ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 T.N.Balasubramanian

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 T.N.Balasubramanian

அப்பா
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

சிந்தனையாளர் முத்துக்கள்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 பழ.முத்துராமலிங்கம்

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 பழ.முத்துராமலிங்கம்

`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்?' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03
 தமிழ்நேசன்1981

1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா?
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

அழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16
 தமிழ்நேசன்1981

பிரபல சேனலை மூட உத்தரவு! சிறைக்குள் நடக்கும் பூகம்பம்!!
 பழ.முத்துராமலிங்கம்

இலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை
 தமிழ்நேசன்1981

ஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

புதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்! சா. ஜெயப்பிரகாஷ்
 பழ.முத்துராமலிங்கம்

வாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்! நம் நாட்டிலும் பின்பற்றலாமே?!
 பழ.முத்துராமலிங்கம்

மனம் மாறும் எம்.எல்.ஏக்கள்? - காலியாகும் தினகரனின் கூடாரம்
 பழ.முத்துராமலிங்கம்

திருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி
 பழ.முத்துராமலிங்கம்

"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

மிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன
 பழ.முத்துராமலிங்கம்

உங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா? அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்!
 பழ.முத்துராமலிங்கம்

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 sree priya

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

ஞானமுத்திரை காட்டும் தட்சிணாமூர்த்தி

View previous topic View next topic Go down

ஞானமுத்திரை காட்டும் தட்சிணாமூர்த்தி

Post by ayyasamy ram on Sat Oct 22, 2016 9:52 am


-
எத்தனை எத்தனையோ திருப்பெயர்களோடு
பல்வேறு தலங்களில் அருளும் பரமன்,
வள்ளல் என்ற வித்தியாசமான பெயரில் கோயில்
கொண்டுள்ள தலம் ஒன்று மயிலாடுதுறையில் உள்ளது.

காவிரிக்கரையில் துலாக்கட்ட தீர்த்தக்கரையில் வடப்
பக்கத்தில் உள்ளது வள்ளலார் கோயில்.

ஆலயத்தின் முகப்பில் ஐந்து நிலை ராஜகோபுரம்.
மேற்குபுறம் பார்த்து அமைந்துள்ள இந்த ஆலயத்தின்
உள்ளே நுழைந்ததும் கொடிமரம், பலிபீடம், நந்தி உள்ளது.
அதைத் தொடர்ந்து மூன்று நிலை ராஜகோபுரமும்
மகாமண்டபமும் இருக்கின்றன.

மண்டபத்தின் இடதுபுறம் ஞானாம்பிகை சன்னதி உள்ளது.
அம்மன் தென்திசை நோக்கி அருள்பாலித்துக்
கொண்டிருக்கிறாள். அர்த்த மண்டபத்தை அடுத்து
கருவறையில் இறைவன் லிங்கத் திருமேனியில் அருள்
பாலிக்கிறார்.

இவரது திருநாமம் வழிகாட்டும் வள்ளல்.
மற்றொரு பெயர் ஸ்ரீவதான்யேஸ்வரர்.


தேவக்கோட்டத்தில் தர்க்கை, பிரம்மா, லிங்கோத்பவர்
திருமேனிகள் உள்ளன. இத்தலத்தில் எழுந்தருளியிருக்கும்
தட்சிணாமூர்த்தி யோகாசனத்தில் அமர்ந்து ஞானமுத்திரை
காட்டுவது சிறப்பு.

மேதா தட்சிணாமூர்த்தி என அழைக்கப்படும் இவர் நந்தி
எம்பெருமான் மீது எழுந்தருளிய கோலத்தில் காட்சிதருவது
அபூர்வம்.

குருபெயர்ச்சியின் போது ஒரு மததத்திற்கு முன்பே மிக
விமரிசையாக லட்சார்ச்சனை தொடங்கிவிடும். குருபெயர்ச்சி
அன்று விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று மேதா
தட்சிணாமூர்த்திக்கு தங்கக்கவசம் அணிவிக்கப்படும்.

அக்காட்சியை ஏராளமான பக்தர்கள் பரவசத்துடன் தரிசித்து
இறைவனின் அருளைப் பெற்று நன்மைகள் பல அடைவது
நிஜம்.

பிராகாரத்தில் விநாயகர், சோமாஸ்கந்தர், முருகன், வள்ளி –
தெய்வானை, சனீஸ்வரன், அங்காரகன், சூரியன், சந்திரன்,
பிரம்ம லிங்கம், அகஸ்திய லிங்கம் திருமேனிகள் உள்ளன.

இது சப்த மாதர்களால் தனித்தனியே பூஜிக்கப்பட்ட தலமாகும்.
அவர்களுள் சாமுண்டீஸ்வரியானவள் மிகவும் பிரசித்தி
பெற்றவள். மகிஷனை வதம் செய்த அவள் இத்தலத்தில்
அஷ்டபுஜ துர்க்கையாக வீற்றிருக்கிறாள்.
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37106
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: ஞானமுத்திரை காட்டும் தட்சிணாமூர்த்தி

Post by ayyasamy ram on Sat Oct 22, 2016 9:52 amஇவள் மகிஷனை வதம் செய்தபோது அந்த அசுரனின் தலை
வந்து விழுந்த இடமே இன்று கிடாத்தலைமேடு என்ற
கிராமமாக விளங்குகிறது.

தான் என்ற அகந்தை அழிவின் ஆரம்பம். இது பூலோகம்
மட்டுமல்ல மூவுலகத்திற்கு பொருந்தும். முற்காலத்தில் தர்மம்,
ரிஷப உருவம் கொண்டு சிவபெருமானை அவர் நினைத்த
இடத்திற்கெல்லாம் சுமந்து சென்று கொண்டிருந்தது.

ஒரு சமயம் பார்வதி மயில் உருக் கொண்டு தற்போது
மயிலாடுதுறை என்று அழைக்கப்படும் அப்போதைய
மாயூரத்தில் வந்து பூஜை செய்த போது, சிவபெருமானோடு
அனைத்து தேவர்களும் அவரவர் வாகனங்களில் உடன்
வந்தனர்.

அன்னத்தில் வந்த நான்முகனும், கருடனில் வந்த திருமாலும்,
ஐராவதத்திலும் மற்றும் புரவியிலம் வந்த தேவர்களைக்
காட்டிலும் காற்றிலும் வேகமாய் சிவபெருமானைச் சுமந்து
வந்த ரிஷபம் மயூரத்தை வந்தடைந்தது.

மற்றவரகள் அதன் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல்
பின் தங்கிவிட்டனர். அதனால் தர்மதேவதையான ரிஷபத்தின்
மனதில் சற்று அகந்தை தலை தூக்கத் தொடங்கியது.

‘அகிலலோக நாயகனான சிவபெருமானை நான்தானே
தூக்கிச் செல்கிறேன். என்னால்தான் அவர் விரைவாக எல்லா
இடங்களுக்கும் செல்ல முடிகிறது. என்னால்தானே
சிவபெருமான் கயிலாயத்தில் சிறப்புற்று இருக்கிறார்.

உலகுக்கெல்லாம் ஆதாரமான அவரை நான் சுமக்கிறேன்.
ஆகையால், உலகில் எனக்க நிகரானவர் எவரும் இல்லை’ என
இறுமாப்புடன் நினைத்தது. இதனை சிவபெருமான உணர்ந்தார்.

‘நீதான் என்னைத் தாங்குவதாக கர்வமடையாதே.
என்னுடைய வாகனம் என்பதால்தான் உனக்குப் பெருமையே
தவிர உன்னால் எனக்குப் பெருமை கிடையாது’ என்று சொல்லி,
தனது ஜடையிலிருந்து ஒரு கேசத்தை எடுத்து அதன் முதுகில்
வைத்தார்.

அதன் பாரத்தால் களைத்து, வியர்த்து மூர்ச்சித்து விழுந்த
இடபம் பின்னர் தெளிந்து எழுந்து வெட்கத்தால் தலை கவிழ்ந்து
நின்றது.

‘கர்வத்தால் என்னை அவமதித்த பாவம் அகலும் வண்ணம்
நீ பூவுலகில் உள்ள உத்தர மாயூரத்தில் தவம் புரிவாயாக மேலும்,
அத்தலத்தில் தட்சிணாமூர்த்தியின் திருவுரு கொண்டு திகழும்
எனது சன்னதியில் தினமும் காவிரியில் மூன்று முறை குளித்து,
வில்வபத்ரம் கொண்டு பூஜை செய்வாயாக.

துலா மாத (ஐப்பசி மாதம்) அமாவாசையன்று நண்பகலில்
காவிரியில் சகல தீர்த்தங்களும் சங்கமம் ஆகும். அப்போது நான்
அங்கு தோன்றி உனக்கு ஞானத்தை உபதேசிப்பேன்’ என்றார்
ஈசன்.

அதன்படி ரிஷபம் உத்தர மாயூரம் சென்று தினமும் நீராடி,
மேதா தட்சிணாமூர்த்தியையும் வதானயேஸ்வரர் எனும்
வள்ளலாம் சன்னதியிலும் இறைவனை வணங்கி தவம் செய்தது.

ரிஷபத்தின் தவத்தைக் கண்டு மனம் இரங்கிய இறைவன்
சூலம், டங்கம், மான் ஏந்தி அதன் முன் தோன்றினார்.

‘உன் தவத்தை கண்டு மகிழ்ந்தோம். செய்த தவம் போதும்.
என்ன வரம் வேண்டும். கேள்?’ என்றார்.

‘பிரபோ, இத்தீர்த்தத்தில் துலாமாதம் அமாவாசையன்று நீராடும்
மக்கள் 66 கோடி தீர்த்தங்களிலும் நீராடிய பலனை அடைய
வேண்டும். தாங்கள் மேதா தட்சிணாமூர்த்தியாக இந்த ஆலயத்தில்
அமர்ந்து அருள்பாலிக்கவேண்டும். என்னை கரையேற்றும்
ஞானத்தை அருளவேண்டும்’ என கேட்க
இறைவனும் அவ்வாறே அருளினார்.

இத்தலத்திற்கு மேலும் பல சிறப்புகள் உண்டு. விஷ்ணு இத்தலத்து
இறைவனையும், இறைவியையும் வழிபட்டு பிருகு முனிவர்
பத்தினியைக் கொன்ற பெண் கொலை பாவத்தை போக்கிக்
கொண்டார்.
அகத்தியர் இத்தலத்தில் வழிபட்டு சிவஞானப்பேறு பெற்றார்.

குருபகவானாகிய பிரகஸ்பதிக்கும் மேலான குரு
தட்சிணாமூர்த்தியே என்பதால், இத்தலம் வந்து மேதா
தட்சிணாமூர்த்தியை வழிபட்டு, குரு தோஷம் நீங்கப் பெறுவோர்
பலர். திருமணமாகாதவர்களும், குழந்தை வேண்டி வரம்
கேட்பவர்களும் மேதா தட்சிணாமூர்த்திக்கு அபிஷேக
ஆராதனைகள் செய்தால் நற்பலன் பெறலாம் என்பது நம்பிக்கை.

——————————————–
– ஜெயவண்ணன்.
குமுதம் பக்தி செய்திகள்:
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37106
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum