர் சிலர் உங்களை தவறான போக்கிற்குத் தூண்டுவார்கள்.

ரத்த அழுத்தம், சளித்தொந்தரவு, இனந்தெரியாத கவலைகள் வந்து போகும். 26.7.2017 வரை உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டில் கேது நிற்பதால் புதிய முயற்சிகள் யாவும் பலிதமாகும். விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். வாழ்க்கையின் சூட்சுமங்களைக் கற்றுக் கொள்வீர்கள். ஷேர் மூலம் பணம் வரும். வேற்றுமதத்தவர்களால் ஆதாயமடைவீர்கள். இளைய சகோதர வகையில் நன்மை உண்டாகும். கோவில் விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். ராசிக்கு 9-ம் வீட்டில் ராகு நிற்பதால் எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும். தந்தையாருக்கு வேலைச்சுமை, வீண் டென்ஷன் அவருடன் பிணக்குகள் வந்து செல்லும். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார், அல்லாதவர்கள் யார் என்பதைப் புரிந்துக் கொள்வதில் குழப்பம் வரும்.

27.7.2017 முதல் வருடம் முடியும் வரை கேது உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டிலும், ராகு 8-ம் வீட்டிலும் அமர்வதால் குடும்பத்தில் சலசலப்புகள் வரும். கணவன் மனைவிக்குள் மனஸ்தாபங்கள் வந்து நீங்கும். எந்த வேலையாக இருந்தாலும் நீங்களே நேரடியாக சென்று முடிப்பது நல்லது. பணம் வாங்கித் தருவதில் குறுக்கே நிற்க வேண்டாம். கண்ணை பரிசோதித்துக் கொள்ளுங்கள். பல் வலி, காது வலி, கணுக்கால் வலி வந்து விலகும். வாகனத்தை நிதானமாக இயக்குங்கள். சிறுசிறு விபத்துகள் ஏற்படக்கூடும்.

காலில் அடிப்படும். யாரையும் எடுத்தெறிந்து பேச வேண்டாம். புத்தாண்டின் தொடக்கம் முதல் 01.09.2017 வரை குரு உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டில் நிற்பதால் அடுக்கடுக்கான வேலைகளால் அவதிக்குள்ளாவீர்கள். மறைமுக அவமானம் வந்து நீங்கும். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் வந்து போகும். தர்மசங்கடமான சூழ்நிலையை சமாளிக்க வேண்டி வரும். 02.9.2017 முதல் வருடம் முடியும் வரை குரு 11-ம் வீடான லாபஸ்தானத்தில் அமர்வதால் எங்குச் சென்றாலும் நல்ல வரவேற்பை பெற்றுத் தருவார். கல்வியாளர்களின் நட்பால் தெளிவடைவீர்கள்.

புது சொத்து வாங்குவீர்கள். அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு எதிர்பார்த்த நிறுவனத்தில் உயர்கல்வி, உத்யோகம் அமையும். பெரிய பதவிக்கு உங்களுடைய பெயர் பரிந்துரை செய்யப்படும். தாயாரின் உடல் நிலை சீராகும். புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். ஆடை, ஆபரணம் சேரும். அடகு வைத்திருந்த பத்திரம், பழைய கடனையெல்லாம் தீர்க்க புது வழி பிறக்கும். விலகிச் சென்ற உறவினர்களெல்லாம் வலிய வந்து உறவாடுவார்கள். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். செப்டம்பர் மாதம் முதல் வர வேண்டிய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் செப்டம்பர் மாதம் முதல் அலுவலகத்தில் நிம்மதி உண்டாகும். சக ஊழியர்களும் முக்கியத்துவம் தரத் தொடங்குவார்கள்.

--
குடும்பத்தினருக்கு
---
ஆகஸ்ட் மாதம் வரை குரு சரியில்லாததால் குடும்பத்தில் மருத்துவச் செலவுகளும், உத்யோகத்தில் வேலைச்சுமையும், விரும்பத்தகாத இடமாற்றமும் வரும். அதிலிருந்து விடுபட அருகிலுள்ள பெருமாள் கோயிலில் இருக்கும் சக்கரத்தாழ்வர் அல்லது சுதர்சனமூர்த்தியை வியாழக்கிழமைகளில் நெய் தீபமேற்றி வணங்குங்கள். உங்கள் குடும்பத்தில் மேஷம், ரிஷபம், கடகம், விருச்சிக ராசியில் கணவரோ, பிள்ளைகளோ இருந்தால் பாதிப்புகள் அதிகமாகும் ஆனால் சிம்மம், துலாம், மீன ராசியில் இருந்தால் யோகப் பலன் கிடைக்கும். மேலும் பணப்பலம் அதிகரிக்க கீழ்கண்ட சூரிய கிரகத்தின் சூட்சமமந்திர வடிவத்தை பூஜையறையில் மாகோலமிட்டு ஞாயிற்றுக்கிழமைகளில் வணங்கி வாருங்கள்.
--
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37078
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: 2017 ஆங்கில புத்தாண்டு, பொது மற்றும் ராசி பலன்கள் !

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum