ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
மின்னூலகம் இணையதளத்தினுள் நுழைய அனுமதி பெறுவது எப்படி??
 sudhagaran

'50 ஆண்டுகளுக்கு சுத்தம்செய்ய வேண்டாம்'- பசுமைக் கழிப்பறையை உருவாக்கி அசத்திய மாணவர்கள்
 பழ.முத்துராமலிங்கம்

தேங்காய்ப்பாலுக்கு "அப்படி" ஒரு சக்தி...!
 பழ.முத்துராமலிங்கம்

வரும் மாதம் வானில் நடக்க இருக்கும் அதிசியம்..! மிஸ் பண்ணிடாதீங்க..!! இப்பவே ரெடியா இருங்க..!!!
 பழ.முத்துராமலிங்கம்

யார் இந்த ஆசிரியர் பகவான்? மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி?
 T.N.Balasubramanian

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

எனக்குள் ஒரு கவிஞன் SK
 T.N.Balasubramanian

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 T.N.Balasubramanian

மின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து
 ஜாஹீதாபானு

என்ன ஆனது கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு?
 SK

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 SK

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!
 SK

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 SK

சாண்டில்யனின் புகழ் பெற்ற 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ..
 sudhagaran

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

இந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்
 பழ.முத்துராமலிங்கம்

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 பழ.முத்துராமலிங்கம்

அமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’
 anikuttan

மாரி 2 படப்பிடிப்பில் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட காயம்!
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 ஜாஹீதாபானு

அதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை
 SK

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 SK

நீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை
 T.N.Balasubramanian

அரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்
 SK

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 SK

கோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்!
 SK

தயாரிப்பாளரான சுருதிஹாசன்
 SK

இனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்
 பழ.முத்துராமலிங்கம்

5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்
 ayyasamy ram

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 ajaydreams

மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 பழ.முத்துராமலிங்கம்

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 பழ.முத்துராமலிங்கம்

அப்பா
 பழ.முத்துராமலிங்கம்

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 பழ.முத்துராமலிங்கம்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 பழ.முத்துராமலிங்கம்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

உண்ணாநோன்பு-சல்லேகனை-வடக்கிருத்தல்

View previous topic View next topic Go down

உண்ணாநோன்பு-சல்லேகனை-வடக்கிருத்தல்

Post by மூர்த்தி on Fri Nov 18, 2016 8:28 pm

இடையூறுஒழிவில்நோய் மூப்புஇவை வந்தால்
கடைதுறத்தல் சல்லே கனை.

என்கிறது ‘அருங்கலச் செப்பு’ என்னும் சமணநூல். பொறுத்துக் கொள்ள இயலாமல் பிறரால் ஏற்படும் தொல்லை, தீராமல் தொடர்ந்து துன்பம் தருகின்ற நோய், தாங்க இயலா முதுமைத் தொல்லை, ஆகியன வரும் பொழுது ‘சல்லேகனை’ என்னும் உண்ணாநோன்புச் செயலால் உயிர்விடலாம் என்கிறது இந்நூல். ‘

இரத்தின கரண்டக சிராவகாசாசரம்’ என்னும் மற்றொரு சமண நூல் பெரும்பஞ்சம் வந்து துயர்ப்படும்பொழுதும் இவ்வுண்ணாநோன்பிருந்து உயிர் நீத்தலை மேற்கொள்ளலாம் என்கிறது.

அதே நேரம் இம்முறையைத் தற்கொலையாகக் கொச்சைப்படுத்தக் கூடாது என்றும் அறவழி உயிர் துறக்கும் உயர்ந்த முறை இது என்றும் நீலகேசி என்னும் சமண நூல் கூறுகிறது.

சமணரின் ‘சல்லேகனை’ உம் தமிழரின் வடக்கிருத்தலும் ஒன்றல்ல.

தமிழரின் வடக்கிருத்தல் என்பது தனக்கு இழுக்கு நேர்ந்த விடத்து, பெருமிதக் குறைபாடாகவோ களங்கமாகவோ மானமிழத்தலாகவோ கருதி அதனைத் தாங்கிக் கொள்ள இயலாமல் வடக்கிருந்து உண்ணா நோன்பிருந்து உயிர் விடலாகும். சிக்கலை அல்லது துன்பத்தை எதிர்கொள்ள இயலாமல், என்றில்லாமல் வாழும் வழியிருந்தும் மானக்குறைபாடென எண்ணி உணவு மறுத்து உயிர் துறத்தல் என்பது பெரும் பண்பாகும். எப்படி இருந்தாலும் இரண்டிலுமே பொய்மையோ நடிப்போ இல்லை. தன் துயர் பொறுத்தலும் துணிவும் உள்ளன.

வடக்கிருத்தல் என்பது பண்டைய தமிழரின் நம்பிக்கை சார்ந்த பழக்கவழக்கங்களில் ஒன்றாகும். இதனை ஆடவர் மேற்கொண்டனர். ஊருக்கு வடபால் ஓரிடத்தில் வடக்கு திசை நோக்கி அமர்ந்தவண்ணம் உண்ணாநோன்பிருந்து உயிர் துறப்பதே வடக்கிருத்தல் எனப் பழந்தமிழர் கொண்டிருந்தனர்.

முற்காலத் தமிழகத்தில், போர்களின்போது முதுகிலே புண்பட்டவர்கள், அதை அவமானமாகக் கருதுவர். இதனால், அப் போர்க்களத்திலேயே வடக்கு நோக்கியபடி பட்டினி கிடந்து தமது உயிரைப் போக்கிக் கொள்வது உண்டு. கலைக் களஞ்சியம், வடக்கிருத்தலை 'உத்ரக மனம்' என்றும் ' மகாப் பிரத்தானம்' என்றும் கூறுகிறது. வடக்கிருந்து உயிர் துறந்தோருக்கு நடுகல் இட்டு நினைவுச் சின்னமாக வழிபடுவதும் உண்டு. வடக்கிருத்தல் இக்காலத்தில் வழக்கில் இல்லை.
avatar
மூர்த்தி
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1046
மதிப்பீடுகள் : 506

View user profile

Back to top Go down

Re: உண்ணாநோன்பு-சல்லேகனை-வடக்கிருத்தல்

Post by மூர்த்தி on Fri Nov 18, 2016 8:29 pm

உண்ணா நோன்பு-உண்ணாவிரதம்.

இக்காலத்தில், உண்ணா நோன்பு என்பது கோரிக்கையை நிறைவேற்ற மேற்கொள்ளும் போராட்ட முறையாகவும் மாறிவிட்டது. உலக நாடுகள் எங்கும் விடுதலைக்காகவும் உரிமைக்காகவும் உண்ணா நோன்புப் போராட்டத்திலும் சாகும்வரை உண்ணா நோண்புப் போராட்டத்திலும் ஈடுபட்டவர் பலராவர்.

சேரமான் பெருஞ்சேரலாதனுக்கும் சோழன் கரிகாற் பெருவளத்தானுக்கும் ’வெண்ணிப் பறந்தலை’ என்னும் இடத்தில் போர் நடைபெற்றது. திருமாவளவன் செலுத்திய நெடுவேல் சேரமான் மார்பில்பட்டு முதுகின் புறத்தே உருவிச் சென்று புண் செய்தது. முதுகில் புண்படுதல் என்பது புறமுதுகிட்டு ஓடுதல் என்னும் வீரக்குறைபாடாகும்.

தமிழ் மக்கள் மார்பில் புண்பட்டு இறப்பதை விரும்பினரேயன்றி, முதுகில் புண் பட்டு வாழ்தலை அன்று. எனவே, முதுகில் புண் ஏற்பட்டு விட்டதை மானக் குறைபாடாக எண்ணிச் சேரமான் பெருஞ்சேரலாதன் வடக்கிருந்து உயிர் நீத்தான்.

உலகில் அனைவரும் மறக்கக்கூடா வடக்கிருத்தல் இணைபிரியா நட்பிற்கு அடையாளமான கோப்பெருஞ்சோழன்- பிசிராந்தையார் வடக்கிருந்த செயலாகும். கோப்பெருஞ்சோழனின் பிள்ளைகள் அரசுரிமைக்காகத் தந்தையாகிய மன்னரை எதிர்த்தனர். அவர்களுடன் போர் தொடுக்க இருந்த மன்னனிடம் புலவர்கள் அறிவுரை கூறி அப்போரைத் தடுத்தனர்.

புலவர்களின் அறிவுரைக்கிணங்க வேந்தனும் போரை நிறுத்தி அரசுரிமையை அவர்களிடமே கொடுத்தான். எனினும் மக்களே தந்தையிடம் போர்தொடுக்க நேர்ந்த சூழலை அவமானமாகக் கருதினான். எனவே, வடக்கிருந்து உண்ணாநோன்பு மேற்கொண்டு உயிர் விட்டான்.

அப்பொழுது அதுவரை வேந்தனை நேரில் கண்டறியாமல் நட்பு பூண்டிருந்த புவலர் பிசிராந்தையார் அங்கு வந்து, மன்னன் இறந்த துயரம் அறிந்து தானும் அவன் வழி வடக்கிருந்து உயிர் துறந்தார்.

நட்புலகில் போற்றப்படவேண்டிய மற்றொன்று மன்னன் பாரி – புலவர் கபிலர் இடையே உள்ள நட்பாகும். மன்னன் பாரி இறந்ததும் அவர் பெண்மக்களைத் திருமணம் செய்வித்த பின் புலவர் கபிலர் வடக்கிருந்து உயிர் துறந்தார்.

சிலப்பதிகாரக் காலத்தில் ,கோவலன் கொலையுண்டதன் தொடர்ச்சியாக – பாண்டிய வேந்தன் மரணம், கோப்பெருந்தேவி மரணம், கண்ணகி இழப்பு, மாதரி எரியுண்டல் எனத் தொடர்ந்து – ஏற்பட்ட மரண அவலங்களால், கவுந்தியடிகள் வடக்கிருந்து உயிர் விட்டார்.
”தவந்தரு சிறப்பிற் கவுந்தி சீற்றம்......................
உண்ணா நோன்போ டுயிர்பதிப் பெயர்த்ததும்..”

என்று சிலப்பதிகாரத்திலுள்ள ‘நீர்ப்படைக் காதை’ ( 79-83) குறிப்பிடுகின்றது.

சமண முனிவர்கள் பல்வேறு காலங்களில் உண்ணாநோன்பிருந்து உயிர் துறந்துள்ளனர்.

avatar
மூர்த்தி
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1046
மதிப்பீடுகள் : 506

View user profile

Back to top Go down

Re: உண்ணாநோன்பு-சல்லேகனை-வடக்கிருத்தல்

Post by மூர்த்தி on Fri Nov 18, 2016 8:35 pm

உலகில் நடந்த சில உண்ணாவிரதப் போராட்ட்ங்கள்.

இராபர்ட்டு செரார்டு சான்டு என்ற பாபி சாண்டு  என்பவர் ஐரிசு குடியரசுப்படையைச் சேர்ந்த தன்னார்வலர். இவர் சிறையில் இருந்த பொழுதே ஐக்கிய மாநிலத்தின் நாடாளுமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 1981இல் வட அயர்லாந்தில் (இ)லிசுபேர்ன் நகரில் உள்ள சிறையில் பிரித்தானிய அரசுக்கெதிராக உண்ணாநோன்பிருந்த சிறைவாசிகளுக்குத் தலைமை வகித்தார். இவரும் இவருடன் உண்ணாநோன்பிருந்த பதின்மரும் இறந்தனர்.

இந்தியாவில் காந்தியடிகள் உண்ணாநோன்புப் போராட்டங்கள் பலவற்றில் ஈடுபட்டவர். ஆங்கிலேயரின் அருள் பார்வை இவர் மீது இருந்தமையால்தான் பல போராட்டங்களை நடத்த முடிந்தது.இல்லையேல் ஏதேனும் ஒரு போராட்டத்திலேயே இவர் உயிர் பிரிந்திருக்கும்.

சதீந்திராநாத்து தாசு என்ற யதின்தாசு இலாகூர் சிறையில் உண்ணாநோன்பிருந்து 63 ஆவது நாளில் உயிரிழந்தார்.

பகத்துசிங்கு  பிரித்தானிய சிறைவாசிகளுக்கும் இந்தியச் சிறைவாசிகளுக்கும் சமஉரிமை இருக்க வேண்டும் என்று 116 நாள் உண்ணாநோன்பிருந்துள்ளார்.

இந்திய விடுதலைக்குப் பின்னரான உண்ணாநோன்புப் போராட்டமெனில், தெலுங்கு மக்களுக்கான தனி மாநிலம் வேண்டி உண்ணாநோன்பிருந்து திச.16, 1952 இல் உயிர்துறந்த பொட்டி சிரீராமுலுவைக் கூறலாம்.

சென்னை மாகாணத்திற்குத் தமிழ்நாடு என்று பெயர் சூட்ட வேண்டும், இந்தியா முழுவதும் மதுவிலக்கு முதலான 12 வேண்டுகைகளுக்காக 76 நாட்கள் உண்ணா நோன்பிருந்து (27.07.1956 -13.10.1956) அன்று உயிர் துறந்த சங்கரலிங்கனாரையும் நம்மால் மறக்க இயலாது.

ஈழத்தில் பல்கலைக்கழக மாணவன் மாவீரன் திலீபன், நீர்கூட அருந்தாமல் உண்ணாநோன்பிருந்து, உயர்ந்த இலட்சியத்திற்காக செப்.26, 1987 இல் உயிரிழந்தார்.

மணிப்பூரில், இராணுவத்திற்கு வழங்கப்பட்ட  ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை (AFSPA) நீக்கக்கோரி, 2000 ஆண்டில் இருந்து 16 ஆண்டுகளுக்கு மேல் உண்ணவிரதம் இருந்த  இரோம் சர்மிளா வையும் மறந்து விட முடியாது.
…………………..
இப்பொழுது உண்ணாநோன்பு, அடையாள உண்ணா நோன்பு, தொடர் உண்ணாநோன்பு, சாகும்வரை உண்ணாநோன்பு எனப் பலவகை உணவு மறுப்புப் போராட்டங்கள் நடைபெறுகின்றன.

அண்மைக்காலங்களில் அரசியல் கட்சிகள்நடத்தும் உண்ணாநோன்புப் போராட்டங்கள் மக்களின் கேலிக்குள்ளாகி வருகின்றன. உணவு உட்கொண்டபின் உண்ணா நோன்புப் பந்தலுக்கு வருதல் அல்லது போராட்டப் பந்தலுக்குப் பின்னர் மறைவிடம் சென்று உணவு உண்ணல், அல்லது இடையிடையே வந்து சென்றுவிட்டு உண்ணாநோன்பை நாடகமாக்குதல் அல்லது இரண்டு உணவு நேரத்திற்கு இடையே உள்ள கால அளவை உண்ணா நோன்பாகக் காட்டுதல் போன்ற அவலங்கள் மேடையேறி வருகின்றன.

இவற்றிலெல்லாம் மிகவும் மோசமாகவும் மக்களின் ஏளனத்திற்கும் வெறுப்பிற்கும் உள்ளாகி வருவன, திராவிடக் கட்சிகளின் உண்ணாவிரத நாடகம் ஆகும்.
…..............
உண்ணா நோன்பு என்பது பெருமிதம் கொள்வோர் இழுக்கைத் துடைக்கும் ஈகச் செயலாகும்!
உண்ணாநோன்பு என்பது தங்கள் இலக்கை அடைவதற்காகப் போராளிகள் உயிர்க்கொடைபுரியும் மறச் செயலாகும்!
உண்ணா நோன்பு என்பது தங்களின் இன்னலைக்களைய – தங்கள் முறையீட்டை வெற்றியாக மாற்ற நிகழ்த்தும் ஓர் அறவழிப் போராட்ட முறையாகும்!

எனவே, உண்ணா நோன்பைக் கொச்சைப்படுத்தாதீர்!
போலிப் போராட்டம் மூலம் உங்களை இழிவு படுத்திக் கொள்ளாதீர்கள்!

நன்றி-விக்கிபீடியா, இணையம்.)
avatar
மூர்த்தி
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1046
மதிப்பீடுகள் : 506

View user profile

Back to top Go down

Re: உண்ணாநோன்பு-சல்லேகனை-வடக்கிருத்தல்

Post by krishnaamma on Mon Feb 27, 2017 5:55 pm

நல்ல பகிர்வு மூர்த்தி.....அருமை அருமை !............... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
.
.
.
உண்ணா நோன்பைக் கொச்சைப்படுத்தாதீர்!
போலிப் போராட்டம் மூலம் உங்களை இழிவு படுத்திக் கொள்ளாதீர்கள்!


ரொம்ப சரியாக சொல்லி இருக்கிறீர்கள் ! புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55631
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: உண்ணாநோன்பு-சல்லேகனை-வடக்கிருத்தல்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum